தாலியும் பர்தாவும் விஜய் டிவியும் – நடந்தது என்ன?

thaaliவிஜய்யைப் பின்பற்றிய கலைஞர்!

பத்தியின் தலைப்பைப் பார்த்துவிட்டு வாசகர்கள் தவறாகப் புரிந்து கொண்டால் நான் அதற்கு பொறுப்பு கிடையாது. நான் இங்கே சொல்லவிருப்பது நடிகரைப் பற்றியோ, முதல் அமைச்சரைப் பற்றியோ அல்ல. தொலைக்காட்சி நிறுவனங்களைப் பற்றித்தான்.

ஹிந்துக்களின் மத, ஆன்மிக, கலாசார உணர்வுகளைத் தொடர்ந்து புண்படுத்தி வரும் ஊடகங்களில் விஜய் டிவி எவ்வளவு முன்னிலை வகிக்கின்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவற்றின் தீய தாக்கத்தை, அறியாமல் இருக்கும் நம் தமிழ் ஹிந்துக்களுக்கு உணர்த்துவதற்காக, நாம் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டிய நிகழ்ச்சிதான் “நீயா நானா” நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட “பெண்கள் தாலி அணிவது அவசியமா” என்கிற விவாதமேடை.

இந்நிகழ்ச்சியை எதிர்த்து இந்து முன்னணி தலைவர் திரு.ராமகோபாலன் அவர்களும், சில தனிநபர்களும் எதிர்ப்பு தெரிவித்ததையும், விஜயபாரதம், ஹிந்து வாய்ஸ் ஆகிய பத்திரிகைகளும் மற்றும் தமிழ்ஹிந்து இணையதளம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் பார்த்தோம். ஹிந்து இயக்கங்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்காவிடினும், மேற்கண்டபடி காட்டிய எதிர்ப்புகளுக்கும், தமிழ் ஹிந்துக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்ச்சிக்கும் நல்ல பயன் இருந்ததது என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தமிழ்ஹிந்து தளத்தில் தோலுறித்துக் காட்டப்பட்ட இந்த விஷயம், ஆங்கிலத்திலும் விஜய்வாணி தளத்தில் எழுதப்பட்டு, பின்னர் உலகெங்கும் உள்ள வலைத்தளங்களின் மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பரப்பப்பட்டு, கிறித்துவ நிறுவனமான ஸ்டார் குழுமமும், விஜய் டிவி முதலிய அதன் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஹிந்துக்களுக்கு எதிரானவையே என்பதையும், ஹிந்து ஆன்மிக, கலாசார பாரம்பரியத்தைக் குலைப்பதற்க்காக சதி செய்பவையே என்பதையும் நிலைநிறுத்தினோம்.

சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் திரு.ஆர்.சுப்ரமணியம் அவர்கள், விஜய் டிவி தலைமை நிர்வாக அலுவலர் திரு.ஸ்ரீராம், மெர்குரி கிரியேஷன்ஸ் தலைமை நிர்வாக அலுவலர் திரு ஆண்டனி, விஜய் டிவி நிகழ்ச்சி நடத்துனர் திரு கோபிநாத் ஆகியோருக்கு லாயர் நோடீஸ் அனுப்பி அதன் நகலை மாநில காவல்துறைத் தலைவர், நகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கும் அனுப்பியிருந்தார் என்றும் வாசகர்களுக்குத் தெரிவித்திருந்தேன். அவர் அனுப்பிய தேதி அக்டோபர் 16, 2009. நோடீஸைப் பெற்றுக் கொண்டதற்கான அங்கீகார ரசீது கிடைத்த தேதி அக்டோபர் 28, 2009.

விஜய் டிவி நிறுவனத்திலிருந்து அதன் சட்ட ஆலோசகர்களான சாய்கிருஷ்ணா அசோஸியேட்ஸ் மூலம் திரு சுப்ரமணியம் அவர்களுக்குப் பதில் அனுப்பப்ட்ட தேதி நவம்பர் 21, 2009. அதில் திரு.சுப்ரமணியம் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மறுக்கப்பட்டிருந்தன. மேலும், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கும் தங்கள் நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் சொந்த அபிப்பிராயத்தையும், கருத்தையும் கூறி வாதிட்ட ஒரு விவாத நிகழ்ச்சியே என்றும், விவாத முடிவில் விஜய் டிவி எந்த முடிவையும் (தீர்ப்பையும்) அளிக்கவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், விஜய் டிவி ஹிந்து மத, ஆன்மிக பாரம்பரியத்தை பெரிதும் மதிக்கும் நிறுவனம் என்றும், அதனால்தான், ஸ்ரீ கிருஷ்ண லீலா, ஸ்வாமி ஐயப்பன், சாய்பாபா, பக்தி – ஆன்மீக விழா, தேவி தரிசனம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்கொண்டு திரு.சுப்ரமணியம் சட்டப் பூர்வ நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், அவற்றை நீதிமன்றத்தில் அவர் செலவில் எதிர்கொள்ளத் தயாராய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் விஜய் டிவி நிறுவனத்தினர், “நாலைந்து பிராம்மணர்கள்தான் பிரச்சனையைக் கிளப்பிக் கொடிருக்கிறார்கள். நாளடைவில் அவர்களும் அடங்கிவிடுவார்கள்” என்று எகத்தாளமாகச் சொன்னதாகவும் நமக்கு தெரியவந்துள்ளது.

இதனிடையே, திரு.சுப்ரமணியம் அவர்கள் நகர காவல்துறை ஆணையர் அவர்களைச் சந்தித்து ஒரு புகார் மனு ஒன்றையும் அளித்து விஜய் டிவி நிறுவனத்தை விசாரணை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.காவல்துறை ஆணையரும் தங்கள் சட்ட ஆலோசகர்களைக் கலந்துகொண்டு ஆவன செய்வதாகக் கூறியுள்ளார்.

விஷயம் விரைவில் பரவியதாலும், லயன்ஸ் டேட்ஸ் நிறுவனம் கொடுத்த அழுத்தத்தினாலும், நீதிமன்றம் வரை போய்விட்டால் நிறுவனத்தின் பெயர் கெட்டு, இத்தனை வருடங்கள் கட்டிக்காத்த பிம்பமும் உடைந்துவிடும் ஆபத்து இருப்பதாலும், விஜய் டிவி நிறுவனத்தினரும் மெர்குரி கிரியேஷன்ஸும், ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தால் நல்லது என்கிற நினைப்பிலும், ஆளும் கட்சிக்குச் சொந்தமான தொலைக்காட்சி நிறுவனத்திலும் அதே தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடத்துவது தங்கள் பலத்தைக் கூட்டும் என்கிற நினைப்பிலும், கலைஞர் டிவி நிலையத்தாரை அணுகியுள்ளதாகவும் நமக்குத் தெரியவந்தது. நமக்கு வந்த தகவலை உண்மையென நிரூபிக்கும் விதமாக கலைஞர் டிவியிலும் “தாலி ஒரு சமுதாய அவசியமா அல்லது அடையாளச் சின்னமா” என்ற தலைப்பின் கீழ் ஒரு விவாதத்தை “கருத்து யுத்தம்” நிகழ்ச்சிக்காக டிசம்பர் 31 அன்று படப்பிடிப்பு செய்துள்ளனர்.

வழக்குரைஞர் சுப்ரமணியம் கலைஞர் டிவியின் நிகழ்ச்சி நடத்துனர் திரு ஷண்முக சுந்தரம் அவர்களை நேரில் கண்டு, விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒளிபரப்பானபோதே காவல் துறையில் புகார் அளித்து பின்னர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதையும் தெரிவித்துள்ளார். மேலும் ஹிந்துக்கள் ஏற்கனவே மனம் புண்பட்டிருப்பதாகவும், கலைஞர் டிவியும் அதே நிகழ்ச்சியை நடத்தி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அவருடைய வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்கைப் போலானதால், ஜனவரி 4 அன்று கலைஞர் டிவி நிறுவனத்தாருக்கும் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் சுப்ரமணியம். அதைச் சற்றும் மதிக்காமல் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது கலைஞர் டிவி.
law
நீதிமன்றத்தின் நிராகரிப்பு

பின்னர் ஜனவரி 11 அன்று வழக்குரைஞர் திரு சுப்ரமணியம் அவர்கள், விஜய் டிவிக்கு அனுப்பிய நோட்டீஸ், அவர்கள் அளித்த பதில், காவல் துறையில் பதிவு செய்த புகார், கலைஞர் டிவிக்கு அனுப்பிய நோட்டீஸ் ஆகிய அனைத்துத் தகவல்களையும் இணைத்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “தான் விஜய் டிவி மேல் அளித்த மனுவின் மீதான விசாரணையைக் காவல்துறை உடனடியாக மேற்கொள்ளவும், கலைஞர் டிவி தாலி பற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்பாமல் இருக்கவும், மேன்மைமிகு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார்.

அவரின் மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் ஜனவரி 18 அன்று, “நிகழ்ச்சியில் பங்குகொள்கின்றவர்கள் தங்கள் அபிப்பிராயத்தைத்தான் சொல்லுகிறார்கள். மேலும் தொலைக்காட்சி நிறுவத்தினர் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை இந்நிகழ்ச்சி மூலம் புண்படுத்தியுள்ளனர் என்கிற குற்றச்சாட்டிற்கான முகாந்திரம் ஏதும் இல்லை. எனவே இம்மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கின்றது” என்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் தமிழகத்தில் “திராவிட” அரசுகள் இருக்கும் வரை, அதிகார வர்கம், காவல்துறை, நீதிமன்றம் என எவ்விடத்திலும் ஹிந்துக்களுக்கு நியாயம் வழங்கப்படமாட்டாது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

நிராதரவான நிலைமை

ஓரிரண்டு பத்திரிகைகள் மற்றும் இணையதளங்கள், குறிப்பிட்ட சில தனிமனிதர்கள், ஒரே ஒரு வழக்குரைஞர் ஆகியோரைத் தவிர்த்து இவ்விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பெருமளவில் போராட்டங்கள் நடத்த எந்த இயக்கங்களும் முன்வராதது மிகவும் துரதிர்ஷ்டமானது என்றே சொல்லவேண்டும். ஏனென்றே தெரியவில்லை, ஆரம்பத்திலிருந்தே இவ்விஷயத்தில் இயக்கங்கள் தேவையான கவனத்தைச் செலுத்தவில்லை.

தன்னுடைய எழுபதாவது வயதிலும், தனி ஆளாக இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களையும் எதிர்த்து காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்குப் பலமுறை அலைந்து, பின்னர் நீதிமன்றம் வரை சென்று போராடிய வழக்குரைஞர் திரு சுப்ரமணியம் அவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. தன்னுடைய மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னும், “நான் துவண்டுவிட மாட்டேன். உச்சநீதிமன்றத்திற்கும் சென்று போராடுவேன்” என்று துடித்துக்கொண்டிருக்கிறார் அந்த எழுபது வயது இளைஞர்.

திரு சுப்ரமணியம் போன்று ஆங்காங்கு சில தனிமனிதர்கள் இருந்தாலும், மொத்தத்தில் பார்கின்றபோது ஹிந்து சமுதாயம் நிராதரவான நிலையில் இருக்கிறது என்பதே நிதர்சனம். மேலும் தங்களுக்கு எதிராக பல்வேறு வகைகளில் ஊடகங்கள் தாக்குதல் நடத்துகின்றன என்கிற விழிப்புணர்வே இல்லாமல் இருக்கிறார்கள் ஹிந்துக்கள் என்பதும் உண்மையே. ஆனால் அதற்கு நேர்மாறாக சிறுபான்மையினர் எப்படி விழிப்புணர்வுடன் இருந்து, முன்ஜாக்கிரதையாகப் பிரச்சனையை அணுகி, உறுதியுடன் செயல்பட்டு வெற்றியடைகிறார்கள் என்று பார்ப்போம்.

purdahபாராட்டுக்குறிய முஸ்லிம் மக்கள்

தாலி பற்றிய நிகழ்ச்சியால் ஏற்பட்ட பின்னடைவினாலோ அல்லது ஹிந்துக்களைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு நாடகம் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தினாலோ, விஜய் டிவி நிறுவனம், “முஸ்லிம் பெண்கள் பர்தா உடை அணிவது அவசியமா?” என்ற தலைப்பில் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தது. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதியும் (17-01-10) விளம்பரப்படுத்தப்பட்டது. அதை உஷாராய் கவனித்த ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்’, மாநகரக் காவல்துறை ஆணையருக்கும், விஜய் டிவி நிறுவனத்திற்கும் தனித்தனியே கடிதம் அனுப்பியது.

காவல்துறை ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில், “இந்நிகழ்ச்சி எங்கள் மத உணர்வைப் புண்படுத்தி தேவையற்ற மனவேதனையை அளிக்கும். இஸ்லாத்தைப் பற்றிச் சரியாக அறியாதவர்களை வைத்து நடத்தப்படும் இது போன்ற விவாதங்கள் மற்ற மதத்தினருக்கு இஸ்லாத்தைப் பற்றி வெறுப்பையும் துவேஷத்தையும் தான் ஏற்படுத்தும். ஒரு மதத்தினரின் பழக்கவழக்கங்களை மற்ற மதத்தவரின் விவாதப் பொருளாக மாற்றுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்வது நல்லது. உதாரணமாக இந்துக்கள் பொட்டு வைத்துக் கொள்வது, கிறுத்துவர்கள் மோதிரம் மாற்றிக்கொள்வது போன்ற அம்சங்களை முஸ்லிம்கள் விவாதப் பொருளாக எடுப்பதை நாங்களே கண்டிப்போம்.

எனவே காவல்துறை இதில் தலையிட்டு, ஜனவரி 17 ஞாயிறன்று விஜய் டிவி ஒளிபரப்பவிருக்கும் இந்நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இஸ்லாத்தை மற்ற மதத்தவர்களின் விவாதப் பொருளாக்கி மதத் துவேஷத்தை ஏற்படுத்தும் விஜய் டிவியின் மீதும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மீதும் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இது குறித்து விஜய் டிவிக்கு நாங்கள் அனுப்பிய கடிதத்தின் நகலையும் இணைத்துள்ளோம். அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் பட்சத்தில், முஸ்லிம்கள் மத்தியில் எழும் பெரும் கொந்தளிப்பிற்குக் காவல்துறையும், அரசாங்கமும்தான் பொறுப்பேற்கவேண்டும் என்பதையும் பணிவன்புடன் அறியத் தருகின்றோம்” என்று குறிப்பிட்டிருந்தது. இக்கடிதம் ஜனவரி 11 அன்று காவல்துறை ஆணையரிடம் கொடுக்கப்பட்டது.

அதே தேதியில் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு மடலை விஜய் டிவி நிறுவனத்தாருக்கும் அனுப்பியது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். அம்மடலில் மேலும்,

“நிகழ்ச்சியைத் தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு முஸ்லிம்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். வேண்டுமானால் பர்தா சம்பந்தமான ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்தீர்களானால் நாங்கள் தங்களுக்கு மத்தியில் அதுபற்றி விவாதிக்கத் தயாராக உள்ளோம் என்பதையும் கூறிக்கொள்கிறோம்.

முஸ்லீம்கள் மத உணர்வுகளை மதித்து அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பாமல் இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இவ்வேண்டுகோளை ஏற்காமல் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுமாயின் தங்களது தொலைக்காட்சி அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட நேரிடும் என்பதையும் பதிவு செய்கிறோம்.

இது குறித்து சுதந்திரமான விவாதம் ஒன்றை நீங்கள் ஏற்பாடு செய்தால் பர்தா குறித்த எத்தகைய கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான விளக்கம் தர நாங்கள் தயார் என்பதை அறிவுறுத்துகிறோம். இதற்கு ஏற்பாடு செய்வதே விவேகமானதாகும். நன்றி”

என்று தெளிவாகவும் ஸ்திரமாகவும் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்.

அதைத் தொடர்ந்து மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து கொடுத்த அழுத்தம் காரணமாகவும், தவ்ஹீத் ஜமாஅத் விடுத்த எச்சரிக்கையினால் ஏற்பட்ட பயம் காரணமாகவும், நிகழ்ச்சி ஒளிபரப்பைத் தவிர்த்தது விஜய் டிவி. அதோடு மட்டுமல்லாமல், தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தைத் தொடர்பு கொண்ட விஜய் டிவி நிர்வாகத்தினர், “அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம்” என்றும் “முஸ்லிம்கள் புண்படும் விதத்தில் ட்ரையலர் ஒளிபரப்பியதற்கு மன்னிப்பும் கேட்டுக்
கொள்கிறோம்” என்றும் பணிந்தனர். அதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் முஸ்லிம்களால் வாபஸ் பெறப்பட்டது! (Ref: https://www.tntj.net/?p=9594).

பிரச்சனையை சரியான முறையில் அணுகி, சரியான விதத்தில் செயல்படுத்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு நம் பாராட்டுகள் உரித்தாகுக.

அணுகுமுறையும் செயல்பாடும்

தாலி பற்றிய நிகழ்ச்சியை ஹிந்துக்கள் அணுகிய விதத்திற்கும், பர்தா பற்றிய நிகழ்ச்சியை முஸ்லிம்கள் அணுகிய விதத்திற்கும் உள்ள வித்தியாசத்தை வாசகர்கள் உணரவேண்டும் என்பதற்காகத்தான் ‘நடந்தது என்ன’ என்பதை விவரமாக எழுதியுள்ளேன். அதாவது அதிகாரவர்கம், காவல்துறை மற்றும் நீதிமன்றம் ஆகியவை ஹிந்துக்களுக்கு நியாயம் வழங்குவதில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஹிந்துக்களும் ஒன்றுபட்டு, ஒழுங்காக ஒரு பிரச்சனையைக் கையாள்வதில்லை என்பதும் விளங்குகிறது.

முஸ்லிம் சமுதாயத்தினர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன்பே பிரச்சனையைக் கையிலெடுத்து, சரியான முறையில் அணுகி, இரண்டே கடிதங்கள் மூலம் தங்கள் காரியத்தைச் சாதித்தனர். ஆனால் ஹிந்துக்களோ, நிகழ்ச்சி ஒளிபரப்புவதற்கு முன்னாலும் தடுக்கவில்லை; ஒளிபரப்பிய பின்னரும் தங்கள் எதிர்ப்பை பலமாகக் காண்பிக்கவில்லை; நிறுவனத்திடமிருந்து ஒரு சம்பிரதாய ‘மன்னிப்பு’ கூட பெறமுடியவில்லை; அதே நிகழ்ச்சி மற்றுமொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதையும் தடுக்க இயலவில்லை; எதிர்ப்பைத் தெரிவித்த ஒரு சில தனிமனிதர்களுக்கும் தங்கள் ஆதரவை அளிக்கவில்லை; நீதிமன்றத்தை அணுகிய ஒரு வயதான வழக்குரைஞரையும் தனியாக அல்லாட வைத்துள்ளனர்! ஒரு நாட்டின் பெரும்பான்மை சமுதாயத்தின் கையாலாகாத்தனம் எப்படி வெளிப்பட்டுள்ளது பாருங்கள்!

விஜய் டிவியின் அயோக்கியத்தனம் “நீயா நானா” மற்றும் “நடந்தது என்ன” மூலமாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ‘லையன் டேட்ஸ்’ மற்றும் ‘டி.என்.டி கம்பிகள்’ ஆகிய ”ஹிந்து” நிறுவனங்களும் வெட்கம்கெட்டுத் தங்கள் வியாபாரத்திற்காகத் தங்களின் தாய்க்குச் சமமாக மதிக்க வேண்டிய தங்கள் மதத்தை விற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. சன் டிவியின் அராஜகம் “நிஜம்” என்னும் பெயரில் தன் பொய் முகத்துடன் புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டிக்கொண்டுதான் இருக்கின்றது. மற்ற பல தொலைக்காட்சி நிறுவனங்களும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து தங்கள் ஹிந்துத் துவேஷத்தை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. ஹிந்துக்களும், அந்நிறுவனங்களை ஒதுக்கித் தள்ளாமலும், அந்நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்காமலும், கொஞ்சம்கூட மத உணர்வும், கலாசாரப் பெருமையும் இன்றி தொடர்ந்து அந்நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டும், அவற்றில் பங்கேற்றுக்கொண்டும் இருக்கின்றார்கள்.

இறுதி நிலைப்பாடு

முழுவதுமாக மோடம் போட்டு மேகங்கள் சூழ்ந்த நிலையில் சற்றே வெள்ளிக் கோடுகள் தெரிகின்றது என்பதும் உண்மைதான். உதாரணமாகக் கலைஞர் டிவியில் தாலி பற்றிய நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளர்களாகப் பங்கேற்றுக் கொண்டு ஹிந்துக்கள் பக்கத்து நியாயத்தை சிறப்பாக வெளிப்படுத்திய அனந்த பத்மனாபன், தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் நம் நன்றிக்குப் பாத்திரமானவர்கள்.

ஆனால் இவ்வாறு பங்கேற்பதிலும் ஒரு சிக்கல் உண்டு. பல சமயங்களில் ஹிந்துக்கள் சார்பாகச் செய்யப்படும் வாதங்கள் ஒளிபரப்பிற்குத் தயார் (எடிட்டிங்) செய்யப்படும்போது மறைக்கப் படுகின்றன. இதனால் பங்கேற்றவர்கள் பலமுறை முட்டாளாக, தோற்பவராகச் சித்தரிக்கப்படுகின்றனர். அப்படி ஹிந்துத் தரப்பின் வாதங்களை மறைக்கவோ, இருட்டடிப்பு செய்யவோ முடியவில்லையென்றால் அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பாமல் விட்டுவிடுகின்றனர். எனக்குத் தெரிந்து சன் டிவியின் ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் இவ்வாறு ஒளிபரப்பாமல் இருந்திருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல், நிகழ்ச்சியை நடத்துபவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். 99 சதவிகிதம் ஹிந்து எதிர்ப்பு நிலைப்பாடு உடையவர்களாகத்தான் இருக்கிறார்கள். எனவே நிகழ்ச்சியையும், நிகழ்சிக்கு விளம்பர உதவி செய்து ஆதரிக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகளையும் புறக்கணிப்பதே சிறந்தது.

ஆகவே, ஊடகங்களை வழிக்குக் கொண்டுவர, புறக்கணிப்பு ஒரு வழி; போராட்டம் ஒரு வழி. இரண்டு வழிகளையும் ஒரே சமயத்தில் கடைப்பிடிப்பது உத்தமம். இதைக் கூடச் செய்யமுடியவில்லை என்றால் ஹிந்துக்கள் பெரும்பான்மை சமுதாயம் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தமில்லை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு. ஹிந்துக்கள் விழிப்புணர்ச்சி பெறட்டும்.

30 Replies to “தாலியும் பர்தாவும் விஜய் டிவியும் – நடந்தது என்ன?”

  1. விஜய் டி.வி.யெ நெனச்சா சிரிப்பு போலிஸ் நியாபகம் தான் வருகிறது :))

    இது தான் அவர்களின் உச்சகட்ட தெகிரியம் போல…

  2. வருத்தத்திற்குரிய விஷயம். வக்கீல் சுப்ரமண்யம் அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக. இந்த விஷயத்தில் தொடர்ந்து எழுதி வரும் தமிழ் செல்வன் அவர்களுக்கும் எனது நன்றிகள். ஓரளவு ஒரு ஆயிரம் பேர்களிடமாவது நீங்கள் விழிப்புணர்வை இந்த விஷயம் மூலம் ஏற்படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்குரிய செயல். இந்துக்கள் தங்களைக் குண்டு வைத்துக் கொல்லும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் கொஞ்சிக் குலாவும் காங்கிரஸ் கம்னியுஸ்டு களவாணிகளுக்கே மீண்டும் மீண்டும் ஓட்டுப் போட்டு தங்கள் சொந்த செலவிலேயே தங்களுக்குத் தாங்களே குண்டு வைத்துக் கொண்டு சாகும் பொழுது இதையெல்லாம் எதிர்க்கவா ஒன்று படப் போகிறார்கள். இந்து ஒற்றுமை என்பது என்றுமே நடவாத ஒன்று இருந்தாலும் சங்கை ஊதுவது நம் கடமை. கேட்ப்பார் கேட்க்கட்டும் அழிவார் அழியட்டும், வேறு என்ன செய்வது? அர்ஜூன் சம்பத், ராமகோபாலன், பா ஜ க, மற்றும் மடங்கள், சாமியார்கள் குறைந்த பட்சம் இது போன்ற விஷயங்களிலாவது ஒற்றுமையுடன் செயல் பட்டார்கள் எனில் ஓரளவுக்கு மீடியாக்களிடம் இந்து மதம் பற்றி ஒரு வித மரியாதை பிறக்கும் ஒற்றுமை நீங்கில் நம் அனைவருக்கும் அழிவே.

    நன்றியுடன்
    ச.திருமலை

  3. Every community has a structure for it.. and it is that community structure that decides whether they are strong or weak. The muslim community has strong action oriented organisations who are efficient and strategic in thinking.. but just see the organisations representing Hindu society..

    Instead of identifying the core cause, you have generalised the accusation over the non-existent Hindu society.. (Yes.. the hindu society is virtually non-existent, if you observe carefully)..

    Now coming to Indu munnani, what prevented rama gopalan from mobilising his organisation to oppose this? or what prevented RSS or the VHP from utilising their interneational network to mobilise the opposition NOT just in tamilnadu, but at the national level?

    When these organisations are inactive, why harp on the “Hindu” identity?

    A society is a reflection of its leaders.. and a hindu organisation’s leaders has to be made accountable for their actions and for failing to do what they should have done.. Otherwise, please leave the hindu society to degrade in its own and extinguish..

  4. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு. ஹிந்துக்கள் விழிப்புணர்ச்சி பெறட்டும்.

    இதை உணர்ந்து நாம் நடக்கும் நாள் எந்நாளோ!

  5. சன் டி வீ யில் தொடர்ந்து இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக புண்ணிய பூமி காசி பற்றிய வக்கிர தொலைக்காட்சி தொடர் மறு ஒளி பரப்பும் athai தொடர்ந்து இந்து நம்பிக்கைகளை குறி வைத்து கிராமங்களில் நடக்கும் நாட்டுப்புற தெய்வ வழிபாட்டை மூட நம்பிக்கையின் அடையாளமாக சித்தரித்து சன் டி வி குழுமம் த்டர்ந்து மத துவேஷ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது பெரும்பான்மை இந்து மக்களை கேலி பொருளாகும் விதத்தில் உள்ளது. இவர்கள் உண்மையிலேயே மூட நம்பிக்கையை விரட்ட வந்த மகாத்மக்களாக இருந்தால் நாகூர் தர்கவிலோ அல்லது வேளாங்கண்ணி தேவாலயத்திலோ இந்த கூத்தினை நடத்தி காட்டட்டும். சுவிசேஷ கூட்டங்களில் செவிடன் கேட்பதும் முடவன் நடப்பதும் எந்த அற்புதத்தில் நடப்பது என்பதை இந்த புண்ணியவான்கள் நமக்கு தெரியபடுதட்டும் . நமது இந்து சமுதாயம் ஒன்றுபட்டு இந்த கேடுகெட்ட தொலைகாட்சியை புறக்கணித்தல் வேண்டும்.

  6. இத்தகைய ஹிந்துக்களுக்கு எதிரான நிகழ்வுகளை எதிர்க்க ஒரேயொரு ஹிந்து அமைப்பு கூட இன்றக்கிக்குக் கிடையாதா….?????????????

  7. As long as the people take money and vote without worrying about its consequences and the regular taxayers do not question the propriety of freebies in the name of free television and free gas stoves which by no stretch of imagination could be considred a social upliftment measure. Further colour TV is only veiled attempt to promote a particular party and its policies and influence the voters just as Narasimha Rao created constituencies improvement fund to the legislators thereby providing govt. Funds to bribe cadres. The only way to make these channels to see reason to be aggresssively approch law and register cases in various courts in all the districts and the NGOs should adopt the policy practised by some NGOs in Gujarat and Maharashtra demanding legal directions to the police officers to carryout their lawful duties in preventing piblication and propagating material likely to affect peace and tranquillity of the country.

    Thiruvengadam

  8. I feel happy to note that this much awareness has been created to save our Dharma. But nowadays the number only that counts. We all know that howmany protest we took like dharna, public meetings, humon chain…etc protesting the atrosity against Pooja Sree. Jeyendra Saraswathi Swamiji. Even after all these things Jeyalalitha announced in assembly that there was no opposition for her action, and people had accepted her action. The reason is in all our protests the number was very less. There was no STONE THROWING. There was noBURNING OF BUSSES, There was no LOOTING OF SHOPS, I dont mean that we should also do such things. We should do any type of protest with good number. I request the persons who are writing in this column should come to street when it is called for with their friends in good number. We should discuss in our office, factories, community meetings, temples, tea shops. We should create awareness about MEDIA TERRORISM against our Hindu society.

  9. இங்கு மட்டும் தான் இந்து இயக்கங்கள் மலிவு அல்லது சரிவர இயங்குவது இல்லை. பெங்களூரு, மத்திய பிரதேஷ்,மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் கொஞ்சத்துக்கு கொஞ்சமேனும் உயிருடனும், ஆற்றலுடனும் செயல்படுகிறது. இஸ்லாத்தில் ஒரு தவறோ, அல்லது அதற்கு எதிரான செயல் என்றால் ராமநாதபுரத்தில் இருந்து, பாரிதாபத் வரை ஒன்று கூடி போராடவும், எந்த செயலில் இறங்கி எப்படி செயல்பட வேண்டும் என்று communicate செய்ய அதிவேகமாக முடிகிறது. ஆனால் நம்மில் பலர் அதை பற்றி அக்கறை கொஞ்சம் கூட இல்லை. கிராமங்களில் டீ கடை பெஞ்சில் உட்கார்ந்து அரசியல்,பொருளாதாரம், பற்றி சூடான விவாதங்களும் வெட்டி பேசும் ஓடும். ஆனால் அவர்களுக்கு இதை போல் ஒரு துரோகம்,அவமான அவதூறுகள் பற்றி செய்திகள் தெரியவோ, சென்று அடையவோ துளியும் வாய்ப்பு இல்லை. அங்கு ஒரு காஷ்மீர் ஜமாத்தில் அறிவிக்கப்படும் செய்தி, இங்கு கோடியக்கரை தொழுகை கூடத்தில் மதிய வேளைக்குள் சென்று அடைந்து ஆராயபட்டுவிடும். ஆனால் நம்மில் நகரத்துக்குள் இருக்கும் மக்களுக்கும் கூட எந்த விதமான இந்து எதிர்ப்பு, கலாசார சீர்கேடு, நம் கடவுளர்களை அவமதிக்கும் செயல் ஆகியவை சென்று அடைகிறது என்பதே பெரும் கேள்வி குறி?. அங்கு ஷியா முஸ்லிமாக இருந்தாலும் ஷர்யா முஸ்லிமாக இருந்தாலும் இஸ்லாத்துக்கு எதிரான துரோக செய்திகள் எல்லோருக்கும் பொது மற்றும் சரியாக தெரிவிக்கபடுகிறது. மேலும் நம்மில் பலர் அல்ல பெரும்பாலானோர் இதை பற்றி கவலை பட கூட நேரம் இல்லாமல் அல்லது இருந்தும் யோசிக்கவோ,விவாதிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ துணிவும், மனப்பக்குவமும் இல்லை.

    தார்வாட், அர்சிகேரே, செம்பூர், சாங்க்லி ஆகிய மாவட்டம்,ஊர்கள் (கர்நாடக,மராட்டிய) மாநிலங்களில் ராம் சேனா,ஷிவ் சேனா, RSS, போன்ற இந்து இயக்கங்களில் சேர இளைஞர்கள் தாமாகவோ அல்லது இயக்கங்களின் மேடை பேச்சு,ஆர்வமும் வீரமும் மிக்க செயல்பாடுகளினலோ முன்வருகின்றனர். ஆனால் நாம் கிராமங்களிலோ, சிறு நகரங்களிலோ கூட இப்படிப்பட்ட இந்துக்களின் பொதுகூட்டமோ,மேடை பேச்சுக்களோ சிறிய அளவில் கூட நடத்தப்படவும் முயற்சிகள் இல்லை, மேலும் இங்கு திராவிட இயக்கங்கள் நம் இளைஞர்கள் மனதை பல வாராக பேசி வன்முறை தனமான போக்கை வளர்த்து விட்டு, தமிழர், மலையாளி,ஹிந்தி போன்ற வேறுபாடுகளை கற்பித்து பிரித்து வைத்துள்ளது. இங்கு வெளியிடப்பட்ட பெரியார் பற்றிய கட்டுரைகள், மத மாற்றம் தொடர்பான கட்டுரைகள் பல எவ்வளவு கிராமத்து இளைஞர்கள் மற்றும் சிறு நகரத்து இளைஞர்கள் படித்திருக்க வாய்ப்புண்டு? இது போன்ற செயல்களை பணதுக்க்காகவும்,தர்புகழ்ச்சிக்க்காகவும் ஆதரிக்கும் பல அரசியல் பெருந்தலைகள் இந்து மதத்தை சார்ந்த அறிவு குருடர்களே !!. நாளை என் சந்ததியர் அழிவையும்,ஈனத்தனமான பண்பற்ற நிலைக்கு போவார்கள் என்று உணர்ந்தும் இப்படி இருக்கிறார்களா? அல்லது உணர மறுக்கிறதா பதவி மோகம், சாராய போதை??

  10. Dear All,
    Please do not mistake me. I am thinking we cannot copy everything from Islam. Islam and Christianity are organizations rather than an aid for Spiritual upliftment. Whereas Hinduism allows people to evolve. Yes we should be vigilant and understand our ENEMIES, but we cannot copy the activities which are UnHindu? Is it not we are becoming them ? We all know that Media, Government will behave like this. Yes I was also hurt about that Program but when I thought through, most of the people do some really stupid stuff when they have an opportunity to show their face in the TV; But when faced with even the slightest of pain they behave differently and we all know there are enigh pains in our day to life.
    I would reiterate we cannot and should not Talibanise Hinduism and at the same time we should spend our energy to create an environment so that Inida does not come become an Afganistan or Pakistan.

    With warm Regards
    S Baskar

  11. If the Hindus have a sense of shame they should not vote for these dravidian parties
    Tolerating insults to one’s Dharma is like looking on as a spectator when a rowdy outrages the modesty one’s sister or mother.

    R.Sridharan

  12. Dear HINDUs,

    I came to know about this news item today only in Tamil Hindu Site by Mr. Tamil Selvan, first of all we should thank.

    Mr. Subramanian effort is very much appreciated.

    It is necessary to honor the gentleman, so that many people will follow to give voice against anything like this.

    There was a recent news in THE HINDU on a father of +2 went to Court to get hall ticket for his son from his Christian School HM, who delayed/avoided to give +2 hall ticket because he weared “Rudhratcha”. It is necessary honor such single voices.

    One another issue is every non Hindu religion family at-least gives Rs.100/- per month for their religious social cause, so yearly Rs.1200/-, so good amount is raised in every street/town, this used to pay some people to keep an eye watch on religious issues and spread among their people. it is necessary such setup is necessary to put such people in place. Can we?

    regards

  13. நாம் ஹிந்துக்கள் அனைவரும் காகித புலிகள் நிஜத்தில் ஒன்றும் இல்லை .வெட்டியாக வம்பு பேச தான் லாயக்கு .ஏன் நாம் ஒரு பிரச்னை எனும் போது அமைப்புகளை எதிர் பார்க்கிறோம் நமக்கு சுய புத்தி கிடையாதா.சமூகத்தின் கண்களில் திரு சுப்பிரமணியம் போன்றவர்கள் கேலிக்கு உரியவர்களே .யாரும் இவர் போன்றவர்களை ஊகபடுதுவது இல்லை .இது ஹிந்து மதத்தின் சாபம் .ஒரு போராட்டம் என்று அறிவித்தால் எதனை பேர் கலந்து கொள்வோம் .

  14. i am against such debates i am a tamil christian i wear thali always .i live abroad .thali is our south indian culture.i know many south indian tamil christian girls wear thaali ,.though wee live in a western country.there shouldnt be any such unwanted debates .

  15. My Best wishes for lawyer subramanian.I pray to almighty to give long life so that shameless hindus will get the sence to fight for their religion.
    We the Hindu youths should fight these beggers with arms because they can understand only the language of wepons and destruction.
    Let us join and form a strong team to tackle these cheap fellows.
    ”BHARAT MATHA KI JAI”.

  16. நித்யானண்டாவைப்பற்றி வெளியிட்ட வேகத்தை, இந்த மஞ்சள் நிற ஆசாமிகளின் கைகூலிகள், காலாவதியான மருந்து விற்பனை விவகாரத்தை பலவருடங்களாக உதாசீனப் படுத்தியதைப் பார்த்தால், சமுதாய அளவில் வட்டம், மாவட்டம்,எம்.எல்.எ, எம் பி அனைவருமே போலிசை தங்கள் வளர்ச்சிக்கு உபயோகம் செய்டdhuகொள்பவர்கள் தான்.

  17. தாலி இன்றைக்கு அவசியமா என்று விவாதிப்பதே வருத்தத்துக்குரிய விஷயமா? இதில் என்ன வருத்தம்? குடுமி இன்றைக்கு அவசியமா என்று விவாதிக்கலாமா இல்லை அதுவும் தவறா? பஞ்சகச்சம்? இதில் பர்தா அவசியமா என்று விவாதிக்கக் கூடாது என்று மிரட்டும் ஃபாசிசக் கும்பலுக்கு பாராட்டு வேறு! யார் எதை விவாதிக்கலாம் என்று சொல்லும் உரிமை தமிழ்செல்வனுக்கும் ஜமாஅத்துக்கும் எங்கிருந்து வருகிறது? தமிழ்செல்வனுக்கு திருப்பதி வெங்கடாசலபதியும் ஜமாஅத் தலைவர்களுக்கு முகமது நபியும் கனவில் வந்து இந்த உரிமையைக் கொடுக்கிறார்களா? சரி எனக்கும் கனவு வரும், அதில் Flying Spaghetti Monster வந்து எனக்கும் இந்த உரிமையைத் தருகிறார், அதனால் தமிழ்செல்வன் இனி மேல் இது பற்றி விவாதிக்கலாமா என்று விவாதிக்கக் கூடாது!

    அவன் (முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள்) அயோக்கியத்தனம் செய்கிறானே, ஹிந்துக்களிடம் ஒற்றுமை இருந்தால் நானும் செய்வேனே என்று அங்கலாய்ப்பதை விட்டுவிட்டு அயோக்கியத்தனத்தை – யார் செய்வதாக இருந்தாலும் – நிறுத்த முயற்சி செய்வோமே!

  18. விஜய் டிவி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதியம் 3 மணிக்கு பழைய ‘நீயா நானா’ நிகழ்ச்சிகளை அதே வரிசையில் மறுஒளிபரப்பு செய்யும். அதன்படி நேற்று மீண்டும் “பெண்கள் தாலி அணிவது அவசியமா” பகுதி ஒளிபரப்பானது. ஆனால் முதல் 5 நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பாகி திடீரென எந்த அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தப்பட்டு ‘சிரிப்போ சிரிப்பு’ என்ற காமெடி நிகழ்ச்சியைக் காண்பித்தார்கள். நல்ல காமெடி!

  19. இந்துக்களின் மென்மையான போக்கு, சிறு வயதிலிருந்தே அஹிம்சை வழியில் செல்ல வேண்டியதின் முக்கியத்துவம் போதிக்கப்படுவதால் நம்மிடம் பய உணர்வும் அடங்கிப்போகும் குணமும் சேர்ந்தே வளர்கிறது. நம்முடைய இப்போதைய தேவை அத்வானி போன்ற முதிர்ந்த தலைவர்கள் அல்ல வருண் காந்தி மற்றும் நரேந்திர மோடி போன்ற துடிப்பான தலைவர்கள்தான் , மேலும் ஹிந்துக்களில் ஒருவரும் மற்ற மதத்தினரை பார்த்து ஏன் நீங்கள் இந்துவாக மாறக்கூடாது என கேட்பதில்லை, ஆனால் ஒரு கிருஸ்துவரோ அல்லது முஸ்லிமோ இந்துக்களிடம் எந்த வித தயக்கமும் இல்லாமல் கேட்கின்றார்கள். எவ்வளவு பெரிய தீவிரவாதியாக இருந்தாலும் அவர் தம் மதத்தை சேர்ந்தவராக இருக்கின்ற காரணத்தால் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கின்றார்கள். இந்துக்களும் திரும்ப தாக்குவார்கள் என்ற பயமிருந்தால் இப்படி நம் பணத்தில் நம்மையே கேவலப்படுத்த மாட்டார்கள். இப்போதைய நம்முடைய தேவை ஒரு உறுதியான தலைவர்,

  20. thalaimai thaanga vendiyavargal – the pseudo hindu organisations and the so called hindu party ……….
    oonilum urakkathilum,
    pattu methaiyilum pagattu vaazhkaiyilum,
    chinna budhiyodum chillarai sugangalodum
    nithyananda nilayil irukkirargal.
    anyayathai kandu manam poradhavargal
    aangaange sidharundu kidakkirargal,
    manam puzhungi thavikkirargal.
    kolgayai vitru kaasakki, naattu paniyil nambiyavar mugathil kari poosi
    indru avalamum avanambikkaiyum nallavar sondham endraagi ponadhu.

    ivarai nambiyaa samayam irukkudhu?
    mella ivar ini saavaar…………..

    nunippul meyaamal, aazha uzhudhu, nal vidhai oona,
    vilayum payirum nar payiraame;
    samayam purindhu, adhai thelinidhu pazhagi vaazha,
    vijayum piravum mannagumme.

    idhuve theervu, eithu pizhaippavar uraithidaare……

    having said the above, i strongly feel after the way the pseudo hindu organisations are conducting themselves and supposedly providing leadership to us, we need to understand our own beliefs and practices thoroughly and adopt them with total faith. sanatana dharma survived the gravest of dangers and the nation lived through carnages only because of the power of mantra japa. what better shield than the one and only GAYATRI MANTRA? may we all join in this to save the nation and dharma from marauders within and without.

  21. அயோக்கியர்களே!
    முஸ்லிம் பெண்கள் பர்தா அணிகிறார்களா?
    சுடிதார் அணிகிறார்களா?
    என்று உங்களை யார் விவாதிக்கச்சொன்னது.
    முஸ்லிம் பெண்கள் நீங்கள் சொல்லும் உடைகள் தான் அணிய வேண்டுமா?
    நீங்கள் என்ன முஸ்லிம் பெண்களின் சொந்தக்காரர்களா?
    ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவது ஏன்?
    உங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் வானம் பூமி அளவு வித்தியாசங்கள் உள்ளது.
    நீங்கள் இருட்டிய இரவு என்றால்’
    நாங்கள் வெளிச்சிடும் பகல்”

    பாராட்ட வேண்டும் என்றால் உங்கள் சொந்தக்காரர்களை பாராட்டுங்கள்,
    நீங்கள் பாராட்டும் அளவு நாங்கள் வக்கற்றவர்கள் அல்ல.

  22. Excuse me narkees நீங்க யாரத் திட்டறீங்க?!

  23. @S Baskar

    What do u know about islam & christianity to decide that they are organizations? Is it because of the people on the media ? If so, then they [muslims and chistians] will decide that Hinduism is full of fake swamis and organisations like RSS who carried out the massacre in gujarath and bomb blast in malegaon putting the blame on muslims.

    this is our biggest problem, no one knows about the other guys religion and simple decide based on the news on the media [which is full of shit. they blackout the necessary info and debate only on trivial things]
    everybody needs to know about the religions and understand each other rather than fighting against others.

    no matter who you are, your belief and faith is very very important and you live by your faith. it is the same for others also…

    @RV
    pls dont go with the media…. if the ruling people want to ignore a community they will use the media… thats how they created a image that all terrorist organisations are muslims which is not true… [irish carried out the bomb blast in london and they are fighting with UK for more than a decade. you can say al-queda took responsibility for that blast… they are shit.. they want some recognision. when u get it free why dont use it.. its their logic.]

    and now the indian government is trying to put an image on the naxalites… thats y u see regular news about naxal attacks… so that the common man would think that naxals are not good…

    @All,
    i agree that we are hurt by that episode and we need to have strict steps to stop such things in the future. But for that dont ask those buggers to do the same to other communities.
    ‘its like challenging the robber to rob our neighbour, if he have guts’, rather than fighting against the robber, we deviate in the wrong direction.

    some muslims may not be good, but islam is good.
    Some Hindus may not be good, but hinduism is good.
    some christians may not be good, but christianity is good.
    some humans may not be good, but humanity is good

  24. நமது இந்தியாவில் உள்ள எந்த ஒரு மதத்தின் நம்பிக்கைகளை புண் படுத்துவதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது . இது ஒரு மதச்சார்பற்ற , சகோதரத்துவ நாடு . இதை முதலில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

  25. @ நர்கீஸ்

    இந்த அலும்பு தானே வேணாம் என்கிறது ????

    ஒரே தொலைகாட்சி இரு சமூக அமைப்புக்களுக்கு இரு வேறு விதமாக தன்னை பிரதி பலிக்கிறது…இதில் இஸ்லாமிய சமூகம் தன எதிர்ப்பை வெளிப்படுத்திய விதம் பாரடுக்குரிடது என்ற கருத்து முன் வைக்க பட்டதே அன்றி நாங்கள் உங்கள் பெண்கள் பர்தா அணிவதை பற்றி பேசவில்லை,வானத்துக்கும் பூமிக்கும் இடையிலான வித்தியாசத்தை இங்குள்ள இஸ்லாமிய பயங்கர வாதம் பற்றிய கட்டுரைகள் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் நடத்த படும்விதம் ஆகியவற்றை பார்த்து விட்டு விவாதம் செய்ய வாருங்கள்….

  26. @ narkees
    முஸ்லிம் பெண்களின் ஆடை பத்தி விவாதிக்க துணிந்தது ஒரு கிறிஸ்தவ பின் புலத்தை சேர்ந்த தமிழ் தொலைகாட்சியான விஜய் டிவியே தவிர தமிழ் ஹிந்து தளத்தினர் அல்ல ….

  27. மொத்தத்தில் இந்துக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். பழைய பல்லவிகளை மறக்க வேண்டும். அஹிம்சை ,மென்மையான போக்கு எல்லாம் உதறித் தள்ள வேண்டும்.

  28. I strongly feel that we lack such a strong organization. I thank Subramanian sir’s courage and interest in this issue. Does tamilhindu have a facebook page? If yes, that can serve as an uniting platform. Many patriotic hindu individuals and families have got hurt with this episode. I must agree that many hindu individuals lack that enthusiasm to file cases and spend time in court. We also have a mental block that police stations and courts are not for dignified families.

    What I feel can bring success is that there are several online petitions that will enable hindu people working in IT industry to participate. Few among them can also help physically.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *