ஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள்

ஜலாசயங்களில் மராமத்து இல்லெங்கில் தேங்கி நிற்பதனால் ஜலம் மாசு படலாம். ஆனால் வற்றாத ஜீவ நதிகளில் நில்லாது ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஜலம் கழிவுகளைக் களைந்து தன்னைத்தானே சுத்திகரித்துக்கொள்ளும் தன்மையதாய் இருக்கிறது என சொல்லப்படுகிறது.

அது போல் ஒரு புஸ்தகம அதுவும் காலத்தினால் மாற்றப்படக்கூடாததான வாழ்க்கை முறைகளை விதிக்கும் புஸ்தகம் அறவே ஸஹிப்புத்தன்மையில்லாத போதும் கடவுள் என்று பயமுறுத்தும் ஒரு தத்வம் போன்ற கூண்டுகளில் அடைபடாது தன்னைத்தானே சுத்திகரித்துக்கொள்ளும் ஜீவநதியாய் நித்ய நூதனமாய் இருக்கிறது சிர புராதன ஹிந்து மதம்.

சைக்கிள் ஓட்ட அனுமதி மறுத்தல், குப்பையையை புஜிக்கச்செய்தது போன்ற ம்ருக துல்யமான க்ருத்யங்களைச் செய்த சில மனுஷ்யர்களை ஒரு புறம் கொண்டாலும் மறுபுறம் உயர்வு தாழ்வுகளை பேதிக்கும் பல மனுஷ்யர்களையும் கொண்டது நம் மதம். முன்னதை மறைக்கவேண்டி பின்னதை இயம்பவில்லை. பின்னதின் மூலம் ப்ரோத்ஸாஹமடைந்து முன் சொல்லப்பட்ட துஷ்க்ருத்யங்கள் களையப்படவேண்டி இதை எழுதுகிறேன்.

இந்த ஜீவநதியில் வந்து சேரும் உயர்வு தாழ்வு என்னும் கழிவுகளை இது பலவிதத்தில் கழித்துக்கொண்டே இருக்கிறது. இந்த மதத்தில் காலம் காலமாக கொண்டாடப்படுவதான மற்றும் மதத்தைக் கட்டிக் காப்பதில் அக்கறை உள்ள பெரியோர்களால் அவ்வப்போது உருவாக்கப்படும் (இக்கழிவுகளைக் களையெடுப்பதற்காகவே) விழாக்கள் மற்றும் தீர்த்த யாத்ரைகள் இந்தக்கழிவுகளை களைவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஜாதிகளின் உயர்வு தாழ்வுகள் பேதிக்கப்பட்டதாகவும் மற்றும் ஒருங்கிணைந்து ஒளிரும் ஹிந்து ஸமூஹத்தின் ஒரு முகமாகவும் பரிச்சயம் தெரிவிக்கும் இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட மற்றும் பார்த்து ரசித்த என் அனுபவங்கள் தக்ஷிண பாரதத்திலிருந்து உத்தர பாரதம் வரைக்குமாய் கீழே:-

படி பூசை பழனி பாத யாத்ரை

இந்த யாத்ரைக்குமுன் யாத்ரைக்கான சூழலை தெரிவித்தல் நன்று. மின்னம் பிறிதொரு இழையில் பகிர்ந்த விஷயத்தை கீழே தருகிறேன்.

“எமது பள்ளிப்பருவத்தில் ஸ்ரீமான்கள் சேலம் காங்க்ரஸ் த்யாகி கோபால ஐயர், பாலசுப்ரமணிய செட்டியார், சுப்பையா செட்டியார், வையாபுரி கவுண்டர் ( தயவு செய்து சாதி குறிப்பிடுகிறேன் என்று என்ன வேண்டாம்; அக்காலத்தில் இவ்வாறே அந்த சான்றோர் தம் பெயர் எழுதினர்) போன்ற சான்றோர்கள் தம் திருப்புகழ் சபை மூலம் ஊர்க்குழந்தைகளுக்கு திருப்புகழ் அமுதம் உட்டினர். அந்த சான்றோர் ஊட்டிய அமுதத்தில் இதயத்தில் அமிழ்ந்த சில துளிகளும் அவர்களோடு சேர்ந்து திரு செங்கோட்டு வேலவனின் படி பூசையில் கலந்ததாலும் அவர்கள் கையால் செங்கோட்டு வேலனின் திருநாமம் கலந்த பிரசாதம் உண்டதாலும் அவர்கள் இட்ட பிச்சையான திருப்புகழ் எங்கள் நாவில் இன்று மட்டும் உள்ளது.”

பசுமரத்தாணி போன்று எங்களுக்கு திருப்புகழ் அமுதமூட்டிய சான்றோர் புகட்டிய ஸம்ஸ்காரங்களில் சில படி பூசை மற்றும் பழனி பாத யாத்ரை. படி பூசை ஒரு நாள் வைபவம். பழனி பாத யாத்ரை மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் எடுக்கும் வைபவம். சபையிலே எங்களது மூன்றாந்தலைமுறை.

வட சென்னிமலை மற்றும் நாககிரியெனும் திருச்செங்கோடு போன்ற ஸ்தலங்களில் படிபூசை. இதிலே பெண்டு பிள்ளைகளுடன் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்வோம். மிகக்களிப்போடு உகப்போடு. காலை வேளையில் திருச்செங்கோடு சென்றதுமே படிபூசைக்கு வரும் மக்கள் அனைவரையும் அன்புடனும் பரிவுடனும் கூப்பிட்டழைத்து ( நீ என்ன ஜாதி என்றெல்லாம் கேழ்க்க மாட்டார்கள்) ஆதித்யம் செய்யும் கொங்கு வேளாளர்களின் சத்திரத்திற்கு சென்று நாஷ்டா எடுத்துக்கொண்டு திருப்புகழ் ஓதிய படியே படியேறுவோம். இந்த வைபவத்தில் ஜாதி ஒழிந்தது என்று சொல்லேன். பேதம் ஒழிந்தது என சொல்லலாம். தவறு நாவிலே திருப்புகழ் மனதிலே செங்கோட்டுவேலவன் கால்கள் படியேற கைகள் கரதாளம் போட பேதம் என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. மலைமேல் சென்றதும் வேலவனின் அபிஷேகத்தின் போது “சீரான கோல கால நவமணி மாலாபிஷேகபார வெகுவித” என்ற திருப்புகழை வெகு விஸ்தாரமாகப் பாடி தூப தீப தரிசனங்கள் கண்டு ஆலயத்தின் வெளியே மண்டபம் வந்து சேருவோம். அங்கே அவரவர் வீடுகளிலிருந்து நைவேத்யம் செய்து கொணர்ந்த சர்க்கரைப்பொங்கல், புளிசாதம் மற்றும் தயிர் சாதம் ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து உண்போம் கிட்டத்தட்ட ஒரு குடும்பம் போல். பேச்செல்லாம் திருப்புகழ்.

பழனி யாத்திரை

திருப்புகழிலே ராமாயணம், பாரதம், பாகவதம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், வேதாந்தம், நீதி சாஸ்த்ரம், அத்வைதம் என பெரியோர் சொல்லச்சொல்ல பிளந்த வாய் மூடாது கேழ்ப்போம்.

சாதுஸ்ரீ குஹானந்தபாரதி ஸ்வாமிகள் ( மதுரை சோமு ப்ராபல்யப்படுத்திய ”என்ன கவி பாடினாலும்” பாடல் மற்றும் பல அற்புத பாடல்கள் எழுதிய மஹான்) சொல்லிவைத்தபடி கந்தர் அலங்காரம் மற்றும் திருப்புகழ் வழியாகவே த்யான, ஆவாஹன, அர்க்ய, பாத்ய அபிஷேகாதி ஷோடசோபசார பூஜை ஞாயிறு தோறும் மற்றும் இந்த வைபவங்களிலும் நடாத்தப்பெறும். பெரியவர் சிறியவர் பெண்டுகள் குழந்தைகள் என சபையோர் அனைவருக்கும் திருப்புகழ்களும், அனுபூதியும் உபயுக்தமாக அலங்காரமும் கண்டஸ்தம். இதிலே ஜாதி பற்றிய பேச்சு எங்களுக்குள் மிக அபூர்வமாகவே இருந்ததுண்டு.

பாதயாத்ரை நீண்ட பயணமாதலால் புருஷர்கள் மட்டிலும். யாரேனும் ஒரு அடியவர் க்ருஹத்திலிருந்து துவங்கி கோட்டை மாரியம்மன் கோவில் வரைக்கும் திருப்புகழ் ஓதிச்சென்று அம்பாளை தரிசித்து அங்கிருந்து யாத்ரை துவங்கும். இதிலும் நீள நெடுக திருப்புகழே. காங்கயம் அருகே சற்று அதிகம் விஸ்ராந்தி எடுப்போம். ஐந்து நாள் யாத்ரையென்றால் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் மேல் ஆகியிருக்கும். அங்கே முட்டிக்குளங்கரை எண்ணை என்னும் வலி போக்கும் தைலம் ப்ரஸித்தி. அதை வாங்கி அடியவர் ஒருவருக்கொருவர் பாத சேவை செய்வர். நான் மிகப்பாவனமாக கருதும் சேவை இது. சிகை கச்சம் அணிபவருட்பட உகப்புடன் அடியவர் ஒருவருக்கொருவர் தைலத்தை தேய்த்து பாத சேவை செய்வர்

உருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு
முணர்வினோ டூடிக் கூடியும் …… வழிபாடுற்
றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி
யுனதடி யாரைச் சேர்வது …… மொருநாளே

என்று வள்ளல் அருணகிரி சொல்லிக்கொடுத்திருக்கிறாரே!

வழி நெடுக ஜாதியெல்லாம் கேழ்க்காது அன்புடன் அன்னமளிப்போர் பலர். இப்படி வைபவங்களுடன் பழனியாண்டவரை தரிசிப்பது பாக்யமே. பேதங்கள் ஒழிந்தே விட்டது என்று சொல்லேன். பின்னும் பெருமளவு இல்லை என்பது எனதனுபவம்.

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளை
தமிழ்ப்பெருமாளை முத்தமிழோனை தமிழ்த்ரய ஸ்வரூபனை

உயர்வு தாழ்வுகள் அழிக்க இறைஞ்சுகிறேன்.

உத்தரபாரதத்து காவடி யாத்ரை

ச்ராவண (ஸாவன்) ( ஆங்கல மாதப்படி ஜீலை-ஆகஸ்ட்) மாதத்தில் இந்த யாத்ரை கங்கை செல்லும் உத்தரப்ரதேசம், பீஹார், ஜார்கண்ட் மற்றும் உத்தராஞ்சல் ப்ரதேசங்களில் மற்றும் பஸ்சிம பங்காளத்தில் தாரகேஸ்வரத்திலும் மிக ப்ரஸித்தி. ச்ராவண மாதத்து அமாவசை வரை யாத்ரை நடைபெறும். ரிஷிகேசத்திலே நீல்கண்ட்மஹாதேவ், ஜார்கண்ட் வைத்யநாத ஸ்வாமி மற்றும் “சிவோ ராம ராமேதி ராமேதி காஸ்யாம்” என்றபடிக்கு வாராணசியில் விஸ்வநாதர் ஆலயம் மற்றும் பஸ்சிம பங்காளத்தில் தாரகேஸ்வரத்திலும் இதில் முக்ய ஸ்தலங்கள். உத்தர பாரதத்திலே ஜாதி பேதங்களை தகர்த்தெறியும் வைபவங்களிலே இது மிக முக்யமான வைபவம்.

அவரவர் இல்லங்களிலிருந்து சௌகர்யப்படி இந்த ஸ்தலங்களுக்கு வ்ரதமிருந்து வரும் அன்பர்கள் கங்கையில் ஸ்நானம் செய்து அந்தந்த ஆலயங்களிலிருந்து “போலே சங்கர்” எனப்படும் சிவபெருமானை தரிசித்து கங்கையில் குமபங்களில் நிரப்பிய பவித்ராதி பவித்ர கங்கா ஜலத்தை வித விதமாக அல்ங்காரம் செய்த காவடிகளில் ஆவாஹனம் செய்து தங்கள் புஜங்களில் ஏந்தி பாத யாத்ரையாக தங்கள் ஊர் வந்து சேருகிறார்கள். தங்களூரில் ஆங்காங்கே அமைந்த சிவாலயங்களில் காவடியில் ஏந்தி வந்த ஜலத்தை தங்கள் கையாலேயே அபிஷேகம் செய்து தங்கள் யாத்ரையையை பூர்த்தி செய்கிறார்கள்.

kanwar-yatra-haridwar-uttrakhand-india_398071

யாத்ரை மிகுந்த ச்ரத்தையுடன் செய்யப்படுகிறது. வ்ரதம் மற்றும் யாத்ரை சமயத்தில் சிற்றின்பம் துறப்பது, புலால் உண்ணாமை போன்ற நியமங்களை ஏற்கிறார்கள். தங்களூர் வந்து அபிஷேகம் செய்வது வரை கங்கா ஜலம் நிரம்பிய கும்பங்களை கீழே வைக்கக்கூடாது என்பதும் நியமம். ஸபரிமலை போகும் ஸ்வாமிமார்களைப் போல் இவர்களும் பெரும்பாலும் பாதரக்ஷை அணிவதில்லை. மிகப்பெரும்பாலும் புருஷர்களே யாத்ரையில் போனாலும் ஸ்வல்பமாக ஸ்த்ரீகளும் ஆங்காங்கு கலந்து கொள்கிறார்கள். ப்ரத்யேகமாக நிஷேதமேதுமில்லை. எப்படி நமது ஸபரிமலை யாத்ரை போவோரை ஸ்வாமி என்றழைக்கிறோமோ அதுபோல் ஜாதிவித்யாசமின்றி யாத்ரை போவோரை மிகுந்த அன்புடன் பூஜ்ய புத்தியுடன் விளிக்கிறார்கள் அணுகுகிறார்கள்.

kawarias

kavariyayatr

kanwar-yatra-haridwar-uttrakhand-india_398059

லக்ஷக்கணக்காக யாத்ரை போவோருக்கு சேவை செய்ய ஆங்காங்கே ஷாமியானா பந்தல் போட்டு பங்கா கூலர் வசதிகளுடன் விஸ்ராந்தி மையங்கள். காவடியை கீழே வைக்கலாகாது என்பதால் லோஹத்தினாலான பாரந்தாங்கிகளை விஸ்ராந்தி மையங்களில் வைக்கிறார்கள். விஸ்ராந்தி எடுக்கும் யாத்ரிகர்கள் அந்த பாரந்தாங்கிகளில் காவடியையை இருத்தி விஸ்ராந்தி எடுக்கிறார்கள். இவர்கள் ஸ்நானம் செய்ய படுத்துறங்க சுத்தமான ஸாகாஹார போஜனம் செய்ய இங்கே வசதி உண்டு.பாத சேவையும் செய்கிறார்கள். சரணமய்யப்பா என்பது போல் ஹிந்தி பாஷையிலான சிவ நாமமாகிய “பம் பம் போல்” என்று எங்கும் முழக்கம். போஜ்புரி, குமாவனி, கடுவாலி, ஹரியாண்வி மேரட் கடிபோலி (ஹிந்தி பாஷையின் சைலிகள்) மற்றும், பாங்க்ளா போன்ற பல ப்ராந்திய பாஷைகளில் போலே பாபா (சிவ பகவான்) மீது விதவிதமாக கானங்கள் அஹோராத்ரம் முழங்கித்தள்ளும்.

இதிலே முக்ய விஷயங்கள் :-

  • ஜாதி பேதங்கள் அறவே ஒழிக்கப்பெறும் வைபவம். உத்தர பாரதத்தில் தக்ஷிண பாரதத்தை விட ஜாதி கொடுமைகள் அதிகம். ஆனால் இந்த வைபவத்தின் போது பேதங்கள் தூக்கியெறியப்ப்டுகின்றன. Times of India பத்ரிக்கையில் இது ஸம்பந்தமாக பேட்டிகள் படித்திருக்கலாம். நானா ஜாதியினரும் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள். முன்னம் சொன்னது போல் ஜாதி வித்யாசமின்றி பூஜ்ய புத்தியுடன் பகவத் ஸ்வரூபமாக யாத்ரிகர்களுக்கு சேவை செய்கிறார்கள். தலித் ஸமூஹத்து இளைஞர்கள் சொல்கிறார்கள். ஐயா, இந்த யாத்ரை மிகுந்த மன நிறைவைத் தரும் யாத்ரை.எந்த இடத்திலும் நீ எந்த ஜாதி என்று யாரும் கேழ்ப்பதில்லை. எங்களை வெறுத்தொதுக்கும் மற்றைய ஜாதியினர் கூட எங்களை அன்புடனழைத்து உபசரித்து அன்னமிட்டு எங்களுக்கு பாத சேவை செய்யும் போது எங்களிடம் காட்டப்படும் த்வேஷத்தைத் தாத்காலிகமாக மறக்கிறோம். உத்ஸாஹமடைகிறோம். இறைவனுக்கு எங்கள் கையால் அபிஷேகம் செய்யும் போது மிகுந்த மன நிறைவை அடைகிறோம் என்கிறார்கள்.
  • பற்பல ஜாதியினரும் ஆங்காங்கே இணைந்து வைபவத்திற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். ஹிந்து ஸ்மூஹ ஒற்றுமை உச்சத்தில் இருக்கும் தருணங்கள். ஆகவே போலி மதசார்பின்மை வாதிகளுக்கான சிம்ம சொப்ன தருணங்களும் கூட. இடது சாரி போன்ற ஆப்ரஹாமிய மதவ்யாபாரிகள் போன்றோர் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஒடுங்கியிருக்கும் தருணங்கள்.
  • யாத்ரிகர்கள் ஆங்காக்கே யாத்ரைக்கு இடைஞ்சல் செய்வோரிடம் சண்டைகள் கூட போடுவதுண்டு. வெள்ளைக் க்றைஸ்தவ பணத்திற்கு விலை போகும் தொல்லைக்காட்சியினர் இந்த வைபவத்தை வைத்தும் பணம் பண்ணுவதுண்டு. மதமே வ்யாபாரம் என்பதால் பணமே இவர்களுக்கு தெய்வம் என்றால் மிகையோ?
  • ந்ம்மூர் ஹிந்து (விரோத) பத்ரிகை வைபவத்தின் அருமை பெருமையெலாம் செய்தியாகப் போடாமல் காவடி யாத்ரிகர்களின் ன்யூஸன்ஸ் என்றெல்லாம் சந்தடி சாக்கில் செய்தி போடும் கூத்தும் நிகழும்.

அந்த யாத்ரிகர்களின் முழக்கத்தை அவர்களை நமஸ்கரித்து நினைவிலிருத்தி நானும் முழங்குகிறேன்

“பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் பம் போல்”

ஆசுதோஷியான சங்கரனை உயர்வு தாழ்வு களைய இறைஞ்சுகிறேன்.

இது சம்பந்தமான சில படங்கள் (யாத்திரை 1, யாத்திரை 2)

கர்வா சௌத்

கார்த்திக மாஸத்து க்ருஷ்ண பக்ஷ சதுர்த்தியில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுமங்கலி ஸ்த்ரீகளால் தமது பதியின் நலம் மற்றும் தீர்க்க ஆயுஸ் வேண்டி உத்தர பாரதத்தில் கொண்ட்டாடப்படும் பண்டிகை இது. பண்டுகையன்று ஸூர்யோதயம் துவங்கி சந்த்ர தர்சனம் பர்யந்தம் உபவாஸம் பதியின் நலம் வேண்டி உபவாசம் இருக்கிறார்கள். தக்ஷிண பாரதம் அல்லது பஸ்சிம பங்காளம் ராஜஸ்தான் குஜராத் போல சுத்த உபவாஸமாக இல்லாமல் பல போஜ்ய வஸ்துக்களை வர்ஜித்து மிகச்சில வஸ்துக்களை மட்டும் புஜித்து இருப்பர். ச்ரத்தா பக்தி அதிகம் உள்ள சில நாரீமணிகள் சுத்த உபவாஸமும் இருப்பதுண்டு. நம்மூரில் மூன்றாம் பிறை தர்சனம் மிக ச்லாக்யமாக கருதப்படுகிறது. ஆனால் ஏனோ நாலாம் பிறையைப் பார்க்கக்கூடாது என் சொல்லக்கேட்டு இருக்கிறேன். நாலாம் பிறையைப் பார்ப்பவர் நாய் படாத பாடு படுவர் என்ற வசனம் கூட கேட்டு இருக்கிறேன். ஆனால் இங்கே உத்தர பாரதத்தில் இந்த கார்த்திக மாஸத்து க்ருஷ்ண பக்ஷ சதுர்த்தி மிக மங்களமான சுபகரமாக கருதப்படுகிறது.

ஸூர்யோதயம் முதல் சந்த்ரோதயம் பர்யந்தம் உபவாஸம் இருக்கும் ஸ்த்ரீகள் சந்த்ரோதயத்தின் போது தங்கள் பதி பரமேஸ்வரனை பூஜை செய்து தாம்பாளத்திலே பதியின் முகத்தையும் சந்த்ரனையும் ஒருங்கே தர்சனம் செய்கிறார்கள்.

இந்தப் பண்டிகையின் முன் தினமும் பண்டிகையன்றும் ஊர் முழுக்க கோலாஹலமாக இருக்கும். கண்ணாடி வளையல்கள், நெற்றிப்பொட்டு, குங்குமம், ஸிந்தூர், பூஜாபாத்ரங்கள், ஆபரணாதிகள், நல்ல புடவைகள் இத்யாதி சௌமங்கல்ய பூஷணாதிகள் இவற்றின் வ்யாபாரம் தீபாவளியின் ஸமயம் போல விறுவிறுப்பாக இருக்கும். மிக முக்யமாக வித விதமாக கையில் மருதாணி எழுதிக் கொள்வது. சுமங்கலி ஸ்த்ரீகளான பாட்டிமார் முதல் இளம் வயது ஸ்த்ரீகள் வரை தம்மை அலங்கரிப்பதில் அதிக கவனம் காட்டுகிறார்கள். பண்டிகையன்று நவ விவாஹித வது போல தம்மை பூர்ணாலங்கார பூஷிதையாக அலங்கரித்துக் கொள்கிறார்கள் தங்களை தங்கள் பதி பரமேஸ்வரனுக்கு சமர்ப்பிக்க.

இதில் ஸமூஹம் சார்ந்த உயர்வு தாழ்வு ஒழிக்கப் படும் விஷயங்கள் :-

  • உத்தர பாரதத்தில் தலித் ஸமூஹ மக்களை ஹிந்து க்ரியைகள் அடையாளங்கள் இவைகளிலிருந்து விலகச் சொல்லி சில குழுமங்கள் ஆங்காங்கே அவ்வப்போது முயற்சிப்பதுண்டு. பெந்தே கொஸ்தே போன்ற க்றைஸ்தவ மத வ்யாபாரிகளும் இது போல் ஹிந்து அடையாளங்களை அழிக்க முயற்சிப்பவர்கள். இப்பண்டிகை இவர்கள்து முயற்சிகளையெல்லாம் விபலமாக்கும் தருணம். அலங்காரத்தில் மயங்காத ஸ்த்ரீ பூலோகத்தில் குறைவேயன்றோ! சில குழுமங்கள் ஆகட்டும் பெந்தே கொஸ்தே ஆகட்டும் இவர்களது துர்போதனைகள் அலங்கார ஆசையால் காற்றில் பறக்கப்பட விட்டு இந்த தேசத்து அனாதி காலமான ஹிந்து விவாஹித ஸ்த்ரீயின் அடையாளங்கள் ஜாதி வித்யாசமின்றி எல்லோராலும் ஏற்க்ப்படும் தருணம். துர்மதங்களின் ப்ரபாவம் மங்கும் தருணம்.
  • ஜாதி ஏன் மதக்கட்டுப்பாடுகள் கூட மங்கும் தருணம். பூர்வி உத்தர ப்ரதேசம் மற்றும் பீஹார் ஜார்கண்ட் ராஜ்யங்களில் முஸல்மாணிய ஸ்த்ரீகளில் பலருக்கு (ராஜஸ்தான் குஜராத் உள்பட) நெற்றிப்பொட்டு மற்றும் வகிட்டில் ஸிந்தூர் அணியும் பழக்கம் உள்ளது. நான பனாரஸ் மற்றும் கயா போனற ஸ்தலங்களில் கண்டு இருக்கிறேன். ஆபாதி கேசாந்தம் பர்தா அணியும் பெண்மணிகள். ஆந்தி என்னும் பெருங்காற்றடிக்கும் போது அவ்ர்கள் முகத்திரை விலகியபோது நெற்றியில் மிளிரும் ஹிந்து மங்கலச்சின்னங்களான பிந்தி மற்றும் சிந்தூர் கண்டு ஆச்சரியப்பட்டதுண்டு. எனது உத்தரபாரதத்து முஸல்மாணிய மித்ரர்களிடம் விசாரிக்கையில் ஆங்காங்கே இம்மாதிரி பழக்கங்கள் உள்ளதை ஆமோதித்துள்ளார்கள்.
  • இம்மாதிரிப்பண்டிகைகளிலும் க்றைஸ்தவ மத வ்யாபாரத்திற்காக இயங்கும் தொல்லைக்காட்சி மற்றும் ஊடகங்கள் சந்தடி சாக்கில் பணம் பண்ண இப்பண்டிகைகளை முழுக்க முழுக்க வ்யாபார ரீதியில் ஒளிபரப்பு செய்வதுண்டு.
  • ஜாதி வித்யாசமின்றி பார்வதீ பரமேஸ்வர ஸ்வரூபமாய் நவ விவாஹித வதூ வரர்களாய் இப்பண்ண்டிகையின் போது திகழும் எம் ஸஹோதர ஸஹோதரிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

    karvachauth

    முக்யமாய் அனாதி காலமாய் இந்த தேசத்து நம்மதத்து நம் அடுத்த தலைமுறையை தயார் செய்யும் ரக்ஷக ஸ்தானத்தில் இருக்கும் நாரீமணிகளுக்கு ஜாதி வித்யாசமின்றி உத்தவன் கோபியருக்கு செய்ததான நமஸ்காரமே நினைவுக்கு வருகிறது.

    “வந்தே நந்த வ்ரஜஸ்த்ரீணாம் பாதரேணுமபீக்ஷ்ணச:”

    என்ற ரீதியில் இந்த தேசத்து நாரீமணிகளின் மிக உயர்ந்த ஸதிகளின் பாத தூளியை சிரசில் தரித்து இந்த தேசத்தில் உயர்வு தாழ்வு அகல நான் இப்போது இருக்கும் ஜம்மு காஷ்மீர ப்ரதேசத்தைக் காத்து ரக்ஷிக்கும் அன்னையான மாதா வைஷ்ணவி தேவியை இறைஞ்சுகிறேன்.

    இந்த ப்ரதேசத்து மக்கள் டோக்ரி / பஞ்சாபி பாஷையில் இடும் ஜெயகோஷத்தை நினைவு கூர்கிறேன்

    பண்டிகை ஸம்பந்தமான சுட்டிகள் (விக்கிபீடியா, கர்வா சௌத், மேலும் படங்கள்)

    “ஜெய் மாதா தீ”

    ஹோலி, ராதாஷ்டமி

    “ப்ருந்தாவனம் கோவர்த்தனம் யமுனா புளினானி ச”

    என த்வாதசாரண்யமாய் கோகுலம், ப்ருந்தாவனம், கோவர்த்தனம், பர்ஸானா, நந்த்க்ராமம், பாண்டீரவனம் இத்யாதி பன்னிரண்டு வனங்களில் எண்பத்துநாலு கோசங்களில் பரவிய ராதா க்ருஷ்ணர்களின் லீலாஸ்தலமான அந்த நித்ய நவ கிசோர கிசோரியாய் சோபிக்கும் நித்ய நவ தம்பதிகளின் ப்ரத்யேக ராஜதானியான வ்ரஜ மண்டலத்தை பேதங்களையென்ன ஜாதிகளையும் துர் மதங்களையும் கூட சேர்த்து ஒழிக்கும் வ்ரஜ தாமத்தை கலியையை தூஷிக்கும் தாமத்தை நமது தர்மத்தின் ஆதர்ச புருஷர்களாம் ராம க்ருஷ்ணர்களில் இரண்டாவதான “பச்சைமா மலை போல்மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதனின் தாமத்தை ஸப்த மோக்ஷபுரிகளாம்

    “அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ அவந்திகா
    புரீ த்வாரவதீ சைவ ஸப்தைதே மோக்ஷதாயிகா :”

    என் போற்றப்படுவதில் இரண்டாவதான மதுரா தாமத்தை நமஸ்கரித்து

    ஜகத்பிதாவின் பத்னியாம் பொறுமையே வடிவமான தரையின் ஸ்வரூபமாய் பரந்து விரிந்து ஸப்த த்வீபா வஸுந்தரா என போற்றப்படும் இந்தப் பேருலகில் அவ்வன்னையின் குழந்தைகளாய் எந்தெந்த ஜாதியிலிருந்தெல்லாமோ எந்தெந்த மதத்திலிருந்தெல்லாமோ நானா திக்குகளிலிருந்தும்

    “இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடே
    உற்றோமேயாவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்
    மற்றை நம் காமங்கள் மாற்று”

    என்ற சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் வாக்கையொத்து ஏழேழ் ஜென்மங்களுக்கும் கண்ணனுக்கென்றே தமது வாழ்க்கையை அர்ப்பணிக்க இந்த தாமத்திற்கு வரும் பரம பாகவதர்களின் பாத தூளியை சிரசில் தரித்து இந்த புனித தாமத்தில் ஜாதி, உயர்வு தாழ்வு, துர்மதம் என்பதையெல்லாம் கண்டனம் செய்யும் தாமத்து ப்ரத்யேக பண்டிகைகள் :-

    ராதாராணியின் ராஜ தானியாம் ப்ருந்தாவனத்தில் நுழைந்ததுமே ரிக்ஷா காரர் முதல் ஸப்ஜி விற்பவர் துகான்தாரர் பக்தர்கள் அனைவரின் வாயிலும் முக்கு மூலையெங்கும் கேழ்க்கும் நாமம் “ராதே ராதே”. இது ராதா தேவியின் ராஜதானி என்று இன்றும் ப்ரகடனம் செய்கிறது.

    radha-rani

    ஆங்க்ல மாதப்படி மார்ச் வாக்கில் வரும் இந்தப்பண்டிகையில் ஜாதியா மதமா எல்லாம் தூக்கியெறியப் படுகிறது. லட்மார்ஹோலி என பர்ஸானாவில் தோல்கேடயம் தாங்கிய புருஷர்களை வ்ரஜ ஸ்த்ரீகள் தடியால் அடிக்க அவர்கள் கேடயத்தால் தடுக்க என ஜாதியெல்லாம் மறந்து ஹோலி விளையாடப்படுகிறது. குலால் எனப்படும் வண்ணப்பொடிகளை ஒருவர் மேல் ஒருவர் தூவி விளையாடுகிறார்கள். பிச்காரி எனப்படும் குழலில் வண்ணநீர் நிரப்பி ஒருவர் மேல் ஒருவர் வண்ண நீர் பீய்ச்சி விளையாடுகிறார்கள். ஜாதி மதம் ஹிந்துஸ்தானி விதேசி என்ற வித்யாசமெல்லாம் ஆங்கே அந்த ஹோலி நீரில் கரைகிறது. ஆங்காங்கே உள்ள கண்ணனின் கோவில்களிலோ கண்ணனின் அர்ச்சா விக்ரஹத்தின் மீது கூட ஹோலி விளையாடுகிறார்கள். ராஜஸ்தானத்து ஸ்ரீநாதனின் மந்திரத்தில் புஷ்பங்களைத்தூவி ஹோலி விளையாடுகிறார்கள்.

    இந்த தாமத்தில் தான் ரஹீம், ரஸ்கான் போன்ற மதாந்தர பக்தர்களையும் கண்ணன் ஆட்கொண்டான்.

    அடுத்து ஜன்மாஷ்டமியை அடுத்து வரும் அஷ்டமியான ராதாஷ்டமி. இது ப்ரத்யேகமாக ப்ருந்தாவனத்திலும் பர்ஸானாவிலும் கொண்டாடப்படுகிறது. மிகச்சிறப்பன அம்சம். பண்டிகையன்று ஸாயங்காலம் குழந்தைகளை ராதா க்ருஷ்ணர்களாக அலங்கரித்து பூக்களால் ஜோடிக்கப்பட்ட ரதங்களில் ஏறி வீதியுலா செய்கிறார்கள். எந்த ஜாதியை சேர்ந்த குழந்தையாய் இருந்தாலும் ரதத்திலேறிய குழந்தைகளை ஸ்வயம் ராதா க்ருஷ்ணர்களாகவே வழிபடுகிறார்கள்.

    ஸர்வம் க்ருஷ்ணமயம் ஜகத்

    என்பதை வாழ்வில் மக்கள் அனுசரிக்கும் தருணமாய் மிளிர்கிறது.

    மிக விரிவாய்ச்செல்லும் இந்த வ்யாசத்தில் பால கங்காதர திலகரால் ஸ்மூஹத்தை ஒற்றுமைப்படுத்த மஹாராஷ்ட்ரத்தில் ஏற்படுத்தப்பட்டு ஹிந்துஸ்தானம் முழுதும் இன்று பரவியிருக்கும் விநாயக சதுர்த்தி வைபவம் பஸ்சிம பங்காளத்தில் கொண்டாடப்படும் துர்காபூஜை (இடது சாரிகளின் தெய்வ மறுப்புக் கொள்கையையை காற்றில் பறக்க விடும் பண்டிகை எனப்பல எழுத உள்ளது) விரிவஞ்சி முடிக்கிறேன்.

    ஒரு காலத்தில் ஸமூஹத்தில் உயர்ந்திருந்து பின்னர் பரங்கிக் கும்பினியாரின் மதவ்யாபார சதிகளாலும் பரஸ்பர சண்டைகளாலும் ஏதோ காலத்தில் தாழ்த்த்ப்பட்ட நமது பற்பல ஸஹோதர ஸஹோதரிகளின் ஜாதிக்குழுமங்களின் ஸமூஹங்கள் சரி சமமாய உயர்வில் இருந்த சமயத்து வரலாறுகளை மீட்டு அவர்களின் வரலாற்று மேன்மைகளையும்
    நிர்த்தாரணம் செய்ய வேண்டும்.

    ஹிந்து மதத்தில் எனக்கு பிடிப்பை உண்டாகியவர்களில் மிக உகப்போடு கருதும் சான்றோர், அந்த சான்றோர் குல மாணிக்கமான அமரர்   ஸ்ரீ ஸ்தாணுலிங்க நாடார். ராம லக்ஷ்மணர்களாய் எண்பதுகளில் வீரத்துறவி ஸ்ரீ ராமகோபால்ஜீ அவர்களுடன் ஹிந்து ஐக்யதையை பரப்பியவர் இவர். ராமனது வம்சத்தில் வந்த இந்த ஸமூஹத்திடமிருந்தே நிலம் வாங்கி அதிலேயே தங்கள் மத வ்யாபார ஸ்தலமான சர்ச்சைக்கட்டி பின்னர் இவர்களை தாழ்ந்தவர் என்று தாழ்த்திய பரங்கிக் கும்பினிய மதவ்யாபாரிகளின் பித்தலாட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து ஸமூஹ ஸ்தானத்தை நிர்த்தாரணம் செய்த சான்றோர்க்கு அனேக வந்தனம்.

    இதே போல் ஒவ்வொரு ஸமூஹத்தின் நிஜ வரலாறும் மீட்கப்பட வேண்டும்.

    இவையனைத்தும் நான் எழுதியது ம்ருக துல்யமான மனுஷ்யர்களின் க்ரூர க்ருதயங்களை மறைக்கவோ அல்லது மறக்கவோ அன்று. அல்லாது அவற்றை மாற்றவே. காலத்திற்கேற்றவாறு நம் ஊர்களிலும் ஐக்யதையை உறுதிப்படுத்த இருந்த ரதோத்ஸவம், தீர்த்தயாத்ரை, படி பூசை போன்றவற்றை எப்படி விஸ்தரிக்கலாம் என ஸமூஹத்து பெரியோர்கள் விவாதிக்க வேண்டும். கொண்டாடப்படும் நம் விழாக்கள் பண்டிகைகள் ஆகியவற்றில் எப்ப்டி காலத்திற்கேற்றவாறு மாற்றங்களைக் கொணர்ந்து ஐக்யதையை உறுதிப்படுத்தலாம் என விவாதிக்குமாறு பெரியோர்களிடமும் சான்றோர்களிடமும் விக்ஞாபித்துக் கொள்கிறேன்.

    வந்தே பாரத மாதரம்!

14 Replies to “ஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள்”

  1. இந்த லோஹத்திலே இப்படி ஒரு அதிஸயமான நடையிலே எழுதும் ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மாதிரி மஹானுபாவர்களை எல்லா ஜனங்களும் ஸ்லாகித்தால் க்ஷேமமாக இருப்பீர்கோள்.

  2. படிக்க படிக்க கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.

  3. *கேரளாவில் ராகுலின் உலக மகா நடிப்பு! (1)

    https://hindu.friendhood.net/t11-topic

    *உத்திரபிரதேசத்தில் ராகுலின் உலக மகா நடிப்பு! (2)

    https://hindu.friendhood.net/t12-topic

    இந்த பக்கங்களை படிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல், உங்கள் Friendsக்கும் அனுப்புங்கள்.

  4. மதிப்பிற்குரிய கிருஷ்ண குமார் அவர்களுக்கு,

    தங்களின் திருப்புகழ்க் காதலுக்கும் எங்கள் திருமுருகன் பேரில் கொண்ட அளவற்ற பக்திமைக்கும் தலைவணங்குகிறேன். தங்கள் எழுத்துக்களின் ஊடாக பல நல்ல செய்திகளைத் தருகிறீர்கள். என்றாலும் தாங்கள் சிறிது முயன்று தங்கள் எழுத்து நடையில் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன். படித்து விளங்கிக் கொள்வதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இவ்வாறு அடியேன் அபிப்ராயப் படுவதில் தவறிருந்தால் மன்னிக்க வெண்டும் என்றும் விண்ணப்பிக்கிறேன்.

    என்றாலும் தங்களைப் போல ஒரு சிலர் மட்டும் இந்த நடையைப் பாவிக்கலாம் என்றொரு எண்ணமும் எனக்கு இருக்கிறது. அப்படி இருந்தால் இப்படியான மணிப்பிரவாள நடை தொடர்ந்தும் நீடிக்கும் அல்லவா? ஆனால் வலிந்து சம்ஸ்கிருதச் சொற்களை தேவையற்ற இடங்களில் புகுத்தி எழுதுவது நல்லதல்ல என்றும் சொல்லுவார்கள்.

    இது இவ்வாறு எழுத்தை.. அதன் நடையை விமர்சிப்பதற்கு ஏற்ற இடமல்ல.. இங்கு விடயத்திற்குப் பொருத்தமில்லாமல் இந;த விடயத்தைச் சொன்னதற்கும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

    ‘செந்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் வள்ளல் பெருமான் வள்ளி மணாளன் திருவடிகள் நம் எல்லோரையும் மேன் மேலும் ஊக்குவிக்கட்டும் என்று அவன் தாள் பணிகிறேன்.

  5. //என்றாலும் தாங்கள் சிறிது முயன்று தங்கள் எழுத்து நடையில் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன் – அறிஞர் மயூரகிரி ச்ர்மா அவர்கள்//

    வைஷ்ணவ சம்பிரதாயத்தில் இந்த மணிப்ரவாளம் பிரசித்தம். இதைப் படிக்கையிலும் கேட்கையிலும் தனி இன்பம் கிட்டுவதுண்டு. ஆழ்ந்து படித்தால் புரிந்துகொள்வதில் சிரமம் இராது. படிப்பதிலும் கேட்பதிலும் ருசியும் ஏற்பட்டுவிடும். ஸ்ரீ க்ருஷ்ணகுமார் போல ஒரு சிலர் இந்த மணிப்ரவாளத்தை உயிர்ப்பித்து வைத்திருப்பதால் தமிழுக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடாது என்பதே என் கருத்து.
    -மலர்மன்னன்

  6. எழுதுற விஷயத்தை தமிழிலே எழுதுங்கள். தமிழ் மாதிரி எழுதாதீங்க. வடமொழியிலே பிடிப்பு இருந்தால் முழுக்க வடமொழியிலே எழுதுங்கள். தமிழ், வடமொழி இரண்டையும் கலந்து கொல்லாதீங்க. ஜனகர் சொல்லியிருக்கார், படிக்க படிக்க கண்ணிலே தண்ணி வந்துதாம். படிக்க படிக்க காதிலே ரத்தம் வேணா வந்திருக்கும். Why blood? Same Blood!

  7. மயூரகிரி சர்மா, மலர்மன்னன் ஐயா, மற்றும் சந்திரசேகரேந்திரன்,

    ஆஷ்டுக்குஷ்டி வேஷ்டியை மேஷ்டுகிறது நடையில் எழுதுவதையே கிருஷ்ணகுமார் விரும்புகிறார் என்பது வேறு பதிவுகளுக்கு அவர் எழுதிய மறுமொழிகளிளிருந்து தெளிவு. எதற்கு நேரத்தை வீணடிக்கிறீர்கள்?

  8. ஸ்ரீ க்ருஷ்ணகுமார் ஜி அவர்கள் லிகிதம் செய்துள்ள மணிப்பிரவாள நடையிலான வ்யாஸம் ஹ்ருதயத்திற்கு மிகுந்த உத்ஸாகம் தருகிறது. அன்னாரின் கைங்கர்யம் வ்ருத்தியடையட்டும்.

  9. I request the author to continue to pen his thoughts in his usual style. Fantastic to read this Tamil!

  10. இந்த நடை இக்காலத்தில் ஒரு கிலுகிலுப்பூட்டப் பயன்படுமே அன்றி சொல்லவந்த கருத்தை வாசக்ரின் மனத்தில் பதிய வைக்கப் பயன்படாது. கூடிய வரையில் நல்ல தமிழில் எழுதுவதே முறை. வட்டாரநடைக்கு எந்த மரியாதையோ அந்த மரியாதையே இந்த நடைக்கும் கிட்டும். வடசொற்களைக் கையாளுவதில் தவறொன்றுமில்லை. அது வலிந்து திணிக்கப்படுவதாக இருத்தல் ஆகாது. இருந்தாலும் இந்த நடையில் தமிழில் எழுத திரு. கிருஷ்ணகுமார் அவர்களுக்கு இருக்கும் ஆர்வமும் திறமையும் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. திரு கிருஷ்ணகுமார் அவர்கள் இந்த நடையில் எழுதுவதைத் தொடர விரும்புகின்றேன். ஆனால் மற்றவர்கள் இந்நடையைத் தவிர்க்க வலியுறுத்துகின்றேன்.

  11. மொழி நடை சார்ந்தே பக்ஷமாகவும் ப்ரதிபக்ஷமாகவும் கருத்து தெரிவித்த அன்பர்களுக்கு நன்றி. தனி வ்யாசமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்தக் கருத்துகள் பிறிதொரு வ்யாசத்திற்கு மறுமொழியாகவே எழுதப்பட்டது.

    பரஸ்பரம் ஒருவரையொருவர் த்வேஷிக்கும் ஜாதிக்குழுமங்களை மட்டும் கொண்டது தானா நம் ஹிந்து சமூஹம்?

    எண்ணிலடங்கா ஜாதியினரிடையே பரஸ்பர ப்ரேமை என்பது சமூஹ நிகழ்வுகளிலெங்கும் உண்டா?

    ஹிந்து சமூஹத்தின் மதம் சார்ந்த க்ரியைகள், நம் மதம் சார்ந்த மங்கல சின்னங்கள் மற்றும் அடையாளங்கள் ஆகியவை ஆப்ரஹாமிய மதபரிவர்த்தன பித்தலாட்டங்களை எதிர் கொண்டு மற்றும் கால வெள்ளத்தை எதிர் நீச்சல் போட்டு நிலைக்க முடிகிறதா?

    என்ற வினாக்களுக்கு, நான் நினைவு கூறும் சமூஹ நிகழ்வுகள் மூலம் இந்த வ்யாசத்தில் பதில்கள் காண விழைந்துள்ளேன்.

    மொழிநடை பற்றி ஒரு சில வரிகள்.

    தூய தமிழ் மொழி நடையை வாசிக்கையில் எனக்கும் பெருமிதமே. தூய தமிழ் மொழி நடைக்கு நான் ப்ரதிபக்ஷி அல்ல. என்னால் லகுவாக எழுத முடிந்த மொழி நடையில் எழுதுகிறேன். அது தீந்தமிழ் நடையன்று என அறிவேன். அன்ய பாஷை கலவாது தீந்தமிழ் மொழி நடையில் இங்கு எழுதும் அனைத்து
    அன்பர்களுக்கும் எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் உரித்தாகுக

    ஸ்ரீமான்கள் மயூரகிரிசர்மா, மலர்மன்னன், அப்பாதுரை, ராமா தங்கள் ப்ரோத்ஸாஹத்திற்கு நன்றி. மொழி நடை சம்மந்தமான கருத்துடன் வ்யாசம் சம்மந்தமான தங்கள் கருத்துகள் எமது ப்ரோத்ஸாஹத்தை வ்ருத்தி செய்யும்.

    \\\\ஆனால் வலிந்து சம்ஸ்கிருதச் சொற்களை தேவையற்ற இடங்களில் புகுத்தி எழுதுவது நல்லதல்ல என்றும் சொல்லுவார்கள்.\\\\\

    எனது மதிப்பிற்குறிய நண்பர் ஸ்ரீ ப்ரதாப் அவர்கள் மொழிநடையை பற்றி கருத்து தெரிவிக்கையில் தேவையான மாற்றம் தெளிவாகவில்லை. தாங்கள் கவனித்த அதிக்ருத ஸம்ஸ்க்ருத ப்ரயோகத்தை சரிசெய்ய விழைகிறேன்.

    \\\\\\\செந்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் வள்ளல் பெருமான் வள்ளி மணாளன் திருவடிகள் நம் எல்லோரையும் மேன் மேலும் ஊக்குவிக்கட்டும் என்று அவன் தாள் பணிகிறேன்.\\\\\\

    எங்களுக்கு குலதெய்வமும் வாழ்வாதாரமும் வள்ளல் அருணகிரி உகந்தேத்தும்

    திக்கதுமதிக்க வரு குக்குடமும் ரக்ஷைதரு சிற்றடியும் முற்றியபன்னிருதோளும் உடைய மா தமிழ்த்ரய சேயனை சிவகைங்கர்ய பரராகிய தாங்கள் இறைஞ்சும் போது

    வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்ட வெறாது உதவு பெருமான் செவிசாய்ப்பான்.

    ஜாதி உயர்வு தாழ்வுகளை வேரறுக்கும் திண்ணம் ஆப்ரஹாமிய அதிரடிகளை எதிர் நோக்கும் வன்மை நம் சமூஹத்தில் இயற்கையாகவே உள்ளது என்பது எனதபிப்ராயம். அதை மெருகேற்றி பரஸ்பர சமூஹ ப்ரேமை தழைக்கச்செய்வது ஒவ்வொரு தலைமுறையினரின் கடமை. நம் முந்தைய தலைமுறைகள் தம் கடமையை சரிவர நிறைவேற்றியதாலேயே உலகனைத்தையும் கபளீகரம் செய்த ஆப்ரஹாமிய சக்திகள் கிட்டத்தட்ட ஆயிரம் வருஷம் ஸாம தான பேத தண்ட யுக்திகளை இங்கே ப்ரயோகித்தும் ஹிந்துஸ்தானத்தை இது வரை அடிமையாக்க இயலவில்லை.

    நம் தலைமுறையினர் நம் மதத்தில் நமக்கு இயற்கையாக இருக்கும் சக்திகளை பலப்படுத்தவும் ஊடே நம்முள் எழுந்துள்ள உயர்வு தாழ்வுகளை களைய விவாதிக்க விக்ஞாபிக்கிறேன்.

  12. இந்த ஸமூகத்தில் ஸமத்வத்தை லோஹத்துக்குச் ஸொல்லவே இந்த க்ஷேமமான கட்டுரையை ஆஸிரியர் பண்ணியிருக்கிறார். என்ன வ்யாக்யானம் என்ன தமிழ். தமிழுக்கு ஹானி வராதுன்னு இந்த வ்யாக்யானத்தை எழுதியிருக்கும் மஹானுபாவர் ஸொல்லவர்றது புரிகிறது.

    தமிழ்ஹிந்து இதே ரேஞ்சில் போனால் 2 கட்டுரைகள் போதும் இழுத்து மூட.

  13. தமிழர்களின் தாய் மதம் என்கிறார்கள் …. இது என்ன மொழியோ
    தமிழில் எழுதுங்கள் அய்யா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *