அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளிவரும்?

ayodhya_verdictஅறுபது வருடம் இழுத்தடித்த தீர்ப்பு மேலும் ஒரு ஐந்து நாள் ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது. தில்லியில் நடைபெற இருக்கும் காமன் வெல்த் விளையாட்டுக்கள் முடியும் வரையாவது வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைக்குமாறும், அதே சமயத்தில் அயோத்தி வழக்கின் இரு தரப்புகிடையே சமரசம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதன் மூலம் மதக் கலவரங்களைத் தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டு ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் உத்திரப் பிரதேச நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் சம்பந்தப் பட்ட வழக்கின் இரு தரப்பும், திரிபாதியின் முயற்சியை “சிறுபிள்ளைத் தனமானது” என்று கூறி நிராகரிக்கவே, உ.பி உயர் நீதி மன்றம் திரிபாதியைக் கண்டித்து வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு அல்லாமல், ஐம்பதாயிரம் அபராதம் கூட விதித்தது. திரிபாதியும் விடாமல் உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு குறித்து விசாரிப்பதற்காக வரும் செவ்வாய் கிழமை வரை அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைக்குமாறு உச்ச நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது.

இந்த முறை தீர்ப்பு வெளியாகும் என்ற அறிவிப்பை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தனர். அரசாங்கமே சொந்த செலவில், இந்த கோர்ட் தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் மேல் முறையீடு செய்து கொள்ளுங்கள் என்று விளம்பரம் செய்தது. அரசாங்கம் ஒரு விதத்தில் இவ்வாறு விளம்பரம் செய்வது நல்லதுதான் என்றாலும் எதோ ஒரு காலத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்ன சொல்வார்களோ தெரியவில்லை. அப்படியே தீர்ப்பு வெளியானாலும் மேலும் சுப்ரீம் கோர்ட்டில் ஐந்து நபர் பெஞ்சிடம் மனுச் செய்யச் சொல்லக் கூடும்.

சுப்ரீம் கோர்ட் “இரு தரப்பும் சமாதானமாகப் போவதற்கு ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தாலும், அது பயன்படுத்தப் படவேண்டும். அதோடு இந்த தீர்ப்பு வெளியாகி பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் சுப்ரீம் கோர்டைத்தான் குறை கூறுவார்கள்” என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த தீர்ப்பு தள்ளிப் போவதை வரவேற்றுள்ளது. வழக்கம் போல காங்கிரஸ் கட்சி தலைவர் திக் விஜய் சிங் “சங்க பரிவார அமைப்புகளை நம்ப முடியாது. அவர்கள் கலவரம் செய்யலாம்” என்று குறை கூறி இருக்கிறார். பி.ஜே.பியின் சார்பாக இந்த மனுவை எதிர்த்து பேசிய ரவி சங்கர் பிரசாத் இரு தரப்புக்கும் இடையே சமாதானமாக போகும் நிலை இல்லை. நீதிமன்ற தீர்ப்பே இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்றார்.

ஏற்கனவே பல பிரச்சனைகளில் சிக்கி மக்களின் அதிருப்திக்கு ஆளாகி உள்ள காங்கிரஸ் அரசு, மேலும் இந்த தீர்ப்பினால் சட்ட ஒழுங்கு, மதக்கலவரப் பிரச்னைகள் வேறு வருமோ என்று அஞ்சுவது புரிந்து கொள்ளக் கூடியதே. அதுவும் தெற்கே கேரளாவில் ஆரம்பித்து பல்வேறு வட மாநிலங்களிலும் கலவரங்கள் எழும் என்று அஞ்சப்பட்டு போலீசார் லட்சக் கணக்கில் குவிக்கப் பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருக்கிறது. கான்பூரில் 144 தடை உத்தரவே பிறப்பிக்கப் பட்டுள்ளது.

உ.பி மாநிலத்தில் மட்டுமே ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் பல்வேறு பொது இடங்களில் குவிக்கப் பட்டு உள்ளனர். அந்த மாநிலத்தில் நான்காயிரம் பேருக்கு கோர்ட்டில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, அலுவலகங்கள் விடுமுறை அறிவித்தன. பேருந்துகள் இயங்குவதும் பாதிக்கப் படும் என்று எதிர்பார்க்கப் பட்டது. தீர்ப்பு வெளியாவதை ஒட்டி, அதிக அளவிலான குறுஞ்செய்திகள் (SMS) கூட செப்டம்பர் 29 தேதி வரை தடை செய்யப் பட்டுள்ளன. நாடே தீர்ப்பு வெளியானால் ஸ்தம்பிக்கும் நிலை.

இப்போது தீர்ப்பு வெளியாவது தள்ளிப் போயிருப்பதால் பெரிதாக நிம்மதி பெருமூச்சு விட இடமில்லை. ஏனெனில் மேலும் தீர்ப்பு வெளியாவது தள்ளிப் போனால் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. இந்த தீர்ப்பை விசாரித்த நீதிபதிகளில் ஒருவர் வரும் செப்டெம்பர் 30 தேதியுடன் பதவி ஒய்வு பெறுகிறார். அவர் ஒய்வு பெரும் நிலையில் புதிய நீதிபதி ஒருவர் நியமிக்கப் படுவார். அதனால் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மிக நீண்டகாலம் இழுக்கப் படும் நிலை இருக்கிறது. உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் போன்ற பெரு நீதிமன்றங்களே இப்படி இழுத்தடிப்பது நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் பல கோடி ரூபாய்கள் செலவிடப் பட்டுள்ளன. மேலும் வழக்கு நீண்டு கொண்டே போவதால் ஏற்படும் பணவிரயமும் கவலைக்குரிய விஷயம்.

இவ்வாறு இப்போது தள்ளிப் போயிருப்பதால், மேலும் கலவர பயமும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கவே செய்யும். தேவையில்லாமல் மக்கள் பயத்தில் ஆழ்த்துவதற்கு தீர்ப்பு நாள் குறிப்பதையே தவிர்த்திருக்கலாம். ஆளும் கட்சி இந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு தமக்கு சாதகமான ஒரு தருணத்தில் வரவேண்டும் என்றோ அல்லது காமன் வெல்த் விளையாட்டுக்கள் முடிந்து அதில் பொங்கி வழியும் ஊழல்களை மக்கள் மறக்கடிக்க இந்த தீர்ப்பு உபயோகப் படும் என்று எதிர்பார்த்து நடவடிக்கைகள் மேற்கொள்ளுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. இன்னொரு விதத்தில் தீர்ப்பு தள்ளிப் போயிருப்பதால் மக்களின் கவனம் காமன் வெல்த் ஊழல்களில் திரும்பும். அதுவும் அரசுக்கு நெருக்கடிதான்.

பொதுவாக நமது நீதி முறையே மிகவும் நீண்ட காலத்துக்கு இழுத்தடிக்க வசதியாக அமைந்திருப்பது தெரிந்தது தான். முதலில் போலீஸ் விசாரணை, விசாரணைக்குத் தடை, விசாரித்த பின் மறு விசாரணைக்கு மனு, ஸீ பி. ஐ விசாரனைக்கு கோரிக்கை, அதெல்லாம் முடிந்த பின், வாய்தா மேல் வாய்தா, அதைத் தாண்டினால் தீர்ப்பு ஒத்தி வைப்பு, தீர்ப்பு சொல்லப் போனால், அதற்கு தடை உத்தரவு என்று பல தலைமுறைகளுக்கு சாதாரண வழக்குகளே இழுத்தடிக்கின்றன. அயோத்தி பல நூறு வருடங்களாக இருந்து வரும் பிரச்னை. இதில் தாமதம் ஆவது ஓரளவுக்கு புரிந்து கொள்ளக் கூடியது என்றாலும், முடிவான தீர்ப்பு என்றே ஒன்று வெளியிடப் படுமா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

23 Replies to “அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளிவரும்?”

  1. This verdict and duration it took for more than 60 years is ridiculous. Most of the people back at that time are probably died now. India’s way of running a case or court, law and order is still a mystery to me. Nothing but confusion. And more confusion. Why no one changes it?
    Personally the only law and order i think suits a country like India will be the one in Singapore. Flawless, strict and fast. And on the ball.

  2. Pingback: Indli.com
  3. பெடிஷனை விசாரித்த இரு நீதிபதிகளில் ஒருவரான ஜஸ்டிஸ் ஆர்.வி.ரவீந்திரன் தெளிவாகவும் உறுதியாகவும் தன் கருத்தை சொல்லியிருக்கிறார்; தீர்ப்பை ஒத்தி வைப்பதை எதிர்த்திருக்கிறார்.

    நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இந்திய நாட்டின் குடிமக்களுக்கு இல்லை என்று எப்படி நாம் கருதலாம்? என்றும் கேட்டிருக்கிறார்..

    தீர்ப்பு வருவதை ஏதோ சாக்கு சொல்லி தடுத்து பிரசினையை இழுத்தடிக்க காங்கிரஸ் செய்யும் குயுக்தி தான் இது. சந்தேகமே இல்லை.

  4. அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டுக்கு நெருக்கடி கொடுக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது! ஏற்கனவே உணவு தானியப் பிரச்னையில் கருத்துக்கள் கூறப்பட்ட விதம் சரியில்லை! மக்களை சரியான விதத்தில் பயன் படுத்திக் கொள்ளாமல் உலக அளவில் தலை குனிவையும் ஏற்படுத்தி விட்டார்கள்! இறைவன் ஆணை எதுவோ! நாம் ஒன்று படுவோம்! இறைவனை வேண்டுவோம்! நன்றி!

  5. உச்சநீதி மன்றத்தின் இடைக்காலத் தடையே காங்கிரஸ் கட்சியின் சித்து விளையாட்டுத் தான். இதனை ‘ஒளிந்துகொள்ளும் முயற்சி’ (escapism) என்று சொல்லலாம். தீர்ப்பு ராமருக்கு சாதகமாகவே இருக்கும் என்பது மத்திய அரசின் தடுமாற்றங்களில் தெளிவாகத் தெரிகிறது. அதற்காகவே பத்திரிகைகளில் மத்திய அரசு ‘மேல் முறையீடு செய்வீர் ஜகத்தீரே’ என்று விளம்பரம் செய்திருக்கிறது.

    இந்த நாட்டை முஸ்லிம் வெறியர்களிடமிருந்தும் காங்கிரஸ் கட்சியிடமிருந்தும் அந்த ஸ்ரீ ராமர் தான் காப்பாற்ற வேண்டும்.

    .

  6. விட்டுக் கொடுப்பவன் கேட்டுப் போவதில்லை.
    நாம் விட்டுக்கொடுத்துப் போகலாம்.[இதைத் தானே சனாதன தர்மமும் சொல்கிறது] அந்த இடத்தை பொது நூலகமாக ஆக்கிவிட்டுப் போகலாம்.

    Must Read
    நாம் இந்துவோ முஸ்லீமோ அல்ல ! இந்தியர்கள் !!

  7. இத்தீர்பிற்கு கர்நாடக முதல்வர் அடித்தக் கோமாளிக் கூத்து இன்னும் சுவையாயிருந்தது. விடுமுறை அறிவித்தார். வாபஸ் பெற்றார். காவிரித் தீர்ப்பின் பொது இவர்கள் எல்லோரும் வாளாவிருந்தது நினைவிருக்கிறது. பீஷ்மர், துரோணர் போன்றோர் போலே பல தேசியவாதிகள் மௌனம் காத்தனர்.

  8. காங்கிரஸ் உள்ள வரை இந்த நாட்டில் ஹிந்துக்களுக்கு நியாயம் கிடைக்காது.

  9. வெளி நாடுகளிலும் மரியாதை கிடைக்காது .

  10. அன்பிற்குரிய மது அவர்களே, ஊடகங்களால் மக்கள் மனதில் நிச்சயமான தாக்கம் ஏற்படுத்த முடியும். சமுதாயத்தில் பிரிவினையையும் விஷத்தையும் விதைக்கக்கூடிய வாய்ப்பு உள்ள பிரச்சினைகளில் உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கலவரங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். அயோத்தியில் மட்டுமே அறியப்பட்ட இந்த பிரச்சினையை உலக அளவில் அறிய வைத்தது ஊடகங்களின் புண்ணியமே. நாட்டு மக்களின் நல்வாழ்வையும் நலனையும் பற்றிய அக்கறையுடன் செயல்படும் நீதிபதிகளை உருவாக்கும் நிரந்தரமான வழிமுறைகளை நிறுவும் அரசியல்வாதிகளை நாம் தேர்ந்தெடுக்க தவறியதால், இன்னும் பெரிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிர்பந்தமான சூழல் வந்தாலும், நம்மை அரசாங்கமோ அரசியல்வாதியோ காப்பாற்றுவான் என்று சாமானிய மக்கள் நம்பமுடியாது. ஏற்கனவே கிடப்பில் போடப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்புக்களே சான்றாக இருக்கும்போது அரசாங்க மற்றும் அரசியல் அதிகாரத்தில் அமர்ந்துள்ள அயோக்கியர்களிடமிருந்து பகவான் ராமனால் மட்டுமே நம்மை காப்பாற்ற முடியும்!

  11. //
    விட்டுக் கொடுப்பவன் கேட்டுப் போவதில்லை.
    நாம் விட்டுக்கொடுத்துப் போகலாம்.[இதைத் தானே சனாதன தர்மமும் சொல்கிறது] அந்த இடத்தை பொது நூலகமாக ஆக்கிவிட்டுப் போகலாம்
    //

    Inform the Muslims too. Every time this sort of advises are for Hindus only. We already lost Pakistan, Bangladesh to them. Now they also want Kashmir. And now u got the cheek to say
    ‘give in’ to them. Give Ayodhya to them? Ridiculous!! No way!!!

    Saints like Swami Vidyaranyar and Swami Ramadas didn’t say to give in. They say fight for Hinduism and fight our Bharat.

    Babur is no an Indian.
    Islam is not India’s religion.
    The creator of Islam is not born in India too.

    This whole religion (Islam) is anti India, Anti Indian and Anti Hindu.

    If not for invasions, they wouldn’t be here and rule us.

  12. //இத்தீர்பிற்கு கர்நாடக முதல்வர் அடித்தக் கோமாளிக் கூத்து இன்னும் சுவையாயிருந்தது. விடுமுறை அறிவித்தார். வாபஸ் பெற்றார்.// கர்நாடக அரசை கேலி செய்யவே தீர்ப்பு நாள் தள்ளி வைக்கப்பட்டது. முதலில் நிச்சயிக்கப்பட்ட நாளில் தீர்ப்பு வந்தே தீரும் என்று கூரிய நீதிபதிகள் பல்டி அடித்ததில் உள்குத்து இல்லாமல் இருக்க முடியாது

  13. நிலம் யாருக்குச் சொந்தம் என்பதே வழக்கு. உரிமை உள்ளவர்களுக்கு
    பத்திரம் ஒழுங்காக இருக்கும் பட்சத்தில், உரிமை அவருக்கே உள்ளதாகும். உரிமை உள்ளவர் நீதிமன்றத் தீர்ப்பு எப்படி இருந்தாலும், தன்னுடைய சொந்த முடிவை எடுப்பதை யாரும் தடை செய்ய முடியாது. பத்திரங்கள் முறையாக இல்லாவிடின், அந்நிலம் அரசுக்குச் சொந்தமாகும். அரசுக்குச் சொந்தம் என்ற நீதி மன்றத் தீர்ப்பு வந்துவிட்டால், சோனியா போன்ற வெளிநாட்டவள் முதல் சினிமா எடுத்துத் தெரியும் வெளிநாட்டவளின் கூஜாக்கள் வரை, செக்யுலரிசம் பேசுவதில், பொய்மை வெளிப்பட்டுவிடும். காங்கிரஸ் கட்சியின் நிரந்தர பயம் என்னவென்றால், அக்கட்சியின் ஈடுபாடின்றி, நல்ல முடிவு எடுக்கப் பட்டுவிடப் போகின்றதே, அதனால், இந்துக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ, தாங்கள்தான், நல்லதைச் செய்வோம் என்ற குருட்டு நம்பிக்கை தகர்ந்து விடப்போகின்றது என்பதுதான். அதனால் தான், பண முதலை சிதம்பரம் முதல் பண்ணையார் கருணாநிதி வரை, அமைதி காக்க வேண்டும் என வாய்சவடால் செய்வது. கோயில்கள் தகர்க்கப்பட்டு, மசூதிகளும், சர்சுகளும் கட்டப்பட்டன என்பதற்கு, கோயில்களை ஒட்டிய நிலைகளே சாட்சி. கோயில்கள் தகர்க்கப்பட முடியாத இடங்களில், பக்கத்திலேயே கட்டுவதுதான், முஸ்லிம் மற்றும் கிறித்துவர்களின் மனநிலை. இந்தியாவில், இந்நிலையை எங்கும் காணலாம். வெளிநாட்டவனுக்கு, இந்தியாவில் மக்கள், தெய்வங்களின் விக்ரகங்களைச் செய்து வணங்குவதில் , எப்படி, என்ன, ஏன், எதற்கு, வெறுப்பு ஏற்படுகின்றது என்பது புரியாத ஒன்று அல்ல. வெளிநாட்டவன் என்பவன், இந்தியாவைப் பொறுத்தமட்டில், மனநிலை பாதிக்கப் பட்டவன்; காழ்ப்புணர்ச்சியும் வெறுப்புணர்ச்சியும் அதற்க்குக் காரணங்கள்; இந்திய முறையிலான, மதக் கோட்பாடுகள், அவனிடம் இல்லாதது அதற்க்குக் காரணம்; ஆனால், விஞ்ஜானம் என்ற போர்வையில், தன மனநிலை பாதிப்பை மறைத்துக் கொள்பவன். சுப்ரீம் கோர்ட்ஆப் இந்தியா , சோரபுதீன் கோர்ட் ஆப் இந்தியா என ஆகி விட்ட இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் போரைக் கூட இவர்கள், aarambiththu viduvaargal.

  14. //முதலில் நிச்சயிக்கப்பட்ட நாளில் தீர்ப்பு வந்தே தீரும் என்று கூரிய நீதிபதிகள் பல்டி அடித்ததில் உள்குத்து இல்லாமல் இருக்க முடியாது//

    தவறான தகவல்

  15. wht ever the land belongs to bharat(india) so we are the only our(hindu) people to enjoy our property not for others. proud to be hindu and fight for it jai sri ram

  16. இந்தத் தீர்ப்பு வந்துவிட்டால் என்ன சாதனை நடந்துவிடப் போகிறது? தீர்ப்பு வராவிட்டால் என்ன குடிமுழுகப் போகிறது? இன்னும் ஒரு 50 வருடத்துக்கு தீர்ப்பு வராமல் இருப்பது இந்தியாவுக்கு நல்லது. இரு தரப்பு தீவிரவாதிகளையும் நம்புவதற்கில்லை என்னும் நிலையில், இந்தியாவின் பாதுகாப்பை முன்னிறுத்தி, இன்னொரு கலவரத்தை இந்தியா தாங்காது என்பதை மனதில் வைத்துப் பார்த்தால், இப்போதைக்குத் தீர்ப்பே தேவையில்லை என்பது தெரியலாம். இந்த வழக்கில் மிகத் தீவிரமாகத் தொடர்புடையவர்கள் எல்லாம் வைகுண்டப் பதவி அடைந்து, இந்த வழக்கில் தீர்ப்பு வந்தால் அதைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை என்னும் நிலையில் இன்னுமொரு 50 ஆண்டுகாலம் கழித்து தீர்ப்பு வந்தால் நல்லது!

  17. இந்த செய்தியைப் பாருங்கள்:

    CJI replaces Justice Kumar with Justice Alam for Ayodhya case
    Dhananjay Mahapatra, TNN, Sep 26, 2010, 12.37am IST
    NEW DELHI: CJI S H Kapadia heads the Bench in Court Number 1 of Supreme Court, also known as Chief Justice’s Court, and Justices K S Radhakrishnan and Swatanter Kumar sit with him almost regularly.

    But, with the apex court due to hear the Ayodhya matter which can have repercussions for Hindu-Muslim equations, the CJI appears to have put into practice the oft-recited adage — “justice should not only be done, but also appear to be done” — and drafted in Justice Aftab Alam in place of Justice Kumar for the crucial hearing on Tuesday.

    The petition of Ramesh Chandra Tripathi seeking deferment of the Ayodhya verdict had to be referred to the CJI to be put before a new three-judge Bench after a two-judge Bench comprising Justices R V Raveendran and H L Gokhale differed on entertaining the appeal even as they, following a tradition, stopped the Allahabad High Court from delivering the verdict on Thursday.

    Significantly, amid tenacious opposition by many — from the BJP/VHP combine to the All India Shia Personal Law Board — the number of parties to the title suits seeking a postponement of the verdict seems to be increasing in what can have a bearing on the hearing in the apex court on Tuesday.

    Ramesh Chandra Tripathi, a defendant in one of the title suits, and Nirmohi Akhara, which is one of the original plaintiff, were just two out of 28 parties to the suits but they succeeded in convincing the SC on Thursday to give negotiations a chance for an amicable settlement.

    Just two days after the interim order of the SC asking the HC to defer the scheduled judgment in the 61-year-old litigation, Tripathi’s counsel Sunil Kumar Jain told TOI that his client has managed to convince five to six more parties who were now ready to sit down for negotiations.

    It would be difficult to achieve any breathrough for comprehensive negotiations towards an amicable settlement unless the main parties — the Sunni Waqf Board and Mahant Dharamdass — agree for talks. But if Tripathi manages a sizable number to agree for negotiations prior to Tuesday, then it can have the potential to change the course of hearing.

    Both the Waqf Board and the Mahant had passionately argued against deferring of the HC judgment saying the vexed issue defies any negotiated settlement. However, if Tripathi can manage a few more of the parties on the side of talks, then it can assume some seriousness and weight before the apex court.

    But, if he fails to manage the numbers to raise hopes for an out-of-court settlement before the SC on September 28, then there is ample chance that the apex court would vacate its interim order paving the way for the three-judge Bench of the HC to pronounce its already readied judgment.

    Without numbers on his side, Tripathi would find it difficult to convince the SC to defer the HC judgment any further as it is aware that Justice D V Sharma, one of the judges of the three-judge HC Bench, which had readied its judgment for scheduled pronouncement on September 24, is due to retire on October 1.

    Read more: CJI replaces Justice Kumar with Justice Alam for Ayodhya case – The Times of India https://timesofindia.indiatimes.com/articleshow/6627685.cms?prtpage=1#ixzz10hJ0WhT4

  18. ராமஜென்ம பூமியில் மீண்டும் ! நாம் ராமனுக்கு கொவில்எழுப்பியே தீர்வோம அதுவரை ஓயமாட்டோம்! அதற்காக எத்துயரும் ஏற்க தையார்கவும் உள்ளோம்!
    ஹிந்து என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லட ! நாம் எல்லாம் சிங்கங்கள்
    வாழ்க பாரதம் வாழ்க ஹிந்துமதம்

  19. This is not a mere fight for a temple
    But a symbolic one to establish that we should not respect an alien barbaric invader but our Purushotham Ram.
    This is a litmus test to know in which direction Bharat will march.
    Towards the timeless Dharmic tradition or the Jihadi practices?

  20. //இத்தீர்பிற்கு கர்நாடக முதல்வர் அடித்தக் கோமாளிக் கூத்து இன்னும் சுவையாயிருந்தது. விடுமுறை அறிவித்தார். வாபஸ் பெற்றார்.//
    சும்மா கிண்டல் செய்வதற்கு நீங்கள் ரொம்ப யோசனை செய்ய வேண்டியது இல்லை. தீர்ப்பு வரும் நாளில் யார் எப்படி செயல் பட போகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. கர்நாடக முதல்வர் செய்தது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. ஜெயா அவர்களுக்கு எதிராக வந்த தீர்ப்பின் பொது மூன்று பெண்கள் எரிக்கப்பட்ட சம்பவம் உங்களுக்கு நினைவு இல்லையா. முதலில் விடுமுறை அறிவித்தது, பின்பு அதை திரும்ப பெற்றது எல்லாமே தீர்ப்பு நாளின் நிர்ணயத்தை ஒட்டியே அமைந்தது.

    (edited and published)

  21. //இத்தீர்பிற்கு கர்நாடக முதல்வர் அடித்தக் கோமாளிக் கூத்து இன்னும் சுவையாயிருந்தது. விடுமுறை அறிவித்தார். //

    தீர்ப்பு வரும் நாளில் விடுமுறை அறிவிப்பது அறிவார்ந்த செயல். சென்னையில் மழை பெய்தால் திருநெல்வேலிக்கும் சேர்த்து விடுமுறை விடும் ஒரு மாநிலத்தில் இருந்துகொண்டு இதைக் கேலிசெய்வதெல்லாம் ஓவர்.

    இந்தத் தீர்ப்பு வரும் நாளில் தேசிய விடுமுறை அறிவிப்பது நல்லது!

  22. கர்நாடக முதல்வர் செய்வது தான் இவர்கள் கண்ணில் படும்
    போப்பு மரணத்திற்கு விடுமுறை, அரசு துக்கம் அறிவிதர்களே ,அவருக்கும் பாரதத்துக்கும் என்ன சம்மந்தம்?
    அது கேலி கூத்து இல்லையா?

  23. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் அயோத்தி தீர்ப்பு செப்டம்பர் 30ம் தேதி வருவதாக அறிவிக்கப் பட்டு விட்டது.

    எனவே இந்தப் பதிவின் மறுமொழிப் பெட்டி மூடப் படுகிறது.

    அயோத்தி பற்றிய தங்கள் கருத்துக்களை அயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை பதிவிலும் மற்றும் அதற்குப் பின்வரும் பதிவுகளிலும் தெரிவிக்க வேண்டுகிறோம்.

Comments are closed.