கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01

மூலம்: ஜோகேந்திர நாத் மண்டல்
தமிழில்: ராஜசங்கர்

dalit_jogendranath_mandal_pakistan_law_minister“மகா மனிதன்”.
தலித்தாகப் பிறந்தாலும் தலைவராக ஆக வாய்ப்புத் தரும் ஹிந்து சமூகத்தின் அந்தத் தலைவருக்கு பங்களாதேசத்து மக்கள் அளித்த பாசப் பெயர் இதுதான் – “மகா மனிதன்”. அவரது இயற்பெயர் ஜோகேந்திரநாத் மண்டல். சுதந்திரப் போராட்டக் காலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவர். பொதுவான ஹிந்து சமூகத்திற்கே உரித்தான் நன்னம்பிக்கை மனநிலையில் முஸ்லீம் சமூகத்தோடு ஹிந்து சமூகம் நல்லிணக்கத்தோடு வாழமுடியும் என்று நம்பியவர். பாகிஸ்தான் உருவாகக் காரணமான முகம்மது அலி ஜின்னாவின் நண்பர். பாக்கிஸ்தான் உருவாக வேண்டும் என்று பேசியவர்.

இவரது உழைப்பால் முஸ்லீம் லீக் பங்களாதேசில் பல முறை காப்பாற்றப்பட்டது. பல முறை ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. பாகிஸ்தானின் முதல் சட்ட அமைச்சராக, அறிவுத் தெளிவும் சமூக நல்லிணக்க நோக்கும் கொண்ட இவரே அமைந்தார். இருப்பினும், இஸ்லாமிய மனநிலை மற்ற மதத்தவர்களுக்கு வாழ்வுரிமை வழங்காது என்ற நிதர்சனம் அவரது முகத்தில் அறைந்தது.

மற்ற மதத்தினருக்கு, முக்கியமாக நாமதாரிகள் போன்ற தலித்துகளுக்கு, இஸ்லாமியத்தின்படி கொல்லப்பட்டு அழிக்கப்படுவதே விதியாகிவிட்டதை நேரடியாக அறிந்து தவித்தார் அவர். நன்னம்பிக்கை சிதறிப்போய், நல்லிணக்கம் நச்சாகிவிட்டதறிந்து பதறிப் போய், பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது அவர் எழுதிய அந்த உணர்ச்சி மிகுந்த, துரோகத்தின் வலி சுமக்கும் அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பே இத்தொடர். ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களை நம்பும் இந்துக்களுக்கு,  குறிப்பாக தலித் தலைவர்களுக்கு, என்ன கதி ஏற்படும் என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு வரலாற்று சாட்சியம்.

இவர் பற்றி மேலும் அறிய:
தமிழ் பேப்பர் தளத்தில் || கூட்டாஞ்சோறு தளத்தில் || விக்கிப்பீடியா தளத்தில்

கடிதத்தின் ஆங்கில மூலம் இங்கே:
ஜோகேந்திரநாத் மண்டலின் ராஜினாமா கடிதம்

வரலாறும், நம் பெரியோர்களும் மீண்டும் மீண்டும் நடைமுறை உண்மைகளைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பட்டுத் தெரிந்தவர்களிடம் பாடம் கற்றுக் கொள்வோம். இனியாவது.

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். [குறள்: 822]

என் அன்பிக்குரிய [பாகிஸ்தான்] பிரதமர் அவர்களுக்கு,

மிகுந்த வேதனை கொண்ட இதயத்தினாலும்  கிழக்கு வங்காளத்திலுள்ள [தற்போதைய பங்களாதேசம்] பின் தங்கிய இந்து மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற என் பணித்திட்டம் தோல்வியடைந்த வருத்தத்தினாலும் உங்களின் அமைச்சரவையில் இருந்து விலகவேண்டிய முடிவை எடுக்க தள்ளப்பட்டுள்ளேன். இந்த முடிவை எடுக்க இந்திய-பாகிஸ்தானிய துணைக்கண்டத்தில் நிலவி வரும் சூழல் பற்றி விளங்கச் சொல்லுவதே சரியானதாக இருக்கும்.

1. என்னுடைய பதவி விலகலின் சமீபத்திய மற்றும் நெடுநாள் காரணங்களைச் சொல்லுவதற்கு முன் முஸ்ஸீம் லீக் உடன் இணைந்து பணியாற்றிய வேளைகளில் நடந்த முக்கியமான சம்பவங்களைப் பற்றிச் சொல்லுவது உபயோகமாக இருக்கும்.

சில முக்கிய முஸ்ஸீம் லீக் பிரமுகர்கள் 1943 பிப்ரவரியில் என்னைச் சந்தித்து கேட்டுக்கொண்டதன் பேரில் வங்காள சட்டசபையில் மூஸ்லீம் லீக்குடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டேன். 1943 மார்ச்சில் பஸல் ஹக் அமைச்சரவை கவிழ்ந்த பிறகு இருபத்தியோரு பட்டியல் வகுப்பு எம் எல் ஏ க்களுடன் நான் லீக்கின் சட்டமன்ற கட்சித் தலைவர் ஆக இருந்த காஜா நஜிமுதீன் அவர்களுடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டேன். காஜா நஜிமூதீன் தன்னுடைய அமைச்சரவையை 1943 ஏப்ரலில் அமைத்தார்.

மூன்று பட்டியல் வகுப்பு மந்திரிகளை அமைச்சரவையில் சேர்ப்பது, வருடம் ஐந்து லட்சம் ரூபாயை பட்டியல் வகுப்பினரின் கல்விக்காக ஒதுக்குவது, பாகுபாடில்லாத மத பிரதிநிதித்துவத்தை அரசின் பணியிடங்களுக்கு அமல்படுத்துவது என்ற நிபந்தனைகளுடன் கூடியது எங்களுடைய ஒத்துழைப்பு ஆகும்.

2. இந்த நிபந்தனைகளைத் தவிர, முஸ்ஸீம் லீக்குடனான ஒத்துழைப்புக்கு வேறு சில முக்கிய காரணங்களும் இருந்தன.

முதலாவதாக வங்காள முஸ்லீம்களின் பொருளாதார நோக்கங்கள் பட்டியல் வகுப்புடன் பெரும்பாலும் ஒத்துப்போயின. முஸ்லீம்கள் பொதுவாக விவசாயிகளாகவும் கூலித்தொழிலாளிகளாகவும் இருந்ததைப் போலவே பட்டியல் வகுப்பினரும் இருந்தனர். முஸ்லீம்களின் ஒருபிரிவினர் மீனவர்களாக இருந்ததைப்  போலவே பட்டியல் வகுப்பினரின் ஒரு பகுதியினரும் இருந்தனர்.

இரண்டாவதாக, பட்டியல் வகுப்பினரும் முஸ்ஸீம்களும் பொதுவாகவே கல்வியில் பின் தங்கி இருந்தனர். லீக்குடனும் அமைச்சரவையுடனும் என்னுடைய ஒத்துழைப்பு, மிகப்பெரிய அளவில் சட்ட மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களையும் அதன் விளைவாக பெரும்பகுதி வங்காளர்களுக்கு இரண்டு தரப்பிலும் இருந்து பலனை கொண்டுவரும்.

கூடவே சிறப்புச் சலுகைகள் பெற்ற சக்தி வாய்ந்தவர்களின் அதீத உரிமைகளையும் அளவற்ற வசதியையும் குறைப்பதுடன் மதரீதியான அமைதியையும் நல்லெண்ணத்தையும் கொண்டு வரும் என்ற நம்பிக்கையும் தான் காரணம்.

இங்கு முதலமைச்சர் காஜா நஜிமுதீன், மூன்று பட்டியல் வகுப்பு மந்திரிகளைச் சேர்த்ததுடன் என்னுடைய சமூகத்தில் இருந்து மூன்று சட்டமன்றச் செயலர்களையும் சேர்த்துக்கொண்டார் என்பது சொல்லப்படவேண்டும்.

ஸுஹ்ரவார்தி அமைச்சரவை

direct_action_day_bangladesh_islam3. 1946 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களுக்குப் பிறகு ஹெச். எஸ். ஸுஹ்ரவார்தி, லீக் சட்டமன்ற கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டு பின் 1946 ஏப்ரலில் அமைச்சரவையை அமைத்தார். சட்டமன்றத்தின் ஒரே ஒரு பட்டியல் வகுப்பு உறுப்பினராக கூட்டுத் தொகுதியில் நான் வெற்றி பெற்றேன்.

ஸுஹ்ரவார்தி அமைச்சரவையில் சேர்க்கப்பட்டேன். 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினாறாம் நாள் தான் கல்கத்தாவில் லீக்கின் நேரடி நடவடிக்கை நாளாக (Direct Action Day)  அனுசரிக்கப்பட்டது. உங்களுக்குத் தெரிந்திருக்கும் அது யூதர்கள் கொல்லப்பட்ட ஹோலோகாஸ்ட் போன்ற கொடூரத்தில் முடிந்தது.

லீக்கின் அமைச்சரவையில் இருந்து நான் விலகவேண்டும் என இந்துக்கள் கோரினார்கள். என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் போனது. எனக்குத் தினமும் கொலை மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. ஆனால், நான் என்னுடைய நிலையில் உறுதியாக இருந்தேன். கூடவே எங்களுடைய பத்திரிக்கையான ஜாக்ரனில் பட்டியல் வகுப்பினரை காங்கிரஸுக்கும் முஸ்ஸீம் லீக்குக்கும் இடையில் நடக்கும் சண்டையில் கலந்துகொள்ளவேண்டாம் என்ற கோரிக்கையை என்னுடைய உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும் வெளியிட்டேன்.

கடும் கோபத்தில் இருந்த இந்துக்கள் கூட்டத்தில் இருந்து என்னுடைய உயர்சாதி இந்து பக்கத்து வீட்டுக்காரர்களால் தான் நான் காப்பாற்ற பட்டேன் என்பதையும் இந்த இடத்தில் தாழ்மையுடன் சொல்லவேண்டும்.

[ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பித்த] கல்கத்தா கொடூரம் 1946 அக்டோபரில் நாகோளி கலவரத்தால் தொடரப்பட்டது. அங்கு பட்டியல் வகுப்பு இந்துக்கள் உட்பட நிறைய இந்துக்கள் கொல்லப்பட்டதுடன் பல இந்துக்கள் முஸ்லீமாக மதம் மாற்றப்பட்டனர். இந்துப் பெண்கள் கடத்தப்பட்டுக் கற்பழிக்கப்பட்டனர். என்னுடைய வகுப்பைச் சேர்ந்த பலர் உயிரை இழந்தனர். பலர் உடமைகளை இழந்தனர். இந்த கலவரங்கள் நிகழ்ந்த உடன் டிப்பேரியா மற்றும் பெனி பகுதிகளுக்குச் சென்று கலவரம் நிகழ்ந்த பகுதிகளை பார்வையிட்டேன்.

இந்துக்களின் சொல்லொணாத் துயரங்கள் என்னைப் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது; இருந்த போதிலும் முஸ்ஸீம் லீக்குடன் என்னுடைய ஒத்துழைப்பைத் தொடர்ந்தேன். கல்கத்தா கலவரங்கள் நிகழ்ந்தவுடன் ஸுஹ்ரவார்தி அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. என்னுடைய முயற்சியினால் மட்டுமே, நான்கு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்கள் மற்றும் நான்கு பட்டியல் வகுப்பு உறுப்பினர்களின் ஆதரவினாலும் காங்கிரஸ் வென்றிருக்கவேண்டிய சட்டமன்றம் காப்பாற்றபட்டது, இல்லையேல் முஸ்ஸீம் லீக் அமைச்சரவை தோற்கடிக்கப் பட்டிருக்கும்.

4. 1946 அக்டோபரில் எதிர்பாராத விதமாக எனக்கு ஸுஹ்ரவார்தியிடம் இருந்து இந்திய இடைக்கால அமைச்சரவையில் பங்கு பெறும் அழைப்பு வந்தது. மிகுந்த தயக்கத்திற்குப் பிறகும், என்னுடைய முடிவைச் சொல்ல ஒரு மணிநேரமே தரப்பட்டதாலும், நான் அமைச்சரவையில் பங்கு பெறுவதை ஒப்புக்கொண்டேன், கூடவே என்னுடைய தலைவர் பி. ஆர். அம்பேத்கர் என்னுடைய முடிவை நிராகரித்தால் நான் அமைச்சரவையில் இருந்து விலகிவிடுவேன் என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டேன். நல்லவேளையாக அம்பேத்கர் தன்னுடைய அனுமதியை லண்டனில் இருந்து தந்தி மூலம் அனுப்பினார்.

தில்லிக்கு போய் சட்ட உறுப்பினராகப் பதவி ஏற்கப் போகும் முன் அப்போதைய கிழக்கு வங்காள முதல் அமைச்சரான ஸுஹ்ரவார்தியைச் சந்தித்து அமைச்சரவையில் என்னுடைய இடத்தில் இரண்டு பட்டியல் வகுப்பு உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ளவும், இரண்டு சட்டமன்றச் செயலர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நியமிக்கவும் ஒப்புக்கொள்ள வைத்தேன்.

direct_action_day_bangladesh_islam_025. 1946ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி இடைக்கால அமைச்சரவையில் சேர்ந்தேன். ஒரு மாத காலத்திற்குப் பிறகு கல்கத்தாவிற்கு சென்றேன். ஸுஹ்ரவார்தி என்னிடம் கிழக்கு வங்காளத்தில் சில பகுதிகளில் மத மோதல்கள் காணப்படுவதாகவும், குறிப்பாக பட்டியல் வகுப்பினரான நாம சூத்திரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் கோபால்கன்ஜ் துணைப்பிரிவில் அதிகமாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஸுஹ்ரவார்தி என்னிடம் அந்த பகுதிகளுக்குச் சென்று முஸ்ஸீம்களுகளிடமும் நாமசூத்திரர்களிடமும் பேசுமாறு கூறினார்.

உண்மை என்னவென்றால் திருப்பி தாக்க ஆயுத்தமாக எல்லா ஏற்பாடுகளையும் நாமசூத்திரர்கள் செய்திருந்தினர். நான் ஒரு டஜன் பெரிய கூட்டங்களில் பேசினேன். அதன் விளைவாக நாமசூத்திரர்கள் திருப்பிதாக்கும் எண்ணத்தை கைவிட்டனர். பெரும் மதக்கலவரம் தடுக்கப்பட்டது.

6. இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு ஆங்கிலேய அரசு ஜூலை மூன்றாம் நாள் அறிக்கையின் மூலம் இந்தியப் பிரிவினைக்கான முன்மொழிவுகளை வெளியிட்டார்கள். இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் குறிப்பாக முஸ்ஸீம் அல்லாத பகுதிகள் அதிர்ந்தன.

உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டுமானால், நான் எப்போதுமே முஸ்ஸீம் லீக்கின் பாகிஸ்தானிய கோரிக்கையை பேரம் பேசுவதற்கான வாய்ப்பாகவே கருதி வந்தேன். நேர்மையுடன் சொல்லவேண்டுமானால் இந்தியா முழுவதிலும் மேல்வர்க்க இந்துக்களின் ஆதிக்கத்தனத்திற்கு எதிரான முஸ்லீமகளின் வருத்தங்கள் நியாயமானவை என்று எண்ணிய போதிலும், என்னுடைய கருத்துப்படி பாகிஸ்தானின் உருவாக்கம் இந்த மதப் பிரச்சினையை எப்போதும் தீர்க்காது என நம்பினேன்.

இந்தப் பிரிவினையின் தவிர்க்க முடியாத விளைவாக ஒட்டு மொத்த நாடும் தொடர்ந்த அல்லது முடிவேயிராத வறுமை, கல்வியின்மை, கூடவே கீழ்நிலையில் இருக்கும் இரு நாடுகளின் மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாவர்கள் என்று எண்ணினேன். கூடவே பாகிஸ்தான் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக பின் தங்கிய மற்றும் முன்னேற்றம் அடையாத நாடாகவும் மாறுவிடும் என நினைத்தேன்.

லாகூர் தீர்மானம்

7. இப்போது பாகிஸ்தானை ஒரு தூய்மையான இஸ்ஸாமிய ஷரியத் சட்டத்தின் வழியும் இஸ்ஸாமிய வழிமுறைகளின் மூலமாகவும் ஆட்சி செய்யப்படும் நாடாக மாற்ற செய்யப்படும் முயற்சிகள் பற்றி என்னுடைய கருத்துக்களைக் கண்டிப்பாகச் சொல்லவேண்டும். முஸ்ஸீம் லீக், லாகூரில் 1940 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி நிறைவேற்றபட்ட தீர்மானத்திற்குப் பிறகு முஸ்ஸீம் லீக் உறுப்பினர்கள் செய்யும் செயல்களோடு இது ஒத்திருக்கிறது. அந்த தீர்மானத்தில் சொல்லப்பட்ட பகுதிகள்,

. நிலபரப்பு ரீதியாக தொடர்ச்சியாக முஸ்ஸீம் பெரும்பான்மையாக இருக்கும் வடமேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தெளிவாகக் குறிக்கப்பட்டுத்  தேவைப்பட்டால் நிலப்பரப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டு, தனி நாடுகளாக சுதந்திரமாகவும் இறையாண்மையுடனும் அமையும்படி பிரிக்கப்படவேண்டும்.

. அமல்படுத்த கண்டிப்பாகத் தேவைப்படும் உறுதிகளை அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டு சிறுபான்மையினருக்கு அவர்களின் மத, பண்பாட்டு, அரசியல், நிர்வாக, மற்றும் இதர உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான தெளிவான ஷரத்துகள் அவர்களுடைய ஆலோசனையின் பேரில் தரப்படவேண்டும்.

மேற்கண்ட இரண்டு ஷரத்துகளின்படி,

அஅ. வடமேற்கு மற்றும் கிழக்கு முஸ்ஸீம் பகுதிகள் இரண்டு தனிநாடுகள் ஆக அமைக்கப்படும்.

அஆ. அந்த இரண்டு நாடுகளும் சுதந்திரமாகவும் இறையாண்மை உடனும் இருக்கும்

அஇ. அங்கு சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட்டு கூடவே வாழ்க்கையின் எல்லா நிலைகளில் இருக்கும் தேவைகள் மதிக்கப்படும்

jogendra-nath-mandal-and-dr_-ambedkarஅஈ. அரசியல் அமைப்பு சட்டத்தில் இதற்குத் தெளிவான ஷரத்துகளும், சிறுபான்மையினரின் ஆலோசனையும் அளிக்கப்படும்

என்பதை விளக்கின.

இது என்னுடைய நம்பிக்கையை இந்தத் தீர்மானத்தின் மேலும் முஸ்ஸீம் லீக் உறுப்பினர்கள் மேலும் உறுதிப்படுத்தியது. கூடவே முகம்மது அலி ஜின்னா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 தேதி அரசியல் நிர்ணைய சபை உறுப்பினர் என்ற வகையில் செய்த அறிவிப்பின் மூலம் இந்துக்களும் முஸ்ஸீம்களும் சரிசமாக மதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் அனைவரும் பாகிஸ்தானிகள் எனவும் உறுதிப்படுத்தினார்.

அப்போது மக்களை முழு உரிமை உடைய முஸ்ஸீம்கள் எனவும் இஸ்ஸாமிய நாட்டின் பாதுகாப்பிலும் முஸ்ஸீம்களின் பாதுகாப்பிலும் இருக்கும் திம்மிக்கள் எனவும் பிரிக்கவேண்டிய கேள்வியே ஏற்படவில்லை.

இந்த எல்லா வாக்குறுதிகளும் எல்லா நிலைகளும் உங்களுக்குத் தெரிந்தும் உங்களுடைய அனுமதியுடனும் முகம்மது அலி ஜின்னாவின் விருப்பங்களுக்கும் எதிராகவும் சிறுபான்மையினர் [பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள்] கொடுமைகளும் அவமானங்களுக்கும் உள்ளாகின்றனர்.

(கடிதம் கற்றுத் தரும் பாடம் தொடரும்….)

16 Replies to “கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-01”

  1. அன்புள்ள ராஜசங்கர்,

    இந்தக் கடிதம் ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம். இதனைத் தமிழில் மொழியாக்கம் செய்யும் தங்களது பணி போற்றுதலுக்குரியது.

    பாகிஸ்தானில் இந்துக்கள் இன்றளவும் தொடர்ந்து கொடுமைப்படுத்தப் பட்டு இன அழிப்பு செய்யப்படுவதன் சோக வரலாறு முழுமையாகப் பதிவு செய்யப் பட்டு கவனப் படுத்தப் படாமலே இருப்பது இன்னும் பெரிய சோகம். இந்த வார இந்தியா டுடே இதழில் பாகிஸ்தானிய இந்துக்களின் உரிமை இழப்புகள் மற்றும் சொல்லொணாத் துயரங்கள் பற்றி ஒரு விரிவான ரிப்போர்ட் வந்துள்ளது. அதனை எழுதியிருப்பவர் ஒரு இஸ்லாமியர். இதில் நேர்காணப் பட்ட இந்துக்கள் அனைவரும் பாகிஸ்தானில் தங்கள் எதிர்காலம் இருண்டுவிட்டதாகவும் வேறு நாடுகளுக்குப் போவது தான் கதி என்றும் சொல்லியுள்ளனர்.

    1947ல் மக்கள்தொகையில் 15 சதவீதமாக இருந்த இந்துக்கள் எண்ணிக்கை இன்று வெறும் 2 சதவீதமாகக் குறைந்துவிட்ட என்ற ஒரு புள்ளிவிவரமே போதும்.. இஸ்லாமிய ஆதிக்கம் வளரும் ஒவ்வொரு நாட்டிலும், பிரதேசத்திலும், மாவட்டத்திலும், ஊரிலும் இந்துக்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதற்கு நம் கண்ணெதிரே உள்ள பாடம்.

  2. .

    பாகிஸ்தானில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல தலைமுறைகளாக, பாரம்பரியமாக இந்துக்கள் வாழும் நாடுகளில் எல்லாம் இந்துக்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள்.

    உதாரணமாக:

    1. பாகிஸ்தான்

    1947ம் ஆண்டு இந்துக்களின் மக்கள்தொகை: 25 %
    2011ம் ஆண்டு இந்துக்களின் மக்கள்தொகை: 1 % (குத்து மதிப்பாக)

    ஆதாரம் இங்கே. (குத்து மதிப்பாக)

    2. பங்களாதேசம்

    1947ம் ஆண்டு இந்துக்களின் மக்கள்தொகை: 30 %
    2011ம் ஆண்டு இந்துக்களின் மக்கள்தொகை: 2 % (குத்து மதிப்பாக)

    ஆதாரம் இங்கே.

    3. கஷ்மீர்

    1947ம் ஆண்டு இந்துக்களின் மக்கள்தொகை: 20 %
    2011ம் ஆண்டு இந்துக்களின் மக்கள்தொகை: 1.3 % (குத்து மதிப்பாக)

    ஆதாரம் இங்கே.

    இவற்றைப் போலவே கீழ்க்கண்ட நாடுகளிலும் பாரம்பரிய இந்துக்கள் கிறுத்துவ, இசுலாமிய நேரடி மற்றும் மறைமுக இனப்படுகொலைகளால் அழிக்கப்படுகிறார்கள்:

    – ஸ்ரீலங்கா

    – தாய்லாந்து

    – கிழக்கு டைமுர்

    – இந்தோனேஷியா

    – மாலத்தீவுகள்

    இந்தியாவில் கூட இந்துக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகி விட்டனர் என்பதே என் அனுமானம்.

    மக்கள்தொகை கணக்கெடுப்பில் சர்ச்சுகள், மற்றும் ஜமாத்துகளின் ரெக்கார்டுகள் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் இந்த உண்மை வெளியே வரும் வாய்ப்பு இருக்கிறது.

    .

  3. கட்டுரை எழுதியவரோடு கை குலுக்க வேண்டும் .

  4. நண்பர் களிமிகு கணபதி,
    நீங்கள் கொடுத்துள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால், இவர்கள் அனைவரும் செத்து போனார்களா அல்லது மதம் மாறி போனார்களா?
    இந்து மக்கள்தொகை குறைவதற்கு மரணத்தை விட மதமாற்றமே காரணம் என்று நினைக்கிறேன். சரிதானா?
    நன்றி,
    சிங்கமுத்து

  5. //…..இந்து மக்கள்தொகை குறைவதற்கு மரணத்தை விட மதமாற்றமே காரணம் என்று நினைக்கிறேன். சரிதானா?….///

    Singamuthu,

    மதம் மாறாத இந்துக்ககள் சாகடிக்கப்பட்டார்கள். சாகடிக்கப்படுகிறார்கள்.

  6. //இந்து மக்கள்தொகை குறைவதற்கு மரணத்தை விட மதமாற்றமே காரணம் என்று நினைக்கிறேன். சரிதானா?-சிங்கமுத்து//

    குடும்பக் கட்டுப்பாடு எங்களுக்கு மதவிரோதமான செயல் என்று சொல்லி, எவ்விதப் பொறுப்புணர்வும் இன்றி வத வத வென்று முகமதியரும் கத்தோலிக்கரும் பெற்றுத் தள்ளுவதும் ஒரு காரணம். இவ்வளவுக்கும் முகமதிய, கத்தோலிக்க நாடுகள் பலவற்றில் குடும்பக் கட்டுப்பாடு அனுசரிக்கப்படுகிறது. இங்கேதான் மத சுதந்திரத்தில் தலையிடுவதில்லை என்று சொல்லி சிறுபான்மையினர் எது செய்தாலும் கண்டுகொள்ளாத நிலை உள்ளது. அரசின் குடும்பக் கட்டுப்பாடு விளம்பரங்களில் எப்போதும் ஹிந்து தம்பதிகளைத்தான் காட்டுவார்கள். ஹிந்துக்கள்தாம் பெருமளவில் குடும்பக் கட்டுபாடு செய்து கொள்கிறார்கள் என்ற போதிலும்! ஒரு விளம்பரத்திலாவது முகமதிய தம்பதியர் காட்டப்பட்டதில்லை!

    ஹிந்து சமூக நலனுக்கு துரோகமிழைத்தவர் ஜோகேந்திர நாத் மண்டல். முஸ்லிம் லீகின் போக்கிரித்தனங்கள் நன்கு தெரிந்திருந்தும் அதை ஆதரித்து ஹிந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நடைபெற வாய்ப்பளித்தவர். பின்னர் தன்னை நம்பி வந்த நாமதாரி ஹிந்துக்களை முகமதிய மத வெறியர்களிடம் சிக்கித் தவிக்கவிட்டுவிட்டுத் தான் மட்டும் தப்பியோடி ஹிந்துஸ்தானத்தில் தஞ்சமடைந்தவர். எந்த ஹிந்து சமூகத்துக்கு துரோகம் இழைத்தாரோ அதே ஹிந்து சமூக்கத்தில் எவ்வித சங்கடத்துக்கும் உள்ளாகாமல் 1968 வரை சொஸ்தமாக உயிர் வாழ்ந்து முடிந்து போனார். ஹிந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படாத வரை விரைவில் பாகிஸ்தான், பங்களா தேஷ், மலேசியா முதலான நாடுகளில் வாழும் ஹிந்துக்களுக்கு உள்ள அடிமை வாழ்வை ஹிந்துஸ்தானத்தில் வாழும் ஹிந்துக்களும் அனுபவிக்க நேரிடும்.
    மத அடிப்படையில் முகமதியர் நம் நாட்டைப் பிரித்த சமயத்தில் குஜராத், ராஜஸ்தான் மாநில் எல்லைப்புறங்களில், மதம் மாற்றப் பட்டு முகமதியராய் வாழ்ந்து வந்தவர்கள், இனி தாம் ஹிந்துஸ்தானப் பிரஜைகளாக வாழப் போவதால் தாய் மதம் திரும்பி ஹிந்துக்களாக வாழ விரும்பினர். உடனே வினோபா பாவேயை காந்தி அங்கெல்லம் அனுப்பி, ஹிந்துஸ்தானத்தின் பிரஜைகளாக வாழ வேண்டுமானால் ஹிந்துக்களாக எவரும் மதம் மாறத் தேவையில்லை என்று பிரசாரம் செய்ய வைத்தார்.
    -மலர்மன்னன்

  7. @மலர்மன்னன்
    நம் ஆட்க்கள் தான் நமக்கு எதிரி( எப்பவும்).
    //உடனே வினோபா பாவேயை காந்தி அங்கெல்லம் அனுப்பி, ஹிந்துஸ்தானத்தின் பிரஜைகளாக வாழ வேண்டுமானால் ஹிந்துக்களாக எவரும் மதம் மாறத் தேவையில்லை என்று பிரசாரம் செய்ய வைத்தார்.//

  8. //… ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட முஸ்லீம் அரசியல் தலைவர்களை நம்பும் இந்துக்களுக்கு….///

    என்று முன்னுரையில் இருக்கிறது. மூன்று கேள்விகள்:

    1. தன் மதம், தன் தெய்வம், தன் புனித நூல் தவிர மற்றவை அழிய வேண்டும் என்று போதிக்கிற இறையியல் ஆக்கிரமிப்புத் தன்மை கொண்டதா அல்லது பன்மைதன்மை கொண்டதா ?

    2. மாறுபடும் மதங்களை அழிக்க வேண்டும் என்ற இறையியலை ஏற்றுக்கொண்ட, நம்புகிற அரசியல் தலைவர்களில் ஆக்கிரமிப்பு எண்ணம்/செயல்பாடு இல்லாதவர்கள் உண்டா ?

    3. அப்படி யாரேனும் இருந்திருந்தால் அவர்கள் பற்றிச் சொல்ல இயலுமா ?

  9. //குடும்பக் கட்டுப்பாடு எங்களுக்கு மதவிரோதமான செயல் என்று சொல்லி, எவ்விதப் பொறுப்புணர்வும் இன்றி வத வத வென்று முகமதியரும் கத்தோலிக்கரும் பெற்றுத் தள்ளுவதும் ஒரு காரணம்.//

    ஐயா,
    அப்போ, இந்துக்கள் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ள கூடாதா? குடும்ப கட்டுப்பாடு, நாட்டுக்கு எவ்வளவு நல்லதோ அதே போல் வீட்டுக்கும் நல்லதே. அவர்கள் பன்றிகளை போல பல குட்டிகள் போட்டாலும், அவர்கள் முன்னேறுவதில்லை (எல்லாம் போருக்கிகலாகதான் இருக்கிறார்கள்). இப்போதோ நம் மக்கள் ஒன்றிரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டே திண்டாடுறார்கள். தீவிரவாதத்திலும் நமக்கு உடன்பாடில்லை, கத்தோலிக்க ஸ்தாபனம் போன்ற செல்வசெழிப்பும் இல்லை. என்ன செய்ய முடியும்?

    //இனி தாம் ஹிந்துஸ்தானப் பிரஜைகளாக வாழப் போவதால் தாய் மதம் திரும்பி ஹிந்துக்களாக வாழ விரும்பினர். உடனே வினோபா பாவேயை காந்தி அங்கெல்லம் அனுப்பி, ஹிந்துஸ்தானத்தின் பிரஜைகளாக வாழ வேண்டுமானால் ஹிந்துக்களாக எவரும் மதம் மாறத் தேவையில்லை என்று பிரசாரம் செய்ய வைத்தார்.//
    உண்மையாக மாற விரும்புபவர் இதனால் மாறாமல் இருக்க மாட்டாரே…
    மேலும், மனதில் உண்மை இல்லாமல், கூட்டத்தில் கோவிந்தா போடும் ஒருவன் மதம் மாறி வருவதை விட மாறாமல் இருப்பதே நமக்கு நல்லது, என்று காந்தி அடிகள் கருதி இருக்கலாம்.

    //மதம் மாறாத இந்துக்ககள் சாகடிக்கப்பட்டார்கள். சாகடிக்கப்படுகிறார்கள்//

    இந்தியாவில் காஷ்மீரில் தான் இப்படி நடக்கிறது என்று நினைக்கிறேன். இந்து சேவை மையங்கள் உண்மையில் பணியாற்ற வேண்டிய பகுதி காஷ்மீர். அது இந்துக்களுக்கு செய்யப்படும் சேவையல்ல, இந்தியாவுக்கு செய்யப்படும் சேவை.

    இங்கே விழிப்புணர்வு என்று பலரும் சொல்வது என்னவென்று எனக்கு இன்னும் புரியவில்லை. It is too Abstract for anyone to act on it.

    Thanks,
    Singamuthu

  10. நண்பர் சிங்கமுத்து,

    விழிப்புணர்வு !!!, பெரும்மாண்மையாக இருக்கும் போதே, மத்தவன்களை , சாம,தான,பேத,தண்ட — முறையில் ஹிந்துவாக மாற்றவேண்டும். அப்படி இல்லையின்னா. சிங்கமுத்துவோட கொள்ளுப்பேத்தி, ஆயிஷா என்று பெயர் வைத்துக்கொண்டு புர்கா போட்டுக்கொண்டு இருக்கும்…… அது நமக்கு வேண்டுமா?

  11. //அவர்கள் பன்றிகளை போல பல குட்டிகள் போட்டாலும், அவர்கள் முன்னேறுவதில்லை (எல்லாம் போருக்கிகலாகதான் இருக்கிறார்கள்). – ஸ்ரீ சிங்கமுத்து//

    18 வயதான அனைவருக்கும் வாக்குரிமை என்று எண்ணிக்கை அடிப்படையில் அதிகார வாய்ப்பு வந்துவிட்ட பிறகு சிறுபான்மையினர் எண்ணிக்கை அதிகரிப்பு கவலை தருவதாகவே உள்ளது அவர்களில் பலர் . கல்வியறிவு பெறாமலும் வறுமையில் ஆழ்ந்தும் இருப்பின் இன்னும் ஆபத்துதான்! நமது பாரம்பரிய கலாசாரமும், மரபும், வழிபாட்டு முறையில் பரந்த மனப்பான்மையும் நமது நாட்டில் நிலைத்திருக்க வேண்டுமானால் ஹிந்துக்களின் எண்ணிக்கையை சிறுபான்மையினர் எண்ணிக்கை மீறாமல் இருக்க வேண்டும். பாரசிகம் தொடங்கி தென் கிழக்கு ஆசியாவரை பரவியிருந்த ஹிந்து சமயமும் கலாசாரமும் இன்று எங்கே போயின என்று யோசித்தால் சகிப்புத்தன்மையற்ற மாற்று சமயங்களைச் சேர்ந்தோர் எண்ணிக்கை பெருகுவதால் அதன் விளைவு என்னவாகும் என்பது விளங்கும். மேலும், மாற்று சமயத்தவர் எண்ணிக்கை அதிகரித்தல் தேசம் மேலும் பிளவு பட வழிசெய்யும். தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்தாகவும் ஆகும் என்பதை தினமும் வரும் செய்திகளிலிருந்தே அறியலாம்.

    //உண்மையாக மாற விரும்புபவர் இதனால் மாறாமல் இருக்க மாட்டாரே…
    மேலும், மனதில் உண்மை இல்லாமல், கூட்டத்தில் கோவிந்தா போடும் ஒருவன் மதம் மாறி வருவதை விட மாறாமல் இருப்பதே நமக்கு நல்லது, என்று காந்தி அடிகள் கருதி இருக்கலாம்.- ஸ்ரீ சிங்கமுத்து//

    நீங்கள் காந்திக்கு benefit of doubt கொடுப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் அவரது செயல்பாடுகளையும் கருத்துகளையும் ஆராய்ந்தால் அவர் ஆளை அனுப்பிப் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று யோசிக்க வேண்டியிருக்கும்.
    நான் குறிப்பிட்ட மக்கள் பாமரர்கள். ஓர் இயல்பான பொது அறிவின் அடிப்படையில்தான் தாய் மதம் திரும்ப விரும்பிபினரேயன்றி ஹிந்து சமயச் சிறப்புகளை உணர்ந்த மையால் அல்ல. முகமதியம்தான் சிறந்தது என்ற காரணத்திற்காகவும் அவர்கள் முகமதியராக இல்லை. ஏதோ ஒரு தலைமுறையில் மதம் மாற்றப்பட்டு யந்திர கதியில் முகமதியராக நீடிப்பவர்கள். அவர்கள் தொடர்ந்து முகமதியராக இன்றும் நீடிப்பதால் அவர்களூக்கும் எல்லைக் கோட்டுக்கு மறுபுறம் உள்ள முகமதிய பாகிஸ்தானியருக்குமிடையே கொள்வினை கொடுப்பினை நடக்கிறது. இது நம் தேசப் பாதுகாப்பிற்கு நல்லதல்ல.

    இந்த விஷயங்களையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு பிறருக்கும் சொல்வதுதுதான் விழிப்புணர்வு என்பது!
    -மலர்மன்னன்

  12. ஐயா மலர்மன்னன் அவர்களே,

    அவர்களைப்பற்றி தெரிந்தால் மட்டும் போதாது……… செயலில் இறங்கவேண்டும்

  13. //அவர்களைப்பற்றி தெரிந்தால் மட்டும் போதாது……… செயலில் இறங்கவேண்டும்- s//
    தெரிந்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதே செய்லில் இறங்குவது தான். வேறு எவ்வாறெல்லாம் செயல்படுவது என்று உங்களைப் போன்றவர்கள்தான் சொல்ல வேண்டும். ஸ்ரீ ராம கோபாலன் என்னை ‘one man army’ என்று அழைப்பது வழக்கம். ஆனால் இப்போது தெருவில் இறங்கி வேலை செய்ய உடல் ஒத்துழைப்பதில்லை.
    -மலர்மன்னன்

  14. //இந்தியாவில் கூட இந்துக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகி விட்டனர் என்பதே என் அனுமானம்// அப்படியே புள்ளிவிபரங்கள் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டாலும் ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகள் சிறுபான்மை ஜால்ராவுக்காக அதை வெளியிடமட்டார்கள். இந்த அரசியல் வாதிகள் இந்துக்களை அடியோடு இந்தியாவில் இருந்து அகற்றும் வரை ஓயமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *