பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்

முந்தைய கட்டுரைகள்:

1. அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்

2. வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்

3. பிரபஞ்சவியலில் உடுக்கை ஒலியும் கொப்பூழ் தாமரையும்

4. பிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்

5. பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்

வேத மதம் கூறும் பிரபஞ்சவியலில், பிரபஞ்சச் சக்கரத்தின் கால்பங்கேயான தோன்றும் பகுதியில் நான்முகப் பிரம்மன் படைப்பை ஆரம்பிக்கிறார். இந்தப் படைப்பு நிகழும் விதம், பல வகைகளில் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளது. அவற்றுள் நாம் பார்க்கும் பிரபஞ்ச – உலக வகையில் கிரகித்துக் கொள்ளக் கூடிய அடிப்படைகளை இங்கே விளக்குவோம். முதல் அடிப்படை கீதையில் விளக்கப்படுகிறது. (பகவத் கீதை 3, 4-ஆம் அத்தியாயங்கள்.)

இது யக்ஞம் எனப்படும் வேள்வி ரீதியான படைப்பு. யக்ஞம் என்றால் அர்ப்பணிப்பின் வாயிலாக வழிபடுதல் என்று பொருள். வழிபாடு என்பதே அர்ப்பணிப்பு ஆகும். அர்ப்பணிப்பு என்றால் எதையாவது கொடுத்தல் என்று அர்த்தம். எதையாவது ஒன்றைக் கொடுத்தால்தான், பிரதிபலனாக ஒன்று கிடைக்கும். நாம் ஒன்றும் கொடுக்காமல், நமக்கென்று ஒன்றை எடுத்துக் கொண்டால் அது திருட்டுக்குச் சமானம். அதுவே பாபம் என்றும் சொல்லப்படும். அது மட்டுமல்ல, திருப்பிக் கொடுக்காமல் எடுத்துக் கொண்டால், இருப்பு குறைந்து கொண்டே வரும்; மேலும் மேலும் அதனால் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.

இந்தக் கருத்துதான் யக்ஞம், ஹோமம், வேள்வி, வழிபாடு, நைவேத்யம், படைப்பு போன்றவற்றுக்கான அடிப்படையானது. இந்த வழிபாட்டை விருப்பு வெறுப்பு இல்லாமல், பற்றிலாமல் செய்ய வேண்டும். படைப்புக் கடவுளான பிரம்ம தேவன் அப்படித்தான் ஆரம்பித்து வைத்தார். ‘ப்ரவர்திதம் சக்ரம்’ என்று அவரால் பரம்பரையாகத் தொடங்கி வைக்கப்பட்ட இந்தச் சக்கரத்தை நாம் அனைவரும் செயல்படுத்திவந்தால்தான் படைப்பு என்பது தொடர்ந்து கொண்டே செல்லும். அது எப்படி என்று பார்ப்போம்.

யக்ஞம் அல்லது ஹோமம் அல்லது வேள்வி என்றால் அங்கே ஹோம குண்டம் இருக்க வேண்டும். அதில் அக்னி இருக்க வேண்டும். அதில் அர்ப்பணிக்க அவிப்பொருள் இருக்க வேண்டும். அந்த அவிப்பொருள் யாரைச் சென்றடைகிறதோ அவர் அதற்குப் பலன் ஒன்றைத் திருப்பி தருகிறார். அந்தப் பலன் பலரையும் சென்றடையும். அப்படிப் பலன் பெறுபவர்கள், இலவசமாகக் கிடைத்தது என்று வாங்கி அனுபவித்தால் மட்டும் போதாது. பிரதிபலனாக திருப்பிச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அது திருட்டுக்குச் சமானம். அது பாபத்தைக் கொடுக்கும். இது எப்படி நடக்கிறது என்று முதலில் உலக வகையில் புரிந்து கொண்டு, பிறகு பிரபஞ்ச அளவில் காணலாம்.

 

உலகம் என்னும் ஹோம குண்டம்

உலகத்தை எடுத்துக் கொண்டால் நீர்-சுழற்சி ஒரு வேள்வி ஆகும். இதில் உலகம் ஹோம குண்டமாகிறது. சூரியனது வெப்பம் அக்னியாகிறது. கடல் மற்றும் நீர் நிலைகளிலிருந்து வெளியாகும் நீராவி அவிப்பொருள் ஆகிறது. இந்த அவிப்பொருள் சென்றடையும் தெய்வம் வருண பகவான் என்னும் மேகம். அவன் இந்திரன் என்னும் தெய்வத்தின் ஆயுதமான வஜ்ராயுதத்தின் (இடி, மின்னல்) உதவியுடன், மித்திரன் என்னும் நட்புத் தெய்வமாக மழை என்னும் பலனைத் தருகிறான்.

இவ்வாறு மழை உண்டாவதே ஒரு வேள்விதான் (கீதை 3-14). இந்த வேள்வி என்பது பிரம்மம் என்னும் முழு முதல் கடவுளிலிருந்து தொடங்கப்பட்டு வருகிறது. தானே தன்னில், தன்னையே அர்ப்பணித்து, தானே உருமாறி, படைப்பை எடுத்துச் செல்கிறது இந்தப் பிரம்மம். (கீதை 4-24)

பிரம்ம வேள்வி என்னும் அந்தப் படைப்பின் பயனாக உண்டாகுவது நீர் ஆகும். அறிவியல் மொழியில் சொல்வதென்றால், நீருக்கு ஆதாரமான ஹைட்ரஜன் உண்டானது இந்த வேள்வியின் பயனாகும். நட்சத்திரங்கள் உருவாகும் விதத்தை நோக்கினால் இந்த ஹைட்ரஜனும் தன் பங்குக்கு வேள்வி என்னும் யக்ஞத்தைச் செய்கிறது என்பது புரியும். தானே, தன்னை, தன்னில் அர்ப்பணித்து, ஹைட்ரஜன் செய்யும் வேள்வியை (thermo nuclear fusion ) நட்சத்திரங்கள் என்னும் ஹோம குண்டங்களில் காணலாம். இடைவிடாமல், எதிர்ரபார்ப்பு இல்லாமல் நிகழும் இந்த வேள்வியின் பயனாக இரும்பு முதலான தாதுப் பொருள்கள் வரை உருவாகி, அடுத்தக் கட்ட படைப்புத் தொடருக்கு வித்திடுகின்றன.

water-cycle

 

அதன் பயனாக உருவான சூரிய மண்டலத்தில், உலகமே ஹோமக் குண்டமாக இயங்கி நடக்கும் வேள்வியின் பயனாக மழை உண்டாகிறது. மழையிலிருந்து உணவு உண்டாகிறது. உணவிலிருந்து உயிர் உண்டாகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் எங்கணும் நட்சத்திரங்கள் இருந்தால் மட்டும் போதாது. அவற்றைச் சுற்றும் கிரகங்கள் இருந்தால் மட்டும் போதாது. அங்கே சுழற்சி முகமாக, வேள்வி ரூபமாக, நீர் உண்டாகிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இடத்தில்தான் உயிர் உண்டாக முடியும்.

 

நால்வகை உயிர்கள்

அப்படி உண்டாகும் உயிர்களும் நான்கு வகைகளில்தான் உருவாக முடியும். (சந்தோக்ய உபநிஷத் – 6 – 3 & பிரம்ம சூத்திரம் – 3-1 -21 முதல் 27 வரை.) இதைக் கூறும் சூடாமணி நிகண்டு சூத்திரமும் தமிழில் உண்டு (12-20). இதன்படி உயிர்கள் கருப்பையிலிருந்து தோன்றுவன, முட்டையிலிருந்து தோன்றுவன, வித்து, வேர் முதலியவற்றிலிருந்து தோன்றுவன, ஈரம், வேர்வை அல்லது கசகசப்பிலிருந்து தோன்றுவன என்று நான்கு வகைக்குள் அடங்கி விடுகின்றன. டார்வின் பரிணாமவியல் போன்ற அறிவியல் கோட்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் அசட்டுக் கோட்பாடுகள் இவை என்று எண்ணுவதற்குமுன் யோசிக்க வேண்டும்.

டார்வினது பரிணாமவியல் எல்லைக்குட்பட்டது என்று இன்று அறிவியலாளர்கள் ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பரிணாமவியல் அந்தந்த இனத்துக்குள்ளே நிகழ்கிறது. அதன்படி, பாக்டீரியாக்களின் பரிணாமம், பாக்டீரியா இனத்துக்குள் நடக்கிறது. பறவை இனப் பரிணாமம், பறவை இனங்களுக்குள்ளே நடக்கிறது. வேத மதம் கூறுவது நால்வகை அடிப்படை வகைகள். அவ்வவற்றுக்குள்ளே பரிணாம வளர்ச்சியும், மாற்றமும் நடக்க முடியும். வகைகளைத் தாண்டி, வேறு வகையுடன் கூடி அல்லது மாறுபாடு அடைந்து புது வகை உருவாக முடியாது. அப்படி நடந்த ஆராய்ச்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.

உருளைக் கிழங்கையும், எருமை மாட்டையும் இணைத்து ஒரு ஆராய்ச்சி முன்பு நடந்தது. (வேத மதக் கோட்பாட்டின்படி இவை இரண்டும் வேறு வேறு வகையைச் சேர்ந்தவை). அதன் பயனாக உருளைக் கிழங்கின் சதைப் பற்றுடன் கூடிய எருமையை உருவாக்க முடிந்தது. அல்லது எருமைத் தோலுடன் கூடிய உருளைக் கிழங்கை உருவாக்க முடிந்தது. பரிணாமம் என்று ஒரு புது வகையை உருவாகக் முடியவில்லை.

பிரபஞ்சத்தில் எங்கு தேடினாலும் வேத மதம் கூறும் இந்த நான்கு வகைக்குள்தான் உயிர்கள் அடங்கும். பூமியின் ஆழத்தில் இருக்கும் வெந்நீர் ஊற்றுகளில் இருக்கும் நுண்ணுயிர்களும், வளி மண்டலத்தில் புழங்கும் நுண்ணுயிர்களும், தலை முடி அழுக்கில் தோன்றும் பேனும் ஒரே வகையைச் சேர்ந்தவை. அவை ஈரம், அல்லது கசகசப்பு இருந்தாலே போதும், தோன்றி விடும். மற்ற உயிர்கள் அப்படிப்பட்டவை அல்ல. அவை உண்டாக நீருடன், நிலமும் காற்றும் வேண்டும்.

இவை தேவை அல்ல; ஸ்டீபன் ஹாகிங் சமீபத்தில் கூறியுள்ளாரே, நட்சத்திரங்களின் மத்தியிலும் வேற்று கிரகவாசிகள் இருக்கலாமே என்று கேட்கலாம். நட்சத்திரங்களின் மத்தியில் வசிக்கும் உயிரினத்தைப் பற்றி வேத மதமும் கூறுகிறது! அந்த உயிரினம் தேவன் என்னும் தெய்வம்! ஹாகிங் அவர்கள் தன்னை அறியாமலேயே வேத மதக் கருத்தைக் கூறியுள்ளார். ஒவ்வொரு தேவனும் ‘நக்ஷத்ராணி ரூபம்’ என்று நட்சத்திர ரூபத்தில் உள்ளான் என்பது வேத வாக்கு.

நமக்கு அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனில் இருப்பவனும் தேவன் எனப்படும் தெய்வமே என்கிறது வேத மதம். அவனை அடைய ‘மது வித்தை’ என்னும் உபாசனையை மேற்கொள்ள வேண்டும். (பிரம்ம சூத்திரம் 1-3- 30, 31 & 32). அவன் பஞ்ச பூதங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு உயிரினம். ஐம்பொறிகளால் பார்க்க முடியாத உயிரினம். அவனை அறிய, அல்லது அடைய மனத்தின் பரிணாம வளர்ச்சியால்தான் முடியும். புறப்பொருள் பரிணாமத்தால் அல்லது பௌதிக உபகரணங்களால் அல்ல. சூரியதேவ உபாசகர்கள், சூரிய கிரகணத்தின் போது, அக்னி குண்டம் மூட்டி அதில் தன்னையே அர்ப்பணித்து சூரிய மண்டலத்தில் இருக்கும் புருஷனை அடைவர் என்று சொல்லப்படும் கருத்தை ஊர்ஜித்தப்படுத்தும் வண்ணம், கர்நாடகத்தின் பல பகுதிகளில் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஆக, வெளியுலக வாசிகள் என்றால் அவர்கள் தேவ வடிவினர் என்பது வேத மதக் கருத்து. தேவர்கள் என்றால் அவர்கள் வகையில், பித்ருக்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், வசுக்கள் என்று பல வகையினரும் அடங்குவர். அவர்கள் உடலை ஊனக் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் அவர்களுக்கும் உடல் உண்டு.

உடல் கொண்டவை என்னும் அடிப்படையில் நான்கு வகைகளை வேத மதம் கூறுகிறது. அவை தேவன், மனிதன், விலங்குகள், தாவரங்கள். தேவ வகையினர் வாழ பஞ்ச பூதங்கள் தேவையில்லை. மற்ற வகையினருக்கு பஞ்ச பூதங்கள் தேவை. மற்ற மூன்று வகையினரும், மேற்சொன்ன நான்கு வகை உயிர்களாகப் பிறக்கின்றன.

 

யக்ஞ ரூபமான மனிதப் பிறப்பு

மனிதன் ஐந்து அக்னிகள் மூலமாகப் பிறக்கிறான். இதைப் பஞ்சாக்னி வித்தை என்பர். (சந்தோக்ய உபநிஷத் – 5- 4 – 1 முதல் 5 -8 – 2 வரை மற்றும் பிரம்ம சூத்திரம் 3 -1- 22 முதல் 27 வரை.) மனிதப் பிறப்பும் யஞ்ய வழியைச் சேர்ந்தது. ஒன்றிலிருந்து ஒன்றாக அர்ப்பணிக்கப்பட்டு மனிதன் பிறக்கிறான். தன் கர்ம வினைகளுக்கு ஏற்ப, சரீரத்தையும் வாழ்க்கையையும் அனுபவிக்க, பிறப்பெடுக்கத் தயாராகும் ஜீவன் அப்படியே கருப்பைக்குள் நுழைய முடியாது. அது வரும் பாதை ஐந்து அக்னிகள் வாயிலான ஹோமத்தின் அர்ப்பணிப்பு போன்றது.

  • முதல் அக்னி மழை. நெருப்பை அணைக்கும் சக்தி மழைக்கு (நீருக்கு) இருப்பதால், அந்த நெருப்பை உள்வாங்கி அதை அணைப்பதால் நீரும் அக்னி என்ப்படுகிறது. பிறக்கத் தயாராகும் ஜீவன் மழையோடு கலந்து பூமியில் விழுகிறது.
  • இரண்டாவது அக்னி பூமி. உஷ்ணத்தை உள்வாங்கிக் கொள்வதால் பூமியும் ஒரு அக்னி. மழை மூலமாக வந்த ஜீவன் பூமிக்குள் செல்கிறது.
  • பூமிக்குள் சென்ற ஜீவன் செடிக்குள் நுழைகிறான். செடி மூன்றாவது அக்னி. அதனுள் இடைவிடாது செயலாக்கம் நடந்து கொண்டிருப்பதால் அது உஷ்ணத்துடன் இருக்கிறது. எனவே அதுவும் அக்னி எனப்படுகிறது. செடியின் வேர் வாயிலாக நுழையும் ஜீவன் அந்தச் செடியின் காய் அல்லது கனியில் நிலை கொள்கிறான்.
  • பூமிக்குள் வரும் வரை ஜீவனால் திரும்பிச் செல்ல முடியும். பிறப்பெடுப்பது ஜீவனது விருப்பம் மற்றும் ஒத்துழைப்புடன்தான் நடக்கிறது. கர்மவினையை அனுபவிக்கப் பிறக்கத் தயாராகும் ஜீவனே இப்படி இறங்கி வருகிறது. செடி என்னும் மூன்றாவது அக்னியில் நுழைந்தவுடன், அந்த ஜீவனால் திரும்பிச் செல்லுதல் முடியாது. பாதைக்குள் நுழைந்தாகிவிட்ட நிலை. பயணத்தைத் தொடர்ந்துதான் ஆகவேண்டும்.
  • ஜீவன் நிலை பெற்ற காய் அல்லது கனியை உண்ணும் ஆண் நான்காவது அக்னி. அவனது உணவுக் குழாய் மூலமாகச் சென்று அவனது விந்தில் அந்த ஜீவன் நிலைபெறுகிறது. அப்படி அது விந்தில் இருக்கும் காலம் இரண்டு மாதங்கள். இது வரை வந்த எந்த நிலையிலும் ஜீவனுக்கு இன்ப துன்பம் என்னும் எந்த அனுபவமும் கிடையாது.
  • அந்த ஆணிலிருந்து பெண்ணின் கருப்பைக்கு விந்து செல்கிறது. அந்தப் பெண் ஐந்தாவது அக்னி. கர்ப்பத்தில் நுழைந்த நொடியில் ஜீவன் பிறந்தவனாகிறான். ஆகவே உயிர் என்பது கரு உண்டான நேரத்தில் உண்டாவது. அங்கேயே அதன் கர்ம வினைப்படியான இன்ப துன்பங்கள் ஆரம்பிக்கின்றன.

சில மணி நேரக் கருவைக் கொல்வதும் சிசுஹத்திதான். கருச்சிதைவு செய்தல் என்பதும் சிசுஹத்திதான்.

இதில் தெரியும் மற்றொரு உண்மை, கருத் தரித்தல் என்பது எதேச்சையானது அல்ல, எதிர்பாராதவிதமாக அமைவதும் அல்ல. ஒரு கரு உருவாவதற்கு முன் இரண்டு மாதங்கள் அந்த ஜீவன் தந்தை உடலில் இருக்கிறது. அதற்கு முன் மூன்று அக்னி வாயிலாகவும் இறங்கி வர கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே ஒவ்வொரு பிறப்பும் திட்டமிட்ட பிறப்பே.

ஆனால் பிறப்பு என்பது ஒரு ஜீவனுக்கு மூன்று விதமாக அமைகிறது என்று ஐதரேய உபநிஷத் (2-3 & 4) கூறுகிறது. தந்தையிடமிருந்து தாயிடம் புகுந்தது முதல் பிறப்பு. தாயிடமிருந்து உலகில் பிறந்தது இரண்டாவது பிறப்பு. இறக்கும் பொழுது மற்றொரு இடத்தில் பிறப்பதால், அந்த உலகில் பிறப்பது மூன்றாவது பிறப்பு.

இதில் முதல் இரண்டு பிறப்பும் எடுத்துக் கொள்ளும் காலம் = தந்தை உடலில் 2 மாதங்கள் + தாய் உடலில் 10 மாதங்கள். இதில் தந்தை உடலில் செல்லாமல் தாயின் உடலில் முழு காலமும் இருந்ததால், ராமனும் அவன் சகோதரர்களும் கர்ப்பத்தில் இருந்த காலம் 12 மாதங்கள். அவர்கள் பஞ்சாக்னியில் முதல் மூன்று அக்னி வாயிலாக வரவில்லை.

அதே போல கடைசி அக்னியையும் தவிர்த்து பிறப்புகள் நிகழலாம் என்று வேத மதம் கூறுகிறது. (பிரம்ம சூத்திரம் 3 – 1 – 19 ) மனிதர்களுள் அப்படிப் பிறந்தவர்கள் துரோணர், திரௌபதி, திருஷ்டத்யும்னன் போன்றோர். அவர்கள் ஐந்தாம் அக்னியான தாய் மூலமாகப் பிறக்கவில்லை. Parthenogenesis என்னும் முறையில், ஐந்தாவது அக்னி இல்லாமல் கருவில் தோன்றும் விலங்கு உயிரினங்கள் உள்ளன. பொதுவாக கருவில் தோன்றும் உயிரினங்கள் பஞ்சாக்னி முறையில் தோன்றுபவையே.

ஐந்தாவது அக்னி இல்லாமல் தோன்றும் பிறப்பு cloning முறையில் நிகழ்வதையும் காணலாம். தாயின் கருவை எடுத்துக் கொள்ளாமல் பிறப்பது ஐந்தாவது அக்னியைத் தவிர்த்துப் பிறப்பதற்கு ஒப்பாகும்.

இப்படி நிகழும் பிறப்பும், யஞ்ய ரூபமாக, அவிப்பொருளை அர்ப்பணிப்பதைப் போல அர்ப்பணிக்கப்பட்டு பிறக்கிறது. அப்படிப் பிறக்கும் சரீரமும் ஒரு ஹோம குண்டத்துக்கு ஒப்பாகும் என்று வேத மதம் கூறுகிறது. ‘அக்னயோஹ்யத்ர ச்ரியந்தே’ என்று கர்ப்ப உபநிஷத் கூறுகிறது. ஞானாக்னி, தர்சனாக்னி, கோஷ்டாக்னி என்னும் அக்னிகள் இதை ஆச்ரயித்து இருப்பதால், இது சரீரம் என்னும் பெயர் பெற்றது என்கிறது இந்த உபநிஷத். உண்ணும் உணவு பக்குவப் படுத்தப்படுவது முதல், அறிவு பட்டை தீட்டப்படுவது வரை, நம் உடலில் பல அக்னிகளால் இடைவிடாது யாகம் நடத்தப்படுகிறது என்கிறது இந்த உபநிஷத்.

இப்படியாக ரூபமாக உயிர்கள் இயங்குகின்றன. படைப்பின் ஆரம்பம் முதலாக நடைபெற்று வரும் யாகத்தால் தோற்றம் பெரும் பிரகிருதி என்னும் அசேதனப் பொருள்கள் ஒன்றுக்குள் ஒன்றாக, ஒன்றுடன் ஒன்றாக, அர்ப்பணிக்கப்பட்டு, நட்சத்திர மண்டலங்களும் கிரகங்களுமாக உருவாகி வருகின்றன. இந்த யாகத்தின் பயன், உயிர் தோன்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்குதல்.

இன்றைக்கு நாம் வாழ்கிறோம் என்றால், நாம் இருக்கும் உலகம், உயிர்களைத் தாங்கி, அவற்றின் கர்ம வினைகளைக் கழிக்க உதவுகிறது என்றால், அதன் ஆரம்பம் படைப்பின் ஆரம்பத்திலேயே உண்டான இடைவிடாத செயல்பாடுதான். அந்தச் செயல்பாட்டின் பயனை மனிதர்களாகிய நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு பயனை நாம் அனுபவித்தால், அதற்குப் பிரதியாக நாமும் ஏதேனும் தர வேண்டும். அப்படித் தரவில்லை என்றால், நாம் திருடர்களாக ஆவோம், பாபிகளாக ஆவோம். அதற்கென வேத மதம் சில யாகங்களைச் செய்யுமாறு மனிதர்களுக்கு விதித்துள்ளது.

 

மனிதர்கள் செய்ய வேண்டிய யக்ஞங்கள்

பிறப்பெடுத்த ஒவ்வொருவனும் தினமும் செய்ய வேண்டிய யக்ஞங்கள் ஐந்து. அவை பஞ்ச யக்ஞங்கள் எனப்படுகின்றன. அவையாவன:-

1. பிரம்ம யக்ஞம்

brahmamமுழு முதல் கடவுளான பிரம்மன் ஆரம்பித்து வைத்த யக்ஞத்தினால்தான் இன்று உலகம் இருக்கிறது. நாமும் வாழ்கிறோம். அந்தப் பயனைப் பெற்றதற்குப் பிரதியாக நாமும் அந்தப் பிரம்மத்திற்கு திருப்பித்தர வேண்டும். அதுவே பிரம்ம யக்ஞம். சிந்தனையாலும், தோத்திரத்தாலும், பூஜையாலும், பாடலாலும் ஏதேனும் ஒரு வகையில் அந்தப் பிரம்மனுக்கு நன்றிகூற வேண்டும். அல்லது நினவுகூர வேண்டும். அவரவர்க்கு உகந்த தெய்வத்தையோ அல்லது விரும்பும் தெய்வத்தையோ பிரம்மமாகப் பாவித்து வணங்கலாம். எல்லாத் தெய்வங்களும் பிரம்மத்தின் அடையாளங்கள் அல்லது பகுதிகளாக இருப்பதால், தெய்வ வழிபாடு பிரம்ம யக்ஞம் ஆகிறது. அந்தத் தெய்வத்தை முழு முதல் பிரம்மமாக நினைத்து வழிபடலாம். நாம் அனுபவிப்பதன் அடையாளமாக பழமோ, பூவோ, இலையோ, அல்லது நீரோ தருவது இந்தப் பிரம்ம யக்ஞத்தில் சேர்க்கப்படும் அவிப்பொருள் ஆகும்.

இங்கே ஒரு விஷயத்தை நாம் அறிய வேண்டும். அவிப்பொருள் போல அளிக்கப்படும் நைவேத்யத்தை, இறைவன் எதிர்பார்த்து இருக்கவில்லை. அப்படிக் கொடுத்தால்தான் அவன் நமக்கு நன்மைகளைத் தருவான் என்பதும் இல்லை. அவனுக்குப் பசியும் இல்லை. இங்கே சொல்லப்பட்ட யக்ஞ வழியில் அப்படி அளிக்க வேண்டியது நமது கடமை.

பொதுவாகவே தெய்வம், அரசன், குரு, குழந்தை இவர்களைப் பார்க்கப்போகும்போது வெறும் கையுடன் போகக் கூடாது. ஏதேனும் அவர்களுக்கு உகந்ததை எடுத்துச் சென்று அவர்களிடம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், நம்மைப் பார்த்தவுடன், பிரதிபலன் எதிர்பாராமல் நமக்கு ஏதேனும் இவர்கள் தருவார்கள். குழந்தை சந்தோஷத்தையும், மன நிறைவையும் தருகிறது. அதற்குக் கைம்மாறு நாம் செய்ய வேண்டும்.

 

2. தேவ-ரிஷி யக்ஞம்

dev-rishisபிரபஞ்சத்தைப் பற்றிய, பிரம்மத்தைப் பற்றிய அறிவை உலகுக்குக் கொடுத்தவர்கள் தேவர்களும், ரிஷிகளும் ஆவார்கள். அவர்களுக்குச் செய்யும் கைம்மாறு இந்த யக்ஞம். அவர்களையும் தினமும் நினைக்க வேண்டும். அவர்கள் கொடுத்துள்ள ஸ்லோகங்கள், பாடல்கள், புராணக் கதைகளைச் சொல்வதன் மூலம் இந்த யக்ஞத்தைச் செய்கிறோம். நாயன்மார்கள், ஆழ்வார்கள் கொடுத்த பாசுரங்களைப் பாடுவதன் மூலமும், தேவ, ரிஷிகளான அவர்களை நினைவுகூர்ந்து இந்த யக்ஞத்தைச் செய்தவர்களாவோம்.

 

3.பித்ரு யக்ஞம்

pithru-karmaதந்தை மூலமாகத் தாயிடத்தில் பிறந்ததே ஒரு யக்ஞம்தான். அதற்குப் பிரதிபலனாக, அவர்களை நினைவுகூர வேண்டும். மறைந்த முன்னோர்களுக்காகச் சில நிமிடமேனும் சிந்தையைச் செலுத்தி, அவர்கள் இருக்கும் உலகில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

 

4. பூத யக்ஞம்

crowநம் பிறப்புக்கு வழிப்பாதையாக அமைந்தது தாவர வகை. இந்த உலகத்தில் நடைபெறும் பலவித சுழற்சிகளுக்கு, தாவரங்களும் விலங்குகளும் காரணமாகின்றன. அவற்றால் நாம் பெரும் பயன்கள் எத்தனையோ. அதனால் அவற்றுக்கும் நாம் நன்றி செலுத்தும் விதமாக பிரத்யுபகாரம் செய்ய வேண்டும். அவற்றுக்குத் தரும் நீரும், உணவும், காட்டும் அக்கறையும் பூத யக்ஞம் எனப்படும். தினமும் ஒரு செடிக்கேனும் நீர் ஊற்ற வேண்டும். ஒரு நாய்க்கோ, பறவைக்கோ உணவிட வேண்டும்.

 

5.மனித யக்ஞம்

தனியாகப் பிறக்கிறோம்; தனியாகப் போகிறோம். ஆனால் இடையில் வாழும் நாள் முழுவதும் மனிதர்கள் பலரது தயவில் வாழ்கிறோம். இதை எழுதும் கணினியும் எதோ ஒரு மனிதன் எடுத்துக் கொண்ட ஒரு முயற்சியால், வேலையால் கிடைத்துள்ளது என்பதை உணர வேண்டும். நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பல மனிதர்கள் நம் வாழ்கையை நாம் வாழத் துணைபுரிகின்றனர். அதற்குப் பிரதிபலனாக, ஒரு மனிதனுக்கேனும் உணவிட்டுத் தான் நம் உணவை நாம் உண்ண வேண்டும். அதிதி போஜனம் எனப்படும் இந்த மனித யக்ஞத்தில், நமக்குச் சம்பந்தம் இல்லாத ஒருவருக்காவது தினமும் உணவு கொடுக்க வேண்டும்.
இப்படி உணவிட்ட சமுதாயம்தான் நமது சமுதாயம். இதனால் பசிக் கொடுமை இருக்கவில்லை. ஒருவருக்கொருவர் செய்து கொள்வதால் எல்லாரும் குறைவின்றி வாழ முடிந்தது. இயற்கை பேணப்பட்டது. படைப்பும் குறைவின்றி நடக்க ஏதுவானது.

 

இந்த பஞ்ச யக்ஞங்களும் அனைத்து குடும்பஸ்தரும் செய்ய வேண்டியது என்று தர்ம சாத்திரங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு குடும்பஸ்தனின் வீடும் ஒரு கொலைக் களம் போல் உள்ளது என்கின்றன தர்ம நூல்கள்.  வீட்டில் அடுப்பு எரிப்பதாலும், நீர் கொதிக்க வைப்பதாலும், உணவு சமைப்பதாலும், மாவு அரைப்பதாலும், வீட்டை விளக்குவதாலும் – இப்படி ஐந்து வழிகளில் பல நுண்ணுயிர்கள் கொல்லப்படுகின்றன. எனவே குடும்பஸ்தனின் வீடு ‘சூனா’ எனப்படும் கொலைக் களம் போல இருக்கிறது. கொல்லுதல் பாபத்தை உண்டாக்குவது. ஆனால் அறியாமலும், வேறு வழியில்லாமலும் இங்கே நுண்ணுயிர்கள் கொல்லப்படுவதால், அதற்குப் பிராயச்சித்தமாக தினமும் இந்த பஞ்ச யக்ஞங்கள் செய்ய வேண்டும் என்று தர்ம நூல்கள் சொல்லுகின்றன.

யக்ஞமாகச் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்தது. பொதுவாகவே நம் மக்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது – இந்து மதத்தில் தொண்டுள்ளம் போதிக்கப்படுவதில்லை; மாறாக பிற மதத்தில் தொண்டு (service) என்பது முக்கியமாக உள்ளது என்ற நினைக்கிறார்கள். அல்லது நினைக்க வைத்துள்ளார்கள்.

மேலே விவரித்துள்ளதைப் பாருங்கள். இந்து மதம் படைப்பு முதற்கொண்டு கவனம் செலுத்தி, படைப்பின் கடைசியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதை தினசரி கடமையாக விதித்துள்ளது. கடமைக்கும் (duty) , தொண்டுக்கும் (service) வித்தியாசம் உண்டு. நம் கடமையை நாம் ஆற்ற வேண்டி, நாம் தரும் உணவை மனித யக்ஞம் என்று ஒருவர் பெற்றுக் கொள்ளும் போது, அவர் நமக்காக உதவி செய்கிறார் என்றாகிறது. உதவியைப் பெற்றுக் கொள்பவர் நாம் என்று ஆகிறோம். அதனால் அவர் நிலை உயர்வாகவும், நாம் பணிவுடனும் இருக்க வேண்டி வரும். அதாவது, நாம் கொடுப்பதை பணிவோடு கொடுப்போம். அவர்கள் பெருமிதத்தோடு பெற்றுக் கொள்வர். நம் கை தாழ்ந்தும் அவர்கள் கை உயர்ந்தும் இருக்கும்.

ஆனால் பிற மதத்தவர் பின்பற்றும் தொண்டு என்னும் கொள்கையைப் பாருங்கள். அங்கே கொடுப்பவன் கை ஓங்கி இருக்கும். வாங்குபவர் கை தாழ்ந்து, பணிவுடன் இருக்கும். வாங்குபவருக்கு அங்கே பெருமிதம் இருக்காது.

அது இல்லாதவனுக்கு, இருப்பவன் செய்வது போன்றது. அதையே கடமை என்னும் யக்ஞமாகச் செய்யும் போது இல்லாமை, இருப்பது போன்ற எண்ணங்கள் வராது. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் செய்துகொள்கிறோம் என்ற எண்ணம்தான் வரும். பிறர் கடமையை ஆற்ற வாங்கிக் கொள்கிறேன் என்று வாங்குபவர், சுயமரியாதை இழக்காமல், பெருமிதத்துடன் வாங்கிக் கொள்வார்.

இப்படிக் கவனமுடன் ஏற்படுத்தப்பட்ட பஞ்ச யக்ஞங்கள் ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டியது. இது கடமை. இதைத் தொண்டு என்று சொல்லப்படவில்லை. தொண்டு என்பது இறைவனுக்குச் செய்வது. இந்து மதம் சொல்லும் தொண்டு அடியவர்க்கு அடியானாக, மிகவும் சாதாரணனாகத் தன்னை பாவித்துக் கொண்டு, இறைவன் புகழ் நிலைக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்வதே. படைத்தவனுக்குச் செய்வது தொண்டு. படைப்பு தொடர்ந்து இயங்கச் செய்வது கடமை.

(தொடரும்…)

40 Replies to “பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்”

  1. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
    செல்லும் வாயெல்லாம் செயல்.—திருவள்ளுவர்.

    நம்மால் இயலும் அளவிற்கு அறத்தினை செய்து வாழ்வதுதான்
    வாழ்வின் அர்த்தம்
    மனம்கடந்து, அறிவை ஊடுருவி,சிந்தைதெளிவித்து,ஆன்மாவை
    அறிய முயலும் பதிவு.வாழ்த்துக்கள்.வடிவேல்சிவம்

  2. Hinduism looks like a large university and treats the science of Universe with accurate information. Most of Hindus are not even aware of such knowledge in the scriptures. Thanks for the author for extracting the juice and presenting to us.

  3. Thanks Ms Jayshree for this wonderful article.I find lot of change in me after reading this article.I wish I could lead my life again according to this article.

  4. கட்டுரையின் பின்பாதி நன்றாக உள்ளது ஆனால் முதல் பகுதி -இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும்- அசட்டுத்தனமாக உள்ளது.
    //டார்வினது பரிணாமவியல் எல்லைக்குட்பட்டது என்று இன்று அறிவியலாளர்கள் ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பரிணாமவியல் அந்தந்த இனத்துக்குள்ளே நிகழ்கிறது. அதன்படி, பாக்டீரியாக்களின் பரிணாமம், பாக்டீரியா இனத்துக்குள் நடக்கிறது. பறவை இனப் பரிணாமம், பறவை இனங்களுக்குள்ளே நடக்கிறது. வேத மதம் கூறுவது நால்வகை அடிப்படை வகைகள். அவ்வவற்றுக்குள்ளே பரிணாம வளர்ச்சியும், மாற்றமும் நடக்க முடியும்//

    பரிணாமம் அந்தந்த இனத்துக்குள் நடக்கிறது என்பது தவறு. இன்று தொடர்பின்றி காணப்படும் பல உயிரினங்களின் தொல் மூதாதைகள் ஒன்றேயாகும்.

    //பிரபஞ்சத்தில் எங்கு தேடினாலும் வேத மதம் கூறும் இந்த நான்கு வகைக்குள்தான் உயிர்கள் அடங்கும். பூமியின் ஆழத்தில் இருக்கும் வெந்நீர் ஊற்றுகளில் இருக்கும் நுண்ணுயிர்களும், வளி மண்டலத்தில் புழங்கும் நுண்ணுயிர்களும், தலை முடி அழுக்கில் தோன்றும் பேனும் ஒரே வகையைச் சேர்ந்தவை.//

    இது மிகவும் பிழையானது. பேன் பூச்சியினத்தைச் சார்ந்தது. பூமியின் ஆழத்திலும் வெந்நீர் ஊற்றிலும் இருப்பதாக ஜெயஸ்ரீ சாரநாதன் கூறும் நுண்ணுயிரிகள் பூச்சியினத்தைச் சார்ந்தவை அல்ல. எக்ஸ்ட்ரீமோஃபைல் என அழைக்கப்படும் இவை பொதுவாக பாக்ட்டீரிய உயிரினங்கள். இவை கூட அந்த அழுக்கிலிருந்து உருவானவை கிடையாது. தொல்பழங்கால பாக்டிரீயாக்கள் கடுஞ்சூழலுக்கு பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக தகவமைத்துக் கொண்டவை ஆகும். ( ஜெயஸ்ரீ சாரநாதன் சொல்லும் abiogenesis ஒரு பழைய கற்பனை மட்டுமே. அது அறிவியலால் தகர்ப்பட்ட கற்பனை. இந்த கற்பனை பிரம்மசூத்திரமென்ன வேதத்தில் இருந்தாலும் அது தவறுதான்.) பேன்களோ (Pediculus humanus capitis) ஒட்டுக்காலிகள் (arthropoda) களுக்குள்ளே உள்ள ஆறுகாலிகள்(hexapoda) எனும் பூச்சிகளில் அனோப்பூளுரா (Anoplura) எனும் உட்பிரிவைச் சேர்ந்தவை. இந்த உட்பிரிவில் 500 இனங்கள் (species) உள்ளன. ஆக பேனெல்லாம் அழுக்கிலிருந்து உருவாகிறது என்று வேதமதம் சொல்கிறதென்றால் வேதமதஸ்தாபகர்களுக்கு அடிப்படை உயிரியல் வகுப்புகளில் இடம் தேவை என்று பொருள். வியாஸருக்கு entomology தெரியாது என்பதாலோ அல்லது evolution செயல்படும் முறை குறித்த நவீன அறியாமை இருப்பதோ தவறில்லை. ஏனென்றால் அவரது ஞானம் இந்த பௌதீக விஷயங்களை சார்ந்ததல்ல. அகம் சார்ந்தது. உள்ளுணர்வு சார்ந்தது. ஆனால் நாமோ பௌதீக உண்மைகளையும் மதங்கள் கூறுவதாக சொல்லும் ஆபிரகாமிய மனநிலைக்கு ஆளாகிவிட்டோ மோ என்கிற எண்ணம் ஜெயஸ்ரீ சாரநாதனின் இத்தகைய எழுத்துக்களைப் பார்க்கும் போது ஏற்படுகிறது.

    //நட்சத்திரங்களின் மத்தியிலும் வேற்று கிரகவாசிகள் இருக்கலாமே என்று கேட்கலாம். நட்சத்திரங்களின் மத்தியில் வசிக்கும் உயிரினத்தைப் பற்றி வேத மதமும் கூறுகிறது! அந்த உயிரினம் தேவன் என்னும் தெய்வம்! ஹாகிங் அவர்கள் தன்னை அறியாமலேயே வேத மதக் கருத்தைக் கூறியுள்ளார். ஒவ்வொரு தேவனும் ‘நக்ஷத்ராணி ரூபம்’ என்று நட்சத்திர ரூபத்தில் உள்ளான் என்பது வேத வாக்கு.//

    மிகவும் மோசமான புரிதல் இது. நட்சத்திரங்களில் வாழ்கிற உயிரினங்கள் குறித்து ஹாக்கிங் சொல்லவில்லை. விண்மீன் மண்டலங்களில் வாழ்பவற்றையே அவர் கூறினார். விண்மீன்களை தேவதைகளாக தேவ புருஷர்களாக சொல்லும் பௌராணிக கற்பனைக்கும் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதற்கும் தொடர்பில்லை.

  5. Dear Jayashree, I recently started reading this site and i had gone throgh all of your articles and became fan of them. Waiting to read the next parts of this article.

  6. இந்துமத விளக்கத்திற்கு எழுதப்பட்ட கட்டுரை. ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களுக்கு நன்றி.
    சில ஐயப்பாடுகள்:
    உங்கள் கருத்துகள் சில ‘சைவ சித்தாந்தத்தில்’ இருந்து வேறுபடுகின்றது.
    1. பிரமன் உடல்களை தான் உயிர்களுக்கு தருகின்றான்.
    2. //இன்றைக்கு நாம் வாழ்கிறோம் என்றால், நாம் இருக்கும் உலகம், உயிர்களைத் தாங்கி, அவற்றின் கர்ம வினைகளைக் கழிக்க உதவுகிறது என்றால், அதன் ஆரம்பம் படைப்பின் ஆரம்பத்திலேயே உண்டான இடைவிடாத செயல்பாடுதான். அந்தச் செயல்பாட்டின் பயனை மனிதர்களாகிய நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு பயனை நாம் அனுபவித்தால், அதற்குப் பிரதியாக நாமும் ஏதேனும் தர வேண்டும். அப்படித் தரவில்லை என்றால், நாம் திருடர்களாக ஆவோம், பாபிகளாக ஆவோம். அதற்கென வேத மதம் சில யாகங்களைச் செய்யுமாறு மனிதர்களுக்கு விதித்துள்ளது.//
    இந்த கருத்தும் முற்றிலும் மாறுபடுகின்றது. இறைவனின் திருவடி மீது இடைவிடாத அன்பு மட்டும் போதும். வேறு எதுவும் நாம் அவனுக்கு செய்ய வேண்டியதில்லை.
    உயிர்கள் பற்றிய தங்கள் கருத்தும் வேறுபடுகின்றது.

  7. நான் எதிர்பார்த்தமாதிரியே அரவிந்தன் நீலகண்டன் அவர்களிடமிருந்து மறு மொழி வந்துள்ளது. அவர் எழுதப் போவதை ஊகித்து கட்டுரையில் ஒரு வரி சேர்த்தேன். அதையே வரி பிசகாமல் சொல்லி இருக்கிறார்:) அவருக்காக சில இணைப்புகளையும் தயாராக வைத்திருந்தேன். இதோ :-

    (1) தொல் மூதாதைகளுக்கும் முன்னால் ஆரம்ப அடித்தளமான வேதியல் சார்ந்த உயிராக்கத்துக்குத் தேவையான எந்த மூலப் பொருளுமே டார்வினிசத்தில் விளக்கப்படவில்லை, விளக்க முடியாது. விளக்க முற்பட்டாலும், உலகம் தோன்றிய 4.2 பில்லியன் வருடங்களுக்குள் அவை நிகழ முடியாது என்பது டார்வினிசத்தின் limitation.

    வேத மதம்படி 86 லட்சம் அடிப்படை யோனிகள். அவை தங்களுக்குள் பெருகிக்கொண்டும் , பரிணமித்துக் கொண்டும் உள்ளன. அவை எல்லாமும் எல்லா காலங்களிலும் இருப்பதில்லை. அவ்வப்பொழுது அவையவை எப்படித் தோன்றின? முதல் தோற்றம் எப்படி நிகழ்ந்தது? இந்த கேள்விகளுக்கு டார்வினிசத்தில் பதில் கிடையாது.
    Dawkins அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு டார்வினிசத்தில் பதில் கிடையாது. அவரது வாதம் சில வரிகளில் :-

    “Darwinian evolution proceeds merrily(!) once life has originated. Bot how does life get started? The origin of life was the chemical event, or series of events, whereby the vital conditions for natural selection came first about. The major ingredient was heredity, either DNA or (more probably) something that copies like DNA, but less accurately, perhaps the related molecule RNA. Once the vital ingredient – some kind of genetic molecule – is in place, true Darwinian natural selection can follow, and complex life emerges as the eventual consequence. But the spontaneous arising by chance of the first hereditary molecule strikes many as improbable.”

    (2) வேர்வை , கச கசப்பு, ஈரம் என்று இவை எல்லாம் ஒரே தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. சாதோக்ய உபநிஷத்தில் முதல் மூன்று வகைகள்தான் சொல்லப்பட்டுள்ளன. (கரு, முட்டை, செடி). புராணங்களிலும், பிரம்ம சூத்திர உரையிலும், சூடாமணி நிகண்டிலும் நான்காவது வகை வருகிறது. இதற்காக அவசரப்பட்டு வியாசரையும் , வேத மதத்தையும் (வேத மத ஸ்தாபகர் என்று யாரும் கிடையாது) நிந்திக்க வேண்டாம்.

    சாந்தோக்யம் இந்த நான்காவது தொகுதியை சொல்லாமல் விட்டதற்கு ஒரு காரணம் இருக்ககூடும். ஜீவன் சம்பந்தம் இவற்றில் இல்லாமல் இருக்கலாம். ஈரம் ஒன்றினாலேயே உருவாகி விடக் கூடிய உயிரினங்கள் இந்த வகையையைச் சேர்ந்தவை. தேடித் தேடி நாம் கண்டுபிடிக்கக்கூடிய உயிரினங்கள் இவையே என்று விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கின்றனர். இவை Hawking நினைப்பது போல aliens அல்ல. இது குறித்த சமீபத்திய NASA ஆராய்ச்சியை இங்கே படிக்கலாம் .

    https://www.space.com/scienceastronomy/signs-of-life-on-earth-100501.html

    (3) வேத மதம் மூலக்ருதியில் ஆரம்பித்து பௌதிகத்தை – material science – ஐத்தான் பேசுகிறது. பிருகிருதி – புருஷன் என்னும் இரண்டும் சேர்ந்ததுதானே தோற்றம்? (இதன் இன்னொரு பரிமாணத்தை அடுத்த கட்டுரையில் கொண்டு வருகிறேன்.) இந்தக் கட்டுரையிலேயே இரண்டு இடத்தில் கோடிக் காட்டியுள்ளேனே – ஹைட்ரஜன் (அம்பஸ் / நீர் ) , thermo nulcear fusion (யாகம்). பௌதிகம் சம்பந்தம் இல்லாமல் உயிர் எப்படி தோன்ற முடியும்? அந்த பௌதிக உடலை ஒட்டித்தானே நாம் செய்யும் கர்மங்கள்? (உண்ணும் உணவில் எவை எல்லாம், எப்படிப்பட்ட பௌதிகமாகின்றன என்றும் அவை எப்படி நம் எண்ணத்தை, அதன் மூலம் காரியத்தைச் செய்யத் தூண்டுகின்றன என்பதை சாந்தோக்ய உபநிஷத்திலும், கீதை 17 -ஆவது அத்தியாயத்திலும் காணலாம்.)

    உடலால்தான் காரியங்கள் செய்கிறோம். செயலின் பரிமளிப்பு உடல்கூறுகள் சம்பத்தப்பட்டவைதானே? எண்ணம்- செயல்- உடல் கூறு இவற்றின் தொடர்பை கடைசிக் கட்டுரையான 8 — ஆவது கட்டுரையில் தருகிறேன். மேலும் மரபணுவை – அவ்வளவு ஏன்? அமினோ அமிலங்கள் மூன்று மூன்று தொகுதியாக சேர்வதற்கும் வேத மதம் ஒரு பௌதிகத்தைக் காட்டியுள்ளது என்று தெரியுமா?

    இன்றைய விஞ்ஞானிகள் பிரபஞ்சவியலை Quantum Consciousness என்னும் வகையில் யோசிக்கிறார்கள். Subhash Kak போன்றவர்கள் சொல்லும் integrated science என்பது பிரம்ம சூத்திரமும், வேதார்த்த சங்க்ரஹமும் சேர்ந்த கலவை.

    https://journalofcosmology.com/QuantumConsciousness108.html
    https://journalofcosmology.com/Contents3.html

    (4) Hawking சொன்னது :-
    Alien life, he will suggest, is almost certain to exist in many other parts of the universe: not just in planets, but perhaps in the centre of stars or even floating in interplanetary space.
    லட்சம் டிகிரீகளுக்கும் மேலான சூடுஉடைய விண்மீன்களில் எப்படிப்பட்ட உயிரை எதிர்பார்க்கலாம்? நட்சத்திரங்கள் தேவர்களின் ரூபமே என்று வேத மதம் கூறுகிறது. அது பௌராநிகர்களது கற்பனை அல்ல. மேலும் Hawking அவர்கள் Numbers வைத்து அவர் சொல்லியுள்ளார். அத்தியாவசியங்களைக் கருத்தில் கொள்ளவில்லை. நிறையவே முரணாகச் சொல்லியுள்ளார். ஏதோ போகிற போக்கில் சொன்னதைப் போல உள்ளது. இங்கே படிக்கவும் :-
    https://www.timesonline.co.uk/tol/news/science/space/article7107207.ece

    நானும் ஒரு காலத்தில் அவரைப் படித்து worm hole universes பற்றி எல்லாம் சிந்தித்ததுண்டு. ஆனால் அவை திருப்திகரமாக இல்லை. மாறாக எந்தக் கேள்விக்கும் பதில் வேத மதத்தில் உள்ளது.

    எந்த ஒன்று, பலவாகி இன்று பிரபஞ்சமாகி உள்ளதோ, அந்த ஒன்றைத் தெரிந்து கொண்டால், பலவும், எல்லாமும் தெரிந்து கொள்ளலாம். வேத மதத்தில் இவை எல்லாம் இல்லை என்று இகழாமல். ஆபிரகாமிய மதங்களை அறிந்துள்ள அளவுக்கு, வேத மதத்தைத் தெரிந்து வைத்திருந்தால் உதவும். அல்லது இன்னொரு வழி இருக்கிறது – know something of everything and everything of at least one thing. What you will hit at is Vedic wisdom!

  8. திரு வடிவேல் சிவம், முரளி, ராம், சசி, ஸ்ரீராம் ஆகியோருக்கு நன்றி.

  9. I too feel what Thiru.aravindan neelakandan said is right.

    //அப்படிக் கொடுத்தால்தான் அவன் நமக்கு நன்மைகளைத் தருவான் என்பதும் இல்லை. அவனுக்குப் பசியும் இல்லை. இங்கே சொல்லப்பட்ட யக்ஞ வழியில் அப்படி அளிக்க வேண்டியது நமது கடமை//
    well said. This is more than enough to bash the person who speaks against our worship

  10. மதிப்பிற்குரிய ஜெயஸ்ரீ சாரநாதன்,

    ஒரு விஷயம் நான் வியாசரை அல்லது எந்த ரிஷியையும் அவமதிக்கவில்லை. ஆனால் இன்றைய இளங்கலை மாணவனுக்கு தெரிந்த பரிணாமவியலோ அல்லது செல் உயிரியலோ அவர்களுக்கு தெரிந்திருக்க முடியாது. இந்த உண்மை அவர்கள் மானுடத்தின் அகப்பரிணாமத்துக்கு ஆற்றிய பெரும் பங்கை எவ்விதத்திலும் குறைத்துவிடாது.

    இரண்டாவதாக தேர்ந்தெடுத்தாலும் தேர்ந்தெடுத்தீர்கள் ரிச்சர்ட் டாவ்கின்ஸையா தேர்ந்தெடுக்க வேண்டும்! 🙂 அவர் டார்வினியத்தை (அதாவது டார்வின் பரிணாம செயல்படுவிதம் என கூறிய இயற்கைத் தேர்வை) கேள்வியெல்லாம் கேட்கவில்லை. நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள நூல் அவரது புகழ்பெற்ற அருமையான “The God Delusion” (பெயரே அருமையாக இருக்கிறதல்லவா!) என்னிடம் இருப்பது 2006 பிரதி. இதில் பக்கம் 164 இல் நீங்கள் மேற்கோள் காட்டிய பகுதி உள்ளது. இந்த அத்தியாயத்தின் பெயர்: “Why there almost certainly is no God” சரி இனி இந்தமுழு மேற்கோளுக்கு வருவோம்…

    Life still has to originate in the water, and the origin of life may have been a highly improbable occurrence. Darwinian evolution proceeds merrily once life has originated. But how does life get started? The origin of life was the chemical event, or series of events, whereby the vital conditions for natural selection came first about. The major ingredient was heredity, either DNA or (more probably) something that copies like DNA, but less accurately, perhaps the related molecule RNA. Once the vital ingredient ஖ some kind of genetic molecule ஖ is in place, true Darwinian natural selection can follow, and complex life emerges as the eventual consequence. But the spontaneous arising by chance of the first hereditary molecule strikes many as improbable. Maybe it is very very improbable, and I shall dwell on this for it is central to this section of the book

    and he dwells on it Srimathi. Jeyashree Saranathan…for the next 256 pages. So do read it and it is a treat I promise you. Do you still say he is questioning Darwinian natural selection?

    நிற்க இயற்கை தேர்வு என்பது பல பரிணாம இயங்குவிதிகளில் ஒன்றுதான். மூலக்கூறு அளவில் தேர்வற்ற பரிணாம இயக்கங்கள் நிகழ்வதையும் உயிரியலாளர்கள் கண்டடைந்துள்ளார்கள். மூலக்கூறு அளவில் நாம் இன்று காணும் டிஎன்ஏ கூட சுய-மறுவாக்கம் (self-replication) செய்யும் எளிய மூலக்கூறுகளிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருப்பதுதான். Endo-symbiosis போன்ற இதர பரிணாம இயக்கங்களையும் நாம் கண்டடைந்துள்ளோம். எனவே டார்வினியம் மதக் கோட்பாடல்ல அது அறிவியல். அது நம் அறிதலின் ஒளி விரிய விரிய மாற்றமடைந்து கொண்டிருக்கும். ஆபிரகாமிய மனநிலையே ஒரே தீர்வான பதிலை நோக்கி ஓடும். பாரதிய அல்லது ஹிந்து ஞான மரபோ கேள்விகளை ஆழமாக்கியபடியே செல்லும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலச்சூழலும் ஆதார கேள்விகளுக்கான பதில்கள் மூலம் மேலும் ஆழமான கேள்விகளையும் மர்மங்களையும் சென்றடையும். அனைத்தும் வேதத்தில் இருக்கிறது என்கிற குரலே எனது எளிய புரிதலில் வேத நெறிக்கு புறம்பானது தான்.

    இனி வேற்றுலக உயிர்கள் என்கிற கோட்பாட்டுக்கு வருகிறேன். சூரிய அல்லது ஏன் ஒரு கருந்துளையின் விளிம்பில் கூட மின்காந்த புலங்களில் ஏற்படும் சுழல்களில் ‘உயிரோ’ அல்லது ‘அறிவோ’ உருவாகலாம்தான். ஆனால் அது அறிவியல்புனைவுகளின் ஊகங்களின் உலகில் -மிக அரிதாகவே யதார்த்தத்தில். என்றாலும் இதைக் கூட பௌராணிக கற்பனைகளுடன் நேரடி முடிச்சு போட்டு இதுதான் அது என சொல்லவேண்டியதில்லை. புராணிகத்தின் கற்பனை ஒரு எளிய மனதின் கற்பனை. விண்ணில் தெரியும் ஒளிகளை தேவதைகளாக புருஷர்களாக உருவகித்த கற்பனையேயன்றி வேறில்லை.

  11. திரு சோம சுந்தரம் அவர்களுக்கு,

    எல்லாவற்றுக்கும் அடிப்படை வேதமதம் கூறும் விஷயங்கள். இதை இப்படிச் சொல்லலாம்.
    The basis is Vedas. The leads given by Vedanta (the Final Outcome of Vedas) are many and these leads are refined as Siddhanthas depending on the understanding and realisation of these leads. Siddhanthas are therefore the derivations formed from Vedanta. It is like the Mighty Ganges emerging form the Gangothri (Vedas) and branching out in different directions and different areas. The Ganga in different areas is known by different names and she enriches different lands in different ways. The Siddhnathas are like the branches or tributaries of Ganga, while Ganga at Gangothri is like Vedantha.
    அந்த கங்கோத்ரியின் அடிப்படையில் இந்தக் கட்டுரைக் கருத்துக்கள் உள்ளன. ஆதாரங்களை ஆங்காங்கே கொடுத்துள்ளேன். நீங்களே படித்து அறியலாம்.

    //இறைவன் திருவடி மீது அன்பு //– அது வழிமுறையும், முடிபும் ஆகும். It is both the means and end of Realisation or Attainment of Him. அவனால், அவன் மூலம், அவனை அடைதல் என்பது வழி. அந்த அன்பு என்பது அவனைப் பற்றிய ஞானத்தையும் சேர்த்து பரிமளிப்பது. அங்கே தெரிய வருவது ஜன சமூகக் கடமை என்று படைப்பை நடத்திச் செல்ல வேண்டிய கடமை. இவற்றை கீதையின் மூலம் அறியலாம்.. பல உபநிஷத்துக்களிலும் இது சொல்லப்பட்டுள்ளது. (உ-ம) தைத்த்ரீய உபநிஷத் – சீக்ஷாவல்லி.

  12. திரு அரவிந்தன் அவர்களே,

    என்னைப் பொறுத்த வரையில் வேத மதம் என்னசொல்கிறது என்பது முக்கியம். அதில் சொல்லப்படுபவை, இன்றைக்கு உலகில் காணப்பட்டால் அதை கோடிக் காண்பிக்க வேண்டும். பலரும் பல விதங்களில் அறிந்து சொன்னது வேத மதத்தில் இருந்தால் அதையும் காண்பிக்க வேண்டும்.

    வேத மதத்தில் சொல்லப்படாதது எதுவும் இல்லை. தென்னை மரமும் , ஏலக்காயும் நல்ல பலன் தரவென்று சமீபத்தில் வெளியான கட்டுரையில் காட்டியுள்ள விஷயங்களை விட அதிக விஷயங்களை – அது மட்டுமல்லாமல் – பலன் கொடுத்தாலும் அவற்றுள் விடப்பட வேண்டியவை எவை , ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை எவை என்பது உட்பட ரிஷிகள் சொன்னவை என்று ப்ரிஹத் சாரங்கதாராவும், ப்ரிஹத் சம்ஹிதையும் கூறுகின்றன. வேத அறிவியலில் இல்லாதது எதுவும் இல்லை. பல விஷயங்களைப் பிட்டு பிட்டு வைக்கவில்லை. ஆனால் சூசகமாகவோ, அல்லது, மறைமுகமாகவோ வைத்துளார்கள். இன்றைக்கு நாம் அறியும் விஞ்ஞானத்தின் கூறுகளை அவற்றில் locate செய்ய முடியும், முடிகிறது. வேத மதம் தெரிந்து விஞ்ஞானத்தை அணுகுபவனுக்கு இது முடிகிறது. Subhash Kak நிறைய காட்டியுள்ளார்.

    Basic complex life form என்பதற்கு மேலேதான் டார்வினிஸம் வருகிறது. அந்த Basic life -குறித்து எந்த விவரணமும் விஞ்ஞானத்தால் கொடுக்க முடியவில்லை. Basic life டார்வினிசத்தினால் உருவாகவில்லை என்பதை அறிவியலார் ஒத்துக் கொண்டுள்ளனர். அந்த அடிப்படை உயிரினங்களைப் பற்றி 3 + 1 வகையாகக் கொடுத்துள்ளது வேத மதம். அவற்றுக்கு மேலே வேறு உயிர் ‘வகை’ கிடையாது. அந்த ஒவ்வொரு வகையிலும் பரிணாமம் நடப்பதை டார்வினிஸம் காட்டுகிறது.

    அந்த அடிப்படை முதல் படைப்பு எப்படி வந்தது என்பதை வேத மதம் சொல்கிறது. அதேபோல முதல் செயல் (கர்மா) எப்படி ஆரம்பமானது என்பதும் பிரம்ம சூத்திரத்தில் ஆராயப்படுகிறது. அந்தக் கருத்துக்கள mind-blowing ones but logical. ஆனால் மனப்பக்குவம் இல்லாமல் புரிந்து கொள்ள முடியாது. அதிலும் ஆபிரகாமிய மத நோக்கில் வேத மதத்தைப் பார்ப்பவர்களுக்கு paradigm shift தேவை. அவற்றை எந்த அளவுக்கு எளிமைபடுத்திக் கொடுக்க முடியும் என்று யோசிக்கிறேன். அவற்றைக் கடைசி கட்டுரையில் கொண்டு வருகிறேன்.

    வேத மதமானது பௌதிக மூலப் பிரகிருதி ஆரம்பித்து material science அனைத்தையும் சொல்லவில்லை என்று நீங்கள் சொல்வது உண்மை என்று நீங்கள் நம்பினால், வேத ரிஷிகள் சொன்னவை, மற்றும் பிரஸ்தானத்ரயம் ஆகியவற்றில் பாதிக்கும் மேல் ஊற்றி மூடி விட வேண்டும். மேலும் வேத மதத்தை நீங்கள் selective ஆகத் தான் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றாகிறது. படைப்பின் காரணமே உயிர்கள் பிறந்து கர்ம பந்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக. பௌதிக உடலில் இருந்து கொண்டுதான் கர்மத்தை கழிக்கிறோம். எனவே அந்த பௌதிக உடலின் கூறுகள் கவனிக்கப்பட வேண்டியவை ஆகின்றன. அவற்றை சொல்லாமல் உயிர்கள் தோற்றத்தை விவரிக்க இயலாது. I can only say to you – study vedic wisdom and come back. If you think that you have already studied, know that it is not enough. Sorry to say this.

    வேற்றுலக உயிர்கள் விஷயம்:-
    நான் கொடுத்துள்ள NASA ஆராய்ச்சி லிங்கில் சொன்னதுதான் இன்றைய நிலவரம். ஆனால் வேற்றுலக உயிர்கள் என்பவை அடுத்த கல்பத்தின் போது வேறு இடத்தில் படைப்பு நடக்கும் போது பரிமளிப்பவை. அதாவது. காட்சிகள் ஒன்றே, நடிகர்கள் நாமே. ஆனால் அரங்கம் மாறும். கல்பம் தோறும் அரங்கம் மாறுகிறது.

    அப்பொழுது (அடுத்த கல்பத்தில் / எதிர்காலத்தில்) வரும் படைப்பின் ஆரம்ப சாத்தியம் இப்பொழுதே ஆரம்பிக்கலாம். ஆனால் அது இன்றிலிருந்து 6.48 பில்லியன் வருடங்கள் கழித்து நடக்கப் போவது. இந்த காலத்தை light year – களில் மாற்றிக் கொள்ளவும். அதைக்கொண்டு எவ்வளவு தொலைவில் உயிரினம் இருக்கும் அந்த அரங்கம் இருக்கும் என்று அறியலாம். அதற்குள் ஆண்ட்ரோமீடா நம்மைப் பதம் பார்த்து விடும், சூரியக் குடும்பம் அழிந்து விடும். பௌதிகமான பிருகிருதி சம்பந்தம் கிடைக்க உயிர்கள் ஒரு 4.32 பில்லியன் வருடங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்குப் பிறகு அந்த அரங்கத்தில் தோற்றம் பெரும் உயிர்களை – இப்பொழுதே detect செய்ய முடியாது. நீங்கள் சொல்லும் அகப் பரிமாணம் காட்டும் வழியில், இப்படித் தான் சொல்ல முடியும்.

    இன்னொரு கோணம்.
    உயிர்கள் பிறப்பே கர்ம வினையை முடித்து கர்மச் சக்கரத்திலிருந்து விடுபடத்தான் என்பது வேத மதக் கொள்கை. இதை நீங்கள் ஒத்துக் கொண்டால், உயிர் அங்கே வந்தது, இங்கே வந்தது, இது அறிவியல், இது உடான்சு, இப்படி சொல்லவே இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது.

    மூன்று வகை உயிர்களில் (கரு, முட்டை, செடி) ஜீவன் இறங்குகிறது. அந்தந்த உடலில் கர்ம வினையைக் கழிக்கிறது. இதை கர்பகதி என்பர். (மொத்தம் நான்கு கதிகள்.கர்பகதி, யாம்யகதி, தூமாதி கதி, அர்சிராதிகதி) இன்பமும், துன்பமும் சேர்ந்து அனுபவித்தல் இதன் (கர்ப்ப கதி) வழி. மூவகை உயிர்களிலும், ஜீவன் இப்படி கர்ம வினையைக் கழிக்கிறான். இது நடப்பது தற்சமயம் நாம் வாழும் உலகில் மட்டுமே. ஒரு மில்லியன் விந்துக்களில் ஒரு விந்து கர்ப்பம் தரிக்க உயிர் தருவது போல, பல பில்லியன், ட்ரில்லியன் நட்சத்திரக் கூட்டங்கள் படைப்பில் ஒரு நட்சத்திரத்தில் உயிர் தரிக்க சூழ்நிலை உருவாகிறது. இது பிரத்யட்சமாகப் பார்ப்பது.

    இந்த படைப்புகளில் தேவன் (மற்றவை தாவர, விலங்கு மனிதன்) கர்ப்ப கதியில் வரவில்லை. அவர்கள் அர்சிராதிகதியில் செல்பவர்கள். அவர்கள் வாழும் உலகங்கள் முந்தின கட்டுரையில் தரப்பட்டன. பரிணாமம் என்பது மனிதனிலிருந்து தேவன் ஆதல். ஆனால் அது பௌதிகமாக டார்விநிசம் ரீதியாக பூமியில் நிகழ்வதில்லை. அந்தப் பரிணாமம் அகம் ரீதியானது. நீங்கள் சொல்லும் அகம் ரீதியான இந்து மதம் என்பது மனிதனிலிருந்து தேவனாகும் நிலையைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டது. அந்த தேவ நிலையையே நீங்கள் கற்பனை என்கிறீர்கள்.

    மனிதனுக்குக் கீழான உயிர் நிலைகளை வேத மதம் சொல்லி, அவற்றில் ஜீவன் பிறவாமல் உயரவேண்டும் என்பதற்கான விதிகளை கொடுத்துள்ளது. இதைச் செய் அதைச் செய்யாதே என்பதெல்லாம் இதற்க்காக்கவும்தான். நாம் இருக்கும் உலகிலேயே இந்த சுழற்சி மேலும் தொடர வாய்ப்புகள் இருக்கும் வரை It is advantageous for Nature to concentrate on this planet. அது நடந்து கொண்டிருக்கிறது. அது நடக்கவியலா நிலை வரும்போது உலகம் மாறும். கர்பகதி நடக்க அரங்கம் மாறும்.

    மாறாதவர் தேவர் – அவர்கள், தம் நிலையில் குறைந்தால் ஒழிய. அப்பொழுது கர்ப கதியில் வந்து, வினை முடித்து மீள்வர். அப்படிப்பட்ட தேவர் நிலையில் பல படிகளில் ஜீவன்கள் உள்ளனர்.Near death experience மற்றும் பலரது அனுபவங்களின் மூலம் தேவர்கள் இருப்பது வேத மதம் அறியாதவர்களும் ஒத்துக் கொண்ட ஒன்றே.

  13. மதிப்பிற்குரிய ஜெயஸ்ரீ சாரநாதன்,

    வேத மதம் குறித்த எக்ஸ்பர்ட் அல்ல நான். நீங்கள் கூறும் வேத மதம் ஆபிரகாமிய ரகத்தில் சற்றே பெட்டர் மாதிரி ஆனால் அதன் அனைத்து தவறுகளும் அடங்கியதென்றே தோன்றுகிறது. உங்களது பல வாதங்களில் குரானுக்கும் அறிவியலுக்கும் முடிச்சு போடும் இஸ்லாமியவாதிகளின் வாதகதியே தெரிகிறது. பேன் அழுக்கிலிருந்து உருவாவது என்றீர்கள் அதுவும் அதீத சூழல்களில் வாழும் நுண்ணுயிரிகளும் ஒரு வகை என ‘வேதமதம்’ சொன்னதாக சொன்னீர்கள்.அது சுருதி சுத்தமான தவறு. நீங்கள் பொதுவாக செய்வது என்னவென்றால் ஒரு சட்டகத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள். அதனை வேதமதம் என்கிறீர்கள். (அது பௌராணிக கற்பனை என்கிறேன் நான். அது அதி-பௌதீக யதார்த்தம் என்கிறீர்கள் நீங்கள்) பிறகு அதற்கு அறிவியல் தரவுகளை வளைத்தும் உடைத்தும் அதற்கேற்ப பொருத்துகிறீர்கள். இதைத்தான் இஸ்லாமிஸ்ட்களும் செய்கிறார்கள். இன்னும் க்ரூடாக செய்கிறார்கள். இன்னும் பணபலத்துடன் செய்கிறார்கள். இன்னும் மோசமான ஒரு நம்பிக்கைக்கு ஆதரவளிக்கும் விதத்தில் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் அதனை ‘வேத மதம்’ என்று நீங்கள் சொல்கிற ஒரு விஷயத்துக்கு ஆதாரமாக செய்கிறீர்கள். இது மிகவும் தவறான பார்வை என்பது எனது கருத்து. பொதுவாக இத்தகைய ‘அறிவியல்-ஆன்மிக’ இணைப்புக்கள் இரண்டையுமே கொச்சைப்படுத்துவதாகும் என நான் கருதுகிறேன்.

    //Basic complex life form என்பதற்கு மேலேதான் டார்வினிஸம் வருகிறது. அந்த Basic life -குறித்து எந்த விவரணமும் விஞ்ஞானத்தால் கொடுக்க முடியவில்லை//
    முழுத்தவறு…prebiotic molecular evolution குறித்து வேண்டிய அளவு ஆராய்ச்சி நடந்தவாறே உள்ளன. உதாரணமாக சுயம்பு-முகிழ்ச்சி (autopoiesis) ஒரு முக்கிய பொருண்மை செயல்படுத்தன்மையாக உயிர் என நாம் அழைக்கும் நிகழ்வு ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் என்பது குறித்து ஆராய்ச்சிகள் இருக்கின்றன. இப்பொருண்மை செயல்பாடு குறித்து முதலில் பேசிய ஹம்பர்ட்டோ மத்துரானா மற்றும் ஃப்ரான்ஸிஸ்கோ வரேலா ஆகியோர் பௌத்த ஞான மரபிலிருந்து இக்கோட்பாட்டை வடித்தெடுத்தார்கள். அத்வைத வேதாந்தமும் இதே தன்மையுடன் அறிவியலுக்கு அறிதல் உள்ளொளிகளை வழங்க முடியும். வழங்கியிருக்கிறது (ஜியார்ஜ் சுதர்ஷன் ஒரு உதாரணம்) ஆனால் அது நீங்கள் சொல்லும் இத்தகைய போக்கினால் இயலாது என்பதே என் எண்ணம்.

    மரண அணுகாமை அனுபவங்கள் உண்மையானவை அல்ல. மூளைக்கு ஆக்ஸிஜன் குறைவினால் ஏற்படும் மனமயக்க காட்சிகள் மட்டுமே…

  14. Dear friends and well wishers,

    Each and every step of a hindu (human being)from the moment of life, is based on the service to living beings (not only human beings).

    There are lot of evidences are available with our slokas in upanishad and vedas.

    A humble request to Shri Aravind Neelakandan,

    If we would deeply analyse the Dashavadharam – we may get the genesis of the so called DNAs and RNAs.

    Unfortunately, the teachings or original works of our ancesters are not available or not in the understanding languages.

    If the scholars like you and author of the article try to get fact, it may be nice.

    this is a humble request.

    With regards,
    IRUNGOVEL A P

  15. அன்புள்ள ஜெயஸ்ரீ அவர்களுக்கு,

    // வேத மதம் மூலக்ருதியில் ஆரம்பித்து பௌதிகத்தை – material science – ஐத்தான் பேசுகிறது. பிருகிருதி – புருஷன் என்னும் இரண்டும் சேர்ந்ததுதானே தோற்றம்? (இதன் இன்னொரு பரிமாணத்தை அடுத்த கட்டுரையில் கொண்டு வருகிறேன்.) //

    வரலாற்று ரீதியாக, ஆதி சாங்கிய தரிசனத்தில் மூலப்ரகிருதி என்ற தத்துவம் மட்டுமே இருந்தது. அது வியக்தம் (வெளிப்பட்டதாகவும்), அவ்யக்தம் (வெளிப்படாததாகவும்) இருப்பதாக சொல்லப் பட்டது. பின்னர் வேதாந்த தரிசனத்துடன் அது உறவாடி முன் நகர்கையில் புருஷன் என்ற கருத்தாக்கம் சேர்க்கப் பட்டது. இந்த சாங்கியத்திற்கு “சேஸ்வர சாங்கியம்” (ஸ+ஈஸ்வர சாங்கியம்) என்று பெயர் ஏற்பட்டது. பௌத்தமும், ஆஜீவகமும், சமணமும் ‘நிரீஸ்வர சாங்கியத்தை’ ஏற்றுக் கொண்டு அதிலிருந்து கிளைத்துச் சென்று விட்டன.

    மேலும், தரிசனங்கள் என்பவை *அறிவியல்* அல்ல, அவை இந்து மரபிலேயே ஒருபோதும் அப்படி எண்ணப் படவில்லை. பிரபஞ்சத்தைப் பற்றிய ஒட்டுமொத்தமான தத்துவ நோக்கே அவ்வாறு அழைக்கப் பட்டது – இந்தத் தத்துவநோக்கு *அறிவியல்பூர்வமாக* இருக்கலாம், இருக்கிறது, நவீன அறிவியலின் சில theoritical முடிவுகளுடன் தரிசனங்களின் சிந்தனை இழைகள் ஒத்துப் போகின்றன. ஆனால் அதுவே அறிவியல் அல்ல. கடந்த ஒரு நூற்றாண்டில் அறிவியலின் ஒவ்வொரு துறையுமே மிகப் பிரம்மாண்டமான அளவில் வளர்ச்சி பெற்று விட்டது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

    க்வாண்டம் இயற்பியல், நவீன ஜெனடிக்ஸ்,நவீன மின்னணு தொழில்நுட்பம் எல்லாம் வேதத்தில் இருக்கிறது என்று அதி-ஊகங்களின் அடிப்படையில் “ஆதாரங்கள்” காட்டுவது, அதுவும் இந்த அறிவியல் துறைகள் முழுதாக வளர்ந்தபிறகு உருவான jargonகளை வைத்துக் கொண்டு, வேதமந்திரங்களில், புராணங்களில் இது ஏற்கனவே இருக்கிறது என்று மூக்கைச் சுற்றி வளைத்தும் சொல்-விளையாட்டுகளின் அடிப்படையிலும் சொல்வது – இவை சிந்திக்கும் திறன் படைத்த இந்துக்களிடம் செல்லுபடியாவதில்லை.. அதீத மரபு வழிபாட்டு உணர்வும், கேள்விகளற்ற அதீத மத நம்பிக்கையும் கொண்டவர்கள் மட்டுமே இவற்றில் புளகாங்கிதமடைகிறார்கள். சொல்லப் போனால், இத்தகைய திரிபுவாதங்கள் பெருகுவதன் காரணமாக, உண்மையான பண்டைய இந்து அறிவியல் (கணிதம், உலோக செய்முறைகள், ஆயுர்வேதம்… ) துறைகளைப் பற்றிப் பேசும்போது கூட அறிவியல் நோக்குடையவர்கள் சந்தேகக் கண்கொண்டே பார்க்கும் துரதிர்ஷ்டவசமான நிலை உருவாகியிருக்கிறது.

    // மாறாக எந்தக் கேள்விக்கும் பதில் வேத மதத்தில் உள்ளது.//

    இது வேதாந்த தரிசனத்திற்கும், அறிவியல் சிந்தனைக்கும் இரண்டிற்குமே முரணானது. . நீங்கள் பேசுவதில் பூர்வ மீமாம்சத்தின் தாக்கம் தான் மிக அதிகமாக உள்ளது, ஆனால் வேதாந்தம் என்ற பெயரில் அதை முன்வைக்கிறீர்கள். சில கட்டுரைகள் முன்பே இதனைக் குறிப்பிட்டிருந்தேன். அது மேலும் உறுதியாகிறது.

    மேலும், புராணங்கள், தரிசனங்கள், பக்தி இயக்கம் எல்லாவற்றையும் இணைத்து “வேத மதம்” என்றே குறிப்பிடுகிறீர்கள். “இந்து” என்ற சொல்மீது உங்களுக்கு கொஞ்சம் aversion உள்ளது போலத் தெரிகிறது :)) இஸ்கான்காரர்களுக்கு இப்படிச் செய்வதில் பிரியம் அதிகம், பெங்களூரில் இஸ்கான் கோயில் உணவகத்தில் தரும் காபிக்குக் கூட Vedic Coffee என்று பெயர் வைத்துள்ளார்கள் :))

    // அவற்றை சொல்லாமல் உயிர்கள் தோற்றத்தை விவரிக்க இயலாது. I can only say to you – study vedic wisdom and come back. If you think that you have already studied, know that it is not enough. Sorry to say this. //

    இதில் ஒருவித arrogance தொனிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அரவிந்தனிடம் இப்படிக் கேள்வி எழுப்புகிறீர்கள் – நீங்கள் இங்கு குறிப்பிடும் நவீன அறிவியல் துறைகளில் (உயிரியல், மரபணுவியல், பரிணாமக் கொள்கை, வானியல்…) எல்லாவற்றையும் *போதுமான அளவு* படித்து விட்டுத் தான் நீங்கள் கருத்துச் சொல்கிறீர்களா? *போதுமான அளவு* என்பதற்கு வரையறை இல்லை. எனவே விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட விசயத்தை மட்டும், அதன் வரம்புகளுக்குள் நின்று பேசுவது தான் முறையானது என்பது என் பணிவான எண்ணம்.

  16. //
    இவை சிந்திக்கும் திறன் படைத்த இந்துக்களிடம் செல்லுபடியாவதில்லை
    //

    இப்படி ஒரு புது class of people என்று இருப்பது வியப்பாக இருக்கிறது – பல சிந்திக்கும் திறன் படைத்த ஹிந்துக்க தான் இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார்கள் – அகத்திற்கு தேவையான அத்தனை பௌதிக விஷயங்களும் வேதத்தில் அடங்கி இருக்கிறது என்பது உண்மையே – இது பாதிகள் வருவதன்றோ வியாசருக்கும் இதற்கும் இதில் என்ன சம்பந்தம் என்று சொல்வது தான் விந்தையாக உள்ளது – பௌதிகம் என்ற பிரித்தது நாமே

    abiogenesis முற்றிலும் தவறு என்று இன்னுமே ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டிவிடவில்லை – அதற்க்கு மாறான postulates நிறைய வந்துள்ளன – அவை postulates மட்டுமே – வின்னிளில் எங்கோ ஒரு இடத்தில் உயிர் உருவாகி அது எங்கும் பரவுகிறது என்றும் கூட ஒரு சிந்தனை மார்க்கம் உள்ளது

    எனக்கும் கூட ஜெயஸ்ரீ அவர்கள் எழுதியதில் பல சந்தேகங்கள்/மாற்று கருத்துக்கள் உள்ளது – அதை கேள்விகளாக கேட்பதில் தவறு வராது – ஆனால் நீங்கள் சொல்வது அசட்டுத்தனமாக உள்ளது என்று ஆரம்பித்தால் அது arrogance ஆகாதோ?

    வேதத்தில் science இருக்கவே கூடாது, இன்றைக்கு நாம் பிரயக்ஷமாக science மூலம் பார்க்கும் விஷயத்தை வேதத்தில் பொருத்தி பார்ப்பது மரண தண்டனை வங்கி தரும் குற்றம் போல எண்ணுவது சரியா?

    சர்வம் பிரம்ம மாயம் என்று ஒரு புறம் அத்வைதம் பேசிவிட்டு – மறுபுறம் science வேறு அகம் வேறு என்பது சரியா?

    இன்றைக்கு நாம் காணும் அனைத்திற்கும் வேதத்தில் வித்துக்கள் இருக்கிறது என்று சொன்னதாக தான் நான் புரிந்து கொண்டேன் – iron ore, sulphuri acid,fabless semiconductor என்று வளர்ச்சி உற்றவை பற்றியெல்லாம் வேதத்தில் இல்லையே என்பதுபோல் கேட்பது சரியா? இதற்க்கு ஒப்பாக ஒன்று சொல்ல வேண்டும் என்றால் – பதார்த்தங்கள் [ த்ரவ்ய, குண, கர்ம…. ]இன்றளவும் எட்டு தான் – எல்லாமே அதனுள் அடங்கிவிடும் – இது தான் வித்து – இன்றைக்கு உள்ள android செல்லும் திரவ்யத்தில் அடங்கிவிடும்

    உயிர் உருவாவது evolution என்றால் – ஆன்மா என்ற தத்துவமே அடிபட்டு போய்விடும் – அப்புறம் ஹிந்து தான் எங்கே அகம் தான் எங்கே – ஆன்மா என்பதை விட்டுவிட்டு அகத்தை பற்றி பேசி என்ன பயன்?

    //
    வரலாற்று ரீதியாக, ஆதி சாங்கிய தரிசனத்தில் மூலப்ரகிருதி என்ற தத்துவம் மட்டுமே இருந்தது

    We will have to see how Rig vedha samhithas progress discussing about agni, varuna… and describe Visvam – this is the basis for describing purusha
    Vedantham is an eloboration of Vedha without the parts that deal with worldly benefits – most of the important upanishads deal with Vedic and vedantic concepts side by side – for instance we will find this in Brihudaranyka upanishad
    – who is the god for eastern quarter on what is he installed? Sun is the god, he is installed in eyes, eyes are installed on forms, forms in heart
    – “Who is the god of southern quarter on what is he installed” – Yama is the god of Southern quarter, he is installed on Sacrifice, Sacrifices rests on gift, gift rests on heart”

    — this proceeds to west, north etc

    Here vedic sacrifce, vedantic thoughts (on antaryami) and pyshchology all are explained. Here both cosmology(Viswam) and antaryaamithvam are linked

    one may disagree and ask where are both linked – i only see antaryamitvam – only a careful study will provide that knowledge – this is akin to what (i thought) Srimathi Jayashree i tying to tell by when asking to read vedic thoughts fully before we categorize them as things that merely deal with Sacrifices

  17. Jeyasree, Aravindan and Jataayu. They are bowling bouncers and hitting sixers. Poor people like me who have no basic knowledge of ‘Vedic thoughts’ or biology are simply spectators looking on with awe

  18. அன்புள்ள சாரங்,

    // வேதத்தில் science இருக்கவே கூடாது, இன்றைக்கு நாம் பிரயக்ஷமாக science மூலம் பார்க்கும் விஷயத்தை வேதத்தில் பொருத்தி பார்ப்பது மரண தண்டனை வங்கி தரும் குற்றம் போல எண்ணுவது சரியா? //

    பொருத்திப் பார்ப்பது என்பது வேறு, ஒரு நவீன அறிவியல் கருத்தாக்கம் *அப்படியே வேதத்தில் இருக்கிறது*, இதோ பார் என்று ஊகங்களை “நிரூபணங்கள்” ஆகத் தருவது வேறு..

    பொருத்திப் பார்ப்பது convicing ஆக இருக்க வேண்டும் – கார்ல் சாகன், காப்ரா, வில்லியனூர் ராமச்சந்திரன் (எனது தேவி சூக்தம் கட்டுரையில் இவர் மேற்கோள் ஒன்றை அளித்திருக்கிறேன்) போன்றவர்கள் இந்து வேதாந்த சிந்தனையை நவீன அறிவியல் சித்தாந்தத்துடன் தொடர்பு படுத்தி எழுதியிருக்கிறார்கள்.. அவற்றைப் படித்துப் பார்த்தால் இந்த வித்யாசம் புரியும்.

    // சர்வம் பிரம்ம மாயம் என்று ஒரு புறம் அத்வைதம் பேசிவிட்டு – மறுபுறம் science வேறு அகம் வேறு என்பது சரியா? //

    அத்வைதம் வ்யாவஹாரிக ஸத்தா (நடைமுறை உண்மைகள்), பாரமார்த்திக ஸத்தா (அனைத்திற்கும் அப்பாலான உண்மைகள்) என்று இரண்டு விஷயங்களைப் பேசுகிறது.. ஒரு தளத்தில் சர்வம் பிரம்ம மயம் என்பதும் உண்மை.. இன்னொரு தளத்தில் தத்துவம், கணிதம்/அறிவியல், கலை/இலக்கியம் இவை ஒவ்வொன்றுக்கும் வேறுவேறுவிதமான அறிதல்முறைகள் (epistemology) உள்ளன என்பதும் உண்மை தான் அல்லவா? அவற்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது.. A Hindu always travels from Truth to Truth, at various levels என்று விவேகானந்தர் சொல்வதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்..

    // பதார்த்தங்கள் [ த்ரவ்ய, குண, கர்ம…. ]இன்றளவும் எட்டு தான் – எல்லாமே அதனுள் அடங்கிவிடும் – இது தான் வித்து – இன்றைக்கு உள்ள android செல்லும் திரவ்யத்தில் அடங்கிவிடும் //

    இது முழுமைவாதம் (Absolutism) என்ற வேதாந்தத் தத்துவத்தை குறுக்கல்வாதமாக (reductionism) ஆக்கும் முயற்சி.

    அறிவியலாளர்கள் இத்தகைய கருத்தாங்களை நிராகரிப்பார்கள..சரி, எல்லாமே எட்டுக்குள் வருகிறது – what next? அதனால் புதிய ஞானம் என்ன கிடைக்கிறது என்று கேட்பார்கள்.

    உண்மையான தத்துவவாதிகள் முழுமைத் தத்துவத்தை அதன் அறிதல்முறை கொண்டே விளக்கிச் செல்வார்களே அன்றி, அதனை இங்ஙனம் குறுக்கி இறக்க மாட்டார்கள், அது எங்கே இடறும் என்று அவர்களுக்குத் தெரியும்.

  19. ஜயாயு அவர்களே

    ///இதில் ஒருவித arrogance தொனிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அரவிந்தனிடம் இப்படிக் கேள்வி எழுப்புகிறீர்கள் – நீங்கள் இங்கு குறிப்பிடும் நவீன அறிவியல் துறைகளில் (உயிரியல், மரபணுவியல், பரிணாமக் கொள்கை, வானியல்…) எல்லாவற்றையும் *போதுமான அளவு* படித்து விட்டுத் தான் நீங்கள் கருத்துச் சொல்கிறீர்களா? *போதுமான அளவு* என்பதற்கு வரையறை இல்லை. எனவே விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட விசயத்தை மட்டும், அதன் வரம்புகளுக்குள் நின்று பேசுவது தான் முறையானது என்பது என் பணிவான எண்ணம்.///

    ஹிந்து மதத்தை வேதங்களில் அடக்குவது என்பது தவறான போக்கு என்று நான் முன்னமே கூறி வந்திருக்கிறேன். அப்போது கட்டுரை ஆசிரியர் “நீங்கள் கூறுவது வரவில்லை என்றால் அது வேத மதம் அல்ல” என்றும் எனது “சமரசக் கருத்துக்கள் வேதமதம் அல்லது ஹிந்து மதம் சார்ந்தவை அல்ல” என்றும் கூரிய போதும் எனக்குத தாங்கள் கூறிய வரிகளே மனதில் பட்டன. எனவேதான் கட்டுரை ஆசிரியரின் பல பிரபஞ்சக் கருத்துக்களிலும் சனிகிரகத்தின் ஒளி உள்ளிட்டவை பற்றிய கருத்துக்களிலும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் எந்த மறுமொழியும் செய்வதில்லை என்றிருக்கிறேன்.

  20. மதிப்பிற்குரிய ஜடாயு அவர்களே

    இன்றைக்கு அறவியல் சொல்லும் அவ்வளவும் வேதத்தில் இருக்குமாயின் எனக்கு வெறுப்பே ஏற்படும் – அத்தகைய வெறுக்கத்தக்க விஷயங்கள் சில இன்றைய அறிவியலில் உண்டு – நான் பொருத்தி பார்க்கும் கோணத்தில் தான் அணுகினேன்

    சர்வம் பிரம்மமயம் என்றாகிவிட்ட போது – அதில் அறிவியலை பற்றி பேசக்கூடாது [ அந்த கால நிலைகளில் – பிறப்பின் பரிமாணங்களை பற்றி பேசுவது வேதாந்தவாதியின் subject matter என்பதில் இல்லை] போன்ற சிந்தனைகள் தான் தேவையற்றது என்று எனக்கு தோன்றுகிறது – பிரம்மத்தில் தான் அனைத்தின் வித்தும் உள்ளது என்றான போது பிரம்மத்தை பற்றி தெரிந்தால் அனைத்தும் தெரிந்ததாகிவிடுக்றது – இந்த கோணத்தில் தான் உண்மையான பிரம்ம ஞானிகள் science பற்றி பேசுவதில் தவறேதுமில்லை என்று எண்ணுகிறேன்

    //
    இது முழுமைவாதம் (Absolutism) என்ற வேதாந்தத் தத்துவத்தை குறுக்கல்வாதமாக (reductionism) ஆக்கும் முயற்சி.
    //

    இல்லை சப்த பதார்த்தங்களுக்கு மேல் எட்டாவது ஒன்று இன்றளவும் சொல்லிவிட முடியாது – அது ஒரு enumeration அவ்வளவே – அதை போல வேதத்தில் சில வித்துக்கள் உள்ளன – உதாரணத்திற்கு பஞ்ச பூதங்கள் – இதை தாண்டி ஆறாவது என்று ஒன்று உளதோ இல்லை – enumeration ஒன்று இருந்துவிட்டால் அதன் கீழ் வரும் அனைத்தும் அதன் குணதிசயங்களை கொண்டிருக்கும் – அதை புரிந்து கொள்வது எளிதாகிவிடும் – இன்றைக்கு விஞானிகள் இத்தகைய enumeration என்பதை வைத்துக்கொண்டு தான் பிழைப்பே நடத்துகிராகள் – இவை bacteria- இவை அனைத்தும் virus என்று பிரிப்பதால் அந்த வகையறாக்களின் பொது தன்மைகள் விளங்கி ஆராய்ச்சி சுலபமாகிறது – இந்த வித்து என்னும் முறையில் தான் marketing Management நடை போட்டுக்கொண்டு இருக்கின்றது – Segmentation, Targeting, Positioning இவை enumeration செய்த பிறகே எளிதாகிறது – ஒருவர் தமிழ் ஹிந்து வாசிப்பவர் என்று தெரிந்துவிட்டால் அதானால் அந்த நபரை பற்றி சில குணாதிசயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது (தமிழ் தெரிந்தவர் என்றாவது அறிவு ஏற்படும் அல்லவா) – இது தான் இந்த வித்தின் பயன்

    புதிய அறிவு என்று ஒன்று கிடையாது – எல்லாம் அறியக்கூடியதே – நமக்கு தெரியாமல் இருந்தது – அதை பழைய அறிவை வைத்து தான் தெரிந்து கொள்ள முடியும்

    கடைசியாக – நமக்குள் கருத்து வேறுபாடு இருந்தால் அதை constructive critisicsm கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் – இல்லாவிடில் நமக்கு தான் நஷ்டம் – நமக்கு தான் இழப்பு – என்னைவிட உங்களுக்கு எல்லாம் பல படி பொறுப்புகள் அதிகம் அதனாலேயே constructive critisicsm ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்று நம்புகிறேன்

  21. உமாசங்கர் அவர்களே

    //
    ஹிந்து மதத்தை வேதங்களில் அடக்குவது என்பது தவறான போக்கு என்று நான் முன்னமே கூறி வந்திருக்கிறேன்.
    //
    உண்மை தான் – இது தெரிந்த ஒன்றே – நீங்கள் வேதம் என்று சொல்ல வந்தீர்கள, வேதாந்தம் என்று சொல்ல வந்தீர்கள என்று தெரியவில்லை

    ஆஸ்திக தரிசனங்களே ஆறும் வேதத்தை பிரமானாக ஏற்றவையே – இந்த ஆறும் கலந்த கலவை தான் இன்றைக்கு உள்ளு ஹிந்து மதம்

    இந்த ஆறில் நில்லாமல் தனியாக உள்ளது ஆகம மதம் – உதாரணத்திற்கு வேத மதம் என்பதில் விக்ரக வழிபாடு எங்கு தேடினாலும் கிடைக்காது – ஆகமத்தில் தான் அது இருக்கிறது – ஆகமும் வேதமும் சேர்ந்தது ஆகம மதத்தினர் வேத மந்த்ரங்களை கோவில்களில் பயன் படுத்திய பிறகே

    ஆனால் இன்று ஹிந்துக்கள் [எந்த வேதாந்த மார்கமாயினும் – அத்வைத, விஷ்டத்வைத்த, த்வைத, பேத-அபேத, சுத்த அத்வைத] வேதத்தை அடிப்படையாக கொண்டவரே – சுத்த ஆகம வாதிகள் வெகு வெகு சிலரே – இவர்கள் மட்டுமே வேதத்தோடு சற்று முரண்பாடு கொண்டவர்கள்

  22. அன்புள்ள சாரங்,

    // இன்றைக்கு விஞானிகள் இத்தகைய enumeration என்பதை வைத்துக்கொண்டு தான் பிழைப்பே நடத்துகிராகள் – இவை bacteria- இவை அனைத்தும் virus என்று பிரிப்பதால் அந்த வகையறாக்களின் பொது தன்மைகள் விளங்கி ஆராய்ச்சி சுலபமாகிறது //

    உண்மை தான். ஆனால் அறிவியல் “வித்து” என்று சொல்லிவிட்டு பிரமித்து அங்கேயே நின்றுவிடுவதில்லை.. ஒவ்வொரு பௌதிகப் பொருளையும் பகுத்து ஆய்கிறது.. அந்த வகைப்படுத்தல்களின் ஒவ்வொரு அலகும் மேன்மேலும் விரிவாக, பரிசோதனைபூர்வமாக ஆராயப் பட்டு, பல பரிசோதனைகள் செய்யப் பட்டு, அவற்றிலிருந்து தொழில்நுட்பங்களும் உருவாகின்றன. இது “பகுப்பு” முறை.. இதற்கு எதிர்மறையாக, ”தொகுப்பு” முறையில் எல்லா பௌதிகப் பொருள்களுக்கும் பொருந்தும் unified thoery உண்டா என்றும் அறிவியலாளர் தேடிக் கொண்டிருக்கின்றனர் (theory of everything).

    இந்து தத்துவம், மெய்ஞானம் என்பவை வேறு ஒரு தளத்தில் வருபவை. அவற்றின் உன்னதத்தை, மதிப்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை.. ஆனால் அவற்றின் அறிதல்முறை, உபகரணங்கள், பார்வைகள் வேறு.. நவீன அறிவியலுடன் அவை கொள்ளூம் உறவு 40000 feet என்று சொல்லக் கூடிய மேல் தளத்தில் இருக்கிறது – அங்கு அவை அதிஅற்புதமாக நவீன அறிவியலின் பல கருத்துக்களுடன் ஒன்றுபடுகின்றன. (ஆபிரகாமிய மதங்கள் அறிவியலுடன் ஒன்றுபடுவதே இல்லை -முற்றாகவே முரண்படுகின்றன). ஆனால் அடுத்தடுத்த தளங்களில், the devil is in the details என்று சொல்கிறார்களே, அங்கு அவை பிரிந்து செல்கின்றன, சென்றாக வேண்டும்.. அங்கு தத்துவம் (அறிவியல் போல) பகுப்புக்கோ, தொகுப்புக்கோ செல்வதில்லை, அக உணர்வாக, உள்முகமாக, அனுபூதியாகப் பரிணமிக்கிறது..

    உதாரணமாக, வைசேஷிக தர்சனத்தில் அணு பற்றிய சித்தாந்தம் உள்ளது.. அது சித்தாந்த ரீதியாக 18ஆம் நூற்றாண்டு அறிவியலின் அணுக் கொள்கை அடிப்படைகளுக்கு மிக அருகில் வருகிறது (ஐரோப்பிய அறிவியலுக்குப் பல நூற்றாண்டுகள் முன்பே வைசேஷிகம் இது பற்றிப் பேசியிருந்தது – அது நமக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயம், சந்தேகமில்லை). ஆனால் 19,20ஆம் நூற்றாண்டுகளில் அணு விஞ்ஞானம் நூறு மடங்கு வளர்ந்து புதிய எல்லைகளைத் தொட்டு விட்டது.. எனவே *இன்றைய* அணு விஞ்ஞானத்துடன் வைசேஷிக சித்தாந்தத்தை ஒப்பிட்டு இதெல்லாம் வேதத்தில் இருக்கிறது என்று சொன்னால் அது பின்விளைவுகளைக் கணக்கில் கொண்டு முன்நிகழ்வுகளை சித்தரிக்கும் திட்டமிட்ட ஊகம். அது தான் சரியானதல்ல என்கிறேன்.

    // கடைசியாக – நமக்குள் கருத்து வேறுபாடு இருந்தால் அதை constructive critisicsm கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் – இல்லாவிடில் நமக்கு தான் நஷ்டம் – நமக்கு தான் இழப்பு //

    கண்டிப்பாக உங்களுடன் முழுவதும் உடன்படுகிறேன்.. criticism என்பதே கூடாது என்ற பார்வை சரியல்ல.

    இங்கு வைக்கப் படுவது எல்லாம் ஆக்கபூர்வமான விமர்சனங்களே. ஒருசில இடங்களில் சொற்கள் கடுமையாக இருந்திருக்கலாம் – ஆனால் மோதல் *கருத்துக்களுடன்* தானே தவிர அதை எழுதியவருடனான தனிப்பட்ட மோதல் அல்ல. இதை கட்டுரை ஆசிரியர் உட்பட அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

  23. சாரங் அவர்களே

    ஹிந்து மதத்தை வேதம் வேதாந்தம் ஆகமம் எதிலும் அடக்க முயலுதல் தவறான போக்கு என்பதே எனது கருத்து. கட்டுரை ஆசிரியர் வேதமதம் வேதமதம் என்று கூறுவதன் மூலமும், பரவலான கருத்துக்களின் மூலமும் வேதத்துக்குள் அடக்க முயல்வதால் அது பற்றி மட்டும் கூறினேன்.

    இதைப்போலவே மெய்ஞானத்தை விஞ்ஞானம் சார்ந்தது என்று நிறுவ முயல்வதும் ஆபத்தான முயற்சியே.

  24. Quotes from “A Short History of Nearly Everything” by Bill Bryson:

    • “Every living thing is an elaboration of a single original plan. As humans we are mere increments – each of us a musty archive of adjustments, adaptations, modifications, and providential tinkering stretching back 3.8 billion years. Remarkably, we are even quite closely related to fruit and vegetables. About half the chemical actions that take place in banana are fundamentally the same as the chemical functions that take place in you.”

    • “Wherever you go in the world, whatever animal, plant, bug or blob you look at, if it is alive, it will be the same dictionary and know the same code. All life is one.”

    • “It cannot be said too often: all life is one. That is, and I suspect will forever to be, the most profound true statement there is.”

    இப்படி ஆராய்ச்சியின் மூலம் சொல்லப்பட்டிருப்பதால், அரவிந்தன் நீலகண்டனின் கூற்றில் உள்ள பௌதிக ரீதியாக “எல்லாம் ஒன்றே” என்பது சரிதானே?

  25. திரு சாரங் மற்றும் ஜெயஸ்ரீ அவர்களே,
    //ஆனால் இன்று ஹிந்துக்கள் [எந்த வேதாந்த மார்கமாயினும் – அத்வைத, விஷ்டத்வைத்த, த்வைத, பேத-அபேத, சுத்த அத்வைத] வேதத்தை அடிப்படையாக கொண்டவரே – சுத்த ஆகம வாதிகள் வெகு வெகு சிலரே – இவர்கள் மட்டுமே வேதத்தோடு சற்று முரண்பாடு கொண்டவர்கள்//
    நீங்கள் கூறுவதுபோல் இன்று ஹிந்துக்கள் வேதத்தை அடிப்படையாக கொண்டவர்கள் சிலரே. நான் அறிந்தவரை தென்னாட்டில் உள்ளவர்கள் சுத்த ஆகம வாதிகள்.
    நம்முடைய மதம் (தருமம்) அதன் தத்துவ கொள்கைளில் தான் பெருமை கொள்கின்றது. நம்முடைய மதக்கொள்கையினால் தான் அது அழியாமல் நிலைத்து நிற்கின்றது. வேதம் என்பது இந்து தருமத்தின் ஓர் அங்கம். வேதத்தை ஏற்காத பலரும் அதன் தத்துவ கொள்கைகளை ஏற்கின்றனர். தமிழ் நாட்டில் பல சைவர்கள் வேதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் ஆகம முறைப்படி தினமும் வழிபாடு செய்கின்றனர்.
    என்னுடைய கருது என்னவென்றால், நமது தருமத்தை வேதத்திற்குள் அடக்கி வேண்டாம், அது வேதத்திற்கும் அப்பாற்பட்டது. வேதத்தையும் அறிவியலையும் தொடர்பு படுத்த வேண்டாம். அது ஆபத்தில் முடியும்.
    வேதத்தில் உள்ளவை பல அடிப்படை அறிவியல் சார்ந்தது.

  26. அன்புள்ள சோமசுந்தரம் அவர்களுக்கு,

    // நீங்கள் கூறுவதுபோல் இன்று ஹிந்துக்கள் வேதத்தை அடிப்படையாக கொண்டவர்கள் சிலரே. நான் அறிந்தவரை தென்னாட்டில் உள்ளவர்கள் சுத்த ஆகம வாதிகள். //

    இந்து மதத்தின் அனைத்து துறைகளும் – சைவம்/வைஷ்ணவம், அத்வைதம்/த்வைதம், தத்துவம்/சமயம் அனைத்தும் வேதத்திலிருந்து கிளைத்தவையே. காலத்தால் மிக முற்பட்ட வேத சம்ஹிதைகளில் தான் இந்தியத் துணைக்கண்டத்தின் சிந்தனை மரபே தொடங்குகிறது. ஒரு நதி மலையிலிருந்து உற்பத்தியாகி பின் பல கிளைகளாகப் பிரிந்து செல்வதுடன் இதனை ஒப்பிடலாம்.

    அதனால் “வேதத்தை அடிப்படையாக கொள்ளாத” இந்துமதம் என்று ஒன்று இல்லை. அது ஒரு புரிதல் பிழை மட்டுமே. நான்கு வேதங்கள், ஆறு தரிசனங்கள் (சாங்கியம், யோகம்….), ஆறு சமயங்கள் (சைவம், வைஷ்ணவம்.. ) இந்த மூன்றும் இணைந்தது தான் இந்துமதம்.

    // வேதம் என்பது இந்து தருமத்தின் ஓர் அங்கம். வேதத்தை ஏற்காத பலரும் அதன் தத்துவ கொள்கைகளை ஏற்கின்றனர். தமிழ் நாட்டில் பல சைவர்கள் வேதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் ஆகம முறைப்படி தினமும் வழிபாடு செய்கின்றனர். //

    வேதங்களும், ஆகமங்களும் முரணானவை அல்ல. அவை சமயத்தின் பரிணாம வளர்ச்சியின் அங்கங்கள் மட்டுமே.. இது பற்றி விரிவாக எனது கீழ்க்கண்ட கட்டுரையில் விளக்கியுள்ளேன். இக்கட்டுரையின் நான்கு பகுதிகளையும் தாங்கள் படிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் – தங்களுக்கு அவை கண்டிப்பாக ஆர்வமூட்டுபவையாக இருக்கும்.

    வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்:
    https://jataayu.blogspot.com/2008/06/4.html

    இதில் பகுதி-2ல் உள்ள ஆகமங்கள் பற்றிய கேள்வி-பதில்கள் நான் மேலே கூறியதற்கான விஷயம் பற்றீ விளக்கங்கள் உள்ளன.

  27. அன்புள்ள அம்மா ஜெயஸ்ரீ அவர்களுக்கு,

    நான் Dark Matter யை சிவனாகவும், Dark Energy யை சக்தியாகவும் நினைத்து கொண்டு இருக்கிறேன்.இது சரியா? Parellel universe என்பதனை ஈரேழு பதினாலு உலகம் என்று எண்ணுகிறேன்.இது சரியாகுமா. நம் வேதங்கள் இந்த மண்ணில் மட்டும் தான் மனிதர்கள் மற்றும் உள்ள அநேக உயிரினங்கள் தோன்றும் என்று சொல்லியதை இந்த universe -இல் என்று எடுத்து கொள்கிறேன்.இது சரியாக இருக்குமா!?

    stephan hawking சொல்லியதை போலவே எண்கள் தான் என்னையும் கிறுக்கு பிடிக்க வைத்துள்ளது. அதனால தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ள நம் பால்வெளி spiral galaxy – யிலும் மற்றும் உள்ள ஆயிர கோடிகணக்கான galaxy களிலும் மனிதர்களை போலவும்,மனிதர்களை விட தாழ்ந்தும்,மனிதர்களை விட உயர்ந்தும் பிறவிகள் இருக்க வாய்ப்பு அதிகமாகவே உணருகிறேன். இது சரியா இருக்குமா?

    இந்த michio kaku வேற ரொம்பவே குழப்பி விட்டுட்டார். Dark matter உம் matter உம் சேர்ந்தது தான் இங்குள்ள உயரினங்கள் எல்லாம்-நு. இந்த நேரத்துல நான் dark matter தான் ஆத்மாவா இருக்குமோன்னு குழம்பி கெடக்குறேன். தயவு செய்து கொஞ்ச விளக்கம் தாங்களேன்.நான் இதுக்கு ரொம்ப புதுசு.

    அன்புடன்,
    பிரதீப் பெருமாள்

  28. இதுக்கும் இந்த கட்டுரைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக நினைக்கிறன்!

    Oppenheimer (First Atomic Bomb Designer ) and the Bhagavad-Gita !

    On the day of the first atomic test, Oppenheimer fully realized the enormity of what he had just accomplished. As he stood watching the mushroom cloud, a passage from the Bhagavad Gita flashed into his mind : If the radiance of a thousand suns were to burst into the sky, that would be like the splendour of the Mighty One ……

    Yet, when the sinister and gigantic cloud rose up in the far distance over Point Zero, he was reminded of another line from the same source : I am become Death, the shatterer of worlds.

    Oppenheimer recalling the moment on the first atomic explosion as follows ,

    “We waited until the blast had passed, walked out of the shelter and then it was extremely solemn. We knew the world would not be the same. A few people laughed, a few people cried. Most people were silent. I remembered the line from the Hindu scripture, the Bhagavad-Gita: Vishnu is trying to persuade the Prince [Arjuna] that he should do his duty and to impress him he takes on his multi-armed form and says, “Now I am become Death, the destroyer of worlds.” I suppose we all thought that, one way or another.”

  29. I believe when people asked Oppenheimer whether his was the first of atomic bomb to be exploded, he apparently had said,” yes, in MODERN times”
    Did he call his bomb Sakthi? Someone can enlighten me on this.

  30. திரு ஜடாயு அவர்களுக்கு,
    //அதனால் “வேதத்தை அடிப்படையாக கொள்ளாத” இந்துமதம் என்று ஒன்று இல்லை. //
    தயவு செய்து இந்துமதம் வேதத்திற்குள் அடக்காதிர்கள், அது வேதத்திற்கு அப்பாற்பட்டது. வேதத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களும் உண்மையான சமய வாதிகளும் இருந்துள்ளனர்/ இருக்கின்றனர்.
    இந்த கட்டுரைக்கும் இந்த விவாதத்திற்கும் சற்றும் பொருத்தம் இல்லை. எது என் கருது.

  31. சோமசுந்தரம் அவர்களே

    வேதத்தை ஆகம வாதிகளும் ஒத்துக்கொண்டு தான் உள்ளனர் – வேதத்தை ஒத்துக்கொலாதவர்களை அந்தக்காலத்தில் நாஸ்திகர் என்று அழைத்தனர் (அதாவது வேதத்தை நம்பாதவன் – not essentially an atheist) – புத்த, சார்வாக, ஜைன மதங்கள் நாஸ்திக தர்சனங்கள் ஆகின – ஜைனர்கள் கடவுளை (தேவா) நம்புபவர்கள்

    இந்து மதம் வேதத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்லி ஹிந்து மதத்தையும், வேதத்தையும் ஒரே சமயத்தில் குறைத்து கூற வேண்டாம் – வெறும் heresay மட்டும் வைத்துக்கொண்டு பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வதற்கு ஆதாரங்கள் உள்ளனவா – மேலும் ஒரு விஷயம் இருக்கும் அத்தனை ஆகமங்களும் வேத மதம் கூறும் கடவுள்களை வழிபடவே உள்ளன – எது முதலில் வந்தது ஆகமா வேதமா என்பதெல்லாம் நன்கு தீர்க்கப்பட்ட பிரச்சனை.

  32. ஒப்பென்ஹெய்மேர் சக்தி என்று அன்று சொல்லி இருந்தால், அது ஒரு சக்தியின் பரிமாணம் மட்டுமே, சக்தியின் பரிமாணங்கள் பல வகை பட்டுள்ளதாக நாம் அறிந்துள்ளதால் அன்றைக்கு அவர் அதை சக்தி என்று சொல்லி இருப்பின் ஏற்று கொள்ளவேண்டியது தான். ஆனால் அதுவே இறுதியானது என்று ஏற்று கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

    இன்று பிரபஞ்சத்தில் உள்ள சூரியன்களில் ஏராளமானவை இறந்தும் மீண்டும் பிறக்கும் வண்ணமுமாக இருப்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோம்.

    இறக்கும் வழிகள் வேறு வேறு முறைகளாக இருப்பதையும் அறிந்துளோம். ஆனால் அனைத்து சூரியன்களும் வாழும் போது ஹைட்ரஜன் அணுக்களின் பினைவும் ஹீலியம் அணுக்களின் முறிவும் (தப்பா சொன்னா,மன்னிக்கணும்) என்றே அதன் வாழ்வை நடத்துகிறது.இதுவும் சக்தியின் ஒரு வகையாக நாம் அறியலாம்.

    இறக்கும் தருவாயில் அவைகள் வெடித்து பிரபஞ்சத்தின் வாழ்வுக்கு தேவையான தாதுக்களை வெடிப்பில் இருந்து உற்பத்தி செய்கிறது. இந்த வெடிப்புகள் அந்த சூரியனின் எரிபொருள் திர்ந்து போவதாலேயே நடப்பதாகவும் அறிந்து கொண்டோம்.

    சிலவை வெடிப்பதர்க்கு முன்னால் கோரில் உள்ள காந்த சக்தியின் காரணமாக வெளி நோக்கி எரிந்து எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல உள்நோக்கி சுருங்க ஆரம்பிக்கிறது அப்போது அணுக்களின் ப்ரோடான்களுடன் எலக்ட்ரோன்கள் சொருகி நியூட்ரான் சூரியன்களாக கொஞ்ச நேரம் சுற்றி பின்னர் ஒரு பெருவெடிப்பு உண்டாவதாக கண்டறிந்து உள்ளார்கள்.நியூட்ரான் சூரியன் என்றால்,இது மாதிரி அந்த சூரியன் உருவாவதற்கு முன்னால் நம்முடைய சூரியன் போல பத்து மடங்கு பெரியதாக இருந்து நியூட்ரான் சூரியனாக மாறும் போது நம்ம சென்னை சைசுக்கு ஆவது என்று கொள்ளலாம். அப்போது அதன் அடர்த்தி என்னவாக இருக்கும் என்று எண்ணி கொள்ளவும். நியூட்ரான் சூரியனில் இருந்து ஒரு டி ஸ்பூன் மேட்டரை எடுத்தால் அது பல லட்சம் கிலோவாக இருக்கும் என்று கணக்கிட்டு உள்ளார்கள். அது மாதிரியான வெடிப்பின் போது தான் தங்கம்,வைரம் முதலான விலை உயர்ந்த உலோகங்களும் ரத்தினங்களும் உருவாவதாக அறிந்து கொண்டுள்ளோம். இதுவும் சக்தியின் ஒரு வகையாக நாம் அறியலாம்.

    சித்தர்கள் சக்தியின் பரிமாணங்களை உருவமாகவும்,அருவமாகவும்,உருவ அருவமாகவும்,அருவ உருவமாகவும்,இன்னும் இரண்டு உள்ளது என்று நினைக்கிறேன் (நான் மறந்து விட்டேன்) பிரித்து கண்பித்து உள்ளார்கள். எனவே பிசிகளாக விஞ்சானிகள் அவற்றை நிறுவும் பொழுதும் இந்த வகைகளுக்குலேயே அது அடங்குகிறது என்று நாம் நம்பலாம்.

  33. சாரங் அவர்களே

    /// ஜைனர்கள் கடவுளை (தேவா) நம்புபவர்கள்///

    இல்லை. ஜைனர்கள் தேவா என்று சொல்வதாகத் தெரிய வில்லை. அவர்கள் தேவதா என்ற பதத்தையே பயன்படுத்துகிறார்கள். என்னிடம் திகம்பர ஜைன முனிவர் ஒருவர் சொல்லிக் கொடுத்தபடி, அவர்கள் கர்ம பலனில் முழு நம்பிக்கை வைக்கிறார்கள் இறைவன் அல்லது கடவுள் நம்பிக்கை இல்லை. தீர்த்தங்கரர்கள்தான் அவர்களுக்கு வழிபாட்டில் உள்ளவர்கள்.
    ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் ஒரு தேவதா (காவலில் இருக்கும் நமது பைரவர் போல) உண்டு. தேவதா உபாசனை செய்தால் வேண்டும் உலகபூர்வமான வரங்களைப் பெறலாம். ஆனால் தேவதா உபாசனை செய்வது கூடாது.

    வணங்கும் மந்திரமான நவகர் மந்திரம் மூலம் அறிஹந்த் எனப்படும் ஜீவன்முக்தர்கள், சித்தர்கள், ஆச்சாரியார்கள், உபாத்தியாயர்கள் ஆகியோரைத்தான் வணங்குகிறார்கள்.

    அவர்களது முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதர் எனப்படும் ரிஷபநாதர். மற்றுமொரு ஜைன அறிஞர் எனக்குச் சொல்லியபடி இந்த ஆதிநாதர் நமது சிவபிரானே. அவரது அனுமானம், ஆதிசங்கரருக்கு ஜைனர்களுடன் இருந்த முக்கிய வேறுபாடு சிவபிரானை முதல் தீர்த்தங்கரர் என்பதுவும், விஷ்ணு முதலாய கடவுளர்களை தேவதைகளாக ஜைனர்கள் கருதுவதுதான். இதுபோக பூர்வமீமாம்சக் கருத்துக்கள் படி கர்ம பலனே உயிர்களின் வாழ்வை நிர்ணயிக்கிறது. இறைச் சக்தி முக்கிரியைகளையோ ஐங்கிரியைகளையோ செய்வதில்லை. இவையும் ஆதிசங்கரருக்கு ஏற்பில்லை. இவை அந்த அறிஞரின் கூற்று.

    எனவேதான், வள்ளுவரின் ஆதிபகவன் என்பதையும், வேண்டுதல் வேண்டாமை இலானடி முதலான குரல்களையும் சுட்டி திருக்குறள் ஜைனக் கருத்துக்களை உள்ளடக்கியது என்று வாதிடுகிறார்கள்.

    ///இந்து மதம் வேதத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்லி ஹிந்து
    மதத்தையும், வேதத்தையும் ஒரே சமயத்தில் குறைத்து கூற வேண்டாம் ///

    இந்து மதம் வேதங்களுக்கு அப்பாற்பட்டது என்று சொல்வது இவற்றில் எதையும் குறை சொல்வதும் ஆகாது. இந்து மதம் வேதம், வேதாந்தம், ஆகமம் அனைத்துக்கும் அப்பாற்பட்டது என்பதே உண்மை. இறைவனையும் இறைவனைக் காணும் வழியைக் காட்டும் நம் மதத்தையும் எதற்குள்ளும் அடைக்க முடியாது என்பதே உண்மை.

    ///நீங்கள் சொல்வதற்கு ஆதாரங்கள் உள்ளனவா – மேலும் ஒரு விஷயம் இருக்கும் அத்தனை ஆகமங்களும் வேத மதம் கூறும் கடவுள்களை வழிபடவே உள்ளன ///
    எண்ணில்லாத ஆதாரங்கள் உள்ளன. அவற்றைக் காட்ட இங்கே இடம் போதாது. இது இடமும் அல்ல.

  34. உமாசங்கர் அவர்களே

    ஜைனர்கள் கடவுள் இருப்பதை மறுப்ப தில்லை – அவர்கள் முக்திக்கு கடவுள் தேவை இல்லை என்று தான் சொல்கிறார்கள் –
    நீங்கள் சொல்லும் பிற விஷயங்களுள் நான் போக விரும்பவில்லை – அது உங்களுக்கு மட்டுமே தெரிந்துள்ள விஷயமாக இருக்கிறது

    //
    இந்து மதம் வேதங்களுக்கு அப்பாற்பட்டது என்று சொல்வது இவற்றில் எதையும் குறை சொல்வதும் ஆகாது. இந்து மதம் வேதம், வேதாந்தம், ஆகமம் அனைத்துக்கும் அப்பாற்பட்டது என்பதே உண்மை. இறைவனையும் இறைவனைக் காணும் வழியைக் காட்டும் நம் மதத்தையும் எதற்குள்ளும் அடைக்க முடியாது என்பதே உண்மை.
    //

    ஆமாம் உண்மை கடுவுளை காண கிறிஸ்தவமும் வழி தரும்

    ஆதாரங்களாக – திருமறையையும், ஆகமங்களையும் காட்டக் கூடாது – ஆகமம் வேதத்தை விட வேறு என்பது உண்மை – ஆனால் அது வழிபடும் கடவுள்களாலும் , ஓதும் மந்திரத்தினாலும் ஒன்று சேர்ந்து விடுகிறது
    இதற்கான பல நாடு நிலை ஆராய்சிகள் உள்ளன

    இதை இத்துடன் விடுகிறேன் – வேறெங்கேனும் தொடரலாம்

  35. சாரங் அவர்களே

    ///ஆதாரங்களாக – திருமறையையும், ஆகமங்களையும் காட்டக் கூடாது – ஆகமம் வேதத்தை விட வேறு என்பது உண்மை – ஆனால் அது வழிபடும் கடவுள்களாலும் , ஓதும் மந்திரத்தினாலும் ஒன்று சேர்ந்து விடுகிறது
    இதற்கான பல நாடு நிலை ஆராய்சிகள் உள்ளன///

    நீங்கள் ஒரு பாரபட்ச நோக்கில் எனது மறுமொழிகளை அணுகுகிறீர்கள் என்பது புரிகிறது. இந்தகட்டுரையில் எனது மறுமொழிகளில் நான் வேதங்களுக்குள் இந்து மதத்தை அடக்கக் கூடாது என்று மட்டுமே சொல்லிவந்த நிலையிலும், மீண்டும் இப்போது எண்ணில்லா ஆதாரங்கள் உள்ளன என்று தங்கள் கேள்விக்குச் சொன்ன நிலையிலும் நீங்களாக இவ்வாறு ஆகமம் திருமுறை என்று பேச வேண்டிய காரணம் அந்த பாரபட்சம்தான். இதை bias என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். மனதைத் தெளிவாக வைத்து யார் சொல்கிறார்கள் என்று பார்க்காமல் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால் இந்நிலை எழாது. வேறு வழி இல்லாமல் இதை எழுதுகிறேன். பொறுத்தருள்க.

    வேதம் திருமுறை ஆகமம் இவை எல்லாம் தாண்டிய ஆதாரங்கள் எண்ணில்லாதவை உள்ளன. நேரில் சந்திக்கும் வாய்ப்பிருந்தால் விளக்கலாம். இங்கே அவற்றை சொல்ல எனக்கு விருப்பமில்லை.

  36. அன்பு நண்பர்களே,
    வேதம் பற்றிய கருத்துக்கள், வேதம் தோன்றிய காலம், அது தோன்றிய விதம் மற்றும் வேதமும் சைவ சமயமும் போன்றவைகள் பல நூறு ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறன. அது முடிவில்லாத விவாதம் (அதுவும் கூட இறைவனின் சித்தமாக இருக்கும்). இந்த கட்டுரையின் கீழ் விவாதிக்க வேண்டியதில்லை.
    வேதத்தை பற்றிய கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். மற்று ஒரு சமயத்தில் நம் கருத்தை பகிர்ந்து கொள்ளலாம். நன்றி .
    சோமசுந்தரம்

  37. அம்மா ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் கட்டுரை நமது சிந்தனையை தூண்டும் விதமாக உள்ளது. உண்மை என்ன என்பது மனித இனத்தின் தேடுதலாகவே இன்றுவரை உள்ளது. “கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் ” – என்ற முதுமொழி சரி என்ற எண்ணமே தோன்றுகிறது.

    ஆனால் வேத அறிவும், உபநிடத அறிவும் நம் அறிவினை தூண்டி பிரகாசிக்க செய்யும் என்பது சத்தியம்.

  38. //அந்த அடிப்படை முதல் படைப்பு எப்படி வந்தது என்பதை வேத மதம் சொல்கிறது. அதேபோல முதல் செயல் (கர்மா) எப்படி ஆரம்பமானது என்பதும் பிரம்ம சூத்திரத்தில் ஆராயப்படுகிறது. //

    Could you please elaborate the above? My understanding is that since the creation is in cycles we cannot know the cause of first karma or first creation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *