நெருக்கடி கால நினைவலைகள் – எல். கே. அத்வானி

leaders_arrested

தமிழில்: ஆர். பி. எம்

உலக அளவில் பாரதத்திற்கு இப்போது மரியாதை உள்ளது.  பாரதம் பொருளதார ரீதியாக வல்லரசாக வளர்ந்து வருகிறது என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல.  வளரும் நாடுகளிடையே கூட பாரதம் மிகுந்த மரியாதையைப் பெற்றுள்ளது.  இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்றால் பாரதத்தில் குடியாட்சி துடிப்புடனும் பேராற்றலுடனும் இயங்கிக் கொண்டிருப்பதுதான்.

நம் நாட்டில் உள்ள பலர் 1975ம் ஆண்டு ஜூன் மாதம் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டதை முழுமையாக உணர்ந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.  அப்போது பல கட்சி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு ஒரு கட்சி ஆட்சிமுறையைக் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டது.  கடந்த மாதம் எனது வலைப்பூவில் நெருக்கடி கால நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டேன்.

1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலை நம் தேசத்தின் வரலாற்றில் ஒரு களங்கமாகும்.

சுதந்திர பாரதத்தின் வரலாற்றில், நெருக்கடி நிலையின்போது நடைபெற்றவை குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதை மறந்துவிடுவது ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் அவமரியாதையாகும். கடந்த வாரம் நான் இரண்டு முக்கியச் சம்பவங்களை நினைவு கூர்ந்தேன்.  இந்த இரண்டு சம்பவங்களும் 1975ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி நடைபெற்றவைதான்.  (இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று நீதிபதி சின்ஹா தீர்ப்பளித்தார், குஜராத்தில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது.) ஆளும் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கிடையாது என்பதை நெருக்கடி காலம் உணர்த்தியது.  அந்தக் காலகட்டத்தில் ‘ஜனநாயகத்தைவிட நாடு மிகவும் முக்கியம்’ என்று இந்திராகாந்தி ஒருமுறை குறிப்பிட்டார்.

cartoon-62i_700pxபண்டிட் ஜவஹர்லால் நேருவால் ஆரம்பிக்கப்பட்ட ‘தெ நேஷனல் ஹெரால்டு’ ஆங்கில நாளிதழில் ஒரு தலையங்கம் வெளிவந்தது.  தான்சானியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஒரு கட்சி ஆட்சிமுறையைப் புகழ்ந்து அந்தத் தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்தது.  பல கட்சி ஜனநாயகத்தை விட ஒரு கட்சி ஆட்சிமுறை வீரியம் குறைந்தது அல்ல என்று தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘இங்கிலாந்து பாணி ஜனநாயகம்தான் மிகவும் சிறப்பானது என்று சொல்லமுடியாது.  ஆப்பிரிக்க நாடுகள் சில, ஜனநாயகத்தின் வெளிப்புறம் எவ்வாறு இருந்தாலும் மக்களின் குரல் நேர்த்தியாக பிரதிபலிக்கும் வகையில் இயங்கிவருகின்றன.

மத்தியில் உள்ள ஆட்சி வலுவானதாக இருக்கவேண்டும்.  இவ்வாறு இருந்தால்தான் ஜனநாயகம் வலுவாக இருக்கமுடியும்.  இதைப் பிரதமர் வற்புறுத்தியுள்ளார்.  மத்திய அரசு பலவீனமடைந்துவிட்டால் தேசத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளையும்.  அதுமட்டுமல்லாமல் சுதந்திரத்திற்கே ஆபத்து ஏற்பட்டுவிடும்.  சுதந்திரத்திற்கே ஊறுவிளையும்.  ஆனால், ஜனநாயகம் எப்படி உயிர்ப்புடன் இருக்கமுடியும்? என்று பிரதமர் இந்திராகாந்தி எழுப்பியுள்ள கேள்வி ஆழ்ந்த அர்த்தச் செறிவு மிக்கது.’

என்று தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்தது.

நெருக்கடிகால நிகழ்வுகள் குறித்துப் பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.  பெரும்பாலான புத்தகங்களை இந்திராகாந்தியின் விமர்சகர்கள் எழுதியுள்ளனர்.  இந்திராகாந்தியின் ஆதரவாளராக இருந்த உமா வாசுதேவ் என்ற பத்திரிகையாளர் எழுதிய புத்தகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்படுவதற்கு சற்று முன்பாக இந்திராகாந்தியைப் புகழ்ந்து உமா வாசுதேவ் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார்.  அந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘இந்திரா காந்தி:  நிதானமான புரட்சியாளர்’ (Indira Gandhi: Revolution in Restraint) .

indira-gandhi_artஆனால், நெருக்கடி நிலை உமா வாசுதேவிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது.  நெருக்கடி கால நிகழ்வுகளால் அவரது மனதில் கடும் உளைச்சல் ஏற்பட்டது.  நெருக்கடி நிலை முடிவடைந்த பிறகு உமா வாசுதேவ் மற்றொரு புத்தகம் எழுதினார்.  அந்தப் புத்தகத்தின் பெயர், ‘Two Faces of Indira Gandhi’ (இந்திரா காந்தியின் இரட்டை முகம்.)’.

அந்தப் புத்தகம் இப்படி ஆரம்பிக்கிறது.

“1976ஆம் ஆண்டு பச்சுமர்ஹி மலைப் பகுதியில் பண்டிட் துவாரஹ பிரசாத் மிஸ்ரா அமர்ந்திருந்தார்.  பச்சுமர்ஹி, டெல்லியிலிருந்து 600 மைல் தொலைவில் உள்ள இடமாகும்.  1967-69ல் காங்கிரஸ் கட்சிக்குள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் இந்திராகாந்தியின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டவர் டி.பி. மிஸ்ரா ஆவார்.  அவர் ஒரு நண்பரிடம் குறிப்பிட்ட சுவாரஸ்யமான சம்பவம் இப்போதும் பொருத்தமானதாகத்தான் உள்ளது.

‘ஒரு அரசியல் கைதி ஒரு பூனையைச் செல்லமாக வளர்த்துவந்தார். அவர் 30 வயதான இளைஞர்.  சிறையிலும் பூனையை சீராட்டி வளர்த்துவந்தார்.  ஒருநாள் அவரின் நரம்பு சுளுக்கிக்கொண்டது.  இதனால் அவருக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது.  இந்த வேதனையை பூனையிடம் அவர் பிரயோகித்தார்.  நான் வேதனைப் படுகிறேனே.  அதையும் வேதனைப்படச் சொல்லி நையப்புடைத்தார்.  வலிதாங்காத பூனை சிறையில் உள்ள அறையின் மூலைக்குச் சென்று வேதனையால் துடித்தது.  சிறைக் கதவு தாழிடப்பட்டிருந்ததால் அந்தப் பூனையால் வெளியே செல்லவும் முடியவில்லை.  பூனையை செல்லமாக வளர்த்துவந்த சிறைக்கைதி பூனையின் அருகே செல்ல முற்படும்போதெல்லாம் அது பயத்தால் நடுங்கியது.  ஓலமிட்டது.

இந்தக் கூக்குரல் சிறை அதிகாரியின் காதுகளுக்கும் கேட்டது.  அவர் விரைந்து வந்தார்.  அறைக்கதவை திறந்தார்.  பூனை வேகமாக வெளியே பாயவில்லை.  அது முன்பொரு காலத்தில் தன்னை பிரியமாக வளர்த்த சிறைக்கைதியை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்தது. அவரின் தொண்டையைப் பிராண்டியது.  சிறை அதிகாரி குறுக்கிட்டு காப்பாற்றியிருக்காவிட்டால் சிறைக்கைதியின் உயிரே போயிருக்கும்.’

‘இதில் ஒரு நீதிபோதனை உள்ளது’ என்று டி.பி. மிஸ்ரா கூறினார்.  அவரது கண்கள், கண்ணாடிக்கு பின்னே பளபளத்தன.  ‘நீங்கள் ஒரு எதிரியை தாக்க விரும்பினால் அவருக்கு ஏதேனும் ஒரு வகையில் ஆத்திரத்தை வெளிப்படுத்த வழிவகை செய்ய தவறக்கூடாது.  இல்லாவிட்டால் அந்த ஆத்திரம் உங்களையே அழித்துவிடும்.  எதிரி கொலைகாரனாக உருவெடுத்துவிடுவார்.’

என்று டி,பி. மிஸ்ரா தொடர்ந்து கூறினார்” என்று உமா வாசுதேவ் தனது இந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘மாவோயிஸ்டுகளைப் பற்றி குறிப்பிட இது பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால் அதைவிடவும் இந்த உதாரணம் அர்த்தச்செறிவு மிக்கது.  1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு பல தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள்.  ஓராண்டுக் காலத்திற்குள்ளாக எண்ணற்ற தலைவர்கள் சிறையில் அடைபட்டுக் கிடக்க வேண்டியதாயிற்று.  ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், அடல் பிஹாரி வாஜ்பாய், ராஜ் நாராயணன், எல். கே. அத்வானி, பிலுமோடி ஆகியோரை மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரசேகர், மோகன் தாரியா, கிருஷ்ணகாந்த், ராம்தன், பி.என். சிங் ஆகியோரையும் இந்திராகாந்தி சிறையில் அடைத்துவிட்டார்.

indira-gandhi_emergency_cartoonசெய்திகளுக்குத் தணிக்கை கடுமையாக அமலாக்கப்பட்டது.  விமர்சனங்கள் முணுமுணுப்புகளாகவே இருந்தன.  நெருக்கடிநிலை காலத்தில் வதந்திகள் இறக்கைக்கட்டி பறந்தன.  இதனால் பயமும் பீதியும் அதிகரித்தன.

அரசியல்வாதிகள் மற்றும் அறிவு ஜீவிகள் எதிர்காலம் என்னவாகும் என்று நினைத்துக் கவலைப்பட்டார்கள்.  உண்மையான செய்தி வெளியாகததால் மக்கள் இருட்டில் தவித்தனர்.  உண்மையில் வாய்மைக்கு சக்தி அதிகம்.  வானவில்லில் 7 நிறங்கள் மட்டுமே உண்டு.  இதையும் தாண்டி உண்மை பிரகாசமாக வெளிப்படத் தவறாது.’

என்றெல்லாம் உமா வாசுதேவ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உமா வாசுதேவ் இந்தப் புத்தகத்தின் இறுதி அத்தியாயத்திற்கு ‘Dark Side of the Moon’ (நிலாவின் இருண்ட பக்கம்) என்று தலைப்பிட்டுள்ளார்.  அதில் அவர் எழுதியுள்ளதாவது:

“1976ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு நாளில் பெங்களூர் சிறைக்கு தீட்சண்யம் மிக்க வயோதிகர் வந்தார்.  அவர் பாரதீய ஜனசங்க தலைவர்.  அத்வானியைப் பார்க்க விரும்பினார்.  பெங்களூர் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகளுடன் அத்வானியும் அடைக்கப்பட்டிருந்தார்.  விடியல் எப்போது ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது.  அந்த வயோதிகரின் முன் அத்வானி வந்து நின்றார்.  முதியவர் உடல் தளர்ந்த நிலையிலும் தனது எண்ணத்தில் உறுதியாக இருந்தார், அவரும் ஒரு சிந்திதான்.  மெலிந்த தோற்றமுடைய அந்த முதியவர் தனது மீசையை வருடியபடி மௌனமாக நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்து புன்னகைத்த அத்வானி, ‘எப்படி இருக்கிறீர்கள்? என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்’ என்றார்.

shadow_of_emergencyஅதற்கு அந்த வயோதிகர், ‘எனக்கு 65 வயதாகிறது.  அவர் (இந்திரா காந்தி) செய்வது எனக்கு அறவே பிடிக்கவில்லை.  என்னால் இதைப் பொறுத்துக்கொள்ளமுடியாது. இதற்கு ஏதாவது செய்தாகவேண்டும் என துடிக்கிறேன்.  நான் இனியும் தொடர்ந்து வாழவிரும்பவில்லை.  நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்.  நான் சாகத்துணிந்துவிட்டேன்.  நான் நேரே சென்று அவரை சுட்டுக்கொல்லவும் தயாராகவும் இருக்கிறேன்’ என்று கூறினார்.

உடனே ‘அப்படி செய்துவிடாதீர்கள்’ என்று அத்வானி கூறினார்.

சிறையில் உள்ள சாதரண அரசியல் தொண்டர்கள் நாளுக்கு நாள் பொறுமை இழந்து வந்தார்கள்.  அரசியல் கட்சித் தலைவர்களின் போக்கு மெத்தனமாக இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள்.  புதிய நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்று கருதிய தொண்டர்கள் வேதனைப்பட்டார்கள். ‘நீங்கள் நெருக்கடி நிலையை முறியடிக்க எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முன்வரவில்லையே?’ என்று அத்வானியிடம் புகார் கூறினார்கள்.

எந்த சர்வாதிகார ஆட்சியும் வன்முறை மூலமாக தூக்கி எறியப்படவில்லை என்று அத்வானி நினைத்தார்.  மாற்று ஏற்பாடு எதுவும் கிடையாது.  மக்கள் பொறுமையாகக் காத்திருந்து உரிய நேரத்தில் செயல்படவேண்டும் என்று அத்வானி எண்ணினார்.

‘இந்திராகாந்திக்கு எதிராக கோபாவேசம் நிலவியபோது அவர் படுகொலை செய்யப்படுவாரா? அல்லது மீண்டும் எப்படியாவது பதவிக்கு வந்துவிடுவாரா?’ என்று அத்வானியிடம் நான் கேட்டேன்.

INDIA-ELECTION/‘இந்த அளவுக்கு வேறு ஏதேனும் வெளிநாட்டில் சம்பவங்கள் நடைபெற்றிருக்குமானால் மிகக் கடுமையான விளைவு ஏற்பட்டிருக்கும்.  ஆனால் பாரதம் மிகவும் பெரிய தேசம்.  மக்களின் மனோபாவம் மற்ற நாடுகளிலிருந்து மாறுபட்டது.  இந்த நடவடிக்கைகளை மக்கள் ஆதரிக்கவில்லை.  கடுமையாக எதிர்க்கிறார்கள் என்பது உண்மைதான்.  இருப்பினும் அமைதி வழியில் மக்கள் கொண்டுள்ள நாட்டத்தைக் குறைத்து மதிப்பிடக்கூடாது’ என்று அத்வானி பதிலளித்தார்.

உமா வாசுதேவின் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  நெருக்கடி நிலையின் போது தணிக்கை அதிகாரிகளின் பார்வைக்குத் தப்பி எந்தச் செய்தியும் வெளிவரவில்லை.  அரசைப் பற்றிய விமர்சனத்துக்குக்கூட அனுமதி கிடையாது.  ‘கொஸ்ட்’ என்ற காலாண்டு இதழில் 1975ஆம் வருட கடைசி இதழ் கிடைத்தது.  அதை பெங்களூர் சிறையில் 19 மாதம் இருந்தபோது நான் பத்திரமாக வைத்திருந்தேன்.

அந்தக் காலாண்டிதழில் அசிஷ் நந்தி எழுதியிருந்த ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.  ஆட்சியாளர்கள் மோசமான முறையில் நடந்துகொண்டால் அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.  உயிரையும் பறிகொடுக்க வேண்டியிருக்கும் என்பதை உளவியல் கண்ணோட்டத்தில் அந்தக் கட்டுரையில் அசிஷ் நந்தி விளக்கியிருந்தார்.

அந்தக் கட்டுரையின் தலைப்பு  ‘Invitation to a Beheading: A Psychologist’s Guide to Assassinations in the Third-World’ (தலைகளை வெட்ட ஒரு அழைப்பு:  வளரும் நாடுகளின் அரசியல் கொலைகள் குறித்து உளவியலாளருக்கான ஒரு கையேடு) என்பதாகும்.

அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ashish_nandy‘கொலை செய்தவருக்கும் கொலை செய்யப்பட்டவருக்கும் இடையிலான தொடர்பு மிகவும் ஆழமானது மட்டுமல்ல, நீடித்ததுமாகும்.  இறுதி, இருவரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கிறது.  சர்வதிகாரிகள் இப்படிப்பட்ட முடிவுகளைத்தான் சந்தித்துள்ளனர்.  தலைவர்களும் இதை எதிர்கொண்டுள்ளனர்.  மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கூலிக்கு அமர்த்தி கொலை செய்வதும் சர்வதேச அளவில் நடைபெற்றுள்ளது.  மோசமாக நடந்துகொண்ட சர்வாதிகார்களின் பட்டியலில் நீரோ மன்னருக்கும் இடமுண்டு.  மார்ட்டின் லூதர்கிங் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணம் அவரது எழுச்சி ஆதிக்க சக்தியினருக்கு அறைகூவல் விடுப்பதாக இருந்ததுதான்.  பல நாடுகளில் சர்வாதிகாரிகளுக்குக் கோரமான முடிவு ஏற்பட்டுள்ளது.  பலர் சேர்ந்து கூட்டாக தற்கொலை செய்துகொண்டுள்ளதும் நடைபெற்றுள்ளது.  அடால்ஃப் ஹிட்லர் தனக்கு நெருக்கமானவர்களுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டார்.  ஒருவர் படுகொலை செய்யப்படுவதற்கும் அல்லது தற்கொலை செய்துகொள்வதற்கும் உளவியல் ரீதியான காரணங்கள் உள்ளன.  ஒருவரது நடவடிக்கைகளே அவருக்கு எதிரிகளை உருவாக்கிக் கொடுக்கிறது.

indira_gandhiசர்வாதிகாரிகள் மற்றவர்களை நம்புவது கிடையாது.  அவர்கள் மற்றவர்களை சந்தேகப் பட்டுக்கொண்டே இருப்பார்கள்.  அவர்களது அதிரடி நடவடிக்கைகள் இதை மேலோட்டமாக மறைக்கப்பார்க்கும்.  ஆனால் உள் உலகத்தில் அவர்கள் எப்போது பார்த்தாலும் சந்தேகத்துடனேயே சஞ்சலப்பட்டுக்கொண்டிருப்பார்கள்.  அவர்கள் யாரையும் நிரந்தரமாக நம்ப மாட்டார்கள்.  சிலரை வேண்டுமானால் சில காலம் நம்புவார்கள்.  தளபதிகள் அடிக்கடி மாற்றப்படுவதற்கு இதுதான் காரணம்.

ரயில்வே நிலையத்தில் பயணிகள் ஒருபுறம் வந்துகொண்டும் மறுபுறம் சென்றுகொண்டும் இருப்பதைப் போல நம்பிக்கைக்குரியவர்கள் வந்துகொண்டும் சென்றுகொண்டும் இருப்பார்கள். தனது குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் நெருக்கமானவர்களை மட்டும்தான் சர்வாதிகாரிகள் நம்புவார்கள்.  இதைக்கூட முழுமையானது என்று சொல்லமுடியாது.  வெளியாட்களை அவர்கள் முழுமையாக நம்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை.  அரசியல்வாதிகள் இத்தகைய மனப்போக்குடன் செயல்பட்டால் அவர்களுக்கு விரிவான ஆதரவு தளம் உருவாவதில்லை.  ஒரு சில துதிபாடிகள் மட்டுமே அவர்களை நெருங்கியிருப்பார்கள்.  சர்வாதிகாரிகளும் அவர்களைச் சார்ந்தே இருப்பார்கள்’

என்று அசிஷ் நந்தி அந்தக் கட்டுரையில் எழுதியுள்ளார்.

நான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு உமாவாசுதேவ் என்னைச் சந்தித்தார்.  நெருக்கடி கால நிகழ்வுகள் குறித்து அவர் என்னுடன் நீண்ட நேரம் விவாதித்தார்.  ஒரு கட்சி ஆட்சிமுறை, குறிப்பாக தான்சானியாவில் உள்ளதைப் போன்ற ஆட்சி என்றெல்லாம் நேஷனல் ஹெரால்டு சிபாரிசு செய்தது குறித்தும் விவாதம் நடைபெற்றது.  இது குறித்து உமாவாசுதேவ் தனது புத்தகத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்டு 11ம் தேதி ‘நேஷனல் ஹேரால்டு’ இதழில் ஒரு கட்சி ஆட்சிமுறை குறித்து தலையங்கம் தீட்டப்பட்டிருந்தது.  இரண்டு வாரத்திற்குள், அதாவது ஆகஸ்டு 25ஆம் தேதி அதே பத்திரிகையில் எழுதப்பட்ட தலையங்கத்தின் தொனி மாறிவிட்டது.

‘ஒரு கட்சி ஆட்சிமுறையை கொண்டுவரும் உத்தேசம் எதுவும் கிடையாது’ என்று பிரதமர் அறிவித்துவிட்டார். புதிதாக அரசியல் சாசன சபையை அமைக்கும் எண்ணம் கிடையாது என்றும் அவர் தெரிவித்துவிட்டார்.  ‘ஒரு கட்சி ஆட்சி முறையில் சில நல்ல அம்சங்கள் உள்ளன என்றபோதிலும் அது திணிக்கப்பட மாட்டாது.  அது படிப்படியாக இயல்பாக வருவது தான் நல்லது.  தற்போதைய சூழ்நிலையில் அதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை’ என்பதுதான் ஆகஸ்டு 25ஆம் தேதி வெளிவந்த நேஷனல் ஹெரால்டு இதழில் பிரசுரிக்கப்பட்ட தலையங்கமாகும்.

‘ஆகஸ்டு 11ஆம் தேதிக்கும், ஆகஸ்டு 25ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன?’ என்று உமாவாசுதேவ் என்னிடம் கேட்டார்.  அதற்கு ‘ஆகஸ்டு 15ஆம் தேதியன்று முஜிபுர் ரகுமான் படுகொலை செய்யப்பட்டார்.  அது பிரதமருக்கு அதிர்ச்சி அளித்துவிட்டது.  இதனால்தான் ஜனநாயகத்தை சிதைக்கக்கூடாது என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார்’ என்று நான் பதிலளித்தேன்.

நன்றி: விஜயபாரதம்

5 Replies to “நெருக்கடி கால நினைவலைகள் – எல். கே. அத்வானி”

  1. I attended the public meeting held in Coimbatore during the emergency. Shri Kannadasan and Mr Cho Ramaswamy were the main speakers.Their speeches were electrifying. I was blessed to see the true nationalisim exhibited by the crowd on that day. Oh, what a unity we had as Indians, standing together at that time,in fighting against the demonic, tyranic Indira Gandhi .
    I wish now we have same intense patriotism and unity shown on that day to fight against few more monsters, (aka UPA, DMK,) lurking amidst us now who are plundering our great country of it’s wealth and it’s ageless rich culture.

  2. Pingback: Indli.com
  3. ஆசிரியர் குழுவுக்கு,

    அத்வானிஜியின் Blogஐ நான் தொடர்ந்து படித்து வருகிறேன். இன்றைய
    காலகட்டத்தில் 1970களில் நடந்த அக்கிரமங்களை நாம் மறந்து விடுவது
    எதிர்கால இந்தியாவை இருட்டிற்குத்தான் கொண்டு செல்லும்.

    ஒரு நடுத்தர மனநிலை அவசரகால கட்டத்தில் எப்படி இருந்தது?
    எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. நாங்கள் சென்னையில் இருந்த
    காலத்தில் 1980களில் என் தந்தையும் காலனி நண்பர்களும் அரசியலைப்
    பற்றி பேசும்போது, அவசரகால நிலைதான் இந்தியாவிற்கு சிறந்தது என்று
    கூறுவார்கள். அவர்கள் கூறிய காரணம் என்ன தெரியுமா?
    “அவசரகால நிலையில் எல்லா இரயில்களும் சரியான நேரத்தில் இயங்கின.”

    அவசரகால நிலையின் கொடுமைகளைப்பற்றி திரு.அத்வானி அவர்கள்
    தெளிவாக எழுதியுள்ளார். இராணுவ ஆட்சிதான் சிறந்தது என்று சிலர்
    உளறி வருகின்றனர். இப்பொழுது அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள்
    இராணுவ ஆட்சியில் இராணுவத்தினர் ஊழல் செய்வார்கள்.
    இப்பொழுதாவது எதிர்த்து கேட்க முடிகிறது.

    பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது அந்த சர்வாதிகாரினியின் பெயரை
    இந்தியாவில் இருக்கும் எல்லா பெயர் பலகைகளில் இருந்து நீக்கி இருக்க
    வேண்டும்.

    நாம் என்னதான் ஜனநாயகம் என்று புகழ்ந்தாலும் இது கருப்பு
    புள்ளியாகவே இருக்கும்.

  4. சமீபத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக அந்த மாநில முதல்வர் மோடி அவர்களுக்கு சீ பீ ஐ சம்மன்
    அனுப்பிய பொது காங்கிரஸ்,மற்றும் கிறிஸ்தவ , மு ஸ்லிம் ஊடகங்கள் என்னவெல்லாம் கேலியும் ,ஏச்சும் செய்தன

    ஆனால் வரலாறு காணாத அளவில் எமர்ஜென்சியை அமல் படுத்தி அக்கிரமங்கள் செய்தததற்காக ஜனதா அரசு ஷா கமிஷன் ஏற்படுத்தி விசாரணை செய்ய முற்பட்ட போது இந்திரா என்னவெல்லாம் டிராமா ஆடினார் என்று நமக்குத் தெரியும்.
    அவரை கைது செய்ய அதிகாரிகள் சென்ற போது இந்த வீராங்கனை ‘பூஜை செய்கிறேன்’ அது இது என்று சொல்லி காலம் கடத்தினார்
    பின்பு அவர்களுடன் வேனில் சென்ற போது திடீரென்று அதை நிறுத்தக் சொல்லி டெல்லிக்கும் அரியாநாவுக்கும் இடையில் உள்ள ஒரு வாராவதியின் மீது அமர்ந்து சிறுபிள்ளைத்தனமாக கிளம்ப மறுத்தது நாடுமறக்கவில்லை.

  5. திரு அத்வானிஜி அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்து பாரதத்தின் பிரதமராகி இந்த நாட்டை உலகின் முதன்மை நாடாக மாற்றவேண்டுமாய் எல்லாம்வல்ல எல்லா இரைவன்களையும் வேண்டுகிறேன்.
    ஈஸ்வரன்,பழனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *