நீலகிரியில் மதமாற்ற வைரஸ் – குமுறும் படுகர் சமுதாயம்

ண்மையில் ஜூனியர் விகடன் இதழில் வந்த ஒரு செய்தி கவனத்தை ஈர்த்தது.

டிக்கிற வெயிலுக்கு ஆளாளுக்கு ஊட்டி யைத் தேடி ஓட… அங்கேயோ அதைவிட உஷ்ணமான விவகாரம் ஒன்று சுழன்று கொண்டு இருக்கிறது. அது, படுகர்கள் நடத்தும் மத மாற்றத்துக்கு எதிரான போராட்டம்!

நீலகிரியின் மண்ணின் மைந்தர்களான படுகர் சமுதாய மக்கள், கட்டுப்பாடான வாழ்க்கை முறை, கலாசாரத்துடன், ‘எங்க வழி தனி வழி’ என்று வாழ்பவர்கள். அவர்களை, கிறிஸ்துவ மதத்தினர் கட்டாய மதமாற்றம் செய்வதாகத் தகவல்கள் பரவவே, சலசலப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக, கடந்த மே 25-ம் தேதி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ‘நாக்குபெட்டா படுகர் குல பாதுகாப்பு சங்கம்’ கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

nilgiris-1

சங்கத்தின் தலைவர் சந்திரனிடம் பேசினோம். ”இன, மத துவேஷம் அடிப்படையில நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. படுகர் சமுதாயத்தின் அடிப்படையே இந்து மதம்தான். எங்களுடைய கட்டுக்கோப்பான, ஒழுக்கமான கலாசாரம் யுனெஸ்கோ அமைப்பின் கவனத்தையே ஈர்த்தது ஆகும். 1831-ல் பழங்குடி மக்களாக அறிவிக்கப் பட்டிருந்த எங்களை, 100 வருடங்கள் கழித்து அநியாயமாகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து விட்டார்கள். இதனால், எங்கள் சமுதாயம் இழந்த சலுகைகளும், முன்னுரிமைகளும் அதிகம். இழந்த உரிமைகளைத் திரும்பப்பெற பல வருடங்களாகப் போராடி வருகிறோம்.

இந்த நிலைமையில், சில வருடங்களாக எங்களை மதமாற்றப் பிரச்னையும் வாட்டி எடுக்கிறது. கிறிஸ்துவ அமைப்புகள் விதவைகள், நோயாளிகள், ஏழ்மை நிலையில் இருக்கும் படுகர் சமுதாய மக்களைத் தேடிப்பிடித்து மூளைச் சலவை செய்தார்கள். ‘எங்கள் மதத்துக்கு மாறினால், சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி செய்கிறோம்’ என்று சொல்லி ஆள் பிடிக்கிறார்கள்.

இப்படி மதமாற்றத்துக்கு ஆள் பிடிப்பது மூலம், வெளிநாடுகளில் இருந்து அவர்களுக்கு நிறையப் பணம் குவிகிறது. இதை வைத்துத் தங்களுடைய எல்லைகளைப் பெரிதாக்கிக் கொண்டே போகிறார்கள். தொடக்கத்தில் ஏழை மக்களை மட்டுமே குறி வைத்தவர்கள், இப்போது வீடு, வீடாகப் போய் ஆள் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். எங்கள் இனத்தின் மொத்த மக்கள் எண்ணிக்கையே, சில லட்சங்கள்தான். ஆனால், இப்படி மதமாற்றம் மூலமாக கணிசமான படுகர்கள் குறைக்கப்படுவதால் எங்கள் இனமே அழியும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

badaga_wedding… சங்கத்தின் செயலாளரான ராமமூர்த்தி, ”படுகர் களைப் பொறுத்த வரைக்கும் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் ஒழுக்கமாக நடந்து கொள்வோம். உயிரே போவதாக இருந்தாலும், எங்களுடைய தொன்மையான பழக்கவழக்கங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம். ஆனால், மதமாற்றம் மூலமாக இது எல்லாமே நாசமாகிறது. ஏகப்பட்ட படுகர் பெண்கள் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் பெண்களுக்கு படுகர் சமுதாயத்தில் மாப்பிள்ளை எடுக்காமல், சம்பந்தப்பட்ட சர்ச் மூலமாக வேறு சமூகத்தைச் சேர்ந்த பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறார்கள்.. எங்க சமூகத்தில் கணவர் இறந்து விட்டால் மனைவி, ‘ஓலைக்கட்டு’ன்னு ஒரு சடங்கு செய்யணும். ஆனால், கிறிஸ்துவ மதத்துக்கு மாறுன படுகர் பெண்கள், இந்தச் சடங்கைச் செய்வது இல்லை. இதனால், கொஞ்ச நாளைக்கு முன் ஒரு படுகர் ஆணோட பிணம், சடங்குகள் கூட நடத்தப்படாமல் ராத்திரி முழுக்க அநாதையாகக் கிடந்தது.

எங்க இனத்துக்கு என்று தனி மொழி இருக் குது. எழுத்து வடிவம் இல்லாத இந்த மொழியை எங்களோட பெருமையாக நினைக்குறோம். ஆனா, மதமாற்றத்தில் ஈடுபடும் கிறிஸ்துவர்கள், கூசாமல் எங்கள் மொழியைப் பயன்படுத்துகிறார்கள். படுகர் ஒருத்தன் ஆசைப்பட்டு மதம் மாறினால் கூட பரவாயில்லை; அவர்கள் வீட்டுக்குள்ளே போய் உட்கார்ந்து வலுக்கட்டாயமாக மூளைச் சலவை செய்கிறார்கள். இப்படி அத்துமீறல்கள் உச்சத்துக்கு போனதும், மாவட்ட நிர்வாகத்தோட கவனத்துக்கு கொண்டு போனோம். அவங்களும் பல கட்டுப்பாடுகள் விதித்தார்கள். ஆனால், கிறிஸ்துவ அமைப்புகள் எதையும் கண்டுகொள்வது இல்லை. அதனால்தான் போராட்டத்தில் இறங்கி விட்டோம்…” என்றார் அழுத்தமாக!

நீலகிரியில் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகச் சொல்லப்படும் சில கிறிஸ்துவ அமைப்புகளிடம் பேசினோம். ”அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளை எங்கள் மேல் சுமத்துகிறார்கள். நாங்கள் யாரையும் கட்டாய மதமாற்றம் செய்வது இல்லை. ஆதரவு இல்லாமல், நோய்வாய்பட்டு அவதிப்படும் மக்களை மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் ஆதரிக்கிறோம். சேவை செய்வது தவறா? அந்நிய நாடுகளின் நிதி உதவிக்காக ஆள் பிடிக்கிறோம் என்று பேசுவது பெரும் பாவம். செய்வது தெய்வப் பணி என்றாலும்கூட அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை எள்ளளவும் மீறுவதில்லை. எங்கள் மீது அவதூறு சொல்பவர்களை தேவன் மன்னித்து ஆசீர்வதிப்பார்…” என்கிறார்கள் பொறுமையாக!

– ஜூனியர் விகடன், 1.6.2011

உண்மையான செய்திகளைத் தந்துவிட்டு கடைசியில்  கொஞ்சம்  நையாண்டியும் இருந்தால் நல்லது என்று ஜூ.வி நிருபர் நினைத்தார் போல.  கடைசியில் கிறிஸ்தவ அமைப்புகளின் கருத்தையும்  மெனக்கெட்டு கேட்டுப் போட்டிருக்கிறார்.  அப்பப்பா,   என்னா சேவை,  என்னா தெய்வப் பணி, என்னா ஃபீலிங்,  என்னா தேவன், என்னா மன்னிப்பு !

********

ramamurthy_secretery_badugar_sangamஇது பற்றி மேலும் விவரங்கள் அறிய, திரு. ராமமூர்த்தி அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினோம். நமது அனைத்துக் கேள்விகளுக்கும் படுக மொழி உச்சரிப்பு கலந்த தமிழில் அழுத்தமாகவும், தெளிவாகவும் விடையளித்தார் ராமமூர்த்தி.

மதமாற்றத்திற்கு எதிராக ஒரு சமூகமே திரண்டெழுந்து வந்து போராடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்குப் பலன் இருக்கிறதா?

ஒன்றுபட்ட மக்கள் சக்தியினால் நல்ல விளைவுகள் ஏற்பட்டுள்ளன. ஊர்மக்கள் ஒன்றாகச் சேர்ந்து, மதமாற்ற பிரசாரகர்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது என்று காவல் துறையிடம் புகார் கொடுத்தார்கள். இதனால் நீலகிரி மாவட்டத்தில் பத்து இடங்களில் ஜபக்கூட்டம் நிறுத்தப் பட்டது.

எடக்காடு என்ற ஊரில், சட்டரீதியாக அனுமதி வாங்காமலும், நிலத்தை ஆக்கிரமித்தும் சர்ச் கட்டப்பட்டது. டிசம்பர்-25 அன்று மிகப்பெரிய நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டிருந்தார்கள். ஊர்மக்களின் புகாரின் பேரில் இப்போது அந்த சர்ச் சீல் வைக்கப் பட்டுள்ளது. சர்ச்சை மூட உத்தரவிட்ட அரசு ஆணையை ஊர் பஞ்சாயத்து செயல்படுத்தியது.

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் எங்கள் சமுதாயத்தினருக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடத்த காவல் துறை ஏற்பாடு செய்தது. அதற்கான அறிவிப்பில் ”இந்து படுகர் – கிறிஸ்தவ படுகர் இடையே பேச்சுவார்த்தை” என்று குறிப்பிட்டிருந்தது. ’கிறிஸ்தவ படுகர்’ என்ற வார்த்தையே எங்களைக் கொதிப்படையச் செய்தது. எங்களது கலாசாரத்தின் ஆணிவேரே இந்து மதம் தான். அதை அவமதிப்பதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

உடனடியாக மாவட்ட அளவில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்த ஆர்.டி.ஓ அவர்களிடம் கிறிஸ்தவ படுகர் என்ற சொல்லை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தோம். பிறகு ”இந்து படுகர் – கிறிஸ்தவர்கள் இடையே பேச்சுவார்த்தை” என்று மாற்றினார்கள். ஆர்.டி.ஓ இந்த மனுவை கலெக்டருக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். இப்போது மாவட்ட சிறுபான்மை நல அலுவலகம் “கிறிஸ்தவ படுகர்” என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்தவ மதமாற்றம் குடும்ப, சமூக உறவுகளைக் குலைக்கிறது என்கிறீர்கள். இது பற்றி மேலும் கூற முடியுமா?

badagas_processionஎங்கள் படுகர் சமுதாயத்தில் பாரம்பரியமான பல சடங்குகள், நிகழ்ச்சிகள் உண்டு. குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதற்கு என்றே ஏற்பட்டவை இவை. ஒரு பெண் பருவமடையும்போது நடக்கும் சடங்கில் பெரியவ்ர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும் என்பது சம்பிரதாயம். எல்லா பெரியவர்களும் கலந்து கொள்வார்கள். சமீபத்தில் ஒரு பெண்ணின் சித்தப்பா மதம் மாறிவிட்டார். சர்ச்சின் கட்டளைப் படி சடங்குக்கு வராமல் புறக்கணித்து விட்டார். இதனால் எவ்வளவு மனக்கசப்பு உண்டாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

எங்களது பாரம்பரிய பண்டிகை தேவு ஹப்பா. எங்கள் சமுதாயத்தின் அடையாளமாக விளங்கும் மிகப் பெரிய பண்டிகை. மதம் மாறியவர்கள் கோயிலுக்கு வருவதில்லை என்பதால் இந்தப் பண்டிகையிலும் கலந்து கொள்ளமாட்டார்கள். கல்யாணத்திற்கு வந்தால் அங்கு பரிமாறப்படும் உணவை சாப்பிட்டமாட்டார்கள். தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டு நீங்கள் சமைப்பதால் அதில் சாத்தானின் ஏவல் உள்ளது என்று சொல்லி அவமதிக்கிறார்கள்.

எங்கள் ஊர்களில் எந்த பிரசினை ஏற்பட்டாலும் பெரும்பாலும் கோர்ட்டுக்கு போகமாட்டார்கள். ஊர்த்தலைவரே சுமுகமாகப் பேசிப் பிரசினைகளைத் தீர்ப்பார். மதம் மாறியவர்கள் வேண்டுமென்றே சிலரைப் பழிவாங்குவதற்காகவும், பிரசினை ஏற்படுத்துவதற்காகவும் கோர்ட்டில் வழக்குப் போகிறார்கள். திட்டமிட்டு சமூகக் கட்டமைப்பை உடைக்கிறார்கள்.

மதம் மாறியவர்கள் படுகர் கலாசாரத்திலிருந்தும், சமூகத்தில் இருந்தும் முற்றிலுமாக விலகி விடுகிறார்கள். இல்லையா?

ஆமாம். மதம் மாறியவர்கள் முற்றிலுமாக அன்னியப் பட்டுப் போகிறார்கள். இது ஒரு பக்கம்.

ஆனால் இன்னொரு பக்கம் எங்கள் கலாசாரத்தை கிறிஸ்தவ மதப்பிரசாரகர்கள் அப்பட்டமாகக் காப்பியடிக்கிறார்கள், திருடுகிறார்கள்.

கவதமனே, நாக்கு பெட்டா, ஒசபதுகு – இவை எங்கள் குலதெய்வங்களின் பெயர்கள். சர்ச்சுகளுக்குள் இந்தப் பெயரைப் போட்டு அங்கு கிறிஸ்தவ வழிபாடு நடத்துகிறார்கள். எங்கள் தெய்வங்களின் பெயர்களை சர்ச்சுகளில் இருந்து நீக்க வேண்டும் என்பதும் எங்கள் போராட்டத்தின் கோரிக்கைகளில் ஒன்று. இந்தப் பெயர்களை நீக்க உத்தரவிடுவதாக மாவட்ட நிர்வாகம் வாக்களித்துள்ளது.

badaga_dance_womenjpg

எங்கள் பாரம்பரிய படுகர் நடனத்தை, கிறிஸ்தவப் பாடல்களுடன் கலந்து ஏசு கிறிஸ்தவைப் போற்றுவது போல நடனமாடி, சி.டி.என் என்ற உள்ளூர் சேனல் ஒளிபரப்பியது. உடனடியாக 200 பேர் அந்த சேனல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தோம். அந்த நிகழ்ச்சியை இனி ஒளிபரப்புவதில்லை என்று சேனல்காரர்கள் உறுதியளித்தனர்.

விஷன் டிவி சேனலில் படுக மொழியில் கிறிஸ்தவ பிரசாரம் நடந்தது. இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். இப்போது அது நிறுத்தப் பட்டிருக்கிறது. தமிழில் மட்டும் பிரசாரம் தொடர்கிறது.

சட்டப்படி, ஒவ்வொரு கிறிஸ்தவ மதமாற்றமும் கெசட்டில் பதிவு செய்யப் படவேண்டுமே. அப்படி செய்கிறார்களா?

ஒன்றும் கிடையாது. ஊட்டி அருகில் கொயட் கார்னர் மினிஸ்டிரீஸ் (Quite Corner Ministries) என்று ஒரு இடம் உள்ளது. அது தான் நீலகிரியில் மதமாற்ற நடவடிக்கைகளுக்கான முக்கிய மையமாக இருக்கிறது. அங்கு மதம் மாற்றுபவர்களை தண்ணீரில் அமுக்கி ஞானஸ்னானம் மட்டும் செய்வார்கள். அவ்வளவு தான். அல்போன்சா, அந்தோணி என்றெல்லாம் பெயர் வைத்த்திருந்தால் இங்கு ஊருக்கு உள்ளேயே விடமாட்டார்கள். அதனால் மதம் மாறுபவர்கள் ராம கவுடரு, ரங்கைய கவுடரு போன்ற தங்கள் இந்துப் பெயர்களுடனே வலம் வருகிறார்கள், பிரசாரம் செய்கிறார்கள்.

தங்களை அறியாமல் ஏமாற்றப் பட்டு மதம் மாறியவர்கள் திரும்பிவரும் வகையில் ஏதேனும் முயற்சிகள் செய்திருக்கிறீர்களா?

கண்டிப்பாக. மதம் மாறியவர்கள் ஊர்த்தலைவரிடம் வந்து தாங்கள் மதம் மாறியது தப்பு என்று மன்னிப்பு கேட்பார்கள். பிறகு கிராம கோயிலில் சென்று சாமி கும்பிட்டு, பூஜை செய்து, விபூதி குங்குமம் பூசி, பிரசாதம் சாப்பிடுவார்கள். தாய்மதம் திரும்பும் சடங்கு மிக எளிமையானது.

அண்மைக்காலத்தில், நூறு குடும்பங்களுக்கும் மேலாக தாய்மதம் திரும்பியுள்ளனர்.

பொதுவாக, சமூகத்தில் நிலவும் சில பிரசினைகளைப் பயன்படுத்தித் தான் கிறிஸ்தவ மதமாற்றிகள் உள்ளே நுழைவார்கள். உங்கள் சமூக நிலை தற்போது எப்படி இருக்கிறது? வசதியாக இருப்பவர்கள் ஏழைகளுக்கு உதவுகிறார்களா?

கூட்டுறவுக்கும், ஒத்துழைப்புக்கும் ஒரு சிறந்த உதாரணமாக எங்கள் சமுதாயம் இருக்கிறது. ஒரு ஊரில் ஒரு குடும்பத்தில் குழந்தை பிறந்தவுடன் எல்லா வீட்டுக் காரர்களும் சென்று பணம் தருவார்கள். கல்யாணம், சாவு என்று எந்தக் குடும்ப நிகழ்வாக இருந்தாலும் ஊர்மக்கள் உதவுவார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் பொதுவான ஃபண்ட் (சமூகநிதி) உண்டு. அதிலிருந்து கஷ்டப் படுபவர்களுக்கு உதவி செய்வார்கள்.

badaga-etthaகல்வி கற்பவர்களது சதவிதம் எங்கள் சமூகத்தில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. ராணுவம், மருத்துவம், நிர்வாகம், கம்ப்யூட்டர் என்று எல்லா துறைகளிலும் எங்கள் சமூகத்து ஆட்கள் இருக்கிறார்கள். அகில இந்திய அளவில் கூட பணிபுரிகிறார்கள். பெண்கள் கல்வியும் சிறப்பாக இருக்கிறது.

தேயிலைத் தொழிலில் தான் பெருவாரியாக எங்கள் சமுதாயம் ஈடுபட்டுள்ளது. பொருளாதார ரீதியாக, கடந்த இருபது ஆண்டுகளாகவே நீலகிரித் தேயிலைத் தொழில் தேய்வடைந்து வருகிறது. உலகின் பல நாடுகள் தேயிலை வியாபாரத்தில் பெரிய அளவில் போட்டியாக வளர்ந்து விட்டது ஒரு முக்கிய காரணம். தேயிலை உற்பத்தி அதிகமாகியிருக்கிறது, ஆனால் டிமாண்ட் குறைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் கொள்முதல் விலை 18 ரூபாயிலிருந்து 3 ரூபாய்க்கு வந்துவிட்டது. இதிலிருந்து இந்தத் தொழில்துறையை மீட்க அரசும் பெரிய அளவில் உதவி செய்ய வேண்டும்.

பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் இருக்கும் ஒரு சில மக்களை ஏமாற்றி,ஆசைகாட்டி விலைக்கு வாங்க கிறிஸ்தவ மதமாற்றிகள் திட்டமிடுகிறார்கள். ஆனால் எங்கள் சமூகம் அதை உறுதியாக எதிர்த்து நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்த விஷயத்தில் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

எங்கள் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி ஜூலை-31ம் நாள் ஒரு மிகப் பெரிய போராட்டம் நடைபெறும். 365 கிராமங்களின் மக்களும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள படுகர் சங்க கமிட்டிகளும் இதில் கலந்து கொள்ளும்.

[இந்தக் கட்டுரையில் உள்ள அனைத்து வண்ணப் படங்களுக்கும் நன்றி: https://badaga.in மற்றும் https://www.badaga.co இணையதளங்கள்]

39 Replies to “நீலகிரியில் மதமாற்ற வைரஸ் – குமுறும் படுகர் சமுதாயம்”

  1. ஒரு சமூகம் பற்றிய தெளிவான எண்ணக்கருவை இக்கட்டுரை தூவுகிறது.. அற்புதமாக உள்ளது… இப்படியான கட்டுரைகள் நிறைய வெளிவருதல் வேண்டும்… இவ்வாறான அமைதியாக… ஆங்காங்கே நடக்கிற சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

  2. எங்கே எந்த முறையில் மதமாற்றம் நிகழ்ந்தாலும் தட்டிக் கேட்கப் பட வேன்டும். சர்ச் உள்ளே பைபிள் பற்றிய உண்மைகளை சொல்ல விடுவார்களா. யாருக்காவது குணம் இவர்கள் ஜபத்தால் ஆனது என்றால் மருத்துவ ஆதாரங்களொடு கொடுத்தால் பல மேல் நாட்டு இணைய தளங்கள் கோடிக் கணக்கில் பந்தயப்பணம் பெறலாமே?

    முழுமையாக மதமாற்றம் தடை செய்யப்பட வேன்டும்.

    சுற்றுலா விருந்தினர் போர்வையில் மதமாற்றும் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது
    https://saintthomasfables.wordpress.com/2011/06/15/conversion-frauds/

  3. The publication MISSION FRONTIERS by the US Centre for world missions in an article entitled Church plating movements indicated agoal of plating at least 4138 churches among the hindusi nine years.It has referred the evangelists to the book”BEST PRACTICES INSTITUTE MANUAL’ by B.D.Moses and Neill Mims available in https://www.churchplantingmovements.com/index.php?

    o
    ption=com_content&view=category&layout=blog&id=ltemid=90

    This Moses is the pseudonym of a missionary who is working in India and successfully converting yhe hindus.It is necessary themethods suggested by him are exposed and people cautioned.
    Thiruvengadam

  4. HI,
    Even I have seen a baduga family which is ruined by this bloody conversion. One of ma friend’s dad is a devout Hindu. His mom is a converted christian. She got married without informing that she is a convert. Problems started when he knew abt her religious following. She brought up her child (ma friend) as a christian and urged her husband to convert too. His dad slowly got detached from the family. Not even christian missionaries are helping her because the family head is a Hindu. And none of his dad family members are helping because they got converted to christianity. The mom – son pair goes around complaining about the Husband. But they dont accept what she has done is a wrong thing. This should be stopped at any cost.

  5. ’கிறிஸ்தவ படுகர்’ என்ற வார்த்தையே எங்களைக் கொதிப்படையச் செய்தது. எங்களது கலாசாரத்தின் ஆணிவேரே இந்து மதம் தான். அதை அவமதிப்பதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

    மதம் மாறியபின் எப்படி இந்து மத ஜாதிப் பெயர்களை போட்டுக்கொள்ள நினைக்கிறார்கள் என்று புரியவில்லை. கிறிஸ்தவ நாடார், கிறி்ஸ்தவ ஆதி திராவிடர் என்று சாதிச்சான்றிதழ் கொடுப்பதை அரசு தடை செய்ய வேண்டும். மதம் மாறிய பின் அவன் ஆர்.சி கிறிஸ்தவனாகவோ, பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவனாகவோ பெந்தேகொஸ்தே கிறிஸ்தவனாகவோ மாறிவிடுகிறான். அந்த பெயர்களில்தான் குறிப்பிடப்பட வேண்டுமே தவிர இந்துமத சாதிகளை பயன்படுத்த அவர்களுக்கு தகுதி இல்லை.

    ஒரு சமுதாயத்தை வேறுபடுத்திக் காட்டுவதே அந்த சமுதாயததின் சடங்குகள், சம்பிரதாயங்கள்தான். மதம் மாறுவதே எங்கள் மதத்தில் தீண்டாமை இல்லை. சகோதரத்துவம் உள்ளது என்றுதானே. அங்கே சென்ற பின் தங்கள் பழைய சாதியைப் போட்டுக்கொண்டு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சோ்க்க வேண்டும. அரசு சலுகைகள் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அபத்தம். இதற்கு நீதிமன்றங்களும் துணை போவது வேதனை தருகிறது. முஸ்லீம் மதத்துக்கு மாறியபின் எவராவது தங்கள் பழைய சாதியை போடுகின்றனரா? கிறிஸ்தவர்கள் மட்டும் ஏன் இப்படி பிராடுத்தனம் செய்கிறார்கள்.

    கிறிஸ்தவமும் இஸ்லாமும் இப்படித்தான் இனங்களை கலாச்சாரங்களை அழித்துக்கொண்டிருக்கிறது. இவர்களிடமிருந்து நம் கலாசாரம், பண்பாட்டைக் காக்க வேண்டிய அரசாங்கமோ ஓட்டுக்காக அவர்களுக்கு துணை போகிறது. இந்துக்கள் கட்சி ரீதியாக ஜாதி ரீதியாக பிளவுபட்டுக்கிடக்கின்றனர். கட்சியையும் ஜாதியையும் துறந்து இந்து உணர்வுடன் ஒருங்கிணைந்து போராடினால் தான் நம் சந்ததியினரை பாதுகாக்க முடியும்.

  6. வழிபாட்டு முறையை மாற்றிக்கொள்ளுவதால் ஒரு தனி நபரின் பூர்வீகமோ பாரம்பரியமோ பின்னணியோ மாறுவதில்லை. வழிபாட்டு முறையை மாற்றிக்கொண்டு பெயரை மாற்றிக்கொண்ட ஒருவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவது, ஏற்கனவே அவர் பின்பற்றி வந்த மத வழிபாட்டிற்கும் இனத்திற்கும் நேரடியாக அநீதி இழைப்பதாக இல்லையா? நமது நாட்டு சட்டங்களில் இவ்வளவு பெரிய ஓட்டையா? அல்லது மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுவோரது அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கமா? நமது ஹிந்து சமுதாயத்தில் உள்ளுக்குள்ளேயே துரோகிகளை உருவாக்கும் ஆங்கிலேயனின் சதி திட்டத்தில் சர்ச்களின் பங்கு மிகவும் அதிகம். மத மாற்றம், நம் மக்களிலேயே ஒரு கூட்டத்தினரை தேச விரோதிகளாகவும் சமுதாய எதிரிகளாகவும் மாற்றக்கூடிய ஒரு பலமான அரசியல் ஆயுதம் என்பதை நமது ஆட்சியாளர்கள் உணராத வரையில் நமக்கும் நிம்மதி ஏது?

  7. ஆபிரகாமிய மதங்களின் மிகவும் முக்கியமான ஆயுதமான சர்ச் மற்றும் மசூதிகளின் ஆதிக்கம் நமது நாட்டில் பெருகுவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, திருமதி சோனியா அவர்களின் கத்தோலிக்க மதத்தை பரப்பும் ஆர்வம் மற்றும் சிறுபான்மையினரை தாஜா செய்யும் மனப்பான்மை என்றால் அது மிகையான கூற்றாகாது. சதி திட்டங்களின் மூலம் பல்வேறு நாடுகளின் சுமுகமான நல்வாழ்வை சீர்குலைத்த அமெரிக்காவின் தீவிர முயற்ச்சியில் நமது நாடும் பலியாகி வருகின்றது.

  8. முஸ்லீம் மதத்துக்கு மாறியபின் எவராவது தங்கள் பழைய சாதியை போடுகின்றனரா? கிறிஸ்தவர்கள் மட்டும் ஏன் இப்படி பிராடுத்தனம் செய்கிறார்கள்.
    ———————————–////////////////////——————–
    தலித் இஸ்லாமிய எழுச்சி தினம் திசம்பர் 6 என்று நோட்டிஸ் ஒட்டி எங்கள் ஊர்களில் வி சியினர் பேரணி நடத்தினர்.
    அவர்களும் சாதியை விடுவதாய் இல்லை

  9. அடித்து துரத்த வேண்டும் இந்த மத மாற்றி கேன்சர்களை…

  10. முப்பது ஆண்டுகளுக்கு முன் ஞானவேல் முருகன் திரு உருவப் படிமத்தை தமிழ் நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டோர், வனவாசிகள் பகுதிகளுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று அங்குள்ள மக்கள் இறை வழிபாடு செய்ய உதவும் பணியில் விசுவ ஹிந்து பரிஷத்தின் சார்பில் ஊழியம் செய்தேன். அம்மாதிரி சந்தர்ப்பங்களில் நமது ஹிந்து மதக் கோட்பாடுகளை எடுத்துச் சொல்வதும் வழக்கம். நீலகிரி மாவட்டத்திற்கும் ஞான வேலனை அழைத்துச் சென்றோம். அப்போதே அங்கு கிறிஸ்தவ மிஷனரிகள், எவாஞ்சலிஸ்டுகளின் மத மாற்ற முயற்சி மிக மும்முரமாக இருந்தது. எங்களுடைய வரவு அவர்களுக்கு கிலியூட்டியது. எங்களது வரவு சமூக அமைதியைக் குலைக்கும் என்றெல்லாம செல்வாக்கு மிக்க மிஷனரிகள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து எங்கள் ஊர்வலங்களுக்குக் கட்டுப் பாடுகள் விதிக்கச் செய்தனர். ஹிந்துக்களை மத மாற்றம் செய்வதில் தங்கு த்டையின்றி அவர்கள் ஈடுபடலாம், ஆனால் நாம் நமது வழிபாட்டுக்கு உரிய தெய்வங்களை நம் மக்களிடம் ஊர்வலமாக எடுத்துச் செல்லக் கூடாதாம்! நாங்கள் சமய வழிபாட்டு உரிமையை வலியுறுத்தி எல்லா கிராமப் பகுதிகளிலும் ஞான வேல் முருகனை அழைத்துச் சென்று வழிபாடு செய்வித்தோம். படகர்களைப் பொருத்தவரை அவர்கள் உறுதிப்பாடு மிக்கவர்கள். போர்க்குணம் மிக்கவர்கள். அவர்களை மதமாற்றம் செய்வது எளிதாக இருக்கவில்லை. தோடர்களையும் பிற மக்களையும் மத மாற்றம் செய்வதில்தான் வெற்றி பெற முடிந்தது. தோடர்களிடையே தமிழில் பேசினால் அவர்கள் புரிந்து கொள்வார்கள், நீங்கள் பேசுங்கள் என என்னை உள்ளூர் படகர் பிரமுகர்கள் ஊக்குவித்தனர். நிறைய தோடர் பகுதிகளில் பேசினேன். ஞானவேல முருகனையும் துணைக்கு வைத்துக்கொண்டு பேசியதில் பேசப் பேச மக்கள் உணர்ச்சிப் பெருக்கில் பஜனை செய்யத் தொடங்கினார்கள். மதம் மாறியிருந்த சிலர் தாய் மதம் திரும்பினர். படகர்கள் என்போர் வடுகரே, இவர்கள் மிகவும் உறுதியுடன் மத மாற்றத்திற்கு இடங் கொடாதவர்களாகவே இருந்து வந்தனர். உதகையில் நான் சந்தித்துப் பேசிய ஓர் அந்நிய மத மாற்றி ஊழியர், மத மாற்றத்தடைச் சட்டம் இல்லாத வரை மத மாற்றம் செய்வது எமது சட்டத்திற்கு உட்பட்ட உரிமை என்று பிரகடனம் செய்தார் இது முப்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை. இன்று பட்கர் சமூகத்திலும் மத மாற்ற முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. மத மாற்றத் தடைச் சட்டம் நடப்பில் உள்ள மாநிலங்களியே மிகவும் சாமர்த்தியமாக மத மாற்றம் நடக்கிறது. ஒரிஸ்ஸாவில் மத மாற்றத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஒரே ஒருவரை மத மாற்றம் செய்தாலும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அது அறிவிக்கப்பட வேண்டும். என்ன காரணத்திற்காக மதம் மாறினேன் என்று மதம் மாறியவர் வக்காலத்து தாக்கல் செய்ய வேண்டும். ஒரே சமயத்தில் நான்கு பேருக்கு மேல் மதம் மாற முடியாது என்றெல்லாம் விதிகள் உள்ளன. அப்படியும் மத மாற்றம் முழு வேகத்துடன் நடக்கத்தான் செய்கிறது. ஹிந்துக்கள் மெத்தனமாக இருப்பதால்தான் இதெல்லாம் சாத்தியமாகிறது.
    -மலர்மன்னன்.

  11. சென்ற வாரம் சேலம் சென்று இருந்தேன்.

    ஊர் முழுவதும் ஒரு நோட்டிஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

    அதில் என்ன வாசகம் எழுதியிருந்தது தெரியுமா?

    நற்செய்தி கூட்டம் –
    சிறப்பு பிராத்தனை சகோதரி ப்ரவீனா முதலியார்.

    இதில் முதலியார் என்ற வார்த்தை கொட்டை எழுத்தில் எழுத பட்டு இருந்தது.

    ஹிந்து மதத்தில் சாதி ஏற்றதாழ்வு இருப்பதால் தான் மதம் மாறுகிறார்கள் என்று சொன்னால் அதை விட முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை.

    அப்படி பார்த்தால் சாதியே இல்லாத புத்த மதம் இருந்த தென் கொரியாவில் எவ்வாறு மத மாற்றம் நடை பெற்றது.

    கொள்ளை அடிக்க வேண்டும் என்று முடிவு செய்த பின்பு எந்த வழியிலாவது கொள்ளை அடிக்க தான் செய்வார்கள்.இதற்கு எதாவது காரணம் கண்டு பிடிப்பார்கள். காரணம் இல்லாவிட்டால் உருவாக்குவார்கள்.

    தேவை விழிப்புணர்வு!! இதை தவிர வேறு எதுவும் இல்லை.

  12. //இதில் முதலியார் என்ற வார்த்தை கொட்டை எழுத்தில் எழுத பட்டு இருந்தது- சோழன்//
    வேண்டுமென்றேதான் இவ்வாறு சாதிப் பெயரைக் குறிப்பிடுகீறார்கள். கிறிஸ்தவ பிராமணர் சங்கம் என்றே ஆரம்பித்திருக்கிறார்கள். மேல் சாதியினர் என்று கருதப் படும் ஹிந்துக்களும் கிறிஸ்தவராகிறார்களென விளம்பரம் செய்து மற்றவர்களையும் கவர்வது ஒரு நோக்கம். இன்னொன்று மேல் சாதியினரையும் கொண்டு வந்து சேர் என்று பனம் கொடுக்கிறவன் இடுகிற கட்டளை. கிறிஸ்தவம் நுழைந்த தொடக்க காலத்திலேயே ஜாதி விஷயத்தில் அது நீக்குப் போக்குடன்தான் இருந்தது. மேல் சாதியினரை மத மாற்றத் தனி மிஷனரிகள் இருந்தனர். அவர்கள் தாழ்த்தப்பட்டோரை மதம் மாற்றுவோருடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். இப்படியெல்லாந்தான் இங்கே கிறிஸ்தவம் வேரூன்றியது. எழுபதுகளின் தொடக்கத்தில் என்னை கிறிஸ்தவனாக்கப் பலரும் முயற்சி எடுத்தனர். மிகவும் கவர்ச்சிகரமான ஆசை காட்டுதல்கள் நடந்தன.
    -மலர்மன்னன்

  13. படுகர் இன மக்களுக்கு கோடானு கோடி நன்றிகள். ஹிந்துவாய் வாழ்வோம், ஹிந்து தர்மம் காப்போம். உங்களுக்கு எப்போதும் எங்கள் ஆதரவு பூரனமாய் உண்டு.

    சுரேஷ் கே

  14. இது போல நாடார் மற்றும் வன்னியர், பழங்குடியினர் சிரிச்தவர் என்ற வார்த்தை போடா அனுமதிக்க கொடாது

  15. இந்து மதத்தின் பெருமையை அறியாத மக்களே மதம் மாறுகின்றனர்…மதம் மாற்றுவதை தடுக்க அனைத்து இந்துகளும் இந்து மத விழிப்புணர்வு பெறுவது அவசியம்..நமது புனித நூலான பகவத் கீதையை அனைத்து இந்துக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்..
    மதமாற்றங்களை தடுக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு சந்நியாசிகளுக்கும் இந்து மத அமைப்புகளுக்கும் உள்ளது…தற்போது பல சந்நியாசிகள் தங்களுக்கும் சாதாரன மக்களுக்கும் தொடர்பில்லாத மாதிரியே நடந்து கொள்கின்றனர்..அவர்கள் அனைத்து இந்துக்களுக்கும் மத கல்வியை அளிக்க வேண்டும்..இந்து மத அமைப்புகளும் அனைத்து ஊர்களிலும் பகவத் கீதையை சொல்லி கொடுக்கும் வகுப்புகளை நடத்த வேண்டும்..குறிப்பாக குழந்தைகளுக்கு மத கல்வி அளிப்பது அவசியம்..இதையெல்லாம் பண்ணால்தான் நம் மதத்தின் பெருமைகளையும் அறிய முடியும் மத மாற்றங்களையும் தடுக்க முடியும் இந்துகளிடம் ஒற்றுமையும் வரும் ..மத கல்வி அளிக்காமல் மத மாற்றத்தை தடுப்பது கடினம்..இதை முதலில் இந்து அமைப்பை சேர்ந்தவர்களும் இந்து மத சந்நியாசிகளும் உணர வேண்டும்..

  16. These kind of news will not be published by any media, but if the community after all long years of peaceful protest gets frustrated with no action from govt, even involves in a small tussle with the christians, then all Media will jump and publish that ‘Minorities are targeted in Nilgiri district’, Communal clashes and so on….

    God save this SICKULAR India…

  17. Santhom church in mylapore now has “Kodi maram” with gold plated bali peetam where they hoist flags before starting brahmotsvam ( 10 days festival) just copied and being followed from hindu temples. shamless creatures of man made religion – why they have “Ther – car” festival
    celebrate diwali festival as light festival, holy, pongal and kuzh katachal like this. hindu dharma is agni devan who will swallow this man made religion and soon christians will even install lord krishna replacing cross – they will not feel shy on this. hindus must be educated against evil design. one of my christian friend who is attached to one big church always tells everyone
    pointing out their caste, those people all now opt for conversion to christianity.if he see a nadar person, he would declare that many nadars are converting and same way if he come across a brahmin, he would say that many brahmins are coming to church ect. i find this trick is told universally when i came across an indonesian christian who said many chineses are now converting. similarly this indonesian christian told me that christians in their country is more than 25% but they would always say only 3% otherwise muslims would be altert. similarly in india they claim only 3% of total population but it exceeded more than 12% now. in tamilnadu alone christians are 13% while they claim just 5% only. that is why karunanidhi gave a quota for 5% to christians and 3% to muslims as claimed by them. this quota system if implimented, would remove them out of hindus quotas of MBC,BC,OBC,ST,SC. Unfortunately due to political opposition of AIADMK eliminated this quota proposal of karunanidhi which would limit the minorities to only certain percentage while now they come under hindu quotas of MBC,BC,OBC,ST,SC to enjoy more number of medical/engineering seats under HIndus quotas.
    christians with money power, inducing greedy hindus with offers of money or job or properties
    or free medical treatment or free seats in loyala colleges ( many nadars converted only becouse their desire to learn in prestigious institutions run by christians). Many people send their children to schools in yercad , kodikanal – manford, ooty – lavadal school, good sherberd school and in stell maris chennai made some greey hindus to get converted in to christianity. so hindus must start educational institutions and offers seats to poor hindus with scholarships irrespective of caste or creed among hindus.

  18. கேரளத்தில் சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். ஒரு சர்ச் கூட்டத்தில் முன் வரிசையில் அமர சிலருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காரணம் முன்வரிசை நம்பூதிரி மற்றும் நாயராய் இருந்து மதம் மாறினவர்க்கு ஒதுக்கப்பட்டது அதில் பிற சாதியினருக்கு இடம் இல்லை என்பதே.
    சாதிகளற்ற மதமோ அல்லது பிரிவுகள் அற்ற மதமோ இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. ஆனால் இந்து விரோதிகளும்/துரோகிகளும் போலி மதச்சார்பின்மை வியா(வா)திகளும் எதோ இந்து மதத்தில் மட்டுமே சாதிப்பிரிவினை உள்ளது போல் நாடகமாடி வருகின்றனர். இஸ்லாமோ கிறிஸ்தவமோ இந்த மண்ணில் பெரும்பான்மை ஆகிவிட்டால் ரத்தக்களறிதான்.
    எல்லாம் வல்ல இறைவன் பாரத மண்ணைக் காப்பாற்றட்டும்.

  19. நகர்ப்புறங்களுக்கு வெளிப்பகுதிகளில், இப்படிப்பட்ட மத வன்முறைகள், நடத்தப்படுகின்றன. இதையெலாம் தடுக்க, அப்பகுதிகளிலெல்லாம் பிள்ளையார் கோவில்கள் கட்டச் செய்து, குடமுழுக்கு விழாக்களில் கலந்து கொண்டு
    இந்துக்களுக்குப் பக்க பலமாக விளங்கிய ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி அவர்களை, ஜெயலலிதா, யாரையோ, எதற்காகவோ, திருப்திபடுத்த, தீபாவளி அன்று கைது செய்து, கீழ்த்தரமா (ன)க பத்திரிகைகளில் விமர்சனம் செய்யச் செய்து, மதத் துரோகி ஆனார்.

  20. @g ranganaathan,
    //எல்லாம் வல்ல இறைவன் பாரத மண்ணைக் காப்பாற்றட்டும்.//
    அவன் பண்ண மாட்டான் , நாம் தான் காப்பாற்ற வேண்டும். உட்டுக்குள்ள உக்காந்துகொண்டு அடுத்தவன் செய்வான் என்று எண்ணினால் ஒன்றும் நடக்காது.

  21. //உட்டுக்குள்ள உக்காந்துகொண்டு அடுத்தவன் செய்வான் என்று எண்ணினால் ஒன்றும் நடக்காது.-ஸ்ரீ தமிழன்//

    ஸ்ரீ தமிழன், உங்களுக்கு என் பாரட்டுகள்.

    என் கடமையை இன்னொருவன் பார்த்துக்கொள்வான் என நினைப்போருக்கு இறைச் சக்தி துணையிருப்பதில்லை. பொறுப்புணர்ந்து கடமையாற்றுவோருக்கே இறையருள் கிட்டும். ஸ்ரீ க்ருஷ்ண தத்துவம் இதுவே. பாரத்ப் போரில் அவன் சாரதியாக இருந்து வழிகாட்டினானேயன்றி ஆயுதம் ஏந்திப் போரிடவில்லை.
    -மலர்மன்னன்
    .

  22. @ தமிழன் //அவன் பண்ண மாட்டான் , நாம் தான் காப்பாற்ற வேண்டும். உட்டுக்குள்ள உக்காந்துகொண்டு அடுத்தவன் செய்வான் என்று எண்ணினால் ஒன்றும் நடக்காது.//

    நன்றி தமிழன் அவர்களே ! காப்பாற்ற வேண்டிய அரசாங்கம் மதசார்பின்மை பாட்டு பாடுகிறது. இந்து உணர்வுள்ள கட்சிகளுக்கோ அமைப்புகளுக்கோ ஆதரவு அளித்தால் மதவாத தீட்டு வந்துவிடுகிறது. பரந்த மனப்பான்மையை இந்துக்களுக்கே குத்தகை எழுதி வைத்துவிட்டார்கள். பின்னே என்னதான் செய்வது ? 2ஜி கேஜி ஊழல் காலத்தில் கடவுள் தான் நாட்டை திவாலாகாமல் காப்பாற்றி கொண்டிருக்கிறார். அவரே இதற்கும் ஒரு வழி செய்வார்.

  23. சற்று முன்பு தான் MOVIES NOW தொலைகாட்சியில் அப்போகலிப்டோ படத்தை பார்த்தேன்.

    2006 ஆம் ஆண்டு எடுக்கபட்ட அப்போகலிப்டோ படத்திற்கும், 2010ல் எடுக்கபட்ட ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கும் ஒரு சம்ந்தம் உண்டு.

    https://en.wikipedia.org/wiki/Apocalypto

    https://en.wikipedia.org/wiki/Aayirathil_Oruvan_%282010_film%29

    இரண்டுமே, மத மாற்றும் வைரஸை பரப்பும் கூட்டத்தால் எடுக்க பட்டது.

    அப்போகலிப்டோ படத்தில் பண்பாடும் நாகரீகமும் நிறைந்த மாயன் மக்கள் காட்டுமிராண்டிகளாக, தலையை வெட்டி பந்தாடும் மக்களாக நரமாமிசம் திண்பவர்களாக சித்தரிக்கபட்டனர். மாயன் மக்களின் வழிபாட்டை மிக கேவலமான காட்டு மிராண்டிகளாக காட்டியுள்ளனர். படத்தில் சித்தரிக்கபட்ட வில்லனிடம் இருந்து ஓடி ஹீரோ கடைசியில் கடற்கரை அடையும் பொழுது, சிலுவை தாங்கிய, மதம் மாற்றும் வைரஸ் கூட்டம் இறங்கிறது. படம் முடிகிறது.

    ஆயிரத்தில் ஒருவன் படமும் பண்பாடும் நாகரீகமும் நிறைந்த சோழ பேரரசை கேவலமாக சித்தரித்து அவர்களை ஒரு மாந்திரீக கூட்டம் போலவும், நர மாமிசம் திண்பவர்கள் போலவும் சித்தரீத்து உள்ளனர். அநேகமாக இரண்டாம் பகுதியில் கதாநாயகனை மதம் மாற்றும் வைரஸ் கூட்டம் காப்பாற்றுவது போல் காப்பாற்றுவார்கள் என்று நினைக்கிறேன்.

    மதம் மாற்றும் வைரஸிடம் இருந்து நம்மை காப்பாற ஒரே மருந்து நமது சனாதன என்றுன் ஹிந்து என்றும் சொல்லப்படும் பாரத பண்பாடு தான்.

    தயவு செய்து, தமிழ் ஹிந்து வாசகர்கள், குறைந்த பட்சம் நண்பர்கள் மற்றும் உற்வினர்களுக்கு இந்த மதம் மாற்றும் வைரஸை பற்றி சொல்லி அவர்களை காப்பாற்றுங்கள்.

    வரும் முன் காப்போம்.

  24. சற்று முன்பு தான் MOVIES NOW தொலைகாட்சியில் அப்போகலிப்டோ படத்தை பார்த்தேன்.

    2006 ஆம் ஆண்டு எடுக்கபட்ட அப்போகலிப்டோ படத்திற்கும், 2010ல் எடுக்கபட்ட ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கும் ஒரு சம்ந்தம் உண்டு.

    https://en.wikipedia.org/wiki/Apocalypto

    https://en.wikipedia.org/wiki/Aayirathil_Oruvan_%282010_film%29

    இரண்டுமே, மத மாற்றும் வைரஸை பரப்பும் கூட்டத்தால் எடுக்க பட்டது.

    அப்போகலிப்டோ படத்தில் பண்பாடும் நாகரீகமும் வானவியல் அறிவும் நிறைந்த மாயன் மக்கள் காட்டுமிராண்டிகளாக, தலையை வெட்டி பந்தாடும் மக்களாக நரமாமிசம் திண்பவர்களாக சித்தரிக்கபட்டனர். மாயன் மக்களின் வழிபாட்டை மிக கேவலமான காட்டு மிராண்டிகளாக காட்டியுள்ளனர். படத்தில் சித்தரிக்கபட்ட வில்லனிடம் இருந்து ஓடி ஹீரோ கடைசியில் கடற்கரை அடையும் பொழுது, சிலுவை தாங்கிய, மதம் மாற்றும் வைரஸ் கூட்டம் இறங்கிறது. படம் முடிகிறது.

    (பல லட்சகனக்கான மாயன் மக்கள் இந்த வைரஸ் கூட்டத்தால், ஜாலியன் வாலாபாகில் நடத்தியது போல் நடத்தி கொன்று ஒட்டு மொத்த மாயன் மக்களையும் அழித்தார்கள்)

    ஆயிரத்தில் ஒருவன் படமும் பண்பாடும் நாகரீகமும் நிறைந்த சோழ பேரரசை கேவலமாக சித்தரித்து அவர்களை ஒரு மாந்திரீக கூட்டம் போலவும், நர மாமிசம் திண்பவர்கள் போலவும் சித்தரீத்து உள்ளனர். அநேகமாக இரண்டாம் பகுதியில் கதாநாயகனை மதம் மாற்றும் வைரஸ் கூட்டம் காப்பாற்றுவது போல் காட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.

    (1956 ஆன் ஆண்டு இந்த வைரஸ்களால் தொடங்பட்ட இலங்கை போரில் ஒட்டு மொத்த தமிழ் இனம் அழிக்க பட்டது. இந்த வேலையை இந்த வைரஸ் நடத்த எடுத்து கொண்டது வெறும் 53 வருடங்கள்)

    மதம் மாற்றும் வைரஸிடம் இருந்து நம்மை காப்பாற ஒரே மருந்து நமது சனாதன என்றும் ஹிந்து என்றும் சொல்லப்படும் பாரத பண்பாடு தான்.

    தயவு செய்து குறைந்த பட்சம் நண்பர்கள் மற்றும் உற்வினர்களுக்கு இந்த மதம் மாற்றும் வைரஸை பற்றி சொல்லி அவர்களை காப்பாற்றுங்கள்.

    மாயன் மக்களுக்கு ஏற்பட்டது ந்மக்கு வராமல் இருக்க பாரத பண்பாட்டை அறியுங்கள்…..வரும் முன் காப்போம்.

  25. முத்துக்குட்டி
    19 June 2011 at 7:32 pm
    // தாமஸ் என்று ஒருவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதற்கோ, இங்கே ஒரு பிராம்மணர் அவரைக் கொன்றார் என்பதற்கோ எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது.// என்று தோமாவைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஆனால் தோமாவின் கல்லறையைப் பற்றி மார்க்கோபோலோ(1293) “கிறித்தவர்களும் சரசினியரும் திருயாத்திரையாக வந்து, இவ்விடத்தை அடிக்கடி தரிசிக்கின்றனர். சரசினியர் இப்புனிதரை மிக வணக்கத்துடன் போற்றி, இவர் ஒரு சரசினியர் ஆகவும் பெரும் இறைவாக்கினராகவும் இருந்தார் எனக் கூறுகின்றனர். ‘புனித மன்னன்’ எனப் பொருள்படும் ‘அவரியான்’ என்ற பட்டத்தையும் அவருக்கு அளித்துள்ளனர். இப்புனித இடத்திற்கு திருயாத்திரையாக வரும் கிறித்தவர்கள், புனிதர் கொல்லப்பட்ட இடத்திலிருந்து மண் எடுத்துச் சென்று, நோயாளிகளுக்கு அளிக்கின்றனர்; இறைவனின் வல்லமையாலும் புனித தோமையாரின் சக்தியாலும் நோயுற்றவன் உடனே குணமடைகிறான். இம்மண் சிவப்பு நிறமுடையது…” என்றும் (காண்க: P.J.Podipara, The Thomas Christians, St.Pauls Publications, Bombay, 1970, p.23), கே.ஏ. நீலகண்ட சாத்திரி தம்முடைய ‘தென்னிந்திய வரலாறு’ என்னும் நூலில் (வெளியீடு: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்,1973) “பிரான்சைச் சார்ந்த மரிக்னொல்லி ஜான் என்னும் துறவி, செயிண்ட் தாமஸ் மாதா கோவிலைத் தரிசிப்பதற்காகச் சோழ மண்டலக் கடற்கரைக்கு வந்தார்” எனவும் (பக்கம் 50) எழுதியிருக்கிறார். இவை தகுந்த சான்றுகளாகத் தாமே இருக்கின்றன. பிறகு ஏன் சான்றுகள் இல்லை என்றும் தோமா ஒரு கட்டுக்கதை என்றும் எழுதியிருக்கிறீர்கள்?

  26. ‘ ST THOMAS NEVER CAME TO INDIA BUT CAME UP TO WEST PUNJAB’ – THIS STATEMENT CAME FROM NONE BUT THE PREVIOUS POPE ST PAUL WHO WAS RECENTLY SANCTIFIED WITH BEAUTIFICATION CEREMONY BEFORE BEING GRANTED SAINTHOOD FOR WHICH HIS BODY IN COFFIN WAS TAKEN OUT AND KEPT IN VATIGAN FOR 45 DAYS IN ITALY.

    SO THIS STATMENT WAS ISSUED BY POPE HIMSELF AND VATIGAN DENIED ANY KNOWLEDGE OF ST THOMAS VISIT TO INDIA. THERE ARE THREE TOMBS – BURIALS FOR ST THOMAS – ONE IN ITALY NEAR TURIN AND ANOTHER IN SYRIA AND THIRD ONE IN ST THOMAS MOUNT NEAR CHENNAI ( THIS WAS NAME AFTER A HINDU SAGE ‘PARANGI MUNIVAR” AND CALLED AS PARANGI MALAI – LATER MISSIONARIES OCCUPIED THIS AND CHANGED AS ST THOMAS MOUNT TELLING THIS WAS HOUSING THE TOMB OF ST THOMAS.

    PLEASE VISIT THE WEBSITE – https://www.hamsa.org WHICH IS HOISTED BY A EX CHRISTIAN PASTER AND FATHER FROM CANADA WHO DID LOT OF RESEARCH ABOUT CHRISTIANITY BEFORE HE HIMSELF GOT CONVERTED IN TO HINDUISM AFTER REALISING THE TRUTH AND READING LOT OF BOOKS. HIS WEBSITE TEARS THE BASIC OF CHIRISTIANITY AND FALSEHOOD OF ST THOMAS WITH FACTS AND FIGURES INCLUDING THE DENIAL LETTERS FROM VATIGAN. TRUTH CAN NOT BE SUPPRESSED.

    MISSIONARIES ARE CUNNING AND CLEVER IN FABRICATING AND DOCTORING THE HISTORY AND SCRIPTURES TO SUIT THEM TO GIVE IMPRESSION THAT CHRISTIANITY EXISTED AND CAME LONG TIME TO INDIA BY CHANGING THE HISTORY. EVEN THEY DECLARED THAT THIRUVALLUVAR WAS A CHRISTIAN HIMSELF. WHAT A FOOLISH THOUGHT AND CUNNING IDEA FROM THE MISSIONARIES. CHRISTIANITY IS THE CURSE TO THE SOCIETY. MANY FOREIGNERS WHO REALISE THE TRUTH LEAVE THIS MAN MADE RELIGION WITHOUT ANY SPIRITUAL CONCEPT BUT WITH A AIM ON COMMERCIAL MOTIVE FOR CONVERSION TO BRING ALL PEOPLE IN THE WORLD TO BE BROUGHT UNDER ONE UMBERLLA OF EUROPANS WITH THE MONEY POWER OF AMERICA.

  27. நீலகிரியில் மதமாற்றம் குமுறும் படகர் சமுதாயம் என்ற கட்டுரை கண்டேன். நீலமலையில் வாழும் பழங்குடிகளைப்பற்றி ஆய்வு செய்த ஒரு சமுகப்பொருளாதார ஆராய்ச்சியாளன் என்ற வகையிலும் நீலமலைத்தொடரின் அடிவாரத்தில் பிறந்து வளர்ந்து வந்தவன் என்ற வகையிலும் எனது ஒரு சில கருத்துக்களைப்பதிவு செய்கிறேன்.
    இம்மலைப்பகுதியில் கிறித்தவ மதமாற்ற முயற்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. தொல் பழங்குடிகளான படகர்கள், கோத்தர்கள்(அவர்கள் மொழியில் கோவ்), குறும்பர்கள்,இருளர்கள், பணியர்கள், காட்டுனாயக்கர்கள் மத்தியிலும், இலங்கையிலுருந்து தாயகம் திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்கள் மற்றும் தாழ்தப்பட்ட மக்கள் மத்தியிலும் பலவகையினரான கிறித்தவ மிசனரிகள் மதமாற்ற முயற்சி செய்து வருகிறார்கள். பழங்குடிகள் ஓரு சிலரையே அவர்கள் மதம் மாற்றியுள்ளார்கள். ஏழ்மை மற்றும் அறியாமை இந்த மதமாற்றத்திற்கு துணைசெய்கின்றன. மதமாற்ற முயற்சிக்கு பழங்குடிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மிசனரிகள் மற்றும் கிறித்தவ தொண்டு நிறுவனங்களின் பாச்சா பலிக்கவில்லை.
    ஓரு கோத்தர் கிராமத்தில் ஒரு பெரியவரிடம் உரையாடிக்கொண்டிருந்த போது அருகில் இருந்த ஒரு பெரிய் கிறித்தவப்பள்ளியைக்காட்டி அவர் சொன்னார். இந்த பள்ளி நிறுவனர் எங்களை மதம் மாறினால் எல்லோருக்கும் கல்வியினை தருவதாகவும் பல வசதிகளையும் செய்வதாகவும் கூறினார். ஆனால் நாங்கள் உயிரே போனாலும் அது முடியாது என்று சொல்லிவிட்டோம். அந்த ஊர் கோத்தர் கோயிலின் பூசாரி பெருமையாகக் கூறினார் ஒரு கோத்தர் கூட கிறித்தவராக வில்லை என்று.எண்ணிக்கையில் மிக சிறியதாக இருந்தாலும் கோத்தர்களிடம் தம் சமய நம்பிக்கையில் காணப்பட்ட உறுதி இன்றும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.
    எண்ணிக்கையில் நீலமலையில் பெரும்பான்மையாக நான்கு மலை முகடுகளிலும் வாழும் படகர் சமுகமும். மதமாற்றத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது அதையும் எனது களப்பணியின்போது கண்டேன். நீலமலையின் பழங்குடிகளான படகர்களில் ஒரு சிலர் மதம் மாறுவதற்கும் ஏழ்மையே காரணம். 1931 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொல்பழங்குடிகளாக கருதப்பட்ட படகர்கள், எட்கர் தர்ஸ்டன் என்ற மானுடவியலாளரால் “more or less hinduised primitive tribe” என்று அழைக்கப்பட்ட படகர்கள் சுதந்திரத்திற்குப்பின்னர் பழங்குடி பட்டியலில் சேர்க்கப்படவில்லை. எந்த காரணமும் அதற்கு குறிப்பிடப்படவில்லை. அப்படி படகர்கள் ST அந்தஸ்த்து பெற்று இருந்தால் நீலகிரி பழங்குடி பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஏன் என்றால் நீலகிரியில் பழங்குடிகள் பெரும்பான்மை பெற்று இருப்பார்கள். இதன் விளைவு படகர் சமூகத்தின் முன்னேற்றம் தடைபட்டது தான். அரசின் பழங்குடிக்கான சிறப்பு சலுகைகல் அவர்களுக்கு பயந்தரவில்லை. 1990களில் தொடங்கிய தேயிலை விலை வீழ்ச்சி சிறு விவசாயிகளான படகர்களின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. இந்த சூழல்தான் ஒருசில ஏழை படகர்கள் மதம் மாறுவதர்க்கு காரணம். படகர் இனத்தின் பெருமை அவரிடத்தில் காணப்படும் ஒற்றுமை கூட்டுரவு பண்பாடுதான். மதமாற்றத்தை தடுக்க இப்பண்பாடு போற்றப்படவேண்டும். படகர்கள் பழங்குடிப்பட்டியலில் சேர்க்கப்பட ஹிந்து இயக்கங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதோடு இணைந்து போராடவும் முன்வர வேண்டும்.
    நீலகிரியின் பழங்குடிகள் மீது ஹிந்து சமூகத்தொண்டு நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் மிகவும் ஏழ்மைனிலையில் இருக்கும் குறும்பர்கள், இருளர்கள், பணியர்கள், காட்டு நாயக்கர்கள் மத்தியில் பணிபுரிய அவை முன்வரவேண்டும். அவர்களின் கல்வி, மருத்துவம், பொருளாதார மேம்பாட்டிர்க்காக அவர்களோடு இணைந்து செயாலாற்றினால். மதமாற்றம் என்னும் போரை நாம் வெற்றிகொள்ளவியலும் .

  28. ஹிந்து இயக்கங்கள் தற்பொழுது மிக விழிப்புடன் செயல் பட வேண்டும். ஏன் எனில், இது போன்று மத மாற்ற விசயங்களை எதிர்த்து போரடும் தலைவர்கள் மீது பொய் புகார்கள், பாலியல் குற்றச்சாட்டு, கட்ட பஞ்சாயத்து புகார்கள் போன்றவற்றின் மூலம் கிறித்துவ மிசினரிகள் பழி போட்டு அந்த தலைவர்களை சமுதயத்தில் இருந்து தனிமைபடுத்தி, மதமாற்றம் போன்ற செயல்களை செய்கின்றன.

    இது இங்கு மட்டும் அல்ல, பல இடங்களில் ஒரு சில கிராமத்து மக்களை யாருக்கும் தெரியாமல் மதம் மாற்றி அவர்களை வைத்து அந்த கிராமத்து தலைவர்கள் மீது அவதூறு வழக்கு அல்லது காவல் நிலையத்தில் புகார்கள் முதலியவற்றை தொடுக்கின்றன. பின்னர் இந்த வழக்கில் இருந்து அந்த தலைவர்களை காப்பாற்றுவது போல் நடித்து, பின்னர் அவர்களையே மதம் மாற்றி விடுகின்றனர்.

    இதற்கு ஒரு சிறந்த உதாரணம், ஐப்பன் கோயில் கருவரையில் தான் நுழைந்த தாக பொய் புரலியை அவிழ்த்து விட்ட ஜெயமாலா. இவர் மதம் மாறியவர். இப்போது ஒரு கிறிஸ்தவ வெறியராக இருப்பவர் என்பது பலருக்கு தெரியாது.

    https://bharatian.wordpress.com/2011/01/17/sabarimala-temple/

    மக்கள் இவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர்கள் வழியிலேயே போய் தான் இவர்களை விரட்ட முடியும்.

    இராஜஸ்தாம் கப் பஞ்சாயத்தும் மீதான பழியும் இது போன்ற ஒரு புரளியே, தனிப்பட்ட ஒரு சிலர் தவறை மிஷினரி மீடியா ஒட்டு மொத்த கப் அமைப்பின் மீதே திருப்பி விட்டன. ஏன் காவல் துரையிலும் நீதி துரையிலும் தவருகளே இல்லையா? அந்த தவருக்காக, இந்த துறைகளை கலைத்து விடலாமா?

  29. Christianity is based on concept
    – father god
    – son of god : jesus
    – holy angel or holy grist :gabrital
    – Satan – enemy of god : so black colored with two horns like demons of hindus scriptures

    Now st paul was able to build up the imaginery figures for Satan and garbital but failed miserably to show the supreme god : father god – where is the image of this supreme god.
    even after 2000 years starting of this man made (mad) religion, christians scholars are not able to arrive the figure or image of their god . Therefore they finally branded ‘jesus’ as their god
    although in bible it is said that jesus himself told ” i am the man sent by god’ and in another verses ‘ I am the son of god’ and also as ” i am the messenger of god’.
    Why they invented the idea of that jesus has absolved the sins of “sinners” – all the human race
    ( not included the animals or birds or fishes or any living beings or plants or vegitations since christianity never consider these living beings are having souls becouse they do not have any knowledge to worship the god ) – in this hinduism consider ”soul ‘has knowledge and full of knowledge and only if soul wants to reach the godhood, he can think of god otherwise such ignorant souls can lead a samskara – taking birth and rebirth. since christianity never believe
    reincornation – rebirth and karmas – good or bad deeds ,they treat plants animals or birds or plants or trees are not having souls since they do not worship. hinduism consider they too have souls and will take rebirth and after some cycle they might be born as human beings also.

    so jesus story was linked with his absolving the sins of human beings alone by subjecting himself in the cross by crusification so by spilling the blood, he washes the sins of human beings. so jesus whom christians consider as god is dead person or messenger . so christians scholars built and patched up with some storry in half baked form by linking the story of jesus with god and also holy angel ( garbirtal)- which they might think to match our vishnus vahana garuda and satan as bhudana or sakataswaran or bhanswaran or ravanan or any demons found in hindus scriptures. so they built up this imaginary story in the form of christianity to fool the people.

    finally in the above process, they could not bring any image or figure for the ‘GOD’ like our vishnu as supreme god. so similarly like lakshmi, the consort of vishnu could not be matched to replace as the female partner with jesus .therefore christian scholars brought his mother ‘mary’ as the virgin lady , a story prepared and fashioned by them.

    so finally christianity is the curse to the society to fool the people. hindus consider this maya
    or shadows of original in the kali yuga have come in the form of christianity.

  30. The christians should stop the converting badagas and other Hindu communities by brain washing and utilising their innocence.
    Heritage culture to be protected
    No true religion follower will enter such act

  31. நான் வணங்கும் முருகப்பெருமான் இன்றுபோல் என்றும் அந்த கிருஸ்தவ மதமாற்றிகளை எதிர்த்துப் போராடும் வல்லமையை அந்த படுகர் இனமக்களுக்குத் தரவேண்டுமாய் பிரார்த்தனை செய்கிறேன்..

  32. படுகர் இனத்தவருக்கு பழங்குடியினர் அந்தஸ்து: தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு
    https://www.dinamalar.com/News_Detail.asp?Id=387582
    நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இனத்தவர்கள், தங்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே இவர்களது கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், படுகர் இனத்தவர்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்து விட்டது.

    தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் படுகர் என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள், 3.5 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள், ஊட்டியில் ஒன்றரை லட்சம் பேரும், கூடலூரில் ஒரு லட்சம் பேரும், குன்னூரில் ஒரு லட்சம் பேரும் வசித்து வருகின்றனர். தங்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை அளித்திட கோரிக்கை வைத்து வருகின்றனர். 1991ம் ஆண்டு தான், மத்திய அரசுக்கு முறைப்படி கோரிக்கை வந்தது. இதுதொடர்பாக, தமிழகத்தில் அப்போது இருந்த அ.தி.மு.க., அரசாங்கம், மத்திய அரசை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தது. அந்த கடிதம், மத்திய அரசின் ரிஜிஸ்டிரார் ஜெனரலின் பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர், இந்த கோரிக்கையை ஏற்க இயலாது எனக் கூறி, மத்திய அரசு நிராகரித்து விட்டது.

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 28ம் தேதியன்று, மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், அமைச்சர் கி÷ஷார் சந்திரதேவுக்கும் இந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது: தமிழகத்தில் நீலகிரியை சுற்றி வசிக்கும் படுகர் இன மக்களின் கோரிக்கை குறித்து, ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு, படுகர் இனத்தவர்கள் முழு தகுதி படைத்தவர்கள். பழங்கால கலாசாரம் அவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் தான் வசிக்கின்றனர். இவர்களுக்கென்றே, படகு என்ற மொழியும் கூட உள்ளது. 1931ம் ஆண்டு, அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியினர் எடுத்த கணக்கெடுப்பிலும் கூட, பழங்குடியின பட்டியலில் தான் படுகர் இன மக்களை வைத்திருந்தனர். நீலகிரி மாவட்டத்தில், 1817ம் ஆண்டில் தோடர், கோட்டா, குரும்பர், படுகர் ஆகிய இனத்தவர்கள் மட்டுமே இருந்தனர். இவர்கள் சோளம், பார்லி போன்ற பிரத்யேக தானிய வகைகளை பயிரிடுபவர்களாகவும் இருக்கின்றனர். எனவே, இவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த கடிதத்தை, மத்திய அரசின் ரிஜிஸ்டிரார் ஜெனரல் அதிகாரிகள், தங்களது பரிசீலனைக்கு மீண்டும் எடுத்துக் கொண்டனர். இதுதொடர்பாக ஆய்வு செய்து பார்த்து விட்டு, தங்களது அறிக்கையை மத்திய பழங்குடியின அமைச்சகத்திடம் வழங்கினர். அந்த அறிக்கையில், பழங்குடியின பட்டியலில் ஒரு இனத்தவர்களைச் சேர்க்க வேண்டுமெனில், விசேஷமாக சில தகுதிகளை அந்த சமூகம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, தனிப்பட்ட பழக்க வழக்கங்களைப் பெற்றிருக்க வேண்டும். தவிர, அவர்களது வாழ்க்கைத் தரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தாக வேண்டும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வகையில், படுகர் இனத்தவர்களது பழக்க வழக்கங்கள் இல்லை. எனவே, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, படுகர் இனத்தவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க இயலாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் கி÷ஷார் சந்திர தேவ், கடந்த அக்டோபர் 11ம் தேதியன்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,”தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க இயலாது. இதுதொடர்பாக, மாநில ஆதிதிராவிடர் நலத் துறைக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

    – நமது டில்லி நிருபர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *