விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்

விதி என்று ஒன்று உண்டா? எல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கிறதா? எல்லாவற்றையும் யாரோ ஏற்கனவே விதித்துவிட்டார்களா, இல்லை அனைத்துமே வெறும் நிகழ்வுகள்தானா? இந்த கேள்விகள் குறித்து நீயா நானா நிகழ்ச்சி நடந்தது. நான் அதில் கலந்து கொண்டேன். [19/09/2010 அன்று ஒளிபரப்பானது.] என் நிலைப்பாடு உண்டு இல்லை என்பதிலிருந்து வேறுபட்டது. விதி என்பது ஓர் உளவியல் கருவி. அதற்குப் புற யதார்த்தம் கிடையாது என்பதே என் நிலைப்பாடு. இந்நிகழ்ச்சியில் நான் கவனித்த /கூறிய/ கூறவிரும்பி முடியாமல் போன கருத்துகள் அனைத்தையும் தொகுத்துத் தருகிறேன்.

 

கவனித்த பிறர் கூறிய கருத்துக்கள்

aravindan-neelakandan2விதி உண்டு என்று சொன்னவர்கள் பொதுவாக தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவ ஒற்றுமைகளை- குறிப்பாக அவர்கள் வாழ்க்கையின் ஆதாரமான தருணங்களில் நிகழ்ந்தவற்றை- கூறினார்கள். ஒரு சமணப் பெண்மணியும் ஓர் இஸ்லாமியரும் மட்டுமே அவர்களது கோட்பாடு சார்ந்து விதி உண்டு என்று பேசினார்கள். அந்தச் சமண பெண்மணி தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சோகத்தைக் கூறி எல்லாமே விதிக்கப்பட்டது என்றார். (predetermined) அந்த இஸ்லாமிய நண்பர், “எல்லாமே விதிக்கப்பட்டது ஆனால் மனிதனுக்கு ஓர் எல்லைக்குள்ளாக சுய-சங்கல்பத்துடனான செயல்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

relates-to-tsunamiஎன்னை மிகவும் பாதித்த ஒரு கருத்து, நல்ல கழிப்பறைகள் இல்லாத காரணத்தால் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குழந்தைகள் கடற்கரையோரமாக தங்கள் காலைக்கடன்களைக் கழிக்க ஒதுங்கி, சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டதைச் சொல்லி, அதை விதி என்றார் ஒருவர். விதி இல்லை என வாதித்தவர்கள், பொதுவாக மானுட அறிவு முன்னால் விதி என்று சொன்ன விஷயங்களை எல்லாம் முறியடித்துவிட்டது எனவே விதி இல்லை எனக் கூறினார்கள். நிகழ்வுகளே விதி எனச் சொல்லப்படுவதாக ஒருவர் கூறினார். விதி என்பது தலையில் பதிவாகும் விஷயம்; அதனை மூளை ஸ்கேனில் பார்க்கலாம் என ஒருவர் கூற எதிர்தரப்பில் ஒரு மருத்துவர் திட்டவட்டமாக மறுத்தார். எப்படி அரைகுறை அறிவியலும் நம்பிக்கையும் கலக்கும்போது தவறான கருத்துகள் உருவாகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டாக அமைந்தது அது.

relates-to-deathமுழுக்க நான் கவனித்த விஷயம் என்னவென்றால் எந்த பிரச்சினையையும் அணுகுவதில் நாம் இன்னும் பட்டிமன்ற மனநிலையைத் தாண்டவில்லை என்பதுதான். எதிர்தரப்பை முறியடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் நமக்கு இருக்கும் அளவுக்கு அவர்களின் மனநிலையை விளங்கிக் கொள்ள வேண்டும் என நாம் நினைப்பதில்லை. விதி என்பது நமது இயலாமைக்கு, தப்பிக்க நாம் கற்பிக்கும் escapism என்றார் ஒருவர். நான் கவனித்த மட்டில் விதி என்பதை ஆதரித்துப் பேசியவர்கள் வைத்த ஆதாரங்களில் நூற்றுக்கு எண்பது சதவிகிதம் மரணம் சார்ந்தது அல்லது உயிராதாரமான ஆபத்து சார்ந்ததாக இருப்பதைக் கவனித்தேன். இது ஏற்கனவே எனது மனதில் நான் கொண்டிருந்த ஒரு கோட்பாட்டை உறுதிசெய்வதாக அமைந்தது.

 

நான் கூறிய கருத்துகள்

 

நாம் நிச்சயமின்மை நிறைந்த பிரபஞ்சத்தால் சூழப்பட்டிருக்கிறோம். மரணம் மட்டுமே மனிதத்தின் ஒரே நிச்சயமான விஷயம். இது மனிதனை வாழவே விடாமல் நிலைகுலையச் செய்யும். அவனைச் சுற்றி அவன் சந்திக்கும் துர்மரணங்கள், ஏமாற்றங்கள், அசம்பாவிதங்கள் ஆகியவை மீண்டும் மீண்டும் அவனுக்கு அவனது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையையும் அவனுடைய மரணத்தின் நிச்சயத்துவத்தையும் சுட்டிக் கொண்டேயிருக்கின்றன. இந்த நிச்சயமற்ற தன்மையிலிருந்து தனது வாழ்க்கைக்கு ஒரு பொருளை உருவாக்க நினைக்கும் மானுட மனத்தின் உருவாக்கமே விதி என்கிற கோட்பாடு. அது ஓர் உளவியல் கருவியே. ஆனால் அதற்கு ஒரு புற யதார்த்தம் உண்டா என்று பார்த்தால் அதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொல்லவேண்டும். க்வாண்டம் இயற்பியல் மிக நுண்ணிய அளவில் அடிப்படைப் பொருண்மையிலேயே ஒரு நிச்சயமின்மை அல்லது நிர்ணயமின்மை இருப்பதைச் சொல்கிறது. நாம் அறிவியல் விதிகளாக நம் அளவில் அறிந்து கொள்பவை கூட இந்த நிச்சயமின்மையிலிருந்து கூட்டு சாத்தியங்களாக உருவானவையே. எனவே எல்லாமே ஏற்கனவே விதிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுவது மகா அபத்தம். இன்னும் சொன்னால் சில க்வாண்டம் இயற்பியல் கோட்பாடுகள் ஒவ்வொரு சாத்திய முடிவும் அதன் பல சாத்தியங்களுக்கேற்ப பிரபஞ்சத்தை பல கூறுகளாகப் பிரிப்பதாகக் கூட கூறுகின்றன. விதி என்பது ஒரு பரிணாம உளவியல் கருவி; விதியை இறைவன் நடத்தி செல்கிறான் என்பதும் அத்தகைய ஓர் உளவியல் தகவமைப்பே. மதம் இதனை சமுதாய அளவில் கட்டுப்பாடுகளுக்குப் பயன்படுத்துகிறது.

aravindan-neelakandan1ஆனால் பாரதப் பாரம்பரியத்தில், விதி எனும் இந்த உளவியல், சுக வட்டத்தை விட்டு மீறிச் செல்லும் ஞான தேடலே அடிப்படை ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது. சமூகச் சூழலில் கூட விதி என இருந்துவிடாத புத்தரும், நாராயண குருவும் அய்யா வைகுண்டரும் பாடுபடாமல் இருந்திருந்தால் நம் சமுதாயச் சூழ்நிலை இன்றைக்கும்கூட மிக மோசமாக இருந்திருக்கக்கூடும். டார்வின் தேவன் உலகை படைத்தான் என்கிற ‘விதி’யை ஏற்றுக்கொண்டிருந்தால் பரிணாம அறிவியல் உலகுக்குக் கிடைத்திருக்காது.

 

கவிஞர் விக்கிரமாதித்தியன் கருத்துகள்

poet-vikramadityan‘அண்ணாச்சி’ என பாசத்துடன் அழைக்கப்படும் கவிஞர் விக்கிரமாதித்தன், விதியை நம்பாதவர்களுக்கு ஜாதகத்தில் குரு சண்டாள யோகம் இருப்பதால்தான் அப்படிச் செயல்படுகிறார்கள் என்றார். ஸ்வாமி விவேகானந்தர் ஒரு பேருரை முழுக்க மனிதனே தனது விதியை உருவாக்குகிறான் என சொல்லியிருக்கிறார் எனச் சுட்டிக்காட்டப்பட்டதும் ஞானத்தைத் தேடும்போது விதியைத் தூக்கி எறிந்துவிட்டு நாம் செல்லலாம் என்றும் அதையே வியாசரும் நம் மகரிஷிகளும் நம் இதிகாசங்களும் பகவத்கீதையும் சொல்லுவதாகக் கூறினார். மானுடத்துக்குக் கிடைத்த ஞானத்தின் கனிந்த உச்சம் உபநிடதங்கள் என அண்ணாச்சி கூறினார்.

இதற்கு எதிர்வினையாற்ற அழைக்கப்பட்டபோது பின்வரும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன- ஆதிகவியான வான்மீகி மகரிஷி கிரௌஞ்ச பறவை இறந்த போது அதன் விதி என அதைப் புறக்கணிக்கவில்லை. அதன் இணையின் சோகத்தை தன் சோகமாக தன் இதயத்தில் உணர்ந்தபோதுதான் ஆதிகாவியத்தின் சுலோகமே வெளிவந்தது; எப்போதும் விதி என முடங்காமல் விரிவடையும் போதுதான் ஞானத் தேடலுக்கான இறக்கை விரிகிறது. ஞானம் என்பது உள்முக ஞானத் தேடலான ஆன்மிகம் மட்டுமல்ல, புறப் பிரபஞ்சத்தை ஆராயும் விஞ்ஞானமும் ஆன்மத்தேடலே. எனவே விதி ஒரு மரப்பாச்சி பொம்மையாக- குறுகிய ஓர் உளவியல் ஆறுதலுக்காக- வைத்திருக்கலாமே தவிர அதனை வாழ்க்கை முழுவதும் வைத்துக் கொண்டிருப்பது சரியல்ல. மனிதனின் அடிப்பட்ட உணர்ச்சியான ஞானத்தேடலில் அவன் விதி எனும் மரப்பாச்சி பொம்மையைத் தூக்கி எறிந்துவிட்டு முன்னேற வேண்டும்.

 

கீழ்வரும் கருத்துகளையும் கூற விரும்பினேன். ஆனால் கூறமுடியாமல் போனது.

விதி என்று சொல்லும்போது பொதுவாக சில விதித்துவக் (determinism) கோட்பாடுகளை நாம் கவனிப்பதில்லை. அவை அறிவியல் முலாம் பூசிக்கொள்கின்றன அல்லது நம்பிக்கை முலாம். உதாரணமாக ஆபிரகாமிய இறையியலில் எல்லாமே இறைவனால் தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக கருதப்படுகிறது. எதிர்காலத்துக்குள் சென்று பார்ப்பது இறை இச்சையை சோதிப்பது என்கிற காரணத்தால்- மூடநம்பிக்கை என்பதால் அல்ல- சோதிடம் இந்த மதங்களால் விலக்கப்படுகிறது. மாறாக குறுக்கியல்வாதிகள் அறிவியல் அல்லது தொழில்நுட்ப விதித்துவத்தை நம்புகிறார்கள். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அனைத்துக் காரணிகளையும் சமன்பாடுகளாக மாற்ற முடிந்தால் அதனை முழுமையாக நம்மால் கட்டுப்படுத்த முடியும் எனக் கருதுகிறார்கள். இதுவும் ஒருவித விதி நம்பிக்கையே. மார்க்ஸியர்களோ எல்லா மானுட வரலாறுமே மார்க்ஸிய விதிகளின்படி இயங்குவதாகக் கருதுகிறார்கள். அனைத்து இயக்கங்களையும் இயந்திரத்தன்மையுடன் அணுகும் இத்தகைய அனைத்துக் கோட்பாடுகளும் பார்வைகளும் விதித்துவப் பார்வைகளே. இயற்கையும் அறிவியலும் இத்தகைய கோட்பாடுகள் தவறானவை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வந்துள்ளன.

0 — 0

aravindan-neelakandan3

[‘நீயா நானா’ இறுதிப் பகுதியில் அரவிந்தன் நீலகண்டன் குறித்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் கூறிய கருத்துகள் சற்றும் மிகையில்லை என்று கருதுகிறோம். நமது தமிழ்ஹிந்து தளத்தில் தொடர்ந்து சிறந்த கட்டுரைகளை எழுதிவரும் அரவிந்தன் நீலகண்டன், நிகழ்ச்சியில் அவரது கருத்துகளுக்காகப் பரிசு வாங்கியதைப் பாராட்டி வாழ்த்துவதில் மகிழ்கிறோம்.                 –ஆசிரியர் குழு]

வீடியோ, படங்கள் – நன்றி: www.techsatish.net

31 Replies to “விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்”

  1. சுனாமி. இதை விட விதிக்கு சிறந்த உதாரணம் சொல்ல முடியாது. ஆம். இயற்க்கையின் அபரிமிதமான சீற்றத்தால் குவியல் குவியலாக இறந்து போகும் மனிதர்களுக்கு எந்த விதத்திலும் காரண காரியம் சொல்ல முடியாது. ஆனால் இயற்க்கையின் மாற்றம் ஒரு சங்கிலித்தொடர் போல காலாகாலமாக நடந்து வரும். அவைகளும் ஒரு விதிக்கு உட்பட்டே செயல் பட்டு வருவதால் இது பிரபஞ்சத்தால் உண்டாகும் விதியாகும். மனிதன் தனது செயல்களால் உண்டாக்குவது விதி. முற்பிறவிகளால் நிகழ்காலப் பிறப்பு உண்டாக்கப்படுவதும் விதியிலேயே அடங்கும். விதி பற்றிய எனது விளக்கமான கட்டுரையை இங்கே https://hayyram.blogspot.com/2009/08/blog-post_06.html காணலாம்.

  2. இரண்டு முரணான குறள்களை நினைவுகூர்கிறேன்.
    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி தாழாது உஞற்றுபவர்
    உழிற் பெருவலி யாவுள தான் ஒன்று சூழினும் மற்று அது முந்துறும்.
    வாதங்கள் விடை தருமா? அவரவர் வாழ்க்கைதான் இதற்கு விடை தர இயலும்.

  3. Pingback: Indli.com
  4. ” உதாரணமாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அனைத்துக் காரணிகளையும் சமன்பாடுகளாக மாற்ற முடிந்தால் அதனை முழுமையாக நம்மால் கட்டுப்படுத்த முடியும் எனக் கருதுகிறார்கள்”.

    மேற்கூறிய இதைத்தான் ஐன்ஸ்டீன் என்னும் விஞ்ஞானி ” இறைவன் பகடை ஆடுவதில்லை” என வேறுவிதமாகக் கூறினார். அதாவது காரணமின்றி எந்நிகழ்வும் நிகழாது என்பது அவர் வாதமாக இருந்தது. நிச்சமற்ற தன்மை (uncertainty principle) என்னும் விஞ்ஞானிகளின் கொள்கையை அவர் கடைசி வரை ஏற்றுக்கொள்ளவே இல்லை.

    ஆனால் நமது ஸநாதன தர்மம் காரண கார்ய (cause & effect ) வாதத்தையும் நிச்சமற்ற தன்மை (uncertainty principle) என்னும் கொள்கையையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழகாக ஒருங்கிணைத்து விட்டது! (reconcilled )

    எவ்வாறு என்பதை நாம் பார்ப்போம்.

    ஒரு தனி உயிரினத்தின் விதி என்பது அவ்வுயிரினம் இன்ன காலத்தில் இன்ன நிலையை அடையும் என்பது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்பதைக் குறிக்கும். அவ்வாறு முடிவு செய்யப்பட்டுவிட்டதெனில், யாரால், எதனால் என்னும் வினாக்கள் எழும். விதியை நம்புவோர் ‘இறைவனால்’ என உடனே பதிலிருப்பர். அவ்வாறாயின், இவ்வாறான, தம் செயல்கள் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட, நடைப் பிணங்களின் படைப்பு இறைவனுக்கு எவ்வாறு பெருமை சேர்க்கும்? மேலும், இறைவனின் படைப்புத்தொழிலின் பிரம்மாண்டத்தின் முன்பு, ஒரு தனி உயிரின் விதி என்பது அற்பத்திலும் அற்பம். அதனை வேலை மெனக்கிட்டு இறைவன் செய்யான் என்பது நிச்சயமல்லவா? எனவே, ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது என எதுவும் இருக்க இயலாது என்பதற்கான சாத்யங்களே அதிகம்.

    ஆனால் காரண கார்யங்களே இல்லாமல் எவ்வாறு நிகழ்வுகள் நடைபெறும்? அங்குதான் இறைவனின் பொது நியதி, கர்ம பலன்கள் என்பன வருகின்றன.
    நாம் நம் பகுத்தறிவினாலும் முன்வினைப்பயன்களின் பதிவுகளின் (வாசனை) உந்துகையாலும் நம் செயல்களைத் தேர்ந்தெடுக்கிறோம். பகுத்தறிவு இதைச் செய்வது நலம் அல்லது நன்று அன்று என்பதை நமக்குச் சொல்கிறது. வாசனையோ தனது தன்மைக் கேற்பத் தூண்டுகிறது. இவற்றில் எதனது வீச்சு அதிகமோ அது விஞ்சி நாம் அதன்படி செயல்களில் ஈடு படுகிறோம். இதுவே உண்மை. இதனைத்தான் நமது சாத்திரங்கள் திரும்பத்திரும்பக் கூறுகின்றன. ஒருவன் இன்ன கார்யம் செய்கிறான் என்றால் அதற்குக்காரணம் மேற்கூறிய நிலையே அன்றி விதி அல்ல.

    இறைவன், இவ்வாறான பொது நியதியை மட்டும் படைத்து விட்டு உயிர்கள் தங்களது பகுத்தறிவாலும் வினைப் பயனாலும் தூண்டப்பட்டு செயல்களை ஆற்றட்டும் என அவன் பாரபட்சமின்றி உள்ளான். இதுவே பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளது.

  5. Fantastic response Srinivasaraghavan !
    Why not you write an article elaborating your views?
    That could include answers to several questions, including the below:
    //….இறைவன், இவ்வாறான பொது நியதியை மட்டும் படைத்து விட்டு உயிர்கள் தங்களது பகுத்தறிவாலும் வினைப் பயனாலும் தூண்டப்பட்டு செயல்களை ஆற்றட்டும் என அவன் பாரபட்சமின்றி உள்ளான்….//

    1. What is the necessary of God for destiny?

    2. If there is no God, then what part and power destiny has?

    3. Can a human shatter the general certainities that you say God has created?

    4. Why should a human suffer for things that he has no control, for example, the general certainities that God has created?

    5. How a hindutva-mind could understand the Destiny and practice it in day-to-day activities?

    etc. etc.

  6. //மரணம் மட்டுமே மனிதத்தின் ஒரே நிச்சயமான விஷயம்//

    அரவிந்தன், பிறப்பும் நிச்சயம் அல்லவா ? பிறப்பை எடுத்துக் கொண்டால் தானே இறப்பு வருகிறது ? இறப்பு இன்னொன்றைச் சார்ந்திருப்பதால் அது ஒன்றும் absolute அல்ல. வெறும் relative தான்.

    வெறும் விதியைப் பற்றி மட்டும் பேசுவது ஒரு trap . ஆன்மிகம் தெரியாமல் அது குறித்து பேசுவதும் ஆபத்து. ஒரு காரியம் முடிய ஐந்து நியதிகளை கீதை கூறுகிறது.

    அதிஷ்டானம் ததா கர்த்தா கரணம் ச ப்ருதக் விதம் |
    விவிதாஸ் ச ப்ருதக் சேஷ்டா தெய்வம் சைவாத்ர பஞ்சமம் || (18 -13 )

    அதிஷ்டானம் – இடம்
    கர்த்தா- செய்வோன்
    கரணம் – உபகரணங்கள்
    சேஷ்டா – ஆவலும் , சரத்தையும் மற்றதுவும்
    தெய்வம்- விதி அல்லது ஊழ் அல்லது தெய்வ சங்கல்பம்

    இவை ஐந்தும் பொருந்தாவிடில் காரியம் நினைத்தபடி பலன் தராமல் போகும். இதைத் தான் பகவான்

    கர்மணி ஏவ அதிகாரஸ்தே , மா பலேசு கதாசன (2 -47 )

    என்கிறார். உண்மையில் நமக்கு பலன்களில் ஏன் அதிகாரமோ , கட்டுப்படுத்தும் சக்தியோ இல்லை என்பது பதினெட்டாம் அத்தியாயத்தில் விடை கிடைக்கிறது. ஊழ் என்பது பத்து ரூபாய்க்கு ஒரு தோசை போன்றதல்ல. வெறும் மரணம் ஒன்றை மட்டும் உரை கல்லாக வைத்து விதியின் இருப்பையோ, இல்லாமையையோ விண்டுரைக்க முடியாது.

    ஐன்ஸ்டீன் அவர்களின் முடிவுகளில் முக்கியமானது ஜடம் என்பது சக்தி (ஆற்றல்) சொரூபம். (mass is a function of energy ). ஆற்றல் மாறாக் கோட்பாடு என்பது உலகில் ஆற்றல் புதிதாக வர முடியாது. வந்த ஆற்றல் செல்லவும் முடியாது என்கிறது.

    இதன் மூலம் ஒரு இணைப்பு முடிவு கிடைக்கிறது. அதாவது the sum total of energy in this universe at any point of time is the same.

    இப்போது ஜடம் என்பது என்ன ? மாறக் கூடியது ஜடம்.(ஹி ஹி அழியக் கூடியது என்று சொல்லி மாட்டிக்க மாட்டேன் ) .உடல், மனம், அறிவு மூன்றும் ஜடம். மாறாதது ஒன்று இருக்கிறது. அது எவ்வாறு மீண்டும் பிறப்பின் போது ஜடத்துடன் தொடர்பு கொள்கிறது ? எந்த விதியின் படி ?

    அந்த விதி தான் இப்ப நம்ம தலைப்பு .

    நெடியோன் குமரன்

  7. இந்த விதி என்பதெல்லாம் வெறும் அக்கப்போர் கடவுள் நமக்கு விதி என்று வைத்து நம்மள பிறப்பித்து கஷ்டப்படுதினார் என்பதெல்லாம் தவறு என்று முன்பொருமுறை எழுதி நான் வாங்கிக் கட்டிகொண்டேன் – நான் வாங்கிய அடி திருச்சி வரை கேட்டது

    கடவுள் விதித்தது தான் அப்படியே நடக்கும் என்றால் விதியை மதியால் வெல்லலாம் என்பதன் மூலம் நாம் அசால்டாக கடவுளை வெல்லலாம் என்றாகிவிடும்

    விதிப்படி தான் எல்லாம் என்றால் மொத்த கீதையும் பொய்யாகும் – அதில் வரிக்கு வரி என்னிடம் ஸ்ரத்தயாக இரு இருந்தால் உனக்கு நான் கிட்டுவேன் என்று கீதாசார்யன் சொல்வது பொய்யாகும் – எல்லா விதிப்படியே (கடவுள் முன்னமே முடிவு செய்தது போல தான் ) நடக்கும் என்றால் பகவத் கீதை எதற்கு

    இந்த பேத்தல் ஆபிராமிய மதத்தில் மட்டும் தான்

    ஒரு விஷயம் நடக்க தர்க்க சாஸ்திரத்தில் கடவுளை பொது காரணமாக தான் ஏற்கிறார்கள் – முக்கிய காரணமாக அல்ல – அத்வைத-விஷிடாத்வைத-த்வைத மதங்களுமிதையே சொல்கின்றன

    இல்லை என்றால் செம்ம குழப்பம் வரும் – அதாவது

    ஒருவர் புடவை நெய்கிறார் – அந்த புடவைக்கு முக்கிய காரணம் அந்த நெசவாளியே அந்த நெசவாளியின் அப்பா இல்லாமல் நெசவாளியே கிடையாது அதற்காக இந்த புடவைக்கு முக்கிய காரணம் நெசவாளியின் அப்பாவாக இருக்க முடியாது – இதே விதி (rule) தான் கடவுளுக்கும் பொருந்தும்

    //Now let me ask you one more question, why the God had , first of all given births to many livings and make them prone to suffering? If there is no birth then there is no countless rebirths as well.
    Can you explain this as well?
    //

    இப்படி ஒருவர் கேள்வி கேட்க நான் பதில் சொல்லப் போய் 🙂

    முதலில் – இந்த பிறப்பிற்கு பகவானின் மீது பழி போடுவதே தவறு – விதி என்பது பகவான் நமக்கு விதித்தது அல்ல
    — ஆத்மா அணித்யன் [நித்யோ நித்யானாம்] என்பதன் முலம் இந்த துயரம் சந்தோஷம், குளிர் சூடு இவை எல்லாம் உடலுக்கே என்றும் மாறும், தன்மை உள்ளது என்றும் அறிய வேண்டும். உடலுக்கே என்று ஆகிவிட்டபடியால், உடலின் அதிபதி மனச ஆகிறது, நம் மனம் போல் செய்யும் காரியமே சுக துக்கமாக விளைகிறது குருடனாய் பிறப்பதும், பாதியில் முடமாவதும், நாம் செய்யும் காரியங்களால் மட்டுமே
    — எப்படி குழந்தை பருவம், இளமை, வயோதிகம் என்று உடல் மாருபடுகிறதோ, அவ்வாறே ஆன்மாவானது பல உடல்களை எடுக்கிறது — ஆன்மா மாறுவதே இல்லை, இதன் மூலம் அறிவது யாதெனில், பிறவி என்பது ஆன்மாவின் நெடுந்தூர சுழல் பயணத்தில் ஒரு பகுதியே.

    எப்படி ஒருவன் தீர்மானாமாக ஒரு தவறையோ, நல்லதையோ செய்துவிட்டு பலனை அனுபவிக்கிறானோ [குடிக்கிறான், அதனால் பல வருடங்கள் கழித்து குடல் வெந்து முடிவு வருகிறது, இன்று வங்கியில் பணம் முதலீடு செய்தவிட்டு பத்து வருடம் கழித்து அதை பெருக்கி நன்மை அடைகிறான் ] இவ்வண்ணமே நாம் செய்யும் காரியங்கள் பல வருடங்களோ பல பிறவிகளோ கழித்து பலன் தருகிறது, இதையே தான்
    – நானே தான் ஆகிடுக
    – தன்னை நிலை நிறுத்தி கொள்வானும்
    – விதியை மதியால் வெல்லலாம் [தான் செய்த தவறை ஞானம் பெற்று திருத்திக்கொண்டால் செய்த தவறானது சரியாகிவிடுகிறது – எப்படி குடி பழக்கமுள்ளவன் குடியை விட்டு மருந்து உட்கொண்டு நலம் அடைகிறானோ அது போல]

    இதிலிருந்து பகவான் வலியவந்து நம்மை புதிது புதிதாக பிறக்க வைப்பதில்லை என்றும் நாம் கொள்ளலாம் – மேலும் பகவான் ஆதியில் செய்த ஒரே காரியம், ஒன்றை இருந்து பலவானது தான் – ஹிரன்யகர்பனானவன் விராட் ஆனது தான் [ஏன் அப்படி ஆனார் என்ற கேள்விக்கு யஞ்யவல்கரே பதில் சொல்லவில்லை (கேள்வி கேட்கப்படவும் இல்லை]
    – கிருஷ்ணர் ஸ்திதப் பிரஜ்யன் யார் என்று இரண்டாம் அத்யாயத்தில் கூறுகிறார் – ஜீவ சமாதியில் இருக்கும் இவர்களுக்கு ஆத்மா பாவம் நன்கு விளங்கியமையால் சுகமும் துக்கமும் இவர்களை பாதிப்பதில்லை (இவர்களை அண்டுவதில்லை) – இவர்களுக்கு விதி என்பது எதுவுமே இல்லை. இதிலிருந்து இவர்கள் பிரம்ம ஞானம் அடைந்தவர்கள் ஜெயஸ்ரீ அவர்கள் விஞ்ஞான முறையில் விளக்கியதை போல் சுழன்று சுழன்று அதலிருந்து விடுபட தெரிந்து கொண்டவர்கள் – கால சக்கரத்தின் அப்பாற்பட்டவர்கள்
    – ஆத்மா ஸ்வதந்திரன் என்பதின் மூலமும், தானே விளங்கவள்ளது என்பதன் மூலமும் நாமே நமக்கு நல்லது போலவும், தீங்கு போவும் செய்து கொள்கிறோம். பகவத் கீதா வாக்கியம் – நீயே உனது நண்பன் உனது விரோதியும் கூட. மேலும் அவினாஷி தத் வித்தி என்ற கீதையில் ஆத்மாவை அழிக்க முடியாது ஆத்மா இந்த பிரகிருதியை அழிக்கவல்லது என்று கூரபட்டுலதால் ஆத்மா இயற்கையில் சர்வ வல்லமையும் படைத்தது என்று அறியலாம் [ஜெயஸ்ரீ அவர்கள் சுட்டிக்காட்டிய விஞ்ஞானமயம்]

    – த்வா சுபர்ண சாயுச சகாய சமானம் வ்ரிக்ஷம் பரிசாஷ்வ ஜடே தயோர் அன்யாஹ் பிப்பலம் ஸ்வாத் வட்டி அனச்னான் அனா அபி சக
    (முண்டக உபநிஷத்)
    என்பதன் மூலம் ஜீவாத்மா கர்மாவின் பலனை அனுபவிக்கிறான், பரமாத்மா வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறான் (மரக்கிளையில் இரு பறவைகள், ஒன்று பழங்களை (பலன்களை) தின்கிறது, மற்றொன்று பார்த்துக்கொண்டிருக்கின்றது]

    முன் ஜன்ம வினை என்று நான் சொல்லவில்லை – எனக்கு அதில் பெரிதாக உடன்பாடு இல்லை [அது வழக்கில் பேசுவதற்குத்தான் ஹேதுவாக இருக்கும், உண்மையில் அப்படி இல்லை ]

    இந்த முன் ஜன்ம வினை என்பதெல்லாம் பகவான் குடுததுமில்லை – இந்த ஜன்மம் என்பதும் பகவான் சிரமேற்கொண்டு கொடுப்பதுமில்லை – ஆத்மா நித்யம் என்று கூறியபின்னர் ஜன்மம் என்பது உங்கள் பயணத்தின் ஒரு பரிமாணமே, ஜென்மத்தை ஏற்படுத்திகொல்வதே நாம் தான் – எப்படி குடிகாரனான ஒருவன் குடல் வேகுவதற்கு தானே காரனமாகிரனோ அது போலவே நமது ஜன்மத்துக்கும் நாமே முக்கிய காரணமாகிறோம். ஆத்மா ஞானமயமானது என்கிறோம், ஆத்மா வல்லமை கொண்டது என்கிறோம் இப்படி இருக்க இந்த ஜன்மம் வராமால் அதனால் பார்த்துக்கொள்ள முடியாதா என்றால் முடியும் என்று தான் ஆகிறது

    கடுவுளாக பார்த்து இந்தா பத்து ஜன்மம் பிடி கழ்டப்படு, கூத்தாடு, இழ்டப்படி பேசு என்றெல்லாம் செய்வதில்லை – நாமே காரணமாகிறோம், காரியம் விளைகிறது அனுபவிக்கிறோம் அவ்வளவு தான்

    ஒன்றாய் இருந்த கடவுள் பலவானான் என்றால், ஒன்றாய் விளங்கும் பலவானான் என்று கொள்ள வேண்டும் – இப்படி இருக்கயஈல் வேறுபாடு என்பது உண்டானதற்கு கடவுள் முக்கிய காரணம் இல்லை, வேறுபாட்டிற்கு நாமே காரணம் – இந்த வேறுபாடு தான் [நல்ல செயல் அல்லது தீய செயல், அல்லது இவ்விரண்டுமே இல்லாத தன்மை] இதற்கேற்ப காரியம் விளைகிறது [effect]. அந்த காரியத்தை நீங்கள் ஜன்மம் என்றும், வினை என்றும் கூறினால் என்ன செய்வது

    ஒருவன் எப்படி பாலானாக இருக்கிறான், பிறகு வாளிபனாகம் பொது பாலானாக இருந்தபோது செய்த பலவற்றை மறக்கிறான் [12th சரியாக படிக்கவில்லை, சரியான மேற்படிப்பு படிக்க முடியவில்லை, வேலை சரியாக கிடைக்கவில்லை – என்ன செய்கிறான் தானே அதற்க்கு காரன் என்பதை மறந்து – என்ன படிச்சு என்ன பிரயோஜனம் வேலையே கிடைக்கல, இந்தியாவுல என்னதான் பண்றது என்று சலித்து கொள்கிறான் ]. இப்படி விரக்தி ஏற்படுகிறது, கோவம் வருகிறது, தவறு செய்கிறான், தவறு வளர்கிறது, விரக்தியை மறைக்க குடிக்கிறான் . பிறகு வயோதிகத்தில் குடல் வேந்துபோகிறது – இதக்கு தனது குயட்ப்பழகத்தை எவ்வளவு பேர் காரணம் சொல்கிறார்கள் – ஐயோ குடல் வந்ததே சாப்பாடு சுத்தம் இல்லை, இந்தியாவிலே தண்ணி சுத்தம் இல்லை, காற்று சுத்தம் இல்லை ]

    இதில் சிலர் தனது தவறை உணர்ந்து திருண்டுகிரார்கள் – இளமையில் கழ்டப்பட்டு 12th இல் சரியாக படிக்கததர்க்கு ஈடு கட்டுகிறார்கள், குடிபழக்கம் தவேரன் உணர்த்து அதை விட்டு விட்டு மருந்து எடுத்துகொள்கிறார்கள் முதுமையில் நிம்மதியாக இருக்கிறார்கள்

    இது போலத்தான் ஆன்மாவின் பயணமும் – பகவானே எல்லாத்துக்கும் காரணம் என்பது உண்மை – பகவான் சாதாரண காரணம் தான் [அதாவது நான் இந்த பதில் எழுதுகிறேன் அதற்க்கு நான் காரணம், நான் வர காரணம் எனது பெற்றோர், அவர்கள் இந்த பதிலுக்கு காரணம் அவார்களா மாட்டார்கள்] அது போலதான் ஈஸ்வரன் இல்லாமல் எதுவும் இல்லை அனால் அவனை குறை கூறுவது நமது அறியாமையின் எல்லை

    நாம் பல இடத்தில் ஜன்மாந்திரப் பாவம், பாவ மூட்டை, பகவான் தண்டனை தருகிறான் என்றெல்லாம் படிக்கிறோம் – இதெயெல்லாம் சற்றே தள்ளி வைத்துவிட்டு கொஞ்சமாக காரண காரிய லக்ஷ்ணத்தின் படி {cause and effect therory] “logical” ஆகா யோசித்தால் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் – பதில் கிடைக்கும் என்று நம்பினால் தான் கிடைக்கும் – ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு பதில் கிடைக்கலாம்

  8. நிகழ்ச்சியில் பங்குபெற்ற திரு அரவிந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள்

  9. திரு களிமிகு கணபதி அவர்களே! உங்களது யோசனைக்கு மிகவும் நன்றி. தாங்கள் கூறிய யோசனையை ஏற்பது மிகுந்த மகிழ்ச்சியே. உங்களைப்போன்ற அன்பர்களின் தூண்டுதல் உத்ஸாகத்தை அளித்தாலும், அடியேன் நம் பெரியோர்கள் கூறிய மேற்கோள்களிலிருந்துதான் பதிலளித்தேன் என்பதையும் அன்புடன் தெரிவிக்கிறேன்.

    பல பெர்யோர்களின் உரையிலிருந்து அறிந்தவற்றைக் கொண்டு முடிந்தவரை தாங்கள் எழுப்பிய வினாக்களை எடுத்துக்கொள்ள முயல்கிறேன். வணக்கம்.

  10. அய்யாக்களே

    இந்த விதி விசயத்துக்கும் தமிழ்ஹிந்துவுக்கும் என்ன தொடர்பு? இது அரவிந்தன் நீல்கண்டன்னின் தனிப்பட்ட ப்ளாக்கா? இதை நீலகண்டன் அவரது தனி ப்ளாக்கில் போட்டிருந்தால் அது வேறவிஷயம். ஏன் தமிழ்ஹிந்து வலையில் போடுகிறார்? இதே போல நானும் எதிலாவதுகலந்து கொண்டு எழுதி த்ந்தால் போடுவீர்களா?

    அ ஆ

  11. சென்றதினி மீளாது மூடரே என்றார் பாரதி. விதி என்று வெறுமனே உக்கார்ந்து இருப்பவனுக்கு உண்ணச் சோறும் கிடைக்காது என்பதுவும் பாரதியின் வாக்கே.
    ஆனால் நடந்து முடிந்தவைகளையே (பெரும்பாலும் துன்ப நிகழ்வுகள்) நினைத்துக் கொண்டிருந்தால் நடக்கவேண்டியவை நடக்காமல் போய்விடும் என்பதாலேயே விதியின் மேல் பழி சுமத்தி மறந்துவிடுகிறோம். ஆனாலும் மனித வாழ்க்கை சக்கரம் ஏதோ ஒரு நியதிக்குட்பட்டுதான் இயங்குகிறது. என்பதும் மறுக்க முடியாத உண்மையே. சிலநேரங்களில் நாம் செய்யும் காரியங்கள் வெற்றியடைந்தால் நமது திறமைஎன்று மார்தட்டுகிறோம் . தோல்வி என்றால் மற்றவர் மீதும் விதியின் மீதும் பழி சுமத்துகிறோம் . இதை உணர்ந்து தான் பெரியோர் விதியின் வழி மதி செல்லும் என்றாரோ.

  12. ஐயா வணக்கம்
    விதி என்பது இல்லை என்றல் கடவுள் என்பதும் இல்லை யன்று தான ஆகும்.

    விதி , கடவுள் தனியாக புரியும் படி விளக்கி கூறுங்கள்

  13. “நடவாதது என் செய்யினும் நடவாது, நடப்பது யார் தடுத்தாலும் நில்லாது. அவரவர் வினைக்கேற்ப ஆங்காங்கிருந்து அவன் அட்டுவிப்பன், ஆதலின் மௌனமாயிருத்தல் நலம்” என்றார் மகரிஷி ரமணர். விதி என்பது முடங்கிக் கிடந்து விடிவைத் தேடாதிருப்பதற்கான தடையல்ல. நிலைமையை எடுத்துச் சொல்லி அதற்கேற்ப பயணப் பாதையை வகுத்துக் கொள்ள ஒரு வழிகாட்டி. விதியை மதியால் வெல்லலாம் என்பது சாத்தியமே.

    தெய்வத்தானா காதெனினும் முயற்சி தன்
    மெய்வருத்தக் கூலி தரும்.

    இதற்கு நாத்திகர்கள் தரும் பொருள் தெய்வத்தால் ஆகாது என்று வள்ளுவரே சொல்லிவிட்டார் என்பதாகும். அது முட்டாள்தனமான வாதம், நாத்திகம் போலவே! தெய்வம் விதியை வகுத்தது. இது செய்யின் இதுவே விளைவு என்பது விதியின் அடிப்படைக் கோட்பாடு. தெய்வம் நியாய தர்மங்களுக்குக் கட்டுப்பட்டது. தான் வகுத்த விதிகளைத் தானே மீறாது. விதிக்கோட்பாட்டின் படி இன்பமே இல்லாத ஒருவன் உழைப்பின் மூலம் செல்வமும், பிரார்த்தனையின் மூலம் இன்பமும் பெறுவது செய்த வேலைக்குக் கூலி தருவது போன்றது. முயற்சியின்றிக் கிடைக்கும் இன்பங்கள், வசதிகள் (பரம்பரைச் சொத்து, லாட்டரி பரிசு etc) PF, Gratuity, சேமிப்பு இவை கொண்டு ஒய்வு காலத்தை இன்பமாகக் கழிப்பது போல முன்வினைப்பயன் மூலம் கிடைக்கும் இன்பங்கள்.

    ஹரிணபி ஹரேணபி ப்ரம்மணாபு ஸுரைரபி| லலாட லிகிதா ரேகா ப்ரிமாஷ்டும் நசக்யதே|| என்பது தர்ம சாஸ்திர விதி.
    திருமால், ஈசன், பிரம்மா, மற்ற தேவாதிதேவர்கள் யாராயினும் விதி என்று எழுதியதை மாற்ற முடியாது என்பது பொருள். ஆக மிகுந்த அநியாயம் செய்த ஒருவன் மிகுந்த துன்பப்பட வேண்டும் என்ற விதியை மாற்றி துன்பத்தைத் துடைத்து ஏறிந்து இன்பம் மட்டுமே தருவது முடியாது. ஆனாலும் பிரார்த்தனை, உழைப்பு இவற்றுக்கேற்ப பலன் சற்றே மாறும்.

    லக்ஷ்மி வசீகரண சூர்ண சகோதராணி| தத் பாத பங்கஜ ரஜாம்ஸி சிரம் ஜயந்தி|| யானிப்ரணாம மிளிதானி ந்ருணாம் லலாடே| லும்பந்தி தாத்ரு லிகிதானி தூக்ஷரானி||
    திருமகளை வணங்குவோர் விதி பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அவள் விதியின் எழுத்துக்களை [த]ன் காலால் தேய்த்து அழித்து விடுவாள் என்பது பொருள்.

    இதென்னய்யா கலாட்டா? ஒரு சுலோகம் முடியாது என்கிறது. வேறொரு சுலோகம் முடியும் என்கிறது. இந்திய கிரிமினல் சட்டத்தை விடவும் குழப்பமாக இருக்கிறதே என்று பலரிடம் விசாரித்தேன். ஒருவர் புட்டபர்த்தி சாய்பாபாவின் நிறுவனம் வெளியிடும் சனாதன சாரதி என்ற புத்தகம் கொடுத்தார். அதில் விதி பற்றி பாபா ஆற்றிய உரை இந்தக் குழப்பத்துக்கு விடை தந்தது.

    அதாவது ஒருவர் 500 ரூபாய் அளவுக்கு குற்றம் செய்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் அந்த 500 ரூபாய் பெறுமானத்துக்கு துன்பம் அனுபவிக்க வேண்டும். அந்த 500 ரூபாயை அவர் 1 ரூபாய் காசுகளாகச் சுமந்து செல்வார். சுமை அதிகம். துன்பம் அதிகம். பிரார்த்தனை, குருவின் அருள், இவையெல்லாம் அந்த 500 ஒரு ரூபாய் காசுகளை மாற்றி ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டாகக் கொடுத்து விடுவது போன்றது.

    கணக்குப்படி சுமப்பது 500 ரூபாய் தான். ஆனால் சுமை குறைந்து, அதனால் துன்பம் குறைந்து, நிம்மதி பெறுவது பிராத்தனையின் பலன், உழைப்பின் ஊதியம்.

    எல்லாம் இயற்கையால் நடக்கிறது என்பர். பிறவியிலேயே சிலர் ஊனத்தோடு பிறப்பதன் காரணம் என்ன? ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழத்தை பிறக்கும் என்பது இயற்கை. பல ஆண்களும் பெண்களும் பல ஆண்டுகள் குழந்தையே இல்லாமல் இருக்கிறார்களே? இது இயற்கையின் பாரபட்சமா? நாத்திகம் விடை தராது. ஏனென்றால் அதற்கு விடை தெரியாது. சரியாக விடையைத் தேடும் முறையையும் நாத்திகம் அறியாது. (கவியரசு கண்ணதாசன்)

    சோதிடம் என்பது ஒரு வழிகாட்டி போன்றது. இன்று +2 படித்துவிட்டு 10வது முதல் MBA வரை படித்தோர்க்கு career counseling செய்யப்படும் என்று போர்டு மாட்டிக்கொண்டு திரியும் agencyகள் போல, 3 மாதம் தபால் மூலம் பயிற்சி முடித்துவிட்டு சோதிட வித்வான், பரிகாரச் செம்மல், ஆரூடச் சக்கரவர்த்தி என்று கூத்தாடும் குறைகுடங்களால் தான் சோதிட சாத்திரமே குற்றவாளிக் கூண்டில் நிற்கும் நிலை வந்திருக்கிறது.

    எதையும் மறுப்பதே அறிவுடைமை என்று அறியாமையை மூலதனமாகக் கொண்டு வாதிடும் நாத்திகம் இதனை ஒப்புக் கொள்ளாது. தவத்திரு வாரியார் சுவாமிகளும், தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் நாத்திக வாதங்களை மேடைதோறும் சவால் விட்டுத் தவிடு பொடியாக்கினர். நாத்திகத்தை எதிர்த்து வாதாடி ஆத்திகத்தை நிலைநாட்டி மக்களை நல்வழிப்படுத்த இன்று இருக்கும் கற்றறிந்த பெரியோர் எவரும் முனையவில்லையோ என்று வருந்துகிறேன்.

    @ அமாவாசை ஆதிரை: சோதிடம் இந்து மதம் சம்பந்தப்பட்டது. நம் வழிச் சோதிடத்தை மேடை தோறும் மட்டம் தட்டிவிட்டு Sun Signs எனப்படும் ஆங்கில/கிறித்தவ சோதிடத்தை விஞ்ஞான வடிவமாகப் புகழும் நாத்திகக் கூட்டத்தின் கருத்துக்களை முறியடிக்கும் எந்த விஷயமும் தமிழ் இந்துவுக்கு பொருத்தமானதே. நீவிர் இந்து மதம், சமய இலக்கியம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு வந்து இங்கே எழுதுங்கள். பிரசுரிக்கவில்லையெனில் காரணம் கேளுங்கள், தக்க காரணம் இல்லையெனில் சண்டைக்குப் போங்கள்!! அவர் எழுதினால் போடுகிறீர்க்களே நான் எழுதினால் போடுவீர்களா என்று எழுதாமலேயே கேட்பது சரியான approach அல்ல. யார் எழுதுவது என்பதைவிட, எதுபற்றி எவ்வளவு தெளிவாக எழுதுகிறீர்கள் என்பதே முக்கியம். வாழ்க!

    [Edited and published]

  14. லக்ஷ்மி வசீகரண சூர்ண சகோதராணி| தத் பாத பங்கஜ ரஜாம்ஸி சிரம் ஜயந்தி|| யானிப்ரணாம மிளிதானி ந்ருணாம் லலாடே| லும்பந்தி தாத்ரு லிகிதானி தூக்ஷரானி||
    திருமகளை வணங்குவோர் விதி பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அவள் விதியின் எழுத்துக்களை தன் காலால் தேய்த்து அழித்து விடுவாள் என்பது பொருள்.

    “தென் காலால்” என்று தட்டெழுதி விட்டேன். தன் காலால் என்பதே சரி. Moderators please correct this.
    With much Thanks,
    Arun.

  15. அமாவாசை ஆதிரை

    இது ஒன்றும் இந்துத்வத்துக்கு எதிர்வாதம் இல்லை – அரவிந்தன் இதை உளவியல் ரீதியாக பேசி உள்ளார் – ஹிந்து சாஸ்திரத்தில் வழியாக பேசுபவராக ஒருவர் இருந்தாலும் அரவிந்தன் கூறிய கருத்தையே அவரும் கூறி இருப்பார் – விதியையும் கர்மாவையும் போட்டு நாம் குழிப்பிக் கொள்கிறோம் என எனக்கு தோன்றுகிறது

    எனது ஒரே ஒரு கவலை இதை ஹிந்துத்வத்திர்க்கு எதிராக இதை பயன் படுத்தக் கூடாதே என்பது தான் – விஜய் டிவி அடிக்கும் லூட்டி நாம் அறிந்ததே

    சங்கரரோ, ராமானுஜரோ, மத்வரோ விதியை பற்றி பேசியதில்லை – கர்மாவை பற்றி தான்

    கர்மா என்பது நான் செய்யும் ஒரு செயலுக்கு பொறுப்பேற்று அதற்குண்டான பலனை அடைவது – நல்ல படிச்சா நல்ல மார்க் இல்லேன்னா கம்மி மார்க் 🙂
    விதி என்று நாம் வழக்கில் பயன்படுத்தும் அர்த்தம் முழுக்க முழுக்க ஒரு ஆபிராமிய கொள்கை – இதை நாம் ஏற்றுக் கொண்டால் முதல் பாவத்தய்ம் கர்ஹரையும், பைபிள் என்னும் ஒரு அக்கபோரையும் ஏற்றுக் கொள்ள வேண்டி வரும் பரவா இல்லையா

    விதி என்பதற்கு (rule) என்று அர்த்தம் கொண்டால் தான் சரியாக வரும் – எல்லாம் விதிப்படி நடக்கும் என்றால் – எல்லாம் கர்ம விதிப்படி நடக்கும் – அதாவது எல்லாம் நாம் செய்யும் செயலை பொறுத்தே நடக்கும்

    விதியை ஆபிராமிய கொள்கை சொல்லும் அர்த்தம் படி பார்த்தால் – பகவத் கீதையே ஒரு அபத்தம் ஆகி விடும் – இதில் கீதாசார்யன் வரிக்கு வரி கர்ம குரு (காரியம் செய்), அதன் பலனை தாகம் செய் என்று சொல்கிறார்

    எல்லாம் முன்னமே சொன்னபடி தான் நடக்கும் என்றால் எதற்காக காரியம் செய்ய வேண்டும் – சும்மா மூலையில் முடங்கி கிடப்போம் – பணம் வரும்ன வரும் என்று சொல்லும் தெய்ரியம் ஒங்களுக்கு இருக்கா – வேண்டும் என்றால் முயன்று பாருங்கள்.

    விதியை பயன் படுத்தி வரும் ஸ்லோகங்கள் என்ன சொல்கின்றன – நீ இப்பொழுது ஒரு நல்ல காரியத்தை செய்தால் அது நீ முன்னம் செய்த ஒரு தீய காரியத்தின் விளைவை குறைக்கும் (அல்லது ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை கொடுக்கும்) – இதை இப்படி அர்த்தம் கொண்டால் தான் சரி – இல்லேயால் அது நூறு கொலை செய்துவிட்டு அசால்டா பாவ மன்னிப்பு கேட்பதற்கு சமானம்

    தமிழ் ஹிந்துவில் பலர் பங்கு பெற்ற நிகழ்சிகளை பற்றி பல கட்டுரைகள் வந்துள்ளன

    சமீபத்தியவை – ஜடாயுவின் ஊட்டி நிகழ்ச்சி பற்றி இரண்டு கட்டுரைகள், ஹரன் பிரசன்னா கோவை தமிழ்மாநாடு சம்பத்தப்பட்ட ஒரு கட்டுரை

  16. Dear Jagan
    //
    விதி என்பது இல்லை என்றல் கடவுள் என்பதும் இல்லை யன்று தான ஆகும்.

    விதி , கடவுள் தனியாக புரியும் படி விளக்கி கூறுங்கள்
    //

    You are right without the concept of Vidhi (as it is i vogue today) no abrahamic God exists.

    without getting too much in to it – let me put it this way

    How can God and Destiny be same or dependent?
    If God were destinity then who are you? in the case of abarahamic religion – Son of God will become son of destiny or Destiny junior

    Upanishads say God is Sat Chit Anandam

    Sat means truth, existence – how can destiny be truth, existence
    Chit – means Knowledge, how can destiny be knowledge
    Ananda means bliss – how can destiny be bliss
    or Anantham means endless – how can destiny be endless

  17. வணக்கம்

    சகோதரர் சாரங் அவர்களின் விளக்கம் மிக தெளிவு.

    கணித விதியில் நூறு செண்டி மீட்டர்கள் ஒரு மீட்டர் என்பது கணித விதிப்படி சரிதானே? எனில் இது விதிக்கப் பட்டது. இப்போது ஒருவர் கையில் ஒரு சிதைந்து போன அளவுநாடாவின் ஒரு பகுதி அதாவது வெறும் முப்பது செண்டி மீடர்களே உள்ள பகுதி கிடைத்தால் அவரின் மனம் தன்னிச்சையாகவே இது அளவுநாடா என்பதையும் அதன் முழு பரிமானத்தினையும் அவரது மனக்கண்ணில் ஒரு நொடி உணர்ந்துவிடும். இது விதி எனில்

    திடீரென வியாபாரத்தில் நஷ்டம், அல்லது வாழ்வின் கஷ்டம், வேறு துயரங்கள் என்று வந்தால் சிதைந்த அளவுநாடாவை போல நமக்கும் ஆகிவிட்டது? அப்படியென்றால் மீதமுள்ள வாழ்க்கையும் நமக்கு தெரிந்து ஆகவேண்டும், விதிப்படி. அதுதானே விதி.

  18. வணக்கம்

    சகோதரர் சாரங் அவர்களின் விளக்கம் மிக தெளிவு.

    கணித விதியில் நூறு செண்டி மீட்டர்கள் ஒரு மீட்டர் என்பது கணித விதிப்படி சரிதானே? எனில் இது விதிக்கப் பட்டது. இப்போது ஒருவர் கையில் ஒரு சிதைந்து போன அளவுநாடாவின் ஒரு பகுதி அதாவது வெறும் முப்பது செண்டி மீடர்களே உள்ள பகுதி கிடைத்தால் அவரின் மனம் தன்னிச்சையாகவே இது அளவுநாடா என்பதையும் அதன் முழு பரிமானத்தினையும் அவரது மனக்கண்ணில் ஒரு நொடி உணர்ந்துவிடும். இது விதி எனில்

    திடீரென வியாபாரத்தில் நஷ்டம், அல்லது வாழ்வின் கஷ்டம், வேறு துயரங்கள் என்று வந்தால் சிதைந்த அளவுநாடாவை போல நமக்கும் ஆகிவிட்டது? அப்படியென்றால் மீதமுள்ள வாழ்க்கையும் நமக்கு தெரிந்து ஆகவேண்டும், விதிப்படி. அதுதானே விதி

  19. சபாஷ் ,அருண் பிரபு …அருமையான விளக்கம் தந்தீர்கள் ..பாராட்டுகள் ….

  20. விதி என்பது வேறு ,கர்மா என்பது வேறு .கர்ம வினையை ஊட்டும் கருவி என்று வேண்டுமானால் விதியை சொல்லலாம் …

  21. கர்ம வினை என்பது செயல்பாட்டின் எதிரொலி. விதி என்பது செயல்பாட்டுக்கு என்ன எதிர்விளைவு என்கிற சட்டம். சோதிடம் இது இதனால் வந்தது என்கிற post mortem + இதனை இதனால் சரிசெய்யலாம் என்கிற ஆலோசனை.

    ஒரு எடுத்துக்காட்டு உதவும் என்று தோன்றுகிறது.
    மகிழ்வுந்து(car) இருக்கிறது. அதை சாலையில் ஓட்டினால் ஊர் போய்ச் சேரலாம். நடைபாதையில் ஓட்டினால் சிறை சென்று சேரலாம்.

    ஓட்டுவது கர்மவினை. எங்கே ஓட்டினால் எங்கே போகலாம் என்பது விதி. சிறை சென்றவன் ஏன்னே தெரியலே ஜெயில்ல இருக்கேன் என்று வருந்தும் போது பிளாட்பாரத்தில் காரோட்டி பலரை துன்புறுத்தியதால் இங்கிருக்கிறாய். சிறையிலே நன்னடத்தை காட்டினால் தண்டனை குறையும் என்பது சோதிடம்.

    கர்ம வினையை விதி ஊட்டுவதில்லை. முற்பகல் செய்தது பிற்பகல் விளைகிறது. முற்பகல் செய்த்து பெரும்பாலும் நினைவில் இருப்பதில்லை. விதி என்பது சட்டம். குற்றம் புரிந்தால் சட்டத்தின் கைகளில் சிக்குவோம் (பொது நியதி ஐயா). தண்டனைக்குச் சட்டம் (விதி) காரணமல்ல. நம் செயல்களே காரணம்.

  22. கடினமான சிக்கல்களையும் முரண்பாடுகளையும் புதிர்களையும் புரிந்து கொண்டு முடிச்சுகள் எளிமையாக அவிழ்கபடும் இன்றைய காலகட்டத்தில் விதி மற்றும் இறைவன் என்பதை குறித்த திரு.அரவிந்தன் நீலகண்டனால், நீயா நானாவில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அப்படியே ஏற்றுகொள்கிறேன். அவை நம்மை ஆசுவாசபடுத்தி கொள்ள உதவும் சாதனங்களே என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

    ஆனால் அவைகளே உண்மை மற்றும் அதற்க்கு எதிரான கொள்கைகள் மொத்தமும் தப்பு என்று யாராவது உளறி அதற்காக சண்டை போடவும், செத்து போகவும்,சாகடிக்கவும் யாராவது தயாராகும் போதே கலர் கலரா பிரச்னை தலைதூக்குகிறது.

    கர்மவினை என்பதன் விளைவால் நமக்கு இந்த ஜென்மத்தின் விதி நிர்ணயித்து கொள்கிறோம் என்றும் எடுத்து கொள்ள முடியவில்லை.அப்படி எடுத்துகொள்ளும் பட்சத்தில் நாம் இன்று அனுபவிக்கும் சுக துக்கங்கள்,நல்லது கேட்டது செய்தல் போன்ற அனைத்தும் போன ஜென்மத்தின் பலாபலன்கள் என்று கொண்டால்,இந்த ஜென்மத்திற்கு என்று எந்த தனித்துவமும் இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது!!..

    ஆகவே குரு வசிஷ்டர் போன்ற இறை மறுப்பு நாத்திகவாதிகள், என் ஏக இறைவன் ஸ்ரீ ராமபிரானுக்கு உரைத்த ஞான தேடலே என் முதன்மையான நம்பிக்கையாக கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி ஏற்கிறேன்.

  23. விதி என்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை உடல் உண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே மேலே … கண்ணதாசன் சொன்னதுதான். பிறவி ககுருடு , செவிடு, கைகால், விளங்காமை,தலைகள் ஒட்டிப்பிறக்கும் இரட்டைக்குசந்தைகள்,இரண்டுக்கும் மேற்ப்பட்ட கைகால் உறுப்புகளுடன் பிறக்கும் பிறவிகள் கடவுளின் விதிப்படித்தான் எனில், வேண்டாத தேவையற்ற உறுப்புகள் என வெட்டி எடுத்து வாசவைக்கும் மருத்துவர்களால் விதி என்பது கேள்விக்குறியாக நிற்கிறது? வாய்ப்பளித்த தளத்திற்கு நன்றி I

  24. நானும் அந்த விஜய் டி.வி நிகழ்ச்சி பார்த்தேன்… அரவிந்தன் நீலகண்டன் கடைசியில் பிதற்றியதாகவே எனக்கு படுகிறது..

    ஏனா, எல்லாமே உளவியல் ரீதியா பார்க்கிறதுங்கறது, முழுமை இல்லாத வாதம்.. உதாரணத்துக்கு, ஏன் மற்றவர்களால், அரவிந்தன் மாதிரி சிந்திக்க முடியவில்லை?

    மேற்கத்திய உளவியல், வெறும் வெளிப்புறமாக பார்ப்பதுதான்..

    நம் சித்தர்களின் சித்திகளை, உளவியல் ரீதியாக, அரவிந்தன் எப்படி விவரிப்பார்..

    ஜாதகத்தில் கட்டங்கள் அமைந்தபடியே, அந்தந்த மனிதர்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகள் நடக்கின்றனவெ.. எப்படி?

    சித்தர்கள் சொன்ன வாக்கு பலிக்கின்றனவே… அது எப்படி?

    எது எல்லாமே உளவியலாகத்தான் அரவிந்தன் நீலகண்டன் பார்க்கிறாரா?

    அது சரி.. உளவியல் என்று எளிதாகவே சொல்லிவிட்டீர்களே.. அந்த உளவியல் எப்படி உருவாகின்றன..

  25. ஜனாப் ரஃபி!
    உங்கள் கருத்து நீங்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்பதையும் ஏதோ மறுக்க வேண்டிய கட்டாயத்தில் விதியை மறுத்துப் பேசத் தலைப்படுகிறீர்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. விதியில்லை வேதமில்லை, உடலும் உள்ளமும் கொண்டு முன்னேறு என்று சொன்ன அதே கண்ணதாசன் தான் “உடைத்த கல்லில் ஒன்று தெய்வம்,
    ஒன்று கோவில், ஒன்று வாசல்; இறைவன் படைப்பில் பேதம் இல்லை, இடத்தைப் பொறுத்து எதுவும் மாறும்” என்று பாடியுள்ளார். ஏன் என்ற கேள்வி இங்கு கேட்க வேண்டும். இடத்தைப் பொருத்து எதுவும் மாறும் எனில், ஏன் படைப்பில் பொதுவான முடிவுகள் வருவதில்லை? அதே போலத்தான் ஒரே நாள் ஒரே நேரத்தில் பிறந்த இருவர் ஒரே மாதிரி வாழ்க்கை வாழ்வதில்லை. விதி என்பதும் வினைப்பயன் (கர்மபலன்) என்பதும் இவற்றை விளங்கிக்கொள்ளத் தலைப்படுவோர் பகுத்தறிந்த முடிவுகள். குருடு, செவிடு கை கால் விளங்காமைக்குத் தாங்கள் காரணம் சொல்லவில்லை. இரண்டுக்கு மேற்பட்ட உறுப்புடன் பிறப்போர்க்கு தேவையற்ற உறுப்புகளை வெட்டி எடுத்து வாசவைக்கும் (வாழவைக்கும் என்பதைத் தான் அப்படித்தட்டி இருக்கிறீர்கள் போலும்!) வைத்தியர்களைக் காட்டி விதி கேள்விக்குறியாகிறது என்று மார்தட்டுகிறீர்கள். தேவை இருப்போரை வைத்தியம் செப்பனிடுவதால் அது எப்படி விதியைக் கேள்விக்குறியாக்கும்? இங்கே கேள்வி பிரச்சினைகள் எப்படி ச்மாளிக்கப்படுகின்றன என்பதல்ல? பிரச்சினைகள் ஏன் வருகின்றன என்கிற Root Cause Analysis. அடிப்படையைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவர்களே தடுமாறும் தளம் விதி பற்றிய விவாதம். இசுலாம் வருவதை இறைவன் தருவதாக ஏற்கச் சொல்கிறது. சோதிடத்தைத் தடை செய்துள்ளது. வருவது இறைவன் தருவது எனில் அதை மாற்றத்தலைப்படும் வைத்தியம் இறை மறுப்பா? (உரக்கச் சொல்லிவிடாதீர்கள்! ஃபத்வா கொடுத்துவிடப் போகிறார்கள்!!) விதி, வினைப்பயன் என்பதெல்லாம் சனாதன தர்மத்தின் கோட்பாடுகள். “தெய்வத்தானாகாதெனினும் முயற்சி தன்
    மெய்வருத்தக் கூலி தரும்” என்று பிரார்த்தனையின் பெருமையைச் சொன்ன வள்ளுவம் சனாதனத்தின் பிரதியே! ரஃபி அவர்களே! யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பதற்காகத் தெரியாத விஷயங்களில் கருத்துப் பேசி மற்றவர் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

  26. விதி என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவானது. ஆன்மீகத்துக்கு அடிப்படையான ஒன்று. இங்கு விதியைப் பற்றித்தான் விவாதமே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. நான் இசுலாத்தைப்பற்றியோ ஜோதிடத்தைப்பற்றியோ எழுதவில்லையே? முதலில் உங்கள் குழப்பத்தைத் தீர்த்துக்கொள்ளுங்கள் நண்பரே. நீங்கள் சொன்ன கண்ணதாசன் பக்தி போதையில் புத்தி போகையில் சொன்னது அதற்கு நான் பொறுப்பல்ல. விதியைப்பற்றி தெரிந்துகொள்ள எந்த யூனிவர்சிட்டியில் பட்டம்பெரவேண்டும்? // அடிப்படை தெளிவாகத் தெரிந்துகொண்டவர்களே தடுமாறும் தளம் விதிப்பற்றிய விவாதம் // இசுலாம் இதைப்பற்றி விவாதிப்பதே வீண் மனிதனுக்கு அந்த அறிவு இல்லை என தெளிவாகவே கூறிவிட்டது. நாத்திகமும் தன் தவறை உணரமுடியாதவனுக்குதான் தலைவிதி எல்லாம் தன் செயல் என தெளிவாகவே கூறிவிட்டது. கைவசம் தங்களிடம் உள்ள தெளிவாகத் தெரிந்தவர்களுக்கு ஏன் தடுமாற்றம்? பெயரைமட்டும் வைத்து ஜாதிமதங்களை எடைபோடாதீர்கள்.நான் மதச்சார்பற்றவன் மனிதநேயன். மற்றதை நாளை சந்திப்போமா அருமை நண்பர் அருண் பிரபு அவர்களே.

  27. It is waste to aruge on Vidi. Better all go to theatre and see film Vidhi acted by Hindu guy Mohan.
    Bye bye…

  28. நல்லது நடந்தால் அது கடவுளின் வேலை என்பீர்கள் , அதுவே கேட்டது நடந்தால் விதி என்று உளருவீர்கள். விதி என்றால் என்ன ? அதை யார் handle பன்னுக்கிறார் . அதுவும் கடவுலகதானே இருக்கும் . கும்பகோணத்தில் 90 பச்சிளங் குழந்தைகள் எரிந்து சாம்பலச்சே . அப்போது எங்கே சென்றார் கடவுள் ? விதி என்ற சொல்லை விட்டுவிட்டு உங்களால் வாதட முடியுமா ?

  29. Tamil Hindu Kudumbathai Serndha Anbargal T.V. nigalchigalil pangetral mun koottiye anaivarukkum therivikkumaaru panivudan vendugiren.Indha Kudumbathai aal pol thazhaikka cheidhu arugu pol veroondra seivadhu nam anaivarin kadamaiyagum.
    anbudan–va.somu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *