சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்

சிறுவன் ஆதித்யாவைப் பூவரசி என்ற பெண் கொன்றுவிட்டாள்.
 
வேறொருவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சாஸ்திரக்கனி என்னும் காவல்துறைப் பெண் காவலர், தன் பழைய நீண்டநாள் காதலனான மின்வாரிய ஊழியர் ராஜேந்திரனைக் கொன்று எரித்து விட்டார். அதுவும் தன் புதுக் கள்ளக் காதலன் வீரராஜனோடு சேர்ந்து கூட்டமைத்துக் கொண்டு.

adithya_poovarasiஇந்தப் பெண்கள் இருவருமே கள்ளத்தனமாய்க் காதல் செய்து வந்திருக்கின்றனர். இதே ஓர் ஆணாக இருந்தால் மனைவியை ஏமாற்றியதற்கும் கள்ளக் காதலில் ஈடுபட்டதற்கும் அவன் மேல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க முடியும். ஆனால் பெண்களுக்கு மென்மையான சட்டங்களே இருக்கின்றன. அவ்வளவு எளிதில் அவர்களைத் தண்டிக்க முடியாது. பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளும் பெண் விடுதலை பற்றிப் பேசும் ஆண்களும் சரி இத்தகைய பெண்களின் நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் செயல்கள் பற்றியும் கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. ஆண்களிடம் பெண்கள் கஷ்டப் படுவதாயும், கொடுமைப்படுத்தப் படுவதாயும் சொல்லும் பெண்ணியவாதிகள் இந்தப் பெண்களால் சீரழிந்த குடும்பங்களைப் பற்றி நினைத்தானும் பார்க்கிறார்களா? சந்தேகமே! அந்தச் சீரழிக்கப்பட்ட குடும்பங்களிலும் பெண்கள் இல்லையா? அந்தப் பெண்களுக்கு மட்டும் எந்தவிதமான உரிமையும் கிடையாதா?
 
congress-mlc-jyoti-devi-breaking-flower-pots-outside-the-bihar-assemblyமேலும் லஞ்சம் வாங்குவதிலும் பெண்கள் நாங்கள் ஒருவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக்கொண்டு வருகின்றனர். சில மாதங்கள் முன்னால் பாஸ்போர்ட் அதிகாரியான பெண்மணி ஒருவரின் லஞ்ச ஊழல் வெளிவந்தது. மேலும் காவல் துறையில் இருக்கும் சில பெண்களும் லஞ்சம் வாங்குவதாயும் வேறு துறைகளிலும் லஞ்சம் வாங்கும் பெண்மணிகள் இருப்பதாயும் செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. மருந்துகள் வழங்கும் மருத்துவத் துறையையும் பெண்கள் விட்டு வைக்கவில்லை. பிஹாரில் காங்கிரஸ் மேலவை உறுப்பினரான ஜோதி தேவி  என்ற பெண்மணி சட்டசபை நுழைவாயிலில் இருந்த பூந்தொட்டிகளை எல்லாம் உடைத்துப் போட்டு அமர்க்களம் செய்தார். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் இந்த அநாகரிகமான, பெண்மைக்குச் சற்றும் பொருந்தாத, ஆர்ப்பாட்டமான நிகழ்ச்சி காட்டப் பட்டது. என் கணவரோடு அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்குக் கூச்சமாய் இருந்தது. இது மட்டுமா?
 
sharmila-brinda-shabana-jayanthiபெண்களுக்கு உரிமைகள் இல்லை என்றும் அவர்களை அடிமைகள் என்றும் சொல்லிக் கொண்டு பெண்ணியவாதிகள் எதற்கெடுத்தாலும் கொடிதூக்கிக் கொண்டு அலைகின்றனர். சமீபத்தில் ஷர்மிளா தாகூர், பிருந்தா காரத், ஜெயந்தி நடராஜன், ஷபனா ஆஸ்மி போன்றோர் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவிற்காக நடுத்தெருவில் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர்; தினசரிகளில் செய்தியாக வந்தது. இப்படி எல்லாம் இருக்கும்போது பெண்களுக்கு உரிமை இல்லை என்றும் அடிமையாக நடத்தப்படுகிறாள் என்றும் பெண்களுக்குச் சம உரிமை வேண்டும் என்றும் முழங்குவதைப் பார்த்தால் சிரிப்பாய் வருகிறது. உடை உடுத்துதலில் தொடங்கிய ஆபாசம் இன்று கள்ளக் காதலிலும் லஞ்சம் வாங்குவதிலும் அதற்காகச் சிறு குழந்தை என்று கூடப் பார்க்காமல் கொலை செய்வதிலும் போய் முடிந்திருக்கிறது. நமக்குத் தெரிந்து வெளியே வந்திருக்கும் சில நிகழ்ச்சிகள் இவை. சம உரிமை கொடுக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அப்படி இருக்கும்போதே இப்படி எல்லாம் நடந்துகொள்ளும் பெண்கள் சம உரிமை கொடுத்துவிட்டால்– அதாவது அவர்கள் கேட்பதெல்லாம் இப்போது கிடைப்பதில்லை என்று இப்போது சொல்கிறார்கள்; அதெல்லாம் கிடைத்துவிட்டால்– இப்படி எல்லாம் நடக்காதா?

இன்று பெண்கள் எந்தத் துறையில் இல்லை? ஆட்டோ ஓட்டுநராக, பேருந்து ஓட்டுநராக, மின்சார ரயில் ஓட்டுநராக, தபால் பட்டுவாடா செய்பவராக, பெட்ரோல் பங்குகளில், ரேஷன் கடைகளில் பொருள்களை அளந்துபோடுபவராக… இன்னும் உயர்ந்த நிலையில் சொல்லவேண்டுமானால் விமானம் ஓட்டுபவராக, விண்வெளிப் பயணியாக, விண்வெளி விஞ்ஞானியாக என்று பல துறைகளிலும் பரிமளிக்கிறார்கள் தானே? இதை விடவும் என்ன முன்னேற்றமும் உரிமையும் வேண்டும்? ஒரு சிலர் எல்லாப் பெண்களுக்கும் கிடைத்துவிட்டதா என்றும் கேட்கின்றனர். சரி, இல்லை என்றே வைத்துக்கொள்வோம். எல்லா ஆண்களுக்கும் இந்தச் சம உரிமை கிடைத்திருக்கிறதா? ஏன் எல்லா ஆண்களும் உயர்ந்த இடத்தில் இல்லை? ஏன் ஒரு சிலருக்கு மட்டும் நல்ல உயர்ந்த பதவிகளும், பட்டங்களும் கிடைக்கின்றன? இன்னும் சில ஆண்கள் மூட்டை தூக்கியும், வண்டி இழுத்தும், ரிக்ஷா ஓட்டியும் பிழைக்கின்றனர்? ஏன் இப்படி?? அவர்களுக்காகப் போராட யாருமே இல்லையா? ஆண்கள் முன்னேறவேண்டாமா? அவங்களுக்கும் இதில் எல்லாம் உரிமை இல்லையா?

கேட்டால் காலம் காலமாய்ப் பெண்கள்தான் அடிமையாக நடத்தப்படுவதாய்ச் சொல்லுவார்கள். பெண் எப்போது அடிமையாய் இருந்தாள்? எப்போதும் இல்லை! ஆனால் இந்தப்பெண் உரிமை பேசுபவர்களுக்கு என்னவோ பெண்கள் அடிமையாக இருப்பதாயும் அவர்களை வன்கொடுமைக்கு ஆளாக்குவதாயுமே நினைப்பு. சமீப காலங்களில் கிட்டத்தட்ட இந்தக் கள்ளக்காதல் பிரச்சினைகளால் பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றன. அனைத்திலும் அநேகமாய்ப் பெண்களே குற்றவாளிகள். ஓர் ஆண் தன் மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணோடு உறவு பூணும் பட்சத்தில் சட்டம் அவன் மேல் வலிமையாகப் பாய்கிறது. அதுவே ஒரு பெண் என்றால் மென்மையாக அணுகுகிறது. ஆணும் பெண்ணும் சரிசமம் என்று வருகிறபோது இதில் மட்டுமே ஏன் பெண்ணிடம் மென்மையான அணுகுமுறை?? பெண்ணிய வாதிகளும் இப்படிப் பட்ட பெண்களைப் பற்றி ஒருவார்த்தை கூடப் பேசுவதில்லை. உடல் ரீதியாகவும், இயக்கங்களின் மூலமாகவும் ஆணும் பெண்ணும் மாறுபடுவது இயற்கை. ஆனால் அதற்காக ஒரு பெண் என்னவேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்பது அருவருப்பாய் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராய்ந்தெல்லாம் பார்க்கவே வேண்டாம்.
 
extra-marital-affairsபெண்களுக்கு இப்போது பணமும் ஆடம்பர வாழ்க்கையும் உல்லாசப் பொழுது போக்குகளும் மட்டுமே முக்கியமாய் இருக்கின்றன. எல்லாப் பெண்களையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டவில்லை. நானும் ஒரு பெண்தான். குடும்பத் தலைவிதான். ஆனாலும் தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்களில் பெண்களை மட்டமாய்ச் சித்திரிப்பதற்கு ஒரு வரையறையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. எந்தத் தொடரை எடுத்தாலும் அதில் கணவன் அல்லது மனைவிக்கு ஒரு கள்ளக் காதல், அதற்காகப் பழிவாங்குவது, அல்லது மாமியாரைப் பழிவாங்குவது, மாமியாரையோ, கணவனையோ பழிவாங்குவதற்காக ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தான் வாழ வந்த குடும்பம் என்ற எண்ணமே இல்லாமல் பழி தீர்த்துக்கொள்ளுவது…. அத்தகைய பெண்களைத் திறமைசாலிகளாய்க் காட்டுவது. அவர்களால் கஷ்டப் படும் பெண்களைத் திறமையற்றவர்களாய் வாயில்லாப் பூச்சிகளாய், பயந்தவர்களாய்க் காட்டுவது. ஒரு நாள் பூராவும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சராசரிப் பெண் மனதளவில் மிகவும் பாதிக்கப் படுகிறாள். அவளுக்குத் தன் நிலைமையை நினைத்துத் தன்னிரக்கம் ஏற்படுகிறது. தான் வாழும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா என்று எண்ணுகிறாள். மேலும் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் பெண்கள் உடுத்தும் உடைகள், அணியும் ஆபரணங்கள் இந்தப் பெண்களின் கருத்தையும், கவனத்தையும் கவருகின்றன. ஆனால் சராசரிப் பெண்களால் வாங்க முடியாத அளவுக்கு உச்சத்தில் இருக்கும் அவற்றின் விலைகள். ஆகவே பெண்களுக்குத் தேவை பணம், அதனால் வரும் ஆடம்பர வாழ்வு. அதற்காகத் தன்னையே அழித்துக்கொள்ளவும் தயங்கவில்லை அவர்கள்.

மேலும் இன்றைய அவசர உலகில் கணவன், மனைவி இருவரும் அநேகமாய் வேலைக்குச் செல்கிறார்கள். மனைவிக்கு அலுவலகம் இருக்கும்போது கணவனுக்கு இருக்காது. கணவன் அலுவலகம் சென்றால் மனைவி வீட்டில் இருப்பாள். ஆக, பெண்களுக்கு முதல் எதிரி இந்தத் தனிமையே. வீட்டில் இருக்கும் பெண்கள்தான் என்றால் நாள் முழுதும் தொலைக்காட்சித் தொடர்களே அவர்களின் ஒரே பொழுதுபோக்கு என்றாகிவிட்டது. அதிலோ பெண்கள் தைரியமாய் என்னவெல்லாம் செய்கிறார்கள்? தனிமையில் வாடும் பெண்கள் தங்களுக்கு ஆறுதல் சொல்லவும், தங்கள் அலங்காரத்தைப் பார்த்து ரசிக்கவும் யாரானும் இருக்க மாட்டார்களா என உள்ளூர ஏங்குகிறார்கள் என்பது சில உளவியல் நிபுணர்களின் கருத்து.  அதனால்தான் அவர்கள் பாதை மாறுகிறார்கள் என்பதும் அவர்கள் கருத்து. முன்பு கூட்டுக்குடும்பமாய் இருந்த போது இந்தப் பிரச்சினை அதிகம் எழவில்லை. அன்பைத் தேடி ஏங்குவதும் தனிமை தரும் சுதந்திரமும் காரணங்களாய்ச் சொல்கிறார்கள். நம் வீட்டில் நம் கணவனிடமும் நம் குழந்தைகளிடமும் கிடைக்காத அன்பா வெளியில் கிடைக்கப் போகிறது? விசித்திரமாய் இல்லை? ஏன் அவர்கள் கணவன்மார்களிடம் மனம் விட்டுப் பேசி, இதைத் தீர்த்துக்கொள்ளக் கூடாது. குழந்தை பெற்ற பெண்கள் என்றால் ஏன் குழந்தைகளோடு பொழுது போக்கக் கூடாது? ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. குழந்தைகளையும் இன்று தொலைக்காட்சியின் சில நிகழ்ச்சிகள் பெருமளவில் பாதித்திருக்கின்றன. அதைப் பற்றி அடுத்துப் பார்ப்போம். இப்போது பெண்களின் இந்த நிலைமைக்குத் தீர்வு என்னவென்று யோசிக்கலாம்…

38 Replies to “சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள்”

  1. //ஓர் ஆண் தன் மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணோடு உறவு பூணும் பட்சத்தில் சட்டம் அவன் மேல் வலிமையாகப் பாய்கிறது. அதுவே ஒரு பெண் என்றால் மென்மையாக அணுகுகிறது. ஆணும் பெண்ணும் சரிசமம் என்று வருகிறபோது இதில் மட்டுமே ஏன் பெண்ணிடம் மென்மையான அணுகுமுறை??//

    அத்தகைய பெண்ணை வஞ்சிக்கப்பட்டவள் என்று கூறிவிடுகின்றனர் பெண்ணிய வாதிகள்! ஒருஆணுடன் பழகும் போதே அவன் திருமணம் ஆணவன் என்ற அறிவு பெண்ணுக்கும் வேண்டும் என்பதை பெண்ணிய வாதிகள் ஏற்பதாய் இல்லை. எல்லாப் பழியும் ஆண்களுக்கே! ஏதோ, உங்களைப் போன்று சமூகத்தின் போக்கை புரிந்து கொள்ளும் பெண்களும் இருப்பது ஆறுதல் அளிக்கிறது.

  2. Good one madam. I always used to wonder, why no womens liberation activist voice against the vulgarity show in movies and TV ads? Every other advertisement in TV shows that all ladies run behind a man, when the man uses that product. Are they saying that women are so week hearted that they can be fooled so easily? Why no Shabana Asmi, or Brinda Karat opposes such ads? In all movies the heriones will not have money to buy dress…they will be shown as Show peice of vulgarity..no women’s activits will voice against such obscenity.

    Fairness cream ads – are they saying that dark complexion women (these days men as well) are low grade citizens in the country? If such ad is aired in the western countries, then it will be blown out of proportion as racism or aparthied. Our country people are so foolish that they dont even understand that the ads are spreading Racism and aparthide.

    We can go on and on..

    ‘Womens liberation’ and ‘secularism’ are the most misused words in India.

  3. என்ன சொல்வது இது ஒரு பெண் பத்திரிக்கையில் வெளியே வரவே வராது . அருமையான சிந்தனைகள் !

    🙁

    ஒவ்வொரு உயிருமே தன்னளவில் வித்தியசத்துடனும் இருக்கும் பொழுது
    சமம் எங்கே வருகிறது ? பெண்களுக்கு பெண் தன்மை குறைந்து வருவதும் ஆணுக்கு ஆண்தன்மை குறைந்து வருவதும் தான் தற்பொழுது பேஷன் !!!

    சஹ்ரிதயன்

  4. Pingback: Indli.com
  5. //கேட்டால் காலம் காலமாய்ப் பெண்கள்தான் அடிமையாக நடத்தப்படுவதாய்ச் சொல்லுவார்கள். பெண் எப்போது அடிமையாய் இருந்தாள்?//
    இது பொதுவானதாக கருத முடியாது மேடம் .இன்னும் சில மதங்களில் அடிமையாகத்தான் வைத்திருக்கிரார்கள்,நம் மதத்தில்தான் இவ்வளவு சுதந்திரமும்.

    உங்கள் கட்டுரையின் மற்ற எல்லாம் மிக சரியானதே மேடம்.அதிலும் தொலைகாட்சி தொடர்கள் பற்றிய தங்கள் கருத்து இன்றைய குடும்ப பெண்கள் அவசியம் கவனிக்க வேண்டியது.இது ஒரு வியாதி ஆகிவிட்டது பெண்கள் முதலில் இதுபோன்ற டிவி தொடர்களை பார்ப்பதை நிறுத்த வேண்டும்.டிவி சீரியலை ஒழிக்க வேண்டும்.
    தங்கள் சிறந்த படைப்புக்கு நன்றிகள் பல.

  6. நானும் இது பற்றி எழுத நினைத்து இருந்தேன்.

    இந்த பெண்ணிய பிறழ்வுகள் கவலை அளிக்கிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது

  7. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களே
    இன்றைய நிலையில் மிகவும் தேவையான கட்டுரை.பாராட்டுக்கள்.
    பெண்ணீய, ஈய , பித்தளை, கூட்டங்கள் மனித உரிமை கூட்டங்களை போல் தான். சிகப்பழகு கிரீம்களை கண்டு கொள்வதில்லை.
    சமீபத்தில் ஒரு பன்னாட்டு துரித உணவு நிறுவனம் -அவர்கள் விளம்பரத்தில் காட்டியிருப்பார்கள்- வெறும் 50 ரூபாய்க்கு கிடைக்கிறதாம்-ஒரு இளைஞன் 5 பெண்களுக்கு அதை வாங்கி கொடுத்து அவர்களும் ஏதோ உலகமே கிடைத்து விட்டதைப்போல் மகிழ்வார்கள்.இதில் 5 பேரை ஒரே நேரத்தில் date செய்வான் அவன்.
    aftershave விளம்பரங்களோ கேட்கவே வேண்டாம்.
    இதையெல்லாம் “சுதந்திரம் ” என்று சொன்னால் ஒரு சமூகம் எங்கே தான் போகுமோ?
    தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவின் கவனத்திற்கு-
    கட்டுரையின் முதல் பத்தியில் பூவரசி , சிறுவன் கொலை சம்பந்தப்பட்ட படம் மனக்கலக்கத்தை ஏற்படுத்துகிறது. நம் வெகுஜன ஊடகங்கள் பிரசுரம் செய்திருக்கலாம்.
    இங்கே பார்ப்பது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
    அன்புடன்
    சரவணன்

  8. “பெண் அடிமைத்தனம் போகவேண்டும், ஆணாதிக்கக் இந்தியக் கலாச்சாரம் பிற்போக்கானது” என்று சதா கூறுபவர்கள் ஒரு நாளாவது சவுதி, பாகிஸ்தான், பாங்க்ளாதேஷ் ஈரான் முதலான இசுலாமிய நாடுகளில் — ஏன் மேலை நாடுகளில் கூட இசுலாமிய குடியிருப்புகளில் — நடக்கும் ‘honor killings’ (குடும்ப மானம் காப்பதற்காகத் தவறு செய்த பெண்ங்களைக் கொலை செய்தல்) என்னும் கொடூரமான சம்பவங்களை ஒரு போதாவது கண்டித்ததுண்டா? எத்தனை தடவை ஷபானா ஆஸ்மீயும், ஜாவெத் அக்தரும், ப்ருந்தா காரடும், படத்தில் உள்ள மற்ற பொடலங்கா பீட்ரூட்டும், அத்தகைய இசுலாமிய நாடுகளுடன் நம் அரசு நட்பு வைக்கக்கூடாது என்று தெருவில் நின்று போராடியுள்ளார்கள்? இதிலிருந்தே தெரிகிறது இந்த “பெண்விடுதலை” சாம்பியன்களின் லக்ஷணம்.

  9. திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களே!

    இந்த உலகில் பெண்களின் அடாவடியை எதிர்ப்பது நான் மட்டுமே என்று
    நினைத்திருந்தேன். ஒரு பெண்ணே இப்படி எழுதியிருப்பது மனதிற்கு
    இதமாய் இருக்கிறது. இன்னும் உலகில் தைரியமாக கருத்தை முன் வைக்க
    பெண்கள் உள்ளார்கள் என்பது குறித்து சந்தோஷம்.

    நானும் என் பங்கிற்கு சில தகவல்களை தருகிறேன்.
    (1)ஹில்லாரி கிளிண்டன் அமேரிக்காவில் ஜனநாயக கட்சியின் சார்பில்
    அதிபர் பதவிக்கு நின்று தோற்றவுடன் அவர் கூறியது.
    “இன்னும் (இன்றும்) பல அதிகார மட்டங்கள் ஆணாதிக்க மனோபாவத்தில்
    இருப்பதால்தான் நான் தோற்றேன். அவர்கள் (பதவியில் உள்ள ஆண்கள்)
    Mysogynistsஆக (One Who hates women) உள்ளார்கள்.”
    இதில் கவனிக்க வேண்டிய விஷயம். அவருக்கு பல மில்லியன் ஆண்கள்
    ஓட்டளித்தார்கள். அதாவது அவருக்கு ஓட்டு போட்டால் சரி. இல்லை
    யென்றால் ஆண்கள் Mysogynists.

    (2)Provoked என்றோரு படம். ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாக
    வைத்து எடுத்த படம். ஒரு பஞ்சாபி பெண் பிரிட்டனில் வேலை செய்யும்
    ஒரு பஞ்சாபி ஆணுக்கு மணம் முடிக்கப்பட்டு பிரிட்டனுக்கு செல்கிறாள்.
    அவனுக்கு, முன்னரே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. சில முறை
    அவளை அடிக்கிறான். ஒரு நாள் இரவு அவன் தூங்கும் பொழுது இந்த
    புதுமைப்பெண் அவன் தலையில் உருட்டு கட்டையால் அடித்து கொன்று
    விடுகிறாள். கீழ்நிலை நீதிமன்றம் அவள் குற்றவாளி என்று தீர்ப்பு
    வழங்குகிறது.
    இப்பொழுது பெண்ணுரிமை சங்கங்கள் நுழைகின்றன. அவள் செய்தது
    “Act of Self Defense” என்று வாதாடுகின்றன. பெண்ணுரிமை பேய்
    பிடித்திருக்கும் நீதிபதிகளும் அவளை விடுதலை செய்கின்றனர்.
    கணவன் அடித்தால் (1)போலீஸுக்கு சென்று முறையிட்டிருக்கலாம்.
    (2)இந்திய தூதரகத்திற்கு சென்று முறையிட்டிருக்கலாம்.(3)இந்தியாவில்
    உள்ள பெற்றோருக்கு தகவல் சொல்லி இந்தியாவிற்கே சென்றிருக்கலாம்.
    இதையெல்லாம் விட்டு தூங்கும் கணவனை (அவன் கெட்டவனாகவே
    இருந்தாலும்) உருட்டு கட்டையால் அடித்து கொல்வது சரியல்ல என்று
    கூற ஒரு பயலுக்கும் தைரியம் இல்லை.
    இதில் இன்னொரு கொடுமை. இந்த வழக்கிற்கு பிறகு பிரிட்டன்
    பாராளுமன்றம் “Self Defense” என்பதற்கான விளக்கத்தையே மாற்றி
    சட்டம் இயற்றியுள்ளது.

    (3)சில வருடங்களுக்கு முன்னர் சட்டமாக்கப்பட்ட “Domestic Violence
    Act”ஐ பயன்படுத்தி பல பெண்கள் கணவனின் குடும்பத்தை மிரட்டி
    பணம் பறிப்பது தெரியவந்துள்ளது. முதல் 6 மாத அளவில் தாக்கல்
    செய்யப்பட்ட 243 வழக்குகளில் 220 வழக்குகள் போலியானவை என்று
    போலீஸ் கூறுகிறது. இந்திய உள்துறை அமைச்சகம் எல்லா
    மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி கணவனையும், மாமனார்
    மாமியாரையும் கைது செய்வதற்கு முன் வழக்கை ஒழுங்காக விசாரிக்க
    வேண்டும். மேலும் பெண்ணுரிமை சங்கங்களின் கூச்சலுக்கு செவி
    சாய்க்க கூடாது என்றும் கூறியுள்ளது.
    டெல்லியில் ஒரு கணவன் தன்னை மனைவி அடித்து துன்புறுத்துவதாகவும்
    தனக்கு இந்த சட்டத்தின் மூலம் நீதி கிடைக்குமா என்றும் கேட்டது
    பலரை அதிர்ச்சி அடைய வைத்தது.

    (4) வேலை பார்க்கும் பெண்களுக்கு மட்டும் அரசாங்கம் 5000 ரூபாய்
    வரிவிலக்கு அளிக்கிறது. ஒரே வேலையை செய்யும்போது ஒரு பெண்ணிற்கு
    மட்டும் வரிவிலக்கு அளிப்பது எந்த அடிப்படையில் சரி என்பது என்னை
    போன்ற சாதாரண மூளை உள்ளவனுக்கு புரிய வில்லை.

    (5)சுமதி என்னும் பிரபல வழக்கறிஞர் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த
    பேட்டியில்
    “பெரும்பான்மையான பெண்கள் இன்று கணவனால் துன்புறுத்தப்படும்
    போது எதிர்த்து நியாயத்தை பெறுகிறார்கள். ஆனால் குழந்தை இருந்தால்
    அதன் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதற்காக கணவனின் அக்கிரமத்தை
    பொறுத்து கொள்கிறார்கள். இனி குழந்தையை பற்றிக்கூட கவலைப்
    படாமல் தன் எதிர்காலத்திற்காக வாழ வேண்டும்”
    எனக்கு பெரியார் கூறியது நினைவுக்கு வருகிறது. ஒரு பெண் விடுதலை
    அடைய விரும்பினால் கல்யாணம் செய்து கொள்ள கூடாது. அப்படி
    செய்து கொண்டாலும் குழந்தை பெற்று கொள்ள கூடாது. பெரியாரே
    தேவலை!

    (6) அமேரிக்காவில் ஒபாமா அதிபராகியவுடன் இதுவரை
    உச்சநீதிமன்றத்திற்கு 2 காலியிடங்கள் வந்தன. சொல்லி வைத்தாற்போல்
    2 முறையும் பெண்களையே நியமித்துள்ளார். அமேரிக்காவில் அனுபவம்
    பெற்ற ஆண்கள் இல்லை போலிருக்கிறது.

    (7) வேலை பார்ப்பதில் பாதிக்கு பாதி பெண்கள் உள்ளது சுவீடன்
    நாட்டில்தான். ஆனால் பெரிய அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை
    அநியாயம் நடப்பதும் அங்குதான். பொருளாதார சுதந்திரம் பெண்
    சுதந்திரத்தை தந்து விடாது என்பது வெளிப்படையாக தெரிந்தும் அதை
    நோக்கியே பெண்கள் செல்வதுதான் என்னை பொறுத்தவரை
    “பெண் புத்தி-பின் புத்தி”.

    (8) எப்பொழுதுமே சிறுபான்மையினர் “Victim Status Card”ஐ கையில்
    வைத்து கொள்வார்கள். பெண்களும் அவர்களின் இலக்கை அடையும்
    போது “தன்னுடைய திறமை” என்பது. ஆனால் தோற்றுப்போனால்
    ஆண்களின் சதிவேலை என்பது.

    இந்த இரட்டை வேடம் போடுவதிலிருந்து பெண்கள் வெளியேறி
    பாரதி கூறிய உண்மையான பெண் சுதந்திரத்திற்கு செல்வார்கள் என்று
    நம்புவோம்.

    இந்த நிலை தொடர்ந்தால் ஆண்கள் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்கும்
    நிலை வரும்!!!

  10. இது முழுக்க முழுக்க பிற்போக்கான கட்டுரையாக இருக்கிறதே…

  11. நல்ல கட்டுரை. நன்றி.

    கட்டுரை ஆசிரியை இதையும் கூறி இருக்கலாம் :

    பிற மதங்களில் பெண்டிருக்கு ஓரளவுக்காவது நீதிபோதனை உண்டு. பிற மதங்களில் உள்ளதைவிட ஹிந்துப் பெண்களே கட்டுப்பாடற்று, கணவனை மதிக்காமல், கடவுள் நம்பிக்கை குறைந்து செயல்படுகின்றனர். பக்தி, விரதம், தியாக மனப்பான்மையுடன் இருந்த அவர்களின் மாற்றம் கவலை அளிக்கிறது.

    (edited and published)

  12. முற்போக்கு தனமான அமாவசை ஆதிரை வாழ்க

  13. பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்
    காவல் துறையினர் எந்த கொலை கேசு வந்தாலும் அதில் கள்ளக்காதல் ஆங்கிள் உள்ளதா என்பதை கூர்ந்து கவனிக்கின்றனர். அதிலும் செல்ஃபோனின் பங்கு கள்ளக்காதல்களில் மிகவும் கணிசமானது என்பதால் விமான விபத்து நிகழ்ந்தவுடன் கருப்புப் பெட்டியை தேடுவது போல் கொலை கேசுகளில் செல்ஃபோனைத்தான் முதலில் தேடுகிறார்கள்!

    நம் நாட்டுச் சட்டங்களும் தீர்ப்புக்களும் ஆண்கள்தான் தவறிழைப்பார்கள், பெண்கள் அனைவருமே அபலைகள், கள்ளம், கபடு, சூது அறியாத பேதைகள் என்னும் அடிப்படை கருத்தாக்கத்தில்தான் கட்டமைக்கப்படுகின்றன‌.

    தவறிழைப்பவர்களில் ஆணென்ன, பெண்ணென்ன!

    https://tamil498a.com/

  14. மேன்மை தாங்கிய இந்திய சட்டப்படி கள்ள தொடர்பு கேஸ் பதிவு செய்தால் (Section 497 IPC), கள்ள தொடர்பில் ஈடுபடும் பெண்ணுக்கு எந்த தண்டனையும் கிடையாது. இது எப்படி இருக்கு? கள்ள தொடர்புக்கு காரணம் ஆண்கள் மட்டுமே என்பது இந்திய சட்ட மேதைகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. புருஷன் இல்லாத போது கள்ளதொடர்பில் ஈடுபடும் பெண்கள், குற்றம் செய்தவள் அல்லவாம், அவள் ஒரு அப்பாவியாம். குடும்பம் என்பது பல்கலைக்கழகம் எனவும், அதில் அந்த குடும்பத்தலைவி ஆணி வேர் எனவும் உள்ள இந்திய குடும்ப அமைப்பில், கட்டிய கணவனுக்கு துரோகம் செய்து கள்ள தொடர்பில் ஈடுபட்டு, கும்பத்தையும் நாசமாக்கி, இரு பெரும் குற்றங்களில் ஈடுபடும் பெண்களுக்கு தூக்கு தண்டனை வழங்கவேண்டும். அதை விட்டு கள்ள தொடர்பில் ஈடுபடும் பெண்கள் அப்பாவிகள் என்கிறது இந்திய சட்டம்.

  15. இன்னும் எத்தனை குடும்பங்கள் தான் இந்த நாசமாகப்போன கள்ள தொடர்பு காரணமாக சீரழிந்து போகப்போகிறதோ? கள்ள தொடர்பு வைத்து கட்டிய கணவனுக்கு, பெற்ற பிள்ளைகளுக்கு பச்சை துரோகம் செய்யும் நாதாரி நாய்களை தண்டிக்கும் வகையில் IPC 497 section சட்டத்தை கடுமையாக்க வேண்டும் ஆனால் மேன்மை தாங்கிய இந்திய சட்டப்படி கள்ள தொடர்பு கேஸ் பதிவு செய்தால், கள்ள தொடர்பில் ஈடுபடும் பெண்ணுக்கு எந்த தண்டனையும் கிடையாது. இது எப்படி இருக்கு? கள்ள தொடர்புக்கு காரணம் ஆண்கள் மட்டுமே. கள்ள தொடர்பில் பெண் குற்றம் செய்தவள் அல்ல, அவள் ஒரு அப்பாவி ஆவாள் என்கிறது இந்திய சட்டம். ஒரு பெண்ணின் முழு அனுமதி இல்லாமல், ஒரு ஆணால், அவளுடன் கள்ள தொடர்பு வைக்க முடியுமா?

    இது மாதிரி கள்ள தொடர்பில் ஈடுபடும் சிறுக்கிகள் தான், தங்கள் தவறை மறைக்க கணவன் & அவனின் மொத்த குடும்பமும் வரதட்சணை கொடுமை செய்தார்கள் என பொய் கேஸ் போட்டு, போலீஸ் & கோர்ட் என அலைய விட்டு குடும்பத்தை நாசம் பண்ணி வருகிறார்கள்.

  16. தமிழ் படிக்க தெரிந்த அனைவரும் கீழ்உள்ள வலை தளத்திற்கு சென்று, எப்படி இன்றைய இந்தியாவில் கள்ள தொடர்பு, கணவன் சொத்தை கொள்ளை அடித்தல், கணவனை கட்டுக்குள் வைப்பது, கணவனின் பெற்றோரை துரத்தி விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு அது நிறைவேறாமல் போன, கையும் களவுமாக பிடிபட்ட பெண்கள் கணவன் & அவரின் பெற்றோர் மீது வரதட்சணை கொடுமை என பொய் வழக்கு போட்டு கோடிக்கணக்கான ஆண்களின் வாழ்க்கையை நாசம் ஆக்குகிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.

    tamil498a.com, marumagal.blogspot.com, ipc498a-misuse.blogspot.

  17. திருமணம் என்னும் அற்புதமான, ஆயிரம் காலத்து பயிர் என கூறப்படும் பந்தத்தை உதறிவிட்டு, தொட்டு தாலி கட்டிய கணவன் & அவரின் குடும்பத்தின் மீது, போலீஸ் இல் வரதட்சணை கொடுமை கிரிமினல் வழக்கு பதிவு செய்து, கடுங்காவல் தண்டனை வாங்கிக்கொடுக்க, இந்த காலத்து பெண்கள் முன்வருவதை செய்திகளில் படித்து ஆச்சரியமும், கவலையும் அடைந்து, அந்த அளவுக்கு கொடுமை செய்தார்களா? என நாம் எல்லோரும் வியந்தது உண்டு. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக, பதிவு செய்யப்படும் வரதட்சணை கொடுமை வழக்குகளையும், அதனை பதிவு செய்யும் மாதர் குல திலகங்கள் பற்றியும் ஆய்வு செய்ததின் அடிப்படையில், வரதட்சணை கொடுமை வழக்குகளை பதிவு செய்வதன் பின்னணி காரணங்களாக கீழ்க்கண்ட வகை பெண்களை பற்றி அறிக்கை கொடுத்து உள்ளார்கள்:
    1 . திருமணதிற்கு முன்னர் வேறு ஆணுடன் தொடர்பு இருந்த பெண்கள், அதனை மறைத்து மணம் செய்துவிட்டு, பழைய காதலனுடன் கள்ள தொடர்பு கொண்டுள்ள பெண்கள் / தொடர்பை புதுப்பிக்க துடிக்கும் பெண்கள்.

    2 . திருமணத்திற்கு பின்னர், கணவன் இல்லாத சமயங்களில் பக்கத்து வீட்டு / வேலை செய்யும் இடத்து ஆண்களுடன் கள்ள தொடர்பு வைத்து உள்ள பெண்கள்.

    3 . திருமணத்திற்கு முன்னர் & பின்னர் பெண்ணின் வீட்டை சேர்ந்த ஆண் உறவினர்களுடன் (தந்தை, அண்ணன், தம்பி, தாய் மாமன், அக்கா புருஷன் போன்றவர்கள்) கேடு கெட்ட உறவு வைத்து உள்ள பெண்கள்.

    4 . தீராத நோய்களை (தோல் வியாதி, கற்பம் சமந்தமான வியாதி, பாலுறுப்பு வியாதி, மன ரீதியான நோய்கள்) மறைத்து ஏமாற்றி மணம் செய்த பெண்கள்.

    5. உண்மையான கல்வி தகுதியை மறைத்து கல்யாணம் பண்ணிய பெண்கள்.

    6. திருமணத்திற்கு பின்னர் கணவனின் சொத்தை முற்றிலும் தன் பெயரில் எழுதி, கொள்ளை அடிக்க நினைக்கும் பெண்கள்.

    7. திருமணதிற்கு பின்னர் கணவனின் வீட்டை சேர்ந்த பெரியவர்களை, வீட்டை விட்டு துரத்த நினைக்கும் பெண்கள்.

    8 . திருமணத்திற்கு பின்னர் பெண்ணின் பெற்றவர்களின் கடனையும், அவர்களின் ஊதாரிதனமான செலவுகளுக்கும், கூட பிறந்த தறுதலைகளுக்கும் பணம் தேவையென கணவனிடமும், அவரின் குடும்பத்தாரிடமும் சண்டையிடும் பெண்கள்.

  18. இந்தியாவில் பெண்கள் பிரச்னைகளை பற்றி பேச, அவர்களுக்காக குரல் கொடுக்க தேசிய அளவில் “தேசிய மகளிர் ஆணையமும்” , ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில மகளிர் ஆணையமும், பெண்கள் முனேற்றதிர்க்காக பெண்கள் & குழந்தைகள் நல அமைச்சகமும், மத்திய அரசால் அமைக்கப்பட்டு, பெண்களுக்காக வருடத்திற்கு ருபாய் 9000 கோடி ஒதுக்கபடுகிறது. இது போக சுமார் 2 லட்சம் பெண்கள் அமைப்புகள் & சங்கங்கள் அரசால் அங்கீகரிப் பட்டு அரசின் உதவி தொகையை பெற்று செயல்பட்டு வருகின்றன.

    ஆனால் மொத்த மக்கள் தொகையில் 60% உள்ள, மொத்த வசூலாகும் வருமான வரியில் 88 % கட்டும் ஆண்களுக்கு என குரல் கொடுக்க, அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை முறையிட என எந்த விதமான அமைப்போ, நல வாரியமோ, ஆணையமோ, சங்கங்களோ இந்தியாவில் இல்லை. இந்தியா சுதந்திரம் வாங்கி 63 ஆண்டுகளாகியும், இது வரையிலும் ஆண்கள் நலத்திற்காக ஒத்த ருபாய் கூட அரசால் ஒதுக்கப்பட்டது இல்லை.

    இதை விட பெரிய கொடுமை, வாயில்லா ஐந்து அறிவு ஜீவன்களுக்கு உதவி செய்ய, போராட சுமார் 1000 க்கும் மேற்ப்பட்ட சங்கங்கள் அமைப்புகள் இந்தியாவில் உள்ளன. (மொத்த சங்களின் லிஸ்ட் ஐ இங்கு பார்க்கவும் – https://www.charitiesinindia.org/2008/06/animal-welfare-organisations-in-india.html).

    இன்றைய இந்தியாவில், வேலை செய்யும் இடத்தில் கொடுமை நடக்கிறது, பொது இடத்தில் கொடுமை நடக்கிறது, வீட்டில் கொடுமை நடக்கிறது என ஒரு ஆண் முறையிட எந்த விதமான அமைப்பும் இல்லை.

    தயவு செய்து சிந்தித்து பாருங்கள் ஆண்களே. நாட்டிற்காக, குடும்பத்திற்காக கடினமாக உழைத்து, கஷ்டப்படும் ஆண்களுக்கு உதவி செய்ய எந்த அமைப்பும், அரசாங்கமும் இல்லை என்றால் நாம் எல்லோரும் நாயை விட, பன்னியை விட, பூனையை விட கேவலமான ஜென்மங்களா? இந்திய ஆண்களுக்கு என குரல் கொடுக்க தேசிய ஆண்கள் ஆணையம், ஆண்கள் நல அமைச்சகம் போன்றவை இருந்தால் ஆண்களுக்கு கொடுமை நடக்குமா? ஒரு பெண்ணுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், அது பொய்யாகவே இருந்தாலும், தேசிய மகளிர் ஆணையமும், மாநில மகளிர் ஆணையமும், பெண்கள் & குழந்தைகள் நல அமைச்சகமும், 2 லட்சம் பெண்கள் சங்கங்களும் சும்மா இருக்குமா? ஆனால், ஒரு ஆணுக்கு அநீதி நடக்கிறது என்றால் அதனை தட்டி கேட்க ஒரு நாதியும் இல்லை இந்த நாட்டில்.

  19. மேலே கருத்து கூறியிருக்கும் சில நபர்கள், பொய்யான வரதட்சனை கொடுமை வழக்குகளினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என அறிகிறோம்.

    வரதட்சனை கொடுமை கேஸ் போட்டால் பெண்ணுக்கு சார்பாக தான் தீர்ப்பு வரும் என்ற மாயையை உண்டாக்கி, சகட்டு மேனிக்கு பொய் வரதட்சனை கேஸ்களை போட்டு, கேடுகெட்ட பல போலீஸ் & வக்கீல்கள், பணத்தை கொள்ளை அடிப்பது மட்டும் இல்லாமல், அந்த பெண்களின் வாழ்க்கையும் நாசமாக்கி, பல குடும்பங்களை அழித்து, பல குழந்தைகளை தந்தை என்ற உறவே இல்லாமல் செய்து, இந்திய குடும்ப அமைப்பை சீரழித்து வந்தனர்.

    ஆனால், கடந்த 2 வருடங்களில் பொய் வரதட்சனை கேஸ் போடுபவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும், காசுக்கு பொய் சாட்சி சொல்ல வரும் ஈனப்பிறவிகளின் மீதும், அவர்களுக்கு துணை இருக்கும் ஆட்களின் மீதும், பல்வேறு கேஸ்களை போடுவதின் மூலம் பல கணவர்கள் வெற்றி பெற்று உள்ளனர்.

    வரதட்சனை கொடுத்தற்காக பெண் வீட்டாரின் மீது வழக்கு போடுவது, 50, 100 பவுன் நகை போட்டதாக கூறுபவர்களின் மீது வருமான வரி துறையில் புகார் செய்து விசாரணைக்கு ஏற்பாடு செய்வது, பொய் கேஸ் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் இல் வைத்து கட்டபஞ்சாயத்து செய்வது பற்றி மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் செய்வது, போன்ற முறைகளின் மூலம் பொய்யான வரதட்சணை கொடுமை கேஸ் போடுபவர்களின் கொட்டத்தையும், அவர்களுக்கு துணை போகும் ஈனபிறவிகளின் கொட்டத்தையும் அடக்கி வருகிறார்கள்.

    இனிமேல் பொய் வரதட்சனை வழக்கு போட்டு பணத்தை கொள்ளை அடிக்க நினைப்பவர்களின், தனது தவறை மறைக்க நினைப்பவர்களின் பருப்பு வேகாது.

    (edited and published)

  20. I agree adultry is bad but it should not be punishable by Common law, whether the culprit is man or woman. Basically, it is a personel matter between a husband his wife and they should settle it among themselves.Period.
    I find it hard to believe that adultry is a punishable offence for men in India.

  21. ஒரு பெண் இப்படி சமுதாய அவலங்களை அழகாக ஆணித்தரமாக எழுதுகிற போது அதனுடைய வலிமை அதிகம். பெண்ணியக்கவாதிகள் என்று தாங்கள் அழைப்பது வாழவெட்டிகள் என்ற தமிழ் சொல்லின் மறுமொழி . அவர்களின் உண்மையான அக்கறை தங்களை போன்ற ஒரு இனத்தை உருவாக்க முயற்ச்சிக்கிறார்கள்.
    பெண்கள் இந்த நாட்டில் மிக மிக உயர்வானர்கள் உண்மையிலேயே இந்த போலி , வாழாவெட்டி பெண்ணியக்கவாதிகளை அடையலாம் தெரிந்து அழித்தாலே . பெண்ணியம் மீண்டும் பெருமை பெரும்.

    அதேபோல் பெண் ஆதரவு காண்பித்து காவல் துறையும், நீதித்துறையும் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்கிறார்கள் . எல்லா அரசாங்கமும் ஓட்டை தவிர வேறு எதிலும் அக்கறையில்லாமல் சமுதாய அழிவை நோக்கி பயணிக்க வைத்துள்ளார்கள். சரியான தருணத்தில் எழுதிய தங்களுக்கு என் சார்பாகவும் , உண்மையான பெண்கள் சார்பாகவும் , பாதிக்கப்பட்ட ஆண்கள் சார்பாகவும் கோடான கோடி நன்றிகள். தொடந்து எழுதவும்.

  22. அனைவரின் கருத்துக்களையும் தெரிந்து கொண்டேன். பின்னூட்டமிட்ட அனைவருக்கும் தனித் தனியாய்ப் பதில் சொல்ல முடியாமைக்கு மன்னிக்கவும். கட்டுரையிலேயே பதில்களைக் கூடியவரை தர முயற்சிக்கிறேன். நன்றி அனைவருக்கும்.

  23. பெண்களுக்கு குடுக்கபட்ற சலுகைய இப்படி உபயோகிக்கறது கேக்கவே கஷ்டமா இருக்கு… நல்ல விழிப்புணர்வு பதிவு

  24. மதிப்பிற்குரிய கீதாஜி. வணக்கம்.
    நல்லதொரு விஷயத்தை மிக நன்றாகவே கையாண்டிருக்கிறீர்கள். ஆண்கள் இதை எழுதியிருந்தால் ஆணாதிக்க மனோபாவத்தில் எழுதி இருக்கிறார்கள் என்று இந்த கட்டுரை புறந்தள்ளப் பட்டிருக்கும்.
    ”பெண்ணிய பிறழ்வுகள்” பற்றிய உங்கள் அலசலை பெண்ணியவாதிகள் தவறாமல் கணக்கில் கொள்ளவேண்டும். இந்துமதத் தத்துவத்தில் பெண்மையை தெய்வமாக கொண்டாடுகிறோம். நிச்சயம் பெண்கள் தங்கள் உரிமைக்காக போராடவேண்டும். ஆனால் இது போன்ற பிறழ்வுகள் தொடர்ந்தால் அது அவர்களின் மெய்யான உரிமைப் போராட்டத்தை முன் எடுத்துச் செல்லுவதற்கு தடையாகவும் ஆகிவிடக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. பூனைக்கு மணி கட்டி விட்டீர்கள். நல்லது நடக்க இறையருள் வேண்டுகிறேன். பெண்மை வாழ்கவென்றே கூத்திடுவோமடா என்று பாடிய மஹாகவி பாரதிக்கு வணக்கங்களுடன்.
    நன்றி.

  25. அன்புள்ள கீதா சாம்பசிவம் அவர்கட்கு,

    உங்களின் கட்டுரையில் இருக்கும் உங்கள் சிந்தனை வரவேற்கத்தக்கதே எனினும், இக்கட்டுரை சமநிலையில் எழுதப்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.

    ஆண்களிலும் சரி பெண்களிலும் சரி எல்லா வகை குணங்களையும் கொண்ட மனிதர்கள் இருக்கின்றனர்.

    அனைவரும் அறிவினில் விழிப்பு நிலையுடன் செயல்படும் குணங்களை பெறும்பொழுது இம்மாதிரியான நிகழ்வுகள் நிகழா.

    இதற்கு ஒரே வழி ஆன்மீகம் மட்டுமே.

    ஆன்மா + இகம். ஆன்மாவினை மேன்மையுறச் செய்யும் ஒரு நெறிமுறையினால் மட்டுமே சாத்தியம்.

    பேராசை, கடும்பற்று, சினம், வஞ்சினம், உயர்வுதாழ்வு மனப்பான்மை, முறையற்ற பால்கவர்ச்சி என்ற இந்த அரு குணங்களையும் என்று ஒருவன் சீரமைக்கின்றானோ அன்று மட்டுமே விடியல் பிறக்கும்.

    முறையான உடல்பயிற்சியும் மனப் பயிற்சியும் தேவை. இது 3 வயதுக்குழந்தையிலிருந்து தொடக்கமாகியிருந்தது. இதுவே நம் இந்தியக் கலாச்சாரமாய் இருந்திருந்தது.

    நம் கலாச்சாரத்திலிருந்து வெகு தொலைவில் விலகி நிற்கின்றோம்.

  26. ரிஷி ரவீந்திரன், வருகைக்கு நன்றி, என்னோட கட்டுரை முழுமை அடையவில்லை. அப்போது நான் எழுத நினைத்திருக்கும் கருத்தை எழுதினதும் பார்க்கவும். கருத்துக்கு நன்றி.
    பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் மிகவும் நன்றி. பலரும் ஒரு சார்பு என்று தனி மடலிலும், சாட்டிங்கிலும் சொல்கின்றனர். சிலர் நகர்ப்புறத்தை மட்டுமே எடுத்தாண்டிருப்பதாயும் கூறியுள்ளனர். எல்லாருக்கும் தக்க பதில் கொடுக்கிறேன். சற்று அவகாசம் தேவை. வேறு சில அவசர வேலைகளை முடித்துவிட்டு அடுத்த கட்டுரை! தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  27. //கேட்டால் காலம் காலமாய்ப் பெண்கள்தான் அடிமையாக நடத்தப்படுவதாய்ச் சொல்லுவார்கள். பெண் எப்போது அடிமையாய் இருந்தாள்? எப்போதும் இல்லை! ஆனால் இந்தப்பெண் உரிமை பேசுபவர்களுக்கு என்னவோ பெண்கள் அடிமையாக இருப்பதாயும் அவர்களை வன்கொடுமைக்கு ஆளாக்குவதாயுமே நினைப்பு. //
    போட்டீங்க பாருங்க ஒரு போடு……. கீழ விழுந்து புரண்டு சிரிச்சு மாளலை… வயத்து வலியே வந்துருச்சுங்க… மத்த எல்லா பாயின்டுக்கும் அப்புறம் போவோம்…

    https://tamilhindu.com/2009/09/state-of-widows-in-india-bharathiyar/

    நீங்கல்லாம் ஒத்துக்கற, ஏன் தலைல தூக்கி வச்சுட்டு ஆடற பாரதியே ஏதோ ஒரு காலத்துல பொண்ணுங்க ரொம்ப கஷ்டப்பட்டதா இந்த கட்டுரைல எழுதியிருக்காரே, அதும் இதே தளத்துல வந்திருக்கே அதுக்கு என்ன சொல்றீங்க? அவரும் பொய் சொல்றாரா – பெண்ணுரிமை பேசுறவங்கள மாதிரியே?

  28. சந்திரா, இப்போ எழுதறது பாரதி காலத்துப் பெண்களைப் பற்றி அல்லனு நல்லாத் தெரிஞ்சு வச்சிருப்பீங்க. இப்போதைய நிலையைப்பற்றித் தான் பேச்சு. பாரதி காலத்தில் அவர் கேட்ட பெண்ணுரிமை தான் இன்று இருக்கும் பெண்ணுரிமையா என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அவர் சொன்ன “திமிர்ந்த ஞானச் செருக்கு” என்பதன் அர்த்தம் என்னனும் புரிஞ்சு வைச்சிருப்பீங்க. அதான் இப்போ இருக்கா? இன்னும் சிலர் பழமைவாதினும் சொல்றாங்க. பழமைவாதி என்பதற்கும் கொள்கைப் பிடிப்புக்கும் வித்தியாசம் புரியலையோனு தோணுது. ஒரு பெண் கூட இதற்குப் பின்னூட்டம் போடவில்லை, (அப்பாவி தங்கமணியைத் தவிர) னு நேத்துச் சொல்லிட்டு இருந்தேன். நீங்க பின்னூட்டம் கொடுத்ததுக்கு மகிழ்ச்சி.

  29. //கேட்டால் காலம் காலமாய்ப் பெண்கள்தான் அடிமையாக நடத்தப்படுவதாய்ச் சொல்லுவார்கள். பெண் எப்போது அடிமையாய் இருந்தாள்? எப்போதும் இல்லை! //
    முதலில் இப்படிச் சொன்னீர்கள். பாரதிய மேற்கோளிட்டு நான் கேட்டதும்
    //இப்போ எழுதறது பாரதி காலத்துப் பெண்களைப் பற்றி அல்லனு // அப்படின்னு சொல்றீங்க. மெல்ல மெல்ல இப்படி சொல்றீங்க. உங்க வாதத்துல இருக்கற நகை முரன் உங்களுக்கே புரிஞ்சாச் சரி. ஏன்னா இது மாதிரியான அடிப்படைவாதிகளுக்கு எதையும் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முடியாதுன்னு நான் ஏற்கனவே பல முறை அனுபவப் பட்டிருக்கேன். 🙂

  30. அந்த எம்.எல்.ஏ மேட்டரையே எடுத்துப்போமே. அவங்க எப்படி அமர்க்களம் பண்ணினாங்கன்னு லிங்க் கொடுத்தீங்க. இங்க பாருங்க, அவங்களை செக்யூரிட்டீஸ் எப்படி கையாள்றாங்கன்னு.
    https://www.timescontent.com/syndication-photos/reprint/news/193006/jyoti-kumari.html
    இதை எந்த பெண்ணுரிமை அமைப்பும் எதிர்க்கலைன்றதையும் நீங்க கவனிக்கணும். ரவுடித்தனமா ஒரு ஆண் நடந்துகிட்டா எப்படி அவங்களை நடத்துவாங்களோ அப்படியே இந்த அம்மாவும் நடத்தப்பட்டிருக்காங்க – அதுதான் சரியும் கூட. இதுல ஒரு பொண்ணு இப்படி நடந்துக்கலாமான்னு ஏன் அங்கலாய்க்கணும்? மனிதர்கள் எல்லோருமே நாகரீகமா நடந்துகிட்டா நல்லாத்தான் இருக்கும். ஆனா அப்படி இல்லைன்னும் போது ஆண் கேவலமா நடந்துகிட்டா அது எவ்வளவு தப்போ அவ்வளவுக்கேதான் பெண் அநாகரீகமா நடந்துகிட்டாலும் தப்பா பார்க்கப் படணும். பெண் என்பதால் ஏன் அவகிட்ட கூடுதல் எதிர்பார்ப்பு? ஒரு பெண்ணா இருந்துட்டு அவங்க எப்படி செய்யப் போச்சுன்ற உங்க அங்கலாய்ப்பு உங்களுக்கே சரின்னு படுதுங்களா?

    பாரதி கேட்ட பெண்ணுரிமைதான் இன்னிக்கு இருக்கற பெண்ணுரிமையான்னு கேட்டிருக்கீங்க. பாரதி சொன்னதுதான் பெண்ணுரிமைக்கான எல்லைன்னு யாருங்க முடிவு செஞ்சது? பெண் கல்வியே இல்லாம இருந்த காலத்துல மாயூரம் வேதநாயகம் பிள்ளை தன்னோட பிரதாப முதலியார் சரித்திரத்துல பெண் கல்விக்கு ஒரு காரணம் சொல்றார். வீட்டிலிருக்கும் குடும்பப் பெண்கள் கல்வியறிவில்லாம, ஆண்களோடு அறிவுபூர்வமான சம்பாஷணைக்கு தகுதியில்லாம இருக்கறதாலதான் ஆண்கள் தாசிகளைத் தேடிப் போறாங்க. இது குறையணும்னா, பெண்கள் கல்வியடையணும்னு சொல்றார். அவர் இப்படிச் சொன்ன காலகட்டத்துல இந்த வாதம் ரொம்ப முற்போக்காவும், பெண்களின் உரிமைக்கு குரல் கொடுக்கறதாவும் நிச்சயம் இருந்திருக்கும். ஆனா இன்னிக்கு இதே வாதங்களை படிச்சா உங்களுக்கே அபத்தமா இல்லயா? அப்படியே பெண்ணுரிமை அப்படின்றதோட எல்லைகள், ஏன் எல்லா கருத்துருவாக்கத்தோட எல்லைகளுமே காலத்துக்கு காலம் விரிவாகக் கூடியதுதான்.

    இப்படியே ஒவ்வொரு பாயிண்ட்டா எடுத்து ஆர்க்யூ பண்ணியிருக்கலாம். ஆனா என் முந்தைய பதிலிலேயே சொன்னது போல் உங்கள மாதிரி ஆட்களை புரிஞ்சுக்க வைக்கறது ரொம்ப சிரமம்ன்றதால இதுல பேச வேணாம்னுதான் இருந்தேன். ஆனா எப்பவுமே பெண் அடிமையாயிருந்ததே இல்லைன்னு ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் கொடுத்தீங்க பாருங்க, அதுதான் என்னால தாங்கவே முடியல. அதுனாலதான் பேச ஆரம்பிச்சேன்.

  31. கள்ளக்காதல் என்பது எப்போதும் உண்டு. இருபாலரும் ஈடுபடுவர். அக்காலத்தில் நடந்தபோது ஊடகங்கள் இல்லை. இக்காலத்தில் அவை மிகவும் விளம்பரப்படுத்தபப்டுவதால், அவை பூதாகரமாக உங்களுக்குத் தோன்றுகின்றன.

    ஆன்மிகத்தால் கள்ளக்காதலை ஒழிக்கமுடியாது. காரணம், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனிப்பட்ட அடிப்படைக் காரணங்கள் உண்டு. ஆன்மிகத்தால் ஒழித்துவிட முடியுமென்று சொல்லிதான் கிறுத்துவ பிரச்சாரம் நடக்கிறது என்பதை அறிவீர்களாக. சிறைக்குச்சென்று கைதிகளுக்கு சுவிசேசங்கள் சொல்லப்படுகின்றன்.

    ஆன்மிகம் ஒரு சர்வரோக நிவாரணியென்றால், அதையே பயன்படுத்தி மக்களை திருத்திவிடலாமே! ஏன் செய்யவில்லை. ஏனெனில், ஆன்மிகம் என்பது ஆளைப்பொறுத்துத்தான் பயனளிக்கும்.

    பெண்கள் இப்படிச்செய்கிறார்கள் என்றவர் ஆண்கள் செய்யும்போது அடக்கி வாசிக்கிறார். ஆண்கள் தைரியமாகச் செய்கிறார்கள். ஏனெனில் சமூகம் படிதாண்டும் ஆணை ஆச்சரியமாகப்பார்ப்பதில்லை.

    சமூகம் பெண்ணுக்கென்று ஒரு அளவுகோலை வைத்து காலங்காலமாக திணித்தும் வந்திருக்கிறது. அதை அது விடாப்பிடியாக பிடித்து வருகிறது. ஆணுக்கு இல்லை. பாக்யராஜ் ஒரு சினிமாவில் சொன்னது போல்: ஆணுக்கு கற்பு கிடையாது’ என்று சமூகம் முடிவெடுத்து ஆணுக்கு காம சுதந்திரத்தை நல்கிவிட்டது. தமிழகத்தில் பல ஜாதிகளில், குறிப்பாக, செட்டியார்களில், வைப்பாட்டி வைத்துக்கொள்வது ஒரு கவுரமாகும்.

    ஆணைப்பார்க்கும் பார்வையே பெண்ணுக்கும். ஆனால், மதமும் சமூகமும் அதை ஒத்துக்கொள்வதில்லை. கீதா சாம்பசிவம் அச்சமூகத்தின் வல்லிய பிரதினிதி. தன் மனசாட்சிக்கு உட்பட்டு எழுதிவிட்டார்.

    வளரும் பெண்கள் இவரைப்படிக்காமல் விட்டால், அது எதிர்காலத்துக்கு நல்லது. அவர்கள் அடிமைகளாக வளர வேண்டாம்.

  32. //அப்படின்னு சொல்றீங்க. மெல்ல மெல்ல இப்படி சொல்றீங்க. உங்க வாதத்துல இருக்கற நகை முரன் உங்களுக்கே புரிஞ்சாச் சரி. ஏன்னா இது மாதிரியான அடிப்படைவாதிகளுக்கு எதையும் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முடியாதுன்னு நான் ஏற்கனவே பல முறை அனுபவப் பட்டிருக்கே//

    ரொம்ப ரொம்ப நன்றி, சந்திரா, நான் அடிப்படைவாதினு சொன்னதுக்கும் சேர்த்து நன்றி. ஆனால் பெண்கள் படிப்பிலோ, அறிவிலோ, யோகத்திலோ, ஞானத்திலோ ஆண்களுக்குச் சிறிதும் குறைந்தவர்களாய் இல்லை என்பதும் உண்மையே. நடுவில் சில காலம், அல்லது சில நூற்றாண்டுகள் பெண்கள் இப்படி இருந்ததால் அது மட்டுமே வெளியே வந்ததால் பெண்கள் காலம், காலமாய் அடிமைத்தனமாய் நடத்தப் பட்டாற்போல் ஒரு மாயை உருவாக்கப் பட்டுவிட்டது என்றே சொல்லுவேன். வேறு உதாரணமே வேண்டாம். ஆண்டாள் வாழ்ந்த காலம் அறிவீர்கள் தானே? அவளை விட எந்தப்பெண் தைரியமாக இருந்திருக்க முடியும்??? அவளைவிட இன்னொரு புரட்சிப் பெண் இருக்கவும் முடியாது. ஆகவே இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாமே பின்னால் அதுவும் அந்நியர் ஆதிக்கத்தின் விளைவால் பெண்களைப் பாதுகாக்கவென ஏற்படுத்தப் பட்ட ஒன்று. இன்னும் ஒரு பெரிய லிஸ்டே இருக்கு பெண்கள் அனைத்திலும் சிறந்தவர்களாய் இருந்ததைப் பற்றி. ஒளவையார், அவருக்கும் அதியமானுக்கும் உள்ள நட்பு, சங்ககாலப் பெண் புலவர்கள், இன்னும் பார்க்கப் போனால்,

    ஞானத்தைத் தேடிச் சென்ற கணவனிடம் உங்கள் சொத்துக்கள் தேவையில்லை, நீங்கள்
    தேடிச் செல்லும் ஞானம் தான் வேண்டும் என்று கேட்ட யாக்ஞவல்கியரின் மனைவி
    மைத்ரேயி/கார்க்கி, கற்புக்கரசி எனப் போற்றப்பட்ட நளாயினி, சதி அநஸூயை,
    சாவித்ரி, திருவள்ளுவரின் மனைவி வாசுகி, ஒளவையார்,கண்ணகி, பாண்டிமாதேவி,
    அதன் பின்னரும் மங்கையர்க்கரசி என்னும் பாண்டிநாட்டு ராணி, திலகவதியார்,
    புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார். மதுராபுரி விஜயம் எழுதின
    கங்காதேவி, மிகப் பெரிய சம்ஸ்கிருத வித்வாம்சினி என்பார்கள் அவளை. முதன் முதல்
    பிரயாணக்கட்டுரை எழுதிய பெண்மணி என எபிக்ராபிகல் துறையில் பதிப்பிக்கப் பட்ட
    பெருமை உடையவள். அதன் பின்னரும் பல நாட்டு ராணியர், பல மகளிர்
    இருந்திருக்கின்றனர். தமிழில் மட்டுமின்றி வடமொழியிலும் சிறப்பாக
    இருந்திருக்கின்றனர். வடக்கே ஜான்சி ராணி, தெற்கே ராணி மங்கம்மாள், ராணி
    மீனாக்ஷி, எனப் பல பெண்கள் இருந்திருக்கின்றனரே. சமீப நூற்றாண்டுகளை எடுத்துக்
    கொண்டால்,கஸ்தூரிபா காந்தி, இவர் ஒத்துழைப்பு இல்லை எனில் காந்தி மகாத்மா
    ஆகியிருக்க முடியுமா?? சந்தேகமே. (சேவா சதன்) சகோதரி சுப்பு லக்ஷ்மி,
    முத்துலக்ஷ்மிரெட்டி, சரோஜினி வரதப்பன், சாவித்திரி வைத்தி, இந்திரா காந்தி,
    சோனியா காந்தி, ஜெயலலிதா என எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர். சரித்திரமும்
    இவர்களைச் சுற்றியே பேசப்படுகிறது.
    இப்போவும் பெண்களைச் சுற்றியே சரித்திரம் பேசுகிறது மெகா தொடர்கள் மூலமாக.
    எல்லாப் பெண்களுமே அதில் மூழ்கிப் போய் இருக்கின்றனர். முதலில் மானாட,
    மயிலாடாமல் பெண்களை விழித்து எழப் பண்ணலாம். அப்புறமா விடுதலை கேட்கலாம்.

  33. வளரும் பெண்கள் இவரைப்படிக்காமல் விட்டால், அது எதிர்காலத்துக்கு நல்லது. அவர்கள் அடிமைகளாக வளர வேண்டாம்.//

    குலசை சேகர், துரதிர்ஷ்டவசமாய் வளரும் பெண்கள் தான் நிறைய நான் எழுதுவதைப் படிச்சுத் தொலைக்கிறார்கள். என்ன பண்ணலாம்???? :)))))))))))))))))) மற்றபடி உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். ஆன்மீகம் என்பதன் அர்த்தம் இங்கே என்ன கோணத்தில் கொடுக்கப் படுகிறது என்று புரியவில்லை. ஆன்மீகம் ரிஷி ரவீந்திரன் சொல்லி இருப்பது வேறே. நீங்கள் சொல்வது பக்தினு நினைக்கிறேன். அடிப்படை பக்தி தான். அது முக்கியமா இருந்துட்டா அப்புறமா ஆன்மீகப் பாதைக்குச் செல்ல முடியும். அதைப் பத்தி அப்புறமா எழுதறேன். இதுவே ரொம்பப் பெரிசாப் போச்சு! 😀

  34. ஆனா அப்படி இல்லைன்னும் போது ஆண் கேவலமா நடந்துகிட்டா அது எவ்வளவு தப்போ அவ்வளவுக்கேதான் பெண் அநாகரீகமா நடந்துகிட்டாலும் தப்பா பார்க்கப் படணும். பெண் என்பதால் ஏன் அவகிட்ட கூடுதல் எதிர்பார்ப்பு? ஒரு பெண்ணா இருந்துட்டு அவங்க எப்படி செய்யப் போச்சுன்ற உங்க அங்கலாய்ப்பு உங்களுக்கே சரின்னு படுதுங்களா?//

    சந்திரா, அவங்க கிட்டே கூடுதலா எதுவும் எதிர்பார்க்கவே இல்லை, ஒரு மனுஷியாக நடந்துக்கணும் என்பதைத் தவிர, அங்கலாய்ப்பெல்லாம் ஒன்றும் இல்லை. தன்னைத் தானே தாழ்த்திக்கிறாங்களே, அதனால் வரும் வேதனை. பல பெண்களும் இப்படித் தான் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள். பெண் என்றால் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மரியாதையையும், கெளரவத்தையும் இப்படித் தான் போக்கிக்கொள்ளணுமா? அவங்க நடத்தப்பட்ட விதத்தைப் பார்த்து மனம் நொந்து போய்த்தான் எழுதினேன். நீங்க சுட்டி சிரமப் பட்டு அனுப்பி இருக்கவே வேண்டாம். எப்படி இருந்தாலும் ஒரு மக்கள் பிரதிநிதி இவ்வளவு கேவலத்துக்கா போகணும்?? போராட வழியா இல்லை???

  35. நேர்மையாகவும் உண்மையாகவும் பேச வேண்டும் அல்லது வாழ வேண்டும் என்று கூறினால் இன்றைய இளம் சமுதாயத்திற்கு கசக்கிறது. அதன் வெளிபாடுதான் மேலே சில ஆதங்க மொழிகள். கலாச்சார சீரழிவு எந்த உருவத்தில் வந்தாலும் ஏற்று கொள்ள முடியாது. அதில் ஆண் பெண் பேதம் இருக்க கூடாது. இப்படி சொன்னால் பிற்போக்குவாதி என கூறுவார்கள். ஒன்று மட்டும் உறுதி வாயால் மட்டுமே சாப்பிட முயற்சிக்க வேண்டும் …………………….

  36. சந்திராவின் வேண்டுகோளுக்காக பூவரசி மாதிரியான பெண்களை விடுவித்து விடலாம். பெண்களுக்கு குற்ற விலக்கு அளிப்பதுதான் அவர் வாதமா ? ? ?

  37. பெண்கள் அனைவருமே தீய வழியில் சுதந்திரத்தை பயன்ப்படுத்துகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. இன்னும் பல பெண்கள் சுதந்திரத்தை அதன் அடைமொழியை புரிந்து நடந்தும் கொள்கிறார்கள். பெண் விடுதலை, பெண் பாதுகாப்பு சட்டங்கள் போன்றவை இச்சமூகத்திற்கு தேவைதான்;இல்லை என்ற பேச்சுக்குகே இடமில்லை. ஆனால் அவர்கள் மேற்கொண்டும் வரும் செயல்கள் அவர்களை பாதுகாப்பதாக நினைத்து அவர்களே மண்ணை தலையில் போட்டு கொள்கிறார்கள்.
    இன்றும் ஏன் வேறுபாடுகள் இச்சமூகத்தில் நிலவுகிறது என்பதற்கு விளக்கம் நமக்கு தெரியவேண்டும். பெண் என்றவள் ஒருகாலத்தில் அடிமையாக இருந்து, இன்று வெளி உலகை சந்திக்கும் போது ஏற்படுகின்ற உணர்ச்சிகள் சிதறும் போது பல விளைவுகளை அது சமூகத்தில் ஏற்படுத்திவிடுகிறது.
    இன்னும் காலங்கள் நகரதான் போகிறது, நாம் அனைவரும் ஆண், பெண் என்ற வேறுபாட்டை இருதரப்பிலிருந்து விளக்கி, ”ஹோமோசாபின்ஸ்” என்ற உண்மையை புரிந்து கொண்டால், உலகம் இன்னும் அழகாகும்.

    வெ.ஜனனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *