இதுவும் அறம்தான்

இன்றைக்கு பிப்ரவரி 14. கோவை வாசிகளுக்கு நினைவிருக்கும். இன்று கோவை குண்டுவெடிப்பின் ஆண்டு தினம்.

77 பேர் அநியாயமாகப் பலியானார்கள். பலர் ஊனமுற்றனர். குடும்பங்கள் ஒரே நாளில் சிதைந்தன. ஒரு குற்றவாளி கூடத் தண்டிக்கப்படாமல் பார்த்துக் கொண்டது அரசு. எந்த இயக்கங்களும் பெரிதாக ஆர்வம் எடுத்துக் கொள்ளவில்லை. பரிதாப அலையில் படகோட்டியவர்களுக்கு அதிகாரங்கள் கிடைத்தன. 2005 இல் ஆரம்பித்த வழக்கு நாளாக நாளாக மேலும் மேலும் பலவீனப்பட்டு வந்தது.

madani2இந்த குண்டு வெடிப்பைத் திட்டமிட்டு, நிர்வகித்து, நிகழ்த்தியதாகக் கைது செய்யப்பட்டார் அப்துல் நாசர் மதானி.  மதானிக்காக மனித உரிமையாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் பெரும் நிதியாதரவுடன் களமிறக்கப்பட்டார்கள். திமுக அரசு மசாஜ் உட்பட பல்வேறு வகையான ஏற்பாடுகளை மதானிக்குச் செய்தது.

குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் நியாயமான உதவி செய்யத்தான் வழியில்லை. கோயிலுக்குச் செல்வோர் எண்ணிக்கையளவு குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏறும்போது, பலவீனப் பெரும்பான்மையினரான இந்துக்கள் என்ன செய்ய முடியும்? கையைப் பிசைந்து கொண்டிருந்தது மானுடத்தின் மனசாட்சி.

இந்நிலையில்,  குறைந்த பட்சம் குண்டு வெடிப்பால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை ஆவணப்படுத்த வேண்டுமென நினைத்து ஒரு டாக்குமண்டரி உருவாக்கப்பட்டது. அனாதவரவான இந்துக்களின் மனக்குமுறலை, வாழ வழியற்ற நிலையை அந்த டாக்குமண்டரி சொல்லுகிறது. (அது குறித்த கட்டுரை, இங்கே.)

coimbatore_bomb_ramakrishnan_bodyராமகிருஷ்ணன் என்கிற சிறுவன் அந்த ஏழைப் பெற்றோருக்கு ஒரே மகன்.  அவன் தாய் தந்தையர் கூலி வேலையும் மாவரைக்கவும் செய்கிற நடுத்தர குடும்பத்துக்கும் கீழே உள்ள குடும்பத்தினர். அவன் நன்றாக ஹாக்கி விளையாடுவான். ஒரு நாள் ஹாக்கியில் தங்கபதக்கம் வாங்கிக்கொடுப்பேன். என் பெயர் எல்லா பேப்பர்களிலும் வரும் என்று சொல்லுவான். அவன் பெயர், புகைப்படம் எல்லா பேப்பர்களிலும் வந்தது. அவன் பிணத்துடன் கதறி அழும் அவன் தாயின் படம் நக்கீரன் தொடங்கி எல்லா பேப்பர்களிலும் வந்தது. ஒரே மகன்.

எல்லாம் அடங்கிய போது அரசாங்கம் இழப்புக்கு ஈடாக அவன் தந்தைக்கு மருத்துவ மனையில் கடைநிலைப்  பணியாளராக வேலை கொடுத்தது. விரைவில் ராமகிருஷ்ணனின் தந்தை அந்த அரசு மருத்துவமனைக்கு வரும் ஒருவருக்கு முழு பராமரிப்பை செய்ய நியமிக்கப்பட்டார். 

மகனை இழந்த அந்தத் தந்தை பரமாரித்த அந்த நபர் உடல் ஊனமுற்றவர். அதனால் அந்த உடல் ஊனமுற்றவரைக் கழிவறை அழைத்து செல்வது, வெந்நீர் போடுவது, இருமும் போது குடிக்கத் தண்ணீர் கொடுப்பது, பிரியாணி கேட்கும் போது வாங்கித்தருவது எல்லாவற்றையும் ராமகிருஷ்ணனின் தந்தை செய்தார். இறுதியாக அந்த நபர் விடை பெறும் நாள் வந்தது.

ராமகிருஷ்ணனின் தந்தை அந்த நபரிடம் தான் எப்போதும் தன் பாக்கெட்டில் வைத்திருக்கும் தன் ஒரே மகனின் படத்தைக் காட்டினார். ‘இவனைத் தெரியுமா? இவன் கோவை குண்டுவெடிப்பில் இறந்த என் ஒரே மகன்” என்றார். அவரது பராமரிப்பில் இத்தனை நாள் இருந்த அந்த நபர் அதிர்ச்சியில் உறைகிறார்.

காரணம்: அந்தத் தந்தை பராமரித்த அந்த நபர்: அப்துல் நாசர் மதானி.
 
 ராமகிருஷ்ணனின் தந்தை இதைக் கூறிய போது அவரைப் பேட்டி கண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போவது புரிகிறது. மனக்குமுறலோடும் அதிர்ச்சியோடும் அந்த டாக்குமண்டரியில் கேட்கிறார்கள்:

madani9 “உங்களுக்கு மதானியைப் பழிவாங்கும் ஆத்திரமே தோன்றவில்லையா?”

அவர் சொல்கிறார்: “மருத்துவமனையில் நான் சமூக சேவகன். எனக்கு என்று ஒரு பொறுப்பு உண்டு. அங்கே நான் என் தனிப்பட்ட ஆத்திரத்தை இழப்பைக் காட்டக் கூடாது”.

மதானியை கோர்ட் என்ன செய்யவேண்டுமெனக் கேட்ட போது அவர் பெற்ற வயிறெரிந்து சொல்கிறார்: “என் மகன் இறந்தது போலவே அவனும் சாக வேண்டும். நாங்கள் நீதியை நம்புகிறோம்”.

 ஆனால், கோர்ட் ஒருவரைக் கூட தண்டிக்காமல் அனைவரையும் விடுதலை செய்தது.

21 Replies to “இதுவும் அறம்தான்”

  1. இது தான் ஹிந்துஇசம். இந்த உணர்வு இருப்வர்கள் ஹிந்துக்கள்.

  2. Pingback: Indli.com
  3. >>>அவரது பராமரிப்பில் இத்தனை நாள் இருந்த அந்த நபர் அதிர்ச்சியில் உறைந்தார்.

    அவர் உறைந்தார அல்லது மகிழ்ந்தாரா?

  4. ஹிந்துக்களின் ஒற்றுமையின் முக்கியத்துவம் புரிகிறது! ஆனால் ஹிந்துக்கள் ஒன்று பட்டு சரியான வழியில் போராடுவார்களா!
    ஒன்று படுவோம்! தேசத்தை மட்டுமல்லாது உயிரினங்களின் வாழ்வாதாரமான அன்பையே இல்லாமல் செய்பவர்களை ஒழிக்கத் தயங்கக் கூடாது!
    நன்றி!

  5. ராமகிருஷ்ணனின் தந்தையிடம் தென்படுவதுதான் அறம்.

  6. Salute that great guy. We do our work without any personal feelings. Many people like Terrorist group and other government, fill their stomach with our hard work and final kill us. This sheer state of India and their politicians needs to be changed using a revolution. Life is like a gift, no body is having the permission to kill anybody thats what the Hindu Dharma says and the boy’s father was excellent in handling that and the same will defnly reflected in the future. Even the govt has released those people, we still have faith in the almighty above us and i am sure that one day or the other these blood drinking Dracula’s will be destroyed

  7. ராமகிருஷ்ணனின் தந்தை என்று தெரிந்தே அவர் அவ்வேலைக்கு நியமிக்கப்பட்டாரா? தற்சமயம், தாவுத் இப்ராஹீம் எனப்படும் பயங்கரவாதிக்கும் கருணாநிதிக்கும், சோனியா காந்திக்கும் உறவுகள் பலப்பட்டிருப்பதால், பிரதிபா பாட்டில் முதற்கொண்டு, கொடுமதியாளர்கள் அனைவரும் அடிக்கடி மலேசிய சென்று வருவதும், மலேசியக்கம்பனிகள் இங்கு குப்பை வாறுகிறோம் என்று எதை எதையோ வாரிக்கொண்டிருக்கும் வேளையில்,காலனிகளில் தெய்வ வுருவங்கள் என்பதுவும், பலப்பட்ட உறவுக்காரர்களின் கைவரிசையே என்றும், இந்து மக்களை உசுப்பிவிட்டு, மலேசியாவிலிருந்தும் அவர்களை வெளியேற்றச் செய்யும் திட்டம் தான் என்றும் தெரிகின்றது

  8. ரத்தம் கொதிக்கிறது.இந்தியாவில் திரும்ப ஒரு மஹா பாரத யுத்தம்
    தர்மத்தை நிலைநாட்ட வரவேண்டும்.இது காலத்தின் கட்டாயம்.

  9. That a scoundrel like madhani is able to go scot free shows the sad state of affairs of our country.

  10. இந்த அதீத கருணையே நம்மை கோழைகளாகவும், அறிவிலிகளாகவும் வெளிப்படுத்துகிறது.

  11. சரித்திரத்தில் ரத்தத்தால் எழுத பட்ட வரிகளே அதிகம்.
    தன் ரத்தத்தை சிந்த மறுப்பவன் பிறரின் கண்ணீரை துடைக்க இயலாதவன்.
    வாழ்க பாரதம்!!! இந்து ராஜ்யமே எல்லாவற்றிற்கும் தீர்வு!!!

  12. இது தான் சரியான நேரம், நாம் அனைவரும் வோட்டு என்னும் அஸ்திரம் பயன்படுத்தி நம் இந்து மதத்திற்கு எதிரான கட்சிகளை ஆட்சியிலிருந்து நீட்க வேண்டும்.

  13. இஸ்லாமியருக்கு சிறப்பு சலுகைகள் செய்வதை அன்றே சாவக்கர் எதிர்த்தார். இது விபரிதமாக தான் முடியும் என்றார். ஆனால், வழக்கம் போலவே காந்தி இதை கண்டுக்கொள்ளவில்லை, அவரை பின்பற்றிய பிற தலைவர்களும் கண்டுக்கொள்ளவில்லை. சிறுபன்மை என்று இவர்களுக்கு சலுகைகள் கூட கூட, இவர்களின் அராஜகம் தான் கூடுகிறது. சாவக்கர் ஒரு தீர்க்கதரிசி, அன்றே அவர் கூறினார், “இஸ்லாமியருக்கு நிங்கள் வழங்கு முலம், அவர்களுக்கு தேச பக்தி ஒன்றும் வந்துவிடாது” என்றார். இது தான் உண்மை. இது தான் நம் பாரதத்தில் நடக்கிறது. விழித்து, உங்கள் விழிகளை திறந்துக் கொள்ளுங்கள் ஹிந்துக்களே.
    ஜெய் ஹிந்து ராஷ்ட்ரா.

  14. மனம் நெகிழ வைக்கும் கட்டுரை. இஸ்லாத்தையும் பயங்கரவாதத்தையும் பிரிக்க முடியாது என்றே தோன்றுகிறது. இஸ்லாத்துக்கும் ஆன்மீகத்துக்கும் உள்ள தொடர்பு அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள தொடர்பு போல. ஆனால் முஸ்லீம்கள் இஸ்லாத்தில் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் எல்லாமே அறிவுப் பூர்வமானது போல ஒரு மாயையை தோற்று விக்கிறார்கள். இஸ்லாத்தின் போலித்தனத்தை அரவிந்தன், மலர்மன்னன் போன்றவர்கள் தோலுருத்திக்காட்டினால் நன்றாக இருக்கும்.

  15. பகைவனுக்கும் கருணை செய்யும் உள்ளம் இருக்கும் பாரதத்தையும் இந்துவையும் அழிக்க எந்த சக்தியாலும் முடியாது. இதுவே இந்தியாவின் பலம்.

  16. @Amrutha Putran
    >>>இஸ்லாத்தின் போலித்தனத்தை அரவிந்தன், மலர்மன்னன் போன்றவர்கள் தோலுருத்திக்காட்டினால் நன்றாக இருக்கும்…


    இதனை பலரும் செய்து வருகிறார்கள், ஒரு சில ஐரோப்பிய மேதைகள் உட்பட, இதோ இங்க கிளிக்கவும். இன்னும் ஒரு சில இந்திய பதிப்பகங்களும் இது போன்ற காரியங்களை செய்வதாக கேள்விப்பட்டதுண்டு.

    https://www.saveindia.com/an_interview_with_koenraad_elst.ஹதம்
    https://koenraadelst.bharatvani.org/articles/irin/wahi.html
    https://www.francoisgautier.com/
    https://francoisgautier.wordpress.com/2008/04/

  17. நன்றி ஹரி, தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும்.

  18. திரு அரவிந்தன் அவர்களே,
    தயவு செய்து நீங்கள் தில்லியில் வெளியிட்ட புத்தகத்தின் தமிழாக்கத்தை தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியிடவும்.
    BREAKING India: Western Interventions in Dravidian and Dalit Faultlines, a book jointly authored by Shri Rajiv Malhotra, chief of the Princeton based Infinity Foundation and a Distinguished Fellow at Vivekananda International Foundation, New Delhi and Shri Aravindan Neelakandan, intellectual activist, columnist and popular science writer from Tamil Nadu, was launched in New Delhi on February 9. A galaxy of speakers participated in the discussion on the book.

  19. கோவை வெடிகுண்டு ஆவணப்படுத்த பட்டுள்ளது நல்ல விஷயம், இந்த சிடி எங்கு கிடைக்கும்? தகவல் தேவை. ஆவணப்படுத்துவதில், அனேகமாக இந்தியர்கள் குறைவானவர்கள் என்ற கருத்து உள்ளது. அதை போக்க வேண்டும். சட்டம் தனது வேலையே அரசியல் வாதிகளால் செய்யவில்லை எனில், நாம் தன செய்யவைக்கவேண்டும். ஒன்றுபடுவோம் வெல்வோம்.

  20. >>>சட்டம் தனது வேலையே அரசியல் வாதிகளால் செய்யவில்லை எனில், நாம் தன செய்யவைக்கவேண்டும். ஒன்றுபடுவோம் வெல்வோம்.

    சரியாகச் சொன்னீர்கள். நேரடி மக்கள் புரட்ச்சியே இன்றைய trend and style.

  21. இது தான் ஹிந்துஇசம். இந்த உணர்வு இருப்வர்கள் ஹிந்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *