மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி – ஓர் அலசல்.

vote-powerஜனநாயகத்தில் தேர்தல்கள் வகிக்கும் பேரிடத்தை உணர, அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளைக் காண வேண்டும். மக்களின் அதிருப்தி ஓர் அலைபோல சுழன்று எழுந்தது. இத்தேர்தலில் வெளியேற்றப்பட்ட ஆட்சியாளர்கள் மூலமாக வெளிப்பட்டது. மக்கள் தாங்கள் விரும்பும் ஆட்சியை அமைப்பதும் விரும்பாத ஆட்சியைத் துரத்துவதும், மக்களாட்சியின் மாண்பு. எந்த ஆயுதப் பிரயோகமும் இன்றி, வாக்குப்பதிவாலேயே இதைச் சாதிப்பதுதான் ஜனநாயகத்தின் மகிமை. அந்த வகையில் அண்மைய தேர்தல்கள் பல அதிரடியான முடிவுகளை வழங்கி நமது ஜனநாயக நெறிமுறைகளுக்கு மகுடம் சூட்டி உள்ளன.

ஆறு கட்டமாக நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் தென் மாநிலங்களான தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, வடகிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், அசாம் ஆகியவை பங்கேற்றன. புவியியல் ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல்வேறுபட்ட மாறுபாடுகளை உடைய இம்மாநிலங்களில் கிடைத்துள்ள முடிவுகள், நமது மக்களின் பக்குவத்தன்மையை பறைசாற்றுவனவாக அமைந்துள்ளன. குறிப்பாக, ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்கள், அமைதிப்புரட்சி என்று சொல்லத்தக்க அளவில் சத்தமின்றி ஆட்சி மாற்றத்தைக் கண்டிருக்கின்றன. ஊழலுக்கு எதிரான தார்மிகக் கோபத்தையும் நிர்வாகச் சீர்கேட்டிற்கு எதிரான தங்கள் முதிர்ச்சியையும் மக்கள் இத்தேர்தலில் நிரூபித்துள்ளனர்.

இத்தேர்தல் ஒட்டுமொத்த தேசத்திற்கும் கூறுவது என்ன என்ற கேள்வி எழுகிறது. இனிவரும் சட்டசபைத் தேர்தல்களும் நாடாளுமன்றத் தேர்தலும் எந்தத் திசையில் இருக்கும் என்பதை அறுதியிடுவதாக இத்தேர்தலைக் காண முடிகிறது. இத்தேர்தல் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு வகையில் பாடம் கற்பித்திருக்கிறது. மக்களை மிகவும் குறைவாக எடைபோடக் கூடாது என்பதும் தெளிவாகி இருக்கிறது.
மேற்குவங்கம் அளித்த அதிரடித் தீர்ப்பு

mamata-banerjee

இந்தத் தேர்தல்களில் மிக முக்கியமான தீர்ப்பை அளித்திருப்பவர்கள் மேற்கு வங்க மாநில மக்கள். கடந்த 34 ஆண்டுகளாக ‘ஜனநாயகம்’ என்ற போர்வையில் இடதுசாரிகள் நடத்திய காட்டு ராஜாங்கத்திற்கு வங்க மக்கள் மம்தா பானர்ஜி வடிவில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். ஜனதா கட்சி உதவியுடன் 1977-இல் மேற்கு வங்க ஆட்சியைக் கைப்பற்றிய மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள், நிலச்சீர்திருத்தம் என்ற பெயரில் கட்சிக்காரகளுக்கு அளித்த நிலம் இதுவரையிலும் அவர்களது வாக்கு வங்கிக்குக் காரணமாக இருந்து வந்தது. போதாக்குறைக்கு கம்யூனிஸ்ட் குண்டர் படையைக் கொண்டு, தங்களை எதிர்ப்பவர்களே இல்லாமல் செய்துவந்தது இடதுசாரிகளின் ஆட்சி.

இவர்களது தொடர் ஆட்சியில் மாநிலத்தின் தொழில்வளம் முற்றிலும் சீர்குலைந்தது. மக்களின் அடிப்படை வசதிகளும் முன்னேறவில்லை. நாட்டின் மிகவும் மோசமான நகரமாக கொல்கத்தா மாறியதுதான் இடதுசாரிகளின் சாதனை. இவை அனைத்தையும் விட, வங்கதேசத்திலிருந்து ஊடுருவிய இஸ்லாமியர்களை வாக்குவங்கிக் கனவில் குடிமக்களாக்கி லாபம் கண்டுவந்தது இடது முன்னணி. இதற்கு எதிராக, போராட வலுவற்ற நிலையில் காங்கிரஸ் தத்தளித்தது. இந்நிலையில்தான் உதயமானார், எளிமையின் திருவுருவான மமதா பானர்ஜி.

மம்தாவின் பத்து ஆண்டுகாலத் தொடர் போராட்டங்களால் இடது முன்னணியின் சுயரூபம் அம்பலப்பட்டது. சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் இடதுசாரி அரசு நிகழ்த்திய அதிகார அத்துமீறல்களை எதிர்த்துக் கிளந்து எழுந்த மக்கள், மாவோயிஸ்ட் உதவியுடன் ஆயுதம் ஏந்திப் போராடினர். மம்தாவின் ஆதரவு அவர்களை மேலும் எழுச்சி பெறவைத்தது. பொதுவுடைமை பேசும் கட்சியே மக்களின் வாழ்வாதாரமான நிலத்தைப் பிடுங்கி பெருமுதலாளிகளுக்கு தாரை வார்த்ததை மமதா மிகச் சரியாகப் பிரசாரம் செய்தார். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருப்பதால் மமதாவை மார்க்சிஸ்ட்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஒருபுறம் மாவோயிஸ்ட் ஆதரவு; மறுபுறம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற வியூகத்தில் இயங்கிய மம்தாவின் தலைமையை அம்மாநில மக்கள் ஆரவாரமாக வரவேற்றனர். அவரது அப்பழுக்கற்ற தனிப்பட்ட வாழ்க்கையும் அவரது மதிப்பை உயர்த்தியது. அதன் விளைவே மாபெரும் வெற்றியை மமதாவுக்குக் கிடைக்கச் செய்திருக்கிறது. மொத்த இடங்களில் (294) திரிணாமூல் காங்கிரஸ் மட்டுமே 184 இடங்களைக் கைப்பற்றி இடதுசாரிகளை ஓரம்கட்டியது. அதன் கூட்டாளியான காங்கிரஸ் 42 இடங்களில் வென்றது. மாநிலத்தை இத்தனை ஆண்டுகளாக ஆண்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கு 40 இடங்களே கிடைத்தன. அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 20 இடங்கள் கிடைத்தன. இத்தகைய வரலாறு காணாத தோல்வியை ஜீரணிக்க முடியாமல் திக்பிரமை அடைந்த நிலையில் தவிக்கின்றனர் இடதுசாரிகள்.

பாரதீய ஜனதாவை அரசியல் அரங்கிலிருந்து ஓரங்கட்ட காங்கிரசுடன் குலாவியதன் பயனையே இடதுசாரிகள் இப்போது அனுபவிக்கின்றனர். தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்ட இடதுசாரிகளின் தோல்வியால், இருகட்சி ஆட்சிமுறை நோக்கி இந்திய அரசியல் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் பாஜகவின் தோல்வி எதிர்பார்க்கப்பட்டதே. இரு மலைகளிடையே மோதல் நடைபெற்ற சூழலில் இடையில் அகப்பட்ட எலி போலத்தான் அங்கு பாஜக காட்சி தந்தது. புத்ததேவை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்துவிட்ட மக்களுக்கு, பாஜகவை திரும்பிப் பார்க்கவும் நேரமில்லை. எனினும் மாநிலம் முழுவதும் பரவலாகப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். பல தொகுதிகளில் வாக்குகளைப் பிரித்த பாஜக இரு பெரிய அணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்காலத்தில் காங்கிரசுடன் மமதாவின் உறவு கசக்கும்போது, இந்த அனுபவம் பாஜகவுக்கு நிச்சயமாக உதவும். மார்க்சிஸ்ட்களுக்கு எதிரான பாஜகவின் பிரசாரம் மமதா அதிக இடங்களில் வெல்ல உதவியிருக்கிறது என்றும் சொல்லலாம்.

அசாம் மக்களின் அனுபவத் தீர்ப்பு

tarun-gogoi

எந்த ஒரு தேர்தலிலும் ஆட்சியில் உள்ள கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை வெளிப்படவே செய்யும். மக்களின் அதிருப்தியால் ஆட்சி பறிபோகாமல் இருக்க வேண்டுமானால், ஆட்சியாளர்கள் நல்லாட்சி நடத்தியாக வேண்டும். அதுவே ஜனநாயகம் கொண்டுள்ள அதிகாரம். நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் நான்கில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய மக்கள், அசாமில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியே தொடரும் வகையில் வாக்களித்துள்ளனர். இதன் காரணம் என்ன?

எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லாத இடத்தில் ஜனநாயகம் வெற்றிகரமாக இயங்க முடியாது. மேற்கு வங்கம் இத்தனைகாலம் பட்ட கஷ்டமே இதற்கு உதாரணம். அசாமில் காங்கிரசுக்கு எதிரான கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படத் தவறியதன் பலனே, அங்கு ‘தருண் கோகோய்’ மீண்டும் முதல்வராக வழிவகுத்துள்ளது. அங்கு முக்கிய எதிர்க்கட்சிகளான அசாம் கனபரிஷத், அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலாந்து மக்கள் முன்னணி போன்றவை தனித்தனியே இயங்கின. பாஜகவும் கூட்டணி முயற்சிகள் பலிக்காததால், தனித்தே களம் கண்டது. எதிர்க்கட்சிகள் சிதறுண்ட நிலையில், நிலையான ஆட்சியை விரும்பிய மக்கள் காங்கிரசுக்கே வேறு வழியின்றி ஆதரவளித்தனர். மாநில முதல்வர் தருண் கோகோயின் தனிப்பட்ட தொடர்புகளும் குணாதிசயங்களும் இவ்வெற்றிக்கு வித்திட்டன.

மாநிலத்தின் மொத்த தொகுதிகளில் (126) காங்கிரஸ் மட்டும் 78 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இது அக்கட்சிக்குத் தொடரும் மூன்றாவது வெற்றி. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் அகந்தையாகச் செயல்பட்ட அசாம் கனபரிஷத், அசாம் ஐக்கிய முன்னணி கட்சிகள் தலா 10, 18 இடங்களை வென்றன. போடோலாந்து முன்னணி தனது பிராந்தியத்தில் 12 இடங்களை வென்றது. மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிக் கனவுடன் போட்டியிட்ட பாஜக, 5 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இது சென்ற தேர்தலை விடவே 5 இடங்கள் குறைவாகும்.

பிராந்தியக் கட்சிகளை அரவணைத்துச் சென்றிருந்தால் பாஜகவுக்கு இத்தகைய தோல்வி ஏற்பட்டிருக்காது. இத்தேர்தலில் 23 சட்டசபைத் தொகுதிகளில் பலமுனைப் போட்டியிலும்கூட பாஜக இரண்டாமிடம் வந்திருக்கிறது. அதுவும் 5000 முதல் 10000 வரையிலான வாக்கு வித்தியாசத்த்தில்! பிற எதிர்க்கட்சிகளும் கூட இதே நிலையில் 40 தொகுதிகளில் தோற்றுள்ளன. இக்கட்சிகள் இணைந்து செயல்பட்டிருந்தால் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கும். மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும். அந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவற விட்டுவிட்டன.

மேற்கு வங்கம் போலவே அசாமிலும் சிறுபான்மையினரான இஸ்லாமியரின் வாக்குகள் தேர்தலில் பெரும்பங்கு வகித்தன. அதுவும், பாஜகவுடன் பிற கட்சிகள் நெருங்க அஞ்சியதற்கான காரணம். பாஜக மீதான இந்துத்துவ பிம்பம் மறையாத வரையில் சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர்வது மட்டுமல்லாது ‘மதசார்பின்மை’ பேசும் கட்சிகளை அரவணைத்துச் செல்வதும் பாஜகவுக்கு இயலாததாகவே இருக்கும். இதை உணர்ந்து மாற்று அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதே பாஜவுக்கு இப்போதைய அவசியப் பணியாகும்.

ஜனநாயகத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றாலும் தோல்வியே. தோற்றவர் பெற்ற வாக்குகள் எந்தக் கவனத்தையும் பெறுவதில்லை. எனவே வெற்றி பெறுவது ஒன்றே குறியாகக் கொண்டு செயல்படுவதும் அவசியம். அசாமில் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் அளித்துள்ள பாடம் இது.
கேரளா அளித்த குழப்பமான தீர்ப்பு

achudanandan-vs-rahul

கேரளாவில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியாளர்களை மாற்றுவதை அம்மாநில மக்கள் வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். ஊழல் நடைபெறுவதைத் தடுக்கவும், அதிகார மமதை தலைக்கேறாமல் தவிர்க்கவும், மலையாள மக்கள் தெளிவாக வாக்களிப்பது வழக்கம். ஆனால், இம்முறை அம்மாநில மக்கள் குழப்பமான தேர்தல் முடிவையே தந்துள்ளனர். இதற்கு, காங்கிரஸ் நடத்திய நாடகங்களால் மக்கள் வெறுப்புற்றதே காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தின் பொது அச்சுதானந்தனை கிண்டல் செய்யும் விதமாக அவரது வயதைக் குறித்து காங்கிரஸ் சார்பில் பிரசாரம் செய்த ராகுலின் முதிர்ச்சியற்ற பேச்சும் காங்கிரஸ் பெற்றிருக்க வேண்டிய இடங்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 86 வயதான கருணாநிதியுடன் தமிழகத்தில் கூட்டணி வைத்துக்கொண்டே, 87 வயதான அச்சுதானந்தனை நிராகரிக்குமாறு ராகுல் பேசியது சிறுபிள்ளைத்தனமானது. உண்மையில் ராகுலின் பிரசாரமே இடது முன்னணிக்கு இறுதிநேர ஆசுவாசமாக அமைந்தது.

அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சி அகற்றப்படுவதற்கான அனைத்து காரணங்களுடன்தான் தேர்தலைச் சந்தித்தது. தனிப்பட்ட விதத்தில் அச்சுதானந்தன் நேர்மையானவர்; கண்டிப்பானவர் என்ற போதிலும், மார்க்சிஸ்ட்களின் காட்டு தர்பாரால், மாநிலம், கடந்த ஐந்தாண்டுகளாக பலமுறை சிரமங்களைச் சந்தித்தது. பாஜகவை மட்டம் தட்டுவதற்காக அப்துல் நாசர் மதானி போன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் குலாவவும் இடது முன்னணி தயங்கவில்லை. அவரது என்.டி.எப். கட்சியினர் நடத்திய அராஜகங்களால், மதானி ஆதரவு மார்க்சிஸ்டுக்கு எதிர்வினையானது. கல்லூரிப் பேராசிரியரின் கையை வெட்டிய மதானி கட்சியை ஆதரித்த மார்க்சிஸ்ட், பிற்பாடு என்ன விளக்கம் அளித்தபோதும் மலையாள மக்கள் ஏற்கத் தயாராகவில்லை.

மார்க்சிஸ்ட் செயலாளர் பினாரயி விஜயனுக்கும் முதல்வருக்கும் நடந்த பனிப்போரில் கட்சியின் மானம் கப்பலேறியது. மறுமுனையில் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியை வாக்குகளாக்கும் திறனுடன் உம்மன் சாண்டி தலைமையில் காங்கிரஸ் அணிவகுத்தது.

கேரளா வித்யாசமான மாநிலம். அங்கு சிறுபான்மையினரின் வாக்குகளே ஒவ்வொரு தேர்தலையும் தீர்மானிக்கின்றன. சரிபாதிக்கும் மேலாக வளர்ந்து நிற்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் ஆதரவு இல்லாமல் கேரளாவில் எந்தத் தொகுதியிலும் வெல்ல முடியாது. இதை உணர்ந்த காங்கிரஸ் ‘மதசார்பின்மை’ பேசியபடியே, முஸ்லிம் லீகுடனும், கிறிஸ்தவ ஆதிக்கம் மிகுந்த கேரள காங்கிரஸ் (மானி) கட்சியுடனும் கூட்டணி கண்டது.

இந்தக் களத்தில் இருபெரும் அணிகளுக்கிடையே பாஜக தனித்து களம் கண்டது. நாயர் சங்கம், ஈழவர் சங்கம் உள்ளிட்ட சமுதாய அமைப்புகளின் ஆதரவைப் பெற பாஜக மேற்கொண்ட முயற்சிக்கு பெரும்பலன் கிடைக்கவில்லை. ஆயினும் எதிர்காலத் தேர்தல்களில் அந்த அனுபவம் பாஜகவுக்கு பயன்படலாம். மேற்குவங்கம், அசாம், தமிழகம் போலவே இங்கும் பாஜக வலுவான கட்சியாக இல்லை. எனினும் இம்முறை எப்படியும் சட்டசபையில் நுழைந்துவிடுவது என்ற தீர்மானத்துடன் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. கேரளாவின் வலுவான இந்து அமைப்பான இந்து ஐக்கிய வேதி பாஜகவுக்கு ஆதரவளித்தது.

இவ்வாறு நடந்த மும்முனைப் போட்டியில், ஒட்டுமொத்த இடங்களில் (140) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 72 இடங்களில் வென்றது; எதிர்த்தரப்பில் இடது ஜனநாயக முன்னணி 68 இடங்களில் வென்று ஆட்சியைப் பறிகொடுத்தது. மிகச் சிறிய வித்தியாசத்தில் காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ள வெற்றி, அதன் ஆட்சி உறுதிப்பாட்டைக் கேள்விக்குறி ஆக்கி இருக்கிறது. பாஜக இம்முறையும் தோல்வியுற்றிருக்கிறது. காங்கிரஸ் கூட்டணியில் வென்றுள்ள முஸ்லிம்லீக் 20 உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பி இருப்பது அம்மாநில மக்கள் விகிதாசாரத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை வெளிப்படுத்துகிறது.

இங்கு, பாஜக வெல்லாத போதிலும் அக்கட்சி பல தொகுதிகளில் காங்கிரசின் தோல்விக்குக் காரணமாகியுள்ளது. கடைசி நேரத்தில் இடதுசாரிகள் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சிறுபான்மையினரின் ஆதிக்கம் குறித்து வெளிப்படையாகப் பிரசாரம் செய்தனர். அதன் விளைவாக காங்கிரஸ் கூட்டணியின் பல வேட்பாளர்களை தோற்கடிக்க அச்சுதானந்தன் மீது நம்பிக்கை வைத்து பாஜக ஆதரவாளர்கள் வாக்களித்தனர். அதன் காரணமாகவே, நூலிழை வெற்றியை காங்கிரஸ் அடைய நேர்ந்துள்ளது. தவிர 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இரு தரப்பு வேட்பாளர்களின் வெற்றி- தோல்விகளை நிர்ணயிக்கும் விதமாக பாஜக வேட்பாளர்கள் வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

காசர்கோடு, மஞ்சேஸ்வரம், நேமம் ஆகிய தொகுதிகளில் வெற்றியை மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் இழந்த பாஜக, 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 10000-ற்கு அதிகமான வாக்குகளைப் பெற்றது. கடந்த தேர்தல்களை விட இம்முறை அதிகமான மக்களின் நம்பகத் தன்மையை பாஜக பெற்றுள்ளது என்று கூறி இருக்கிறார் மாநில பாஜக தலைவர் முரளிதரன்.
பாண்டிச்சேரி அளித்த அதிசயத் தீர்ப்பு

rengasamy-quits-congressமிகச் சிறிய யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி, ஒரு நகராட்சிக்கே உரித்தான மக்கள்தொகையுடன் இருந்தாலும், அரசியல்ரீதியாக தனி ஆளுமை கொண்டதாக உள்ளது. பிரத்யேகக் காரணங்களுக்காக தனி மாநிலமாகவே பராமரிக்கப்படும் இங்கு திமுக, காங்கிரஸ் கட்சிகளே மாறி மாறி ஆண்டு வந்துள்ளன. இறுதியாக ஆட்சி செய்தது வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி. சிறு மாநிலமாக இருந்தபோதும் அரசியல் அபிலாஷைகளில் இங்குள்ளவர்கள் சளைத்தவர்கள் கிடையாது. தமிழகத்தில் இருக்கும் கோஷ்டிகளைவிட அதிகமான கோஷ்டிகள் இங்குள்ள காங்கிரசில் உண்டு.

முன்னாள் முதல்வர் ரங்கசாமி காங்கிரசிலிருந்து விலகி அமைத்த என்.ஆர்.காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி கண்டது. காற்று வீசும் திசையில் கூட்டணி அமைத்ததன் பலனை அவர் அறுவடை செய்திருக்கிறார். அவரது எளிமை, இனிய சுபாவம், கூட்டணி வலிமை, தமிழகத்தின் தாக்கம் ஆகியவை காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி இருக்கின்றன.. ஒட்டுமொத்த இடங்களில் (30), என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் திமுக 2 இடங்களிலும் வென்றுள்ளன. ஒருகாலத்தில் மாநிலத்தை ஆண்ட திமுக இத்தேர்தலில் படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது. ஜாதிக் கணக்குடன் களம் கண்ட பாமகவும் படம் கற்றிருக்கிறது.

மக்கள் அளித்துள்ள அதிசயத் தீர்ப்பால், கட்சி துவங்கி இரண்டு மாதங்களில் முதல்வராகியுள்ள ரங்கசாமி, இப்போதே அதிமுகவுடன் கூட்டணியை முறிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார். ஆயாராம்-கயாராம் அரசியலில் அனுபவம் வாய்ந்த பாண்டிச்சேரியில் ரங்கசாமி நிலைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இங்கும் பாஜக பொருட்படுத்தத் தக்க அளவில் செயல்படவில்லை. தமிழக அரசியலின் தாக்கம் எதிரொலித்த இங்கு, அதிகப்படியான மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

தமிழகம் அளித்த தார்மிகத் தீர்ப்பு

karuna-jaya

பிற மாநிலங்களில் மக்கள் அளித்த தீர்ப்புகளில் இல்லாத சிறப்பு, தமிழக மக்களின் தீர்ப்பில் காணக் கிடைக்கிறது. ஊழலின் ஒட்டுமொத்த வடிவாகவும் பணபலத்தின் உச்சபட்ச உதாரணமாகவும், அதிகார பலத்தின் ஆணவ வடிவாகவும் திகழ்ந்த திமுக-காங்கிரஸ் கூட்டணியை அதிமுக கூட்டணி வென்றிருப்பது மக்களின் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன், நாட்டிற்கு ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 209 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 9 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. அது தனது வாக்கு சதவிகிதத்தை 2.1 லிருந்து 3.1 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 10000-க்கும் அதிகமான வாக்குகளும், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 5000-ற்கும் அதிகமான வாக்குகளையும் பாஜக வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.

குறிப்பாக குமரி மாவட்டத்திலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பாஜக பெற்றுள்ள வாக்குகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. குமரி மாவட்டத்தில் மட்டும் கிள்ளியூர் தொகுதியில் இரண்டாமிடம் வந்த பாஜக (வேட்பாளர் சந்திரகுமார்), பிற தொகுதிகளில் பெரும்பாலும் மூன்றாமிடமே பெற்றது. எனினும் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியாளர் பெற்ற வித்தியாசத்தை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளது. பாஜகவின் வாக்குவங்கி இவ்வாறு தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது எதிர்காலக் கண்ணோட்டத்தில் அக்கட்சிக்கு உதவிகரமாக இருக்கும்.

காங்கிரஸ் இத்தேர்தலில் ஐந்து தொகுதிகளில் வென்றது. இதில் நான்கு தொகுதிகளில் பாஜக பெற்ற பெருவாரியான வாக்குகளே காங்கிரஸ் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளதைக் காண முடிகிறது. குமரி மாவட்டம், மாநிலத்தில் நிலவிய அரசியல் அலையால் பாதிக்கப்படாமல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவளித்ததற்கு சிறுபான்மையினரின் விழிப்புணர்வே காரணம். கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் மிகுந்த அம்மாவட்டத்தில், சர்ச்களின் உத்தரவுகள் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பாஜகவைத் தோற்கடிக்க வல்ல வேட்பாளரை ஆதரிப்பது என்பது அங்கு பல தேர்தல்களில் சர்ச் கடைபிடிக்கும் உத்தியாக இருந்துவருகிறது.

இருப்பினும், குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவின் வாக்குவங்கி கூடியே வருகிறது. இம்முறையும் ஒவ்வொரு தொகுதியிலும் சென்ற தேர்தலில் பெற்றதைவிட 10000-ற்கும் அதிகமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தான் போட்டியிட்ட நாகர்கோவில் தொகுதியில் மூன்றாமிடம் பெற்றாலும், சென்ற தேர்தலைவிட, 22871 வாக்குகள் அதிகம் பெற்றார்.

“பாஜகவின் பிரசாரம் கருணாநிதிக்கு எதிராக கடுமையாக இருந்தது. அதன் பலன் ஜெயலலிதாவுக்கே கிடைத்தது. இதுவும் எதிர்பார்க்கக்கூடியதே. வெல்லும் தகுதி கொண்ட எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து திமுகவுக்கு பாடம் கற்பிக்க நினைத்த மக்களுக்கு பாஜக ஒரு பொருட்டாகப்படவில்லை. பாஜக, ஜெயலலிதாவை எதிர்த்தும் பிரசாரம் செய்திருக்க வேண்டும்,” என்கிறார் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர்.சேகர்.

இத்தோல்விக்காக பாஜக வருந்த வேண்டிய அவசியம் இல்லை. மதிமுக போல் களத்திலிருந்து பின்வாங்காமல், பலனைக் கருதாமல் போராடிய பாஜகவுக்கு வருங்காலத்தில் இதற்கான அறுவடைகள் கிடைக்கலாம். தனித்து நின்று போராட பெரிய கட்சிகளே தயங்கும் நிலையில் பாஜக பெற்றுள்ள ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. தேர்தல் பற்றிய சிந்தனையின்றி, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து தொடர்ந்து உழைத்துவந்தால், பாஜக மீதும் மக்கள் நம்பிக்கை வைக்கும் காலம் வரும்.

மாநிலத்தின் ஒட்டுமொத்த தொகுதிகளில் (234) அதிமுக கூட்டணி 203 இடங்களில் வென்று ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ புகழ் திமுகவை பழி தீர்த்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் எதிரொலிக்கத் துவங்கிவிட்டதை இப்போதே அறிய முடிகிறது. கனிமொழி கைது (மே 20) அதற்கான அச்சாரமே. தமிழக மக்களின் விழிப்புணர்வு, நாடு முழுவதும் பாராட்டப்படுகிறது. அந்த வகையில் நாட்டிற்கு புதிய சேதியை தமிழகம் இத்தேர்தலில் சொல்லி இருக்கிறது.

14 Replies to “மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி – ஓர் அலசல்.”

  1. 2004 NDA ஆட்சியில் jorge பெர்னாண்டஸ் கார்கில் போரில் ஊழல் செய்தார் என்று தந்து ஆதரவை வாபஸ் வாங்கி கொண்டார். கடந்த எட்டு ஆண்டுகளாக இவர்கள் சொன்ன ஊழல் குற்றசாடிருக்கு ஒரு விசாரணை கமிசன் கூட வைக்க வில்லை. இவர்கள் அடிபோடி மீடியாவை வைத்து பொய் பிரச்சாரம் செய்யும் கேவலமான கட்சி தான் காங்கிரஸ். இது தெரிந்தும் கொஞ்சமும் நியாயம் இல்லாமல் jorge பெர்னாண்டஸ் மற்றும் BJP மீது சேற்றை வாரி இறைத்து சென்றார். இதே மம்தா இப்பொழுது நடந்த 2G CWG ஹிமாலய ஊழல் பற்றி எதுவும் வாயை திறக்க மாட்டார்.

    கம்யூனிஸ்ட் கட்சியை எனக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனாலும், இவர்கள் ஆட்சி கம்யூனிஸ்ட் ஆட்சியை விட பல மடங்கு மோசமாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயப்படும் இல்லை. இதற்க்கு சிறந்த உதாரணம், இவர் வகித்த ரயில்வே துறை. இவர் ஆட்சியில் தான் இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவு ரயில் விபத்துகள் நடந்தேறின. இதற்காக எந்த வித அலுவல் ரீதி நடவடிக்கையும் எடுக்க வில்லை. இப்படி இருக்கையில் இவர் எப்படி ஒரு மாநிலத்தை நிர்வகிக்க போகிறார்.

    குறைந்த பட்சம் ஜெயலிதா அம்மையார் போன்று நிர்வாக திறமையாவது இருக்க வேண்டும். அதுவும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியே அஞ்சும் அளவுக்கு மாவோயிஸ்ட்களுடன் கூட்டணி வைத்து இவர் செய்த அலப்பறை பற்றி ஊரே அறியும். மேற்கு வங்க Deganga பகுதியில் இருந்த சிறுபான்மை ஹிந்துக்கள் முஸ்லிம்களால் தாக்கப்பட்ட பொழுது ஒரு சிறு கண்டனம் கூட தெரிவிக்க வில்லையே. இவர் எப்படி மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த போகிறார்.

    \\Industry, minority welfare top Didi’s agenda
    May 21, 2011 4:20:36 PM

    Sutapa Mukerjee | Kolkata

    Industrialisation, minority welfare, release of political prisoners, relief to the poor will figure prominently in the agenda of Chief Minister Mamata Banerjee, who announced her Government’s priority at her maiden Press conference at the Writers’ Building. \\

    இவரெல்லாம் நல்லாட்சி தர போகிறாராம். கொடுமை

  2. நன்றி! உண்மையே! பா ஜ க மக்கள் பிரச்சனைகளில் சரியாக செயல் பட வேண்டும். அப்போது நிலையான வாக்கு வங்கி உருவாகும். மேலும் எல்லா தரப்பு மக்களையும் வாக்கு அளிக்கச் செய்வதில் முயற்சி எடுக்க வேண்டும். புதிய தரப்பாக விஜயகாந்தின் கட்சியும் வந்து விட்டது. சரியாக செயல் பட்டு தேசிய அளவில் இரண்டு கட்சிகளும் சரியாக செயல் பட வேண்டும். நன்றி!

  3. நடந்து முடிந்த நான்கு மாநிலத் தேர்தலில் கிடைத்த முடிவுகள் பற்றி சேக்கிழான் மிக அருமையான கட்டுரையை வழங்கி இருக்கிறார். 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த ஒரு கட்சியை மக்கள் கீழே இறக்கிவிட்டார்கள் என்றால் அதன் பின்னணியில் உள்ள பல நிகழ்வுகள் ஆராயப்பட வேண்டும். இதற்கு முன்பெல்லாம் நடந்த தேர்தல்களில் காங்கிரசும் மம்தாவும் தலைகீழாக நின்று தண்ணி குடித்துப் பார்த்தும் மார்க்சிஸ்ட் கட்சியை பதவி இறங்கச் செய்ய முடியவில்லை. இப்போது முடிந்தது என்றால் மம்தாவின் சிங்கூர் போராட்டம் முதலானவையே. வங்காளம் தொழில் வளர்ச்சியே வேண்டாம் என்கிறதா? விளை நிலம் இல்லாமல் பாழ் நிலம் எங்கே கிடைக்கிறது தொழில் ஆரம்பிக்க. இப்போது மம்தா டாட்டாவை மீண்டும் அழைக்கிறார். எல்லாம் அரசியல். ஒரு காலகட்டம் வரை மார்க்சிஸ்ட்டுகள் காங்கிரசை விட மிக நன்றாகவே ஆட்சி நடத்தினார்கள். இந்த காங்கிரசாருக்கு வேறு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பிடிக்காது, ஒன்று கவிழ்ப்பார்கள், அல்லது கவர்னரைத் தூண்டிவிட்டு கவிழ்க்க முயல்வார்கள். பாருங்கள் கர்நாடகத்தை. ஒன்று மட்டும் நிச்சயம், காங்கிரஸ் ஆட்சியை விட மார்க்சிஸ்ட் ஆட்சி எல்லா வகையிலும் சிறப்பானதே. விரைவில் காங்கிரஸ் மம்தாவின் வேரை அறுத்து வெந்நீரை ஊற்றும் பாருங்கள். அன்று தெரியும் காங்கிரசின் வேஷம். மம்தா நக்சலைட்டுகளின் உதவியைப் பெற்றது மாபெரும் தவறு. இந்திரா காந்தி பிந்தரன்வாலாவைத் தூண்டி விட்டதைப் போல. அசாம் முடிவு எதிர்பார்க்கப் பட்டதுதான். கேரளாவில் காங்கிரஸ் குதியாட்டம் போட்டதே, நாங்கள்தான் ஆட்சி அமைப்போம், கருத்துக் கணிப்புகள் எல்லாம் மார்க்சிஸ்ட் ஒழிந்தது என்றனவே. என்ன ஆயிற்று. செத்தேன் பிழைத்தேன் என்று உயிர் பிழைத்து காங்கிரஸ் கரை ஏறியிருக்கிறது. தமிழ் நாட்டைப் பொறுத்த வரை பா.ஜ.க. விஷப் பரீட்சை (கால நேரம் தெரியாமல் சுயபலம் தெரிந்துகொள்ள) செய்து ஐந்து இடங்களில் தி.மு.க.வை ஜெயிக்க வைத்து விட்டது. நாட்டின் முதல் எதிரி காங்கிரஸ், பிறகுதான் கம்யூனிஸ்ட் மற்ற பிற கட்சிகள்.

  4. பா.ஜ.க. போட்டி இட்டதால் வெற்றி பெற்றது தி.மு.க. என்று தவறாக சொல்லி விட்டேன். காங்கிரசை என்று படிக்க வேண்டும். நன்றி.

  5. தேர்தல் முடிவுகளை பார்த்து நமது நாடு வலுவான ஜனநாயகநாடு மக்கள் தெளிந்த தேசிய சிந்தனையுடன் வாக்களிக்கிறார்கள் என்று யதார்த்தத்தை மறந்து பெருமை கொள்வதில் அர்தமே இல்லை. திருந்துவதற்கான அறிகுறிகளே இல்லாத ஊழல் மிகுந்த இந்த திராவிட கட்சிகளை மாறி மாறி பதவியில் அமரவைப்பது நம்மை நாமே ஏமாற்றி கொள்வதேயாகும். சுய சிந்தனை இன்றி இன்று நாம் சிறுபான்மையினருக்கு தேவைக்கு அதிகமான முக்கியத்துவத்தை அளிப்பதால் இந்தியாவில் வெகுவிரைவில் பெரும்பான்மை இந்துக்கள் சிறுபான்மையாக மாறுவதற்கான வலுவான அறிகுறிகள் தொடங்கிவிட்டதை தான் இந்ததேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

    கேரளத்தில் மாநிலஅவைக்கு தேர்தெடுக்கப்பட்டவர்களில் 48 சதவிகிதம் இஸ்லாமியரும் கிருஸ்துவர்களும். (140/67) அதைப்போல் மேற்கு வங்காளத்தில் மாநிலஅவைக்கு தேர்தெடுக்கப்பட்டவர்களில் 20 சதவிகிதம் இஸ்லாமியர். (294/59) கிருஸ்துவர்களின் பங்கு தெரியவில்லை. இந்த இரண்டு மாநிலங்களிலும் இந்து பெயரை கொண்ட பல கிருஸ்துவ தேர்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களும் உள்ளார்கள்.

    இப்படி சிறுபான்மையினரின் எண்ணிக்கைக்கு மீறிய பங்களிப்பை ஆட்சியில் அளித்தால் அது நமக்கு நாமே குழி வெட்டிக்கொள்வதுபோல் ஆகும். பா.ஜ.க ஆளும் குஜராத்திலும் பிஹாரிலும் இந்த அணுகுமுறை தலைதூக்கியாகிவிட்டது. அடுத்த தேர்தலுக்குள் இந்த வியாதி தமிழகத்தையும் தொற்றிக்கொள்ளாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

  6. திரு. சேக்கிழான்,
    இந்த தேர்தல் முடிவுகளை நான் சற்று வித்தியாசமாக பார்க்க விழைகிறேன்.
    காஷ்மீர் இந்தியாவில் இருந்தாலும் இந்தியாவில் உள்ளதா என்ற
    சந்தேகம் தேசபக்தி உள்ள அனைத்து மக்களுக்கும் உள்ளது.

    தென் கோடியில் உள்ள கேரளாவில் சிறுபான்மையினரின் ஆதிக்கத்திற்குள்
    மாநிலம் வரத் தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. சாதாரணமாக
    சிறுபான்மையினர் 20 அல்லது அதற்கு அதிக சதவிகிதமாக உயரும்
    போதெல்லாம் அந்த பிராந்தியத்தில் பா.ஜ.க கணிசமான செல்வாக்கு பெறும். ஆனால் அது பொய்த்திருக்கிறது.

    அஸ்ஸாம் வெறும் ஒரு மாநிலம் அல்ல. வட கிழக்கு இந்தியாவின் நுழைவு
    வாயில் அது. பா.ஜ.கவிற்கு செல்வாக்கு சொல்லிக்கொள்ளும்படி
    இருந்தாலும் அதனால் தேர்தலில் வெற்றி பெற இயல வில்லை.

    ஹிந்து மரபு அழிப்பு கூட்டங்களின் படி பார்த்தால் காஷ்மீர் கையை
    விட்டு போய் விட்டது. கேரளா போகத் தொடங்கி இருக்கிறது. அஸ்ஸாமின்
    நிலை இழுபறியாகவே உள்ளது. தமிழ் நாடு மற்றும் மேற்கு வங்கத்தைப்
    பற்றி கவலைப் பட வேண்டிய அவசியம் தற்பொழுதைக்கு இல்லை.

    கம்யூனிஸ கொரில்லாக்கள் தூக்கி எறியப் பட்டது கண்டிப்பாக மிக மிக
    சந்தோஷமே! ஏழைகளை நடுத்தர மக்களாக மாற்றுகிறோம் என்று
    கூறிக்கொண்டு நடுத்தர, பணக்கார மக்களை ஏழைகளாக மாற்றும்
    கிறுக்கர்கள் மண்ணை கவ்வி இருக்கிறார்கள்.

    எனக்கு தனிப்பட்ட அளவில் மிகப் பெரிய சோகம் என்பது, என்னைப்
    போன்றவர்களின் ஆதி குருநாதர் ஆதி சங்கரர் பிறந்தது கேரளாவில்.
    சர்வஞர் பட்டம் பெற்றது காஷ்மீரில். இரண்டு பிராந்தியங்களும் இன்று
    ஹிந்து மரபுகளை விட்டு வெளியில் சென்று விட்டன.

    பா.ஜ.கவை மட்டுமே நம்ப வேண்டிய, வேறு வழி எதுவும் இல்லாத
    ஹிந்து அநாதைகளாக விடப் பட்டுள்ளோம்.
    வரும் காலமாவது வெற்றிகளை தரும் என்று நம்புவதைத் தவிர வேறு
    எதையும் சொல்வதற்கில்லை.

  7. A real different analysis of recent 5 states (WB, Kerala, Asam, Tamilnadu, Pudduchery) 2011, assembly voting
    Posted Sat, 05/14/2011 – 17:32 by saugato Banerjee (Vivekajoti)
    ELECTED MUSLIM MLA IN 2011 WB ASSEMBLY: 59(TMC:25, Congress:15, Left: 19), 13 more from 2006 assembly.
    ELECTED MUSLIM MLA IN 2011 KERALA ASSEMBLY: 36 , 11 more from 2006 assembly.
    ELECTED MUSLIM MLA IN 2011 ASAM ASSEMBLY: 33, 8 more from 2006 assembly.
    ELECTED MUSLIM MLA IN 2011 TAMILNADU ASSEMBLY: 6, 1 less from 2006 assembly
    ELECTED MUSLIM MLA IN 2011 PUDDECHERY ASSEMBLY: 1, 1 less from 2006 assembly.

    SO, THE TOTAL NUMBERS AND PERCENTAGE OF MUSLIM MLAS IN 5 ABOVE STATES 2011 ASSEMBLY:

    TOTAL SEATS IN 3 STATES (WB, KERALA, ASAM): 558, MUSLIM MLA: 128 (23%, increase of 5.8% from 2006 assembly)

    TOTAL SEATS IN OTHER 2 STATES(TAMIL NADU, PUDDUCHERY) :264, MUSLIM MLA: 7(2.6%, decrease of 0.8% from 2006 assembly)

    THIS ELECTION RESULT SHOWS THAT WHEREVER MUSLIM& CHRISTIANS POPULATION WENT TO CLOSE TO 50% OR CROSS, ONLY PRO-MUSLIM OR CHRISTIAN PARTY WON, WHATEVER ISSUE MAY EXIST. SO, IF THEIR POPULATION IS RESTRICTED INCL. RESTRICTION OF INFILTRATION AND ALLOWED HINDUS POPULATION TO GROW, THEN ONLY BJP OR OTHER PRO-HINDU PARTY CAN DO GOOD IN OTHER STATES OR IN REST OF INDIA WHEREVER MUSLIM, CHRISTIANS STILL NOT CROSSED 25%.

  8. // எனக்கு தனிப்பட்ட அளவில் மிகப் பெரிய சோகம் என்பது, என்னைப்
    போன்றவர்களின் ஆதி குருநாதர் ஆதி சங்கரர் பிறந்தது கேரளாவில்.
    சர்வஞர் பட்டம் பெற்றது காஷ்மீரில். இரண்டு பிராந்தியங்களும் இன்று
    ஹிந்து மரபுகளை விட்டு வெளியில் சென்று விட்டன. //

    கேரளம் பற்றி நீங்கள் கூறுவது சரியல்ல. அங்கு மிகப் பெரும் ஹிந்து விழிப்புணர்வு உருவாகி வந்து கொண்டிருக்கிறது.

    இந்த தேர்தலில் காங்கிரசின் ’வெற்றி’யை மயிரிழைக்குக் கொண்டு சென்றது கேரளத்தின் ஹிந்துப் பெரும்பான்மை மாவட்டங்கள் ஒருங்கிணைந்து அச்சுதானந்தனுக்கு வாக்களித்தது தான். டைம்ஸ் ஆஃப் இந்தியாவே இதை சொல்கிறது –

    Assembly polls: Kerala results show religious polarization

    https://timesofindia.indiatimes.com/assembly-elections-2011/kerala/Assembly-polls-Kerala-results-show-religious-polarization/articleshow/8312298.cms

    மேலும் இந்த செய்தியையும் பாருங்கள் –

    Post Poll Analysis – Best ever performance by BJP in Kerala
    https://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=13825&SKIN=K

  9. இந்த தேர்தலில் நான் மிக முக்கியமாக பார்க்கும் ஒரு விஷயம் பெரிய ஜாதிக்கட்சிகளின் மாபெரும் தோல்வி. சிறுத்தைகளும், பாட்டாளிகளும், டெபாசிட் பிழைத்தது என்ற வகையில் த்ருப்திபட்டுக்கொள்ளலாமே ஒழிய இவர்களின் இந்த தோல்வி தமிழ் நாட்டிற்கு செய்திருக்கும் நன்மை கொஞ்சம் நஞ்சமல்ல.

  10. சாதி கட்சிகள் காலில் விழும் கலாசாரம் உடையவை. ஜெயாவின் காலில் முன்னாள் அமைச்சர் சிலர் விழுந்ததை கேலி பேசிய திமுகவினரின் நிலையை பாருங்கள் . அதிமுகவினர் யாரும் தன் காலில் விழக்கூடாது என்று ஜெயா அறிவுரை வழங்கி உள்ளதாக பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். நல்லதே.

    டெல்லி சிபிஐ நீதி மன்றத்தில் ராசாத்தியம்மாள் அவர்கள் தன்னுடைய மகள் கனிமொழியை பார்க்க வந்தபோது, அங்கு ஆஜராகியிருந்த முன்னாள் மத்திய அமைச்சரும், இன்றும் திமுக கொள்கை பரப்பு செயலாளரும் ஆன, ஆ ராசா , ராசாத்தியம்மாள் காலில் திடீரென விழுந்து வணங்கியதை , ஊடகங்கள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளன.

    ஜெயா அவர்கள் முதல்வர் மற்றும் கட்சித்தலைவர் அந்தஸ்தில் பொதுசெயலாளர் என்ற நிலையில் இருப்பவர். அவர் காலில் அவர் கட்சியினர் விழுவதை கேவலமாக சித்தரித்த சூரியன் தொலைகாட்சி குடும்பம் , அரசுப்பதவியோ, அரசியல் கட்சிப்பதவியோ இரண்டுமே இல்லாத ஒரு அம்மையாரின் காலில் , அதுவும் நீதிமன்றத்தில் பலர் முன்னிலையில் ராசா விழுந்தது பற்றி எந்த விமரிசனமும் செய்யாமல் வாய் மூடி இருப்பது ஏன் ? இதுவும் சூரியன் குடும்ப பகுத்தறிவோ? எந்தவகை பகுத்தறிவு ? உண்மைதான் என்ன?

    நம் தமிழக பண்பாட்டின் படி, வயதில் மூத்தோர் காலில் சிறியவர் விழுந்து வணங்கி , ஆசி பெறுவது வழக்கம். இது இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த நல்ல உயர்வான பழக்கத்தை ஏதோ ஒரு பெரிய தவறு போல சித்தரித்த , மஞ்சளார் குடும்ப ஊடகங்கள் தமிழின விரோதிகளும், துரோகிகளும் ஆவார்கள். அவர்கள் அனைவரும் நமது நாட்டின் உயர்ந்த கலாச்சாரத்தினை கேவலப்படுத்தியவர்கள்.

    தாங்கள் செய்த தவறுகளை இனிமேலாவது உணருவார்களா?

    நாம் இதிலிருந்து தெரிந்து kolla

  11. நாம் இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கழகமும் அதன் முன்னோடிகளும் சமுதாய விரோத இயக்கங்கள் என்பதே.

    மொழி, கலாசாரம் என்று எதிலுமே நல்ல தெளிவான கருத்து இல்லாத சுயநல கும்பல் தான் இந்த அரசியல் ராவணர்கள்.

  12. Pingback: Indli.com
  13. சோனியாகாந்தியும் அவள்தம் அடிவருடிகளும் இருக்கும் வரை, காங்கிரஸ் ஒழித்துக்கட்டப்படவேண்டிய கட்சிகளில் ஒன்று. இனம் இனத்தோடு சேரும் என்ற கூற்றை வைத்துக்கொண்டு, சொனியாகந்தியின் கட்சியின் அரசியல் கூட்டு, ஊழலின் ஊற்று என்று தெள்ளத் தெளிவாக முடிவாகி விட்டபோதிலும், கேரளத்தில் அதற்கு விழுந்த வோட்டுக்களும் சீட்டுக்களும், மேற்கு வங்கத்தில் அதன் கிழக்கிந்திய ஏஜென்ட் மம்டபெநேர்G மயக்கத்தில் கிடைத்த உறுப்பினர்களும், அஸ்ஸாமிய மதபோதை ஆதரவுகளும், சொல்பமான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி,கருணாநிதி,ஸ்டாலின் வெற்றிகளும் இந்தியாவிற்கு நல்ல காலம் இன்னும் பிறக்க வில்லை என்றும், காங்கிரஸ் இனிய பாரதத்தில், ஒரு துளி விஷமாகவே, உயிரைக்குடிக்கும் நிலை வருத்தத்திற்கு உரியதே அன்றி, மகத்துவம் கொடுத்த தீர்ப்பாக ஆகாது. காங்கிரஸ் என்ற விஷ மரம் வேரோடு கொளுத்தப்படும் நாள்தான், இந்தியாவின் மகத்துவமான நாளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *