அத்வானியின் கடிதம் – படிக்கத் தெரிந்தவரின் பதவுரை

TEXT OF ADVANI’S LETTER TO SONIA GANDHI

வெள்ளைப் புறா மூலம் வந்த கடிதத்திற்கு அத்வானியில் பதில் கடிதம்

sonia-the-boss“Dear Smt Sonia ji,

சமூக நாகரீகம் கருதி மரியாதைக்குத்தான் ஸ்ரீமதி உபயோகித்திருக்கிறேன். விதவையை ஸ்ரீமதி என்று அழைத்தது தப்பு என்று காலனீய காலத்து ஆச்சாரவாதிகள் யாரும் கிளம்பிவிட, கிளப்பிவிட மாட்டார்கள் என்று எனக்கு ஒரு அல்ப நம்பிக்கை. “பாவம் செய்தோரே பாஜக பார்ட்டியின் தலைவராக முடியுமாம்” என் இளமைக்கால நண்பரான வாஜ்பாயின் ஆஸ்தான ஜோதிடர்கள் ஐம்பதாயிரம் பேரில் ஒருத்தர் சொன்னது.

On my return from Kolkata last night,

உங்களை மாதிரி மேடைப் பொம்மையாக மட்டும் இல்லாமல், சமூகத்தின் நடைமுறைப் பிரச்சினைகளைப் பற்றியும் கவலைப்படுபவன் நான். அதனால், மேடையில் ஏறி எழுதிக் கொடுப்பதை வாசிப்பதற்கு நான் பல ஊர்களுக்குப் போவதில்லை. களத்தில் இறங்கி சேவைகள் செய்யவும் போகிறேன். அப்படி சமீபத்தில் போயிருந்தது கொல்கத்தாவிற்கு. அந்த ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தெரியாவிட்டால், பிரணாப் முகர்ஜியிடம்…. வேண்டாம். அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. டெல்லி ஜன்பத் தெருவில் உள்ள பத்தாம் நம்பர் தேவாலயம் மட்டும்தான் அவருக்குத் தெரியும். மம்தாவிடம் கேட்டுப்பாருங்கள்.

I found your letter dated 15th February awaiting me.

நீங்கள் கருநாநிதி கதைவசனத்தில் வரும் கண்ணாம்பாள் போல உணர்ச்சிகளும் வசனங்களும் கொட்ட, கண்ணீர் சிந்தி எழுதிய கடிதம் வந்தது நேற்று. நான் அதைப் பார்த்தவுடன் பதில் சொல்வது இன்றே. என்னுடைய செயல்களைப் பற்றி யாராவது கேள்விகேட்டால், எந்தத் தயக்கமும் இல்லாமல், “உடனடியாகப்” பதில் சொல்வது என் வழக்கம். இதோ என் பதில்.

I am happy that you have denied the reports relating to you and your family alluded to in the Task Force’s Report on Black Money.

நான் திருடவில்லை, நான் திருடவில்லை, என்று என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் நீங்கள் கூப்பாடு போட ஆரம்பித்தது கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூப்பாடு போட்டால்தான் இந்தியப் பத்திரிக்கை உலகமும் கவனிக்கும். யவன ராணி கூப்பிட்ட குரலுக்கு ஆஜராவதில்தான் மெக்காலே புத்திரர்களுக்குப் பெருமிதம் அதிகம்.

நீங்கள் மட்டும் பதிலே சொல்லாமல் கமுக்கமாக இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையே பெரிதாகி இருக்காது. அப்புறம் வயதான பெரியவர்கள் நாங்கள் எல்லாம் உட்கார்ந்து இந்த ரிப்போர்ட் தயார் செய்ததே வீணாகி இருக்கும். எனக்கு மகிழ்ச்சி.

If these had been denied earlier, the Task Force would have taken your denial into account.

இந்தப் பிரச்சினையைப் பற்றி, “கேஜிபி கொடுத்த பணம், போபார்ஸ் பணம், 2ஜி ஸ்பெக்ட்ரம் பணம், அக்கா தங்கைகளுக்குக் கொடுத்த பணம் ஸ்விஸ் பேங்கில்ல இருக்கோல்லியோ” என்று சுப்பிரமணியன் சாமி என்பவர் பல வருடங்களாகப் பேசி வருகிறார். அப்போதெல்லாம் காந்தியின் குரங்குகள் போல வாயை, காதை, கண்களைப் பொத்திக்கொண்டு இருந்த நீங்கள் இப்போது மட்டும் ஏன் அலறுகிறீர்களோ?

அதுவும் இத்தனை நாள் கழித்தா இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசுவது? என்னைப் பாருங்கள். உங்கள் கடிதம் கண்டவுடன் பதில் கொடுக்கிறேன். எங்களிடம் இருப்பது இளமையின் வேகம்.

ஒருவேளை அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் இருக்கும் ஆயிரத்தெட்டுக் கத்திகளைவிட, அத்வானி கையில் எடுக்கும் ஆர்.எஸ்.எஸ் கம்பிற்கு சக்தி அதிகம் என்பதைப் புத்திசாலித்தனம் உள்ள உங்கள் எடுபிடிகளில் ஒருவர் சொல்லி இருக்கலாம்.

பின் குறிப்பு: சுப்பிரமணியன் சாமி என்பவரை உங்களுக்கு ஞாபகம் இருக்கும். ஏதேனும் ஒரு டீ பார்ட்டியில்கூட சந்தித்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஞாபகம் வரவில்லை என்றால் மம்தாவிடம் கேட்க வேண்டாம். அவர் வங்காளி. தெரிந்திருக்காது. தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமியை வங்காளிகள், பஞ்சாபிகள், மலையாளிகள், தெலுங்கர்கள் உட்பட இந்தியாவின் அத்தனை மாநிலத்துக்காரர்களுக்கும் தெரியாது. அந்த மாநிலங்களில் இருந்துவரும் பத்திரிக்கைகளுக்கு மட்டும்தான் தெரியும். அவர்கள் எதிர்பார்ப்பது போலப் பேசுவதில் கெட்டிக்காரராம். கேள்விப்பட்டது.

தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு, அவர் யாரென்று இந்துத்துவம் பேசுகிறவர்களிடம் நீங்கள் கேட்டுவிடவேண்டாம். இந்த வயதில் கெட்ட வார்த்தைகள் எல்லாம் கற்றுக்கொண்டு உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. திருமலையிடம் கேட்டால்,  இட்லி வடை அல்லது தமிழ் ஹிந்துவில் திருவாசகம் கேட்ட சைவனைப் போல உருகி உருகிப் பதிலளிப்பார். இட்லி வடை தளத்தில் அவரது கட்டுரையை மதுரையைச் சேர்ந்த முருகன் இட்லிக்கடைக்காரர் ஸ்பான்ஸர் செய்தாலும் செய்திருப்பார். கடை பூட்டை உடைத்ததற்குக் கைமாறு.

INDIA-ELECTION/Even so, I deeply regret the distress caused to you.

ஏ, ஏ, அம்மா. இந்தா பாருங்கமா. அழாதீங்கம்மா. அம்மா, அழாதீங்கம்மா. பாருங்க. நீங்கள் அழுவதைப் பார்த்தால் எனக்குக் கண்ணில் கண்ணீர் தேங்குகிறது (ஒரு நிமிசம். க்ளிசரினை எந்தப் பாக்கெட்டில் வைச்சேன்?)

சுப்பிரமணியன் சாமி ஊரெல்லாம் பேசிய பொழுது கவலைப்படாத உங்களுக்கு, எங்கள் ஆட்கள் பேசியவுடன் கவலை வந்துவிட்டது பார்த்தீர்களா? உங்களுடைய இந்தக் கவலையைப் பார்த்து, பயத்தைப் பார்த்துப் பரிதாபமாக (regret) இருக்கிறது அம்மணி. மாட்டிக் கொண்டு விட்டால் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்களானாலும் அவர்கள் படும் அவஸ்தையைப் பார்த்துப் பரிதாபப்படும் குணம் எங்களுக்கு உண்டு. இந்த குணத்தைப் பார்த்து “சத்குண விக்ருதி” என்று என் ஊரில் எங்களைப் பார்த்துத் திட்டுகிறார்கள்தான். “பகைவருக்கு இரங்கல்” என்று அர்ஜூன் சம்பத் ஊரில் இக்குணத்தைச் சொல்லுகிறார்கள்.

ஆனால், இந்த நாட்டாண்மை உங்களுடைய பரிதாபகரமான நிலமையப் பார்த்துப் பரிதாபப்படுவானே ஒழிஞ்சு, தீர்ப்பை, அதுதாம்மா, அந்த ரிப்போர்ட்டை மாத்தமாட்டாம்மா.

With best regards,

மதிப்பு மிக்க குணங்களோடு வாழும்,

Yours sincerely,

எதேச்சதிகார அரசியலை ஒழிப்பதில் ஸின்ஸியராக இருக்கும்,

L K Advani.

எல். கே. எமதர்மன்

13 Replies to “அத்வானியின் கடிதம் – படிக்கத் தெரிந்தவரின் பதவுரை”

  1. Pingback: Indli.com
  2. பாஜக தன்னுடைய செயல்பாட்டில் உத்வேகம் சரியாக காட்டவில்லை எனத் தோன்றுகிறது! சரியான எதிர்கட்சியாக செயல் பட்டு நாட்டின் நலனைக் காப்பதில் சரியாக செயல் படவில்லை!
    செயல் பட்டிருந்தால் தற்போதைய மத்திய அரசு அமைந்திருக்காது!
    தனக்குள்ளே குழப்பத்தை அதிகப் படுத்திக் கொள்ளும் வேலையைத் தான் செய்து வருகிறது என நினைக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறது! இனியாகிலும் சரியாக செயல் பட்டால் தான் நாடு சீரடையும்!
    தானியக் கிடங்குகளில் தானியங்கள் வீணாகப் பட்டதில் பாஜக விற்கும் பொறுப்பு இருக்கிறது! மக்களின் நலனை நோக்கி சரியாக செயல் பட்டாலே அனைத்து மக்களின் நம்பிக்கையையும் பெற முடியும்!
    நன்றி!

  3. கலைஞர் டி.வி , சன் டி.வி யும் அத்வானி சோனியா காலில் சாஷ்டங்கமாக விழுந்து மன்னிப்பு கடிதம் கொடுத்து மன்னிப்பு கேட்டது போல் சொன்னார்களே. அப்ப அது பொய்யா……………

  4. காங்கிரசும் ஊடகங்களும்
    வேறு மாதிரி சித்தரிப்பதென்பது ஒன்றும் புதிதல்ல. அத்வானி போன்ற தலைவர்கள் இது போன்ற கடிதமேழுதுவதேன்பது பொறுப்பற்ற செயல். மாறாக மக்கள் மன்றம் அல்லது நீதி மன்றம் மூலமாக இதை அணுக பகிரங்கமாக அணுக அறைகூவல் விடுத்திருக்க வேண்டும். காங்கிரஸ் மீதான நம்பிக்கை பொய் ஆண்டுகளாகின்றன. அந்த இடத்தில் பா ஜ க வை ஏன் வைக்க மக்கள் தயங்குகிறார்கள் என்பது இப்போதாவது அக்கட்சிக்குப் புரிகிறதா? அல்லது குருமூர்த்தியின் எக்ஸ்பிரஸ் விளக்கத்தை எதிர்பார்த்து அரசியல் நடத்துகிறதா?

  5. Simply put, Advani should have not written this letter. This is the same guy who praised Jinnah while he was in Pakistan. He lacks common sense and courage as a leader. We need an opposition and oppsition leader with some back bone. We need a leader who will have no hesitation in calling spade a bloody shovel. I hope people in India will raise en mass as in Egypt or Libya and boot out this anti national brigade aka UPA.

  6. ராம்கி அவர்களே… உங்களது கருத்தை வளிமொளிகிறேன். மெயில் ஐடி அனுப்பினால் தொடர்ந்து விவாதிக்க சித்தமாயிருக்கிறேன்

  7. நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஒரு விஷயத்தை ஒத்துக்கொண்டாகவேண்டும். சுப்ரமணிய சுவாமியின் இடை விடாத முயற்சிதான் 2G ஸ்பெக்ட்ரம் ஊழலின் முழு பரிமாணங்களையும் நாடறிய வைத்தது. இது மாநில அளவில் அ.தி.மு.க வினராலும், மத்தியில் பிரதான எதிகட்சியாக விளங்கும் பா.ஜ.க.வினாலும் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கவேண்டும். ஆள் பலமும், பண பலமும், வலுவான அரசியல் அமைப்பும் உள்ள இந்த எதிர் கட்சிகள் செய்ய தவறியதை இந்த இரண்டு-உறுப்பினர் கட்சி தலைவர், திராவிட இயக்கங்களுக்கே உரித்தான உருட்டுக்கட்டை, ஆட்டோ, மகளிர் அணி ஆபாச வசை-நடனம் இவற்றுக்கெல்லாம் அஞ்சாது சலிக்காது போராடியது நிச்சயம் ஒரு சாதனைதான்!

  8. அத்வானி என்ற பெயருக்கு எமதர்மன் என்றா அர்த்தம்? அது மட்டும் புரியலை. மத்தபடி தமிழ் ஆக்கம் மிக நன்று,

  9. சண்டை போடுபவர்கள் முதுகில் குத்துவது/வாங்குவது கோழைத்தனம், மார்பில் குத்துவது/வாங்குவது வீரம். சாமானியர்களுக்கு இது தேவையில்லை. ஆனால் அந்தச் சண்டை சாமானியர்களின் வாழ்வைத் தொலைக்காமல் இருந்தால் சரி.சோனியா காந்தி-அத்வானி கடிதப் போக்குவரத்திற்கும் இது பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *