விசா மோசடி: மூடப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனம், முடக்கப்பட்ட இந்திய மாணவர்கள்

ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பது பலரும் சொல்லுவது தான். அதிலும் கொஞ்சம் பேராசை, குறுக்கு வழியில் உறுத்தல் இல்லாமல் ஈடுபட துணிச்சல் இருந்தால் போதும், மனிதர்கள் என்ன செய்கிறோம் என்பதையே மறந்து மீள முடியாத சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். இப்படி பேராசையுடன் வந்து சிக்குபவர்களிடம் பணத்தை சுருட்டிக் கொண்டு ஏமாற்றுவதற்காக வலை விரித்து காத்திருப்போரும் உண்டு

அமெரிக்க வாழ்க்கைக்கு ஆசைப் பட்டு, தகுதி இருக்கிறதோ இல்லையோ, மாணவர்களாக, ஆசிரியர்களாக, டாக்டர்களாக, பெரும் அளவில் கணினி வல்லுநர் என்ற போர்வையில் இப்படி பலவகைகளில் அமெரிக்க விசாவுக்கு அலைபவர்கள் ஏராளம். இதற்காக லட்சக் கணக்கில் பணம் செலவு செய்யவும் தயாராக இருப்பர்.

இரண்டாயிரம் வருட வாக்கில், ஆரம்பித்த Y2K மற்றும் அது சார்ந்த மென்பொருள் உற்பத்தி பெருக்கத்தில், அதிக அறிவு, புத்திசாலித்தனம் தேவைப் படாத, ஒரே மாதிரியான வேலைகளுக்கு (unskilled monotonous labour) பல மென்பொருள் நிறுவனங்கள் பாடி ஷாப்பிங் என்ற முறையில் ஆட்களை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்கள். இவ்வாறு அமேரிக்கா சென்றவர்களில் முறையாக படித்தவர்கள், தேவையான அனுபவம் உள்ளவர்கள் என்று இல்லாமல் எவர் வேண்டுமானாலும் அமெரிக்கா சென்று வேலை செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது.  இந்நிலையில் இப்போது பெரும் மாற்றம் இல்லை என்றாலும், விசா பெறுவதில் கெடுபிடிகள் அதிகம் ஆகி விட்டன.

passport_visaஇருந்தும் வேலைக்காக போலிச் சான்றிதழ்கள் தயாரிப்பது, போலி பல்கலைக் கழகங்களில் பணம் கொடுத்து டிகிரி சர்டிபிகேட்டுகள் பெற்று விடுவது, போன்ற மோசடிகள் செய்து வேலை வாய்ப்பு பெறுவதில் முனைவோர் எண்ணிக்கை ஒன்றும் குறைந்ததாக தெரியவில்லை. இதில் பெருமளவு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வந்தது வருத்தப் படவேண்டிய விஷயம். சில கம்பெனிகளில் வேலைக்கு தொலைபேசி தேர்வு மட்டுமே இருக்கும். வேலைக்கான தொலைபேசி தேர்வில் பதில் சொல்வது ஒருவரும், வேலையில் சேருவது  ஒருவருமாக இருப்பார். இப்படி பல சம்பவங்கள் நிகழ்ந்ததால்  பல கம்பெனிகளில் ஆந்திர மாநிலத்தவர்களை மேலதிகமாக பின்னணி விவர சோதனை செய்வது உண்டு.

இது எதோ ஆந்திர மாநிலத்தவர்களை கண்டு துவேஷம் என்று எண்ண வேண்டாம். பல அனுபவங்களின் வாயிலாகவே இவ்வாறு இங்கே எழுத வேண்டி இருக்கிறது.  இவ்வாறு குற்றச் செயல்கள் மிகுவதால், உண்மையிலேயே திறமை உள்ளவர்களாக இருந்தாலும் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தில் பெரும் தொல்லைக்கு ஆளாகிறார்கள். வேலைவாய்ப்பு மட்டும் அல்லாது மாணவர்களாக, படிப்பதற்காக என்று அமேரிக்கா வரும் இளைஞர்கள், அங்கேயே சட்ட விரோதமாக தங்கி விடுகின்றனர். மாணவராக அமெரிக்கா வந்து விட்டு, பெர்மிட் இல்லாமல் வேலையும் பார்க்கிறார்கள். பாதுகாப்பற்ற பணிகளில் ஈடுபட்டு தாக்குதலுக்கு ஆளாகும் போது நமக்கு மாணவர்கள் தாக்கப் படுவதாக மட்டுமே செய்தி கிடைக்கிறது.

அமெரிக்க விசா பெறுவதில், வேலைக்கான விசாக்களை விட மாணவர்கள் கல்விக்காக விண்ணப்பிக்கும் விசாக்களுக்கு மேலும் கெடுபிடி அதிகம். மாணவர் படிக்கத்தான் செல்கிறார், அங்கே வேலை பார்ப்பதோ, அங்கேயே தங்கிவிடுவதோ இல்லை என்பதை நிரூபித்தால் தான் விசாவே கிடைக்கும். இச்சூழ்நிலையில்தான் அமெரிக்காவின் சான்ப்ரான்சிஸ்கோவில் ட்ரை-வேலி என்ற கிறிஸ்தவ பல்கலைக் கழகம் ஒன்று பல மில்லியன் டாலர்கள் பெற்றுக் கொண்டு, பலருக்கு மாணவர்கள் என்ற அங்கீகாரம் கொடுத்து விசா பெற வழி செய்து மோசடி செய்திருக்கிறது.

இதில் பெருமளவு பணத்தைக் கொட்டி விசா வாங்கியவர்களில் பெரும்பாலோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு விசா பெற்றபின் அமெரிக்கா சென்ற பேர்கள், மாணவர்களாக கல்லூரிக்கு சென்று படிக்காமல் அப்படியே அங்காங்கே வேலை தேடிக் கொண்டு செட்டில் ஆவது என்று இருந்து வந்திருக்கின்றனர்.

tri-valley-universityபேராசை கொண்ட இளைஞர்களை வலைவிரித்து அவர்களுக்கு விசா எடுக்க தோதாக பொறியியல், மருத்துவம் என்று எல்லா வகைப் படிப்புகளையும் வழங்குவதாக போலியாக இந்த ட்ரை-வேலி பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. ஆனால் இக்கல்வி நிறுவனம் கிறிஸ்தவ மத சம்பந்தமான படிப்புகள் மட்டுமே வழங்க தகுதி பெற்றுள்ளனர். ஏனெனில் இந்நிறுவனம்  International Association of Bible Colleges and Seminaries என்ற அமைப்புடன் மட்டுமே தொடர்புடையது.

பொறியியல், மருத்துவம் போன்ற கல்வித்துறைகள் வழங்குகின்ற உண்மையான பல கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் இணைந்துள்ள Western Association of Schools and Colleges என்ற அமைப்புடன் ட்ரை-வேலி இணையவில்லை.

ஆக, இந்த நிறுவனத்தில் படிக்க சென்றவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களா? அல்லது மதம் மாறியவர்களா? அல்லது பொறியியல், மருத்துவம் என்று பொதுவான படிப்புகள் படிக்கச் சென்றவர்களா? ஏன் அவர்கள் மற்ற எந்த கல்லூரிக்கும் செல்லாமல் ஒரு கிறிஸ்தவ நிறுவனத்திடம் சென்று சேர வேண்டும்? இந்த பல்கலைக் கழகம் இம்மாணவர்களுக்கு என்ன அடிப்படையில் சேர்த்துக் கொண்டது? இன்றைய இணைய யுகத்தில் ஒரு கல்வி நிறுவனத்தைப் பற்றி, அதன் தரத்தைப் பற்றி எல்லாம்  வெகு எளிதாக அறிந்து கொள்ள முடியும், இதெல்லாம் தெரியாமலா அந்த மாணவர்கள் லட்ச லட்சமாக பணத்தைக் கொட்டினார்கள்? பொறியியல், மருத்துவம் போன்ற கல்வி கற்க அந்த கல்வி அளிக்க தகுதி அற்ற ஒரு நிறுவனத்தில் ஏன் சேருகிறார்கள் என்று விசா வழங்கிய தூதரகம் ஏன் விசாரிக்கவில்லை என்று பல கேள்வி எழுகிறது. அமெரிக்க அரசின் குடி நுழைவு மற்றும் சுங்கத்துறை (Immigration & Customs Enforcement) விசா மோசடியைக் கண்டுபிடித்து விசாரிக்கும் போது, இந்திய அரசோ அதை நிறுத்தக் கோருகிறது.

இது வெறும் மோசடி செய்த மாணவர்கள் மீதுள்ள அக்கறை மட்டும் தானா, அல்லது சிக்கிக் கொண்ட மாணவர்களும், கல்வி நிறுவனமும் கிறிஸ்தவர்கள் என்பதால் உள்நோக்கம் ஏதும் இருக்குமா என்று எண்ணத் தோன்றுகிறது.

radio-tagஇது தொடர்பான விசாரணையில் ட்ரை-வேலி நிறுவனத்தில் சேர்ந்த பல மாணவர்களை பிடித்த அமெரிக்க் அரசு, அவர்களை விசா மோசடிக்காக சிறையில் அடைக்காமல், அதே நேரத்தில் ஊரை விட்டு வெளியேறி விடாமல் இருப்பதற்காக காலில் ரேடியோ டேக் (Radio Tag) கட்டி அனுப்பி இருக்கிறது. உடனே நம் ஊரில் அது என்ன ஆடு மாடுகள் போல டேக் கட்டி அனுப்புவது, மாணவர்களை கீழ்த்தரமாக நடத்தாதே என்று குரல் எழுப்புகின்றனர். நமது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவும் ரேடியோ டேக் கட்டுவதற்கு தனது கண்டனத்தை அமெரிக்க அரசிடம் தெரிவித்துள்ளார். இது உண்மையில் அமெரிக்க பழக்க வழக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் பேசுவது தான்.

ஒருவரை சிறையில் அடைக்காமல், அதே நேரத்தில் கண்காணிப்பில் வைத்திருக்க அமெரிக்காவில் ரேடியோ டேக் (Radio Tag) கட்டுகின்றனர். இது ஒரு வகையில் சந்தேகப் படும் நபர்கள் மீது காட்டப் படும் கருணையே. சிறையில் அடைத்து விடாமல், சந்தேகத்துக்குரிய அல்லது குற்றம் சாட்டப் பட்ட நபர்கள் ரேடியோ டேக் கட்ட அனுமதி அளிக்கும் இந்த வழக்கத்தை அமெரிக்காவில் முற்போக்காகவும், மனிதத் தன்மை உள்ளதாகவுமே கருதுகின்றனர். நியாயமாக விசா மோசடி செய்து தங்குகின்ற நபர்களை சிறையில் தான் அடைக்க வேண்டும். அப்படி செய்யாமல் ரேடியோ டேக் கட்டி வெளியே விடுவது ஒரு சலுகை.

இந்த ரேடியோ டேக் (Radio Tag) என்பது கை கடிகாரத்தை விட சற்று பெரிதாக இருக்கும். உண்மையில் இதன் பெயர் ankle monitor. இது ஒரு வகை அலை வரிசையில் ரேடியோ சிக்னல் எழுப்பும். அதை வேறொரு இடத்தில் உள்ள ரீசீவரில் பெற்று, எங்கிருந்து சிக்னல் வருகிறது என்பன போன்ற தகவல்களை அறிய முடியும். வீட்டுக் காவலில் இருக்கும் கைதிகள் இதை அணிந்து இருக்கும் போது, வீட்டை விட்டு வெளியே வெகு தொலைவு சென்று விட்டால், கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறைக்கு தெரிந்து விடும்.

actress_ankle_monitor1அமெரிக்க நீதிமன்றங்களில், தனது கட்சிக் காரரை சிறையில் அடைக்காமல், ரேடியோ டேக் கட்டி அனுப்பக் கோரி வக்கீல்கள் நீதிபதிகளிடம் முறையிடுவது உண்டு. பல குற்றம் சாட்டப் பட்ட பணக்காரர்கள், சிறையில் அடைபடாமல் டேக் கட்டிக் கொண்டு வெளியே வரவே விரும்புவர். சில சமயங்களில், குற்றம் சாட்டப் பட்டவர்களை ஜெயிலில் காவலில் வைக்காமல் ரேடியோ டேக் கட்டி வெளியே விட்டதற்காக நீதிபதிகள் பத்திரிகைகளில் விமர்சிக்கப் படுவதும் உண்டு.  புகழ் பெற்ற நடிகைகள் லிண்ட்சே லோகன், பாரிஸ் ஹில்டன் ஆகியோர் கூட, குற்றம் சாட்டப் பட்டு வழக்கில் சிக்கிய பொது இதனை அணிந்திருக்கின்றனர்.

ஆக  இந்தப் பிரச்சனையில் விசாரிக்க வேண்டியது காலில் டேக் கட்டி அனுப்பியதை அல்ல. உண்மையில் இது போல விசா மோசடி, மத மாற்ற முயற்சிகள் ஆகியவையே. கிறிஸ்தவ நிறுவனங்கள் பல விதங்களில் ஆசை காட்டி மத மாற்றத்தில் ஈடு படுவது தெரிந்தது தான். ஆனால் இம்முறை பல லட்சம் டாலர்களையும் சுருட்டிக் கொண்டு, விசா மோசடியும் செய்திருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் இதே போல பாண்டிச்சேரியில், பிரெஞ்சு குடிமகனாகி அந்நாட்டு வேலை வாய்ப்பு, உதவித்தொகை, பென்ஷன் போன்ற சலுகைகளை அனுபவிக்கலாம் என்று ஆசை காட்டி, இந்தியாவில் பிறந்த பிரெஞ்சு குடியுரிமை உள்ள பெண்களை திருமணம் செய்து வைத்து  மோசடி செய்து வந்தது செய்தியாக வந்தது. அதிலும் இம்மாதிரி பெண்களை திருமணம் செய்ய பல லட்சம் ரூபாய்கள் வசூலித்து ஏமாற்றினர்.

நமது அரசு இது போன்ற மோசடிகளில் நிதானத்தை அனுசரிக்க வேண்டும். விசா மோசடி செய்து அரசையும், மாணவர்களையும் ஏமாற்றிய கல்வி நிறுவனத்தின் மீது அமெரிக்க நடவடிக்கை எடுப்பதை, நமது அரசும், ஊடகங்களும் ஆதரிக்க வேண்டுமே தவிர எதிர்த்து மோசடி செய்பவர்களுக்கு தவறியும் துணை போய்விடக் கூடாது.

11 Replies to “விசா மோசடி: மூடப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனம், முடக்கப்பட்ட இந்திய மாணவர்கள்”

  1. இந்த மத்திய அரசு உருப்படியாக எதையுமே செய்வதில்லை என்று முடிவு எடுத்திருக்கும்போது, முறையாக செய்ய வேண்டும் என்றோ அதுவும் கிறிஸ்தவ நிறுவனங்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்றோ எவ்வாறு செய்வார்கள்! மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்!

  2. அமெரிக்காவில் உள்ள பல இந்திய ஹோட்டல்களில் ஏராளமான இளைஞர்களை ஹோட்டல் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்த கிறிஸ்துவ இளைஞர்களே. இவர்களுக்கு யார் என்ன விசா ஏற்பாடு செய்து தருகிறார்கள் என்பதும் மர்மமானதாகவே உள்ளது. இதையும் யாராவது விசாரித்தால் பல உண்மைகள் வெளி வரக் கூடும். ஒரு முறை பஸ்ஸில் அருகில் உட்கார்ந்து பயணித்த ஒருவர் தமிழ் நாட்டு சர்ச் ஒன்றில் பாதிரியார். அவர் தான் அடிக்கடி அமெரிக்கா வந்து செல்வதாகவும் ஏராளமான கிறிஸ்துவர்களை அமெரிக்காவுக்குள் நுழைய ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னார். நிச்சயம் காசு வாங்காமல் கூட்டிக் கொண்டு வந்திருக்க மாட்டார் மத மாற்றம் மற்றும் பணம் இரண்டுமே விளையாடிருக்கலாம். அடுத்த முறை அமெரிக்காவில் உள்ள எந்த இந்திய ரெஸ்டாரெண்டிலும் வேலை செய்யும் இளம் பேரர்களை ராண்டமாக விசாரித்தால் அந்தப் பெயர் ஒரு மார்ட்டினாகவோ, பீட்டராகவோ, ஜேம்சாகவோ இருக்க 90% வாய்ப்பு உள்ளது

  3. YES IT IS TRUE, MANY HINDUS ARE TEMPTED BY PRIESTS TO CONVERT IN TO CHRISTIANITY SO THAT THEY ARE OFFERED JOBS IN WEST AND IN AMERICA WHICH THEY FOOLISHLY WAS LURED TO CHANGE THE RELIGION TO CHRISTINITY . THEY ARRANGE MARRAIGES WITH PRECHERS AND MINISTRY PEOPLE WORKING IN CHURCHES AND LATER CONVERTED IN TO CHRISTIANITY FOR STAYING PERMANENTLY IN AMERICA. HINDUS MUST KNOW THEIR WAY OF LIVING IS THE TRUTH AND IT WAS GIVEN BY GOD HIMSELF MANY MILLIONES OF YEARS AGO AND NOT BY THE MAN MADE RELIGION THAT CAME JUST 2000 YEARS AGO. ALL HINDUS MUST KNOW ABOUT THEIR RELIGIOUS FAITH TO FIGHT CHRISTINAITY.

  4. திரு. மது,
    முற்றிலும் வித்தியாசமான பார்வையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
    நன்றி.

    ஊடகங்கள் முழு விவரங்களையும் நடுநிலையுடன் பார்க்காமல் எழுதி
    மக்களை குழப்புகின்றன.

    நம் மாணவர்கள் செய்தது அநியாயம்,அக்கிரமம்,அட்டூழியம். வெளி
    நாட்டிற்கு படிக்க போவதாக அறிவித்து விட்டு, அந்நாட்டின் சில சட்ட
    நடைமுறைகளை சாதகமாக எடுத்து கொண்டு அவர்களின் வேலை
    வாய்ப்புகளை பறிப்பது மகா பாதகம்.

    நம் அரசாங்கம் அந்த மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு செயலையும்
    செய்ய கூடாது. தவறு செய்தவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட
    வேண்டும்.

    அந்த மாணவர்களின் காலில் கொலுசு கட்டியது சரியான செயலே!

    மேலும் பிரிட்டனில் படிக்கப்போவதாக உள்ளே நுழைந்த மாணவர்களில்
    கிட்டத்தட்ட 20 இலட்சம் பேர் தங்கள் நாட்டிற்கு திரும்ப வில்லை.
    இவர்களில் பெரும்பான்மையானோர் இந்திய, பாகிஸ்தானியர் என்பது
    அனைவருக்கும் தெரிந்த இரகசியம்.

    உங்கள் கட்டுரை தேவை இல்லாமல் கிறிஸ்தவ மதமாற்றத்தை
    இழுத்திருப்பதாக படுகிறது. காரணம், உங்கள் கட்டுரையின் ஒரு கருத்து
    மற்றொரு கருத்துடன் முரண்படுகிறது.

    அதாவது, மத மாற்றம் செய்வோர் இந்தியாவிலிருந்து அமேரிக்காவிற்கு
    ஆட்களை அனுப்பியுள்ளனர் என்று கூறும் நீங்களே அந்த மிஷனரிகள்
    பணம் சம்பாதிப்பதாகவும் எழுதுகிறீர்கள். நோக்கம் மத மாற்றமாக
    இருந்தால் மாணவர்களை ஓசியில்தானே அனுப்பியிருப்பார்கள்.

  5. நோய் நாடி, நோய் முதல் நாடி என்று அவரே சொல்லிவிட்டபின், நோய் முதல், ஹிந்து சமயம் அல்லாத மதங்களில் உள்ளது என்றும் ஹிந்து சமயத்தை எதிர்க்கும் தலித்துக்களிடமும் உள்ளது என்றும், எனவேதான் தலித்துக்களில் பெரும்பாலோர் ஹிந்து சமயம் அல்லாத மற்ற மதங்களுக்கு எளிதில் மாறுகின்றனர் என்றும், “திராவிட இனத்தை வீழ்த்த ஒரு இனம் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது-கருணாநிதி”, “ஸ்பெக்டரம் ஊழல் இல்லை, வெறும் வதந்தி-காதர் முகைதீன் கருத்து” போன்ற செய்திகள் வருகின்றன என்றும் அறிய வேண்டும்.

  6. //….உங்கள் கட்டுரை தேவை இல்லாமல் கிறிஸ்தவ மதமாற்றத்தை
    இழுத்திருப்பதாக படுகிறது. காரணம், உங்கள் கட்டுரையின் ஒரு கருத்து
    மற்றொரு கருத்துடன் முரண்படுகிறது.

    அதாவது, மத மாற்றம் செய்வோர் இந்தியாவிலிருந்து அமேரிக்காவிற்கு
    ஆட்களை அனுப்பியுள்ளனர் என்று கூறும் நீங்களே அந்த மிஷனரிகள்
    பணம் சம்பாதிப்பதாகவும் எழுதுகிறீர்கள். நோக்கம் மத மாற்றமாக
    இருந்தால் மாணவர்களை ஓசியில்தானே அனுப்பியிருப்பார்கள்…..//

    கட்டுரை நாசூக்காகச் சுட்டிக் காட்டி உள்ளது. தமிழ் இந்துவின் வாசகர்கள் புள்ளி வைத்தால், ரோடு போட்டுவிடும் வாசிப்புத் திறன் மிக்கவர்கள் என்ற நம்பிக்கை கட்டுரை ஆசிரியருக்கு இருந்திருக்க வேண்டும்.

    எனக்கு இந்த விஷயம் குறித்த புரிதலைப் பட்டவர்த்தனமாகச் சொல்லி விடுகிறேன்.

    ஏமாற்றி இருப்பது கிறுத்துவத்தைப் போதிக்கும் ஒரு கல்லூரி. கிறுத்துவத்தைப் போதிப்பதால் லாபம் இருப்பது தெரிந்த ஆந்திரத்துத் தொழில்முனைவோர்கள் அந்தக் கல்லூரியில் சேரப் போயிருக்கிறார்கள். லாபம் சம்பாதிக்கும் ஒரு தொழிற்படிப்பில் சேர்த்துவிட, அதுவும் அமேஏஏ…..ஏஏரிக்காவில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்த்துவிட இங்கு எத்தனை கிறுத்துவ ஏஜண்டுகள், சர்ச்சுகள் வேலை செய்திருக்க வேண்டும் என்பது தெளிவு. பல ஆண்டுகளாக, இந்திய அரசியல், அதிகார, அமைப்புக்களில் பலரைத் தங்களது கைகளில் போட்டுக்கொண்டே இந்தத் தொடர் ஏமாற்றுவேலை நடந்திருக்க வேண்டும்.

    லாபம் கிடைக்கும் தொழிற்படிப்பு என ஆசை காட்டி, மதம் மாற்றி, காசும் பிடுங்கி அமெரிக்காவிற்கும், யூரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பிப் பல வருடங்களாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே போனபின்னர் இழந்தது தாய்மதத்தை மட்டுமல்ல, தங்களது பெற்றோர்கள் ரத்தம் சிந்தி உழைத்துச் சம்பாதித்தப் பணத்தையும்தான் என்று அறிபவர்கள் அங்கே போய் ஏதேனும் ஒரு ரெஸ்டாரண்டிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு இடத்திலோ கக்கூஸ் கழுவி பிழைத்துக் கொண்டிருப்பார்கள். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன், கல்லூரியில் சேர்த்துவிடுகிறேன் என்று சொல்லி ஏமாற்றும் போலி ஏஜண்டுகள் பற்றி லேசாக அங்கே இங்கே கேள்விப்படுகிறோம் அல்லவா. இதுவரை ஏமாற்றப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து போராட முடியவில்லை.

    ஆனால், இந்த முறை பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றிற்குத் தகவல் தர, இந்த ஏமாற்று வேலை இப்போது நமக்குத் தெரிய வந்திருக்கிறது.

    இங்குள்ள கிறுத்துவக் காசு பிடுங்கும் மாஃபியாக்களின் தொடர்பு இல்லாமல் இந்த அளவு ஒரு ஏமாற்று வேலை நடந்திருக்க முடியுமா?

    இதுவரை எத்தனை இந்தியர்கள் இப்படி மதம் மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளார்கள்?

    அமெரிக்க அரசைக் குறை சொல்லும் இந்திய அரசியல்வாதிகளும், மீடியாக்களும் இங்குள்ள ஏஜண்டுகளைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை?

    எதனால் இது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடக்கூடாது?

    ஆஸ்திரேலியாவிற்குப் போய் ஆதாரங்கள் எதுவும் இல்லாத வகையில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட ஹனீஃபிற்காகத் தூக்கம் தொலைத்த மன்மோகன் இப்படி ஏமாற்றப்பட்ட ஏழைகள் பற்றிக் கவலைப்படாதது ஏன்?

    ஆஸ்திரேலியாவில் மாணவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் பற்றி வெளிவரும் தகவல்கள் எதனால் அமெரிக்காவில் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள் பற்றி வருவதில்லை?

    அரேபிய நாடுகளுக்கு வேலை செய்யப் போய், இசுலாமியம் போதிக்கும் அரபு மேலாண்மை இன வெறியால், கொடூரங்களுக்கும் சித்திரவதைக்கும் உள்ளாகும் இந்தியப் பெண்கள் குறித்து எந்தத் தகவல்களும் வெளிவராமல் இருப்பது ஏன்?

    இந்தியர்கள் வேலைக்காரர்களாக இருந்தால்கூட மனிதாபிமானமும், வாழும் உரிமையும் கிடைக்கும். ஆனால் அவர்கள் அடிமைகள். அடிமைகளுக்கு மனிதாபிமானம் காட்டத் தேவையில்லை. அவர்களுக்கு வாழ்வுரிமைகூட கிடையாது.

    இந்தியர்களை அடிமையாக வைத்திருக்கவே இந்திய அரசமைப்பும், 1947வரை இந்தியர்களை நேரடியாக ஆண்ட மற்ற நாடுகளும் விரும்புகின்றன. அதனால் அவர்களுக்குக் கொள்ளை லாபம். ஆபிரகாமிய மதக்கருத்துக்களின்படி profit decides the values. even the human values.

    மனிதாபிமானம் மற்றும் வாழ்வுரிமை அளிப்பதால் ஆபிரகாமிய முதலாளிகளுக்கு நட்டம்தான்.

    கிறுத்துவ, இசுலாமிய மதங்கள் என்பவை எப்போதுமே உலகளாவிய, வரலாற்று ஏமாற்று வேலைகள். அப்போது வெளிப்படையாக அடிமை வியாபாரம் செய்தார்கள். இப்போதும் மறைமுகமாக அந்த அடிமை வியாபாரத்தைத் தொடர்கிறார்கள். ஐரோப்பாவில் இருந்த மிகப் பெரிய அடிமை வியாபார நிறுவனங்களில் கிறுத்துவப் பாதிரியான கால்ட்வெல்லுடைய நிறுவனமும் ஒன்று.

    ஆனால், திராவிட இனம் என்ற ஒரு பொய்யை முதன் முதலில் சொல்லி அந்தக் கால்ட்வெல்ட், தமிழர்கள் எல்லாம் அடிமைகள் என்று அந்தப் பொய்யின் மூலம் எழுதிவிட்டுவிட்டுப் போனான்.

    நீங்கள் எல்லாம் அடிமைகள் என்று அவன் சொல்லிவிட்டுப் போன கட்டளையைக் காப்பாற்றும் வேலையைத்தான் திராவிடர் கழகங்கள் வாயிலாக அடிமைகளான நாம் கட்டிக் காப்பாற்றி வருகிறோம்.

    கால்ட்வெல்லும், அவனைப் போன்ற கிறுத்துவப் பாதிரிகளும் போதித்த அடிமை உணர்வைத் தன் சொந்தக் கருத்தாகப் பேசிய ஈவெ ராமசாமியைத்தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

    நம்மை அடிமை என்று சொல்பவரையும், நம்மை அடிமை என்று நம்பவைப்பவரையும், அடிமையாக்கி விற்பவரையும் நம் தலைவர்கள், வழிகாட்டிகள் என்று நாம் நம்புகிறோம். விசுவாசிக்கிறோம்.

    சுதந்திர உணர்வுள்ள எவனாவது தன்னை அடிமை என்று சொல்லும் கருத்தை மதிப்பானா? நாம் மதிக்கிறோம். ஏனெனில், நமக்கு சுதந்திர உணர்வு இல்லை. ஏனெனில், நாம் அடிமைகளாகிப் போனோம்.

    நாம் அனுமதிக்காதவரை நம்மை யாரும் அடிமைப்படுத்த முடியாது. நாம் நம்மை அடிமைப்படுத்த அனுமதிக்கிறோம். ஆரிய-திராவிட இனவாதத்தை நம்பும்வரை, அனைவரும் தெய்வமே என்று சொல்லும் இந்துத்துவத்தை எதிர்க்கும்வரை நாம் அனைவரும் அடிமைகளே.

    அந்தக் காலத்து அடிமைகளுக்காவது அவர்கள் அடிமைகள் என்பது தெரியும். ஆரிய-திராவிட இனவாதத்தை நம்பும் நமக்கு நாம் அடிமைகள் என்பது தெரியாது.

    தன் வீடு பற்றி எறியும்வரை, அடிமைகள் கவலைப்பட மாட்டார்கள். வீட்டை இழந்த பின் எதிர்க்க வலிமையின்றி அல்லல்பட்டுச் சாவார்கள்.

    உலகம் முழுவதும் இந்தியர்களுக்கு நடப்பது பற்றி நாமும் கவலைப்படவேண்டாம். நம் வீடு இன்னமும் எரியவில்லை.

  7. வெளிநாட்டிற்கு சென்று படித்ததற்கே இந்த கதி, இனி இந்தியக் கல்வியில் அந்நிய முதலீடு வேறு வந்தால் உள்நாட்டிலேயே இன்னும் எப்படி எல்லாம் ஏமாற்றப்போகிறார்களோ வெள்ளையர்கள்.

    இது ஒரு ஸாம்பிள்

    https://hayyram.blogspot.com/2010/04/1.html

  8. Dear Ramanathan

    Please avoid typing everything in caps. it gives the feeling like you are shouting.

  9. Pingback: Indli.com
  10. மதுவின் கட்டுரை அருமை. களிமிகு கணபதியின் கடிதம் மிக அருமை. இது ஏதோ அமெரிக்காவிற்கு படிக்க சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட கீழ்மையாக சித்தரிக்கப்பட்டாலும் உண்மையில் இது கிருத்துவ மதமாற்ற சூழ்ச்சி தான் என்பதை அனைவருக்கும் தெரியப் படுத்த வேண்டும். நல்ல கட்டுரை. பாராட்டுகள்.

  11. //
    ஒருவரை சிறையில் அடைக்காமல், அதே நேரத்தில் கண்காணிப்பில் வைத்திருக்க அமெரிக்காவில் ரேடியோ டேக் (Radio Tag) கட்டுகின்றனர். இது ஒரு வகையில் சந்தேகப் படும் நபர்கள் மீது காட்டப் படும் கருணையே.
    //
    ஞானியும் இந்த வார கல்கியில் இதே போல கருத்து தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *