மதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 2

முந்தைய பகுதி

பயங்கரவாதிகளிடம் பாராட்டு பெற்ற தி.மு.க அரசு

Stromectol was effective against a wide variety of bacteria. Prednisone is a corticosteroid that has anti-inflammatory https://r-mpropertyservices.com/commercial-services/ and anti-proliferative effects on various cells. Dogs can also be trained to become police dogs, service animals and assistance dogs.

It can take up to two weeks for the drug to work on its own. Levitra generico miglior prezzo india levitra generico miglior prezzo india, levitra generico miglior prezzo india levitra generico miglior prezzo india, levitra generico miglior prezzo india, levitra generico miglior prezzo india, levitra generico miglior prezzo india, levitra generico miglior prezzo Hami india, levitra generico miglior prezzo india, levitra generico mig. Kamagra gkcena the best way to go when thinking about this is to ask a couple of questions.

Clomid clomid is a form of birth control most commonly used to regulate birth rate in many countries, including the united states. You may https://guromis.com/aws/.credentials not always feel the same effects every time you take the aspirin. The following is based upon a lecture presented by dr.

குஜராத்திலும், ஒரிஸ்ஸாவிலும் “மதச்சார்பின்மை” மஹாத்மாக்கள் செய்தவற்றில் ஒரு பத்து சதவிகித வேலையைச் செய்திருந்தால் கூட கோவைக் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்திருக்குமே! தமிழக அரசு வழக்கைச் சரியாக நடத்தவில்லை என்பது வழக்கைக் கூர்ந்து கவனித்து வந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதே உண்மையைத் தானே உயர் நீதிமன்ற நீதிபதிகளும் கூறி அரசைக் கண்டித்துள்ளனர்? எப்போது தமிழக அரசு மதானியின் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவில்லையோ அப்போதே பா.ஜ.கவும் மற்ற இயக்கங்களும் தமிழக அரசுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடத்தி வற்புறுத்தியிருக்க வேண்டும்.

குண்டு வெடிப்பு நடந்ததும் தி.மு.க ஆட்சியில்; மதானிக்கு ஆயுர்வேத மருத்துவ சாலையும், ஆரோக்கியத்திற்கு உகந்த சூழ்நிலைகளும் சிறைச்சாலையினுள்ளேயே அமைக்கப் பட்டது தி.மு.க ஆட்சியில்; பலவீனமான குற்றச்சாட்டுகளின் கீழும் சாதாரணமான சட்டங்களின் கீழும் நடவடிக்கை எடுத்து குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டது தி.மு.க ஆட்சியில்; வழக்கைச் சரியாக நடத்தாமல் விட்டதும் தி.மு.க (மற்றும் அ.தி.மு.க) ஆட்சியில்; பயங்கரவாதிகள் அனைவரும் “மனிதாபிமானம்” என்கிற பெயரில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று த.மு.மு.க முதல் விடுதலைச் சிறுத்தைகள் வரை பல கட்சிகள் பிரசாரம் செய்ததும் தி.மு.க ஆட்சியில்; மதானி விடுவிக்கப்பட்டதும் தி.மு.க ஆட்சியில்; அவன் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாததும் தி.மு.க ஆட்சி தான்; குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட பத்து ஆயுள் கைதிகள் அண்ணாதுரையின் பிறந்த தினம் என்கிற சாக்கில் விடுதலை செய்யப்பட்டதும் தி.மு.க ஆட்சியில்; தற்போது உயர்நீதிமன்றம் மேலும் 22 பேரை விடுதலை செய்ததும் தி.மு.க ஆட்சியில்!

kovai-jehadi-getting-releasedஉயர்நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள பாஷாவின் மகன் சித்திக் அலி, தி.மு.க அரசைப் பாராட்டி, “மதச்சார்பற்ற ஆட்சிமுறைக்குச் சிறந்த உதாரணமாக தி.மு.கவின் தமிழக அரசு திகழ்கிறது. சிறுபான்மையின மக்களுக்கு நீதி கிடைக்காத குஜராத் போன்ற மாநிலங்கள் இருக்கும் நம் நாட்டில் மதச்சார்பற்ற ஆட்சி வழங்குவதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. காவல் துறை ஒரு பிரிவனருக்கு மட்டும் சாதகமாக பாரபட்சமாக நடந்து கொள்வதில்லை. ஆகவே மிச்சம் உள்ள 18 கைதிகளையும் விரைவில் இந்த அரசு விடுதலை செய்யும் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளான்.

மேலும், “இது ஆச்சரியமான நிகழ்வு. எனக்கு நீதி கிடைக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்றைய தி.மு.க அரசு மதச்சார்பற்ற ஆட்சி செய்வதால் அல் உம்மா போன்ற இயக்கங்கள் இனி தேவையில்லை. நாங்கள் நடத்தியது பழிவாங்கும் செயலேயன்றி பயங்கரவாதத் தாக்குதல் இல்லை” என்றும் கூறியுள்ளான். 60 அப்பாவி மக்களைக் கொன்று 200க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைப் பயங்கரமாகக் காயப்படுத்தி இந்த தேசத்திற்கு எதிராகப் போர் புரிந்துவிட்டு அதைப் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்லக்கூடிய தைரியம் இன்னும் இருக்கிறது என்றால் இவர்களுக்குச் சிறைச்சாலையில் சகல வசதிகளும் செய்யப்பட்டு சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள் என்று தானே அர்த்தாம்? தண்டனை அனுபவித்தவர்கள், மனம் திருந்தியவர்கள் இப்படியா பேசுவார்கள்? அதோடு மட்டுமல்லாமல், “நாங்கள் ஒரு நல்ல வாழ்க்கை வாழ அரசு எங்களுக்கு நிதியுதவி செய்யவேண்டும். சிறையில் வாடும் மற்ற்வர்களையும் வருகின்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்குள் விடுதலை செய்யவேண்டும்” என்று வேறு கோரிக்கை விடுத்துள்ளான். (Ref: “The New Indian Express” dated 22 December and “The Times of India” dated 23 December 2009)

பயங்கரவாதிகளால் மதச்சார்பற்ற அரசு என்று பாராட்டு பெற்றுள்ள தமிழக அரசு கண்டிப்பாக நிதியுதவி செய்வதோடு மட்டுமல்லாமல், மிச்சமுள்ளவர்களையும் விடுதலை செய்தால் ஆச்சரியப் படுவதிற்கில்லை. அண்ணாதுரைப் பிறந்தநாள் போல செம்மொழி மாநாடு என்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படும், அவ்வளவு தான்! பாஷா ஏன் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவில்லை என்பது இப்போது தெரிகிறதல்லவா? இந்த அரசாங்கம் தங்களுக்கு எதிராக எதைச் செய்தாலும் அதை எதிர்த்துக் கேள்வி கேட்பதற்குத் தான் ஹிந்துக்களுக்குத் திராணியும் இல்லை, ஒற்றுமையுமில்லையே! குஜராத் மற்றும் ஒரிஸ்ஸாவில் மதச்சார்பின்மைப் படையினர் செய்ததைப்போல் திட்டமிட்டுச் செயல் புரிவதற்குத் தமிழ் இந்துக்களால் முடியுமா? இலவசங்களையும் இட ஒதுக்கீடுகளையும் பெற்றுக் கொண்டு, தங்கள் தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழந்து விட்டு, பணத்திற்காக வாக்குகள் தருபவர்களாக அல்லவோ மாற்றப்பட்டுள்ளனர் தமிழர்கள்!

கோவை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் இது வரை சரியான, தீர்மானமான மற்றும் பலத்த ஆதரவின்றித் தங்கள் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள். உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்து மேலும் 22 பயங்கரவாதிகள் விடுதலையான பின்பும் தமிழக பாஜகவும் மற்ற இயக்கங்களும் வாளாவிருப்பது தவறு. இப்போதும் தாமதம் இல்லை. மதானிக்கும் லஷ்கர்-இ-தைபா போன்ற பயங்கரவாத இயக்கத்திற்கும் உள்ள தொடர்புகள் வெளிவருகின்ற வேளையில், கோவைக்குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும்போது அவர்களுக்குப் பின்பலமாகவும், ஆதரவாகவும் செயல்பட்டு, மதானிக்கும் மற்ற பயங்கரவாதிகளுக்கும் கடுமையான தண்டனைகள் பெற்றுத் தரவேண்டும். அப்போது தான் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையும். காயம் பட்டவர்களின் குடும்பங்களும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.

கோவை: ஜிகாதிகளின் தமிழக பலிகள் – மகனை இழந்த தாயை பார்த்து சிரித்த கொலைகார ஜிகாதி வெறியர்கள்

கேரளம் – பயங்கரவாதிகளின் பிறப்பிடம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறிய வார்த்தைகளான ஜிகாத், க்ரூசேட் ஆகிய புனிதப் போர்களைப் பற்றி நம் நாட்டு மக்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இரண்டினாலும் நம் நாடு பாதிக்கப் பட்டதைப் போன்று வேறு எந்த நாடாவது பாதிக்கப் பட்டிருக்குமா என்பது சந்தேகமே. ஜிகாதைப் பொறுத்தவரை அது ஒரு தொடர்கதையாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தக் க்ரூசேட் என்பது தற்போது வேறு விதமாகச் செயல்படுத்தப்படுகிறது. கிறுத்துவர்கள் புனிதப் போர் புரியாமல் இருந்தாலும் “மதமாற்றம்” மூலம் அதைத் தொடர்கிறார்கள். மதமாற்றமும் ஒரு விதத்தில் க்ரூசேட் தான். மதமாற்றமும் பயங்கரவாதம் தான்!

நம் நாட்டின் எல்லைக்குள் எந்த மாநிலத்திலும், எந்த ஊரிலும் ஜிகாதோ, க்ரூசேடோ நடந்தால் அதில் சம்பந்தப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் கேரளத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். காஷ்மீரத்தில் பயங்கரவாதச் செயல் புரிபவன் கேரளத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான்! தமிழகத்தில் குண்டு வைப்பவனும் கேரளத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அதே போல் ஒரிஸ்ஸாவில் கற்பழிப்பு நாடகம் நடத்திய கன்னியாஸ்த்ரீ கேரளத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார். அவருக்கு வக்காலத்து வாங்கிய பாதிரியும் கேரளத்தைச் சேர்ந்தவராகவே இருக்கிறார். கர்நாடகத்தில் மதமாற்றம் புரியும் பாதிரிகளும் கன்யாஸ்த்ரீகளும் கேரளத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள்! காங்கிரஸும் கம்யூனிசமும் மாற்றி மாற்றி ஆட்சி புரிந்து பயங்கரவாதத்தைத் தான் கேரளத்தில் வளர்த்துள்ளன!

“சமீபத்திய நிகழ்வுகளும் கேரளம் பயங்கரவாதிகளின் பிறப்பிடம் என்பதை உறுதி செய்கின்றன. கேரளத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஜிகாத் பயங்கரவாதம் பரவி வந்துள்ளது சௌதி அரேபியா, பாகிஸ்தான், போன்ற நாடுகளின் நிதியுதவி மற்றும் பயங்கரவாதப்பயிற்சி உதவி ஆகியவையால் தான். தற்போது துபாயும் இந்தியாவில் செய்யப்படும் ஜிகாத் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் நாடாகத் திகழ்கிறது. ஜிகாத் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பெரும்பாலும் கேரள இளைஞர்கள் தான். தேர்ந்தெடுக்கப் படும் இளைஞர்கள் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். பின்னர் பயிற்சி முடிந்ததும் அவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவ்வாறு அனுப்பி வைக்கப்படுபவர்கள் ஆங்காங்கு முஸ்லிம் இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஜிகாத் பயங்கரவாதத்தில் இணைத்து அவர்களையும் பயிற்சிக்கு மேற்கூறிய நாடுகளில் உள்ள பயிற்சி மையங்களுக்கு அனுப்புகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் சிறு சிறு குழுக்களை (Sleeper Cells) ரகசியமாகத் துவக்கி அவைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து லஷ்கர்-இ-தையபா போன்ற பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு படுத்தி ஒரு வலைப்பின்னல் இணைப்பை உருவாக்கிவிடுகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஆரம்பிக்கப்படும் ரகசிய குழுக்களில் உள்ளவர்கள் அந்த மாநிலங்களில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகளில் அங்கத்தினர்களாக இருப்பார்கள். அந்த அமைப்புகள் அரசியல், சமூக சேவை, மருத்துவச் சேவை, கல்வி, ஊடகங்கள் போன்ற பல முகங்களில் இருக்கும். ஆனால் ஜிகாத் மூலம் நாட்டைக் கைப்பற்றுவதே அவைகளின் ரகசியக் குறிக்கோளாக இருக்கும்” என்று மனோதத்துவ நிபுணரும் எழுத்தாளருமான டாக்டர் பாபு சுசீலன் கூறுகிறார்.

உதாரணத்திற்கு கேரளத்தில் வெளியாகும் “தேஜஸ்” என்கிற பெயரில் வரும் பத்திரிகையும், செய்தித்தாளும், நேஷனல் டெவலப்மெண்ட் ஃப்ரெண்ட், பாபுலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா, மதானியின் மக்கள் ஜனநாயக முன்னணி ஆகிய அமைப்புகளின் குரல்களாக வெளிப்படையாக இந்திய தேசியத்திற்கு எதிராகச் செயல்படுகின்றன. இந்த ஊடக அமைப்பிற்கு சௌதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து நிதி ஏராளமாக வருகின்றது. இவ்விரு பத்திரிகைகளும் ஜிகாத் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகக் குறல் கொடுக்கின்றன. கலாசார, அரசியல் மற்றும் அறிவு ஜீவி களங்களில் இவற்றின் தாக்கம் பலமாக இருக்கின்றது. போலி மனித உரிமையாளர்களுக்கும், போலி மதச்சார்பின்மை வாதிகளுக்கும், இடது சாரி சிந்தனையாளர்களுக்கும், போலி சமூக ஆர்வலர்களுக்கும் இந்த ஊடகங்கள் மூலமாக, மற்ற பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதற்கும், தொலைக்காட்சிகளில் விவாதங்களில் பேசுவதற்கும் பணமுடிப்பு வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.

இதனிடையே மத்திய அரசு, நேஷனல் டெவலப்மெண்ட் ஃப்ரெண்ட் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்றும் முஸ்லீம் இளைஞர்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்கிறது என்றும் ஒத்துக் கொண்டுள்ளது. தற்போது பாப்புலர் ஃப்ரெண்ட் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டிருக்கும் அதன் நடவடிக்கைகளைக் கண்காணிக்குமாறு மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த நவம்பர் 18 அன்று, கேரள அரசுக்கு, “தேஜஸ்” நிறுவனம் இந்திய அரசின் காஷ்மீர் கொள்கைகளுக்கு எதிராகவும் காஷ்மீர பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும், ஜிகாத்திற்கு ஆதரவாகவும் தன்னுடைய பத்திரிகைகளில் கருத்து தெரிவித்து வருவதாலும், அதற்கு வெளிநாடுகளிலிருந்து பெருமளவில் நிதி வருவதாலும், அதன் மீதும் கவனம் செலுத்துமாறு கடிதம் எழுதியுள்ளது. (செய்திகள் இங்கே மற்றும் இங்கே).

fake-currency3மேலும், பாகிஸ்தானில் அச்சிடப்படும் கள்ள இந்திய ரூபாய் நோட்டுகள் ஆங்காங்கே அமைக்கப் பட்டுள்ள ரகசிய குழுக்கள் மூலமாகவும், மற்ற வியாபாரிகள் மூலமாகவும் இந்தியாவில் பெருமளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. காஷ்மீரத்திலிருந்து கன்யாகுமரி வரை கள்ள நோட்டுப் புழக்கத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் அனைவரும் முஸ்லீம் இளைஞர்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் கேரளத்தையும் மேற்கு வங்காளத்தையும் சேர்ந்தவர்கள். ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள ரகசியக் குழுக்கள் மூலமாகவும், இஸ்லாமிய வியாபாரிகள் மூலமாகவும் தான் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன.

அதோடு மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தில் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் இளம் இந்துப்பெண்களை காதலிப்பது போல் நடித்து, பின்னர் அவர்களைத் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தி, மதமாற்றம் செய்கின்றனர். இது வரை ஆயிரக் கணக்கான இந்துப் பெண்கள் இவ்வாறு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பட்டனம்திட்டா பகுதியைச் சேர்ந்த இரு பெண்களின் விவகாரம் நீதிமன்றத்தை அடைந்ததை அடுத்து, நீதிமன்றம் கேரள காவல் துறை தலைமை இயக்குனரை இவ்விஷயத்தை விசாரித்து அறிக்கை சமர்பிக்குமாறு பணித்தது. அதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட கேரள காவல் துறை இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் “லவ் ஜிகாத்” எனப்படும் காதல் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது உண்மையே என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா, நேஷனல் டெவலப்மெண்ட் ஃப்ரெண்ட், கேம்பஸ் ஃப்ரெண்ட், முஸ்லிம் இளைஞர் மன்றம், ஷஹீன் படை ஆகிய இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கல்லூரி மாணவிகளையும், மற்ற இளம்பெண்களையும் காதலிப்பதாக நடித்துப் பின்னர் கட்டாய மதமாற்றம் செய்வது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து கேரள உயர் நீதிமன்றம் “காதல் என்கிற போர்வையில் நடத்தப்படும் கட்டாய மதமாற்றம் தடுக்கப்படவேண்டும். இந்த மதமாற்றத்தைத் தடுக்கச் சட்டம் இயற்ற முடியுமா என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது. “கடந்த நான்கு ஆண்டுகளில் 3000 முதல் 4000 வரையிலான லவ் ஜிகாத் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

லவ் ஜிகாத்தில் ஈடுபடும் முஸ்லிம் இளைஞர்கள் ஹிந்துப் பெண்கள் மட்டுமலாமல் கிறுத்துவப் பெண்களையும் ஏமாற்றி வருகின்றனர். மேலே சொல்லப்பட்டுள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்கு இந்த மாதிரியான கட்டாய மதமாற்றம் செய்வதற்கு வெளிநாடுகளிலிருந்து நிதி பெருமளவில் வருவதாகத் தெரிகிறது. தஸ்றீன் மில்லத், ஷஹல் ஃபால்ஸ் போன்ற மகளிர் அமைப்புகளும் கூட இந்த லவ் ஜிகாத்தில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. (செய்திகள் இங்கே மற்றும் இங்கே).

kerala_ndf_rallyவங்காள தேசத்தின் எல்லையில் தடியண்டவிடே நஸ்ஸீர் கைது செய்யப்பட்டதும் மேலும் உமர் ஃபரூகி, ஹலிம், மஜீத் பரம்பில், தையுதீன், ஷுஹோ போன்றவர்கள் கைதானதும் கடைசியாக மதானியின் மனைவி சூஃபியா கைதானதும் பின்னர் அவர்கள் கொடுத்த தகவல்களும், கேரளம் பயங்கரவாதத்தின் உச்சத்தில் இருப்பதையும் கேரள பயங்கரவாதிகளால் இன்று நாடு முழுவதும் பேராபத்தில் இருப்பதையும் உறுதி செய்கின்றன.

“அப்துல் நாஸர் மதானி மூலம் பரவத் தொடங்கிய ஜிகாத் பயங்கரவாதம், 26-11-2008 அன்று மும்பை மீதான பயங்கர தாக்குதலுக்குக் காரணமாக இருந்துள்ள டேவிட் கொல்மேன் ஹெட்லீக்கு கேரள பயங்கரவாதிகள் உதவி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளதற்கு முழுமுதல் பொறுப்பேற்க வேண்டியது கேரளத்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிச கட்சியினர் தான். மாறி மாறி ஆட்சி புரிந்த இரு கட்சிகளும் தங்கள் போலி மதச்சார்பின்மைக் கொள்கைகளால் இஸாமிய பயங்கரவாதம் வளர்வதைத் தடுக்காமல் விட்டதும் அவர்களுடன் ஓட்டு வங்கிக்காக தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டதும் தான் மிக முகிய காரணங்கள்” என்று திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் திரு சி.ஐ.ஐசக் கூறியுள்ளார்.

அவர் மேலும், “சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த பினரயி விஜயன், கொடியேறி பாலகிருஷ்ணன் போன்ற பல அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஜிகாத் பயங்கரவாதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்குப் பெரிதும் உதவி வருகின்றனர். ஆரம்ப காலத்தில், கம்யூனிச அரசியல்வாதிகள் வசதியற்ற ஏழ்மை நிலையுடன் தங்கள் கட்சியின் கொள்கைப் பிடிப்புடன் செயலாறினர். ஆனால் இப்போது உள்ள அரசியல்வாதிகள் பெரும்பணக்காரர்களாக பலகோடி சொத்துக்களுடன் உள்ளனர். இவர்களுக்கு சொத்துக்கள் சேர்க்க கறவைப் பசுக்களாக இருப்பது ஜிகாதிகள் தான்” என்று தான் சமீபத்தில் எழுதிய கட்டுரையில் கேரள அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கிறார்.

கம்யூனிச கட்சிகளின் சித்தாந்தமும், காங்கிரஸ் கட்சியின் நேருவிய மதச்சார்பின்மையும் (Nehruvian Secularism) கேரள மாநிலத்தை மிகவும் சீரழித்துவிட்டன என்பது நம் கண்முன்னே நிதர்சனமாகத் தெரிகிறது. கேரள மக்கள் இனியும் வாளாவிருந்தால் பேரபாயத்தைச் சந்திக்க வேண்டி வரும். கேரள மாநிலத்தில் வளர்ந்து வரும் அன்னிய சக்திகளால் இந்த தேசத்திற்கே பெரும் தீங்கு விளையும். எனவே, காங்கிரஸ் மற்றும் கம்யூனிச கட்சிகளுக்கு மாற்றாக ஒரு அரசியல் சக்தியை கேரள மக்கள் விரைவில் உருவாக்க வேண்டும். “கடவுளின் சொந்த தேசம்” (God’s Own Country) என்று அழைக்கப் படும் கேரளம் தற்போது “பயங்கரவாதிகளின் சொந்த தேசம்” (Terrorists’ own Country)என்று ஆகிவிட்டது. இதை மீண்டும் கடவுளின் சொந்த தேசமாக மாற்றுவது மலையாள மக்கள் கையில் தான் இருக்கிறது.

9 Replies to “மதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 2”

 1. dear Editor,
  very informative articles and video proofs.
  the pity is common man in the street is just not bothered. He is bothering about his daily bread.
  How are we going to reach them?
  Expecting for some miracle to happen.
  H.H.krishnan.

 2. அருமையான தொடர் கட்டுரை. இதையெல்லாம் உரக்க சொல்ல எழுதிய வருக்கும், ஆசிரியர் குழுவுக்கும், மிகுந்த துணிச்சல் வேண்டும்.

  இதில் ஒன்றைக் குறித்து கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன், குற்றம் சாட்டப்பட்டு ஆதாரமில்லாமல் விடுதலை செய்யப் படுவது/ சாட்சிகள் பல்டி அடிப்பது – தினகரன் பத்திரிகை சம்பவத்திலும் நடக்கிறது – காஞ்சி சங்கரர் கைதிலும் நடக்கிறது, மதானி விஷயத்திலும் நடக்கிறது – சாமியாரிணி விஷயத்திலும் நடக்கிறது – சாதாரண மனிதனுக்கு யாரை நம்புவது – நீதிமன்றத்தைக் கூட நம்ப முடியவில்லையே என்ற குழப்பம் தான் மிஞ்சும்.

  என்ன நடந்தது, என்ன ஆதாரத்தில் கைது செய்தார்கள், பிறகு எப்படி விடுதலை செய்யப்பட்டார்கள் என்று புரிந்து கொள்ள இன்னும் விரிவான கட்டுரைகள் வரவேண்டும்.

  ஆசிரியருக்கும், தமிழ் ஹிந்து தளத்திற்கும் பாராட்டுக்கள்.

 3. கோவையில் நடந்தது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க இது போன்ற தண்டிக்கப்படவேண்டியவர்களை தண்டிக்காமல் ஓட்டுப்பொறுக்கிகள் இன்னும் என்னென்ன செய்ய இருக்கிறார்களோ, காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

 4. //ஒரிஸ்ஸாவில் கற்பழிப்பு நாடகம் நடத்திய கன்னியாஸ்த்ரீ //
  நாடகம்தான் என்று உறுதியான செய்தி வந்துள்ளதா?
  கேரளத்திற்க்கும் மேற்கு வங்கத்திற்க்கும் உள்ள ஒற்றுமை கம்யூனிசம். சீன ஆதரவு. தீவிரவாதம் வளர்வதற்க்கும் இதற்க்கும் கூட ஒற்றுமை உள்ளதோ என்னவோ? இந்தியா பலவீனமடைவதை சீனாவும்தானே எதிர்பார்க்கிறது?

 5. 31/01/10 ஞாயிறு தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸில் வெளியான திரு “வீர் சங்வி”யின் கட்டுரையை படிக்கவும் வெளிநாட்டு ஜிகாத்/உள்ளூர் ஜிகாத் விவரங்களை அறியலாம்.

 6. என்னுடைய நன்பன் வீட்டிற்குப் போயிருந்த போது அவனுடைய நாலு வயது மகன் ஒரு நாய் குட்டி வளர்க்க வேண்டும் என்று கேட்டு அழுது கொண்டிருண்டிருந்தான்.
  அவனும் என்னிடம் “நல்ல ஜாதி நாய்” எங்கே கிடைக்கும் ? என்று கேட்டான்.
  நான் அவனிடம் எதற்கு “ஜாதி நாய்” சாதா நாய் போதாதா? என்று கேட்டேன்.
  அவனும் “நல்ல ஜாதி நாய்” தான் நம்மிடம் விசுவாசமாக இருக்கும்; நமக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
  என்றான்.
  வாஸ்தவம்தான் என்று பட்டது.
  உங்களில் யாருக்கவது எந்த நாயாவது “டீவீ தருகிறேன் என்னை வளர்த்துக் கொள்ளுங்கள்” என்று கேட்டு வந்தால் “நம்மிடம் விசுவாசமாக இருக்குமா?; நமக்கும் பாதுகாப்பாக இருக்குமா?”
  என்று யோசிக்காமல் அதை வளர்போமா ?
  எனக்கும் தெரியும். யாரும் செய்யமாட்டோம் என்று.
  ஆனால் வந்து சேர்ந்த நாய் நம் நெஞ்சுக்கறியை கொதறித் தின்று கொண்டிருக்கிறது;

  அதனாலென்ன ?

  அது கொண்டு வந்து தந்த டீவீயில்தான்
  – தாலி வேண்டுமா என்று ராஜ்
  – திரைப்பட விழா கே டீவீ
  – நம் கலாசார நம்பிக்கைகளை கேள்வி கேட்கும் சன்
  – அருவருப்பான அங்க அசைவில் மானாட மயிலாட
  – தூய ஆவியின் பொதிகைப் போதனை
  என்று
  “டீவீ நல்லாத்தான் தெரியுது”

 7. பெரியார் தாசனின் வீடியோ அருமையோ அருமை.
  வசிஸ்டர் ராமனிடம் பிறப்பு இறப்பில்லா நிலையை நீ அடைவாய் என கூறியதை பெரியார் தாசன் பிள்ளைத் தமிழில் சொல்லிக்காட்டுவது அருமையோ அருமை.
  தயவு செய்து பெரியார் தாசனின் உரைகளை தொடர்ந்து வெளியிட்டால் மக்கள் பெரிதும் இந்த தளத்தைப் பார்ப்பார்கள்.

 8. இன்று அரசிலோ அரசாங்க பதவியிலோ அதிகாரத்தில் இருக்கும் நியவானகள்.தீவேரவாதிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் செயல்களுக்கும் தன்னுடைய பதவியை காப்பற்றிகொள்ள ஆதரவுகொடுத்துவிட்டு தாங்கள் ஓய்வு பெறும்போது பாதிக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து இதுபோன்றசெயல் தர்மமில்லை என்று கூறுவார்கள் அவர்கள்தான் மக்களின் முதல் எதிரிகள்.

Leave a Reply

Your email address will not be published.