ஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்

ஊழலுக்கும், கறுப்புப் பணப் பதுக்கலுக்கும் எதிராக வெடித்துக் கிளம்பிய பாபா ராம்தேவின் சத்தியாக்கிரக போராட்டத்தை வன்முறையாக காங்கிரஸ் அரசு கலைக்க முயற்சித்துள்ளது. அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்து போராடிய சுவாமி ராம்தேவ் மற்றும் 25000 க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த போது, அரசு உத்தரவின் பேரில் போலீஸ் உள்ளே நுழைந்து தடியடி நடத்தி, முப்பதுக்கும் மேற்பட்டோரை காயப் படுத்தி, கண்ணீர்புகை குண்டுகள் வீசி கலைத்துள்ளது. சுவாமி ராம்தேவ் அவர்களையும் போலீஸ் கைது செய்து கடத்தி டெல்லியை விட்டு வெளியேற்றி உள்ளது. இக்கட்டுரை வெளியிடும் வரை, சுவாமி ராம்தேவின் நிலை குறித்து செய்திகள் இல்லை.

காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கையில் அவர்களின் உறுதியை விட பயமே தெளிவாகத் தெரிகிறது. நாட்டுக்குள் நுழைந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்துகிற தீவிரவாதிகளுடனும், தீவிரவாத நாடான பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருக்கிற அரசு, அமைதி வழியில் பட்டினி கிடக்கிற ஒரு போராட்டத்தை நசுக்க வேண்டிய அவசியம் என்ன? ஏன் இவ்வளவு அவசரம், பயம், பதட்டம்?

போலீஸ் நடவடிக்கை

அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளும் சுவாமி ராம்தேவ்

அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளும் சுவாமி ராம்தேவ்

சத்தியாக்கிரகம் நடந்த இடம்

போலீஸ் நடவடிக்கை
போலீஸ் நடவடிக்கை

இது ஒரு பாசிச அரசியல் என்று கூறுகிறார் பி.ஜெ.பியின் மூத்த தலைவர் அத்வானி. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உடனடியாக பார்லிமென்ட் கூட்டத்தை அவசரமாகக் கூட்ட வேண்டும் – இந்தப் பிரச்சனை குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “ஒரு துறவி ஊழலுக்கு எதிராக போராடுகிறார். நள்ளிரவில் பெண்களும் குழந்தைகளும் குழுமியுள்ள இடத்தில் அராஜகம் அரங்கேறி உள்ளது. பிரதமரே இதற்கு பொறுப்பு” என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க வின் தலைவர் நிதின்கட்கரி அவர்கள் தனது எதிர்ப்பை தெரிவிக்கும் போது, “இந்த அரசு பிரச்சனைகளை முக்கியமாகக் கருதுவதே இல்லை. அப்பாவி மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கின்றனர். இது எமர்ஜென்சி காலகட்டம் போல உள்ளது. அந்த எமர்ஜென்சியும் 1975ல் ஜூன் மாதத்தில் காங்கிரஸ் அரசால் கொண்டு வரப் பட்டது. இந்த நிகழ்வும் அதே போல ஜூன் மாதத்திலேயே நிக்ழந்துள்ளது. இதற்கு பிரதமரும், காங்கிரஸ் தலைவியும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பி.ஜே.பி கட்சியின் சார்பிலும் இந்த பிரச்சனையில் சத்தியாக்கிரக போராட்டம் துவங்கும்” என்று அறிவித்துள்ளார்.

“இன்றைய தினம் இந்த நாட்டில், பத்து கோடி மக்கள் என்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளனர். இது எந்த மதச் சார்பினாலும் அல்ல, நடைமுறை நிலையை அவர்கள் உணர வைத்ததால் தான். இந்த ஊழலை எதிர்த்து ஐந்து வருடங்களாக போராடி வருகிறேன். ஒரு லட்சம் கிமீ நடைப் பயணம் செய்த பின் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன். ராம்தேவ் திடீரென்று வானத்திலிருந்து குதிக்கவில்லை. தரையில் தான் வாழ்கிறேன். தரையிலிருந்தே உழைத்து மேலே வந்திருக்கிறேன்.”

“என்னுடைய கணக்கு படி, வெளிநாடுகளில் சுமார் நானூறு லட்சம் கோடி கறுப்புப் பணம் பதுக்கப் பட்டுள்ளது. இது சிறிய தொகை அல்லவே. இது என்னுடையை கருத்து அல்ல; பொருளாதாரம் குறித்துப் படித்தவர்களின் கருத்து இது.. எப்போதெல்லாம் உண்மையின் பாதையில் ஒருவர் செல்கிறாரோ அவரை மற்றவர்கள் பைத்தியம் என்று கூறுவர். என்னை இதுவரை அப்படி பைத்தியம் என்று அழைக்கவில்லை. நான் சொல்வதன் உண்மை நிச்சயம் வெளிப்படும். வரும் நாட்களில், நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்து ஊழல் குற்றம் புரிந்தவர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப் படுவார்கள்.”

சுவாமி ராம்தேவ்

அண்ணா ஹசாரே போராட்டம் நடத்திய காலம் போலன்றி, பாபா ராம்தேவின் போராட்டத்துக்கு ஆரம்பத்திலிருந்தே அரசியல்வாதிகள், மீடியா என்று எல்லா தரப்புகளிலும் ராம்தேவ் அவர்களின் நோக்கங்களுக்கு உள்ளர்த்தம் கற்பித்து அவதூறு வீசப்பட்டது. இதையே திரும்பத் திரும்ப பேசினார்களே தவிர அவரது போராட்டத்துக்கான குறிக்கோளைக் குறித்து பேசத் திராணி இல்லை.

அப்படி என்னதான் பாபா ராம்தேவ் கோரிக்கை வைத்தார்?

  • வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல நூறு லட்சம் கோடி பணத்தை இந்தியாவின் தேசிய சொத்தாக அறிவித்து அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். அதை மீ்ட்டுக் கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • அளவுக்கு அதிகமாக, முறைகேடாக பணம் சம்பாதித்து, அந்த கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாக பதுக்கி வைப்பது தேசிய குற்றம் என்று அறிவிக்க வேண்டும்.
  • ஊழல் செய்து, ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்.
  • அன்னா ஹசாரே தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் குழு மூலம் வரையறுக்கப்பட்டு வரும் லோக்பால் மசோதா மிகவும் வலுவான சட்டமாக இருக்க வேண்டும்.
  • ஊழல் குற்றச்சாட்டுக்களை விரைந்து விசாரிக்க எல்லா மாநிலங்களிலும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்.
  • ஊழல் செய்து சிக்கிக் கொள்ளும் வி.ஐ.பிக்கள் மீதான வழக்கு விசாரணை ஓராண்டுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
  • ஊழல் செய்வதற்கு 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களும் ஒரு விதத்தில் உதவியாக உள்ளன. எனவே 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களையே ரத்து செய்ய வேண்டும்.

இவையே ராம்தேவ் அவர்கள் எழுப்பிய கோரிக்கைகள். அரசியல் வாதிகள், சினிமாத் துறையினர், தொழிலதிபர்கள், கிரிக்கட் விளையாட்டு சூதாட்டக் காரர்கள், என்.ஜி.ஓக்கள் என்று பலருக்கும் ஜுரம் கொள்ள வைக்கும் இந்த கோரிக்கைகளை நசுக்க, ஊழலுக்கு பெயர்போன காங்கிரஸ் அரசு போலீசை ஏவியதில் வியப்பேதும் இல்லை.

இது இப்படி நடக்கும் என்பதற்கு குறியீடாக, இரண்டு நாட்கள் முன்பிருந்தே அவதூறுப் பிரச்சாரம் தூண்டிவிடப் பட்டது. ராம்தேவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் வரப் போவதற்கு ஏற்ப உண்ணாவிரத போராட்டத் திடலில் அடிப்படை வசதிகளை செய்ததைக் கூட குறை கூறினர். பாபா ராம்தேவ் பெரும் பணக்காரர் என்று பிரச்சாரம் ஓடியது.

ராம்தேவ் எழுப்பிய கோரிக்கைகள் பிரச்சனைகள் குறித்து எந்த மீடியாவும் வாயைத் திறக்கவில்லை. மெழுகுவர்த்திகளுடன் ஆதரவு தெரிவிக்கும் என்.ஜி.ஓக்களைக் காணவில்லை. பாலிவுட் நடிக நடிகைகள் யாரும் ஆதரவு தெரிவிக்க வில்லை. உண்மையில் யாரும் கேட்காத போதே ஷாருக்கான் இந்த போராட்டத்துக்கு ஆதரவு இல்லை என்றார். அவர் கவலை அவருக்கு. இதிலிருந்தே ஊழல்வாதிகளும், கறைபடிந்த நேர்மையற்ற மீடியாவும் ராம்தேவிற்கு எதிராக இருந்ததை புரிந்து கொள்ளலாம்.

இன்னும் கொஞ்சம் அதிகமாகப் போய், காங்கிரசின் திக்விஜய் சிங் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக ராம்தேவை விமர்சிக்க ஆரம்பித்தார். பாபா ராம்தேவை ஒரு மோசக்காரன் என்றார். அப்படி ராம்தேவ் மோசக் காரர் என்றால் ஏன் ஓடோடிச் சென்று நான்கு மத்திய மந்திரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கேள்விக்கு பதில் இல்லை. யோகா குரு ஏன் அரசியல் பிரச்சனையை கையில் எடுக்கிறார் என்று கபில் சிபல் கேட்கிறார். அப்படிப் பார்த்தல் கபில் சிபல் வெறும் வக்கீலாக மட்டுமே அல்லவா இருக்கவேண்டும்? அவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?

2G ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன் வெல்த் ஊழல் என்று லட்சம் கோடி ரூபாய்களில் ஊழல் மேல் ஊழலாக இந்த அரசு பெரும் பெரும் ஊழல்களில் மிதந்து கொண்டு இருந்த போதே, காங்கிரஸ் அரசில் நேர்மையாளர்கள் யாரேனும் மிச்சம் இருந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பிரதமர் உட்பட எவரும் ஊழல குற்றச்சாட்டுக்களை கண்டு கொள்ளவில்லை. பார்க்கப் போனால், உள்துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் இன்று சிறையிலிருக்கும் அமைச்சர் ராசா போன்றவர்களை பரிந்து ஆதரவு தெரிவித்து வந்தனர். சுப்ரீம் கோர்ட் தலையீட்டின் பேரிலேயே இப்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

சுவாமி ராம்தேவ்

சென்னையில்...

ijk-chennai-protest

அண்ணா ஹசாரே - ராம்தேவ் இந்நிலையில் மக்களின் ஓட்டு மொத்த கோபமும் அண்ணா ஹசாரே வழியாகவும், பாபா ராம்தேவ் போராட்டத்தின் வழியாகவும் வெடித்துக் கிளம்பியது. எங்கேயோ உத்திரப் பிரதேசத்தில் இருப்பவரும், தெற்கே கொயமுத்தூரிலும், திருச்சியில் இருப்பவரும் கூட இந்த போராட்டத்துக்கு தொடர்பு கொண்டார்கள். சென்னையில் சுமார் ஆறாயிரம் மக்கள் ராம்தேவிற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர். சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், கேஜ்ரிவால் ஆகியோரும் ஞாயிறன்று ராம்தேவின் போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்தனர். இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்காத அரசு, தனது புத்திசாலித் தனத்தின் உச்சமாக, நள்ளிரவு போலீஸ் நடவடிக்கையில் இறங்கி விட்டது.

வெளிப்படையாக தேச விரோதப் பேச்சுக்கள் பேசித் திரியும் அருந்ததி ராய் போன்றோரின் மீது அரசு பாய்வதில்லை. அமைதியாக போராட்டம் நிகழ்த்துவோரின் மீது அதிரடிப் படை கொண்டு நடவடிக்கை எடுக்க என்ன அவசியம்? ராம்தேவ் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தெரிவித்தது ஏதோ ஒரு பெரும் குற்றச் செயல் போல குறிப்பிடுகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி போன்ற அமைப்புகள் கட்சிகள் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாதா என்ன?

கடந்த குடியரசு தினத்தின் போது, பி.ஜே.பி காஷ்மீரில் தேசியக் கோடி ஏற்றுவதற்கு தடை விதித்து காஷ்மீரினுள்ளேயே நுழைய முடியாமல் தடுத்தனர். இப்போது பாபா ராம்தேவை தில்லியினுள் நுழையக் கூடாது என்று தடுத்துள்ளனர். இப்படி இன்னும் எத்தனை நாள் தான் தன் மக்களின் பேச்சுரிமையை, அடிப்படை உரிமைகளை மறுத்து ஒரு அரசு செயல்பட முடியும்?

பாபா ராம்தேவின் போராட்டம் அகற்றப் பட்டது, ஜனநாயகப் படுகொலை. காங்கிரசின் பாசிச அரசியல் தவிர வேறு எதுவும் இல்லை. ஊழலுக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய தருணம் இது.

ஊழல் ராவணன் வேடத்தில்

39 Replies to “ஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்”

  1. Pingback: Indli.com
  2. ஸ்வாமினி பிரக்யசிங் துன்புறுத்தப்பட்ட போது நாம் பெரிய அளவில் போராடவில்லை. ஒரு பாதிரி அல்லது முல்லா உள்ளே இருந்தால் நாடு அமைதியா இருக்குமா ? அதனால் தான் இவ்வளவு எளிததாக சுவாமி ராம்தேவ் அவர்களின் இடத்தை தாக்க முடிகிறது ,

    நாம் இப்போதாவது மேலும் ஒன்றுபட்டு செயல்பட ஆரம்பிப்போம்

    குமரன்

  3. ஆக, நாம் இப்போது பிரிட்டிஷ் எதேச்சாதிகாரத்தைவிட ஒரு மோசமான ஆட்சியின் கீ வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது ந்ரூபணமாகிவிட்டது. மற்றும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்க்கு தயாராக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

    இதற்க்கிடையில் ஹிந்துக்கள் ஆதரவளித்தால் அதற்கு ப்ஜேபி அல்லது ஆஎஸ்எஸ் சாயம்தான் பூசப்படும் என்பதும் நிச்சயம்.

    ரெட்டி சகோதரர்கள் போன்றவர்களை வைத்துக்கொண்டு நாம் எப்படி இந்த சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம்?

    வாழ்த்துக்களுடன்.
    முனைவர் அ போ இருங்கோவேள்.

  4. Today we start a campaign, SONIA GANDHI, QUIT INDIA. This woman has become the worse of India’s nightmares. She has assaulted everything that is India and with the recent events, it is proved beyond doubt that India is into another freedom struggle. She looted the nation, no, she plundered and sucked up nation’s wealth and treated the nation as if it is her back pocket, she has assaulted its culture by encouraging relentless missionary activities, she has blood in her hands for deaths due to terrorism that occurred between 2004-2009, she is dividing the nation and treating the people of native religions as second class citizens. The amount of money she looted is so big that she can buy up all the elections in India and even make the elections a useless exercise as exposed by wikileaks on how she bought up MPs in 2008. Today most of India is poor, our enemies can attack and take over India any time, Maoism spreading like wildfire, all that would result into a disintegrated nation in a short time. India is today ruled by Italian Mafia.

    This animal with her insecurities that Baba Ramadev movement will become another Tahir Square event, committed this brutal attack and even possibly planned to kill Baba Ramadev ji (as was predicted just few days ago). It is time we get rid of this animal. And the nicoomp leaders at BJP who were doing nothing tangible while the country is sold away need to be replaced. It is time Indians close down the media such as the Rajdeep Sardesai who is using airwaves to engage in propaganda. These national journalists are traitors of the nation. It is time to wake up.

    Wake up India. (Ref-Vivekajoti)

  5. PERU, THE SOUTH AMERICAN COUNTRY ELECTED A JAPANESE BORN PERSON AS THEIR PRIME MINSTER WHO SWINDLED THE WEALTH OF PERU AND MADE CORRUPTION BEFORE PEOPLE REVOLUT AGAINST HIS GOVERNMENT WHICH RESULTED IN THIS JAPANESE P M HAD TO FLEE FOR LIFE BACK TO JAPAN. THIS HAPPEND BEFORE 7/8 YEARS.

    HOW COME A INTIAN BORN LADY HAVING WORKED AS A WAITRESS IN A LONDON BAR
    RESTUARANT JUST BECOUSE SHE LOVED A FOOLISH CHA CHA MAMA FAMILY GRANDSON
    BECAME THE PROXY PRIME MINISTER OF INDIA. DIG VIJAY SAYS ” HOW COME SADHUS AND SAINTS ENTER IN TO POLITICS TO GOVERN OUR NATION” SAME QUESTION WAS ASKED BY KAPIL SIBAL. I AM ASKING ” HOW COME A ITALIAN WAITRESS BECOME THE PROXY P M OF INDIA”. IF THIS IS POSSIBLE, SAINTS OR SADHUS OR CINE ACTORS OR CINE ACTRESS CAN ENTER IN TO POLITICS BECOUSE THEY WERE BORN AS INDIANS IN INDIA

    LET A MOVEMENT START ”DRIVE AWAY SONIA ANTONIA MAINA” RIGHTNOW. PEOPLE MUST EDUCATE AND DISCUSS POLITICS WITH FRIENDS AND RELATIVES AND IN PUBLIC TO EDUCATE THE COMMON PEOPLE WHO ARE IGNORANT. AFTER EGYPT, SYRIA AND YEMON
    INDIA IS IN THE WAITING LIST OF BIG PEOPLES MOVEMENT TO THROW OUT THE CORRUPT POLITICIANS INSTALLED BY CONGRESS.

  6. இன்றைய சூழலில் பா ஜ க சரியாக திட்டமிட்டு செயல் படுவதில் குழப்பம் அடைந்து உள்ளது போலத் தோன்றுகிறது. இவ்வளவு நிகழ்வுகள் நடக்கும் வரை இவர்களும் நாடாளுமன்றம் சென்று வந்து கொண்டு இருக்கிறார்கள். ஏன் இன்னும் இந்தியாவை மலரச் செய்ய முடியவில்லை. தனது நிலையை சரியாக கணித்து மக்களிடம் சரியாக பயணிக்க வேண்டும் அது தான் எதிர்கட்சிக்கு நல்லது.
    இத்தாலி கொள்ளைக் கும்பலிடம் நாட்டை அடகு வைத்து விட்டார்கள் காங்கிரஸ் என்று சொல்லி கொள்ளும் ஆளும் கட்சி.
    தங்கள் உண்மையான முகத்தை பாபா ராம்தேவ் விஷயத்தில் மக்களிடம் வெளிப் படுத்தி விட்டது காங்கிரஸ், நாங்கள் கொள்ளை அடித்துக்கொண்டே இருப்போம் எங்களை யாரும் கேட்க முடியாது என்று உணர்த்தி இருக்கிறார்கள்.

    இனிமேலாவது மக்களின் எழுச்சிக்கு பா ஜ க உதவ வேண்டும்.
    ஏன் இன்னும் ஒரு சரியான தொலைக்காட்சியோ துவங்கப் படவில்லை.
    இல்லை துவங்கப் பட்டு மக்களை சென்று அடைய வில்லையா.
    இணைய தளம் இன்னும் எல்லா மக்களையும் சென்று அடைய வில்லை. இந்த தருணத்தில் மக்களை விழிக்கச் செய்ய எல்லா முயற்சியும் செய்ய வேண்டும்.
    வாழ்க பாரதம்!

  7. அரசாங்கத்தை வேண்டுமென்றே குறை சொல்லுகிறீர்கள். திக்விஜய் சிங், கபில் சிபல், அன்னை சோனியா மெய்னோ கந்தி போன்ற நேர்மையான நல்ல மனிதர்களின் பெயரைக் கெடுக்க முயல்கிறீர்கள். கொடுத்த வாக்குறுதியை ராம்தேவ் மீறிவிட்டார் என்று அவர்கள் சொல்லுவதை இந்தக் கட்டுரையில் நீங்கள் மறைத்துவிட்டீர்கள்.

    இதில் அரசுத் தரப்பில் தவறே கிடையாது. ராம்தேவ் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டார். மாலை 5 மணிவரை அரசு நேரம் ஒதுக்கியது. அதற்குப் பின்னும் ராம்தேவ் உயிரோடு இருந்தால் அது ஒப்பந்தத்தை மீறிய செயல்தானே?

  8. அத்வானியும் எல்லா பிஜேபி ஆதரவாளர்களும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இந்த உழ்ல் காங்கிர அரசை ஒழிக்க வேண்டும்.

  9. ஒரு சாதாரண விவசாயியின் க்ருஹத்தில் பிறந்து ராம்க்ருஷண் யாதவ் என்று அறியப்பட்டவர் தான் இன்று ஹிந்துஸ்தானத்தின் தலைசிறந்த வேதவிற்பன்னராகவும் யோககுருவாகவும் நிர்வாகியாகவும் ஆயுர்வேத சிகித்ஸா நிபுணராகவும் தேசபக்தராகவும் நிகரில்லா பண்பாளராகவும் தலைசிறந்த ஸம்ஸ்க்ருத வித்வானாகவும் அறியப்படும் பாபா ராம்தேவ் அல்லது ஸ்வாமி ராம்தேவ். இந்த தேசத்தில் இருக்கும் தலித், பனியா, ப்ராம்மண, மறவ எல்லா ஹிந்துக்களாலும் ஏன் தேசபக்தியுள்ள முஸல்மான் மற்றும் க்றைஸ்தவ ஸஹோதரர்களாலும் போற்றப்படுபவர் பாபா ராம்தேவ்.

    இவரது கூட்டத்தில் ராமஜன்மபூமி ப்ரசாரகர் ஸாத்வி ரிதம்பரா ஆர்ய ஸமாஜ ஸ்வாமிகள் மற்றும் தசநாமி அகாடா ஸ்வாமிகளிலிருந்து ஜைன தர்ம குரு மற்றும் ஷியா முஸல்மான் தர்மகுருக்கள் முதல் எல்லோரும் ஒருங்கே இடம் பெற்றனர். “வந்தே மாதரம்” மற்றும் “பாரத் மாதா கீ ஜெய்” போன்ற முழக்கங்கள் காலை முதல் மாலை வரை. பொறுக்குமா தேச விரோதிகளுக்கு.

    செகுலர் மீடியாவினரின் பொய்களூக்கும் வாஸ்தவத்தில் நிகழ்வுகளுக்கும் விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள தொலைவு.

    செகுலர் மீடியா வாதிகளின் பொய் ப்ரசாரம் இந்த கூட்டம் ஹிந்து ஸம்ப்ரதாயவாதிகளின் கூட்டம செகுலர் விரோத கூட்டம் என்று. ஆனால் இதே கூட்டத்தில் தான் ஷியா தர்மகுரு மௌலானா கல்பே ஸாதிக்கும் ஹிந்துக்களுடனும் பாபா ராம்தேவுடனும் அமர்ந்தார். அவர் பேசும் போது சொன்னார். இங்கே அன்ன ஆஹாரமின்றி உட்கார்ந்தோர் நிம்மதியுடன் உள்ளனர். ஆனால் சோறுண்டு தங்கள் வீட்டில் இருக்கும் அரசியல்வாதிகள் கவலையுடன் உள்ளனர் என்றார். பாபா ராம்தேவ் ஹிந்துஸ்தானத்தின் நூற்று இருபத்தைந்து கோடி மக்களின் கஷ்டங்களை களையும் கங்கை போன்று பாவனமானவர் என்றார். ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று முழங்கி இந்த முழக்கம் நம் அண்டை தேசம் பாகிஸ்தானுக்கு கேட்கும் படி முழங்குங்கள் என்று சொன்னார். இது செகுலர் விரோத கூட்டமா என்பது வெள்ளை க்றைஸ்தவ கைக்கூலிகளான மீடியாக்களுக்கு தெரியாவிடினும் பார்க்கும் மக்களுக்கு தெரிந்திருக்கும்.

    காங்க்ரஸ் செயலாளரான “டிக்கி ராஜா” என அழைக்கப்பெறும் திக்விஜய் சிங் பாபா ராம்தேவை “டக்” அதாவது மக்களை ஏமாற்றுபவர் என்றார். ஒஸாம் வதம் செய்யப்பட்ட போது அமேரிக்கா ஒஸாமாஜியை வதம் செய்தது தவறு என்று தொல்லைக்காட்சிகள் முழுதும் முழங்கினார். ஆக காங்க்ரஸின் செய்தி என்ன என்று தெளிவு படுத்தியுள்ளார்.

    தில்லி போலிஸ் ராமலீலா மைதானத்தில் நிகழ்த்திய ராவண லீலாவில் அவர்கள் ஒலிபெருக்கி வசதிகளை உடைத்து நொறுக்கும் முன் பாபா ராம்தேவ் அவர்கள் கடைசியாக ஒலிபெருக்கியில் பேசியது (ஆப் சாஹேன் தோ முஜே கிரஃப்தார் கரோ) நீங்கள் விரும்பினால் என்னை கைது செய்யுங்கள் என்று சொன்னார். இது எல்லா தொல்லைக்காட்சிகளிலும் (தேச விரோத ஹிந்து விரோத செகுலர் மீடியா தொல்லைக்காட்சிகளிலும்) ஒளிபரப்பப்பட்டது. இதன் பின்னும் ஹிந்துஸ்தானத்தின் முடுக்கு மூலைகளில் இருந்து வந்த மக்களை முதியோர் குழந்தைகள் பெண்மணிகள் என்று பாராது கழியால் அடித்து துவைத்தது தில்லி புலிஸ். ஸ்ரீமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் தில்லி புலீஸின் அராஜகம் ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சியை நினைவுறுத்துகிறது என்றார்.

    திக்கு தெரியாது பாஷை தெரியாது நாள் முழுதும் அன்ன ஆஹாரம் இன்றி தேச நலனுக்காக உபவாசம் இருந்து புலீஸால் அடித்து தில்லி மாநகரத்தில் விரடப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு சரித்ரப் புகழ் வாய்ந்த பாங்க்ளாசாஹேப் குருத்வாராவில் (தில்லியில் சீக்கிய ஸஹோதரர்களுடைய முக்கியமான கோவில்) சீக்கிய ஸஹோதரர்கள் உணவு வழங்கினார்கள். ஸ்ரீமதி இந்திராகாந்தி வதம் செய்யப்பட்ட போது இதே அப்பாவி சீக்கிய ஸஹோதரர்களை காங்கிரஸை சேர்ந்த அரசியல் வாதிகளின் தலைமையில் குண்டர்கள் வதம் செய்தது ந்யாலயத்தில் இன்றுவரை முடிவுக்கு வராத நிகழ்ச்சி.

    ஆனால் பாபா ராம்தேவ் இந்த தேசத்தில் அராஜகத்தை முடிவுக்கு கொணர தீர்மானமாக உள்ள ஸந்யாஸி. அவர் உறுதி வெல்லும்.

    வந்தே மாதரம்
    பாரத் மாதா கீ ஜெய்

  10. பாபா ராம்தேவ் ..உசலை ஒழிப்பேன் என்கிறார் –அப்படியானால் அது என்ன ..காங்கிரசை ஒழிப்பேன் என்றுதானே அர்த்தம் ..அப்பு காங்கிரஸ் எப்படி சும்மா பார்த்துக்கொண்டிருக்கும் ..சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ஒரு சாமியார் நாட்டின் பாவங்களுக்கேதிராக தலைமை தாங்கி போராட்டம் நடத்துகிறார்..சாமியார் தலைமை தாங்குமளவுக்கு வியாதி முற்றிவிட்டது.

  11. க்ருஷ்ணகுமார் இப்படி ஏமாற்றலாமா? // ஒரு சாதாரண விவசாயியின் க்ருஹத்தில் பிறந்து ராம்க்ருஷண் யாதவ் என்று அறியப்பட்டவர் தான் இன்று ஹிந்துஸ்தானத்தின் தலைசிறந்த வேதவிற்பன்னராகவும் யோககுருவாகவும் நிர்வாகியாகவும் ஆயுர்வேத சிகித்ஸா நிபுணராகவும் தேசபக்தராகவும்… // ஏக பஹூஸாதாரண விவஸாயியின் க்ருஹத்தில் ஜனனித்து ராம்க்ருஷன் யாதவ் என்று நாமகரணம் செய்யப்பட்டவர்தான் இன்று ஹிந்துஸ்தானத்தின் ப்ரதம வேத விற்பன்னர்களில் ஒருவராகவும் யோஹ குருவாகவும் நிர்வாகியாகவும் ஆயுர்வேத ஸிகித்ஸா நிபுணராகவும் தேஸபக்தராகவும்… என்றெல்லவா எழுதி இருக்க வேண்டும்?

  12. சோனியாவின் கூலி படை ஆமாம் சாமி சிப்பாய்கள்
    கபில் சிபில் – பாபா ராம் தேவை சுற்றி கம்யூனல் ஆர்.எஸ்.எஸ் உள்ளது அதனால் தான் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தடுத்து நிறுத்த நேர்ந்தது. என்ன பேத்தலான பதில். போராட்டம் கரப்ஷனை எதிர்த்துதான். கம்யூனலுக்கும் கரப்ஷனுக்கும் என்ன சம்பந்தம். இதில் எல்லா மதத்தினறும்தான் கலந்து கொண்டுள்ளார்கள் என்பது மேடையில் அமர்தவர்களை பார்தாலே தெறிகிறது.
    கிருஸ்துவனாக மாறி வெட்கமில்லாமல இன்னமும் இந்து பெயரை வைத்துக்கொண்டு இந்துகளை ஏமாற்றி திரியும் திக்விஜய்சிங் – ஒசாமாவை பேடிதனமாக ஒசாமாஜி என்று கூறும் இவர் எந்த தகுதியின் அடிப்படையில் பாபா ராம்தேவை பிராடு என்று பொருப்பில்லாமல் கூறுகிறார்.
    ராம்லிலா மைதானத்தில் மனிதஉரிமையைமீறி நடத்திய அட்டகாசம் –
    1. குளிர் நீர் பீச்சு குழாய்க்கு அதிக சக்திவாய்ந்த ஜெனரேட்டரை உபயோகபடுத்தியது.
    2. மூடிய டென்ட் உள்ளே கண்ணீர் புகை குண்டுகளை வீசியது (இது விதியை மீறிய செயலாகும்)
    3. வேண்டும் என்றே துப்காக்கியால் மூன்று முறை பந்தலின் திரைசீலைகளை கொளுத்திவிட்டது
    4. தீபிடித்த திரைசீலைகளை அணைக் முயன்ற தொண்டர்களை தடுத்து தடிஅடி கொடுத்தது
    5. இந்த அத்துமீறல் செயல்களால் ஏற்படும் உயிர் சேதத்தை தடுக்க எந்த முன்எச்சரிக்கையும் செய்யாமல் நடு இரவில் பசியோடு தூங்கிக்கொண்டிருக்கும் அப்பாவி ஜனங்கள் மீது கோழைதனமாக தடிஅடி செய்தது.
    6. அசம்பாவிதம் ஏற்பட்டால் ஆம்புலனஸ் தீஅணைப்பு என்ஜின் போன்ற முன்எச்கரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது.
    இவ்வாறான தவறான அணுகுமுறையால் பந்தல் தீபிடித்து உள்ளே தூங்கிகொண்டிருக்கும் லஷ்சகணக்கான ஜனங்கள் மூச்சுதிணரி பயந்து தலைதெரிக்க ஒடினால் அதனால் நெரிசல் ஏற்ப்பட்டு பல உயிர் சேதங்களை ஏற்படுதியிருக்கும். மேலும் மின் இணைப்புகள் அருந்ததால் மின்சாரம் பாய்ந்து நிறைய உயிர் சேதத்தையும் ஏற்பட்டுத்தியிறுக்கும்.
    இத்தனை அத்துமீறல்களை செய்துவிட்டு டெல்லி போலீஸ் நிறைய பொய்யான தகல்களை பத்திரிகைகளுக்கு தெரிவிக்கிறது.
    1. தடிஅடியே நடத்தபடவில்லை
    2. பாபா ராம்தேவ் உயிருக்கு ஆபத்து வரும்
    3. யோகா வகுப்பு நடத்ததான் அனுமதி தந்தோம் (பாபா உண்ணாவிரத போராட்டம் என்றுதான் பல நாட்களுக்குமுன்னேயேஅறிவித்தார் – அப்படியிருக்கையில் அனுமதியை ஏன் ரத்து செய்யவில்லை)
    4. வெளி மாநிலங்களிலிருந்து வரும் மக்கள் கூட்டத்தை பார்த்து பயந்து முதல் நாள் மதியமே டெல்லி எல்லை பகுதியில் அவர்களை நுழையவிடாமல் தடுத்தது ஏன் என்று பேட்டியில் சொல்லாதது

    உண்மையில் முதலில் சுமுகமாக செயல்பட்ட காங்கிரஸ் ஒரே நாளில் பெருகிவரும் ஆதரவைகண்டு பயந்து இந்த கீழ்தரமான செயலில் கிருஸ்துவ தாடகை சோனியாவினால் தூண்டப்பட்டு கிருஸ்துவ முதன்மந்திரி ஷீலா தீக்ஷித் உத்தரவின்படி நடுஇரவில் இந்த நாடகம் நடத்தப்பட்டது என்றுதான் தோன்றுகிறது.

  13. இவரை ஏமாற்றுகாரர் பொய்யர், ஆர் எஸ் எஸ் கைக்கூலி என்று சொல்லும் இதே அரசின் பிரதிநிதிகளாக
    ராம்தேவ் டெல்லி வந்து இறங்கிய அன்று கபில் சிபல் பிரணாப் முகெர்ஜி மற்றும் மேலும் இரு காபினெட் அமைச்சர்கள் விமான நிலையத்திலேயே சென்று வரவேற்றார்கள். திரும்பத் திரும்ப பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
    அப்போ இதெல்லாம் தெரியவில்லை போலும். யாரோ ஒரு பொய்யரை இவ்வளவு தூரம் மதித்து சிகப்புக் கம்பள வரவேற்பு செய்ய வேண்டிய அவசியம் என்னவோ?
    பின் இரவோடு இரவாக தூங்கும் மக்களையும் சேர்த்து ரௌடிகளை கையாளுவது போல் விரட்டி அடித்தது ஏனோ?

  14. இந்த விசயத்தில் என்னுடைய வருத்தம் எல்லாம் பாஜக மீது தான். நேற்று வந்த கேப்டன் கூட ஒரு தொலைகாட்சியை தொடங்கி மக்களுக்கு தங்கள் கருத்தை தெளிவாக சொல்லுகின்ற்னர். ஆனால், பாஜக எறுமை மாட்டின் மீது மழை பெய்த்து போல் தனது கருத்து மக்களை சென்று அடைய ஒரு ஊடம் கூட வைத்து கொள்ளாமல், அசமந்தமாக உள்ளனர். மற்ற கட்சிகளை விட பாஜக தொண்டர்கள் கடின உழைப்பாளிகள், இருந்தும் பாஜக தோல்விக்கு காரணம் , தனது கருத்தை மக்களிடம் எடுத்து செல்ல ஒரு மீடியா வைத்து கொள்ளாததே காரணம்.

  15. ஆர் வீ,

    // ஏக பஹூஸாதாரண விவஸாயியின் க்ருஹத்தில் ஜனனித்து ராம்க்ருஷன் யாதவ் என்று நாமகரணம் செய்யப்பட்டவர்தான் இன்று ஹிந்துஸ்தானத்தின் ப்ரதம வேத விற்பன்னர்களில் ஒருவராகவும் யோஹ குருவாகவும் நிர்வாகியாகவும் ஆயுர்வேத ஸிகித்ஸா நிபுணராகவும் தேஸபக்தராகவும்… என்றெல்லவா எழுதி இருக்க வேண்டும்? //

    நாகரீகம் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? What you are doing is utter cultural persecution… fascism.

  16. கிருஷ்ணகுமார் பெரியவர். அவரை ஆர்.வி கிண்டல் செய்வது கீழ்த்தரம்.

    போகட்டும்… இப்போது மீடியாக்கள் வேண்டிய டிராமாக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உருப்படியாக எதுவும் காட்டுவதில்லை. ராஜ் காட்டில் நடக்கும் போராட்டத்தைப் பற்றி டோடல் ப்ளாக் அவுட். ஆனால் சுஷ்மா டான்ஸ் ஆடியதை மட்டும் முதலில் காட்டுகிறார்கள்.

    எப்படியாவது கறுப்புப் பண விவகாரம் நீர்த்துப் போகாதா என்ற எதிர்பார்ப்பு தெரிகிறது. இவர்களை விடக் கூடாது. ஒவ்வொரு ஊரிலும் கிராமத்திலும் போராட்டம் வெடிக்க வேண்டும். ஊழல் செய்து pathukkiya பணத்தில் 1% ஆவது திரும்ப கொண்டுவர வேண்டும்.

  17. கந்தர்வன், // நாகரீகம் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? What you are doing is utter cultural persecution… fascism. // உங்கள் கருத்து உங்களுக்கு. நாகரீகம், culture, fascism, கிண்டல், கேலி என்றால் என்ன என்று நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை என்று நான் கருதுகிறேன்.

    கீர்த்தி, // கிருஷ்ணகுமார் பெரியவர். அவரை ஆர்.வி கிண்டல் செய்வது கீழ்த்தரம். // நான் சிறியவன் என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது? அப்புறம் கிருஷ்ணகுமார் இல்லை, க்ருஷ்ணகுமார்.

  18. ஐயா ஆர் வீ,

    // நாகரீகம், culture, fascism, கிண்டல், கேலி என்றால் என்ன என்று நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை என்று நான் கருதுகிறேன். //

    ஹிந்தி பேசும் மாநிலத்தில் தமிழ் காரர்களைக் கேலி செய்வது அநாகரீகம் அல்ல என்று சொல்வீர்கள் போல இருக்கிறது. நீங்கள் க்ருஷ்ணகுமார் அவர்களைக் கேலி செய்வதற்கும் அதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

    சில சமயங்களில் கிண்டலும் கேலியும் fascism/uncouth behavior கணக்கில் சேர்ந்து விடுகிறது. தெருவில் நொண்டிக் கொண்டு போகும் ஒருவரைப் பார்த்து கிண்டல் பண்ணினால் அது அநாகரீகம் இல்லை என்று சொல்வீர்களோ?

    அத்துடன் கட்டுரையிலும் மறுமொழிகளிலும் உள்ள கருத்துக்களைப் பற்றிப் பேசாமல் ஒருவருடைய மொழி நடையைப் பற்றி கிண்டல் செய்வது இங்கு பொருத்தமற்றது, வெறும் nuisance value.

    பல பேர் (நானும் உட்பட) அன்னிய மொழியாகிய ஆங்கிலத்தில் மறுமொழி இடுகின்றனர். அதெல்லாம் பரவாயில்லை, ஆனால் நம் பாரத நாட்டைச் சேர்ந்த மற்ற சகோதர மொழிகளின் தாக்கம் இருக்கக் கூடாதாம். இதென்ன கொடுமை?

    ஒருவர் இங்கு சொல்ல வந்த கருத்தினை எந்த நடையில் வேண்டுமானாலும் எழுதலாம். அது அவரது இயற்கை அல்லது இஷ்டம். அமைதி காப்போம்.

  19. இந்த விஷயத்தில் என்னுடைய வருத்தம் எல்லாம் பாஜக மீது தான். நேற்று வந்த கேப்டன் கூட ஒரு தொலைகாட்சியை தொடங்கி மக்களுக்கு தங்கள் கருத்தை தெளிவாக சொல்லுகின்ற்னர். ஆனால், பாஜக எருமை மாட்டின் மீது மழை பெய்த்து போல் தனது கருத்து மக்களை சென்று அடைய ஒரு ஊடகம் கூட வைத்து கொள்ளாமல் உள்ளனர். மற்ற கட்சிகளை விட பாஜக தொண்டர்கள் கடின உழைப்பாளிகள், இருந்தும் பாஜக தோல்விக்கு காரணம், தனது கருத்தை மக்களிடம் எடுத்து செல்ல ஒரு மீடியா இல்லை.

  20. அன்பு தமிழ் ஆர்வலர் ஆர்.வி, நமஸ்தே, உத்தரம் தேவை தங்களுக்கு, சரிதானே, இதோ

    \\\\\\\ஏக பஹூஸாதாரண விவஸாயியின்\\\\\\

    உத்க்ருஷ்ட மணிப்ரவளமானால் வ்யவஸாயியின் என இருக்க வேண்டும். ஏக என்பது வலிந்து புகும் ஸம்ஸ்க்ருத பதமாக கருதப்படலாம்.

    \\\\\\\\\\\\யோஹ குருவாகவும் நிர்வாகியாகவும் ஆயுர்வேத ஸிகித்ஸா நிபுணராகவும் தேஸபக்தராகவும்\\\\\\\\\\ஆஷ்டுகுஷ்டி\\ஆஸிரியர் \\\தேஸம் \\\\\ இத்யாதி — எழுதப்படாத ஒரு நடையில் எழுதியது போல் இல்லாத தோஷத்தை இருப்பது போல் கல்பிதம் செய்யும் அத்யாரோபம்!!!!!!ஹேது? தமிழுக்கு தொண்டு செய்வது போல் ஒரு கல்பனையா அல்லது மணிப்ரவாளத்தை சாடியதாக கல்பித்துக்கொள்ளும் சுகமா?

    அன்பரே தங்கள் பெயர் சுட்டிய தளத்துக்குப் போய்ப் பார்த்தால் அங்கே தங்களது வ்யாசம் ஏழு வயது க்ரியாவும் (கிரியா இல்லை) கலீலியோவும். நீங்கள் த்வீபாந்தரத்தில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நுனிநாவில் வந்து நிற்கும் அத்யதிக ஆங்க்லமிச்ர தமிழைப்பார்த்து. உத்தர பாரதத்தில் சிறு நகரங்களில் தசாப்தங்களாக இருக்கும் எங்களைப் போன்றோருக்கு வழக்கொழியும் (அறவே பேச இயலா தமிழ் மற்றும் ஸதா அன்யபாஷையில் பேசுவது) தமிழின் இடத்தை (முக்யமாக பெயர்ச்சொற்கள்) ஸம்ஸ்க்ருத மற்றும் ஹிந்துஸ்தானி பதங்கள் நிரப்புகின்றன.

    தங்களுடைய வ்யாசத்தினின்று ஒரு சில துளிகள் :-

    நான்: நீதான் சூப்பர் ஸ்ட்ராங் சூபர்வுமனாயிற்றே! அதனால் சுலபமாக தூக்கலாம்.
    க்ரியா: So I can lift this car?
    நான்: ஆமா. இன்னொரு கைல இன்னிக்கு வந்த பேப்பரை சுருட்டி ஒரு பெரிய பால் மாதிரி வச்சிருக்கியாம். ரெண்டையும் ஒரே நேரத்தில கீழே போடறயாம். எது முதல்ல கீழ விழும்?
    க்ரியா ரொம்பவே யோசித்தாள். அவளுக்கு பதில் சொல்ல விருப்பமே இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ஐ டோன்ட் நோ

    தமிழில் ஆங்க்ல பாஷை கலப்பது உங்களுக்கு இயல்பாகத் தெரிகிறது அன்ய பாரதீய பாஷை கலப்பது எனக்கு இயல்பாக உள்ளது. இருவருக்குமே தீந்தமிழ் அஸாத்யமன்று ஆனால் சற்றேரக்குறைய பரிச்ரமயுக்தமானது. Well, no ill will. பின்னிட்டும் எமது உத்தரம் தங்களை புண்படுத்தியதென்றால் எமது க்ஷமாயாசனம்.

    on lighter veins; அதுசரி, அஜ்ஜோபுஜ்ஜோஸ்தான் என்று தேசத்திற்கு நாமகரணம் செய்து மகிழ்ந்த ஆர்.வி ஹிந்துஸ்தானத்துப் ப்ரச்சினையில் என்ன சொல்ல வருகிறார் என்று பார்த்தேன். ஏமாற்றவில்லை நீங்கள்.

    Shri.Gandharvan, although having no ill will, somewhere down the line, I share the perception. Though do not want to elaborate much, in many places in J&K, we have perceived what cultural persecution is.

    அன்பர் கீர்த்தி, என்மேல் உள்ள அபிமானத்திற்கு நன்றி. ஸமூஹப்ரக்ஞையில் நாம் எல்லோரும் ஒருவரே. ஹிந்து. இதில் பெரியவர் சிறியவர் என்றெல்லாம் இல்லை. ஆனால் ஆன்மீகத்தில் நம்மை சிறியவனாக பாவிக்க வேண்டும் என்று தான் மூத்தோர் சொல்லியுள்ளார்கள். சைதன்ய மஹாப்ரபு தன் சிஷ்டாஷ்டகத்தில் :-

    trinad api sunicena
    taror api sahishnuna
    amanina manadena
    kirtaniyah sada harihi

    One should chant the holy name of the Lord in a humble state of mind, thinking oneself lower than the straw in the street; one should be more tolerant than a tree, devoid of all sense of false prestige, and should be ready to offer all respect to others. In such a state of mind one can chant the holy name of the Lord constantly.

    தயவு செய்து விஷயத்தைப் பற்றி கருத்துப் பரிவர்த்தனம் செய்ய விக்ஞாபிக்கிறேன்.

    ஹிந்து இன்றே ஒன்று படு.

  21. அந்த நாள் முதல் இந்த நாள் வரை இந்து மக்களுக்கு சக்தி கிடையாது, அவர்கள் அவரவர் இஷ்ட தெய்வங்களைத்தான் நம்பமுடியும் என்பது வெட்ட வெளிச்சமாகிய உண்மை. இல்லையென்றால், இவ்வளவு கேவலப்பட்டுப் போனபின்பும், காங்கிரஸ் கட்சி, மற்றும் அதன் ஆட்சி, சோனியாகாந்தி தலைமையிலும், மன்மோஹன்சிங் பெயரிலும், சிதம்பரம் கருத்துக்கள் கூறவும், ஊழலும் கறுப்புப் பணமுமாக ஜாம் ஜாம் என்று நடந்து தான் கொண்டிருக்கின்றது.
    காரணம், ஜனநாயகம் என்ற பெயரில், தேர்தல் என்ற கூத்து ஒன்று நடந்து, அதில், எப்படியாவது, கூட்டணி வென்று ஆட்சி செய்யும் முறைதான். காங்கிரஸ் போன்ற கேவலமான கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தால், அது ஆட்சி அல்ல, ஆக்கிரமிப்பு, ஆடிக்க வெறி என்பதை வூட்டு வாங்கும் வோட்டு போடும் முறை மூடி மறைக்கின்றது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு, மிகப்பெரிய ஜனநாயக நடவடிக்கை என்றெல்லாம், இந்த கூட்டுக் கொள்ளை அரசமைப்பு நல்ல பெயர் வாங்கிக்கொள்கின்றது. நம்பர் 10 ஜன்பத் என்று கருப்புப்பன ஊழல் வழக்கில் ராம் ஜெத்மலானி சொல்லப்போக, கணம் கோர்ட்டார் அவர்கள், வெலவெலத்துப்போன நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. ஊழலின் ஊற்றுக்கண் என்று தெரிந்திருந்தும், சோனியா காந்தியை தர தர வென நீதிமன்றத்தின் முன் நிறுத்த, எவராலும் முடியவில்லை. ஒரே ஒரு மனிதர், சுப்ரமணியன் சுவாமி அதை செய்ய முற்பட்டால், அதற்கு நாதி இல்லை.

  22. \\\\\\\\\\\\\\ஆனால், பாஜக எருமை மாட்டின் மீது மழை பெய்த்து போல் தனது கருத்து மக்களை சென்று அடைய ஒரு ஊடகம் கூட வைத்து கொள்ளாமல் உள்ளனர். மற்ற கட்சிகளை விட பாஜக தொண்டர்கள் கடின உழைப்பாளிகள், இருந்தும் பாஜக தோல்விக்கு காரணம், தனது கருத்தை மக்களிடம் எடுத்து செல்ல ஒரு மீடியா இல்லை.\\\\\\\\\\\\\\

    ஸ்ரீ சுரேஷ், மிக முக்யமான கருத்து. நான் பலமுறை இதே கருத்தை இந்த தளத்திலும் விஜயவாணியிலும் பகிர்ந்து கொண்டுள்ளேன். ஹிந்துக்களுடைய ப்ரச்சினைகளுக்காக பாடுபடும் குழுமஙள் மிகப்பல. ஹிந்துக்களுடைய ப்ரச்சினைகளுக்காக மட்டுமின்றி ஒட்டு மொத்த பாரதீயர்களான தேசபக்த ஹிந்துக்கள், முஸல்மான்கள், க்றைஸ்தவர்கள், சீக்கியர்கள் இன்னபிற அனைத்து மக்களுக்காகவம் பாடுபடும் அரசியல் கட்சி பா.ஜ.க. நேற்று அரசியலுக்கு வந்த ஜகன்மோஹன் ரெட்டிக்கு கூட சக்கைபோடு போடும் சாக்ஷி தொலைக்காட்சி இருக்கிறது. போலி செகுலர்வாதிகள் கையில் இருக்கும் பத்திரிக்கைகள் மற்றும் தொல்லைக்காட்சிகள் (இவர்கள் தரும் திரிந்த தகவல்களால் தொல்லைக்காட்சி என்று கூறுவது மிகச்சரி என நினைக்கிறேன்) தேசபக்தர்கள் மற்றும் குறிப்பாக ஹிந்துக்களின் குரலை கருத்துக்களை நெரிக்கின்றன திரிக்கின்றன அல்லது இருட்டடிப்பு செய்கின்றன. இதை முறிக்க தேசபக்தர்களின் குரல் மற்றும் செய்திகள் கோடானு கோடி மக்களை சென்றடைய தேச நலன் சார்புடைய பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி அமைப்பது ஒட்டுமொத்த தேசபக்த மற்றும் ஹிந்துக்குழுமங்களின் தலையாய கடமை. இதற்கு விரைந்து பாடுபடல் தேசத்திற்கு நல்லது. வீண்செய்யும் ஒவ்வொரு க்ஷணமும் தேச நலனிற்கு ஹானியை வ்ருத்தி செய்யும். .

  23. // ஆர்.வி, நமஸ்தே, உத்தரம் தேவை தங்களுக்கு…// இதை, இதை, இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். 🙂

    // தமிழுக்கு தொண்டு செய்வது போல் ஒரு கல்பனையா அல்லது மணிப்ரவாளத்தை சாடியதாக கல்பித்துக்கொள்ளும் சுகமா? // இரண்டுமில்லை. கிரந்த எழுத்துக்களை வலிந்து புகுத்தும் உங்கள் நடை கிச்சுகிச்சு மூட்டுகிறது. அது எப்படி சார் தப்பித் தவறிக் கூட சமூகம் என்று எழுதாமல் சமூஹம் என்று எழுதுகிறீர்கள்? சிகித்ஸை? ஏன் முதல் “சி”னாவை மட்டும் விட்டுவிட்டீர்கள்? கிரந்த எழுத்துக்களை வலிந்து ஒதுக்கி ஷேக்ஸ்பியரை சேக்சுபியர் என்று எழுதும் so-called தமிழ் ஆர்வலர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

    // ஏழு வயது க்ரியாவும் (கிரியா இல்லை)… // சரியாகச் சொன்னீர்கள். அவள் பேர் க்ரியாதான், கிரியா இல்லை. என் பேர் சுப்ரமண்யன்தான், சுப்பிரமணியமோ சுப்ரமண்யமோ இல்லை. எதற்காகச் சொல்கிறீர்கள் என்றுதான் புரியவில்லை. உங்கள் பேரும் க்ருஷ்ணகுமார்தான், கிருஷ்ணகுமார், கிருட்டினகுமார் இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேனே!

    // தமிழில் ஆங்க்ல பாஷை கலப்பது உங்களுக்கு இயல்பாகத் தெரிகிறது… // நான் எழுதி இருப்பது ஒரு உரையாடல். தமிழும் கொச்சையாக பேச்சுத் தமிழில் இருப்பதையாவது கவனித்திருக்கலாம். (ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறேன் என்று கண்டுபிடிக்க இவ்வளவு தூரம் போயிருக்க வேண்டாம், இனிஷியல்களைத்தானே பயன்படுத்துகிறேன்!)

    பிரச்சினை உங்களுக்கு தமிழ் மறந்து போய்க்கொண்டிருப்பதோ, சட்டென்று தமிழ் வார்த்தை வராமல் அதற்கு பதில் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்துவதோ இல்லை. உங்கள் “உபயகுசோலபரி” நடை – இது பலரையும் நீங்கள் எழுதுவதைத் தவிர்க்க வைக்கும் – கூட பிரச்சினை இல்லை. நீங்கள் பயன்படுத்தும் formal நடையில் வலிந்து புகுத்தி இருக்கும் கிரந்த எழுத்துக்களைப் பார்க்கும்போது சிரிப்பு வந்துவிடுகிறது சார்!

    கந்தர்வன், // நாகரீகம், culture, fascism, கிண்டல், கேலி என்றால் என்ன என்று நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை என்று நான் கருதுகிறேன். // என் கருத்தை மாற்றும் முறையில் நீங்கள் எதுவும் எழுதவில்லை என்று நான் கருதுகிறேன்.

  24. மணிப்பிரவாளம் ஒருவருக்குப் பிடித்திருப்பது தவறல்ல. ஆனால், பயன்படுத்தும்போது, படிப்பவர்கள் டக்கென்று புரிந்துகொள்ளக்கூடிய, புழக்கத்தில் ஓரளவு இன்னும் இருக்கிற வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துவது மணிப்பிரவாள நடையின்மேல் ஆர்வத்தை உண்டாக்கக் கூடும்.

  25. ஹிந்து சமூக நல அமைப்புகளிடம் தீண்டாமைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதில் காங்கிரசும் இடதுசாரிகளும் போலி ம்தச் சார்பின்மை ஊடகங்கள், சமூக சேவகர்கள் (?) கூட்டமும் தனி உற்சாகம் காட்டுகின்றனர்.
    ஏதேனும் ஒரு இயக்கம் அல்லது நடவடிக்கையின் பின்னணியிலும் முன்னணியிலும் ஆர். எஸ். எஸ். அல்லது பாரதிய ஜனதா இருந்தால்தான் என்ன? அதில் என்ன தவறு? எந்தவொரு இயக்கமோ நடவடிக்கையோ ஆர் எஸ் எஸ் அல்லது பா ஜ க ஆதரவில் நடைபெறுமானால் அதில் ஆட்சேபிக்க என்ன உள்ளது?
    இன்னும் சொல்லப் போனால் ஒரு இயக்கமோ நடவடிக்கையோ ஆர். எஸ் எஸ் ஸின் ஆதரவைப் பெறுகின்றதென்றால் நிச்சயமாக அந்த இயக்கமோ நடவடிக்கையோ நாட்டின் நலனுக்கானதாகத்தான் இருக்கும்.

    தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பங்களாதேஷ் முகமதியர்கள் அத்துமீறி நமது தேசத்திற்குள் நுழையவும் ரேஷன் அட்டைகள் பெறவும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவும் வாய்ப்பளித்த தேச் துரோகிகள் காங்கிரசும் இடதுசாரிகளும். இந்தப் பச்சை தேச துரோகிகள் இளமையிலேயே தேச பக்தியை பசுமரத்து ஆணியைப் போல ப்திய வைக்கும் ஆர். எஸ். எஸ்.பேரியக்கத்த்திடம் தீண்டாமைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதில் வியப்பில்லை.

    எவர் பற்றியேனும் இவர்களுக்கு ஆர் எஸ் எஸ் ஆதரவு இருப்பதாக எவரேனும் விமர்சனம் செய்தால் அவ்வாறான விமர்சனத்திற்கு உள்ளாவோர் ஆமாம் அதனால் என்ன? உனக்கு எங்கே வலிக்கிறது என்று கேட்க வேண்டும்.
    -மலர்மன்னன்

  26. தில்லி ராம் லீலா மைதானத்தில் நள்ளிரவில் மக்கள் மீது அத்து மீறித் தாக்குத்ல் நடத்திய காவல் துறை அதிகாரிகள், அதற்குக் காரணமான தில்லி நிர்வாக மேலதிகாரிகள், அவர்கள் அவ்வாறு நட்வடிக்கை எடுக்கத் தூண்டிய அரசியல்வாதிகள் அனைவ்ர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
    அதிகாரிகள் எனில் இடை நீக்கம் செய்யப்பட்டு ஆறு மாதச் சம்பளம் அபராதமாக விதிக்கப்பட வேண்டும்.
    அரசியல்வாதிகள் எனில் வன்முறையைத் தூண்டியதாகக் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
    இப்படி நடந்தால் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்கள் மீது வன்முறை அடக்குமுறை நிகழ்வது முடிவுக்கு வரும்.
    இப்படி உருப்படியாக ஏதும் வலியுறுத்தாமல் சோனியாவும் மன்மோஹனும்
    மன்னிப்புக் கேட்க வேண்டும் என பா ஜ க கேடப்து அதற்கு புத்திக் கூர்மை இல்லை என்பதையே காட்டுகிறது. இதை யாராவது பா ஜ க தலைமைக்கு கடிதம் எழுதி கையொப்பங்கள் திரட்டி அனுப்பி உணர்த்தினால் நல்லது.
    நான் எழுதினால் எனக்கு ஏதோ அவர்களிடம் பிணக்கு இருப்பதால்தான் குறை கூறுகிறேன் என்று நினைத்துக் கொள்கிறர்கள்.
    -மலர்மன்னன்

  27. இழையினூடே சம்பந்தமில்லாத கருத்துப்பரிவர்த்தனத்திற்கு என் வருத்தங்கள். மொழிநடை சம்பந்தமாக என் பக்ஷத்தில் இப்போதைக்கு இது கடைசி. மற்ற அன்பர்களும் வ்யாசம் சம்பந்தமாக மட்டும் எழுதவும்.

    \\\\\\\\ஆனால், பயன்படுத்தும்போது, படிப்பவர்கள் டக்கென்று புரிந்துகொள்ளக்கூடிய, புழக்கத்தில் ஓரளவு இன்னும் இருக்கிற வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துவது மணிப்பிரவாள நடையின்மேல் ஆர்வத்தை உண்டாக்கக் கூடும்.\\\\\ நன்றி களிமிகு கணபதி. அதுவே எமது ப்ரயத்னம்

    \\\\\தமிழ் மறந்து போய்க்கொண்டிருப்பதோ,\\\\\ தவறு, அது எப்படி மறக்கும். சட்டென்று நுனி நாவில் வருவது புழக்கத்தில் இருக்கும் மொழி..அவ்வளவே.

    அன்பர் ஆர்.வி, ஒரு இடத்தில் கூட க்ரந்த எழுத்துக்கள் தவறாக அல்லது வலிந்து பயன்படுத்தப்படவில்லை. thats abruptly wrong understanding. மணிப்ரவாளம் என்பது ஏதோ தமிழுடன் க்ரந்த எழுத்து நடுவில் நுழைத்து எழுதுவது அன்று. அதிகம் புழக்கத்தில் இல்லாத ஸம்ஸ்க்ருத பதங்கள் அல்லது அதிகமான ஸம்ஸ்க்ருத பதங்கள் ப்ரயோகம் செய்யப்படுவது என்பதே தோஷமாக சொல்லப்பட்டது. சரிசெய்யப்படுகிறது.

    ஸிகித்ஸா – தவறு. चिकित्सा – chikitsA – சரி. எனவே சிகித்ஸா.
    க மற்றும் ஹ வித்யாசம்.
    லோகம் – உலகம் லோஹம் – இரும்பு
    சமூஹத்தில் “ஹ” சரியே.

    ஏதாவது ஓரிரு இடத்தில் அதிக பக்ஷம் தவறாக க்ரந்த எழுத்துக்கள் இருந்திருக்கலாம். தமிழில் பொதுவாக எழுதுகையில் இருக்கும் எழுத்துப்பிழை போன்று. RV, I do not have any idea of your grasp of samskrutha terms and further at this juncture, I may not be able to elaborate much upon the nuances but atleast you may take from my side, that use of grantha lipi is as far as pssible very aptly there in place. regards.

    —————————————————————————————–
    ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயருக்கு நமஸ்தே,

    \\\\\\\எவர் பற்றியேனும் இவர்களுக்கு ஆர் எஸ் எஸ் ஆதரவு இருப்பதாக எவரேனும் விமர்சனம் செய்தால் அவ்வாறான விமர்சனத்திற்கு உள்ளாவோர் ஆமாம் அதனால் என்ன? உனக்கு எங்கே வலிக்கிறது என்று கேட்க வேண்டும்\\\\\\

    மிகவும் சரி. விமர்சனம் செய்வோர் எவ்வளவு அவதூறாக இந்த யோகியைப் பற்றி செய்தி பரப்புகிறார்கள் என்பது மிக கவலையளிக்கும் விஷயம்.

    பாபா ராம்தேவ் சம்பந்தமாக தமிழ் தொலைக்காட்சிகளில் மற்றும் பல செகுலர் ஆங்க்ல சேனல்களில் தவறாகவே செய்தி பரப்பப்படுகிறது. சரியான செய்திகள் ஆஸ்தா சேனல் ( ராத்ரி 8 to 9) மற்றும் ஸன்ஸ்கார் சேனல்களில் (ராத்ரி 9 to 10) பாபா ராம்தேவ் அவர்கள் வாய்மொழி வழியாக அறியலாம். ஆனால் முழுதும் ஹிந்தி பாஷையிலேயே பாபா ராம்தேவ் மற்றும் கூடியுள்ள அகாடாக்களின் மஹந்துக்கள் பேசுகிறார்கள்.

    இதுவரை ஆஹாராம் எடுத்துக்கொள்ளாததால் பாபாவின் உடல்நிலை மோசமாக உள்ளது. உபவாசத்தை சீக்கிரம் முடிவுக்கு கொணராவிட்டால் உடல்நிலை மேலும் கெடும் என வைத்யர்கள் பாபாவை எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால் ராம்தேவ் அவர்கள் கேந்த்ர ஸர்கார் கறுப்புப்பணம் மற்றும் அன்ய விஷயங்களில் தன் நிலையை தெளிவு படுத்தாத வரை தான் ஆஹாரம் எடுக்க மாட்டேன் என தீர்மானமாக உள்ளார்.

    பாரதத்தில் இருந்து ஒவ்வொரு ஜில்லாவிலிருந்தும் இளைஞர்களை அழைத்து சஸ்த்ர (ஆயுத) மற்றும் சாஸ்த்ர (நெறிநூல்கள்) பயிற்சி அளிக்க தீர்மானம் செய்ததாய் சொன்னார். சஸ்த்ர என்பதற்கு தற்காத்துக் கொள்ள தேவையான குறைந்த பக்ஷ உபகரணங்களான கழி மற்றும் வெறும் கையால் யுத்தம் செய்யத்தகுந்த கராட்டே என்று தெளிவாக சொன்ன பின்னும் பின்னர் சொன்னதை செய்தியாக வெளியிடாது பாபா ராம்தேவ் ஆயுதமேந்திய போராட்டத்திற்கு வழி செய்கிறார் என திரித்து சேனல்கள் துஷ்ப்ரசாரம். இன்று காலையில் துர்பலமான நிலையிலும் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். எனது போராட்டம் ப்ரச்சினைகளை முன் வைத்ததானது மட்டுமே. எந்த அரசியல் கட்சிக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ அல்ல. முழுக்க முழுக்க அஹிம்சை வழியான போராட்டம் தான் இது. சஸ்த்ர பயிற்சி என்பது தற்காப்பு பயிற்சி மட்டுமே என்று தெளிவு படுத்தியுள்ளார். ஆனால் செய்தியை திரிக்க காசுக்கு விலை போகும் சேனல்கள் இருக்கும் போது உண்மை ஒரு அடி போவதற்குள் சேனல்களால் பரப்பப்படும் பொய் செய்தி பாரதம் முழுதும் போய் சேர்கிறது.

    ஜாதி வித்யாசமின்றி ஹிந்துக்கள் ஒற்றுமையாய் தங்கள் நலனுக்கு பாடுபட வேண்டும். தேச நலனில் அக்கறை எடுக்க வேண்டும் என இந்த தளத்தில் இழை இழையாக எழுதப்படும் விஷயங்களின் ஒட்டுமொத்த உருவகமாக ஸ்வாமி ராம்தேவ் அவர்களை பார்க்கலாம்.

  28. //மணிப்பிரவாளம் ஒருவருக்குப் பிடித்திருப்பது தவறல்ல. ஆனால், பயன்படுத்தும்போது, படிப்பவர்கள் டக்கென்று புரிந்துகொள்ளக்கூடிய, புழக்கத்தில் ஓரளவு இன்னும் இருக்கிற வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துவது மணிப்பிரவாள நடையின்மேல் ஆர்வத்தை உண்டாக்கக் கூடும்.//
    உண்மைதான், கிருஷ்ணகுமாரிடம் நல்ல விஷயங்கள் இருக்கலாம், ஆனால் அவருடைய (எனக்கு) புரியாத பாஷையிநிமித்தம் என்னை போன்றோர் ஒதுக்க வேண்டியதாய் இருக்கிறது.

    மலர் மன்னன் ஐயா,
    ஆர் எஸ் எஸ் என்பது தேசபக்தி இயக்கம் என்பதை விட, முஸ்லிம்களின் எதிரி என்றே அனைவர் மனத்திலும் பதிந்திருப்பதே இத்தகைய சூழ்நிலைகளுக்கு காரணம்.
    நன்றி,
    சிங்கமுத்து

  29. ஸ்ரீ கிருஷ்ணகுமார் ஸ்வாமிக்கு நமஸ்தே. உங்கள் எழுத்து எனக்கு பிடிக்கும். மணிப்ரவாளத்தை படிக்கும் போது, “வாகர்தாவிவ…” என்பது போல பார்வதி சமேத பரமேஸ்வரனாக திவ்ய தம்பதிகள் போல, தமிழும் சம்ஸ்க்ருதமும் பின்னிப் பிணைந்திருப்பதாகப் படும். அப்படிப் பட்ட எழுத்தில் அர்த்த கெளரவம் அதிகமாக இருப்பதாகத் தோன்றுவது உண்டு. மற்றபடி சமஸ்க்ருத மொழி பற்றியும் மணிப்ரவாளம் பற்றியும் இங்கே விளக்குவது, விவாதிப்பது… அரஸிகேஷு கவித்வ நிவேதனம் ஸிரஸி மாலிக! மாலிக! மாலிக!

  30. \\\\\\\\\\\தில்லி ராம் லீலா மைதானத்தில் நள்ளிரவில் மக்கள் மீது அத்து மீறித் தாக்குத்ல் நடத்திய காவல் துறை அதிகாரிகள், அதற்குக் காரணமான தில்லி நிர்வாக மேலதிகாரிகள், அவர்கள் அவ்வாறு நட்வடிக்கை எடுக்கத் தூண்டிய அரசியல்வாதிகள் அனைவ்ர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
    அதிகாரிகள் எனில் இடை நீக்கம் செய்யப்பட்டு ஆறு மாதச் சம்பளம் அபராதமாக விதிக்கப்பட வேண்டும்.
    அரசியல்வாதிகள் எனில் வன்முறையைத் தூண்டியதாகக் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
    இப்படி நடந்தால் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்கள் மீது வன்முறை அடக்குமுறை நிகழ்வது முடிவுக்கு வரும்.\\\\\\\\\\\

    ஸ்ரீ மலர்மன்னன் மஹாசய், நல்லோரெண்ணம் நிறைவேறுவது திண்ணமன்றோ. தங்களெண்ணம் நிறைவேறும் திசையிலும் சில நிகழ்வுகள்.ஒரு நற்செய்தி. நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த நிரபராதியான வயோதிகர், குழந்தைகள் மற்றும் பெண்மணிகள் மீது கழியடி கண்ணீர்ப்புகை இத்யாதி அராஜகங்கள் நிகழ்த்த சாக்காக சொல்லப்பட்டது ராம்லீலா மைதானத்தில் சிபிர் தொடர அனுமதி மறுக்கப்பட்டும் மைதானத்தை காலி செய்யாதது. புதுதில்லி நகர மேயர் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் தன் கார்யாலயத்தினின்று சிபிர் தொடர அனுமதி மறுக்கப்படவேயில்லை என தெரிவித்துள்ளார். உச்சந்யாயாலயம் தானாக இது சம்பந்தமாக எடுத்துக் கொண்ட வழக்கில் இந்த விஷயமும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப் படும்.

    ஸ்வாமி ராம்தேவ் அவர்களின் உடல்நிலை உபவாசத்தால் மேலும் சீர்கேடடைந்துள்ளது. ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துள்ளது. ஏழு கிலோ எடை குறைந்துள்ளது. இந்த நிலையில் அவர் பேசவும் செய்தால் உடலுக்கு ஹானி என்பதால் அவரது குருநாதர் ஸ்ரீ ப்ரத்யும்னர் அவர்கள் பாபா ராம்தேவ் தரப்பில் இன்று பேசியுள்ளார். “சஸ்த்ர” என்ற வார்த்தையை மீடியாவினர் தவறாக அர்த்தம் கொண்டு துஷ்ப்ரசாரம் செய்ததை சுட்டி காட்டியுள்ளார். தங்களது போராட்டம் அஹிம்சை வழியிலானதே என்பதை உறுதி செய்துள்ளார்.

    பாபா ராம்தேவ் அவர்களது எளிய ப்ராணாயாம பயிற்சிகளால் நன்மை அடைந்தோர் லக்ஷக்கணக்கான மக்கள். நானும் அதில் ஒருவன். இவரது உபவாசம் சீக்கிரம் முடிய வேண்டும்; மீண்டும் கோடானு கோடி ஹிந்துஸ்தான மக்களுக்கு இவர் சேவை செய்ய வேண்டும் என வள்ளி மணாளனை இறைஞ்சுகிறேன்.

    இத்தனை நிகழ்வுகளினூடே எமது வாழ்வாதாரமான வள்ளல் அருணகிரியின் திருப்புகழே நினைவுக்கு வருகிறது. நரகுழலத் தக்காரின் பட்டியல் தருகிறார் அருணகிரிப்பெருமான்.

    ஓது வித்தவர் கூலி கொடாதவர் … கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூலியைக் கொடுக்காதவர்கள்,

    மாதவர்க்கு அதி பாதகம் ஆனவர் … சிறந்த தவசிகளுக்கு மிக்க இடையூறுகளை விளைவித்தவர்கள்,

    ஊசலில் கனலாய் எரி காளையர் … காமத்தின் வசத்தால் நெருப்புப் போல் கொதித்து வேதனை உறும் காளைப் பருவத்தினர்,

    மறையோர்கள் ஊர் தனக்கு இடரே செயும் ஏழைகள் … வேதம் ஓதுபவர்கள் இருக்கும் ஊர்களுக்கு துன்பம் விளைவிக்கின்ற அறிவிலிகள்,

    ஆர் தனக்கும் உதாசின தாரிகள் … யாவரிடத்தும் அலட்சியமாக நடந்து கொள்ளுபவர்கள்,

    ஓடி உத்தமர் ஊதியம் நாடினர் … வேகமாக வந்து, நல்லவர்களிடத்து (ஏமாற்றி) இலாபம் அடைய விரும்புவர்கள்,

    இரவோருக்கு ஏதும் இத்தனை தானம் இடாதவர் … இரந்து கேட்போருக்கு கொஞ்சம் கூட தானம் செய்யாதவர்கள்,

    பூதலத்தினில் ஓரம தானவர் … உலகில் ஒருதலைப்பட (பாரபட்சமாகப்) பேசுபவர்கள்,

    ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர் தமை இகழ்ஆவார்கள் … சிவபெருமானையும், திருமாலையும் வழிபடுவர்களை தாழ்மையாகப் பேசுபவர்கள்,

    ஏக சித்த தியானம் இலாதவர் … ஒரு முகப்பட்ட மனதுடன் தியானம் செய்யாதவர்கள்,

    மோகம் உற்றிடு போகிதம் ஊறினர் … மிகுந்த காமத்துடன் இன்ப நிலையில் மூழ்கி இருப்பவர்கள்,

    ஈனர் இத்தனை பேர்களும் ஏழ் நரகு உழல்வாரே … இழி குணம் படைத்தவர்கள், இவ்வளவு பேர்களும் ஏழு நரகங்களில் வீழ்ந்து அலைச்சல் உறுவார்கள்.

    நாலாம் தேதி இரவில் அராஜகம் நிகழ்த்தியவர்களும் அவர்களை அவ்வாறு வழி நடத்தியோரும் தகவல்களை உண்மைக்கு மாறாக பொய்யாகவே திரித்து பொய்வதந்திகளை முனைந்து பரப்பும் தொலைக்காட்சியினரும் பத்திரிக்கைக் காரர்களும் நாக்கூசாது இந்த தவசியைப்பற்றி அவதூறு நிதம் பேசும் அரசியல்வாதிகளும் முதலில் இவர் காலில் விழுந்து பின்னர் இந்த தவசியின் காலை வார காரணமாக இருந்த அரசியல்வாதிகளும் அதெப்படி இந்த பட்டியலில் ஒருங்கே கன கச்சிதமாக பொருந்துகிறார்கள்!!!!!!!!!!

    இந்த தீயசக்திகள் எதிர் கொள்வது பாபா ராம்தேவ் என்ற ஒரு தனி யோகியை அன்று. அவர் பின்னால் இருக்கும் கோடானுகோடி ஹிந்துஸ்தானத்து தேசபக்தர்களான நற்சக்தியை.

    மிகப்பெரிய தீய சக்தி மிகப்பெரிய நற்சக்தியை அபூர்வமாகவே எதிர்கொள்ளும். விளைவுகள் கடுமையானதென்றாலும் முடிவு நல்லதாகவே இருக்கும். தேவரும் அசுரரும் பாற்கடலில் அம்ருதம் கடையுங்கால் முதலில் கிடைத்ததென்னவோ ஆலகால விஷமேயன்றோ. பற்பல இடையூறுகளைத் தாண்டி முயன்றதற்கு பின்னரே அம்ருதம் கிடைத்ததன்றோ. அது போல் இந்தப் பெரிய நற்சக்தியின் முயற்சி முடிவில் ஹிந்துஸ்தானத்துக்கு நன்மையே பயக்கும்.

    தீயோர் நரகுழலவே வேண்டும் என வள்ளல் கூறுவதாக என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. அவர்களுக்கும் நற்புத்தி நல்குமாறு ப்ரார்த்திக்கலாமே (ஸப் கோ ஸன்மதி தே பகவான்)

    முயற்சி திருவினையாக்கும்.
    பாரத் மாதா கீ ஜெய்
    வந்தே மாதரம்.

  31. Corruption is supported by people at least through castes. Eg: Tamilhindu opposes corruption only when MK does, at the same time it supports JJ though she also involved in some corruption.

  32. ஸ்ரீ கீர்த்தி, தமிழும் ஸம்ஸ்க்ருதமும் பிணைந்து பார்வதீ பரமேஸ்வர ஸ்வரூபமாய் அல்லது பார்வதீப ரமேஸ்வர ஸ்வரூபமாய் இருக்கும் மணிப்ரவாளம் தேசோன்னதிக்கு வழிகாட்டும். ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் ஸத்யமப்ரியம் என்ற ஸுபாஷிதத்தை மனதிற் கொண்டு பரதோஷாரோபணம் விடுத்து ஸ்வய தோஷ பரிஹாரம் செய்து கொண்டு ஏனகேனப்ரகாரேண யத்னசீலர்களாய் தேசஹிதத்திற்கு கார்யரதர்களாய் இருப்போம். ஹிந்தி பாஷை பரிச்சயமுண்டு என்றால் அவச்யம் ஆஸ்தா மற்றும் ஸன்ஸ்கார் சேனல்கள் நான் சொல்லிய நேரத்தில் பார்க்கவும். பாபா ராம்தேவ் மற்றும் அவர் குரு மஹாவித்வான் ப்ரத்யும்னாசார்யர் அவர்கள் ப்ரசங்கங்கள் கேழ்க்கத்தக்கவை. தேசஹிதம் சம்பந்தமாகவும் ஸம்ஸ்க்ருத பாஷை சமபந்தமாகவும் நிறைய விஷய ஞானம் கிடைக்கப்பெறுவீர்.

  33. ஸ்ரீ.கிருஷ்ணகுமார் , நமது நாட்டில் குறிப்பாக ஊடகங்களில் காவி உடை அணிந்த எவரைக்காட்டினாலும் கேலியுடனும் இலக்காரத்துடனும்தான் பேசுகிறார்கள். ஆங்கில மொழிச் சேனல்களில் இளம் வயது செய்தியாளர்கள் கூட சற்றும் மரியாதை இன்றியும் எல்லாம் தெரிந்தவர்கள் போலவும் பேசுகிறார்கள். எல்லாம் கலி காலம்தான் போங்கள்!

  34. பாபா ராம்தேவ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வாடிகன் சோனியா மூலமாக நடத்திய ரத்த வெறித் தாக்குதல்
    சோனியா நம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரே இங்கு இம்மாதிரி நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்க ஆரம்பித்துள்ளன

  35. //பாபா ராம்தேவ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வாடிகன் சோனியா மூலமாக நடத்திய ரத்த வெறித் தாக்குதல்
    சோனியா நம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரே இங்கு இம்மாதிரி நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்க ஆரம்பித்துள்ளன//

    Kanchi Sankaracharyar was arrested by Sonia?

  36. my humble thought is
    s.c had sent notice to delhi admn;;delhi comitioner
    and home secretory”’etc
    instead of to these three the honorable supreme court might have got all the names of the 5000….or 3000..police personnels from delhi[u.p] govt
    and to send individual notices to the police person concerned
    even though it is not in practice the supreme court could have started the new system and could had created morel fear in their minds
    if so done the morel fear in the police personnel mind might have given warning to them before lifting the laathi on the innocent public
    also they may be ready to publish the names and the order details etcof the
    [their ] superiors and officers which will become a wonderful and primary example in the future actions of judicial system and as well as all police officers and politicians
    which may clear 80 % os process complications
    w
    will the s u p r e m e c o u r t consider in future

    will it be forwarded to supreme court??

  37. க்ருஷ்ணகுமார்,

    // சமூஹத்தில் “ஹ” சரியே. // மேலே சொல்ல எதுவுமில்லை. என் ஏமாற்றம் எல்லாம் பறந்து போய்விட்டது!

  38. அன்புள்ள ஸ்ரீ க்ருஷ்ண குமார்,
    தீயோர் நரகுழல வேண்டும் என வள்ளல் சாபமிடவில்லை. கர்மவினையின் காரணமாகத் தவிர்க்க முடியாது போகும் விளைவு என ஒரு தகவலாகவும் முன்னெச்சரிக்கையாகவும் சொல்வதாகக் கொள்ளலாம், . அவருடைய பாஷையில் சாபமாய்த் தொனிக்கலாம். குணமெனும் குன்றேறி நின்றார் வெகுளியாகக் கண நேர வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
    ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை என ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அநேகமாக வரும் ஞாயிறு (ஜூன் 19) திண்ணை.காம் இதழில் வெளியாகக் கூடும். முடிந்தால் படித்துப் பார்க்கவும். இச்சம்பவம் குறித்து நான் ஏன் எதுவும் எழுதவில்லை என சில தமிழ்ஹிந்து வாசகர்கள் கேட்டுள்ளதால் இதனை இங்கு தெரிவிக்க வேண்டியுள்ளது.
    -மலர்மன்னன்

  39. துஷ்டர்களுக்கும் நற்கதி அளிக்கப்படுவதாகவே நமது புராணங்கள் உத்தரவாதம் அளிக்கின்றன. சம்ஹரித்தல் மூலமாக இது நடைபெறுகிறது. என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ண பகவான் யுத்த பூமியில் பொறுமையிழந்து சக்கரத்தைச் சுழற்றியபோது பிஷ்ம பிதாமஹர் அவன் கையால் சம்ஹாரத்தை யாசிக்கவில்லையா? ஸப்கோ ஸன்மதி தே பகவான் என்கிற பிரார்தனை இவர்கள் விஷயத்தில் பலிக்காவிடினும் பாதகமில்லை. சம்ஹாரத்தின் மூலம் அவ்ர்களுக்கும் நற்கதி கிடைக்கவே செய்ய்யும்.
    -மலர்மன்னன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *