Taken – தந்தைகளின் திரைப்படம்

“I don’t know who you are. I don’t know what you want. If you are looking for ransom, I can tell you I don’t have money. But what I do have are a very particular set of skills; skills I have acquired over a very long career. Skills that make me a nightmare for people like you. If you let my daughter go now, that’ll be the end of it. I will not look for you, I will not pursue you. But if you don’t, I will look for you, I will find you, and I will kill you”

taken-posterபடத்தில் கதாநாயகன் (ப்ரையான்) கடத்தல்காரனிடம் சொல்லும் இந்த வசனமே கிட்டத்தட்ட முழுக்கதையயும் சொல்லி விடுகிறது.

விபச்சாரத்துக்கு ஆள்கடத்தி விற்கும் ஒரு ஆர்மீனிய இஸ்லாமியக் கும்பலிடம் பிடிபட்டுள்ள தனது மகளை சர்வதேச நெட்வொர்க்குகளில் உள்நுழைந்து மீட்டுக்கொண்டுவரும் ஒரு தகப்பனின் கதை இது என ஒரு வரியில் சொல்லலாம்.

லாஸ் ஏஞ்சலஸின் வசிக்கும் அப்பா சொல்லச் சொல்லக் கேட்க்காமல் அம்மா கொடுத்த செல்லத்தில் அமெரிக்காவில் இருந்து நண்பியுடன் பாரீசுக்குத் தனியாகச் செல்கிறாள் பெண். விவகாரத்து செய்யப்பட்டு விட்ட மனைவியிடம் இருக்கும் மகளிடம் ஓரளவுக்கு மேல் தன் செல்வாக்கு எடுபடாத அப்பா வேறு வழியின்றி அனுமதிகிறார். பாரீசில் பெண் இறங்கியதுமே கடத்திச் செல்லப்படுகிறாள். உலகச் சந்தையில் ஏலம் போட்டு அவளை விற்று விடுகிறார்கள். அதிர்ந்து போகும் அப்பா பாரீசுக்குப் பறந்து போய் கடத்தியவர்களையும், ஏலம் விட்டவர்களையும், ஏலத்தில் எடுத்து அனுபவிக்க இருந்தவர்களையும் ஒருவர் விடாமல் தேடிப் பிடித்துக் கொன்று மகளை மீட்டு வருகிறார். அமெரிக்காவின் ரகசிய ஏஜெண்ட்டாக, ஒரு ப்ரிவெண்டராக இருக்கவேண்டியவர், தன் மகள் அருகில் இருக்க வேண்டும் என்ற ஆசையில் தன் ரகசிய வேலையைத் துறந்துவிட்டு இதை சாதிக்கிறார். தன் பெண்ணுக்காக தன் தொழில் ரகசியங்களைப் பயன்படுத்தி வேலையில் இறங்க நேர்ந்து விடுகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை படத்துடன் கட்டிப் போடும் திரைக்கதை, விறுவிறுப்பு, கூர்மையான வசனங்கள் நிறைந்த ஆக்‌ஷன் படம்.

வெறும் ஆக்‌ஷன் ஃப்ளிக்காகத் தோன்றும் இந்தப் படத்தில் உன்னிப்பாக மிக நுட்பமாக பல காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவில் இருந்து தனியாக சுற்றுலா வரும் இளம் பெண்களைக் கடத்துபவர்கள் யாரோ சாதாரண பெண் கடத்தும் கும்பல் அல்ல. பெண்ணைக் கடத்தும் பொழுது தன் அப்பாவிடம் செல் ஃபோனில் அவர்களது அடையாளங்களைப் பெண் சொல்கிறாள். தாடி, அரை நிலவு, நட்சத்திரம். அரை நிலவையும் நட்சத்திரத்தையும் குறியாகப் பச்சை குத்தியவர்கள் கடத்துகிறார்கள் என்கிறாள். பின்னர் கடத்தல் குழு அனைவருக்குமே அது பொதுக் குறியீடு என்று சி ஐ ஏ கண்டு பிடித்துச் சொல்கிறது. பெண்களைக் கடத்தி ஏலத்துக்குவிட்டு விபச்சாரம் அனுபவிக்கும் கும்பலின் ரகசிய அடையாளக் குறியீடாக இந்தப் படம் சொல்வது நிலவையும் நட்சத்திரத்தையுமே. எந்த இடத்திலும் கடத்தல்காரர்கள் யாரென்று வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் அவர்கள் அடையாளக் குறியாக பிறை நட்சத்திரம் வைத்திருப்பது, தாடி வைத்திருப்பது, பெயர்கள் ரஹ்மான், ஷேக் என்று வைத்திருப்பதையெல்லாம் சொல்கிறார்கள். (இதற்கு வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாம்!) அல்பானிய தேசத்தில் இருந்து கிளம்பி ஐரோப்பா முழுவதும் பரவி, கடத்தல், கொலை, போதை மருந்து, பெண்கடத்தல் என்று சகல வித நாசகாரச் செயல்களையும் செய்யும் அந்தக் கும்பல்களைப் படத்தில் மிக நுட்பமாக அடையாளம் காட்டிக் கொண்டே போகிறார்கள்

father_daughterபெண்ணின் அப்பா கடத்தல்காரர்களிடம் சொல்கிறார். நாங்கள் பலவீனமான நாடாக இருக்கிறோம், பரந்த மனப்பான்மை என்ற தவறான நோக்கில் உங்களை உள்ளே விடுகிறோம், நாங்கள் எதுவும் செய்ய இயலாத கையாலாகதவர்களாக இருக்கிறோம், உங்களைப் போன்ற வன்முறைக்குத் துணைபோகும் சக்திகள் உலகம் முழுவதும் பரவி குண்டு வைக்கிறீர்கள், எங்கள் பெண்களைக் கடத்தி ஏலம் விடுகிறீர்கள், எங்கள் இளைஞர்களுக்குப் போதை மருந்து விற்கிறீர்கள், இருந்தும் கைகள் கட்டப் பட்டவர்களாகிய நாங்கள் ஏதும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம் என்று. ஓர் இந்திய மனம் அப்போது என்ன யோசித்திருக்கும் என்பதை உங்களுக்கே விட்டுவிடுகிறேன். ஒரு பிரெஞ்ச் ரகசிய உளவு அதிகாரி சொல்கிறார், கிழக்கில் இருந்து முதலில் இருபது பேர்கள் வந்தார்கள், பின்னர் நூறு பேர்கள் வந்தார்கள், இப்பொழுது ஐரோப்பா முழுவதும் ஊடுருவிவிட்டார்கள், நாம் ஏதும் செய்ய இயலாது என்று.

பெண்களைக் கடத்திச் சென்று ஏலம் விடுகிறார்கள். 50ஆயிரம் டாலர்களில் தொடங்கி 5 லட்சம் டாலர்கள் வரை பெண்களை அரபு ஷேக்குகள் ஏலத்துக்கு எடுத்து தங்கள் கப்பல்களில் கடத்தி அனுபவிக்கிறார்கள். அன்று ஆரம்பித்தது இன்றும் தொடர்கிறது. அதற்கு இன்றைய நவீன மென் ஜிகாதிகள் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஏதும் செய்ய இயலாமல் கை கட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதை இந்தப் படம் மிகத் தெளிவாகக் காண்பிக்கிறது. இதோடு தொடர்புடைய பல காட்சிகளை இந்தப் படத்தில் குறியீடாகச் சொல்லிச் செல்கிறார்கள். மென்ஜிகாதிகளுக்கு கொடி பிடிப்பவர்கள் இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டும். அதனுடைய மூலம் என்ன என்பதை உணர வேண்டும். நம் எல்லோருக்கும் பெண் குழந்தை உண்டு. நாளைக்கு நம் பெண் குழந்தைகளை எந்த மாதிரியான உலகத்தில் வாழ வைக்கப் போகிறோம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

படத்தில் ப்ரையானின் திட்டமிடல்களும், அதை செயல்படுத்தும் விதமும், மிக அருமையாக வந்துள்ளது.

பெண்குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் பார்த்தால், ப்ரையன் அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் கைதட்டி ஊக்கப்படுத்துவார்கள். அந்த அளவு கடத்தப்பட்ட பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை காண்பித்திருப்பார்கள்.

போதை ஊசி ஏற்றி அந்தப் பெண்களை விபச்சாரத்தில் தள்ளுவதும், என்னவோ ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க வருவதுபோல விபச்சாரத்திற்காக ஆண்கள் வரிசைகட்டி நிற்பதும் மனதை பிசையும் காட்சிகள்.

அமெண்டா பிணமாகக் கிடக்கும் காட்சியும், மார்க்கோவிடம் உண்மையைக் கறக்கும் காட்சிகளும், பிரையான் திட்டமிடும் விதமும், ஒரு பயிற்சியுள்ள ஏஜெண்ட் எப்படி இருப்பான் என்பதை கண்முன் கொண்டுவரும் காட்சிகள்.

குழந்தைகளை செல்லம் கொடுத்துக் கெடுக்கும் பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.

வயிற்றில் அமிலம் கரைத்த, அழகாக எடுக்கப்பட்ட மனதைப் பிசையும் அருமையான திரைப்படம் ”டேக்கன்”

13 Replies to “Taken – தந்தைகளின் திரைப்படம்”

  1. One of the very good movies I saw in 2009. When I saw the trailer of ‘Jaggubhai’ I even thought it could be a remake of ‘Taken’ 🙂
    The network and the way the underground activities work in the world are really shocking. As the article says, the French agents dialogue about the immigrants from other countries and the network they form are really mind boggling. I would recommend this movie to anyone. Though the story revolves prostitution, there is not even a single scene which makes us flinch, unlike the tamil movies, where even the normal masal movie cannot be watched with the family.

    Request Tamilhindu to write about ‘hotel rwanda’ which shows how the planned ‘Divide and rule’ of the europeans is creating havoc in all parts of the world till date. Also, would recommend reviews on ‘Blood Diamond’ and ‘Lord of War’.

    Regards,
    Satish

  2. “My name is Khan” படம் வந்தது தெரியும். இந்தப் படம் வந்தது தெரியாது.

  3. மூலக் கதை – இந்தியா. இது இந்தியர்களுக்காக, மேலை நாட்டார் எடுத்த திரைப்படம் என்பது தெரிகிறது.

    ஆரோக்யசாமி

  4. சாதாரண சினிமாட்டிக் ஹீரோயிஸம் தான் இந்த படம், ஆயினும் பெண் குழந்தை பெற்றவர்கள் காணும் போது ஏற்படும் தாக்கம் மிக அதிகம்.

    சொன்னதுபோல், ப்ரையன் அடிக்கும் ஒவ்வொரு அடியம், நல்லா போடு என்று சொல்ல வைத்தது.

  5. நல்ல விறுவிறுப்பான திரைப்படம். நல்ல அலசல். முக்கியமான விஷயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். நாம் ஏற்கனவே இங்கு லவ் ஜிகாத் பற்றி பேசியிருக்கிறோம். அதன் தொடர்ச்சியைத்தான் இந்தப் படமும் சுட்டிக் காட்டுகிறது. பெண்களைக் கடத்திச் சென்று செக்ஸ் அடிமைகளாக விற்பதும் வைத்துக் கொள்வதும் முகமது காலத்தில் இருந்தே நடந்து வருவதுதானே. அதற்கு அவர்கள் மதத்திலேயே அங்கீகாரம் அனுமதி கொடுக்கப் பட்டிருக்கிறது. காஃபீர்களின் பெண்களை அடிமைகளாக எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று, முகமதுவே இப்படி நிறைய அடிமைகளைப் பிடித்து தன் பாலியல் இச்சைகளுக்கு பயன் படுத்திக் கொண்டவர்தான். அவரை நபி என்று கொண்டாடுபவர்கள் அவர் செய்ததை இறைக் கட்டளை என்று ஏற்றுக் கொண்டு இன்றும் அத்தகையக் கொடுமைகளைச் செய்து வருகிறார்கள். அதைத்தான் இந்தப் படம் வலிமையாகச் சுட்டிக் காட்டுகிறது

  6. லயம் நீஷன் இந்த படத்தை ஒற்றை ஆளாக எடுத்து நிறுத்தி இருக்கிறார். அவரைத் தவிர இந்த படத்தில் எந்த காரெக்டரும் பெரிதாக காட்டப் படவில்லை.

    வில்லன்களை ஒரு எறும்பு புற்று போல – வெறும் பூச்சிகளாக – கொல்லப் படவேண்டியவர்களாக சித்தரித்தது இந்த படத்தின் பலவீனம்.

    வில்லன்கள் எல்லோரும் முஸ்லிம்கள் என்று சந்தோஷப் பட்டுக் கொண்டதுடன் நின்று விட்டது இந்த கட்டுரையின் பலவீனம்.

    உண்மை இதை விட பயன்கரமாகவோ அல்லது மிகைப் படுத்ஹப் பட்டதாகவோ இருக்கலாம் – கட்டுரையில் இன்னும் கொஞ்சம் அலசி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

  7. ’ஜக்குபாய்’ படத்தின் ரிஷி மூலம், ஆதி மூலமென்று பார்த்தால் அது ‘Wasabi’ தான். அதை இயக்கிய லூக் பெஸ்ஸான் (:Luc Besson) இந்த Taken படத்துக்கு திரைக்கதை எழுதியவர்!

    அவருடைய அடுத்த படம் ‘From Paris With Love’! அதுவும் கிட்டத்தட்ட இதே கதை தான் என்று படித்தேன்.

    இந்த ஒரே ஒரு சப்ஜெக்டை அவர் இன்னும் எத்தனை தடவை தான் எடுக்கப் போகிறாரோ, தெரியவில்லை!

    ஜக்குபாயில் நானும் வேஷம் கட்டினேன் என்பது கொசுறு செய்தி!

  8. நல்ல வேகமாகவும், சரளமாகவும் எழுதவும், சொல்ல வந்ததைச் சொல்லவும் வெற்றிச்செல்வனால் முடிகிறது. வாழ்த்துக்கள்.

  9. How about our kamal’s Mahanadhi. I am not a father yet, but what ever the author comments about safe guarding the kid our Mahanadhi created same effect in mine when I was in studies itself. I am not blaming any particular religion. How about characters coming in Mahanadhi who sells kamals daughter. Are no hindus involved in that story. Here “Manitha Itchaikale” karaname thavirah madaham karanam illai. Unmiyai than mathathai nesikira kadai pedikirah yentha mathathu karanum ithai seyya mattan.

    –Murali

  10. ஸ்ரீ. Murali,
    உங்களுக்கு எப்படி பிறரைப் பற்றித் தெரியும்? எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறீர்கள்? : //Unmiyai than mathathai nesikira kadai pedikirah yentha mathathu karanum ithai seyya mattan.//

    ஹிந்துத்துவத்தில் ஒரு மனிதனுக்கு மொத்தம் ஏழு தாயார் எனவும் மனைவி அல்லாதாரை தாயாக மதித்தல் வேண்டும் என்றும் இருக்கிறது. ஆனால் இஸ்லாத்திலோ பெண் எனப்பட்டவள் அல்லா அவர்களால் ஆணின் தொடையில் இருந்து போகத்திற்காக உருவாக்கப் பட்டவள் என்று இருக்கிறது. இவ்வாறாக போதிக்கப்பட்ட ஒருவன் பெண்களை போகப்போருளாக்கும் இக்கடத்தலில் ஈடுபட, எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி முனையலாம் அல்லவா?

  11. திரு.வெற்றிச்செல்வன் அவர்களுக்கு,
    விமர்சனம் அருமை. படம் பார்த்தேன். விறுவிறுப்பாக இருந்தது. என்னுடைய கருத்தை கீழே தருகிறேன்.
    (1) முதலில் ஆண்கள் (தகப்பன்கள்) உடல் உறவுக்கு மட்டுமே லாயக்கானவர்கள் என்று பெண்ணுரிமை
    வாதிகள் அறைகூவல் விடும் இன்றைய காலகட்டத்தில் தாய்ப்பாசத்திற்கு தகப்பனின் அன்பு குறைந்ததன்று
    என்று நிறுவும் படம். கடைசியில் பெண்ணின் தாயார் 17 வயது பெண்ணை சரியான துணையில்லாமல்
    ஐரோப்பிய யாத்திரைக்கு அனுப்பியது தவறு என்று கூறுவதாக வசனம் இருந்திருந்தால் நன்றாக
    இருந்திருக்கும். (நான் இந்த சமூகத்திடமிருந்து இதை எப்படி எதிர்பார்க்க முடியும்?)
    (2)
    “நாங்கள் பலவீனமான நாடாக இருக்கிறோம், பரந்த மனப்பான்மை என்ற தவறான நோக்கில் உங்களை உள்ளே விடுகிறோம், நாங்கள் எதுவும் செய்ய இயலாத கையாலாகதவர்களாக இருக்கிறோம்.”
    எனக்கு மிகவும் பிடித்த குடியேறிகளைப்பற்றின விமர்சனம் இது. முஸ்லீம் குடியேறிகளைப்போன்றே
    வேறு ஒரு பிரச்சினையை கீழே தருகிறேன்.
    சில நாட்களுக்கு முன் பி.பி.சி. தமிழ் ஓசையில் “புலம்பெயர் வாழும் இலங்கை தமிழர்களின் ஒரு பிரிவின் அமேரிக்க தலைவர்” கொடுத்த பேட்டி.
    முதலில் இச்செய்திக்கு பின்புலம்:
    1996ல் அமேரிக்கா பயங்கரவாத தடைச்சட்டத்தின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் அமைப்பை தடை
    செய்தது. இச்சட்டத்தின் படி விடுதலை புலிகள் அமைப்பை பணத்தாலோ, அரசியல் ரீதியாகவோ, தத்துவ
    ரீதியாகவோ ஆதரிப்பது தண்டணைக்குரிய குற்றம்.
    சரி. இப்பொழுது பேட்டிக்கு வருவோம். அமேரிக்காவில் வாழும் இந்த இலங்கை தமிழ்தலைவர் விடுதலை
    புலிகள் இயக்கத்தை அரசியல் ரீதியாக ஆதரிக்க தங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று
    நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாக கூறினார்.
    உணர்ச்சி வசப்படாமல் இதை நோக்குவோம். இவர்களின் சொந்த நாடான இலங்கையில் இனப்படுகொலை
    நடந்த பொழுது இவர்களுக்காக ஆதரவுக்கரம் நீட்டியதோடு மட்டுமல்லாமல் இவர்களில் பலருக்கு
    குடியுரிமையையும் மேற்கத்திய நாடுகள் வழங்கி உள்ளன. கடந்த 15, 20 வருடங்களில் இவர்கள்
    அமேரிக்காவின் வளர்ச்சிக்கு புரிந்த செயல்களைவிட அமேரிக்கா இவர்களுக்கு ஆதரவுக்கரம்
    நீட்டியதற்காக தலைதலைமுறையாக நன்றிக்கடன் செலுத்த கடமைப்பட்டவர்கள். ஆனால்
    அமேரிக்கவாசியாக ஆகியும்கூட அந்நாட்டின் சட்டதிட்டங்களை மாற்ற முயல்வது எவ்விதத்தில்
    நியாயம்?.
    குடியுரிமை விஷயங்கள் பல தளங்களில் மேற்கத்திய நாடுகளில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
    குடியேறுபவர்கள் யாராக இருந்தாலும் அடக்கத்துடன் வாழ்வது அவசியம். அவர்களில் சிலர் செய்யும்
    தவறுகள் வன்முறைகளுக்கே அடித்தளம் இடுகின்றன.

  12. Please publish more Good english movie reviews (old and new movies). This will help people like me to watch good cinema.

    Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *