“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 2

தொடர்ந்து வெளிப்படும் பேய்க்குணம்; தொடரும் அராஜகம்

thackreyசட்டசபைக்குள் நடந்த வன்முறை ஒன்றும் புதியதல்ல. பால் தாக்கரே மராட்டிய மக்களுக்கு மொழி வெறியையும், பிராந்திய-குறுகிய மனப்பான்மையையும் ஊட்டித்தான் தன்னுடைய சிவ சேனைக் கட்சியை வளர்த்தார். இழிந்த நடத்தைகளும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளும் கொண்டதே சிவ சேனையின் வரலாறு. மராட்டிய மக்களுக்கோ, மொழிக்கோ, மாநிலத்திற்கோ, அவற்றின் வளர்ச்சிக்கோ இக்கட்சி உருப்படியாக எதுவும் செய்த மாதிரித் தெரியவில்லை.

ஆரம்ப காலங்களில் அனைத்துத் தென் இந்தியரையும், குறிப்பாகத் தமிழரை, “மதராஸிகள்” என்று சொல்லி அவர்களை மும்பையைவிட்டுத் துரத்தும் நோக்கத்துடன் பல முறை அவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டவர்தான் பால் தாக்கரே. தமிழகத்தில் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டு வன்முறையைக் கட்டவிழ்த்த திராவிட இனவெறிக் கழகங்களும் இதற்குத் தூண்டுகோலாக இருந்தன என்பதையும் மறுக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலின் பேரில் பால் தாக்கரே வழியையே பின்பற்றி அவருக்குப் போட்டியாக நடந்துகொள்பவர்தான் ராஜ் தாக்கரே. சமீப காலங்களில் நடந்தவற்றைப் பார்த்தாலே சேனைகளின் வன்முறைக் கலாசரமும், மொழிவெறியும், மற்ற இந்தியர்களை அவமதிக்கும் மனப்பான்மையும் விளங்கும்.

செப்டம்பர் 2008-ல் மும்பையில் நடந்த ஒரு திரைவிழாவில், “நான் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவள் என்பதால் ஹிந்தி மொழியில் பேசுவதுதான் முறை” என்று யதார்த்தமாக நடிகை ஜெயா பச்சன் கூறியதைச் சாக்காக வைத்துத் தங்கள் மராட்டிய மொழிப்பற்றைக் காண்பிக்கும் விதமாக மும்பை வீதிகளில் வன்முறையைக் கட்டவிழ்த்தனர் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவினர்.

ஜனவரி 2008-ல் உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்து எளிய சாதாரண கூலி வேலைகள் செய்து பிழைக்கும் மக்களை அடித்து விரட்டினர் ராஜ் தாக்கரேயின் ஆட்கள். வட இந்தியர்கள் அவர்கள் கலாசாரப்படி ‘சாட் பூஜா’ என்கிற பண்டிகையை மும்பையில் கொண்டாடக்கூடாது என்று தடை போட்டனர். ரயில்வே துறை வேலைகளுக்கான பரீட்சைகள் மராட்டிய மாநிலத்தில் மராட்டிய மொழியில் மராட்டியர்களுக்காகத்தான் நடைபெற வேண்டும் என்று சொல்லி அப்பரீட்சைகள் நடக்க விடாமல் வன்முறையில் ஈடுபட்டனர்.

இத்தனை அராஜகங்கள் நடந்தும் கட்சி என்னவோ வளர்ச்சி அடையத்தான் செய்தது. சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்தது! இந்த வளர்ச்சி தந்த துணிவுதான் சட்டசபைக்குள்ளேயே வன்முறையில் ஈடுபடும் தைரியத்தைத் தந்தது. இந்தியாவின் மிகப் பெரிய பொது வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியை “மஹாராஷ்ட்ராவில் மராட்டிய மொழியில்தான் ஊழியர்கள் தேர்வுப்பரீட்சை நடத்த வேண்டும்” என்று மிரட்டும் அளவிற்கு துணிந்தார் ராஜ் தாக்கரே.

ஊடகங்களின் சீண்டல்களும் சேனைகளின் தாக்குதல்களும்

தன் பாணி அரசியலில் பெரும்பங்கைக் கவர்ந்து தன் ஓட்டு வங்கியிலும் கணிசமான அளவில் பங்குகளை ராஜ் தாக்கரே பறித்துக் கொண்டதால், கலக்கம் அடைந்த சிவ சேனாவின் தலைவர் பால் தாக்கரே, தனக்குப் பின் தன் மகன் உத்தவ் தாக்கரேயால் ராஜ் தாக்கரே அளவிற்குத் திறமையாகச் செயல்பட முடியாமல் போய் விடும் என்கிற காரணத்தால், மீண்டும் தன் பழைய பாணி வன்முறை அரசியலுக்குத் திரும்பினார். அதன் விளைவுதான் முட்டாள்தனமான சச்சின் டெண்டுல்கர் மீதான வசவுகளும் ஐ. பி. என் தொலைக்காட்சி அலுவலகத்தின் மீதான தாக்குதல்களும். சிவ சேனைத் தொண்டர்கள் செய்தது அராஜகம்தான் என்றாலும், அவர்கள் உணர்ச்சியைத் தூண்டும் அளவிற்கு திரும்பத் திரும்பக் கடுமையான விமரிசனம் செய்தது அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் செய்த மாபெரும் தவறு. ஏனைய ஊடகங்கள் ஒரு முறையோடு தங்கள் கருத்தைத் தெரிவித்து நிறுத்திக்கொண்ட போதிலும், ஐ. பி. என் தொலைக்காட்சி மட்டும் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டே இருந்தது. கடைசியில் அதன் பலனை அனுபவித்தது. இதையும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அனைவரும் இதனைத நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டும்.

thakrey-sachinஊடகங்கள் சேனைகளைச் சீண்டுவதும் பின்னர் தாக்குதலுக்கு உள்ளாவதுமான வெட்கங்கெட்ட வரலாறு மஹாராஷ்டிர மாநிலத்தில் அடிக்கடி நடப்பதுதான். சமீப காலங்களில் நடந்த சில சம்பவங்களைப் பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். வன்முறையைத் தூண்டுபவர்களும் சரி, அதைக் கையாளுபவர்களும் சரி, பீற்றிக் கொள்வதென்னவோ மராட்டியப் பெருமையைத்தான்!

2004-ல் ‘மஹாநகர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் நிகில் வாக்லே, சேனைத் தலைவர்களைச் சிறுமைப்படுத்தும் விதத்தில் விமரிசனம் செய்ததால், சேனைத் தொண்டர்களால் தாக்கப்பட்டார். அதே ஆண்டு, ‘ஹமாரா மஹாநகர்’ என்கிற பத்திரிகையின் ஆசிரியர் சஜித் ரஷித் இருமுறை கத்தியால் குத்தப்பட்டார்.

2006-ல் தாக்கரே குடும்பத்தினரை மறைமுகமாக மையமாக வைத்து ஒரு நகைச்சுவை நாடகம் ஒன்றை ஒளிபரப்பியதால் ‘ஜீ டிவி’ அலுவலகம் தாக்கிச் சூறையாடப்பட்டது. அதே வருடம், மஹாராஷ்டிரா அகமது நகரில் உள்ள ‘லோக்ஸட்டா’ பத்திரிகை, சத்திரபதி சிவாஜியின் படத்தை முதல் பக்கத்தில் வெளியிட மறுத்ததால், அதன் அலுவலகம் சூறையாடப்பட்டது.

2007-ல் ஹிந்து முஸ்லிம்களுக்கு இடையேயான பிரச்சினை ஒன்றை பாரபட்சத்துடன் ஒளிபரப்பியதால் ஹிந்து ராஷ்ட்ர சேனா என்கிற அமைப்பு ‘ஸ்டார் நியூஸ்’ அலுவலகத்தைத் தாக்கியது. அதே ஆண்டு, பால் தாக்கரேவை ‘வில்லன்’ என்று வர்ணித்ததால் ‘அவுட்லுக்’ பத்திரிகை அலுவலகம் சிவ சேனைத் தொண்டர்களால் தாக்கப் பட்டது.

போலியான தேசியவாதமும் போக்கற்ற பிராந்தியவாதமும்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை விளையாட விடாமல் இருப்பதும், கிரிக்கெட் மைதானங்களின் ஆடுதளங்களைத் தோண்டிச் சிதைப்பதும் சேனைகளை “தேசியவாதிகள்” ஆக்கிவிடாது. அமிதாப் பச்சனையும், சச்சின் டெண்டுல்கரையும், ஷாருக்கானையும் கண்டித்துவிட்டு, தாவூத் இப்ரஹிம் பற்றி வாயே திறக்காமல் இருப்பது சேனைகளின் “தேசியவாத” உருவகத்திற்கு உதவாது. அதோடு மட்டுமல்லாமல் இந்தத் “தீவிர” தேசியவாதிகள் ராமர் பாலம் பாதுகாப்பு இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை! பின் எந்த தேசியத்தைப் பற்றி பேசுகிறார்கள் இவர்கள்?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு பாராட்டிக் கொண்டிருக்கும் பா. ஜ. கவின் முதுகில் குத்தும் விதமாக, கங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு, தகுதியில்லாத, சச்சரவுக்குள்ளான ஒரு பெண்மணியை, அவர் மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக, ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கத் துணைபோனது, ஒரு மலிவான போலித்தனமான மராட்டியப் பெருமையல்லாமல் வேறு என்ன? மராட்டிய மாநிலத்திற்கும், மராத்தி மொழிக்கும் அவைகளின் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்குதான் பெருமை சேர்க்குமே ஒழிய மற்ற அரசியல் நாடகங்களோ வன்முறைகளோ இல்லை. அந்த விதத்தில் சேனைகளின் பங்கு பூஜ்யம்தான்!

பிராந்திய மண்வாசனையோடு தேசியத்தைக் கொண்டாடுவதில் தவறேதுமில்லை. ஆனால் அந்தப் பிராந்திய மனப்பான்மை எல்லைகளை மீறும்போது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தாக முடிகிறது. ஒருவருடைய தாய் மொழியை வைத்து அவரை ஏற்றுக்கொள்வது என்பது வடிகட்டிய முட்டாள்தனம். அது முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாக ஆகிவிடும். துரதிர்ஷ்டவசமாக, மராத்தி மொழியையும் பழம்பெரும் மராட்டிய தலைவர்களையும் மாசுபடுத்திவிட்டன சேனைகள். மராட்டிய சேனைகளின் அரசியலையும், தமிழகக் கழகங்களின் அரசியலையும் ஒப்பிட்டுப் பார்க்குங்கால், ஒரு மாநிலத்தை அழிவுப் பாதையில்கொண்டு செல்லும் தீய அரசியல் எப்படி பட்டது என்கிற பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம்.

பிரிவும் வளர்ச்சியும்

கழகங்களின் தமிழ் வெறிக்கும், சேனைகளின் மராட்டிய வெறிக்கும் வித்தியாசமில்லை. தென் இந்தியர்களுக்கு எதிராகச் சேனைகள் நடந்துகொண்ட விதத்தைப் போலவே, திராவிட கழகங்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டு தமிழகத்தை ரத்தக் களறியாக்கிச் சாவுகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தினர். இன்று வரை தமிழகம் இந்தி மொழிக்கு முழுவதுமாகத் தன் கதவுகளைத் திறக்கவில்லை. இதனால், தமிழகத்தைவிட்டு வெளிமாநிலங்களுக்குப் போகும் பெரும்பான்மையான தமிழர்கள், அம்மாநிலங்களைச் சேர்ந்த இந்திய சகோதரர்களுடன் பேசிப் பழக முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.

சேனைகளின் அரசியலும் கழகங்களின் அரசியல் போன்றதுதான். பத்திரிகையாளர்களைத் தாக்குவது, பத்திரிகை அலுவலகங்களைச் சூறையாடுவது போன்ற அராஜகங்களை கழகங்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பேயே, 70களிலும் 80களிலும் நடத்திக் காட்டியுள்ளனர். பத்திரிகை ஆசிரியர்களுக்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம்கொண்டு வந்து தண்டனை அளித்த காலமும் தமிழகத்தில் உண்டு.

‘தராசு’ பத்திரிகையின் அலுவலகம் தாக்கப்பட்டு இரு ஊழியர்களைக் கொன்றதும் கழகங்களின் கொலை வெறிதான். பார்ப்பனப் பத்திரிகை என்று ‘அன்புடன்’ அழைக்கப்பட்டு அடிக்கடி கழகங்களால் ‘கடுமையாக’ கவனிக்கப்பட்ட பத்திரிகை ‘தினமலர்’.

அந்த கலாசாரத்தின் தொடர்ச்சிதான், நவம்பர் 2003-ல் ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கும் ‘முரசொலி’ பத்திரிகைக்கும் எதிராக ஜெயலலிதாவின் அ. தி. மு. க அரசு எடுத்த நடவடிக்கைகளும், மே 2007-ல் மதுரை ‘தினகரன்’ அலுவலகத்தைத் தி. மு. க. வினர் தாக்கி மூன்று அப்பாவிகளைக் கொலை செய்ததும்.

shiv-sena-attacksஆரியர்-திராவிடர் கட்டுக்கதையையும், பிராம்மண எதிர்ப்பையும் வைத்துக்கொண்டே கழகங்கள் வளர்ச்சியடைந்தன. 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்கள் திராவிடர்கள், வட இந்தியர்கள் ஆரியர்கள் என்றும், நாத்திக வாதங்கள் மூலமும், ஹிந்துக் கடவுள்கள், கோவில்கள், ஆன்மிகச் சின்னங்கள் ஆகியவற்றைப் பழிப்பதன் மூலமும், தமிழ் கலாசாரம் வேறு ஹிந்து கலாசாரம் வேறு என்று தொடர்ந்து சொல்வதன் மூலமும், தமிழர்களை ஹிந்து மக்களிடமிருந்து பிரிக்க முற்சி செய்து இவர்கள் ஆடிய அரசியல் ஆட்டங்களின் பயனாகவும், இன்று தமிழ்நாட்டைவிட்டு வெளியேறி வேறு மாநிலங்களுக்குப் போகும் தமிழன், தன்னை ஒரு கடவுள் நம்பிக்கை உடைய ஹிந்துவாகக் காட்டிக் கொண்டாலொழிய, அவன் அவனுக்குரிய மதிப்புடன் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. வெளிமாநிலங்களில் தமிழன் நிராகரிக்கப் படுவதற்கான ‘புண்ணியம்’ கழகங்களுக்கே போய்ச்சேரவேண்டும்.

திராவிடர் கழகத்திலிருந்து ஈ. வெ. ராவிடம் சண்டையிட்டுப் பிரிந்து வந்த அண்ணாதுரை திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த போதும் சரி, கருணாநிதியுடன் தகராறு ஏற்பட்டு எம். ஜி. ஆர் பிரிந்து வந்து அண்ணா தி. மு. க ஆரம்பித்த போதும் சரி, கழகங்களின் அரசியலில், ஒரு சில சிறு மாற்றங்கள் தவிர பெரிதாக ஏதும் மாற்றங்கள் ஏற்படவில்லை. கழகங்களின் ஓட்டுப் பங்குகளும் அதிகரித்தன. தற்போது அரை டஜன் கழகங்கள் இருக்கின்ற நிலையில், அவற்றின் மொத்த ஒட்டுப் பங்குகளைக் கணக்கிட்டால், தேசியக் கட்சிகளின் ஓட்டுப்பங்குகளை விட பல மடங்கு அதிகமாக இருக்கின்றது. கழகங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக, காங்கிரஸ் கட்சியின் இயலாமையையும் முட்டாள் தனத்தையும்தான் கூறலாம். காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமை ராஜாஜி மற்றும் காமராஜை அவமதித்ததும், அவர்கள் போன்ற பெருந்தலைவர்களுக்குப் பிறகு மாநிலத்தில் சரியான தலைமை இல்லாததும், இரு கழகங்களுக்கும் பின்னால் அமர்ந்தபடியே நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட்டுச் சவாரி செய்ததும், காங்கிரஸ் கட்சி தன் செல்வாக்கை இழக்கக் காரணமாயின.

மஹாராஷ்ட்ராவைப் பொருத்த வரையில், சேனாக்கள் பிரிந்துள்ளதால் ஆரம்பத்தில் வளர்ச்சி ஏற்படுவது போல் தோன்றினாலும், அங்கே தமிழகம் போலல்லாமல், இரண்டு பலம் பொருந்திய பெரிய தேசிய கட்சிகளும், மூன்றாவதாக ஒரு பலம் வாய்ந்த பிராந்திய கட்சியும் இருப்பதால், அவர்கள் (சேனாக்கள்) அரசியலில் தொடர்ந்து பலம் பெறுவது மிகவும் கடினம். இருப்பினும் அவர்களின் அரசியல் என்னவோ கழகங்களின் அரசியலுக்குக் கொஞ்சமும் குறைந்தவை அல்ல என்பதும் உண்மைதான்.

சேனைகள் பின்பற்றும் “கழகமே குடும்பம் குடும்பமே கழகம்” அரசியல் பாணி

திராவிட கழகங்களின் அரசியலில், நாளடைவில், குடும்பத்தின் வளர்ச்சி கட்சியின் வளர்ச்சியை விட அதிகமாகிப் போனது. சேனைகளின் அரசியலிலும் அவ்விதமே நடப்பது போல் தோன்றுகிறது. இம்மாதிரியாகக் குடும்பத்தை மையமாக வைத்து கிடைக்கும் வளர்ச்சி நிரந்தரமாக இருக்காது. இவ்வுண்மைக்கு சிறந்த உதாரணம் காங்கிரஸ் கட்சிதான்! தி. மு. க. வின் தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் கருணாநிதி செய்த முதல் காரியம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற தலைவர்களை ஓரம் கட்டியதுதான். பிரிய முடிந்தவர்கள் பிரிந்தார்கள். அடங்கியவர்கள் அடங்கினார்கள். நாளடைவில் அவருடைய குடும்பம் மட்டுமே கட்சியில் சக்தி வாய்ந்ததாகிப் போனது. தற்போது கருணாநிதியின் குடும்பத்திற்குத் தெரியாமல் கட்சியில் எதுவும் நடக்காது; நடக்கவும் முடியாது. அதே போல்தான் சிவ சேனையிலும்!

அரசியல் அரங்கத்தில்ருந்து குடும்பத் தலைவர் விலகியதும், பிள்ளைகளுக்கு இடையே ஏற்படும் சண்டைச் சச்சரவுகள் கட்சியை உடைத்து முடிவில் அழித்து விடும். கருணாநிதி விலகிய பிறகு தி. மு. க. அந்த நிலைமைக்குத்தான் செல்லும் என்றே தோன்றுகிறது. ஆனால் சிவ சேனாவிலோ, பால் தாக்கரே விலகுவதற்கு முன்பாகவே பங்காளிச் சண்டைகள் ஆரம்பித்து விட்டன. ராஜ் தாக்கரே பிரிந்தார். இப்போது பால் தாக்கரேயின் மருமகளான ஸ்மிதா தாக்கரே, சோனியா, ராகுல் ஆகியோர்களைப் புகழ்ந்து பேசி காங்கிரஸில் சேரப்போவதாகத் தன் ஆசைகளை வெளியிட்டுள்ளார்.

பிரிவினை வாதம் தேசத்தைப் பிளக்கும்

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பிராந்திய-குறுகிய மனப்பான்மையுடனும் மொழிவெறியுடனும் நடந்துகொள்வது அன்னிய சக்திகளுக்குத்தான் அனுகூலமாக முடியும். முஸ்லிம் லீகின் அராஜகத்தைக் கண்டுகொள்ளாமல் அதனைக் காங்கிரஸ் கட்சி வளர விட்டதால்தான் பாரதம் இரண்டாகப் பிளந்தது. தற்போது இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் தேர்தல் சமயங்களில் போட்டியிடுவதில் தவறில்லை. தேர்தல் முடிந்து, ஒரு கட்சியோ, கூட்டணியோ அரசு அமைத்த பிறகு ஆள்பவர்களும், எதிர் கட்சிகளும், நாட்டின் வளர்ச்சியையும் மக்களின் ஒற்றுமையையும் மனதில்கொண்டு, நாட்டு மக்கள் அனைவரையும் சரிசமமாகப் பாவித்து, அனைவரும் பயன் பெறுமாறு திட்டங்கள் தீட்டி, காரியங்களை சாதிக்க வேண்டும். அதை விடுத்து ஜாதி, மத, மொழி துவேஷங்களைத் தீயென வளர்த்து அந்தத் தீயில் குளிர் காய நினைத்தால், இவர்கள் பொசுங்கிப்பொவதோடு மட்டுமல்லாமல், நாடும் அன்னியர்களின் கைகளில் சிக்கிக்கொள்ளும்.

எங்கெல்லாம் பிரிவினை வாதம் தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் கவனம் செலுத்தி இரும்புக்கரம்கொண்டு பிரிவினைவாதிகளை அடக்கி பிரிவினைவாதத்தைக் களையோடு பிடுங்கி அழிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், பிரிவினைவாதிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருந்தால், அன்னிய சக்திகள் உட்புகுந்து அவைகளின் தலையீட்டினால், தேசியப் பிரச்சினை என்ற நிலையிலிருந்து சர்வதேசப் பிரச்சினையாக உருமாறி, பின்னர் முடிவு காணா நிலைக்குச் சென்று விடும். இதற்குச் சிறந்த உதாரணம் காஷ்மீர் மாநிலம்.

இந்திய அரசியல் சாஸனத்தில் க்ஷரத்து-370ஐ புகுத்தி காஷ்மீர் மாநிலத்திற்குத் தனி அந்தஸ்து (தனி அரசியல் சாஸனம், தனி கொடி, தனி தேசிய கீதம், பலவிதமானச் சிறப்புச் சலுகைகள்) அளித்த மாபெரும் தவறைச் செய்தவர் அந்நாளையப் பிரதமர் நேரு. அதைத் தவறு என்று சொல்வதை விட குற்றம் என்று சொல்வது மிகவும் பொருந்தும். அந்தக் குற்றத்தின் பயனைத்தான் கடந்த 60 வருடங்களாக நாம் அனுபவித்து வருகிறோம். லட்சக்கணக்கான காஷ்மீர் ஹிந்து பண்டிட்டுகள் இன்று அவர்களின் சொந்த பூமியில் வாழ முடியாமல் தங்கள் நாட்டிலேயே அகதிகளாகத் துன்புற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த மண்ணிற்குத் திரும்புவதற்கோ, அவர்களின் மறுவாழ்விற்கோ ஒன்றும் செய்ய இயலாமல் தேசிய ஒருமைப்பாட்டைப் பற்றி மேடைகள் தோரும் பேசிக்கொண்டிருக்கின்றன பா. ஜ. க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும்!

ஆனால் க்ஷரத்து-370ஐ ஆரம்பத்திலிருந்து எதிர்த்து வருவது ஆர். எஸ். எஸ். இயக்கமும், பா. ஜ. க. மற்றும் சிவ சேனைக் கட்சிகளும்தான். மற்ற ஏனைய கட்சிகள் அனைத்தும் காஷ்மீர் மாநிலத்திற்கான தனி அந்தஸ்தை ஆதரித்துத்தான் ஓட்டுப்பொறுக்கி அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. எனவே, சிவ சேனை இன்று நடந்துகொள்வதைக் கண்டிக்கும் உரிமை ஆர். எஸ். எஸ். மற்றும் பா. ஜ. க. விற்கு மட்டும்தான் இருக்கிறதே ஒழிய காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்குக் கிஞ்சித்தும் இல்லை.

இன்று நாடு முழுவதும் போலி மதச்சார்பின்மை பேசிக்கொண்டு, அன்னிய சக்திகளுக்குக் காவடி தூக்கும் கட்சிகள் பல்கிப் பெருகியுள்ளன. இந்த தேசத்தின் பெரும்பான்மை மக்களான ஹிந்துக்களுக்கு என்று குரல் கொடுக்க பா. ஜ. க. மற்றும் சிவ சேனை ஆகிய இரு கட்சிகளே உள்ளன. சமீப காலமாக இவ்விரு கட்சிகளின் போக்கு சரியாக இல்லை. பா. ஜ. க. வும் மற்ற கட்சிகளைப் போல் மதச்சார்பின்மை வர்ணம் பூசிக் கொள்ள முயற்சி செய்கிறது. சிவ சேனையோ பிரிவினைவாதம் பேசிக்கொண்டிருக்கின்றது. ஒரு சிறுபான்மை ஓட்டை துரத்திச் செல்லும்போது நூறு ஹிந்து ஓட்டுக்களை இழக்க நேரிடும் என்பதை பா. ஜ. க. வும், மராட்டியர் அல்லாத ஒருவரைத் தாக்கும் போது நூறு மராட்டியர் ஓட்டுக்களையே இழக்க நேரிடும் என்பதை சிவ சேனாவும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இரண்டு கட்சிகளும் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு, பெரும்பான்மையான ஹிந்து மக்களை ஒற்றுமைப் படுத்துவதையே குறிக்கோளாகக்கொண்டு இயங்க வேண்டும். அவ்வாறு இயங்கினால்தான் இவர்களின் அரசியல் தொடரும். இல்லாவிடில் முடிந்துபோன சரித்திரமாகி விடும்.

வால் நுனி: – காஷ்மீர் மாநிலத்திற்கானத் தனி அந்தஸ்தைத் தொடர்ந்து எதிர்த்து வந்த பால் தாக்கரே, இன்று மராட்டிய மாநிலம் மாராட்டியருக்கே என்று பிரிவினை வாதம் பேசுகிறார். பிரிவினை வாதம் பேசியே அரசியல் செய்து வந்த கருணாநிதி இன்று சிவ சேனையைக் குறை கூறி நாட்டின் ஒருமைப்பாட்டைப் பற்றிப் பேசுகிறார்.

(முற்றும்)

10 Replies to ““சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 2”

  1. haran,

    You seem to NOT able to distinguish b/w separatism and regional identity? Even Modi has been focussing on Gujarathi Pride, and that doesnt mean it is separatism..

    You are unjustly accusing the senas, by siding with the pseudo secularists way of arguments.. The purpose of these two series is not clear.. it appears as though you have written this article just for opposing the senas..

    When the media insults the sena leader, they have to face the tune.. its retaliation and NOT violence.. do you want the sena leaders just to accept the insults silently like those incapable BJP leaders?

  2. Hi,
    This is my favourite topic as I always wonder and try to understand why humans want to live with His own people instead of accepting all humans as one (As portrayed by all knowledgeable).

    First of all, I agree with you even if we have difference of opinion we cannot indulge in violence.

    But I have different understanding of the situation in India.
    (1)Since India is a multi-cultural, Multi-linguistic society, Mumbai problem will not be the last.
    (2)I lived near Bangalore for quite some time and always worried why some of the tamilians behaved in the worst possible manner like.. pasting vulgar posters promising action against Kannadigas and taking critical stand for statue of Tiruvalluvar in Bangalore even by attacking
    some of the local Bangalore kannada organizations. I saw these posters lot of times in Tamilian dominated areas. But no official Tamil organisations came out against these which I believed were only creating distrust in the minds of kannadigas.
    We can even co-relate when a bomb blast happens, I expect lot of muslim organisations come out against Jihad But we don’t see them most of the times.
    (3)When the last census report was published in 2004 or 2005, BJP was the only party which highlighted the increased percentage of muslim populations in India compared to last census.
    I remember they used the word of “Demography Change”.

    What I wish to tell is when the demography changes and changes very dramatically and in huge proportion, it is the majority community that feels threatened so the minority community should openly comeout with their organisations that they are not against majority community which will definetely calm the situation.
    I don’t know whether this is the situation in Mumbai, But when the non-marathis become let us say about 40 to 50% of Mumbai or Pune, We can expect these fireworks even if don’t agree to this.

    R Balaji

  3. /பா. ஜ. க. வும் மற்ற கட்சிகளைப் போல் மதச்சார்பின்மை வர்ணம் பூசிக் கொள்ள முயற்சி செய்கிறது. சிவ சேனையோ பிரிவினைவாதம் பேசிக்கொண்டிருக்கின்றது. ஒரு சிறுபான்மை ஓட்டை துரத்திச் செல்லும்போது நூறு ஹிந்து ஓட்டுக்களை இழக்க நேரிடும் என்பதை பா. ஜ. க. வும், மராட்டியர் அல்லாத ஒருவரைத் தாக்கும் போது நூறு மராட்டியர் ஓட்டுக்களையே இழக்க நேரிடும் என்பதை சிவ சேனாவும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்/
    சரியான கூற்று கசப்பான உண்மையும் கூட

  4. ///இன்று தமிழ்நாட்டைவிட்டு வெளியேறி வேறு மாநிலங்களுக்குப் போகும் தமிழன், தன்னை ஒரு கடவுள் நம்பிக்கை உடைய ஹிந்துவாகக் காட்டிக் கொண்டாலொழிய, அவன் அவனுக்குரிய மதிப்புடன் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை///

    நல்ல செய்தி. இனியாவது தமிழகத்தில் இருக்கும் ஹிந்து எதிர்ப்பு மடையர்கள் தெரிந்து கொள்ளட்டும். இந்தியா ஒருங்கினைந்திருப்பது இருப்பது ஹிந்து மதத்தால் தான் என்று.

    ///ஆரியர்-திராவிடர் கட்டுக்கதையையும், பிராம்மண /எதிர்ப்பையும் வைத்துக்கொண்டே கழகங்கள் வளர்ச்சியடைந்தன///

    இன்றும் அதையே தொடர்வது தான் வேதனை. அதுமட்டுமா உ வே சுவாமிநாத ஐயர் தமிழுக்காக அருந்தொண்டாற்றியதை வசதியாக மறைத்து இன்றைய தமிழ்த் தாத்தாவே கருணாநிதி தான் என்பது போல் பிம்பம் வளர்க்கிறார்கள். பிராமணர்களின் தமிழ் தொண்டிறகு இதோ சில சாம்பிள்…

    //சங்க இலக்கியங்கயப் புலவர்கள் வரிசியில் பல பிராமணர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

    புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்’ என்று புகழப்பட்ட மாபெரும் புலவராகிய கபிலர் ஒரு பிராமணர். சங்க இலக்கியங்களாகத் தொகுக்கப்பட்டுள்ள நூல்களில் கபிலருடைய பாடல்கள் தான் எண்ணிக்கையில் முதல் இடம் பெறும்.

    வரலாற்றுப் புலவர் என்று புகழப்படுகிற சங்ககாலப் புலவராகிய மாமூலனார் ஒரு பிராமணர். மற்றொருவர் உருத்திரங்கண்ணனார். பெரும்பண்ணாற்றுப் படையும், பட்டினப்பாலையும் இவர் பாடியவை.

    பிள்ளைபாதி , புராணம் பாதி என்று பெரிய புராணமே சிறப்பிடம் தருகிறபடி அமைந்த வரலாற்ருக்குரியவர் திருஞானசம்பந்தர் ஒரு பிராமணர்.

    தேவாரம் பாடிய சுந்தரர் ஒரு பிராமணர். தேவாரம் ஏழாவது திருமுறையாக அமைந்துள்ளது. பெரிய புராணத்திற்கு அடிப்படையான திருத்தொண்டத் தொகை இவர் பாடியது தான்.

    திருவாதவூரில் ஆதிசைவ அந்தணர் மரபில் பிறந்த மாணிக்கவாசகரின் திருவாசகம் பக்தி இலக்கியத்தில் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஆக தமிழகத்தில் சைவ சமய இலக்கியங்களை எழுதியவர்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரில் மூவர் பிராமணர்களே.

    தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி ஆகிய நூல்களுக்கு சிறப்பான உரை எழுதிய நச்சினார்க்கினியர் ஒரு பிராமணரே!

    சைவ சித்தாந்த நூல்களில் ‘இருபா இருபது என்ற நூலை இயற்றிய பெரும் பண்டிதரான அருள் நந்தி சிவாச்சாரியார் ஒரு பிராமணரே. தமிழில் பாரதத்தை இயற்றிய வில்லிபுத்தூராரும், கந்த புராணம் பாடிய காஞ்சிபுரம் கச்சியப்ப சிவாச்சாரியாரும் பிராமணர்களே.

    திருக்குறளின் உரைகளிலேயே சிறப்பான உரையை எழுதிய பரிமேலழகர் ஒரு பிராமணரே! ஆங்கில மொழியின் செல்வாக்கு இந்தியா முழுவதும் பரவிய 19ஆம் நூற்றாண்டில் பல பிராமணர்கள் தமிழை வளர்க்கப் பாடுப்பட்டார்கள். பரிதிமாற்கலைஞர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்ட சூரிய நாராயண சாஸ்திரியார் நாடகவியல் என்ற நூலின் மூலம் தமிழில் நாடக இலக்கண நூல் இல்லாத குறையைத் தீர்த்தவர். இவர் பிராமணர். இந்திய மொழிகளை பாட திட்டத்திலிருந்து ஆங்கில கிறிஸ்தவ அரசு அகற்ற நினைத்த போது வீடு வீடாகச் சென்று பெரும் முயற்சி செய்து விழிப்புணர்சி ஏற்படுத்தி அதைத் தடுத்தார். அவர் பிராமணர்.

    நன்னூல் ஆத்திச்சூடி கொன்றைவேந்தன், நறுந்தொகை, நன்னெறி, மூதுரை , திருவள்ளுவ மாலை ஆகிய நூல்களுக்கு உரை எழுதியவர் சரவணப் பெருமாள் ஐயர் என்கிற பிராமணரே.

    வண்ணக் குறவஞ்சி, நகுமலை குறவஞ்சி என்ற நூல்களை இயற்றிய யாழ்ப்பாணம் விஸ்வநாத சாஸ்திரி ஒரு பிராமணரே//

    அழியும் நிலையில் இருந்த தமிழ் இலக்கியங்களை வீடுவீடாகச் சென்று ஓலைச்சுவடிகளை திரட்டி தமிழ் இலக்கிய உலகத்தைக் காப்பாற்றிய உ வெ சுவாமிநாத ஐயார் படாத பாட்டை இன்றைக்கு செம்மொழி மாநாடு நடத்துபவர்கள் பட்டிருப்பார்களா என்ன.

    ஆனால் பிராமணர்கள் தமிழர்களே இல்லை என்ற பிரசாரம் வெகு தீவிரமாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது. இது வேதனையிலும் வேதனை.

  5. அன்பு செந்தில்,

    கட்டுரை ஆசிரியரின் பார்வை இந்துத்துவம் சார்ந்தது. எனவே அவர் அப்படித்தான் எழுதுவார்.

    இந்துத்துவம் என்பது INCLUSIVE. அதாவது, மொழி, மதம், இனம், நாடு உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்களை மனிதம் என்னும் பொது அடையாளத்தோடு சேர்த்து ஏற்றுக்கொள்ளுபவர்கள் இவர்கள். “Integral Humanism” போன்ற விஷயங்களை எல்லாம் பேசுவார்கள், பயில்வார்கள். தமிழ் இந்து கட்டுரைகளும் அப்படித்தான் எழுதுகின்றன. இவர்களெல்லாம் ஃபாஸிஸ்ட்டுகள்.

    ஆரிய ஆக்கிரமிப்பாளர்களும், ஆரிய அடிவருடிகளும் சேர்ந்து நடத்தும் தளம் இது. இவர்கள் இப்படித்தான் மனிதாபிமானப் போர்வையில் உலகத்து மனிதர்களையெல்லாம் ஒன்றே போலக் கருத வேண்டும் என்று சொல்லி ஆங்கிலேயர்கள் வடிவமைத்த நமது சொந்தப் பாரம்பரியத்தைக் கெடுக்கப் பார்ப்பார்கள். குள்ள நரிகள். ஆஷாடபூதிகள். சாமியார்கள்.

    இந்த இந்துத்துவ பாசிசக்காரர்களான ஆர். எஸ். எஸ். காரர்களைப் பாருங்கள். இந்தியாவில் அனைத்து மொழியினரும், மதத்தினரும் இணைந்து வாழ வேண்டும். சிவ சேனை மற்ற மாநிலத்தவர்களை தாக்கினால், தாக்கப்படுபவர்களுக்கு ஆர். எஸ். எஸ் பாதுகாப்பு அளிக்கும் என்று அறிக்கை வெளியிடுகிறார்கள். இப்போது இந்தி பேசுபவர்களைப் பாதுகாக்கிறது. இதற்கு முன்பு தமிழர்கள் இந்த சிவ சேனையால் தாக்கப்பட்ட பொது இதே ஆர். எஸ். எஸ்தான் அவர்களை பாதுகாத்தது. ஏனென்றால், அவர்கள் தமிழர்களையும் இந்தியர்களாக நினைக்கிறார்களாம். என்ன ஒரு பாசிச வெறி பார்த்தீர்களா ?

    “தமிழர் என்றொரு இனம் உண்டு. அதற்குத் தனியே ஒரு குணம் உண்டு” என்ற பாடத்தை நமது திராவிடப் பாசறை நமக்குப் போதித்திருக்கும்போது, இந்த ஆர்.எஸ்.எஸ். ஃபாஸிஸ்ட்டுகளின் பாச்சா நம்மிடம் பலிக்குமா? நாமெல்லாம், இந்தியர்கள் இல்லை. நாமெல்லாம் தமிழர்கள். நாமெல்லாம் இந்துக்கள் இல்லை. திராவிடர்கள். அதுவும் மெக்காலே பாதிரியின் வழிவந்த தூய்மையான திராவிடர்கள்.

    நம்மை இந்தியர்கள் என்றும் இந்துக்கள் என்றும் பொய் சொல்லி, உயர்வான வெள்ளையர்கள் எழுதிய வரலாற்றைத் திரித்து இந்த ஆர்.எஸ்.எஸ். ஃபாஸிஸ்ட்டுகள் கொட்டமடிக்கிறார்கள். அறிவியல் பூர்வமாக ஆதாரஙக்ளை முன்வைத்தால் நாங்கள் நம்பிவிடுவோமா? நாங்கள் எல்லாம் பகுத்தறிவுப் பகலவன் ஈவேரா பள்ளியில் படித்தவர்கள். உங்கள் ஆரிய மாயைக்கெல்லாம் மயங்க மாட்டோம்.

    தமிழ் நாடு தனி நாடாக வேண்டும், அந்தத் தனி நாடும் பிரிட்டிஷ் காலனியாக கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய ஈவேராவின் மானுட நேயம் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வருமா? வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று பேசி, வடக்கத்திய சேட்டுகளின் கடைகளை சூறையாடி புறநாநூற்று வீரத்தை வெளிப்படுத்திய நமது கழகத்தினர், அவர்கள் வீட்டுப் பெண்களை மானபங்கம் செய்து அகநாநூற்றுப் பாடல்களில் உள்ள கடைத்திரப்புச் செய்யுள்களை மீழ் நிகழ்வு நடத்தியதாகக் களியுவகை அடைந்தனர். அதெல்லாம் இந்த ஃபாஸிஸ்ட்டுகளுக்குத் தெரியவே தெரியாது. காட்டுமிராண்டிக் கலாச்சாரம் என்று தந்தை பெரியார் சொன்னது இவர்களது கலாச்சாரத்திற்கும் பொருந்தும்.

    நமது மனப்பான்மை வேறு. திராவிட வீரர்களின் இந்த EXCLUSIVE மனப்பான்மைக்கு மொழிவழி இன உணர்வு என்பது திராவிட பாரம்பரியம் இட்ட பெயர். இந்த மொழிவழி இன உணர்வு மிக்க சிவ சேனைக் காரர்கள், நம் திராவிடர் கழகப் பண்பாட்டைத்தான் பின்பற்றுகிறார்கள். தமிழர்களை மும்பையில் இருந்து விரட்டி அடிக்கக் கலவரங்களை நடத்தியது கூட நம் திராவிடப் பண்பாட்டின் தொடர்ச்சிதான். இந்தப் பண்பாட்டை நிலை நிறுத்திய ஈவேராவைத்தான் நாம் தந்தை என்று அழைக்கிறோம். இந்தப் பண்பாட்டை சிவசேனைக்காரர்களுக்கும் போதித்துத், தமிழர்களை மும்பையில் இருந்து விரட்டிவிடச் செய்த கருணாநிதியைத்தான் உலகத் தமிழர்களுக்கெல்லாம் காவலன் என்று அழைக்கிறோம். இந்தி பேசும் மக்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட வீரமணிதான் தமிழர்களின் தளபதி.

    சிங்களர்கள் பிரச்சினை செய்தபோது, இலங்கைத் தமிழர்களைத் தனித்தமிழ்நாடு கேட்கத் தூண்டியது நமது திராவிடப் பாரம்பரியம். அவர்களை வன்முறையில் ஈடுபடுத்தி, இலங்கையைத் தவிர மற்ற எல்லா நாடுகளிலும் அவர்கள் வாழும்படிச் செய்தது நமது திராவிடம். தமிழர்களை அவர்கள்து சொந்த நாட்டில் வாழ விடாமல், அந்நிய நாட்டில் பிழைக்கும்படிச் செய்து, உலகமெங்கும் தமிழ் பரவ நாம் அரும்பெரும் சமூக சேவை செய்தோம் நாம். ஆனால், இந்தப் பெருமிதங்களை எல்லாம் வெளியில் சொல்லவிடாமல் நமது கண்ணியம் தடுக்கிறது.

    சிவசேனை தமிழர்களைத் தாக்கியபோது தமிழர்களைக் காப்பாற்றியது ஆர்.எஸ்.எஸ் என்ற தகவலைக் கருணாநிதியோ, வீரமணியோ என்றாவது சொல்லியிருக்கிறார்களா ? அதுதான் திராவிடப் பாரம்பரியத்தின் மொழி வழி இன உணர்வு. கண்ணியம், கட்டுப்பாடு.

    எனவே, சிவசேனைக்காரர்களின் மொழிவழி இன உணர்வைப் பாராட்டுவது திராவிட பாரம்பரியத்தில் வந்த நமது கடமை. தார்பெயிண்ட் அடித்தே தமிழை வளர்த்தோமே நாம். அதையும் அவர்கள் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் இந்தி ஆக்கிரமிப்பு அரக்கனை அவர்கள் எதிர்க்க முடியும். அதுவரை, கூலி வேலை செய்து, ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி, ஒரு நாளைக்கு இரண்டு வேளை கஞ்சி குடிப்பவர்களைக் கத்தியால் குத்துவது, அவர்கள் வீடுகளை எரிப்பது போன்றவற்றைச் செய்தால், அதை வன்முறையாக விமர்சிப்பது ஆர்.எஸ்.எஸ் பாஸிஸ்ட்டுகளுக்கே உரித்தான குள்ள நரித்தனம். இவற்றை RETALIATION என்று கருதவேண்டும் என்றுதான் திராவிடப் பாசறைகள் போதிக்கின்றன. ஆனால், இதெல்லாம் இந்த இந்துத்துவத்து ஆட்களுக்குப் புரியுமா? அவர்கள் INCLUSIVISM பேசுபவர்கள். இதையெல்லாம் அவர்கள் VIOLENCE என்று குறை சொல்லுவார்கள். நம் ஈவேரா எதிர்த்த காந்தி இவர்களைப் பாராட்டியிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. காந்தியால் பாராட்டப்பட்ட இவர்கள் ஏழைகளைக் கொலை செய்யும் மொழிவழி இன உணர்வை வன்முறை என்று வர்ணிப்பதில் ஆச்சரியம் கிடையாது.

    இப்படியெல்லாம் இந்த இந்துத்துவத்து ஆட்கள் INCLUSIVE ஆக இருப்பதால்தான் இந்த ஆர்.எஸ்.எஸ்ஸில் முஸ்லீம்களும், கிறுத்துவர்களும்கூட இருக்கிறார்கள். ஆனால், முஸ்லீம் லீக்கில் ஒரு இந்து தலைமைப் பொறுப்பில் இருக்கத்தான் முடியுமா? ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து உங்களைத் தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால், பாருங்கள். இதே ஆர்.எஸ்.எஸ்ஸில் மார்க்கஸியத்தின் மீது, பொருள்முதல் வாதத்தின்மீது அபிமானம் கொண்டவர்கள் தலைமைப் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

    EXCLUSIVE மனப்பான்மை பற்றி ஆர்.எஸ்.எஸ். ஃபாஸிஸ்ட்டுகளுக்கு என்ன தெரியும்? அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் INTEGRAL HUMANISM என்னும் ஒழிக்கப்பட வேண்டிய ஃபாசிசக் கோட்பாடு.

    ஏழை மனிதர்களைக் கொலை செய்து மராத்தி மொழி அடையாளம் மலரட்டும். நாம் தார்பெயிண்ட் அடித்தேத் தமிழை வளர்ப்போம்.

    வாழ்க மொழிவழி இன உணர்வு ! வாழ்க திராவிடப் பண்பாடு ! ராஜ்தாக்கரே வாழ்க ! ராஜ்தாக்கரேயை ஆதரிக்கும் ராகுல் காந்தி வாழ்க ! ஈவேரா வாழ்க !

    இந்தியா ஒழிக ! இந்து மதம் ஒழிக ! மானுட உன்னதம் பேசும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஃபாசிசம் ஒழிக !

  6. //“தமிழர் என்றொரு இனம் உண்டு. அதற்குத் தனியே ஒரு குணம் உண்டு”// ஆம், சட்டக்கல்லூரி வாசலில் பார்த்தோம், தினகரன் அலுவலகத்தில் பார்த்தோம், கால் துண்டிக்கப்பட்டு கிடந்த காவலரை வேடிக்கைப் பார்த்த குணமுள்ள தமிழர்களையும் பார்த்தோம். பருத்திவீரன் போன்ற எல்லா படங்களிலும் தமிழனின் தனிக்குணம் தான் தொடர்ந்து காட்டப்பட்டு வருகிறது. அது தானே தமிழனின் அடையாளம்.

  7. ///Wilting Tree
    20 February 2010 at 8:44 am///

    ஐயய்ய!, என்னதான் சொல்ல வர்றீங்க. ஒரே கொழப்பமா இருக்கு.

  8. When we walk on the road and when a vehicle comes near us, it is a tendency to abuse the vehicle-driver/owner. But, if we travel in our vehicle and some pedestrian comes across, we from inside the vehicle insult the pedestrian. All political violence based on hatred against other communities and resultant atrocities, according to me, emanated from Dravidian Parties and that gave birth to many Regional Parties across the country with narrow-minded hate-him or her poitics. They grew bigger supported by other Parties. It is unfortunate that there is no definition about ‘son of the soil’ which is defined according to time and convenience. Equally unfortunate is the fact that Tamil Brahmins in their own land where their mother-tongue is only TAMIL are not regarded as Tamilians but aliens. Mother tongue of many of the Leaders claiming to be Protectors of Tamil is not Tamil but some other language with their roots in some other State. What was India before Independence? Indians were united with only one Mission of ‘Freedom from British’. After the blunder of division of States on linguistic basis, we have started further divisions among ourselves. I have lived in Mumbai for about 30 years. It is undeniable fact that there is always a fear as to when and what would happen to common people from militant politicians who have vested interests above anything else. At the same time during 1993 riots, but for Shiv Sena, Hindus would not have lived peacefully. Unless people identify and discourage culprits whose sole aim is to harm the innocent public by some means or other, it will be difficult to control militancy. People should explain to Parties what they want and expect from them. During Election Times, a People’s Common Manifesto can be drawn and people can vote only such Parties who promise to execute it, with an assurance that they would step down on failure. Everyone should adopt a policy of HELP EVER, HURT NEVER. If I am wrong, sorry.

  9. ராமரே!

    //ஐயய்ய!, என்னதான் சொல்ல வர்றீங்க. ஒரே கொழப்பமா இருக்கு//

    இது என்ன உட்டலங்கிடிய இருக்கே உங்க கிட்ட !

    அவரு சொல்லறாரு அவனுங்களை (பாசிசம்னு சொல்லுற பேமனிங்கள) பார்த்து “சும்மா போங்கடா சுள்ளானுன்களா” என்று.

    ஒழிக பிராந்தியவாதம், வாழ்க ஹிந்து தேசியவாதம் !

    பிரதீப் பெருமாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *