எல்லாப் புகழும் விநாயகனுக்கே!

கோவையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முஸ்லிம் அமைப்புகளும் காவல்துறையும் கடும் பிரச்னைகளை பல இடங்களில் ஏற்படுத்தின. விநாயகர் சிலைகளை ஏற்கனவே வைத்து வழிபட்ட இடங்களிலும் கூட அனுமதி மறுத்தது காவல்துறை. பல இடங்களில் விநாயகர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் நடத்திய அமளியால் கலவர அச்சம் ஏற்பட்டது. காவல்துறை முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு அஞ்சி, இந்துக்களையே மிரட்டி பணியவைக்க முயன்றது. அவற்றில் சில முக்கிய நிகழ்வுகளை இங்கு காணலாம்.

1. மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ஹிந்து விழிப்புணர்வு மிகுந்த நகரம். கோவை, திருப்பூருக்கு அடுத்தபடியாக அங்குதான் அதிகமான சிலைகள் வைக்கப்படும். அது அங்குள்ள முஸ்லிம் இயக்கங்களை உறுத்தியுள்ளது போல் தெரிகிறது. மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணியினர் எட்டு இடங்களில் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள் ரம்ஜானுக்கு முந்தைய தினத்தில் (10 .09 .2010) கிழிக்கப்பட்டன. கிழித்தவர்கள் யார் என்று தெரிந்திருந்தும் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த ஆண்டு மேட்டுப்பாளையத்தில் நடந்த அமைதிக்கூட்டத்தில், எஸ்.பி. கண்ணன் முன்னிலையிலேயே, தங்கள் பகுதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யக் கூடாது என்று முஸ்லிம் அமைப்பின் பொறுப்பாளர் ஒருவர் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். யாரும் ஏன் என்று அவரை கேள்வி கேட்கவில்லை. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் நீங்கள் மட்டும் மசூதிகளில் ‘வாங்கு’ ஓதலாமா என்று கேட்கும் தைரியம் எந்த அதிகாரிக்கும் இல்லை.

ரம்ஜான் பண்டிகை (11.09.2010) தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்கள் (சுமார் 2,000 பேர்) எழுப்பிய கோஷத்தால் மிரண்ட மாட்டு வண்டி ஒன்று கூட்டத்தில் புகுந்தது. இதற்கு காரணம் இந்துமுன்னணி தான் (அவர்கள் தான் மாட்டுக்கு டாஸ்மாக் சரக்கு வாங்கி ஊற்றி கூட்டத்தில் துரத்தி விட்டார்களாம்!) என்று இஸ்லாமியர்களிடம் வதந்தியைப் பரப்பி, கலவரம் நடத்த மேட்டுப்பாளையத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நல்லவேளையாக, நல்லுள்ளம் கொண்ட பள்ளிவாசல் இமாம் ஒருவரால், வதந்தி முறியடிக்கப்பட்டது.

kovai-selvapuram-1
செல்வபுரம், கல்லாமேடு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட விநாயகர் சிலையை காவல்துறையினர் அகற்றுவதைத் தடுக்க, சுற்றிலும் அணிவகுத்திருக்கும் பக்தர்கள்.

2. செல்வபுரம்:

செல்வபுரம், கல்லாமேடு , பண்ணாரி மாரியம்மன் கோயில் அருகே, கடந்த பத்தாண்டுகளாக விநாயகர் சிலை வைத்து விழா கொண்டாடப்பட்டுவந்தது. ஆனால் இம்முறை அங்கு சிலை வைக்க காவல்துறை அனுமதி மறுத்தது. இதற்கு காரணம், அங்கிருந்த இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பே. ‘முஸ்லிம்கள் அதிகமாக குடியிருக்கும் பகுதியில் பிள்ளையார் சிலை வைக்கக் கூடாது; மீறினால் அதை நாங்களே அப்புறப்படுத்துவோம்’ என்று அவர்கள் காவல்துறையினரை மிரட்டியதாக தகவல்.

நியாயமாகப் பார்த்தால், தங்களை மிரட்டிய முஸ்லிம் அமைப்புகள் மீது தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், முதுகெலும்பில்லாத காவல்துறை, அந்த இடத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டைக்கு அனுமதி மறுத்தது. தடையை மீறி பக்தர்கள் அங்கு சிலை வைத்தனர். அதனை அகற்ற காவல்படை களமிறங்கியது. ஆனால் இந்து சமுதாயம் சோரம் போய்விடவில்லை என்பது அங்கு நிலைநாட்டப்பட்டது.

விநாயகர் சிலையை அகற்றுவதைத் தடுக்க, 50க்கு மேற்பட்ட பெண்கள் விநாயகரைச் சூழ்ந்து கோட்டையாகக் காத்து நின்றனர். சிலர் விநாயகர் சிலையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு காவல்துறையினர் சிலையைத் தொடுவதைத் தடுத்தனர். வேறு வழியின்றி பெண்காவலர்கள் உதவியுடன் அவர்களை கைது செய்து, அவர்களுடன் சிலையையும் காவல் வாகனத்தில் ஏற்றினர். இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 91 பேரும் கைது செய்யப்பட்டனர்.

kovai-selvapuram-2
விநாயகர் சிலையை அகற்றுவதைக் கண்டித்து கைதாகி சிலையுடன் போலீஸ் வேனில் ஏறும் வீராங்கனைகள்.

காவல்துறையை (10.09.2010) எதிர்த்து 141 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பி.ஆர்.எஸ். மைதானத்தில் காவலில் வைக்கப்பட்டனர். அங்கு போலீஸ் காவலிலும் அவர்கள் உண்ணாவிரதம் இருந்ததால், மூன்று பெண்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். வேறு வழியின்றி பக்தர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இறுதியில், பண்ணாரி மாரியம்மன் கோயில் பகுதியிலே சில அடிதூரம் தள்ளி (கீழே விழுந்தாலும் போலீஸாரின் மீசையில் மண் ஒட்டிவிடக் கூடாது) விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய காவல்துறை அனுமதி கொடுத்தது. கைது செய்யப்பட அனைவரும் அன்றிரவு 10 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

இங்கு போராடிக் கொண்டிருந்த இந்துமுன்னணியினரை மிரட்டிய கோவை காவல் உதவி ஆணையர் பாலாஜி சரவணன், ” நீங்கள் கட்டியுள்ள காவிக் கொடிகளை நீங்களே அகற்றிவிடுங்கள்; இல்லாவிட்டால் முஸ்லிம்கள் அவிழ்த்து விடுவார்கள்” என்று கூறியது அவலத்தின் உச்சம். ஆயினும், வழிபாட்டு உரிமைக்காக செல்வபுரம் பகுதி மக்கள் – குறிப்பாக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்- நடத்திய போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றது. விநாயகர் சதுர்த்தி முடியும் தறுவாயில் தான் அங்கு விநாயகர் சிலை நிறுவப்பட்டது.

3. உக்கடம்- அல்அமீன் காலனி:

ஒருகாலத்தில் கரும்புக்காடாக இருந்த வயல்வெளி முஸ்லிம்களின் திட்டமிட்ட குடியேற்றத்தால் பெரும்பான்மை முஸ்லிம்களின் குடியிருப்பு பகுதி ஆகிவிட்டது. அல்அமீன் காலனி என்று அழைக்கப்படும் இங்கு மிக சொற்பமான எண்ணிக்கையிலேயே ஹிந்துக்கள் வசிக்கின்றனர். கோவை குண்டுவெடிப்பை அடுத்த கலவரங்கள் காரணமாக பல ஹிந்துக்கள் இங்கிருந்து வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்துவிட்டனர்.

இங்கு விநாயகர் சிலை வைக்க இந்து மக்கள் கட்சியினர் திட்டமிட்டனர்; அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதை மீறி சிலர் அங்கு விநாயகர் சிலை வைக்க (11.09.2010) முயன்றபோது, சில முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அரசு அதிகாரிகளையே மிரட்டியுள்ளனர். பெரும் கலவரச் சூழல் ஏற்பட்டதால் அங்கு கோவை தெற்கு வட்டாட்சியரும் காவல் இணை ஆணையரும் வந்து பேச்சு நடத்தினர்.


செப்டம்பர் 15 ம் தேதி கோவை நகரில் நடந்த விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின் முகப்பில் அணிவகுத்த காவிப்படை.

அப்போது, ”அல்அமீன் காலனியில் உள்ள 15 இந்து குடும்பங்களையும் காலி செய்துவிடுவோம். அவர்கள் இங்கு இருப்பதால் தானே விநாயகர் சிலை வைக்க முயல்கிறார்கள்? ஒருவார காலத்திற்குள் அவர்களை துரத்தப் போகிறோம்” என்று முஸ்லிம் பிரதிநிதிகள் வெளிப்படையாகவே மிரட்டியுள்ளனர். இதனை எந்த அதிகாரியும் கண்டிக்கவில்லை. இறுதியில், இங்கு இந்துக்கள் தரப்பில் 37 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு விநாயகர் சிலை வைக்க முடியவில்லை.

உதகையிலும் சிக்கல்

சென்ற ஆண்டு விநாயகர் விசர்ஜன ஊர்வலம் உதகையில் நடந்தபோது மார்க்கெட் பகுதி (அங்கு முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்களாம்) வழியாக வரக்கூடாது என்று கூறி கலவரத்தில் ஈடுபட்டனர், முஸ்லிம் இயக்கத்தை சேர்ந்தவர்கள். அதுபோல இம்முறை நடந்துவிடக் கூடாது என்று, முன்னெச்சரிக்கையாக புதிய வழித்தடத்தில் ஊர்வலம் செல்ல உதகை காவல்துறை ஏற்பாடு செய்தது. இதனை ஏற்க இந்து முன்னணியினர் மறுத்துவிட்டனர்.

காலம் காலமாக செல்லும் வழித்தடத்தில் தான் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடக்கும் என்று இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அறிவித்தனர். இதை அடுத்து, ஊர்வலம் துவங்கும் முன்னரே அவர்கள் கைது செய்யப்பட்டனர்; 70 பேர் கைது செய்யப்பட்டனர். தவிர, இந்து முன்னணியினர் கொண்டுவந்த விநாயகர் சிலைகளை காவல்துறையினரே கைப்பற்றிvக் கொண்டுசென்று காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்தில் கரைத்தனர்.

4. குனியமுத்தூர்:

குனியமுத்தூர், திருமூர்த்தி நகரில் முத்துமாரியம்மன் கோயிலில் விநாயகர் சிலை இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டது. அதன் அருகில் தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத் இருப்பதால் அங்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல்துறை, முஸ்லிம்களுக்கு அஞ்சி பிள்ளையார் சிலையை கோயில் உள்ளே வைக்குமாறு வற்புறுத்தியது.

kovai-selvapuram-2
செப்டம்பர் 14 ம் தேதி கோவை, குனியமுத்தூரில் நடந்த விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

குனியமுத்தூரின் குறிஞ்சி நகரில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. அந்த இடம் பள்ளிவாசல் செல்லும் வழியில் இருப்பதாகவும், அதை அகற்றுமாறும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே காவல்துறையினர் அங்குள்ள மக்களை மிரட்டி விநாயகர் சிலையைத் தூக்கிச் சென்று அருகிலுள்ள கோயிலில் வைத்துவிட்டனர். ஆனால், இந்துமுன்னணியினர் தங்கள் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட, மீண்டும் அதே இடத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். இதனால் பதற்றம் ஏறப்பட்டது. அங்கு குவிந்த முஸ்லிம் அமைப்புகளின் தொண்டர்கள் நூற்றுக் கணக்கானோர், கலவரச் சூழலை ஏற்படுத்தினர். இந்த சிலை வைக்க காரணமாக இருந்த இந்து முன்னணி தொண்டர்கள் வேலுமணி, ரவி ஆகியோரை காவல் துணை ஆய்வாளர் காசிபாண்டியன் கைது செய்து அழைத்துச் சென்றார் (12.09.2010).

அப்போது ஒரு கும்பல் காவல்துறை அதிகாரி காசிபாண்டியனையும் அவருடன் வந்த போலீசாரையும் தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவர்கள் கண்ணெதிரிலேயே, இந்து முன்னணித் தொண்டர்கள் வேலுமணி, ரவி ஆகியோரை கடுமையாகத் தாக்கியது. (பலத்த காயம் அடைந்த அவர்கள் சிகிச்சை பெற்றனர்). மாநகர் காவல்ஆணையர் சைலேந்திரபாபுவே சம்பவ இடத்திற்கு வந்து தடியடி நடத்தி வன்முறைக் கும்பலைக் கலைத்தார்.

ஆயினும், இவ்வழக்கில் முஸ்லிம் தரப்பே தவறு செய்தபோதும், இருதரப்பு மோதலாக சித்தரித்து, முஸ்லிம்கள் 7 பேரையும் இந்துக்கள் 4 பேரையும் கைது செய்தனர். காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டது முற்றிலும் மறைக்கப்பட்டது.

இதை அடுத்து குனியமுத்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட 100 விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யாமல் இந்து முன்னணியினர் அதே இடங்களில் வைத்து சத்தியாக்கிரகம் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட நால்வரையும் ஜாமீனில் தற்போது (14.09.2010) காவல்துறை விடுவித்துள்ளது. அதன்பின் விசர்ஜன ஊர்வலம் நடந்து, குனியமுத்தூர் பிள்ளையார்கள் கரைக்கப்பட்டன. தாக்கப்பட்டவர்களையே காவல்துறை கைது செய்கிறது. தாக்கியவர்களைக் கண்டு காவல்துறை அஞ்சி நடுங்குகிறது.

5. மதுக்கரை:

மதுக்கரை, ஒன்றிய அலுவலகம் பின்புறமுள்ள பட்டத்தரசியம்மன் கோயில் வீதியில் அங்குள்ள பக்தர்களால் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதற்கு அங்குள்ள முஸ்லிம் காலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை பக்தர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் கோபம் அடைந்த தவ்ஹீத் ஜமாஅத், எஸ்.டி.பி.ஐ கட்சியினர், விநாயகர் சதுர்த்தி விழாக்குழுவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை கடுமையாக (பிளேடுகளால்) தாக்கினர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரது மனைவியை பிடித்து இழுத்து சாக்கடையில் தள்ளிய முஸ்லிம் கும்பல், அவரது சிறு குழந்தையையும் தாக்கியது. அப்போதும் வெறி அடங்காத கும்பலால் ஆறுமுகத்தின் மளிகைக்கடை சூறையாடப்பட்டது.


மதுக்கரையில் ஹிந்து வியாபாரியின் கடை சூறையாடப்பட்டதைக் கண்டித்து 13.09.2010 அன்று நடந்த கடையடைப்பு.

இங்கு பட்டத்தரசி அம்மன் கோயிலையும் தரைமட்டமாக்க ஒரு கும்பல் சென்றுள்ளது. காவல்துறை தடுத்ததால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. ஆறுமுகத்தின் கடை சூறையாடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மதுக்கரையில் 13.09.2010 அன்று முழுக் கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் புகார் பெற மதுக்கரை காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இதுவரை ஆறுமுகம் குடும்பத்தைத் தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை.

திருப்பூர் -ஸ்ரீநகரில் ஆசுவாசம்

சென்ற ஆண்டு விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின்போது கல்வீச்சும் கலவரமும் நடந்த திருப்பூர்- ஸ்ரீநகரில், இந்த ஆண்டு முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் ஆயிரக் கணக்கில் குவிக்கப்பட்டனர். கேமரா கண்காணிப்புடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் விளைவாக இம்முறை இங்கு எந்த அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்கப்பட்டது. காவல்துறையினர் ஆசுவாசப் பெருமூச்சு விடுகின்றனர். இஸ்லாமியர்களின் எண்ணிக்கை ஒரு பகுதியில் அதிகரித்தாலே அங்கு கல்லெறி சகஜம் தான் போலும். காஷ்மீரின் ஸ்ரீநகரிலும் இது தானே நடக்கிறது?

6. சரவணம்பட்டி:

கணபதி, இ.பி.காலனியில் விளம்பர பேனர் வைப்பது தொடர்பான பிரச்னையில் இந்து முன்னணி தொண்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீராம், ரகு உள்ளிட்ட 7 பேர் சரவணம்பட்டி காவல்துறையினரால் (09.09.2010) கைது செய்யப்பட்டனர். புகார் கூறியவர்கள் சமரசமாகி, அதனை வாபஸ் பெற்றபோதும், இந்து முன்னணி தொண்டர்களை சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் சிவகுமார் விடுவிக்கவில்லை.

அவர்களை பீளமேடு காவல்நிலையம் கொண்டுசென்று சட்டவிரோதமாக லாக்அப்பில் அடைத்து கடுமையாகத் தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். மறுநாள் மதியம் வரை கடுமையாக இந்து முன்னணி தொண்டர்கள் தாக்கப்பட்டனர். நூற்றுக் கணக்கான இந்து முன்னணியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பிறகே, கைது செய்யப்பட்டவர்கள் மீது வேறு பொய்வழக்குகளை ஜோடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பினார், காவல் ஆய்வாளர் சிவகுமார்.


செம்பம்பர் 14 ம் தேதி கோவை, குனியமுத்தூர் விசர்ஜன ஊர்வலம்.

காவல்நிலையத்தில் இந்து முன்னணி தொண்டர்கள் பெற்ற காயங்களுக்கு சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதையும் காவல் ஆய்வாளர் செய்ய மறுத்து விட்டார். தற்போது காவல்துறையினர் தாக்கிய காயங்களுடன் கோவை சிறையில் வாடுகின்றனர் 7 இந்து முன்னணி தொண்டர்கள்.

7. இன்னும் பல இடங்கள்:

சுந்தராபுரம் – பிள்ளையார் புரத்திலும் விநாயகர் சிலை வைக்க அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தன. சிவானந்தா காலனி அருகிலுள்ள கருணாநிதி நகரிலும் விநாயகர் சிலை வைக்க முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக காவல்துறையும் செயல்பட்டது. அங்கு முஸ்லிம் இயக்கங்களாலும் காவல்துறையாலும் இந்து இயக்க நிர்வாகிகள் மிரட்டப்பட்டனர்.

கோவை- பாலக்காடு சாலையில், ஆத்துப்பாலம் முதல் மைல்கல் வரை பல இடங்களில் இத்தகைய மிரட்டல்கள் இந்த ஆண்டு வந்துள்ளன. ஏதோ திட்டத்துடன் தவ்கீத் ஜமாஅத், த.மு.மு.க, மனிதநீதி பாசறை, எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் செயல்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது. முஸ்லிம்களின் அடாவடித்தனத்தை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறை இந்து முன்னணியினரையே மிரட்டுகிறது; பொய்வழக்கு போடுகிறது. கருணாநிதி தலைமையிலான அரசே இதற்கு காரணம்.

காரணம் என்ன?

இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டால், பெரும்பாலோர் மழுப்பியபடி தப்பிக்கிறார்கள். மனசாட்சியுள்ள ஒரு அதிகாரி சொன்ன தகவல் கடும் அதிர்ச்சி அளித்தது. விரைவில் தேர்தல் நிகழ உள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்த பிரச்னை வந்தாலும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று வாய்மொழியாக தமிழக அரசிடமிருந்து உத்தரவு வந்துள்ளதாக அவர் கூறினார். இந்த விபரத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டுதான் முஸ்லிம் இயக்கங்கள் இம்முறை பல இடங்களில் பிரச்னை செய்துள்ளன.
அதிலும், ஒவ்வொரு முஸ்லிம் இயக்கமும் தங்களுக்குள் அதி தீவிரம் யார் என்று காட்டிக்கொள்ளவே பல இடங்களில் அமளியை ஏற்படுத்தினர். முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாக்கு கிடைக்கும் என்ற மாயையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, பெரும் வன்முறைக்கு வித்திட்டுள்ளது தமிழக அரசு. இதேபோன்ற சூழல் தான், 1998 குண்டுவெடிப்புக்கு முன்னர் கோவையில் நிலவியது என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன் கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் (15 .09 .2010 ) சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்தார்.
தற்போது பற்றி எரியும் காஷ்மீரோ, ஏற்கனவே குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட கோவையோ, எந்தப் பகுதி ஆயினும், அரசின் செயல்பாடற்ற தன்மையே வன்முறைக் கும்பல்களுக்கு நீர் வார்க்கிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

kovai-ganes-2
15 ம் தேதி கோவையில் நடந்த விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் அணிவகுத்துவந்த இந்து முன்னணியின் சீருடைவீரர் படை.

ஆனால், கோவை மக்கள், இந்த மதவெறுப்பு உமிழும் முஸ்லிம் இயக்கங்களையும் அவர்களுக்கு வால் பிடிக்கும் காவல்துறையினரையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு, பெரும் ஆபத்துக்களை சந்தித்து நமது வழிபாட்டு உரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு விநாயகர் அருள் மேலும் வலுவைக் கூட்டட்டும்.
முஸ்லிம்கள் எவரும் ஹிந்து பெரும்பான்மையான பகுதியில் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதில்லை. தினசரி ஐந்து வேளைத் தொழுகைக்காக ஒலிபெருக்கி வைத்து முஸ்லிம்கள் இறைவனிடம் இறைஞ்சுவது எந்த ஹிந்துவுக்கும் இதுவரை இடைஞ்சலாக இருந்ததில்லை. ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சிலை வைத்து வழிபட ஹிந்துக்களுக்கு அனுமதி மறுக்கும் முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகள், நமது பரந்த மனப்பான்மையையும் சமரச மனோபாவத்தையும் கேள்விக்கு உட்படுத்துகின்றன.

முஸ்லிம்களின் வாக்குக்காக கவலைப்படும் தி.மு.க. அரசு, பெரும்பான்மை ஹிந்துக்களின் வாக்குகள் பற்றிக் கவலைப்படவில்லை என்பதும், ஹிந்து சமுதாயம் கற்க வேண்டிய பாடங்களுள் ஒன்று என்றால் மிகையில்லை. இதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தந்த விநாயகர் சதுர்த்திக்கு நன்றி.

எல்லாப் புகழும் அந்த விநாயகனுக்கே!

************

இந்து முன்னணியின் நிறுவனர் ராம.கோபாலன், எண்பது வயது இளைஞர்; நாட்டிற்காக தனது வாழ்வையே ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் வாயிலாக அர்ப்பணம் செய்த மாவீரர்; கொடூரமான கொலைவெறித் தாக்குதலையும் தாண்டி, ‘தமிழகம் என்றும் தேசியம், தெய்வீகத்தின் பக்கம்’ என்று நிலைநாட்ட, சுறுசுறுப்பாக இன்றும் இயங்கி வருபவர். கடந்த புதன் கிழமை (15.09.2010) கோவையில் நடந்த விநாயகர் விசர்ஜன விழாவில் பங்கேற்க வந்திருந்த ராம. கோபாலன் அளித்த பிரத்யேக நேர்காணல் இது…

kovai-ganes-2
கோவையில் செப்-15 ம் தேதி நடந்த விநாயகர் விசர்ஜன விழா பொதுக்கூட்டத்தில், பேசுகிறார், இந்து முன்னணியின் நிறுவனர் ராம. கோபாலன். அருகில் (இடமிருந்து): பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், இ.மு.மாநில செயலாளர் காடேஸ்வரா சுப்ரமணியம், பா.ஜ.க. மாநில செயலாளர் செல்வகுமார்.

கோவையில் இந்த ஆண்டு பல இடங்களில் விநாயகர் சிலை வைக்க முஸ்லிம் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனவே?

முஸ்லிம் இயக்கங்கள் இந்த முறை திட்டமிட்ட ரீதியில் பல இடங்களில் பிரச்னை செய்தது உண்மை தான். தற்போதுள்ள தி.மு.க அரசில் தங்கள் கரம் ஓங்கியுள்ளதைக் காட்ட ஒவ்வொரு முஸ்லிம் இயக்கமும் துடிப்பதன் வெளிப்பாடு தான் இது. தாங்கள் நினைத்ததைச் செய்ய முடியும் என்று அவர்கள் நிரூபிக்க முயன்றிருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான பதிலடியை இந்து மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

காவல்துறையும் கூட பல இடங்களில், ஏற்கனவே விநாயகர் சிலை வைத்த இடங்களிலும் அனுமதி மறுத்துள்ளதே?

அரசு சாதகமாக இல்லாதபோது காவல்துறையால் சுதந்திரமாக செயல்பட முடியாது. இந்நிலையிலும் கோவையில் பல இடங்களில் காவல்துறை நேர்மையாகவே செயல்பட்டுள்ளது என்று கருதுகிறேன். என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய பல அதிகாரிகள், அரசின் பாரபட்சமான அணுகுமுறை குறித்து வருத்தம் தெரிவித்தனர்,

செல்வபுரம்- கல்லாமேடு பகுதியில் முஸ்லிம்களின் எதிர்ப்பையும் மீறி அங்கு விநாயகர் சிலை வைத்த அப்பகுதி ஏழை மக்கள், போலீசாரின் கைது நடவடிக்கையையும் துணிந்து சந்தித்தார்கள். குனியமுத்தூர், மதுக்கரை பகுதிகளிலும், நிலைமை பாதகமாக இருந்தபோதும் ரத்தம் சிந்தி நமது சகோதரர்கள் உரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டுகிறேன். செல்வபுரத்தில் காவல்துறையை வீரமாக எதிர்கொண்ட தாய்மார்கள் இருக்கும் திசைக்கு எனது வணக்கங்கள்…

ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றனவே. இதைத் தவிர்க்க வழி என்ன?

இப்படி நடக்கும் என்பது நாம் எதிர்பார்த்தது தான். இந்து சமுதாயம் முழுவதும் விழிப்புணர்வு அடையாதவரை, இத்தகைய பாதிப்புக்களை சந்தித்துத் தான் ஆகவேண்டும். இதன் மூலமாகவே நமது மக்களை தயார் செய்ய வேண்டும். மக்களே எதிர்விளைவு காட்டத் தயாராகும்போது முஸ்லிம்கள் நிதர்சனத்தை உணர்வர். அது மட்டுமல்ல, காவல்துறையும் அடக்கி வாசிக்கும்.

இந்த நாடு இந்து மக்களின் சொந்த நாடு. இங்கு வழிபாட்டு உரிமைக்கு யாரிடமும் நாம் யாசகம் கேட்க வேண்டிய அவசியமில்லை. நமது வழியில் தொடர்ந்து, சோதனைகளைத் தாண்டி பயணிப்போம்.

தற்போது 1998 குண்டுவெடிப்புக்கு முந்தய சூழலுக்கு கோவை சென்று கொண்டிருப்பதாக உணர்கிறேன். எனவே நாம், அனைத்து ஜாதி சங்கங்களையும் இந்து என்ற அடிப்படையில் ஒருங்கிணைக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் தமது பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காலகட்டம் இது. தங்கள் பகுதியைக் காக்க அவரவர் பகுதிகளில் விழிப்புணர்வுக் குழுக்கள் அமைப்பது மட்டுமே கோவையை பயங்கரவாதிகளிடமிருந்து காக்கும். இதற்கான பணிகள் ஏற்கனவே பல இடங்களில் துவங்கிவிட்டன.

kovai-selvapuram-2
செப்டம்பர் 14 ம் தேதி கோவை, குனியமுத்தூரில் நடந்த விநாயகர் ஊர்வலம்.

சரவணம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் சிவகுமார் அத்துமீறி செயல்பட்டுள்ளது குறித்து…

இதுகுறித்து கோவையில் நடந்த பொதுக்கூட்டத்திலேயே பேசினேன். அவருக்கு வீரசக்ரா போன்ற ஏதேனும் விருதுகளை தமிழக அரசு தரலாம் என்று அப்போது பரிந்துரைத்தேன். சமூக விரோதிகளைக் கட்டுபடுத்த கையாலாகாத இவர், அப்பாவி இந்து முன்னணித் தொண்டர்களை அதிகாரபலத்துடன் கடுமையாகத் தாக்கி இருக்கிறார். அதற்கான பலனை அவருக்கு இறைவன் நிச்சயமாகத் தருவார். அந்த வழக்கை இந்து முன்னணி சட்டரீதியாக சந்திக்கும்.

இதே போன்ற சூழல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் 30 ஆண்டுகளுக்கு முன் நிலவியது. அதனால் தான் அங்கு இந்து விழிப்புணர்வு ஏற்பட்டது. அமரர் தாணுலிங்க நாடார் இந்து முன்னணியை ஆரம்பிக்க அத்தகைய சூழலே காரணமானது. ஆகவே கோவையில் நிகழ்ந்துள்ள அத்துமீறல்களை, நான் நமது பலவீனமாகக் கருதவில்லை.

மதுக்கரையில் விநாயகர் சிலை வைக்க உதவிய காரணத்திற்காக ஹிந்து வியாபாரி ஆறுமுகம் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது குறித்து…

அவரை இந்து முன்னணி நிர்வாகிகள் பாதுகாப்பார்கள். தற்போது கொலைவெறித் தாக்குதலில் தப்பி சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு அரசு இலவச உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். சூறையாடப்பட்ட அவரது கடைக்கு நஷ்டஈடாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆறுமுகத்தையும் அவரது குடும்பத்தையும் இன்றைய துயரகரமான நிலையில் காப்பது அனைத்து இந்துக்களின் கடமை.

குனியமுத்தூரில் காவல் உதவி ஆய்வாளர் காசி பாண்டியன் முஸ்லிம் இயக்கங்களால் தாக்கப்பட்டதை காவல்துறையினர் மறைக்கின்றனரே?

இதுவும் புதிதல்ல. 1997-லேயே கோவை இத்தகைய சம்பவங்களைப் பார்த்துவிட்டது. போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னரே, கோவை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதை அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள். ஆனால் அப்போதும் பூசி மெழுகினார்கள். அரசு எப்படியோ, அதன்படி அவர்கள் செயல்படுகிறார்கள். மேலிடத்திலும் ஆதரவு இல்லாத நிலையில், அவர்கள் எப்படி,, தங்களது சக அதிகாரி முஸ்லிம்களால் தாக்கப்பட்டதை ஒப்புக் கொள்வார்கள்?

கோவையில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன் இங்கு பணியில் இருந்த தென் தமிழகத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் ஓய்வு பெற்ற பிறகு சென்னையில் குடியேறினார். அப்போது, தனது சொந்த ஊரிலிருந்து ஆட்களை அழைத்துவந்து தனது பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டார். காவல் உயரதிகாரியாக இருந்த ஒருவருக்கே இந்நிலை என்றால், பணியில் இருக்கும் சாதாரணக் காவலரின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த வாக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக ‘ஓட்டுவங்கி’ அரசியல் நடத்தும் கோழைத்தனமான, சுயநல தி.மு.க. அரசு தான் காவல்துறையின் செயலின்மைக்கு காரணம். அதையும் மீறி கோவையில் காவல்துறை செயல்படுகிறது என்பதே எனது நம்பிக்கை.


மதுக்கரையில் நடந்த விநாயகர் விசர்ஜன ஊர்வலம்.

ஹிந்து இயக்கங்கள் பல பெயர்களில் பிரிந்து செயல்படுவது ஒற்றுமையை பாதிக்கிறதே?

இதை தவிர்க்க இயலாது. கட்டுக்கோப்பான இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள இயக்கங்களிலேயே பிளவும் போட்டியும் காணப்படுகிறது. எந்த அடிப்படைக் கட்டுமானமும் இல்லாத ஹிந்துக்கள் – நெல்லிக்காய் மூட்டைகளாக கருதப்பட்டவர்கள்- ஒன்றுபட்டதே இறைவன் திருவருள் தான். எனினும் இயக்கக் கட்டுப்பாடுகளை மீறும்போது அதை அனுமதிப்பது இயக்கத்தைக் குலைத்துவிடும். எனவே தான் சுயநலவாதிகளால் பிரச்னை ஏற்படும்போது அவர்கள் வெளியேற்றப் படுகிறார்கள். ஒத்த கருத்து இல்லாதவர்கள் விலகுவதும் நல்லதே.

அதே சமயம், பல இயக்கங்களாக இருந்தாலும், அனைவரும் ஹிந்து உணர்வுடன், விநாயகர் மீதான பக்தியுடன் செயல்படுவது மகிழ்ச்சிக்குரியது. இந்து முன்னணி மட்டும் விநாயகர் சிலைகள் வைத்தால் இவ்வளவு சிலைகளை வைத்திருக்க முடியாது. இயக்கங்கள் பல இருப்பதால், விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. இது ஆக்கப்பூர்வமானது தானே?

எனினும், அனைத்து ஹிந்து இயக்கங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம் அல்லவா?

உண்மைதான். அதற்கான காலநேரம் வரும்போது அதுவும் சாத்தியம் ஆகும். அதே சமயம், அதிருப்தியாளர்களை ஊக்குவிப்பதாக நமது நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது. தற்போதுள்ள நிலையில் அவரவர் தங்கள் வழியில் பயணிப்பதே பொருத்தமாக இருக்கும்.

மக்கள் ஆதரவு விநாயகருக்கு இருப்பதால் தான், அனைவரும் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் வருகிறார்கள். இதைப் பயன்படுத்தி சிலர் தங்களை வளர்த்துக் கொளவதையும் காண்கிறோம். எனவே இந்த விஷயத்தை மிகவும் நிதானமாகவே அணுக வேண்டும். எதிர்காலத்தில் அனைத்து ஹிந்து இயக்கங்களும் ஓரணியில் திரளும் காலம் கண்டிப்பாக வரும்.

சென்ற ஆண்டை விட அடக்குமுறை அதிகமாக இருந்தும், கோவை மாநகரில் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதுமே விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது குறித்து…

எல்லாம் அந்த விநாயகப் பெருமானின் அருளே. இந்த ஆண்டு கோவையில் நடந்த விசர்ஜன ஊர்வலத்தில் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக உளவுத்துறையினர் கூறுகின்றனர். சென்ற ஆண்டை விட இது இருமடங்கு அதிகம். குறிப்பாக பெண்கள், இளைஞர்களின் பங்கேற்பு மிகுந்த உற்சாகம் அளிப்பதாக உள்ளது.
இதுவே நமக்கு மிகுந்த செயலூக்கத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. நமக்கு வரும் சவால்களையும் சாதகமாக்க முடியும் என்பதற்கான நிரூபணம் இது.

தடைகளைத் தாண்டி ஓடும் நதி போல, நமது பணி நாட்டுநலனை மட்டுமே கருத்தில் கொண்டு தொடர வேண்டும். தற்போதைய எதிர்த்தரப்பினரின் தாக்குதல்களையும் நமது வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் ஆக்குவோம். இன்று எதிரிகளாக இருப்பவர்களும், நம்மை கிள்ளுக்கீரைகளாக நினைப்போரும் மனம் திருந்தும் காலம் வரும். மனஉறுதி படைத்த கோவை இந்து மக்கள் நிரூபித்துள்ள ஒற்றுமையும் வலிமையையும் வெற்றியும் கூறும் கட்டியம் இதுவே.

தமிழ்ஹிந்து வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி…

இணைய உலகில் தமிழ்ஹிந்து அரிய பணியாற்றி வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இறைவன் அருள் பூரணமாகக் கிட்டட்டும். ஹிந்து ஒற்றுமை, ஆன்மிகம், தமிழ் இலக்கியங்களில் இந்துத்துவம், நமது சேவை அமைப்புகளின் தொண்டுப் பணிகளை ஆரவாரமின்றி இணைய உலகில் கொண்டுசென்று வருகிறது தமிழ்ஹிந்து. இது மேலும் பிரபலமாக வேண்டும். ஹிந்துத்துவம் வேறு; பாரதம் வேறல்ல- இதை தமிழ்ஹிந்து தனது பாணியில் நிலைநாட்ட வேண்டும். இதுவே நான் சொல்ல விரும்பும் செய்தி.

24 Replies to “எல்லாப் புகழும் விநாயகனுக்கே!”

  1. மக்கள் விழாக்களை கொண்டாட விடாமல் இடையறாத இடையூறு செய்யும் இச்செயல் சுதந்திர நாடு என்பதை கேள்விக்குறி ஆக்குகிறது. கண்டிக்கத்தக்கது. நாத்திகர்களின் நாத்திகத்தீவிரவாதம் பற்றி யாம் கண்டனம் தெரிவித்து எழுதிய போது வந்த சப்பைக்கட்டு பின்னூட்டத்தை இங்கே பார்க்கலாம்!

    https://hayyram.blogspot.com/2010/09/blog-post_13.html

  2. விநாயகர் ஊர்வலத்தின் பாரம்பரியம் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. அது இந்துக்களை இணைக்கும் ஒரு விஷயமாக பிற்காலத்தில் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது தமிழ் நாட்டுக்கு அவசியமா? இத்தனை பாதுகாப்புப் பிரச்சனையோடு ஒரு கலவர பயத்தோடு இது அவசியமா?
    விநாயகர் வழிபாடு நமது வழிபாடுகளிலேயே மிகவும் எளிமையும் நிபந்தனைகளற்ற முறையிலே தான் இருக்கும். அதற்கு நேர்மறையாக இருக்கிறது இந்த ஊர்வலங்கள்.
    அந்த ஊர்வலத்தில் கூட்டம் கூட்டமாக வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சத்தம் எழுப்பிச் செல்கிறார்கள். இது ஏன்

    வருடத்துக்கு ஒரு முறை விநாயகர் ஊர்வலம் நடத்தி விட்டால் இந்துக்கள் ஒற்றுமையாக விழிப்புணர்வோடு இருப்பதாக அர்த்தம் ஆகி விடுமா?

    ***
    நேற்றைய பிள்ளையார் ஊர்வலத்துக்கு ஒற்றுமையுடன் ஒரு முஸ்லிம் அமைப்பு
    ஒத்துழைப்பு கொடுத்ததோடு பொன்னாடை போர்த்தி வழி அனுப்பி மத நல்லினக்கணத்தை வெளிப்படுத்தும் ஒரு சம்பவத்தை தமிழகத்தில் தான் செய்தியில் பார்க்க நேர்ந்தது.
    (பிள்ளையார், பேராசிரியர், தஸ்லிமா,குரான், காஷ்மீர் https://wp.me/p12Xc3-110 )

  3. வணக்கம்

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கின் ……

    பாரதியின் வைர வரிகள் நினைவு வந்தது. இன்னமும் சுய உணர்வு இல்லாதோர் தயவு செய்து விழித்துக் கொள்ளுங்கள்.

  4. பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பின் போது மக்களை ஒற்றுமைப் படுத்தவும்,விழிப்புணர்வு ஏற்படுத்தவும் லோகமான்ய பால கங்காதர் திலகர் விநாயகர் வழிபாடு மற்றும் ஊர்வலம் மூலமாக அதை செய்தார் .
    அதை அடி ஒற்றியே இது நடக்கிறது

    பணக்கார ,மேல் தட்டு மக்கள் மட்டுமே பற்பல கோயில் மற்றும் திருவிழாக்களை நட த்துகின்றனர். பங்கேற்கின்றனர்..
    அதனால் பெருவாரியான ஏழை ஹிந்துக்கள் சுய அடையாளம் இன்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு ஹிந்துவாக இருப்பதில் ஆவலும், நாட்டமும் இருந்தும் தாங்கள் புறக்கணிக்கப் படுகிறோமோ என்று எண்ணுகின்றனர்.
    இந்நிலையில் அவர்களை கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் மாற்றுவது எளிதாகின்றது.

    விநாயகர் ஊர்வலம் மிகச் சாதாரண ஏழை மக்கள் தாங்களும் ஹிந்துக்களே என்று பெருமிதம் கொள்ள வைக்கிறது
    எப்படியாவது ஒற்றுமை ஏற்பட்டால் நல்லது தானே?

    இது தேவையா ?-இப்படிக் கேள்வி கேட்டால் எதுவுமே தான் தேவை இல்லை
    -சவ ஊர்வலம் முதல் சாமி ஊர்வலம் ஏன் கல்யாண ஊர்வலம் கூட தேவை இல்லை்

    பிரச்னை ஏனென்று நாம் ஆராய வேண்டும்.
    மசூதி இருக்கும் தெரு வழியாக விநாயகர் ஊர்வலம் போகக் கூடாது என்று அடம் பிடிப்பதில்தான், மீறி சில இடங்களில் சென்றால் அவர்கள் மீது செருப்பு, கல் வீசுவது இதெல்லாம் தான் பிரச்னை.
    இதை விட்டுக் கொடுத்தால் நாளை காஷ்மீரில் ஆனது போல் ஹிந்துக்களை ஊரை விட்டே துரத்தி அடிப்பார்கள்
    அது பரவாயில்லையா?

    இவ்வளவு காவல் , பாதுகாப்பு எல்லாம் ஹிந்துகளுக்காக இல்லை .
    தப்பித் தவறி கூட ஹிந்துக்கள் தங்கள் உரிமையை நிலை நாட்டி விடப்போகிறார்கள் ஜாக்கிரதையாக அவர்களை மிரட்டி அடக்கி கொண்டு சேர்த்து முஸ்லிம்களிடம்-‘ பார்த்தீர்களா நங்கள் ஹிந்துக்களை எப்படி அடக்கி வைத்திருக்கிறோம், நீங்கள் கிழித்த கோட்டை தாண்ட மாட்டோம் என்று நல்ல பெயர் எடுப்பதற்கு.

    எதாவது நடந்து முஸ்லிம்களுக்கு கோபம் ஏற்பட்டு ஆளும் கட்சிக்கு வோட்டு போடாமல் போய் விடப் போகிறார்களே என்றுதான்
    இவ்வளவு ஆர்ப்பாட்டமும்.

  5. விநாயகர் ஊர்வலங்கள் தேவையா என்றால், பாலா கங்காதர திலகருக்கு என்ன தேவை இருந்ததோ அதை விட இப்போது அதிகமாக நமக்கு நம் ஒற்றுமையை நிரூபிக்க த் தேவை இருக்கிறது! எந்த அரசியல் கட்சியும் நமக்கு ஆதரவாக இருக்கும் என நினைக்க முடியாது! நாம் ஒன்று பட வேண்டும், அப்போது தான் பலம் பெற முடியும்! நன்றி!
    கோவை நமக்கு நம் ஒற்றுமையின் தேவையை சரியாக உணர்த்தியுள்ளது! நன்றி!
    ஒன்று பட வேண்டும், அப்போது தான் உயர்வு! நன்றி!

  6. ஹிந்துக்களே ஒன்று படுங்கள். இல்லையேல் ஒழிக்கபடுவீர்கள். கஷ்மீரில் உள்ள ஹிந்துக்களின் நிலை நாளை உங்களுக்கும் ஏற்படும். இது போன்ற மத விழாக்களிலாவது ஒன்றுபடுவோம். நன்றி தமில்ஹிண்டு சிற்பிகளே.

  7. Unless we swing in to legal offence, we would be bulldozed by the government and police.. Learn the art of playing the game by rule.. There is no point in calling “hindus should unite”.. it is not possible.. unless hindu organisations take a rational and professional approach in its activities, it will end up only in playing with emotions..

    Be like a tiger, where we dont chase the assaulters to the end.. but what hindu organisations are doing is just reactionary measures, in getting bail, arguing in court in defence etc..
    On the other hand, we should have taken all those officers to be accountable for their own actions, .. but we did not do, and in turn complain to ourselves..

  8. அந்த கோவை உக்கடத்தில் உள்ள முஸ்லிம் அமைப்பினர் தான் ஏதும் அறியாத அப்பாவி கான்ஸ்டபிளை பட்ட பகலில் அத்தனை போக்குவரத்து உள்ள நடுரோட்டிலே குத்தி கொலை செய்தனர்.
    அந்த கோவை நகரிலும் இன்னும் அவர்களுக்கு துணை போகிறதா காவல்துறை.

    அன்று அமரர் செல்வராஜுக்கு நிகழ்ந்தது .நாளை எந்த காவலருக்கும் நிகழாமல் இருக்க அவர்கள் மீது அந்த குறிப்பிட்ட இயக்கத்தின் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அந்த இயக்க தலைவரின் புதல்வர் இன்று கோவையில் பெரிய கட்டபஞ்சாயத்து தலைவராக வலம் வருகிறார். பின்னர் ஏன் அவர்கள் நம்மை மிரட்டமாட்டர்கள்.

    15 இந்து குடும்பங்கள் மட்டும் உள்ள அவர்கள் மஜாரிட்டியாக உள்ள ஒரு தெரிவில் சிலை வைக்க கூடாது என்றும்,அவர்களை காலி செய்து விடுவோம் என்றும் கூறும் போது.
    80 சதத்திற்கும் மேல் உள்ள நாம் இந்த நாட்டில் அவர்களுக்கு இது போல ஏதாவது இடையூறு செய்ததுண்டா?
    அவர்கள் அந்த 80 சதத்தை அடையும் போது நம் நிலை என்ன?

    நண்பர்களே விழிப்படையுங்கள், முடிவுக்கு வாருங்கள் இந்த ஊர்வலம் இனி அவசியமா? இல்லையா? என்று புரிந்துகொள்ளுங்கள்.
    நாம் அவர்களை போல் நடக்க வேண்டாம் ஆனால் நம் உரிமைகளை நாம் அடைந்தே தீர வேண்டும். ஒன்றுபட்டால் அவர்களை போல் நாமும் எந்த பிரிவினையும் இன்றி ஒன்று பட்டால் நிச்சயம் நமக்கு நம் உரிமைகளை பெறலாம். இல்லையேல் ?

  9. விநாயகர் ஊர்வலம் தேவை இல்லை என்று இன்று நிறுத்தி கொண்டால்,
    நாளை நாங்கள் உள்ள ஊருக்குள் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது தொல்லையாக உள்ளது என்று அதையும் நிறுத்த சொல்வார்கள்.

    ஊருக்குள்ளே கோவில் இருப்பதால் வருடம் தோறும் திருவிழா நடத்தி சாமி ஊர்வலம் வருவதால் கோவில்களை எல்லாம் அப்புறபடுத்த சொல்வார்கள்.
    ஒவ்வொரு உரிமையாக நாம் இழக்க வேண்டியதுதான். `
    அவர்கள் குறைவான மக்கள் தொகை உள்ள ஊர்களிலும் ஒலிபெருக்கி வைத்து ஐந்து வேளை வாங்கு சொல்லி தினமும் தொந்தரவு செய்வதை நாம் பெருந்தன்மையோடு பொறுத்து கொள்வதில்லையா?

    நாம் அவர்களை தொந்தரவு செய்யாமல் நம் விழாக்களை கொண்டாடுவதை தடுக்கும் போது அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் போது நாம் ஒன்று பட்டு நமக்கு சாதகமான ஒரு அரசை அமைப்பது நல்ல தீர்வாகும். சிந்தியுங்கள் நண்பர்களே.
    திரு முக அரசு கோலாச்சும் நாள் வரை இப்படித்தான் இருக்கும்.

  10. Pingback: Indli.com
  11. தமிழ் ஹிந்து ஆசிரியருக்கு,

    தமிழ் ஹிந்துக்களுக்கு சரியான ஒற்றுமை வேண்டும் ஒற்றுமை வேண்டும் என்பதற்குப் பதிலாக இந்து மதத்தின் மேன்மையை உணரவைத்தாலே ஒற்றுமை தானாக வருமே!
    அத்தகைய வழியில் இந்த தளம் மிகவும் பயன்தரும். மேலும் தளத்தில் ஒரு கருத்துக் களம்[forum] ஆரம்பித்தால் இணையத்தில் புழங்கும் ஹிந்துக்கள் சேர்ந்து உரையாட சிறந்த வழியாக அமையும். சத்சங்கம் போலவும் ஆகும். தளத்தில் இணைக்க முடியாவிட்டால் தற்காலிக போரும் வசதிதரும் சேவைகள் பல உள்ளன பயன்படுத்தலாம்.

    மேலும் கேள்வி பதில் என்கிற புதியப் பகுதியையும் உருவாக்கலாம். ஆத்திகர்கள் பரப்பும் சில புரளிகளுக்கு தக்க விளக்கம் தந்து சாதாரண நிலை மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தலாம்.

  12. தனிநபர்கள் ,வீட்டிலும் அலுவலகத்திலும் விநாயகரை வைத்து வழிபட்டு பின்னர் குளத்தில் கரைக்கும் பழக்கம் தொடங்கிஉள்ளது வரவேற்கதக்கது.இது ஏதும் விநாயகர் ஊர்வலத்தின் கணக்கில் வராது .ஒற்றுமைவலுகிறது , மாற்றம்ஏற்படுகிறது என்பதற்கு இதுவே முதல் சான்று என்று நான் நினைக்கிறேன்.
    ஒற்றுமை ஓங்குகிறது, தியாகத்தின் நிறம் கோவையை ஆட்கொள்ளட்டும்

    ஜெய் பவானி
    வந்தே மாதரம்

  13. நண்பர் ராஜா அவர்களுக்கு
    தங்களின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன் . ஆவன செய்யுமா தமிழ் ஹிந்து ஆசிரியர் குழு ?

  14. விபத்தில் விழுந்து உடைந்த பிள்ளையார் சிலையை, பிள்ளையார் விபத்தில் காலமானார் என்றும் அதை எவ்வளவு கேவலமாக பிள்ளையாரை காட்ட முடியுமோ அந்த அளவு ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார் நம் அன்புக்குரிய நண்பர் திரு சில்சாம் அவர்கள். அதிலே பின்னுட்டம் இட்டு விநாயகரை நக்கலடித்து மகிழ்ந்து உள்ளனர் சிலர்.
    அல்ப சந்தோஷகாரர்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன் இப்போது தெரிந்து கொண்டேன்.
    நண்பரின் பெயரை சில்லி ஜாம் என்று சில நண்பர்கள் எழுதும் போது அந்த வார்த்தையை ஏன் எழுதுகிறார்கள் என்று முகம் சுழித்திருக்கிறேன்.
    இப்போது புரிகிறது காரணத்தோடு தான் எழுதுகிறார்கள் என்று.

    ஏன் உங்கள் சிலுவையையோ அல்லது ஒருஇயேசுவின் சிலையையோ வண்டியில் ஏற்றி போகும் போது விபத்து நடந்து உடைந்து விட்டால் இயேசு மறித்து விட்டார் மீண்டும் என்று கூறுவீர்களா? இதற்கு பிறகு மீண்டும் ஒரு உயிர்த்தெழுதலும் ,புது பைபிள்லும் உண்டாக்குவீர்களா?
    அல்லது அவருக்கு ஒரு கல்லறை வைத்து வருடா வருடம் கல்லறை திருவிழா நடத்துவீர்களா?

    நண்பரே ஆரோகியமான விவாதங்கள் மட்டும் செய்யும் சகோதரர்களாக தான் நமுடைய கருத்து பரிமாற்றம் இருக்கவேண்டுமே ஒழிய இது என்ன சின்னபிள்ளை தனமான செயல்கள். அது இப்போது நீங்கள் இருக்கும் கூடத்திற்கே சிறிதும் கிடையாதா? அடுத்தவர் அடிபட்டால் உங்களுக்கு சந்தோசமா? எங்களை இந்த விதத்தில் கிண்டலடிப்பதில் என்ன அடிந்து விட போகிறீர்கள். வீட்டு வாசலில் நின்று பாவிகளே என்று அழைக்கும் நபர்களின் செயலை விட மிகவும் கீழ்த்தரமான செயல் இது. அடுத்தவர் சறுக்கி விழுந்தால் கைகொட்டி மகிழ்வதுதான் உங்களின் அன்பு மதம் உங்களுக்கு போதிக்கும் தத்துவமா? இதிலிருந்தே தெரிகிறது அங்கே உள்ள உயர்ந்த கருத்துக்கள்.

    ஆடை இல்லாதவன் ஆப்பிள் தின்றதை பாவமாக்கி இன்னும் அதனை எல்லார் தலையுளும் கட்டி விட முயலும் நீங்கள் அதற்க்கு சரியான பதில் சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருக்கும் நீங்கள் எது ஏதோ சொல்லி மழுப்பும் நீங்கள். விநாயகர் சிலை விபத்தில் விழுந்து உடைந்ததை //???////////??????/??????/

    நண்பர்களே ஒரு அன்பு மதத்தை பரப்பும் நண்பரின் செயல்பாட்டை தெரிந்து கொள்ளுங்கள்.

  15. கூடுதல் செய்தி:

    மதுக்கரை இஸ்லாமியர்கள்
    மன்னிப்பு கோரினர்

    கடந்த விநாயகர் சதுர்த்தியன்று கோவை- மதுக்கரையில் முஸ்லிம்கள் நடத்திய வன்முறையால் ஹிந்து வியாபாரி ஒருவரின் கடை சூறையாடப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து செப். 13 -ம் தேதி மதுக்கரையில் முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. உள்ளூர் மக்களிடையே எதிர்ப்பு வலுத்ததை அடுத்து, அங்குள்ள இஸ்லாமியர்கள் நிதர்சனத்தை உணர்ந்து, நடந்துவிட்ட சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரினர்.

    இது தொடர்பாக, பேரூர் டி.எஸ்.பி. முத்தரசு தலைமையில் அமைதிக்கூட்டம் (18.09.2010), மதுக்கரை – க.க.சாவடியில் நடந்தது. இதில் விஸ்வ ஹிந்து பரிஷத், உள்ளூர் ஜமாஅத் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    நடந்துவிட்ட விரும்பத் தகாத சம்பவங்களுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும், தங்கள் சமுதாயத்திலுள்ள பிரச்னைக்குரிய தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்பினரை கட்டுப்படுத்துவதாகவும், மதுக்கரை சுன்னத் ஜமாஅத் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வருங்காலத்தில் தங்கள் பகுதியில் மதவெறுப்பைத் தூண்டும் சுவர் விளம்பரங்களைத் தடுப்பதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர்.

    அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை தாங்களே முன்னின்று துவக்கிவைத்து மத நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதாகவும் அவர்கள் அறிவித்தனர். வன்முறையில் பாதிக்கப்பட்ட ஹிந்து வியாபாரி ஆறுமுகத்திற்கு நஷ்டஈடு தரவும் அவர்கள் முன்வந்தனர். அதனை ஹிந்துக்கள் ஏற்கவில்லை. தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை தாங்களே சரிப்படுத்திக் கொள்வதாகவும் ஹிந்து அமைப்புகள் கூறிவிட்டன.

    இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு உள்ளூர் தி.மு.க.பிரமுகர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கருஞர் ஒருவரும் ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
    .

  16. ரொம்பவே வருத்தமா இருக்கு படிக்கவே. அந்த விநாயகர் தான் எல்லாத்தையும் சரியா நடத்தணும். விநாயகர் அனைவர் மனதிலும் புகுந்து நல்வழி காட்டவேண்டும். 🙁

  17. மதுக்கரையை சேர்ந்த இஸ்லாமிய நன்னெஞ்சங்களுக்கு எம் மனமார்ந்த நன்றிகள். சமாதானம் ஏற்பட வழி செய்த உள்ளூர் தி.மு.க.பிரமுகர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கரிஞ்சருக்கும் நன்றிகள்.

    இரு தரப்பினரின் மன வேற்றுமையை நீக்கி பகை களைந்து அவர்களிடம் நட்பு மலர செய்த செயலே மிகபெரிய தர்மம்.

  18. உண்மை.
    ஹிந்துக்கள் வளமாக வாழ்வது கண்டு வயிற்றெரிச்சலில்தான் இப்படிச் செய்கிறார்கள்
    இது இப்போது இல்லை,
    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து மூன்றில் இலங்கையிலிருந்து தப்பி வந்த இரு தமிழ் இளைஞர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது
    மதுக்கரை நிகழ்ச்சி, ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்ற பழ மொழியை நினைவுப்படுத்துகிறது.

    வீரா சவர்க் காரின் வசனம் – ‘வந்தால் உன்னுடன், வராவிட்டால் தனியே ,எதிர்த்தால் உன்னையும் மீறி’
    அதுதான் இனி ஹிந்துக்களின் நிலை.

  19. அமெரிக்காவில் ஒரு இடத்தில சில நாட்களுக்கு முன்பு மிக பிரம்மாண்டமான் இயேசு சிலை ஒன்று விழுந்து நொறுங்கியது
    ஆனால் அப்போது ஹிந்துக்கள் இப்படி சில்லறைத்தனமாக பேசவில்லை
    .

  20. சுனாமியில் வேளாங்கண்ணி சர்ச் வளாகத்தில் ஆங்கில வருடப் பிறப்பு கேளிக்கையின் போது கடல் அன்னை பலரை வாரிக் கொண்டு போன போது ஹிந்துக்கள் இவ்வாறு பேசவில்லை..

  21. தமிழ்ஹிண்டு தளத்தை நடத்துபவர் உண்மையான ஆண்மக்கள்.
    வாழ்க வளர்க
    ஜெய் ஹிந்த்

  22. உங்களுடைய சேவை பாரத தேசத்திற்கு தேவை வந்தே மாதரம்

  23. காவி கொடியை கையில் எடு கடும் கயவர்களை நீ அழித்துவிடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *