சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1

count_dracula_christopher_lee1

டிராகுலா டெக்னிக்

மேற்கத்தியத் திரைப்படங்களில் பிரபலமான ஒரு கதாபாத்திரம் டிராகுலா எனும் இரத்தக்காட்டேரி. இந்த டிராகுலா யாரை வேண்டுமானாலும் கடித்து,  அவர்களின் இயல்பான மனிதத்தன்மையை அழித்து, அவர்களையும் தன்னைப் போன்றே இரத்தக்காட்டேரியாக மாற்றி அடிமையாக்கி வைத்துக் கொள்ளும். இவ்வாறு  மாறிய மனிதர்கள், மற்றவர்களையும் கடித்து இரத்தக்காட்டேரிகளாக மாற்றி விடுவார்கள். இவ்வாறு உருவான இரத்தக்காட்டேரிக் கூட்டம் ஒரு கட்டத்திற்கு மேல் தனது சொந்த ஊர் மக்களையே அழிக்க ஆரம்பிக்கும்.

ராஜா டிராகுலா செய்வது எல்லாம் ஒன்றே ஒன்று தான்; எந்த ஊரை அழிக்க வேண்டுமோ அந்த ஊரைச் சேர்ந்த நாலு பேரைக் கடித்து, அவர்களை அடிமைகளாக மாற்றுவது தான். இதன்பின் ராஜா டிராகுலாவுக்கு பெரிய வேலை எல்லாம் கிடையாது. ராஜாவின் விருப்பத்தை புதிய அடிமை இரத்தக்காட்டேரிகள் பார்த்துக் கொள்ளும். இதற்குப் பெயர் தான் ‘டிராகுலா டெக்னிக்’.

ஒரு மனித இனம் வாழ வேண்டும் என்றால், அதற்குக் கலாச்சாரம் மற்றும் தொழில் வளங்கள் என்ற இரண்டும் மிக முக்கியம். இவை இரண்டும் பிரிக்க முடியாதவை. எந்த ஒரு மனித இனத்தைத்  தனது கட்டுப்பாட்டில்  கொண்டு வர வேண்டும் என்றாலும், இவை இரண்டும் வசப்படுத்தப்பட வேண்டும்.

மேற்கத்திய மற்றும் அரேபியா போன்ற நாடுகள் இந்த டிராகுலாத் தொழில் நுட்பத்தை மத/கலச்சார மாற்றத்திற்கு மட்டும் பயன்படுத்தவில்லை, தொழில் வளங்கள் ஆக்கிரமிப்பிற்கும் இதே டிராகுலாத் தொழில் நுட்பத்தைத்தான்  பயன்படுத்துகிறார்கள். ஏற்கனவே சொன்னது போல் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை மட்டுமோ அல்லது தொழில் துறையை மட்டுமோ தனியாகக் கைப்பற்றி என்ன பயன்?

இதற்கு ஒரு சிறந்த உதாரணம் அமெரிக்க நிறுவனமான Coca Cola மற்றும் இந்தியக் குளிர்பானத் தொழில் நிறுவனமான Goldcoca-cola-goldspot3Spot-ம் தான். Coca Cola நிறுவனம் Gold Spot நிறுவனத்தை எவ்வாறு விழுங்கியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்பொழுது நமக்குக் கிடைப்பது எல்லாம் Coca Cola என்ற நமது நாட்டுத் தண்ணீரை எடுத்து நமக்கே விற்கும் மேற்கத்தியக் குளிர்பானம் தான். இவர்களை எதிர்த்து இனி எந்த இந்தியக் குளிர்பானத் தொழில் நிறுவனமும் இந்தியாவில் வளரவே முடியாது. இந்த Coke வரிசையில், யூனிலீவர்(Unilever), P&G என்று சொல்லிக் கொண்டே போகலாம். Coca Cola-வும் பெந்தகோஸ்தேவும் ஒரு இராணுவத்தின் இரு பிரிவுகள்.

எனக்கு நீண்ட நாளாக ஒரு கேள்வி. ஏன் இந்த வகை இரத்தக்காட்டேரிகள் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் உள்ளன? ஏன் மேற்கத்திய இரத்தக்காட்டேரிகளுக்கு இம்மாநிலங்களின் மீது மிகுந்த அக்கறை? இக்கேள்விகளுக்கான விடை சூடானின் வரலாற்றில் கிடைக்க வாய்ப்பு உண்டு.

நூபியா(Nubia) தேசமும் அதன் பண்டைய நகரங்களும்

நைல் நதியின் கரையில் உருவான நூற்றுக்கும் மேற்பட்ட மொழி மற்றும் கலச்சாரத்தைத் தன்னகத்தே கொண்ட ஒரு தேசம் நூபியா(South Egypt + Sudan) என்று அழைக்கப்படுகிறது. 5000 வருடங்களுக்கும் மேலானnile_nubia1 பண்பாட்டைக் கொண்டது இந்த நூபியா என்று அழைக்கப்படும் தேசம். இந்த மக்கள் இயற்கை மற்றும் தங்களது மூதாதையர்களை வணங்குபவர்கள். இவர்களது பாரம்பரிய வழிபாட்டைக் கிறித்துவ மிஷ-நரியின் போலி வரலாற்று ஆட்கள், ‘அனிமிஸ்டிக்’ மதம் (பழமையானது, அநாகாரீகமானது) என்று கேவலப்படுத்தினார்கள். இந்தக் கட்டுரையின் நோக்கம் மதமாற்றம் மற்றும் அதன் உள்நோக்கம் பற்றியதாக இருப்பதால், நூபியாவின் கலாச்சாரத்தைப் பற்றி இங்கு அதிகம் எழுதவில்லை.

நல்லதைக் கண்டால் நாய்க்கு ஆகாது என்று ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இந்த மேற்கத்திய மற்றும் அரேபிய நாடுகளுக்குச் சரியாகப் பொருந்தும். எங்கு நல்ல பண்பாடு மற்றும் தொழில் வளம் இருந்தாலும் அது இந்தக் கொள்ளையர்களுக்குப் பிடிக்காது. கலாச்சாரம் மிக்க நூபியாவின் ஒரு பிரிவினர் மதம் மாற்றப்பட்டனர். பின்னர், மதம் மாறிய இவர்கள், அரேபியாவால் தூண்டப்பட்டு, மதம் மாறாதவர்களைக் கொன்று குவித்தனர்.

எல்லாப் பாரம்பரியங்களையும் போல நூபியா என்ற கலாச்சாரத்தால் ஒன்றுபட்ட தேசம், பல்வேறு கால கட்டத்தில் பல்வேறு மன்னர் வம்சங்களால் ஆளப்பட்டது. இது தவிர பல்வேறு இனக்குழுக்களும் ஒற்றுமையுடன் பல காலம் வாழ்ந்து வந்தனர். வெவ்வேறு மன்னர் ஆட்சிகளுக்கு இடையிலும், அன்னிய நாடுகளுடன் பல போர்களும் நடந்தன. ஆனால் எந்தக் காலத்திலும் இன அழிப்பு அவர்களுக்குள் நடந்தது கிடையாது. இயற்கையுடன் இணைந்த இயற்கையையே தெய்வமாக நினைத்து வாழ்ந்தனர்.

இவை அனைத்தும் 6-ம் நூற்றாண்டிற்கு மேல் நிலைக்கவில்லை. இந்த 6-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் அரேபியாவைச் சேர்ந்த ஆதிவாசி இனக்குழுக்களைப் பிறருக்குச் சொந்தமான வளங்களை ஆக்கிரமிக்கும் தன்மை கொண்டவர்களாக மாற்றிய,  கிறித்துவத்தின் மறு வெளியீடான அரேபிய மதவாதம், முகமதுவினால் தோற்றுவிக்கப்பட்டது.  இந்த டிராகுலா டெக்னிக் மூலம் அரேபியாவின் பூர்வ குடிப் பண்பாடு மிக வேகமாக அழிக்கப்பட்டது. 6-ம் நூற்றாண்டின் மத்தியில் உம்மர்(6-ம் நூற்றாண்டின் ஒசாமா பின் லேடன்) நடத்திய ஜிஹாதிப் போரில் நூபியாவின் அதாவது நைல் நதியின் வாசல் வரை இவர்களின் கலாச்சார மற்றும் இன அழிப்பு நிகழ்ந்தது.

பொது ஆண்டு 644, காலிஃப் உமரின் சாம்ராஜ்யம்

நூபியாவின் மீதான முதற்கட்ட ஆக்கிரமிப்பு அம்ர்-இப்ன்-அல்-ஆஸ் (Amr-ibn-Al-Aas) என்ற உம்மரின் போர்த் தளபதியினால் தொடங்கப்பட்டது. இவர் போர் தொடங்கியதற்கு மிகப் பெரிய அரசியல் காரணம் உண்டு. முகமது நபிக்குப் பின் யார் இந்த இரத்தக்காட்டேரிப் படைக்குத் தலைமை தாங்குவது என்று மிகப் பெரிய சாதி/இனச் சண்டை நடந்தது. இதன் விளைவாக Caliphate(Church+NATO போல்) என்று அழைக்கப்படும் இந்த மத மாற்றம் மற்றும் ஆக்கிரமிப்புச் செய்யும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த மதக் கூட்டமைப்பின் தலைவர் தான் கலீஃபா ( கிறித்துவர்களின் போப்பைப் போல்) என்று அழைக்கப்பட்டார். ஆனாலும் சாதி/இன ரீதியான சண்டைகள் எப்பொழுதும் இந்தக் கூட்டமைப்பில் நடந்து கொண்டுதான் இருந்தன. முதலில் உருவான முதல் மூன்று கலீஃபாக்களான அபு பக்கர்(Abu Bakr), உமர்(Umar) & உத்மான்-இப்ன்-அஃபான்(Uthman-ibn-Affan) ஆகிய அனைவரும் இந்த சாதி/இனச் சண்டையினால் தான் கொல்லப்பட்டார்கள்.

உம்மரின்(இரண்டாம் கலீஃபா) போர்த் தளபதியான அம்ர்-இப்ன்-அல்-ஆஸ், நூபியாவை அடிமையாக்கி அங்குள்ள மக்களை மதம் மாற்றி அவர்கள் இடத்தை ஆக்கிரமித்தால் கலீஃபா கூட்டமைப்பில் மிகப்பெரிய பதவியை அடையலாம் என்று நம்பினான். தனது உறவினன் உக்பா-இப்ன்-நாஃபே(Uqba-ibn-Nafe) என்பவனை நூபியாவைக் கொள்ளை அடிக்க அனுப்பினான். ஆனால் (இப்படையினர்) சக்திமிக்க நூபியா இனக்குழுவின் கொரில்லா முறைத் தாக்குதலால், பின்னங்கால் பிடரியில் பட எகிப்தை நோக்கி ஓடினர். ஜிஹாதிகளை வரலாற்றில் முதன் முறையாக விரட்டி அடித்த பெருமை நூபிய மக்களையே சேரும். நூபியாவின் மத்தியப் பகுதி பாலைவனமாக இருந்ததால், அங்கு கிடைக்க எதுவும் இல்லை என்பதால் மீண்டும் தாக்குதல் நடத்தவில்லை(குறிப்பு: வளமற்ற நாடுகள் மீது இவர்கள் எப்பொழுதும் தாக்குதல் நடத்துவது கிடையாது. முதலிலேயே சொன்னது போல், மத மற்றும் வளங்கள் ஆக்கிரமிப்பு இரண்டும் இவர்களுக்குத் தேவை ).

nubianwarriors2

ஆனாலும் மூன்றாம் கலீஃபா உத்மான்-இப்ன்-அஃபான் தனது அரசியல் மற்றும் அதிகாரத்தைச் சாதிச் சண்டையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தனது ஆக்கிரமிப்பை அதிகரிக்க மீண்டும் 652ம் வருடம் நூபியாவின் மீது போர் தொடுத்தான். அப்பொழுது நடந்த கடுமையான போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் டோங்கோலா என்ற மத்திய நூபியப் பகுதி வரை ஊடுருவினர். இறுதியில் நூபிய மன்னர்  சமாதான உடன்படிக்கைக்குப் பணிந்தார். இருப்பினும் நூபிய இனக்குழுக்களின் தாக்குதலாலும், வடக்குப்பகுதியில் இருந்த எகிப்து மன்னர் வம்சத்தினரின் தாக்குதலாலும், அரேபியர்களால் நீண்ட காலம் அதிகாரத்தில் இருக்க முடியவில்லை. இது மட்டுமின்றி நொபாடியா மற்றும் மக்கூரியா என்ற சக்திமிக்க இரண்டு அரசாட்சிகள் ஒன்று இணைந்து மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்ஜியம் உருவானது.  ஜிஹாதிகளால் தொடர்ந்து தெற்கு நோக்கி முன்னேற முடியவில்லை. திருவள்ளுவரின் வரலாற்றைப் போல் மக்கூரியாவின் வரலாறும் கிறித்துவ மிஷ-நரிகளால் திரிக்கப்பட்டது. இதைப் பற்றித் தெளிவாகப் பிறகு காணலாம்.

மக்கூரியா மற்றும் நொபாடியா வரைபடம்

nobatia_makuriya1கலாச்சாரத் தொடர்பின் காரணமாக எகிப்து மக்கள் நூபியா மக்களுக்குச் சற்று அரணாகத் திகழ்ந்தனர். ஆனால் 7-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எகிப்தியப் பாரம்பரியக் கலாச்சாரமும் வழிபாட்டு முறைகளும் முழுமையாக ஜிஹாதிகளால் அழிக்கப்பட்டது. வாளின் முனையில் எகிப்தின் மக்கள் அனைவரும் மதம் மாற்றப்பட்டனர். இதன் விளைவாக நூபிய – எகிப்திய மக்களுக்கிடையிலான தொடர்பு அற்றுப் போனது.  காலம் காலமாக இருந்து வந்த நூபியாவின் பாதுகாப்பு அரண் மத மாற்றத்தினால் உடைந்தது. மதம் மாறினால் தேசீய உணர்வு போய்விடுமா என்று கேட்கும் அறிவிலிகளுக்கு நூபியா மற்றும் எகிப்தின் வரலாறு ஒரு சிறந்த உதாரணம். மீண்டும் ஜிஹாதிகள் நூபியாவைத் தாக்கத் தொடங்கினர். விளைவு, பல ஆயிரக்கணக்கான நூபிய மக்களும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களும் அழிக்கப்பட்டன. மத மாற்றம் கத்தி முனையில் நடைபெற்றது. பல இனங்கள் இந்த அரேபிய டிராகுலாக்களுக்கு அடிமைகளாக மாற்றப்பட்டனர். இவ்வாறு அடிமை ஆனவர்கள் மிகக் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் தான் அரேபிய இஸ்லாமிய மதத்தின் பங்காளி மதமான மேற்கத்தியக் கிறித்துவ மதம்(இங்கிலாந்து) இவர்களுடன் மோத ஆரம்பித்தது. இது தவிர அரேபிய மற்றும் மேற்கத்திய நாடுகளுக்குள்ளேயும் பல போர்களும் அரசியல் சித்து விளையாட்டுக்களும் நடைபெற்றன. கடைசியாக கலீஃபா அரேபிய டிராகுலாக் கூட்டமைப்பின் கீழிருந்த ஒஸ்மான்லி தெவ்லிடி அரசாட்சியின் கீழ் வந்தது. இதனிடையில் 1798ல் கீழ் கிறித்துவ டிராகுலாக்கள் நெப்போலியன் தலைமையில் எகிப்தைக் கைப்பற்றினர்.

ஒஸ்மான்லி அரசாட்சி

இது கலீஃபா கூட்டமைப்பின் வயிற்றைக் கலக்கியது. அக்கூட்டமைப்பு முஹமது அலி பாஷா (பாஷா என்றால் ஒஸ்மான்லி அரசாட்சியில் மிகப் பெரிய பதவியில் இருப்பவர் என்று பொருள்) என்பவனின் தலைமையில் ஒரு டிராகுலாப் படையை மீண்டும் எகிப்தை கைப்பற்ற அனுப்பியது. முஹமது அலி பாஷா பிரெஞ்சுப் படையைத் தோற்கடித்து எகிப்தின் சர்வாதிகாரியாகத் தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டார். வேலியில் போன ஓணானை மடியில் விட்ட கணக்காக கலீஃபாக்களுக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. கலீஃபாக்கள் கூட்டமைப்பு இவரைக் கொல்ல முடிவு செய்தன. ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

எங்கே முஹமது அலி மேற்கத்திய டிராகுலாக்களுடன் சேர்ந்து விடுவாரோ என்ற பயத்தில் வேறு வழியின்றி 1805-ம் ஆண்டு ( இவரை ஒஸ்மான்லி ) முஹமது அலி பாஷாவை எகிப்தின் சர்வாதிகாரியாக அங்கீகாரம் அளித்தது. இருப்பினும், இவரை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று கலிஃபா கூட்டமைப்பு முயற்சி செய்து கொண்டுதான் இருந்தது. இதனால் இவர் மேற்கத்தியக் கிறித்துவ நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தார்.

(குறிப்பு : இந்த மேற்கத்திய மற்றும் அரேபிய டிராகுலாக்களுக்கு இடையில் நடந்த சண்டையில் அதிகமாகக் கொல்லப்பட்டது, மதமாற்றம் செய்யப்பட்டு அடிமைகளாக மாற்றப்பட்ட நூபியாவின் பூர்வகுடி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

ஆனால் கிறித்துவச் சர்ச்சுகளின் கீழ் இயங்கிய மேற்கத்திய நாடுகள் ஒரு மெல்லக் கொல்லும் விஷம் என்பது முஹமது அலிக்குத் தெரியாமல் போனது. மெல்ல மெல்ல அனகோண்டா பாம்பைப் போல, இங்கிலாந்து எகிப்திய ஆட்சியை விழுங்கியது. கடைசியாக இந்தியப் பிரதமர் நேருவைப் போன்று டெவ்ஃபிக் (Tewfiq – முஹமது அலி பாஷாவின் பேரன்) என்பவரை டம்மியாக வைத்து எகிப்து நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்தனர்.  எகிப்து முழுமையும் சொல்லப்போனால் இங்கிலாந்து நாட்டின் இராணுவக் கட்டுப்பாட்டில் தான் 1952 வரை இருந்தது.

(குறிப்பு: ஜவஹர்லால் நேரு பரம்பரை போல, டெவ்ஃபிக்கின் தந்தை மற்றும் அவன் தமையன்மார்கள் முழுக்க முழுக்க மேற்கத்தியக் கிறித்துவ மிஷ-நரிக் கல்வி முறையில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

டெவ்ஃபிக் பாஷா

ஆனால் சூடான் என்று அழைக்கப்பட்ட நூபியா முழுமையாக இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்தது. பெயரளவில் எகிப்து என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது. அதாவது சூடானின் கட்டைப் பஞ்சாயத்துக்காரராக மாறியது கிறித்துவ இங்கிலாந்து நாடு. 1956ம் ஆண்டில் கிறித்துவ இங்கிலாந்து எகிப்து மற்றும் சூடான் என்று அழைக்கப்பட்ட நூபியாவும் சுதந்திரம் பெற்றது. சூடானின் வடக்குப் பகுதி முழுவது முஸ்லீம்களாக மத மாற்றம் செய்யப்பட்டவர்களும், தெற்குப் பகுதி முழுவது பாரம்பரிய வழிபாட்டைப் பின்பற்றுபவர்களும் இருந்தனர். இங்கிலாந்து எந்த நாட்டைப் பிரித்தாலும் அந்த நாடுகள் உருப்படாமல் போகக் கூடிய வகையிலேயே பிரிக்கும். இதற்கு நூபியாவும் விதிவிலக்கு அல்ல. எந்த ஒரு நாட்டில் ஒரே மாதிரியான மதம்/கலாச்சாரம் இல்லையோ அந்த நாடு முன்னேற முடியாது. இதனைக் கீழே உள்ள புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.

https://filipspagnoli.wordpress.com/stats-on-human-rights/statistics-on-religion/#3

தனியாகப் பிரித்தால் மத மாற்றம் மற்றும் இயற்கை வளங்களின் சுரண்டல் போன்றவற்றை மேற்கத்திய கிறித்துவ நாடுகள் செய்ய முடியாதல்லவா? அதனால் தான் இப்படி நாய் வாய் வைத்தது போல் கலச்சாரத்திற்கும் புவியியல் அமைப்புக்கும் ஒவ்வாத ஒரு எல்லையை மிஷ-நரிகளின் கருத்துக்கு இணங்க (ஹிந்துக்களின் கருத்து எப்படிப் புறம் தள்ளப்பட்டு இந்தியா எப்படி ஹிந்து நாடாக மாற்றப்படாமல் ஒரு போலி மதச்சார்பு நாடாக மாற்றப்பட்டதோ, அது போல) பூர்வகுடி வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட மக்களின் கருத்து புறம் தள்ளப்பட்டு , தனி நாடாக தெற்குப் பகுதியைப் பிரித்துக் கொடுக்காமல், மத மாற்றம் செய்யப்பட்ட வடக்கு முஸ்லீம்களுடன் இணைத்து விட்டுச் சென்றனர்.

எப்படி மதம் மாறிய காஷ்மீர் முஸ்லீம்களால் காஷ்மீர் ஹிந்துக்கள் கொல்லப்பட்டார்களோ, முஸ்லீம்களாக மத மாற்றம் செய்யப்பட்ட வடபகுதியைச் சேர்ந்த மக்கள் தன் வரலாறு மறந்து தங்களது சொந்தச் சகோதர்களான  தெற்குப் பகுதியில் வாழ்ந்த பாரம்பரியப் பண்பாட்டைக் கடைபிடிக்கும் மக்களை காஃபிர் என்று சொல்லிக் கொடுமைப் படுத்தினர். பல வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டன. வழக்கம்போல் அரேபிய வழிகாட்டுதல்படி kashmiri-pundits-murderedஅனைத்துக் காட்டுமிராண்டித்தனங்களும் அவிழ்த்து விடப்பட்டன.

நமது நாட்டில் எப்படி குல தர்ம அடிப்படையினாலான மக்கள் குழுவைச் சாதியாக மாற்றி ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திச் சாதிச் சண்டைகளை ஆப்ரகாமிய மதங்கள் உருவாக்குகின்றனவோ, அதே போல பல சூடானிய இனக்குழுக்கள் மத மாற்றக் கும்பல்களால் 150 ஆண்டுகளில் பரம எதிரிகளாக மாற்றப்பட்டனர். இதனால் இவர்களால் ஒரு சக்தியாகத் திரண்டு வடபகுதியினரின் ஆக்கிரமிப்பை எதிர்க்க முடியவில்லஇ. இது தவிரக் கிறித்துவ மிஷ-நரிகளும் தன் பங்கிற்கு நாசங்கள் செய்தன. எல்லா நாட்டிலும் நடத்தியதைப் போல, வரலாற்றுத் திரிப்புக்கள், இனச் சண்டைகள் மற்றும் ஆரிய திராவிடம் போன்ற போலி இனவாதக் கோட்பாடுகள் போன்றவற்றை சர்ச்சுகள் இனிதே செய்தன.

ஒரு இனத்தை அந்த இன மக்களை வைத்தே மதமாற்றம் என்ற தொழில் நுட்பத்தின் மூலம் அழிக்கும்/சுரண்டும் இந்தத் திறமை, மேற்கத்திய மற்றும் அரேபிய மக்களுக்கே உரிய திறமை. சுதந்திரத்திற்குப் பிறகு, அதாவது 1956ல் தொடங்கி தற்போது வரை நடந்த நிகழ்வுகளைப் பற்றி அடுத்த பதிவில் விரிவாகக் காணலாம்.

(தொடரும்)

 

13 Replies to “சூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 1”

  1. கோமதி செட்டி அவர்களுக்கு பாராட்டுக்கள். அருமையான கட்டுரை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சரித்திர நிகழ்வுகள். அபிரகாமிய மதங்களை டிராகுலாவாக சித்தரிப்பது 100 சதவிகித உண்மை.

    கட்டுரையின் சில வரிகள் நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்

    ”எந்த ஒரு நாட்டில் ஒரே மாதிரியான மதம்/கலாச்சாரம் இல்லையோ அந்த நாடு முன்னேற முடியாது. இதனைக் கீழே உள்ள புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாக அறியலாம். இங்கிலாந்து எந்த நாட்டைப் பிரித்தாலும் அந்த நாடுகள் உருப்படாமல் போகக் கூடிய வகையிலேயே பிரிக்கும். தனியாகப் பிரித்தால் மத மாற்றம் மற்றும் இயற்கை வளங்களின் சுரண்டல் போன்றவற்றை மேற்கத்திய கிறித்துவ நாடுகள் செய்ய முடியாதல்லவா?”

    ” நாட்டில் எப்படி குல தர்ம அடிப்படையினாலான மக்கள் குழுவைச் சாதியாக மாற்றி ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திச் சாதிச் சண்டைகளை ஆப்ரகாமிய மதங்கள் உருவாக்குகின்றனவோ”

    ”ஒரு இனத்தை அந்த இன மக்களை வைத்தே மதமாற்றம் என்ற தொழில் நுட்பத்தின் மூலம் அழிக்கும்/சுரண்டும் இந்தத் திறமை, மேற்கத்திய மற்றும் அரேபிய மக்களுக்கே உரிய திறமை. ”

  2. இக்கட்டுரையை எழுதியவர் பெயர் தவறாக பதிக்கப் பட்டிருந்தது. அதனை இப்போது சரி செய்துவிட்டோம். தவறுக்கு வருந்துகிறோம்.

  3. The picture shows Masai warriors doing their usual ” High jumps”. Are Masais the natives of Nubia? Just curious.
    Admittedly, there is massive conversion racket going on in Kenya and Tanzania. Poor Masais are being converted in their thousands by the unscrupulous christian missionaries. We are witnessing the slow demise of age old Masai culture here.
    Good article.

  4. ஒரு கன்னத்தில் அரைந்தால் மறு கன்னத்தை காண்பிப்பாயக என்று சொன்ன ஏசுவின் சீடர்கள் எப்படி கணக்கில் அடங்கா கொள்ளையர்களாகவும் கொலைகாரர்களாகவும் மாறினார்கள்.

    கொல்லாமல் இருப்பாயாக என்று போதித்த ஏசுவின் சீடர்கள் இன்று மணிதகொலைகளை தவிர உணவிற்காக தினம் பல்லாயிரகணக்கான மிருக கொலைகளையும் செய்து கொண்டிருப்பது ஏன்.

    இவற்றை பார்கையில் இந்த அபிரகாமிய மதத்தவர்கள் டிராகுலா ஜாதிதான் என்பதில் ஐயமில்லை

  5. ரமா,

    நீங்கள் குறுப்பிட்ட மசாய் இனத்தவர்கள், நிலோட்டிக் என்ற பழங்குடியினத்தின் உட்பிரிவை சேர்ந்தவர்கள். தெற்கு நுபியா ( south sudan + Kenya + Tanzania) மொத்த மக்கள் தொகையில் 50% மேலான மக்கள் நிலோடிக் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். ஆதலால், கிறித்துவ மிஷினரிகள் இவர்களை மதம் மாற்ற தனி கவனம் செழுத்தினர். இவர்களை வைத்து தான் முதல் இனவாத கோட்பட்டை ( as like Aryan dravidan fake story) கிறித்திவ மிஷினரிகள் கொண்டுவந்தனர்.

    https://en.wikipedia.org/wiki/Nilotic#Ethnic_divisions

    \\Masai warriors doing their usual ” High jumps”. Are Masais the natives of Nubia?\\

    ஆம், மசாய் இனத்தவரும் நுபியாவை சேர்ந்தவர்களே. நுபியா என்பது பாரததை போன்று ஒரு கலாச்சாரத்தால் ஒருங்கினைக்கப்பட்ட ஒரு நாடு. கிறித்துவ மிஷினரிகள் வந்த பின்பு தான் இந்தியாவில் சாதி எண்ணிக்கை அதிகமானது. இந்தியாவில் செய்தது போலவே அங்கும் மொழி மற்றும் பழக்கவழக்க வேறு பாடுகளை எல்லாம் ஒரு இனமாக்கி மிகப்பெரிய இன மோதல்களை கிறித்திவ மற்றும் மேற்கத்திய நாடுகள் உருவாக்கின. இதை பற்றி அடுத்த பதிவில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

    ஒரு காலத்தில் அனைத்து தேசங்களும் ஒரு கலாச்சாரத்தின் அடிப்படைலேயே ஒருங்கினைந்தது. அதை நாடுகள் என்ற ஒரு எல்லை உருவாக்கி அவர்களிடம் சண்டையை உருவாக்கி அதில் குளிர்காயும் பிணம் திண்ணி கழுகுகள் தான் மேற்கத்திய கிறித்துவ வெள்ளை கயவர்கள்.

  6. கிறித்துவ வெள்ளை நிறவெறியினரால் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்ட போலி இனவாத கோட்பாடுகளையும் (racial theory) அதை உருவாக்கிய டூபாக்கூர் பைபிலை பற்றியும் கோலின் கிட்ட் என்ற வரலாற்று ஆசிரியர் தனது “The Forging of Races” என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

    https://books.google.com/books?id=aNT3q1HjY_MC&dq=forging+of+tribes&source=gbs_navlinks_s

  7. Thanks for the informaton Shri Gomathi Chetty. Very informative. I have seen first hand the effects of conversions on the Masai tribes. I have been to their village. The leader?( guide) who was able to speak English was a Missionary/conevnt ( primary school level) educated. His Gods ( ? Sun, etc) are not worshipped anymore.Churches have mushroomed everywhere in Kenya. I have Masais attending churches there. It is simply a genocide of thier culture.
    I am in total agreement with your views.

  8. அருமையான அனைவரும் படிக்க வேண்டிய ஒரு உண்மை நிறைந்த பாடத்தை எழுதி உள்ளீர்கள் அல்ல அல்ல ; நடத்தி உள்ளீர்கள்..
    வாழ்த்துகள்.. அனைத்தும் பெருக..

  9. கோமதி செட்டி, இந்து மதத்தை உயர்த்தி பிடிப்பதற்காக மற்றவர்களை இழிவான வார்த்தைகளால் விமர்சிக்காதீர்கள். என்னிடம் இருப்பது இரண்டு கேள்விதான், நம் கைகளால் உருவாக்ககூடிய சிலை நம்முடைய தேவையை எப்படி நிவர்த்தி செய்யும்? அந்த சிலை வணக்கத்தை மையப்படுத்திய வாழ்க்கை முறை எப்படி வெற்றியை தரும்? படைத்தவனை வணங்குவோம், படைப்பினங்களை அல்ல…

  10. //…நம் கைகளால் உருவாக்ககூடிய சிலை நம்முடைய தேவையை எப்படி நிவர்த்தி செய்யும்?

    நம்மால் உருவான, நமக்குப் பிறந்த பிள்ளைகள் நம் மீது அன்பு செலுத்துவது போல, தேவைகளை நிறைவேற்றுவது போல.

    சொல்லப்போனால், பெற்ற பிள்ளைகளைவிட அதிகமாகவே தேவைகள் நிறைவேறுகின்றன என அனுபவிப்பவர்கள் சொல்கிறார்கள்.

    //….அந்த சிலை வணக்கத்தை மையப்படுத்திய வாழ்க்கை முறை எப்படி வெற்றியை தரும்?

    வணங்குவது சிலையை அல்ல. உயிரோட்டமுள்ள ஆன்ம சக்தியை.

    தெற்கைப் பார்த்து ஐந்து முறை வெறுமே குனிந்து நிமிர்வதால் கிடைக்கும் வெற்றிகளை விட, ஆன்ம உயிரோட்டமுள்ள அடையாளங்களை உணர்வுபூர்வமாக நெருங்குவதால் உடனடியாகவும், விரும்பியபடியும், நன்மை பயக்கும் வண்ணமும் வெற்றிகள் கிடைக்கின்றன.

    //….படைத்தவனை வணங்குவோம், படைப்பினங்களை அல்ல

    படைப்பில் உறையும் படைப்பவனை வணங்குபவர்களுக்கு வெற்றிகள் குவிகின்றன. புத்தி வேலை செய்கிறது.

    .

  11. விடுதலை நேசன் கேட்கிறார்.
    நம் கைகளால் உருவாக்ககூடிய சிலை நம்முடைய தேவையை எப்படி நிவர்த்தி செய்யும்? அந்த சிலை வணக்கத்தை மையப்படுத்திய வாழ்க்கை முறை எப்படி வெற்றியை தரும்?
    அதற்கு களிமிகு கணபதிஜி நன்கு பதில் சொல்லியுள்ளார்.
    ஹிந்துக்களைப் பொருத்தவரை கடவுள் அவரது படைப்பு இரண்டும் தொடர்ச்சிதான். கடவுள் தமது படைப்பான பிரபஞ்சத்திற்குள்ளும் நிறைந்துள்ளார். வெளீயிலும் உள்ளார். எனவே அவர் கடவுள். படைத்தவனை அவன் படைப்பிற்குள் காண்பது. அதற்கு மேலான ஒன்றாக வழிபடுவது. உணர்வது எங்கள் முறை.சிலையை நாங்கள் வழிபடுவதில்லை. சிலை ஒரு குறியீடு மட்டுமே. சிலை காட்டும் இறையை வழிபடுகிறோம். ஆக சிலை காட்டும் இறைவன் அருள் புரிகிறார்.
    யூதரை மட்டும் மீட்க வந்த் உங்கள் இயேசு நாதர் செய்த அற்புதங்களைக்காட்டிலும் பேரற்புதங்கள் செய்த எங்கள் மகான்கள் சிலைமூலம் வழிபாடு செய்தவர்கள்தான். மராட்டியத்து மஹான் துக்காராம் சாமி நேராக தேர் ஏரி விண்ணகம் சென்றார். தெரியுமா உங்களுக்கு.
    கோடான கோடி புனிதர் இங்கே இருந்தனர் இருக்கின்றனர். இன்னும் தோன்றுவர். மூர்த்தி(விவிலியம் கூறும் சிலை அன்று) ஜீவனுள்ளது அதன் மூலம் செய்யப்படும் வழிபாடு மனிதரை உய்விக்கும் என்பதற்கு ஆதாரங்கள் எம்மண்னில் ஆயிரம் ஆயிரம் உண்டு.
    மூர்த்தி வழிபாட்டைக் கண்டித்தவர் அழித்தன ஆயிரமாயிரம் பண்பாடுகள், கலாச்சாரங்கள்(இன்று செவ்விந்தியர் களின் ஓங்கிய மாய பண்பாடு எங்கே),நூல்கள், கலைப்பொக்கிஷங்கள். அப்பெருவெறியால்
    அழிக்கப்பட்டனர் ஆயிரம் கோடிமக்கள்.
    இனவெறி மதவெறி, காலனியாதிக்கம், ஆப்பிரிக்கரை ஒடுக்கிய் அடிமை முறை இவையாவும் அந்த் கொள்கையரின் சா(வே)தனைகளே. மனிதனை மையமாக்கி சுற்றுச்சூழலை நாசம் செய்தத அந்த அபிராகாமி செமிட்டிக் வெறிக்கொள்கையே. முடிந்தால் மறுத்துக்காட்டுங்கள் சான்றுகளோடு விடுதலை நேசன்.

  12. @ Viduthalai Nesam

    என் இப்படி மஞ்ச துண்டார் போல் சமந்தமே இல்லாத ஒரு கேள்வியை இந்த இடத்தில கேட்கிறிர்கள். உங்கள் கேள்வியை சரியான பதிவில் போட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். பல கட்டுரைகளில் இது போன்று சமந்தமே இல்லாத கேள்விகளை கேட்டு என் தான் இந்த கிறித்துவர்கள் / போலி கம்யுனிஸ்டுகள் தலைப்பை திசை திருப்புகிரிர்களோ தெரியவில்லை. இருப்பினும் உங்கள் கேள்விக்கு நண்பர் களிமிகு கணபதி தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

  13. the time has come to mount a worldwide campaign against the violent cults of islam and christianity and replace them ith the timeless sanathana Dharma with its multifarious ,kaleidoscopic culture of temple worship, various sampradayas,philosophies, dance,drama, epics,puranas, temple architecture, daily rituals,nature worship, festivals, philanthropy etc etc.

    then the world will be steeped in perennial celebrations
    because Hindu Dharma considers life as a celebration
    We expect many more such pieces from brother Gomathi setty

    R.Sridharan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *