நாகர்கோவிலில் பா.ஜ.க பிரம்மாண்ட போராட்டம்: நேரடி ரிப்போர்ட்

bjp_nagerkovil_meeting_july_2010_2கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதை போல் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை மாதம் முழுவதும் தமிழகத்தில் பா.ஜ.க. போராட்டம் நடத்தி வருகிறது. இது குறித்த வறுமைக்கும் உண்டோ மதம்? கட்டுரையை வாசகர்கள் படித்திருக்கலாம்.

இதன் முக்கிய நிகழ்வாக, குமரி மாவட்ட பா.ஜ. சார்பில் ஜூலை-25 ஞாயிறு மாலை நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அலைகடலெனத் திரண்டு வந்து இந்த ஆர்ப்பாட்டதிற்கு ஆதரவளித்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். நகர தலைவர் ராஜன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து மாநில பா.ஜ. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இந்து முன்னணி மாநில நிறுவனர் ராம கோபாலன், அகில இந்திய பா.ஜ. செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், பா.ஜ. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநில துணைத்தலைவர்கள் எச். ராஜா, தமிழிசை சவுந்தர்ராஜன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சுகுமாறன் நம்பியார், அகில இந்திய இணை பொது செயலாளர் சதீஷ், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர்.

வீடியோ: திரு. எச்.ராஜா – அனல் பறக்கும் உரை:

மாலை 3.45 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மதியம் 2 மணியில் இருந்தே தொண்டர்களும், பொதுமக்களும் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல மக்களின் வருகை அதிகரித்தது. ஆர்ப்பாட்டம் நடந்த பாலமோர் ரோடு முழுவதும் பா.ஜ.க தொண்டர்களும், பொதுமக்களும் நிரம்பி இருந்தனர். அண்ணா ஸ்டேடியத்தின் எதிரில் சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டு அதில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அமர்ந்து இருந்தனர். அண்ணா ஸ்டேடியத்தில் இருந்து வலது புறம் வடசேரி அண்ணா சிலை வரையிலும்,  இடதுபுறம் மணிமேடையை தாண்டியும் மக்கள் குவிந்திருந்தனர்.

இட நெருக்கடி காரண மாக அந்த பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்களிலும், தியேட்டர் கட்டிடங்களிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்து இருந்தனர். ஆர்ப்பாட்டம் நடந்த பாலமோர் ரோட்டில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் மக்கள் தரையில் அமர்ந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் சுமார் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வெளி மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தனர்.

மாலை 3.45 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டம், மாலை 5.45 மணிக்கு முடிவடைந்தது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக நாகர்கோவில் நகரமே சுமார் 5 மணி நேரம் ஸ்தம்பித்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை பொறுத்தவரையில் சில விசயங்கள் சொல்ல வேண்டும். சாதாரண மக்கள் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். நான் நின்று கொண்டிருக்கும் போது, பக்கத்திலிருந்தவர் அவர் சொந்தக்காரர் ஒருவரைக் கூப்பிட்டுப் பேசினார் – “அப்பா வரலியா?” என்றார். ஏதோ கல்யாண வீட்டு விழாவுக்கு வரலியா என்பது போல. அவர் ஒரு பள்ளிக்கூட தலைமையாசிரியர். எந்த அரசியல் போராட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர்.

bjp_nagerkovil_meeting_july_2010_1

புகைப்படம்: நன்றி – தினமலர்

இந்த ஃபோட்டோ வை நீங்கள் பார்த்தாலே தெரியும் – வந்திருந்தவர்களில் சரி பாதி பெண்கள். அதுவும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். பலர் சொந்த செலவில் பஸ்களில் வந்திருந்தார்கள் என்று தெரிந்தவர் ஒருவர் சொன்னார்.  அவர்  இரண்டு நாட்கள் முன்பு வழக்கமான ஆட்டோவில் செல்லும்போது ஆட்டோ டிரைவர் “தவறாம வந்திருங்க சார். இது நம்ம குழந்தைகளின் உரிமைக்காக” என்று அழைத்தாராம். ஆர்ப்பாட்டம் முடிந்து நான் உணவகத்துக்கு சென்ற போது அங்கிருந்த சர்வர் “கூட்டம் நல்லா இருந்துச்சா? வேலை இருந்ததால வரமுடியல” என்றார்.

இத்தனைக்கும் இது பெரிய அளவிலான மாநாடு கூட அல்ல; வெறும் ஆர்ப்பாட்டம். நடுத்தெருவில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய இப்படி ஹிந்து சமுதாயத்தின் அனைத்து மக்களும் வந்திருந்ததைக் காண முடிந்தது. ஹிந்து விரோத சக்திகளும் இதைப் பார்த்து கதிகலங்கியிருப்பார்கள். விழிப்படைந்திருப்பார்கள்.

வீடியோ: ஆர்ப்பாட்டத்தில் எழுச்சி கோஷங்கள் & திருமதி. தமிழிசை சவுந்திரராஜன் உரை..

நாகர்கோவில் : தமிழகத்தில் காவி கொடி ஆட்சி கொண்டு வந்தே தீருவோம் என நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ. தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.

நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அலைகடலென திரண்ட பா.ஜ.வினர் மத்தியில் மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜ. நடத்தி வரும் ஜூலை போராட்டத்தின் 22வது போராட்டம் இது. இதுவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 21 போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொண்டவர்கள் 86 ஆயிரம் பேர். ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டும் லட்சம் பேர் கலந்துள்ளனர்.

… அதிகாரத்திற்கு வருவதற்கு ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களையும் பெறவேண்டுமானால் சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்பதற்காக இந்துக்கள் வாயில் மண்ணை அள்ளி போடுகிறார்கள்.

… எங்கள் கொள்கையில் வெற்றி பெறுவதற்காக தெருதெருவாக மட்டுமல்ல ஒவ்வொரு பா.ஜ. தொண்டனின் வீடு வீடாகவும் செல்வேன். குமரி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் செல்வேன். ஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வாங்கும் வரை ஓய மாட்டோம்.

முதன்முறையாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. இந்துக்களின் ஓட்டுக்களை வாங்கிதான் ஆட்சியை பிடித்தது. இப்போது ஓட்டு போட்ட இந்துக்களையே தி.மு.க. ஏமாற்றுகிறது. இனிமேலும் தி.மு.க.விற்கு ஓட்டு போட குமரி மாவட்டத்தில் மக்களும், இந்துக்களும் தயாராக இல்லை. தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள். நாங்கள் ஏமாளிகள் இல்லை என்பதை வரும் தேர்தலில் நிரூபிக்க போகிறோம்.

ஏழை இந்து குழந்தைகளை புறக்கணிக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழகத்தில் யுக புரட்சி வருகிறது. அதன் ஒரு அங்கமாக இங்கு அமர்ந்து இருப்பவர்கள் உள்ளனர். கர்நாடகாவில் எடியூரப்பா பா.ஜ. ஆட்சியை கொண்டு வந்ததுபோல் தமிழகத்திலும் காவிக் கொடி ஆட்சி கொண்டு வந்தே தீருவோம். எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு இந்துவும் விலை போக மாட்டோம் என சவால் விடுகிறோம். இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.

தினமலர் செய்தியிலிருந்து

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில துணை தலைவர் ராஜா கூறியதாவது –

சோனியாவின் ஆட்சி ஏற்பட்டவுடன் தான் இது போன்று பிரித்தாளும் சூழ்ச்சி ஏற்பட்டுள்ளது… காங்கிரஸ் தி.மு.க., கூட்டணி ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை நிருபிக்கும் வகையில் மாணவர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்த போராட்டம் குமரியில் எழுச்சியுடன் துவங்கியுள்ளது. ஜூலை போராட்டம் ஜூலை மாதத்துடன் முடிந்து விடுவதில்லை. ஆகஸ்ட், செப்டம்பர். டிசம்பர் தொடர்ந்து மே மாதம் வரை நடைபெறும். அப்போது தி.மு.க., ஆட்சியும் அகலும், தாமரையும் மலரும். இவ்வாறு ராஜா கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியதாவது – இயற்கையே நம்மை வரவேற்கும் விதமாக சூரியனை மறைத்து நமக்கு மாலை நேர தென்றலை தந்து கொண்டு இருக்கிறது. பிரதமர் மன்மோகனுக்கு ஆட்சி செய்ய தெரியாவிட்டால் வாஜ்பாயிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இங்கு எழுச்சியுடன் காணப்படும் கூட்டம் தி.மு.க., அரசை வீழ்த்தும் கூட்டமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் செய்தியிலிருந்து

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹிந்துக்கள் மிகச்சிறிய அளவில்தான் இன்னும் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.  51 அல்லது 52 சதவிகிதம். (சிலர் அதீத நம்பிக்கையுடன் 58 என்கிறார்கள்). எனவே சிறிய அளவில் ஹிந்து ஓட்டுக்கள் பிரிக்கப்பட்டாலும் வெற்றி தோல்விகள் மாற்றப்படலாம்.  ஒவ்வொரு ஹிந்து ஓட்டும் முக்கியம் .

ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் – இந்துக்கள் திரண்டெழும் இந்தப் பொன்மயமான காட்சியே தமிழ்நாட்டுக்கு உத்வேகம் அளிக்கும்.

அதனால் தானோ என்னவோ,  பெரும்பாலான  தமிழ் செய்தித் தாள்களும்,  தொலைக்காட்சி சேனல்களும் இந்த பிரம்மாண்டமான  கூட்டம் பற்றிய செய்திகளை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்து விட்டன!

48 Replies to “நாகர்கோவிலில் பா.ஜ.க பிரம்மாண்ட போராட்டம்: நேரடி ரிப்போர்ட்”

  1. Pingback: Indli.com
  2. நான் நின்று கொண்டிருக்கும் போது, பக்கத்திலிருந்தவர் அவர் சொந்தக்காரர் ஒருவரைக் கூப்பிட்டுப் பேசினார் – “அப்பா வரலியா?” என்றார். ஏதோ கல்யாண வீட்டு விழாவுக்கு வரலியா என்பது போல. அவர் ஒரு பள்ளிக்கூட தலைமையாசிரியர். எந்த அரசியல் போராட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர்.
    Excellent,
    After getting squeezed only our people and BJP were waken very lately.However Better late than now.
    Congrats .wish all the success.Really happy to hear that every one have got own initiative in their minds.
    pon.Radhakrishnan is leading the party in a good way.we should appreciate him . after his arrival only BJP is getting familiar in tamil nadu.
    keep it on,all the best once again.

  3. இத்தாலிய தீய சக்தியையும் தமிழகத்தின் அந்நியனையும் கூண்டோடு விரடியட்டிக்கும் முதல் படி தான் இக்கன்னியாகுமரி போராட்டம் .
    மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வருவதற்கு வாகனங்களை ஆனா வரைக்கும் சுரேஷ் ராஜன் தடுக்க பார்த்திருக்கிறார், மக்கள் ஒற்றுமை முன் காணமல் போனார் . கன்யாகுமரி ஆர்பாடதினை ஏற்பாடு செய்த தலைவர்களுக்கும் , நிர்வாகிகளுக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் ,என் மனம்மார்ந்த பாராடுகளையும் வாழ்த்துக்களையும் உரியதாககுகிறேன்.
    இந்த ஒற்றுமை இன்று போல் என்றும் நிலைக்க வேண்டும் . முன்பை விட விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் ,
    நம் ஒற்றுமையை குலைக்க முன்பைவிட தீவிரமாக முனைவார்கள் .

    H.ராஜா, நமது தலைமுறையின் மிக சிறந்த தலைவர்களுள் ஒருவர்.
    நான் அவரை நமது தமிழக்கத்தின் நரேந்திர மோடி என்று சொன்னால் அது நிச்சயம் மிகைஆகாது (இந்த speechukku ஆகா அல்ல , அவருடைய தெளிவு , நேர்மை மற்றும் நாட்டை பற்றிய சிந்தனை அவற்றுக்க்காகவும் )

    அதர்மம் அழியும் தர்மம் நிச்சியம் வெல்லும் .
    வாழ்க பாரதம்
    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

    [Edited and published]

  4. Hindhu Singaththai sirru narikal aayiram aandukal ematri adimaiyaka vaithirunthana
    seeri ezhunthathu singam.

  5. Tamil Hindu friends: This is fantastic news.

    You need to send this page as an email link to all your friends to make them aware of this struggle against Religious Supremacists like Christians and Muslims. Hindus want to live with everyone in peace without proselytization. But due to feelings of “supremacy” created by their misguided teachers (and their hate filled bibles and korans), our Tamil brothers and sisters are losing their way and becoming violent.

    Remember to call all your friends and family about this.

    The most imporant thing you can do right now is create “awareness” of this diabolical issue that will surely convert millions of poor Hindus straight into hate mongerers.

    Thank you Tamil Hindu for making us all come together. Please keep us updated.

    We need a mailing list created of all Tamil Hindu readers and posted so we can meet and plan future strategies. Someone like Babu or Sarang or Sridharan please do this immediately.

  6. நாகர்கோவிலில் நடைபெற்ற பா.ஜ.க வின் போராட்டத்தைக் பார்த்தேன்.எனக்குத் தெரிந்த வரையில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பெண்கள் கலந்து கொண்ட எந்த ஒரு கூட்டத்தையோ,ஏன் மாநாட்டையோ நான் இதுவரை பார்த்ததில்லை.அனைவரும் உணர்வுப் பூர்வமாகக் கலந்து கொண்ட மாபெரும் போராட்டம்.இது.

  7. எதுர்பார்தது போலவே இந்த போராட்டம் வெற்றி அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி .பாரத மாதாவிற்கு நன்றி.திரு ராமகிருஷ்ணன் கூறியது போலவே அமைச்சர் சுரேஷ் ராஜன் ஒவ்வொரு பஞ்சாயதிர்க்கும் பத்தாயிரம் ரூபாய் தருவதாகவும் யாரும் போகவேண்டாம் என கேட்டுகொண்டார் .அது போலவே கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் வாகனங்கள் தர மறுத்து விட்டனர் ,அருகில் இருக்கும் கேரளாவிலிருந்து வேன் கொண்டுவரப்பட்டது .இந்த போராட்டத்தின் வெற்றிக்கு காரணம் கள பணி.சிறந்த முறையில் இந்த போரட்டத்தின் சாராம்சம் மக்களை சென்று அடைந்தது எஸ் எம் எஸ் மூலம் தகவல்கள் பரிமாறபட்டிருன்தது.இது போல நாம் நமது கோரிக்கைகளுக்காக போராடினால் வெற்றி நிச்சயம் .

    என்னுடைய சந்தேகம் இந்த சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்த பொது பா ஜ க எதிர்கட்சியாக என்ன செய்துகொண்டிருந்தது .இதற்கான போராட்டம் தேசிய அளவில் ஏன் நடத்தப்படவில்லை .ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்த பொழுது அவரது ஊரான மேலேக்ரிஷ்ணன்புதுரில் சர்ச் கட்டப்பட்டது அவர் ஏன் அதை தடுக்க வில்லை .நாகர்கோயிலில் உள்ள பெருமால்குளத்தை கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள் அதை தடுக்க நடவடிக்கை இல்லை இப்பொழுது அங்கு சர்ச் மற்றும் பாலிடேச்னிக் கட்டப்பட்டு உள்ளது இதற்க்கான தீர்மானம் பா ஜ க நகராட்சி பொறுப்பில் இருக்கும் பொழுது கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள் .தாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது வசதியாக ஹிந்துக்களை மறந்து விட்டு இப்பொழுது கூப்பாடு போட்டு என்ன பிரயோஜனம் .

  8. கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஆர்,எஸ் ,எஸ் சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன்

    ஜெய் ஹிந்த்

    வே .சு .முகுந்தவேல் ..
    கன்னியாகுமரி மாவட்டம்
    கருக்கன் குழி

  9. தமிழ் இந்துவின் அரசியல் கலப்பில்லாத இந்த உரிமைப் போராட்டம் வெல்க!

  10. பாரதீய ஜனதாவின் இந்த போராட்டத்தை சர்ச்சின் சம்பளப் பட்டியலில் இருக்கும் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன.
    ஆனால் ஒவ்வொரு ஹிந்துவும் ஒரு செய்தித்தாளாக ,ரேடியோவாக, தொலைக்காட்சியாக இருந்து இதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
    சுதந்திரப் போராட்ட காலத்தில் என்ன டி வீயா இருந்தது,இவ்வளவு செய்தித்தாள்களும், ரேடியோ அலைவரிசைகளுமா இருந்தன?
    ஆனால் தலைவர்கள் காஷ்மீரில் சொல்வது உடனே கன்யாகுமாரிக்குத் தெரிந்தது!

  11. இன்றைக்கு பாரத்தில் நடந்து கொடிருப்பது என்னவென்றால் சோனியாவை துருப்புச் சீட்டாக வைத்து சர்ச் நடத்தும் சதி தான்
    கிறிஸ்தவர்கள் எப்போதுமே நேரடியாக மோத மாட்டார்கள்.
    மிக மிக ரகசியமாக காய்களை நகர்த்துவார்கள்.
    ஸ்ரீ லங்காவில் பவுத்தர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இடையே பிளவை உண்டு பண்ணது போல் இங்கும் ஹிந்துக்களுக்கும்,முஸ்லிம்களுக்கும் பிளவு உண்டு பண்ணி அவர்களைமோத விட்டு நாட்டை ரண களம் ஆக வேண்டும் .
    இதுவே பெரிதாகப் போய் உள் நாட்டுப் போர் வந்து நம் நாடு சீரழிய வேண்டும் என்பதே.

    இதையெல்லாம் முறியடித்து பாரதத்தை ஒரு உலக குருவாகும் வல்லமை உள்ள ஒருவர் மோடி அவர்கள்
    அதனால்தான் அவரைக் குறி வைத்து அதே சமயம் சொஹ்ரபுத்தின் என்ற முஸ்லிம் பயங்கரவாதியை மையமாக வைத்து மிகக் குள்ள நரித் தனமாக் வேலை நடத்துகின்றனர்
    இன்று நாட்டில் உள்ள ஒவ்வொரு ஹிந்துவும் இந்த சதியைப் புரிந்து கொண்டு மற்ற ஹிந்துக்களுக்குச் சொல்ல வேண்டும்
    நம் தலைவர்களை நம்பி ஏமாந்து நம்மிடம் நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பூமியில் பெரும் பகுதியை இழந்து விட்டோம்.
    மீதம் இருக்கும் இந்த பூமியையாவது நம் எதிர் கால சந்ததிக்கு விட்டுச் செல்ல வேண்டாமா?

  12. I can’t beleive the support to BJP in TN. Usually Kalaignar always attacks Jaya in his speeches. 2 days before, in Kalaignar TV, there was a discussion only centered around and against BJP. During the discussion, they brought out all propaganda issues like Amit Shah, Reddy brothers and all other points framed against BJP. It shows that DMK has started worrying about the rise of BJP in TN. During Ila-Ganesan’s tenure, there was no face of BJP and he was only looking for alliances. Pon.Radhakrishnan, by himself has brought a revolution. Ila.Ganesan was showing himself close to Mu.Ka and that affected the party very much.

  13. //
    இந்த சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்த பொது பா ஜ க எதிர்கட்சியாக என்ன செய்துகொண்டிருந்தது .இதற்கான போராட்டம் தேசிய அளவில் ஏன் நடத்தப்படவில்லை
    //
    What satheesh has asked is very very valid question. May be kanyakumari dist. is strong hold for BJP. In other places a simple question like this by opposition parties would definitely show BJP as untrustworthy.

  14. தலைவா, சும்மா இருந்த சங்கை வூதிக் கெடுத்த ஆண்டி போல நீயே தமிழ் நாட்டில் இந்துக்களை எழுப்பி விட்டு அவர்களின் நியாயமான உரிமைகளை கோரியும், தாங்கள் பழி வாங்கப் படுவதை எதிர்த்தும் போராடும் படி செய்து விட்டாயே , என்னா ஆனாலும் உனக்கு மனசுக்குள்ள உணர்வு இருக்கு என்பது பலரின் கருத்து, துண்டு கலரு மாறும் போதே தெரியாதா? இப்படியே நீ நெஞ்சு கிட்டு இருந்தா சென்னையிலிருந்து கன்யாகுமரி வரைக்கும் மக்கள விழிப்பு பெற்று விடுவார்கள். காஷ்மீர் முதல் கன்யா குமரி வரை மக்கள விழிப்பு பெற்று விடுவார்கள், தலிவா வாடா மொழியிலே ஒரு சொற்றொடர் சொல்லுவாங்க, அனுகூல சத்துரு என்று.

  15. Dear satheesh and keerthi,
    You are right,I too agree in this point.that days they were slept,but now they are waken up and started doing their (our) duty. we will appreciate them and encourage them to do more in future.this fire is required continuously and very long way is there to go. we also should contribute to this type of activities with all possible manners.
    We do have responsibility for the unwanted things happen to us.I request each one of us should have FIRE in our mind to regain our own rights in our own Earth.
    Why don’t we forget and stop criticize the past,and get together from now onwards fight against all atrocities.give your big hands please and always keep in your mind that we all are united as family irrespective of castes and other stupid things if any.

    Now BJP is trying do something and why we don’t use BJP as a common platform to get together.(please consider.).Getting united may do wonders.

    HUMBLE REQUEST TO ALL HINDUS,PLEASE DON’T SUPPORT ARE VOTE TO DMK/CONGRESS.IF YOUR NOT HAPPY WITH EVEN BJP,THEN PLEASE USE
    49 ‘O’.
    Here whatever I quoted are only suggestions and request.
    OM NAMA SHIVA YA

  16. ramasesha
    28 July 2010 at 6:08 pm

    Tamil Hindu friends: This is fantastic news.

    You need to send this page as an email link to all your friends to make them aware of this struggle against Religious Supremacists like Christians and Muslims. Hindus want to live with everyone in peace without proselytization. But due to feelings of “supremacy” created by their misguided teachers (and their hate filled bibles and korans), our Tamil brothers and sisters are losing their way and becoming violent.

    Remember to call all your friends and family about this.

    The most imporant thing you can do right now is create “awareness” of this diabolical issue that will surely convert millions of poor Hindus straight into hate mongerers.
    Thank you Tamil Hindu for making us all come together. Please keep us updated.
    We need a mailing list created of all Tamil Hindu readers and posted so we can meet and plan future strategies. Someone like Babu or Sarang or Sridharan please do this immediately.
    Dear ramasesha,
    I love to do that but presently I m not in India.Once I reached India by this 2010 end,
    I will try to do my level best with the help and guidance of “TAMIL HINDU” if god permits.
    Shivarppanam.
    Hope all our friends are Introducing Tamil Hindu to their friends and family by sending link.

    jai shriram.

  17. அருமை. மக்கள் சக்தியை நல்ல விதமாய் பயன்படுத்தி வாக்குகளாய் மாற்ற வேண்டும். அதுதான் பா.ஜ.க.வின் முன் உள்ள சோதனை. 20110 குறைந்தது ஒரு 5 சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றாலே போதும்.. நினைத்ததைச் சதிக்கலாம்.

  18. இந்த அறப் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஒற்றுமை உணர்வினை உலகினுக்குப் பறை சாற்றிய சகோதர,சகோதரிகள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். இவ்வொற்றுமை தமிழகத்தின் மற்ற பகுதியில் உள்ளவர்களுக்கும் உத்வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளதை கண்கூடாகக் காண முடிகிறது.

    இனிமேலாவது வருமுன் காக்கும் விழிப்புணர்வுடன் நாம் அனைவரும் இருப்பது நல்லது.

    இச் செய்தியை தந்த தமிழ் ஹிந்துக்கு நன்றிகள் பல.

    அன்புடன்,
    ஆரோக்யசாமி

  19. Dear satheesh and keerthi,
    You are right,I too agree in this point.that days they were slept,but now they are waken up and started doing their (our) duty. we will appreciate them and encourage them to do more in future.

    திரு .பாபு அவர்களே நீங்கள் கூறிய கருத்துகளுக்கு எனக்கு மறுபேச்சு இல்லை .நாம் கருத்தில் எடுதுகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் நடத்திய போராட்டத்தின் மூலம் இதற்க்கு விடிவு கிடைத்துவிட போவதில்லை .நாம் நடத்திய போராட்டம் தமிழ் ஹிந்து ,தினமலர் ,தினமணி தவிர எந்த ஒரு நாளிதழிலும் வரவில்லை பின் இதன் தாகம் எங்கு பிரதிபலிக்கும் .கண்டிப்பாக இது ஒரு ஹிந்து எழுச்சி நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை எல்ல ஹிந்துக்கள் மத்தியில் இந்த விஷயம் ஆணி அடித்தது போல் பதிந்து உள்ளது .

    this fire is required continuously and very long way is there to go.

    (edited and pubished)

  20. A fight for right cause, which is to be supported by all right thinking
    people without any reservation.
    Let us stand united in fighting this atrocities.

    Jai Hind

  21. பெருவாரியான இந்துக்கள் அரசியல் கட்சிகள் தங்களுக்கு இழைத்துவரும் அநீதிகள் பற்றியோ ஆதனால் வரபோகும் இளைய சமுதாயத்திற்கான ஆபத்துகள் பற்றியோ சிந்தித்து செயல்படுபவர்களாக இன்று இல்லை. அலட்சியபோக்கு கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதிலும் பாதிபேருக்குமேல் ஓட்டுச்சாவடிக்கே செல்வதில்லை. முதலில் இவர்களிடம் மன மாற்றத்தை கொண்டுவரவேண்டும். இன்று நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் சிறுபான்மையினரை கட்டி தழுவும் போக்கு கொண்டதாகவே இருக்கிறது. இதில் பி.ஜே.பி. யும் அடக்கம்.
    எனவே இந்துக்களின் பெருவாரியான ஓட்டுக்களை பெறவேண்டுமானால் பி.ஜே.பி தங்களது கொள்கைகளை மாற்றி வெளிப்படையாகவே நாங்கள் முதல் உரிமை இந்துகளுக்கே அளிப்போம். சிறுபான்மையினருக்கு இதுவரை அளித்துவந்த எந்து சுலுகையையும் இனி அளிக்க மாட்டோம். அவர்களளை இந்துக்கள்போலவே பாவிப்போம். இந்தியநாட்டின் சட்டத்தின் முன் எல்லோரும் சமம் இதில் மதகுறுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம். இந்து கோவில்களை அரசாங்கம் கட்டுபாட்டிலிருந்து விடுவிப்போம் உண்மையான ஸெக்யூலரிஸத்தை கடைபிடிப்போம் என்று பிரகடணப்படுத்தவேண்டும். அவ்வாறு அறிவித்தால் இந்துகளின் மொத்தவோட்டையும் பெருவது திண்ணம்.
    இவ்வாறு பி.ஜே.பி யோ அல்லது வேறு தேசியகட்சியோ அறிவித்து களத்தில் இறங்காதவரையில் இந்துகளுக்கு விடிமோட்சம் கிடையாது

  22. church will start it’s wolfish moves now to sabotage Hindu unity through some rogue parties

    they will encourage caste outfits to become active
    But Hindus have to enlighten everyone and unite them for the sake of the nation.

  23. why people think a bill regarding this was introduced in parliament and BJP DID NOT OPPOSE IT? their is no need to pass any bill to provide scholarships. it is a clever ploy by suresh rajan and he has even scored a point by his goyapals tactics. we need to educate the hindus in this regard. he gets majority poor hindu votes and work for the rich minority. he is an evil and must be defeated in the coming assembly elections. bjp should even be ready to support ADMK to defeat this man.

  24. காங்கிரஸ் தர்மம், நியாயம் ,நல்லது ,கேட்டது இதைப் பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப் படாத தேச விரோத ,ஹிந்து விரோத சக்திகளின் கைப் பாவையாக மாறி ரொம்ப காலம் ஆகிவிட்டது.
    அதில் இருக்கும் ஹிந்துக்கள் நாட்டைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாத கடைந்தெடுத்த சுய நல வாதிகள்
    இதை ஒவ்வொரு ஹிந்துவும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாடு நமது பொது சொத்து. இது நமக்கு மிக நுண்ணறிவு படைத்த முன்னோர்களால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக போராடியும், உயிர்த் த்யாகம் புரிந்தும் நமக்கு விட்டுச் செல்லப் பட்டுள்ளது.
    இதை நமது கோழைத்தனம்,சுயநலம்,மெத்தனம் இவற்றால் இழப்போமா?
    நமது சந்ததியினருக்கு ஒரு ரண களமான பூமியை விட்டுச் செல்லப் போகிறோமா?
    இப்போது நாம் ஒற்றுமையு டன் செயல்பட்டு இந்த சக்திகளை ஒழித்துக் கட்டவில்லை என்றால் நாளை நமக்கென்று ஒரு நாடு இருக்காது
    இது சத்தியம்

  25. இறைவன் மஹா பெரியவன்… சதிகாரர்கள் சதி செய்கிறார்கள்.. இறைவனும் அவர்களுக்கு எதிராக சதி செய்கிறான்

  26. தெரிந்து கொள்ளுங்கள் படைப்புகளை படைத்த இறைவன் மிகவும் பொறுமையாளன்… இந்த கூட்டத்தையும் அறிந்தவன். அவனே போதுமானாவன்.. மிகவும் வல்லமை மிக்கவன். நுண்ணறிவாலன்..அமெரிக்காவையும் அறிந்தவன் ஆப்பிரிக்காவையும் அறிந்தவன் போஸ்னியவையும் அறிந்தவன் இந்த தமிழக்கத்தையும் அறிந்தவன்.

  27. பொன் ராதாகிருஷ்ணன் மிகப்பெரிய தலைவர் என்பதை நிருபித்து விட்டார் வரும் காலங்களில் தமிழகத்தில் முதலமைச்சர் ஆகா தகுதியானவர் என்பதை நிருபித்துவிட்டார் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

  28. காங்கிரசில் இருக்கும் பலர் தங்களை ஹிந்துக்கள் என்று தானே கூறிக்கொள்கிறார்கள். அவர்கள் சந்ததி எப்படி முன்னேறும்,பிழைக்கும் என்ற அறிவு சிந்தனை இருக்கிறதா. அப்படியே பணம்,சொத்து என்று சேர்த்து வைத்திருந்தாலும் எல்லாமே புடிங்கிட்டு போயிருச்சுன்னா? ஒரு சாதாரண ஏழை இந்திய ஹிந்து பிரஜையாக அவர்களின் குடும்ப சந்ததி ஆனால் என்ன செய்வார்கள்??
    சத்தியமா இந்த கேள்வி என்ன ரொம்ப disturb பண்ணுது??

  29. It is surprising that there is no informed aand informative discussion on the recent supreme court ruling on reservation vis a vis (a) impact on the reservation policy–does it mean the perpetuation of the scheme,(b) impact on the caste based census demanded by most of the political parties(c) the resulting internecine quarrels and agitations each caste demanding inclusion in the list and (d) the impact on the demands of christians and muslims to extend the benefit of reservation to those dalits converted by means of corruption and cornucopia of promises yet to be fullfilled (d) what is the exixting practices regarding reservation in the various denominational institutions of both the communities??mIt is time some efforts are made identify the legal political and social implications of the decision and people are made to understan d them

  30. ஊடகங்கள் காசு கொடுத்து ஆள் சேர்க்கும் நிகழ்ச்சிகளுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடும். அதனால் ஹிந்துக்கள் ஊடகங்கள் மீது வருத்தப்பட வேண்டாம்.

  31. நாகர்கோவில் உணர்வு எங்கும் பரவுமானால் பாரதியர்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டது என்று பொருள். ஒற்றுமை இல்லாமல்தான் இந்து மன்னர்கள் நம் நாட்டை அன்னியர் வசம் கொடுத்துவிட்டார்கள். இன்று மறுபடியும் ஒரு விடுதலைப் போர்; அரசியல் விடுதலைக்காக அல்ல; நம் தன்மானத்தைக் காத்திட ஒரு போராட்டம். இதில் வெற்றி பெற்றால்தான் இந்தியனுக்கு விடிவு காலம். இன்னமும் அடிமை, அயல்நாட்டு மோகம், நம் பெருமையை உணராத அறியாமை இப்படிப்பட்ட சேற்றில் உழன்று கிடப்போமானால் நமக்கு நசிவு நிச்சயம். நாகர்கோவிலில் எழு ஞாயிறு உதித்துவிட்டான். அதை அஸ்த்தமிக்க விடாமல் காப்பற்றுவது இந்து இளைஞர்களே உங்கள் கையில். வாருங்கள்! கையோடு கை சேர்த்து ஒன்று சேர்ந்து உறுதியாய் நிற்போம். இந்த உறுதியை இனி எந்நாளும் காப்போம். வாழ்க பாரதம்!

  32. நாம் வெற்றி பெற ஒரே வழி ஒரு அறிஜனன்க்கு வேடம் சொல்லோகொடுத்து அவனை பிராமணன் எதுவரை வஹிதஹா எல்லா பொறுப்புகளிலும் அமர்த்தவேண்டும் பறையன் பூசாரியாஹ் வேண்டும் பிராமணன் தைரியமஹா கக்கூஸ் கழுவ வேண்டும் கூச்சபடாமல் endha வேலையும் thunindhu ஸெஇஅவெந்டும்

  33. அந்நிய சக்திகள் ஆதிக்கம் பெறும்போது இன்று இருக்கும் காங்கிரஸ் மற்றும் திமுக காரர்கள் இருக்க மாட்டார்கள்
    ஆனால் அவர்களின் சந்ததியினர் இருப்பார்கள்
    அவர்களும் இவர்கள் மாதிரியே இருந்தால் எதிரிகளுடன் சேர்ந்து கொள்வார்கள்
    நம் மக்களை மேலும் கொடுமை செய்வார்கள்
    அப்போதும் அவர்கள் ஆளும் வர்க்கத்திலேயே இருப்பார்கள்
    அதுதானே அவர்களது கொள்கை
    நமது நாட்டு சரித்திரத்தைப் பார்த்தாலே எதிரிகளைவிட துரோகிகள்தான் மிகப் பெரிய கொடுங்கோலர்களாக இருந்திருக்கின்றனர் என்பது விளங்கும்
    மாலிக் கபூர் என்ற ஹிந்துவாக இருந்து மதம் மாற்றப் பட்டவன் எவ்வாறு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் பல கோயில்களை இடித்தும் தீ வைத்தும் அட்டூழியம் செய்தான் என்று நாம்படித்துள்ளோம்

  34. Hindu unity is a mirage. It will never happen.

    Even if they unite to vote, and instate a Hindu – oriented party or person like Pon Radhakrishnan in power, the Hindus don’t vote for them next time, as seen from the defeat of BJP and PR in Kanyakumari. The reason for this is that after voting them to power, they have seen the party has betrayed them.

    But the party is also not to blame. Because, a party cant help the Hindus only for fear of criticism from abroad. You cant run a foreign policy as a Hindu state: the Christian Europe and Islamist Gulf will boycott you and you will be out of UN; and an international pariah.

    In States politics, Hindus, as one vote bank, is impossible. Because Christians and Muslims are scattered all over the place. For e.g in Kerala and TN. They can tilt the power in many constituencies. Parties will have to mind that.

    Further, Hindus are not a monolith. They are diverse. They are not united by an identical theology or way of life. They say their religion gives them flexibility. The religion is professed at three levels: one group takes the religion based on vedas and upanishads and such ancient scriptures, the second takes it as temples and festivals, the third as a house to practise bewildering variety of bizarre superstitions, gory sacrifices of animals, and sometimes, humans too, eating cadavers, worshiping fearsome tribal deities etc. The second and third are non vegans and the first, vegans. Each one has their own temporary leaders who reap a rich harvest for personal benefits and build an empire for them like Asharam Bapu, for .e.g

    Thus, in dietary habits and ways of worship there are unbridgeable gaps between them. As there is no single diktat for them from a single leader, the Hindus are like homeless animals, grazing anywhere, where their minds and legs take them to.

    Some Hindu intellectuals may defend it as the strong point of the religion and that maybe true long ago, but now, in confrontation with religions which foster successful unity, by hook or crook, among their followers by their uniform way and theology, it is a weak point that will undo the religion in the long run.

    Therefore, it is wishful thinking to get success over the other two religions, particularly, Islam which is sweeping India without the help of missionaries. No wonder, in a few centuries, India will be flooded with Islam.

    In your replies, please come up with a viable solution to my gloomy prognostication, wont you?

    Let Pon Radhakrishna win KK constituency, which he lost to a Christian CSI Nadar Mrs Helen Davidson. Then, you can talk of his becoming a power in State politics.

  35. ::நாம் வெற்றி பெற ஒரே வழி ஒரு அறிஜனன்க்கு வேடம் சொல்லோகொடுத்து அவனை பிராமணன் எதுவரை வஹிதஹா எல்லா பொறுப்புகளிலும் அமர்த்தவேண்டும் பறையன் பூசாரியாஹ் வேண்டும் பிராமணன் தைரியமஹா கக்கூஸ் கழுவ வேண்டும் கூச்சபடாமல் endha வேலையும் thunindhu ஸெஇஅவெந்டும்’

    Rajesh!

    It wont work. No one today regrets his profession if it pays him handsomely, gives a dignified living and a moderate status in a society. In the west, no stigma is attached to a person who cleanses your car or your trim your garden and attends to choked toilet. He comes by a car, attends to it, and goes away happily.

    In India, stigma is attached. It cant be erased if you put a Brahman in place of a dalit to clean your …etc. Instead of a dalit, the brahmin will resent doing it.

    Stigma may have come from caste by occupation theory long ago. But it does exist today without that theory too. For e.g among Christians and Muslims. You find muslim barbars and christian scavengers, as in Kolar Goldmines. In Kolar Goldmines colonies, the workers were all Catholics; and their menial occupations are done by Christians from among them. Stigma is attached; and the scavenger christians are treated untouchables. They are Tamil and Telugu speakers although it is Karnatka. With the closing down of the mines due to its economic viability, the population still continues but thinning day by day. They have moved to Bangalore.

    So, you see, among muslims and christians, stiagma is attached. But we are united; and you are not.

    Therefore, seek a really viable solution, dear.

  36. நண்பர்களே முதலில் நமக்கு ஒரு டிவி சேனல் வேண்டும். வெளிநாட்டில் வாழும் பாரத புதல்வர்கள் உதவவேண்டும். அப்போதுதான் மக்களின் முன்
    நம் உரிமை போராட்டம் கொண்டுசெல்லமுடியும்.அன்னியசக்க்தியை முறியடிக்கமுடியும்.சிந்தியுங்கள் விரைந்து முடிவுஎடுங்கள்.

  37. I am ready to pay some amount for separate TV channel program , eveyone please provide your confirmance on this .. lets see how many people are ready to give something from their side to save OTHER MOTHER.

  38. என்னால் முடிந்த தொகை கொடுக்க நான் தயார்,அனால் பெரிய தொகை என்றல் கஷ்டம்.
    டிவி சேனல் தொடங்க பெரிய தொகை வேண்டுமே.நினைத்தாலே மலைப்பாக உள்ளது.பரவாயில்லை கொஞ்சம் கொஞ்சமாக சேமிப்போம்.

  39. கருணாநிதியின் ஒப்புதல் வாக்குமூலம் .
    நேற்று கோவையில் நடந்த கூட்டத்தில் கடைசியில், கருணாநிதி தான் சிறுபான்மைக்காகதான் ஆட்சி செயிகிறார் என்பதனை பெரும்பான்மையினர் திரளாக வந்த இடத்தில மனம் திறந்தார் .இதனை கேட்ட பெரும்பான்மையினர் அனைவரும் விரைவில் நாம் சிறுபான்மையினராகி
    நமது முன்னோர்களின் மரபுகளையும் ,பாரம்பரியத்தியும் தூற்றி ,
    லோக சிறுபான்மையினரின் ஒரே காவலன், bin கருணாநிதியை போற்றோ போற்றோ என்று போற்றுவோம் .என்று கூறி ,
    கட்டிங்கும் செருப்படியும் ஒருசேர கிடைத்த சந்தோசத்தில் மிகுந்த
    மனமகிழ்ச்சிஉடன் இதுபோல் அடுத்த கூட்டம் எப்போ நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் கலைந்து சென்றனர் .

    பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்

  40. கிருஷ்ணா சொல்வதுபோல நானும் உதவ தயாராக இருக்கிறேன். தமிழ் இந்து தளம் இந்த திட்டத்தை முன்மொழிந்தால் எத்தனை பேர் பங்கு பெற த்யாராக இருக்கிறார்கள் எனப்தை அறியலாம்.

  41. Dear friends!

    You want to begin a TV channel of your own to tell people about your programs etc.? Nice. But here too, you are so emotional that you miss the wood for the trees.

    Let me go slightly ballistic. (athaavathu konjcham vilakkukiren)

    Religion should be fed to people in doses, from time to time so that the tempo of interest in it is kept up for the followers. You feed babies by telling them stories, dont you? If you force the babies, they wont eat. They will lose interest in food.

    Similarly, people will turn away from purely religious channels. ivangalukku vere velayille!

    That is why, we, the Christians resort to slot programs in popular channels.

    Similarly, exploit Jeya TV or similar helpful channels. People will see amid other programs and slowly the messages will sink in.

    If you open a channel of your own, then you have to mix the programs with spices like item numbers. Can you do that? You cant.

    Pool your money and get your slots in popular tv channels.

    Jo Amalan Rayen Fernando.

    It took so many days for Hindu.com to allow my long messages I had posted here. Suppose they were subjected to gruelling discussions and passed the test. he…he…he!

    No further messages from me. You may debate among yourselves. Happy debating!

  42. தமிழ் நாட்டில் உள்ள திராவிட கட்சிகளில் இருக்கும் ஹிந்துக்கள் பா. ஜ. க.க்கு வர வேண்டும்.
    ஜெய் ஹிந்து ! ஜெய் பா. ஜ. க

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.,,,தர்மமே என்றும் வெல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *