தமிழ் இந்துவில் உரையாடுங்கள் – பதில்கள்

நவம்பர், 2010

வாசக, வாசகியரே,

rishis-21

தமிழ் இந்துவில் உரையாடுங்கள்” என்ற புதிய பகுதியில் பல கேள்விகளை வாசகர்கள் கேட்டிருந்தார்கள். அதற்கான பதில்களை பல வாசகர்கள் அனுப்பி இருந்தார்கள்.

வாசகர்கள் அனுப்பிய கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே தரப்பட்டுள்ளன. உங்களுடைய உற்சாகம் வரவேற்கத் தக்கது.

இம்முறைக்கான உரைபொருள் பகுதி: அயோத்தி கோயில் மீட்பு

அதனோடு, பொதுவான கேள்வி பதில்களும் உண்டு.

————————————————————————————————

அடுத்த பகுதிக்கான உரைபொருள் பகுதி: கஷ்மீர் பிரச்சினை

இதற்கான கேள்விகளை நீங்கள் tamizh.hindu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது, இந்தப் பகுதியின் இறுதியில் உள்ள மறுமொழிப் பெட்டியிலும் உங்கள் கேள்விகளைத் தரலாம்.

மறுமொழிப் பெட்டியிலும் மின் அஞ்சலிலும் வரும் கேள்விகள் முழுதாகக் தொகுக்கப்பட்டு தனிப் பதிவாக வெளியிடப் படும்.

அடுத்த பகுதிக்கான கேள்விகள் வந்து சேரக் கடைசி தேதி: 12 நவம்பர் 2010.

————————————————————————————————

உரைபொருள் பகுதி:

இந்த மாத உரைபொருள்: அயோத்தி கோயில் மீட்பு

அயோத்தி குறித்த கேள்விகள்:

கேட்டவர்: திருமதி. ஜயஸ்ரீ கோவிந்தராஜன்

1. அயோத்தியில் மசூதியை இடித்தது சட்டப்படியும் தார்மீக ரீதியிலும் தவறில்லையா?

பதிலளித்தவர்: திரு. அரவிந்தன் நீலகண்டன்

பதில்: முதலில், இடிக்கப்பட்டது மசூதி அல்ல. அது ஒரு அன்னியப் படையெடுப்பாளன் கட்டிய கும்மட்டம் மட்டுமே. இரண்டாவதாக, கரசேவகர்கள் 1990 முதல் அரசாங்க இயந்திரத்தின் பல கரங்களால் நசுக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் வந்தனர்.

உதாரணமாக, அயோத்தி இயக்கத்தை கண்மூடித்தனமாக எதிர்த்து வந்த தி ஹிண்டு பத்திரிகையின் 3-11-1990 செய்தி அறிக்கை கரசேவகர்கள் மீது நடத்தப்பட்ட மனிதத்தன்மையற்ற தாக்குதலை குறித்து இவ்வாறு கூறியது:

அயோத்தியில் இன்று கண்டன பேரணி நடத்த தெருக்களில் வந்த கரசேவகர்களை மத்திய ரிஸர்வ் போலீஸ் சுட்டுக் கொன்றது. இந்த பத்திரிகையின் நிருபர் மட்டும் 17 சடலங்களைப் பார்த்தார். இந்த துப்பாக்கி சூடானது நிராயுத பாணிகளான கரசேவகர்கள் மீது அவர்கள் பஜனைகளும் பக்திப் பாடல்களும் பாடிக் கொண்டிருந்த போது முன்னெச்செரிக்கை ஏதுமின்றி நடத்தப் பட்டது.

அக். 30 ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு கரசேவகர்கள் காவல்துறையின் பாதுகாப்பை மீறி ராமஜென்மபூமி-பாப்ரி வளாகத்துக்குள் சென்ற போது நடத்தப்பட்டதாகும். ஆனா இன்று (2-11-1990) எவ்விதமான காரணமும் இன்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது.

நிராயுதபாணியான மக்களை இந்த துப்பாக்கி சூட்டின் மூலம் வேண்டுமென்றே கொலை செய்தது போல தென்படுகிறது….சில சிஆர்பிஎஃப் ஜவான்களே இந்த படுகொலைகளைப் பார்த்து கண்ணீர் வடிப்பதை காண முடிந்தது.”

கரசேவகர்கள் 1990 இல் மிகத்தெளிவாக அந்த கும்மட்டம் மீது ஏறிவிட்டனர். அவர்கள் நினைத்திருந்தால் அதை உடைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

இதனைத் தொடர்ந்து அங்கு பாஜக அரசாங்கம் உருவான போதும் கரசேவகர்கள் அமைதியாகவே இருந்தார்கள்.

உச்ச நீதிமன்றம் உயர்நீதி மன்றத் தீர்ப்பை விரைவில் கொடுப்பதாக சொல்லி தாமதப்படுத்தியது. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் 1992 இடிப்பை நீங்கள் பார்க்க வேண்டும்.

மசூதியே இல்லாத ஒரு கும்மட்டம். அதை அகற்ற உயிர் தியாகங்கள். அதற்காக குறைந்தது இருநூற்றைம்பது ஆண்டுகள் ஆவணப்படுத்தப்பட்ட ஹிந்து போராட்டங்கள். தேசம் விடுதலை அடைந்த பின்னர் ஓட்டுவங்கி அரசியல்வாதிகள் உட்பட அரசு இயந்திரத்தின் அனைத்து பிரிவாலும் காட்டப்பட்ட கோழைத்தனமான வஞ்சனை. இவை அனைத்தும் ஒரு தேசத்தின் மீதான ஒரு பண்பாட்டின் மீதான அடக்குமுறையாக இருக்கின்றன. இதற்கு எதிராக எழுப்பப்பட்ட ஒரு தார்மீக கிளர்ச்சி எச்சரிக்கை குரல்தான் கரசேவகர்கள் கும்மட்டத்தை இடித்தது.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தின் போது சட்டத்தை மீறிய குற்றவாளி தர்மத்தை அல்ல.

அதே நியாயம் கரசேவகர்களுக்கும் பொருந்தும்.

பதிலளித்தவர்: திரு. வரதராஜன். ஆர்.

பதில்: ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களே! குறைந்தபக்ஷம் 1949 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ராம ஜன்மபூமி ராமர் கோவிலில் வழிபாடு நடந்து வருகிறது. சூர்ய வம்ச க்ஷத்ரிய குலத்தில் தோன்றிய மரியாதா புருஷோத்தமன் தசரத ராமனுக்கு எழுப்பப்பட்டிருந்த ஆலயத்தை, வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளன் பாபர் இடித்து ஒரு மசூதி போன்ற கட்டிடத்தை அங்கு எழுப்ப முயற்சி செய்ததை, முறியடிப்பதற்காக இதுவரை 78 முறை போராடி சுமார் 3,75,000 ஹிந்துக்கள் பலிதானம் செய்திருக்கிறார்கள் என்பதையாவது நீங்கள் அறிவீர்களா?

சமூக அமைதி காக்கும் பொறுப்பு ஹிந்துவாகிய தங்களுக்கு இருப்பதை, ஹிந்து சமுதாயத்தின் பலவீனமாக இஸ்லாமியர்கள் நினைக்கிறார்கள் என்பதை விளக்க இரண்டு செய்திகள்: இஸ்லாமியர்கள் ஆட்சி காலத்தில் பொ.ச. 1000 ஆண்டு இருத்த ஹிந்துக்கள் எண்ணிக்கையிலிருந்து பொ.ச. 1526 ஆம் ஆண்டு ஹிந்துக்கள் மக்கள் தொகை எட்டு கோடி குறைந்திருந்தது எப்படி? நமது நாட்டிலுள்ள மூவாயிரத்திற்கும் அதிகமான கோவில்களை இடித்துவிட்டு இஸ்லாமிய வழிபாடு நடைபெறும் மசூதிகள் ஏற்படுத்தப்பட்டது எப்படி? தர்மத்தின் காவலனான ராமன் பிறந்த இடத்தில் மசூதி அமைத்தால் ஹிந்துக்கள் கோழைத்தனமாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

பதிலளித்தவர்: திரு. சகாதேவன்

பதில்: நீதிபதி கான்னின் கூற்றுபடி அது ஒரு மசூதி அல்ல. ஆகையினால் அதனை இடித்தது தர்மப்படி தவறல்ல.

2. சமூக அமைதிக்காக தீர்ப்பென்று எதுவும் வராமலே இன்னும் 100 வருடங்களுக்கு இந்தப் பிரச்சினையை இழுத்தடித்தால்தான் என்ன?

பதிலளித்தவர்: திரு. தஞ்சை வெ. கோபாலன்

பதில்: திருமதி ஜெயஸ்ரீ அவர்களே! உங்களது இரண்டாவது கேள்விக்கு விடை. நாம் படுத்தால் நிம்மதியாகத் தூங்க வேண்டும். ஒரு பிரச்சினை என்றால் அதனை எவ்வளவு சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமோ அத்தனை சீக்கிரம் முடித்துக் கொள்ள வேண்டும். பிரச்சினைகள் நூறாண்டு காலம் இழுத்துக் கொண்டே போனால் நமக்கு நிம்ம்கதி இருக்காது. சாகும் போதும், கவலையோடுதான் சாக வேண்டும். வழக்குகள் உடனடியாக முடிய வேண்டும்.நல்லதோ கேட்டதோ முடிவு என்று ஒன்று தெரிந்து விட்டால், அடுத்து நாம் செய்ய வேண்டியதைக் கவனிக்கலாம். பிறப்பு முதல் இறப்பு வரை இது போல ஒரு வழக்கில் காலத்தைச் செலவிட்டுவிட்டால், பிறப்பு என்பதே வேண்டாம் என்ற நிலை உருவாக்கி விடும். பஸ்ஸில் பிரயாணம் செய்கையிலும், தலையில் ரவை மூட்டையைச் சுமக்கும் அறியாமை நம்மை விட்டு அகல வேண்டும். சரிதானே திருமதி ஜெயஸ்ரீ அவர்களே.

பதிலளித்தவர்: திரு. வெங்கடேஷ்வரன். ஈ.

பதில்: அருமையான கேள்விகளைக் கேட்டு உள்ளீர்கள். அயோத்தி பிரச்சினையைக் காரணம் காட்டி ஜிகாதித் தொழிற்சாலையில் தீவிரவாதிகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். இந்தியாவெங்கும் வன்முறையை வளர்க்க ஒரு நியாயம் கற்பிக்கப்படும். பிரச்சினை தீர்ந்து போனால், அமைதி ஏற்படும்.

ஆனால், கம்யூனிசம், இசுலாம், கிறுத்துவம் போன்ற ஆபிரகாமிய மதங்களுக்கு எப்போதும் இதுபோன்ற பிரச்சினைகள்தான் பிராண வாயு. இந்தப் பிரச்சினைகள் இல்லாமல் போனால் அவை செத்துவிடும் என்பதால், அயோத்தி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர அவை விரும்பாது.

பதிலளித்தவர்: திரு. கிருஷ்ணக்குமார்

பதில்: திருமதி ஜெயஸ்ரீ அவர்களே அயோத்தியில் இடிக்கப்பட்டது மசூதி என்பது துஷ்ப்ரசாரம். அங்கே இடிக்கப்பட்டது ஒரு கட்டடம். அந்த கட்டடம் இடிக்கப்பட்டது சட்டப்படி தவறு. ஆனால் தார்மிகப்படி எப்படி தவறு என்கிறீர்கள். பிரச்சினையை இழுத்து அடிப்பது சமுக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால் இந்த பிரச்சினையை இழுத்து அடிக்க கூடாது.

பதிலளித்தவர்: திரு. தஞ்சை வெ. கோபாலன்

பதில்: நமக்கு உரிமையான நிலம் இருக்கிறது. அது ஒரு புண்ணியத்தலத்தில் அமைந்திருந்ததால் அதில் எவரோ ஒருவர் வந்து ஆக்கிரமித்து கடை ஒன்றைக் கட்டி வியாபாரம் செய்யத் தொடங்கினார். அது நமது கவனத்துக்கு வந்தபோது, அந்த இடம் நமக்குச் சொந்தம், நீங்கள் கடையை எடுத்துக் காலி செய்யுங்கள் என்று சொன்னால் அவர் மறுத்து, இல்லை இல்லை இது என் இடம்தான் என்கிறார். நாம் பஞ்சாயத்துக்குப் போகிறோம். அவர் மசியவில்லை. நீதிமன்றம் போகிறோம். அது நீண்டு கொண்டே போகிறது. நமக்கு வயதும் ஆகிவிட்டது. நமக்குப் பின் நம் பிள்ளைகளுக்கு இந்தத் தலைவலியைக் கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டுமா? நீதிக்கும், நேர்மைக்கும் கட்டுப்படாத அந்த மனிதனுக்குப் பாடம் புகட்ட வேண்டுமானால், நாம் நம் சதை வலியைப் பொறுத்து அவன் கடையை அகற்றிவிட்டு நம் இடத்தை ஆர்ஜிதப்படுத்திக் கொள்கிறோம். இதில் என்ன தப்பு திருமதி ஜெயஸ்ரீ அவர்களே!

கேட்டவர்: திரு. ஈஸ்வரன், பூலாம்பட்டி, பழனி

1. அயோத்தியில் முதன்முதலில் ஸ்ரீ ராமருக்கு ஆலயம் கட்டியவர் யார்? இது பற்றி விளக்கமாக யாராவது விளக்க வேண்டுகிறேன்.

பதிலளித்தவர்: திரு. கே. சுப்பிரமணியன்

பதில்: இந்துக் கோயில்களின் வரலாறு என்ன என்பதற்கான ஆராய்ச்சிப்பணிகளில் இந்திய அரசு என்றும் ஆர்வம் காட்டியதில்லை. அவையெல்லாம் புறக்கணிக்க வேண்டியவை என்ற எண்ணம்தான் நேருவிய கலாச்சாரத்தால் அரசுக் கொள்கையாக இருக்கிறது. அதனால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான பழமையான கோயில்கள் பற்றிய வரலாறுகள் வெளியே தெரிவதே இல்லை.

உதாரணமாக, தமிழ் நாட்டில் ஒரு பிரம்மாண்டமான கோவில் இருக்கிறது. அந்தக் கோயிலை யார் கட்டினார்கள் என்பது தெரியாமல் இருந்தது. பூதம் கட்டியது, இந்திரன் வந்து கட்டினான் என்று ஏதோ சில அப்பாவிக் காரணங்களை அந்த ஊர் மக்கள் சொல்லிக்கொண்டு தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டார்கள். இத்தனைக்கும் அது பிரம்மாண்டமான கோயில். ஆனால், இருநூறு ஆண்டுகளுக்கு முன்புதான் அந்தக் கோவிலை யார் கட்டியது, அது எவ்வளவு பழமையானது என்று ஆங்கிலேயர்கள் கண்டறிந்து கூறினார்கள். அந்தக் கோவில் வேறு எதுவும் இல்லை. நமது தஞ்சைப் பெரிய கோவில்தான்.

ஆங்கிலேயர் செய்த ஆய்வு முடிவுகளின்படி, அந்தக் கோயில் பொது சகாப்தம் 11ம் நூற்றாண்டில் (1010 Common Era) கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. அதாவது, பிரகதீஸ்வரர் கோவில் கட்டி 1000 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், 200 ஆண்டுகள் முன்புவரை அந்தக் கோவில் வரலாறு பற்றி யாருக்கும் தெரியாது.

தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவிலைவிடவும் பழமையான கோவில்கள் இங்கு உண்டு. அவற்றில் பல கோவில்களின் வரலாறுகள் இதுவரை அறியப்படாமலேயே இருக்கின்றன.

ஆங்கிலேயர் காட்டிய ஆர்வத்தைக்கூட, இந்திய அரசு காட்டுவதில்லை. அதனால், பல கோவில்களின் வரலாறு தெரியாமல் போகிறது. அத்துடன் ஆதாரங்கள் கிடைத்தால் அவற்றை அழித்தும் விடும் நோக்கம் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

அயோத்தி கோவில் சம்பந்தமாகப் பிரச்சினை ஏற்பட்டதால் அங்கு அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த அகழ்வாராய்ச்சி முடிவுகளின்படி கிடைத்த தெய்வீக உருவங்களின் காலம் பொ.மு. 1000 (1000 Before Common Era) என்று கண்டறிந்துள்ளார்கள்.

அதாவது, தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவிலைவிடவும் 1000ம் ஆண்டுகள் பழமையானது அயோத்தி கோவில்.

அந்தக் காலகட்டத்தில் இருந்து, பொ.ச. 12ம் நூற்றாண்டுவரை (12 Common Era) கட்டப்பட்ட கோயில் பகுதிகள் கிடைக்கின்றன.

பொ.ச. 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த கதா சரித சாகரா என்ற நூல் விக்கிரமாதித்தியர், ஏற்கனவே இருந்த அயோத்தி ராமர் கோவிலை புணர்நிர்மானம் செய்தான் என்று சொல்லுகிறது. அந்த விக்கிரமாதித்தியனின் காலமாக பொ.ச.4ம் நூற்றாண்டு சொல்லப்படுகிறது.

அதாவது, பொ.மு. 1000லிருந்து பொ.ச. 16ம் நூற்றாண்டுவரை கோவில் இருந்திருக்கிறது. பொ.ச. 16ம் நூற்றாண்டில் (1528 Common Era) மீர் பக்கி என்கிற பாபரின் தளபதி ராமர் கோயிலை இடித்துவிட்டு ஒரு கும்மட்டம் கட்டினான்.

மேலும் அறிய:

https://en.wikipedia.org/wiki/Archaeology_of_Ayodhya

https://moralstories.wordpress.com/2006/06/26/the-great-vikramaditya-maharaja/

கேட்டவர்: திரு. பால. மோகன் தாஸ்

1. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டி அவரை வழிபட அந்த இடம் வேண்டும் என்று ஹிந்துக்கள் கோருகிறார்கள். பல நூறு ஆண்டுகளாக அது ஒரு மசூதியாக இருந்தது என்றும் எனவே அங்கு அல்லாவைத் தொழ தாங்கள் விரும்புவதாகவும் முஸ்லிம்கள் கோருகிறார்கள்.

ஒரே இடத்திற்காக இருதரப்பினர் போட்டிபோடுவது தேவையற்றது. கடவுள் ஒருவரே. முஸ்லிம்களும் அந்தக் கடவுளை வழிபடத்தான் கேட்கிறார்கள் எனும்போது கொடுத்துவிட்டுப்போனால்தான் என்ன?

பதிலளித்தவர்: திரு. அஜித்குமார்

பதில்: கடவுள் ஒருவரே என்பதை இசுலாம் எப்படிப் புரிந்துகொள்கிறது, இந்து மதங்கள் எப்படிப் புரிந்துகொள்கின்றன என்பதைப் பார்த்தால் குழப்பம் ஏற்படாது. எங்கள் இறைவனான அல்லா ‘மட்டுமே’ உண்மையான ஆண்டவன் என்கிறது இசுலாம். மற்ற கடவுள்களை வணங்குவது மரணதண்டனை தரப்படவேண்டிய குற்றம் என்று அது சொல்லுகிறது. தமிழ்நாட்டு முகமதிய பெருமக்கள் அந்தக் குற்றத்தை “இணைவைத்தல்” என்று மொழிபெயர்த்து ‘உபயோகிக்கிறார்கள்’. இத்தகைய போக்குள்ள ஆபிரகாமிய மதங்களை ஆங்கிலத்தில் exclusive religions என்று சொல்லுகிறார்கள்.

எல்லாரும் ஒரே கடவுளைத்தான் பல்வேறு வகைகளில் வழிபடுகிறார்கள் என்கின்றன இந்து மதங்கள். தெய்வங்களை வணங்குவதும், வணங்காததும் தனிமனிதர்களின் உரிமை என்கிறது இந்து மதம். இத்தகைய போக்குள்ள கிழக்கத்திய மதங்களை inclusive religions என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள்.

எனவே, இவர்கள் இருவரும் சொல்லுவது முற்றிலும் எதிரிடையானவை என்பது தெளிவு. முஸ்லீம்கள் வழிபடுவதும் நாம் வழிபடும் கடவுள்தான் என்று இந்துக்கள் சொல்லலாம். ஆனால், இந்துக்கள் உருவத்தில் வழிபடுவதை அல்லாவைத்தான் என்று முஸ்லீம்கள் சொல்ல மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்துக்கள் வழிபடுவது, அவர்கள் வணங்கும் ஒரே ஒரு உண்மைத் தெய்வத்தை அல்ல.

முஸ்லீம்கள் அந்த ராமனை வழிபடுவதை இந்துக்கள் தடுக்கவில்லை. ஆனால், இந்துக்கள் அந்த ராமனை வழிபடுவதை முஸ்லீம்கள் தடுக்கிறார்கள்.

மேலும், ராமர் கோயில் மானுடத்தின் சொத்து. அதை இந்துக்கள் தர்மதிகாரியாக இருந்து பாதுகாக்கிறார்கள். அந்தக் கோவிலை பாதுகாப்பதும், பராமரிப்பதும் மட்டுமே அவர்களது கடமை. அந்தக் கோயிலை வேறு யாருக்கும் தானம் செய்யும் உரிமை அவர்களுக்கு இல்லை.

2. அனைவருக்குமான பரம்பொருளான, பரம தியாகியான அந்த ஸ்ரீ ராமர் வன்முறைக்குப் பின் கிடைக்கும் இந்தக் கோவில் ‘கூடாது’ என்று கூறவும் கூடுமோ?”

என்ற கேள்வியை உண்மையான, விஷயஞானம் நிறைந்த, ஆத்திக ஹிந்து ஒருவர் என் முன் வைத்தார். இந்த கேள்விக்கான நேர்மையான, விரிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.

பதிலளித்தவர்: திரு. கிருஷ்ணக்குமார்

பதில்: திரு. பாலா மோகன்தாஸ் அவர்களே, கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான் என்பது ஹிந்துக்கள் மட்டும் ஒப்புக்கொள்ளும் உண்மை. ஆபிரகாமிய மதத்தவர் இந்த உண்மையை ஒப்பு கொள்வதில்லை. இது தான் பிரச்சினையின் வேர்.

ஸ்ரீ ராமர் தியாகி என்பது ராமாயணம். வன்முறை வேண்டாதவர் என்று நினைப்பது ராமாயணம் படிக்காதவர் அல்லது கேட்காதவர் எடுக்கும் நிலை. இலங்கை வேந்தனை எதிர்த்து ராமர் சண்டையிட்டதும் கவ்ரவரை எதிர்த்து பாண்டவர் இட்ட சண்டையில் கண்ணன் துணை போனதும் நீதியை நிலை நாட்டவே. எனவே சண்டை சச்சரவுகள் பின்னர் கோவில் வந்தாலும் கூட நீதி நேர்மை நியாயம் ஆகியவை அந்த சச்சரவுகளில் தெளிவாக இருப்பதால் ராமருக்கும் கண்ணனுக்கும் அந்த கோவில் ஒப்பு கொள்ளுவதாகவே இருக்கும்.

பதிலளித்தவர்: திரு. அஜித்குமார்

பதில்: ராமர் கருணா மூர்த்திதான். தியாக மூர்த்திதான்.

ஆனால், ராமர் அயோக்கியத் தனத்திற்குக் கருணை காட்டவில்லை. தனக்கு உரிமையான சீதையை அபகரித்த ராவணனை அவர் வதம் செய்து அருளினார்.

தங்களது கோவிலை அபகரித்து எழுந்த கும்மட்டத்தை இந்துக்கள் வதம் செய்திருக்கிறார்கள். சீதை மீட்கப்பட்டது போல, ராமர் கோயிலும் மீட்கப்படவேண்டியது மட்டுமே பாக்கி.

அயோக்கியத்தனத்திற்குக் கருணை காட்டுவது கருணை இல்லை என்று ராமர் செய்துகாட்டியுள்ளார். நீதிபதி கான்கூட தனது தீர்ப்பில் அந்த தியாக மூர்த்தியான ராமனை இந்துக்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது.

சீதை மீட்புப் போராட்டமும், ராமர் கோயில் மீட்புப் போராட்டமும் ஒன்றே.

போர் நடத்தி சீதையை ராமன் மீட்காமல் இருந்திருந்தால், ராவணன் செய்த அயோக்கியத்தனத்தை மற்றவர்களும் செய்ய ஆரம்பித்திருப்பார்கள்.

ராமர் கோயில் மீட்புப் போராட்டம் ஆரம்பிக்காமல் இருந்திருந்தால், முகலாயர்கள் செய்த அயோக்கியத்தனத்தை, தற்கால-எதிர்கால ஜிகாதி முகமதியர்களும் செய்வார்கள். பங்களாதேஷிலும், பாக்கிஸ்தானிலும், மலேஷியாவிலும் நடந்துவருவது இந்தியாவிலும் நடக்கும்.

ராமர் கோவில் மீட்புப் போராட்டம் எப்போதோ நடந்த வரலாற்றுக் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொள்ளும் போராட்டம் இல்லை. எதிர்காலத்தில் எந்தக் கோவிலும், எந்த மசூதியும், எந்த சர்ச்சும், எந்த வழிபாட்டுத் தலமும் மற்ற மதத்தவர்களால் மதவெறியின் காரணமாக இடிக்கப்படக்கூடாது என்பதற்கான போராட்டம். வருங்கால இந்துக்கள் உயிரோடு வாழ வேண்டும், அவர்களது உடமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கான போராட்டம்.

பன்மைத்தன்மை (plurality) காப்பாற்றப்படவேண்டும் என்பதற்கான போராட்டமே இந்துக்கள் நடத்தும் கோவில் மீட்புப் போராட்டங்கள்.

கேட்டவர்: திருமதி. ஐஸ்வர்யா, பெங்களூர்

1. அயோத்தி தீர்ப்பு மக்களிடையே பெரிய ரியாக்ஷன் எதுவும் இல்லாமல் முடிந்து போனது போன்று தோன்றுகிறதே… ஒரு சில ஊடகங்களைத் தவிர பெரும்பாலான ஊடகங்கள் அடுத்த பிரச்சனைக்கு நகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது. இது பற்றி கருத்து என்ன?

பதிலளித்தவர்: திரு. தஞ்சை வெ. கோபாலன்

பதில்: பெங்களூர் ஐஸ்வர்யா அவர்களே! சில பிரச்சனைகளை சம்பந்தப்பட்டவர்களே மறந்து விடுவார்கள் அல்லது மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டு அன்றாட பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தொடங்குவார்கள். ஆனால் இந்த ஊடகங்கள் இருக்கின்றனவே, இவை வியாபாரம் செய்ய வேண்டும். அதிலும் வெளிநாட்டு மூலதனத்தில் ஊடகங்களை நடத்தும் சில தொலைகாட்சி, பத்திரிக்கை இவைகளுக்கு குழிப் பிள்ளை யைத் தோண்டி எழவு கொண்டாட வேண்டும். இங்கு, யாரோ ஒருவர் ஒரு பிரச்சினையை துவக்குகிறார் என்று வைத்துக் கொள்வோம், இந்த ஊடகங்கள் என்ன செய்கிறார்கள். இரவும் பகலும் அந்தப் பிரச்சினையை எடுத்து வைத்துக் கொண்டு விவாதம், பட்டி மன்றம் நடத்துகிறார்கள். இவர்களுக்கு விளம்பரத்தில் நல்ல காசு கிடைக்கும், அத்தோடு தான் விரும்பும் வழியில் அந்தப் பிரச்சினையை திசை திருப்ப முடியும். டிசம்பர் ஐந்து என்று மக்கள் மறந்தாலும், இவர்கள் தூண்டி விடும் நிலைமையைப் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோமே. பண்பாடு உள்ள, விலை போகாத, உண்மையை உள்ளபடி சொல்லும் உள்ளத் திறம் வாய்ந்த ஊடகங்கள் தான் இங்கு இருக்க வேண்டும். காசுக்கு உண்மையை விற்கும் கேவலங்கள் ஒடி ஒழிய வேண்டும். ஒப்புக் கொள்கிறீர்களா ஐஸ்வர்யா?

2. ஒரு சில வலைப் பக்கங்களில், காசி, மதுரா போன்ற தளங்களிலும் கோவில்கள் மீட்கப் படவேண்டும் என்று கூறுகின்றனரே… அங்கேயும் கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப் பட்டனவா? அவற்றின் வரலாறு என்ன?

பதிலளித்தவர்: செல்வி. வளர்மதி

பதில்: ஆம். காசி, மதுரா, பிருந்தாவனம் போன்ற ஊர்களில் இருந்த கோவில்களையும் மொகலாயர்கள் இடித்து மசூதிகளைக் கட்டினர்.

இந்துக்கள் தங்களது கோவில்கள் ஆன்மீக சக்தி மிகுந்தவை என்று நம்புகின்றனர். ஆனால், இசுலாத்தின்படி ஒரு மசூதி என்பது மக்கள் ஒன்று சேர்ந்து வழிபடக்கூடிய ஒரு இடம் மட்டுமே. அதற்குப் புனிதம் என்றோ, ஆன்மீக சக்தி என்றோ ஒன்றும் கிடையாது (காபா தவிர. அதை அல்லாவே பாதுகாக்கிறான் என்பது நம்பிக்கை.).

அதனால்தான், பல இசுலாமிய அரசர்கள் மற்ற இசுலாமிய அரசர்களோடு போரிட்டு வென்றால், தோற்ற அரசனின் மசூதியை இடித்துவிடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை மசூதி என்பது தோற்ற அரசனின் அரசியல் அதிகாரத்தின் அடையாளம். எனவே, அது அழிக்கப்பட வேண்டும்.

ஒரு மசூதியை இடித்துவிட்டு, வெற்றி பெற்ற முகமதிய அரசன் அதைவிட அழகான, பிரம்மாண்டமான ஒரு மசூதியைக் கட்டுவான்.

ஐரோப்பிய நாடுகளில் இப்போது ஒவ்வொரு ஊரிலும் உள்ள சர்ச்சைவிட உயரமான பிரம்மாண்டமான மசூதிகளைக் கட்டுவதற்கும் இதுதான் காரணம் என்று ஐரோப்பிய கிறுத்துவர்கள் சொல்லுகிறார்கள்.

மலேசியாவில் உள்ள தமிழ் இந்துக்களின் கோவில்கள் அங்குள்ள மசூதிகளைவிட உயரம் குறைவாக இருக்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது.

எனவே, கோவில்களை இடித்துவிட்டு மசூதிகளைக் கட்டுவது இசுலாமிய பண்பாட்டின் ஒரு முக்கியப் பகுதியாக இருப்பதை வரலாற்று ஆவணங்களும், சமீபகால நடவடிக்கைகளும் தெரிவிப்பதில் ஐயமில்லை.

கோவில்களை இடிப்பதன் மூலம் அல்லாவிற்குப் பிரியமான காரியத்தைச் செய்ததாக முசுலீம் மன்னர்கள் பாராட்டப் பெற்றார்கள். அந்தப் பாராட்டுக்கள் ஆவணங்களாகக் கிடைக்கின்றன.

காசி, மதுரா, பிருந்தாவனக் கோவில்களை இடித்து மசூதிகள் கட்டப்பட்டதற்கான வரலாற்று ஆதாரங்களை மொகலாயரது ஆவணங்களே தருகின்றன. மற்ற மன்னர்களைப் போலவே ஔரங்கசீப் இதை ஒரு புனித மதக் கடமையாக நிறைவேற்றினான்.

அந்த ஆவணங்கள் தெரிவிக்கும் கோவில் இடிப்புகள் பற்றி அறிய: https://www.hindunet.org/hindu_history/modern/temple_aurangzeb.html

3. அயோத்தி தீர்ப்பு வந்த பின்னர், இனி பாஜக வின் அரசியல் எப்படி அமையும்?

பதிலளிப்பவர்: திரு. அ. வரதராசன்

பதில்: ஒரு வழிபாட்டுத் தலம் இடிக்கப்பட்டு மற்றொரு வழிபாட்டுத் தலம் கட்டப்பட்டது சமூக ஒற்றுமைக்கு எதிரானது.

ஆக்கிரமிப்புக்கு உள்ளானவர்கள் இந்த அநியாயத்தை மறந்துவிடலாம். மன்னித்தும் விடலாம். ஆனால், ஆக்கிரமிப்புச் செய்வது தவறல்ல என்ற நம்பிக்கையை அது உறுதியாக்கிவிடும். எனவே, ஆக்கிரமிப்புகள் தொடர ஆரம்பிக்கும். ஒற்றுமை இன்மை ஏற்படும்.

நாட்டு மக்கள் வளமையாக வாழ வேண்டும் என்றால், சமூகத்தில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்தத் தீர்ப்பின் மூலம், இசுலாமியர்களும் இந்துக்களும் இணைந்து ஒற்றுமையாக இருப்பதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒற்றுமைக்கான இந்த வாய்ப்பைப் பாதுகாக்க செயல்படுவதே பாஜாகவின் எதிர்கால அரசியலாக இருக்கக் கூடும்.

4. அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கின் எதிர்காலம் என்ன?

பதிலளிப்பவர்: திரு. அ. வரதராசன்

பதில்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்ன என்பதை வைத்துத்தான் வழக்கின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தெளிவாகும். பிறரின் வழிபாட்டுத் தலங்களை, உடமைகளைச் சூறையாடி சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒரு மதப் புத்தகம் சொல்வதை ஏற்றுக்கொள்வதா, அல்லது பன்மைத் தன்மை பாதுகாப்பதா என்பதை அந்தத் தீர்ப்புத்தான் முடிவு செய்யும்.

5. ஏன் அயோத்தி மூன்று பங்காக பிரிக்கப் பட்டு தீர்ப்பு வந்திருக்கிறது? அதற்கு என்ன காரணம் கூறப் படுகிறது?

பதிலளிப்பவர்: செல்வி. வளர்மதி

பதில்: அயோத்தி கோவில் நிலம் முழுவதையும் ஒரு காலத்தில் முகலாயர்கள் ஆக்கிரமித்து இருந்தார்கள். அந்நிலம் முழுவதும் இந்துக்களுக்கே தரப்படவேண்டும் என்று ஒரு நீதிபதி தீர்ப்பு சொல்லி இருந்தார். வரலாற்று ஆதாரங்களின்படி அந்த நிலமானது பொதுவான இந்துக்களுக்கும், நிர்மோகி அக்கடாவிற்கும், சுன்னி வஃப் போர்டிற்கும் பல்வேறு காலகட்டங்களில் உரிமையாக இருந்ததால், அந்த மூன்று பிரிவினருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என்று மற்ற இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தார்கள். பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பே இறுதியாகிறது. இந்தத் தீர்ப்பு மட்டுமே அமைதியை ஏற்படுத்தும் என பெரும்பாலான இந்துக்களும், ஒரு சில முகமதியர்களும் கருதுகின்றனர்.

6. இந்த இரண்டு மதங்களுக்கிடையில் இந்த தீர்ப்பு ஒற்றுமையை தோற்றுவிக்குமா?

பதிலளிப்பவர்: செல்வி. வளர்மதி

பதில்: ஒற்றுமையை உருவாக்குவதற்கான வாய்ப்பு இந்தத் தீர்ப்பு. இந்தியாவில் பல இடங்களில் கோவிலும், மசூதியும் ஒட்டி ஒட்டி இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அவரவர் பண்பாட்டை மதித்து வருகின்றனர். எனவே, இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அயோத்தியிலும் மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இந்துத்வ பாரதத்தில் நிறையவே இருக்கின்றன.

இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் போனால் அமைதி ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

7. 1949ல் ராமர் விக்கிரகங்கள் அயோத்தியில் கொண்டு போய் வைக்கப் பட்டதாக சொல்லப் படுகிறது. அதற்கு முன் அந்த இடம் தர்காவாக இருந்ததா?

பதிலளிப்பவர்: திருமதி. கோமளவல்லி

பதில்: தர்க்கா என்பது ஷியாக்களின் வழிபாட்டுத் தலம். பெரும்பாலும் ஒரு இசுலாமியப் பெரியவரின் சமாதியாக அது இருக்கும். அயோத்தி கோவிலை இடித்த மீர் பக்கி ஒரு ஷியாவாக இருந்தாலும், அந்த இடம் தர்காவாக இல்லை. அங்கே தொழுகை முதலான வழிபாடுகள் நடக்க இந்துக்கள் அனுமதிக்கவே இல்லை. அங்கே இந்துக்கள் தங்களது வழிபாட்டைத் தொடர்ந்தனர். அதனால், அது மசூதியாகவும் செயல்படவில்லை.

முகமதியர்களில் தீவிரவாதிகள் வலுப்பெறும்போதெல்லாம் வழிபாடு தொடர்ந்து நடந்த அந்தக் கும்மட்டத்தைத் தாக்கி வந்துள்ளனர். அத்தகைய தாக்குதல்களின் போதெல்லாம் அங்கிருந்த ராமர் விக்கிரகம் சேதப்படுத்தப்பட்டது. அல்லது மறைக்கப்பட்டது.

எப்போதெல்லாம் அமைதி நிலவுகிறதோ, அப்போதெல்லாம் இந்துக்கள் ராமரது விக்கிரகத்தை வைத்து வழிபடுவர். பின்னர் தீவிரவாத முகமதியர்கள் கோவிலைத் தாக்குவார்கள். ராமர் விக்கிரகம் மறைந்து போகும். இதுதான் தொடர்ந்தது.

எனவே, 1949ல் ராமர் விக்கிரகம் வைக்கப்பட்டது முதல் முறை நடந்த ஒரு விஷயம் இல்லை. அதற்கு முன்பும் பலமுறை அங்கு ராமர் விக்கிரகம் இருந்தது. 1521ஆம் ஆண்டு ராமர் கோவிலுக்கு விஜயம் செய்த வணக்கத்துக்குரிய குரு நானக் அவர்கள் அங்கிருந்த ராம் லல்லாவை தரிசித்திருக்கிறார். முகமதியர்களின் கொடூரமான அச்சுறுத்தல்களைக் கண்டு மனம் வருந்தி, அவர்களைக் கண்டித்துப் பேசியிருக்கிறார். அவர், ராமர் விக்கிரகத்தைத் தரிசித்ததும், முகமதியர்களின் வன்முறையைக் கண்டித்ததும் சீக்கியர்களின் புனித நூலான “குரு க்ரந்த சாஹிப்பில்”(பக். 418ல்) இருக்கிறது. அயோத்தி ஜன்மஸ்தானத்தில் இந்துக்கள் வழிபட்டார்கள் என்பதற்கும், அங்கே ராமரது விக்கிரகம் 1949க்கு முன்பிருந்தே இருந்தது என்பதற்கும், அங்கிருந்த கோவிலை முகமதியர்கள் இடித்தார்கள் என்பதற்குமான மிக உறுதியான ஆதாரமாக “குரு க்ரந்த சாஹிப்” விளங்குகிறது.

8. அயோத்தியில் கோவில் நிலத்தில் ஒரு பங்கு முஸ்லிம்களுக்கு கொடுக்கச் சொல்லி தீர்ப்பு வந்திருக்கிறது. இனி வரும் நாளில் கோவிலும், மசூதியும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இயங்க முடியுமா?

பதிலளிப்பவர்: செல்வி. வளர்மதி

பதில்: இந்தியாவின் பல இடங்களில் கோவிலும், மசூதியும் அருகருகே இருந்தாலும் அமைதியாக பிரச்சினை இன்றி இருக்கின்றன. ஒரு சில இடங்களில் இந்துக்களின் பாரம்பரியமான ஊர்வலங்களை முகமதியர்கள் எதிர்க்கின்றனர். பல இடங்களில் நல்லிணக்க அடிப்படையில் முகமதியர்கள் எதிர்ப்பதில்லை.

ஆனால், இனிவரும் நாட்களில் நல்லிணக்கம் தொடருமா என்பது அரேபிய ஷேக்குகளின் பொருளாதாரத் திட்டங்களைப் பொறுத்தது. தங்களது பாதுகாப்பில் உறுதியாகவும், அதே சமயம் நல்லிணகக்த்தோடும் செயல்படத் தேவையான இந்துக்களின் புத்திசாலித்தனத்தைப் பொறுத்தது.

கேட்டவர்: திரு. எஸ். ரவி

1. அயோத்தி பிரச்னை முற்றியுள்ள இவ்வேளையில் ஒரு அய்யம்:

பாபர் தினமும் நாட் குறிப்பு எழுதியவர்- தனது உதவியாளரை கொண்டு என்பது வரலாறு. அதற்கு பெயர் பாபர் நாமா.

அவர் அயோத்திக்கு படை எடுத்தப்போது பாபர் நாமா வில் அதனை பதிவு செய்திருப்பார். ஆனால் பாபர் நாமாவில், பாபர் அயோத்திக்கு படை எடுத்த கால கட்டங்களில் பல நாட்களுக்கு எழுதிய குறிப்புகள், என்னவாயின? பாபர் நாமாவை எழுதிய அப்துல் ஃபாசல், அந்நாட்களை பதிவு செய்யவில்லையா?

ஏனென்றால், அவை இருப்பின் இந்த அயோத்திப் பிரச்சனையே தவிர்த்திருக்கலாம் இல்லையா?

சந்தேகத்தைத் தீர்ப்பீர்களா?

பதிலளித்தவர்: திரு. களிமிகு கணபதி

பதில்: அயோத்தியில் உள்ள கோவிலை இடித்தவர் மீர் பக்கி என்கிற தளபதி. ஒருவேளை பாபர் நேரடியாக இடித்து இருந்தால் அந்த சம்பவம் பாபர் நாமாவில் இடம் பெற்றிருக்கலாம்.

ஆனால், அக்பரின் வாழ்க்கையை எழுதிய அபுல் ஃபசல், ஐன் – இ – அக்பரியில் ராமஜன்ம பூமி பற்றிச் சொல்லுகிறார்:

In Akbar’s time, Abul Fazal wrote the Ain-i-Akbari in which he describes Ayodhya as the place of “Ram Chandra’s residence who in Treta Yuga combined spiritual supremacy and kingship” (Translated by Colonel H S Jarrett and published in Kolkata in 1891).

அயோத்தி சம்பந்தமாக ஆங்கிலேயர் காலத்தில் (பொ.ச. 1885ல்) நடந்த நீதிவிசாரணையின் தீர்ப்பிலும், அயோத்தி கோவிலை இடித்து முகமதியர்கள் மசூதி எழுப்பியது துரதிர்ஷ்டமான சம்பவம் என்று சொல்லப் பட்டுள்ளது.

அதற்கு முந்தைய காலகட்ட ஐரோப்பியர்களும் இதைப் பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் அயோத்தி கோவில் தீர்ப்பிற்குப் பின்னால், சுன்னி வஃப் போர்ட் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் டெல்லி இமாம் கேள்விகளுக்குப் பதிலளிப்பார் என்று தெரிவித்தனர்.

டெல்லி இமாம் என்பவர் இந்தியாவில் உள்ள முகமதியர்களின் போப்பாண்டவர். அவர் சொல்வதுதான் இந்திய சுன்னி முஸ்லீம்களுக்கு இசுலாம். அவரே பதிலளிக்கிறார் என்று அறிந்து ஆவலுடன் பத்திரிக்கையாளர் பலர் கலந்துகொண்டு கேள்விகள் கேட்டனர்.

அப்போது, அக்பருடைய அரசாங்க ஆவணம் ஒன்றில் ராமர்கோவில் தசரதராஜனுடைய நிலம் என்று குறிக்கப்படுவதாகவும், அது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று ஒரு முகமதிய பத்திரிக்கையாளர் கேட்டார்.

அவரை உதை உதை என்று உதைத்து வெளியேற்றி தங்களது கருத்தை சுன்னி வஃப் போர்டார் தெரிவித்தனர். டெல்லி இமாமின் கருத்தில் இருந்து அந்தச் செயல் மாறுபட்டது. அந்தப் பத்திரிக்கையாளரைக் கொலை செய்யவேண்டும் என்பதுதான் டெல்லி இமாமின் கருத்து.

அமைதிமார்க்கம் பற்றி அறிய: https://www.youtube.com/watch?v=BaErXxqjLhk

கேட்டவர்: திரு. ஆர். வெங்கி

1. ராமனின் வாழ்க்கையை ராமசரித மானஸ் என்ற புத்தகமாக எழுதியவர் துளசி தாஸர். அவர் பாபரின் காலத்தில் வாழ்ந்தவர். ராமர் கோயிலை பாபர் இடித்தது பற்றி அவர் ஏன் அவரது நூலில் குறிப்பிடவில்லை?

பதிலளிப்பவர்: திரு. ஸ்ரீநிவாசன் வெங்கட்ராமன்

பதில்: இதெல்லாம் எளிதில் விளக்கிவிடக்கூடிய விஷயம் தான். துளசிதாஸர் வாழ்ந்தது முற்றிலும் சித்ரகூடம், காசி நகரங்களில். அயோத்யா காசியில் இருந்து 200 கிமி தூரம். அவர் ஒரு பரிவ்ராஜகர் அல்ல, கவிஞர். தகவல், தொழில்நுட்பம் இல்லாத 16ம் நூற்றாண்டில் ஒரு கிழப் பிராமணருக்கு அது ஒரு பெரிய தொலைவு. அவர் காலத்தில் நடந்த ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை அவர் எழுதவில்லை என்பதற்காக அவை நடக்கவில்லை என்பது ஒரு சும்பத்தனமான குதர்க்கம். துளசிதாசருக்கு தான் இப்படி ப்ராபல்யம் அடையப்போவது அப்போதே தெரிந்து இருந்தால் காலனிய பொதுப்புத்திக்காரர்களுக்குப் புரியும்படி இங்க்லீஷ் கற்றுக்கொண்டு ஒரு sonnet எழுதி தொலைத்து இருக்கலாம்.

துளசிதாசர் அனுமானை தரிசனம் செய்தது, ராமர் காட்சி கொடுத்தது எல்லாம் எழுதி வைத்து இருக்கிறார். அதை எல்லாம் காலனிய பொதுப்புத்திக்காரர்கள் நம்பவா போகிறார்கள்?

அனுமான் தரிசனம், ராமர் காட்சி கொடுத்தவை பற்றி எல்லாம் கவிஞரின் கற்பனை என்று இவர்கள் சொல்லிவிடுவார்கள். அவர், பாபரின் அநியாயங்களை எழுதி இருந்தால், துளசி தாசரின் மற்ற கற்பனைகள் போல இதுவும் ஒரு கற்பனை என்று சொல்லிவிடுவார்கள். அடிமைகளின் மருண்ட மனம் அப்படித்தான் செயல்படும்.

பதிலளிப்பவர்: திரு. களிமிகு கணபதி

பதில்: துளசி தாஸர் பாடியது ராமாயணம் – ராமரின் வரலாறு. ராமர் ராமாயண காலத்தில் வாழ்ந்தவர். அப்போது ஜன்மஸ்தான் கோயிலும் இல்லை, பாபரும் இல்லை, மீர் பக்கியும் இல்லை, இடிப்புகளும் இல்லை. எனவே, துளஸி தாஸர் அவை பற்றித் தனது ராமாயணத்தில் பேசவில்லை. ராமர் காலத்தில் ராமர் என்ன செய்தார் என்பதைப் பற்றித்தான் துளசி தாசர் எழுதினார். துளசி தாசர் காலத்திய சம்பவங்களைப் பற்றி அல்ல.

இரண்டாவதாக, அவர் வரலாற்றாசிரியர் இல்லை. கவிஞர்.

பதிலளிப்பவர்: திரு. ஜடாயு

பதில்: துளசி தாசரது காலகட்டம் பக்தி இலக்கிய காலகட்டம். தங்களைக் காப்பாற்ற வலிமையான அரசர்கள் இல்லாததால், தெய்வத்தின்மீதான பக்தி மட்டுமே காப்பாற்றும் என்ற நிலையில் மக்கள் வாழ்ந்த காலகட்டமாக அது விளங்குகிறது. பிரபலமாக்கப்பட்டு வரும் இசுலாமில் பக்திக்குரிய விஷயங்கள் உள்ளனவா என்று ஆராயும் போக்கு அப்போது இருந்தது.

முதல் கட்ட பக்தி கவிகள் (கபீர், தாதூ தயால், நானக் போன்றோர்) இந்து-இஸ்லாமிய குறியீடுகள் இரண்டையும் கலந்தே பாடினார்கள் – இஸ்லாமின் ஆன்மிகத்தை நிராகரிக்காமல் அதையும் இணைத்துக் கொள்வது மூலம் அக்கால இஸ்லாமியர்களின் இயல்பான மதவெறி, வன்முறை மனப்போக்கை மாற்றிவிடலாம் என்று இவர்கள் கருதியிருக்கக் கூடும். இதுவும் ஒரு கோட்பாடாகவே சொல்லப் படும் விஷயம்.

ஓரளவு சுதந்திரம் கிடைத்த அடுத்த கட்டத்தில் தான் வெளிப்படையாக இந்து தெய்வங்களைப் பாட ஆரம்பிக்கிறார்கள் – துளசிதாசர், சூர்தாசர், மீராபாய் காலம்.

இதில் ராமபக்தி கிளை ராமனை தர்ம நாயகனாகக் காண்பதோடு நின்றுவிடுகிறது. கிருஷ்ணபக்தி கிளை முழுக்க முழுக்க நாயகி பாவம், பிரேம பக்தியில் போய்விடுகிறது. அதனால் இரண்டு கிளைகளைச் சார்ந்த கவிஞர்களுமே இஸ்லாமிய ஆட்சி பற்றி தங்கள் பாடல்களில் அதிகம் சொல்லவில்லை. அவை வெறும் பக்திப் பாடல்கள் மட்டுமே.

அவர்கள் அஹிம்சை மார்க்கத்தின் மூலம் முகமதியர்களைப் பக்குவப்படுத்த முயன்றார்கள். அவர்களது அஹிம்சை மார்க்கம் பயத்தால் எழுந்த ஒன்றல்ல. இந்து மதத்தின் இயல்பான வழிமுறையாக அஹிம்சை இருந்தது. துளசிதாசர் காலத்தில் நடந்த விசயங்கள் பற்றிச் சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டனிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, அக்பருடைய நண்பரான ராஜபுத்திரப் பிரபுவிடம் போய் மகாராணா பிரதாப சிங்கிற்கு எதிராகப் போரிடக்கூடாது என்று துளசிதாசர் சத்தியம் வாங்கியது பற்றிப் பேச்சு வந்தது. இங்கனம் துளசிதாசர் சத்தியம் வாங்கியது அக்பரிடம் போய் பிரச்சினையானது.

இப்படி துளசிதாசர் போன்ற பக்தி மார்க்கத்தாரது அன்புமயமான முயற்சிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தன. அப்போதும் இஸ்லாமிய மன்னர்கள் மதவெறி மிகுந்து இந்துக்கள் மீது அடக்கு முறையையும் (உதாரணமாக, ஜிசியா வரி ), கட்டாய மதமாற்ற வன்முறைகளையும் (உதாரணமாக, குரு தேக்பகதூரை இஸ்லாமுக்கு மாற வற்புறுத்தியது) செய்துவந்தனர். அடுத்த காலகட்டத்தைச் சேர்ந்த அடியார்கள் இஸ்லாமிய மன்னர்களின் கொடூரங்களைப் பற்றி தங்கள் பாடல்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

குரு அங்கதர், குரு தேக்பகதூர், குரு அர்ஜுன், இறுதியாக குரு கோவிந்த சிங் ஆகிய சீக்கிய குருக்கள் மிக வெளிப்படையாக இஸ்லாமியரின் கொடுங்கோல் ஆட்சியை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவை குரு கிரந்த சாகிப்பிலேயே உள்ளன. நேரம் கிடைத்தால் தேடி எடுக்கலாம். வீர் சாவர்க்கர் தனது ‘வரலாற்றின் ஆறு பொன்னேடுகள்’ நூலில் இது பற்றி எழுதியிருக்கிறார்.

மராட்டிய இந்து எழுச்சி கங்கை சமவெளிக்கு வெளியே நிகழ்ந்தது. சிவாஜியின் அரசவைக் கவிஞர்கள் இஸ்லாமியர்கள் இந்துக் கோவில்களை இடிப்பது பற்றியும், சிவாஜி அதைத் தடுத்தது பற்றியும் தெளிவாகவே எழுதியுள்ளார்கள். அயோத்தி பற்றி specific ஆக இல்லாமலிருக்கலாம், ஆனால் பொதுவாக அது பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.

பக்திக் காலகட்டத்திலும்கூட ஆயுதங்கள் தாங்கி இசுலாமியர்களை எதிர்த்தவர்களும் உண்டு. ஒரு சிறிய விதிவிலக்காக, திரிசூலம் ஏந்திய பைராகிகள், சித்தர்கள், சாதுக்கள் மரபு இருந்து வருகிறது – முஸ்லிம், பிரிட்டிஷ் ஆட்சிகளை எதிர்த்து அவ்வப்போது கிளர்ச்சிகள் நடத்திய மதக்குழுக்கள் இவர்களே. பங்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடம்’ நாவல் இத்தகைய ஒரு சன்னியாசிப் படை பற்றியதே.

பதிலளிப்பவர்: திரு. சங்கர மாணிக்கம்

பதில்: கால இயந்திரத்தில் பயணம் செய்து பாபர் கோயில் இடித்ததை ஃபுல் டி.டி.எஸ் எஃபெக்ட் உடன் வீடியோ ரெக்கார்ட் செய்து கொண்டு வந்து காட்டினாலும் இவர்கள் நம்பப்போவதில்லை.

Absence of evidence is not evidence of absence.

பதிலளிப்பவர்: திரு. ஆஸ்திகா

பதில்: பாபரின் காலத்தவரான துளசி தாசர் ராமர் கோவில் இடிப்பு பற்றியோ, முகமதியர்களின் கொடூரமான மதச் செயல்பாடுகள் பற்றியோ எதுவும் சொல்லவில்லை என்று மார்க்கஸிஸ்ட் அறிஞர்கள் சொல்லி வருகின்றனர். இந்தப் புரளியை ஆரம்பித்து வைத்த புண்ணியாத்மா பேராசிரியர் ராம ஷரண் ஷர்மா. தொடரும் இந்தப் பிரச்சாரத்தால், பாபர் மிகவும் நல்லவர் என்றும், முகலாயர்கள் எந்தக் கொடுமையையும் செய்யவில்லை என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல.

துளசி தாசர் ராமர் கோவில் இடிப்புப் பற்றி சொல்லி இருக்கிறார். முகமதியர்களின் கொடூரமான மதப்பணிகள் பற்றிச் சொல்லி இருக்கிறார்.

“ஸ்ரீ துளசி சதகம்” என்கிற தனது நூலில் கோஸ்வாமி துளசி தாஸ் முகமதியர்களின் நடத்தை பற்றிச் சொல்கிறார்.

யவனர்கள் (முகமதியர்கள்) தெய்வத்தைப் போற்றும் துதிப் பாடல்களை, உபநிஷதங்களை, புராணங்களை, இதிகாசங்களை ஏளனம் செய்கின்றனர். அவற்றின்மீது சனாதனிகள் வைத்துள்ள நம்பிக்கையை கேலி செய்கின்றனர். இந்து சமூகத்தை அவர்கள் பல வகைகளிலும் அவர்கள் சுரண்டுகிறார்கள்…..

இந்துக்களை அவர்கள் வாழும் இடங்களில் இருந்து முகமதியர்கள் விரட்டுகிறார்கள். இந்துக்களது குடுமியையும், யக்ஞோபவீதத்தையும் வெட்டி, இந்துக்கள் தங்கள் மதத்தில் இருந்து விலகிவிடவேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள். இந்த காலகட்டம் மிகக் கொடூரமான காலகட்டமாகவும், இந்துக்களுக்குத் துயரம் தரும் காலமாகவும் இருக்கிறது….”

பாபர் மிகக் கொடூரமான காரியங்களைச் செய்தான். சுதேசிகளான இந்துக்களை தன் வாளால் பல்லாயிரக்கணக்கில் கொலைசெய்தான்……

மூடர்களான யவனர்கள் அவத் நகரில் (அயோத்தியா நகரில்) 1585ம் சம்வாத ஆண்டில் (1528 பொது சகாப்தம்) எண்ணமுடியாத கொடூரங்களைச் செய்தனர். பல இந்துக்களைக் கொடூரமாகக் கொன்ற பின்னர், ராம ஜன்ம பூமியானது, மசூதி கட்டுவதற்காகப் பிளக்கப்பட்டது. அதை எண்ணும்போதெல்லாம் என் மனம் வேதனையில் பிழிபட்ட துணிபோல் துடிக்கிறது. நான் அழுது கதறுகிறேன்…..

அவத் நகரில் இந்துக்கள் கொல்லப்படுவது பற்றியும், மீர் பக்கியால் இடிக்கப்பட்ட ராமர்கோயிலின் மோசமான நிலையைப் பற்றியும் ரகுராஜனிடம் கதறி அழுகிறேன்….

ஓ, ராமா, காப்பாற்று, காப்பாற்று…

நயவஞ்சகனான மீர் பக்கியால் ராமஜன்மபூமி கோவில் இடிபட்டது…..

சுருதிகளும், புராணங்களும், வேதங்களும், உபநிஷதங்களும் இனிமையான மணியோசைகளுடன் ஒலித்துக்கொண்டிருந்த அயோத்தியில் இப்போது குரானும், தொழுகைக்கான அழைப்பும் மட்டுமே கேட்கிறது…..

இப்படி எல்லாம் துளசிதாசர் சொல்கிறார் என்பதற்கான ஆதாரம் என்ன?

இந்தப் பிரச்சினையை விசாரித்த உயர்நீதிமன்ற நீதியரசர்களில் ஒருவரான அகர்வால் அவர்களிடம் சித்ரகூட துளசிபீடத்தைச் சேர்ந்த ராமப்த்ராச்சாரியார் அளித்த வாக்குமூலம் இந்தத் தகவல்களைத் தெரிவிக்கிறது.

நீதியரசர் அகர்வால் அவர்களது அறிக்கையில் இதைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். அவரது அறிக்கை இங்கு கிடைக்கிறது: https://www.scribd.com/doc/38595149/Sudhir-Agarwal-4

கேட்டவர்: திரு. ஜெ. இரவிச்சந்திரன்

1. அயோத்யா தீர்ப்பு நம்பிக்கை சார்ந்து அமைந்துள்ளது என்கிறார்களே?இந்துக்கள் சார்பாக சட்டபூர்வமான ஆதாரம் ஒன்று கூட இல்லையா?இஸ்லாமியர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் என்னென்ன?இது ஒரு கட்டப்பஞ்சாயத்து தானா?

பதிலளிப்பவர்: அப்துல் வஹாப்

பதில்: அஸ்ஸலாமு அல மந் இட்டபா’அ அல்-ஹுதா.

இதில் என்ன சந்தேகம்? இந்தத் தீர்ப்பு முழுக்க முழுக்க கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்புத்தான். இரண்டு பேர் 400 ரூபாய்க்காகச் சண்டை போட்டால் கட்டப் பஞ்சாயத்தில்தான் ஆளுக்கு 200, 200 எனப் பிரித்து இனி சண்டை போடாதீர்கள் என்று சொல்லுவார்கள். அதைப் போல இந்தத் தீர்ப்பும் சண்டை போடக்கூடாது என்பதற்காகச் சொன்ன தீர்ப்பாக இருக்கிறதே தவிர, நீதிக்கான தீர்ப்பாக இல்லை.

பாபர் மசூதி ஒரு சொத்துப் பிரச்சினை. வஃப் போர்ட் வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் இந்திய சிவில் சட்டத்தின்படி இந்த வழக்கைக் கையாண்டிருக்க வேண்டும். ஆனால், அதை ஒரு வரலாற்றுப் பிரச்சினையாக மாற்றி, இந்திய முஸ்லீம்களை ஏமாற்றி விட்டார்கள்.

தொல்பொருள் துறையினர் எங்கிருந்தோ கொண்டுவந்த தூண்களையும், கட்டிடங்களையும் புதைத்து வைத்து அவற்றை ஆதாரங்கள் என்று பொய் சொல்லி இருப்பதை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் இர்ஃபான் ஹபீப் இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் (3 நவம்பர் 2010, பக்கம் 24ல்) அம்பலமாக்கி இருக்கிறார்.

சுன்னி வஃப் போர்ட் பரிந்துரைத்தவர்களைக் கொண்டு ஆராய்ச்சி நடந்திருந்தால் நடுநிலைமையான ஒரு தீர்ப்பு கிடைத்திருக்கும். இது முஸ்லீம்களின் பிரச்சினை என்பதால் ஷரியா சட்டத்தின் கருத்து என்ன என்பதையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் இந்தியாவை நேசிப்பதால்தான் இந்த நாடு ஒரு செக்யூலர் நாடாக இருக்கிறது. இந்தியாவில் 43% குடிமக்களான இஸ்லாமியர்களின் உணர்வுகளை மதித்து இந்தியா நடந்துகொண்டிருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து.

பதிலளிப்பவர்: திரு. சண்முக சுந்தரம், கோயம்புத்தூர்

பதில்: அயோத்தியா தீர்ப்புகளில் முடிவான தீர்ப்பு முழுக்க முழுக்க அகழ்வாராய்ச்சி மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு நம்பிக்கை சார்ந்து வழங்கப்பட்டது என்று சொல்ல எந்த ஆதாரங்களும் கிடையாது.

இசுலாமியர் தரப்பில் ஆதாரங்களைத் தந்தவர்கள் மார்க்கஸிஸ்ட் அறிஞர்கள். செய்தித்தாள்களின் வந்த ஆரவாரக் கட்டுரைகளையும், டீக்கடைப் பேச்சுக்களையும்தான் அவர்கள் ஆதாரங்கள் என்று வாக்குமூலங்கள் கூறினர். அவர்கள் முன்வைத்த ஆதாரங்களை அவர்களே அடிக்கடி மாற்றினர். இதைக் கண்டு நீதிபதிகளே நொந்து நூலாயினர். (மேலும் அறிய, https://www.telegraphindia.com/1101015/jsp/opinion/story_13057334.jsp)

இது ஒரு கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பு என்று சொல்வது நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும்.

தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தைத் தாக்கி ஊழியர்களைக் கொலை செய்தவர்களை நீதிமன்றம் ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி விடுதலை செய்தது. அப்போது யாரும் அதைக் கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பு என்று சொல்லவில்லை. கோயம்புத்தூர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட அப்துல் நாசர் மதனி பற்றிய ஆதாரங்களை கீழ்கோர்ட்டில் தந்தனர். ஆனால், மேல்கோர்ட்டில் அந்த ஆதாரங்கள் தரப்படவில்லை. ஆதாரங்கள் இல்லாததால், மதனியை நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆயுர்வேத சிகிச்சைக்காக எல்லாரும் கேரளாவில் உள்ள கோவளம் கடற்கரைக்குப் போவார்கள். மதனி கோயம்புத்தூர் சிறைச்சாலைக்கு வந்தான். அப்போது அந்தத் தீர்ப்பை யாரும் கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பு என்று சொல்லவில்லை.

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் இறந்து போன என் சித்தி பையனை நினைத்து நான் அழுகிறேன். கொலை செய்யப்பட்ட அவனது ஆத்மாவைப்போல, உயிரோடு வாழும் எங்களின் மனது நிம்மதி இன்று தவிக்கின்றது.

இந்திய இறையாண்மையை யார் எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இது. ஒரு இந்தியக் குடிமகனாக நான் அவமானப்படுகிறேன்.

பொதுவான கேள்விகள்:

கேட்டவர்: திரு. ஷங்கர் சுப்பு

1. சில கோவில்களுக்கு வழிபடப் போனால், கருவறையில் உள்ள மூலவர் நம் கண்ணுக்குத் தெரியாதவாறு அர்ச்சகர்கள் மறைக்கிறார்கள்.

சில சமயங்களில் ஒருவருக்கொருவர் விளையாடிக்கொண்டும், ஜோக்குகள் அடித்துச் சிரித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

இதைப் போன்ற செயல்கள் அவர்கள் மேல் உள்ள மரியாதையைக் குறைக்கின்றன.

பக்தர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பயிற்றுவிக்கிற அமைப்பு ஏதேனும் இருக்கிறதா?

பதிலளிப்பவர்: திரு. ஃப்ரான்சிஸ் சேவியர், திருச்சி

பதில்: இந்து முன்னணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கோவில் பூஜாரிகளுக்கான பயிற்சி முகாம்களை நடத்துகிறார்கள். சாதி வித்தியாசம் பார்க்காது விரும்புபவர்களுக்கு பூணூல் அணிவித்து காயத்ரி மந்திரங்கள் சொல்லித் தருகிறார்கள் என்றும், கோயிலை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும், பக்தர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் பயிற்சி தருகிறார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

கேட்டவர்: திரு. கீர்த்திவாசன்

1. இந்திய துணைக்கண்டத்தில் பல மொழிகள் பேசுவோர் இருக்கின்றனர். இப்படி இருக்கும் போது, ஏன் இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டும்?

மொழி அடிப்படையில் தனித்தனி நாடாக இருந்தால் அதிக வளர்ச்சி பெறுவது சத்தியம் என்ற கருத்து குறித்து தங்கள் விளக்கங்கள் என்ன?

பதிலளிப்பவர்: திரு. ரவி ஐயர்

பதில்: இந்தியா என்பது பலகலாச்சாரங்களையும், பல மொழிகளையும் கொண்ட ஒரு சமூகம். தனித்தனி பிரதேசங்களாக இருப்பதைவிட, ஒன்றுபட்ட நாடாக இருப்பதில் பல அனுகூலங்களும், லாபங்களும் இருக்கின்றன.

ரஷ்யாவின் நிலையைப் பாருங்கள். கலைந்து போய், பல நாடுகளாகத் துண்டாகியபின்னர் இசுலாமிய தீவிரவாதிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியாமல் தவிக்கின்றன.

பதிலளிப்பவர்: திரு. கணேஷ், செய்ண்ட் லூயிஸ்

பதில்: தனது புறச்சூழல்களில் இருந்து தன்னை முற்றிலும் ஒதுக்கிக்கொண்டு எந்த உயிரினமும் ஒரு தனித்தீவாக வாழ முடியாது. தனது கூட்டத்தில் இருந்து ஒதுங்கிப் போகும் யானை முதலான விலங்குகள் விரைவில் இறந்துவிடுகின்றன.

வளர்ச்சிக்கு மூலாதாரங்கள் தேவை. ஒரு மொழி பேசுபவர்கள் வளமுடன் வாழவேண்டும் என்றால் அந்த மொழியில் உலகில் உள்ள அனைத்து அறிவுகளும் கிடைக்க வேண்டும். அந்த மொழி பேசுபவர்கள் பொருளாதார அளவிலும், அரசியல் அளவிலும் தன்னிறைவு அடைந்தவர்களாக இருக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வேண்டும். இந்தியாவில் எல்லா மொழிபேசுபவர்களும் அவர்களுடைய பொருளாதார வளமையை, அரசியல் பாதுகாப்பை மற்ற மொழி பேசுபவர்களிடம் இருந்துதான் பெற்றுக்கொள்கிறார்கள். மொழி அடிப்படை பிரிவினால் மூலாதாரங்களை உருவாக்க முடியாது. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.

எனவே, மொழி அடிப்படையில் பிரிந்தால் அழிவுதான் ஏற்படும். இப்படி எல்லாம் இந்தியா சிதறுண்டால் மாநிலங்கள் வளர்ந்துவிடும் என்பது முதல் பாவத்திற்குப் பயப்படும் அறிஞர்களின் ஈரமான கனவுகள் மட்டுமே.

2. இந்து மதம் என்று சொல்லப் படும் என்ற பண்பாட்டைக் கூட பல சமயங்கள் இணைந்த ஒன்றாக கருத முடியுமா ?

பதிலளித்தவர்: திரு. ரவி ஐயர்

பதில்: இந்து என்பதை மதமோ அல்லது தர்மமோ இல்லை. ஆன்மீக ஆனந்தத்தை அடைவதற்கான ஒரு வாழ்வியல் முறையே இந்து மதம்.

பதிலளித்தவர்: திரு. களிமிகு கணபதி

பதில்: நீங்கள் சொல்வதுபோல இந்து மதம் என்பது பல சமயங்கள் சுதந்திரமாக இயங்கும் ஒரு பண்பாடு என்று கருதலாம். அது ஒரு பண்பாடு. பல சமயங்கள் இணைந்து செயல்படும் ஒரு தளம். மதம் என்பதை ஆபிரகாமியர்கள் என்ன பொருளில் உபயோகிக்கிறார்களோ அதே பொருளில் நாம் பயன்படுத்த முடியாது. ஆபிரகாமியர்களைப் பொறுத்தவரை மதம் என்பது கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு. ஆனால், இந்துக்கள் சொல்லும் மதம் வேறு. ஸமஸ்கிருதத்தில் “மதம்” என்றால் “கருத்து” என்பது பொருள். சைவ மதம் என்றால் சைவர்களின் கருத்து. சாக்கிய மதம் என்றால் பௌத்தர்களின் கருத்து. ஜைன மதம் என்றால் சமணர்களின் கருத்து. இப்படிப் பல கருத்துக்கள் பரஸ்பரம் வெளிப்படும், ஒன்றோடு மற்றொன்று உரையாடி தத்துவ ஆன்மீகப் புரிதல்களை உருவாக்கிக் கொள்ளும் ஒரு பண்பாட்டுத் தளமே இந்து மதம். நவீன காலத்து கம்ப்யூட்டர் வேலை செய்பவர்கள் பாஷையில் சொன்னால், இந்து மதம் என்பது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் ப்ளாட்ஃபார்ம்.

3. காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் ஆள் என்று சொல்லப்படுவது உண்மையா?

பதிலளித்தவர்: திரு. செல்வம்

பதில்: கோட்ஸே இந்துமகாசபையில் உறுப்பினராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியிலும் அவர் உறுப்பினராக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் வன்முறையை ஆதரிக்காததால், அந்த அமைப்பை கோட்ஸே ஆதரிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை காந்தியவாதம் போலவே, ஒரு மென்மைவாத அமைப்பாகக் கோட்ஸே கருதினார்.

அவரது காலத்தில் காஷ்மீர் மீது பாக்கிஸ்தான் படையெடுக்க முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தது. அப்போது பாக்கிஸ்தானுக்கு 55 கோடிகள் தரவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார் காந்தி. (பாக்கிஸ்தான் இந்தியாவிற்குத் தரவேண்டிய 300 கோடி பணத்தை அது இதுவரை தரவில்லை என்பதும், அதை யாரும் தரக்கோரி இதுவரை உண்ணாவிரதம் இருக்கவில்லை என்பதும் வேறு விஷயம். ஆதாரம்: https://www.indianexpress.com/news/past-receipts-pakistan-still-owes-india-rs-300-crore/485726/)

காந்தி கொடுக்கச் சொல்லும் அந்தப் பணம் கஷ்மீரில் உள்ள இந்தியர்களைக் கொல்லவே பயன்படும் என்று கோட்ஸே கருதினார். காந்தியைக் கொல்லுவதன் மூலம் முகமதியர்களின் வன்முறைக்கு ஆதரவு இல்லாமல் போய்விடும் என்று அவர் தவறாக நம்பினார்.

அவரும் அவருடைய நண்பர்களும் காந்தியைக் கொல்ல ஒரு சில முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்களது பெயர்களும், அவர்களது திட்டங்களும் போலீசுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் அவர்கள் யாரும் ஏனோ கைது செய்யப்படவில்லை. காந்தியின் கொலை தடுக்கப்படவில்லை.

எப்போதும் அரசு எதேச்சதிகாரத்திற்கு எதிராகச் செயல்படும் காந்தி பலருக்கு உறுத்தலாகவே இருந்தார். அவர்களுடைய நவீனமயமாக்கும் திட்டங்களுக்கு காந்தி பெரும் முட்டுக்கட்டையாக இருப்பார் என்று அவர்கள் பயந்தார்கள். காந்தியைக் கொல்லத் தேவையான சூழ்நிலையை அவர்கள் உருவாக்கினார்கள். உணர்ச்சிவயமான ஒரு தேசபக்தரான கோட்ஸே அந்தச் சூழலில் ஒரு பகடைக் காயாகிப் போனார். அவரது கோர்ட் வாக்குமூலத்தில் தெறிப்பது வெறும் உணர்ச்சிகள் மட்டுமே.

காந்தியைக் கோட்ஸே கொல்லாமல் இருந்திருந்தால் முகம்மதியர்களிடம் அஹிம்சை செல்லாது என்பதை காந்தி அறிவித்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

காந்தியைக் கொன்றதால், முகம்மதிய மதவெறிக்குக் காலை நக்கும் போக்கு இந்தியாவில் மாறிவிடவில்லை. இந்துக்கள் அடங்கிப் போகும் திம்மித்தனத்திற்கு ஊட்டம் அளித்ததை மட்டுமே கோட்ஸே சுட்ட துப்பாக்கிக் குண்டு சாதித்தது.

பதிலளித்தவர்: திரு. ரவி ஐயர்

பதில்: நாதுராம் கோட்ஸே – அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரா? ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும், இந்து மதத்தையும் மட்டம்தட்டுவதற்காக ஜவஹர்லால் நேருவால் செய்யப்பட்ட பிரச்சாரம் அது. தனது கடைசி மூச்சை விடும்போது, “ஹே ராம்” என்று காந்தி சொல்லவில்லை. இறந்து போன காந்தியின் வாயில் காங்கிரஸ் போட்டுவிட்ட வார்த்தை அது. பாக்கிஸ்தானுக்கு இந்தியா 55 கோடிகள் கொடுக்கவேண்டும் என்று கட்டாயம் செய்வதால் அவரை அழிக்க வேண்டும் என தன் நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். அவர் தான் கொலை செய்ததற்கான காரணங்களை கோர்ட்டில் சொல்லி இருக்கிறார். கூகிளில் தேடினால் கிடைக்கும்.

கேட்டவர்: செல்வி. சுமித்ரா

1. இந்தியாவில் வணங்கப்படும் கற்புக்கரசிகளில் ஒருவர் அனுசூயை. இவரது வாழ்க்கையை “அனுசூயா சரித்திரம்” என்ற வாய்மொழி வரலாற்று பாடல் விளக்குவதாகக் கேள்விப்பட்டேன். அக்காலங்களில், சில குறிப்பிட்ட விசேஷங்களின்போது இப்பாடல் பாடப்பட்டதாம். இந்தப் பாடல் யாரிடமாவது இருக்கிறதா?

பதிலளிப்பவர்: திரு. களிமிகு கணபதி

பதில்: அனுசூயா சரித்திரத்தை எங்களது தாய்வழிப் பாட்டி மனப்பாடமாக அறிவார். அவர் வாய்மூலமாகப் பாடியதை நாங்கள் சிறுவயதில் பென்சில், பேனா வைத்து இரண்டு நோட்டுப் புத்தகங்களில் எழுதி வைத்தோம். அவை எங்கள் வீட்டுப் பரணில் இருக்கும் என்று நினைக்கிறேன். அந்தப் பாடல்கள் எல்லாரும் அறிவதற்காக ஏதேனும் இணையதளத்தில் வெளியிட விரும்புபவர்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். இலவசமாக தர நாங்கள் தயாராக உள்ளோம்.

கேட்டவர்: திரு. தோழர். பொன்னரசு

1. அத்வைதத்திற்கும், விசிஷ்டாத்வைதத்திற்கும் என்ன வித்தியாசம்?

பதிலளிப்பவர்: திரு. ம. சண்முக வடிவேல், ஈக்காடுதாங்கல்

பதில்: ஜீவாத்மா, பரமாத்மா, மற்றும் பிரபஞ்சம் என்ற மூன்று விஷயங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் பரமாத்மாவே என்கிறது அத்வைதம். அதாவது, ஜீவாத்மாக்களும் பிரபஞ்சமும் அந்த பரமாத்மா அணிந்து கொள்ளும் வித்தியாசமான ஆடைகள் மட்டுமே என்கிறது அத்வைதம். ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும், பிரபஞ்சத்திற்கும் எல்லா வகைகளிலும் ஒரு வேறுபாடுகூட கிடையாது என்று அத்வைதம் கருதுகிறது. ஜீவாத்மாவான நாம் அந்தப் பரமாத்மா என்பதை அறிந்து கொள்வதே வாழ்வின் ஆகச் சிறந்த செயலாகும் என்று அத்வைதம் போதிக்கிறது.

ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் வேறு வடிவம்தான் என்று விசிஷ்டாத்வைதமும் சொல்லுகிறது. ஆனால், ஜீவாத்மா பரமாத்மாவில் முற்றிலும் கலந்துவிட முடியாது என்கிறது. பரமாத்ம சொரூபம் எனத் தன்னை உணரும் ஜீவாத்மா அந்தப் பரமாத்மாவை பக்தியுடன் வழிபட பரமாத்மாவிடம் இருந்து வேறுபட்டு விளங்குகிறது. அந்த ஒரு வேறுபாட்டைத் தவிர, ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் குணத்திலும், தன்மையிலும் எந்த வித்தியாசமும் இல்லை என்கிறது விசிஷ்டாத்வைதம். ஜீவாத்மாவாகிய நாம், நமது பரமாத்ம இயல்பை உணர்ந்து அந்தப் பரமாத்மாவை வழிபடுவதே வாழ்வின் ஆகச் சிறந்த செயலாகும் என்று விசிஷ்டாத்வைதம் போதிக்கிறது.

2. ஐயனார் என்றும் ஐயப்பன் என்றும் கும்பிடப்படுபவர் ஒரு பௌத்த இளவரசன் என்று கேள்விப்பட்டேன். இது குறித்த ஆதாரங்கள் யாருக்காவது தெரியுமா?

பதிலளிப்பவர்: திரு. சண்முக வடிவேல், ஈக்காடுதாங்கல்

பதில்: இந்த உலகத்தில் உயிரினங்களின் இருப்பும், செயல்பாடும் இணைத்தன்மை (parallel) கொண்டவை என்று இந்துக்கள் புரிந்துகொள்கிறார்கள். அதாவது, இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போதே வேறு ஒருவரும் இதைப் படித்துக்கொண்டிருக்கலாம். இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போதே, உங்கள் பையன் பக்கத்து வீட்டு மரத்தில் ஏறிக்கொண்டிருக்கலாம். உங்கள் பெண் பாட்டுப் பாடிக்கொண்டிருக்கலாம். இவை அனைத்தும் இந்த ஒரு கணத்தில் சாத்தியம் என்று இந்து மதம் சொல்லுகிறது. இந்த அனைத்துச் சாத்தியங்களும் ஒன்றை ஒன்று பாதிப்பதை சனாதன மதம் “கர்மா” என்கிறது.

ஆனால், ஆபிரகாமிய மதங்கள் ஒற்றைக்கோடாகவே (linear) சம்பவங்களைப் பார்க்கிறது. ஒரே ஒரு ஆண்டவன் முதலில் ஒரே ஒரு ஆணைப் படைத்தான். அவனில் இருந்துதான் பெண்ணைப் படைத்தான். அதில் இருந்துதான் அவர்களின் குழந்தைகளைப் படைத்தான். அதில் இருந்துதான் மற்ற சம்பவங்கள் நடந்து, வரலாறுகள் நிகழ்ந்து, சோனியா மெய்னோவும், ராவுல் காந்தியும் இந்தியாவைக் காப்பாற்றும் நிலை வந்துள்ளது என்றுதான் அவர்கள் விளக்குவார்கள்.

இந்த ஒற்றைக்கோட்டு பார்வையினால், பௌத்தர்கள் கட்டிய மடாலயங்களையே இந்துக்கள் பிடுங்கிக்கொண்டார்கள் என்றுதான் அவர்களுக்குத் தோன்றும். அவர்களைப் பொறுத்தவரை, ஒருகாலத்தில் பௌத்தர்கள் மட்டுமே சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களது பக்கத்து வீட்டில் இருந்த இந்துக்கள் எல்லாம் சைக்கிள் என்றால் என்ன என்பதுகூடத் தெரியாமல் இருந்தார்கள். அப்புறம், பௌத்தர்களிடமிருந்து சைக்கிளை இந்துக்கள் பிடுங்கிக்கொண்டு விட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்கு சுயமாக ஒரு சைக்கிளை உருவாக்கவோ, கடையில் போய் வாங்கவோ தெரியாது. ஏனென்றால், இப்போதைய இந்துமதம் பௌத்தர் காலத்திற்கு அடுத்துத்தான் வருகிறது. வரலாற்றை ஒற்றைக் கோடாகப் பார்ப்பவர்களுக்கு இப்படித்தான் கற்பனை செய்யத் தோன்றும்.

அந்தக் கற்பனையின் விளைவுதான் ஐயனார் ஒரு பௌத்த இளவரசர், இல்லை இல்லை, எகிப்து இளவரசன், இல்லை இல்லை, அலாவுதீனின் அற்புத விளக்கில் இருந்து வந்த பூதம் என்ற கற்பனை விளக்கங்கள் எல்லாம்.

ஆங்கிலேயர்களிடம் இருந்து காப்பி சாப்பிடக் கற்றுக்கொண்ட வைதீகர்கள், பௌத்தர்களிடம் இருந்து சரணம் போடுவதைக் கற்றுக்கொண்டிருக்கலாம். பௌத்தர்கள் வைதீகர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது போல வைதீகர்களும் பௌத்தர்களிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கலாம். ஒன்றை ஒன்று சார்ந்து கருத்துக்களைப் பெற்று வளர்ந்த இந்து மதங்கள்தான் பௌத்த மதமும், வைதீக மதமும். எனவே, இந்த மார்க்கசீய-ப்ராட்டஸ்டண்ட் கற்பனைகளுக்கெல்லாம் ஆதாரங்கள் கிடையாது. சூப்பர்மேனுக்கு இருக்கும் அறிவியல் ஆதாரம்கூட இந்தக் கற்பனைகளுக்கு இல்லை. ஆனால், நீங்கள் இதைப் போன்று பல கற்பனைக் கதைகளைப் பரப்பலாம். அதற்கு இந்த வ்கையில் யோசிக்கக்கூடிய கற்பனை வளம் மட்டும்தான் தேவை. அதையும் வளர்த்துக் கொள்ள ஒரு வழி இருக்கிறது.

இரும்பைக் கை மாயாவி, பைபிள், வேதாளன், சூப்பர் மேன், தாஸ்கேப்பிட்டல், மாண்ட்ரேக், ஸபைடர்மேன் போன்ற காமிக் புத்தகங்களைப் படித்தால் இதைப் போன்ற கற்பனை வளம் உங்களுக்கும் சித்தியாகும்.

பதிலளிப்பவர்: திரு. வி. சுப்பிரமணியம், புதுச்சேரி

பதில்: இந்துக்கள் கோயில்களைப் பற்றிய புராண, இதிகாசக் கதைகளையே வரலாறுக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். ஐயப்பன், ஐயன் என்ற தெய்வத்தைப் பற்றி எந்தப் புராணத்திலும் இல்லை. ஆனால், ஐயன் என்ற தெய்வம் வழிபடப்பட்டு வந்ததை நாட்டுப் பாடல்களும், கதைகளும் தெரிவிக்கின்றன.

ஸாஸ்தா என்ற தெய்வம் பற்றி ப்ரஹ்மபுராணத்தில் இருக்கிறது. இந்த ஸாஸ்தா என்கிற தெய்வம் பற்றிச் சொல்லப்படும் தகவல்களும், நாட்டுப் பாடல்கள் தெரிவிக்கும் ஐயனார் பற்றிய தகவல்களும் ஏறத்தாழ ஒன்றாக இருக்கின்றன.

பாண்டிய வம்சாவளியைச் சேர்ந்த ஐயன் எனும் இளவரசரை ஸாஸ்தா எனும் தெய்வத்தின் அவதாரமாக மக்கள் வணங்கினார்கள் என்று கருதப்படுகிறது. அவர் இந்த ஸாஸ்தா கோயிலை பொ.ச 13ம் நூற்றாண்டில் விரிவாக்கினார் என்றும் சொல்லப்படுகிறது.

சபரிமலையைப் பற்றி 1818ல் ஆய்வு நடத்திய பி. எஸ். வார்ட் எனும் ஆங்கிலேயர் சபரிமலை கோயிலுக்கு ஏறத்தாழ 4000 ஆண்டுகால வரலாறு இருக்கக்கூடும் என்று தெரிவிக்கிறார். அதாவது, புத்தரின் காலத்திற்கும் ஏறத்தாழ 2000 ஆண்டுகள் முந்தைய வரலாறு கொண்டதாக சபரிமலை ஐயப்பன் கோயிலைக் கருதலாம். ராமாயணத்தில் வரும் சபரிமலை குறிப்புகள், சபரி மலைக் கோயிலில் இப்போதும் இருக்கும் சபா சிரம், சபா பீடம் பற்றித் தெரிவிக்கின்றன எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

ஸாஸ்தா கோவில்கள் தென்னிந்தியா முழுவதும் உள்ளன. அவற்றில் பல 3000 முதல் 4000 ஆண்டுகள்வரை பழமையானவையாக இருக்கக்கூடும்.

இப்போதைக்குக் கிடைக்கும் புராணக் கதைகள் ஸாஸ்தா, வாவர் போன்ற பல இந்துத் தெய்வங்கள் பற்றிச் சொல்லுகின்றன. அவற்றின் துணையோடு நமது ஆலயங்கள் எல்லாம் ஆராய்ச்சி செய்யப்படவேண்டும்.

கேட்டவர்: திரு. ஆர். சுந்தரேசன்

1. பாரதியார் எழுதிய பகவத் கீதை விளக்க உரை இப்போது கிடைப்பதில்லை. அது எங்கே கிடைக்கும்?

பதிலளித்தவர்: திரு. ஜடாயு

பதில்: தமிழ்ஹிந்து தளத்திலேயே மின் நூலாக உள்ளது – https://tamilhindu.com/2008/08/bhagavath_gita_bharathiyar/

கேட்டவர்: திரு. ஆர். சுரேஷ்

1. போதாயண அம்மாவாசை என்றால் என்ன? அது குறித்த புராணக் கதை என்ன? வானவியலின் அடிப்படையில் அதை யாரேனும் விளக்கினால் நன்றி உடையவன் ஆவேன்.

பதிலளிப்பவர்: திரு. ஜலகண்டேஸ்வரன்

பதில்: அம்மாவாசை, பௌர்ணமி காலங்களில் கிரகங்களின் தாக்கம் தீவிரமாக இருக்கும். இக்காலங்களில் இந்த வானவியல் காரணங்களால்தான் கடலில் ஓதம் போன்றவை ஏற்படுகின்றன. மனிதர்களையும் இந்த நாட்கள் பாதிக்கின்றன. இந்த நாட்களில் நமது நனவிலி மனத்தின் சக்தியைத் தூண்டுவது எளிதாக இருக்கிறது. மனிதர்கள் மனப்பூர்வமாகச் செய்யும் எந்தக் காரியமும் அந்த சக்தியுடன் ஆற்றல் மிக்கதாக மாறும்.

வழக்கமாக அம்மாவாசை, பௌர்ணமி போன்றவை ஒரு நாள் மட்டுமே நீடிக்கும். ஆனால், போதாயண அம்மாவாசை காலத்தில் அம்மாவாசையானது இரண்டு நாட்கள் நீடிப்பதால் அது சிறப்பானதாகக் கருதப் படுகிறது. அந்த நாளில் மட்டும் அம்மாவசைக்கு முந்தைய நாளில் இருந்தே அம்மாவாசை ஆரம்பிப்பதாகக் கருதப்படுகிறது. அந்த முந்தைய நாள் போதாயண அம்மாவாசை என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ஒரு நாள் மட்டுமே நீடிக்கும் சக்தி மிகுந்த அம்மாவாசை காலம் இரண்டு நாட்கள் நீடிக்கின்றது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வானவியல் நம்மை அறிவுறுத்துகிறது.

இந்த வருட போதாயண அம்மாவாசை ஜூன் 11லும், செப்டம்பர் 7லும் வந்து போயிற்று.

மகாபாரதப் போரில் வெற்றி பெற, பூஜை செய்ய ஒரு நாளைக் குறித்துக் கொடுக்குமாறு துரியோதனன் சகாதேவனைக் கேட்டான். சகாதேவன் ஒரு அம்மாவாசை நாளைக் குறித்துக் கொடுத்தான். அந்த நாளில் அவன் பூஜை செய்தால் அதர்மம் வெற்றி பெற்றுவிடும் என்பதற்காக, கிருஷ்ணர் ஒரு திருவிளையாடலைச் செய்தார். அம்மாவாசைக்கு முந்தைய நாளில் கிருஷ்ணர் தர்ப்பணம் செய்ய ஆரம்பித்தார். இதனால் குழப்பம் அடைந்த சூரியனும், சந்திரனும் கிருஷ்ணரிடம் வந்து, “நாளைக்குத்தானே அம்மாவாசை? இன்றே ஏன் தர்ப்பணம் செய்கிறீர்கள்?” என்று கேட்டனர். “சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் இருப்பதுதான் அம்மாவாசை. நீங்கள் இருவரும் இன்றே என் முன்னால் நேர்கோட்டில் இருப்பதால் இன்று அம்மாவாசை வந்துவிட்டது. அதனால், நான் தர்ப்பணம் செய்தது சரிதான்” என்று சொல்லிவிட்டார் கள்ளனான கண்ணன். அன்றிலிருந்து நாம் போதாயண அம்மாவாசையைக் கடைபிடிக்கிறோம்.

அன்று பித்ரு தர்ப்பணம் செய்வது விசேஷமானது. பொதுவாக, நமது முன்னோர்களுக்கு மட்டுமின்றி தர்மம் வெல்லுவதற்காக பலிதானம் செய்த அனைத்து பித்ருக்களுக்கும் சேர்த்து ச்ரார்த்தம் செய்தால் வழக்கமான பலன்களைவிட, பலகோடி மடங்குப் பலன்களை தர்ம தேவதை நமக்குத் தரும் என்பது பெரியோர்கள் வாக்கு.

கேட்டவர்: திரு. ஆர். ஸ்ரீதரன்

1. பாரத நாட்டைப் பிரித்ததின் பின் புலத்தில் நடந்த சதிகள், அவற்றை அரங்கேற்றியவர்கள் பற்றிச் சொல்ல முடியுமா?

பதிலளித்தவர்: திரு. தஞ்சை வெ. கோபாலன்

பதில்: அருமை ஆர்.ஸ்ரீதரன் அவர்களே, உங்கள் கேள்வி மிக முக்கியமானது. பாரத நாடு துண்டாடப்பட வேண்டும் எனும் கருத்து எப்போது உதயமானது என்பதை அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். உலக முழுதும் இஸ்லாமிய நாடுகள் பல இருக்கின்றன. இந்தோனேஷியா பெரும்பான்மையான இஸ்லாமியர் வாழும் நாடு. அப்படி இருக்கையில் பாரத நாட்டை இரண்டாகப் பிரித்து ஒரு புதிய இஸ்லாமிய நாடு எதற்காக என்பது நியாயமான சந்தேகம். இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு (அனேகமாக அறுபதுகளாக இருக்கலாம்) ஒரு ஆங்கில பத்திரிகையில் வந்த செய்தி. நினைவில் இருப்பதை சொல்கிறேன். ஒரு முறை லண்டன் நகரில் ஒரு பெரிய ஓட்டலில் நடந்த பார்ட்டியில் மது அருந்தும் போது ஒரு வெள்ளைக்காரர் முகமது அலி ஜின்னாவிடம், மிஸ்டர் ஜின்னா, இந்தியாவில் உங்களுக்குள் இருக்கும் இந்த கருத்து வேற்றுமையினால் நீங்கள் ஏன் உங்களுக்கு என்று ஒரு இஸ்லாமிய நாட்டைப் பிரித்து வாங்கக்கூடாது? என்றாராம். அதுவரை அந்த சிந்தனை இல்லாமல் இருந்த மிஸ்டர் ஜின்னா அதுமுதல் இந்த கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கினாராம். மற்ற விவரங்கள் என் நினைவில் இல்லை.

பதிலளித்தவர்: திரு. சஹ்ரிதயன்

பதில்: பதிலுக்கான குறிப்பு: இந்த புத்தகத்தில் இவை விரிவாக பேசப்பட்டுள்ளதாக உணர்கிறேன் – இந்திய வரலாறு, காந்திக்குப் பிறகு – பாகம் 1

https://www.nhm.in/shop/Ramchandra-Guha.html

சுருக்கமாக வரிசைப்படியாக காரணமான மனிதர்கள்: ஜின்னா, நேரு, பிரிட்டிஷ், மற்றும் சில விஷயங்களை தாமதமாகக் கவனித்த காந்தி.

கேட்டவர்: திரு. ஜி. பிரபு

1. இந்தியாவில் இருக்கும் ஜிகாதி வன்முறைவாதத்தை எப்படி அழிக்கலாம்?

பதிலளித்தவர்: ஆர். பாலாஜி

பதில்: திரு ஜி.பிரபு,
ஜிகாத் பயங்கரவாதத்தை அழிப்பது சுலபமல்ல. இந்தியாவில் அழிப்பது எப்படி என்று கேட்டாலும் அதன் எல்லைகளற்ற இலக்குகளை புரிந்து கொண்டாக வேண்டும்.

(1) ஜிகாத் உலகளாவிய பிரச்சினை. தீர்வும் கிட்டத்தட்ட உலகளாவிய முறையாக இருந்தால் மட்டுமே நடைமுறை சாத்தியப்படும்.

(2) ஜிகாத் என்பதை முழுவதும் அழிப்பது நடைமுறை சாத்தியமற்றது. ஆனால் பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

(3) நவீனர்கள் கூறும் “ஏழ்மையை ஒழித்து விட்டால் பயங்கரவாதம் ஒழிந்து விடும்” என்பது பகல் கனவு.

(4) உலகளாவிய ஜிகாத்தை புரிந்து கொள்ள முதலில் அதன் ஆயுதங்களை அறிய வேண்டும். நவீன ஜிகாத்தின் முதல் ஆயுதம் கஞ்சா கடத்தல்-> அதனால் கிடைக்கும் பணம் -> அது பரவும் ஹவாலா முறை -> பணத்தால் கிடைக்கும் ஆயுதங்கள்.

இந்த சுழற்சியில் இந்தியாவால் செய்யக்கூடியது மிகவும் குறைவு. காரணம் உலக அளவில் பிரசித்தி பெற்ற, உலகின் பல பாகங்களில் கிளைகளை உடைய இந்திய வங்கிகள் நம்மிடம் இல்லை. அமேரிக்காவும் அதன் கூட்டாளிகளையும் நண்பர்களாக்கி கொண்டால் மட்டுமே நம்மால் வாழ முடியும். உலகளாவிய ஜிகாத்தின் பணப் பட்டுவாடாவை மேற்கத்திய வங்கிகளின் மூலம் அறிந்து அவற்றை முடக்குவது அதன் தொடக்கம். (அவர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்.)

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு வரும் பணத்தை கண்காணிப்பது இரண்டாவது நிலை.

அடுத்து உள்நாட்டு அடிப்படைவாத குழுக்களை கட்டுக்குள் வைப்பது. சிக்கலானது. குறிப்பாக இன்று இந்தியாவில் காஷ்மீரைவிட அதிக அடிப்படைவாத சமூகத்தை உருவாக்க கேரளாவில் உள்ள சில அமைப்புகள் முயல்கின்றன.அரசியல் ரீதியாக இதை எதிர்கொள்ள கம்யூனிஸ்டுகள் தடுமாறுகிறார்கள். காங்கிரஸ் நேரடியாக இதை பேச விரும்பாது. இந்த நிலையில் ஒரு வலிமையான மத்திய அரசு அமைந்தால் மட்டுமே இந்த அடிப்படைவாதத்தை எதிர்கொள்ள முடியும்.

“Everything comes to money” என்று கூறுவார்களே! அதைப்போன்று வெளிநாடுகளிலிருந்து வரும் பணத்தை கண்காணிப்பதால் மட்டுமே கேரளாவிலோ மற்ற மாநிலங்களிலோ மதராஸாக்களையோ அல்லது அடிப்படைவாத அமைப்புகளையோ உருவாகாமல் தடுக்க முடியும்.

பன்முனை எதிர்தாக்குதல்கள் இருந்தால் மட்டுமே வரும் காலங்களில் நம்மால் தாலிபான்களின் தாக்குதல்களிலிருந்து தற்காத்து கொள்ள முடியும்.

https://www.tehelka.com/story_main47.asp?filename=Ne091010Coverstory.asp

மேற்கூறிய தகவலை படியுங்கள். இந்த பத்திரிகை இடதுசாரி சார்பு உடையது. அவர்களே இப்படி எழுதினால் உண்மை எப்படி இருக்கும் என்று நீங்கள் ஊகித்து கொள்ளலாம். சவூதியிலிருந்து வரும் பணம், சமூக சேவை என்னும் பெயரில் நடக்கும் மதமாற்றங்கள் மற்றும் மூளை சலவைகள், அரசாங்கத்தின் மந்தத்தனம் போன்றவற்றை தெளிவாக விளங்கி கொள்ளலாம்.

36 Replies to “தமிழ் இந்துவில் உரையாடுங்கள் – பதில்கள்”

  1. Pingback: Indli.com
  2. நல்ல பணி.

    கட்டுரையின் இறுதியில் பரிந்துரைக்கப் பட்டுள்ள தெகல்கா கட்டுரையை படிக்கமாறு அனைவரையும் நான் வலியுறுத்துகிறேன். இவ்வளவு விரிவாக, கேரளத்தின் வேர் கொண்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பேசும் கட்டுரையை இந்திய ஊடகங்களில் பார்க்க முடிவது அபூர்வம். இந்த கட்டுரை அத்தகைய அபூர்வம்.

    இதே தெகல்கா சில வருடங்களுக்கு முன் ஒரு கட்டுரை வெளியிட்டுருந்தனர், கிறித்துவ மிஷநரிகள் இந்தியாவை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவது குறித்து. அதையும் படியுங்கள். இணைப்பு கீழே :

    https://www.tehelka.com/story_main.asp?filename=ts013004shashi.asp

  3. ‘அனுசூயா’ என்பது தவறான உச்சரிப்பு. ‘அனசூயா’ என்று உச்சரித்தாலே சரியாகும்.அதற்குப் பொருள்:அசூயை இல்லாதவள்.

  4. Everyone has done good thorough work.
    And they have given lucid,crisp and razor sharp answres.
    Briiliant.
    Ippadai thorkin eppadai vellum?

  5. assuming that babar has demolished a temple and built a mosque he has only carried forward the traditions of erstwhile hindu kings. many hindu kings have demolished buddhist shrines and constructed saiva temples over there. may be some buddhist can file a case based on the above judgement and get back part of the land of puri jagannathar temple which was once a buddhist shrine.

    check out the below from writer gnani’s website:

    இன்னொருத்தர் வழிபாட்டு இடத்தை இடிப்பது இஸ்லாமிய நெறிகளுக்கு மட்டும்தான் முரணானதா? ஹிந்து, கிறித்துவ, பௌத்த மதங்களெல்லாம் அதை ஆதரிக்கிறதா? ஏனென்றால் இப்போது மறுபடியும் ராமர் கோவிலைக் கட்டுவதற்கு, வழிபாடு நடந்து வந்த மசூதிதானே இடிக்கப்பட்டிருக்கிறது ? இது ஹிந்து மத கோட்பாட்டின்படி சரி என்று நீதிபதி சொல்வதாகப் பொருள் கொள்ளமுடியுமா? எந்த மத நெறிப்படியும் இன்னொரு மத வழிபாட்டிடத்தை இடித்தோ சிதைத்தோ தங்கள் வழிபாட்டிடத்தை கட்டக் கூடாது என்றால், இந்தியாவில் எத்தனை கோவில்கள், மசூதிகள், தேவலாயங்கள் மிஞ்சும் ?

    பூரி ஜகந்நாதர் ஆலயமே பௌத்த விஹாரத்தை இடித்துக் கட்டப்பட்டதுதான் என்று சுவாமி விவேகானந்தரே சொல்லியிருக்கிறார். பூரியில் மட்டுமல்ல, காஞ்சிபுரத்தில் இருக்கும் ஆலயங்கள் பலவும் முன்னர் பௌத்த விஹாரங்களாக இருந்தவைதான் என்பதற்கு தெளிவான சரித்திர ஆதாரங்கள் இருக்கின்றன. சிருங்கேரியில் ஆதி சங்கரர் மடம் கட்டிய இடம் புத்த விஹாரத்தை இடித்துத்தான். ராஜராஜ சோழன் இலங்கையில் சிங்களர்களை வென்றதும், அங்கிருந்த புத்த விஹாரங்களை இடித்து, சைவக் கோயில்களாக மாற்றினான் என்பதும் சரித்திரம்தான். இனி பௌத்தர்கள் இயக்கம் நடத்தி இவற்றையெல்லாம் இடித்து மறுபடி பௌத்த விஹாரங்களாக ஆக்கவேண்டும் என்று நீதிமன்றத்துக்குப் போனால், சர்மாவின் முன்மாதிரித் தீர்ப்பின்படி இடிக்க ஒப்புக் கொள்ள வேண்டி வரும்.

  6. எந்த ஹிந்து நூலும்,தத்துவமும்,மாற்றாருடைய வழிபாட்டுத் தளங்களை இடிக்கும்படிச் சொல்லவில்லை.

    ஹிந்துக்கள் பவுத்தர்களது கோயில்களை இடித்தார்கள் என்பதெல்லாம் முஸ்லீம் படைஎடுப்பாளர்கள் செய்த அக்கிரமங்களுக்கு வெள்ளைச்சாயம் பூசுவதற்காக இப்போது ஹிந்து விரோதிகள் கண்டுபிடித்த பொய்கள்
    ஆனால் நாலந்தாவில் இருந்த புத்த விஹாரம்,மற்றும் உலகிலேயே சிறந்த கலாசாலை, நூல்நிலையம் இவற்றை முஸ்லீம்கள் அழித்தனர் .
    இவ்வளவு ஏன் நம் காலத்திலேயே, பாமியன் புத்தரை பீரங்கி வைத்து ஆப்கானிஸ்தான் முஸ்லீம்கள் தகர்த்தனர்
    காஞ்சிபுரத்தில் பல புத்த விஹாரங்கள்,சமண கோயில்கள் இருந்தன. மேலும் காஞ்சிபுரம் பவுத்த ,சமண கல்வி கற்கும் இடமாகவும் இருந்தது. அங்கு சீனாவிலிருந்தும் வந்து கற்றனர் என்பது வரலாறு.

    சுவாமி விவேகனந்தர் முஸ்லீம்களின் கொடூரத்தை இவ்வாறு விவரிக்கிறார்.
    ‘The muslims brought murder and slaughter in their train,and until their arrival peace prevailed in the world.’

  7. அல் பெருனி என்ற முஸ்லீம் யாத்ரிகர் ‘ ஹிந்துக்கள் முஸ்லீம்களை வெறுப்பதற்குக் காரணம் அவர்கள் ( முஸ்லீம்கள் ) இராக்,பாரசீகம்,கொரசான் ,மொசுல் ,சிரியா இங்கிருந்தெல்லாம் பவுத்தர்களை அழித்ததும் , துரத்தியதும்தான் என்று கூறுகிறார்.

  8. சுவாமி விவேகனந்தர் மேலும் கூறியுள்ளார் ‘ ஐநூறு ஆண்டுகள் பசிபிக் மஹா சமுத்ரம் முதல் அட்லாண்டிக் சமுத்ரம் வரை குருதி பாய்ந்தோடியது.அதுதான் இஸ்லாம்’.

  9. @ NAVEED

    வைதீக மதத்தார் பௌத்த ஆலயங்களை “இடித்துக்” கோயில் கட்டினார்கள் என்று சொல்லுகிறீர்கள். அதற்கு நிறைய வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன என்று சொல்லுகிறீர்கள். இந்திய மார்க்கஸிஸ்ட் அறிஞர்களும் இதைத்தான் சொல்லுகிறார்கள்.

    ஆனால், ஆதாரங்களைக் காட்டுங்கள் என்று கேட்டால் அப்போது நீங்கள் சொன்னதெல்லாம் வெறும் பொய்யான கதைகள் என்பது தெரிகிறது.

    பொய் சொல்ல வெட்கமாக இல்லையா?

    ஒரே ஒரு இந்துக் கோயிலில் பல தெய்வங்கள் உண்டு. ஒவ்வொரு காலத்திலும் ஒரு தெய்வம் பிரபலமாகி அந்தக் கோயில் அந்தத் தெய்வத்திற்கான ஒன்றாக அழைக்கப்படுவதும், மற்றொரு காலத்தில் மற்றொரு தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுவதும் எப்போதும் நடந்துவருவதுதான்.

    பூரி ஜகன்னாதர் கோயில் பௌத்தர்களது கோயிலாக அழைக்கப்பட்டது உண்மைதான். பிறிதொரு காலத்தில் அது விஷ்ணுவின் கோயிலாக அழைக்கப்படுவதும் உண்மைதான்.

    இந்த மாறுதல்கள் இயல்பான மாறுதல்கள். புத்தரே விஷ்ணுவின் அவதாரம் என்றுதான் இந்துக்கள் கருதுகிறார்கள்.

    இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற இந்து நாடுகளில் உள்ள கோயில்களில் சிவலிங்கமும், புத்தரின் சிலையும், விஷ்ணுவும் இணைந்து இருப்பதைக் காணலாம். அதைப் போன்ற ஒரு இடம்தான் பூரி ஜகன்னாதர் கோயிலும். எனவே, அது இப்போது விஷ்ணுவின் கோயிலாகக் கருதப்படுகிறது.

    துலுக்கரைப் போல ஓரிறைக் கோட்பாடுள்ளவர்கள் மட்டும்தான் இருப்பதை அழித்துவிட்டு தங்களுடையதை ஏற்படுத்துவார்கள். இந்து மதங்கள் இருப்பதோடு புதியவற்றை இணைத்து மேலும் புதிய ஒன்றை உருவாக்குவார்கள்.

    இந்துக்களின் இறையியல் மனிதர்கள் உன்னதமான நிலையைத் தொடர்ந்து அடைந்துகொண்டே இருப்பது பற்றிப் போதிக்கிறது. டார்வின் சொல்லும் எவலூஷன் இந்துக்களின் புராணங்களில் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், உங்களைப் போன்ற ஆபிரகாமியர்களுக்கு ஒன்றை அழித்துத்தான் மற்றொன்றை உருவாக்கத் தோன்றும். மஞ்சள் காமாலை வந்தவனுக்கு பார்ப்பதெல்லாம் கருநாநிதியின் துண்டுதான்.

  10. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு அவர்களை முலீம்கள் இவ்வாறு பேச முடிகிறது.
    அனால் பாகிஸ்தானில் ஒரு ஹிந்து குறைந்த பட்ச உரிமையைக் கூடக் கேட்க முடியாது. முஸ்லீம்களுக்காக பாகிஸ்தானைக் கொடுத்த பின்பும் ஹிந்துக்கள் முஸ்லீம்கள் மீது எந்த வெறுப்பும் காட்டாமல் இருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்களது சமயமே காரணம். நவீத் போன்றவர்கள் இதை உணர்ந்து பெரும்பான்மை ஹிந்து சமூகத்தின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பூ விழுந்தால் நீ தோற்றாய். தலை விழுந்தால் நான் ஜெயித்தேன் என்று எதோ தாங்கள் மட்டுமே மனிதர்கள், தங்களுக்கு மட்டுமே எல்லா உரிமையும் உள்ளது என்று நினைக்கக் கூடாது.

  11. இந்த மண்ணின் உணவைத் தின்று கொண்டு ,சீனாவுக்கு வால் பிடிக்கும் தேச துரோக கம்யுனிஸ்டுகள் சொல்வதெல்லாம் கடைந்தெடுத்த பொய்களே.
    ராம ஜன்ம பூமி வழக்கில் அவர்களது சாயம் ‘கதையில் வரும் குள்ள நரியின் சாயம் போல்’ வெளுத்ததை நாம் எல்லோரும் பார்த்தோம்.
    இங்கே வாய் கிழிய ‘ஜனநாயகம், உரிமைகள்’ என்று கத்தி , முஸ்லீம்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளும் அவர்கள் இஸ்லாமிய நாடுகளில் கம்யுனிஸ்ட் கட்சிகளை நிறுவக் கூட முடியாது.
    அதே போல் கம்யுனிஸ்ட் சீனாவில் முஸ்லீம்கள் வாயைத் திறக்க முடியாது.

  12. சமீபத்தில், ஹனுமார் இலங்கைக்கு பறந்து சென்ற போது பௌத்த விஹரகங்களை பார்த்ததாக வால்மீகி இராமாயணத்தில் இருக்கிறது என்று படித்தேன்.

    இது உண்மை தானா? ஆதாரம் இருக்கிறதா?

  13. சிருங்கேரியில் ஆதி சங்கரர் மடம் கட்டிய இடம் புத்த விஹாரத்தை இடித்துத்தான் – Naveed.

    மேற்படி கருத்து சிரிப்பை வரவழைக்கிறது. ஆதி சங்கரர், சிருங்கேரியில் சந்தனத்தினால் ஆன சாரதா விக்ரகத்தை மட்டுமே srichakarathil பிரதிஷ்டை செய்தார். பிற்காலத்தில் வித்யாரண்யர் தங்கத்தினால் ஆன சாரதா சிலையை பிரதிஷ்டை செய்தார். (இன்னும் சந்தனத்தினால் ஆன சிலையை வித்யாதீர்த்தர ஆலயத்தில் காணலாம்). சிவபினவ பாரதி மற்றும் சந்திர சேகர பாரதி காலத்தில் சாரதா கோவில் எடுத்து கட்டப்பட்டது. அதற்கு முன் பெரிய ஆலயம் கிடையாது. சாரதா ஆலயமும் மிக பெரியது அல்ல.

    சாரதா கோவிலை தவிர சிருங்கேரியில் உள்ள பெரிய ஆலயம் என்றால் வித்யாஷங்கர் சமாதி இருக்கும் ஆலயமே. இது பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்ட பட்டது.

    விஷயம் தெரியமால் மக்களை எந்த அளவுக்கு குழப்ப முடியும் என்பதற்கு, நண்பர் நவீதின் கருத்து ஓர் ஆதாரம். அவர் என்ன செய்வார் பாவம் யாரோ கூறியதை எழுதியிர்கிறார்.

  14. @ R.Sridharan

    i fully agree with you about the rights of an ordinary muslim in india. almost there is no other muslim nation where minorities have this much rights as muslims have in india. there is nothign to speak about pakist*n. it has been a rog*e nation and it will remain so forever.

    however it doesnt mean that we muslims have to take down all the abuses being made on us because of pakistan’s actions.

    @வரதராசன்

    ஆதாரம் கேட்டு எந்த மறுமொழியும் வரவில்லை. ஆதாரம் கேட்கலமையே கேட்டதாக பொய் சொல்கிறீர்களே உங்களுக்கு வெக்கம், மானம், சூடு, சூரனை ஏதும் இல்லையா? என்று என்னாலையும் கேட்க முடியும்.

    நான் பள்ளியிலும் கல்லூரியும் படித்ததை தான் சொன்னேன்.
    Indian History (11th and 12std)
    Glimpses of world history – Jawaharlal Nehru
    A brief history of Srilanka – Lambert

    google about pushyamitra of sunga dynasty and you can find about the amount of destruction he has caused to buddhist temples.
    ஏன் ? போத்கயாவில் சிவலிங்கததை வைத்து பூஜை பண்நவில்லையா?அதற்கு புத்தர் சிவனுடைய அவதாரம் என்று வேறு சப்பைக்கட்டு. நீங்கள் செய்தால் சரி மற்றவர் செய்தால் தவறு.

    How do you think buddhism was completely wiped out of the country in which it was founded. they decided to pack their bags and leave to east asia? it is because of the meticulous planning and ruthless destruction by the then hindu kings and brahmins.

    Buddha was also included as avatar of vishnu only from 7th century and not before only to counter the conversion of people to buddhism.

    how many buddhists say that they are hindus. well i havent seen or heard any. Now and then RSS and its sidekick VHP tries to propogate that sikhs are also offshoot of hindus only. shiromani gurudwara fortunately opposes such propoganda and nip it in the bud then and there.
    Sadly there are no buddhist left in india now (thanks to erstwhile hindu rulers) to refute your sayings. so you can keep on saying that both religions and temples are one and same.

    Puri jagannathar temple or the temples in kanchipuram can have their life since there are no buddhist to make a claim for them now. but one can only hope that atleast the mahabhodhi temple is left as a buddhist shrine.

  15. @ Naveed

    பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்புப் பாட புத்தகங்களில் ஆதாரம் இருப்பதாகச் சொல்லும் நீங்கள் அந்த ஆதாரக் கருத்துக்களை மறுமொழியாகக் காட்டி இருக்க வேண்டும். ஆனால், புத்தகத் தலைப்புக்களைத் தாண்டி ஆதாரங்கள் நகரவில்லை.

    புஷ்யமித்திரர் பற்றிய பொய்களை தமிழகப் புத்தெழுச்சி அறிவியக்கத்தின் முன்னோடியான திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் ஏற்கனவே தூள் தூளாக உடைத்துவிட்டார். “புஷ்யமித்திரரும் பிரச்சாரப் படுகொலைகளும்” என்ற அவருடைய கட்டுரையை தயை செய்து படிக்கவும். இந்தக் கட்டுரை “பண்பாட்டைப் பேசுதல்” என்ற புத்தகத்தில் உள்ளது.

    (பிகு: பரபரப்பான புத்தகம் என்பதால் இந்தப் புத்தகம் கிடைப்பது அரிதாக இருக்கிறது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்.)

    பௌத்தம் இந்தியாவில் அழிந்துபோனதற்கு இசுலாமியர்களின் கொடூரங்களே காரணம் என்று அண்ணல் அம்பேத்கார் ஆய்ந்து உண்மைகளைச் சொல்லிவிட்டார். ஆதாரங்கள் இல்லாது எந்த ஆய்வு முடிகளையும் அண்ணல் முன்வைக்கவில்லை. இந்துத்துவ ஆய்வாளர்களில் முக்கியமானவரான அண்ணல் அம்பேத்காருடைய புத்தகங்களைப் படிக்கவும்.

    இலங்கையில் பின்பற்றப்படும் நவீன பௌத்தம் கிறுத்துவத்தின் மற்றொரு வடிவம். அது மரபான பௌத்தம் இல்லை.

    அதை ஆரம்பித்தவர் ஒரு கிறுத்துவர். புனிதமான பௌத்த துறவி வேடம் அணிந்தவர். ஆனால், பௌத்த தத்துவத்தில் புலமை உடையவர். நம் தமிழ்நாட்டில், சைவத் துறவிகள் போட வேடம் போட்டு இருந்த வீரமாமுனிவர் மாதிரி. வீரமா முனிவர் தன்னை ஒரு கிறுத்துவன் என்றே சொல்லிக்கொண்டார். ஆனால், நம்மாள் தன்னை ஒரு பௌத்தர் என்று சொன்னார். இந்து மதத்திற்கு எதிரானதாக பௌத்த மதத்தைக் காட்ட கிறுத்துவ மதத்தால் உருவாக்கப்பட்டவர் இந்த ஆள்.

    அவர் ஆரம்பித்த மகாபோதி ஸொஸைட்டி கௌதம புத்தரின் கருத்துக்களைச் சொல்ல அது ஆரம்பிக்கப்படவில்லை. இந்துக்களுடன் சண்டை போடுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இந்த பௌத்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் தமிழர்களைக் கொன்று தீர்த்தார்கள். அதுவும் இந்துக்களான தமிழர்களை மட்டுமே.

    அந்த ஆள்தான் புத்தகயாவிற்குச் சென்று அங்கு இந்துக்களும் பௌத்தர்களும் ஒன்றாக வணங்கி வருகிற பௌத்தத் தலத்தில் இந்துக்களுக்கு உரிமை இல்லை என்று பிரச்சினை செய்தார். இந்தப் பிரச்சினையில் வேறு எந்த மரபான பௌத்த அமைப்புக்களும் ஆர்வம் காட்டவில்லை. இன்றும், அங்கு இந்துக்களும் பௌத்தர்களும் சேர்ந்துதான் அந்தப் புனித தலத்தை நிர்வகிக்கிறார்கள்.

    ஆனால், இந்த உண்மைகளெல்லாம் உங்களுக்குத் தெரியக்கூடாது என்று மார்க்கஸிஸ்ட்டுகள் பொய்களையும், புரட்டுக்களையும் பரப்புகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.

    வரலாற்றை திரித்துப் பார்ப்பதுதான் மார்க்ஸ் உண்டாக்கிய மார்க்கஸியம்.

    இணையதளங்களில் அள்ளி வீசப்படுகிற இந்த மார்க்கஸிஸ்ட்டுகளின் பொய்களை நீங்கள் நம்புவது உங்களது புத்திசாலித்தனத்தை நீங்களே இகழ்ந்துகொள்வதற்குச் சமம்.

  16. தமிழகப் புத்தெழுச்சி அறிவியலாளரான அரவிந்தன் நீலகண்டனின் ”புஷ்யமித்திரரும் பிரச்சாரப் படுகொலைகளும்” கட்டுரை திண்ணை இணைய இதழில் உள்ளது.

    படிக்க விரும்புபவர்களுக்கு: https://www.thinnai.com/?module=displaystory&story_id=20702087&format=html

  17. naveed
    who is abusing you here in India.
    In fact the muslims are praised sky high not by muslims but by the Hindus themselves
    when terrorists are looked upon bordering on adulation by the Congress,communists,media, so -called intellectuals ( who are 99 % Hindus) where is the question of abusing ordinary muslims.

    Thanks for the observation pakisthan is a rogue nation
    One correction- the rulers of pakisthan are rogues.
    They try to convert good people into rogues.

  18. Naveed, your assertion that Puri Jagannath and other shrines were Buddhist temples/viharas has absolutely no literary, archaeological, or any other kind of sound evidence. It is only based on Marxist historians’ sources, which ultimately is just a bunch of quotations from other Marxist historians.

    According to Hindu Agama sastras, no Vishnu/Siva temple can be raised on land occupied by other structures. Hindu Dharmasastras clearly prohibit Brahmins and others who observe Acharam from going near Buddhist viharas.

    From Tamil Sangam time, temples have existed in Tamil Nadu. Check out Tamil Sangam literature. Rely on some proper original research. Do not be fooled by false information given by Marxists. They do not serve the cause of Indian Muslims, rather it ultimately makes you believe in useless cock-a-doodle-do and the rest of the folks would see you as laughing stock. Aravindan has written a very nice article on Tamilpaper about Indian Muslims believing in Marxist sources. Please read it.

  19. Dear Varadarajan,

    // பூரி ஜகன்னாதர் கோயில் பௌத்தர்களது கோயிலாக அழைக்கப்பட்டது உண்மைதான். பிறிதொரு காலத்தில் அது விஷ்ணுவின் கோயிலாக அழைக்கப்படுவதும் உண்மைதான். //

    There is no evidence to the above. Please refer to authoritative sources, and not like our Muslim friends who rely on hearsay.

  20. ஏம்பா நவீது, ரொம்ப தான் சமணத்துக்கும் புத்ததுக்கும் வருத்தபடரமாதிரி தெரியுது!! சரி வாங்க, புத்தகயா போய் புத்தர கும்பிடுவோம்.தர்மஸ்தல போய் மகாவீரரை கும்பிடுவோம். நான் ஹிந்து,ரொம்ப தயாரா தான் இருக்கேன்.ரெண்டு முணு தப போய் கீறேன் அங்க!

    அப்ப நீங்க??!! ஓ நீங்க உருவம் இல்லாத முஹம்மதை மட்டும் தான் கும்டுவீங்க இல்லையா?! ஒ, அல்லாவா அவரு! சாரி பா,கன்புசன் ஆயுடுது,

    ஏன்னா…!! ரெண்டு பேருக்கும் உருவம் இல்லையா!? அது தான்!!

    அதெப்பிடி பா அது!! எங்கேயும் இல்லாத கதையா வியாபாரியா இருந்து மதத்தை உருவாக்கி அந்த காலத்துக்கு தேவையான அரசியல் சட்டங்கள் எத்துனவருக்கு மட்டும் மெசேஜ் வந்துச்சி.இதை பத்தி சொல்லுபா,கதையை கொஞ்சம் கேக்கலாம்!!

  21. நவீத் அவர்களே! தங்கள் கருத்துக்கள் பாரத நாட்டின் உண்மையான சரித்திரத்தை ஆதாரமாக கொள்ளவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. மிகுந்த சிரமங்களை கடந்து சீனாவிற்கு பயணம் செய்து புத்த மத கருத்துக்களை பரப்புவதில் வெற்றிகண்ட போதிதருமன் நமது காஞ்சிபுரத்து ஹிந்து அரச குடும்பத்தை சார்ந்தவன் என்பதிலிருந்தே நமது ஹிந்து பாரம்பர்யத்தின் மேன்மையை அறியலாம். வழிபாட்டு முறையில் உள்ள வேற்றுமை நமது பாரத நாட்டில் அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று ஒரு இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டுத்தலம் கூட எழுப்பப்பட்டிருக்க முடியாது. நமது நாட்டு பௌத்த மற்றும் சமண (ஜைன) விஹாரங்களும் பள்ளிகளும் ஹிந்துக்களால் அழிக்கப்பட்டு அவற்றின் மீது கோவில்கள் எழுப்பப்பட்டன என்னும் உங்கள் கற்பனைக்கு சுதந்திரமான ஆதாரங்கள் உள்ளனவா? உலகெங்கிலும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பரவிய வரலாறு ரத்தகறை படிந்துள்ள காரணத்தால் ஹிந்து பாரம்பர்யத்தையும் அதே அளவுகோல் வைத்து மதிப்பிடுவது தவறு. நமது பாரத நாட்டு ஆன்மீக பாரம்பரியத்தில் வழிபாட்டு முறையின் அடிப்படையில் அரசு நடத்திய அரசர்களே (அசொகனைத்தவிர) இல்லை என்று கூறமுடியும்.

  22. wherever the muslims become a majority they do not allow others religious,political and social freedoms.

    Do you think that the others should keep on putting up with this for ever?
    If we talk about this it is abuse! fantastic!

  23. சு பாலச்சந்திரன்

    இந்து மத வழிபாட்டின் அடிப்படை அம்சமே உரு, அரு இரண்டும் உள்ளடங்கியதே ஆகும்.. பகவான் கிருஷ்ணரின் அவதாரங்கள் எண்ணிறந்தவை என்பான் கிருஷ்ண பக்தன். அது பத்தா, நாற்பதா அல்லது நாநூ
    ரா என்பது பிரச்சினையே அல்ல.ஏனெனில் இறைவனின் செயலுக்கு எல்லைகள் வகுப்பது அறியாமையின் அறிகுறி ஆகும்.எனவே எல்லைகள் என்பதே கிடையாது. ஒரு இந்துவுக்கு அல்லா என்பதும், கர்த்தர் என்பதும் இன்னும் கோடிக்கணக்கான பெயர்களும் ஒரே இறைச்சக்தியின் பல்வேறு பெயர்கள் தான். ஆனால் ஆபிரகாமிய மதங்கள் தங்கள் முதிர்ச்சியின்மையினால் பெயர் மற்றும் உருவங்களைப்பற்றி கட்டுப்பாடுகளை விதித்து கடவுள் கோட்பாடை குறுக்கி, கடவுள் என்ற எல்லைகானமுடியாத சக்தியை, கேவலம் புல் , பூண்டு, ஒரு செல் உயிரினம், இருசெல் உயிரினம், மனிதன் ஆகியவற்றை விட குறுகிய ஒன்றாக ஆக்கிவிட்டார்கள். பாவம்.

  24. இன்றும் ஈரானியர்கள் தாங்கள் தான் ஆரியர்கள் என்றும், இந்தியர்கள் தங்களுடையதும் திராவிடர்களினதும் கலப்பினால் வந்தவர்கள் என்றும் வாதாடுகிறார்கள்.
    ஈரானிய சரித்திர ஆராய்ச்சியாளர்களையும், அவர்களின் சரித்திரத்தையும் பொய் என்று நிருபிக்கப் படவேண்டிய பொறுப்பு

    https://www.iranchamber.com/history/article…ple_origins.php

    ஈரான் என்று இன்று அழைக்கப்படும் Persia. PErsia என்ற சொல்லிற்கு Persian அல்லது Farsi மொழியில் Land of Aryans என்று அர்த்தம்.Hindi, Urudu, Farsi Persian போன்ற மொழிக்கிடையிலான ஒற்றுமைகள் தொடர்புகளை விவாதிக்க வேண்டிய தேவையிருக்காது என்று நம்புகிறேன்.

  25. கோவில்களுக்கு செல்லும் பொது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுடன் கடவுள்களின் பெயர்களிலும் அர்ச்சனை செய்வது சரியாய் தவறா? என் தோழி கடவுள்களின் பெயரில் அர்ச்சனை செய்யகூடாது என்று சொல்கிறாள்… தயவு செய்து விளக்குவீர்களா?

  26. @lathavinethkumar, சுவாமியின் பெயரில் அர்ச்சனை என்பது இந்த உலகம் முழுவதும் நல்ல படியாக இருக்கவேண்டும் என்று செய்வது ஆகும் . கடவுள் வேறு இந்த உலகம் வேறு இல்லை. தன் பெயருக்கு அர்ச்சனை செய்வது என்பது தன்னலம் என்றால். சாமி பெயரில் அர்ச்சனை செய்வது பொது நலம். அது மிக நல்லது.

  27. தமிழில் வட எழுத்தின் உச்சரிப்புக்கு தகுந்த தமிழ் எழுத்து ஸ ஷ ஹ ஸ்ரீ எப்பொழுது நடைமுறை படுத்தப்பட்டது இதை ஏற்க ஏன் தனி தமிழ் ஆர்வலர்கள் மறுக்கிறார்கள்.
    சிவ லிங்கம் எதை குறிக்கிறது. பல விளக்கங்கள் ஒரு யூகத்தில் சொல்கிறார்கள். எனது யூகம் நமது அணு உலைகள் ஏன் சிவ லிங்கம் போல் வடிவு கொண்டுள்ளது. நமது சிவ லிங்கமும் அணுவிலிருந்து வெடித்து சிதறிய இந்த அண்ட வெளி தத்துவத்தை தான் குறிக்கிறதா ? ஆண் பெண் பிறப்பை குறிக்கும் தத்துவத்தை என்னால் ஏற்க்கமுடியவில்லை.

  28. நம்ம பெயரில செஞ்ச அது சுயநலம்,சாமி பெயர்ல செஞ்சா சாமி நம்மளோட சேர்த்து அனைவரக்கும் அருள் பாலிப்பார்….அண்ட் பூசகர் அய்யாவுக்கும் வேலை குறைவு..ஒவ்வொரு பெயரா சொல்லி,”நாம தேசிய” சொல்ல தேவல்ல..அதன் நான் கோவில்ல என் பெயருக்கு கூட அர்ச்சனை பண்றது இல்ல.சாமியே சரணம் …

  29. அம்மாவசையன்று இறந்தவர்களை நினைத்து எப்படி வீட்டில் வழிபாடு செய்வது?சற்று விளக்கமாக கூறுங்கள்.

  30. அவி சொரிந்து ஆயிரம் வேட்டல் இல்லாமல் இந்து மதம் இல்லையா? வேதங்கள் இவற்றை வலியுறுத்துகின்றனவா? யாகங்கள் இல்லாமல் வேதங்கள் இல்லையா?உயிர்வதை செய்யும் யாகம் செய்தல் அறு தொழில்களில் ஒன்றானது ஏன்? மகாபாரததத்தில் கூட போருக்கு முன்னால் அரவான் பலியிடல் வருகிறது. இராமாயணத்திலும் இது போல் உண்டா ? ஒன்றன் உயிர் செகுத்தல் அவசியமா?

  31. திரு. அன்புதனசேகரன்,

    இதே கேள்வியை இன்னும் எத்தனை முறை கேட்பீர்கள்? இங்கே பதில் கிடைக்கவில்லை என்றதால் தான் திரு. ஜடாயு அவர்கள் எழுதிய ரிக் வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் பகுதி – 1 லும் கேட்டீர்களா? உயிர் வதையை ஆதரித்து நான் பேசவரவில்லை. ஆனால் “அவி சொரிந்து ஆயிரம் வேட்டல்” என்பதில் ‘அவி’ என்பது ஆட்டையோ, மாட்டையோ குறிக்காது! வெறும் சாதத்தைக் கூட ஹவிசென்பார்கள். தமிழில் ‘அவி’ என்பார்கள்.

    தவிர வேள்விகளால் ஏற்படும் பொதுவான அறிவியல் ரீதியான பலன்களைப் பற்றி இந்த இணைப்பில் கூறியிருக்கிறார்கள். நேரமிருந்தால் படித்துப் பார்க்கவும்.

    https://www.akhandjyoti.org/?Akhand-Jyoti/2003/Mar-Apr/ScientificAspectsofYajna/

    நன்றி!

  32. தமிழ் இந்துவில் இதைப் போன்ற அருமையான, புதுமையான, வித்தியாசமான தொடர்கள் முன்பு வந்து கொண்டு இருந்தன. இப்போது செய்தித்தாள் பரபரப்புக்களை ஒட்டிய கட்டுரைகள் மட்டுமே வருகின்றன. ஏன் இந்த வீழ்ச்சி ?

  33. kArvEl – கார்வேல் மன்னன் அட்சிசெய்தகாலத்தில் ப்ரிஜகநாதர் இல்லை. அகத்திக்கும்பாக்கலெட்டில் கார்வேலர் சோழநாட்டையும் தாண்டிச்சென்று பாண்டியனை அடக்கியதாகவும் அவனிடமிருந்து சோழநாட்டை ஆள்வதற்கான மணியாரங்களையும் முத்தாரங்களையும் குதிரை யானை போன்றவற்றையும் திரும்பெப்பெற்றுக் கொண்டுவந்ததாக உள்ளது. அதேபோல மேற்குலகநாடுகளின்மீது சதவானரைப் பொருற்படுத்தாமல் படையெடுத்துச்சென்று யவன – மிலேச்ச நந்த மன்னனை அடக்கித் தங்களது மகத நாட்டை ஆட்சிசெய்வதற்கான பொன், ரத்தினம், போன்ற ஆரங்களைத் திரும்பக்கொண்டுவந்ததாக உள்ளது! மேலும் நந்தரால் தடுத்துவைக்கப்பட்ட அணையின் நீரை சுலியக் கானவாய் வழியாக விடுவித்துத் தாது நாட்டுக்குக் கொண்டுசென்றதாகவும் உள்ளது! இதே தகவல் மாபரதத்தில் தேவவிரதன் – பீஷ்மரை அறிமுகம் செய்யும்போது கங்கைநதியை அம்புகளால் தடுத்து அணைபோட்டதாகத் தேவவிரதன் – பீஷ்மர் காட்டப்படுகிறார். அதையே தொல்தமிழ்ப் பாடல்களும் உறுதிப்படுத்துகின்றன,

    சூரியகுலத்தினர் கடுப்ப இமையத் தடவு வழியில்; கங்கை நீரைத் தடுத்து; எதிர்ப்பை வலுப்படுத்தியதை அகநாநூறு – 265 குறிப்பிடுகிறது:
    “புகையின் பொங்கி வியல்விசும்பு உகந்து
    பனிஊர் அழற்கொடி கடுப்பத் தோன்றும் இமயச் செல்வரை மானும் கொல்லோ?
    பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
    நீர்முதற் கரந்த நிதியம் கொல்லோ?
    எவன்கொல்? வாழி தோழி! வயங்கொளி
    நிழற்பால் அறலின் நெறிந்த கூந்தல் குழற்குறல் பாவை; இரங்க நத்துறந்து ஒண்தொடி நெகிழச் சாஅய்ச் செல்லலொடு கண்பனி கலுழ்ந்துயாம் ஒழியப் பொறையடைந்து
    இன்சிலை எழிலேறு கெண்டிப் புரைய;
    நிணம்பொதி விழுத்தடி நெருப்பின்வைத் தெடுத்து
    அணங்கரு மரபின் பேஎய் போல
    விளரூன் தின்ற வேட்கை நீங்கத்
    துகளற விளைந்த தோப்பி பருகிக்;
    குலாஅ வல்வில் கொடுநோக்கு ஆடவர்
    புலாஅல் கையர் பூசா வாயர்
    ஒராஅ உருட்டுங் குடுமிக் குராலொடு
    மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும்
    செந்நுதழ் யானை; வேங்கடம் தழீஇ
    வெம்முனை அருஞ்சுரம் இறந்தோர்
    நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே!”
    அகநாநூறு 13: பாண்டியன் – தென்னவனைக் குறிப்பிட்டுப் பலதகவல்களையும் கோரைப்பொருநன் – சூரியகுலச்சோழன் குறித்த தகவல்களையும்; ஒரு பயங்கெழு வேள்வி பண்ணப்பட்டதகவலும் அதன் விளைவுகளும் இடம்பெற்றுள்ளன:
    “தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
    முனைதிரை கொடுக்கும் துப்பின் தண்மலைத்
    தெறல்அரு மரபின் கடவுற் பேணிக்
    குறவர் தந்த சந்தின் ஆரமும்;
    இருபேர் ஆரமும் எழில்பெற அணியும்
    திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்
    குழியில் கொண்ட மராஅ யானை
    மொழியின் உணர்த்தும் சிறுவரை அல்லது
    வரைநிலை இன்றி இரவலர்க்கு ஈயும்
    வள்வாய் அம்பின் கோடைப் பொருநன்
    பண்ணி தையிஇய பயம்கெழு வேள்வியின்
    விழுமிது நிகழ்விது ஆயினும்-தெற்குஏர்பு
    கழிமழை பொழிந்த பொழுதுகொள் அமையத்துச் சாயல் இன்துணை இவட்பிரிந்து உறையின் )
    நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட
    மாசில் தூமடி விருத்த சேக்கை
    கவவுஇன் புறாமைக் கழிக- .. .. ..
    நிரம்பகன் செறுவில் வரம்பணையாத் துயல்வரப்
    புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை .. .. .
    நுண்பல் துவலைய தண்பனி நாளே!” என பாண்டியன் – தென்னவனிடம் முத்தாரமும் மலையகச் சோழரின் ஆரங்களும்; கோடப்ப்பொருநன் – சூரியமரபுச்சோழன் பண்ணிய ஒரு பயங்கெழு வேள்வியின் விளைவுகளால் கொடுக்கப்பட்டதாகவும்; பாண்டியன் அவற்றைத் திருப்ப ஒப்படைக்க மறுத்த தகவல்களும் உள்ளன; இத்தகவல்களை உறுதிப்படுத்தும் சான்றுகளாக மேலும் பலபாடல்களும் உள்ளன;சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் சில சான்றுகள் உள்ளன. சீனப்பயணி யுவான்சுங் மகதத்திலிருந்து காஞ்சிக்கு வந்தபோது சு லி ய நாடு இருந்ததாகக் குறிப்பிடுகிறார். அந்த சு லி ய நாட்டின் பெயராலேயே கார்வேல் சுலியக்கனவாயில் நீரைக்கொண்டுசென்றதாக அக்கல்வெட்டிலும் உள்ளது.
    எனவே இவையனைத்தும் தமிழ்ச்சோழர்கள் ஏதோ ஒருகாரணத்தால் நந்தரால் வஞ்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன என உணர்கிறோம். எனவே கார்வேலரையே ஒரு கடவுளாக – தெய்வமாக அக்கால மக்கள் உருவாக்கியுள்ளனர் எனக் கொள்ளலாமா? இவையனைத்தும் சோழரின் வரலாற்றை வெளிப்படுத்துவது உறுதியாகத்தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *