தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]

சென்னை புத்தகக் கண்காட்சி-2011இன் மிக முக்கிய நூல்.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் மிக முக்கியமான தமிழ் நூல் எது என்றால் நிச்சயமாக அது தொல்லியலாளர் எஸ்.இராமச்சந்திரனும் சமூக வரலாற்றாராய்ச்சியாளர் அ.கணேசனும் எழுதி, தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் (SISHRI) வெளியிட்டுள்ள ‘தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்’ என்கிற நூல்தான். இதற்கொப்ப முக்கியத்துவம் உடைய மற்றொரு நூல் ‘பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்’ முதல் தொகுதி- எழுத்து வெளியீடு.

தோள்சீலைக் கலகம் குறித்து- கி.பி.19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இடைப்பகுதி வரை திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் நிகழ்ந்த ஒரு முக்கியச் சமூக நிகழ்வு. இது குறித்து பொதுபுத்தியில் ஒரு பார்வை உருவாக்கப்பட்டுள்ளது: சாணார் சமுதாயப் பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை உடுக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தனர். ஐரோப்பிய கிறிஸ்தவ மதப் பரப்புநர்கள் அவர்களுக்கு ஏற்படுத்திய பண்பாட்டுணர்வு காரணமாக மேலாடை அணிய ஆரம்பித்த போது இந்து மேலாதிக்க சாதிய சக்திகள் அதை எதிர்த்தன. மிஷினரிகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் இணைந்து அந்த உரிமையை மீட்டெடுத்தனர்.

இந்தப் பார்வையை விரிவான ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் கேள்விக்குள்ளாக்கி, இப்பார்வை பொய்யானது; வரலாற்று அடிப்படை அல்லாதது; உள்நோக்கம் கொண்டது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர் நூலாசிரியர்கள்.

தரவுகளே இந்நூலின் வலிமை. பழைய ஆவணங்கள்; முதல் தர கள ஆய்வு. கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொடங்கி கும்பெனி ஆவணங்கள், மிஷினரி அறிக்கைகள், பிரிட்டிஷ் ஆட்சியாளர் கடிதங்கள் என நீள்கின்றன தரவுகள். முக்கியமான விசயம்- தரவுகளை வெட்டி ஒட்டி தனது கருத்துக்கு ஆய்வாளர்கள் வலு சேர்க்கவில்லை. தரவுகள் விரிவாகத் தரப்படுகின்றன. அவற்றின் சமூகப் பண்பாட்டுப் பின்புலங்கள் தெளிவாக்கப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி நேர்மை மற்றொரு பெரிய பலம். பொதுவாக இந்தியா குறித்த மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களிடம் காணமுடியாத நேர்மை இது.

உதாரணமாக தொடர்ந்து மிஷினரி இலக்கியங்களிலும் சரி இன்றைய அரசியல்-சமூக விவாதங்களிலும் சரி சான்றோர் (நாடார்) மக்கள் அடிமைகளாக இருந்தது போல ஒரு சித்திரம் எழுப்பப்படுகிறது. ஆனால் முதல் ப்ரொட்டஸ்டண்ட் சர்ச் கட்ட நிலம் கொடுத்தவர் ஒரு நாடார். ஆக அவர்கள் நில உடமையாளராக இருந்திருக்கின்றனர். அந்நிலத்தை தானம் செய்யவும் உரிமை கொண்டிருந்தனர். ஆனால் எந்த நாடார் சாதியினரிடமிருந்து நிலம் பெற்றனரோ அந்தச் சாதியினரையே பண்பாடற்ற அடிமைகளாக வாழ்ந்ததாகவும் தாங்களே அவர்களுக்கு விடுதலையையும் பண்பாட்டையும் கற்பித்ததாகவும் கூறி சர்வதேச அளவில் விளம்பரம் செய்து பொருள் ஈட்டினர் மிஷினரிகள்.

இந்த நூலின் முக்கியத்துவம் எதிலுள்ளது? அது மிஷினரிகளைக் கடிவதிலும் அவர்கள் குறித்து அவர்களே மிக வலிமையாகக் கட்டமைத்த பிம்பங்களைக் கட்டுடைப்பதிலும் மட்டுமல்ல; அது ஒரு முக்கியமான கட்டுடைப்பு என்பது உண்மைதான். ஆனால் அது ஓர் அம்சம் மட்டுமே. நம் சமுதாயம் பன்மை வளம் கொண்டது. சாதி அமைப்பு அந்தப் பன்மை வளத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆனால் இன்றைய நவீன காலகட்டத்தில் சாதி உறவுகள் எத்தகைய மாற்றங்கள் அடைகின்றன என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலும் இந்த நூல் முக்கியமானதாகும்.

தோள்சீலைக் கலவரம் நடக்கத் தூண்டிய சமூக-பொருளாதார-அரசியல்-காலனிய நிகழ்வுகளை ஒவ்வொன்றாக மிகுந்த ஆதாரத்துடன் ஆசிரியர்கள் அடுக்குகின்றனர். சமுதாயங்களிடையே பிணக்குகளை எப்படி காலனிய ஆட்சியாளர்கள் ஊக்குவித்தார்கள்; அதில் எப்படி தங்களை மேல்சாதி என நிலைநிறுத்த முனைந்தவர்கள் விழுந்தார்கள்; எப்படி போலிப் பகட்டும் சாதி மேன்மையும் பெரிய அளவில் மதமாற்றங்களை ஊக்குவித்தன; எப்படி பாரம்பரியம் என மேல்சாதியினர் கருதியது உண்மையில் வரலாற்று யதார்த்தத்தில் வேரற்று இருந்தது, இதையெல்லாம் மிகச் சுவாரசியமாக விளக்குகின்றனர்.

ஓர் எடுத்துக்காட்டு:

ஒருபுறம் மதமாற்ற முயற்சிகளுக்கு முழு ஊக்கம் அளித்த பிரிட்டிஷ் ரெசிடெண்ட்; மறுபுறம் ஆண்டு தோறும் 8 இலட்சம் ரூபாயை திருவிதாங்கூர் அரசு, ஆங்கிலேயக் கும்பெனிக்குக் கப்பமாக கட்டவேண்டுமென ஆணையிட்டனர். இக்கப்பத்தொகையைச் செலுத்துவதற்காகப் புதிய வரியினங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டன. கி.பி.1807-ஆம் ஆண்டு, ரூபாய்n18,523 பனைவரியாக மட்டும் வசூலிக்கப்பட்டது. 16 வயதிலிருந்து 60 வயதுக்குள்ளாக இருக்கும் சான்றார், ஈழவர், செருமர் புலையர், சாம்பவர் ஆகியோரிடமிருந்து தலைவரியாக ஓராண்டுக்கு ரூபாய் 1,63,000 வசூலிக்கப்பட்டது. நாயர், இஸ்லாமியர், வெள்ளாளர், கண்மாளர் போன்றோர் இவ்வரியைச் செலுத்தவேண்டியதில்லை. (பக்.84)

இதனுடன் சமயப் பிரசாரத்துக்காக அச்சகம் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டது. அத்துடன் அதற்கு இறக்குமதி வரியில்லாமல் தாள் இறக்குமதி செய்யப்பட்டது. மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு சலுகைகள் அளிக்கப்பட்டன. கும்பெனி அரசின் கட்டாயத்துடன் திருவிதாங்கூர் சமஸ்தானம் செய்த நிர்வாகச் செயல்பாடுகளால், அனைத்துத் தரப்பு மக்களும் பாதிப்படைந்தனர். இதில் படைகளில் இருந்த நாயர்களுக்கு ஏற்கனவே கும்பெனிக்கு எதிராகக் கலகம் செய்தால் என்ன நடக்கும் என்பது வேலுத்தம்பி தளவாயின் கதி மூலமாகத் தெரிந்திருந்தது. ஆக அவர்களின் ஆத்திரம் ஒரு பக்கம் திரண்டு கொண்டிருந்தது. 1815-ஆம் ஆண்டு ரெசிடெண்ட் மன்றோ, மதம்மாறிய சாணார்கள் கோயில் ஊழியம் மூலமாக அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியிலிருந்து விலக்களிப்பதாக அறிவித்தார். மற்றொருபுறம் சந்தை விலை நெல் மலிவாயிற்று. ஆனால் சந்தை விலைக்கேற்ற விகிதத்தில் வரித்தொகையைக் குறைக்க கும்பெனி மறுத்துவிட்டது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிலவுடமையாளர்கள் மட்டுமல்ல; நில உட்குடிகளான தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் கூட. கூலியாக நெல்லைப் பெற்று வந்த அவர்கள் அதனைக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர்களையும் கும்பெனியார் வாங்கி காலனியாதிக்க நாடுகளில் தோட்டக்கூலிக் கொத்தடிமைகளாக்கினர். சாம்பவர் சமுதாயத்தினர் இவ்விதமாக விற்கப்பட்டதாக நூல் கூறுகிறது.

இப்படி பல்வேறு காரணிகள் திரட்சிகொண்டு சமூகப் பகை உணர்ச்சியைத் தூண்டியபடியே இருந்தன. ஒரு புள்ளியில் அது வெடித்தது:

இதன் விளைவாக நாயர்-வேளாளர்களின் மனதில் நிலவிய கிறிஸ்தவ சமய எதிர்ப்புணர்வும் லண்டன் மிஷனரிமார்களின் மீதான வெறுப்புணர்வும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. இந்து சமயத்தைச் சார்ந்த சான்றோர்களுக்கும் கிறிஸ்தவர்களாக மாறிய சான்றோர்களுக்கும் ஏற்பட்ட சிறுபிணக்கானது வரி தொடர்பான பிரச்சினையாக இருந்ததால் திருவிதாங்கோடு அரசின் நெறிமுறைகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படாமல் ஆங்கிலேய மிஷினரிமார் மற்றும் கும்பெனி அரசின் ஆதரவுடன் சுதேசி அரசை எதிர்த்துக் கலகம் செய்வோர்களாகக் கிறிஸ்தவ சான்றோர் பற்றிய ஒரு சித்திரம் உருவாயிற்று. இதன் விளைவு மிஷினரிமார்கள் எதிர்பார்த்த வண்ணமே அமைந்தது என்பதில் ஐயமில்லை. (பக்.94)

‘பூவண்டர் தோப்புப் புனிதர்’ எனும் தலைப்பில் ஐயா வைகுண்டர் குறித்து ஆசிரியர்கள் அளித்துள்ள வரலாற்றுப் பார்வை முக்கியமான ஒன்று. பிறப்படிப்படையிலான தாழ்வுகள் ஒருபுறம்; மறுபுறம் அந்நிய மதமாற்ற வல்லூறுகள். இச்சூழலில்தான் அவதரித்தார் ஐயா வைகுண்டர். பாரம்பரியத்தில் வேரூன்றி தமது சமுதாயத்தின் சமூக விடுதலையை ஆன்மிக இயக்கமாக முன்னெடுக்கிறார் ஐயா வைகுண்டர் எனும் முத்துக்குட்டி சாமி. ஆனால் அதனை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்து மட்டும் அவர் செய்யவில்லை என்பதில்தான் ஐயா வைகுண்டரின் மேதமை உள்ளது.

“நாணாத காவேரி நல்ல துளுபட்டர்” (மாத்வ பிராம்மணர்கள்) உட்பட எல்லா ஆதிக்க சக்தியல்லாத எளிய சமூகத்தவரையும் அவர் ஒருங்கிணைத்தார்.

நூலாசிரியர்கள் கூறுகின்றனர்:

ஆயர், குறும்பர் (குறுப்பு அல்லது கிருஷ்ணவகை) போன்ற சமூகத்தவரையும், பட்டடைக்குடிகளான தச்சர், கொல்லர், வண்ணார் போன்ற சமூகத்தவர்களையும், தாழ்த்தப்பட்ட சமூகத்தவரையும் இவருடைய பக்தர்களாக மாற்றிற்று. (பக்.115)

மட்டுமல்ல மதம் மாறியவர்களை தாய் மதம் திருப்பவும் செய்தார் ஐயா வைகுண்டர். இங்கு ஆசிரியர்கள் ஐயா வைகுண்டரின் தீர்க்கமான பாரம்பரிய மீட்டெடுப்பை வியக்கின்றனர்:

கண்ணு மக்காள் என்ற விளி மிக நுட்பமானதாகும். விழிச்சான்றார் அல்லது மிழிச்சானார் என்று கல்வெட்டுக்களிலும் சாக்ஷி குலோத்பவர் என்று உபமன்யு பக்தவிலாசத்திலும் ஆசான்மார் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படும் அத்யக்ஷர் என்கிற சமஸ்கிருத சொல்லாலும் குறிப்பிடப்படும் சான்றோர் குலப்பிரிவினரையே கண்ணு மக்காள் என்று ஐயா வைகுண்டர் அழைத்துள்ளார். ஐயா வைகுண்டர் 1851-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி (கொல்லம் 1026 வைகாசி மாதம் 21-ஆம் நாள்) திங்கட்கிழமை மறைந்தார். இவரது இறுதிக்காலத்தில் ஒசரவிளை என்ற இடத்தில் மூலகொண்டபதி அல்லது அம்பலப்பதி என்ற பெயரில் நிழல்தாங்கல் ஒன்றைக் கட்டுவித்தார். சோழ அரசர்களின் முடிசூடும் தலமாகிய தில்லைப் பொன்னம்பலம் போன்றே ஆகாசலிங்கம் ஒன்றை உயர்ந்த மேடை மீது பார்வைக்குத் தெரியாதவண்ணம் அமைத்தார். இது 96 கூரை விட்டங்களைக் கொண்ட நிழல்தாங்கல் ஆகும். இத்தகைய அமைப்பு திருவிதாங்கோடு அரண்மனையில் மட்டுமே அனுமதிக்கப்பட்ட வழிபாட்டு அமைப்பு என்று கருதப்படுகிறது. அது மட்டுமின்றி 96 தத்துவங்களைக் கடந்து ஆகாயப்பெருவெளியில் நடராஜர் நடனமாடுவதாகக் கொள்வதே சைவ தரிசன மரபாகும். இந்த அடிப்படையிலும் 96 கூரை விட்டங்கள் கொண்ட அம்பலமாக இந்த நிழல்தாங்கலை ஐயா வைகுண்டர் அமைத்திருக்கலாம். “வானம் பெரிது என்றறியாமல் மாள்வார் வீண் வேதமுள்ளார்” என்று அகிலத்திரட்டு அம்மானையில் கூறப்பட்டுள்ளதற்கு இணங்க ஆகாசலிங்க வழிபாட்டை இந்நிழல்தாங்கலில் அமைத்திருக்கிறார் என்றும் கொள்ளலாம். ஒசரவிளையில் அமைந்துள்ள இந்த லிங்கஸ்தானமே ஐயா வைகுண்டர் தர்மயுக அரசாட்சி நடத்துதற்குரிய அரியாசனம் எனக் கருதப்படுகிறது. (பக்.116, 118-9)

ஆனால் இன்று இந்த சீரிய ஆராய்ச்சியாளர்கள் ஐரோப்பிய மையப் பார்வையிலிருந்து விலகி சமூகப் பிரச்சினையை காலனியாதிக்கச் சீர்கேடுகளுடன் இணைத்து அணுகுகிறார்களே, அந்தப் பார்வையைக் கூட தொடக்கிவைத்தவர் ஐயா வைகுண்டர்தான். அவர் வெள்ளைக்காரனை ‘வெண்-நீசன்’ என்கிறார். எப்படிப்பட்டவன் அவன்?
 

விருச்சமுள்ள நீசன் வேசை நசுறாணியவன்
வையகங்களெல்லாம் வரம்பழித்த மாநீசன்
நெய்யதியச் சான்றோரின் நெறியெல்லாந் தான் குலைத்துப்
பேரழித்துத் தானம் பூப்பியமுந் தானழித்து
மார்வரையைக் கூடும் மைப்புரசு சஞ்சுவம் போல்
தானமழித்து சான்றோரின் கட்டழித்தான்

கிறிஸ்தவ-காலனியம் எப்படி உலகப் பண்பாடுகளையெல்லாம் அழித்தது (வையகங்களெல்லாம் வரம்பழித்து) பின்னர் எப்படி சான்றோரின் நெறியையும் குலைத்து அவர்களின் பாரம்பரிய நினைவுகளை அழித்து (பேரழித்து) அவர்களின் தான தர்ம நிலையை அழித்து அவர்களின் சமுதாயக் கட்டமைப்பையும் அழித்தது என்கிறார் வைகுண்டர். சுருக்கமாகச் சொன்னால் ஆழமான விரிவான தரவுகளுடன் வெளிவந்துள்ள இந்த நூலின் சாரத்தை (abstract) ஏற்கனவே எழுதிவைத்துவிட்டார் ஐயா வைகுண்டர். இந்தியப் பண்பாட்டு மீட்சியின் வரலாற்றில் ராஜாராம் மோகன்ராய்க்கும் முன்னோடி ஐயா வைகுண்டர் என்று மிகச்சரியாகவே கணிக்கின்றனர் நூலாசிரியர்கள். நவீன ஹிந்து அறிவியக்கத்தின் முதல் குரலும் அவருடையதுதான் என்பதையும் நாம் இங்கு கட்டாயமாக பதிவு செய்தே ஆகவேண்டும்.

இத்தகைய மக்களைக் குறித்துதான் ‘ஆராய்ச்சியாளர்’ கால்டுவெல் எத்தகைய புனைவுகளை எழுதினார் என்பதை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதைப் படித்தால் எந்த சமநிலை கொண்ட உள்ளமும் அடிப்படை மானுடம் இழக்காத எந்த மனச்சாட்சியும் பதறும். உதாரணமாக கால்டுவெல் எழுதியிருப்பதை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர் பாருங்கள்:

சாணார் சமூகத்தவர்கள் இலங்கையிலிருந்து பனையேறிப் பிழைப்பதற்காக வந்தவர்கள் என்றும் இந்து சமயத்தின் சமூக அதிகார அடுக்கில் அவர்கள் உயர்ந்த நிலையில் இருந்ததேயில்லை என்றும் வைதிகச் சமயத்திற்கு மாறுபட்ட சிறுதெய்வ வழிபாட்டினையே பின்பற்றி வருகிறார்கள் என்றும், மந்த புத்திக்காரர்கள் என்றும் கால்டுவெல் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். (பக். 131)

ஏன் இப்படி ஒரு பொய்யான சித்திரத்தை கட்டமைத்தார் கால்டுவெல்? காரணம் இல்லாமல் இல்லை. எப்படிப்பட்ட அநாகரிக காட்டுமிராண்டிகளிடம் தாம் பணிபுரிய வேண்டியுள்ளது எனும் உணர்வை ஐரோப்பிய மக்களிடம் தூண்டி அவர்களிடமிருந்து பொருளுதவியைக் கறப்பதே நோக்கம்.

தோள்-சீலைக்கலவரத்தின் போதும் மிஷினரிகளின் ஆவணங்களை முதன் முறையாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றனர் இந்நூலாசிரியர்கள். அதில் மிஷினரிகள் சொல்லியிருப்பது- ‘மிஷினரிகள்தாம் மேலாடை உடுக்கும் பழக்கத்தை சான்றார் சமுதாய மக்களிடம் கொண்டு வந்தனர்’ எனும் இன்றைய பொய்ப் பிரசாரத்தை முழுமையாகப் பொய்யாக்குகிறது. அவர்கள் அன்று ஒத்துக்கொள்கின்றனர்:

..மேலாடை உடுத்தும் வழக்கத்தை அஞ்ஞானிகளின் சமய மார்க்கத்தைப் பின்பற்றும் சாணார் சமூகப் பெண்டிர்கள் தாமாகவே கடைப்பிடித்து வருகின்றனரே தவிர இவ்வழக்கம் கிறிஸ்தவர்களாக மாறிவிட்ட இதே சமூகப் பெண்டிர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதன்று. (பக்.140)

தோள்-சீலைக்கலவரம் மட்டுமல்ல. பிற சமூகநீதிப் பிரச்சினைகளிலும் மக்கட் சமுதாயக்குழுக்களின் உறவுகளை சமமற்றதாகக் காட்டுவதில் ஆங்கில ஆட்சியாளர்கள் காட்டிய ஆர்வம் அதிர்ச்சியுற வைப்பது. ஆனால் அதைவிட அதிர்ச்சியான விஷயம், அதனை இந்தியச் சமுதாயத்தில் அக்காலகட்டத்தில் ஆதிக்கச் சாதிகளாக விளங்கியவர்கள் அல்லது தங்களை ஆதிக்கச் சாதிகளாக மேலடுக்கில் உயர்த்திக் கொள்ள முயன்றவர்கள் தங்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டதாக நினைத்து ஒட்டுமொத்த சமுதாய ஆரோக்கியத்துக்கு பெரும் ஊறு விளைவித்தது. உதாரணமாக திருச்செந்தூர் கோயில் நுழைவுப் போராட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். சான்றோர் இன மக்கள், கீழ்ச் சாதிகள் எனச் சொல்லி கோயிலுக்குள் நுழைவதை இடைநிலைச் சாதிகளான வெள்ளாள சாதியினர் தடுத்தனர். ஆனால் ஆவண ஆதாரங்கள், பாரம்பரியத் தரவுகள், சான்றோர் இனமக்களுக்கு க்ஷத்திரிய குல உரிமை இருப்பதை நிறுவின. இவ்வழக்கில் திருவானக்காவிலுள்ள பாசூர் சான்றோர் மடத்தைச் சேர்ந்த அகிலாண்டேஸ்வரக் குருக்கள் என்ற சிவப்பிராம்மணர் சான்றோர் சமூகத்தவரின் சார்பாகத் தங்கள் மடத்துச் செப்புப்பட்டயம் ஒன்றையும் அவ்வழக்கில் தாக்கல் செய்தார். 1872-இல் நடந்த இந்த வழக்கில் நீதிமன்றம் சான்றோர் குலமக்கள் கோயில் நுழைந்து வழிபாடு செய்வதைத் தடுக்க மறுத்துவிட்டது. 1872-இல் பிரிட்டிஷ் அரசாங்கம் எடுத்த மக்கட்தொகை கணக்கெடுப்பில் சான்றோர் மக்கள் தம்மை பாண்டிய குல க்ஷத்திரியர்கள் என்றே பதிவு செய்தனர். ஆனால் 1899-இல் மதுரையிலும் பின் சென்னையிலும் பாஸ்கர சேதுபதி நாடார்களின் கோயில் நுழைவுக்கு எதிராக நடத்திய வழக்குகளில் இந்த நிலை மாறுவதைக் காண்கிறோம். சிதம்பரம் தீக்ஷிதர்கள் இந்த வழக்கில் சான்றோர்களுக்கு ஆதரவாக சாட்சி சொன்ன போது நீதிபதியால் அவமானப்படுத்தப்பட்டனர். இவ்வழக்கில் சான்றோர் குலத்தையும் பண்பாட்டையும் இழிவுபடுத்தி கால்டுவெல் எழுதிய விவரணங்கள் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. சான்றோர் சமுதாயத் தலைவர்களும் பாஸ்கர சேதுபதியும் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகளை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தந்திரமாக நடக்கவிடாமல் தடுக்கின்றனர். இந்த வழக்கில் சான்றோர் சமுதாயத்தினர் தோற்றால் அவர்கள் தங்களுக்கென்று கோயில் அமைத்துக்கொள்வார்கள் அல்லது கிறிஸ்தவர்களாகி விடுவார்கள். மறவர்களுடன் மோதமாட்டார்கள். ஆனால் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்து பிரச்சினைகள் வந்தால் தாங்கள் சேதுபதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று ஒருங்கே ஆசையும் காட்டி மிரட்டுகிறார் மதுரை கலெக்டர். (பக். 163-172)

இன்றைக்கும் இது நடக்கிறது. சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், விளிம்புநிலையில் உள்ளவர்கள் குறித்து ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்துக்கு இருக்கும் புறக்கணிப்பு நிலையைப் பயன்படுத்தி தேச விரோத சக்திகள் அவர்களது உரிமைக்காகப் போராடுவது போல, அவர்களை தங்கள் இந்திய விரோத நிலைப்பாட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு எத்தகைய எதிர்வினைகளை நம் சமுதாயம் முன்வைக்க வேண்டும்? எத்தகைய எதிர்வினைகளை நாம் முன்வைக்கக் கூடாது? நாயர்-வெள்ளாளர் மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தானம் 1857 விக்டோரிய பிரகடனத்துக்குள் நுழைந்து கொண்டு ‘இது எங்கள் மதப்பிரச்சினை. இதில் தலையிட முடியாது’ என்று சொன்னது போல நம் எதிர்வினை அமையக்கூடாது. மாறாக ஐயா வைகுண்டர் போன்ற பாரம்பரிய வேர் சார்ந்த சமூக விடுதலைச் சக்திகளை இனங்கண்டு அவர்கள் தலைமையில் ஆன்மிக-சமூக விடுதலையை அனைத்து சமுதாயத்துக்குமானதாக உருவாக்கும் இயக்கத்தைத் தீவிரத்தன்மையுடன் உருவாக்குவது ஒன்றே இதில் நாம் வெற்றி பெற ஒரே வழி. ஹிந்துத்துவர்களுக்கு இந்நூல் சொல்லும் பாடம் அதுதான். அதுவேதான். இதைப் போல விரிவான ஆழமான ஆராய்ச்சிகள் மேலும் பல வர நாம் வழி வகுப்பது அதற்கு இன்றியமையாததாகும்.

tholseelai-kalagam-coverதோள்சீலைக் கலகம்:
தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்

ஆசிரியர்கள்:
எஸ்.ராமச்சந்திரன்
அ.கணேசன்

வெளியிடுவோர்:
தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்

விலை: ரூ. 100
 
பக்கங்கள்: 192

 

 

28 Replies to “தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் [நூல் அறிமுகம்]”

  1. மிகச்சிறப்பான நூல். அழகான விவரமான அறிமுகக்கட்டுரை. இந்த கட்டுரையிலேயே இன்றும் நடக்கும் கிறிஸ்துவ பிராடுத்தனத்தை வெளிக்கொண்ர்ந்துள்ள அரவிந்தனுக்கு பாராட்டுகள்.

    அய்யா வைகுந்தர் போன்று ஏராளமானவர்கள் முனைந்து மதம் மாறியிருக்கும் தமிழர்களை மீண்டும் தாய்மததுக்கு அழைத்து வரவேண்டும்.

    அம்பாள் துணை புரியவேண்டும்.

  2. I would like to get this book as well as other books brought our by SISHRI.

    Kindly e-mail me at:

    pbala1932@gmail.com

    furnishing information where I can buy these books in Chennai.

    P. Balasubramanian

  3. ஸ்ரீ ரத்தினவேல் நடராஜன்,
    தோள்சீலைக் கலகம் புத்தகத்தைப் பெற:
    தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் 15 காமகோடி தெரு, பத்மநாப நகர், குரோம்பேட்டை, சென்னை 600 044 தொலைபேசி: 044-2223 5172. விலை ரூ. 100/-
    கூரியரில் பெற ரூ 125/- அனுப்ப வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய புத்தகம்.
    மலர்மன்னன்

  4. I am very sure you will not publish this. But I have to record. What the book wants to say in the name of research. That everything was alright before the advent of Christian missionaries in India. That the inequalities were not there and it was all the creation of the Christian Missionaries.
    Every social transformation we have now can be attributed to the Education, Health and Social empowerment taught by these missionaries. These might not have been practiced in their own land. But they were brought here by them only. In fact there were two types of foreign invaders to India. Mercenaries and Missionaries. They were not always together. One tried to use the other. It is history. In fact it were the missionaries who acted as conscience for the mercenaries.
    It is a much beaten but useless track that the Olden age is Golden. Ignorance is bliss. They dont sell anymore.
    I recall a train journey I undertook several years ago to Hyderabe from Madras. It was a unreserved compartment. An ordinary looking man had put a towel and had reserved the upper berth. When the train started to move he took out a book from his bag. It was a Bible. He started to read. From the way he was reading it was clear that he is not much eductated. There was a last minute boarder who was standing. alongside. He sought and obtained a sitting place at the top. He started a conversation with the reader and from that it was known that this man who was reading a Bible is a carpenter. He has come to the city on a paid work and was returning home probably to Nellore. Now the late comer enquired what he was reading. Then he elaborated how the Hindu vedas had so many truths and that how great they were as books of knwledge. This man closed his Bible and started to listen. I will cut short the story. In a very short time this late comer had stretched himself in the upper berth and the carpenter was pushed to the corner place.
    Now the difference. You know how these missionaries died in this part of the land. Just read their life histories. You would be suprised to learn that many of them did never return to their home land. They had come with the mission heeding unto the call of God. Against their family’s wishes sometimes. They were never comfortable with the English rulers. You can see many of them sowing the seeds of liberations among the natives here. They taught us the modern education, health standards social thinking. They had to be very careful with both the dominant castes and also the Mercenaries. But for them Tamilnadu, Kerala and to some extent W.Bengal and Pune would not have been what it is today. They led a sacrificial life.
    Now if the Hindu Vedas are so good and rich why were they not taught to every one. Why it is being propagated now when their exisitence is threatened. Why not before. This situation would not have risen. Do you know that even Bible was not made available to common man there. The dominant try to rule every where. But what these missionaries spoke and spread was not their own. It was the love of God. The true God as spoken in Bible. That is why is powerful not because it had the questionable blessings of the English. These men and women obeyed the call of God.
    So any amount of backward research must not miss these facts. Smile. You know why,

  5. Dear Mr. Jayaraj,
    // What the book wants to say in the name of research. That everything was alright before the advent of Christian missionaries in India. That the inequalities were not there and it was all the creation of the Christian Missionaries. //

    Have you read the book or even this article carefully? Then how come you make such a comment?
    As per the article, the book gives *ton – loads* of evidence to prove that the historical accuont created and propagated by colonial powers (that includes both the British govt. and missionaries) regarding this particular “thol seelai” struggle is facutally wrong and was deliberately fabricated.. It is not just a casual statement. but based on strong research.

    .. and it is not the first book/research to do so. Many eminent scholars have exposed the evil design and intent of colonial powers to rob India economically as well as culturally. For example, Dr Amartya Sen’s research itself is about how the colonial powers schemed and created “planned” famines in India to starve Indian people to death..

    // Every social transformation we have now can be attributed to the Education, Health and Social empowerment taught by these missionaries. These might not have been practiced in their own land. But they were brought here by them only. //

    Being an Indian, arent you ashamed to say this? the Indian renaissance and social empowerment was triggered by social reformers like Ram mohan Roy, Arya Samaj, Sri Narayana Guru, VIvekananda, Gandhi and Dr. Ambedbar and many such great souls.. to attribute this to missionaries is not just betryal, but also factually wrong.

  6. I would be happy to know if there was at least one Christian (converted from their mother – religion) belonging to India, who fought for the country’s independence?

    Pls enlighten

  7. Dear Readers

    Is any one from KK Dist ?

    U all from metros or no connection between above place. I am from the same place ( 2km from above place).

    Dont comment anything based research / books. Still lot of gaps / differents in between hindus based on community. One comunity person cannot go inside the temple, cannot be member of other commuinity. Still we hav community gods (means particular god/ godness can be worshipped by one community )

    First try to educate our people before pointing others.

    As for me missioneries are just showing lights on the issue.

    after i red the above article and comments i understood we are trying to avoid the issue just saying that all because of others religion.

    Always we are saying examples from 2000 yrs. Nobody ready to discuss about prsent situation in tamilnadu. Please visit virudhu nager / nellai / theni/ etc places then you people will know who is the reason for all this. above place still some community people cannot walk some streets.

    So please first gothrough full diagonise ourself ( hindu ), treat ourself. nobody can do anything aginst.

    after i reading all articles & comments, i feel nobody ready to agree some things. We like to pass the ball. its ok we all are humans we are like that only.

    if i hurt anybody please forgive me.

    Vishal

  8. எனக்கு இந்த புத்தகம் வர வேண்டியதிருக்கிறது. பொன்னீலனின் ‘மறுபக்கம்’ புத்தகத்தையும் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி.

  9. அன்புள்ள ஜெயராஜ்,

    இந்த தளத்துக்கு வந்து ப்டிக்கிறீர்கள் எனப்தை அறிந்து மகிழ்கிறேன். இந்தியாவெங்கும் எழுதப்படிக்கத்தெரியாதவர்கள்தான் இருந்தார்கள், பார்ப்பனர்கள்மட்டுமேஎழுதப்படிக்கத்தெரிந்தவர்களாக இருந்தார்கள் எனப்து ஒரு பொய்.

    இந்தியாவில் சிற்றரசர்களின் ஆதரவில் பார்ப்பனர்கள் கல்வி அறிவு ஊட்டும் வாத்தியார்களாக நாடெங்கும் இருந்தார்கள். மொகலாய ஆட்சியில் இவர்கள் ஒடுக்கப்பட்டு மதரசாக்கள் துவங்கப்பட்டன. இவர்கள் சிதறி அலைந்தார்கள். அந்த காலத்தில்தான் படிப்பறிவு குறையத்தொடங்கியது. அதன் பின்னர் ஆங்கிலேயர்கள் வந்தார்கள். அப்படி வந்து அவர்கள் கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களை திறந்து மேலும் இந்த கிராம வாத்தியார்களுக்கு வேலை இல்லாமல் செய்தார்கள்.

    அப்ப்டியிருந்தும் சென்னை மாகாண கவர்னர் ஆட்சி காலத்தில் பார்ப்பனர்கள் யார் யாருக்கெல்லாம் கல்வி சொல்லித்தருகிறார்கள் என்பதை சர்வே எடுத்து ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். சென்னையில் ஆங்கில ஆட்சிகாலத்தில் சுமார் 45 சதவீத மக்கள் திண்ணை பள்ளிக்கூடங்களில் எழுத்தும் எண்ணும் கற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது.

    காலனியாதிக்கத்தின் கீழ் நமது வரலாறு நம்மை ஆண்டவர்களால் எழுதப்பட்டது. அதன் அடுக்குக்களின் உள்ளே நுழைந்து உண்மையை கொண்டுவரும் பொறுப்பு, எந்த வித அடக்குமுறைகளுக்கும் வளைந்துகொடுக்காமல், காசுக்கு மதம் மாறாமல், வீராப்புடன் இந்துக்களாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஏதோ காரணங்களால்மதம் மாறியவர்களின் வழி வந்த உங்களுக்கும் இருக்கிறது.

    மத ரீதியில் சிந்திக்காமல் உண்மையை கண்டறிய முயலுங்கள். அது உங்களுக்கு தெளிவு தரும்.

  10. To receive this book I have sent MO for Rs.125/.. to SISHRI, Chrompet address but the MO was returned as ‘refused’. Whom to contact to purchase the book; please clarify me.
    Thanks.

  11. I appreciate Mr.Aravindan’s pain staking effort to publicise this book; but the book fails by its own condradictions. The authors quote a number of references, but references have been used without any time or place sense. The complete book has been written on the basis of assumptions. This is like saying following statements together and interpreting based on assumptions:
    1. Mahatma Gandhi, Father of our nation, belonged to a caste called Gandhi in Gujarat and he displayed enormous personal strength during Indian freedom struggle.
    2. Feroz Gandhi, Farsi by birth, was a leading light of Indian Parliament, dared to oppose his own father-in-law, Pandit Nehru, father of Indira Gandhi.
    3. Gandhi surname is used by Punjabi Sikhs belonging to Khatri caste.
    4. Khatri caste is a shorter version of Kshatriyas

    “Hence Gandhis of Gujarat can be Kshatriyas of Agni Gula lineage as Faris worship Fire. It would be interesting to note that some nadars are named as “Vanniya Nadar, with Vanni meaning Fire and Kamarajar was called “karuppu Gandhi”. Kamarajar, though not from a Nilamaikkara Nadar group of the Surya clan, may have belonged to the Agnikula Khatriya clan and was related to number of Nilamaikkara nadars who had founded the Khatriya Nadar School of Tirumangalam.”

    This is how this entire book is written. Nobody can question the first three statements and the fourth one is what the caste claims, but Khatris do not even have a clear “Vaishya’ categorization and not accepted as Khatriyas by other Sikh/Punjabi castes.

    Similarly, the entire purpose of this book was to establish that Nadars or Sanars were the missing ‘Kshatriyas’ of Tamil country. To that purpose, they find these kind of historical events and Xtian missionaries as irritants. Hence all these half-truths are paraded as facts to finally establish a glorious past for their community. While it is definitely not a bad thing to write a hagiography, it is wrong to pass it across as ‘research’.

    It is definitely possible and feasible that some missionaries had vested interests to propagate their religion, many of them did yeoman service to Nadar Community. This fits very well with the general axiom that beneficieries hate their benefectors. Bishop.Caldwell had his own failings, but for him and others like him, Nadars would not have enjoyed the benefits of British Rule.

    If Britishers brought the divide among Hindu castes and led to degradation of some, how come the status of these castes hundreds of years before also was the same? I am not blaming Brahmins for the caste system. I am sure all upper castes have had a hand in propogating this for their benefit. It should also be noted that who was an upper caste also varied from place to place, time to time. It is impractical to state that one caste is direct descendant of “Rama” and has maintained its purity for centuries, while science says that Indian population is among the most ‘mixed’.

    Finally, the promotion of such books on Tamil Hindu site defeats the purpose of this site itself as these kind of books are divisive in nature, trying to promote one caste at the cost few others. Then what ‘TamilHindu unity’ you guys are talking about?

  12. திரு மாறன் அவர்களே

    இந்த நூலை நீங்கள் படித்தீர்களா? எனக்கும் கூட உங்களைப் போல நூலில் குறைகாண விருப்பம்தான். ஆனால் நீங்கள் பயன்படுத்தியுள்ள எடுத்துக்காட்டுகளை எந்த ஒரு நூலுக்கும் பொருத்திக் காட்டமுடியும். நீங்கள் எதை அற்புதமான ஆராய்ச்சி என்று சொல்கிறீர்களோ அதற்கும் இப்படி சொல்லமுடியும். குறிப்புகளைக் கால தேச வர்த்தமானங்களுக்கு இயையக் கொடுப்பது எப்படி என்று எனக்கு சொல்லுங்களேன். நாடார்களின் க்ஷத்ரியத் தகுதி பற்றி பல இடங்களில் அந்நூலாசிரியர் எழுதியிருப்பது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கும் மதப் பரப்புனர்களுக்கும் முன்னதாகவே நாடார் பெண்கள் மார்பை மறைத்து உடை அணிந்திருந்தது பின்னிணைப்பில் தெளிவாக உள்ளது என்று தெரிகிறது. அது மிசினரிகளே எழுதியது என்று நினைக்கிறேன். முதல் சர்ச் கட்டுவதற்கு நாடார்தான் நிலம் கொடுத்தார் என்ற விவரம் அவரகள் அடிமைகளாக இருக்கவில்லை என்பதைத் தெளிவாக்குகிறது இல்லையா? ஏனெனில் அடிமைகள் நிலம் வைத்திருக்கும் உரிமை உடையவர்கள் இல்லை. இதையேனும் நாம் ஒப்புக்கொள்ளலாமா கூடாதா?

    தவிர்க்க இயலாதபடிக்கு (“Bishop.Caldwell had his own failings”) நீங்களே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு கால்டுவெல்லின் தகிடுதத்தங்கள் அந்நூலில் வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டுள்ளதாக முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது.

    மிக முக்கியமான விஷயம் நீங்கள் எழுப்பியுள்ள “how come the status of these castes hundreds of years before also was the same?” சாதிகளின் தகுதி இவ்வாறே இருக்கவில்லை. அது பல மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளது என்பதை திரு இராமச்சந்திரன் ‘மங்கல ஸமூகம் பற்றியும்’, பறையர் ஸமூகம் பற்றியும், வேளாளர் ஸமூகம் பற்றியும் எழுதியுள்ளதில் இருந்து தெரிகிறது. ஆனால் கிறித்தவ மிசனரிகள்தான் 2000 ஆண்டுகளாக சாதி இப்படியே இருந்ததாக சொல்கின்றனர். இன்றைக்கு மேலே உள்ளவர்களுக்கு இது சாதகமாகப் போயிற்று. அதனால்தான் அடிமைகளாக அன்றைக்கு இருந்தவர்கள் தாங்கள்தான் மூவேந்தர்கள் என்று சொல்லித் திரிகின்றனர். திராவிட இயக்கமும் அதைத்தான் வரலாற்றுப் பாடமாக ஆக்கியுள்ளது. ஒரு உண்மையை எடுத்து சொல்வது எப்படி ஒருவரைப் புகழ்வது ஆகும்? புகழாகவே இருந்தாலும் உண்மை உண்மைதானே? -thamizhan

  13. jayaraj
    16 January 2011 at 1:23 am
    திரு ஜெயராஜ் அவர்களே
    அவரை ஆமோதித்துள்ள ரத்னவேல் நடராஜ் அவர்களே
    ஜெயராஜின் நம்பிக்கையைப் பொய்ப்பித்த தமிழ் இந்துவுக்கு நன்றி.
    கிறித்தவ மிசநரிகளுக்கு முன்னர் எல்லாம் சரியாக இருந்ததாக அந்த நூலில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்ற உண்மையை முதற்கண் அறிந்து கொள்ளுங்கள். சமமின்மைகள் இருந்தது என்பதும், ஆளும் இனமாக இருந்த சான்றோர் இனம் வீழ்ச்சி நிலையில் இருக்க அதை கிறித்தவ மிஷனரிகளும் அடிமைநிலையில் இருந்த நாயர்களும் வேளாளர்களும் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தனர். அதனால் அவர்கள் முந்தைய ஆட்சியாளர்களைத் தாழ்த்துவதில் ஈடுபட்டனர் என்று அந்நூலில் குறிப்பிடுவதில் இருந்தே சமமின்மை இருந்ததைத் தெளிவாக்குகிறது. எனவே உங்களின் முதல் பத்தியே தவறு. அல்லது இது உங்களின் முன்முடிவை (prejudice) ஐக் காட்டுகிறது.

    பிரிட்டிஷ் வருகைக்கு முன் இந்தியர்கள் கல்வியறிவற்ற காட்டுமிராண்டிகள் என்பது உங்களின் கருத்து. காட்டுமிராண்டிகள்தான் தமிழ்ப் போன்ற செம்மொழியை உருவாக்கி வைத்திருந்தனர் என்பது ஒரு அற்புதம்தான். அடுத்து களப்பிரர் கால ஆட்சி மாற்றத்தைக் கூட பிரிட்டிஷ் கல்விதான் கொண்டுவந்தது என்று சொன்னாலும் சொல்லுவீர்கள் போல.
    Mercenaries and Missionaries. என்ற இரண்டு வகையினரும் கூட்டணியில் இருந்தனர் என்பதுதான் வரலாறு. எனவே நீங்கள் சொல்வது போல, “They were not always together ” என்று சொல்வது தவறு என்பதை பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர்.
    continued….

  14. continuation….
    பழங்காலம் பொற்காலம் என்பது திராவிட இயக்க்க கருத்து. அதனால்தான் இராஜராஜனைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். அவர்களின் இயக்கம் இன்றைக்கும் விற்றுக்கொண்டிருக்கிறது.
    பைபிள் படித்த ஆசாரி முன்னேறிவிட்டதாகவும் அவருக்கு வேதத்தின் சிறப்பை எடுத்துச்சொன்னவர் அவரின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாகவும் திறம்பட எழுதிவிட்டதாக நீங்கள் மனதுக்குள் நகைப்பது தெரிகிறது. அதாவது அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் பொருட்டே அவர் வேதத்தின் சிறப்பினைப் பேசிக்கொண்டு வந்ததாக நீங்கள் சொல்ல வருகிறீர்கள். இந்த ஆசாரி சமூகத்தினர்தான், வேதங்கள் தங்களுக்கும் உரியது என்று சித்தூர் ஜில்லா நீதிமன்றத்தில் வழக்காடி வென்றவர்கள் என்ற உண்மையை நீங்கள் அறிவீரா? அதுவும் இன்றைக்கு அல்ல. சுமார் 100 ஆண்டுகளுக்கும் முன்னர், நீங்கள் சொல்கின்ற பிரிட்டிஷ் ஆட்சியின் போது. அவர்களும் வேதங்கள் அறிந்திருந்தனர் என்பதை நீதிமன்றத்திலே நிரூபித்தவர்கள். இதற்கும் மேல் அவர்கள் பற்றி அறிய ஆந்திர மாநிலம் சாலங்காயனா செப்பேடுகளைப் படித்து அறியுங்கள். பஞ்சகம்மாளர்களுள் ஒருவரான ஆசாரிகள் வேதத்தின் எந்தப் பிரிவைப் பின்பற்றியவர்கள் என்பதை அறியலாம். எனவே படிப்பு அவர்களுக்கும் இருந்தது. அதிலும் ‘வேதப் படிப்பே’ இருந்தது. பிரிட்டிஷ் மற்றும் மிஷனரிகள் வந்துதான் அவர்களைப் படிக்கவைத்ததாகச் சொல்லுவதை ஒரு அபத்தம் என்று புரிந்துகொள்ளுங்கள்.

    தங்கள் நாட்டில் உள்ளவர்களுக்கு நற்செய்தி போதிக்கமுடியாத அந்த மிஷனரிகள் இங்கே வந்து வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன? இன்றைக்கு என்.ஜி.ஓக்கள். அதாவது வெளிநாட்டுப் பணம் பெறும் நிறுவனங்கள் அதிலும் வெளிநாட்டில் இருந்தே நேரடியாக இங்கே வந்து ‘சேவை’ செய்பவர்கள் அதை ஏன் தங்கள் நாட்டில் –அதிலும் ஏழைகள் உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள்- செய்யாமல் இங்கே வந்து செய்யவேண்டிய அவசியம் என்ன?
    ஆட்சியாளர்களாக வந்த எல்லிசும், காலின் மெக்கென்சியும் இந்த இந்திய மக்கள்பால் பரிவுடன் அணுகியதாகத் தோள்சீலைக் கலவரம் நூலில் குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீரா? தெரிந்துகொண்டு பேசுங்கள்.
    விஞ்ஞான உண்மைகளைப் பேசிய கலிலியோ, டார்வின் போன்றவர்களும் கூட தங்கள் நாட்டிலேயே இருந்த ஆட்சியாளர்களும் நல்லபடியாக இருந்திருக்கவில்லை என்பதை மனதிலே கொண்டு “They were never comfortable with the English rulers.” இதைச் சொல்லுங்கள். அவர்களின் நவீனக் கல்வி எத்தகையது, என்பதை அறிய ஒரு சிறிய உடல்நலக் குறைவுக்காக ஏதேனும் அல்லோபதி மருத்துவமனைக்குச் சென்று வாருங்கள். அவர்களின் கல்வி எத்தகையது என்பதை அறிய உங்களின் குழந்தைக்கு எல்.கே.ஜி. அட்மிஷன் வாங்க எவ்வளவு கட்டணமும் நன்கொடையும் தரவேண்டியிருக்கிறது என்பதில் இருந்து புரிந்துகொள்ளுங்கள். இந்த வணிகமயம்தான் அவர்கள் கொண்டுவந்து கொடுத்த கொடை.

  15. Now if the Hindu Vedas are so good and rich why were they not taught to every one. Why it is being propagated now when their exisitence is threatened. Why not before. This situation would not have risen. Do you know that even Bible was not made available to common man there. The dominant try to rule every where.

    the above words of you clearly prove that things were similar in both the places… and not that the chirstian missionaries came here and developed our people from the ‘barbaric’ to the present ‘civilized’ state is what the book, ‘tholseelaik kalakam: therintha poykaL theriyaatha uNmaikaL’ come to say.

    thanks for giving an opportunity to record my views.
    ps: Mr. Rathnavel… hope you would respond further.

  16. அன்புள்ள தமிழன் அவர்களுக்கு,

    ‘எல்லாவற்றிற்கும் காரணம் மிசினரிகளே’ என்று எழுதுவதால் தான், நான் அதற்கு முந்திய காலத்தில் சாதிகளின் நிலை குறித்து எழுத வேண்டியதாயிற்று. சாதிகளின் உயர்வு மற்றும் தாழ்வு இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் மாறிய வண்ணம் இருந்த்தது என நானே எழுதியிருக்கிறேன். இதற்கு மேல் உங்கள் சொந்த சாதி பற்றிய பெருமிதம் உங்களுக்கோ மற்றும் நூலாஸிரியர்களுக்கோ இருப்பதைப் பற்றி எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. இதை ஆராய்ச்சி என்று கதை விடும் பொழுது தான் கேள்வியே வருகின்றது. நான் கொடுத்த உதாரணம் உங்களுக்கு உவப்பாக இல்லாததால், இதை உடனே தமிழக அரசியல்வாதி மாறி, இதை எதன் மீது வேண்டுமானாலும் சுமத்தலாம் என்கிறீர்கள்.

    மற்றபடி, மேலாடை உடுத்துவது, உடுத்தாது, உடுத்தக் கூடாதது பற்றி பிரச்சனையை சமுக பொருளாதார வரலாறு சூழ்நிலை ரீதியில் பேசாமல், எதோ நாயரும் வேளாளரும் சதி செய்து உருவாக்கிய மாதிரி எழுதும் போதுதான் உங்களின் நேர்மை மீது கேள்வி வருகின்றது. நாடார்களிலேயே நிலஉடமையாளர்கள் மற்றவர்களை எப்படி நடத்தினார்கள் என்று தெரியுமா? மார்த்தாண்ட வர்மா தமது எதிரிகளான எட்டு வீட்டுப பிள்லைமார்களின் பெண்களையும் குழந்தைகளையும் பரதவர்கு விற்றதாக சொல்லப் படுகிறது. உடனே இருவர்க்கும் பரம்பரைப் பகை என்று கதை எழுதுவதா? இன்னம் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் காமாலைக் கண்ணுக்கு மஞ்சள் என்பது போல், உங்களுக்கு எந்த வரலாற்று நிகழ்வை பார்த்தாலும், உடனே சாதியின் பின்புலம், உயர்வு, தாழ்வு, சதி, இவைதான் தெரிகிறது என்றால், பிறகு எப்படி உங்கள் கட்டுரைகள் உள்நோக்கம் அற்றவை என்று எப்படி எடுத்துக் கொள்வது?

  17. திரு மாறன் அவர்களே!
    எல்லாவற்றுக்கும் காரணம் மிசனரிகள்தான் என்று மேற்படி நூலில் எழுதி இருக்கிறதா? நீங்கள் உங்களின் கற்பனையிலிருந்து எழுதுகிறீர்கள். நீங்கள் ஒரிஜினல் ஆராய்ச்சி என்று ஒன்றைக் குறிப்பிடுங்கள். பிறகு பார்ப்போம். உங்களின் எழுத்திலேயே உங்கள் ஆத்திரம் தெரிகிறது. இது பலவீனத்தின் அடையாளம் என்பதை எவரும் அறிவர்.
    இந்நூலில் கூறப்பட்டுள்ள படி நாயரும் வேளாளரும் ஏற்கெனவே மார்பை மறைத்து நாடார் பெண்கள் உடை உடுத்தி இருந்ததைக் கிழித்தார்களா இல்லையா? இதுதான் பிரச்சனை. இது நாயர்-வேளாளர் சதியா இல்லையா என்பதை வாசகர்கள் புரிந்துகொள்வர். அல்லது மிசனரிகல்தான் அப்படி உடை அணியக் கற்றுத் தந்தார்களா? இதற்கு என்ன விடை என்பதில் இருந்து ஏன் விலகி ஓடுகிறீர்கள்? நாடார்களுக்கும் வேலாளர்களுக்கும் பகை இருந்தது என்பதைவிட, பழைய ஆட்சியாளர்களுக்கும் புதிய ஆட்சியாளர்களுக்கும் இடையிலான சண்டை என்றுதான் அந்நூலில் எழுதப்பட்டுள்ளது. எனவே உங்களின் காமாலைக் கண்கொண்டு நீங்களாக இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம்

  18. இந்த இனைய தளத்தில் எத்தனை இந்துத்துவம் சாரா கருத்துகள் நிராகரிக்கப் பட்டிருக்கக் கூடும் என்ற வருத்தத்துடனே எனது இந்த பதில் கருத்தை தெரிவிக்கிறேன்.
    இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் நடந்த கொடுமைகளை ‘கிறிஸ்தவ மிஷனரிகளுடன்’ இணைத்து பல பேர் பேசுவது வருத்தமான செய்தியே. ‘கிறிஸ்தவ மிஷனரிகள்’ செய்த கல்வித்தொன்டிற்கும் சமூகத் தொண்டிற்கும் வியாபார நோக்கமென்னும் பொதியுறை போர்த்தி காட்டப்படுகிறது. நாடர்களையும் கன்னியாக்குமரி மக்களையும் பற்றி பேசுவதற்கு எனக்கிருக்கும் தகுதி அவர்களில் நானும் ஒருவன் என்பதே. இப்பொழுது வியாபார நோக்கில் செயல்படும் மிஷனரி கல்வி நிறுவனகள் என்ற கருத்தினை முன்வைக்கும் முன். அவை உண்மையில் கிறிஸ்தவ மிஷனரியால் நடத்தப்படும் கல்வி நிறுவங்களா அல்லது கிறிஸ்தவ பெயர்களைக் கொண்டுள்ள தனியார் கல்வி நிறுவங்களா என்று பார்த்தல் மிகவும் தேவையானதே. இக்கருத்தினை முன்வைக்கும் ஒவ்வொருவரிடமும் நான் வினவுவது என்னவெனில் “இந்து நிறுவனங்கள் தொண்டு நோக்கில்தான் செயல்படுகின்றனவா?” என்பதே. ஆங்கிலேயர் வருகைக்குமுன் இருந்த குருகுலக் கல்விமுறைகூட ஒருவிதத்தில் ஆதாய நோக்கம் கொண்டதே.

    ஆங்கிலேயர் வருகைக்கு முன் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை சார்ந்தவர்களைத் தவிர பிறருக்கு கல்வி மறுக்கப்பட்டது என்பதும் வகுப்புவாதம் இருந்தது என்பதும் நிரூபிக்கப்படவேண்டியதில்லை. “மனுநீதிச் சோழன் காலத்தில் அந்தணர்களுக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டது” என்ற செய்தியும் அதை நிரூபிக்கும் கல்வெட்டுச்சான்றுகளும் போதும். இதனால் பிறவகுப்பினைச் சார்ந்த எவருமே கல்வியறிவு பெற்றிருக்கவில்லை என்று சொல்வது தவறு. வெகு சிலர் (exceptions is always there) படித்திருந்தார்கள் அவர்களுக்கு மறைவாகக் கூட கல்வி கொடுக்கப்பட்டிருக்கலாம். மேலும் நாடர்களுக்குரிய சில வர்மக்கலைகள் மருத்துவக்கலைகள் வேறு எவருக்கும் கற்பிக்கப்படவில்லை. மேற்கண்ட சான்று மொகலாயர்கள் காலத்திற்கு முன்னரே ஒரு சில வகுப்பினர்க்கு தான் கல்வி வழங்கப்பட்டது எனல் உண்மையாகிறது.

    ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன் கல்வி அனைவருக்கும் கிடைக்கவில்லை என்பது உண்மையே. ஒரு சிலர் கற்றவர்களாய் இருந்தனர் மிகுந்த அறிவாளிகள் என்பதைக் கொண்டு அனைவரும் கற்றிருந்தனர் எனல் தவறே ஆகும். அனைவரும் கற்றிருந்திருந்தால் ஆங்கிலேயர்கள் எப்படி உள்நுழைந்திருக்க முடியும். இந்து எனும் மார்க்கம் தமிழர்கள் இடையே நுழையும் முன்னரே கல்லாதவர்கள் என்போரும் இருந்தனர் அல்லது “முகத்திரண்டு புண்ணுடையோர் என்போர் கல்லா தவர்” என்று திருவள்ளுவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை. மலர்மிசை ஏகினான் என்பதைக் கொண்டு திருவள்ளுவர் இந்து கடவுளைதான் சொன்னார் எனல் மிகுந்த தவறு ஆகும்.

    வகுப்புவததிற்கு மூல வித்து மிஷனரி என்பது மிகுந்த தவறு. கால்டுவெல் கதை புனைந்தார் என்பதினும் கால்டுவல் தனக்கு தெரிந்ததை உரைத்தார் என்பதே சாலப் பொருந்தும் என்பது எனது கருத்து. அத்தனைக் காலமாக உயர் வகுப்பினரால் புனயப்பட்டக் கதை கால்டுவெல் மூலம் எழுத்தாக்கம் பெற்றது என்பதே என் கருத்து. அங்ஙனம் இல்லை எனில் அது எழுதப்பட்டப் போதே மறுக்கப்பட்டிருக்கும். ஆகா இது திடீர் நுழைவு இல்லை படிப்படி திணிப்பு. கம்பராமாயணமும், மகாபாரதமும் போதும் எத்தனை வகுப்புகள் இருந்தன என்பதற்கும் உரிமைகள் மறுக்கப்பட்டன என்பதற்கும். நாயக்கர்கள் ஒட்டுமொத்த நாடார்களை அழிக்க முயன்றது வகுப்பு மோதலின் வெளிப்பாடு. கர்ணனுக்கு வித்தை மறுக்கப்பட்டது தாழ்ந்தோருக்கு கல்வியில்லை என்பதன் வெளிப்பாடு. சான்றோன் என்றவனை சாணான் என்று மாற்றி மரம் ஏறச் செய்துவிட்டார் அகத்தியர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே. ஆள்வதற்காக ஆங்கிலேயர்தான் நாடார், பிராமணர், சாம்பவர் என்று பிரித்தனர் எனல் முற்றிலும் தவறே.

    தமிழரின் தாய்மதம் இந்து எனும் இந்த இணையதளத்தின் கருத்தும் மிகுந்த தவறு ஆகும்..
    ஆதாரங்கள்.
    கிரந்த எழுத்துக்கள் துணையின்றி இந்து மார்க்கத்தின் பெயரையோ அல்லது கடவுளர்களின் பெயரையோ எழுதுவது மிகக் கடினம். (சொல்லுக்கான இலக்கணத்தை விடுத்து வெறும் ஒலிப்பு இலக்கணத்தை மட்டும் கொண்டு எழுதலாம் ஆனால் அப்படி எங்கும் எழுதப்படவில்லை)
    Hindu – தமிழில் எழுத முடியாது. தமிழில் பொருளும் இல்லை. மூலம் வடமொழி
    Hari – தமிழில் எழுத முடியாது.
    Krishnan – தமிழில் எழுத முடியாது.
    Vishnu – தமிழில் எழுத முடியாது.
    Sahasranaaman – தமிழில் எழுத முடியாது.
    Brahma – தமிழில் எழுத முடியாது. (மெய்யெழுத்தில் எந்த சொல்லும் ஆரம்பிக்காது)
    Shiva – தமிழில் எழுத முடியாது. தமிழில் சிவ என்பதன் சரியான உச்சரிப்பு chiva – (சரியான சொல்லிலக்கனத்தின் அடிப்படையில் தமிழ் வல்லுனர்களை கேட்டுப்பாருங்கள்).
    இந்த பெயர்கள் எல்லாம் முதலில் வேதங்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை தமிழர்களுக்கு உரியவை அல்லன. தமிழருக்குரியவை ஆயின் தமிழ்ப் பெயர்களாக இருத்தல் வேண்டும். தொல்காப்பியத்தில் இந்து கடவுளர்களை தான் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்ற திட்டவட்ட சார்பின் அடிப்படையில் பார்க்கும் பொது தான் அது இந்திரன் ஆகவும் திருமால் எனும் விஷ்ணு-ஆகவும் தெரியும்.

    இவைகள் குறிப்பிடப்பட்டிருக்கும் வேதங்கள் தமிழர்களுக்கு உரியவை அல்லன. (the early Rigveda is not austro-asiatic nature – linguistic research ). இந்தக் கூற்று ரிக் வேதத்திற்கு சொந்தக் காரர்கள் தமிழ் மொழியை சாராதவர்கள் என்பதை விழக்குகிறது. மேலும் தொடக்க கால ரிக்வேதத்தில் காணப்படும் ஆறுகள் மேற்கு ஆப்கானிஸ்தான்-ஐ சார்ந்தவை. பின்னர் படிப்படியாக இந்தியாவில் ஓடும் ஆறுகள் உள்ளே நுழைகின்றன. இது ரிக் வேதத்திற்கு சொந்தக் காரர்கள் மேலை நாட்டிலிருந்து உள்ளே நுழைந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.
    அங்ஙனம் உள்ளே வந்தவர்கள் தொடக்க கால வேத்ததிலிருந்தே தாங்கள் வைத்திருந்த கடவுளர்களை தமிழர்களுக்கு கொடுத்துவிட்டு தமிழ் மொழி (austro-asiatic) இயல்பை வாங்கிக்கொண்டார்கள்.

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோமையார்(St’ Thomas) இந்தியாவில் கிறிஸ்தவ விதையை தூவி விட்டார் என்பது நிரூபிக்கக் கூடியதும் பலர் அறிந்ததுமாகும். இந்துத் துவத்தால் வந்த வகுப்புவாதமும் அதனால் பலருக்கு வந்த தாழ்வு மனப்பான்மையும் தான் ஆங்கிலேயர்கள் உள்நுழைந்து அதிகாரம் செலுத்தக் காரணம். இந்த ஆங்கிலேயர்கள் ஆதயாத்தை நோக்காய் கொண்டவர்கள். இன்னொரு ஆங்கிலேயப் பிரிவினரும் உண்டு அவர்கள் மறைபரப்புதலை நோக்காய்க் கொண்டவர்கள். தொண்டுள்ளத்துடன் மருத்துவ மனைகளையும், கல்வி நிறுவங்களையும் நிறுவிய மிஷனரியை சார்ந்தவர்கள். ஆங்கிலேயர் என்றவுடன் அனைவரையும் ஒரு பிரிவில் வைத்துப்பார்ப்பது சரியன்று.

    சான்றோர்கள் எனப்படும் நாடார்கள் சாணார்கள் ஆக்கப்பட்டது முதலில் அகத்தியத்திலேயே. அகத்தியரோ ஒரு வடமொழியாளர். நாடாளும் குலத்தாரை இழிந்தவராக்க ஓர் இந்துவால் செய்யப்பட்ட சதி என்றும் நான் இதைப் பார்க்கலாம். அகத்தியம் எனும் இலக்கண நூலில் ஆய்த எழுத்து வடமொழியின் அஃக எனும் எழுத்திற்கு ஒப்ப அகேனம் என்று பெயரிடப்பட்டதும் இந்நூலிலேயே.

    மனையோர் அனையோர் மிக்கோர் எனும் ஒருவனுக்கு ஒருத்தி எனும் தொல்காப்பியத்தில் கூறப்படும் தமிழ் மரபிற்கு மாறாய் கடவுளர்களும், உயர்ந்தோரும் பலதாரம் கொள்ளும் முறையை அறிமுகமாக்கி காலச்சார சீர்கேடு கொண்டுவந்ததும் இந்த இந்துத்துவமே. தமிழுக்கு ஒரு கடவுள் என்று அறிமுகப்படுத்தி அவருக்கே இரண்டு மணம் செய்து விட்டது இந்த இந்துத்துவம். ‘அற்றம் மறைத்தல்’ எனும் உடுத்தல் முறைக்கு மாறாய் கண்ணனே பருவப் பெண்டிர் ஆடையை திருடி பிறந்த மேனியராய்ப் பார்க்கிறான் என நூல்கள் கூறுகின்றன. பாலியல் காம நோய்க்கு லீலை என்று பெயரிட்டால் தவறு தீர்ந்திடுமோ. திருவள்ளுவர் போற்றிக்காத்த பெண்ணின் நாணம் கடவுளாலேயே சீரழிக்கப்படுதல். பாஞ்சாலியின் துயிலுரிந்து பிறந்த மேனியராய்ப் பார்த்த கௌரவர்களுக்கு தண்டனை பணம், பொருள், நாடு, உயிர் அனைத்தையும் இழந்தனர். பெண்களின் உடை திருடி பிறந்த மேனியராய்ப் பார்த்த கண்ணனுக்கு என்ன தண்டனை? கலாச்சாரத்தில் கூட தமிழும் இந்துவும் ஓட்ட வில்லையே.

    இந்து புராணங்களில் வரும் கதாயுதம், திரி சூலம். போன்ற ஆயுதங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளின் அகழ்வாராய்ச்சியிலும் கிடைக்கவில்லையே. பண்டை தமிழ் நூல்களிலும் இல்லை. தமிழரின் ஆயுதமும் இந்துக்களின் ஆயுதமும் கூட ஒத்துப்போகவில்லை. போர் ஆரம்பித்தல் அறிகுறியாக போர்முரசு அறைதலை தானே தமிழ் கூறுகிறது. சங்கு கொண்டு ஊதுவதை சொல்லவில்லையே. இங்கும் முரண்பாடு.

    சுயம்வரம் நடத்துதல் வடநாட்டார் வழக்கம் அன்றோ. ஐந்திணைகளுக்கு உரிய எந்த களவிலும், மணத்திலும் இது கூறப்படவில்லையே.

    தமிழர்களின் செல்லப் பிராணியான கீரி புராணங்களில் குறிப்பிடப்படாதது ஏன்?

    வடமொழியை நீக்கிவிட்டு இந்துத்துவத்தை இவர்கள் ஆதரிக்கப்போவதுமில்லை. வடமொழி வேர்களை அகற்றிவிட்டால் இந்துத்துவம் வாழப்போவதும் இல்லை. வகுப்புவாதம் எனும் ஓன்று இல்லாவிடில் ஏன் வழிபாட்டில் எந்த வகுப்பினரும் பங்கேற்கக்கூடாது. இதை ஆதரிப்பதே இந்துத்துவம் அன்றோ. இந்துக்கள் என்பவர்கள் பிறப்பால் மட்டுமே இந்துக்கள் என்பது ஒரு குறிப்பிட்ட வகுப்பினரே இந்துக்கள் என்பதையும் ஏனையோர் இந்துக்கள் அல்லர் என்பதையே காட்டுகிறது. இதுதானே ஆரிய சமாஜத்தின் கொள்கையின் கரு. இதை கருத்தில் கொளின் இந்து என்பதே வகுப்பாகி வகுப்பிற்கு வித்தாகவும் மாறுகிறது.

    எனது இந்தப் பதிலில் இந்து நெறிக்கு மூலமானவர்கள் வடமொழியாளர்கள் என்பதற்கும் அவர்கள் தமிழ்நாட்டின் ஏன் இந்தியாவின் பூர்விகாக் குடியினர் இல்லை வந்து கலந்தவர்கள் என்பதற்கும் போதுமான ஆதாரங்கள் தந்துள்ளேன். இதுபோன்ற இந்துத்துவ வெறியர்கள் பிற மதத்தை இழிவுபட்டதாய் எழுத்வோது மிக்க மனவருத்தத்தை உண்டாக்குகிறது. சில உண்மைகளைக்கூட பிறரை பாதிக்குமே என்று நாம் மறைக்கும் பொது. ஆதாரமற்ற, பொய்யான கருத்துகளை ஏன் தவிர்க்க மாட்டேன் என்கிறார்கள். எனது தமிழின் தொன்மை பற்றிய ஆராய்ச்சியில் வடமொழியை விட தமிழ் மொழியை சிறந்தது என்பதின் நிரூபணங்கள் பல எனது இந்து நண்பர்கள் பலருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தக்கூடுமோ என்று ஐயமுற்று நான் எனது கருத்துகளை வெளியே சொல்லதிருக்கும் நேரத்தில். இப்படி ஒரு பதிலை எழுத வைத்துவிட்ட யாரோ சிலரின் கருத்துகளுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

    யாரையேனும் எனது பதில் காயப்படுத்தியிருந்தால் நான் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். எல்லா மார்க்கத்திலும் நிறைகுறைகள் இருக்கவே செய்யும். எது சிறந்தது என்று வாதிடுவதை தவிர்த்து நாட்டுணர்வுடன் வாழ்தலே நன்று.

    வெல்க தாயகம்

  19. ஜாண் ரூபர்ட் தமிழரின் மதம் ஹிந்து மதம் இல்லை என்பதையும் ஹிந்துத்துவத்தை நிராகரிக்கும் போக்கில் சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். அவற்றை மறுக்க வேண்டியது நமது கடமை.
    அடியேனுடைய சிற்றறிவுக்கு எட்டியபடி மூன்று கருத்துக்களை மறுக்க முயலுகின்றேன்.
    ஒன்று கிறிஸ்தவ மிசனரிகளையும் ஆங்கில ஆட்சியையும் வேறுபடுத்துவது. முன்னது நல்லது மற்றது அப்படியல்ல என்பது.
    “இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் நடந்த கொடுமைகளை ‘கிறிஸ்தவ மிஷனரிகளுடன்’ இணைத்து பல பேர் பேசுவது வருத்தமான செய்தியே”
    ஆங்கில அரசுக்கும் கிறிஸ்துவுக்கும் சேர்த்து தான் மிச்சனரிகள் பணியாற்றினார்கள் என்பது வரலாறு. பழங்குடிப் பகுதிகள் Excluded Areas மற்றும் partially excluded areas என்று பிரிக்கப்பட்டு அங்கே மிசனரிகள் மட்டும் மதம் மாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆங்கில அரசை எதிர்த்து போரிட்ட பழங்குடி மக்களை மூளைச்சலவை செய்வதற்கு மிசனரிகள் பயன் பட்டனர் பயன்படுத்தப்பட்டனர் என்பது வரலாறு. மிசனரிகளின் பழைய ஆவணங்கள் இன்றும் இதனைப் பறை சாற்றும். மிசனரிகள் ஆங்கில ஆட்சியின் கருவி என்பதாலும் மதமாற்ற நோக்கில் அவர்கள் பணிபுரிந்தனர் என்பதாலும் அவர்கள் சேவையாளர்கள் அல்ல வியாபாரிகள் என்பதே அன்றும் இன்றும் உண்மை.

    இரண்டாவது, கல்வி ஆங்கிலேயருக்கு முன் பரவலாக்கப்பட வில்லை என்பது. “ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன் கல்வி அனைவருக்கும் கிடைக்கவில்லை என்பது உண்மையே”.
    கல்வி நிச்சயமாக அனைவருக்கும் கிடைத்தது ஆனால் இன்றைய முறை கல்வி (formal education) இல்லை. அப்படியில்லை எனில் பெருங்கோயில்கள், சிற்பங்கள், ஓவியம், நடனம், நெசவு, வேளாண்மை, போன்றவற்றில் நம் பாரதம் எப்படி சிறந்திருக்க முடியும். உலக பெருளாதாரத்தில் இந்தியா சிறந்து விளங்கியது என்பது வரலாறு. இப்படிப்பட்ட சிறந்த கலை, சிறு குரு தொழில்கள், போன்றவை ஆங்கில ஆட்சியால் நசிந்தன என்பது வரலாறு. எந்த மிசனரியாவது அந்நிய அடக்கு முறையை எதிர்த்ததுண்டா.
    ஆங்கில அரசு மற்றும் மிசனரிகள் அனைவருக்கும் கல்வி அளித்தார்களா அளிக்க முடிந்ததா. இந்தியா விடுதலை பெற்றபோது கல்வி அறிவு விகிதம் என்ன. கல்வி என்பது இந்தியர்களை எழுத்தராக்க தான் என்பது ஆங்கில மெக்காலே கல்வியின் நோக்கம் பைபிள் படிக்க வைப்பது தான் மிச்சனரிகளின் நோக்கம். பழங்குடிபிரதேசங்களில் கல்லூரிகள் தேச விடுதலைக்குப்பின் தொடங்கப்பட்டன என்பதே உண்மை.
    மூன்றாவது, கிறித்துவம் ஆங்கில ஆட்சி வருவதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கு வந்துவிட்டது என்பது. “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு “முன்பே தோமையார்(St’ Thomas) இந்தியாவில் கிறிஸ்தவ விதையை தூவி விட்டார் என்பது நிரூபிக்கக் கூடியதும் பலர் அறிந்ததுமாகும்”. இது பெரிய பொய். பைபிளில் எந்த சுவிசேஷம் புனித தாமஸ் ஏசுநாதரின் சீடர் என்றுகூறுகிறது. தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. ஆனால் இன்றைய செயின்ட் தாமஸ் சர்ச் சென்னை கபாலீஸ்வரன் கோயில் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

  20. திரு ஜாண் அவர்களின் முக்கிய கருத்து இந்து மதம் தமிழர் மதமல்ல இந்து தெய்வங்களின் பெயர்கள் தமிழ் அல்லவாம்.
    “கிரந்த எழுத்துக்கள் துணையின்றி இந்து மார்க்கத்தின் பெயரையோ அல்லது கடவுளர்களின் பெயரையோ எழுதுவது மிகக் கடினம்” விஷ்ணு மற்றும் சிவா என்பவை தமிழ் இல்லையாம் அதனால் தமிழரின் சமயம் ஹிந்து மதம் இல்லையாம். ஆனால் பழந்தமிழரி சமயக்கொள்கைகளோடு எப்படி கிறித்துவ கொள்கைகள் ஒத்து இசைகின்றன என்பது திரு ஜானுக்கே வெளிச்சம். ஆதாமின் முதல் பாவமா, இயேசுவின் ரத்தம் ஜெயமா. எல்லா மனிதர்களும் அடிப்படையில் பாவிகள் என்பதா தமிழரின் சமய நெறி ?

    திருமால் என்றும் மாயோன் என்றும் நம் பழம் தமிழ் இலக்கியங்கள் விட்ணுவை கூறுகின்றன. மாயவன் என்றே இன்றும் பிரமலை கள்ளர் இனத்தவர் அவரை வழிபடுவதைக் காண்க. இன்று திருமன், திம்மன், என்று கன்னடத்திலும் தெலுங்கிலும் அழைக்கப்படும் பெருமாளே தமிழ் குடி தொன்று தொட்டு வழிபட்ட முல்லைநில பெருந்தெய்வம் திருமால்.

    சிவம் என்பது தமிழ் செல்லே. ச என்கிற ஒலி தமிழில் உண்டு. ச என்ற எழுத்தே ச, ஸ, ஷ, என்று பயன்படுகிறது. ஒலியில் மட்டுமல்ல பெருளிலும் சிவம் என்பது தமிழே.வட மொழியில் சிவ என்றால் மங்களம்(புனிதம், துய்மை, Auspicious). சிவம், சிவப்பு செம்மை என்றே தமிழில் பொருள் படும். செம்பெருள்(perfect) என்றே தமிழ் மக்கள் அன்றே கருதினர். பழந்தமிழ் இலக்கியங்கள் சிவபெருமானை ஆலமர் செல்வன் என்றும் நீலமணிமிடற்று ஒருவன் என்றும் கூறுகின்றன. சிலப்பதிகாரம் அப்பெருமானை பிறவா யாக்கை பெரியோன் என்றே போற்றும்.

    மிசனரிகள் இதைப்போலத்தான் கதைவிட்டு கரடிவிட்டு மக்களிடையே திராவிட ஆரிய பிழவை வெறுப்பை ஏற்படுத்தி மதமாற்றத்தை செய்தனர். இன்று அது செல்லாது திரு ஜான் அவர்களே.

  21. கிட்ட தட்ட 40 ஆண்டுகள் போராடி பெற்ற உரிமையை மதச்சாயம் பூசி கேவலபடுத்தி விட்டார்கள் அதுவும் நாடர்கள் என்ற போர்வையில். கணேசனுக்கு தெரியாத பல உண்மை களை RSS மேதாவிகள் போதிதிருப்பர்கள் போல. குமரி மாவட்டத்தை பற்றி அடிப்படை எதுவும் தெரியாமல் கேவலபடுத்தி விட்டாயே என் உயிர் நாடார் நண்பா? வரிகள் நாடார் களுக்கு மட்டுமே நாயர் கம்மாளன் முஸ்லிம் மலையாள கிறிஸ்தவன் போன்றவர்கள் விலக்கு பெற்றுள்ளார்கள் . இதில் எங்கே மதம் வந்தது. வெள்ளையன் இவர்களுக்கு வரி விதித்தால் இவர் களின் சுகபோக வாழ்கையை கைவிடவில்லை. திருவிடம்கூர் அரசன் ஒரு சூத்திர ராஜா பல நாயர் பெண்களை வைப்பட்டியாக்க மற்றும் அவர்களின் அடிவருடிகளின் சுக போக வாழ்க்கைக்கு ஒரு குறையும் வைக்காமல் நாடார்களை கொடுமை படுத்தியதை இன்றும் பழைய கால மக்கள் மாறாத வடுக்களாய் வைத்திருக்கிறார்கள். அதை விட்டு வேலாலர்கல்டமும் பிரமனர்களிடமும் வரலாறு படித்துவிட்டு வரலாற்றை திரிக்காதீர்கள்

  22. @ஜான் ரூபட்

    /**
    ஆங்கிலேயர் வருகைக்கு முன் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை சார்ந்தவர்களைத் தவிர பிறருக்கு கல்வி மறுக்கப்பட்டது என்பதும் வகுப்புவாதம் இருந்தது என்பதும் நிரூபிக்கப்படவேண்டியதில்லை. “மனுநீதிச் சோழன் காலத்தில் அந்தணர்களுக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டது” என்ற செய்தியும் அதை நிரூபிக்கும் கல்வெட்டுச்சான்றுகளும் போதும். இதனால் பிறவகுப்பினைச் சார்ந்த எவருமே கல்வியறிவு பெற்றிருக்கவில்லை என்று சொல்வது தவறு. வெகு சிலர் (exceptions is always there) படித்திருந்தார்கள் அவர்களுக்கு மறைவாகக் கூட கல்வி கொடுக்கப்பட்டிருக்கலாம். மேலும் நாடர்களுக்குரிய சில வர்மக்கலைகள் மருத்துவக்கலைகள் வேறு எவருக்கும் கற்பிக்கப்படவில்லை. மேற்கண்ட சான்று மொகலாயர்கள் காலத்திற்கு முன்னரே ஒரு சில வகுப்பினர்க்கு தான் கல்வி வழங்கப்பட்டது எனல் உண்மையாகிறது.
    **/

    இந்த பொய்யை எவ்வளவு நாள் தான் நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்? இன்றைய இணைய உலகத்தில், எல்லா தகவல்களும் எல்லாருக்கும் கிடைக்கிறது..

    தரம்பால் என்பவர், 30 வருடமாக பிரிட்டிஷ் ம்யூசியத்த்தில் இந்தியா சம்பந்தமான பிரிட்டிஷ் ரெக்கார்ட்களை ஆராய்ந்து, 6 புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.. அந்த புத்தகங்கள், http://www.dharampal.net என்ற இணைய தளத்தில் இலவசமாக கிடைக்கிறது. அதில், “The Beautiful Tree” என்ற புத்தகத்தை படியுங்கள்.. அதில் புள்ளி விபரங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சிலவற்றை, நான் கீழே தருகிறேன்..

    1. மெட்ராஸ் மாகாணத்தில் மட்டுமே, 1 லட்சம் பள்ளிக்கூடங்கள் இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஆரம்ப நிலை பள்ளிக்கூடம்.
    2. இந்த பள்ளிகளில் படித்த மாணவர்களில், பிராமணர்கள் வெறும் 20 சதவிகிதம்தான். மீதி மற்ற சமூகத்து மாணவர்கள்.
    3. இதே பொல், வங்காள மாகாணத்திலும் 1 லட்சம் பள்ளிக்கூடங்கள் இருந்துள்ளன.
    4. என்னென்ன பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன, முதற்கொண்டு, எப்படி பாடம் நடத்தினர் வரை பல தகவல்கள் அந்த புத்தகத்தில் இருக்கிறது.

    நீங்கள் சொன்னவை, பிரட்டனுக்குதான் கச்சிதமாக பொருந்தும். அங்கே, அடிமைகள் யாரும் படிக்கவில்லை. படிப்பு அவர்களுக்கு, கிறித்துவ மிஷனரிகளால மறுக்கப்பட்டது. காரணம், அவர்கள் படித்தால், கிறித்துவத்தின் மேல் அவ நம்பிக்கை வந்து விடும் என்பது. கல்வி என்பது, மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே என்ற நிலை அங்கே தான் நிலவியது.
    இது சம்பந்தமாக, அரவிந்தன் நீலகண்டன், ஏற்கனவே இந்த தளத்தில், ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்.

    https://tamilhindu.com/2010/06/gurukula_system_for_british_poor/

    தமிழ் நாட்டை பொறுத்தவரை, புலவனார் என்ற ஒரு வகுப்பினர் இன்றும் இருக்கிறார்கள்.. நாம் தமிழ் பாடத்தில் படித்திருக்கிறோமே.. புலவர்களுக்கு அரசர்கள் பரிசில் அளித்தார்கள்.. அந்த புலவர்கள் இந்த வகுப்பிலிருந்துதான் அதிகமாக வந்தவர்கள்.. ஆனால், பல ஜாதியிலும், புலவர்கள் இருந்துள்ளனர்.

    புலவர்கள் செய்யுளை ஓலைச்சுவடியில்தான் எழுதினார்கள்.. ஆனால், அந்த ஓலைச்சுவடியை யார் தயாரித்துக் கொடுத்தது? நாடார்கள் தான்.. அவர்களின் தொழிலே பனைமரம்.. ஓலைச்சுவடி செய்து கொடுத்தவர்களுக்கு அதில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.. ஆதலால், நாடார்கலை படிக்க விடவில்லை என்பது, சுத்த பொய்

  23. This book is very fantastic. It is a history which our children should know,,, I am willimg to buy the book for the sake of my children, You have my e mail id, pl tell me where i can buy the book.

  24. //இவர்களையும் கும்பெனியார் வாங்கி காலனியாதிக்க நாடுகளில் தோட்டக்கூலிக் கொத்தடிமைகளாக்கினர். சாம்பவர் சமுதாயத்தினர் இவ்விதமாக விற்கப்பட்டதாக நூல் கூறுகிறது.//

    கும்பினியர்கள் வாங்கினார்கள் என்றால், யாரிடமிருந்து வாங்கினார்கள், அப்படி வாங்கி தோட்டக்கூலி கொத்தடிமையாக்கினர் என்றால் அதற்கு முன்பு வேறுவகையான கொத்தடிமையாக இருந்திருக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம், எனவே நிகழ்ந்தது அநீதி அல்ல ஒரு அதிகார மாற்றம், ஒரு கொடுரத்திடமிருந்து இன்னொன்றுக்கு.

    //சான்றோரின் நெறியையும் குலைத்து அவர்களின் பாரம்பரிய நினைவுகளை அழித்து (பேரழித்து) அவர்களின் தான தர்ம நிலையை அழித்து அவர்களின் சமுதாயக் கட்டமைப்பையும் அழித்தது.//

    தான தர்மத்திற்கு முழு உரிமையாள சான்றோர்கள் என்றால் அது பிராமனர்கள் மட்டுமே என்பது மனுதர்மத்தின் கூற்று, அவர்களின் சமுதாய நிலையென்பது வர்ணங்களில் முதல் நிலை என்பதை குறிக்கின்றது. அது அழிக்கபடும் போது அவர்கள் கூப்பாடு போடுவது வாடிக்கைதானே. ஏனென்றால் சான்றோர்களால் நினைத்தாலும் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்திருக்க முடியாது பார்ப்பனர்களின் தயவு இல்லாமல்.

    //சான்றோர் இன மக்கள், கீழ்ச் சாதிகள் எனச் சொல்லி கோயிலுக்குள் நுழைவதை இடைநிலைச் சாதிகளான வெள்ளாள சாதியினர் தடுத்தனர். ஆனால் ஆவண ஆதாரங்கள், பாரம்பரியத் தரவுகள், சான்றோர் இனமக்களுக்கு க்ஷத்திரிய குல உரிமை இருப்பதை நிறுவின.//

    இங்கும் வர்ணக் கோட்பாடுதான் வலிமைபடுத்தபடுகின்றது, அதனால்தான் இதே பதிவில் சான்றோர்களை சத்திரியர்கள் என்று சொல்லுபவர்கள் மனுதர்மத்தில் “பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் ஷத்திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வர வர சூத்திரத் தன்மை அடைந்தார்கள்.” உண்மையில் சத்திரியர்களை கீழ்நிலைக்கு தள்ளியது யார் என்பது இதன் மூலம் புரியும். சான்றோர்களுக்கு சத்திரிய ஆதாரம்,தரவு இருப்பது போல தலித்துகள் தீண்டதாகதவர்கள் என்பதற்கான தரவுகள் எதுவும் இருக்கின்றதா…

    ஒட்டுமொத்த கட்டுரையிலும் தோள்சீலை போராட்டம் என்றால் என்னவென்றே சொல்லவில்லையே, சான்றோர்கள் மேதகு நிலையில் இருந்தார்கள் நில உரிமை உள்ளவர்களாக இருந்தது உண்மையென்றால் அவர்கள் பிற்காலத்தில் எப்படி தாழ்ந்த சாதியினரால் பிள்ளைமார்களால் சொல்லப்பட்டார்கள், அப்படி அவர்கள் சொல்லியது வெள்ளை நீசர்கள் இந்தியாவில் வந்தபிறகா இல்லை அதற்கு முன்பேவா. ஒட்டு மொத்தக் கட்டுரையிலும் முதல்பாராவிலும் பின்பு கடைசியிலும் மட்டுமே தோள்சீலை போராட்டம் என்ற வார்த்தைகளே வருகின்றன. தோள்சீலை போராட்டதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் என்று எதிர்ப்பார்த்து வந்தேன் அறிவு பூர்வமாக அரவிந்தன் ஏமாற்றிவிட்டார் வழக்கம் போல….

    இப்போது வட இந்தியாவில் இந்துத்துவம் தலித்துகளிடையே ஊடுறுவ அவர்களின் இணத்தில் இருந்த வரலாற்று நாயகர்களை பற்றிய புனைவுகதைகளை வளர்த்து அவர்கள் மத்தியில் பரப்பிவிடிகின்றன எ:க வடபீகாரில் இருக்கும் சால்ஹேஸ் கதைகள், இதன் காரணமாகவே இப்போது பல தலித் காலனிகளில் அம்பேத்கர் படத்துக்கு அருகில் புத்தரின் படம் மட்டுமே இருந்தது போக சமிபகாலமாக விநாயகர், இராமன் போன்ற இந்து தெய்வங்களின் படமும் இடம்பெருகின்றன. மேலும் அந்த தலித் வீரர்களை காவியபடுத்தும் முயற்சியில் அவர்களுக்கு திருவிழாக்கள் எடுத்து அதை தங்களின் கொள்கை பரப்பு கேடையமாக பயண்படுத்துகின்றன, அதே உத்தியினை அரவிந்தன் நாடார்களிடமிருந்து ஆரம்பிக்கின்றார், விரைவில் தலித்துகளிடையே ஊடுறுவல் நடத்தப்படலாம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *