அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1

60 ஆண்டு காலமாக நாடு எதிர்பார்த்த அயோத்தி கோயில் நில உரிமை தொடர்பான தீர்ப்பு ஒருவழியாக வெளியாகிவிட்டது. காலம் india-ayodhya-verdict-2010-9-23-9-40-24கடந்த தீர்ப்பாயினும், இப்போதாவது வந்ததே என்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். அந்த அளவிற்கு, பத்திரிகைகளும், ஊடகங்களும் நாட்டு மக்களை அயோத்தி விஷயத்தில் மக்களைக் குழப்பி இருந்தன.

அயோத்தி என்று சொன்னாலே ஏதோ காஷ்மீரின் மர்மப் பகுதியில் இருக்கும்  பயங்கரவாதிகள் முகாம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திய ஊடகங்கள், நாட்டிற்கு இழைத்துள்ள அநீதி அவ்வளவு சீக்கிரம் அழிந்துவிடாது. ராமஜன்மபூமி குறித்த தீர்ப்பு வெளியான நேரத்தில், நாடு முழுவதும் அறிவிக்கப்படாத வேலைநிறுத்தம் போல- மக்களே ஏற்படுத்திக்கொண்ட ஊரடங்கு உத்தரவு போல- காணப்பட்டது. எல்லாப் பெருமையும் பத்திரிகைகளுக்கே!

தீர்ப்புக்கு முன்:

பத்திரிகைகள் சமூகத்தின் மனசாட்சியாக இருக்க வேண்டும்; நாட்டுநலத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை வழிநடத்த வேண்டும்; சத்தியத்தின் வாழ்விற்காக அதிகாரபலத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இவையெல்லாம், நமது இதழியல் முன்னோடிகளான மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், வீர சாவர்க்கர், அரவிந்தர், மகாகவி பாரதி ஆகியோர் நமக்கு வழங்கிச் சென்ற அற்புத வழிமுறை. ஆனால், வர்த்தகமும், சுயநலமும் கோலோச்சும் தற்போதைய ஊடக உலகிடம் இவற்றை எதிர்பார்ப்பது, முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போன்றது.

propaganda-despairஅயோத்தி இயக்கம் துவங்கியதிலிருந்தே, நமது பத்திரிகைகளும் ஊடகங்களும், நாட்டு மக்களைக் குழப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளன. குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் ராமர் கோயிலுக்கு எதிரான பிரசார இயக்கத்தையே முன்னெடுத்தன.

இதன் அடிப்படை புரியாமலே, ஆங்கில பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அப்படியே மொழிபெயர்த்து பிராந்திய மொழி பத்திரிகைகள் வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்தன. அயோத்தியில் ராமர் பிறந்தாரா? அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டாவிட்டால் வானம் இடிந்து விழுந்துவிடுமா? சர்ச்சைக்குரிய கட்டடம் இருந்த இடத்தில் பொதுக் கழிப்பறை கட்டலாமா?  கரசேவகர்களுக்கு  தூக்கு தண்டனை  தரலாமா? இப்படியெல்லாம் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதன் பின்னணியில் ஹிந்து விரோத சக்திகளும், வெளிநாட்டு பணபலமும் இருந்தது மக்களுக்குத் தெரிய நியாயமில்லை.

அயோத்தி இயக்கத்தின் உச்சகட்டம் 1992, டிச. 6 -ல் கரசேவகர்களின் எழுச்சியாக அமைந்தபோது, அதை இந்தியாவின் கருப்பு தினமாக அறிவிக்காத ஊடகங்களே இல்லை எனலாம்.  1948- லிருந்து ராமபக்தர்கள் காத்திருக்கும் தீர்ப்பு வெளியாகாமல் இழுத்தடிக்கப்பட்டு, நீதி ஒளித்து வைக்கப்படாமல் இருந்திருந்தால், டிச. 6 -ல் அந்தச் சம்பவமே நடந்திருக்காது என்று எந்த பத்திரிகையும் சுட்டிக்காட்டவில்லை. ஆனால், அன்று நடந்த கரசேவை தான், தற்போது அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அடிநாதமாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். இப்போது அதனைச்  சுட்டிக்காட்ட எந்த ஊடகங்களும் தயாரில்லை.

propaganda2அயோத்தி வழக்கில் கடந்த செப். 24 -ம் தேதியே  அலஹாபாத் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே முன்னெச்சரிக்கை பிரசாரம் களைகட்டிவிட்டது. காவல்துறை குவிப்பு, பாதுகாப்புப் படையினர் வருகை, யாரையும் புண்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை, மத்திய அமைச்சர்களின் ‘மேல்முறையீடு’ வேண்டுகோள்கள், நடமாட்டம் குறையும் சாலைகள் என்று பத்திரிகைகள் தேசசேவகம் செய்தன.

யாருமே, ஒரு நீதிமன்றத் தீர்ப்பிற்காக இத்தனை முன்னெச்சரிக்கை தேவை ஏன் என்று எழுதவில்லை.  மின்னணு ஊடகங்களும் தொடர்ந்து இதே பிரசாரத்தை முன்னின்று நடத்தின. இதன் விளைவாக செப். 24 -ம் தேதி பயங்கர நாளாக உரு மாற்றப்பட்டது. அதற்கு முதல்நாள் அறிவுஜீவி வழக்கறிஞர் ஒருவர் பெற்ற தடையாணை (சமரசத்திற்கு ஒருவார காலம் வாய்ப்பு!!!) காரணமாக நாடு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆயினும், அன்று  துவங்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அப்படியே தொடர்ந்தன.

நாடு  முழுவதும் குழும குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்)  அனுப்பத்  தடை விதித்து மத்திய அரசு தனது மதியூகத்தை  எண்ணி மார்தட்டிக் கொண்டிருக்க, அதே எஸ்.எம்.எஸ்.களை தேசபக்தியுடன்  அனுப்பி நாட்டைக் காக்குமாறு கூறி தொலைகாட்சி செய்தி அலைவரிசைகள் தங்கள் ரேட்டிங்கை உயர்த்த படாதபாடு பட்டன.

கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் எஸ்.எம்.எஸ். அனுப்புவதே தடை செய்யப்பட்டது. இது எந்த வகையிலான அரசு உரிமை என்று கேட்கும் அறிவு எந்த பத்திரிகைக்கும் இருக்கவில்லை. நாடு  முழுவதையும் காஷ்மீராக்கும் அரசு நடவடிக்கைகள் சரியானது தானா? இதற்கு பத்திரிகைகள் துணை போகலாமா? என்று கேட்காமல், அரசின் பிரசார சாதனங்களாகப் பெரும்பாலான ஊடகங்கள் மாறின.

india-ayodhya-verdict-2010-9-23-9-40-11இதன் விளைவாக, அயோத்தி தீர்ப்பு வெளியான தினம் (செப். 30), ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட – அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட நாடு போல பாரதம் முழுவதும் காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் காக்கிச் சட்டைகளும், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிகளுடன் நிற்கும் காட்சிகளும் தென்பட்டன. இதனால், நாட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். சரக்கு வாகனப் போக்குவரத்து செப். 28 -ம் தேதி முதலே நிறுத்தப்பட்டது. தனியார் பேருந்துகள் வியாழனன்று மதியமே நிறுத்தப்பட்டன. அரசு பேருந்துகளும் பெயரளவில் மட்டுமே இயங்கின. சாலைகள் வெறிச்சோடின; கடைகள் அடைக்கப்பட்டன. மக்களே முன்வந்து நடத்திய ‘பந்த்’ போல நாடு காட்சியளித்தது. ஒருவாரகால ஊடகங்களின் பீதியூட்டும் பிரசாரத்தால், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான தினம் பயங்கர கனவு கண்டவனின் தூக்கம் போல மாறிவிட்டது.

தீர்ப்புக்குப் பின்:

அயோத்தி தீர்ப்பு  செய்திகளை வெளியிடும்போது பொறுப்புணர்வைக் கடைபிடிக்குமாறு மத்திய அரசு ஊடகங்களுக்கு வேண்டுகோள்  விடுத்திருந்தது. ஆனால், தீர்ப்பு வெளியானபோது பத்திரிகைவாலாக்களின்  பொறுப்புணர்வு  வெளிப்பட்டது.

imagescar8igrrலக்னோவில்  குவிந்திருந்த 600-க்கும்  மேற்பட்ட   பத்திரிகையாளர்கள், அயோத்தி வழக்கில் தொடர்புடைய ‘திடீர் பிரபலமான’ வழக்கறிஞர்களின் பேட்டிகளைப்  பெற முண்டியடித்தபோது, அவர்களது கட்டுப்பாடும்  கலகலத்தது.  திடீர் பிரபலங்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு ‘தீர்ப்பாக’ அவிழ்த்துவிட தொலைக்காட்சி முன் அமர்ந்து செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தடுமாறினர். நல்லவேளையாக லக்னோ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அயோத்தி தீர்ப்பின் சுருக்கங்கள் குழப்பம் போக்கின. செய்திகளை முந்தித்  தர வேண்டும் என்பதற்காக நடைமுறையில் இல்லாதவற்றை நிகழ்த்தவும் ஊடகங்கள் தயாராகி விடுகின்றன.

தீர்ப்பின் முழு சாராம்சத்தையும் புரிந்துகொள்ளாமல் தவறான ‘பிளாஷ் நியூஸ்’ வெளியிட்ட செய்தி அலைவரிசைகளையும் காண முடிந்தது.  குறிப்பாக  கலைஞர்  செய்தி, ”அயோத்தி இடத்தை மூன்றாகப் பிரிக்க உத்தரவு” என்பதையே பல நூறு முறை நேரலை ஒளிபரப்பில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. இது அறியாமையால்  அல்ல;  அரசியலால் என்பது தெளிவு.

“அயோத்தி வழக்கில் தொடர்புடைய  இடம்  ராமஜன்மஸ்தான் தான்’’ என்ற தீர்ப்பை ஒளிபரப்ப கலைஞர் செய்திக்கு மனமில்லை. அதே போல, சன் செய்திகள்,  அயோத்தியில் குறிப்பிட்ட மூன்றில் ஒரு பங்கு இடத்தை பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற செய்தியை ஒளிபரப்பிக் கொண்டே இருந்தது. தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளோ, பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவோ பார்த்திருந்தால் தலையில் அடித்துக் கொண்டிருப்பார்கள்.

அயோத்தி தீர்ப்பின் முழுமையான தாத்பரியம் மக்களுக்குச் சென்று சேர்ந்துவிடக் கூடாது என்பதில் தமிழ் செய்தி அலைவரிசைகள் கங்கணம் கட்டி நின்றன. தமிழ் நாளிதழ்களும்  கூட முழுமையான தீர்ப்பை வெளியிடவில்லை. ஆங்கில பத்திரிகைகளிடம் நியாயமான செய்தியை மக்கள் எதிர்பார்க்கவும் இல்லை.

1992, டிச. 6 -க்குப் பின் பத்திரிகைகள் நடத்திய  பிரமிப்பூட்டும் பிரசாரம் அந்தக்கால செய்திகளை வாசித்தவர்களுக்கு நினைவிருக்கலாம். அந்த பிரசார சாதனங்கள் அயோத்தி தீர்ப்புக்குப்  பின் அர்த்தமுள்ள அமைதி காக்கின்றன. தீர்ப்பை எப்படி எடுத்துக் கொள்வது என்பதில் காங்கிரஸ் கட்சி திணறுவது போலவே பத்திரிகைகளின் மனசாட்சியும் தடுமாறுகிறது. 1992-ல் ஹிந்துக்களுக்கு உபதேசித்த எவரும் 2010-ல் முஸ்லிம்களுக்கு உபதேசிக்கத் தயாராக இல்லை.

imagesca9xfbbjஇப்போதும்கூட,  செய்திகளைத் ‘திருக்கல்’ செய்யக் கூடாது என்ற சுயகட்டுப்பாட்டை மீறும் வகையில் சில ஆங்கில நாளிதழ்கள் செயல்படுகின்றன; முஸ்லிம்களுக்கு அநீதி விளைவிக்கப்பட்டுவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. தீர்ப்புக்குப் பின் அமைதியாக உள்ளவர்களை உசுப்பிவிடும் முயற்சி இது என்பதைச்  சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மொத்தத்தில் இந்திய ஊடகங்களும் பத்திரிகைகளும் நாட்டுநலத்தைக் கருதுவதாகவோ, நீதிமன்றத் தீர்ப்பை உரிய முறையில் மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பனவாகவோ இல்லை என்பதே வருத்தத்திற்குரிய நிலையாக உள்ளது. இத்தீர்ப்பில் சமரசத்திற்காக இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதை எவரும் கண்டுகொள்ளவே இல்லை; மாறாக முஸ்லிம்களின் மீதே அவர்களது கருணை பொங்கி வழிகிறது. 1992- ல் நடந்த கரசேவை ஏன் தவிர்க்க முடியாமல் போனது என்பது இப்போது தெளிவாகவே புரிகிறது.

… தொடரும்.

38 Replies to “அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1”

  1. அருமையான மதிப்பீடு! ஆனால் வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷனரிகளால் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்களால் நமது நாட்டு மக்களின் கருத்துக்களை நியாயமான முறையில் வெளியிட முடியுமா? நமது மக்களின் நியாயமான, தர்மத்தின் அடிப்படையில் அமைந்த முயற்சிகளை திரித்து கூறாமல் இவர்களது பிழைப்பு நடக்குமா?

  2. இந்த கட்டுரையில் விவாதித்தது போல் 1948- லிருந்து ராமபக்தர்கள் காத்திருக்கும் தீர்ப்பு வெளியாகாமல் இழுதடிக்கப்படாமல் இருந்திருந்தால் 1992- நிகழ்வே நடந்திருக்காது என்பதை ஒற்றுகொள்ளமுடியாது. நான் ஒரு விவாதத்தை ஏற்று கொள்கிறேன், ராமர் பிறந்த இடத்தில கோவில் கட்டவேண்டும். அனால் எதற்குமே வன்முறை தீர்வாகாது. இந்துக்கள் வன்முறையை கையில் எடுத்தால் இந்துக்களுக்கும் – முஸ்லிம்களுக்கும் வித்யாசம் இல்லாமல் போகும்

  3. ஊடகங்கள் மிகப் பெரும்பான்மையாக வெளிநாட்டு முதலாளிகள் அல்லது அவர்களின் சம்பளப் பட்டியலில் உள்ளவர்களால் நடத்தப் படுகிறது.அவர்கள் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு ஊடகங்களில் முதலீடு செய்து விட்டனர்.

    தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராகவே செய்திகளை மாற்றியும்,திரித்தும், மறைத்தும் வெளியிட்டு வருகின்றனர்.
    மிகப் பெரிய , புனிதமான ,தேசீய இயக்கமான ராமஜென்ம பூமி இயக்கத்தை ஒரு கேவலமான குற்றம் போல் சித்தரிக்கின்றனர்.
    பீ ஜெ பீ மற்றும் ஹிந்து இயக்கங்கள் தப்பித் தவறி கூட ஏதாவது ஒரு வார்த்தை சொன்னால் பிடித்துக் கொள்ளலாம் என்று அவர்களை பயமுறுத்தும் விதமாக பிரசாரம் செய்தனர்.

    அதனால் ஹிந்துக்கள் பேசுவதற்கே பயப்படும் ஒரு சூழ் நிலையை ஏற்படுத்தினர்.
    இவர்கள் செய்த தந்திரமான பிரசாரத்தால் ஹிந்து இயக்கத் தலைவர்கள் கூட மனவியல் தத்துவப் படி இவர்களைப் போலவே பேச ஆரம்பித்து விட்டனர்.’யாரும் வெற்றி அடையவில்லை.யாரும் தோல்வி அடையவில்லை’ . நாம் எல்லோரும் சேர்ந்து நாட்டை முன்னேற்றுவோம் ‘ என்றெல்லாம் . இதெல்லாம் என்ன அபத்தம். என்ன அவசியம் இப்போது?

    தேவை இல்லாமல் பத்து நாட்களுக்கு முன்பிருந்தே வெகு செயற்கையாக எதோ இங்கு பயங்கர உள் நாட்டுப் போர் நடக்கப் போவது போல் ‘நாம் எல்லோரும் இந்தியர்கள்.இந்தியாதான் ஜெயிக்க வேண்டும்.நமக்கு உணவு,உடை,உறையுள் ,கட்டமைப்புகள் இவைதான் ,முக்கியம்.’ என்றெல்லாம் சம்மந்தம் இல்லாமல் பேசியும் ;
    ஒரு குல்லா போட்டவரும் , காவி வேஷ்டி கட்டியவரும் கட்டிக் கொள்வது போல் காட்டியும் பயங்கர நாடகம் ஆடினர்.
    இவர்கள் எல்லோரும் கெட்ட எண்ணம் உள்ளவர்கள்.
    பாரதம் வலிமையாக இருக்கக் கூடாது,ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்கக் கூடாது, ஹிந்து எதிரிகளின் ரகசிய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்று மிகவும் முயற்சி செய்கின்றனர்.

    ஹிந்துக்கள் முதலில் நமது எதிரிகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

  4. அரசன் தர்மம்,நல்லவர்கள், குற்றமற்றவர்கள் இவர்களைக் காத்து ,குற்றம் புரிபவர்களை தண்டிக்க வேண்டும
    ஹிந்துக்கள் அன்று ஆண்ட முகலாயர்களிடம் இறைஞ்சினர்; நியாயம் கிடைக்கவில்லை.பிறகு ஆண்ட வெள்ளையர்களை கெஞ்சினர் நியாயம் கிடைக்க வில்லை.

    கொடுமையிலும் கொடுமையாக நம் தலைவர்களே நம்மை ஆளும் போதாவது நியாயம் கிடைக்கும் என்று எதிர் பார்த்தனர். அனால் நந்தநாரின் எஜமானர் கேட்டது போல் ‘தொண்டு செய்யும் அடிமை, உனக்குச் சுதந்திர நினைவோடா’ என்று நியாயம் கிடைக்காததோடு மேலும் இழிவு படுத்தப்பட்டனர்.

    ஆகவே மக்கள் தர்மத்தைக் காக்க போராட வேண்டி வந்தது.
    ஆள்பவர்களின் அக்கிரமம் அளவுக்கு மீறிப் போகும் போது பரமாத்மா கிருஷ்ணர் உபதேசம் செய்தது போல் மக்கள் போராட்டத்தில் இறங்குவார்கள்
    அது வன்முறை ஆகாது.

  5. தீர்ப்புக்கு முதல்நாள் நமது “காவி தீவிரவாதி” பசி அமைச்சர்(அதாங்க நம்ம சிதம்பரம்) அவர்கள் பிஜேபி ஆளும் மாநிலங்களில் எல்லாம் 30ஆம் தேதி அன்று சட்ட ஒழுங்கு சரியாக பாதுகாக்கப்படுமென்று நம்புவாதாக அறிவித்தார்.
    நல்ல காமெடி போங்க!

    இவங்களுக்கு மேற்கு வங்கம் தேகங்காவில் அவங்க கூட்டணி இஸ்லாமிய மந்திரியின் வக்கிர புத்தி தாண்டவமாடியதே தெரியாது போலிருக்கு! அங்க என்ன பிஜேபியா ஆட்சி நடத்துது?

  6. இன்று உலகின் மிக பெரிய பயங்கரவாதிகள் ஒசாமா பின் லேடன் அல்லது நாசி ராட்ஜிங்கேர் அல்ல. அப்பட்டமான பொய்களுடனும் புனைசுருட்டுகளுடனும் வலம் வரும் செகுலர் வாதிகளும் தேசவிரோத செகுலர் மீடியாவும் தான்.

    வொவ்வொரு ஊடகத்திலும் ஹிந்துக்களை “நீங்கள் கோர்ட் தீர்ப்பிற்கு ஒத்துபோவிர்களா” என்ற கைத்தடியால் இதுவரை விளாசிவந்தார்கள். இன்று கோர்ட் தீர்ப்பு வந்தாகிவிட்டது ஒதுக்கொள்ளவேண்டியது தானே. இது தீர்ப்பு அல்ல செட்டில்மென்ட் என்று கட்ட பஞ்சாயத்தில் இறங்கி வுள்ளர்கள் இந்த தேச விரோத சக்திகள். முல்லா முலாயம் ஏற்கனவே தன தேசவிரோத ஓட்டுவங்கி ஆலாபனையை ஆரம்பித்து விட்டாச்சு. இன்னும் சிறிது நாட்களில் செகுலர் வாதிகளின் ஹிந்து விரோத தேச விரோத கச்சேரி பிச்சு தள்ளும்.

    வெள்ளை சர்ச்சும் தேசவிரோத செகுலர் சக்திகளும் கூட்டு சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தேசத்தை எப்படி கூறு போடலாம் என்று திட்டம் தீட்டுவதில் இப்போது முனைப்பாக இருப்பார்கள்.

    வுயர் நிதிமன்ற தீர்ப்பு ஹிந்துக்களுக்கு ஆசுவாச மூச்சு மட்டும் தான் என்பதை மறந்தால் வீண் போவோம்.

    என்று பரங்கி பணத்தில் கொழுத்த செகுலர் வாதிகளையும் செகுலர் மீடியாவையும் நேர் கொள்ள தேச பக்த சக்திகள் ஒன்று சேர்ந்து தங்கள் ஊடக சக்தியை நிலை நிறுத்துமோ அன்று தான் தேசத்திற்கு விடிவு காலம்.

  7. அயோத்தி தீர்ப்பு: புளுகும் இந்துத்வ கூட்டம்.

    அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் “இராமர் பிறந்த இடம்” என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

    விரிவாக இங்கே:

    https://arulgreen.blogspot.com/2010/10/blog-post.html

  8. இந்த மதசார்பற்ற பத்திரிக்கைகள் முஸ்லிம்களுக்கு சப்போர்ட் செய்வது அல்லது முஸ்லிம் மதம் வளர வழி செய்வது என்பது “தவளையும் தன் வாயால் கெடும்” என்ற பழமொழியை நினைவு படுத்துவது போல் உள்ளது.முஸ்லிம்கள் பெருபான்மையினர் ஆனால் அப்புறம் எப்படி இவர்கள் மதசார்பின்மையை பேச முடியும் என்று எனக்கு விளங்கவில்லை.முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் சொல்வது போல் எல்லாம் அல்லாவின் செயல் என்று சொல்லி விட்டு பத்திரிக்கைகளை மூடிவிட்டு செல்ல வேண்டியது தான்.

    இந்த முஸ்லிம்கள் ஏன் அந்த இடத்தில கோயில் கட்டப்படவேண்டும் என்பதுவும் அந்த அல்லாவின் விருப்பம் என்று நினைக்க கூடாது!

    அப்படி இல்லாமல் அல்லாவின் விருப்பம் முகம்மதிய மதம் மட்டும் தான் என்று இருந்து இருந்தால்,பின்னர் ஏன் மொகலாய ஆட்சியின் பொது வீரசிவாஜி மாதிரியான ஹிந்து புத்திரர்களையும், ஆங்கிலேயரையும் அல்லா பாரதத்திற்கு அனுப்பி முஸ்லிம்களின் மொகலாய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்?….இது எல்லாம் சாத்தானின் செயல் என்று கூறி என்னை டென்ஷன் செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அப்பால பெட்ரோலின் பயன்பாடு என்பது யாரோட விருப்பம் என்று கேட்டு உங்களை டென்ஷன் ஆக்கி விடுவேன்!

    எனக்கு என்னமோ, அல்லாவுக்கு முகம்மதிய மதம் மட்டும் தான் சரி என்று தோணவில்லை என்றே தோன்றுகிறது .

  9. வணக்கம்
    பத்திரிக்கை தர்மமாவது …மண்ணாவது. அதை எங்காவது புதை குழியில் தேடிப் பார்க்க வேண்டிய ஒன்று
    அன்புடன்
    நந்திதா

  10. நம்ம உள்துறை என்ன வாய் மலர்ந்திருக்கிறார் பார்த்தீர்களா அமைதியாக ஏன் இருக்கிறீங்க பிரச்சினையை உருவாக்குங்க என்பது போல் இருக்கிறது என்னே செகிலர்வாதியின் பேச்சு திருந்தவே மாட்டங்கப்பா

  11. ஊடகங்களின் நாடகங்கள்

    அயோத்தி ராமஜென்மபூமி வழக்கு தீர்ப்பு வெளியாகும் சில நிமிடங்கள் வரை…..
    தொலைக்காட்சி ஊடகங்கள்,குறிப்பாக ஆங்கில தொலைக்காட்சிகள்,
    அயோத்தி விவகாரம் ஒரு சிறு இடம் சம்பந்தப்பட்டது…
    இரு மதங்கள் சம்பந்தப்பட்டப் பிரச்சனையல்ல….
    1992ல் நடந்த சம்பவங்களை போன்ற நிலைகளை நாடு கடந்துவிட்டது…
    நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்பு எதுவானாலும் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்…
    நாட்டின் முன்னேற்றத்திற்க்கு பல பிரச்சனைகள் இருக்கும் போது மக்கள் ஏன் இதுபோன்ற விசயங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்கவேண்டும்?
    இதையெல்லாம் விட நாம் முதலில் இந்தியன்….
    என ஓயாமல் பாரத நாட்டு மக்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தது
    இந்த ஆங்கில தொலைக்காட்சிகள்…

    நாட்டு மக்களுக்கு ஓயாது போதனைகளை வழங்கிய ஆங்கில தொலைக்காட்சிகள் எட்டாயிரம் பக்கங்கள் கொண்ட மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பை, தீர்ப்பு வெளிவந்த பத்தே நிமிடங்களில் படித்து, ஆக்ரோசமாக விவாதத்தை அரங்கற்றி
    தனது உண்மையான முகத்தைக் காட்டிக்கொண்டது..

    ஊடகங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு வெளியாகவில்லை. இந்து,முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள் சிலர் தீர்ப்பை ஏற்பதாகவும், சிலர் பாதி தீர்ப்பு மட்டுமே திருப்தியளிப்பதாகவும், சிலர் மேல்முறையீடு செய்வதாகவும் அறிவித்தனர். ஆனால் இந்த தொலைகாட்சி விவாத வல்லுனர்கள் அவர்களை எப்படியாவது உசுப்பேற்றி விட்டு பிரச்சனைகளை உருவாக்க வேண்டுமென்று கங்கனம் கட்டி செயல்பட்டனர். அரசு போட்ட உத்தரவுகளை மீறி விவாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

    என்னே இந்த தொலைகாட்சிகளின் தேசப்பற்று….!

    ஆனால் ஒன்று…
    இந்த ஆங்கில தொலைகாட்சிகளும்,ஊடகங்களும் இவ்வளவு நாட்கள் மூடிமறைத்த பல விசயங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும்.

    இவ்வளவு நாட்கள் இந்த ஊடகங்கள் என்ன சொல்லிக்கொண்டிருந்தன?
    இராமர் கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதற்க்கான ஆதாரம் எதுவுமில்லை
    தொழுகை நடந்து கொண்டிருந்த மசூதியை இடித்து விட்டார்கள்…
    அங்கு ராமர் கோயிலே இல்லை…
    பா.ஜா.க வோட்டுகளை பெறுவதற்க்காக உருவாக்கிய பிரச்சனை….
    என பலவாராக இந்து அமைப்புகள் மீதும்,பாரதிய ஜனதா கட்சிமீதும் தூற்றிவாரிக்கொண்டிருந்தார்கள்.

    இன்று தெரிந்த உண்மைகள் என்ன?
    இன்றல்ல,நேற்றல்ல 1528 ஆம் ஆண்டு முதல் நடக்கும் பிரச்சனை…
    கோடானகோடி ஹிந்துக்கள் வழிபடும் இராமன் அயோத்தியில் பிறந்தார், அங்கு பிரம்மாண்டமான ஆலயம் இருந்தது என்றும், அந்நியர் பாபரின் படைஎடுப்பில் அது இடிக்கப்பட்டு மசூதி எழுப்பட்டது என்றும், அதை மீட்க பல போராட்டங்கள் நடத்தப்பட்டு நமது முன்னோர்கள் பல உயிர் தியகங்கள் செய்துள்ளனர் என்றும் ஆண்டாண்டு காலமாக இந்துக்கள் அதை மீட்க போராடி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியே இன்றைய போராட்டமும் கூட என்ற நிலையை மறைத்து செய்திகள் வெளியிட்டு வந்தன.

    ஆனால் இவை அனைத்தும் உண்மை என்றும், மசூதி என்று சொல்லப்படும் அந்த கட்டிடத்தின் அடியில் ஆலயம் இருந்ததற்க்கான ஆதாரம் உள்ளது என இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மசூதியில் தொழுகை நடத்தப்படவில்லை என்றும்
    இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உண்மையான பத்திரிக்கையாளர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?
    விவாதத்தில் கோடானகோடி இந்துக்கள் ஆண்டாண்டு காலமாக அங்கு ராமர் ஆலயம் இருந்தது என்றும்,அங்கு தான் ராமர் பிறந்தார் என்றும் நம்புகின்றனர்.அதற்க்கான ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன.ஏன் பெருந்தன்மையாக இஸ்லாமியர்கள் ஒரு நல்லெணத்தின் தொடக்கமாக இதை செய்யக் கூடாது என விவாதித்து இரு சமயத்தினரையும் ஒன்றுபடவைத்திருந்தால் அவர்களை பாராட்டலாம்.

    மாறாக இவ்வளவு ஆதாரங்கள் கொடுக்கப்பட்டும் இந்த ஊடகங்கள் தீர்ப்பை விமர்சித்து வருவது வெட்கப்படவேண்டிய ஒன்றாகும்.

    ஜனநாயகத்தின் ஐந்தாவது தூண் என்று கூறப்படும் ஊடகங்கள் இப்படியாகவா செயல்பட வேண்டும்?
    இவர்கள் உண்மையான பத்திரிக்கையாளர்களா?
    ஏதாவது பிரச்சனையை நாட்டில் உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் இவர்கள் அந்நிய நாட்டிற்க்கு துணை போகிறவர்களா?
    காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் குறித்து பாரதத்தை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி நாட்டையே தலைகுனிய வைத்த இவர்கள் உண்மையான பத்திரிக்கையாளர்களா?
    இப்படி பல விவாதங்களை நடத்தி எப்படி தீர்ப்பளிக்கவேண்டும் என நீதி துறையை நிர்பந்திக்கிறார்களா?
    சில விசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அதை விமர்சித்து நாட்டையே கேவலப்படுத்திக்கொண்டிருப்பது தான் பத்திரிக்கை சுதந்திரமா?

    பல கொலைவழக்குகள், ஊழல் வழக்குகள் இருக்கும்போது அதையெல்லாம் விட்டு விட்டு சில விசயங்களை மட்டும் இந்த ஊடகங்கள் பெரிது படுத்துவதேன்?

    நாட்டில் நல்ல விசயங்களே நடப்பதில்லையா?
    ஏன் எதிர்மறையான விசயங்களுக்கு மட்டும் ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன?
    இதற்க்கெல்லாம் விடை ஒரே வரியில் சொல்வதானால்
    இவர்கள் வியாபாரிகள், வியாபாரிகள் மட்டுமல்ல பணத்திற்க்காக இந்த நாட்டையே காட்டிக்கொடுக்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்!

    இந்த ஊடகங்களில் விவாதங்களை நடத்துபவர்கள் யார்?
    இந்த நாட்டையே அல்லோலப்படுத்திக்கொண்டிருக்கும் அந்நிய சக்திகளின் ஏஜன்ட்கள், மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொண்டு தீவிரமாக சில மதங்களை ஆதரிப்பவர்கள் மற்றும் கம்யூனிச சித்தாந்த தீவிரவாதிகள், இவர்கள் மனித உரிமை,சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள் பத்திரிக்கையாளர், என இப்படி பல போர்வைகளில் ஒளிந்து கொண்டிருப்பவர்கள். இவையெல்லாம் இந்த ஊடகங்கள் நடத்திக்கொண்டிருக்கும் நாடகங்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

    கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் இப்படிப்பட்ட ஊடகங்கள் தான் நீதிதுறையை மட்டுமல்ல,அரசாங்கமே எப்படி செயல் படவேண்டுமென்று நிர்ணயித்துக்கொண்டுள்ளார்கள்!
    இந்த ஊடகங்களுக்கு அரசு கட்டுப்பாடு விதிக்கவில்லையென்றால் நாடு இவர்களால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும்

  12. தீர்ப்பு வெளியான அன்று Economic Times முதல் பக்கத்தில் கட்டம் கட்டி வெளியான விஷமத்தனமான குறிப்பு:
    “Can the law endow an article of faith, however hallowed with temporal historical concreteness to render it a weapon in civil strife? At least one of the three judges who pronounced the Ayodhya verdict demonstrared the potential, pinpointing Ram’s birth place, retrospectively negating the identity of the demolished mosque and bestowing communitarian rights over present day edifices, should they have been built on the debris of a community owned structure in the dim past. Should the Qutab Minar now be demolished, or Budhists break down Hindu Temples built over their viharas? The other two judges opted for a pragmatic compromise, ordering shared ownership, instead of settling the title dispute. But is it the Court’s job to find a compromise?………”
    இந்த எழுத்துக்களில் அவர்களது வயிற்றெரிச்சலும், colonial விஷமத்தனமும் கொந்தளிக்கின்றன. இந்த புத்த விகாரக் கட்டுக்கதையை இவர்கள் கோர்ட்டில் ஆதாரத்துடன் காட்டியிருக்கலாமே? Only these people are powerful in the Country now.

  13. @ arul,

    அருள்,

    நீங்கள் டோண்டுவின் பதிவில் போட்ட புரட்டுக் கமெண்டுகளை உங்களது ப்ளாக்கில் கட்டுரை போல வெளியிட்டுள்ளீர்கள். அந்தக் கட்டுரைக்கான் லிங்கை இங்கே கொடுத்துள்ளீர்கள்.

    டோண்டுவின் ப்ளாக்கில் உங்களுக்கு நான் போட்ட கமெண்டுகளை இங்கே இடுகிறேன்:

    @ அருள் and மற்றைய அரைகுறைகளுக்கு

    //....அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் "இராமர் பிறந்த இடம்" என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

    இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல....//

    தீர்ப்பில் அதுதான் “ராமர் பிறந்த இடம்” என்று சொல்லவில்லை. ஏனென்றால், தீர்க்க வேண்டிய பிரச்சினையாகக் கோர்ட்டின் முன் அது வைக்கப்படவில்லை.

    நீதிபதிகளின் முன் வைக்கப்பட்ட கேள்வி, பிரச்சினை இதுதான்:

    “பாப்ரி கும்மட்டம் கட்டப்படுவதற்கு முன் அங்கு கோயில் இருந்ததா?”

    மூன்று நீதிபதிகளும், நீதிபதி கான் உட்பட, தீர்ப்பில் சொன்னது இதுதான்:

    “ஆம். பாப்ரி கும்மட்டம் கட்டப்படுவதற்கு முன் அங்கு கோயில் இருந்தது. எனவே, அந்த நிலப்பகுதி இந்துக்களுக்குச் சொந்தம்.”

    இது புரியாமல் தயை செய்து உளறாதீர்கள்.

    இந்தத் தீர்ப்பிற்குப் பின் இரண்டு தரப்பினர் நடந்து கொள்ளும் விதம் அவர்களது மனப்போக்கு எப்படி மாறாமல் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

    தீர்ப்பிற்குப் பின்னால், முஸ்லீம்களும் திம்மிக்களும் "all or nothing" என்று பேசுகிறார்கள். நிலப்பகுதி முழுவதும் முஸ்லீம்களுக்கே வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டிற்குப் போகப் போகிறார்கள்.

    ஆனால், இந்த ஹைக்கோர்ட் தீர்ப்பை இந்துக்களும், பாரதப் பண்பாடு மிக்க முஸ்லீம்களும் வரவேற்றுள்ளார்கள். ஒன்றிணைந்து வாழ வழிவகுக்கும் தீர்ப்பு என்று சொல்லுகிறார்கள்.

    இந்திய மரபைச் சேர்ந்த இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றிணைந்து வாழும் சூழலை வரவேற்கிறார்கள். நிலத்தை அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டு, அவரவருக்கு வழங்கப்பட்ட நிலத்தில் அவரவர் தெய்வத்தை வணங்கிக்கொண்டு ஒருங்கிணைந்து வாழ்வோம் என்கிறார்கள். இந்தப் பிரச்சினையை இத்தோடு முடித்துக்கொண்டு, இந்தியாவை, இந்தியர்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதில் கவனம் செலுத்துவோம் என்பது இவர்கள் தரப்பு.

    ஆனால், ஆபிரகாமிய மரபைச் சேர்ந்த முஸ்லீம்களும், திம்மி இந்துக்களும், நிலம் முழுவதும் முஸ்லீம்களுக்கே வேண்டும் என்று சொல்லுகிறார்கள். ஒரு ஊசிமுனை நிலம்கூட இந்துக்களுக்குத் தரக்கூடாது என்று பேசுகிறார்கள். இவர்களது தரப்புப் பேசுவது பிரிவினை வாதம்.

    இவர்கள் இருவரும் இப்படித்தான் எப்போதும் செயல்பட்டார்கள், இனிமேலும் இப்படித்தான் செயல்படுவார்கள் என்பதைத்தான் இந்த இரண்டு தரப்பும் வெளிப்படுத்துகின்றனர்.

    ஜெய் ஸ்ரீ ராம் ! அவன் தான் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்.

  14. அப்படிப் பார்த்தால் ஹிந்துக்கள் ஏன் முஸ்லீம்களுக்கு பாகிஸ்தானைக் கொடுக்க வேண்டும்
    காஷ்மீர் முஸ்லீம்கள் என் பிரிவினை வாதம் பேசுகிறார்கள்?
    தாங்கள் முஸ்லீம்கள் – ஹிந்துக்களுடன் சேர்ந்து வாழமுடியாது என்றுதானே?
    அதாவது ஒரு மத நம்பிக்கையின் அடிப்படையில்
    அப்படியானால் ஹிந்துக்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் இதுவும் நியாயமானதே.
    சில நூறு வருட நம்பிக்கைகளுக்கே இவ்வளவு என்றால் ஆதி அந்தம் இல்லாத ஹிந்து தர்மத்துக்கு எவ்வளவு இருக்க வேண்டும்?

  15. இந்த ஊடக தாலிபான்கள் மும்பையில் பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்த பொது குள்ள நரித் தனமாக் மக்களை திசை திருப்பினர்.

    ‘அந்த தீவிரவாதிகள் செய்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.அவர்களை தூக்கில் போட வேண்டும்’ என்று சொல்வதற்குப் பதிலாக’ எல்லாம் நம் அரசியல் வாதிகளால் தான்.அரசியலே சாக்கடை. எல்லா அரசியல் வாதிகளும் அயோக்யர்கள்’ என்றெல்லாம்பேசினர்
    அதில் தீவிர வாதிகளுக்கு எதிரான பாரதீய ஜனதா,சிவ சேனா இவைகளை ஏன் சேர்க்க வேண்டும்?

    மேலும் மக்களின் கோபம் இஸ்லாமிய தீவிர வாதிகளின் மேல் பாயாமல் இருக்க ‘மெழுகு வர்த்தி ஏற்றும் வைபவம்,அந்த கான், இந்த கான் என்று நடிகர்களின் காலட்சேபம் இவைளைக் காட்டி ஏமாற்றினார்.
    அதாவது இவர்களின் கரிசனம் முஸ்லிம்களின் மீதுதான்.

    ஹிந்துக்கள் எவ்வளவு பேர் உயிரிழந்தாலும் ‘ஆஹா, நீங்கள் எல்லோரும் எவ்வளவு நல்லவர்கள்.எப்படி அமைதியாக ( சொரணை இல்லாமல் ) இருக்கிறீர்கள்!
    அடுத்த கணமே எப்படி மும்பை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டது!
    உங்களைச் சற்றி உங்கள் சகோதரர்கள் உடல் கிழிந்து விழுந்து கிடந்தாலும் நீங்கள் எல்லோரும் ஒன்று நடக்காதது போல் அவரவர் வேலைகளைக் கவனிக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு சமர்த்தர்கள்!
    இதுதான் நம் இந்திய பாரம்பரியம்.
    பேஷ் பேஷ் இது தான் நல்ல பிள்ளை களுக்கு அடையாளம்.
    நீங்கள் தான் உண்மையான ‘மும்பைகர்’ ‘என்றெல்லாம் பித்தலாட்டம் செய்தனர்.

  16. சட்டத்துக்காக முதலைக் கண்ணீர் விடுகிறதே அந்த ‘எகனாமிக் டயம்ஸ்’!
    நமது அரசியல் நிர்ணயச் சட்டம் ‘விரைவில் நாடு முழுமைக்கும் பொது சிவில் சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறி உள்ளதே. அதை ஏன் அரசு செய்யவில்லை என்று கேட்குமா?’

    காஷ்மீருக்கு தனி அந்தஸ்து ஒரு சில வருடங்களே என்று கூறியுள்ளதே. முஸ்லீம்களை தாஜா செய்வதற்காக முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றதே. கேட்க வேண்டியது தானே?
    ஹிந்துக்களை ஏமாற்றியது போதும்.

  17. in jammu and kashmir 300 temples have been demolished.
    as recently as last month a jain temple was completely razed. The Pujari escaped with the deities and returned to Gujarat
    Why these media talibans not speaking about these things?
    dont think Hindus will continue to be suckers!

  18. 1984 முதலே தேசிய பத்திரிக்கை என்று சொல்லிக்கொள்ளும் ஹிந்து நாளிதழ் ஹிந்து எதிர்ப்பு கட்டுரைகளை வெளியிட்டு வந்தது(மதச்சார்பின்மை என்கிற பெயரில்). அயோத்தி சர்ச்சை ஆரம்பிக்கும்போது போலி மதசார்பின்மைக் காரர்களும் அறிவு ஜீவிகளும் பல புளுகு மூடைகளை அவிழ்த்து விட்ட வண்ணம் இருந்தனர். இதனால் நான் ஹிந்து வாங்குவதை நிறுத்தினேன் . பிறகு புரிந்தது ஹிந்து மட்டுமல்ல பெரும்பான்மையான நாளிதழ்களும் வார இதழ்களும் “மதச்சார்பின்மை” நோயால் பீடிகப்பட்டவைதான் என்று. அந்த சீசனில் “கல்கி”யின் மதச்சார்பின்மை பஜனை தாங்கமுடியாததாய் இருந்தது. பின்னர் தொலைக்காட்சி ஊடகங்களின “பயங்கரவாதம்” மிகப்பெரிய தொற்றுநோயாகி நம்மை பாடாய் படுத்துகிறது.் சேக்கிழான் நல்ல கட்டுரையைத் தந்துள்ளார். நன்றி

  19. அயோத்தி: நடந்தது இதுதான்!

    1. இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன். ஆனாலும், இராமனே முதன்மையான நாயகன் என்பதுபோல பிற்காலத்தில் நம்பவைக்கப்பட்டான். (இந்தியவின் பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் இராமன் ஒரு முதன்மை தெய்வம் அல்ல).

    2. அயோத்தி இராமர் கோவிலை இசுலாமிய மன்னர்கள் எவரும் இடிக்கவில்லை. இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசி தாசர். அவர் எழுதிய ஆவாதி மொழி இராமாயணத்தில் – கோவில் இடிக்கப்பட்டது பற்றி எந்த குறிப்பும் இல்லை.

    3. குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்வ சங்கப்பரிவாரம் உருவாக்கிய ஒரு கட்டுக்கதை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

    4. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதச்சண்டையை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இசுலாமிய மன்னர்கள் இந்துக்கோவிலை இடித்ததாக கட்டுக்கதைகளை பரப்பினர். அதனை பின்னர் இந்துத்வ தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருகின்றனர். (ஒருமன்னன் மற்றொரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அங்குள்ள கோவில்களை இடிப்பதோ, எரிப்பதோ, கொள்ளையடிப்பதோ வழக்கம். இதனை பல இந்து மன்னர்களும் செய்துள்ளனர்.)

    எனினும், பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

    ‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

    “நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

    “நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

    5. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாபர் மசூதிக்குள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராம் லல்லா சிலைகள் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டன. இந்த அநீதியான செயலை இந்திய அரசு தடுக்கத்தவறியது மட்டுமின்றி, திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தவும் தவறிவிட்டது.

    6. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதிச்செயலால், 1992 டிசம்பர் 6 அன்று, இந்திய அரசின் பாதுகாப்பில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

    7. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம் – அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்துத்வ பயங்கரவாதிகளின் அநீதியான செயல்களை அங்கீகரித்துள்ளது.

    படிப்பினை: இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல.

    ஒரு குற்றச்செயல் தண்டனைக்குறியதா அல்லது போற்றுதலுக்குறியதா என்பது குற்றமிழைப்பவர் சார்ந்திருக்கும் சாதி, மதத்தைப் பொறுத்தது.

    https://arulgreen.blogspot.com/2010/10/blog-post_02.html

  20. Arul, I am amazed, you are brillinat. I am wondering… why the Babar committee lawyers didn’t put this points in front of the honorable judges. The Babar committee lawyers are not educated enough. I think they should get training from you. They studied in law college for more than five years.. did law practice for more than 30 years. Still they don’t know all these points 🙂 I think RSS would have bribed the Babar committee. that is the reason .. they points you have mentioned is not indicated during the trial.

    I think congress is indirectly supporting for Ram temple. Muslims should not vote for Congress from now onwards. And also, whoever is unhappy with this judgment… should leave this country to show our angers. Probably you can go to secular Pakistan country

  21. // பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் ://

    I am very much interested to read babri nama book. Is this book available in market?

  22. அருள்,

    எந்த மன்னனும் மன்னனை சார்ந்தவர்களும், புத்தகம் எழுதும் போது, அவர்கள் செய்த நன்மைகளை மட்டுமே எழுதுவார்கள். தீமைகளை மற்றும் கொடுமைகளை விட்டுவிடுவார்கள்.

    தற்போது, கலைகாரை பற்றி எழுத சொன்னால் வாலி போன்றவர்கள் என்ன எழுதுவார்கள்.

    பாபர் மற்றும் இஸ்லாமிய மன்னர்கள், போர்டுகீசியர்கள் கோயில்களை இடித்து அவர்களது மத சின்னங்களை கட்டியது சரித்திர உண்மை.

    புத்த மற்றும் சமண சமயங்கள் முதலில் இந்துமத்தின் கோட்பாடுகளை எடுத்து கொண்டது ஆனால் வழிபடு முறைகளை கண்டித்தது. அனால் காலபோக்கில் இந்து முறை வழிபாடுகளையே பின்பற்ற ஆரம்பித்தது. இதைதான் இப்பொது தமிழ் நாட்டில் கிறிஸ்துவர்களும் செய்கிறார்கள்.

    அதனால் இந்து மாணர்கள் மற்ற கோயில்களை அழித்தார்கள் என்பது அபத்தம்.

    இயேசு, பேதலேகத்தில் பிறந்தார் என்கிறர்கள். விஞபூர்வமாக நீருபிக்க முடியுமா? ஒரு நம்பிக்கைதான். அந்த அடிப்படையில் வழிபடு நடத்த படுகிறது. இதில் தவறேதும் இல்லை. இதே நம்பிக்கை தான் ராமற்கும். இதே நம்பிக்கை தான் இஸ்லாத்திற்கும்.

    நம்பிக்கை தான் வாழ்கை. DNA வருவதற்கு முன் மனைவி சொல்லி தான் கணவனுக்கு தன் மக்கள் தெரியும். நம்பிக்கை தான்.

    தயுவு செய்து கடவுளாக நம்பப படுகிற ராமரை ஏக வசனத்தில் அழைத்து உங்கள் தரத்தை நிரூபிக்க வேண்டாம். எல்லாருக்கும் தெரியும்.

  23. ////இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன். ஆனாலும், இராமனே முதன்மையான நாயகன் என்பதுபோல பிற்காலத்தில் நம்பவைக்கப்பட்டான். (இந்தியவின் பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் இராமன் ஒரு முதன்மை தெய்வம் அல்ல).///

    உம்மால் ஆபிராமிய கடவுள்களை இதே ஏகவசனத்தில் சொல்ல முடியுமா. முதன்மை தெய்வம் யார் என்று ஏதாவது சென்சஸ் எடுத்தாயா. அல்லது டேவிட் அல்லது பெரியார் உம காதில் உரைத்த உடான்ஸா. என்னே பகுத்தறிவு.

    இந்த வலை தளத்தை நிர்வகிக்கும் நிர்வாகிகளே நேர்மையான மாற்று கருத்துகளை நிச்சயம் பிரசுரியுங்கள். பல கோடி மக்களால் வணங்கபெரும் இறைவனை ஏகவசனத்தில் எழுத இந்த வலைதளத்தில் இடம் தராதீர்.

    ஹிந்து திம்மிகளுக்கு அவர்கள் எந்த அளவுக்கு இங்கே எழுதலாம் என்று தெரிவிப்பீர்.

  24. இந்துக்களின் தாய்நாடான இந்தியாவில் மட்டும் தான், இந்துக்களுக்கு என்று ஒரு இடம் கூட இல்லாமல், மடச்சார்பின்மை பேசி , மற்றவர்க்கு, நிலங்களை தாரை வார்துக்கொடுக்கும் நிலைமை உள்ளது. அந்நாளில் ஊடுருவிகள், அநியாயத்தாலும், அசுரபலத்தாலும் ஹிந்து நிலங்களை ஆக்ரமித்தவைகளை, நீதி மன்றத்திர்ற்குச் சென்று, அடைய வேண்டிய நிலைக்கு ஆளாகும் போது, ஊடங்கங்கள் என்ற புல்லுறிவிகள், அந்நிய மோகத்திற்கு அடிமைப்பட்டு, அதே மடச்சார்பின்மையைப் பேசுவதிலே, கலைஞனானாலென்ன, காரீய வாதியானனாலென்ன, அனைவரும் ஒரே மாதிரியான புல்லுறிவிகள் தான். அதிலும், தி ஹிந்து என்ற பெயரை வைத்துக்கொண்டு, இந்துக்களுக்கு எதிரான ஒரு காகிதக்குப்பையை எவரும் உதாசீனப்படுத்தாமல், அதன் எடைபோட்டால் வரும் வருமானத்திற்காகவே வாங்குவது என்பது, தன்மானப் பிரச்சனையுடன் அணுக வேண்டிய விவகாரமாகும். மேலும், இந்துக்களுக்குப் பிறந்ததாலோ என்னவோ, அநியாய வட்டி வல்லமை சிதம்பரம், அளவுக்கதிகமான நியாயத்துடன், நீதி மன்றத் தீர்ப்பு, பாபர் மசூதி குமிழிகளைத், தகர்த்ததை, ஏற்றுக்கொள்ள வில்லை என்று பேத்தினார். உண்மையில், நீதி மன்றம், அந்தக் கட்டிடம், ஒரு மசூதியே இல்லை என்று கூறிவிட்டது. மேலும், மசூதி தகர்ப்பு பற்றிய வழக்கோ தீர்ப்போ அது இல்லவேயில்லை. மேலும், தீர்ப்பு வந்தபின், நாட்டு மக்களின் நடப்பு அவருக்குத் திருப்தியை அளித்ததாம். அவர் தான், நாட்டு மக்களின் திருப்தியை பெறவேண்டுமே ஒழிய, கர்வத்துடன் அவர் எதிர் பார்ப்பதுபோலல்ல. எனவே, இந்துக்கள், எதிரிகளை அடையாளம் கண்டுகொண்டு, எப்படியாவது, இலவச தொலைக்காட்சி போன்றவற்றை, வாங்கி மகிழ்ந்தாலும், இந்து தர்மத்தைக் காப்பதில் முனைப்பைக் கைவிடக்கூடாது.

  25. அருள்: “பெயர் சொன்னால் போதும், தரம் எளிதில் விளங்கும்” என வரும் விளம்பர வரிகளை நினைவூட்டும் பெயர். போதாக்குறைக்கு, பசுமை… என்ற பெயரில், முகத்தையும் காட்டி, ‘நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்’ என்ற திருவள்ளுவரின் வாக்கை மேலும் ஒருவராக மெய்யாக்கி இருக்கிறீர்கள். அந்நியரின் குருதியால்,உயிரும் உடலும் ஏற்பட்டாலும் , ‘……இரத்தம் ஜெயம்’ எனக் கூற முற்படுவது, காட்டு மிராண்டித் தனமானது. ஆனால், ராமபிரான், ஒவ்வொரு இந்துவின் (பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இந்துக்களே) மனம், வாக்கு, செயல் ஆகியவற்றில் இருப்பதற்கு அடையாளம், அனைவரும், “ஸ்ரீ ராம ஜெயம் ” என்னும் நாமத்தை, ஸ்ரீ ராமனின் பெயரை எப்பொழுதும் உபயோகப் படுத்துவதுதான். ரத்தத்தின் மூலம் அடையும் ஜெயத்திற்கும், பெயரின் மூலம் அடையும் ஜெயத்திற்கும், உள்ள வித்தியாசம் தான், கடைசியாய், ரத்தத்தின் மூலம் மட்டுமே வெற்றியடையும் கிறித்தவர்களான போர்த்துக்கீசிய, டச், ஸ்பானிய, ஆங்கிலேய அரக்கர்களிடமிருந்து விடுதலையை, அற வழியில், அடைந்தோம்.
    However, it is further declared that the portion below the central dome where at present the
    idol is kept in makeshift temple will be allotted to Hindus in final decree.- s u khan j
    ISSUES FOR BRIEFING
    1. Whether the disputed site is the birth place of Bhagwan
    Ram?
    The disputed site is the birth place of Lord Ram. Place of
    birth is a juristic person and is a deity. It is personified as the
    spirit of divine worshipped as birth place of Lord Rama as a
    child.
    1. Issue 1 (Suit-1)-It is held that the place of birth, as believed and worshipped by Hindus, is the
    area covered under the central dome of the three domed structure, i.e., the disputed structure in
    the inner courtyard in the premises of dispute.
    Issue 17 (suit-1)-The plaintiffs is declared to have right of worship at the site in dispute
    including the part of the land which is held by this Court to be the place of birth of Lord Rama
    according to the faith and belief of Hindus but this right is subject to such restrictions as may
    be necessary by authorities concerned in regard to law and order, i.e., safety, security and also
    for the maintenance of place of worship etc. The plaintiffs is not entitled for any other relief.
    Issue 22 (Suit-5)-It is held that the place of birth as believed and worshipped by Hindus his
    the area covered under the central dome of the three domed structure, i.e., the disputed
    structure in the inner courtyard in the premises of dispute.
    “The mosque was constructed in 1527 by order of Babur, the first Mughal emperor of India.[5][6] Mir Baki, after seizing the Hindu structure from priests, named it Babri Masjid. Before the 1940s, the mosque was called Masjid-i-Janmasthan (“mosque of the birthplace”) acknowledging the site as the birthplace of the Hindu deity, Lord Rama.[7] Mir Baki, after seizing the Hindu structure from priests, named it Babri மஸ்ஜித்”.
    இந்து மன்னர்கள், கோவில்கள் கட்டினார்கள், இடித்தார்கள் என்பது, கிறித்தவர்களின் பொறாமைக் குணப்புத்தகங்களில்தான்.
    துளசிதாசர் வரலாற்றுப் புத்தகம் எழுதவில்லை, பாபர் மசூதியைப் பற்றி எழுதுவதற்கு. பிரிடிஷார் கட்டுக் கதையாளர்கள் அல்லர்; கயவர்கள்; அவர்களை இந்துக்கள் நம்பவில்லை; நடந்ததை நம்பின்னார்கள்.. அருள் பாபரின் வகால்த்தாக இருந்தால் மட்டுமே, பாபரின் வியில் பற்றிய தமிழ் வடிவத்தை நம்ப முடியும்.
    இந்துக்கள் ப்ரிடிஷாரையே நம்பவில்லை, அருளை நம்ப முடியுமா? இந்தியாவில், ராமர் விக்ரஹ்ங்களை, அயோத்தியில் வைப்பது, குற்றமாகாது. அருளை, ஒசாமா பின் லேடன் வீட்டில் வைத்தால், வருத்தம் தெரிவிக்கலாம்.
    எனவே அருள் சாத்தான் வேடம் போடவேண்டாம்;

  26. இத்துடன் ‘The Hindu’ பத்திரிகை அயோத்தி தீர்ப்பை வைத்து செய்யும் அட்டகாசங்களையும் எழுதுங்கள். ‘Arrogance’ என்ற வார்த்தைக்கு மிக சிறந்த எடுத்துகாட்டு, இப்போது ‘The Hindu’ வெளியிட்டுவரும் செய்திகள். (உதா: திப்பு வெளியான அன்று சந்தோஷமான ஹிந்துக்களையும் சோகமான முஸ்லிம்களையும் படம் எடுத்து வெளியிட்டு தனது ‘secular’ அந்தஸ்த்தை நிலைநாட்டி கொண்டது இந்த பத்திரிகை. )

  27. அன்பிற்கினிய ஸ்ரீதரன் அவர்களே! “இந்த ஊடக தாலிபான்கள் மும்பையில் பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்த பொது குள்ள நரித் தனமாக் மக்களை திசை திருப்பினர்.‘அந்த தீவிரவாதிகள் செய்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.அவர்களை தூக்கில் போட வேண்டும்’ என்று சொல்வதற்குப் பதிலாக’ எல்லாம் நம் அரசியல் வாதிகளால் தான்.அரசியலே சாக்கடை. எல்லா அரசியல் வாதிகளும் அயோக்யர்கள்’ என்றெல்லாம்பேசினர்.அதில் தீவிர வாதிகளுக்கு எதிரான பாரதீய ஜனதா,சிவ சேனா இவைகளை ஏன் சேர்க்க வேண்டும்?” : ஊடகங்களின் தவறான விமர்சனங்களால் நமது சாமானிய மக்களின் சமுதாய அக்கறையினை நீர்த்துப்போக செய்யப்படும் முயற்சிகள் நிச்சயமாக வன்மையாக கண்டிக்கப்படவேண்டும். பாக்கிஸ்தானிலிருந்து நமது நாட்டிற்குள் ஊடுருவிய, ஐ எஸ் ஐ மற்றும் பாக்கிஸ்தான் ராணுவத்தின் பயிற்சிக்குப்பின் அனுப்பப்பட்ட ஊடுருவல்காரன் கசாபை ராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிப்பதற்கு பதிலாக, சாதாரண கிரிமினல் குற்றவாளியைப்போல் நடத்தும் நமது அரசியல்வாதிகளின், தேச பாதுகாப்பு குறித்த செயல்பாட்டை என்னவென்று வர்ணிப்பது? ஆறாண்டு காலம் ஆட்சி செய்தபோது நமது நாட்டிற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏற்படும் அபாயங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான சட்டங்களையும் பா. ஜ. க. சிவசேனா இயற்றியிருக்கலாமே!

  28. தீவிரவாதிகளை ஒடுக்க பீ ஜெ பீ அரசு போட்ட போடா சட்டத்தை காங்கிரஸ் ஒழித்துக் கட்டியது.

  29. ‘பெயர் சொன்னால் போதும், தரம் எளிதில் விளங்கும்’- ஹா ஹா ஹா

    அங்கதான இருக்கு விஷயம்!
    அவர்கள் என்ன ஹிந்துக்களா சேம் சைடு கோல் போட ?

  30. 1940 களுக்கு முன்னர் இந்த இடம் ஜன்மஸ்தான் மசூதி என்றே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. அது ராம ஜன்மஸ்தான் இல்லையென்றால் அல்லாவின் ஜன்மஸ்தானா?

    அப்படியானால் “ராமர்தான் அல்லா” என்று ஒப்புக்கொள்ளத் தயாரா?

  31. அன்புக்குரிய நண்பர் அருள் அவர்களே,

    //1. இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன். ஆனாலும், இராமனே முதன்மையான நாயகன் என்பதுபோல பிற்காலத்தில் நம்பவைக்கப்பட்டான். (இந்தியவின் பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் இராமன் ஒரு முதன்மை தெய்வம் அல்ல): //

    இதை நீங்கள் எப்படிக் கண்டு பிடித்தீர்கள்? இந்திய மக்கள் எல்லோரிடமும் யாரை வழி படுகிறீர்கள் என்று கேட்டீர்களா?

    சரி இராமன் வெறும் பத்து பேரால மட்டுமே தெய்வமாக வழி படப் படுகிறான் என்றே வைத்துக் கொள்வோம். அந்தப் பத்து பேர் அவர்களுக்கு ஒரு கோவில் கட்டி இருக்கிரார்கள. அந்தக் கோவிலை இடித்தோ, அல்லது அது சிதிலமானால் அந்த இடத்தை ஆக்கிரமித்து வேறு மதத்தவர் கட்டிடம் கட்டுவது எந்த சட்டப் படி சரியாகும்?

    முதன்மையாக வழி பட்டால் என்ன? கூட சேர்த்து வழி பட்டால் என்ன, இதில் உங்களுக்கு எங்கே வலிக்கிறது? நீங்கள் ஏன் துடிக்க வேண்டும்? ஒருவர் கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறார். . அவருக்கு ஐந்து அண்ணன்கள் இருக்கிறார்கள். மூத்த அண்ணனுடன் பணி மற்றும் பல காரணங்களுக்காக மிக நெருக்கமாக இருக்கிறார். மற்ற அண்ணன்கள மீது வருக்கு பாசமோ, மரியாதையோ, அக்கறையோ, அன்போ இல்லை என்று அர்த்தமா?

    .//இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன்//

    நீங்கள் ஏன் துடிக்க வேண்டும்? ஆயிரம் சாமியோ , பல்லாயிரம் சாமியோ, இந்தியர்கள எப்படியோ வழி பட்டு விட்டுப் போகட்டுமே. உங்களுக்கு சகிப்புத் தன்மை இல்லாதததால் அதைப் பொறுக்க முடியவில்லை. ஒருவரை விமரிசிக்கும் போது கூட அவரை மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்கிற அடிப்படைப் பண்பு கூட இல்லாத உங்களின் எண்ணப் போக்கால் எப்படி நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியும்?

    //2. அயோத்தி இராமர் கோவிலை இசுலாமிய மன்னர்கள் எவரும் இடிக்கவில்லை. இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசி தாசர். அவர் எழுதிய ஆவாதி மொழி இராமாயணத்தில் – கோவில் இடிக்கப்பட்டது பற்றி எந்த குறிப்பும் இல்லை.//

    துளசி தாசர் இராமரின் வரலாற்றையே இந்தியில் எழுதி உள்ளார். துளசி தாசர் தன்னுடைய சம கால வரலாற்றை எழுதவில்ல்லையே.

    துளசி தாசர் அசோகர், குப்தர் , ஹர்ஷர்…. பாபர் உட்பட இந்தியாவின் முழு வரலாற்றையும் எழுதியதாக தெரியவில்லை!

    //3. குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்வ சங்கப்பரிவாரம் உருவாக்கிய ஒரு கட்டுக்கதை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.//

    இராமர் அந்த இடத்தில் பிறந்தார் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது என்பதே கோர்ட்டாரின் கருத்து.

    //4. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதச்சண்டையை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இசுலாமிய மன்னர்கள் இந்துக்கோவிலை இடித்ததாக கட்டுக்கதைகளை பரப்பினர். அதனை பின்னர் இந்துத்வ தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருகின்றனர். //
    பிற மதங்களின் வழிப்பட்டு முறைகளை இஸ்லாமிய அரசர்கள வெறுத்து இருக்கின்றனர். அவர்கள பல கோவில்களை கொள்ளை அடித்தும் உள்ளனர், அழித்தும் உள்ளனர் என்பதாக வரலாறு இருக்கிறது. தாலிபானக்ள புத்தர் சிலைகளை பீரங்கி வைத்து உடைத்தனரே.

    //(ஒருமன்னன் மற்றொரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அங்குள்ள கோவில்களை இடிப்பதோ, எரிப்பதோ, கொள்ளையடிப்பதோ வழக்கம். இதனை பல இந்து மன்னர்களும் செய்துள்ளனர்)//

    எடுத்துக் காட்டு தர முடியுமா? ஆதாரம் தாருங்கள் )

    //எனினும், பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

    ‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

    “நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

    “நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”//

    கோவில் இருந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு பாப்ரி ஸ்ட்ரக்சர் கட்டப் பட்டு உள்ளது. அதற்கான அகழ்வாராய்ச்சி ஆதாரம் உள்ளது.

    //5. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாபர் மசூதிக்குள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராம் லல்லா சிலைகள் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டன. இந்த அநீதியான செயலை இந்திய அரசு தடுக்கத்தவறியது மட்டுமின்றி, திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தவும் தவறிவிட்டது.//

    The idols could have been placed in 1949. They might have keen to continue the worship which their fore fathers had been doing years ago! விவகரமானது இன்றல்ல நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக நடை பெற்று வருகிறது.

    //6. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதிச்செயலால், 1992 டிசம்பர் 6 அன்று, இந்திய அரசின் பாதுகாப்பில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.//

    We strongly condemn the demolition. இடிக்கப் பட்டதை நாம் கண்டிக்கிறோம்!

    //7. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம் – அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்துத்வ பயங்கரவாதிகளின் அநீதியான செயல்களை அங்கீகரித்துள்ளது.//

    கோர்ட் தீர்ப்பு நீங்கள் விரும்பிய வண்ணம் இல்லாததால், உங்கள வெறுப்புணர்ச்சியை கோர்ட் மீதும் காட்டுகிறீர்கள்.

    //படிப்பினை: இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல.:

    ஒரு குற்றச்செயல் தண்டனைக்குறியதா அல்லது போற்றுதலுக்குறியதா என்பது குற்றமிழைப்பவர் சார்ந்திருக்கும் சாதி, மதத்தைப் பொறுத்தது.//

    எல்லாம் சமம் தான். உங்களுக்கு மத சகிப்பின்மை இல்லாததால் அப்படித் தோன்றுகிறது

    மொத்தத்திலே இந்து மதத்தின் மீது வெறுப்புணர்ச்சியும் காழ்ப்புணர்ச்சியும் உங்கள் நெஞ்சில் நிரம்பி உள்ளதால் உண்மையை ஒத்துக் கொள்ள முடியாமல் நீங்கள் இருப்பதாகவே தெரிகிறது, அதற்க்காக எல்லோரையும் குற்றம் சொல்லுவது புலனாகிறது.

  32. //Muttal
    3 October 2010 at 1:06 pm
    அருள்,

    எந்த மன்னனும் மன்னனை சார்ந்தவர்களும், புத்தகம் எழுதும் போது, அவர்கள் செய்த நன்மைகளை மட்டுமே எழுதுவார்கள். தீமைகளை மற்றும் கொடுமைகளை விட்டுவிடுவார்கள்.

    தற்போது, கலைகாரை பற்றி எழுத சொன்னால் வாலி போன்றவர்கள் என்ன எழுதுவார்கள்.//

    A point well said.

  33. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
    ஹிந்துவும் முஸ்லீமும் மோதிக் கொண்டால் அருளுக்குக் கொண்டாட்டம்

  34. With out going in to faith , only with laws of tenancy and Inheritance the land belong to Lord Ram
    If you have lawyer check with Him, all the land goes to lord Ram by law as per Indian law of inheritance the reasons are

    1. All Hindu gods own property and administer the properties thro executive officers, power agents for thousands of years

    2. all Christian church and Muslim Jamaads are administer by elected members of the congregation and have a legal standing. There are like companies , so one share holder in a company has no right on other company. also they can be a share holder in one company like DMK/AIADMK

    3. babar is a dead person and no one can legally represent a dead person since no relation is alive as per law inheritance. tenancy are not transferable to unrelated sunni’s or even to other newly formed associations.

    4. Even among disputed parties in the event of demise of one person the issue is settled favorably for the other. babr is dead beyond doubt.

    Criminals of India are only allowing a dispute illegally in the name of Law and trying to Rob lord Rams property.

    Check your self with Christians and Muslims . A catholic cannot be a member of Protestant Church and shia in a sunni mosque. etc etc

    The case is like Hindus start case in Jerusalem joining the fight among Jews, Christians, Muslims, Pagans and getting a share of th Jerusalem Mosque.

    We Hindus should start a fight for share of Jerusalem and to get 20 % of Jerusalem to Hindus and 50% of mecca to Hindus.

  35. ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து இந்து மதத்தை கொண்டு வந்தனர். பழைய ஆரிய நகரங்கள் ரஷிய கசகிஸ்தான் எல்லையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. இந்த மாதத்தின் முக்கிய செய்தி இது தான். மேலும் தகவல் அறிய இணையத்தில் தேடவும். இனிமேல் எல் கே அத்வானி சைபீரியாவுக்கு ரத யாத்திரை நடத்துவார். rig veda horse sacrifices and swastikaa symbols are found everywhere there.

  36. பெரிய சாமி ,அங்கே கண்டுபிடிக்க பட்டு இருக்கும் ஆரிய நகரங்கள் இந்தியாவில் இருந்து சென்றவர்களால் அமைக்க பட்டதாம்.

  37. சேக்கிழாரே!

    //பத்திரிகைகள் சமூகத்தின் மனசாட்சியாக இருக்க வேண்டும்; நாட்டுநலத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை வழிநடத்த வேண்டும்; சத்தியத்தின் வாழ்விற்காக அதிகாரபலத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இவையெல்லாம், நமது இதழியல் முன்னோடிகளான மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், வீர சாவர்க்கர், அரவிந்தர், மகாகவி பாரதி ஆகியோர் நமக்கு வழங்கிச் சென்ற அற்புத வழிமுறை.ஆனால், வர்த்தகமும், சுயநலமும் கோலோச்சும் தற்போதைய ஊடக உலகிடம் இவற்றை எதிர்பார்ப்பது, முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போன்றது.//

    வேண்டிய காசு சேர்த்து கொடுக்கவேண்டியவர்களுக்குக் கொடுத்தால், கொம்புத்தேனைக் கொம்பு கொம்பாக வாங்கலாமே! இந்துக்களே! start thinking out of the box!! Behave like Romans while you’re amongst Romans!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *