[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !

 “புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மாதம் மாறியது ஏன்?” தொடரின் 9ம் பாகம்

இதுவரை: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம். இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம்.

தொடர்ந்து மதமாற்றத்தின் அவசியத்தையும், மதமாற்றம் குறித்த ஐயப்பாடுகளுக்கான விளக்கங்களையும் இனி…..

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7  || பாகம் 8

ந்த மாநாட்டில் உங்களுக்கு என்ன செய்தி தருவது என்று சிந்தித்து கொண்டிருக்கும்போது, தனது மகா பரிநிர்வாணத்திற்கு (மரணத்திற்கு) முன்னதாக நமது பிக்குகள் சங்கத்தில் மகான் புத்தர் கொடுத்த செய்தி நினைவுக்கு வந்தது. மகா பரிநிர்வாண சூத்தத்தில் இந்தச் செய்தி மேற்கோள் காட்டப்படுகிறது.

buddha_with_ananda

அப்போதுதான் நோய்வாய்ப்பட்டு மீண்டிருந்த பகவான் புத்தர் மரத்தின் அடியிலுள்ள தமது இருக்கையில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். அவரது மதிப்பிற்குரிய சீடர் ஆனந்தர் புத்தரிடம் சென்றார். அவரை வணங்கிவிட்டு அவரிடம் சொன்னார்:

“பிரபுவே ! நோய்வாய்ப்பட்ட போதும் ஆரோக்கியமாக இருந்தபோதும் தங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால்,  இப்போது நீங்கள் அனுபவித்த நோய் என்னை மிகவும் பாதித்துவிட்டது. உலோகம் போல் என் உடல் கணக்கிறது. உள்ளத்தில் அமைதி இல்லை. தம்மத்தில் என் மனத்தை நிலைநிறுத்த முடியவில்லை. ஆனால், சங்கத்திற்கு சேதி சொல்லாமல் தாங்கள் பரிநிப்பனம் (மரணம்) அடையமாட்டீர்கள் என்பதால் ஒரு வித ஆறுதலோ மனநிறைவோ ஏற்படுகின்றது.”

தன்னைத் தன்னால் உயர்த்திக்கொள்

அதற்குப் பகவான் இப்படிப் பதிலளித்தார்:

”ஆனந்தா சங்கம் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது ? ஒளிவு மறைவு இல்லாமல் திறந்த மனத்துடன் நான் தம்மத்தில் பிரச்சாரம் செய்துவிட்டேன்; சில ஆசிரியர்களைப் போல் தத்தகதர் எதையும் ஒளிக்கவில்லை; மறைக்கவில்லை. இனி பிக்கு சங்கத்திற்குச் சொல்வதற்குத் தத்தகதரிடம் என்ன இருக்கிறது?

எனவே சூரியன் தனக்குத்தானே ஒளி தந்து கொள்வது போல் நீ உனக்குள்ளே சுடர் விடுவாயாக! பூமியைப் போல் பிறரிடம் இருந்து வரும் ஒளியை நீ சார்ந்திருக்கக்கூடாது. உண்மையாக இரு. உண்மையில் மட்டுமே நீ புகலிடம் தேட வேண்டும். எவரிடமும் சரணாகதி அடையாதே.’’

புத்தரின் சொற்களில்தான் நானும் அடைக்கலம் அடைகிறேன். உங்களுக்கு நீங்களே வழிகாட்டியாக இருங்கள். உங்களது தர்க்கத்தில்தான் நீங்கள் புகலிடம் தேட வேண்டும். பிறரது சொற்களுக்குச் செவி சாய்க்காதீர்கள். பிறருக்கு உடன்பட்டு விடாதீர்கள்.

உண்மையாய் இருங்கள். உண்மையில் மட்டுமே புகலிடம் தேடுங்கள். எதற்கும் அடிமைப்பட்டு விடாதீர்கள். பகவான் புத்தரின் இந்தச் செய்தியை நீங்கள் இந்தக் கணத்தில் நினைவில் நிறுத்தினால் போதும். உங்கள் முடிவு தவறாக இருக்காது என்பது நிச்சயம்.” என்றார்.
 
இந்த நீண்ட சொற்பொழிவில் எல்லா விமர்சனங்களுக்கும் அம்பேத்கர் பதிலளித்துள்ளார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இந்த தொடர்கட்டுரைகளுக்கு வந்த மறுமொழிகள் எழுதியவர்களுக்கும் தாங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் இந்த சொற்பொழிவில் அமைந்துள்ளது என்பதையும் படிக்கும்போது தெரிந்துகொள்ளலாம்.

அம்பேத்கர் முதலில் இந்துமதத்தை சீர்திருத்திவிடலாம் என்றுதான் கருதினார். அது முடியாத காரியம் என்பதை உயர்சாதி இந்துக்கள் அவருக்குத் தெளிவுபடுத்தினார்கள். அதனால் அம்பேத்கர் இந்துமத சீர்திருத்தம் என்பதை விட்டுவிட்டு மதமாற்ற வேலையில் முழுமூச்சாக இறங்கினார்.

இதற்குப் பிறகு அம்பேத்கரின் மதமாற்றம் குறித்து எம்.சி.ராஜா, டாக்டர் மூஞ்சே ஆகியோருக்கிடையே நிகழ்ந்த கடிதப் போக்குவரத்து குறித்தும்  எம்.சி.ராஜாவுக்கு பதிலளிக்கும் முகமாக அம்பேத்கர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அம்பேத்கரை ஏற்காத தலித்துகள்

1936, ஆகஸ்ட் 15ம் தேதி ஜனதா எனும் மராத்தி இதழில்  அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்,

m-c-raja

 ‘தீண்டப்படாத மக்கள் சீக்கிய சமயத்தைத தழுவவிருப்பது தொடர்பாய் ராவ்பகதூர் எம்.சி.ராஜா, டாக்டர் மூஞ்சே ஆகியோருக்கிடையே நிகழ்ந்த கடிதப் போக்குவரத்து அண்மையில் செய்தித் தாள்களில் வெளியானது. அதை நான் படித்துப் பார்த்தேன்.

… திரு.ராஜா இந்து சமயத்தைத் துறக்கவில்லையென்றால், அவரை யாரும் வற்புறுத்தப் போவதில்லை. எனவே சமயமாற்றம் குறித்துக் குறைகூற அவருக்கு உரிமை ஏதுமில்லை.

‘நான் இந்துவாக வாழ்ந்து இந்துவாகவே சாவேன்’ என்று திரு.ராஜா கூறுகிறார். அதற்கு அவருக்கு முழு உரிமையுண்டு. ஆனால், அவருக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவர் செய்தித்தாள்களில் அறிக்கை விடுவதில் தமது திறமையைப் புலப்படுத்தலாம். இந்து சமயத்தின் பால் அவருக்குள்ள ஆழ்ந்த பற்றையும் வெளிப்படுத்தலாம். ஆனால்,  அவராகப் பிறிதொரு சமயத்துக்கு மாறாத வரையில் அவர் தொடர்ந்து ‘பறையராக’ வாழ்ந்து ‘பறையராகவே’ சாவார் என்பதில் ஐயமில்லை.

அவர் இந்து சமயக் கட்டுக்குள் தொடர்ந்து இருக்கும்வரை, அவரது பிறந்த சாதி காரணமாக அவர்மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை எனும் கறையில் ஒரு சிறு துளியும் அகற்றப்படமாட்டாது. ஆன்மீக காரணங்களுக்காகத்தான் சமயமாற்றம் நிகழ வேண்டுமென்று கூறுவது பொருள் அற்ற வெட்டிப் பேச்சாகும். ஆன்மீகக் காரணங்களுக்காகத்தான் அவர் இந்து சமயத்திலேயே தொடர்ந்து இருக்க விரும்புகிறாரா என்று திரு.ராஜாவைக் கேட்க விரும்புகிறேன்.

ஆன்மீக மனநிறைவு என்பது தவிர வேறு எதிலும் அவருக்கு நாட்டமில்லையென்றால், சட்டமன்றங்களில் இட ஒதுக்கீடு பெறுவதால் கிடைக்கும்  பொருளியல், அரசியல் நலன்கள் குறித்து அவர் ஏன் அக்கறை காட்ட வேண்டும்?

இந்துவாக வாழ்ந்து இந்துவாக இறப்பதில் அவர் அக்கறை கொண்டிருக்கிறார் எனில் ஒதுக்கீட்டு இடங்களில் ஏன் அவர் நாட்டம் செலுத்த வேண்டும்? இவ்வாறு அம்பேத்கர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அதே அறிக்கையில் காந்திக்கும் பதில் சொல்லியிருந்தார்.

காந்தி ஒரு ஏமாற்றுப் பேர்வழி ? 

gandhi_bharata_mata

‘‘எனது நிலைப்பாட்டைத் தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று திரு. காந்தி கூறுகிறார். நானோ அவரது வாக்கையும் செயலையும் புரிந்துகொள்ளுதல் கடினமாயிருக்கக் காண்கிறேன்.

‘தீண்டப்படாத மக்களின் மேம்பாடு என்பது தனித்ததொரு விவகாரம்’ என்று அவர் கூறுகிறார். காந்தியடிகள் பயன்படுத்தும் இந்த மொழி ஒரு துறவி மற்றொரு துறவியிடம் கூறப்படுவதாயிருந்தால் ஒருவேளை அவர்களால் இதனைப் புரிந்து கொண்டிருக்கக் கூடுமோ என்னவோ. ஆனால், அன்றாட நடைமுறைச் சமுதாயக் கோட்பாடுகளைப் பின்பற்றும் என்னைப் போன்ற எளிய மக்களுக்கு, இத்தகைய மகாத்மாத்தனமான மொழி பொருளற்றதாய்த் தோன்றுகிறது.

சமயம் என்பது பண்ட மாற்றத்திற்குரியதோர் பொருள் அல்ல என்று திரு. காந்தி கூறுகிறார். இத்துணைக்காலம் கடந்த கட்டத்தில் இத்தகையதொரு போக்கில் திரு. காந்தி பேசுதல், நாணயக் குறைவானதொரு செயலே என்று சுட்ட விரும்புகிறேன்.

புனா ஒப்பந்தத்தின்போது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல் என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவராகவே திரு.காந்தி பேசினார். தமது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுகின்ற மக்கள், ஆன்மீக அமைதி பெறுதல் எனும் பசப்பு வார்த்தைகளில் ஏமாந்து தமது அன்றாட அடிப்படைத் தேவைகளான உணவு, நீர் போன்றவற்றைப் பறிகொடுக்கும் காலம் மலையேறிவிட்டது.

தீண்டப்படாத மக்கள் தங்களது சமயத்தைப் பண்டமாற்று செய்வதாய்த் திரு.காந்தி கூறுகிறார். ஆனால் சமயமாற்றம் இயக்கம் என்பது எத்தகைய தன்னல நோக்குடனோ, சில தனிப்பட்டோர் நலன்களுக்காகவோ தோற்றுவிக்கப்பட்டதன்று என்பதை அவர் தமது மனத்தில் கொள்ள வேண்டும்.

திரு. காந்தியின் கருத்துப்படி, இந்துக்கள்தான் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமாம். தீண்டாமையை ஒழிக்க இந்துக்கள் தாமாகவே முன்வந்து பாடுபட வேண்டுமாம். தீண்டாமையை அகற்றுவதற்காகவோ, தமது மேம்பாட்டுக்காகவோ தீண்டப்படாத மக்கள் எப்பணியையும் மேற்கொள்ளாமல் கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்து,  “இறைவா, இந்துக்களுக்கு அறிவையும் துணிவையும் ஒளியையும் தந்து அவர்களது பாவச்செயல்களை மன்னீப்பீராக. அவர்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கித் தமது சமுதாயத்தைச் சீர்திருத்தம் செய்வதற்கு வேண்டிய வலிமையையும் அறிவையையும் அவர்களுக்குக் கொடுப்பீராக என்று தொழுது கொண்டிருந்தால் போதுமாம். தீண்டப்படாத மக்களுக்குக் காந்தியடிகளின் தூய அறிவுரை இதுதான்.

இத்தகைய பசப்பு உரைகளால் எவருக்கும் நன்மை விளைந்திடாது. எந்தவொரு சிக்கலுக்குமான தீர்வும் கிடைத்துவிடாது. அறிவுள்ள எவரும் இத்தகையதொரு ஆலோசனைக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். ஏதாவதொரு பகுதியில் பிளேக் போன்றதொரு கொள்ளைநோய் பரவிக் கொண்டிருப்பதாய்க் கொள்வோம். அவர்களிடையே சென்று ‘அருமை உடன்பிறப்புகளே, அமைதியாய் நின்று எனது அறிவுரையைக் கேளுங்கள். இக்கொள்ளை நோய்க்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். ஒரு காலத்தில் நகராட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் தங்கள் கடமையைச் செய்யத் தவறியமைக்காக வருந்தி மன்னிப்புக் கோருகிறேன். பிளேக் நோயை ஒழிப்பதற்கென்றொரு திட்டத்தைத் தீட்டத்தான் போகிறார்கள். அதுவரையில் நீங்கள் பொறுமை காக்க வேண்டும். அவசரப்பட்டு உங்கள் வீட்டையும் அடுப்பங் கரையையும் துறந்து வெளியேறலாகாது’ என்றொரு மூடன் அறிவுரை கூறுவானாகில் எப்படியிருக்கும்? இத்தகையதோர் ஆலோசனையில் எத்தகைய அறிவீனம் காணப்படுகிறதோ அத்தன்மையானதுதானே தீண்டப்படாத மக்களுக்கு காந்தியார் நல்கும் அறிவுரையும்?’ என்று காட்டமாக பதில் அளித்தார்.

அம்பேத்கர் எனும் தேசியவாதி

varnasrama_dalit_caste

இவ்வாறு அம்பேத்கர் பலருக்கு பதிலளித்துக் கொண்டிருந்த வேளையில், இயோலா மதமாற்ற அறிவிப்புக்குப் பின்னர் அம்பேத்கருடன் சமரசம் செய்யும் முயற்சிகளும் நடந்தன. 

அம்பேத்கரை மதம் மாறுவதிலிருந்து தடுக்க, பம்பாய் இந்துமகா சபாவின் செயற்குழுவின் அவசரக்கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் மதம் மாறவேண்டாம் என்று அவரைக் கேட்டுக் கொண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மோ. வா. கேல்கரின் தலைமையில் ஒரு தூதுக்குழு 24-10-1935 அன்று அம்பேத்கரைச சந்தித்தது. அம்பேத்கர் தீண்டத்தகாதவர்களுக்கு மதம் மாறுதலைத் தரவிர வேறு வழியில்லை. அவர்களை மதம் மாறும்படி நான் அறிவுறுத்தியது அவர்களது நன்மையைக் கருத்தில் கொண்டுதான் என்றும், மதம் மாறுவதால் நாட்டிற்கு எத்தகைய தீங்கும் ஏற்படாது என்று உறுதியளித்து அவர் கூறினார் : எனது கடமை மூன்று இலக்குகளைக் கொண்டுள்ளது.

முதலாவது நாடு.

இரண்டாவது தீண்டத்தகாதோர் சமூகம்.

அதற்குப் பிறகுதான் இந்து சமூகம் என்றும், மதம் மாறும் தருணம் வரும்போது இந்துமதத் தலைவர்கள் அனைவருடனும் விவாதிப்பேன். நாங்கள் எந்த முடிவெடுத்தாலும் வீரரைப்போல் கௌரவமான முறையில் வெளிப்படையாக நடந்துகொள்வோம் என்று உறுதியளித்தார்.

மகாராஷ்டிரத்தில் மத சுத்திகரிப்பு இயக்கத்தின் தலைவரான விநாயக் மஹாராஜ் மசூர்கா, மதம் மாறிய ஆயிரக்கணக்கான இந்துக்களை சுத்திகரித்து அவர்களுக்கு மீண்டும் இந்துமதத்தில் தீட்சையளித்து வந்தார். நவம்பர் முதல் வாரம் அவர் தாமாகவே சென்று அம்பேத்கரை  சந்தித்தார். இந்த சந்திப்பு மூன்றுமணிநேரம் நடைபெற்றது.

மசூர்கா சொன்னார் : இந்தியாவில் இந்துவே இல்லாது போனால் பிறகு இந்த நாட்டின் பெயர் இந்துஸ்தான் என்று இருக்க முடியாது.

அதற்கு அம்பேத்கர் பதிலளித்தார் : உங்களைப்போல் எனக்கும் வருத்தமுண்டு. ஆனால் இதற்கான காரணங்களை நீக்குவதோ உங்கள் கையில் உள்ளது. இதற்கென நீங்கள் ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றுகூறிய அம்பேத்கர், திட்டத்திற்கான வழிமுறையையும் சொன்னார் : ‘என் கருத்துப்படி, இந்து மதத்தில் தற்போதுள்ள நான்கு வருண அமைப்பை ஒழித்துவிட்டு ஒரே வருண அமைப்பை நிலைநாட்ட வேண்டும். பிறப்பைக் கொண்டு சாதியை நிச்சயிக்கக்கூடாது என்று அறிவித்து ஒரு தீர்மானம் புனேயில் நடைபெற உள்ள இந்து மகாசபை மகாநாட்டில் நிறைவேற்றுங்கள் பார்ப்போம்’ என்றார்.

தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !

மசூர்கர் இந்து சமூகத்தின் வருண அமைப்பை ஒழிப்பதை ஆதரிக்கவில்லை. அப்போது அம்பேத்கர் வேறொரு ஆலோசனை சொன்னார்: 

“அப்படியானால் நீங்கள் மிகவும் எளிதான, அருமையான காரியம் ஒன்று செய்யலாம். மிகச்சிறிய விஷயம்தான். செய்துகாட்டுங்கள் பார்க்கலாம். எங்களைச் சேர்ந்த கே. கே. ஸகட் என்பவரை ஓராண்டிற்கு சங்கராச் சாரியாரின் இருக்கையில் அமர்த்துங்கள். புனே நகரின் சித்பவான் என்ற தீவிரப் பிராமண வகுப்பினர் நூறுபேர் அவருக்கு பாதபூஜை செய்யட்டும். இவ்வளவு சிறிய விஷயத்தை உங்களால் செய்துகாட்ட முடியுமானால் சமத்துவத்தை நிலைநாட்ட முடியும் என்று உங்கள் உள்ளத்தில் நம்பிக்கை ஊற்றெடுப்பதன் அடையாளமென அச்செயலை நாங்கள் கருதுவோம். மேலும் மதம் மாறுதல் குறித்த எங்கள் முடிவை ஒத்திவைப்போம்.”

ஸகட் என்பவரின் பெயரை இவ்விஷயத்தில் குறிப்பிட்டது ஏன் என்று அம்பேத்கர் தெளிவுபடுத்துகையில், ‘அவர் மாட்டே குருயுயின் முதன்மையான சீடர். மேலும் கேசரி கட்சி அவரைத் தான் தீண்டத்தகாதவர்களின் ஒரே தலைவரென அறிவித்துள்ளது.’ ஆகவே அம்பேத்கர் அவர் பெயரை குறிப்பிட்டார். மசூர்கர் விடைபெற்றுச் சென்றார். பிறகு அந்த விஷயம் என்ன ஆனது என்பது தெரியவில்லை.

1936 மே மாதம் வார்தா வந்திருந்தபோது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் தலைவர்களான புருசோத்தம கார்படே, சங்கர் ராவ் சோனாவானே, கோமாயு தெம்பாரே ஆகியோர் டாக்டர் அம்பேத்கரைச் சந்தித்துச் சமயமாற்றம் குறித்துக் கருத்துரையாடினர். அவர்களிடம் ஐயந்திரிபறத் தெளிவான பாங்கில் தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானவை.

அம்பேத்கர் கூறுகிறார் ‘நான் இதுவரை எவரிடமும் இஸ்லாத்திற்கோ, கிறித்துவத்திற்கோ ஆதரவு தேடவில்லை. வேறு எவரேனும் தனது சொந்தப் பொறுப்பில் இஸ்லாத்திற்கோ அன்றிப் நிற சமயமொன்றுக்கோ ஆதரவு தேடுவராயின் அவர் ஏமாற்றப்படுவது உறுதி என்பதையும் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சமயமாற்றம் குறித்து நான் அறிக்கை விடுத்தது மெய்தான். ஆனால் இதுவரை குறிப்பிட்ட எந்தவொரு சமயத்திலும் சேருமாறு நான் எவருக்கும் கூறியதில்லை. அதுவரை நாமனைவரும் சமயமாற்றத்தின் தேவை குறித்துத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருதல் அவசியம். அதே சமயம் எந்தவொரு குறிப்பிட்ட சமயத்திற்காகவும் பிரச்சாரம் செய்தலாகாது. நான் எப்போது அறிவிக்கின்றேனோ அப்போதுதான் நாம் ஏழுகோடி மக்களும் ஒட்டுமொத்தமாக சமயமாற்றம் செய்துகொள்ளவேண்டும்.”

அம்பேத்கர் மதம் மாறுவது என்று முடிவெடுத்தாலும் எந்த மதத்தில் மாறுவது என்பதை உடனடியாக முடிவெடுத்து விடவில்லை. அவருடைய இயல்பே தீர ஆராய்வதுதான், எதையும் முழுவதுமாக தெரிந்துகொள்வதுதான், அவரது வழி.  வேறுமதங்களுக்கு மாறினால் என்ன விளைவுகள் தீண்டப்படாதோருக்கு ஏற்படும் என்பதை நன்கு அறிந்தவர் அம்பேத்கர்.

aryan_invasion_myth_daninoஆரிய-திராவிட இன வாதம் தீர்வாகுமா?

1936, ஜனவரி 11, 12 தேதிகளில் புனாவில், மராட்டிய மாநில தீண்டப்படாத சமுதாய இளைஞர்களின் மாநாடு நடைபெற்றது. அதில் சென்னை மாநிலத்தின் புகழ்பெற்ற தலைவர் பேரா. என். சிவராஜ் மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.
 
பேரா. சிவராஜ் தமது தலைமை உரையில், ஒடுக்கப்பட்ட மக்கள் தீண்டாமையிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி இந்து சமயத்திலிருந்து விலகுதலே; இதற்காக நாம் ஏற்கெனவே நிலவிவரும் வேறு சமயங்கள் ஒன்றில் சேர வேண்டு மென்பதில்லை. புதிய சமயம் ஒன்றைத் தொடங்கலாம்.
 
அல்லது ஆரியர்கள் இந்நாட்டிற்கு வந்து சமயத்தையும் இழிவழக்குகள் பலவற்றையும் பரப்புவதற்குப் பன்னெடுங்காலத்திற்கு முன்பாகவே இங்கு திராவிடர்கள் பின்பற்றி வந்த சமயத்தைப் புதுப்பிக்கலாம் என்று கூறினார்.
 
திராவிட சமயம் என்ற ஒன்றை உருவாக்கலாம் எனும் இந்த யோசனைக்கு அம்பேத்கரின் பதில் என்ன? அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

(அம்பேத்கரின் அதிரடி தொடரும்)

 

 

192 Replies to “[பாகம் 09] தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !”

  1. ஆதாம் ஒரு திராவிடனாம் ! ! ! ! ! ! ,
    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    அப்போ யேசு ஒரு திராவிடனா? போப்பு பெனடிக்ட்டு ஒரு திராவிடனா?

    [Edited and published]

  2. இந்த கட்டுரை 2 நாட்களுக்குமுன் பிரசுரமாகி தீடிர் என்று நீக்கப்பட்டு இன்று வேறு ஒரு வேண்டாத விதண்டாவாத தலைப்புடன் மீண்டும் பிரசுரமாகியுள்ளது. இப்படியே பிறறை சீண்டிபார்பது தமிழனுக்கு ஒரு பொழுது போக்காகவே மாறிவிட்டது. இதற்கெல்லாம் விளக்கம் சொன்னால் அதை ஏற்க மறுக்கும் பல அம்பேத்கர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். காலத்தின் கட்டாயத்தால் இந்து சமூகம் பல மாற்றங்களை அடைந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏன் தலித்தான மாதா அமிரதமயியை சங்கராசாரியார் சென்று வணங்கி வந்தார் ? அவருக்கு இன்று பல பிராமினர்கள் பாதபூஜை செய்ய கொண்டுதான் இருக்கிறார்கள் ? இந்த கட்டுரை தொடர் சற்று தீகட்டிவிட்டது சொல்லும் செய்தி சமூகத்தில் ஒற்றுமையை வளர்கவேண்டுமே அன்றி பிரிவினை எண்ணங்களுக்கு வித்திடகூடாது.

    ”எண்ணையிலே தண்ணீரை எப்படித்தான் கலந்தாலும் இயற்கை குணம் மாறாதடி என்முத்தம்மா கட்டையிலும் வேகாதடி” இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்னையும் சேர்த்துதான்.

  3. @ vedamgopal,

    தலித் ஒருவர் சங்கராச்சாரியாராக வேண்டும் என்பது அம்பேத்கரின் கோரிக்கை. அதையே இந்தக் கட்டுரை வெளியிடுகிறது.

    அம்பேத்கர் சொல்லாததை கட்டுரை அவரது கருத்தாக வெளியிடவில்லை.

    அம்பேத்கர் அப்படிச் சொல்லி இருப்பது இந்தப் பிரச்சினையின் முக்கியமான விஷயங்களில் ஒன்று. அதை மறைக்கவோ அல்லது மறுக்கவோ செய்வது கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று சொல்வது போலத்தான். அத்தகைய போக்கு இந்துத்துவமாக இருக்கும் வாய்ப்பு இல்லை.

    மாதா அம்ருதானந்த மயியை ஐயர், ஐயங்கார், மத்வர், ஷர்மா,….. போன்ற சாதிகளைச் சேர்ந்தவர்கள் வணங்குகிறார்கள் என்பதும் உண்மையே. (இவர்கள் எல்லாம் ஆங்கிலேயர்கள் சொல்லிக் கொடுத்தபடி தங்களைப் பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வதும் உண்மையே !) இவர்கள் தலித் சாதியைச் சேர்ந்த அந்த தெய்வத்திற்குப் பாத பூஜை செய்வதும் உண்மையே.

    ஆதி சங்கரர் எந்தப் பணியைச் செய்ய எண்ணினாரோ, எந்தப் பணியை அவர் ஸ்தாபித்த ஸன்யாஸ ஆஸ்ரமத் தலைவர்கள் என்றென்றும் செய்ய வேண்டும் என எண்ணினாரோ, அந்தப் பணியைத்தான் நம் அன்னை அம்ருதானந்த மயி செய்துவருகிறார்.

    (சங்கர மடங்களின் பணியே சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் தொடரும்படிச் செய்ய வேண்டியதுதான் என்று அவர் ஈ.வெ.ரா என்றொரு படைப்பு சொன்னதே அதன்படி அல்ல. அனைத்தும் தெய்வம் என்று உணர், உணர வை என்பதுதான் ஆதிசங்கரர் இட்ட பணி என்று தெளிவுடன் அறிந்து இருக்கிறார் அன்னை அம்ருதானந்த மயி.)

    மாதா அம்ருதானந்த மயி அமைப்பின் துறவிகள்கூட சங்கராச்சாரியாரின் வம்சத்தில் வந்த “புரி” அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான். சங்கர பரம்பரைதான்.

    அந்தப் புனிதப் பெண்மணியை மதித்து மற்றொரு சங்கராச்சாரியார் சந்தித்துப் பாராட்டிய நிகழ்வு அந்த சங்கராசாரியாரின் வணக்கத்துக்குரிய ஆன்மீகச் சிறப்பின், ஆன்ம பலத்தின் வெளிப்பாடே. இதன் மூலம் சமூகப் பார்வையில் காஞ்சி சங்கராச்சாரியார் வணக்குத்துக்குரியவராகிறார்.

    (இந்த ஆன்ம பலம் வேறு எந்த சங்கராச்சாரியார்களுக்கும் இப்போது இல்லை. ஸ்ருங்கேரி, த்வாரகா, புரி, ஜோதிர்மத் போன்ற பீடங்களில் இல்லாத ஆன்மீகச் செல்வம், காஞ்சியில் இருக்கிறது என்பது தெளிவு.)

    சாதகமான இத்தனையும் இருக்கின்றன. நீங்கள் சொல்லுவது போல “எண்ணையும் தண்ணீருமாக” அல்ல. “சக்கரையும் பாயாசமுமாக” இருக்கின்றன.

    இத்தனை இருந்தும், மாதா அம்ருதானந்த மயியை ஒரு சங்கராச்சாரியார் என்று வெளிப்படையாகச் சொல்ல இந்த 2011லாவது முடியுமா?

    .

  4. //…இந்த கட்டுரை தொடர் சற்று தீகட்டிவிட்டது சொல்லும் செய்தி சமூகத்தில் ஒற்றுமையை வளர்கவேண்டுமே அன்றி பிரிவினை எண்ணங்களுக்கு வித்திடகூடாது. ..//

    வேதம்கோபால் ஜி,

    தலித்தை சங்கராச்சாரியாராக்குவது பிரிவினையை வித்திடும் என்று ஏன் எண்ணுகிறீர்கள் ?

    யார் பிரிந்து போவார்கள் ? எதிலிருந்து பிரிந்து போவார்கள் ? ஏன் ?

    .

  5. ப வெங்கடேசன் அவர்களின் புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 9ம் பாகம் கண்டேன். இந்த கட்டுரைத்தொடர் ஹிந்து மதம் காக்கப்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் படிக்கவேண்டியது அவசியம். மதமாற்றம் ஏன் நிகழ்கிறது என்றால் ஹிந்து ஸ்மூகத்தில் சமத்துவம் இல்லை என்று கூறப்படும் கருத்தில் நிச்சயம் உண்மை உள்ளதை டாக்டர் அம்பேத்கரைப்பற்றி படிப்போர் உணரமுடியும்..
    எனவே திரு வேதம்கோபால்ஜி அவர்கள் சற்று பொறுமையாக தொடரை வாசிக்க அன்புடன் வேண்டுகிறேன்.
    திரு வேதம்கோபால்ஜி கூறுகிறார்.
    இந்து சமூகம் பல மாற்றங்களை அடைந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏன் தலித்தான மாதா அமிரதமயியை சங்கராசாரியார் சென்று வணங்கி வந்தார் ? அவருக்கு இன்று பல பிராமினர்கள் பாதபூஜை செய்ய கொண்டுதான் இருக்கிறார்கள் ?
    உண்மைதான் ஹிந்து ஸ்மூக அமைப்பில் சிற்சில மாற்றங்கள் இருக்கவேசெய்கின்றன. டாக்டர் அம்பேத்கர் காலத்தைகாட்டிலும் ஹிந்து சமுதாயம் எவ்வளவோ மாறியிருந்தாலும் இன்னமும் சாதி அடிப்படையிலான பேதங்கள் ஏற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன. ஒரு மனிதன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் அரிய காரியங்களை செய்தாலும் அவரது சிறப்பை ர்ணயிப்பதலில் அவனது சாதி முக்கிய பங்காற்றுகிறது என்பதே கசப்பான உண்மை.
    அம்மா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவியை சாதி வேறுபாடின்றி அனைவரும் போற்றுவது உண்மை. அவர் தலித் சமுதாயதில் பிறந்தவர் அல்ல பிற்படுத்தப்பட்ட குலத்தில் அவதரித்தவர் என்பதே உண்மை. அம்மா மட்டுமல்ல ஸ்ரீ சத்யஸாயி பாபா, மேல்மருவத்தூர் அருள்திரு பங்காரு அடிகளார், ஸ்ரீ ஸத்குரு ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ பரமஹம்ஷ நித்யான்ந்தர் போன்ற பல ஆயிரக்கணக்கில் சீடர்களை பக்தர்களைக்கொண்ட ஹிந்து சமயத்தலைவர்கள் பிற்படுத்த்தப்பட்ட குலங்களில் பிறந்தவர்களே. இவர்களின் பலப்பல பக்தர்கள் பிராமணக்குலத்தவர் என்பதும் உண்மையே. பொதுவாக பிராமணர்கள் பிராமணர் அல்லாத் துறவிகளின் காலில் விழுந்து வணங்கமாட்டார்கள் என்பதே ஈண்டு நினைவுகொள்ளத்தக்கது என்னவென்றால். எல்லோரும் மாறிவிட்டார்கள் என்று அடியேன் கருதவில்லை. ஆனால் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை சுட்டவே விரும்புகின்றேன்.
    களிமிகு கணபதிஜி அவர்கள் மாதா அம்ருதான்ந்தமயி ஸ்ரீ சங்கரரின் பாரம்பரியத்தில் வந்தவர் என்று கூறுகிறார். அனாலும் அவர் ஒரு பெரும் வினா எழுப்பியிருக்கிறார்.
    இத்தனை இருந்தும், மாதா அம்ருதானந்த மயியை ஒரு சங்கராச்சாரியார் என்று வெளிப்படையாகச் சொல்ல இந்த 2011லாவது முடியுமா?
    அம்மாவை சங்கராச்சாரியாராக அறிமுகம் செய்யும் தகுதி யாருக்கு இருக்கிறது. அத்துவித அன்புவம் வாய்கப்பட்டால் எல்லோரும் பிரம்மமாகும்போது, அத்வைதம் போதிக்கும் அம்மா சங்கராச்சாரியார் இல்லை என சொல்ல யாருக்கு துணிவு உண்டு.
    அதற்கான ஹிந்து சமுதாயம் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் வல்லமை பெற்றது. அன்று டாக்டர் அம்பேத்கர் உயர்சாதியினர் தலித் மக்களை சமமாகப்பார்க்கவேண்டும் அதற்கு வர்ண பேதம் ஒழிக்கப்படவேண்டும் என்றார். இன்று வர்ணங்களை நாம் ஏற்பதில்லை அனைத்து உயிர்களும் இறைவனே என்னும் அத்வைதம் படியே சமத்துவம் நிலைனாட்டுவோம்(விசிஸ்டாத்வைதப்படியும் ஆத்மாவின் ஆத்மா இறைவன் அன்றோ). ஜாதிபேதம் வர்ணபேதம் ஏற்பதில்லை எனவே முழங்குவோம்.
    சிவஸ்ரீ. விபூதிபூஷண்

  6. https://thiruchchikkaaran.wordpress.com/2010/03/03/dalith-to-become-sankaraacahaarya/

    தலித் என சொல்லப் படும் சகோதரர் ஒருவர் சங்கராச்சாரியார் ஆவது என்பது மிகவும் சிறப்பான விடயம். அவர் மட்டும் அல்ல, ஜப்பானியர் , ஆப்பிரிக்கர் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் சங்கராச்சாரியார் ஆக முடியும் -அவர் பகுத்தறிவு அடிப்படியிலான ஆன்மீக ஆராய்ச்சியில் எது உண்மை, எது உண்மையில்லாதது என்பது பற்றி ஆராய தீவிரமுயற்சி எடுக்க கூடியவராக இருந்தால்.

    தலித்துகள் என சொல்லப் படும் சகோதரர் உள்ளிட்ட எல்லோரயும் ஆன்மீக பாதையில் அதிக நாட்டம் கொள்ள செய்வது நன்மையே.

    இன்றைய தினம் இந்தியாவில் பிராமணர் என்று அழைக்கப் படும் சமூகத்தினருக்கும் பிறருக்கும் இப்போது என்ன பெரிய வித்யாசம்?

    காலையில் அருகருகே இட்டிலி காபி சாப்பிட்டு அலுவலகம் செல்வது முதல், மாலையில் ரஜினி படம் பார்த்து கை தட்டுவது வரை எந்த வித்யாசமும் இல்லை.

    சென்னையில் சினிமா, பார்க்காமல், டி,வி. பார்க்காமல்அக்னி ஹோத்திரம் செய்யும் நூறு பேரை காட்ட முடியுமா என்பது கேள்விக் குறியே.

    ஆத்மீகத்திலும் எல்லோரும் திருப்பதி கோவிலுக்கு போய், அருகருகே ஜருகண்டி ஜருகண்டி தான்.

    இத்தனை வருடமாகியும் சிருங்கேரி பீடத்திற்கு இதுவரை சந்நிதானம் எனப்படும் இளைய மடாதிபதியை நியமிக்கவில்லை. இன்னும் நூறு வருடம் கழித்து நிலைமை எப்படி இருக்குமோ தெரியாது. பிராமணர் எனப் படும் சமூகத்தினரை சேர்ந்த சகோதரர்கள் கம்ப்யூட்டர் படித்து விட்டு பிளைட் ஏறவே முயலுகின்றனர்.

    உண்மையிலே தத்துவம், ஆன்மீகம் இந்த வகையில் சிந்தனை உடைய, அர்த்தம் அனர்த்தம் பணம் உபயோகம் இல்லாதது என சொல்லக் கூடிய “பிராமணாள்” யாரவது இனி மடங்களுக்கு கிடைப்பார்களா என்பது சந்தேகமே.

  7. //இத்தனை இருந்தும், மாதா அம்ருதானந்த மயியை ஒரு சங்கராச்சாரியார் என்று வெளிப்படையாகச் சொல்ல இந்த 2011லாவது முடியுமா?//

    சொல்ல இயலாது. அந்த அம்மையாரை மட்டும் சொல்ல இயலாது அல்ல, இன்னும் பலரையும் சொல்ல இயலாது. பலரையும் சங்கராச்சாரியார் சங்கராச்சாரியார் என்று சொல்லிக் கொண்டிருப்பது பத்திரிகைகளும், வெகுளியான அப்பாவி மக்கள் பலரும், “விவரம்” தெரிந்த சிலரும் தான். சங்கராச்சாரியாரின் தத்துவம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அவர் செய்த வேலை என்ன என்று தெரியுமா?

    ஆதி சங்கரர் மிகவும் குறுகிய காலமே வாழ்ந்து இருக்கிறார் . அவர் வாழ்ந்தது கிட்டத் தட்ட 32வருடங்கள் மாத்திரமே .

    அதிலே முதல் பதினாறு வயதிற்குள் அவர் நான்கு வேதங்களையும் கற்று அறிந்து இருக்கிறார் .

    தான் கற்ற வேதங்களின் உண்மைப் பொருள் என்ன என்று ஆராய்ந்து அவற்றை ஒரு கோட்பாடாக தொகுத்து இருக்கிறார் .

    தன்னுடைய அனுபவத்தின் மூலாமாக தன்னுடைய கோட்பாடுகளை தானே நேரிலே உணர்ந்து சரி பார்த்து தன்னுடைய கோட்பாட்டை அவர் உருவாக்கி இருக்கிறார் என்பதாக அறிகிறோம் . இது முக்கியமாது , வெறுமனே நூல்களைப் படித்து விட்டு, இதை அப்படியே ஒத்துக் கொள் என்று திணிக்க முற்படாமல், தன்னுடைய நேரடி அனுபவத்தில் ஆதி சங்கரர் அவற்றை உணர்ந்ததாக சொல்லப் பட்டு இருக்கிறது .

    முயன்றால் எவரும் நேரடி அனுபவத்தின் மூலம் ஆன்மீக உண்மைகளை உணர முடியும் என்பதும், அப்படி நேரடியாக உண்மைகளை அனுபவத்தில் உணராவிட்டா பலன் இல்லை என்பதும் அவரின் அழுத்தமான கோட்பாடு.

    இப்படி அறிந்த தத்துவ உண்மைகளை இவர் பதினாறு வயது முதல் முப்பத்து இரண்டு வயதிற்குள் , இந்தியா முழுவது கால் நடையாக நடந்து சென்று பரப்பி இருக்கிறார். பல்வேறு அறிஞர் களுடுன் விவாதம் நடத்தி தன்னுடைய கோட்பாடு சரியானது என்பதை அவர்கள் உணரும் வண்ணம் செய்து இருக்கிறார் .

    தனி ஒரு மனிதனாக , பதினாறே வருடங்களில் இந்து மத்ததை இந்தியாவில் மீண்டும் நிலை நிறுத்தி விட்டார் .

    இந்து மதமானது உண்மைக்கு அழைத்து செல்வது , உண்மையை அறியுமாறு ஒருவனைத் தூண்டுகிறது என்பதாலே, அடிப்படையிலே பகுத்தறிவிக்கும் , அனுபவத்துக்கும் இந்து மதத்தில் முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கிறது .

    அத்தகைய பகுத்தறிவு அடிப்படையிலான புராதன இந்து மதத்தை பதினாறே வருடங்களில் இந்திய துணைக் கண்டத்தில் புனர் நிர்மாணம் செய்து விட்டார்.

    படித்த பண்டிதர்கள் மட்டும் அல்லாமல், சாதாரண மக்களும் பின்பற்றி ஆன்மீக உயர்வு அடையும் படிக்கு எளிமையான முறையில் எல்லோருக்குமான பக்தி மார்க்கத்தையும் அமைத்து
    தந்திருக்கிறார் .

    சமய சச்சரவுகள் இல்லாதபடிக்கு மத நல்லிணக்கத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தியாவில் தொன்று தொட்டு மக்களால் வழிபடப் பட்டு வந்த தெய்வங்களான அம்மன், கோவிந்தன், முருகர், சிவன் … இப்படியான எல்லா தெய்வங்களையும் பாடி அவரவர்களுக்கான வழிபாட்டு முறையை வூக்கப் படுத்தி , அதே நேரம் நல்லிணக்கத்தையும் வளர்த்து இருக்கிறார் .

    கத்தியின்றி , இரத்தமின்றி, காசின்றி , பணமின்றி பதினாறே வருடங்களில் இந்திய துணைக் கண்டத்தின் ஆன்மீக துறையில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கி வெற்றி வாக்கை சூடி இருக்கிறார் ஸ்ரீ சங்கராச்சாரியார் .

    .
    .தெளிவாக சொன்னால் தன வாழ் நாளிலே அதுவும் குறுகிய காலத்திலேயே ஒரு பெரிய மத சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர் உலக வரலாற்றிலே சங்கராச்சாரியார் ஒருவர்தான். இன்னொருவர் முகமது, ஆனால் போரில் கிடைத்த வெற்றி அவருடைய மத வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

    தன்னுடைய கையிலே காசே இல்லாமல் வாழ்ந்திருக்கிறார் சங்கராச்சாரியார். அவர் கூட செக்ரட்டரி , மேனேஜர் யாரும் கிடையாது. அவர் எங்கே , எப்போது இறந்தார் என்று கூட யாருக்கும் தெரியாது. அப்படி வாழ்ந்தவர் அவர்.

    இன்றைக்கு பிள்ளியநேர் சாமியார்கள் பலரை காண முடிகிறது. தமிழ் நாட்டுல, கேரளாவில, கர்நாடகாவுல, ஆந்திராவுல, பணக்கார சாமியாருங்க நிறைய பேர் அண்ணா. கேட்டா வேடிக்கையா இருக்கு. சங்கராச்சாரியார் பட்டத்தை கலைமாமணி பட்டம் மாதிரை ஆக்கி பிடாதேள். அப்பறம் உங்க இஷ்டம் .

  8. மாதா அமிர்தானந்தமயி மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்; இந்து மீனவர்கள் தமிழ்நாடு மாநிலத்தில் எஸ்.சி. (தலித்) பட்டியலில் சேர்க்கப்படவில்லை. கேரளாவில் அவர்கள் தலித்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனரா?

  9. ஸ்ரீ சங்கராச்சரியார் பெயரில் அமைந்த மடங்கள் அவராலேயே நிறுவப்
    பட்டு அத்வைத கோட்பாடுகளைப் பரப்புவத்ற்கான சம்பிரதாயங்களும்
    அவராலேயே விதிக்கப்பட்டுக் காலங் காலமாகத் தொடர்ந்து வருபவை
    (அங்கு உருவ வழிபாடு நடப்பதற்கும் ஒரு காரணம் உண்டு).
    ஒரு நடைமுறையானது ஒரு தலைமுறை அனுசரிக்கப்பட்டாலே கன்வென்ஷன் ஆகிவிடுகிறது. சட்டங்களும் அதை மதித்து ஏற்பது வழக்கம்.
    சங்கர மடங்கள் அரசியல் கட்சிகளாக இருந்தால் அவற்றுகு ஒரு தலித்தைத் தலைவராக்க வேண்டும் எனலாம். ஆனால் அவை அவ்வாறனவை அல்லவே!
    -மலர்மன்னன்

  10. //…ஸ்ரீ சங்கராச்சரியார் பெயரில் அமைந்த மடங்கள் அவராலேயே நிறுவப்
    பட்டு அத்வைத கோட்பாடுகளைப் பரப்புவத்ற்கான சம்பிரதாயங்களும்
    அவராலேயே விதிக்கப்பட்டுக் காலங் காலமாகத் தொடர்ந்து வருபவை…//

    மலர்மன்னன் சார்,

    இது புதிய செய்தியாக இருக்கிறது. தகவலுக்கு நன்றிகள்.

    விஷயம் தெரிந்த பலர் இந்தத் தளத்தில் கமெண்டுகள் இடுகிறார்கள். அந்தக் கமெண்டுகளும் பல புதிய விஷயங்களை, அறிவுத் திறப்புக்களை உருவாக்குகின்றன. நீங்கள் சொல்லிய இந்தச் செய்தியும் எனக்குப் புதியதாக இருக்கிறது. இந்தத் தகவலின் அடிப்படையில் சில கேள்விகளும் எழுகின்றன.

    அதாவது, இப்போதைய 21ம் நூற்றாண்டு சங்கர மடங்கள், 8ம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் விதித்த சம்பிரதாயங்களைத்தான் தொடர்ந்து மாற்றாமல் பின்பற்றுகின்றன என்று நீங்கள் புதிய தகவல் சொல்கிறீர்கள்.

    ராமனுஜர் இத்தகைய நூற்தொகுப்பை விதிமுறைகளை உருவாக்கி இருக்கிறார். அது வரலாற்று பூர்வமாக நிறுவப்பட்ட, அனைவரும் அறிந்த செய்தி. அதுபோல சங்கரரும் உருவாக்கி இருக்கிறார் என்பது புதிய செய்தி.

    இந்தச் செய்தியின்படி சில ஊகங்கள் எழுகின்றன. கேள்விகளும் எழுகின்றன.

    01. இந்த சம்பிரதாயங்கள் குறித்து ஆதி சங்கரர் ஏதேனும் நூல் எழுதியிருக்கக் கூடும். அந்த நூலின் அடிப்படையில் அனைத்து சங்கர மடங்களும் சம்பிரதாயங்களை மாற்றாமல் பின்பற்றுகின்றன என்று புரிதல் ஏற்படுகிறது. அந்த நூலுக்கு என்ன பெயர் ?

    02. பகவத்பாதரான சங்கராச்சாரியார் எங்காவது சாதியால் பிராமணனாக இருப்பவர் மட்டும்தான் சங்கராச்சாரியாராக வேண்டும் என்று சொல்லி இருக்கிறாரா? (விவேகசிந்தாமணியில் சங்கரர் பாராட்டுவது பிராமணப் பிறவியைத்தான், பிராமணப் பிறப்பை அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்.)

    03. அல்லது இதைப் போன்ற சம்பிரதாயங்கள் எல்லாம் வாய்மொழியால் அறியப்பட்டு நடைமுறையாகி இருக்கின்றன என்றால், இந்த சம்பிரதாயங்களின் இப்போதைய வடிவம் தன் ஆரம்ப நிலையில் இருந்து கொஞ்சம்கூட மாறவில்லை என்றால் அது வெறும் ஆச்சரியமான விஷயம் மட்டுமல்ல. அற்புதமும் கூட.

    அது மட்டுமல்ல. நொடிக்கு நொடி மாறுவதுதான் இந்தப் பிரபஞ்சம் என்ற சங்கரரின் புரிதலையே பொய்யாக்கிய தீரம் செறிந்த ஒன்றாக இருக்கிறது.

    பாரம்பரியம் என்ற பெயரில் நவீன காலத்தில் உலவும் இந்த சம்பிரதாயங்கள் சங்கரரை வதம் செய்துவிட்டன. லோகாயாதவாதிகள் கடைசியில் சங்கரரை வென்றே விட்டார்களா என்ன?

    .

  11. //இந்து மீனவர்கள் தமிழ்நாடு மாநிலத்தில் எஸ்.சி. (தலித்) பட்டியலில் சேர்க்கப்படவில்லை// உள்நாட்டு மீனவரான பரதவர் எஸ்.சி பட்டியலில்தான் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசனிடம் பெண் கொடுக்க அவள் மகனே அரசனாக வேண்டும் என்று வாதிடும் அளவுக்கும், சிவனுக்கு படகு (சிவபடகு செய்ததால் செம்படவர் என்றும் சொல்லுவர்) செய்து கொடுத்தமையால் திருவண்ணாமலை தீபம் ஏற்றும் முதலுரிமை பெற்றவர்களாகவும் இருந்தவர்கள் எஸ்.ஸிக்களானதில் பௌத்த கைங்கரியம் உண்டா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

  12. சங்கராச்சாரியாரை பொய்யான கொலை வழக்கிலும், தலித் ஆ ராசைவை உண்மையான கொள்ளை வழக்கிலும் சிறைக்கு அனுப்பி, என்றோ, தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்கிவிட்டார்களே, அம்பேத்கார் பாடையினர்.

  13. அன்பார்ந்த நண்பர்களே! ஜாதியை வைத்துக்கொண்டு எப்படி ஒருவனை ஒரு மதத்தின் தலைமை பீடத்தின் தலைமை பதவியில் அமர்த்த முடியும். ஆன்மீக பதவியில் மட்டுமல்ல உலக நடைமுறை பதவிகளும் கூட இந்த ஜாதி ஒரு தகுதியாக கடைப்பிடிக்கப்படுவது பெரும் குற்றம் ஆகும். எந்த பதவிக்கும் தகுதியாக இருக்கவேண்டியது கல்வியில் தேர்ச்சி, சிறந்த நல் ஒழுக்கம், திறமையான செயல்பாடு ஆகியவையாகும். ஆனால் நமது தேசத்தில் ஜாதியை தகுதியாக வைத்துக்கொண்டு பதவிகள் நிரப்பப்படுகின்றன. விளைவு ஒரு திறமையற்ற ஒரு நிர்வாக இயந்திரத்தை கொண்ட நாடக நமது தேசம் உருவாகிவருகிறது. வேலைக்கு தகுந்த திறமையாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு பதிலாக ஜாதிய அடிப்படையில் பதவிகளும் பொருப்புகளும் பகிர்ந்தளிக்கப்படுவதால் சாதாரண மனித வாழ்க்கையே பாதிப்பிற்குள்ளாவது உறுதியாகிறது. நிலமை இவ்வாறு இருக்க உலக மக்களுக்கே நல்வாழ்விற்கு வழிகாட்டக்கூடிய ஓரு ஆன்மீக பீடத்தின் தலைமை பதவிக்கு ஜாதி அடிப்படையில் நியமனம் கோருவது எவ்வளவு தீமைவிளைவிக்கும் பொருத்தமற்ற கோரிக்கை என்பதை சிந்திக்கவும். ஸ்ரீ சங்கரமடம் என்பது ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத் பாதாளால் லோகச் சேமத்தை முன்னிட்டு வைதீக தர்ம அடிப்படையில் ஸ்தாபித்து அருளிச்செய்யப்பட்ட உன்னதமான ஸ்தாபனம்.அந்த அருட்ஸ்தாபனத்தின் தலைமை பதவிக்கு தவசீலரான ஒழுக்கம் பக்தியும் கொண்ட ஒரு ஞான மூர்த்தி தலைவராவதுதான் பொருத்தமாக இருக்கும். அந்த ஞான மூர்த்தியானவர் வேதங்களை கற்றுணர்ந்தும், உன்னதமான விரதங்களை அனுஷ்டித்ததன் மூலம் தேஜஸும் சாபானுக்கிரக சக்தியோந்தராய் விளங்கும் ஒரு திவ்ய ஞான மூர்த்தியானவர் மட்டுமே ஸ்ரீ சங்கர மடம் போன்ற ஒரு உன்னத ஸ்தாபனங்களுக்கு தலைமைதாங்க வேண்டும் என்பது நிதர்சனம். அதற்கான தெய்வீக சக்தியும் திருவருளும் நிறைந்த ஒரு மகானுபவர் வைதீக ஹிந்து தர்மத்தின் உன்னத குலமான ஸ்ரீ பிராமணகுலத்திலிருந்தே வரவேணடும். தலைமுறை தலைமுறையாக தகப்பன், மகன், பாட்டன், பூட்டன் என்று வழிவழியாக வேத அத்யயனமும், உன்னத அனுஷ்டானங்களையும் கடைப்பிடிக்கும் ஸ்ரீ பிராமண குலத்திலிருந்து மட்டுமே அருள் விளங்கும் ஞான மூர்த்தி ஒருவர் உதயமாக முடியும். ஆகவே இந்த ஜாதிய கோரிக்கை பொருளற்றது. அதுமட்டுமல்ல ஆன்மீகப்பதவி மற்றும் உள்ள அரசாங்க பதவிகளையும் ஜாதி அடிப்படையில் நியமிப்பதால் இந்த கட்டுரையை ஆக்கியவரும் நாமும் வேண்டுவது போல் சமத்துவமான சமுதாயம் மலர்ந்து அனைத்து மக்களும் நன்மை அடைந்து விடமுடியாது என்பதை நாம் கண்கூடாக இன்று பார்த்துக்கொண்டுள்ளோம். பதவிபெற்ற சிலரும் அவரது குடும்பத்தினரும் முன்னேற்றமடைகிறார்கள். உண்மையில் ஒட்டு மொத்த சமுதாயமும் முன்னேற்றம் காணவேண்டுமானால் கல்வியை சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமையாக்கி இலவசமாக வழங்க வேண்டும். முதல் வேலையாக கல்விச்சாலைகளை முழுவதும் அரசுடைமையாக்கி அனைவருக்கும் உண்மையான சமச்சீர்கல்வியை அனைவருக்கும் அவரவர் விருப்பம் போல் கற்கும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும். அதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகவே நாம் போராட வேண்டும், அதை விட்டு விட்டு ஜாதி அடிப்படையில் சங்கராச்சாரியார் பதவி கேட்பது ஏழை மக்களை ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்றவா அல்லது இதுபோன்ற உதவாக்கரை கோஷங்களை எழுப்பி அமைதியாக வாழும் மக்களை தூண்டிவிட்டு அரசியற் பதவிகளை பெற்று தங்கள் சுயநலத்தை வளர்த்துக்கொள்ளவா என்பது தெரியவில்லை.

  14. தலித்களின் மற்ற எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிட்டது போலவும் அவர்கள் மடாதிபதிகளாகவும் கோவில் அர்சகர்களாகவும் வருவதற்கு ஒரு சிலர் தடுப்பதனால் தான் அவர்கள் வாழ்கையில் முன்னேறவில்லை தீண்டபடாதவர்களாக கருதபடுகிறார்கள் என்ற ஒரு போலியான கருத்திற்க்கு வலுசேர்க்க முயலுவது காழ்புணர்வும் அன்றி வேறு இல்லை. இது போன்ற பிரச்சனைகளை தலித்துகள் தாங்களாக மனமுவந்து என்றுமே வெளிபடுத்தியதில்லை. இது ஜாதி இந்துகளாலும் கிருஸ்துவர்களாலும் பிராமிணன் மேல் பொறாமை கொண்டு தலித்துகளை தூண்டிவிடும் வேலைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இதே கட்டுரை ஆசிரியர் பெரியார் எவ்வாறு தலித்துகளுக்கு எதிராக செயல்பட்டார் எந்தெந்த தமிழர்கள் தலித் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார்கள் என்று ஒரு தொடர் கட்டுரையை எழுதினார். ஆனால் பல தமிழ் பிராமிணர்கள் ஏதோ தலித்துகளுக்கு ஆதரவாக சில கூட்டங்களில் பேசி ஒரு சொற்ப பணமுடிப்பை அளித்து ஒதுங்கியவர்கள் அல்ல. காந்தியின் கருத்துகளுக்கு கட்டுபட்டு தங்கள் சொந்த சொத்து சுகங்களை துறந்து பாடுபட்டவர்கள் பட்டியல் மிகவும் பெரியது. ஏன் அவர்களில் ஒரு சிலரை பற்றியாவது எழுதவில்லை என்ற எனது மறுமொழிக்கு பதிலே இல்லை.

  15. தலித்துகள் கேட்பதெல்லாம் தீண்டபடாதவர் என்பது மறையவேண்டும் சமூகத்தில் மற்ற ஜாதியினரை போல் எல்லா இடங்களிலும் சம அந்தஸ்துடன் மதிக்கபடவேண்டும் கல்வி அறிவு பலகாலம் மறுக்கப்பட்டு வந்ததால் அவர்களுக்கு முன் உரிமை தந்து சலுகைகள் பணவசதிகள் ஏற்படுத்தி உயர் ஜாதிகள் போல் கல்வியை பெறவேண்டும் என்பது வரை நியாயமான வேண்டுகோள்களே ஆகும்.

    இவற்றை மீறி பதவிகளிலும் பதவி உயர்வுகளிலும் போட்டியில்லாமல் பங்கு ஒதுக்க வேண்டும் என்பது என்றுமே ஏற்புடையது அல்ல. இது சிறுபான்மையினருக்கும் பொருந்தும். இல்லை என்றால் நாம் பாலகிருஷ்னன் தினகரன் போன்றவர்களை தான் உருவாக்குவோம்.

    இன்று வரையில் நாம் உலக கால்பந்து விளையாட்டில் தகுதிசுற்றில் கூட இடம்பெற முடியவில்லை. காரணம் நாம் அதற்கான முக்கியத்துவத்தையும் தகுந்த பயிர்சியையும் அளிக்காததுதான். முனைப்புடன் வெளிநாட்டு பயிர்ச்சியாளர்களை கொண்டு ஊக்குவித்தால் நிச்சயம் தகுதி சுற்றில் பங்குபெறமுடியும். அவ்வாறு பங்கு பெற்றபின் பொது போட்டியில் நாங்கள் வெகுகாலமாக ஆட்டத்தில் பின் தங்கியிருந்ததால் நாங்கள் ஒரு கோல் போட்டால் எதிராளி மூன்று கோல் போடவேண்டும் என்று உரிமை கோர முடியுமா?

  16. Governing Class and the Servile Class

    Nobody will have any quarrel with the abstract principle that nothing should be done whereby the best shall be superseded by one who is only better and the better by one who is good and the good by one who is bad ……..

    But man is not a mere machine. He is a human being with feelings of sympathy for some and antipathy for others. This is even true of the ‘best’ man. He too is charged with the feelings of class sympathies and class antipathies. Having regard to these considerations the ‘best’ man from the governing class may well turn out to be the worst from the point of view of the servile classes. The different between the governing classes and the servile-classes in the matter of their attitudes towards each other is the same as the attitude a person of one nation has for that of another nation – Dr.Ambedkar (Dr.BR writing and speeches – vol.9)

    மேலே சொன்ன அம்பேத்கர் அவர்களின் கூற்றுபடி அவரும் (Best Man) உருவெடுத்து கவர்னிங் கிளாஸில் இடம் பெற்று நம் நாட்டின் சட்திட்டங்கள் உருவாவதற்கு முழு முதற் காரண கர்தா ஆனவர். இப்பொழுது மேலே சொன்ன கூற்றுகள் அவருக்கும் பொருந்தும் அல்லவா. 64 ஆண்டுகள் ஆகி இன்று நாம் (Best Man) எங்கே என்று ஜல்லடை போட்டு தேட வேண்டியுள்ளது. மேற்கத்திய மோகத்தால் கல்வியை அளித்த நாம் பண்பாட்டை அளிக்க தவறிபிட்டோம். கடமையை மறந்து உரிமை உரிமை என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம்.

  17. //உள்நாட்டு மீனவரான பரதவர் எஸ்.சி பட்டியலில்தான் சேர்க்கப்பட்டுள்ளனர்.//

    பார்க்க: https://www.tn.gov.in/gosdb/gorders/adtw/adtw1773-e.htm

    எண் 57இல் குறிப்பிடப்படும் பரவன்கள்தாம் பரதவர்களா என்பது சந்தேகத்துக்குரியது. அப்படியே இருந்தாலும், மாதா அமிர்தானந்தமயி பரதவர் பிரிவைச் சேர்ந்தவரா? கேரளாவில் அப்பிரிவு தலித் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறதா?

  18. தலித் ஒருவரை சங்கரச்சாரி ஆக்கவேண்டும் என்ற அம்பேத்கரின் கோரிக்கை முற்றிலும் நியாயமானதே. உண்மையிலேயே அத்வைதக் கோட்பாட்டுக்கு விசுவாசமாக இருக்க எண்ணுகிற எவரும் இதில் தவறு எதையும் காணமாட்டார்கள். அல்லது அத்தவைதத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது இந்த உலக மாயையிலிருந்து விடுபடமுடியதவர்கள் மட்டுமே பொருளாயத இவ்வுலகு சார்ந்த சிந்தனையின் விளைவாக -அதாவது மாயையிலிருந்து விடுபடமுடியாமல்- இருப்பவர்கள் மட்டுமே இதை எதிர்ப்பார்கள். ஆதி சங்கரர் இருந்திருந்தால் அவர் இதை ஏற்றிருக்கக் கூடும். என் நான் இதை உறுதி இல்லாதபடிக்கு ‘கூடும்’ என்ற உம்மை விகுதியுடன் சொல்லவேண்டும் என ஒரு வின எழலாம். பொருளாயத உலகம் அவ்வளவு வலிமையானது. அதாவது தனது கோட்பாட்டுக்காக -அதைப் பரப்புவதற்காக – மடங்கள் நிறுவியதே மாயாவாதக் கோட்பாட்டுக்கு சற்று முரணானது.
    இந்தவகையில் அம்பேத்கரின் கோரிக்கையை இந்து மதவிரோதமாகப் பார்ப்பது சாரத்தைவிட்டு சக்கையைப் பிடித்துக் கொள்வதைப் போன்றது. மாயையான இவ்வுலகமே நிரந்தரம் என எண்ணுவதாகும். “மோட்சமார்கத்தை சண்டாளனிடமிருந்தும் அறிந்துகொள்ளலாம்” என்பது ஸ்மிருதி வாக்கியம். அப்படி இருக்கையில் அத்வைதக் கோட்பாட்டுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் இதை எதிர்ப்பதில் தங்களின் அறியாமையையே வெளிப்படுத்துகின்றனர்.
    எவர் சொன்னாலும் அத்வைதக் கோட்பாடு அத்வைதக் கோட்பாடுதான். அதை பிராமணர் சொன்னால்தான் என்றில்லை. ஒரு தலித் சொன்னாலும் அது அத்வைதக் கோட்பாடாகவே இருக்கும். கோட்பாட்டுக்காகதான் மடம் என்ற நிறுவனமே தவிர, மடத்துக்காகக் கோட்பாடு அல்ல. எனவே தலித் அல்லது எவரையும் சங்கராச்சாரி ஆக்குவதில் தவறில்லை.
    இந்து மதத்துக்கு தீங்கிழைக்க நினைப்போர் மட்டுமே, சாரத்தைப் புரிந்து கொள்ளாமல் இதை எதிர்க்கமுடியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சங்கர மடங்கள் தவிர வலுவுடன் இருப்பவை வேளாள ஆதீனங்கள்தான். அங்கேயும் தலித்துகளை ஆதினகர்த்தராக்குவதுதான் நியாயம். அதிலும் குறிப்பாக சிவனையே பரம்பொருளாகக் சொல்பவர்கள் இதைச் செய்வதுதான் நியாயம். . . மேலும் எழுதுவேன்.

  19. மிக சிறப்பான கருத்துக்களை முன் வைத்து இருக்கிறார் திரு. கிருஷ்ண புத்திரன்.

    //நொடிக்கு நொடி மாறுவதுதான் இந்தப் பிரபஞ்சம் என்ற சங்கரரின் புரிதலையே//

    ஆஹா….

    அதே நேரம் விவேக சூடாமணியில் சங்கராச்சாரியார், பிராமணர்களையோ, பிராமணப் பிறப்பையோ பாராட்டி இருப்பதாக கருத இயலாது. மனிதனாகப் பிறப்பது அரிது, அதிலும் பிராமண வாழ்வை மேற்கொள்வது அரிது, அதிலும் உண்மையை அறிந்து விடுதலை பெற முயல்வது சிலரே, அதிலும் விடுதலை கிடைப்பது சிலரே என்றால், அக்காலத்தில் பிராமணர்களுக்கு மாத்திரமே ஆன்மீக சிந்தனைக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் இக்காலத்தில் எல்லோருக்கும் வாய்ப்பு உள்ளது. கட உபநிடதம் ரயிவே ஸ்டேசனில் கிடைக்கிறது. எனவே அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது… ஞானமும் கல்வியும் வாய்த்தல் அரிது .. என்கிற அதே கருத்துதையே சங்கராச்சாரியார் அப்படி சொல்லி இருக்கிறார்.

    பிராமணர் மட்டும் அல்ல, பெண்கள் மற்றும் வர்ணமர்றோர் கூட நிச்சயம் விடுதலை அடைய முடியும் என்கிற கீதையின் முக்கிய ஸ்லோகம் நாம் அறிந்ததே. கீதைக்கு பாஷ்யம் எழுதிய சங்கரர் இந்த ஸ்லோகத்துக்கு அளித்த விளக்கம் என்ன என்பதை சிந்திக்க வேண்டும், இந்த ஸ்லோகம் சரியல்ல என்று சங்கரர் சொன்னாரா?

    அர்ஜுனன் பிராமணன் இல்லையே, அவனே யாருக்கும் கிடைக்காத விச்வேசவரக் காட்சியை கனடதாக உள்ளதே.

    நசிகேதஸ் யார்?

    பட்டினத்தார் யார்?

    அப்பர் யார்?

    கண்ணப்பர் யார்?

  20. ஸ்ரீ க்ருஷ்ண புத்திரன்,
    ஆஹா, உங்கள் பெயரை உச்சரிக்கும்போதே ஒரு இன்பாவஸதையில் உடம்பை என்னவோ செய்கிறதே!
    ஓர் அருமையான விஷயத்தைத் தெளிவாகப் பேசியிருக்கிறீர்கள்
    இது சம்பந்தமாக எனக்குத் தெரிந்ததைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு தனிக் கட்டுரையைத்தான் சங்கர மடங்களை மையமாக வைத்து எழுத வேண்டியிருக்கும், முடியுமா பார்க்கிறேன். சிறிது பொறுங்கள்.
    காஞ்சி காமகோடி பீட பராமாச்சரியருடன் நடைபயணம் செய்யும் பாக்கியம் ஒருமுறை எனக்கு வாய்த்தது. நேரில் அவரது அருள் உரையைப் பொதுவில் அல்ல, வழி நடையில் கேட்டு அறிவு பெறவும் முடிந்தது. மேலும், ச்ருங்கேரி, புரி, துவாரகை சங்கர மடங்களுக்குச் சென்று பீடாதிபதிகளை தரிசித்தும் விளக்கஙகள் பெற்றும் இருக்கிறேன். எண்பதுகளில் வந்த ஞானபூமி இதழ்களில் இவை தொடர்பாக நான் எழுதிய கட்டுரைகள் கிடைக்கலாம். என்னிடம் பிரதிகள் இல்லை! ஆனால் ஞான பூமி பக்தியைத் தாண்டிப் போகாத பத்திரிகை. நான் மேலும் எழுதிய கட்டுரைகளை “ரொம்ப ஹெவி, நம்ம வாசகர்கள் தாங்கமாட்டாங்க” என்று மணியன் சொல்லிவிட்டார்! அக்கட்டுரைகளைத் தூக்கி மூலையில் எறிந்துவிட்டேன். ஏனென்றால்அன்றைய சூழலில் அவற்றைப் பிரசுரிக்க ஏற்ற பத்திரிகை எதுவும் இருக்கவில்லை! உங்களுடைய பல கேள்வி களுக்கான பதில்கள் அநேகமாக அவற்றில் இருந்திருக்கக் கூடும்.
    //அது மட்டுமல்ல. நொடிக்கு நொடி மாறுவதுதான் இந்தப் பிரபஞ்சம் என்ற சங்கரரின் புரிதலையே பொய்யாக்கிய தீரம் செறிந்த ஒன்றாக இருக்கிறது.
    -ஸ்ரீ க்ருஷ்ண புத்திரன்//
    நீங்கள் குறிப்பிடுவது சாசுவதமான ப்ரபஞ்ச ரகசிய மஹா வாக்கியமே அல்லவா? இதைச் சுட்டிக்காட்டி நொடிக்குநொடி விதிமுறைகளையும் நடைமுறைகளையும் மாற்றிக் கொண்டிருப்பது சரியாகுமா? சாத்தியந்தானா?
    இதற்காக பூமி ஏன் தனது நீள் வட்டப் பாதையை மாற்றிக் கொள்ளவிலலை என்றெல்லாம் கேட்டுக் கோண்டிருக்க முடியுமா?
    நிலையான வழிகாட்டுதல்கள் என்று சில உள்ளன. அவற்றைத் தவிர கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளத் தக்க விதிகளும் உண்டுதான்.
    இந்த சாத்தியக் கூறுதான் தற்போதைய காமகோடி பீடாதிபதிகளைத் தாழ்த்தப்பட்டோர் வசிப்பிடங்களையெல்லாம் தேடிச் சென்று அங்கு கோயில் கும்பாபிஷேகங்களை நடத்தி வைக்க இடமளித்தது. நீங்களே மிகவும் அழகாகப் பிரித்துக் காட்டியிருக்கிறீர்களே, பிராமணப் பிறவி.,பிராமணப் பிறப்பு என்பதாக. அது மாதிரி பிராமணப் பிறவியாய் யோக்கியதாம்சங்களுடன் ஒருவர் வரட்டுமே பிறகுதானே பேச்சு? இப்போது ஹைப்பாதெடிகலாக விவாதித்து என்ன பயன்? பிராமணப் பிறப்பாகவே இருந்தாலும் கடுமையான அனுஷ்டானங்கள் விதித்து, ஞானத்தைப் புகட்டி எதிர் காலத்தில் பீடத்தில் அமர்வதற்கான யோக்கியதாம்சங்களை உண்டுபண்ணிய பிறகுதான் அங்கீகாரம் கிட்டும். ஸ்ரீ விஜயேந்திரர் மஹாஸ்வாமிகளால் எப்படியெல்லாம் கடைந்தெடுக்கப்பட்டார் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். ஐயோ பாவமே, பால்மணம் மாறாச் சிறுவனை இப்படியெல்லாம் மஹாஸ்வாமி படுத்தி எடுக்கிறாரே என்று மனம் கசிந்திருக்கிறேன். அதற்கெல்லாம் தாக்குப் பிடிக்க ஒருசிலரால்தான் ஆகும்!.
    -மலர்மன்னன்

  21. உள்ள சுத்தம், உடல் சுத்தம், உடை சுத்தம், உரை சுத்தம், உணவு சுத்தம்,
    உழைப்பு சுத்தம். இப்படி இந்த 6 சுத்தங்களை ஒருவன் கடைபிடித்து வாழ்ந்தால் அவனே உத்தமன். மேலே சொன்ன சுத்தங்களை ஒருவன் வாழ்கையில் கடைபிடித்தால் அவன் வேதம் கற்பதற்கும் கோவில் பூஜை செய்வதற்கும் மடாதிபதி ஆவதற்கும் எந்த தடையும் இல்லை. அதற்கு உத்திரவாதம் தருவது யார்? உடனே இப்பொழுது இதை செய்பவர்கள் ஒழுக்கசீலர்களா என்ற கேள்வி எழுவதும் இயற்கையே. அது களை எடுக்கபடவேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்று பல சாமியார்கள் சபல புத்தியால் கட்டுபாடை இழந்து இந்து மதத்திற்கு கெட்ட பேர்தான் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

  22. எனக்கு தெரிந்து இந்து மதத்தைக் காப்பதில் இன்றைக்கு மடங்கள் பெரிய வேலை எதுவும் செய்வதாக் தெரியவில்லை. சாதாரண மக்களின் பக்தியே இன்றைக்கு இந்து மதத்தைக் காத்து நிற்கிறது.

    ஆடி மாதம் கருமாரிக்கு வேண்டி கஞ்சி காய்ச்சி , பொங்கல் வைத்து கும்பிடும் மாசு மறுவற்ற பக்தி உடைய தாய்மார்களே ஆதி சங்கரரின் சரியான சிஷ்யர் (யை ) கள்.

    தத்துவ அடிப்படையிலே புத்தர் யாகங்களை விட ஆசைய வெல்லும் துறவும் , தியானமும் ஆன்மீக உயர்வுக்கு அதிகம் உதவக் கூடியவை என்கிற கோட்பாட்டை நிலை நிறுத்தி விட்டு சென்றார். புத்த மதத்திலே துறவிகள் ஓசையில் மனக் குவிப்பு செய்தல் போன்ற தியானப் பயிற்ச்சிகளை மேற்கொண்டனர்.

    ஆனால் சாதாரண மக்களின் கடவுள் வழிபாடு கோட்பாட்டை பவுத்தர்கள் இல்லாமல் செய்து விட்டனர் என்பதை சுவாமி விவேகானந்தர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இதனால் இல்லறத்தவர்கள் தங்கள் ஆன்மீக தேடலுக்கு வழி தெரியாமல் திகைத்து நின்றனர்.

    இத்தகைய கால கட்டத்திலே ஆதி சங்ககரர் தத்துவ அடிப்படையில் பவுத்தர்களை ஓவர் டேக் செய்து தன்னுடைய தத்துவ வெற்றியை நிறுவினார். அதே கையேடு அப்பாவி மக்களின் அன்னை வழிபாட்டை மீட்டெடுத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.

    எல்லாம் ஒன்றே என்னும் அத்வைதக் கோட்பாட்டினால் தத்வத்திலே தங்கம் வென்ற ஆதி சங்கரர், அந்த நிலையை அடைய அன்னை ஆதி பராசக்தி வழி பாட்டை முக்கிய வழிகளுள் ஒன்றாக வைத்தார்.

    “அங்கம் ஹரே புளக பூஷன மாஸ்ரயந்தி” என்றும்,

    “பஜே சாரதாம்பா மஜாஸ்ரம் மதம்பாம்” என்றும் தேவி வழிபாட்டில் , அன்னை வழி பாட்டில் எந்த தடையும் இல்லாத படிக்கு அதை முக்கிய வழி பாட்டு முறை ஆக்கினார்.

    இந்தியா முழுவதும் தேவி வழிபாடு மீண்டும் திரும்பியது.

    இன்றைக்கு கருமாரி அம்மனை வழிபாடு செய்யும் சாதாரண மக்கள் உண்மையான ஆதி சங்கரரின் சீடர்கள என்று சொன்னால் அது மிகச் சரியான கருத்து.

    கோடிக்கணக்கான் சொத்துக்களை குவித்துக் கொண்டு, அரசியல் செல்வாக்கு, யாரவது ஏதாவது பதவிக்கு வர விரும்பினால் அதை செய்து தரும் கெபாசிட்டி …இவை எல்லாம் உள்ளவர்கள் ஓவர் ஸ்பீடில் போய் எங்கேயாவது தடுக்கி விடுகின்றனர். இதனால் இந்து மதத்திற்கு பின்னடைவே தவிர நல்லது இல்லை.

    சாதாரண மக்கள் கோவிலுக்கு போய் வழிபடுவதுதான் இது மதத்தின் மரம், விழுது, கிளை எல்லாமாக இருக்கிறது. அப்படி கருமாரியை , முருகனை… வழிபடுபவர் பிற தெய்வங்களை வெறுப்பதில்லை, யாரையுமே, எதையுமே வெறுப்பதில்லை. இவ்வாறாக அத்வேஸ்டாவாக இந்து மதத்தின் கொள்கையை அனுச்டிக்கினறனர்.

    மடங்களில் இருப்பவர்கள் ஆதி சங்கரர், அப்பர், பட்டினத்தார், தியாகராஜர், விவேகானந்தர் போல உண்மையான ஆன்மீகத்தை உணர்ந்து பின்பற்றி அதே நேரம் மக்களுடனும் கலந்து அவர்களின் ஆன்மீக தேடலுக்கு உதவி செய்தாலே அவர்களினால் பலன் கிடைக்கும்.

    வெளியிலே வேஷம் போட்டால் பலனில்லை, சி.டி.க்களாக வெளி வருகிறது . அதுவும் ஒருவகையான சேவைதான் என்று கூட சிலர் வக்காலத்து வாங்குவார்கள்.

  23. //எவர் சொன்னாலும் அத்வைதக் கோட்பாடு அத்வைதக் கோட்பாடுதான். அதை பிராமணர் சொன்னால்தான் என்றில்லை. ஒரு தலித் சொன்னாலும் அது அத்வைதக் கோட்பாடாகவே இருக்கும். கோட்பாட்டுக்காகதான் மடம் என்ற நிறுவனமே தவிர, மடத்துக்காகக் கோட்பாடு அல்ல. எனவே தலித் அல்லது எவரையும் சங்கராச்சாரி ஆக்குவதில் தவறில்லை.
    இந்து மதத்துக்கு தீங்கிழைக்க நினைப்போர் மட்டுமே, சாரத்தைப் புரிந்து கொள்ளாமல் இதை எதிர்க்கமுடியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சங்கர மடங்கள் தவிர வலுவுடன் இருப்பவை வேளாள ஆதீனங்கள்தான். அங்கேயும் தலித்துகளை ஆதினகர்த்தராக்குவதுதான் நியாயம். அதிலும் குறிப்பாக சிவனையே பரம்பொருளாகக் சொல்பவர்கள் இதைச் செய்வதுதான் நியாயம். . . மேலும் எழுதுவேன்.//

    -கலக்குற தலைவா!

  24. //உள்ள சுத்தம், உடல் சுத்தம், உடை சுத்தம், உரை சுத்தம், உணவு சுத்தம்,
    உழைப்பு சுத்தம். இப்படி இந்த 6 சுத்தங்களை ஒருவன் கடைபிடித்து வாழ்ந்தால் அவனே உத்தமன். மேலே சொன்ன சுத்தங்களை ஒருவன் வாழ்கையில் கடைபிடித்தால் அவன் வேதம் கற்பதற்கும் கோவில் பூஜை செய்வதற்கும் மடாதிபதி ஆவதற்கும் எந்த தடையும் இல்லை. அதற்கு உத்திரவாதம் தருவது யார்? //

    கரீக்டா சொன்னீங்க சார்.

    இதல்லாத்தையும் விட மனசு சுத்தம் ரொம்ப முக்கியம் தானே சார்!

    இந்த காஞ்சிபுரம் தேவநாதன் ரொம்ப நாஸ்தி பண்ணிகினான், இல்ல சார்!

  25. //ஸ்ரீ விஜயேந்திரர் மஹாஸ்வாமிகளால் எப்படியெல்லாம் கடைந்தெடுக்கப்பட்டார் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். ஐயோ பாவமே, பால்மணம் மாறாச் சிறுவனை இப்படியெல்லாம் மஹாஸ்வாமி படுத்தி எடுக்கிறாரே என்று மனம் கசிந்திருக்கிறேன். அதற்கெல்லாம் தாக்குப் பிடிக்க ஒருசிலரால்தான் ஆகும்!.//

    அடாடா, இன்னா கஷ்டம் பாரு!

  26. விவாதம் சங்கராச்சார்யாராய் தலித்தை ஆக்க முடியுமா என்ற அண்ணல் அம்பேத்கரின் கேள்வியிருந்து. ஹிந்து சமயத்தை காப்பதில் மடங்களுக்கு என்ன பங்கு என்பதற்கு போய்விட்டது. இடையில் மலர்மன்னன் அவர்கள் பிராமணர்களே கூட எளிதாக சங்கராச்சாரியாராக முடியாது என்ற பொருள்பட
    கூறுகிறார்.
    பிராமணப் பிறப்பாகவே இருந்தாலும் கடுமையான அனுஷ்டானங்கள் விதித்து, ஞானத்தைப் புகட்டி எதிர் காலத்தில் பீடத்தில் அமர்வதற்கான யோக்கியதாம்சங்களை உண்டுபண்ணிய பிறகுதான் அங்கீகாரம் கிட்டும்.

    அண்ணல் அம்பேத்கர் தலித்தை சங்கராச்சாரியார் ஆக்க முடியுமா என்ற கேள்வி சமூகத்தில் வர்ணத்தின் பேரில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை அடியோடு நீக்குவதற்கான சவால் அன்றி வேறில்லை. ஸ்ரீ சங்கராச்சாரியாரின் பீடத்தில் அமர்வதால் மட்டும் எந்த பயனும் இல்லை. அது சமய வாழ்வின் குறிக்கோளா என்ன. ஞானம் பெறுதல், இறை தரிசனம் பெறுதல், சாயுச்சியம் அடைதல் இவையே சனாதன இலட்சியம். மோட்சத்தை விடுத்து பதவியைப்பெருவதால் என்னப்பயன். ஆக ஞானத்தைதேடும் பணியில் சாதனையில் அதற்கானக் கல்வியை விட்டு பீடத்தை அதன் தலைமையை நாடுவது பயனற்றது.
    மலர்மன்னன் கூறுவது போல எந்த ஒரு தகுதியோ திறனோ பெற்று இருந்தாலும். ஒரு குறிப்பிட்ட பிராமணர் பிரிவைச்சேர்ந்தவர்களைத்தவிர மற்றவர்கள் சங்கராச்சாரியார் ஆகமுடியாது. சைவ மடங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியைத்தவிர மற்றவர்களுக்கு அதற்க்கு வழியில்லை. காரணம் அமைப்பு இறுகிவிட்டது. மாற்றுவது அரிது எனப்து நிதர்சனம். அதற்காக போராடுவது வீண். எனவே ஸ்ரீ நாராயணகுரு போல இன்றைக்கு ஸ்ரீ ராமதேவர் பாபா, ஸ்ரீ அம்மா அமிர்தானந்தமயி போல தனி சமய நிறுவனங்களைத்துவக்குவதே வெற்றி பெறுகிறது. என்னைக்கேட்டால் எங்களுக்கு மட்டும் என்பவர்களிடன் ஏன் கேட்கவேண்டும். தனியே அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் அம்மாவைப்போல பாபா ராம்தேவ் போல. அவர்கள் நம்மிடம் வருவார்கள்.

    இன்றைக்கு சமய நிறுவனங்களுக்கும், ஆன்மீகத்திற்கும் உலகெங்கும் தேவை இருக்கிறது. இன்றைய தமிழக, தேசிய, உலக சமூக சூழலில் இது அத்தியாவசியம். இன்றும் பல ஆன்மீக அமைப்புக்கள் அப்பணியில் முனைந்துள்ளனர். அவர்களை ஒழிக்க பலவேறு கூட்டுசதிகள் நடைபெறுகின்றன.திருச்சிக்காரர் சொல்வதைப்போல இல்லாமல்(தனிமனிதர்கள் பெரும் நிறுவனங்களை தனித்தனியே எதிர்க்க இயலாது) ஆபிரகாமிய மதங்களின் தாக்குதலிருந்த நம்மை நாமே காக்க வலுவான ஆழ்ந்த ஆன்மீகப்பிடிப்போடு கூடிய சமுக இயக்கங்கள் அமைப்புக்களின் தேவை நமக்கு அவசியம். அப்போதுதான் நமது சமயம், பண்பாடு, தேசம் ஆகியவற்றை காக்க நம்மால் முடியும்.

  27. //அதற்கெல்லாம் தாக்குப் பிடிக்க ஒருசிலரால்தான் ஆகும்!//

    ஆஹா! அத்தகைய தாக்குப் பிடிக்கும் சக்தி எம்மவ்ரிலும் இருக்கலாம் அல்லவா? ஜெயேந்திரர் விஜயேந்திரர் ஆகியோர் போல அல்லது அவரினும் மேம்பட்ட ஆன்மாக்கள் தலித் சமுதாயங்களிலும் இருக்கலாம் அல்லவா? அதை அறிய என்ன வழி? சாதியை உடைத்து ஆன்மாவை காண்பதே அல்லவா? அதை ஏன் ஜகத்குரு பரமாச்சாரிய ஸ்வாமிகள் செய்யவில்லை என நீங்கள் தங்கள் பாத யாத்திரையின் போது கேட்டீர்களா? அதற்கு நடமாடும் தெய்வம் சொல்லிய பதில்தான் என்ன?

  28. //இன்றைக்கு சமய நிறுவனங்களுக்கும், ஆன்மீகத்திற்கும் உலகெங்கும் தேவை இருக்கிறது. இன்றைய தமிழக, தேசிய, உலக சமூக சூழலில் இது அத்தியாவசியம். இன்றும் பல ஆன்மீக அமைப்புக்கள் அப்பணியில் முனைந்துள்ளனர். அவர்களை ஒழிக்க பலவேறு கூட்டுசதிகள் நடைபெறுகின்றன.திருச்சிக்காரர் சொல்வதைப்போல இல்லாமல்(தனிமனிதர்கள் பெரும் நிறுவனங்களை தனித்தனியே எதிர்க்க இயலாது) //

    சுவாமி விவேகானந்தர் அமேரிக்கா போன போது தனி மனிதராகவே சென்றாரா? இல்லை மேனேஜர், செக்ரட்டரி, கார், கப்பல்கள் என சென்றாரா?

    சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்த போது, அவர் தங்கி இருந்த ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அவர் கெட்டவர், உங்கள் வீட்டிலே தங்க வைக்காதீர்கள் என்றுமாற்று மதப் பிரச்சாரகர்கள் சொன்னார்களே. அத்தனையும் அவர் தனி ஆளாகவே சந்தித்தார்.

    ஆன்மீகவாதியின் வெற்றி அவர் எந்த அளவுக்கு உண்மையை நேருக்கு நேர் சந்தித்து உணர்ந்து இருக்கிறார் என்பதில் இருக்கிறது. சுவாமி விவேகானந்தரே சொன்னது போல நீங்கள் ரிஷித்துவம் அடைந்து விட்டால் உங்கள் முகமே ஒளி வீசும், உங்கள் சொல்லுக்கு அவர்கள் மதிப்புக் கொடுப்பார்கள் என்றார்.

    ஐரோப்பிய நிறுவங்களைப் போல பண மூட்டைகளை வைத்துக் கொண்டு செயல்படப் போகிறீர்களா?

    //ஒரு குறிப்பிட்ட பிராமணர் பிரிவைச்சேர்ந்தவர்களைத்தவிர மற்றவர்கள் சங்கராச்சாரியார் ஆகமுடியாது. //

    சங்கராச்சாரியார் அப்படி சொன்னாரா?

    பண வசதி உள்ள ஸ்தாபனங்களை கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அரசியல் செல்வாக்குகளை வைத்துக் கொள்ளுங்கள். சமஸ்கிரித சுலோகங்களை நெட்டுருப் போட்டு ஒப்பித்துக் கொள்ள செய்யுங்கள்!

    “நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரனே” எனப் பாடி எது ஒருவனை காக்கும் , எது காக்காது என்பதை உணர்ந்த உண்மையான சங்கராச்சாரியார்கள் சமூகத்தின் எல்லா பிரிவுகளில் இருந்தும் தோன்றுவார்கள்.

  29. //விவாதம் சங்கராச்சார்யாராய் தலித்தை ஆக்க முடியுமா என்ற அண்ணல் அம்பேத்கரின் கேள்வியிருந்து. ஹிந்து சமயத்தை காப்பதில் மடங்களுக்கு என்ன பங்கு என்பதற்கு போய்விட்டது. //

    மடங்கள் அவை எதற்காக் நிறுவனப் பட்டனவோ அந்த நோக்கத்தை சிறப்பாக செய்யாத பட்சத்தில் அவற்றுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க முடியும்.

  30. \\\\\\\\ஜெயேந்திரர் விஜயேந்திரர் ஆகியோர் போல அல்லது அவரினும் மேம்பட்ட ஆன்மாக்கள் தலித் சமுதாயங்களிலும் இருக்கலாம் அல்லவா? \\\\\\

    ஸ்ரீ மள்ளன், ப்ராம்மணராய் பிறவாத விதுரர் கசாப்பு வ்யாபாரியான தர்மவ்யாதர் கார்கி என்ற ஸ்த்ரீ ஆகியோர் ப்ரம்மஞானிகளாக ஆதிசங்கரரின் பாஷ்யங்களில் சொல்லப்படுகிறார்கள். மனுஷ்யராய் பிறந்த ஒவ்வொருவரும் ப்ரம்மஞானம் அடைவது சாத்யமே என்பது திண்ணம். இதில் ஜாதி புருஷர் அல்லது ஸ்த்ரீ என்று எந்த விதிவிலக்கும் இருக்க இயலாது. வித்யாசமன்னியில் அத்வைதிகள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் விஷயமிது.

  31. முதலில், இந்த அம்பேத்கரரை எதுக்கு இப்படி தூக்கி பிடிக்கிறீங்க்கன்னே தெரியல? அவருடைய தந்தை வெள்ளைக்கார கம்பெனியில் குமாஸ்தாவா வேல பார்த்தவர்.. ( அவருடைய மஹர் சாதியின் தியாகத்தினால் கிடைத்த வேலை).. அதனால், இவருக்கு பள்ளிக்கூடத்தில படிக்கும் வாய்ப்பு..

    இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னன்னா, இந்த வெள்ளைக்கார பள்ளிக்கூடமே நம் சமுதாயத்தில ஒரு புதிய அமைப்பு.. காலம் காலமாக, வெவ்வேறு கலாச்சாரத்துல வளர்ந்த இரு பிரிவினரை, திடீரென்று ஒரே பள்ளிக் கூடத்தில் ஒன்றாய் அமருங்கள் என்றால், பிரச்சினை வரத்தான் செய்யும்.. அம்பேத்கர் பிறந்த மஹர் ஜாதியினர் மற்ற சாதியினரால் தீண்டத்தகாதவராக பார்க்கப்பட்டனர்..

    நான் கேட்கிறேன்.. அதே மஹர் ஜாதியினர், மற்ற தலித் ஜாதியினரை எப்படி பார்த்தனர்?
    மஹாராஷ்ட்ராவில் உள்ள தலித் ஜாதிகளின் பட்டியல்
    https://www.firstfoundation.in/Soc/List_SC.htm

    எத்தனை மஹர்கள் மற்ற தலித் ஜாதியினரை கலியாணம் செய்துள்ளனர்? அவர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? ஏன் இந்த கேள்வியை எவருமே கேட்க முன் வருவதில்லை?

    தலித்தை சங்கிராச்சரியாராக்குங்கள் என்பதே ஒரு அயோக்கியத்தனம்.. சங்கர மடத்தில், சன்னியாசிகள் மட்டும் தான் சங்கராச்சாரியார் ஆக முடியும்.. கிரகஸ்தத்தில் உள்ள பிராமணனே ஆக முடியாது..

    ரெண்டாவது, ஒருவன் சன்னியாசியாகிவிட்டால், அவனுக்கு, வர்ண ஜாதி அடையாளங்கள் பொய் விடும்.. நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாதுங்கறது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.. வால்மீகி, வேத வியாசர், போன்றவர்கள் ரிஷிகளானவர்கள்.. பிராமணனாக மாறவில்லை.. ரிஷிகள் வேதம் கற்பதற்கு எந்த தடையும் இல்லை..

    எத்தனை தலித்துகள், சன்னியாசிகளாக மாறினார்கள்.. அம்பேத்கர் மாதிரியான, வெள்ளைக்கார கொள்ளையில், சம்பளம் வாங்கிக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, சமத்துவம் பேசக்கூடாது.. அவர்கள் பேசும் சமத்துவம், அவர்கள் வேலை செய்த கும்பினியில் வெள்ளைக்காரனோடு பொருந்தாது.. நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் இடம் இல்லை என்று எழுதி வைத்தவர்களிடம், சமத்துவத்தை கேட்டு ஏன் இந்த அம்பேத்கர் போராடவில்லை?

    எப்ப்டி காந்தியை திட்டமிட்டு ஒரு தலைவராக வளர்த்தார்களோ, அதே போல, தலித் என்ற அடையாளத்தை ஏற்படுத்தி, அம்பேத்கரை முன்னிறுத்தினார்கள்.. இதை ஏன் இந்துத்துவ வாதிகளும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை..

  32. //ஆஹா! அத்தகைய தாக்குப் பிடிக்கும் சக்தி எம்மவ்ரிலும் இருக்கலாம் அல்லவா? ஜெயேந்திரர் விஜயேந்திரர் ஆகியோர் போல அல்லது அவரினும் மேம்பட்ட ஆன்மாக்கள் தலித் சமுதாயங்களிலும் இருக்கலாம் அல்லவா? அதை அறிய என்ன வழி? சாதியை உடைத்து ஆன்மாவை காண்பதே அல்லவா? அதை ஏன் ஜகத்குரு பரமாச்சாரிய ஸ்வாமிகள் செய்யவில்லை என நீங்கள் தங்கள் பாத யாத்திரையின் போது கேட்டீர்களா? அதற்கு நடமாடும் தெய்வம் சொல்லிய பதில்தான் என்ன?
    –ஆலந்தூர் மள்ளன்//
    எம்மவர் என்று ஏன் பிரித்துப் பேசுகிறீர்கள்? ஏன் இருக்கமாட்டார்கள்? கவலையே படாதீர்கள், அப்படி இருந்தால் விதை மண்ணைப் பிளந்து வருகிற மாதிரி தானாகவே வெளிப்பட்டு வந்துவிடுவார்கள். இவ்வாறு வந்தோர் நிறைய.
    // சாதியை உடைத்து ஆன்மாவை காண்பதே அல்லவா?//
    சாதி என்பது ஒரு சமூகக் கட்டமைப்பு. அதற்கும் ஆன்மிகத்திற்கும் சம்பந்தமில்லை. நமது சாதி முறை ஐரோப்பியர் பார்வையில் மேலிருந்து கீழாகத் தோன்றியது. மத மாற்ற வேலைகளுக்கு அந்தப் பார்வை வசதியாகவும் இருந்தது. அதையே நிறுவிவிட்டார்கள். ஆனால் நமது சாதிக் கட்டமைப்பு படுக்கை வாட்டில் அமைந்தது. கால மறுபாடுகளுக்கு ஏற்ப ஒரு சாதி செல்வாக்குப் பெறுவதும் மற்றவை பணிந்து போவதுமாக இருந்திருக்கிறது.
    யோவ் அய்யரே, சட்டுனு திதி குடுக்க வாய்யா, நாழியாகுது என்று அதட்டும் மறவர் உண்டு. இதில் யார் மேல், யார் கீழ்?
    சாதியமைப்பு பற்றி ஆழ்ந்த ஆய்வுகளின் அடிப்படையிலான கருத்துப் பகிர்வுதான் சரியாக இருக்கும்.
    சாதியை உடைத்தால்தான் ஆன்மாவைக் காணலாம் என்கிற கட்டாயம் ஏதுமில்லை.
    சாதியமைப்பபு பற்றிக் கேள்வி கேட்க வேண்டிய இடம் பரமாசாரியர் சன்னிதானம் அல்ல. அது சமூக தளத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.
    சங்கர மடப் பீடாதிபதி சம்பிரதாயம் பற்றி பரமாசாரியர் சொன்னவை என் வார்த்தைகளில்:
    எனக்கு முன் இருந்தவர்கள் வாழையடி வாழையாக அனுசரித்து வந்த சம்பிரதாயங்களை சரியாகக் கடைப் பிடித்து அடுத்து வருகிறவரிடம் என்னிடம் ஒப்படடைக்கப் பட்ட மாதிரியே ஒப்படைப்பதுதான் எனது கடமை. மடத்தையும் சேவார்த்திகளையும் கவனிப்பதில் மட்டுமே கருத்து இருகக வேண்டும், சொந்த ரசா பாசங்களில் மனம் லயிக்கலாகாது என்பதால் பிரம்மசரியத்திலிருந்து நேரடியாக சந்நியாச ஆசிரமம் செல்ல விதிக்கப் பட்டிருக்கிறது. சிறியதான சொந்தக் குடும்பத்தைவிட்டுப் பெரிய குடும்பத்தைச் சுமப்பது துறவல்ல. மேலும் இளம் வயதிலேயே தத்து எடுத்து அழைதுக் கொள்வது போலத்தான் எதிர்கால பீடாதிபதியைத் தற்கால பீடாதிபதி தேர்வு செய்து மடத்திற்கு அழைத்து வந்துவிடுகிறார். இதில் சிபாரிசு, செல்வாக்கு, இண்டர்வியூ, நிர்பந்தம் என்பதற்கெல்லாம் இட்மில்லை. தற்காலப் பீடாதிபதி அவரது பார்வையில் பொருத்தமாகத் தோன்றும் இளம் பிரம்மசாரியைத் தேர்ந்தெடுக்கிறார். இது இங்குள்ள சம்பிரதாயம். இதையெல்லாம் மீறுகிற அதிகாரம் எனக்கு இல்லை.
    இது நான் ஸ்தாபித்த மடம் அல்ல. இதை நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு வாய்த்தது, அவ்வளவுதான். எனக் கென்று சொந்தக் கருத்துகள் இருக்கலாம் ஆனால் அவற்றை இங்கு அறிமுகம் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை.
    ஸ்ரீ மள்ளன், என் கருத்துப் பகிர்வு உங்களுக்குச் சிறிதளவாவது திருப்தி அளிக்குமானால் மகிழ்ச்சி அடைவேன்.
    -மலர்மன்னன்

  33. //மனுஷ்யராய் பிறந்த ஒவ்வொருவரும் ப்ரம்மஞானம் அடைவது சாத்யமே என்பது திண்ணம். //

    //பிராமணப் பிறப்பாகவே இருந்தாலும் கடுமையான அனுஷ்டானங்கள் விதித்து, ஞானத்தைப் புகட்டி எதிர் காலத்தில் பீடத்தில் அமர்வதற்கான யோக்கியதாம்சங்களை உண்டுபண்ணிய பிறகுதான் அங்கீகாரம் கிட்டும். //

    பிரம்மஞானம் கைகூடினாலும் பிராமணப் பிறப்பாக இல்லா விட்டால் பீடத்தில் அமர்வதற்கான அங்கீகாரம் கிட்டாது.

  34. //சொந்த ரசா பாசங்களில் மனம் லயிக்கலாகாது என்பதால் பிரம்மசரியத்திலிருந்து நேரடியாக சந்நியாச ஆசிரமம் செல்ல விதிக்கப் பட்டிருக்கிறது. //

    பிரமச்சாரியாக இருந்தாலும் இந்த உலகப் பொருட்களினால் தனக்கு நன்மை கிடைக்குமோ என்ற எண்ணம் இருந்தால் அவர் ஆச்சாரியாராகி பலன் இல்லை.

    கிரஹச்தராக இருந்தாலும் உலகத்தில் இருக்கும் எந்தப் பொருளும், உறவும் தன்னைக் காக்காது என்று உணர்ந்தவர் ஆன்மீகத்தில் வேகமாக முன்னேறுகிறார். ஒருவரின் மனநிலை என்ன என்றுதான் பார்க்க வேண்டும்.

    ஆதி சங்கரர் தன்னுடைய கொள்கையை பரப்ப தன்னுடைய முக்கிய சீடராக தேர்ந்தெடுத்து , பின்னாளில் பீடாதிபதியுமாக்கப் பட்ட மண்டன மிஸ்ரர் கிரஹச்தராகஇருந்தவர் என்பது உலகறிந்த விடயம். அப்ப முதல் பீடாதிபதியே கிரஹச்தராக இருந்தவர். அப்புறம் மத்த பீடாதிபதிகள் எல்லாம் பிரம்ச்சாரியா இருக்கணும் என்ற விதி எப்படி போட்டிருக்க முடியும்? அதற்க்கு என்ன ஆதாரம்?

    கமெண்ட்டுகளை படித்து மாடரெட் செய்பவர்கள் இந்து மதத்தைப் பற்றி கொஞ்சம் ஆழமாக அறிந்திருப்பவராக இருந்தால் நல்லது.

  35. சாதியை உடைத்தால்தான் ஆன்மாவைக் காணலாம் என்பதல்ல என்கிற மலர்மன்னனின் கூற்று முற்றிலும் சரியானதே அதனால்தான் ஒரு தலித் சங்கராச்சாரி ஆக்கப்படவேண்டும் என்று சொல்கிறோம். தலித், பிராமணர் ஆக மாறிய பின்னர்தான் சங்ககராச்சரி ஆகமுடியும் என்பதல்ல. தலித் தலித்தாக இருக்கும்போதே ஆன்மாவைக் காணமுடியும் என்பதால் அவரை சங்கராச்சாரி ஆக்குவதில் தவறில்லை.
    பிரமச்சரியத்தில் இருந்து நேரே சந்நியாசம் என்பது எந்த ஸ்மிருதி சொல்லி இருக்கிறது என்பதை மலர்மன்னன் எடுத்துச் சொன்னால் நலம். இதுவே ஒரு சாஸ்திர விலகல் என்பதாகத் தோன்றுகிறது. ஸ்மிருதிகளே அடிப்படை ஆதார நூல்களாகும். அவை வேதங்களை ஆதாரமாகக் கொண்டவை.

  36. அன்புசால் திருச்சிக்காரர் அவர்களே, நீங்கள் மீண்டும் ஒருமுறை எனது மறு மொழியைப்படிக்கவேண்டும்.
    நீங்கள் கேட்கிறீர்கள்,
    சுவாமி விவேகானந்தர் அமேரிக்கா போன போது தனி மனிதராகவே சென்றாரா? இல்லை மேனேஜர், செக்ரட்டரி, கார், கப்பல்கள் என சென்றாரா?
    ஆம் ஆம் ஆமாம் சுவாமி விவேகானந்தர் வேதாந்த சிங்கமென தனியாக அமேரிக்கா சென்றார் சர்வ சமய மாநாட்டில் வென்றார் நம் சமயத்தின் பண்பாட்டின் ஏற்றத்தை நிலைநாட்டினார். யாரும் மறுத்திட முடியாது அவரே நம் பண்பாட்டை காத்திட ஸ்ரீ ராமகிருஷ்ணர் பெயரால் மேடம் மிஷன் நிறுவினாரே. ஏன் தனியாக சமயப்பணியை செய்யவில்லை, துறவிகள் சமுக சேவை செய்வதற்கு வழிகாட்டினாரே. அமெரிக்க அனுபவம் மூலம் அமைப்பின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்து கொண்டார். நீங்கள் அருள் கூர்ந்து அவரது ஞான தீபம் படியுங்கள்.

    இன்னும் திருச்சிக்காரர் சொல்கிறார்
    மடங்கள் அவை எதற்காக் நிறுவனப் பட்டனவோ அந்த நோக்கத்தை சிறப்பாக செய்யாத பட்சத்தில் அவற்றுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க முடியும்.

    ஆம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை தான். மக்களை விட்டு மத நிறுவனங்கள் விலகிச்சென்றல் மக்களை அவைகள் ஒதுக்கினால் அவைகளிடம் இருந்து மக்கள் விலகிவிடுவார்கள். எனவேதான் நம் நாட்டில் காலந்தோறும் சமய இயக்கங்கள் எழுந்து வருகின்றன மக்களுக்கு வழிகாட்ட. எனது மறுமொழியை மீண்டும் நினைவூட்டுகிறேன் சாமானிய மக்களை சங்கராச்சர்யர் பீடம் ஏற்றுவது நடை முறையில் சாத்தியம் இல்லை.
    ஸ்ரீ சங்கரர் சொன்னாரா நிச்சயம் தெரியாது ஆனால் காலப்போக்கில் அமைப்பு இறுகிவிட்டது அதன் மேல் ஒருசிலரே அதிகாரம் செலுத்தவல்லவராகிவிட்டனர்.
    ஆனால் புதிய சங்கர பீடம் அல்லது ஆன்மீக பீடம் ஏற்படுத்துவது இன்றைக்கு சாத்தியம். ஆன்மீக விழிப்பும் துடிப்பும் இருந்தால். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், சுவாமி ராம்தேவ், அம்மா போன்றோர் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வர்களைப் போல தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட குலத்தில் உதித்த மகான்கள் புதிய மடங்களை நிறுவி தர்மத்திருக்கு அரண் செய்வார்கள். தொடர்ந்து நமது சமயம், பண்பாடு நம் நாட்டின் எழுச்சி குறித்து ஆழ்ந்து சிந்தியுங்கள்.

  37. செந்தில் கூறுகிறார்:

    //…முதலில், இந்த அம்பேத்கரரை எதுக்கு இப்படி தூக்கி பிடிக்கிறீங்க்கன்னே தெரியல?..//

    செந்தில் போன்றவர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களை அவர்தம் பணிகளை புரிந்து கொள்ள வேண்டும்.
    பாபாசாஹிப் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்குப் போராடினார் தான் வாழ்வை அற்பணித்தார். அதுமட்டுமல்ல அவர் ஒரு தேசியவாதி, திராவிட ஆரிய இனவாதத்தை நிராகரித்தார், இந்தியாவின் ஒற்றுமையை போற்றினார். அந்நிய ஆட்சிக்கோ, மிசனரிகளுக்கோ, இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கோ அவர் ஒருநாளும் துணைபோகவில்லை மாறாக அவற்றை முற்றிலும் நிராகரித்தார். இந்திய சமுதாயத்தில் ஜனநாயகம் சமத்துவம் ஒற்றுமை வளரப் பாடுபட்ட அவர் இந்தியாவின் தேசியத்தலைவர் என்பதே உண்மை. இன்று நாம் சில இடங்களில் அவரோடு மாறுபடும் கருத்தை கொண்டிருந்தாலும் அவரது தூய்மையும் தொண்டும் தேசபக்தியும் போற்றுதலுக்குரியவை.

  38. மனிதனுக்கு அவனது சீரான வாழ்க்கையின் நிமித்தமாக நான்கு ஆசிரமங்களை ஸ்மிருதிகள் வலியுறுத்தியிருக்கின்றன. பிரம்மசரியத்திலிருந்து நேரடியாக சந்நியாச ஆசிரமத்திற்குச் செல்லத் தடை ஏதும் ஸ்மிருதிகள் விதிக்கவில்லை.
    வேத உபநிடத பாஷ்யக்காரரான சங்கரர் பிரம்மசரியத்திலிருந்து நேரடியாக சந்நியாசம் புகுந்தவர்தான்.

    சங்கர மடங்கள் சுயேற்சையாக இயங்கிவரும் தனி ஸ்தாபனங்கள். பொது அமைப்புகள் அல்ல. அவர்களாக விதிகளைத் தளர்த்தினால் உண்டு. நாம் அவர்களிடம் கோரிக்கை வைக்கலாம். எப்படி நிர்ப்பந்திக்க முடியும்?

    சுக துக்கங்களை ருசி பார்க்காத, சொந்த பந்தங்களுடன் உறவு பாராட்ட வேண்டிய அவசியமில்லாத இளம் வயது பிரம்மச்சரியை பீடாதிபதி பதவிககுத் தயார் படுத்தும்போது பிற்காலத்தில் உறவுகள் அறுபட்டு பீடாதிபதியாக அவர் இருக்கையில் அவருக்குத் தனிப்பட்ட தூண்டுதல்களோ பலவீனமோ இருக்க வாய்ப்பில்லை என்பது ஒரு பெரும்பாலான நம்பிக்கைதான். ஒவ்வொருவர் மனதிலும் என்ன இருக்கிறது என்று புகுந்தா பார்க்க முடியும்.

    மண்டன மிச்ரர் அவராக விரும்பி சங்கரரின் சீடர் ஆனவர் அல்ல. தர்க்கத்தில் தோற்று அக்கால சம்பிரதாயத்துக்கு இணங்க நிபந்தனையின் பிரகாரம் சீடர் ஆனவர். சில விதிவிலக்குகளும் சிலர் விஷயத்தில் இருக்கத்தான் செய்கின்றன! விதி விலக்குகள் விதிகள் அல்ல!

    சிற்றின்பங்களைத் துய்க்க வேண்டும் என்பதற்காகவே பிரம்மச்சாரிகளாக இருப்போரும் உண்டு, பற்றில்லாமல், கடமையின் பொருட்டு கிருஹஸ்தராக இருப்போரும் உண்டு! இதையெல்லாம வைத்தா விவாதிக்க முடியும்? இதெல்லாம் தர்க்க சாஸ்திரத்துக்கு உட்படாத விதண்டா வாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    எனக்கு ஒரு சந்தேகம்:
    ஆன்மாவைக் காணவோ கண்டவரோ சங்கர மடப் பீடாதிபதியாக வேண்டும் என்பது என்ன அவசியம்? அப்போதுதான் அவருக்கு அபடியொரு அங்கீகாரம் கிடைக்குமா?
    சங்கர மடப் பீடத்தில் அப்படி என்ன விசேஷம்? இம்மாதிரியான எண்ணப் போக்கு வருவதற்கெல்லாம் காரணமே ஆபிரகாமிய கருதுகோள்களின் தாக்கம்தான். ஆன்ம விசாரத்துக்காகவோ சமயப் பணிகளுக்காகவோ உள்ள மடங்களை ஆஸ்பத்திரி கட்டு, பள்ளிக்கூடம் வை என்று நிர்பந்திப்பது. ஹிந்து சமூக நல அமைப்புகள் செய்ய வேண்டிய பணிகள் இவை. அதனால்தான் ஜன கல்யாண் எனத் தனியாக ஆரம்பித்தார்கள்.
    சங்கர மடப் பீடாதிபதி போப்போ, கிறிஸ்தவ மதத்தின் பிரிவுகளுக்கு எல்லாம் ஒவ்வொருவர் மேய்ப்பர்களாக இருப்பதுபோலவோ இருப்பவர் அல்ல. அவரது அங்கீகாரம் இருந்தால்தான் ஒருவர் ஹிந்துவாக இருக்க முடியும் சமயச் சடங்குகள் செய்துகொள்ள முடியும் என்கிற சங்கடங்கள் ஏதும் இல்லை. முகமதியத்தில் இருப்பதுபோல் மக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைப்புகள்போல ஹிந்து சமுதாயத்தின் மீது மேலதிகாரம் செலுத்த எந்தவொரு தனி நபரோ அமைப்போ இல்லை. யாரெனும் ஒரு சங்கர மடப் பீடாதிபதியிடமிருந்து சான்றிதழ் பெறறு வர வேண்டும் ஹிந்து சமயத் தத்துவங்களை விவரிக்க என்கிற கட்டாயம் ஏதும் இல்லை.

    தனியார் அமைப்புகளான சங்கர மடங்களிடம் போய் தலித்தை சங்கராச்சரியர் ஆக்கு என நிர்பந்திப்பதைவிட அவ்வாறான எண்ணம் உள்ளவர்கள் அவரவருக்கான மடங்களை நிறுவிக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
    -மலர்மன்னன்

  39. ஸ்கட் என்பவரை சங்கராசாரியர் ஆக்கு என்று அம்பேத்கர் சொன்னதே
    அபத்தமான வாதம்தான். கோபத்தில் எழுந்த வாதம்தான் அது. கோபம் நியாயமானது, வாதம் சாரமில்லாதது
    -மலர்மன்னன்

  40. அம்பேத்கார் செய்ததெல்லாம் நல்லவைக்காகவே என்றிருந்தால் கூட
    தலித்துகள் என்றால் மதம் மாறியே தீரவேண்டும் என்கிற சிந்தனையை
    தலித்துகளின் ஆழ்மனதில் விதைத்துச் சென்றிருக்கிறார்.

    இன்று கிறிஸ்தவ மிஷனரிகள் அதை அறுவடை செய்கின்றன.

    இந்து மதத்தை பழிவாங்குகிறேன் என்று கூறி கிறிஸ்தவ
    மிஷனரிகளுக்கு நல்ல தீனியை கொடுத்துச் சென்றுள்ளார் அம்பேத்கார்.

    இப்போது தலித்துகளின் பெரும்பாலானோர் வாட்டிகனின் அடிமைகள்.

    ஒதுக்கீடும் வேண்டுமாம்! புத்த பிட்சுக்களோ அதே தமிழர்களை தலித்துகளாக இருந்தாலும் எந்த ஜாதியாக இருந்தாலும் கொன்று போடுகிறார்ககள்

    அம்பேத்கார் இப்போது பிறந்து வந்தால் எந்த மதத்தை திட்டுவார், எந்த மதத்தை ஆதரிப்பார்?

  41. மிக்க நன்றி திரு மலர்மன்னன் அய்யா அவர்களே
    தங்கள் தெளிவான, தர்க்க ரீதியான விளக்கம் புரியாதோர்க்கு புரிய வைத்திருக்கும். .
    2009 இல் கூடிய ஐக்கிய நாடுகள் பேரவை நம் நாட்டின் சாதிகளை ஒரு இன ப்ரச்சனையாக ஆக்க முயல்வதாகப்படித்தேன்.
    அவர்களின் ஆயுதம் இற்றுப்போன ஆரிய -திராவிட இனவாதம்.
    இம்மாதிரி வேளையில் இத்தகைய சர்ச்சைகள் வடிவேலு ஏதோ ஒரு படத்தில் தன்னைத்தானே அடித்துக்கொள்வார் அதைப்போலே என்று படுகிறது .
    சில ஆதீன கர்த்தர்கள் நாத்திகர்களுடன் கைகுலுக்கத்தயங்குவதில்லை.
    இவர்களை யார் திருத்த?
    மாதா அம்ருதானந்தமயி , சங்கராச்சாரியார் [ சங்கராச்சாரி என்று சொல்வதே திராவிடமாயை விஷத்தின்
    தாக்கம்தான்] அனைவரும் நமக்கு சத்குருக்களே .இவர்களில் யாரை ஏற்று கொள்ளவும் நமக்கு உரிமை உண்டு.ஏற்றுகொள்ளமலிருக்கவும் உரிமையுண்டு!
    இவர்கள் எல்லாரும் நம்மை அழிக்க நினைக்கும்சக்திகளுக்கு எதிராக திரள்வது , அல்லது திரள நினைத்தாலோ அந்நிய சக்திகளுக்கு பொறுப்பதில்லை.
    சிலவருடங்களாக நடக்கும் சிலவிஷயங்கள் இதனால்தான்.
    சகோதரர்களுக்கு சொல்வது இது தான்-எந்த விவகாரமாகிருந்தாலும் நம் பிரசார பலம் வாய்ந்த மீடியாக்களை ஒருபோதும் நம்ப வேண்டாம்.
    அன்புடன்
    சரவணன்

  42. இன்னும் இரண்டு விஷயங்கள் சொல்ல மறந்தேன்.

    1.) மண்டன் மிச்ரரும் சுரேஸ்வரரும் ஒருவரல்ல என்றும் ஆய்வுள்ளது. பொதுவாக மண்டன மிச்ரர்தான் சுரேஸ்வரர் என்று கதையில் வருகிறது. ந்ம்முடைய சங்கடம் நம் மகான்கள், பெரியவர்கள் பற்றிய சரித்திரத்தில் புராணமும் கலந்துவிடுகிறது. மண்டன மிச்ரர் சுரேஸ்வரர் அல்ல என்று விவரிக்க ஒரு தனிக் கட்டுரை எழுத வேண்டும். எனக்கு நேரமும் இல்லை, உடம்பில் சக்தியும் இல்லை. மேலும் தற்சமயம் அது ஒரு முக்கியமான விஷயம் அல்ல.
    2.) சங்கராசாரியா என்பது ஒரு பட்டம் போலத்தான். சங்கராசாரியார் என்று அழைக்கப்படுபவர்கள் எல்லாம் ஆதி சங்கரர் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் என்பதற்கான அடையாளம்தான். சங்கரரின் கோட்பாட்டை ஒப்புபவர் எனில், அம்பேத்கரேகூட விரும்பினால் சங்கராசாரியார் என்று தனக்குப் பெயர் சூட்டிக்கொள்ளலாம். அது ஒன்றும் பேடன்ட் உரிமை பெறப்பட்ட பிரான்டு அல்ல. ஹிந்துக்கள் இப்படி தேவையில்லாத சச்சரவுகளில் ஈடுபடுவதைக் கண்டு வேண்டுமென்றே தங்களில் ஒருவரை சங்கராசாரியார் என்று அலையவிடுவார்கள். கிறிஸ்தவ பிராமணர் சங்கம்
    என தைரியமாகப் பெயர் சூட்டியவர்கள் அயிற்றே!

    நிற்க, உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி, ஸ்ரீ சரவணன் அவர்களே.
    -மலர்மன்னன்

  43. கேள்வி 01: பிராமணர்களுக்கு மட்டுமே உரியது என்று சங்கர மடத்தார் சொல்லுகிற சங்கராச்சாரியார் என்ற தலைமைப் பதவியில் ஒரு தலித்தை வையுங்கள் என்கிறார் அம்பேத்கர். சரி. ஒரு பிராமணரைத் தங்கள் தலைவராக தலித்துகள் ஏற்றுக்கொள்வார்களா?

  44. //தனியார் அமைப்புகளான சங்கர மடங்களிடம் போய் தலித்தை சங்கராச்சரியர் ஆக்கு என நிர்பந்திப்பதைவிட அவ்வாறான எண்ணம் உள்ளவர்கள் அவரவருக்கான மடங்களை நிறுவிக்கொள்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.//

    ஏற்கனேவே பல சாதியினருக்கு அவரவருக்கான மடங்கள் உள்ளன. அப்படி இல்லாதவர்கள் தங்கள் சாதி சங்கங்களில் செயலாளர், பொருளாளர் போன்ற
    பதவிகளுடன் ஒரு மடாதிபதி பதவியையும் உருவாக்கி விடலாம்.

  45. மண்டன மிச்ரர்தான் சுரேஸ்வரர் என்று என சொல்லுவது கதை அல்ல, அது நடந்த வரலாறு.

    மண்டனமிஸ்ரருடன் சங்கராச்சாரியார் நடத்திய விவாதம், விவாத முடிவில் மண்டன மிஸ்ரர் சங்கராச்சாரியாரின் கருத்து சரியானது என புரிந்து சன்யாசம் பூனட்து, சங்கராச்சாரியார் அவருக்கு ஸ்ரேச்வாச்சாரியார் எனப் பெயரளித்து பின்னாளில் சிரிங்கேரி பீடாதிபாதியாக அமர்த்தியது, இவை எல்லாம்
    இந்திய வரலாற்றில் பதிவு செய்யப் பட்ட விடயம் ஆகும்.

    மண்டன் மிச்ரரும் சுரேஸ்வரரும் ஒருவரல்ல என்பதுதான் கதை கட்டுவது ஆகும்.

    வாதத்தில் தோற்றதால் வேறு வழியில்லாமல் கடனே என்று மண்டனே மிஸ்ரர் சன்யாசம் பூணவில்லை. அவர் சங்கராச்சாரியாரின் கோட்பாட்டில் உண்மை இருப்பதாக மனப் பூர்வமாக உணர்ந்தே சன்யாசம் பூண்டார்.

    நான்கு வேதங்களையும் படித்தாலும் , கர்மாக்களை செய்தாலும் அழியாத ஒன்றாக தன்னை அறியாதவன், அந்த நிலையை அடையாதவன் விடுதலை அடைய முடியாது என்பது மண்ட மிஸ்ரர் விரும்பி ஏற்றுக் கொண்ட கருத்து.

    மண்டன மிஸ்ரராக இருக்கும் வரையில் பிணி மூப்பு சாக்காடு … உள்ளிட்ட பல துன்பங்கள் தன்னை வந்து தாக்குவதில் இருந்து காத்துக் கொள்ள இயலாது, எத்தனை வேத கர்மாக்களை நியமப் படி செய்தாலும் செய். நானே அழிவற்ற பிரம்ம்மம் என்பதை வாஸ்தவத்தில் அறியும் ஞானம் பெறாமல் விடுதலை அடைய முடியாது அவர் உணர்ந்தது.

    சிரிங்கேரி மடத்தின் தளத்தில் சுரேஸ்வராச்சாரியார் சொல்லப பட்டுள்ளது என்ன என்று பாருங்கள்

    //They were giants of erudition, both of them supreme in the knowledge of the Vedas. The discussion continued daily without hindrance to their daily rituals, rest and other exigencies.

    From day to day, Mandana Mishra saw new light in the arguments of Sri Bhagavatpada. He was losing faith in his own past convictions. His faith in Bhagavatpada was growing to a stimulating climax.On the eighth and the last day of the discussion, Mandana Mishra was fully convinced of the superiority of the doctrine of Sri Bhagavatpada. As Sri Bhagavatpada said, ‘Once the conditioning factor (the nescience) vanishes, the soul becomes one with the Brahman.’ When Mandana Mishra realised the limitations of his own standpoint and the Truth of Sri Bhagavatpada’s view, he found that his flower garland had faded. He fell prostrate before Sri Bhagavatpada, touched his feet and said in a trembling voice, ‘O Teacher of the World, pardon me and my audacity. I have offended you for these eight days. Hold your fury, O Jagadguru! and shower your grace on this humble servant.

    Ubhaya Bharati disappeared from the mortal vision and regained her celestial form as Saraswati Devi, the Goddess of Knowledge. She however granted a boon to Sri Bhagavatpada that she would be immanent at a place where he may invoke her presence. Mandana Mishra gave all his earthly belongings to the needy at the last Vedic ritual which he performed before he took sanyasa at the hands of Sri Jagadguru Shankara Bhagavatpada.

    Sri Bhagavatpada gave his disciple the name of Sri Sureshwaracharya. He took him on his march from place to place. Soon Sri Bhagavatpada reached Sringeri where he invoked the presence of Goddess of Knowledge. He installed Sri Sureshwaracharya as head of the Mutt.//

    https://www.sringeri.net/jagadgurus/sri-sureshwaracharya

    மண்டன மிச்ரரும் சுரேஸ்வரரும் ஒருவரல்ல என்பதுதான் கதை கட்டுவதுஆகும்!

    நாம் சொன்னது என்ன என்று காட்ட வரலாற்றை திரித்து எழுதி தத்துவத்தை சிதைத்து இந்தியாவின் ஆன்மீக முன்னேற்றத்துக்காக பாடுபட்ட ஒரு சிறந்த அறிஞரை பற்றை மாற்றி எழுதுவது சரியா என எண்ணிப் பார்க்க வேண்டும்.

    (இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது வின்ஸ்டன் சர்ச்சிலும், அதற்காக பாடு பட்டு சிறை சென்று தியாகம் செய்தது இராபர்ட் கிளைவும் என்று ஒரு ஆரய்ச்சி உள்ளது என்று கூட எழுதலாம். இந்தியாவுக்கு சுதந்திரம் தர பிரிட்டிஷ் அரசு மறுத்ததால்தான் இராபர்ட் கிளைவ் தற்கொலை செய்து கொண்டாரா என்று ஒரு ஆரய்ச்சி உள்ளது என்று கூட எழுதலாம். )

  46. தமிழ்நாட்டில், குறிப்பாக தஞ்சாவூர் கும்பகோணம் திருவையாறு பக்கங்களில் வேதாந்த மடங்கள் பல உண்டு. திருவாரூர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் திருமடம் வேதாந்த மடங்களில் மிகச் சிறப்பானது. அத்திருமடங்கள் அனைத்தும் ஆதி சங்கரரை முதன்மைக் குருவாகக் கொண்டாடிப் போற்றுகின்றன. இங்கு வேதாந்த பாடமும் வடமொழியும் கற்பவர்கள் யாரும் பிராமணர்கள் அல்லர். வேதாந்த உலகிலே கரபாத்திரம் வீரசுப்பைய சுவாமிகள் என்பாரை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவர் பிராமணர் அல்லர். சங்கர மடத்தினொடு சம்பந்தப்படாத தமிழ் பிராமண சந்நியாசிகள் தமிழிலே நூல் செய்த வேதாந்த சந்நியாசிகள் உண்டு. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் குருவாகிய கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் பிராமண சந்நியாசியே. தத்துவராயர் பாடுதுறைகளின் ஆசிரிய்ர் தத்துவராய சுவாமிகள் பிராமண குலத்தில் தோன்றியவரே. இவர்கள் எல்லாம் சாதிவருணங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இவர்களுடைய சீடர்கள் பெரும்பாலும் பிராமணஎ அல்லாதவர்களே. இவர்களுடைய நூல்களைப் படித்துப் பயன் பெறுவோரும் பிராமணர் அல்லாதவர்களே. இவர்களெல்லாம் சமுதாயத்துடம் நேரடித் தொடர்பு வைத்திருந்தவர்கள். இத்தகைய சந்நியாசிகளின் தொண்டினாலேயே இன்றும் இந்துமதத்தின் அனைத்து உட்பிரிவுகளும் உயிர்த்துடிப்புடன் இயங்குகின்றன. இவர்கள் யாரும் சங்கரமடத்து அங்கீகாரத்துக்கோ அதிகாரத்துக்கோ எதிர்பார்த்திருக்கவில்லை. சங்கரமடத்துக்கு இத்துணைச் செல்வாக்கு பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி அவர்களின் காலத்தில் அவருடைய துறவு வலிமையினாலும் ஊடகங்களின் வலிமையினாலும் தோன்றியதே.
    தலித்தை சங்கராச்சாரியர் ஆக்கு என்பது மனோவிகாரத்தில் எழுந்த குரல் மல்ர்மன்னன் அவர்கள் கூறியவாறு/அபத்தமான வாதம்தான். கோபத்தில் எழுந்த வாதம்தான் அது. கோபம் நியாயமானது, வாதம் சாரமில்லாதது/

  47. பெரியோர் பெரியோரே. வந்தனங்கள் முத்துக்குமாரசாமி ஐயா அவர்களே.

    ஒரு சிறு புரிதலைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் கூறியது:

    //…தலித்தை சங்கராச்சாரியர் ஆக்கு என்பது மனோவிகாரத்தில் எழுந்த குரல் மல்ர்மன்னன் அவர்கள் கூறியவாறு/அபத்தமான வாதம்தான். கோபத்தில் எழுந்த வாதம்தான் அது. கோபம் நியாயமானது, வாதம் சாரமில்லாதது…//

    அம்பேத்கர் ஏன் ஒருவரை “சங்கராச்சாரியார்” ஆக்கு என்று சொன்னார்? எதனால் “ஜீயர்” ஆக்கு என்றோ கௌட மடத்துத் தலைவர் ஆக்கு என்றோ, ஆதீனமாக்கு என்றோ சொல்லவில்லை?

    இந்தக் கேள்வி, அம்பேத்கரின் அந்த வேண்டுகோள் குறித்த காண்டக்ஸ்ட்டைப் புரிய வைக்கும். அவரது வேண்டுகோள் நியாயமானதே என்றும்கூடத் தோன்ற வைக்கலாம்.

    அம்பேத்கரின் சாதிய மறுப்பை மிகக் கடுமையாக எதிர்த்தவர்கள் மகாராஷ்டிரத்தின் சித்பவன் பிராமணர்கள். சடங்குகள் ஒன்று விடாத திலகரையே அவர்கள் எதிர்த்தார்கள். பகிஷ்கரித்தார்கள். (தமிழ்நாட்டில் பாரதியாரைப் பார்ப்பனர்கள் பகிஷ்கரித்ததுபோல.)

    அந்த சித்பவன் பார்ப்பனர்களின் இறையியல் ரீதியான ஒரு அடையாளத் தலைமைப் பீடமாக இருப்பது ஸ்ருங்கேரி ஷாரதா மடம். எனவேதான் அம்பேத்கர் “சங்கராச்சாரியாராக” ஆக்கு என்றார்.

    அதாவது, அவரது வேண்டுகோள் மகாராஷ்ட்ரப் பிராம்மணர்களின் சாதியத்திற்கு எதிராக எழுந்தது. அவர் கர்நாடகாவில் இருந்திருந்தால் மாத்வ சம்பிரதாய மடத்திற்குத் தலைவராக்கு என்று வேண்டி இருப்பார்.

    உதாரணம் சொல்ல வேண்டுமெனில், தமிழ்நாட்டில் சுமங்கலி கேபிள் கனெக்‌ஷன்களை அரசுடமையாக்கப் போவதாக ஜெயலலிதா அறிவிப்பது போல. இடம் பொருள் சார்ந்தது.

    எனவே, அம்பேத்கர் எழுப்பிய கோரிக்கையும் அதன் பின்னுள்ள கோபத்தைப் போலவே நியாயமானதுதான். அவருக்கு மகாராஷ்ட்ரத்தில் எதிரியாக இருந்தவர்களை வைத்து அவரது கோரிக்கையைப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.

    ————–
    இந்தப் பாகத்தில், அம்பேத்கரின் இந்தக் கோரிக்கையில், ஒரு முக்கியமான விஷயம், ஒரு “க்கன்னா” இருக்கிறது. அதை இதுவரை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. யாரும் கவனிக்காவிட்டால் அப்புறம் சொல்லுகிறேன்.
    ————-
    .

  48. அறிஞர் முத்துக்குமாரஸ்வாமி அவர்கள் திக்கு நோக்கித் தொழுகிறேன்.
    நான் சொல்ல மறந்ததை, சொல்லாமல் விட்டதைச் சொன்னீர்கள்.
    நன்றியுடையவனாயிருப்பேன்.
    மலர்மன்னன்

  49. Shri Malarman ji
    My heart felt thanks for your explanations.Oh, what clarity and wisdom in your words and your thinking. Again,Thank you Sir

  50. இந்தியாவில் சாதீய வேறுபாடுகள் நீங்குவதால் இந்து மதமும் மேகம் நீங்கிய வானில் சூரியன் தன் கிரணங்களை அனைவரும் மீது ம் பாய்ச்சுவது போல உண்மை ஆன்மீகத்தை எல்லோர் மீதும் பொழிகிறது.
    இனியும் இந்து மதத்தின் தலையில் சாதீய சுமையைக் கட்ட முடியாது.

    இந்து மதத்தின் தலைமைப் பொறுப்புக்களுக்கு எல்லா சமுதாயத்தினரும் வரலாம், வர வேண்டும்.

    பிராமணர் என சொல்லப் படும் சமுதாயத்தை சேர்ந்த சகோதர்கள் பலருடன் நான் பேசிய வகையில் அவர்கள் துடிப்பாகவும் ஸ்மார்ட்டாகவு உள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இல்லை. அதிக ஈடுபாடு என்ன, கொஞ்சம் கூட ஈடு பாடு இல்லை. எல்லோரும் நிறைய சம்பாதித்து காரு, பங்களா என வாழ வேண்டும் என்றே விரும்புகின்றனர். காவியைக் கட்டிக் கொண்டு துறவில் ஈடுபடுவார்களா என்பதை அவர்களிடம் கேட்டால் சிரிப்பார்கள்.

    நூறு வருடத்துக்கு முன் நிலை அப்படி இருந்திருக்காது. காலம் மாறுகிறது.

    நீங்கள் உங்கள் விருப்பம் போல கிடைக்கிற சீடர்களை மடாதிபதிகளாக வைத்துக் கொள்ளுங்கள்.

    பணம் வேண்டாம், காசு வேண்டாம், அது என்னைக் காக்காது , உங்களையும் காக்காது, அழியக் கூடிய எதுவும் உங்களிக் காக்க இயலாது என்கிற உண்மையை மக்கள அனைவரிடமும் சுற்றுச் சுழன்று பரப்பிய சங்கராச்சாரியாரைப் போன்றவர்களை, நாங்கள் எல்லா மக்களிடம் இருந்தும் உருவாக்குவோம்.

    பட்டம், பதவி, செல்வாக்கு, அதிகாரம், கட்டிடங்கள், காசு, பணம் எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.

    உண்மை – அது ஒன்று மட்டும் எங்களுக்குப் போதுமானது.

  51. தலித்தை சங்கராச்சாரியார் ஆக்கலாம். சங்கராச்சாரியாரை திராவிடக் கழகத்தின் தலைவராகலாம்! .

    பெரியார், மணியம்மை, வீரமணி …மூன்றாவது தலைமுறையிலேயே
    தன்னை நிரந்தரத் தலைவராக பெரியாரின் சொத்து சம்பந்தப்பட்ட அமைப்புக்களுக்கு நியமித்துக் கொண்டார் வீரமணி.எப்போது துவங்கப்பட்டது என்றி அறியமுடியாத இந்துமத அமைப்புக்களுக்கு
    யாரை தலைமைப்பீடத்தில் வைக்க வீண்டும் என்பதற்கு எந்த பாரம்பரியமும் தேவை இல்லையா ?

  52. //மண்டன் மிச்ரரும் சுரேஸ்வரரும் ஒருவரல்ல என்றும் ஆய்வுள்ளது-
    -மலர்மன்னன்//
    மேலே உள்ளதுதான் நான் சொன்னது. இருவரும் வேறு வேறு என்று அறுதியிட்டுக் கூறவில்லை.. மேலும் நமது மகான்களின் வரலாறு ஆவணமாக சமகாலங்களில் பதிவாகவில்லை. என்ன செய்வது, அதனால் பெரும்பாலானவை இருப்பும் கற்பிதமும் பின்னிப் பிணைந்த கதைகளாகத்தான் வழங்கி அவ்வாறே பதிவும் செய்யப்படுகின்றன.

    சென்னை மயிலையில் சமஸ்க்ருதக் கல்லூரி வளாகத்திலேயே
    எஸ். குப்புஸ்வமி சாஸ்த்ரி நினைவு நூல்கம் என்ற பெயரில் ஒரு அரிய நூலகம் உள்ளது. என் தந்தையார்கூடச் சில காலம் அதன் நூலகராக சேவை செய்தார்.

    ஸ்ரீ எஸ்.குப்புஸ்வாமி சாஸ்த்ரி அவர்கள் மொழி வல்லுனர் மட்டுமல்ல, நமது சமயத் தத்துவங்களை நன்கு அறிந்த மேதையும் ஆவார். இவர் மண்டன் மிச்ரர் இயற்றிய தலையாய நூலான ப்ரும்மஸித்தி என்ற நூலை சங்கபாணி விளக்கவுரையுடன் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டார்.
    இத்ந நூல் பின்னர் தில்லி ஸ்ரீ ஸத் குரு பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பளர்களால் 1984-ல் மீள் பதிப்பாக வெளிவந்தது..
    இந்த நூலில் ஆதி சங்கரரும் மண்டன மிச்ரரும் சம காலத்தவராக இருப்பினும் அவரும் சுரேஸ்வரரும் வெவ்வேறானவர்களாக இருக்கக் கூடுமோ என எண்ண வேண்டியுள்ளது என்று ஸ்ரீ எஸ். குப்புஸ்வாமி சாஸ்த்ரி அவர்கள் குறிப்பிட்டுள்ளர்கள்.

    “It is not likely that Mandana Miśra, the author of Brahmasiddhi, is identical with Sureśvara, but the tradition is correct in describing Mandana Miśra and Śankara as contemporaries. Mandana Miśra is both a title and a first name, which is a possible cause for a confusion of personalities. Mandana Miśra’s brand of Advaita differs in certain critical details from that of Śankara, whereas Sureśvara’s thought is very faithful to that of Śankara”

    அறிஞர் குப்புஸ்வாமி சாஸ்த்ரியார் மேற்கண்டவாறு கூறுகிறார்.

    ”ப்ரம்ம ஸித்தியை இயற்றிய மண்டன மிச்ரரை ஸுரேஸ்வரருடன் அடையாளப்படுத்துவது சாத்தியமாக இல்லை. மண்டன மிச்ரர் என்ற பெயர் ஒரே சமயம் பட்டப் பெயராகவும் முதல் பெயராகவும் இருப்பதால் இரு ஆளுமைகள் குறித்துக் குழப்பம் ஏற்பட வாய்புள்ளது. மண்டன மிச்ரர் எடுத்துரைக்கும் அத்வைதம் சில முக்கியமான அம்சங்களில் சங்கரரின் கோட்பாட்டுடன் வேறுபடுகிறது. அதே சமயம் ஸுரேஸ்வரரின்
    எண்ண ஓட்டம் சங்கரரின் கோட்பாட்டையே மிகவும் விசுவாசத் துடன் பின்பற்றுகிறது” என்கிறார், சாஸ்த்ரியார்.

    ஸ்ரீ ச்ருங்கேரி மட குரு வம்ச காவ்யத்திலும் மண்டன மிச்ரரும் ஸுரேஸ்வரரும் ஒருவரல்ல என்பதற்கான சான்று உள்ளதாகக் கேள்விப்படிருக்கிறேன்.
    .
    நான் அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்
    என்பதற்காகவே இங்கு என் பதிவுகளை முன்வைக்கிறேன். வலுவான ஆதாரம் இன்றி எதையும் எழுதுவதில்லை. வாதப் பிரதிவாதங்களில் ஆக்ரோஷமாக இற்ங்குவதில் எனக்கு ஈடுபாடு இல்லை..

    நிற்க, அன்புள்ள ஸ்ரீ ராமா, உங்களுக்கு நன்றி. மேலும் எனது பணியில் நீங்கள் காட்டிய ஆர்வத்திற்கு என்றும் நன்றியுள்ளவனா யிருப்பேன்.
    -மலர்மன்னன்

  53. இன்றைக்கு நமக்கு.. நம் இந்து தர்மத்தின் அனைத்துப்பிரிவினரையும் இணைப்பதற்கு ஒரு சிறந்த மடம் வேண்டும். சாக்தராயினும் வைணவராயினும் சைவராயினும் ஸ்மார்த்தராயினும் வடநாட்டாராயினும் தென்னாட்டாராயினும் மடத்தை ஓரளவேனும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    பாரம்பரியம் மிக்கதாக விளங்கக் கூடிய அந்தத் திருமடம் இந்துக்கள் ஒருங்கிணைவதற்கும் ஒன்று சேர்வதற்கும் வழி செய்வதாக அமைதல் வேண்டும்.

    அவரவர்க்குச் சிறப்பாகத் தனிமடங்களும் ஆஸ்ரமங்களும் இருப்பினும் இந்துக்கள் அனைவரும் இணையவல்ல பொதுமடமாக அது திகழ வேண்டும்.
    இந்த எண்ணக்கருவிற்கு ஓரளவேனும் பொருத்தமாக இருப்பது சர்வக்ஞபீடமாகிய காஞ்சி சங்கரமடமே ஆகும்.

    அது அந்த நிலையை ஜகத்குரு சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் காலத்திலேயே பெற்றுக் கொண்டது என்ற கருத்திருக்கிற போதிலும்.. இன்றைக்கு அதுவே உலக இந்துக்கள் ஒன்றுபடுவதற்கு உரிய ஒழுங்கமைப்பை ஓரளவேனும் பெற்றிருக்கிறது.

    ஆக, வருங்காலத்தில் ஜகத்குரு சங்கர விஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளின் காலத்தில் அந்தத் திருமடம் புத்துணர்வோடு எழுச்சி பெறுமாயின் அது உலக இந்துக்களின் உன்னத நிலையமாவதற்கு வாய்ப்பாயிருக்கும். அத்தோடு உலக இந்துக்களின் ஒருங்கிணைவிற்கும் உயர்விற்கு எழுச்சிக்கும் வழிகோலும்.

    உதாரணமாக உலகில் எவ்விடத்திலேனும் கிறிஸ்துவ சமயிகளுக்கு.. அல்லது வழிபாட்டிடங்களுக்கு சிக்கல்.. இடர்ப்பாடு வருகிற போது.. அதற்கு எதிராக ஒட்டு மொத்தக் கிறிஸ்துவரின் குரலாக ஒலிக்க வல்ல வத்திக்கான் இருப்பது போல ஒரு பீடம் எமக்கு வேண்டும் என்ற கருத்தை எவரும் மறுதலிக்கக் கூடாது. நீண்ட போர் நடந்த இலங்கையிலிருந்து நான் கண்டடைந்த முக்கிய எண்ணக்கருவில் இது ஒன்று.

    எனினும், இச்சங்கர மடத்தில் தலைமைப்பதவி பெறுகிறவர் (ஆச்சார்யார் ஆகிறவர்) வேத உபநிஷத அறிவு நிறைந்தவராயிருக்க வேண்டியது அவசியம். கடந்த காலத்தில் இவ்வறிவு (பிற மத ஊடுருவலாலும் நாட்டின் குழப்ப நிலையாலும்) பிராம்மணர்களிடத்திலேயே தங்கி விட்டது. அதனால் அங்கே பீடாதிபதியாகிறவரும் இச்சமூகத்தைச் சேர்ந்தவராயிருப்பது வழக்கமாகி விட்டது.. ஆனால் அதுவே தொடரும் என்று எதிர்பார்க்க இயலாதது.

    ஆனால் இன்னொன்று சங்கராச்சார்யாரை யார் சொல்வது பிராமணர் என்று? ஒருவர் பூணூலையும் கழற்றி விட்டு சந்நியாச தர்மத்தை ஏற்றுக் கொண்டு விட்டால் அவர் ஜாதி தர்மங்களைக் கடந்தவராகி விடுவார். அவர் பிறகு எந்த ஜாதியும் கிடையாது. அப்படி அவர் பின்னரும் ஜாதியைப் பிடித்துக் கொண்டிருந்திருந்தால் அவர் நல்ல துறவியே அல்ல…

    ஆனால், அதற்காக ஏதோ அரசியல்வாதிகள் போல வெட்டொன்று துண்டிரண்டு என்று பாரம்பரிய மடத்தில் புரட்சிகள் செய்து கட்டாயம் தலித் ஒருவரையே அடுத்த சங்கராச்சார்யார் ஆக்கி விடுவது என்று தொடங்கினால் அது சிக்கலில் போயே முடியும்.

    ஆனால் ஒன்று சங்கரமடத்தில் தற்போது தினமும் சமபந்திப் போஜனம் நடக்கிற செய்தியையும் அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவே சிறப்பான முக்கியமான விடயம் அல்லவா?

    நான் நம்புவது இதைத் தான். இந்துக்கள் இறைநம்பிக்கை உள்ளவர்கள் என்பதால்.. இந்தத் திருமடத்தை இன்னும் வாழ வைக்கிற காஞ்சி நகர் மாதா ஸ்ரீ காமாட்சி, ஆதிசங்கர பகவத்பாதர் இவர்களின் அருளோடு எது நடக்க வேண்டுமோ.. அது உரிய வேளையில் உரிய வகையில் நிகழும்.

    மாந் தளிர் மேனியார் மாமலர் விழியினார்
    தீந்திருமறை வாயினார் திருத்தண்டக் கரத்தினார்
    காந்தமாக் குரலினார் காவித் திருவுடையினார்
    வேந்தரும் வணங்கு கச்சிவிஜயேந்திரரை வணங்கினனே

    சில மாதங்களுக்கு முன் காஞ்சியிலே ஆச்சார்ய தரிசனம் செய்த பாக்கியம் பெற்றவன் என்ற வகையில் நான் ஜகத்குரு சங்கர விஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆளுகையில் பூரண நம்பிக்கையுடையவனாயிருக்கிறேன். பாலபெரியவரின் சீரான நெறியாள்கையில்.. அம்பாளுடைய அனுக்கிரகத்தாலும் பகவத்பாதர் கிருபையாலும் நல்லது நடக்கும் என நம்புவோம்.

    அன்புடன்..
    தி.மயூரகிரி சர்மா (யாழ்ப்பாணம்)

  54. Mr Tiruchikaran seems to miss the points made by Shri Malarmannan ji. Please go through his response again. I earnestly request you, sir.
    By the way, why all this fuss in particular over the head of this Madam which is essentially a private organization? Why not the same energy be used to get rid of all these reservations and quotas for various castes and creeds in Universities and jobs? Why not make it a level playing field for everyone? Offer all financial incentives to ALL ECONOMICALLY backward people, whether they are Dalits or Brahmins.

  55. அன்புள்ள திருச்சிக்காரரே,

    உங்கள் கருத்து மிக தெளிவானது.

    “இனியும் இந்து மதத்தின் தலையில் சாதீய சுமையைக் கட்ட முடியாது.” என்ற வரிகள் பொன் போன்றவை.

    ஆனால், இந்த அரசியல் வாதிகள் சாதிகள் அற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க எல்லா தடைகளையும் பல காலமாக ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இப்போதைய காங்கிரசு ஒரு தேசவிரோத கட்சி ஆகும். மாநிலங்களிலும் இருக்கும் சிறு சிறு கட்சிகளும், சாதிமுறையை வைத்தே பிழைப்பை நடத்துகின்றன. சாதி அமைப்பு ஒழிந்து, ஒரு புதிய சமுதாயம் உருவாவது நல்லது. ஆனால் சாதியடிப்படையில் பிரித்து சண்டைகளை மூட்டி , வெள்ளையன் செய்த சூழ்ச்சிகளையே இன்றைய அரசியல் வாதிகள் செய்கின்றனர்.

    நல்லது நடக்க வேண்டும் என்று நீங்கள் நம்புவது புரிகிறது. ஆனால், காலம் தான் பதில் சொல்ல வேண்டும். மத மாற்ற வியாபாரிகளும் இந்து மதத்தில் ஏற்படும் பல நல்ல சீர்திருத்தங்களை விரும்பமாட்டார்கள். வெளிநாட்டு பணத்தில் அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் தடைப்பட்டு விடும். இவை அத்தனையும் மீறி , இந்தியாவில் ஒரு புரட்சி , அமைதியாக ஏற்படவேண்டும்.

  56. // ஸ்ரீ சங்கராச்சரியார் பெயரில் அமைந்த மடங்கள் அவராலேயே நிறுவப்பட்டு அத்வைத கோட்பாடுகளைப் பரப்புவத்ற்கான சம்பிரதாயங்களும் அவராலேயே விதிக்கப்பட்டுக் காலங் காலமாகத் தொடர்ந்து வருபவை (அங்கு உருவ வழிபாடு நடப்பதற்கும் ஒரு காரணம் உண்டு). ஒரு நடைமுறையானது ஒரு தலைமுறை அனுசரிக்கப்பட்டாலே கன்வென்ஷன் ஆகிவிடுகிறது. சட்டங்களும் அதை மதித்து ஏற்பது வழக்கம். சங்கர மடங்கள் அரசியல் கட்சிகளாக இருந்தால் அவற்றுகு ஒரு தலித்தைத் தலைவராக்க வேண்டும் எனலாம். ஆனால் அவை அவ்வாறனவை அல்லவே! // என்று மலர்மன்னன் எழுதுகிறார். காலம் காலமாக தொடர்ந்து வருவதால் மட்டுமே எதையும் மாற்றக் கூடாதா? ஆங்கிலேயர் ஆட்சி கூடத்தான் பல தலைமுறைகளாக இருந்தது, அதனால் அதை மாற்றப் போராடக் கூடாது என்று மலர்மன்னனின் ஆதர்சங்களில் ஒருவரான சவர்க்கார் நினைத்திருந்தால்? மதமாற்றப் பிரச்சாரம் கூடத்தான் காலம் காலமாக நடந்து வருகிறது! ஒரு பழக்கத்தை, சம்பிரதாயத்தை மாற்றுவது நன்மை தருமா தராதா என்றுதான் பார்க்க வேண்டும். காலம் காலமாகத் தொடர்வது என்ற வாதம் சரியல்ல. உண்மையில் அது வாதமே இல்லை. மலர்மன்னன் போன்ற மூத்த சிந்தனையாளர்களே இப்படி எழுதுவது வியப்பளிக்கிறது. சம்பிரதாயத்தை மாற்றுவது ப்ராக்டிகலாக கஷ்டம் என்றால் புரிந்து கொள்ளலாம், காலம் காலமாக வரும் சம்பிரதாயத்தை மாற்றக் கூடாது என்றல்லவோ பொருள் வருகிறது?

    // அது மாதிரி பிராமணப் பிறவியாய் யோக்கியதாம்சங்களுடன் ஒருவர் வரட்டுமே பிறகுதானே பேச்சு? இப்போது ஹைப்பாதெடிகலாக விவாதித்து என்ன பயன்? பிராமணப் பிறப்பாகவே இருந்தாலும் கடுமையான அனுஷ்டானங்கள் விதித்து, ஞானத்தைப் புகட்டி எதிர் காலத்தில் பீடத்தில் அமர்வதற்கான யோக்கியதாம்சங்களை உண்டுபண்ணிய பிறகுதான் அங்கீகாரம் கிட்டும். ஸ்ரீ விஜயேந்திரர் மஹாஸ்வாமிகளால் எப்படியெல்லாம் கடைந்தெடுக்கப்பட்டார் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். ஐயோ பாவமே, பால்மணம் மாறாச் சிறுவனை இப்படியெல்லாம் மஹாஸ்வாமி படுத்தி எடுக்கிறாரே என்று மனம் கசிந்திருக்கிறேன். அதற்கெல்லாம் தாக்குப் பிடிக்க ஒருசிலரால்தான் ஆகும்!. // என்று மலர்மன்னன் மேலும் எழுதுகிறார். விஜயேந்திரர் பிரமாணப் பிறப்பு என்று தேர்ந்தேடுக்கப்பட்டாரா இல்லை பிராமணப் பிறவி என்றா? அவரைப் “படுத்து எடுத்து” ஒரு பிராமணப் பிறவியாக மாற்ற முடியும் என்றால் வேறு அபிராமணப் பிறப்புகளை அப்படி பிராமணப் பிறவியாக மாற்ற முடியாதா? ஏன்? என்ன சார் இப்படி சப்பைக்கட்டு கட்டுகிறீர்கள்?

    ஆலந்தூர் மள்ளனின் நியாயமான கேள்விக்கு மலர்மன்னன் இப்படி பதிலல்கிக்கிறார். // எம்மவர் என்று ஏன் பிரித்துப் பேசுகிறீர்கள்? ஏன் இருக்கமாட்டார்கள்? கவலையே படாதீர்கள், அப்படி இருந்தால் விதை மண்ணைப் பிளந்து வருகிற மாதிரி தானாகவே வெளிப்பட்டு வந்துவிடுவார்கள். // விஜயேந்திரரும் அப்படி மண்ணைப் பிளந்து வந்து வித்துதானா? இல்லை சந்திரசேகரர் “படுத்தி எடுத்து” தயார் செய்தாரா? அது என்ன சார் ஆயிரம் வருஷத்துக்கு முற்பட்ட மடம் என்கிறார்கள், அதுவும் ஐந்து மடம், இத்தனை வருஷங்களில், இத்தனை மடங்களில், தலித்களிடமிருந்து, அபிராமனர்களிடமிருந்து ஒரு வித்து கூட வரக் காணோமே, எல்லாருமே பிராமணப் பிறப்பிலிருந்துதான் மண்ணைப் பிளந்து வருகிறார்கள்!

    அம்பேத்காரின் hypothetical கேள்வி தலித்களின் சமூக அங்கீகாரத்துக்காக. இது நடக்கப் போவதில்லை என்பதை அவரும் நன்றகாவே உணர்ந்திருப்பார். அவர் மறைந்து 50 வருஷம் ஆன பிறகும் தெஒரெதிகல் ஆகக் கூட இதை ஏற்க நாம் தயாராக இல்லை, மண்ணைப் பிளந்து வருவார்கள், காலம் காலமாக வருகிறது என்று பேசுகிறோம்!

  57. சிரிங்கேரி மடத்தின் பீடாதிபதியாக சங்கராச்சாரியாரால் நியமிக்கப் பட்ட சுரேஸ்வாச்சாரியார் என்பவர் பூர்வாஸ்ரமத்தில் மண்டன மிஸ்ரராக இருந்தார் என்பதை சிரிங்கேரி மடத்தின் இணைய தளம் தெரிவிக்கிறது.

    Mandana Mishra gave all his earthly belongings to the needy at the last Vedic ritual which he performed before he took sanyasa at the hands of Sri Jagadguru Shankara Bhagavatpada.

    Sri Bhagavatpada gave his disciple the name of Sri Sureshwaracharya. He took him on his march from place to place. Soon Sri Bhagavatpada reached Sringeri where he invoked the presence of Goddess of Knowledge. He installed Sri Sureshwaracharya as head of the Mutt.//

    https://www.sringeri.net/jagadgurus/sri-sureshwaracharya

    இதைமுன்பே சொல்லி இருக்கிறோம். உண்மை என்ன என்று சொல்லுகிறோம்.

    முன்பு கிரஹச்தராக இருந்து சன்யாசம் வாங்கிக் கொண்டவர் சங்கராச்சாரியார் நியமித்த பீடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்ததை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் தான், இவர் வேறு அவர் வேறு ஆகத்தான் இருக்க முடியும் என்பதாக ஆக்க ” ஆராய்ச்சி” செய்கின்றனர். சுட்ட மண் ஒட்டாது. சன்யாசம் என்பதும், முமுக்ஷத்துவம் பெற வேண்டும் என்ற எண்ணமும், பிறகு ஞானம் அடைவது என்ற நிலையும் இவை எல்லாம் state of mind தான். அதற்க்கு முன் எப்படி வாழ்ந்தார்கள் என்பது immaterial . ஞானம் எல்லாவற்றையும் மாற்றுகிறது.

  58. அன்புக்குரிய திரு. சிவசுப்பிரமணியன் அவர்களே,

    அரசியல் வாதிகள் பற்றி நாம் அறிந்ததே . அவர்களை விட்டு விடுவோம்.

    மக்களின் மனதில் ஆன்மீகத்தால் மாற்றம் ஏற்படுத்த முடியும் என உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா, புத்தர், சங்கரர, விவேகானந்தர் ஆகியோர் எந்த அரசியல்வாதியையும் நம்பி இருக்கவில்லை, அவர்களைப் பற்றி கவலைப் படவும் இல்லை. ஆன்மீக வாதி மனிதர்களின் மனங்களோடு பேசி அவர்களுக்கு தெளிவை உண்டு பண்ணுகிறான்.

    மத வெறிக் கொள்கைகளை இந்தியாவில் பிரச்சாரம் செய்வோரின் முக்கிய பிராரத்தனை, இந்திய சமூகத்தில் சாதி வேறுபாடுகள் போகக் கூடாது என்பதுதான். அய்யய்யோ, இவங்க ஜாதி வேறுபாட் போச்சுன்னா நாம எதை வச்சு இந்து மதத்தை திட்டுவது, மதம் மாற்றுவது என்பது அவர்களின் மிகப் பெரிய கவலை. இந்து மதம் சாதிகள் இல்லாமல் பின்பற்றப் படும் என்பது அவர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனம்.

    நாம் சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்று சொல்கிறோம் என்றால் அதற்க்கு காரணம் யாருக்கும் அநீதி கூடாது என்பதற்க்காக , அப்பாவி மக்கள பிறவி அடிப்படையில் நசுக்கப் படுவது கூடாது என்பதற்காக .

    பிறவி அடிப்படையில் வேறுபாடு வர்ணம் அமைவதாக இந்து மத ஸ்ருதிகளில் எதிலாவது காட்ட முடியுமா?

    குணம், தொழில் மற்றும் செயலை செய்யும் விதம் இதனால் தான் வேறுபாடு உண்டாகிறது என்று பகவத் கீதையிலே தெளிவாக இருக்கிறது.

    Bagavath Geetha (Ch: 4, VERSE- 13)

    //சதுர் வர்ணாம் மயா ஸ்ருஷ்டம் குணா கர்ம விபாகச

    தஸ்ய கர்தாரமாபி மாம் வித்யகர்த்தார மவ்யம்!//

  59. எல்லோரையும் வழி நடத்தி செல்லக் கூடிய ஒருவர் இந்து மதத்திற்கு கிடைத்தால் நல்லதுதான்.

    சங்கராச்சாரியாரை துவைத, விஷிடாதுவதிகள் தத்துவ அடிப்படையில் எதிர்க்கின்றனர்.

    சுவாமி விவேகானந்தர் இந்துக்களை புத்துணர்ச்சி பெற செய்தவர், அவரை பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனாலும் அவர் மத நல்லிணக்க வாதியாக இருப்பதாலே, மிகச் சிலர் அவரை விரும்புவதில்லை.

    இந்துக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு ஆன்மிக வாதி யாரும் இப்போது இல்லை. சங்கரர், இராமானுஜர், விவேகானந்தர் போன்ற ஆன்மீக வாதி இப்போது இல்லை.

    தமிழ் நாட்டில் இருப்பவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் எந்த மடத்துக்கும் போவது இல்லை. ஆனால் அவரவர் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுகின்றனர். பங்குனி உத்திரம் அன்று அவர்கள் கிராமத்திலேயே அலகு குத்தி நேர்த்திக் கடன் செய்கிறார்கள். அம்மன் வழிபாடு, திரு விழாக்கள் இவை எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    இந்து மதத்திற்கு தலைமை தாங்கி நடத்துவது அப்புறம் இருக்கட்டும்.இந்து மதத்திற்கு உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்.

    உபநிடத நூல்கள் எல்லாம் சம்ஸ்கிரித மூலம், தமிழ் பதவுரையோடு கிடைக்கின்றனர், சென்னை எக்மோர் ரயில் நிலைய ஸ்டாலில் கூட கிடைக்கிறது.

    தகுதியுள்ள ஆன்மீக வாதியும், மடமும் அமைந்தால் தான் இந்துக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

  60. அன்புள ஸ்ரீ ஆர்.வி.,
    எதையுமே மாற்ற முடியாது என்று நான் சொன்னதாக நீங்களாகவே ஏன் கற்பிதம் செய்துகொள்கிறீர்கள்? உங்கள் கேள்விகள் அனைத்திற்குமே எனது
    கருத்துப் பகிர்வுகளில் விடை உள்ளது. என்றாலும் சுருக்கமாகத் திரும்ப
    நினைவூட்டுகிறேன்:

    1. சில நிரந்தர வழிகாட்டு நெறிகள் உள்ளன். சில கன்வென்ஷன்கள் உள்ளன்.
    கால தேச வர்த்தமானக்களுக்கு ஏற்ப மாற்றத் தக்க விதி முறைகளும் உள்ளன. இவற்றில் எவையவை நிரந்தர வழிகாட்டு நெறிகள், எவையெவை கன்வெஷன்கள், எபையெவை காலத்திற்கு ஏற்ப மாற்ரத் தக்க விதிகள் என்று தனி ஸ்தாபனங்களான சங்கர மடங்கள்தாம் அவர்களாக முடிவு செய்ய வேண்டும். நாம் யோசனை சொல்லலாம், கோரிக்கை வைக்கலாம்,
    நிர்பந்திக்க முடியாது.
    2. பரமாசாரியா பீடாதிபதியாகத் தமது நிலை தொடர்பாக என்னிடம் கூறியவற்றை இங்கேயே பதிவுசெய்துள்ளேன். படித்துப் பார்த்தால் ஏன் ஸ்ரீ விஜயேந்திரர் தேர்வு என்பதற்கு விடை கிடைக்கும்.

    3. மண்ணைப் பிளந்துகொண்டு ஏன் வரவில்லை? டாக்டர் அம்பேத்கரே அப்படி வந்து அரசியல் சாசன அமைப்புக் குழுவின் தலைவராகவே ஆனவர்தாம். ஸுவாமி சகஜானந்தர் மண்ணைக் கீறி வெளிப்படவர்தாம்.
    அயோத்திதாசர் அப்படி வந்து ஒரு கலக்கு கலக்கியவர்தாம். இவர்கள் அனைவரும் இட ஒதுக்கீடு என எதுவும் இல்லாதபோதே மண்ணைக் கீறிக் கொண்டு வெளிப்பட்ட விருட்சங்கள்தாம். ஆன்மிகம் சமூகம் அரசியல் இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் இவ்வாறு மண்ணைக் கீறி வெளிப்பட்ட சமீப கால தலித்துகள் நிறைய உண்டு.
    4. நீங்கள் நகராட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டுக் கட்டிய வீட்டை மாற்றிக் கட்ட நான் யோசனை சொல்லலாம். ஏற்பதும் த்ள்ளுவதும் உங்கள் உரிமை. இப்படித்தான் கட்ட வேண்டும் என்று கட்டாயப் படுத்த எனக்கு அதிகாரம் இல்லை.
    -மலர்மன்ன்ன

  61. மன்னிக்க வேண்டும் மலர்மன்னன், உங்கள் வாதங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன.

    1. முதல் மறுமொழியில் இவை ஆதி சங்கரரே நிறுவிய சம்பிரதாயங்கள், காலம் காலமாக வருவதை மாற்ற முடியாது, அப்படி மாற்ற சங்கர மடங்கள் அரசியல் கட்சிகள் இல்லையே என்றுதான் உங்கள் நிலையை எழுதி இருக்கிறீர்கள். உங்கள் முதல் மறுமொழி உங்கள் எண்ணமே சம்பிரதாயத்தை மாற்றுவதற்கில்லை என்றுதான் பொருள்படுகிறது.

    2. சந்திரசேகரரின் நிலை வேறு, உங்கள் நிலை வேறு. அவர் சம்பிரதாயத்தை மாற்ற நான் யார் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். ஆனால் நீங்கள்தான் மண்ணைப் பிளந்து வித்து வரும், அது சம்பிரதாயமான வித்தாக, பிராமண வித்தாக இருக்க வேண்டியதில்லை என்றெல்லாம் எழுதி இருக்கிறீர்கள். (ஆனால் முதல் மறுமொழியில் காலம் காலமாக வரும் பழக்கம் என்கிறீர்கள்) எது உங்கள் நிலை என்று நீங்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும். சங்கர மடத்தின் நிலை எது என்று சொல்லக்கூடியவர்கள் அந்தந்த பீடாதிபதிகளே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    3. ஆலந்தூர் மள்ளனும் சரி, நானும் சரி, பிராமணப் பிறப்பு இத்யாதியை மடாதிபதி என்ற context -இல் மட்டுமே பயன்படுத்தி இருக்கிறோம். ஆலந்தூர் மள்ளன் // //அதற்கெல்லாம் தாக்குப் பிடிக்க ஒருசிலரால்தான் ஆகும்!// என்று நீங்கள் விஜயேந்திரர் பற்றி எழுதியதைத்தான் மேற்கோள் காட்டுகிறார். அவர் சங்கர மடாதிபதியாக அபிராமனர்கள், தலித்கள் பதவி ஏற்பதைப் பற்றித்தான் // ஆஹா! அத்தகைய தாக்குப் பிடிக்கும் சக்தி எம்மவ்ரிலும் இருக்கலாம் அல்லவா? ஜெயேந்திரர் விஜயேந்திரர் ஆகியோர் போல அல்லது அவரினும் மேம்பட்ட ஆன்மாக்கள் தலித் சமுதாயங்களிலும் இருக்கலாம் அல்லவா? அதை அறிய என்ன வழி? சாதியை உடைத்து ஆன்மாவை காண்பதே அல்லவா? அதை ஏன் ஜகத்குரு பரமாச்சாரிய ஸ்வாமிகள் செய்யவில்லை என நீங்கள் தங்கள் பாத யாத்திரையின் போது கேட்டீர்களா? அதற்கு நடமாடும் தெய்வம் சொல்லிய பதில்தான் என்ன? // நீங்கள் அவருக்கு மண்ணைப் பிளந்து வித்து வரும் என்று பதில் அளித்துவிட்டு இப்போது அந்த வித்து சங்கர மடத்தைப் பற்றி இல்லை, அம்பேத்காரும் அயோத்திதாசரும் அப்படிப்பட்ட வித்துக்களே என்கிறீர்கள். அவர்கள் எந்த சங்கர மடத்தின் பீடாதிபதி பதவியை வகித்தார்கள்?

    உங்கள் எண்ணம் என்ன சார்? அம்பேத்கார் சொல்லி இருப்பது சட்டப்படி செல்லுமா, சங்கர மடத்தை நிர்ப்பந்தப்படுத்த முடியுமா என்பது என் கேள்வி இல்லை. இப்படி நடப்பது, சம்பிரதாயத்தை உடைப்பது, நல்ல விஷயம் என்று நினைக்கிறீர்களா இல்லையா? சங்கர மடத்தின் பீடாதிபதிகள் பிராமணப் பிறப்புகளாக இருக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறீர்களா இல்லையா? எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் அவரைப் “படுத்தி எடுத்து” பீடாதிபதி பதவிக்கு தயார் செய்ய முடியுமா, இல்லை பிராமணப் பிறப்புகலால்தான் தாக்குப் பிடிக்க முடியுமா?

  62. Sankara math is a PRIVATE,I repeat,a PRIVATE organizations. The head of the math is following age old tradition. Nothing to do with any discrimination here.
    Hypothetically, if Ambedkar had started his own PRIVATE Madam and appointed a dalit as it’s head and further made a rule that only Dalit can be the head of his Madam, the whole nation,more than likely, would have applauded him. The nation had been conditioned to feel this way, thanks to years of indoctrination by the Abhramic faith Christianity on the general populace.
    Mr Tiruchikaran and Co are free to start their own private madams and set rules and regulations as per their wish. Nobody is stopping them.
    By the way, where is the rage against this special quota systems for various casts and creeds in all walks of life specifically affecting poor Brahmins? Why isn’t angry voices raised against this blatant discrimination against Brahmins? What present day Brahmins got to do with past misdeeds?( as if Brahmins were the only people who were responsible for the past ills of Hinduism) Why don’t you all,the noble,enraged souls against discrimination, start addressing this gross violation of human rights of fellow Indians, which is affecting their livelihood rather than going on ad infinitum about this holy Math? Once you are able to get this discrimination and injustice sorted out against Brahmins, then we all can come back to this non issue.

  63. //மண்டன மிச்ரர் எடுத்துரைக்கும் அத்வைதம் சில முக்கியமான அம்சங்களில் சங்கரரின் கோட்பாட்டுடன் வேறுபடுகிறது. அதே சமயம் ஸுரேஸ்வரரின்
    எண்ண ஓட்டம் சங்கரரின் கோட்பாட்டையே மிகவும் விசுவாசத் துடன் பின்பற்றுகிறது” //

    மண்டன மிஸ்ரர் வேதாந்த அடிப்படையிலான அத்வைதத்தை புறந்தள்ளி, கர்ம ரீதியான மீமாம்ச கோட்பாட்டை விரும்பிப் பின்பற்றினார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே.

    மண்டன மிஸ்ரர் அத்வைதத்தை சரியாகப் உணர்ந்து கொள்ளவில்லை என்பது தெரிந்ததுதானே. அதை உணர்ந்து கொண்டு இருந்தால் அவர் எதற்கு சங்கராச்சாரியாருடன் வாதிட வேண்டும்.

    எப்போது அவர் ஜகத் மாயை என்பதை உணர்ந்து கொண்டாரோ அப்போதே அவர் சங்கராச்சாரியாரின் சீடர் ஆகி சுரேஸ்வரர் ஆகி விட்டார். மண்டன மிசரரின் இயற் பெயர் கங்காதீஸ்வரர் என சொல்லப் படுகிறது.

  64. Respected Rama,

    //Mr Tiruchikaran seems to miss the points made by Shri Malarmannan ji. Please go through his response again. I earnestly request you, sir.//

    I also humbly request you to deliberately read my points and ponder over them.

    People are not ready to obey to dictation.

    They want to be treated at par with others not ready to be treated less even by a thou or micron

    More than that its unfair and unjust to discriminate any one on caste, race, linguistic, color … etc !

    All the people are basically good people, its the circumstances, the friends, the education, the books read by them, opinions heared by them .. these make the psyche of any person. (There may be very few exemption like Dhuriyothana).

    The time is ripe for Hinduism to shed away the caste system put over it, it does so and shining brightly on all.

    You please make clear as what is your priority,
    Do you want the bright, strong, illustrious Hinduism or
    Do you give more importance for traditions?

  65. ஸ்ரீ ஆர். வி.,

    1. தனியார் அமைப்புகள் எனில் அவர்கள் தமது அமைப்புகளுக்கு ஏற்படுத்திக்கொண்ட சம்பிரதாயங்கள்ளை மாற்றப் பிறருக்கு அதிகாரம் இல்லை. வேண்டுகோள் விடுக்கலாம். ஏற்பதும் மறுப்பதும் அவர்கள் விருப்பம். அம்பேத்கர் ஒரு தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்கு என்று சொல்கிறார் என்றால் அது வேண்டுகோள் அல்ல. இருக்கிற சங்கர மடங்களில் ஒன்றுக்கு தலித்தைப் பீடாதிபதியாக்கு என்று அர்த்தம். அவர் வேண்டுகோள்விடுக்கவிலை. ஒரு நபரைக் காட்டி அவரை ஆக்கு என்று சவால் விட்டார். ஒரு பேச்சுக்கு சொல்கிறேன். நீங்கள் ஆரம்பிக்கிற அறக்கட்டளைக்கு நீங்கள்
    விதிக்கும் நோக்கங்கள், செயல்பாடுகள் ஆகியவை இன்றைய நிலைக்குப் பொருந்தாது ஆகவே மாற்றிவிடுங்கள் என்று நான் சொன்னால் ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம். இன்று நாடு முழுவதும் சமய ரீதியான பல அறக் கட்டளைகள் இயங்கி வருவது போலத்தான் எல்லா மடங்களும்.
    அதே நேரம் பொது அமைப்புகளில் காலத்துக்கு ஒவ்வாத நடைமுறைகள்
    இருந்தால் மாற்றக் கோரி வழக்குப் போடலாம், ஏன், போராட்டமே நடத்தலாம். மேலும் ஒன்று சொல்வேன், பழசாகிவிட்டது என்பதாலேயே ஒன்றைப் புறந்தள்ளுவதும்
    புதிது என்பதற்காக ஒன்றை அரவணைப்பதும் புத்திசாலித்தனம் அல்ல.

    2. சாதி அமைப்பு எந்த ரூபத்திலாவது இருந்துகொண்டுதான் இருக்கும். ஸ்ரீ ப்ரவாஹனைக் கேட்டால் விரிவாகச்
    சொல்வார். சாதி அமைப்பு என்று ஒரு ஏற்பாடு இருப்பதால்தான் ந்மது ஹிந்து சமுதாயம் ஒட்டு மொத்தமாக கிறிஸ்தவ மதத்திற்கோ முகமதிய மதத்திற்கோ மாறாமல் தப்பி வருகிறது. ஐரோப்பிய சமுதாயங்களில் சாதி அமைப்பு தெளிவாக இல்லாததால்தான் அவற்றை ஒட்டு மொத்தமாகக் கிறிஸ்தவமாக்கமுடிந்தது.. அதே போல் தென் கிழ்க்கு ஆசிய சமுதாயங்களை முகமதியத்துக்கு மாற்ற முடிந்தது..
    சாதிகளிடையே வேறுபாடு பாராட்டலாகாது, உயர்வு தாழ்வு கருதலாகாது, சாதிகளிடையே பாரபட்சம் காட்டக் கூடாது. இதுதான் சாத்தியமே தவிர சாதியமைப்பை ஒழிக்க முடியாது. கைதட்டல் வேண்டும் என்பதற்காக நானும் கூட்டத்தோடு கூட்டமாக சாதி அமைப்பை ஒழித்தால்தான் ஹிந்து சமயத்துக்கு விமோசனம் என்று சொல்ல முடியாது. மாலைகள் போட்டாலும் கற்களை வீசினாலும் எனக்கு இரண்டும் ஒன்றுதான். இரண்டுக்கும் வித்தியாசமே இல்லை.
    நாராயண குரு இது ஈழவர் சிவன் கோயில் என்று விளக்கம் அளித்தது போல இது தலித் சங்கர மடம் என்று யாராவது தொடங்கினால் அதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.
    3. பிராமணப் பிறப்புகளைக் காட்டிலும் அசாத்தியமான ஞானம் உள்ளவர்கள் ஏராளம் உள்ளனர். ஞானம் பெற பிராமணப் பிறப்பாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதற்கும் நட்ப்பில் உள்ள சங்கர மடங்களில் அவர்கள் ஏற்காத பட்சத்தில் பிராமணர் அல்லாதாரை பீடத்தில் அமர்த்து என்று வம்பு செய்ய மாட்டேன். கோரிக்கை வைக்கலாம் ஏற்பதும் விடுவதும் அவர்கள் உரிமை என்று பல தடவைகள் சொல்லியாகி விட்டது.

    நீங்கள் தனிப்பட்ட முறையில் என்னிடம் வாக்குப் பெறுவது விவாத முறை அல்ல என்றாலும் எனக்கு ஆக வேண்டியது எதுவுமில்லை என்பதால் என் நிலையைத் தெளிவு படுத்திவிட்டேன். அம்பேத்கர் தொடர்பான கட்டுரையில் கருத்துப் பகிர்வுகள் மேற்கொள்ளப்படுகையில் அம்பேத்கரை விட்டுவிட்டு, ‘உங்கள் எண்ணம் என்ன சார்? அம்பேத்கார் சொல்லி இருப்பது சட்டப்படி செல்லுமா, சங்கர மடத்தை நிர்ப்பந்தப்படுத்த முடியுமா என்பது என் கேள்வி இல்லை’ என்று கேட்பது முரையில்லை என்றாலும்!
    கலப்பு மனம் என்ற பெயரில் புதிய சாதிகளை உற்பத்திசெய்வது பிரச்சினைக்குத் தீர்வு அல்ல. அது இரு தனிப்பட்ட ஆடவர் பெண்டிரின் த்னிப்பட்ட விஷயம், சமூக
    நடைமுறையாக அது ஆகாது என்று கூட்டங்களில் பேசி நிறைய சொல்லடி பட்டவன்தான்!
    நேரமும் விருப்பமும் இருந்தால் இரு முறை படிக்கத் தகுதி வாய்ந்தவையாகத் தோன்றினால் எனது பகிர்வுகளை மீண்டும் படியுங்கள். எனது நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை. எனது வாக்கியங்களை முடி பிளக்காமல் வாசித்தால் முரண்பாடு இருக்காது என்றே நம்புகிறேன்.

    இங்கேயே இன்னொரு விஷயத்தையும் அது wiiங்கள் கேட்டது அல்ல எனினும் பதிவு செய்துவிடுகிறேன்:

    சங்கரை ஏற்றுக் கொண்ட பிறகுதான் மண்டன மிச்ரர் ப்ரம்மஸித்தியை இயற்றினார். அத்வைத விளக்கமாகவே அவரது கோணத்தில் அவர் எழுதிய கோட்பாடுதான் அது.
    -மலர்மன்னன்

  66. சங்கராச்சாரியாரை குருவாக ஏற்றுக் கொண்டு உடனே சன்யாசமும் பூண்டு சுரேச்வாசாரியாராகி விடுகிறார்.

    பிறகு மண்ட மிஸ்ரர் என்னும் பூர்வாசிரமப் பேரை அவர் எப்படி உபயோக்கிப்பார்.

    சன்யாசம் பூண்டவுடன் புதிய பிறவி போல, பூர்வாச்ரமம் முடிந்தது

    தம்பி, அண்ணன், மாமா பையன், பெரியப்பா பையன்…. எல்லோரையும் மடத்தில் வைத்துக் கொள்ளும் டைப் சந்நியாசி இல்லையே அவர்.

  67. வெளிப்படையாக சொல்வதானால் இன்றைக்கு நகரங்களில் ஜாதிகளின் தாக்கம் நீர்த்துப் போய் விட்டது.

    இன்றைய தினம் இந்தியாவில் , பிராமணர் என்று அழைக்கப் படும் சமூகத்தினருக்கும் பிறருக்கும் இப்போது என்ன பெரிய வித்யாசம்?

    காலையில் அருகருகே இட்டிலி காபி சாப்பிட்டு அலுவலகம் செல்வது முதல், மாலையில் ரஜினி படம் பார்த்து கை தட்டுவது வரை எந்த வித்யாசமும் இல்லை.

    நான் பிராமணர் என சொல்லப் படும் சமூகத்தை சேர்ந்த இளம் மாணவர்களுடன் பேசும் போது அவர்கள் ஜாதியில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. Caste, we dont think of it, we dont add any importance to that, we are all humans, we are all friends என்கிறார்கள்.

    பிராமண சமூகத்தை சேர்ந்த ஒரு பிரில்லியன்ட் மாணவன் அவர் அறையில் உள்ள புத்தகங்களில் பெரியாரின் புத்தகங்களும் இருந்தன. அவர் பெரியாரை நடுநிலயாக அணுகி சிந்திக்கிறார். இது உண்மை, சில மாதங்களுக்கு முன் நான் அவரிடம் கேட்டு வாங்கி சில புத்தகங்களைப் படித்தேன்.

    தமிழ் நாட்டில் பிராமணர் என சொல்லப் படும் சமூகத்தை சேர்ந்த பெண்கள் தயங்காமல் கலப்பு திருமணம் செய்து கொள்கிறார்கள். இன்னும் காலப் போக்கில் கிராமங்களிலும் ஜாதி வேறுபாடு சிறிது சிறிதாக மறையும்.

    சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள் இந்து மதத்தின் ஆன்மீகத்தை எல்லா பிரிவினருக்கும் தங்கு தடையின்றி பொங்கும் பூம்புனலாக அடைய செய்து விட்டார்.

    சங்கராச்சாரியாரின் நூல்கள எல்லா கடைகளிலும் கிடைக்கின்றன.

    சிரிங்கேரி உள்ளிட்ட மடங்களுக்கு நேரிலே போய் ஆச்சாரியாரை பார்த்தாலும் அதிக நேரம் அவர்களுடன் செலவழிக்க அவர்களுக்கு நேரமில்லை.

    எனவே சங்கராச்சாரியாரே சொன்னது போல பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம் என்று கோட்பாட்டு அடிப்படியிலான வழி பாட்டிலும், அர்த்தம் அனர்த்தம் என்பது போன்ற பகுத்தறிவு சிந்தனையிலும் ஈடுபட்டால் ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கும் – தமிழக ஆச்சாரியார் சிலரை பார்க்கப் போய் கூட்டத்தோடு கூட்டமாக நின்று தூக்கி வீசப் படும் பழத் துண்டுகள் மண்ணில் விழுவதை எடுத்துக் கொண்டு வருவதை விட, அதிக ஆன்மீக முன்னேற்றம் கிடைக்கும்.

    எல்லா சமூகங்களை சார்ந்தவர்களும் பொறியாளராக, மருத்துவராக , ஐ. ஏ. எஸ். அதிகாரியாக வருகிறார்கள். ஐ. ஐ.தி. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற அட்டவணைப் பட்டியல் மாணவர்களில் ஏழு பேர் தங்களைப் பொதுப் பிரிவாக கருதி அட்மிசன் தருமாறு கோரியதாக கேள்விப் பட்டேன்.

    எனவே பிறப்பு அடிப்படியில் தொழில் என்பது இனி ஒரு போது ம் திரும்பி வராது. எல்லோரும் ஒன்று போல இருக்கிறாகள், வேறுபாடு இல்லை என்பதால் பெண்கள் கலப்பு மனம், காதல் மணம் செய்ய தயங்குவதில்லை.

    இந்த நிலையில் இந்து மதத்தை பின்பற்றும் இந்திய சமூகத்தில் ஜாதி அமைப்பை முன்பு போல் நிலை நிறுத்த முயலுவது கனவே.

  68. 01. சங்கர மடங்கள் எப்போது “தனியார்” அமைப்பாக மாறின? ஆதி சங்கரர் ப்ரைவேட் கம்பனியா ஆரம்பித்தார்?

    02. சங்கர மடங்களின் ஆச்சாரியார்கள் தங்களை “லோக குரு” என்று காண்கிறார்கள். அனைவருக்கும் குருவாக. அப்படி இருக்கும்போது ஒரு சமூகத்தினரின் ஆசைகள் நோக்கங்களுக்கு மட்டுமே செயல்படுவது எங்கனம் சரியாகும் ?

    03. இந்தியாவை ஆண்ட துலுக்க, கிறுத்துவ அரசுகளிடம் இருந்து எந்த வித உதவிகளையும் பெறாத [சங்கர பாரம்பரிய] அமைப்புக்களில் சாதி அடிப்படையில் பீடாதிபதி/தலைமைப் பதவி நியமனம் நடைபெறுவதில்லையே. ஏன்?

    .

  69. //…By the way, where is the rage against this special quota systems for various casts and creeds in all walks of life specifically affecting poor Brahmins? ..//

    rama,

    இட ஒதுக்கீடு பற்றி நீங்கள் எழுத பேச விரும்பினால் யாரேனும் அதைத் தடை செய்கிறார்களா என்ன?

    ஒரு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அல்லது புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்போது, இன்னொரு பிரச்சினை பற்றி ஏன் பேசப்படவில்லை என்று கேள்வி எழுப்புவது சரியா?.

    விஜய்காந்த் படங்கள் பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளலாமே.

    .

  70. \\\\\\\\\இப்படி நடப்பது, சம்பிரதாயத்தை உடைப்பது, நல்ல விஷயம் என்று நினைக்கிறீர்களா இல்லையா? சங்கர மடத்தின் பீடாதிபதிகள் பிராமணப் பிறப்புகளாக இருக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறீர்களா இல்லையா?\\\\\

    சங்கர மடம் என்றில்லை. சம்ப்ரதாய ரீதியில் அமைக்கப்பட்ட வைதீக சனாதன மடங்களில் சம்ப்ரதாயங்கள் காலப்போக்கில் மாறி வந்திருக்கின்றன. மாறி வந்திருக்கின்றன என்பது இரண்டு ரீதியில். ஒன்று ஸ்வாபாவிகமாக. மற்றொன்று ஜபர்தஸ்தியாக. அதாவது சம்ப்ரதாயம் உடைபடுவது என்பதாக.

    சம்ப்ரதாய ப்ரவர்த்தகர்கள் ஏற்பாடு செய்த மடங்கள் அவரது காலத்திற்குப் பின் கோட்பாடுகளில் வித்யாசங்கள் காரணமாகவோ அல்லது தேவைக்கேற்பவோ அதிகமாகியுள்ளன பல வைதிக சம்ப்ரதாய மடங்களில். அது போலவே ஏற்பாடு செய்த மடங்களில் பின்னால் மடாதிபத்யம் வஹிப்பவர் ஏற்பாடு செய்யப்படாமல் விச்சின்னமாக போனதும் உண்டு. சில சமயங்களில் மற்ற மடாதிபதிகள் முனைந்து வெற்றிடத்தை நிரப்பியது உண்டு. சில சமயம் வெற்றிடம் அப்படியே விடப்பட்டதுமுண்டு. சில சமயம் இம்மாதிரி சந்தர்ப்பங்களில் ஒரே மடம் அல்லது பீடத்திற்கு இரு வேறு குரு பரம்பரை இழைகளும் ஆன உதாஹரணங்களும் உண்டு.

    த்வீபாந்தரம் போவது என்பது ப்ராயச்சித்தார்ஹமான கார்யமாக கருதப்பட்டது. த்வீபாந்தரம் போனவர்கள் த்வீபாந்தரத்தில் கழித்த காலத்திற்கேற்ப ப்ராயச்சித்தங்கள் விதிக்கப்பட்டன. ஹிந்துஸ்தானம் ஸ்வதந்த்ரமாவதற்கு முன் ஆஸேது ஹிமாசலம் காபூல் முதல் வங்காளம் வரை இது சர்ச்சையில் இருந்த விஷயம். கல்கியின் பொன்னியின் செல்வனிலும் இது சம்பந்தமான சர்ச்சைகளை அலசியுள்ளார். பல ஜாதிகளில் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையானது. இருபதாவது சதாப்தத்தின் ஆரம்பத்தில் ப்ராம்மண ஜாதியினரிடையே இது பாபமான செயலாகவே கருதப்பட்டது. தன சம்பாத்யம் ஹேதுவாக பாப பயம் தொலைக்கப்பட்டது. இன்று மற்ற ஜாதியினரை விட அத்யதிகமாக ப்ராம்மண ஜாதியினர் த்வீபாந்தரத்தில் உள்ளனர். காசி கயையில் ச்ராத்தாதி கர்மங்கள் செய்யுங்கால் இன்றும் த்வீபாந்தரவாசத்திற்காக க்ருச்ரம் ப்ராயச்சித்தமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

    இப்படி இருக்கையில் ஸன்யாஸிகளிடையேயும் இது இன்றும் ப்ரச்சினைக்குறிய விஷயமே. சில வைதிக சம்ப்ரதாயங்களில் இது மீறப்பட்டதில்லை. சிலவற்றில் மீறப்பட்டுள்ளது. மீறப்பட்ட இடங்களிலும் இருவிதங்களும் உண்டு. எதிர்ப்பின்றி மீறப்பட்டது. எதிர்ப்பை மீறி மீறப்பட்டது. குரு சிஷ்யர்களிடையே கூட இது சம்பந்தமாக அபிப்ராய பேதங்கள் இருந்தது இருப்பது பட்டவர்த்தனம்.

    ஆக சம்ப்ரதாயம் உடைவது நல்லதா கெட்டதா என்றெல்லாம் கேழ்விக்கே இடமில்லை. மாறும் உடையும் என்பது கலி நியதி. அது நடந்தே தீரும். ஸ்ரீமத் பாகவதத்தில் த்வாதச ஸ்கந்தத்தில் இரண்டாம் அத்யாயத்தில் கலிமுற்றும் போது நிகழ்பவை கோடு காட்டப்படுகின்றது. “விப்ரத்வே ஸூத்ரமேவஹி” – அதாவது கலி முற்றுங்கால் பூணூலே ப்ராம்மணனின் அடையாளம் என ஆகும் என்று காட்டுகிறது. கலி முற்றுவதெல்லாம் தூரம். இப்போது ப்ரதம பாதமே. இப்போதே கண்டதே காட்சி கொண்டதே கோலம். உத்தர பாரதத்தில் ஆபஸ்தம்ப, போதாயன, த்ராஹ்யாயண, ஆச்வலாயன, காத்யாயன என ஸ்ம்ருதிகளின் படியெல்லாம் கர்மானுஷ்டானங்கள் நிகழ்த்தப்படுவதில்லை. பண்டிட்ஜி அல்லது பண்டிட்ஜி என்று நம்பப்படுபவர் கர்மானுஷ்டானங்களை எப்படி நடத்துகிறாரோ அதுவே கர்மானுஷ்டானம். வேதசாகை ஸ்ம்ருதி என்பதெல்லாம் எங்கோ காசியில் உஜ்ஜயினி மதுரா வ்ரஜம் போன்று ஓரிரு ஸ்தலங்களில் மிச்ச சொச்சம் அவ்வளவே. குறைவான நேரத்தில் குறைவான தக்ஷணையில் கர்மானுஷ்டானம் செய்து தருபவர் நிறைவான பண்டிட்ஜி. How and why is it so? cause of ignorance. And Ignorance is bliss. இந்த கர்மா கிர்மாவெல்லாம் வெறும் சக்கை சாறு வேதாந்தமே இந்த கர்மாவெல்லாம் தொலைந்தால் நல்லதே என்றும் ஒரு பக்ஷம்.

    So, RV its sort of free for all; What someone opines becomes shasthra if there are a few hundreds to hear to that and follow. But atlast, this need not be considered as weekness of Hinduism but beauty. Its but cyclical and may be a phase. When the basement is strong, any repair to the edifice above can be done effectively at any stage.

    \\\\\\பிராமணப் பிறப்புகளைக் காட்டிலும் அசாத்தியமான ஞானம் உள்ளவர்கள் ஏராளம் உள்ளனர். ஞானம் பெற பிராமணப் பிறப்பாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. \\\\\\ஸ்ரீ மலர்மன்னன் மஹாசய், ஆழ்ந்த மற்றும் மறுக்க இயலாத கருத்து இது.

  71. திருச்சிக்காரன்,

    மலர்மன்னன் அவர்கள் சொல்வதை நீங்கள் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் என்று கோருகிறேன்.

    மண்டன மிஸ்ரரின் அத்வைத விளக்கம், சுரேஷ்வராச்சாரியாரின் அத்வைத விளக்கத்தில் இருந்து வேறுபடுவதால் இருவரும் வேறாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கற்றறிந்தவர்கள் “ஆய்வுபூர்வமாகச்” சொல்லுகிறார்கள் என்பதை திரு. மலர்மன்னன் அவர்கள் சுட்டுகிறார்.

    ஸ்ருங்கேரி மடத்தின் நம்பிக்கை சார்ந்த வரலாற்றை நீங்கள் சுட்டுகிறீர்கள். அது நம்பிக்கை மட்டுமே. ஆய்வுப் பின்னணி அற்றது.

    மேலும், இதைச் சுட்டிக்காட்டி பிரம்மச்சாரிகள்தான் சன்னியாசிகள் ஆகவேண்டும் என்று திரு. மலர்மன்னன் அவர்கள் வாதிடவே இல்லை.

    பிரம்மச்சரியத்தில் இருப்பவருக்கு மட்டுமே சன்னியாசம் எனும் விதி பௌத்தர்களால் ஏற்பட்டுவிட்டது. அந்த பௌத்த பாரம்பரியமே சங்கராச்சாரிய மடங்களிலும் பின்பற்றப்படுகிறது. இன்றும் பௌத்த, சங்கர மடங்களில் இந்தப் பாரம்பரியமே பின்பற்றப்படுகிறது.

    மற்ற மடங்களில், பாரம்பரியங்களில் இது வலியுறுத்தப்படுவதில்லை.

    .

  72. //Mr Tiruchikaran and Co are free to start their own private madams and set rules and regulations as per their wish. Nobody is stopping them//

    Many thanks!

    //Hypothetically, if Ambedkar had started his own PRIVATE Madam and appointed a dalit as it’s head and further made a rule that only Dalit can be the head of his Madam, the whole nation,more than likely, would have applauded him.//

    He was not a practicing specialist in Religion. Ambedkar was a national leader, champion of downtrodden and one of the architects of India. But he was not a religious head.

    //Sankara math is a PRIVATE,I repeat,a PRIVATE organizations. The head of the math is following age old tradition. Nothing to do with any discrimination here.//

    சங்கராச்சாரியார் நிறுவிய நான்கு மடங்களில் (இந்திய வரலாற்றில் உள்ளது) இன்னாரைத் தான் பீடாதிபதியாக நியமிக்க வேண்டும் என்று இங்கே யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. சட்ட பூர்வமாக யாரும் நிர்ப்பந்திக்கவும் இயலாது.

    ஆனால் எல்லா மக்களையும் சீடர்களாக ஏற்று , பயிற்சி கொடுத்து பீடாதிபது ஆக்குங்கள் என்று சொல்ல தார்மீக உரிமை எல்லோருக்கும் உண்டு.

    ஏனெனில் சங்கராச்சாரியார் எல்லோருக்கும் குரு, அவர் ஜகத் குரு, உலகில் உள்ள எல்லா மக்களையும் நேசித்தவர் , மக்கள் மாயையினால் உருவான மயக்கத்தில் இருந்து விடு பட வேண்டும் என்று நினைத்த கருணை உள்ளம் கொண்டவர். சங்கராச்சாரியார் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தம். அவரை குறுகிய வட்டத்தில் அடைக்க இயலாது. எனவே அவர் நிறுவிய மடங்களில் எல்லா சமூகத்தவரையும் பீடாதிபதி ஆக்கலாம் என்று கருத்து சொல்ல எங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு, அதை யாரும் தடுக்க இயலாது. ஆனால் இதை ஒரு நிர்ப்பந்தமாக்க விரும்பவில்லை. இந்தியாவில் ஆன்மீகம் என்பது மனப் பூர்வமாக நடை பெறுவது, ஏற்றுக் கொள்வது ஆகும். அச்சுறுத்தி மதக் கருத்துக்களை ஒத்துக் கொள்ள சொல்வது இந்திய பண்பாட்டில் இல்லை.

    வேறு சில மடங்களில் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், அதில் நாங்கள் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. இங்கே சொல்லப் படுவது போல பிரைவேட் விவகாரங்களில் நாங்கள் தலையிட ஒன்றுமில்லை, அதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை.

  73. சங்கர மடங்களில் காஞ்சி மடம் ருக்வேத மடம் ஆகும். சிருங்கேரி மடம் யஜுர் வேத மடம் ஆகும். ஆனால் , எவ்வித வேறுபாடும் இன்றி , நான்கு வேத காரர்களுமே, இந்த இரு மடாதிபதிகளையும் பெரும் மதிப்பில் வைத்துள்ளார்கள்.

    சங்கராசாரியார் உலகம் முழுமைக்கும் பொதுவானவர் ஆவார். அவரை குறுகிய வட்டங்களுக்குள் அடைப்பது என்பது தவறு. இவர்கள் திருந்துவார்களா?

    எல்லா ஜாதிகளுக்கும் பொதுவானவரை பிராமணர்களின் பூணூலை அறுத்துவிட்டு , துறவற நெறிக்கு நுழைந்தோரை , மீண்டும் அந்த ஜாதியை சேர்ந்தவர் என்று எழுதுவது, மற்றும் விமர்சனம் செய்வதும் தவறு. அத்வைதம் என்பது கூட பார்ப்பனர்கள் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. அது உலகிலுள்ள அனைத்து மாந்தருக்கும் உரிமையான உண்மை ஆகும். நம் மதங்களின் கொள்கைகள், மற்றும் தத்துவத்தில் சீர்திருத்தம் எதுவும் செய்ய முடியாது, தேவையும் இல்லை.

    ஆனால் நடைமுறையில், நம் மதம் எல்லா ஜாதியினருக்கும் சொந்தம் என்ற உண்மையை அனைவரும் புரிந்து கொள்ளவும், தீய சக்திகளால் செய்யப்படும் பொய் பிரச்சாரம் அனைத்தையும் முறியடிக்கவும் , நாம் அனைவரும் பாடு பட வேண்டும். எதிர்காலத்தில், ஏராளமான கலப்பு திருமணங்கள் நடந்து , ஜாதிபிரிவுகள் ஒழிந்து போகும். ஜாதிகளை வைத்து , மூலதனமாக்கி , பிழைப்பை நடத்திவரும், மோசடி பகுத்தறிவு சொம்புகள் விரைவில் வியாபாரத்தை மூடுவார். இது உறுதி.

  74. திரு. களிமிகு கணபதி அவர்களே,

    //ஸ்ருங்கேரி மடத்தின் நம்பிக்கை சார்ந்த வரலாற்றை நீங்கள் சுட்டுகிறீர்கள். அது நம்பிக்கை மட்டுமே. ஆய்வுப் பின்னணி அற்றது. //

    மதராஸ் யூனிவேர்சிட்டியின் முதல் வைஸ் சான்சிலர் யார், அவர் படிப்பு என்ன என்றெல்லாம் அந்த யூனிவேர்சிட்டியில் எழுதி வைத்திருக்கிறார்கள். அது வெறும் ” நம்பிக்கையா” ? ஆய்வு செய்யாமல் எழுதி வைத்து இருக்கிறார்களா?

    சிரிங்கேரி மடம் சொல்வதை இப்போதைக்கு விடுங்கள். இந்திய வரலாறு என்ன சொல்லுகிறது பாருங்கள்.

    எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஆராய்ந்து ஒன்றையே எழுதி உள்ளனர்.

    கண்ணிமரா நூலகத்துக்கோ, வேறு எந்த நூலகத்துக்கோ சென்று வரலாற்று நூல்களை எடுத்து படித்துப் பாருங்கள்.

    வரலாற்றில் ஆராய்ச்சி என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுத முடியும். ஆனால் உண்மையான வரலாறு என்று ஒன்று உண்டு. அசோகர் கலிங்கப் போரில் ஜெயித்தாரா இல்லையா, ஆனால் போர்க்களத்தில் பலர் இறந்ததையும் , படு காயம் அடைந்து துன்பப் படுவதையும் பார்த்து மனம் மாறினாரா இல்லையா?

    இதை மாற்றி “அசோகர் தோத்துட்டாரு, அத்தொட்டு பயந்துக்குனு இனி சண்டை போடா வேண்டாம்னு இருந்துட்டாரு” என்று கூட ஆராய்ச்சி செய்யலாம்.

    ஆராய்ச்சி செய்யும் போது டயம் மெசினில் உட்கார்ந்து பின்னோக்கி போய் என்ன நடந்தது என்று பார்த்தார்களா? சங்கராச்சாரியார் நடக்கும் போது கூட நடந்து கொண்டே பேசிய போது அவர் மனடன் மிஸ்ரர் வேறு சுரேச்வாச்சாரியார் வேறு என்று சொன்னாரா?

    ஆராய்ச்சியாளர்கள் எந்தக் காலத்தவர் என்று பார்க்க வேண்டும். பத்ம பாதரோ , ஹஸ்தாகமலரோ சொல்லியிருந்தால் அதற்க்கு வேல்யு உண்டு.

    அசோகர் மற்றவரின் துன்பத்தை கண்டு மனம் வெதும்பி போரைக் கைவிட்டார் என்றால் அது நம்பிக்கை. தோத்துட்டார் அதனால் போர் வேண்டாம் என்று இருந்து விட்டார் என்று சொனால் அது ஆரய்ச்சி , ஆராய்ச்சியத் தான் கன்சிடர் பண்ண வேண்டும் சரியா?

    மீண்டும் சிரிங்கேரி மட விளக்கத்துக்கு வருகிறேன் (நான் சிரிங்கேரி மட சிஷ்யன் அல்ல, எந்த ஒரு சிரிங்கேரி மட சீடராவது எல்லோரயும் பீடாதிபதி ஆக்கலாம் என்று எழுதுவார்களா என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்) ) சுறேச்வாச்சாரியார பற்றி மற்றவர்களை விட சிரிங்கேரி மடத்திற்கு நன்கு தெரியும். ஏனெனில் அவர்களின் பீடாதிபதியாக முதலில் நியமிக்கப் பட்டவர் அவர். ஒருவருடைய வீட்டிலே அவரின் தாத்தா , கொள்ளுத் தாத்தா இவர்கள் யாரென்று அவருக்கு, அவர் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியும். அது நம்பிக்கையா, இல்லை ஆதாரபூர்வமானதா?

  75. //சங்கர மடங்களில் காஞ்சி மடம் ருக்வேத மடம் ஆகும். சிருங்கேரி மடம் யஜுர் வேத மடம் ஆகும். ஆனால் , எவ்வித வேறுபாடும் இன்றி , நான்கு வேத காரர்களுமே, இந்த இரு மடாதிபதிகளையும் பெரும் மதிப்பில் வைத்துள்ளார்கள்.//

    https://thiruchchikkaaran.wordpress.com/2010/12/28/sankara-mutts/

    இந்திய வரலாற்றில் தெளிவாக உள்ளது என்னவென்றால், சங்கராச்சாரியார் நிறுவிய மடங்கள் நான்கு அவை பூரி, சிரிங்கேரி, துவாரகா பத்ரிநாத் ஆகியவை.

    அவற்றின் முக்கிய வேதங்கள்- பூரி கோவர்த்தன் மடத்துக்கு ரிக், ஸ்ரின்கேறி மடத்துக்கு யஜூர் , துவாரகா மடத்துக்கு சாம, பத்ரி நாத் மடத்துக்கு அதர்வண வேதம் ஆகும்.

    மற்றபடி சங்கராச்சாரியாரின் கோட்பாட்டை விரும்பும் யாரும் மடம் ஆரம்பித்தோ, ஆரம்பிக்காமலோ, எந்த ஒரு வேத்தையுமோ, எல்லா வேதங்களையுமோ பயிற்றுவிக்கலாம்.

    இந்தக் காலத்தில் மதிப்பு என்பது எல்லாம் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை பொருத்தது. நான் பணி செய்யும் அலுவலகத்தில் என்னுடன் பணி புரியும் ஒருவர் ஒரு சாமியாரைப் பற்றிக் குறிப்பிட்டு “நீ அவரை போய் பாக்கலையா? கேபினெட் மினிஸ்டரே ஹெலிகாப்டர்ல வந்த பார்த்துட்டார்” என்றார்.

  76. அன்புள்ள ஸ்ரீ களிமிகு கணபதி,

    01. சங்கர மடங்கள் எப்போது “தனியார்” அமைப்பாக மாறின? ஆதி சங்கரர் ப்ரைவேட் கம்பனியா ஆரம்பித்தார்?

    • ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே அவை தனியார் அமைப்புகள்தாம். அத்வைதக் கோட்பாடைப் பரப்பும் பொருட்டும் ஷண்மதங்களையும் இணைத்து ஹிந்து சமூகத்தை ஒன்று கூட்டி வைக்கும் பொருட்டும் ஆதி சங்கரர் என்ற தனிமனிதர் ஸ்தாபித்த மடங்கள் அவை. அவற்றுக்கு ஆதரவாளராகவோ, அபிமானியாகவோ ஒருவர் இருக்கலாம். எவரும் உறுப்பினராக அவற்றில் சேருவதற்குக் கூட வாய்ப்பில்லை. இன்றுகூடப் பல ஆன்மிகவாதிகள் தமக்கென ஒரு அமைப்பை நிறுவிக் கொள்கிறார்கள். இன்றைய நிலைக்கு ஏற்ப அதனை அறக் கட்டளையாகப் பதிவு செய்துகொள்கிறார்கள். அந்த அமைப்பு களுக்கு ஆதரவாளர்களும் அபிமானிகளும் இருக்கிறார்கள். அப்படி இருப்பதாலேயே அவர்கள் அந்த அமைப்புகளில் உரிமை கோரவோ அதிகாரம் செலுத்தவோ இயலாது. ஆதி சங்கரர் காலத்தில் அறக்கட்டளைகளையும் நிறுவனங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்கிற விதிமுறையோ நடைமுறையோ இல்லை. ஆதி சங்கரர் ஹிந்து சமயத்தின் ஒட்டு மொத்த தலைமை குருவாக அன்றும் சரி, இன்றும் சரி அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டவரும் அல்ல. அப்படி ஏற்றுக் கொள்ளப்படிருந்தாலாவது அவர் நிறுவிய மடங்களுக்கு ஒரு பொதுத் தன்மை ஏற்பட்டு அதன் விதிமுறைகளிலும் நடைமுறைகளிலும் மாற்றம்கோரி மற்றவர்கள் கேள்வி எழுப்பலாம். உரிமை கோருவது எமது உரிமை என்று வீம்பு
    செய்ய சிலர் விதண்டா வாதம் செய்தால் சரி, இப்படியும் சிலர் என்று ஒதுக்கிவிட்டுப் போக வேண்டியதுதான்.

    02. சங்கர மடங்களின் ஆச்சாரியார்கள் தங்களை “லோக குரு”
    என்று காண்கிறார்கள். அனைவருக்கும் குருவாக. அப்படி
    இருக்கும்போது ஒரு சமூகத்தினரின் ஆசைகள்
    நோக்கங்களுக்கு மட்டுமே செயல்படுவது எங்கனம் சரியாகும் ?

    • எந்த சங்கர மட பீடாதிபதியும் தம்மை லோக குரு என்று
    பிரகடனம் செய்துகொள்ளவில்லை. அவர்களின் அபிமானி
    களும் பக்தர்களூம் அவர்களின் பக்திப் பரவசத்தில்
    அபபடியொரு பட்டப் பெயரை குருவுககுக் கொடுத்து
    மகிழ்கிறார்கள். இவர்களும் அவர்களின் சந்தோஷத்தைக்
    கெடுப்பானேன் என்று வாளாவிருந்து விடுகிறார்கள். ஹிந்து
    சமுதாயத்திலேயே ஒரு மிகச் சிறுபான்மையினர்தாம்
    (பிராமணர் மட்டுமல்ல, பல்வேறு வகுப்பாரும் இதில்
    அடக்கம் ) தம்மை குருவாக ஏற்றுள்ளனர் என்று இன்றைய
    பீடாதிபதிகள் அறிய மாட்டார்களா என்ன? அப்படி அழைக்க
    வேண்டாம் என்று சொன்னால் அழைப்பது அதிகரிக்கும்
    அவ்வளவுதான்!
    எனக்கு வரும் மின்னஞ்ஞல்களில் பலவும் என்னை அழைக்கும் விதத்தைப் படித்தால் எனக்குச் சிரிப்புதான் வரும். மேதை, அறிஞர், சிந்தனையாளர், கண்களைத் திறந்தவர்,
    மறுபிறப்பு அளித்தவர், அக்னி எழுத்தாளர் என்றெல்லாம் அவரவருக்குத் தோன்றியபடியெல்லாம் அழைத்து எழுதுகிறார்கள். என்மீதுள்ள அன்புதான் என்மீது இப்படியெல்லாம் அழைக்க வைக்கிறது என்று சிரித்துவிட்டுப் போக வேண்டியதுதான். இப்படியெல்லாம் எழுதாதீர்கள் என்று கேட்டுக் கொண்டால அதன் விளைவு நேர்மாறாகத்தன் இருக்கும். ஆகா எவ்வளவு அவையடக்கம் என்று அதற்கும் ஒரு அடைமொழி சூட்டி அழைப்பாளர்கள்! (சுபாஷ் என்ற ஒரு பாஜக. முக்கியஸ்தர் ஒருவர் சொல்லி ஹிந்து முன்னணி விழா ஒன்றில் அக்னி எழுத்தாள்ர் என்று எனக்குப் பெயர் சூட்டுவதாக அறிவித்ததாகப் பின்னர் கேள்வியுற்றேன். உடனே அப்படி அடைமொழியெல்ல்லாம் என் பெயருக்கு முன் பயன்படுத்தவேண்டாம் எனறு அறிவுறுத்தினேன்). அவற்றையெல்லாம் பொருட்படுத்திக்கொண்டிராமல்
    விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியதுதான்.
    மிகச் சாதாரண ஆளான எனது நிலைமையே இப்படி இருக்கையில் மிகப் பெரியவர்களான சங்கர மடங்களின் பீடாதிபதிகள் நிலைமை எப்படி இருக்கும்? என்னை
    யாரும் லோக குரு என்று அழைக்கக் கூடாது என்று அவர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கலாமா? ஆனால் என்னை லோக குரு என்று அழைப்பது பொருந்தாது என்று பரமாசாரியர் குறிப்பிட்ட
    துண்டு.
    மலர்க் கிரீடம் சூட்டிக்கொள்வது, ஆள் உயர மாலைகள் சாத்திக்கொள்வது எல்லாமே அப்படி உபசாரம் செயபவர்களைத் திருப்தி செய்வதற்காகத்தான்.
    03. இந்தியாவை ஆண்ட துலுக்க, கிறுத்துவ அரசுகளிடம் இருந்து எந்த வித உதவிகளையும் பெறாத [சங்கர பாரம்பரிய] அமைப்புகளில் சாதி அடிப்படையில் பீடாதிபதி/தலைமைப் பதவி நியமனம் நடைபெறுவதில்லையே. ஏன்?

    எனக்குத் தெரியாது. அப்படி இருந்தால் அது மகிழ்வளிக்கும் விஷயம்தான். இப்படிச் சில அமைப்புகளில் வாய்ப்பு இருக்குமானால் மற்ற சங்கர மடங்கள் பற்றி ஏன் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? நம் கவனத்தைச் செலுத்துவதற்கு எத்தனையோ விஷ்யங்கள் உள்ளனவே!
    -மலர்மன்னன்

  77. தமிழ் ஹிந்து தளத்தில் பேசுவது காலவிரயம் என்றுதான் தவிர்த்துக் கொண்டிருந்தேன். இருந்தாலும் மலர்மன்னன் அய்யாவின் கருத்துகள் எழுத வைக்கின்றன.

    // தனியார் அமைப்புகள் எனில் அவர்கள் தமது அமைப்புகளுக்கு ஏற்படுத்திக்கொண்ட சம்பிரதாயங்கள்ளை மாற்றப் பிறருக்கு அதிகாரம் இல்லை. வேண்டுகோள் விடுக்கலாம். ஏற்பதும் மறுப்பதும் அவர்கள் விருப்பம். அம்பேத்கர் ஒரு தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்கு என்று சொல்கிறார் என்றால் அது வேண்டுகோள் அல்ல. இருக்கிற சங்கர மடங்களில் ஒன்றுக்கு தலித்தைப் பீடாதிபதியாக்கு என்று அர்த்தம். அவர் வேண்டுகோள்விடுக்கவிலை. ஒரு நபரைக் காட்டி அவரை ஆக்கு என்று சவால் விட்டார். // அது வேண்டுகோள் அல்ல என்றால் என்ன கட்டளையா? கட்டளை என்றால் நடந்திருக்க வேண்டுமே? அது என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், அதில் தெரியும் ஆதங்கம், தார்மீகக் கோபம் நியாயமானதா இல்லையா?

    // மேலும் ஒன்று சொல்வேன், பழசாகிவிட்டது என்பதாலேயே ஒன்றைப் புறந்தள்ளுவதும் புதிது என்பதற்காக ஒன்றை அரவணைப்பதும் புத்திசாலித்தனம் அல்ல. // உண்மை. ஆனால் இதன் reverse-உம் உண்மை. பழசாகிவிட்டது – முதல் மறுமொழியில் நீங்கள் சொன்னது போல காலம் காலமாக வருவது – என்பதற்காக மட்டும் ஒன்றை அரவணைப்பதும், புதிதாக அம்பேத்கார் சொன்னார் என்பதற்காக ஒன்றை நிராகரிப்பதும் கூட புத்திசாலித்தனம் அல்ல.

    // சாதி அமைப்பு எந்த ரூபத்திலாவது இருந்துகொண்டுதான் இருக்கும்…// சங்கர மடத்தில் சாதி அமைப்பு இருக்கத்தான் செய்யும், அதனால் அம்பேத்காரின் வேண்டுகோள் இல்லை இல்லை கட்டளை நடக்காது என்கிறீர்களா? பூணூலை கழற்றி எறிந்த சன்யாசிக்கே ஜாதி இருப்பது, “சண்டாளனிடமிருந்து” ஞானம் பெற்ற ஆதி சங்கரர் நிறுவிய மடத்திலும் ஜாதி பார்ப்பது என்பது உங்கள் கருத்தில் சரிதானா? எவ்வளவு முயன்றாலும் சில அநீதிகள் இருக்கும் என்றால் அது ப்ராக்டிகல் பார்வை. அநீதிக்கு இடம் தரும் சில அமைப்புகளை அழிக்கமுடியாது, அதனால் அவற்றை கண்டுகொள்ளக் கூடாது என்றுதான் எனக்கு உங்கள் வார்த்தைகளின் sub-text சொல்கிறது, அதை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.

    // பிராமணப் பிறப்புகளைக் காட்டிலும் அசாத்தியமான ஞானம் உள்ளவர்கள் ஏராளம் உள்ளனர். ஞானம் பெற பிராமணப் பிறப்பாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதற்கும் நட்ப்பில் உள்ள சங்கர மடங்களில் அவர்கள் ஏற்காத பட்சத்தில் பிராமணர் அல்லாதாரை பீடத்தில் அமர்த்து என்று வம்பு செய்ய மாட்டேன். கோரிக்கை வைக்கலாம் ஏற்பதும் விடுவதும் அவர்கள் உரிமை என்று பல தடவைகள் சொல்லியாகி விட்டது. // பிறகு ஆலந்தூர் மள்ளனுக்கு எம்மவர் உம்மவர் என்று பார்க்காதீர்கள், வித்து மண்ணைப் பிளந்து வரும் என்று எழுதிய பதிலை நீங்கள்தான் விளக்க வேண்டும். அவர் பிராமணப் பிறப்புதான் தாக்குப் பிடிக்குமா, எம்மவருக்கு ஏன் அந்தப் பயிற்சி சங்கர மடத்தால் மறுக்கப்படுகிறது என்றால் வித்து வரும் என்றீர்கள், இப்போது ஞானம் இருந்தாலும் சான்ஸ் தர மறுப்பது நியாயமே என்கிறீர்கள்.

    // நீங்கள் தனிப்பட்ட முறையில் என்னிடம் வாக்குப் பெறுவது விவாத முறை அல்ல என்றாலும் எனக்கு ஆக வேண்டியது எதுவுமில்லை என்பதால் என் நிலையைத் தெளிவு படுத்திவிட்டேன். அம்பேத்கர் தொடர்பான கட்டுரையில் கருத்துப் பகிர்வுகள் மேற்கொள்ளப்படுகையில் அம்பேத்கரை விட்டுவிட்டு, ‘உங்கள் எண்ணம் என்ன சார்? அம்பேத்கார் சொல்லி இருப்பது சட்டப்படி செல்லுமா, சங்கர மடத்தை நிர்ப்பந்தப்படுத்த முடியுமா என்பது என் கேள்வி இல்லை’ என்று கேட்பது முரையில்லை என்றாலும்! // மன்னிக்கவும் என்ன இட்லிக்கு சட்னி பிடிக்குமா சாம்பார் பிடிக்குமா என்றா கேட்கிறேன்? அம்பேத்கார் சொல்லி இருப்பதைப் பற்றிதானே பேசிக் கொண்டிருக்கிறோம்? இது விவாத முறை இல்லை என்றால் எதுதான் விவாத முறை?

    // கலப்பு மனம் என்ற பெயரில் புதிய சாதிகளை உற்பத்திசெய்வது பிரச்சினைக்குத் தீர்வு அல்ல. அது இரு தனிப்பட்ட ஆடவர் பெண்டிரின் த்னிப்பட்ட விஷயம், சமூக நடைமுறையாக அது ஆகாது என்று கூட்டங்களில் பேசி நிறைய சொல்லடி பட்டவன்தான்! // உண்மையே. ஆனால் எல்லாரும் கலப்பு மணம் மட்டுமே செய்து கொள்ள வேண்டும் என்று பேசுபவர்கள் வெகு சிலரே. கலப்பு மணம் செய்து கொள்ள விரும்பும் ஆணையும் பெண்ணையும் பிரிக்காதீர்கள் என்றுதான் பெரும்பான்மையினர் சொல்கிறார்கள். அதை எதிர்ப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. நானும் நீங்களும் கூட இதே தளத்தில் ஹிந்து-முஸ்லிம் கலப்பு திருமணத்தைப் பற்றி நிறைய விவாதித்திருக்கிறோம், நீங்கள் முஸ்லிம் வீட்டுப் பையன் என்ற ஒரு காரணமே போதும் இந்த மாதிரி திருமணத்தை நிராகரிக்க என்று நிறைய முழங்கி இருக்கிறீர்கள். இன்று அது தனிப்பட்ட விஷயம் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா?

  78. @Kalimigu Ganapathy
    The discussion is about discrimination against dalits in a BROADER sense.I am sorry you did not get that.. My question is, why stop it with dalits only? What about blatant discrimination against Brahmins now? My response hence is relevant.
    By the way, who is this Vijayakant ? any relative of yours?
    I am stopping here. This whole topic has become ,yawn soooooo irrelevant,tiresome, pedantic and boring

  79. ஒதுக்கிய காலம் எல்லாம் முடிந்து விட்டது.

    ஒதுக்கியவர்கள் நாகரீகத்தை உணர்ந்து மனிதாபிமானத் தன்மையுடன் வாழ வேண்டியது காலத்தின் கட்டாயம். பிறரை பிறப்பின் அடிப்படையிலே இழிவாக கருதும் அநாகரீக செயல் இனி நடத்தப் பட இயலாது. எனவே பிறரை ஒதுக்க நினைப்பவர்களே ஓரம் போகும் நிலையே உருவாகும். இந்து மதம் உலகில் உள்ள 120 கோடிக்கும் 120 மேலான இந்துக்களுக்கும் பொதுவானது. இன்னும் சொல்லப் போனால் இந்து மதம் உலகில் உள்ள அனைவருக்கும் தாய் போன்றது. தன்னுடைய வழியை பின்பற்றாதவனை சபித்து அவன் நரகத்துக்குப் போவான் என கட்டம் கட்டாத மதமாக இந்து மதம் உள்ளது.

    எந்த ஒரு இந்து வேண்டுமானாலும் இந்து மத்தைப் பற்றி ஆராயலாம். தன்னுடைய கருத்தை சொல்லலாம். யாரும் தடுக்க முடியாது. சங்கராச்சாரியாரும் அவரது கோட்பாடுகளும் இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் சொந்தமானவை.

    உலகில் உள்ள எல்லா மனிதர்களின் ஆத்மாவும் வேறுபாடில்லாமல் ஒன்றாகவே இருக்கிறது, ஒன்றாக இருக்கும் அது மட்டும் தான் உண்மையானது என்பது ஆதி சங்கரரின் முக்கியக் கோட்பாடாக உள்ளது. எனவே அந்த அத்வைதத் தை உணர்ந்த சங்கரச்சாரியாரின் ஆன்மாவும் , நம் அனைவரின் ஆன்மாவும் ஒன்றே. எனவே சங்கராச்சாரியாரின் கோட்பாட்டை உணர்ந்து கொள்ள, கடைப் பிடிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.

    சங்கரச்சாரியாரோ அவரது கோட்பாடுகளோ யாருக்கும் பட்டா பாத்தியதை இல்லை. ஒருவர் ஒரு பள்ளிக்கு படிக்க செல்கிறார் என்றால் அந்த பள்ளி அவருக்கு மட்டும் சொந்தம் என ஆகி விடாது. காலேஜிலே தேர்தலில் வென்று தலைவனாக இருப்பவர் , மூன்று வருடம் முடிந்ததும் கல்லூரியை விட்டு போக வேண்டியதுதான்.

  80. அப்பா ஸ்ரீ ஆர்.வி.,
    என் நேரத்தையெல்லாம் வீணடித்தே தீருவது என்று முடிவு செய்துவிட்டீர்களா? எனக்கு நிறைய எழுத்து வேலை இருக்கிறதே!
    நீங்கள் எதையும் நேராகவே பார்க்க மாட்டீர்களா? நீங்களாகவே நான் சொன்னதாக ஒன்று சொல்லி என்னிடம் அதற்குக் கேள்வியும் கேட்பது சரியா? அம்பேத்கர் சவால் விட்டார் என்றுதான் எழுதியிருக்கிறேனே, அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்சினை? கட்டளை என்பது நீங்களாக அனுமானித்துக்கொண்டு கேட்பது தேவையா?
    சங்கர மடங்களில் பழசானாலும் இருக்கட்டும் என்று சிலதை வைத்திருப்பதும் புதிதாக இருந்தாலும் வேண்டாம் என்று சிலதைப் புறக்கணீப்பதும் அவர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். இதில் நாம் விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது? சங்கர மடங்கள் உங்களுக்கு சரிப்பட்டு வந்தால் அங்கே போங்கள், இல்லையா போகாதீர்கள்! அதைவிட்டு அதைப்பற்றிப் பொதுவில் ஏன் விவாதித்து கால விரையம் செய்கிறீர்க்ள்? இதில் எனது வாசகங்களில் முரண்பாடு எங்கே உள்ளது? ஒருவேளை எனக்குத்தான் எதையும் சரியாகச் சொல்லத் தெரியவில்லையோ என்னவோ என்று திரும்பவும் படித்துப் பார்த்தேன். எனக்கு முரண்பாடு எதுவும் தெரியவில்லை. பொதுவாகப் பழசாக இருப்பினும் வைத்துக் கொள்வதும் புதிது எனினும் ஏற்காமல் விடுவதும் அவரவர் தனி விருப்பம். உங்களுக்கு வேண்டாம் எனத் தோன்றுவது எனக்கு வேண்டும் எனத் தோன்றலாம். எனக்கு வேண்டும் எனத் தோன்றுவது உங்களுக்கு வேண்டாம் எனத் தோன்றலாம். இதில் ஒருவரையொருவர் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? இந்த விதி சங்கர மடங்களுக்கும் பொருந்தும், அவ்வளவுதான். இதில் என் எழுத்தில் முரண்பாடு எங்கே வந்தது?
    சாதி அமைப்பு எந்த ரூபத்திலாவது சமுதாயத்தில் இருந்துகொண்டுதான் இருக்கும் என்றுதானே எழுதி யிருக்க்கிறேன்?. சங்கர மடத்தில் என்று அல்லவே? நான் சங்கர மடங்களால் நியமிக்கப்பட்ட அவர்களின் பேச்சாளனும் அல்லவே! மேலும் சாதியைப் பற்றிப் பேச்சு எழுந்ததால்தான் அதையும் சொல்ல நேர்ந்தது.சங்கர மடத்தில் அவர்களாக விதியை மாற்றாதவரை பிராமணர் பீடாதிபதியாக வருவதும் பலவாறான வகுப்பார் ஆதீனங்களாக உள்ள வெவ்வேறு சைவ மடங்களில் அவர்களாக விதியை மாற்றினாலன்றி அந்தந்த வகுப்பார்தான் ஆதீனங்களாக வருவதுமே நடந்துகொண்டுதான் இருக்கும். அனைவருக்கும் வாய்ப்பு தருமாறு நாம் கோரிக்கை வைக்கலாம், யாரேனும் சவால் விடுவதால் அதற்காகக் கட்டாயப்படுத்த முடியாது. பொது அமைப்புகளில்தான் சாதி வித்தியாசமின்றி அனைவருக்கும் வாய்ப்புக் கோர முடியும். இதற்கு மேலும் எனது தனிப்பட்ட கருத்து என்ன இருக்கிறது?
    ஸ்ரீ ஆலந்தூர் மள்ளனுக்கு அவர் ஸ்ரீ ஜயேந்திரர், ஸ்ரீ விஜயேந்திரர் போலவும் அவர்களைக் காட்டிலும் தகுதி வாய்ந்தவர்கள் எம்மவர் யாருமில்லையா என்று கேட்டதற்குத்தான் விதை மண்ணைக் கீறிக்கொண்டு வெளிப்படுவதுபோல் தாமாகவே வருவார்கள் என்று எழுதினேன். நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்ததுபோல் இன்றைய சங்கர மடங்கள் இல்லை. எதிர் காலத்தில் இன்னும் எத்தகைய மாற்றங்கள் வரக் கூடும் என்று இப்போது கணிக்க இயலாது என்பதைச் சுட்ட அவ்வாறு குறிப்பிட்டேன். எதிர் காலத்தில் அப்படி வருபவர்கள் சங்கர மடங்களால் வரித்துக் கொள்ளப்படலாம் அல்லது அதற்கு அவசியமின்றி அவர்களாகவே ஜ்வலிக்கலாம். பள்ளிக்கூடப் புத்தகங்களில் வருகிற பாடங்கள் மாதிரியாக நான் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
    சங்கர மடங்களில் அனுசரிக்கப்படுவது நியாயமா அநியாயமா என்கிற விஷயத்துக்கே நான் போகவில்லை. ஒரு தனியார் அமைப்பில் அவர்களின் விதிமுறைகளை அவர்களாக மாற்றினால் உண்டு, மாற்றித்தான் ஆகவேண்டும் என்று வம்பு செய்ய முடியாது என்றுதான் எழுதியிருக்கிறேன். நீங்கள்தான் நான் அவர்கள் செயலை நியாயப் படுத்துவதாக உங்கள் கூற்றை என் வாயில் போட்டு அதற்கு என்னிடம் பதிலும் கேட்கிறீர்கள்!
    ‘உங்கள் எண்ணம் என்ன சார்? அம்பேத்கார் சொல்லி இருப்பது சட்டப்படி செல்லுமா, சங்கர மடத்தை நிர்ப்பந்தப்படுத்த முடியுமா என்பது என் கேள்வி இல்லை’ என்று நீங்கள்தானே எழுதியிருக்கிறிர்கள்? அம்பேத்கர் இவரை சங்கராசாரியார் ஆக்கு என்று ஒருவரைக் காட்டி ஹிந்து சமுதாயத்திற்கு சவால் விட்டதை ஒட்டித்தானே இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம்? அப்படியிருக்கும்போது அவர் கிடக்கிறார், நீ வா வெளியே ரெண்டு போடுகிறேன் என்கிறீர்களே இதற்கு என்ன பெயர்? அம்பேத்கரின் வாதம் சரியா இல்லையா என்கிற வாதத்தில் ஏற்கனவே அவரவர் கருத்தைச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்., அப்படியிருக்க அம்பேத்கரை விடுங்கள், ’உங்கள் எண்ணம் என்ன சார்’ என்று வற்புறுத்துவதற்கு என்ன பெயர்? இட்லி சட்டினி, சாம்பார் என இல்லாவிட்டலும் ஹாம்பர்கர் ஸாஸ்தானே!
    சாதி அமைப்புதான் ஹிந்து சமுதாயத்தில் ஒற்றுமை ஏற்படாமல் தடுக்கிறது. சாதி அமைப்பு ஒழிந்தால்தான் ஹிந்து சமுதாயம் ஒன்றுபடும். அவ்வாறு சாதியமைப்பு இல்லாத ஹிந்து சமுதாயம் உருவாகக் கலப்புத் திருமணம்தான் வழி என்று பலரும் பேசியும் எழுதியும் வருவதை இநத தளத்திலேயே பார்க்கிறோம். இதையொட்டியே கலப்பு மணம் செய்வது ஒரு தனிபட்ட இருவர் விஷயம் எனக் குறிப்பிட்டேன். இதில் முகமதியரும் கிறிஸ்தவரும் எங்கே வந்தார்கள்? அன்று நாம் எழுதியது லவ் ஜிஹாதை ஒட்டியே அல்லவா?
    கிறிஸ்தவரும் முகமதியரும் ஹிந்துவைக் கலப்புத் திருமணம் செய்வது முக்கியமாக அவரவர் மதத்திற்கு ஆள் சேர்க்கத்தான். காதலினால் அல்ல. காதல் எனில் மதம் மாறு என்று நிபந்தனை விதிக்க மாட்டார்கள். ஹிந்துவாக இருப்பவர் ஆணோ பெண்ணோ மதம் மாறினால்தான் கிறிஸ்தவர், முகமதியருடன் கலப்பு மணம் சாத்தியம். பெரும்பால்லான நிலைமை இதுதான். பெரிய இடங்களில் கூட வெளியே அசலான ஹிந்துப் பெயருடன் நடமாடுவதும் ஆவணத்தில் மாற்று மதப் பெயருமாக உள்ளனர். கேட்டால் சமூகப் பிரச்சினை என்கிறார்கள்.
    நாங்கள் ஹிந்து சமுதாயத்தில் சாதிகளைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சந்தடி சாக்கில் மாற்று மதத்தை இங்கே புகுத்துகிறீர்கள்! விட்டால் சங்கர மடதில் முகமதியரை ஏன் பீடாதிபதியாக்க வில்லை என்று கூடக் கேடகத் தொடங்கிவிடுவீர்கள் போலிருக்கிறது!
    -மலர்மன்னன்

  81. ஸ்ரீ ஆர் வி,

    அதில் தெரியும் ஆதங்கம், தார்மீகக் கோபம் நியாயமானதா இல்லையா? என்ரு நீங்கள் கேட்டிருப்பதற்கு,
    கோபம் நியாயமானது, வாதம் சாரமில்லாதது என்று நான் முன்பே சொல்லியிருப்பதை கவனியுங்கள்.
    -மலர்மன்னன்

  82. சங்கர மடங்கள் ஒன்றும் வழிபாட்டு தலங்கள் அல்ல. உலகில் உள்ள எத்தனையோ , மடங்களை போல அதுவும் ஒரு மடமே. வீட்டில் நாம் இறைவன் திருவுருக்களை போட்டோ அல்லது சிறு விக்ரகம் வைத்து வழிபடுகிறோம். அதற்காக நம் வீட்டை வழிபாட்டு தலம் என்று யாரும் சொல்லமாட்டோம். அதே போன்றே சங்கர மடமும் வழிபாட்டு தலம் அல்ல.

    நமது திருக்கோயில்கள் மட்டுமே வழிபாட்டு தலங்கள் ஆகும். எனவே நமது திருக்கோயில்களில் , “தகுந்த பயிற்சி பெற்ற எல்லா சாதியாருக்கும்” பூஜை, அபிஷேகம், அலங்காரம் மற்றும் அனைத்து ஆகம வைதீக திருச்செயல்களிலும் முழு அளவில் சமத்துவம் தரப்படவேண்டும்.

    அது கிடைக்கவில்லை என்று சிலர், வேற்று மதங்களுக்கு ஓடினர். ஆனால், கேரளாவில் புதிய மடங்களை உருவாக்கி , புதிய கோயில்களை தனியே கட்டி, உயர்திரு நாராயணகுரு அவர்கள் புதிய சாதனை படைத்தார். அதுவே உண்மையான சீர்திருத்தம். இன்று நாராயண குருவால் உருவாக்கப்பட்ட கோயில்களில் அனைத்து சாதி இந்துக்களும் வழிபாடு செய்கிறார்கள்.

    டாக்டர் அம்பேத்கார் அவர்களும் இதுபோல தலித்துக்களுக்கு புதிய திருக்கோயில்களை கட்டி புரட்சி செய்திருந்தால் , இந்து மதம் மிக பெரிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தங்களை பெற்றிருக்கும். நம் சமூகத்தில், நாராயண குருவைப்போல அம்பேத்காரும் மறையாப்புகழ் பெற்றிருப்பார்.

    அன்பு வளர அத்வைதமே அடிப்படை ஆகிறது. அன்பே சிவம் ஆகிறது.

    கடவுள் வேறு, மனிதன் வேறு என்பது பயத்தையும், தாழ்வு மனப்பான்மையையுமே கொண்டுவரும். அது நாத்திக கருத்துக்கள் வளரவே மேலும் இடங்கொடுக்கும்.

  83. தலித் ஆ ராசாவை, சமாஜ்வாடி கட்சியின் தலைவராக ஆக்கி, தலித் மாயாவதியை விலக்குவார்களா? சங்கராச்சாரியாராக ஆகும் தலித் ஒருவரை காண்பிக்க முடியுமா? அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்கின்ற பாணியில் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகக் கூட்டமல்ல, சங்கரமடம் என்பதும் அதன் தலைமைப் பொறுப்பு என்பதும். தலித் என்பது சமுதாய அமைப்பைச் சார்ந்தது. சங்கரமடம் என்பது சமயத்தைச் சார்ந்தது. சமுதாயத்தில் உயர்ந்ததால் மட்டுமே தலித் ஒருவரை சமய அமைப்பான சங்கர மடத்தின் சங்கராச்சாரியாராக ஆக்க முடியாது.

  84. நன்பர் திருச்சிகாரரே,

    //
    இந்திய வரலாற்றில் தெளிவாக உள்ளது என்னவென்றால், சங்கராச்சாரியார் நிறுவிய மடங்கள் நான்கு அவை பூரி, சிரிங்கேரி, துவாரகா பத்ரிநாத் ஆகியவை.

    அவற்றின் முக்கிய வேதங்கள்- பூரி கோவர்த்தன் மடத்துக்கு ரிக், ஸ்ரின்கேறி மடத்துக்கு யஜூர் , துவாரகா மடத்துக்கு சாம, பத்ரி நாத் மடத்துக்கு அதர்வண வேதம் ஆகும்.
    //

    இதிலிருந்தே இந்திய வரலாற்றில் இப்படி இருப்பது தப்பு என்று தெரிய வில்லையா.

    நீங்கள் எல்லாம் சங்கர பாஷ்யம் படித்ததே இல்லையா –
    வேதத்தில் பேதங்கள் பூர்வ மிமாம்சத்திர்க்கு மட்டுமே [ரிக் மந்த்ரங்கள், யசுர் செய்முறை, சாம கானம் என்று] உண்டு – உபநிஷத்கள் பெயர் அளவில் தான் ரிக்,யசுர் வேத உபநிஷத்கள் என்று கூறப்படுகின்றன. யாராவது நான் ரிக் வேத உபநிஷத்கள் மட்டும் தான் படிப்பேன். நான் யசுர் வெடி அதனால் ப்ரிஹாதாரன்யகம் மட்டும் தான் படிப்பேன் என்று சொல்கிறார்களா.
    கர்ம காடத்தில் தான் சாகைகள் உள்ளன. கர்ம காண்டத்தை பொறுத்து தான் யசுர் வேதி, ரிக் வேதி என்று பிரிவுகள் உள்ளன.

    சங்கரர் ஏன் பூர்வ மிமாம்சம் சொல்லி தரும் மடங்களை நிறுவுகிறார். அவர் அத்வைத வேதாந்தம் சொல்லி தரும் மடங்களை நிறுவினார் என்றால் பரவா இல்லை.

    இது நீங்கள் சிந்திக்க மட்டுமே – விவாதம் செய்ய நான் தயார் இல்லை. நிறைய சொல்ல முடியும் அனால் நீங்கள் கேட்பீர்களா இல்லையா என்று எனக்கு தெரியாது

  85. //ஆடி மாதம் கருமாரிக்கு வேண்டி கஞ்சி காய்ச்சி , பொங்கல் வைத்து கும்பிடும் மாசு மறுவற்ற பக்தி உடைய தாய்மார்களே ஆதி சங்கரரின் சரியான சிஷ்யர் (யை ) கள்.// its true. கிறிஸ்தவ மிஷனரிகள் இம்மக்களை அடியோடு கெடுப்பதர்குள் அங்கேயாவது தத்துவ இந்து ஞானத்தை கொண்டு சேர்க்க வேண்டும். செய்வோம்

  86. //தலித் ஒருவரை சமய அமைப்பான சங்கர மடத்தின் சங்கராச்சாரியாராக ஆக்க முடியாது.//

    .
    இது இந்திய சமூகத்திற்கு, இந்து மதத்திற்கு பெரும் தீமையை, பின்னடைவை உண்டு பண்ணும் கருத்து.

    பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக யார் இருப்பது என்பதை தீர்மானிக்கப் போவது அந்த மடத்தின் பீடாதிபதிகள் தான். அதே நேரம் எல்லோரும் பீடாதிபதியாக வரலாம் என்று நாம் சொல்லுகிறோம் என்றால் இந்து மதம் அனைவருக்கும் பொது, அனைவருக்கும் ஆன்மீக முன்னேற்றத்தை தரும், யாரும் தலைமை ஏற்கலாம் என்பதை குறிக்கவே- To empahasize on that and to drive the point clear.

    உண்மையிலே தலித் எனப் படும் சமுதாயத்தை சேர்ந்தவர் சங்கர மட பீடதிபதியாக வந்தால் அது நமக்கு மனப்பூர்வமான மகிழ்ச்சியே. இந்து மதத்தின் முன்னேற்றப் பாதையில் அது ஒரு முக்கிய மைல் கல்லாக இருக்கும்.

    ஒரு குறிப்பிட்ட பிரிவினர் குறிப்பிட்ட பொறுப்புக்கு வர முடியாது என்பது அநீதியான காழ்ப்புணர்ச்சி மற்றும் கட்டம் கட்டும் செயலே.

    மகன் செத்தாலும் பரவாயில்லை மருமவ தாலி அறுத்தால் போதும் என்கிற சொலவடை கிராமத்தில் உண்டு. அது போல இந்திய சமுதாயம் , இந்து மதம் ஆகியவை கெட்டாலும் பரவாயில்லை, எனக்கு என் சாதி வெறியே முக்கியம் என்கிற ரீதியிலேயே இந்தக் கருத்து (//தலித் ஒருவரை சமய அமைப்பான சங்கர மடத்தின் சங்கராச்சாரியாராக ஆக்க முடியாது.//)
    உள்ளது.

    கொஞ்சம் கூட பொறுப்பிலாத, நிதானமும் இல்லாத, சுயநலமான கருத்து இது. இதைப் போன்ற கருத்துக்களே இந்து மதத்திற்கு பெரிய ஆபத்து.

    இந்து சமயம் சாதி அடிப்படையிலானது, இந்து மடம் என்றாலே ஜாதிதான், தீண்டாமை தான் , ஒதுக்கி வைப்பதுதான், என்றும் பிரச்சாரம் செய்து, மத சகிப்புத் தன்மையை அழித்து, மத வெறியைப் பரப்புவோருக்கு இது போன்ற கருத்துக்கள் மிகவும் மகிழ்ச்சியை தரும், இவரை பாராட்டுவார்கள்!

  87. அன்புக்குரிய திரு. ஆர்.வி அவர்களே,

    இந்தப் பதிவுக்கு சம்பந்தம் இல்லாத விடயம் – இதே தளத்தில் ஹிந்து-முஸ்லிம் கலப்பு திருமணத்தைப் பற்றி நிறைய விவாதித்திருக்கிறோம்- ஆனால் நீங்கள் குறிப்பிட்டதால் நானும் பங்கெடுக்கக் வேண்டி உள்ளது.

    இந்துப் பெண்ணும், இஸ்லாமிய ஆணும் காதல் திருமணம் செய்து கொண்டால் எந்தப் பிரச்சினயும் இல்லை – அமெரிக்காவிலே.

    ஆனால் இந்தியாவிலே ஒரு இந்துப் பெண் ஒரு இஸ்லாமியரைக் காதலிக்கும் போது அவள் மதம் பற்றி அதிகமாக சிந்திப்பதில்லை. காதல் திருமணத்தில் முடிய இந்து பெண் மதம் மாறி இஸ்லாமியப் பெண்ணாகி அவள் இஸ்லாமியரை திருமண செய்து கொண்டு ஒரு பிள்ளையைப் பெறுகிறாள்.

    அப்போது ஒரு நாள் இஸ்லாமியர் அந்தப் பெண்ணைப் பார்த்து மூன்று முறை தலாக் சொல்லி விடுகிறார் என்றால், அந்தப் பெண்ணால்

    1) ஒருதலைப் பட்சமாக தரப்பட்ட விவாக ரத்தை எதிர்த்து எந்தக் கோர்ட்டிலும் முறையீடு செய்ய சட்டத்தில் வழி இல்லை!

    2) அந்தப் பெண் ஜீவனாம்சம் கோர சட்டத்தில் வழி இல்லை!

    3) தான் பெற்ற பிள்ளை தன்னுடன் இருக்க வேண்டும் என்று கோர அவளுக்கு உரிமை இல்லை. தான் பெற்ற பிள்ளைக்கு தாய்ப் பால் வூட்டக் கூட அவளுக்கு உரிமை இல்லை

    தான் பெற்ற பிள்ளையை பார்க்கக் வேண்டும், அவனுடனே வாழ வேண்டும் என்று அந்தப் பெண் ஏங்கினால் நீங்கள் விஜயாகாந்த் சினிமாவில் வருவது போல அந்தப் பெண்ணிடம் பிள்ளையை சேர்த்து வைத்து, இந்தாம்மா உன் பிள்ளை, உன்னை விவாகரத்து செய்தது செல்லாது என சொல்ல உங்களால முடியுமா?

    அப்படி முடியாது என்றால் அந்தப் பெண்ணுக்கு இழைக்கப் பட்ட கொடுமைக்கு உங்களின் தீர்வு என்ன?

  88. //ஆடி மாதம் கருமாரிக்கு வேண்டி கஞ்சி காய்ச்சி , பொங்கல் வைத்து கும்பிடும் மாசு மறுவற்ற பக்தி உடைய தாய்மார்களே ஆதி சங்கரரின் சரியான சிஷ்யர் (யை ) கள்.// its true. கிறிஸ்தவ மிஷனரிகள் இம்மக்களை அடியோடு கெடுப்பதர்குள் அங்கேயாவது தத்துவ இந்து ஞானத்தை கொண்டு சேர்க்க வேண்டும். செய்வோம்!

    நன்றி ராம்.

    ஆனால் எப்படி ?

    சங்கராச்சாரியார் (ஆதி சங்கரர்) 16 வருடங்களுக்குள் இந்தியா முழுதும் சுற்றி சுழன்று எத்தனை மக்களை சந்தித்து இருகிறார் என்று எண்ணிப் பாருங்கள். வெறும் பண்டிதர்களை மட்டும் சந்தித்து விவாதம் நடத்தவில்லை. சாதாரண மக்களுடன் கலந்து பழகி பக்தியையும் ஞானத்தையும் அவர்களுக்கு தந்து இருக்கிறார்.

    இன்று என்ன நடக்கிறது ?

    ஒன்று மிகச் சிலரை மட்டும் சந்திப்பவர்களாக இருக்கிறார்கள்.

    அல்லது பலரை சந்திப்பது , அரசியல், சிபாரிசு, மேலும் அறியல் கட்சி பிரமுகர் கூட்டம் நடத்துவது போல தொகுதிவாரியாக கோவில்களுக்கு சென்று கொஞ்சம் பேருக்கு பிரசாதத்தைக் கையிலே குடுத்து விட்டு, நேரம் ஆகி விட்டால் பழத் துண்டுகளை அப்படியே தூக்கி வானை நோக்கி வீசுவது, அவரவர் (பக்தர்கள்)கீழே விழும் பழத் துண்டை பொறுக்குவதில் ஈடுபடுவது.

    யாரவது மடத்துக்கு போனால் நீ சுப்புணி புள்ளைதானே, அப்பா எப்படி இருக்கிறார் என்று குசலம் விசாரிப்பது,பிரசாதம் தருவது, கையை உயர்த்தி ஆசி வழங்குவது – இதுதான் தத்துவத்தை சொல்லிக் கொடுக்கும் விதமா?

    அப்படியானால் தத்துவத்தை சொல்லிக் கொடுக்கப் போவது யார்? நீங்களும் நானுமா, நம்மைப் போன்றவர்களா ? அப்படியானால் மடத்தின் பங்கு என்ன?

  89. அன்புக்குரிய நண்பர் சாரங்,

    இந்திய வரலாற்றில் எந்த தவறும் இல்லை.

    நான்கு மடங்களும் அத்வைத சித்தாந்தாத்தையே அடிப்படைக் கருத்தாக கொண்டுள்ளன.

    ஒவ்வொரு மடமும் ஒரு வேதத்தை
    முக்கியமாக எடுத்துக் கொண்டு, அவற்றை பயின்று பயிற்றுவிப்பதால் வேதங்கள் அழியாமல் காக்கப் படும் என்பதற்காகவே என சொல்கிறார்கள்.

    அதே நேரம் மற்ற வேதங்களைப் படிக்கக் கூடாது என்று இல்லை. உனக்கு டுயூட்டி ரிக் வேதத்தை படிப்பது. அதை முடித்து விட்டு மற்ற வேதங்களையும் படித்துக் கொள்ளலாம்.

    நான்கு வேதங்களும் அத்வைதக் கருத்தையே சொல்லுகின்றன என்பதே சங்கராச்சாரியாரின் முடிவு.

    ஒவ்வொரு வேதத்தின் மஹா வாக்கியமாக சொல்லப் படுவது

    ரிக் – ப்ரக் ஞானம் பிரம்மம்

    யஜூர்- அஹம் பிரம்மாஸ்மி

    சாம – தத்(து)வம் அசி

    அதர்வண – அயம் ஆத்மா பிரம்ம(ம்)

    இவ்வாறாக நான்கு வேதங்களும் அத்வைத தத்துவத்தையே வெவ்வேறு வார்த்தைகளில், வெவ்வேறு கோணங்களில் சொல்வதாக சொல்லுகிறார்கள்.

    மேலும் நான்கு மடங்களும் எங்களுக்கு கொடுக்கப் பட்ட முக்கிய வேதம் இது என்று சொல்லுகின்றன.

    எனவே வரலாறு சரியாகத்தான் சொல்லுகிறது.

    “ஒவ்வொரு மடத்துக்கும் நான்கு வேதங்களையும் படிக்க சொல்லி தான் சங்கராச்சாரியார் சொன்னார், ஆனால் மடங்கள் ஈசியான கொஸ்டியனை அட்டன்ட் செய்வது போல நான் இதை படிக்கிறேன், நீ அந்த வேதத்தைப் படி என தங்களுக்குள் பிரித்துக் கொண்டன” என யாராவது ஆராய்ச்சி செய்து நூல் வெளியிட்டு இருகிறார்களா என்று சொல்லுங்கள்.

    ஆனால் நீங்கள் சொல்வது போல இன்றைக்கு மடங்களிலும் அவற்றில் கிளைகளிலும் யாகங்கள் திமிலோகப் படுவதைப் பார்த்தல், இது அத்வைத மடமா, பூர்வ மீமாம்ச மடமா என சந்தேகம் வருகிறது என்பது சரியே. அத்வைதக் கருத்தையோ, சத் அசத் விவாதமோ, அர்த்தம் அனர்த்தம் என்பதோ எங்கும் சொல்லப் படுவதோ, கேட்கப் படுவதோ அரிதாக் இருக்கிறது, அல்லது மடத்துக்கு வரும் பக்தர்களுக்கு இதை யாரும் சொல்வதில்லை. அதற்க்கு நான் பொறுப்பு இல்லை. ஆதி சங்கரரும் பொறுப்பில்லை.

    நீங்கள் சொல்லுவதை நான் எப்போதும் உன்னிப்பாக கேட்டு வருகிறேன்.

    நீங்கள் பெருமாள் கோவிலில் ஒரு முறை அங்கப் பிரதட்சிணம் செய்தால் நான் உங்களுடன் வந்து இரண்டு முறை அங்கப் பிரதட்சிணம் செய்யத் தயார் என்று சொல்லி இருக்கிறேனே!

  90. அன்புக்குரிய நண்பர் சாரங்,

    இந்திய வரலாற்றில் எந்த தவறும் இல்லை.

    நான்கு மடங்களும் அத்வைத சித்தாந்தாத்தையே அடிப்படைக் கருத்தாக கொண்டுள்ளன.

    ஒவ்வொரு மடமும் ஒரு வேதத்தை
    முக்கியமாக எடுத்துக் கொண்டு, அவற்றை பயின்று பயிற்றுவிப்பதால் வேதங்கள் அழியாமல் காக்கப் படும் என்பதற்காகவே என சொல்கிறார்கள்.

    அதே நேரம் மற்ற வேதங்களைப் படிக்கக் கூடாது என்று இல்லை. உனக்கு டுயூட்டி ரிக் வேதத்தை படிப்பது. அதை முடித்து விட்டு மற்ற வேதங்களையும் படித்துக் கொள்ளலாம்.

    நான்கு வேதங்களும் அத்வைதக் கருத்தையே சொல்லுகின்றன என்பதே சங்கராச்சாரியாரின் முடிவு.

    ஒவ்வொரு வேதத்தின் மஹா வாக்கியமாக சொல்லப் படுவது

    ரிக் – ப்ரக் ஞானம் பிரம்மம்

    யஜூர்- அஹம் பிரம்மாஸ்மி

    சாம – தத்(து)வம் அசி

    அதர்வண – அயம் ஆத்மா பிரம்ம(ம்)

    இவ்வாறாக நான்கு வேதங்களும் அத்வைத தத்துவத்தையே வெவ்வேறு வார்த்தைகளில், வெவ்வேறு கோணங்களில் சொல்வதாக சொல்லுகிறார்கள்.

    மேலும் நான்கு மடங்களும் எங்களுக்கு கொடுக்கப் பட்ட முக்கிய வேதம் இது என்று சொல்லுகின்றன.

    எனவே வரலாறு சரியாகத்தான் சொல்லுகிறது.

    “ஒவ்வொரு மடத்துக்கும் நான்கு வேதங்களையும் படிக்க சொல்லி தான் சங்கராச்சாரியார் சொன்னார், ஆனால் மடங்கள் ஈசியான கொஸ்டியனை அட்டண்ட் செய்வது போல நான் இதை படிக்கிறேன், நீ அந்த வேதத்தைப் படி என தங்களுக்குள் பிரித்துக் கொண்டன” என யாராவது ஆராய்ச்சி செய்து நூல் வெளியிட்டு இருகிறார்களா என்று சொல்லுங்கள்.

    மேலும் சங்கராச்சாரியார் கர்மங்களால் விடுதலை கிடைக்காது- ந கர்மனா -என்பதை முக்கியமாக சொல்லுகிறார்.

    ஞானம் மட்டுமே விடுதலையை தர முடியும் என்பது அவரது கோட்பாடு.

    அதே நேரம் கர்மங்களை முற்றாக ஒதுக்கவில்லை. பள்ளிக்கு செல்பவன் காலையில் பல் விளக்கி, குளித்து, சீருடை அணிந்து, காலனி அணிந்து பள்ளிக்கு செல்கிறான். இவ்வளவு செய்தும் பள்ளிக்கு போய் படிக்கவில்லை என்றால் பலன் இல்லை. தலை சீவாமல் போனாலும் பரவாயில்லை. ஆனால் கவனித்துப் படிப்பது முக்கியம். கர்மங்கள் எல்லாம் பல் விலகுவது, தலை வாருவது , பவுடர் போடுவது..போன்றவை, ஞானம் என்பது பள்ளியில் நடத்துவதைக் கவனித்துப் படித்து புரிதல் செய்வது போல மிக முக்கியமானது என்பதே என் தாழ்மையான கருத்து.

    ஆனால் நீங்கள் சொல்வது போல இன்றைக்கு மடங்களிலும் அவற்றில் கிளைகளிலும் யாகங்கள் திமிலோகப் படுவதைப் பார்த்தல், இது அத்வைத மடமா, பூர்வ மீமாம்ச மடமா என சந்தேகம் வருகிறது என்பது சரியே. அத்வைதக் கருத்தையோ, சத் அசத் விவாதமோ, அர்த்தம் அனர்த்தம் என்பதோ எங்கும் சொல்லப் படுவதோ, கேட்கப் படுவதோ அரிதாக இருக்கிறது, அல்லது மடத்துக்கு வரும் பக்தர்களுக்கு இதை யாரும் சொல்வதில்லை. இதற்க்கு ஆதி சங்கரர் பொறுப்பில்லை.

    நீங்கள் சொல்லுவதை நான் எப்போதும் உன்னிப்பாக கேட்டு வருகிறேன்.

    நீங்கள் பெருமாள் கோவிலில் ஒரு முறை அங்கப் பிரதட்சிணம் செய்தால் நான் உங்களுடன் வந்து இரண்டு முறை அங்கப் பிரதட்சிணம் செய்யத் தயார் என்று சொல்லி இருக்கிறேனே

  91. இந்து சமுதாயமே இந்து சமயமாக இருந்த காலங்கள் என்றோ போய், பல்வேறு ஊடுருவல்களாலும்,படைஎடுப்புக்களாலும் கலப்பு ஏற்பட்டு சின்னாபின்னமாக ஆகிவிட்டது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே மக்கள் இந்திய சமுதாயம் மற்றும் இந்து சமயம் என்று பாகுபாட்டுப் போய் விட்டதனால் தான், விரோத மனப்பான்மை கொண்ட பிரிவு வித்தியாசங்களை பார்க்க நேரிடுகின்றது. இந்திய்
    சமுதாயத்தில்,இந்துக்களைத்தவிர,பவுத்தர்கள்,ஜைனர்கள்,கிறித்தவர்கள்,யூதர்கள்,முகம்மதியர்கள், இன்னும் பல என்னுமாறு இந்து சமய எதிரான மற்றும் விரோத விநோதங்களையும் வேதனைகளையும் கலக்கி விட்டதனால் தான், சங்கரமடம், தலித் ஒருவரின் தலைமையின் கீழ் வரமுடியாது. சங்கரமடத்திரு தலைமை ஏற்கும் ஒருவர்,தலித் பவுத்தர், தலித் ஜைனர்,தலித் கிறித்துவர், தலித் முஸ்லிம் போன்ற அந்நிய மத கலப்பு தலித்தா என்று எப்படி தீர்மானிக்க முடியும்? இன்று இந்து பெயர்களை தாங்கி, இந்து அல்லாத சாயத்தை பின்பற்றும் எவ்வளவு நபர்களைப் பார்க்க முடியும்! இந்திய சமுதாயமே இந்திய சமயமாக இருந்த நிலை மாற, இந்த “தலித் சங்கரமடத் தலைமை ஏற்கலாம்” என்ற ஏமாளித்தனமே காரணம். மகனோ அப்பனோ செத்தாலும் பரவாயில்லை, பக்கத்து வீட்டு இந்து மருமகள் தாலி அறக்க வேண்டும் என்று ஊடுருவியவர்கள் தான் இந்து சமயம் அல்லாதோர். நியாயத்தை “திரிச்சி” பேசக்கூடாது.

  92. //…இந்துக்களைத்தவிர,பவுத்தர்கள்,ஜைனர்கள்,கிறித்தவர்கள்,யூதர்கள்,முகம்மதியர்கள், இன்னும் பல என்னுமாறு…//

    reality,

    பவுத்தர்களும், ஜைனர்களும் இந்துக்களே. அவர்கள் செமித்திய மதத்தார் இல்லை.

  93. ஒரு தலித்தை பீடாதிபதி ஆக்குங்கள் என்று அம்பேத்கர் சொல்லவே இல்லை.

    இந்தக் களிமிகு கணபதி என்பவர் கட்டுரையைப் படித்துப் பார்த்தபின் கமெண்டுகள் போட்டால் சந்தோஷம்.

  94. மடத்திற்கு ஒரு எ.ஸ் /எ.டி சங்கரர் ஆவது இருக்கட்டும் உங்களுக்காக சரியான தைரியம் இருந்தா தி.க,தி.மு.க, மற்றும் தமிழ் ,தமிழர் மீது அக்கரை காட்டுகிற கட்சிக்கு அடிமட்டத்தில் உள்ள ஒரு எ.ஸ் /எ.டி தொண்டனை தலைவனாக்குங்க பார்க்கலாம்,கருணாநிதி வாரிசே கட்சிக்கு தலைவனா ஆகணும்,வீரமணியே தி.க வுக்கு ,இதே போல பிற கட்சிக்கும் தலைவனா இருக்கணும் எழுதாத விதியா இல்ல இருக்கு அதை முதலில் மாத்துங்க அந்த அந்த கட்சியில் உள்ள ஒரு எ.ஸ் /எ.டி தொண்டனை தலைவனாக்குங்க அப்புறம் மடத்திற்கு ஒரு எ.ஸ் /எ.டி சங்கரர் ஆகலாம் முதலில் ராமசாமி நாயக்கர் கட்சியில் எத்தனை எ.ஸ் /எ.டி தலைவராக ஆக்கினாருனு சொல்லுங்க பார்க்கலாம். உள்ளுருல ஓணான் பிடிக்காதவன் அசலூருல போயி ஆனை பிடிச்சானாம் அதுமாதிரி இருக்கு,ஊருக்கு இளைத்தவன் ஓட்ட பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் ஆ,ஊ ன்நா இந்து மதத்தில் கைய வக்கறது என்னா எவநும் எதுவும் கேடக மாட்டான் பாரு

  95. //இந்து சமுதாயமே இந்து சமயமாக இருந்த காலங்கள் என்றோ போய், பல்வேறு ஊடுருவல்களாலும்,படைஎடுப்புக்களாலும் கலப்பு ஏற்பட்டு சின்னாபின்னமாக ஆகிவிட்டது //

    என்ன சின்னா பின்னமாகி விட்டது? இந்தியாவில் இந்துக்கள் இல்லையா? கேரளாவில் இருப்போர் பழனி முருகன் கோவிலுக்கு வருவதில்லையா? டில்லியில் இருப்போர் ராமேஸ்வரம் வருவதில்லையா? தமிழர்கள் ஹரித்வார், காசி போவதில்லையா?

    //தலித் பவுத்தர், தலித் ஜைனர்,தலித் கிறித்துவர், தலித் முஸ்லிம் போன்ற அந்நிய மத கலப்பு தலித்தா என்று எப்படி தீர்மானிக்க முடியும்//

    பிராமணர்களில் கூட கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் இருக்கிறார்களே. தலித் சமுதாயத்தினரை மட்டும் கட்டம் கட்ட வேண்டிய அவசியம என்ன?

    இன்றைக்கு பார்த்து நாளைக்கு பீடாதிபதி ஆக்கப் போகிறார்களா? பல வருடங்கள் (இருபது, முப்பது வருடம்) மடத்தில் தங்கி விதி முறைகளின் படி வாழ்ந்தவர் தானே பிறகு பீடாதிபதி ஆக்கப் படப் போகிறார். கிறிஸ்தவ மதத்தில் விருப்பம் உடையவர் இந்து மடத்தில் தங்கி உணவு மற்றும் பிற கட்டுப் பாடுகளை அனுஷ்டித்து முப்பது வருடங்கள் இந்து தெய்வங்களுக்கு பூசை செய்வாரா?

    //இந்திய்
    சமுதாயத்தில்,இந்துக்களைத்தவிர,பவுத்தர்கள்,ஜைனர்கள்,கிறித்தவர்கள்,யூதர்கள்,முகம்மதியர்கள், இன்னும் பல என்னுமாறு இந்து சமய எதிரான மற்றும் விரோத விநோதங்களையும் வேதனைகளையும் கலக்கி விட்டதனால் தான், சங்கரமடம், தலித் ஒருவரின் தலைமையின் கீழ் வரமுடியாது.//

    இப்ப என்ன ஆகி விட்டது? பவுத்த மதம், சமண மதம் … இப்படி பல மதங்கள் இந்தியாவில் இருக்கினறது என்றால் அதனால் என்ன பிரச்சினை? அதற்க்கு யார் காரணம்? பல பிராமணர்கள் கூட பவுத்த மதத்தில் இணைந்து பவுத்தர்களாக இருந்ததாக வரலாறு சொல்லுகிறதே. பவுத்த சமண மதங்களுக்குப் பிறகுதானே சங்கராச்சாரியாரின் காலம் வருகிறது. இந்தியாவில் பல் சமயங்கள் இருப்பதனால சங்கர மட பீடாதிபதியாக தலித் ஒருவர் நியமிப்பதற்கு என்ன பிரச்சினை?

    //இன்று இந்து பெயர்களை தாங்கி, இந்து அல்லாத சாயத்தை பின்பற்றும் எவ்வளவு நபர்களைப் பார்க்க முடியும்!//

    இந்து மதத்தின் தத்துவங்களை எல்லா மக்களையும் சென்றடைய வைத்தீர்களா? அப்படி செய்யாத் பட்சத்தில் அவர்கள் வேறு தத்துவங்கள் அவர்களுக்கு சொல்லப் படும் போது அதை நம்புகிறார்கள். இந்து பெயர் தாங்கி வேறு மதத்தை பின்பற்றினால் என்ன சொல்ல முடியும்?

    இந்துவோ வேறு எந்த மதத்தவரோ அவருடைய செயல் பாடுகளை வைத்து அறியலாம். இந்து பெயர் வைத்துக் கொண்டு வேறு மத நம்பிக்கையில் வாழ்பவர் இந்து தெய்வங்களுக்கு பூசனை செய்ய உடன் பட மாட்டார். இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

    மொத்தத்தில் சாதி உணர்வு, சாதி வெறுப்புணர்ச்சி ஆகியவற்றை அப்பட்டமாக வெளிப் படுத்தி சம்பந்தம் இல்லாத எதையோ சொல்லி இதுதான் காரணம் னு வச்சுக்கோ என்பதாக இருக்கிறது!

    இந்த சாதி உணர்வால் இந்து மதத்திற்கு ஏற்படும் கஷ்டங்களையும் சமாளித்து இந்து மதம் மேல் வரும். எல்லோரயும் அன்பு செய்து ஆன்மீகத்தில் உயர்த்தி, ஆன்மீக வழி காட்ட, தலைமை பதவி ஏற்க வாய்ப்பளிக்கும் வகையில் இந்து மதம் கனிந்து வருகிறது. அப்போது மனிதாபிமானம் இல்லாத , பிற மனிதருக்கு வாய்ப்பளிக்க மறுக்கும் ஒரு சிலரும் திருந்தும் காலம் விரைவில் வரும்!

  96. மலர்மன்னன் போன்ற பெரியவர்களிடம் தொடர்ந்து வாதிட தயக்கமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும்:

    பிரச்சினை வேண்டுகோள் விடுத்தாரா சவால் விட்டாரா கட்டளை தொடுத்தாரா என்பது அல்ல. சங்கர மடம் அவர் கண்ட்ரோலில் இல்லை என்பதுதான் விஷயம். இதை நீங்களே பல முறை சொல்லிவிட்டு அவர் சவால் விடலாமா என்றும் கேட்பதின் அபத்தத்தைத்தான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவர் சவால் விட்டால் என்ன வேண்டுகோள் விடுத்தால் என்ன? மடாதிபதிகள் கேட்டுவிட்டார்களா இல்லை கேட்கப் போகிறார்களா? உங்கள் எண்ணப்படியே அவர் சவால் விட்டார் என்றே வைத்துக் கொள்வோம். பதிலாக அவர் வேண்டுகோள் விடுத்திருந்தால் என்ன மாறுதல் நடந்திருக்கும்? நீங்கள் இப்படி மயிர் பிளப்பது வியப்பாக இருக்கிறது.

    இதற்கு மேலும் நிறைய எழுதலாம். ஆனால் இங்கே பேசுவது காலவிரயம் என்பதில் உங்களுக்கும் எனக்கும் இசைவு இருக்கிறது, அதனால் நிறுத்திக் கொள்கிறேன். ஒரே ஒரு தகவல் பிழையை மட்டும் திருத்திவிடுகிறேன்.

    // அம்பேத்கார் சொல்லி இருப்பது சட்டப்படி செல்லுமா, சங்கர மடத்தை நிர்ப்பந்தப்படுத்த முடியுமா என்பது என் கேள்வி இல்லை. இப்படி நடப்பது, சம்பிரதாயத்தை உடைப்பது, நல்ல விஷயம் என்று நினைக்கிறீர்களா இல்லையா? சங்கர மடத்தின் பீடாதிபதிகள் பிராமணப் பிறப்புகளாக இருக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறீர்களா இல்லையா? எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் அவரைப் “படுத்தி எடுத்து” பீடாதிபதி பதவிக்கு தயார் செய்ய முடியுமா, இல்லை பிராமணப் பிறப்புகலால்தான் தாக்குப் பிடிக்க முடியுமா? // என்பதை நீங்கள் // அப்படியிருக்க அம்பேத்கரை விடுங்கள், ’உங்கள் எண்ணம் என்ன சார்’ என்று வற்புறுத்துவதற்கு என்ன பெயர்? // என்று மாற்றி புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அம்பேத்காரை விடுங்கள் என்று நான் சொல்லவில்லை. அம்பேத்காரின் சங்கர மடத் தலைவைராக ஒரு தலித் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை இல்லை இல்லை இல்லை சவால் நியாயமற்றது என்ற பொருள் உங்கள் வாதங்களில் தெரிகிறது. சட்டரீதியாக சங்கர மடங்களுக்கு வேண்டிய பாதுகாப்பு – உங்கள் சங்கர மடம் ஒரு தனியார் க்ளப் வாதங்கள் உட்பட – இருக்கிறது, நியாயரீதியாக இந்த மடங்களின் நடவடிக்கை சரியில்லை என்ற அம்பேத்காரின் தார்மீகக் கோபத்தை நீங்கள் ஏற்கிறீர்களா என்றுதான் கேட்டிருந்தேன், இன்னும் கேட்கிறேன். இது அம்பேத்காரின் கோரிக்கையை, எண்ணங்களை, வார்த்தைகளை, இந்தப் பதிவை பற்றிய விவாதம் மட்டுமே என்பதையாவது உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

  97. நண்பர் திருச்சிகார அவர்களே,

    சங்கராச்சரியார் சமஸ்க்ரித்த படத்தில் ஒரு காட்சி வரும்.
    மண்டன மிஸ்ரர் (சுறேச்வரராக மாறியதாக சிலர் கருதும் மிஸ்ரர்) சிலர் மிருக பொம்மைகளை ஹவிசாக போட்டு யாகம் செய்வதை கண்டு பதை பதைத்து போவார் – இந்த ஜனங்கள் இப்படி செய்கிறார்களே என்று சங்கரிடம் முறை இடுவார். ஆக சங்கரர் கர்ம காந்தத்தினால் மனிதனுக்கு உய்வில்லை என்பதை தெளிவாக்குகிறார்.

    இன்னொரு காட்சி – தனது சிஷ்யர் அனைவரையும் ஒவ்வொரு திக்கிற்கு சென்று அத்வைதத்தை பரப்புங்கள் என்று தான் கேட்டுக் கொள்வார் – மடம் நிறுவுங்கள், வேதா அத்யாயனம் செய்யுங்கள் என்று சொல்ல மாட்டார்.

    சங்கரரின் பிரம்மா சூத்ர பாஷ்யத்தில் – அதவோ பிரம்ம ஜிக்யாச என்பதற்கு வியாக்யானத்தை பாருங்கள். சங்கரர் ஒரு காலும் மடம் ச்தாபித்திருக்கவே மாட்டார், அதுவும் வேதா அத்யாயனம் செய்ய நிச்சயமாக இல்லை.

    சங்கரரோ, ராமானுஜரோ என்ன வேதத்தை சேர்ந்தவர்கள் என்று எங்காவது பிரசித்தமாக படித்ததுண்டா. அவர்களாகு கவனம் முழுவதும் ஞான காண்டத்தில் தான்.

  98. மீண்டும் இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
    தலித் சங்கராச்சாரியார் ஆகமுடியுமா? சர்ச்சை தொடர்கிறது
    சனாதன தர்மத்தை நம்புகிறவர்கள் யாரும் வேதம் படிக்க உரிமையுண்டு. துறவறம் மேற்கொள்ளவும் தகுதியுண்டு. எந்த ஹிந்துவும் சங்கராச்சாரியாராகவோ, மடாதிபதியாகவோ ஆகமுடியும். ஏன் ஸ்ரீ சங்கரரைப் போல யார் வேண்டுமானாலும் ஞானம் பெற இயலும். வர்ணமோ அல்லது சாதியோ தடையில்லை. அப்படி சொல்வது சுயனலம். சாதீயம் அன்றி சனாதனம் அன்று.
    அண்ணல் அம்பேத்கர் எழுப்பிய சவால் நியாயமானது. ஆனால் நடைமுறையில் அதற்கு இன்றும் வழியில்லை. ஏன் எனில் இன்னும் பெரும்பாலான வேத பாட சாலைகள் அனைவருக்கும் வாய்ப்பளிப்பதில்லை. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது எனவே புத்தகங்கள் அனைவருக்கும் கிடைக்கின்றன. ஆர்வலர்கள் படிக்கின்றனர். ஆனாலும் இன்னமும் பலர் வேதத்திற்கும் வேதாந்ததிற்கும் பிராமணக்குடியில் பிறந்தவர்கள் மட்டுமே உரிமையுடையவர்கள் என்கிறார்கள் என்பது உண்மை. முதலில் இது மாறவேண்டும். மாறும்.
    இன்னொரு கேள்வி சங்கரர் வேதாந்திதானே அவர் ஏன் வேத அத்யயணம் செய்வதை வலியுறுத்த வேண்டும். மடம் அமைக்க காரணம் என்ன என்பது.

    சாரங்க்கர் அதை இவ்வாறு எழுப்புகிறார்
    சங்கரர் கர்ம காந்தத்தினால் மனிதனுக்கு உய்வில்லை என்பதை தெளிவாக்குகிறார்.
    சங்கரர் ஒரு காலும் மடம் ச்தாபித்திருக்கவே மாட்டார், அதுவும் வேதா அத்யாயனம் செய்ய நிச்சயமாக இல்லை.

    ஸ்ரீ சங்கரர் ஞானத்தை வலியுறுத்தினார். அவர் கர்ம காண்டத்தை நிராகரிக்கவில்லை. மாறாக சடங்குகள் யாகங்கள் முக்தியை வழங்காது. என்று கூறினார். நித்ய கர்மானுஷ்டானங்களை அவர் விடச்சொல்லவில்லை, வழிபாடுகள் பூசைகள், ஜபம் இவை சித்த சுத்திக்கு வழிவகுக்கும் என்றார். கர்மகாண்டத்தில் காணப்படும் பலியிடுதலை ஏன் ஆலயங்களில் கூட உயிர் பலிகளை அவர் நிறுத்தினார். ஸ்ரீ ஆதிசங்கரரின் பெரும்பணி பிரிவு பட்ட வைதீகர்களை ஒருங்கிணைத்தது. ஞானம் முக்தியை வழங்கும் என்ற அவர் சன்யாசிகளுக்கே அதற்கு பெரிதும் உரிமையாக்கினார்.இல்லரத்தார் கர்மானுஷ்டானங்களைக் கொள்வதிலிருந்து அவர் விலக்கவில்லை.
    ஸ்ரீ சங்கராச்சாரியார் நான்கு மடங்களை நிறுவினார் என்பது வரலாறு. இதனை மறுப்பதற்கு சான்றுகளோ ஆவணங்களோ இல்லை. ஸ்ரீ இராமானுஜர் 64 ஆச்சாரிய பீடங்களை நிறுவி தமது நெறியைப் பரப்பினார். இன்றும் அவை உள்ளன.

  99. அன்புள்ள ஸ்ரீ ஆர்.வி.,
    அம்பேத்கர் சவால் விட்டதற்கு எப்படி ஒரு பொருளும் இல்லையோ அப்படித்தான் என் எண்ணத்தை நான் வெளியிட்டாலும் அதற்கு ஒரு பொருளும் இல்லை. ஏனெனில் என் எண்ணத்தைப் பொருட்படுத்தும் அளவிற்கு சங்கர மடங்கள் சாமானியமானவையும் அல்ல, பொருட்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிற அளவுக்கு நான் பெரிய மனிதனும் அல்ல. இந்த விஷயத்தில் சங்கர மடங்களிடம்தான் அவர்களின்
    எண்ணம் என்ன என்று கேட்க வேண்டும். சென்ற பதிலில் வருங் காலத்தில் தலித்துகளை வரித்துக் கொள்ளும் நிலை வரலாம், அல்லது அவர்களாகவே ஜ்வலிக்கலாம் என்று இருப்பதை வாசித்து அதுவே என் எண்ணம் என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாம். நீங்கள் திரும்பத் திரும்பக் கேட்பதற் கெல்லாம் எனது முந்தைய பகிர்வுகளிலேயே பதில் உள்ளது.
    சிறிது நிதானமாகப் படித்தால் தெரிய வரும். உதாரணமாக, கோபம் நியாயமானது, வாதம் சாரமில்லாதது என்று முன்னதாகவே நான் எழுதியிருந்தும் நீங்கள் கோபம் நியாயமானதா இல்லையா என்று கேட்டது. மேலும் நீங்கள் விவகாரங்களுக்குள் மேலோட்டமாகப் போய்விட்டு எகத்தாளத்துடன் கேள்வி கேட்பது. உதாரணமாக முகமதியர்- ஹிந்து திருமணம். பற்றி பிரஸ்தாபித்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டீர்களா என்று என்னிடம் இங்கே அனாவசியமாகக் கேள்வி எழுப்புவது! பிறகு என் எழுத்தில் அபத்தம் என்றும் விமர்சிப்பது! மனம் போன போக்கில் படிப்பதும் எழுதுவதும் தவிர்க்கப்பட வேண்டிய இயல்புகள் அல்லவா? நிதானமாய்ப் படித்து நிதானமாய்க் கேட்டலே நல்லது அல்லவா?. போதுமா? என் எழுத்து அப்படியொன்றும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்றாலும் அது தொடர்பாகக் கேள்வி கேட்க நீங்கள் விரும்பும்போது நிதானமாகப் படியுங்கள் என்று நான் உங்களிடம் வேண்டுவதில் தவ்று இருக்காது அல்லவா? இத்துடன் போதும் அல்லவா, என் அன்பார்ந்த ஸ்ரீ ஆர் வி?
    அன்புடன்,
    மலர்மன்னன்

  100. `“அப்படியானால் நீங்கள் மிகவும் எளிதான, அருமையான காரியம் ஒன்று செய்யலாம். மிகச்சிறிய விஷயம்தான். செய்துகாட்டுங்கள் பார்க்கலாம். எங்களைச் சேர்ந்த கே. கே. ஸகட் என்பவரை ஓராண்டிற்கு சங்கராச் சாரியாரின் இருக்கையில் அமர்த்துங்கள். புனே நகரின் சித்பவான் என்ற தீவிரப் பிராமண வகுப்பினர் நூறுபேர் அவருக்கு பாதபூஜை செய்யட்டும். இவ்வளவு சிறிய விஷயத்தை உங்களால் செய்துகாட்ட முடியுமானால் சமத்துவத்தை நிலைநாட்ட முடியும் என்று உங்கள் உள்ளத்தில் நம்பிக்கை ஊற்றெடுப்பதன் அடையாளமென அச்செயலை நாங்கள் கருதுவோம். மேலும் மதம் மாறுதல் குறித்த எங்கள் முடிவை ஒத்திவைப்போம்.”

    மேலே காணப்படுவதுதான் அம்பேத்கர் சொன்னது, இக்கட்டுரையின் பிரகாரம். இதன் தொனியைவைத்து சவால் அலலது நிபந்தனை என்றே
    கொள்ள முடியும். இதை அவர் சங்கர மடங்களை நோக்கிக் கூறவில்லை.
    மதம் மாற வேண்டாம் என்று கோர வந்த குழுவினரிடம்தான் கூறினார்.

    சங்கர மடங்கள் ஹிந்துக்களின் பொது அமைப்புகள் எனில் அம்பேத்கர் அவ்வாறு கேட்டதில் பொருளுண்டு. அவை பொது அமைப்புகளாக இல்லாதபோது அவர் அவ்வாறு கேட்டதில் பொருள் இல்லை. தூது வந்த குழுவினருக்கு அதிகாரம் இல்லாத ஒரு விஷயத்தை அவர்களிடம் அவ்ர் எதிர்பார்க்கிறார். மரியாதைக்கான எவ்வித யோக்கியதாம்சமும் இன்றி வீதியோரம் கிடக்கிற என்னிடம் உனது எண்ணம் என்ன என்று ஸ்ரீ ஆர்.வி. கேட்கிற மாதிரி!
    விஷயம் இவ்வளவுதான்.
    -மலர்மன்னன்

  101. இன்னும் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொலவதானால்:
    எந்த சங்கர மடப் பீடாதிபதியோ அல்லது அவர் சார்பில் அவரது பிரதிநிதிகளோ அம்பேத்கரிடம் மதம் மாற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தால் அப்போது அம்பேத்கர் அவ்வாறு கேட்டதில் பொருள் இருக்கும்.
    -மலர்மன்னன்

  102. சஙகர மடங்களின் நடைமுறைகள் குறித்து இங்கே தனியாக ஒரு கட்டுரை வெளியாகி அது குறித்துப் பல்ரும் அவரவர் கருத்துகலைத் தெரிவிக்கையில் நானும் எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொண்டிருப்பின்
    சங்கர மடங்களின் தற்போதைய நடைமுறைகள் குறித்து உன் எண்ணம் என்ன என்று என்னிடம் யாராவது கேட்டிருந்தால் அதில் பொருள் இருக்கும். ஒரு தலித் சங்கர மடப் பீடாதிபதி ஆகக் கூட்டது என்று எவரோ ஆவேசத்துடன் கூறிவிட்டதுபோல் இங்கு மறுமொழிகள் வரவும்தான் நானும் எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். நீண்ட நெடிய
    கருத்துப் பகிர்வுகளுக்குப் பிறகே, யாரோ தலித சங்கராசாரியா ஆகக் கூடாது என்று சொல்லிவிட்டதைப் போல் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தமையால ஒருவர் எரிச்சல் அடைந்து ஆமாம, தலித்தை சங்கராசாரியார் பீடத்தில் உட்கார வைக்க முடியாதுதான், போ என்று சொல்கிற அளவுக்கு முற்றிவிட்டது!
    -மலர்மன்னன்

  103. அன்புள்ள சிவஸ்ரீ விபூதிபூஷன்,

    //
    ஸ்ரீ சங்கராச்சாரியார் நான்கு மடங்களை நிறுவினார் என்பது வரலாறு. இதனை மறுப்பதற்கு சான்றுகளோ ஆவணங்களோ இல்லை
    //
    இதற்கும் சான்றுகள் இருக்கின்றன. மண்டன மிஸ்ரர் சுரேஸ்வரர் இல்லை என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

    மலர்மன்னன் அய்யா கூறியது போல இதை எழுதி ப்ரோயோஜனமில்லை – கேட்கும் நிலையில் நாம் இல்லை.

    மேலும் கர்ம காண்டத்தை சங்கரர் நிராகரித்தார் என்று நான் எங்குமே கூறவில்லை. வேத அத்யாயனம் செய்ய ஒருக்காலும் சங்கரர் மடங்களை ச்டாபித்திருக்க வாய்ப்பில்லை என்பது நான் எழுத வந்த முக்கிய விஷயம். சங்கரர் மடங்களை ச்தாபித்தாரா இல்லையா என்பது வேறு விஷயம் – இதை பற்றி விஷயம் தெரிந்த ஒருவர் வெகு சீக்கிரமே கட்டுரை எழுதுவார் என்று நம்புகிறேன்.

    ராமானுஜர் மடங்களை ஸ்தாபித்தது வேதங்களை பரப்புவதற்காக அல்ல. அவர் அமைத்தது 74 சிம்மாசனாதிபதிகள் – 74 மடங்கள் அல்ல. அவரது நோக்கம் முற்றிலும் சமுதாய முன்னேற்றத்தை சார்ந்தது. எப்படி வீராணம் ஏரி 74 கண்மாய்கள் மூலமாக அனைவருக்கும் நீரை பாய்ச்சி வளம் பெற செய்கிறதோ அப்படியே இந்த சிம்மசனாதிபதிகளும் இருக்க வேண்டும் என்று தான் 74 சிம்மாசனாதிபதிகளை ஸ்தாபித்தார்.

  104. //இதே போல பிற கட்சிக்கும் தலைவனா இருக்கணும் எழுதாத விதியா இல்ல இருக்கு அதை முதலில் மாத்துங்க அந்த அந்த கட்சியில் உள்ள ஒரு எ.ஸ் /எ.டி தொண்டனை தலைவனாக்குங்க அப்புறம் மடத்திற்கு ஒரு எ.ஸ் /எ.டி சங்கரர் ஆகலாம் முதலில் ராமசாமி நாயக்கர் கட்சியில் எத்தனை எ.ஸ் /எ.டி தலைவராக ஆக்கினாருனு சொல்லுங்க பார்க்கலாம். //

    ஜாதி சண்டை போடுவதற்கு மிகவும் விருப்பமானால் வேறு இடம் பார்ப்பது சிறந்தது – அதற்க்கு இந்து மதத்தை ஒரு இடமாக பயன் படுத்த இயலாது.
    அமைதியான ஆன்மீகத்தை அனைவருக்கும் தரும் மதம் இந்து மதம்.

    சமோகம் சர்வேசு நான் எல்லோரிடமும் சமமாய் இருக்கிறேன் , எனக்கு யாரும் வேண்டாதவர் இல்லை என்றார் கிருஷ்ணர். குகனை மார்புறத் தழுவி ஐவரானோம் என்றவர் இராமர். சாதி சண்டைகளை போட இந்து மதத்தை கூடாரமாக பயன் படுத்துவது இனியும் நடக்காது!

    //ஊருக்கு இளைத்தவன் ஓட்ட பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் ஆ,ஊ ன்நா இந்து மதத்தில் கைய வக்கறது என்னா எவநும் எதுவும் கேடக மாட்டான் பாரு//

    இந்து மதம் என்னும் ஊர் முழுதுக்கும் சொந்தமான நெய்யை யாரும் தன் பொண்டாட்டி கை என பாவிக்க கூடாது என்றுதான் சொல்லுகிறோம். சங்கராச்சாரியார் பதவி எங்கக் சமூகத்துக்கு மட்டும் தான், பிறர் வர முடியாது என்று இந்து மதத்திற்கு நாங்க மட்டும் தான் தான் பட்டா பாத்தியதை என்ற ரீதியில் செயல் பட வேண்டாம் என்றுதான் சொல்லுகிறோம். இந்து மதம் எந்த ஒரு தனிப் பட்ட சமூகத்தின் கையிலோ , தனிப் பட்ட நபரின் கையிலோ இப்போது இல்லை. இதைப் புரிந்து கொள்ளாமல் ஊருக்கு சொந்தமான நெய்யான இந்து மதத்தை வளைத்துப் போட்டு பட்டா போட முடியாது.

    //மடத்திற்கு ஒரு எ.ஸ் /எ.டி சங்கரர் ஆவது இருக்கட்டும் உங்களுக்காக சரியான தைரியம் இருந்தா தி.க,தி.மு.க, மற்றும் தமிழ் ,தமிழர் மீது அக்கரை காட்டுகிற கட்சிக்கு அடிமட்டத்தில் உள்ள ஒரு எ.ஸ் /எ.டி தொண்டனை தலைவனாக்குங்க பார்க்கலாம்,//

    இதை எல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்பே இதே இதழில் பின்னூட்டமாக சொல்லி இருக்கிறோம்.

    https://tamilhindu.com/2009/09/periyar_marubakkam_part15/

    //திருச்சிக் காரன்
    7 September 2009 at 8:54 am

    வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    திராவிட‌ர் க‌ழ‌க‌ம் ஆர‌ம்பித்த‌து முத‌ல் இன்று வ‌ரை ஒரு த‌லித் கூட‌ க‌ழ‌கத்தின் த‌லைவ‌ராக‌ வில்லையே?

    த‌லித் ஒருவ‌ரின் கையில் திராவிட‌ர் க‌ழ‌க‌த்தின் அனைத்து பொறூப்புக்க‌ளையும் ஒப்ப‌டைத்து விட்டு ஓய்வு எடுக்க‌ மான‌மிகு வீரமணியார் த‌யாரா?

    வ‌குப்பு வாரி பிர‌திநிதித்துவ‌ம் தானே பெரியாரின் கொள்கை?

    ஒரு த‌லித் ஒருவ‌ரை , ஒரே ஒரு வ‌ருட‌மாவ‌து முத‌ல்வ‌ர் ப‌த‌வியில் அம‌ர‌ வைக்க‌ த‌மிழின‌த் த‌லைவ‌ன் த‌யாரா? செய்வாரா? //

  105. அன்புக்குரிய திரு. சாரங் அவர்களே,

    சங்கரர் மடங்களை ஸ்தாபிக்க வாய்ப்பில்லை என்பதற்கு நீங்கள் கூறும் காரணம் என்ன? சும்மா அதைப் படி இதைப் படி என்றால், குறிப்பாக நீங்கள் சொல்ல வருவது என்ன? எந்த காரணத்தினால் சங்கரர் மடங்களி ஸ்தாபிக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் சொல்லவேயில்லை.

    ஆதிசங்கரர் வரலாறு பதிவு செய்யப் பட்ட ஒன்று. சும்மா ஜோடித்து வரலாறாக எழுதியது இல்லை.

    சங்கரர் மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்றால், அப்போது சிரின்கேறி மடம் எப்படி உருவானது, அதாக உருவானதா, விஜய் ரசிகர் மன்றம், ரஜினி ரசிகர் மன்றம் வூருக்கு வூர் ஆரம்பிப்பது போல ஆரம்பித்தார்களா?

    அப்படியானால் மக்கள் அவர்களை சங்கராச்சாரியார் என அழைக்க காரணம் என்ன?

    சிரிங்க்கேறி மடத்தின் 12வது பீடாதிபதி வித்யாரண்யர் என்பவரை ஹரிஹரர் புக்கர் ஆகியோர் சந்தித்து அதனால் விஜய நகர சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்ததாக வலிமையான வரலாற்று சான்றி உள்ளதே.

    சங்கரர் ஒரு மடம் கூட ஆரம்பிக்கவில்லை, என்று சொல்ல நீங்கள் விரும்புவது தெரிகிறது. ஆனால் ஒரு பாயிண்ட்டை கூட சொல்ல வில்லை.

    //சங்கராச்சரியார் சமஸ்க்ரித்த படத்தில் ஒரு காட்சி வரும்.//

    திரைப் படத்திப் பற்றி சொல்கிறீர்களா? அதில் என்ன வேண்டுமானாலும் காட்சி வரும்.

  106. அன்புக்குரிய திரு. சாரங் அவர்களே,

    //இதற்கும் சான்றுகள் இருக்கின்றன. மண்டன மிஸ்ரர் சுரேஸ்வரர் இல்லை என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

    மலர்மன்னன் அய்யா கூறியது போல இதை எழுதி ப்ரோயோஜனமில்லை – கேட்கும் நிலையில் நாம் இல்லை//

    எதற்குமே நீங்கள் சான்று கொடுக்கவில்லை.

    இருக்கு ஆனால் இல்லை என்பது போல சொல்கிறீர்கள்!

  107. அன்புக்குரிய திரு. சாரங் அவர்களே,

    இந்தக் கட்டுரையின் முக்கிய பேசு பொருள் சங்கர மடங்களின் பீடாதிபதிகளாக எல்லா மக்களையும், குறிப்பாக தலித் என அழைக்கப் படும் சமூகத்தை சேர்ந்தவர்களை அமர்த்தலாமா என்பது தான்.

    சங்கராச்சாரியார் உண்மையிலே நான்கு பீடங்களை நிறுவினாரா, வேதங்களைப் பாரிபாலுக்கும் பொறுப்பை யும் ஒப்படைத்தரா என்பது இந்தக் கட்டுரையின் பேசு பொருள் அல்ல.

    எனவே ஆதி சங்கரர் நிறுவியதாக சொல்லப் படும் நான்கு மடங்களை சேர்ந்தவர்களும் சும்மாச்ச்சுக்கும் இது சங்கரர் நிறுவிய மடம் என்று சொல்லுகிறார்களா, வரலாறு தவறு என்பதாக எல்லாம் நீங்கள் சொல்ல விரும்பினால், அது நீண்ட விவாதமாகுமனால் வேறு பொருத்தமான கட்டுரையில் விவாதிப்பதே பொருத்தம். இங்கே விவாதத்தின் திசையை மாற்றுவது அவசியமல்ல என நினைக்கிறேன்.

    கட்டுரையின் பேசு பொருள் பற்றி உங்களது கருத்து என்ன?

  108. இன்றைக்கு இருக்கிற மடங்களிலேயே ஓரளவுக்கேனும் சமத்துவமும் சமரசமும் காஞ்சித் திருமடத்திலேயே இருக்கிறது. எதிர்வரும் காலத்தில் நீங்கள் விரும்புகிற எதிர்பார்க்கிற சீர்த்திருத்தங்களும் அமைதியாக.. உண்டாகக் கூடிய சாத்தியங்கள் இம்மடத்திலே இருக்கிறது. இப்படியிருக்க, வீணே எல்லாவற்றையும் விமர்சிப்பது தேவையற்றதாகவே எனக்குத் தோன்றுகிறது.
    இப்போதெல்லாம் கர்நாடக மடத்தில் அம்மாநிலத்தவரே மடாதிபதியாகிறார்.

    எல்லா இடத்தும் இப்படியே நடக்கிறது. ஆனால் காஞ்சி சங்கர மடத்தில் பெரியவாள், ஜெயேந்த்ர சரஸ்வதி, பாலபெரியவர் இவர்களது பிறப்பகங்களே வேறு வேறு மாநிலங்கள்.. இப்படி பாரதத்தின் ஏன்.. பாகிஸ்தானிலோ பங்களாதேசிலோ நேபாளத்திலோ இலங்கையிலோ வைதீக குடும்பத்தில் சங்கர மடத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்ட குடும்பத்தில்.. வேதாத்யாயனம் செய்து வளர்ந்த பாலகன் சங்கராச்சார்யார் ஆக இயலும் என்றால் அது காஞ்சி சங்கர மடத்திலேயே சாத்தியமாகிறது.

    10, 12 வயதிலேயே மடத்தில் இணைந்து கற்று உயர்பவரே சங்கராச்சார்யார் ஆவது வழக்கம். அப்படி என்றால் சங்கரமடப் பாடசாலைகளில் வேதாத்யாயனம் செய்ய எல்லா வகுப்பாரையும் ஊக்குவிக்க வேண்டுமே ஒழிய.. வீணே இந்தா சங்கராச்சார்யாராக்கு என்று கோஷிப்பது நன்றாயிருக்காது.

    இன்றைக்கு சமபந்தி போஜனம் காஞ்சிச் சங்கரமடத்தில் நடக்கிறது. கும்பகோணத்தில் சங்கரமடம் சம்ஸ்கிருதப்பள்ளியை பராமரித்து சமூகத்தின் எல்லா வகையைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் சம்ஸ்கிருத அறிவூட்டுகிறது.. இது பற்றி இங்கேயே மதிப்பிற்குரிய ஜடாயு அவர்கள் ஒரு கட்டுரை வரைந்திருக்கிறார். காலப்போக்கில் இப்படிச் சம்ஸ்கிருதம் கற்று வளர்கிற பிள்ளையின் பிள்ளை சங்கராச்சார்யார் ஆகலாம். ( சங்கராச்சார்யார் ஆகிறவருடைய குடும்பம் நீண்ட காலமாக திருமடத்துடன் தொடர்பும் பக்திமையும் கொண்டு தொண்டு செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பெறுவதாகத் தெரிகிறது.. தவறில்லையே..?)

    ஆக, இப்படி தீடீரென்று அரசியலைப் போல ஆன்மீகத் திருமடத்தை அணுகிக் கூச்சல் போடுவதனை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத் தோன்றவில்லை.. அம்பேத்கர் சொன்னாரே என்றால் அவர் அப்பொழுது கோபத்தில் சொன்னால்.. அவரது வாதம் சரியானது.. ஆனால் அதன் கருத்து அமைதியாகச் சிந்திப்பதற்குரியது.

    ஈராயிரம் ஆண்டு வரலாறு படைத்த காஞ்சித்திருமடம் முதலியவற்றின் மேம்பாட்டையும் உயர்வையும் அது எத்தனையோ போராட்டங்களுக்கு இடையிலும் இன்றும் எழுச்சியுடன் திகழ்வதை அன்பர்கள் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

  109. சிலர் சங்கர மடம் என்று சொல்கிறார்களே , வடகலை, தென்கலை, மற்றும் சைவ மடங்களை பற்றி ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீர்களே என்று என் நண்பர் என்னிடம் கேட்டார்.

    அம்பேத்கார் பற்றிய இந்த கட்டுரை தொடரில் சங்கராச்சாரியார் ஆக்குங்கள் என்று ஆரம்பித்ததால் , இது ஏதோ சங்கர மடத்தை பற்றி மட்டும் விமர்சிக்கிறார்கள் என்று பலரும் கருத இடம் அளித்துவிட்டது.

    எல்லா மடங்களுமே, (ராமகிருஷ்ண மடத்தை தவிர), அந்த மடங்களின் நிர்வாகத்திற்கு தலைவராக ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவரையோ மற்றும் குறிப்பிட்ட வேதம் பயின்றவரையோ தான் பீடாதிபதியாக தேர்வு செய்கிறார்கள்.

    இதில் பார்ப்பனர் ( அத்வைதி, துவைதி, விஷிஷ்டாத்வைதி ),
    பார்ப்பனர் அல்லாதோர் (குன்றக்குடி, திருப்பனந்தாள், தருமபுரம், திருவாவடுதுறை மற்றும் இங்கு இடம் இல்லாததால் சொல்லமுடியாத பிற பார்ப்பனர் அல்லாத மடங்கள்) எல்லாமே இப்படித்தான் உள்ளன. இதில் சங்கர மடங்களை மட்டும் குற்றம் சொல்வதாக யாரும் நினைக்க வேண்டாம்.

    நாங்களெல்லாம் இன்றும் இந்த மதத்திலேயே இருப்பதன் அடிப்படையே, இது எங்கள் மதம் என்பதும், எங்கள் பாட்டன், முப்பாட்டன் மதம் என்பதாலும் மட்டுமல்ல, உலகிலேயே இந்த மதம் ஒன்று தான், சீர்திருத்தங்களுக்கும், உயர்வுக்கும் வழி உள்ள மதம் என்பதால் தான்.

    பிற மதங்களில் சுய சிந்தனை மற்றும் சுய முயற்சிகளுக்கு இடமே கிடையாது. எவனோ ஒருவன் எழுதிவைத்துவிட்டு போன நூல்களை ஒட்டியே வாழ்க்கை நடத்தவேண்டிய தலைவிதி இங்கு கிடையாது. நாங்களும் புதிய நூல்களை படைக்க முடியும். வேறு இடங்களில் அதற்கு வாய்ப்பு இல்லை, அந்த வாய்ப்பு இல்லாததால் அவை விரைவில் காலாவதியாகி போய்விடும்.

    நமது மத தத்துவங்கள் உண்மை என்பதால் தான் இங்கு இவ்வளவு விவாதங்கள் நடை பெறுகின்றன. மடங்களுக்கு தலைவர்களாக, மடத்தலைவர் பணியை செவ்வனே ஆற்ற தேவையான பயிற்சியை எல்லா சாதிக்காரர்களுக்கும் அளித்தால், எதிர்காலத்தில் இந்த பிரச்சினை ஒழிந்துவிடும். மேலும் பார்ப்பனர்கள் வேதம் படிக்கும் தொழிலை விட்டு, அதில் போதிய வருமானம் இல்லாததால், பலவேறு தொழில்களை செய்து வாழ்கிறார்கள். மிக சிலரே வேத படிப்பில் ஈடு படுகிறார்கள்.

    மடத்தலைவர், அர்ச்சகர் பணிகளில் எல்லா சாதியினரும் வரமுடியும் என்ற நிலை தோன்றினால், சாதி அடிப்படையிலான சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் நிகழும். இது காலத்தின் கட்டாயம். தலித்துக்கள் யாரும், வேதங்களுக்கோ, சைவத்திருமுறைகளாகிய திருவாசகம், தேவாரம் ஆகியவற்றுக்கோ, வைணவ நாலாயிரத்திவ்ய பிரபந்தங்களுக்கோ எதிரிகள் அல்ல. அவற்றை புனித நூலாக கருதி வாழ்வோரே ஆவார்கள்.

    நாத்திக இயக்கங்களில் தலித்துக்கள் மட்டுமல்ல, முற்பட்ட வகுப்புக்கள் என்று சொல்லப்படும் பார்ப்பனர்( அண்மையில் காலமான ஒருவர் உட்பட), செட்டியார், முதலியார், வன்னியர் என்று எல்லா ஜாதியினரும் உள்ளனர்.

    கடவுள் நம்பிக்கை உடையோரிடையே சாதி வேறுபாடுகள் மறையத்துவங்கினால், இந்து சமயம் பாரினில் தன்னிகரற்று விளங்கும். நம் சமயத்தின் தனிச்சிறப்பே எல்லைகள் அற்றது என்பதுதான். கால மாற்றத்துக்கு ஏற்றவாறு, கோடி கோடி புதிய கருத்துக்கள் இங்கு உருவாக்கி உலகிற்கே வழி காட்டும். இது உறுதி.

  110. சங்கரர் மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்று ஒரு நண்பர் சொல்லியுள்ளார். பாவம் அவருடைய ஆசையை நாம் கெடுப்பானேன்? இங்கு அது முக்கியமில்லை. யார் ஸ்தாபித்திருந்தாலும் , சங்கர மடம் ஒரு மிக்க மதிப்பிற்குரிய அத்வைத மடம் ஆகும்.

    வரலாற்று சண்டைகளில் இறங்கி வீண் பொழுது கழிக்கும் , சில நண்பர்கள் தயவு செய்து இந்து மத மேன்மைக்கும், எதிர்கால உலகில் நமது சமய வளர்ச்சிக்கும் எது தேவை என்று சிந்திப்பது நல்லது.

  111. நண்பர் திருச்சிகாரரே,

    //சங்கரர் ஒரு மடம் கூட ஆரம்பிக்கவில்லை, என்று சொல்ல நீங்கள் விரும்புவது தெரிகிறது. ஆனால் ஒரு பாயிண்ட்டை கூட சொல்ல வில்லை.
    //

    இதை நான் விரும்பி என்னத்தை சாதிக்க போகிறேன்? நான் முன்னமே சொன்னது போல பல பாய்ண்டுகள் உள்ளன – அதை சொன்னால் மறுமொழிகளில் வெறுமனே வார்த்தை வாதமே நடக்கும்.

    சங்கர பாஷ்யம் படித்தல் அவரது நேரடி சிஷ்யர் எழுதி வைத்ததை படித்தால் சங்கரரது நிலை என்ன என்று புரியும். வெறுமனே புராணம் போல எழுதி வைத்த விஷயத்தை படித்தால் சங்கரர் என்ன நினைத்திருக்கலாம் என்று தெரியாமலேயே வாதம் தான் செய்ய தோன்றும்.

    உதாரத்தினருக்கு மண்டன மிஸ்ரர் நிச்சயமாக சுரேஸ்வரர் இல்லை என்பதை தெரிந்து கொள்ள சுரேச்வர் எழுதிய பிரம்ம சித்தி நூலை படிக்கவும். குப்புஸ்வாமி டிரஸ்ட் மூலம் வெளிவந்த புத்தகத்தில் முன்னறையில் இதை நிரூபணமே செய்துள்ளார்கள்.
    மேலும் மண்டன மிஸ்ரர் எழுதிய புத்தகங்களை படிக்கவும். அந்த புத்தகங்கலளிருந்து சான்று காட்டி எழுதிய பிறரது புத்தகங்களை படிக்கவும்.

    என்னை விட விஷயம் நன்கு தெரிந்த ஒருத்தர் சங்கர மடம் பற்றி கட்டுரை எழுதுவார் என்று நம்புகிறேன். வேண்டகோள் விடுக்கிறேன்.

    சங்கரரை மடாதிபதியாக்க எனக்கு நிச்சயமாக எனக்கு விருப்பமில்லை – அது அவரது கோட்பாடுகளுக்கும், அவர் செய்த பாஷ்யத்திர்க்கும், அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும் முரணாக அமையும் அன்பது எனது நம்பிக்கை.

    ராமனுஜர் தான் இன்றுள்ள எல்லா வைணவ மடங்களையும் ச்தாபித்தாரா? எழுபத்தி நாலு சிம்மசனாதிபதிகளை தான் உருவாக்கினார் (இதில் பெரும் பாலானோர் குடும்பத்தார்கள், ஸ்வயம் ஆசார்யர்கள் – மடாதிபதிகள் அல்ல) . பிறகு எப்படி இத்தனை வைணம மடங்கள் இன்று உள்ளன ? யார் தொடங்கினார். அவர் விரல் விட்டு எண்ணக்கூடிய மடங்களை மட்டுமே ஸ்தாபித்தார் (திருக்குறுங்குடி) , எதையும் பரப்புவதற்காக அல்ல, கோவில் கைங்கர்யம் திறமுடன் செய்ய மட்டுமே.

    இது தான் ஸ்ருங்கேரி மடத்திற்கும் பதில். இதை எல்லாம் பற்றி ஒரு பிரசித்தி பெற்ற அத்வைதி அழகாக ஒரு நூலில் எழுதி வைத்துள்ளார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று வரை யாரும் பதிலே சொல்லவில்லை.

    வெறுமனே கேள்வி மட்டுமே எழுப்பாதீர்கள். கொஞ்சம் இது சம்பந்தமான புஸ்தகங்களை படியுங்கள்

    அப்புறம் திரைப்படத்தை பற்றி. சங்கராச்சாரியார் திரைப்படம் சமஸ்க்ருதத்தில் உள்ள ஒரே திரைப்படம். அது நிச்சயமாக ஒரு தரமான திரைப்படம். ஒரு முறை அந்த படத்தை தான் யுடுயுபில் பாருங்களேன்

  112. திரு சாரங்க் சொல்கிறது
    வேத அத்யாயனம் செய்ய ஒருக்காலும் சங்கரர் மடங்களை ச்டாபித்திருக்க வாய்ப்பில்லை என்பது நான் எழுத வந்த முக்கிய விஷயம்.

    அப்படியானால் நான் ஒன்று கேட்கிறேன். வேதம் அத்யயனம் செய்யாமல் உபனிடதம், பிரம்மசூத்திரம், பகவத் கீதைப் படிப்பது எப்படி வேதாந்தத்தினை அறிவது எப்படி. இது தும்பை விட்டு வாலைப்பிடிக்கிற கதை தானே சாரங்க் அவர்களே.

  113. திரு மயூரகிரி சர்மா சொல்கிறார்.
    இன்றைக்கு நமக்கு.. நம் இந்து தர்மத்தின் அனைத்துப்பிரிவினரையும் இணைப்பதற்கு ஒரு சிறந்த மடம் வேண்டும். சாக்தராயினும் வைணவராயினும் சைவராயினும் ஸ்மார்த்தராயினும் வடநாட்டாராயினும் தென்னாட்டாராயினும் மடத்தை ஓரளவேனும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    ஹிந்து மததின் சிறப்பே அது ஒற்றைக் குடைக்கீழ் இல்லாத்தே. ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவது அதற்கு அவசியம் இல்லை. கிறித்தவர்களின் சர்ச் கூட ஒன்றாக நெடுனாளாக இருக்க முடியவில்லை. மனிதன் அவனது மனம் மாறுபட்டது. ஆகவே பல்வகை சமய, தத்துவ, முறைகள், வழிகள் தவிர்க்க இயலாது என்பதை ஹிந்துக்கள் நம்புகிறோம்.
    ஒரு நிறுவன மதத்தில் ஒரு மடத்தின் கீழ் இது சாத்தியமில்லை.
    ஹிந்து மதம் கிறித்தவத்தைப் போன்று அல்லது இஸ்லாத்தைப் போல இல்லாமல் தனிமனிதனுக்கு ஆன்மீக சுத்ந்திரம் அளித்துள்ளது அது ஒரு மடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல் இருப்பதனால்தான்.
    ஹிந்து மக்களை ஒற்றுமைப் படுத்தவேண்டும் என்ற கருத்து நோக்கம் நியாய்மானது. ஏன் எனில் அப்படி நடக்காவிட்டால் கிறித்தவமாகலும் இஸ்லாமியமாக்கலும் தவிர்க்க இயலாதது. ஹிந்து சமயத்தின் வைதீக மற்றும் வைதீகரல்லாத பிரிவினர் ஒருவரை ஒருவர் மதித்தலும், விவாதித்தலும், நாட்டை தர்மத்தினை ஒற்றுமையோடு பாதுகாக்க முன்வருவதும் வேண்டும். சாதிய ஏற்றத்தாழ்வுகள், வறுமை, வேலையின்மை, கல்வியின்மை, சுகாதாரமின்மை போன்றவற்றை போக்க அனைவரும் தோளோடு தோள் கொடுத்து செயல் புரிதல் அவசியம்.

  114. ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு செய்யக்கூடாது என்று அம்பேத்கர் கூறினார். இதை யார் வழிமொழிகிராரோ அவரை சிருங்கேரி மட சங்கராச்சாரியாராக ஆக்கிவிடலாம்.

  115. அன்புக்குரிய திரு. சாரங் அவர்களே,

    மண்டன மிஸ்ரர் வேறு சுரேஸ்வாச்சாரியார் வேறு!

    சித்தார்த்தர் என்பவர் வேறு கௌதம புத்தர் என்பவர் வேறு!

    நரேந்திரன் என்பவர் வேறு, விவேகானந்தர் என்பவர் வேறு!

    திருவேங்கடத்தர் என்பவர் வேறு, பட்டினத்தார் என்பவர் வேறு!

    திருவேங்கடத்தரின் எண்ணமும், சிந்தனையும் , செயல்பாடும் பட்டினத்தாருடையது போல இருக்க முடியாது.

    மண்டன மிஸ்ரரின் எண்ணமும், சிந்தனையும் , செயல்பாடும் அவர் எழுதிய நூலும் சுரேஸ்வாச்சாருடையது போல இருக்க முடியாது.

    மற்றபடி நான் மண்டன மிஸ்ரர், ஆதி சங்கரர் காலத்தில் வாழ்ந்தவன் இல்லை. அல்லது பல பிறப்புகள் இருப்பதானால் எனக்கு வருடங்களுக்கு முந்தைய கால கட்டத்தில் நடந்தது எனக்கு நினைவில்லை.

    எனவே தர்மோடைனமிக்ஸ் கோட்பாடுகள் உண்மை என்று சொல்லும் அளவுக்கு மண்டன மிஸ்ரரும், சுறேச்வாச்சாரியாரும் ஒருவரே என என்னால சொல்ல இயலாது . நிரூபித்துக் காட்ட இயலாத எதையும் நான் உண்மை என அடித்து சொல்ல தயார் இல்லை.

    சங்கராச்சாரியாரின் முக்கிய நூல்களான மோக முத்கரம் விவேக சூடாமணி ஆகியவற்றை வெறுமனே படித்தால் மட்டும் போதாது. அவை எந்தளவுக்கு மனித வாழ்க்கையை பற்றி ஆராய்கின்றன என்பதை சிந்திக்கவும் வேண்டும்.
    தன்னுடைய வாழ்க்கை நிலையற்றது , நாம் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை வாஸ்தவத்தில் உணராதவர் ஆயிரம் நூல்களைப் படித்தாலும் பலன் இல்லை!

    நீங்கள் மட்டும் தான் சங்கராச்சாரியார் நூல்களைப் படித்து விட்டு எழுதுவது போலவும், மற்றவர்கள் எல்லாம் ஒன்றுமே படிக்காமல் எழுதுவது போலவும் எழுத விரும்பினால், திரும்ப திரும்ப எழுதிக் கொள்ளுங்கள். ஆனால் பாயிண்டை சொல்லாமல் அவர் சொல்லுவார், இவர் சொல்லுவார் என்றே சொல்லிக் கொண்டு இருங்க.

    முக்கியமான விடயம் இருந்தால் அதை இங்கே எழுதாலம், அதை விட்டு விட்டு நீங்கள் படிக்கவில்லை, சினிமா பாருங்கள் என்று சொல்வதால் என்ன உபயோகம். நீங்கள் சொல்ல விரும்புவதை இங்கேயே சொன்னால் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள்.

    //இது தான் ஸ்ருங்கேரி மடத்திற்கும் பதில்//

    சூப்பர் நீங்கள் ஏன் நான்கு மடங்களுக்கும் சென்று, அவர்களுக்கு உண்மையை எடுத்து சொல்லக் கூடாது? ஆதி சங்கரர் மண்டன மிஸ்ரருக்கு புரிய வைத்தாரே. இவ்வளவு பாஷ்யங்க்களைக் கற்ற நீங்கள் உண்மையை எடுத்து சொல்லலாமே.

    “ஆதி சங்கரர் எந்த மடத்தையும் ஆரம்பித்திருக்கவே முடியாது. உங்கள் மடம் ஆதி சங்கரர் ஆரம்பித்த மடம் இல்லை, யாரோ ஆரம்பித்த மடத்தை சங்கராச்சாரியார் மடம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

    ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்னால் நடந்தது உங்களுக்கு தெரியாது, எனக்குத் தெரியும்” என்று சொல்ல வேண்டியதுதானே. இங்கே உட்கார்ந்து சிக்னல் குடுக்க வேண்டாமே.

    அவர் சொல்வார், அவர் சொல்வார் என்றால் என்ன அர்த்தம், எவர் சொல்வார் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நேருக்கு நேராக வெளிப்படையாக பேசுங்கள். இப்படி சிக்னல் கொடுப்பது போல எழுதுவது அவசியமா?

  116. இங்கே நமது அன்புக்குரிய நண்பர் திரு, மயூரகிரி சர்மா ஏத்துக்கங்க ஏத்துக்கங்க என்று மிண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். அவர் தயவு செய்து தமிழ் நாட்டுக்கு வந்து இங்கே இருக்கும் மக்களிடம் ( 6 கோடி இந்துக்கள் உள்ளனர்) அதை சொல்ல வேண்டும். பதிலுக்கு அவர்கள் என்ன சொல்கிறார்க ள் என்று தெரிந்து கொள்வது அவருக்கு நல்லது, எல்லோருக்கும் நல்லது.

  117. திரு மயூரகிரி சர்மா கூறுகிறார்
    கும்பகோணத்தில் சங்கரமடம் சம்ஸ்கிருதப்பள்ளியை பராமரித்து சமூகத்தின் எல்லா வகையைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் சம்ஸ்கிருத அறிவூட்டுகிறது.

    நல்ல செய்தி. ஸ்ரீ சர்மா அவர்ளுக்கு நன்றி. ஸ்ரீ சங்கரமடத்தின் வேத பாட சாலைகளில் எங்கேனும் பிராமணக்குடியில் பிறவாதவர்களுக்கு இடம் இருக்கிறதா. என்பதே முக்கிய கேள்வி. ஆனால் கர்னாடக மானிலத்தில் உள்ள பிற மடங்களினால் நடத்தப்படும் வேத பாட சாலைகளீல் மற்றவர்க்கும் வாய்ப்பு உள்ளது என்பதே யாம் அறிந்த செய்தி.

  118. திரு சாரங் அவர்கள் குறிப்பிடுவது போல மாண்டனர் எழுதிய (இது சுரேஸ்வரர் எழுதியதல்ல. மண்டன மிஸ்ரர் எழுதியது) ப்ரம்மஸித்தி (Brahmasiddhi) என்ற நூலின் குப்புஸ்வாமி சாஸ்திரியாரின் padhippil ஆங்கில முன்னுரையில் சாஸ்திரியார் இருவரும் வெவ்வேறு என்று வரலாற்று ரீதியாக ஆதாரங்களைக் காட்டியுள்ளார். நடுநிலை நின்று ஆராய விரும்புபவர் அக்கட்டுரையை கீழ்க்கண்ட சுட்டியிலுள்ள பக்கத்தின் அடியிலிருந்து தொடங்கிப் படிக்கலாம் (requires installation of alternatiff plugin and firefox browser):

    https://www.dli.ernet.in/scripts/FullindexDefault.htm?path1=/rawdataupload/upload/0121/412&first=23&last=644&barcode=5990010121410

    சில உண்மைகள் நம் நம்பிக்கைகளுக்குக் கசப்பாக இருப்பதன் ஒரே காரணத்திற்காக அவ்வுண்மைகள் வெளிவருவதைத் தடுப்பது சரியன்று. ‘நமக்கு சவுகரியமாக இருக்கிறது’ என்ற காரணத்திற்காக ஒன்றை உரைக்கல்லில் தேய்த்துப் பார்க்காமல் நம்புவது முட்டாள்தனம் என்றே நினைக்கிறேன்.

  119. உண்மை என்று சொல்லி விட்டால் உண்மை ஆகி விட முடியாது, உண்மை என்றால் அதற்க்கு unqulaified proof வேண்டும்.

    குரான் தான் உண்மை , அப்பட்டமான உண்மை அது மட்டுமே உண்மை என்கிறார்களே , அதை ஒத்துக் கொள்ள தயாரா?

    .மண்டன மிஸ்ரர் சன்யாசம் பெற்று சுறேச்வாச்சாரியாராக இருந்தால் என்ன? இல்லை இன்னொருவர் இருந்தால் என்ன? நமக்கு ஒன்றும் இதிலே பிரச்சினை இல்லை. உண்மை எதுவாக இருந்தாலும் அதை ஒத்துக் கொள்கிறோம். ஆனால் சரியான ஆதாரம் வேண்டும்.

    என்னமோ டயம் மெசினில் உட்கார்ந்து கொண்டு பின்னோக்கி சென்று பார்த்து விட்டு வந்தது போல உண்மை உண்மை என்று சொன்னால் எப்படி உண்மையாகும்.

    நம்மைப் பொறுத்தவரயில் கோட்பாடு , அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது எந்த அளவிற்கு நன்மை இருக்கிறது என்று தான் பார்க்கிறோம்.

    இந்த சைட்டுக்க்ப் போ, பிளக் இன் பண்ணு என்றெல்லாம் சுற்றுவதை விட சொல்ல வரும் விடயத்தை எடுத்து இங்கே போடலாம். அதை செய்ய தயங்குவது ஏன்?

    அப்படியானால் அதில் அந்த அளவுக்கு சாரமுள்ள ஆதாரம் இல்லை என்றே எண்ணுவார்கள்.

  120. அன்பிற்குரிய நண்பர் திருச்சிக்காரன் அவர்களுக்கு ,

    //இங்கே நமது அன்புக்குரிய நண்பர் திரு. மயூரகிரி சர்மா ஏத்துக்கங்க ஏத்துக்கங்க என்று மிண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். அவர் தயவு செய்து தமிழ் நாட்டுக்கு வந்து இங்கே இருக்கும் மக்களிடம் ( 6 கோடி இந்துக்கள் உள்ளனர்) அதை சொல்ல வேண்டும். பதிலுக்கு அவர்கள் என்ன சொல்கிறார்க ள் என்று தெரிந்து கொள்வது அவருக்கு நல்லது, எல்லோருக்கும் நல்லது.//

    ஆஹா… அருமை.. நான் தமிழ்நாட்டுக்கு அண்மையில் வந்து போனேன். ஆனால் அப்படி என்னிட்ம் சங்கரமடம் பற்றி ஒருவரும் தாழ்வாகப் பேசவில்லை. .. வழமையான முன்பே ஊடகங்களில் படித்த சில செய்திகள் தான் கிடைத்தன.

    ..இது நிற்க.. நான் இதை ஒரு ஆய்வாக அப்போது எடுத்துக் கொள்ளவும் இல்லை.. சரி.. என்ன தான் நினைக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்கள் செய்தியை அறிந்து கொள்வது நல்லது தானே..

    நான் ஒண்ணும் கட்டாயம் ஏத்துக்கங்க.. ஏத்துக்கங்க என்று சொல்லவில்லை.. கொஞ்சம் அமைதியாக அந்தப் பக்கத்து நியாயத்தையும் கேட்கலாமே.. என்று சொன்னே;. இப்போ, ஆதிசங்கர பகவத் பாதாள் மடமே ஸ்தாபிக்கல.. என்று சொல்லுறதை உங்களால் ஏத்துக்க முடியிறதா? அவர் கணேசபஞ்சரத்னம், சுப்பிரம்மண்ய புஜங்கம், சௌந்தர்ய லஹரி, கனகதாராஸ்தவம், இவை ஒண்ணும் பாடல.. வெறுமனே கீதைக்கும் பிரம்மசூத்திரத்திற்கும் விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கும் பாஷ்யம் மட்மே செய்தார்.. என்றும் சொல்கிறார்கள்.. என்றால் அதையும் நீங்கள் ஏத்துக்க முடியுமா?

    ஆக, வயதில்.. அனுபவத்தில் ..அறிவில்… சிறியவனான நான் எனக்குத் தோன்றுவதை இங்கு சொல்கிறேன்… எவரையும் அதனைக் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லவும் இல்லை.. அப்படிச் சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை என்பதும் எனக்குத் தெரியும்..

    இன்னொரு விஷயம் நான் காஞ்சி சங்கரமடம் மட்டுமன்றி மற்றும் திருவாவடுதுறையாதீனம், தருமபுரம் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் ஆகியவற்றிற்குச் சென்று ஆங்காங்கே உள்ள பீடாதிபதிகளுடன் பேசியிருக்கிறேன்..

  121. அடடா இங்கு இன்னும் விவாதம் தீரவில்லையா. எனக்கு ஆதிசங்கரர் பற்றி பெரிதாக தெரியாது. ஆதலால் உங்கள் விவாத்தில் என்னால் பங்கு கொள்ள முடியவில்லை 🙁

    நேரடியாக விசயத்திற்கு வருகிறேன். தலைப்பு மதமாற்றம் சம்மந்தப்பட்டது.

    நீங்கள் ஒட்டு மொத்தமாக பிராமணர்களை சங்கர மடத்தில் இருந்து வெளியேற்றி தலித் என்று சொல்லப்படும் மக்கள் அனைவரையும் அங்கு பொருப்பாளர்களாக அமர வைத்தாலும் மத மாற்றம் நிற்க போவது இல்லை. இது தான் நிதர்சனம். முதலில் இதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

    கொள்ளை அடிக்க வேண்டும் என்று நினைப்பவன் எந்த விதத்திலும் வருவான். நீங்கள் வாசலை பாதுகாத்தால் ஓட்டை பிரித்து வருவார்கள். ஓட்டை பலப்படுத்தினால், பின்வாசல் வழியாக வருவார்கள். பின்வாசலையும் பலப்படுத்தினால், சுவரை இடித்து வருவார்கள்.

    மதமாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் எதாவது காரணத்தை காட்டி மாற்றுவான், இல்லை என்றால் காரணத்தை உருவாக்குவான்.

    தேவை, இவர்களின் முகத்திரையை கிழித்து இவர்களை பொது மக்கள் மத்தியில் நிர்வாணப்படுத்தினால் தவிர வேறு எதுவும் இவர்களை தடுக்க முடியாது.

    பிராமணன் அல்லாதவன் என்ற முறையில் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். கோயிலிலோ அல்லது மடத்திலோ வேலை செய்வது என்பது அவ்வலவு எளிதான காரியம் கிடையாது. வீம்புக்கு பேசும் பொறுக்கிகள் எதை செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கத் தான் செய்வார்கள்.

    ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனிப்பட்ட குலக் கோயில்கள் உள்ளன். தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லப்படும் மக்களுக்கும் தனிப்பட்ட குலக்க் கோயில்கள் உள்ளன. எங்கள் குலக் கோயில்களின் எந்த காலத்திலும் நாங்கள் பிராமணர்களை அனுமதித்து கிடையாது. காலம் காலமாக பூசாரிகள் தான் பூஜை செய்கிறார்கள்,

    சங்கரமடம் என்ன அமைச்சர் பதவியா? அது இறைவனுக்கும் ஒரு கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது. அது மட்டும் என்றி சங்கர மடம் என்பது ஒட்டு மொத்த ஹிந்துக்களின் பிரதிந்தி அமைப்பு இல்லையே?

    இந்த பண்பாட்டிற்கு கட்டுபடாத பல அமைப்புகள் உள்ளனவே? ஏன் ISKON இல்லையா? எத்தனையோ ஆன்மீக அமைப்புகள் இல்லையா? அதை எல்லாம் விட்டு விட்டு அம்பேதகர், நம்ம மஞ்ச துண்டு போல எதோ சொல்லிவிட்டார். இதற்கு எல்லாம் நாம் அதிக முக்கியதுவம் கொடுக்கக் கூடாது.

  122. திருச்சிகாரரே,

    நான் மட்டும் தான் படித்துவிட்டு எழுதகிறேன் என்று சொல்லவில்லை. நீங்கள் படிக்காமல் எழுதுகிறீர்கள் என்று மட்டுமே சொன்னேன் – இது உண்மைன் தானே?

    நான் ஏன் படியுங்கள், அவர் சொல்லுவார், படம் பாருங்கள் என்று சொல்கிறேன் தெரியுமா – எல்லாம் ஒரு எதார்த்த முன் அனுபவம் இருப்பதால் தான்.

    வைணவத்தில் கூட அழ்வார்களுள் ஒருவரான குலசேகர ஆழ்வார் தான் முகுந்தா மாலை என்ற சமஸ்க்ரித்த நூலை எழுதினார். ஆஹா பிரமாதம் உபய மொழிகளிலும் ஆழ்வார் அமுது படைத்துள்ளார் என்று பலர் சொல்லி வருகிறார்கள் – இதையும் கூடத்தான் நான் மறுக்கிறேன். ஆழ்வார் வேறு, முகுந்தா மாலை எழுதிய குலசேகரர் வேறு என்று ஆதாரம் உள்ளது அதனால் தான்.

    அதே போல சுரேஸ்வரர் வேறு, மண்டன மிஸ்ரர் வேறு என்பதற்கும் ஆதாரம் உள்ளது – நீங்கள் தான் எதையும் பார்க்காமல் நம்பவே மாட்டேர்களே. மண்டனரோ, சுறேச்வரரோ நேரில் வந்து சாட்சி சொன்னால் தான் உண்டு.

    பிரம்ம சித்தி புஸ்தகமும், நைஷ்கர்ம்ய சித்தி புஸ்தகமும் என்னிடமிருக்கு. அதில் உள்ளதை அப்படியே சொல்லு என்றால் எப்படி முடியும். அது எளிதில் சொல்லி புரிய வைக்க கூடிய விஷயமா இல்லை. நேரில் சந்தித்தாலோ, அல்லது நீங்களே முயற்சி செய்து புஸ்தகம் படித்தாலோ தான் அது சாத்தியம். இது கூடவா உங்களுக்கு புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது. sulfuric acid extraction process என்ன என்று கேட்டால் – அது இந்த புத்தகத்த்ல் இருக்கு படியுங்கள் என்று சொன்னால் தப்பா?

    இவ்வளவு வீணாக இங்கே எழுதுவதற்க்கு பதில், புஸ்தகத்தை படித்து தான் பாருங்களேன்.

  123. அன்புக்குரிய மயூரகிரி சர்மா,

    சங்கராச்சாரியார் மடங்கள் எதையும் ஸ்தாபிக்கவில்லை என்றால் அது உண்மை என்றால் எனக்கு அதை ஏற்றுக் கொள்வதில் எந்த வருத்தமோ, கசப்புணர்ச்சியோ இல்லை. ஆனால் ஆதி சங்கரர் மடங்களி ஸ்தாபித்தார் என்பதற்கு வலுவான் வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. அது இல்லை என்றால் ஆதாரங்களிக் குடுங்கள். இதைப் படி, அதைப் படி சினிமா பார் என்கிறாகள்.

    அன்புக்குரிய சாரங்,

    பள்ளிகளிலும், கல்லூரியிலும், நூலகங்களிலும் வரலாற்று நூல்களை படித்து விட்டுத்தான் வந்திருக்கிறோம். நான் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய இந்திய பொறியியல் பணிக்கான நுழைவுத் தேர்வில் பொது அறிவுப் பகுதியில் ஒரு கேள்வி கீழே உள்ள இடங்களில் சங்கராச்சாரியார் மடம் ஸ்தாபிதம் இல்லாத் இடம் எது என்று கேட்டு பூரி, காசி, சிரிங்கேறி, துவாரகா என்று கேட்டு இருந்தார்கள்.

    உங்களுக்கு விருப்பமான நூல்களை படித்திருந்தால் ஒருவன் ஆராய்ச்சியாளன், இல்லை என்றால் அவன் புராணக் கதைகளை கேட்டு நம்பும் வெகுளி பாமரன் என்பதாக இருக்கிறது உங்கள் கருத்து.

    sulfuric acid extraction process ஐ பற்றி ஒரு பாராவிலோ, இரண்டு பாராவிலோ மூன்று பாராவிலோ விளக்க இயலும். அதே போல நீங்கள் குறிப்பிடும் நூல்களில் சொல்லப் பட்ட முக்கியக் கருத்து என்ன என்று இங்கே எழுத முடியும். ஆனால் மீண்டும், மீண்டும் போய் படித்துப் பார்த்துக்க என்று சொல்வது, சாரமற்ற புனைவுகளாக இருக்குமோ, அதனால் இங்கே எல்லோரின் முன் வைக்க விரும்பவில்லையோ என பலரும் எண்ணும் படிக்காக உள்ளது.

    நான் எழுதுவது வீண் என்றே வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் எழுதுவதையாவது உருப்படியாக எழுதலாமே. போய்ப் படித்துப் பார் என்று பத்து முறை எழுதுவதை விட இதுதான் முக்கிய விடயம் என்பதைக் குறிப்பிடலாமே.

  124. அன்புக்குரிய சோழன் அவர்களே, வணக்கம்.

    உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

    மத மாற்றம் கூடாது என்பதற்காக நாங்கள் தலித் சங்கராச்சாரியாராக வேண்டும் என்று சொல்லுகிறோம் என்பதை விட , இந்து மதம் அனைவருக்கும் பொதுவான் மதம் சம வாய்ப்பளிக்கும் மதம் என்பதற்காக சொல்லுகிறோம். அதையும் விட முக்கியமாக எந்த வித காரணமும் இல்லாமல் ஒருவரை பிறப்பு அடிப்படையில் ஒதுக்குவது அநீதி. ,இதிலே இந்து மதம் இவ்வாறு இருப்பதாக சொல்லவில்லை.

    //ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனிப்பட்ட குலக் கோயில்கள் உள்ளன். தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லப்படும் மக்களுக்கும் தனிப்பட்ட குலக்க் கோயில்கள் உள்ளன. எங்கள் குலக் கோயில்களின் எந்த காலத்திலும் நாங்கள் பிராமணர்களை அனுமதித்து கிடையாது. காலம் காலமாக பூசாரிகள் தான் பூஜை செய்கிறார்கள்,//

    எந்த ஒரு குலக் கோவில்களிலும் வலுக் கட்டாயமாக நுழைய நாம் விரும்பவில்லை, அவர்களே மனமுவந்து வரவேற்றாலே சிறப்பு.

    அதே நேரம் இந்து மதம் என்பதே வெறுப்புணர்ச்சி இல்லாத மதம் என்பது உங்களுக்கு தெரியும். உங்களுக்கு குலக் கடவுளாக யார் இருந்தாலும் பிற தெய்வங்களான அம்மன், முருகன் , இராமர் ஆகியோரை வழிபட அனேகமாக நீங்கள் தயங்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது உங்கள் பகுதியில் ஒரு இராமர் கோவில் கட்டுகிறார்கள். தலித் என சொல்லப் படும் மக்கள் வசிக்கும் பகுதியிலும் இராமர் கோவில் கட்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இருவரும் வணங்கும் தெய்வம் வேறல்ல.

    அப்படி இராமரை வணங்கும் ஒருவர், சீதைக்கு இழைக்கப் பட்டது போன்ற இன்னல் தன்னால் எந்தப் பெண்ணுக்கும் வரக் கூடாது என்று உறுதி பூண்டால், இராமரைப் போல எவ்வளவு கஷ்டத்திலும் பொறுமையுடன் கொள்கை மாறாது வாழ்வது என உறுதி பூண்டால், அப்படி பட்டவர் தாழ்மையானவராக கருதப் பட முடியுமா. அப்படிப் பட்டவரை உங்கள் உற்ற தோழராக மனம் உவந்து நீங்கள் ஏற்பீர்களா இல்லையா? இராமரின் அண்மையினால் அனைவரும் தங்களது இயல்பான நல்ல எண்ணங்களை வலுப் படுத்தி பட்டை தீட்டி சிறந்த கணவானாக முடியும். இராமரின் அவையில் சுமேந்திரர், வசிட்டர், குகன், அனுமன், சபரி, வீபீடணன் ஆகிய எல்லோருக்கும் வேறுபாடே இல்லை, இராமரின் கொள்கையே அவர்கள் கொள்கை, அது சிறந்த கொள்கை, அதை எல்லோரும் உள்வாங்கி ஜொலிக்கினறனர், இருப்பது அன்பு மட்டும்தான்.

    இவ்வாறாக இந்து மதத்தின் ஆன்மீகம் மக்களை மேம்படுத்தி கனவானாக அன்பின் அடிப்படையில் இணைக்க முடியும். இதை செய்து காட்டியவர் இணையற்ற ஸ்ரீ இராமானுஜாச்சாரியார்

    மேலும் எந்த ஒரு மாற்றத்தையும் வலுக் கட்டாயமாக திணிப்பது நீண்ட நாள் நிற்காது . மாற்றம் மனப் பூர்வமாக நடை பெற வேண்டும்.

    அடிப்படையில் எல்லா மனிதர்களும் நல்லவர்களே, அவர்களுடைய சூழ்நிலை, சுற்றி நடக்கும் நிகழ்வுகள், கேட்கும் பேச்சு, படிக்கும் நூல்கள், நட்பு… இவை எல்லாமே ஒரு மனிதனை உருவாக்குகின்றன.

    எந்த‌ அளவுக்கு க‌ன‌வான்க‌ள் ஒரு ச‌முதாய‌த்தில் இருக்கிரார்களோ அந்த‌ அளவுக்கு அந்த‌ ச‌முதாய‌ம் நாக‌ரீக‌மான‌ ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் ஆகும்.

    பீடிக்கு நெருப்புக் கேட்பதில் ஆரம்பித்த தகராறு மிக விரைவாக மிக எளிதில் கொலையில் முடிகிறது. பெரும் சாதிக் க‌ல‌வ‌ர‌மாக‌வும் ஆகிற‌து. அந்த அளவுக்கு கட்டுப்பாடு இல்லாத, கோவத்தை அடக்க முடியாத சமூகமாக இருக்கிறோம்.

    ம‌ற்ற‌வ‌ரை தாழ்மையாக‌ எண்ணுப‌வ‌ர்களை வைத்து, ச‌க‌ ம‌னித‌ரின் வாயிலே பீ திணிப்ப‌வ‌ர்க‌ளை வைத்து, பிற‌ ம‌னித‌ரின் த‌லையை வெட்டி தெருவிலே உருட்டுப‌வ‌ர்க‌ளை வைத்து ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் உருவாக்க‌ முடியாது.

    அன்பும், பிறரை மதிக்கும் பழக்கமும், நிதானமும், கட்டுப்பாடும், நாகரீகமும் இல்லாத மக்கள் தொகுப்பை வைத்து சாதிகள் இல்லாத நாக‌ரீக‌ சமத்துவம் சமுதாயம் உருவாக்க முடியாது.

    எந்த‌ அளவுக்கு க‌ன‌வான்க‌ள் ஒரு ச‌முதாய‌த்தில் இருக்கிரார்களோ அந்த‌ அளவுக்கு அந்த‌ ச‌முதாய‌ம் நாக‌ரீக‌மான‌ ச‌மத்துவ‌ ச‌முதாய‌ம் ஆகும்.

  125. //ஆஹா… அருமை.. நான் தமிழ்நாட்டுக்கு அண்மையில் வந்து போனேன். ஆனால் அப்படி என்னிட்ம் சங்கரமடம் பற்றி ஒருவரும் தாழ்வாகப் பேசவில்லை. .. //

    ரொம்ப சவுகர்யம். அப்ப இந்தியாவின் பிற பகுதிகளிலும் இப்படியே தான் இருக்கும். நீங்கள் விரும்பியது போல ஒரு வகையான் ஏற்றுக் கொள்ளுதல் இருக்கிறது , மகிழ்ச்சிதானே.

    இதற்க்கு மேல் நான் எழுதி ஆகப் போவதில்லை. தமிழ் இந்து, நான் எழுதுவதில் கிட்டத் தட்ட எல்லா பின்னூட்டங்களையும் , அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பதிவு இட்டு விடுகிறது.

    ஆனால் சில பின்நூட்டங்ககுள் சிறியதாக் இருந்தாலும் அவற்றை போடுவதில்லை. இதில் நான் அவர்களை சொல்ல ஒன்றுமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோட்பாடு உள்ளது.

  126. புராணங்களின் ஆதாரத்தில், நம்பிக்கையின் அடிப்படையிலேயே எதுவும்
    பேசப்படுவதால் நம்பிக்கைக்கு ஊறு செய்தல் கூடர்து என்றுதான் மண்டன்
    மிச்ரரும் சுரேஸ்வரரும் ஒருவர் அல்ல என்கிற ஆய்வும் உள்ளது என்று
    பட்டுக்கொள்ளாமல் சொன்னேன். அதற்கே குதர்க்கமான வாதங்கள் எல்லாம் வந்தன. சங்கர மடங்களின் தோற்றுவாய் பற்றியும் நம்பிக்கைக்குப்
    புறம்பாக ஏதும் சொல்லி பிரச்சினை பண்ண வேண்டாம் என்றுதான் பலரின்
    நம்பிக்கையை அனுசரித்தே கருத்து தெரிவித்து வந்தேன். என்னைக் கேட்டால் நம்பிக்கை தொடர்பான சில விஷயங்களை ஆய்வுப் பார்வையுடன் எழுதும் கட்டுரைகளை இங்கு தவிர்த்து வேறு கருத்தரங்குகளில் அவற்றைப் பேசுவது தேவையற்ற விதண்டா வாதங்கள்
    நிகழ்வதைத் தவிர்க்கும். கோவில்களுக்குப் போகும்போது அங்கு சொல்லப்
    படும் ஸ்தல புராணங்களைக் கேட்டு அப்படியா, சரி என்று போவதில்லையா,
    அது மாதிரிதான்., ஏனெனில் கவ்னம் செலுத்த வேண்டிய விஷயங்கள்
    பல உள்ளன. ச்ர்வ ஸ்ரீ ஸாரங், கந்தர்வன் ஆகியோருக்கு நான் சொல்ல்லக்
    கூடியது இதுதான்.
    -மலர்மன்னன்

  127. மதிப்பிற்குரிய மலர்மன்னன் ஐயா,

    //என்னைக் கேட்டால் நம்பிக்கை தொடர்பான சில விஷயங்களை ஆய்வுப் பார்வையுடன் எழுதும் கட்டுரைகளை இங்கு தவிர்த்து வேறு கருத்தரங்குகளில் அவற்றைப் பேசுவது தேவையற்ற விதண்டா வாதங்கள்
    நிகழ்வதைத் தவிர்க்கும்.//

    இப்படியே பல விஷயங்களை நாம் தள்ளிப் போட்டு விட்டால் பூதாகாரமாகிவிடும். நடுநிலையான ஆராய்ச்சி எது, விதண்டாவாதம் எது என்பது படிப்பவர்களுக்கு எளிதாகப் புலனாகும்.

    வரலாற்று ஆய்வு விஷயங்களை இங்கு தவிர்த்து வேறு எங்கு எழுதுவது? எனக்குத் தெரிந்து தமிழ் ஹிந்து போன்ற அரசியல் சார்பற்ற, நடுநிலையான, அறிவுப் பூர்வமான விவாதக் களம் இணையத்தில் வேறு எங்கும் கிடையாது.

    ஒரு ஆச்சாரியார் திக்விஜயம் செய்ததை சங்கரவிஜயம் போன்ற காவியங்கலாகப் படைப்பது பெரும்பாலும் அந் நூலாசிரியரின் அபிமான – அனுபவ ரீதியிலானதே ஒழிய அதை வைத்துக்கொண்டு ஒரு வரலாறு சமைப்பதற்காக அல்ல என்பதை நம்மவர் நன்கு புரிந்துக் கொண்டால் பல நன்மைகள் ஏற்படும் என்றே நினைக்கிறேன்.

    இதை மறந்துவிட்டு, சங்கரருடைய வாழ்க்கை பற்றியும் சித்தாந்தம் பற்றியும் தெரிந்து கொள்வதற்கான பிரதான ஆதாரமாகிய அத்வைத வேதாந்த பாஷ்ய-அனுபாஷ்ய-வார்த்திக-டீக நூல்களைப் புறக்கணித்து விட்டு, மிகமிகப் பிற்காலத்தில் எழுதப்பட்ட சங்கர விஜய நூல்களில் உள்ள செய்திகளை வரலாற்று உண்மை என்று நம்புவதனால் என்ன பயன்? பிரதான வரலாற்று ஆதாரங்களுக்கு முரண்பட்ட செய்திகளைப் பிரச்சாரப்படுத்துவதால் நாமே நம்மை மற்றவர்கள் எள்ளி நகைக்கத் தக்கவர்கலாகத் தான் ஆக்கிக்கொள்கிறோம். “இந்து மத நம்பிக்கைகள் ஒரு புரட்டுக் களஞ்சியம்” என்ற போக்கு தான் விளையும்.

    நமது சனாதன தர்மத்தின் பெருமைக்கு ஆணிவேராக, அசைக்க முடியாத தூண்களாக, வரலாற்று ரீதியாக – அறிவியல் ரீதியாக பல இலக்கிய, கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. அவற்றைப் பேணிப் பாதுகாத்து பிரச்சாரப் படுத்தினால் தானே நல்லது? இவ்வாதாரங்கள் கூறும் செய்தியை மறுப்பது நம் தர்மத்திற்கு நாமே செய்யும் பெரும் பாவமன்றோ? நம்மவர்கள் ஒரு சில காரணங்களுக்காக பிரத்தியக்ஷமாகக் கிடைக்கக் கூடிய இத்தகு ஆதாரங்களுக்கு முரண்பட்ட சில கருத்துக்களை, ‘நம்பிக்கை’ என்ற பெயரில் பிடிவாதமாகப் பற்றி வந்தால் அதனை ஆதாரம் காட்டிக் களைவதில் என்ன தவறு இருக்கிறது?

  128. // நான் எழுதுவது வீண் என்றே வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் எழுதுவதையாவது உருப்படியாக எழுதலாமே. போய்ப் படித்துப் பார் என்று பத்து முறை எழுதுவதை விட இதுதான் முக்கிய விடயம் என்பதைக் குறிப்பிடலாமே. //

    இது போதும் என்று நினைக்கிறேன்:

    Extract from Brahmasiddhi introduction:

    page l (roman number 50):

    “In none of the available authoritative works on the advaita system, Mandanamisra is identified with Suresvara, while, in many Vedantic works of the Advaita and Dvaita schools, Mandana and Suresvara are distinguished as two different advaitins.”

    “Sarvajnatmamuni and the commentators on the Samksepasariraka differentiate Mandana from Suresvara and draw attention to the fact that the former’s prasthana (school of thought) is different from Samkaraprasthana, while the latter closely follows Samkara”.

    page li (roman number 51):

    “Anandanubhava, a great samnyasin of the advaita school, who is presupposed by Citsukha in his Tattvapradipika and who is the author of the advaita treatise called Nyayaratnadipavali, distinguishes Mandana and Suresvara in unmistakable terms in that section of the Nyayaratnadipavali in which the samnyasa of the Tridandin type advocated by Bhaskara and his followers is assigned to an inferior place and samnyasa in the strict sense of the term is maintained to be of the Ekadandin type, involving the total renunciation of all the Vedic rites and of the two external symbols of Vedic rites — the sacred thread (Yajnopavita) and the tuft of hair on the crown (Sikha). In this section of the Nyayaratnadipavali, Anandanubhava refers to Visvarupa, Prabhakaraguru, Mandana, Vacaspati and Sucaritamisra as reputed and reliable exponents of vedic religion and as having signified their approval of the samnyasa of the Ekadandin type. It is also stated in the same section of the same work that Visvarupa and Prabhakara themselves became Ekadandi-samnyasins, that Visvarupa expressed himself in favour of Ekadandi-samnyasa, in the smrti work (Balakrida, commentary on the Yajnavalkya Smriti) which he wrote when he was a grhastha and not subsequent to his becoming a samnyasin, and that Visvarupa came to be known as Suresvara in his Samnyasasrama. It may also be clearly made out from this work that Mandana did not himself become a Samnyasin, though he was prepared to recognise the Sastraic sanction in favor of Ekadandi-samnyasa, while Bhatta-Visvarupa himself became a samnyasin of the Ekadandin type.”

    page lii (roman 52):

    “Anandagiri, who wrote a commentary on Anandanubhava’s Nyayaratnadipavali and also a commentary on Suresvara’s Vartika, besides several other works, has no doubt whatever that Suresvara and Mandana are different persons and points out that Suresvara repudiates Mandana’s view in favour of prasamkhyana in the Brhadaranyakavartika.”

  129. அன்பார்ந்த ஸ்ரீ கந்தர்வன்,
    மண்டனரும் சுரேஸ்வரரும் ஒருவரல்ல எனவும் ஓர் ஆய்வு உளளது என்று
    சொன்னதற்கே பின்வருமாறு மனம் போன போக்கில் மறுமொழிகள் வருகின்றன ( இறுதியில் குறிபிட்டுள்ளேன்).. இந்த லட்சணத்தில் ஆய்வு பூர்வமாக எதை எழுத ஈடுபாடு இருக்கும்? எழுதியபின் வருகிற பின்வரும் மறுமொழிகளுக்கெல்லாம விளக்கமும் அளித்துக்கொண்டிருக்க வேண்டும். தவறினால் விளக்கம் இல்லை என்றாகிவிடும். அளித்தால் மேலும் மேலும் விதண்டா வாதங்களே தொடரும். இந்தச் சூழலில் என்ன எழுத முடியும்?
    நீங்கள் சொல்வதெல்லாம் சரியே என்றாலும் வீண் சச்சரவுகள்தானே
    இறுதி விளைவாக உள்ளன? மேலும் இங்கு நான் கருத்துப் பகிர்வு செய்வதே வாசகர்கள் சிலர் உன் கருத்து என்ன என்று கேட்பதால்தான். பிறகு ஏனடா மறுமொழி அளித்தோம் என்று தோன்றத் தொடங்கி விடுகிறது!
    படித்துப் பாருங்கள், பின் வரும் மறுமொழிகளை:,

    //மண்டன மிச்ரரும் சுரேஸ்வரரும் ஒருவரல்ல என்பதுதான் கதை கட்டுவதுஆகும்!

    நாம் சொன்னது என்ன என்று காட்ட வரலாற்றை திரித்து எழுதி தத்துவத்தை சிதைத்து இந்தியாவின் ஆன்மீக முன்னேற்றத்துக்காக பாடுபட்ட ஒரு சிறந்த அறிஞரை பற்றை மாற்றி எழுதுவது சரியா என எண்ணிப் பார்க்க வேண்டும்.

    (இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது வின்ஸ்டன் சர்ச்சிலும், அதற்காக பாடு பட்டு சிறை சென்று தியாகம் செய்தது இராபர்ட் கிளைவும் என்று ஒரு ஆரய்ச்சி உள்ளது என்று கூட எழுதலாம். இந்தியாவுக்கு சுதந்திரம் தர பிரிட்டிஷ் அரசு மறுத்ததால்தான் இராபர்ட் கிளைவ் தற்கொலை செய்து கொண்டாரா என்று ஒரு ஆரய்ச்சி உள்ளது என்று கூட எழுதலாம். )//
    -மலர்மன்னன்

    .

  130. ஸ்ரீ மலர்மன்னன் மஹாசய், சில சமயம் விவாதங்கள் ஆதாரம் சாராமலும் கருத்துப்பொருளிலிருந்து மிக விலகியும் போகலாம். ஆனால் அதற்காக விவாதமே வீண் என்பது சரியாகாது. குறிப்பாக சங்கரர் கால ஆராய்ச்சி சம்பந்தமான தமிழ் ஹிந்து தள விவாதம் இதற்கு முன் விவாதிக்கப் பெறாத சில புதிய விஷயங்கள் பற்றி அலசியது. கருத்துச்செறிவான புத்தி சார்ந்த அழகான விவாதத்திற்கு ஒரு உதாஹரணம். இந்த விஷயம் சம்பந்தமான காரமும் காழ்ப்பும் மிகுந்த விவாதங்கள் மற்ற தளங்களில் நடந்துள்ளன. ஆணியடித்தாற்போன்ற ஆதாரங்கள் முன் வைக்கும் விவாதங்கள் ஹிந்துக்களிடையே மிக அவசியம். காரமும் காழ்ப்பும் சாரமில்லாதவை ஆதாரமில்லாதவை. பாபாசாஹேப் அவர்களுடைய மற்ற கருத்துகளிலிருந்து விலகி ஒரு விஷயம் பற்றி மட்டும் ஆழ அகலத்துடன் தடம் புரளல் உட்பட இந்த விவாதம். என் கருத்தும் தடம் புரளலே. அதற்கு என் க்ஷமா யாசனம்.

  131. அன்புக்குரிய சகோதரர்கள் திரு சாரங் மற்றும் திரு கந்தர்வன்,

    திரு கந்தர்வன், இங்கே quote செய்ததற்கு நன்றி. உங்கள் சுட்டிக் காட்டியவற்றை படித்து விட்டு என்னுடைய கருத்துக்களை எழுதுவேன்.

    உண்மை எதுவாக இருந்தாலும் அதை ஒத்துக் கொள்ள இந்து தயங்குவதில்லை. அதே நேரம் இந்தக் கட்டுரையின் முக்கிய பேசு பொருள் தலித் ஒருவரை சங்கராச்சாரி ஆக்க தயாரா என்று அண்ணல் அம்பேத்கர் கேட்டது. அதிலே பிரமச்சாரியத்தில் இருந்து சன்யாசம் பெற்றவர் தான் பீடாதிபதியாக முடியும் என்று இங்கே மட்டும் அல்ல இன்னும் பலரும் அப்படியே சொல்லியுள்ளனர். அது விடயமாகவே சுறேச்வாச்சாரியாருக்கு விவாதம் சென்றது. இருந்த போதிலும் விவாதம் திரும்பவும் முக்கிய பேசு பொருளுக்கு வருகிறது .

    சங்கராச்சாயார் மடங்களை ஸ்தாபித்தாரா என்பது ஒரு புறம் இருக்கட்டும். அதை ஆராயலாம், ஆனால் சங்கர மடங்கள் தான் இந்து மதத்தின் முக்கிய அத்தாரிட்டி என்று பண்டிதர்கள் கருதுவாகவே சிந்தனையாளர்கள் நினைக்கின்றனர்

    எனவே அப்படிப்பட்ட சங்கராச்சாரியாரின் கோட்பாடை தொடர்ந்து சொல்லி வருகிற மடங்களாக சங்கர மடங்கள் இருப்பதால், அதில் தலித் சமுத்தயத்தை சேர்ந்த சகோதரர் ஒருவர் அதில் தலைவராக ஆனால் இந்து மதத்தில் அனைவருக்கும் வாய்ப்பு இருப்பது தெள்ளத் தெளிவாகும். பீடாதிபதியாவதற்க்கு பல படிகள் உண்டு. முதலில் சிஷ்யராக ஆக வேண்டும், நியமங்களை அனுஷ்டிக்க வேண்டும், முதல் கட்டமாக சீடராக சேர்த்துக் கொள்ளலாம் என்று கூட கருத்து உண்டு.

    இது இந்து மதத்துக்கு உத்வேகமும் , அதிக வலிமையையும் அளிக்கக் கூடிய ஒரு செயல்பாடாகக் கூடும். தங்களுக்கு இந்து மதத்தின் முக்கிய மடங்களில் ஆங்கீகாரமும் இடமும் கிடைப்பது தலித் சமுதாய சகோதரர்களுக்கு புத்துணர்ச்சி தருவதாக் இருக்கும்.

    எனவே இதைப் பற்றி கருத்து சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்

    சகோதரர் சாரங்கிடம் இதை முன்பே கட்டேன். இது பற்றி எதுவும் எழுதியதாக தெரியவில்லை. சங்கராச்சாரியார் மடம் ஆரம்பிக்கவில்லை என்று காட்டுவதில் இருக்கும் ஆர்வம், இந்து மதத்திற்கு புத்துணர்ச்சி அளித்து அதைக் காப்பதில் வருமா?

    அல்லது இந்து மதம் இருக்கட்டும், முதல்ல உள் குத்து வேலைகளை முடிப்போம் என்கிற ரீதியில் செயல்பாடு இருக்குமா என தெரியவில்லை.

    நீங்கள் சுட்டிக் காட்டியவைகளை ஆராய்ந்து என்னுடைய கருத்தை சொல்வேன்.

  132. நண்பர் திருச்சிகாரரே,

    //
    பள்ளிகளிலும், கல்லூரியிலும், நூலகங்களிலும் வரலாற்று நூல்களை படித்து விட்டுத்தான் வந்திருக்கிறோம். நான் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய இந்திய பொறியியல் பணிக்கான நுழைவுத் தேர்வில் பொது அறிவுப் பகுதியில் ஒரு கேள்வி கீழே உள்ள இடங்களில் சங்கராச்சாரியார் மடம் ஸ்தாபிதம் இல்லாத் இடம் எது என்று கேட்டு பூரி, காசி, சிரிங்கேறி, துவாரகா என்று கேட்டு இருந்தார்கள்.
    //

    சமீபத்தில் இந்தியாவில் IPS பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்வி

    ஒரு விஸ்கி பிராண்டை கொடுத்து அதில் எவ்வளவு விகிதம் சாராயம் இருக்கிறது

    இந்தியாவில் பரிட்சையில் கேட்கப்படும் கேள்விகள் எல்லாம் கேள்விகளா?

    இதை வைத்துகொண்டு வரலாறு உண்மை என்று கூறுவீர்களா?. அவுரங்கஜீப்பை ஒரு த்யாகி போலவும், கஜினியை விடா முயற்சிக்கு உதாரணமாகவும், திப்பு சுல்தானை வீரத்துக்கு ஆதாரமாகவும் நமது பாட புத்தகங்கள் காட்டவில்லையா . இதெல்லாம் உண்மையா?

    (இது ஒரு உதாரணத்திற்கு சொன்னேன் – உடனே ஷங்கரை இவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதா என்று வீணாக புலம்பித் தள்ளாதீர்கள். இங்கு உதாரணம் நமது பாட திட்டத்தில் உள்ளது எல்லாம் உண்மையா இல்லையா என்பது தான். – இதை ஏன் எழுதினேன் என்றால் எனக்கு உங்களுடன் பரஸ்பர முன் அனுபவம் இருக்கிறது என்பதால் தான்)

    இப்படி சொல்வதை எல்லாம் வைத்துகொண்டு நீங்கள் பச்சை பிள்ளை போல பேசுகிறீர்கள் என்று சொல்ல வரவில்லை. இந்த விஷயத்தில் மட்டும் முழுவதையும் தெரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள் என்பதையே சொல்ல வந்தேன். எதற்கும் இன்னொரு பக்ஷம் உண்டு என்பதாவது ஏற்று கொள்வீர்களா?

    கந்தர்வன் கொடுத்துள்ள சான்றை பாருங்கள். மண்டனர் எழுதிய புஸ்தகங்களையும், சுரேஸ்வரர் எழுதிய புஸ்தகங்களையும் நீங்களே படித்து பார்த்தல் தான் உங்களுக்கு அது புரியும். இங்கு எவ்வளவு எழுதினாலும் புரிய வைப்பது சிரமம். எல்லாவற்றையும் எழுதி புரிய வைக்க முடியாது என்பதாவது புரிந்து கொள்ளுங்கள்.

    கந்தர்வன் அவர்கள் கொடுத்த சான்றை பாருங்கள் – அங்கு வாதத்தின் சாரம் தான் உள்ளது. அந்த முடிவுக்கு எப்படி வந்தார்கள் என்பது ஒரு நூறு பக்கம் எழுதலாம், இதை எல்லாம் இங்கே எழுத முடியுமா சொல்லுங்கள், அதனால் தான் படியுங்கள் என்று சொன்னேன். படியுங்கள் என்று தானே சொன்னேன், வேறொன்றும் சொல்லவில்லையே அதற்கு ஏன் இவ்வளவு கோவம் 🙂

    எதையுமே ஆணித்தரமாக நிரூபணம் செய்தால் தான் நம்புவேன் என்று சொல்லும் நீங்கள் சங்கர விஜயம் புஸ்தகத்தில் உள்ளதை எப்படி அப்படியே நம்புகிறீர்கள்? வியப்பாக இருக்கிறது.

  133. ஸ்ரீ க்ருஷ்ணகுமார், ஆரோக்கியமான விவாதங்களை யார்தான் வரவேற்க
    மாட்டார்கள்? ஆனால் விவாதத்திற்கு பதில் விதண்டா வாதமும் தர்க்கத்
    திற்கு பதில் குதர்க்கங்களும்தானே அதிக அளவில் பக்கம் பக்கமாக நீளுகின்றன?
    இதனால் என்ன பிரயோசனம்?

    தெரிந்ததைப் பகிர்ந்துகொள்கிறோம். அவ்வலவுதானே? இதில் எதற்கு கேலி, கிண்டல், எகத்தாளம் எல்லாம்?
    -மலர்மன்னன்

  134. நண்பர் திருச்சிக்காரரே

    //
    சகோதரர் சாரங்கிடம் இதை முன்பே கட்டேன். இது பற்றி எதுவும் எழுதியதாக தெரியவில்லை. சங்கராச்சாரியார் மடம் ஆரம்பிக்கவில்லை என்று காட்டுவதில் இருக்கும் ஆர்வம், இந்து மதத்திற்கு புத்துணர்ச்சி அளித்து அதைக் காப்பதில் வருமா?

    //

    தலித், பழ வியாபாரி, பிராமணர்கள் என்று எல்லோருக்கும் சேர்த்து தான் எனது வீட்டிலேயே பணம் வாங்காமல் சமஸ்க்ரித சம்பாஷணம் சொல்லி தருகிறேன். எனது ஆர்வம் இங்கே விவாதம் செய்வதில் மட்டும் இல்லை.

    எனது குரு சங்கர சம்ப்ரயடயத்தை சார்ந்தவர் தான் – அவர் பிராமணர் அல்லாதவருக்கும் சேர்த்து தான் அவர் வீட்டில் வேதாந்தம் (சங்கர பாஷ்யம்) சொல்லி தருகிறார்.

    வெறும் ஆரம மட்டும் இல்லை நன்பரே , நம்மால் முயன்றதை செய்ய வேண்டும் என்ற எண்ணமும், செயலும் சேர்ந்து தான் இருக்கிறது.

  135. 1) ஆனந்தனுபவ வாழ்ந்த காலம் என்ன? 1190 என்று சொல்கிறார்களே அது சரியா? அப்போது அவர் மண்ட மிஸ்ரருக்கு சம காலத்தவரா?

    2) சிரிங்கேறி மடம் அவர்களின் பீடாதிபதிகளை வரிசையாக எழுதி வைத்துள்ளது. அதாவது ஆதி சங்கரர் காலம் தொட்டு இன்று வரை . அவர்களின் முதல் பீடாதிபதி சுறேச்வாச்சாரியார் என்று எழுதி வைத்துள்ளனர். சுரேஸ்வச்சாரியர் தான் பூர்வாசிரமத்தில் மண்டன மிஸ்ரராக இருந்தவர் என்று அவர்கள் சொல்லுகின்றனர். அருகாத தொடர்ச்சியான் பீடாதிபதிகளை அந்த மடம் கொண்டுள்ளது. அப்படியானால் அவர்களின் கம்யூனிகேசன் நம்பத் தகுந்ததாக இருக்கும் அல்லவா?

    3)“Anandanubhava, a great samnyasin of the advaita school, who is presupposed by Citsukha in his Tattvapradipika and who is the author of the advaita treatise called Nyayaratnadipavali, distinguishes Mandana and Suresvara in unmistakable terms

    அந்த unmistakable terms என்ன?

    4) ஆனந்தனுபவ தத்துவங்களைப் பற்றி அதிகம் பேசியதாக உணர்கிறோம், இப்படி மண்டன மிஸ்ரர், சுறேச்வச்சாரியார் ஒன்றா அல்லது வெவ்வேரனவரா என்பதை அவ்வளவு முக்கியத்துவம் குடுத்து ஆராய அவருக்கு அவசியம் என்ன? அவர் வரலாற்று ஆராய்ச்சியாளரா அல்லது தத்துவ ஆராய்ச்சியாளாரா?

    4) சிரிங்கேறி மடம் அவர்களின் பீடாதிபதிகளை வரிசையாக எழுதி வைத்துள்ளது. அதாவது ஆதி சங்கரர் காலம் தொட்டு இன்று வரை . அவர்களின் முதல் பீடாதிபதி சுறேச்வாச்சாரியார் என்று எழுதி வைத்துள்ளனர். சுரேஸ்வச்சாரியர் தான் பூர்வாசிரமத்தில் மண்டன மிஸ்ரராக இருந்தவர் என்று அவர்கள் சொல்லுகின்றனர். அருகாத தொடர்ச்சியான் பீடாதிபதிகளை அந்த மடம் கொண்டுள்ளது. அப்படியானால் அவர்களின் கம்யூனிகேசன் நம்பத் தகுந்ததாக இருக்கும் அல்லவா?

  136. https://www.archive.org/stream/Brahma-siddhi.by.mandanaMisra.sanskrit/Brahma-Siddhi.by.Mandana.Misra-Sanskrit#page/n7/mode/2up

    page ix

    It will thus appear that the references in the guruvamsakaviya are to two different personalities… the other to visavarupa who beame a sanyasin and was conferred the title of Suresvacharya, who was also known variously as Mandana misra, umbeka, visvarupa and suresvacharuya…

    …..The case for setting aside tradition requires much stronger grounds than have been adduced so far.

    Govt Oriental manuscripts Libraray, Madras P.P. Subramanya shasthri, curator
    11th May 1937

  137. Dear Sri Sarang / Gandharvan/Krushnakumar:
    Where there is shouting, there is no true knowledge.
    – Leonardo da Vinci
    Best wishes and regards,
    Malarmannan

  138. //தலித், பழ வியாபாரி, பிராமணர்கள் என்று எல்லோருக்கும் சேர்த்து தான் எனது வீட்டிலேயே பணம் வாங்காமல் சமஸ்க்ரித சம்பாஷணம் சொல்லி தருகிறேன். .//

    Many thanks, I appreciate you..

  139. //….சுறேச்வச்சாரியார் ஒன்றா அல்லது வெவ்வேரனவரா என்பதை அவ்வளவு முக்கியத்துவம் குடுத்து ஆராய அவருக்கு அவசியம் என்ன? அவர் வரலாற்று ஆராய்ச்சியாளரா அல்லது தத்துவ ஆராய்ச்சியாளாரா? ..//

    திருச்சிக்காரன்,

    தவறாக எண்ண வேண்டாம்.

    அறிவைப் பகிர்ந்துகொள்வதுதான் உங்கள் நோக்கம் என நம்புகிறேன். மேலே உள்ளது போன்ற கேள்விகள் அந்த நோக்கத்தில் இருந்து விலகி உள்ளதாகத் தோன்றுகிறது.

    மலர்மன்னன் போன்ற பெரியோர்களிடம் உரையாடும்போது நமது நோக்கத்தில் இருந்து விலகாமல் இருப்பது நமக்கு நன்மை தரும். உங்களுடைய ஆர்வம், அடுத்த தலைமுறைக்கு அறிவைக் கடத்தும் அவரது வேட்கையைச் சரியாகப் பயன்படுத்துமாறும் அமையலாமே.

    .

  140. அன்புக்கினிய நண்பர் சாரங் அவர்களுக்கு,

    தாங்கள் தங்கள் இல்லத்தில் வைத்து எல்லோருக்கும் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுப்பதறிந்தும் தங்கள் குரு அத்வைதம் சொல்லிக் கொடுத்ததாயும் அறிந்து அக மகிழ்கிறேன்.

    இப்போ பிரச்சினை தத்துவம் சம்பந்தப்பட்டோ வரலாறு சம்பந்தப்பட்டோ இல்லை என்றே நினைக்கிறேன். நான் ராமானுஜ விசிஷ்டாத்வைதத்திற்கு மிக நெருங்கிய சைவசித்தாந்த பாரம்பரியத்திலேயே வளர்பவன். அதனால் இயல்பாக மும்மைப் பொருள் உண்மைக் கோட்பாட்டையே ஏற்றுக் கொள்பவன். ஆனால், சில வேளைகளில் அத்வைதமும் பேச முடிகிறது. இந்தத் தத்துவங்கள் ஒன்றுக்கு ஒன்று எதிரல்லவே… ஆதிசங்கர பகவத்பாதாளே அத்வைத பாஷ்யம் எழுதிய போதும் த்வைத நிலை நின்று ஆனந்தக் கண்ணீர் சொரியும் படியான ஸ்துதிகளை இறைவன், இறைவிகள் மீது படைத்திருக்கிறார் அல்லவா..?

    அன்பிற்கினியவர்களுக்கு,

    இது போலவே ஆய்வுகள் பல வகையாக.. பலராலும் நடாத்தப்பட்டலாம்.. ஆனால் ஆதீனங்கள் , சங்கரமடங்கள், வைணவ ஜீயர் திருமடங்கள் இவைகள் பேரில் இந்துக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் காக்கப்படுதல் வேண்டும். அதே வேளை அவற்றின் வரலாறும் தெளிவு பெற வேண்டும்.

    ஆகவே, முன்னரே நமது இந்துத் திருமடங்கள் பேரில் பலரும் பலவாறாக அவதூறுகளைப் பரப்பி வருகிற நிலையில் அவற்றிற்கு இந்த இக்கட்டான சூழலில் நாமும் வேறு தலையிடியாக இருக்கக் கூடாது.

    ஆங்கே திருமடங்களில் சீர்திருத்தங்கள் செய்யப்பெற வேண்டுமாயின் அந்தத் திருமடங்களை.. ஆதீனங்களைச் சேர்ந்த ஸ்வாமிகள் போன்றோருடன் இணக்கமாகப் பேசியே அதில் அவர்களின் இணகக்த்துடன். மாற்றங்களைச் செய்யலாம். (மாற்றங்கள் நிச்சயம் தேவை.. ஆனால் அவை ஆன்மீக சம்பந்தம் உடையனவாயிருப்பதால் அவற்றை அமைதியாகவும் பொறுமையாகவும் அணுகலாமே..) அவ்வாறு அவர்கள் மாற்றங்களை மறுதலித்தால் அதன் பின் செய்ய வேண்டியதை மேற்கொண்டு சிந்திக்கலாமே..

    ஆதிசங்கரபகவத் பாதாளின் பேரருளால் உண்மைகள் உள்ளபடி வெளிவரப் பிரார்த்திப்போம்..

  141. சங்கர மடத்தில் எழுதி வைத்திருப்பதெல்லாம் வெறும் ஐதீகம், அடிப்படை ஆதாரம் இல்லாதது.
    சீனாக்காரன் எழுதியதெல்லாம் ஆதாரம், சினிமாப் படமும் ஆதாரம். அசைக்க முடியாத ஆதாரம்.

    இதெல்லாம்தான் ஆராய்ச்சி.

    செயிண்ட் தாமஸ் இந்தியா வந்ததற்கு ஆதாரமாகக் கிறிஸ்தவர்கள் கொடுக்கும் மார்க்கோபோலோ எழுதிவைத்ததாகச் சொல்லும் ஆதாரத்திற்கும்,

    தமிழ் ஹிந்துவில் ஆஸ்தான ஆராய்ச்சியாளர்கள்
    சங்கரர் பிறந்தற்கும், அல்லது சங்கரர் பிறக்கவே இல்லை என்பதற்கும்,
    அவர் ஐந்து சங்கர மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கும்,
    மண்டன மிஸ்ரர் வேறு சுரேஸ்வரர் வேறு என்பதற்கும் கொடுக்கும் …….
    சீனாக்காரன் எழுதிய அல்லது சினிமாப்பட ஆதாரத்துக்கும் அதிக வித்தியாசமில்லை.

    ஆராய்ச்சி இங்கே ஹிந்து மதத்துக்குக் குழி வெட்டுவதில்தான் இருக்கிறது. சங்கர மடத்தில் எழுதி வைத்திருப்பதையெல்லாம் புறம் தள்ளுபவர்கள் எப்படி ஆராய்ச்சியாளர்களாவார்களோ? அல்லது உண்மையான ஹிந்துக்கள் ஆவார்களோ?

  142. நண்பர் திருச்சிகாரரே

    advaitha vedanta.org இல் வந்த விஷயத்தை கட் பேஸ்ட் செய்கிறேன்

    சங்கர விஜயம் பற்றியும்,ஸ்ருங்கேரி மடம் கூறும் சுரேஸ்வரரை பற்றியும் இதில் அறிந்து கொள்ளலாம்.

    //
    Actually, tradition is ambivalent on this issue. Even if we take only the
    Sankaravijayam texts as the repositories of tradition, there is some
    uncertainty. Madhaviya and texts that follow it equate Mandana Misra with
    Suresvara and also with Visvarupa. Other texts equate Visvarupa with
    Suresvara, but not with Mandana Misra. Yet other texts equate Mandana
    Misra with Suresvara, but not with Visvarupa. And there are other legends
    which identify all of them or some of them with another author named
    Umveka. Personally, I don’t think any of the Sankaravijayam texts gives us
    reliable information about it. Identifying the two as one person most
    probably results from a quasi-mythological story that describes both
    Suresvara and Mandana Misra as incarnations of Caturmukha Brahma.

    The Sringeri matha lists Suresvara in its lineage of gurus, and I remember
    having read that its Guruvamsakavya does not give any other name for
    Suresvara. Moreover, there is some talk in contemporary literature from
    the various mathas that Mandana Misra is not the proper name of one
    person, but some sort of a title (e.g. Raj Gopal Sharma’s Hindi text, Sri
    Shankaramatha vishayak vivada aur vimarsha), and also that more than
    person might have been named Mandana Misra (e.g. Polakam Rama Sastri’s
    Tamil text, Adisankarar mudal Kanciyil todarnduvarum guruparamparai).

    However, if we rely on the internal evidence from the commentaries that
    have come down to us over the centuries, it seems that Visvarupa and
    Suresvara are most probably the same person. Sankarananda, Vidyaranya,
    Rama Tirtha and other commentators consistently attribute quotations from
    Naishkarmyasiddhi and the Upanishad-vaarttikas to one Visvarupacharya, but
    never to Mandana Misra. And Mandana Misra is referred to as
    Brahmasiddhi-kara by Vacaspati Misra, Sankhapani and Anandapurna
    Vidyasagara, while Suresvara is routinely referred to as vaarttika-kara,
    by most writers. There is no explicit identification of Suresvara with
    Mandana Misra, although there is no explicit denial of such an
    identification either. But then, none of these earlier authors might have
    felt the need to deny the identification, if such a thing had never been
    done in their times.

    If we compare the views of Naishkarmyasiddhi (by Suresvara) and
    Brahmasiddhi (by Mandana Misra) on the question of the locus of avidyA and
    the object of avidyA, there is a clear indication that both texts could
    not have been written by the same person. Unless of course, Mandana Misra
    wrote Brahmasiddhi before he became Suresvara and then changed his views.
    In my opinion, there is no compelling reason to say such a thing, and the
    identification of the two can be safely put aside.
    //

  143. மயூரிகி ஷர்ம அவர்களே,

    //
    சில வேளைகளில் அத்வைதமும் பேச முடிகிறது. இந்தத் தத்துவங்கள் ஒன்றுக்கு ஒன்று எதிரல்லவே
    //

    ஆம் – சங்கரர் வேதாந்தஹ்திலும் த்வைத(so called) நிலையிலேயே பல பல இடங்களில் பேசுகிறார். அவர்/அத்வைதம் கூறுவது “நானே தான் கடவுள்” என்பதல்ல என்பதை அவரது பாஷ்யத்தை படித்த பிறகு தான் தெரிந்து கொண்டேன்.

    அத்வைதம் படிக்கும் முன்னர் நானும் மாயை என்னும் அத்வைதம் முன்வைக்கும் கோட்பாட்டை தவறாக புரிந்து கொண்டு வாதம் புரிந்து கொண்டு வந்தேன். எனக்கு பல பேர் அதை புரிய வைக்க முற்பட்டார்கள் நான் மேலும் மேலும் கேள்விகள் மட்டுமே கேட்டு வந்தேன். (மாயை என்று ஒன்று இருந்தால் அப்புறம் பிரம்மம் என்று ஒன்று, மாயை என்று ஒன்று இவ்விரண்டு சேர்ந்து த்வைதம் ஆகாதா, மாயை பகவானையே மறைத்தால் அது பகவானை விட சக்தி வாய்ந்ததா என்பன போல… )

    சங்கரர் கீதா பாஷ்யத்தில் 9th அத்யாயத்தில் சங்கரர் போகிற போக்கில் மாயைக்கு ஒரு அழகான விளக்கம் தந்துள்ளார் – அதை படித்து தான் தெளிவுற்றேன்.

    சில சமயத்தில் பிறர் சொன்னால் நமக்கு புரியவே புரியாது – ஸ்வயமாக படித்தால் தான் புரியும் – இதனால் தான் திருச்சிக்காரரை படிக்க வேண்டினேன்.

    சங்கர மடங்களை சங்கரர் நிறுவவில்லை என்றால் அதை நாம் ஏற்றுக்கொள்வதில் என்ன கஷ்டம் இருக்கிறது. அவைகள் நல்ல காரியங்கள் செய்துகொண்டிருந்தால் அதை பின்பற்றுவதில் என்ன கஷ்டம் நமக்கு. இதற்க்கு எதற்கு சங்கரரின் சம்பந்தம் நமக்கு தேவை படுகிறது. சங்கரருக்கு தனியாகவும், மடங்கள் செய்யும் நற்காரியங்களுக்கு தனியாகவும் மரியாதை தர நமக்கு ஏன் இயலாமை உள்ளது. சங்கர மடங்கள் செய்யும் காரியங்களை விட ராமகிருஷ்ண மடங்கள் இன்றைக்குள்ள எதார்த்த நிலையை அனுசரித்து திறம் பட காரியங்களை செய்ய வில்லையா?

    கார்யகர்த்தா யார் என்பதற்கு சமஸ்க்ரிதத்தில் அழகான விளக்கம் உண்டு – ய: சம்யக் கார்யம் கரோதி ச ஏவ கார்யகர்த்தா (யார் நன்கு கார்யம் செய்கிறானோ அவனே கார்ய கர்த்தா) – எந்த மடம் நன்றாக அத்வைத கார்யம் செய்கிறதோ அதுவே உண்மையான சங்கர மடம்

    ராமானுஜர் ஏற்படுத்திய மடமாக இருப்பினும் அவை இன்றைக்கு நன்கு செயல் பட வில்லை என்றால் அவைகளை பின் பற்றி என்ன பயன். பெயருக்கு மடத்துக்கு போய் வருவதை நான் விரும்பவில்லை. (இதை நான் எழுதவில்லை என்றால் திட்டு வாங்குவேன் அதற்காக தான் இதை சேர்க்க வேண்டி உள்ளது – அப்படி ஒரு முத்திரை குத்தியாகிவிட்டது)

  144. திரு அஞ்சன்குமார்,

    நான் இந்துவா இல்லையா என்பதை திரு ஆர். கோபால் எழுதிய “முதல் பாவக் கொள்கையின் அபத்தம்” என்ற கட்டுரைக்கடியில் உள்ள மறுமொழிகளை கவனித்துப் பாருங்கள்.

    சீன யாத்திரிகளின் (யுவான் சுவாங், ஈ ஜிங்) பயணக்குறிப்புகள் (travelogues) பலவகைப்பட்ட பழஞ்சுவடிகளிளிருந்து தொகுக்கப்பட்டது. அச்சுவடிகள் பலவகைப்பட்ட manuscript library களில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. ஆகையால் அவை வரலாற்றுச் சான்றுகளாகின்றன.

    All that I am saying is, is there any dated material (say 10th century or before) to support the dates given by the Mutts? Only then it can be termed historical evidence. If there is such material, why has it not been made widely available to the public?

    Whatever our position is, the evidences that we take recourse to has to meet these standards. Otherwise, it cannot be logically called history.

    அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைக்க எனக்கு இப்பொழுது நேரமில்லை. பின்வரும் சுட்டியில் உள்ள கட்டுரையை முழுதும் படித்து விட்டு, அதற்கான மறுமொழிகளையும் படித்து விட்டுக் கூறுங்கள்: https://tamilhindu.com/2010/12/dating-adi-sankara-history-a-view/

    எதிர்வாதத்தின் நியாயங்களைப் படித்து ஆலோசிக்காமல் சும்மா கல் எறிவது அழகல்ல.

  145. அன்புக்குரிய திரு. களிமிகு கணபதி அவர்களே,

    //….சுறேச்வச்சாரியார் ஒன்றா அல்லது வெவ்வேரனவரா என்பதை அவ்வளவு முக்கியத்துவம் குடுத்து ஆராய அவருக்கு அவசியம் என்ன? அவர் வரலாற்று ஆராய்ச்சியாளரா அல்லது தத்துவ ஆராய்ச்சியாளாரா? ..//

    திருச்சிக்காரன்,

    தவறாக எண்ண வேண்டாம்.

    அறிவைப் பகிர்ந்துகொள்வதுதான் உங்கள் நோக்கம் என நம்புகிறேன். மேலே உள்ளது போன்ற கேள்விகள் அந்த நோக்கத்தில் இருந்து விலகி உள்ளதாகத் தோன்றுகிறது.//

    இதில் தவறாக எடுத்துக் கொள்ள என்ன இருக்கிறது.

    ஆன்மீக தத்துவங்களில் அதிக ஆரய்ச்சி செய்வோர் வரலாற்றில் ஆராய்ச்சி செய்வதில் அதிக முனைப்பு காட்டுவதில்லை.

    சங்கராச்சாரியாரையே எடுத்துக் கொள்ளுங்கள், அவர் எழுதியவை தத்துவம் சம்ந்தப் பட்டவையாக இருக்க காண்கிறோம்.

    வியாசர் எந்தக் காலத்தவர், நசிகேதஸ் பேசியது எமனுடனா, என்று எல்லாம் சங்கரர் ஆராய்ச்சி செய்தாரா என்று எண்ணிப் பாருங்கள்!

  146. அன்புக்குரிய சகோதரர் திரு சாரங்,

    //If we compare the views of Naishkarmyasiddhi (by Suresvara) and
    Brahmasiddhi (by Mandana Misra) on the question of the locus of avidyA and
    the object of avidyA, there is a clear indication that both texts could
    not have been written by the same person. Unless of course, Mandana Misra
    wrote Brahmasiddhi before he became Suresvara and then changed his views.In my opinion, there is no compelling reason to say such a thing//

    IN MY OPINION ITS LOGICAL TO KEEP THAT Mandana Misra
    has some understanding on spirituality, which were changed after he became Suresvara .

    நான் முன்பே எழுதி உள்ளபடி,

    மண்டன மிஸ்ரர் வேறு சுரேஸ்வாச்சாரியார் வேறு!

    சித்தார்த்தர் என்பவர் வேறு கௌதம புத்தர் என்பவர் வேறு!

    நரேந்திரன் என்பவர் வேறு, விவேகானந்தர் என்பவர் வேறு!

    திருவேங்கடத்தர் என்பவர் வேறு, பட்டினத்தார் என்பவர் வேறு!

    திருவேங்கடத்தரின் எண்ணமும், சிந்தனையும் , செயல்பாடும் பட்டினத்தாருடையது போல இருக்க முடியாது.

    மண்டன மிஸ்ரரின் எண்ணமும், சிந்தனையும் , செயல்பாடும் அவர் எழுதிய நூலும் சுரேஸ்வாச்சாருடையது போல இருக்க முடியாது.

    உருவ வழிபாட்டை கிண்டல் செய்து வந்த நரேந்திரர் பின்னால் சுவாமி விவேகாந்தராகி உருவ வழிப்பாட்டில் எந்த தவறும் இல்லை, அதை வெறுக்க வேண்டியதில்லை, உருவ வழிபாட்டில் சிறந்த ஆன்மீக வாதிகளை உருவாக்க முடியும் என்றால் உருவ வழிபாட்டை ஏன் கண்டிக்க வேண்டும் என்று கேட்டார்.

  147. அன்புக்குரிய நண்பர் சகோ திரு.சாரங் அவர்களே,

    //சங்கரர் வேதாந்தஹ்திலும் த்வைத(so called) நிலையிலேயே பல பல இடங்களில் பேசுகிறார். அவர்/அத்வைதம் கூறுவது “நானே தான் கடவுள்” என்பதல்ல என்பதை அவரது பாஷ்யத்தை படித்த பிறகு தான் தெரிந்து கொண்டேன்.//

    //அவர்/அத்வைதம் கூறுவது “நானே தான் கடவுள்” என்பதல்ல//

    நட்பு அடிப்படையில் நண்பனாக உங்களைப் பார்த்து கலக்குற சாரங் என்று சொன்னால் வருத்தப் பட மாட்டீர்கள் என நினைக்கிறேன். சங்கராச்சாரியார் மடங்களை ஆரம்பிக்கவில்லை என்பதாக ஆரம்பித்து சுரேஸ்வரர் வேறு மண்டன மிஸ்ரர் வேறு என்பதாக ஆராய்ச்சியில் இறங்கி, கடைசியில் //அவர்/அத்வைதம் கூறுவது “நானே தான் கடவுள்” என்பதல்ல//என்பதை “நிரூபித்து” விட்டீர்கள்.

    //மாயை பகவானையே மறைத்தால் அது பகவானை விட சக்தி வாய்ந்ததா என்பன போல… ) //

    அத்வைதம் கூறுவது “நானே தான் கடவுள்” என்பதல்ல//

    “நானேதான் கடவுள்” என்று “கடவுளுக்கு இணை” வைப்பதை உங்களைப் போன்ற பக்தர்களால் பொறுக்க முடியாது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

    மேலும் மேலும் கேள்விகள் மட்டுமே கேட்டு, அஹம் பிரம்மாஸ்மி, அயம் ஆத்மா பிரம்மம், தத் துவம் அசி இதற்கெல்லாம் என்ன அர்த்தம் சொல்லலாம் என்பதயும் எழுதுங்கள்,

  148. திருச்சிக்காரர் அவர்களே,

    கடவுளும் ஜீவனும் பரமார்த்த நிலையில் தான் ஒன்று என்று ஆதி சங்கரர் போதிக்கிறார். அந்த பரமார்த்த நிலையில் அந்த நிர்குண தத்துவமான பிரம்மம் ஒன்று தான் சத்தியம்.

    வியாவஹாரிக்க நிலையில் குணங்களுடன் கூடிய ஒரே கடவுள் என்றும் அவனுக்கும் பிரமன் முதல் புல் ஈராக உள்ள ஜீவர்களுக்கும் வித்தியாசம் உண்டு என்று தான் போதித்துள்ளார். நீங்கள், நான், காந்தி, சர்ச்சில், பெரியார், ஹிட்லர், எல்லாம் வணங்கத்தக்கக் கடவுள் தான் என்பதல்ல அவர் கொள்கை:

    “Why, then, do we not view the Lord, who is not composed of parts, as identical with the soul?–‘On account of the declarations of difference.’ For such scriptural passages as ‘That (self) it is which we must search out, that it is which we must try to understand’ (Kh. Up. VIII, 7); ‘He who knows him becomes a muni’ (Bri. Up. IV, 4, 22); ‘He who dwelling within the Self pulls the Self within’ (Bri. Up. III, 7, 23); which all of them refer to a difference (between the highest and the individual Self) would be inappropriate, if there were no difference.” – பிரம்ம சூத்திர பாஷ்யம், 2.3.43

    சகுண பிரம்மம் அல்லது ஈச்வரனுக்கு சுத்த சத்துவ குணங்களே பொருந்தும். மாயையாகிய அசுத்த சம்பந்தம் ஜீவர்களுக்குத் தான்:

    “Nor is there anything contradictory in assuming that the Lord who is provided with superexcellent limiting adjuncts rules the souls which are connected with inferior adjuncts only.” — பிரம்ம சூத்திர பாஷ்யம், 2.3.45

    ஆதி சங்கரர் எழுதியதாக வழங்கப்படும் “விஷ்ணு ஷட்பதி ஸ்தோத்திரத்தின்” இறுதியில் பின்வருமாறு உள்ளது:

    “satyapi bhedApagame nAtha tavAhaM na mAmakInastvam.h |

    sAmudro hi tarangaH kvachana samudro na tArangaH || (Shankara’s
    VishnuShaTpadi)

    Even when I am not under the influence of Dualism, O Lord, I belong to You
    but You don’t belong to Me ; the waves belong to the sea but the sea never
    belongs to the waves.”

    இந்த சுலோகத்தை ஆதி சங்கரரைப் பின்பற்றிப் பல நூல்களை எழுதிய 16-ஆம் நூற்றாண்டின் வாங்க தேசத்து ஞானியாகிய மதுசூதன சரஸ்வதி தம் கீதை உரையில் எடுத்துள்ளார்.

    பல பாஷ்யங்களைக் குருவிடம் நேராகக் கற்று வருகிறார் என்று சாரங் அவர்களே கூறுகிறாரே, அதை எல்லாம் பொருட்படுத்தாமல் எந்த ஆராய்ச்சியுமில்லாமல் நுனிப்புல் மேய்ந்துவிட்டு மனம்போனபடி எழுதுகிறீரே!

  149. நன்பர் திருச்சிகாரரே

    உங்களை ஸ்வாமி என்றே நான் அழைக்கிரேன்.

    அஹம் ப்ரம்மாஸ்மிக்கும் நானே தான் கடவுள் என்பதற்க்கும் வித்யாசம் உங்களுக்கு தெரியவில்லை

    அஹம் ப்ரம்மாஸ்மி மட்டுமே மஹா வாக்யம் இல்லை – ப்ரக்யானம் ப்ரஹ்மா, அயமாத்மா ப்ரஹ்மா, சர்வம் கலு இதம் ப்ரஹ்மா, தத் த்வம் அஸி இதை சேர்த்து வைத்து பொறுமயாக படித்தால் நல்லது

    இதற்குதான் சொல்கிறென் ஷங்கரர் எழுதி வைத்த பாஷ்யம் படியுங்கள் என்று

    நான் பக்தன் என்றால் நீங்கள் இல்லயோ . ஷங்கரர் இல்லயோ Ÿ ஏன் இப்படிப் போட்டு குழப்பி கொள்கிறீர்கள்

    ஷங்கரர் பகவத் கீதையில் கூருவது

    ஜீவன் முக்தியில் முடியும் க்யானமானது பகவத் க்ருபையால் விலைகிறது. தான் ஜீவன் முக்தன் என்றும் ஆசார்யால் கூருகிரார். நீங்கள் சொல்வதை பார்தால் ஷங்கரர் ” ஜீவன் முக்தியில் முடியும் க்யானமானது எனது க்ருபையால் விலைகிறது” என்று சொல்லி இருக்க வேண்டும்.

    satyapi bhedApagame nAtha tavAhaM na mAmakInastvam.h |

    sAmudro hi tarangaH kvachana samudro na tArangaH ||

  150. //மண்டன மிஸ்ரர் வேறு சுரேஸ்வாச்சாரியார் வேறு!

    சித்தார்த்தர் என்பவர் வேறு கௌதம புத்தர் என்பவர் வேறு!

    நரேந்திரன் என்பவர் வேறு, விவேகானந்தர் என்பவர் வேறு!

    திருவேங்கடத்தர் என்பவர் வேறு, பட்டினத்தார் என்பவர் வேறு!

    திருவேங்கடத்தரின் எண்ணமும், சிந்தனையும் , செயல்பாடும் பட்டினத்தாருடையது போல இருக்க முடியாது.

    //

    எப்போதும் போல எதோ ஒரு பாயிண்டை பிடித்துக் கொண்டு ஆரம்பித்து விட்டீர்கள். அங்கு எண்ணமும் சிந்தனையும் வேறு என்பதை தவிர இன்ன பல விஷயங்களும் உள்ளன. உதாரணமாக சங்கர விஜயங்களுல்லேயே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதும் அங்கே இருந்தது – பார்க்கவில்லையா?

    சித்தார்த்தர் கௌதமர் ஒன்று என்பதற்கு பல பல நம்பத் தகுந்தா ஆதாரங்கள் உள்ளன. விவேகானந்தரை பற்றியும் இப்படி தான்.

    ஆனால் சுரேஸ்வரர், மண்டன மிஸ்ரர் விஷயம் இப்படி இல்லை., குலசேகர ஆழ்வார், குலசேகரர் விஷயம் இப்பத் இல்லை. வேறு என்பதற்கே பல பல ஆதாரங்கள் உள்ளன

    உங்களால் இருவரும் வேறாக இருக்க முடியும் என்கிற பக்ஷத்தை கூட ஏற்க முடியவில்லை – எதை எதையோ ஆதாரமில்லாமல் நம்புகிறீர்கள், கேட்டால் நான் தகுந்த ஆதாரம் தந்தால் தான் நம்புவேன் என்று வேற அடிக்கடி சொல்லிக் கொள்கிறீர்கள். ஆதாரம் இருக்கு படியுங்கள் என்றால் அதுவும் மாட்டீர்கள் – ரொம்ப சந்தோசம்.

    நன்றி – நிப்பாட்டிக்கறேன்

  151. // சுறேச்வச்சாரியார் ஒன்றா அல்லது வெவ்வேரனவரா என்பதை அவ்வளவு முக்கியத்துவம் குடுத்து ஆராய அவருக்கு அவசியம் என்ன? அவர் வரலாற்று ஆராய்ச்சியாளரா அல்லது தத்துவ ஆராய்ச்சியாளாரா? //

    இப்படித் தான் எதிர்வாதம் செய்பவர்களுடைய கூற்றை முழுவதும் படிக்காமல் ஓரிரு வரிகளைப் பார்த்து விட்டு அதைச் சுற்றி ஒரு கதை கட்டுகிறீர். நான் அதிக சிரமப்பட்டு புத்தகத்திலிருந்து பார்த்து அதனை அப்படியே reproduce செய்திருந்தேன். அதைக்கூட முழுதும் நீங்கள் படித்ததாகத் தெரியவில்லை.

    ஆனந்தானுபவர் வரலாற்று ஆராய்ச்சி என்று யார் கூறினார்?

    இதையாவது பொறுமையாகப் படியுங்கள். அங்கு நடக்கும் விசாரம் சன்யாச ஆச்ரமத்தைப் பற்றியது என்பது நான் மேற்கோள் காட்டிய பாராவிலிருந்து தெரிகிறது. பாஸ்கர மதத்தவர்கள் முக்கோல் (திரிதண்டி) சன்யாசத்திற்கு ஆதரவாகப் பேசுபவர்கள். அந்த வகை சந்யாசத்தில் பூணூல் குடுமி களையப்படுவதில்லை (ஸ்ரீவைஷ்ணவாளும் தொன்று தொட்டு இந்த வகையையே கடைப்பிடித்து வருகின்றனர்). மேலும், பாஸ்கர மதத்தவர்கள் அத்வைதிகள் அனுஷ்டிக்கும் ஏகதண்ட (ஒரு கோல்) சன்யாசம் – பூணூலும் சிகையும் களையப்படும் சன்யாசம் – இதை கண்டித்தனர்.

    அத்தகைய காலத்தில் வந்த ஆனந்தானுபவர் என்பவர் தமது “நியாய ரத்னா தீபாவளி” என்னும் நூலில் ஏகதண்ட சன்யாசம் உயர்ந்ததே என்று வாதிடுகிறார். அதற்குச் சான்றாக, மண்டனர், விச்வரூபர் என்று இரண்டு பேர்களுடைய நூற்களிலிருந்து காட்டுகிறார். இவர்களுள் மண்டன மிச்ரர் பெரிய பண்டிதர் என்றும் அவர் ஏகதண்ட சன்யாசத்தை உயர்த்திக் கூறுகிறார் என்றும் கூறுகிறார். மேலும், விச்வரூப ஆச்சாரியார் என்பவர் சன்யாசம் கொண்டு “சுரேஸ்வரர்” ஆவதற்கு முன்னால் தம்முடைய நூலில் ஏகதண்ட சன்யாசத்தை ஆதரித்துள்ளார் என்றும் கூறுகிறார்.

    இதிலிருந்து என்ன தெரிகிறது? விச்வரூபர் வேறு, மண்டனர் வேறு. விச்வரூபர் என்பவரே சன்யாசம் வாங்கி சுரேஸ்வரர் ஆனார்.

    ஆனந்தானுபவரின் காலம் ஆனந்தகிரியின் காலத்திற்கு முந்தையது ஏனெனில் ஆனந்தகிரி ஆனந்தானுபவருடைய இந்நூலை விளக்கி ஒரு நூல் எழுதியுள்ளார். ஆனந்தகிரியின் காலம் பதிமூன்று/பதினான்காம் நூற்றாண்டு. இதிலிருந்து ஆனந்தானுபவரைப் பனிரண்டாம் நூற்றாண்டில் வைத்துள்ளனர்.

    இவ்வளவு தான். சரளமாக இல்லை?

    மேலும்,

    மண்டனர் தான் சுரேஸ்வரர் ஆனார் என்றால், (ஆனந்தகிரி டீகையில் எழுதியிருப்பது போல) சுரேஸ்வரர் எதற்கு “பிரம்ம-சித்தியில்” உள்ளதைக் கண்டிக்க வேண்டும்? “முன்பு நான் இப்படி எழுதியிருந்தேன். அது தவறு. வாபஸ் வாங்குகிறேன்” என்று ஒரு confession சொன்னால் போதாதா?

    நண்பரே, இன்னொரு முக்கியமான ஆதாரம் இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டு தொடங்கி பதினாறாம் நூற்றாண்டு முடிய உள்ள அத்வைத, த்வைத நூற்களில் பலவற்றுள் மண்டனருடைய அத்வைதத்தைப் பற்றியும் சுரேச்வரருடைய அத்வைதத்தைப் பற்றியும் ஒரே இடத்தில் வருகிறது. இவர்களில் எவரும் “மண்டனர் தான் சுரேஸ்வரர் ஆனார். இருவரும் ஒருவரே” என்று கூறவில்லை.

    இதற்கு மேலும் இந்த விவாதத்தில் எனக்கு எழுதுவதற்கு ஒன்றும் இல்லை.

  152. //நன்றி – நிப்பாட்டிக்கறேன்- ஸ்ரீ சாரங்//
    என் அன்பார்ந்த ஸ்ரீ சாரங்,
    இதைத்தான் முன்பே குறிப்பிட்டேன். கூச்சல் அதிகம் உள்ள இடத்தில்
    உண்மையான அறிவுக்கு இடமிருக்காது எனப் பல்துறை விற்பன்னர் லியோடார்னோ டாவின்ஸி சொன்னதைக் கூடப் பிற்பாடு நினைவுட்டிப் பார்த்தேன்.
    இன்று ஹிந்து சமூகத்திற்கு விழிப்புணர்வூட்ட வேண்டிய அவசர அவசியம் உள்ளது. பலரும் நிலைமையின் தீவிரம் புரியாமல் அலட்சியமாக இருக்கிறார்கள். விழித்துக்கொள்ளும்போது காலம் கடந்துவிட்டிருக்கும். இன்றைய நிலையில் நமது கவனம் எல்லாம் சமூக நிலையில் விழிப்ப்புணர்வூட்டுவதிலேயே இருக்க வேண்டும். வேதாந்த விசாரம் நமக்கிடையே கருத்து வேறுபாடுகளையும் அனாவசிய சச்சரவுகளையும் உண்டுபண்ணுவதாகவே உள்ளது. காரணம் பலரும் போதிய புரிதல் இன்றியே அனைத்தும் புரிந்தவர்களாக வாதிடுவதுதான். எனவேதான் ஆன்மிக விஷயங்கள் எழுதுவதைத் தவிர்த்து வருகிறேன். எனினும் மாயை குறித்து தமிழ் ஹிந்து வாசகர்கள பலரும் எழுதுமாறு பணிப்பதால் அது பற்றி மட்டும் ஒரு கட்டுரை எழுதி தமிழ் ஹிந்துவுக்கு அனுப்புகிறேன். பிரசுரிக்கத் தகுந்தது என தமிழ் ஹிந்து ஆசிரியர் குழு கருதினால் பிரசுரிப்பார்கள்.
    சங்கரர் கோட்பாடு குறித்தோ சங்கர மடங்கள் குறித்தோ எழுத மாட்டேன். ஏனெனில் இன்றைய சூழலில் அதற்குத் தவறான உள்நோக்கம் கற்பிக்கப்படும். ஏற்கனவே பலவாறான பழிகளைச் சுமந்து கொண்டிருக்கிறேன். போதாதா?
    -மலர்மன்னன்
    .
    .

  153. அன்புக்குரிய நண்பர்களே,

    விவேக சூடாமணியில் இருந்து

    159. It is the foolish man who identifies himself with a mass of skin, flesh, fat, bones and filth, while the man of discrimination knows his own Self, the only Reality that there is, as distinct from the body.

    160. The stupid man thinks he is the body, the book-learned man identifies himself with the mixture of body and soul, while the sage possessed of realisation due to discrimination looks upon the eternal Atman as his Self, and thinks, “I am Brahman”.

    161. O foolish person, cease to identify thyself with this bundle of skin, flesh, fat, bones and filth, and identify thyself instead with the Absolute Brahman, the Self of all, and thus attain to supreme Peace.

    218. Seeing the reflection of the sun mirrored in the water of a jar, the fool thinks it is the sun itself. Similarly the stupid man, through delusion, identifies himself with the reflection of the Chit caught in the Buddhi, which is Its superimposition.

    219. Just as the wise man leaves aside the jar, the water and the reflection of the sun in it, and sees the self-luminous sun which illumines these three and is independent of them;
    —————————-

    235. Therefore the universe does not exist apart from the Supreme Self; and the perception of its separateness is false like the qualities (of blueness etc., in the sky). Has a superimposed attribute any meaning apart from its substratum ? It is the substratum which appears like that through delusion.

    241-242. If thus the Shruti, in the dictum “Thou art That” (Tat-Tvam-Asi), repeatedly establishes the absolute identity of Brahman (or Ishwara) and Jiva, denoted by the terms That (Tat) and thou (Tvam) respectively, divesting these terms of their relative associations, then it is the identity of their implied, not literal, meanings which is sought to be inculcated; for they are of contradictory attributes to each other – like the sun and a glow-worm, the king and a servant, the ocean and a well, or Mount Meru and an atom.

    243. This contradiction between them is created by superimposition, and is not something real. This superimposition, in the case of Ishwara (the Lord), is Maya or Nescience, which is the cause of Mahat and the rest, and in the case of the Jiva (the individual soul), listen – the five sheaths, which are the effects of Maya, stand for it.

    246. Neither this gross nor this subtle universe (is the Atman). Being imagined, they are not real – like the snake seen in the rope, and like dreams. Perfectly eliminating the objective world in this way by means of reasoning, one should next realise the oneness that underlies Ishwara and the Jiva.

    252. As the place, time, objects, knower, etc., called up in dream are all unreal, so is also the world experienced here in the waking state, for it is all an effect of one’s own ignorance. Because this body, the organs, the Pranas, egoism, etc., are also thus unreal, therefore art thou that serene, pure, supreme Brahman, the One without a second.

  154. லியோனார்டோ டாவின்ஸி என்று எழுதுவதற்கு பதில் எழுத்துப் பிழை செய்துவிட்டேன், முந்தைய பதிவில். இதை அப்படியே விட்டுவைத்
    தால் இதுகூடத் தெரியாதவன் எதற்கு கோட் செய்கிறான் என்பார்கள்.
    -மலர்மன்னன் .

  155. சாரங் அவர்களே,

    உங்களது பிரச்சாரமானது கிட்டத் தட்ட இஸ்லாமியருடையது போல உள்ளது என்பதை சொல்ல வேண்டிய உள்ளது.

    அவர்கள் தான் எந்த மதத்தின் வேதத்தையும் நாங்கள் தவறு என்று சொல்லவில்லை. எல்லா மதமும் உண்மையில் சொல்வது இஸ்லாத்தின் உண்மையையே, இந்து மதம் பிரம்மம் என்பதற்கு உருவம் இருப்பதாக சொல்லவில்லை. வேதங்கள் உருவ வழிபாடு செய்யச் சொல்லவில்லை, அதனால் இஸ்லாம் சொல்வது மட்டுமே சரி என்பார்கள்.

    நீங்களும் அதைப் போலவே சங்கராச்சாரியார் சொல்வது துவைதமே, அத்வைதம் கூட //அவர்/அத்வைதம் கூறுவது “நானே தான் கடவுள்” என்பதல்ல//, என்று பிராக்கெட் போட்டு உங்களின் கோட்பாடுதான் இந்து மதம் என்பது போலக் காட்ட முயலும் ஆர்வம் வெளிப்படுகிறது.

  156. அன்புக்குரிய நண்பர்களே,

    அத்வேஷ்டா என்று கீதையில் கிருஷ்ணர் குறிப்பிட்ட பதத்தின் பொருள் என்ன என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அப்போது தெரியும் என்ன வகையான புரிதல், போதுமான புரிதல் இருக்கிறதா என்பது எல்லாம்.

  157. கந்தர்வன் அவர்களே,

    //பத்தாம் நூற்றாண்டு தொடங்கி பதினாறாம் நூற்றாண்டு முடிய உள்ள அத்வைத, த்வைத நூற்களில் பலவற்றுள் மண்டனருடைய அத்வைதத்தைப் பற்றியும் சுரேச்வரருடைய அத்வைதத்தைப் பற்றியும் ஒரே இடத்தில் வருகிறது. இவர்களில் எவரும் “மண்டனர் தான் சுரேஸ்வரர் ஆனார். இருவரும் ஒருவரே” என்று கூறவில்லை.//

    அவர்கள் தத்துவ ஆறாய்ச்சிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாக்கள். அவர் எந்த வூர், அப்பா யார் என்பது போன்ற இன்வேச்டிகசனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

    ஆனால் சிரிங்கேரி மடத்தின் முதல் பீடாதிபதியாகியாக சுறேச்வாச்சாரியார் இருந்ததாக் அவர்கள் சொல்வதால் அவரைப் பற்றி விவரமாக விளக்கி உள்ளனர். சேஷசாயி தொழில் நுட்பக் கல்லூரி திருச்சியில் உள்ளது. அதில் ஆரம்பம் முதல் இன்று வரை முதல்வராக இருந்தவர்களைப் பற்றிய முழுக் குறிப்புகளை வைத்து உள்ளனர். அது ஒரு கடமை ஆகும்.

    //இதிலிருந்து என்ன தெரிகிறது? விச்வரூபர் வேறு, மண்டனர் வேறு. விச்வரூபர் என்பவரே சன்யாசம் வாங்கி சுரேஸ்வரர் ஆனார்.//

    It will thus appear that the references in the guruvamsakaviya are to two different personalities… the other to visavarupa who beame a sanyasin and was conferred the title of Suresvacharya, who was also known variously as Mandana misra, umbeka, visvarupa and suresvacharuya…

    …..The case for setting aside tradition requires much stronger grounds than have been adduced so far.

    Govt Oriental manuscripts Libraray, Madras P.P. Subramanya shasthri, curator
    11th May 1937

    //மண்டனர் தான் சுரேஸ்வரர் ஆனார் என்றால், (ஆனந்தகிரி டீகையில் எழுதியிருப்பது போல) சுரேஸ்வரர் எதற்கு “பிரம்ம-சித்தியில்” உள்ளதைக் கண்டிக்க வேண்டும்? “முன்பு நான் இப்படி எழுதியிருந்தேன். அது தவறு. வாபஸ் வாங்குகிறேன்” என்று ஒரு confession சொன்னால் போதாதா?//

    பூர்வாசரமா செயல்கள், உறவு, பெயர் எல்லாவற்றையும் முற்றாக மறந்து ஒதுக்கி விடும் சன்யாச முறையில் சுறேச்வாச்சாரியார் இருந்தார். சன்யாசம் என்பது புதிய பிறவி போன்றது.

  158. நண்பர் திருச்சிகாரரே

    உங்கள் பாராட்டுகளுக்கும் அன்பிற்கும் நன்றி

    இன்று தான் நீதி சதகத்தில் 3,4,5 ச்லோக்காகங்கள் கற்றுக்கொண்டேன் (குரு முகமாக)- இதை சற்று முன்பே கற்றிருக்கலாமே என்று மிகவும் வருந்தினேன்.

    இரத்தின சுருக்கமாக

    பிரயத்தனத்தின் மூலம் முயல் கொம்பை கொண்டு வரமுடியும், முதலையின் வாயில் கைவிட்டு முத்தை எடுக்க முடியும், பெரும் திரைக் கடலை நீந்திக் கடக்க முடியும், கானல் நீரை குடிக்க முடியும், சீரும் சர்பத்தை தலையில் சூட முடியும். மனலை பிழிந்து எண்ணெய் எடுக்க முடியும் அனாiல் சிலருக்கு எதையும் புரிய வைக்கவே முடியாது.

    பர்த்ரு ஹரி சிலருக்கு புரிய வைக்க பெரும் முயற்சி எடுத்து தோற்று, இதை எழுதி வைத்துள்ளார். அவருக்கு நான் மிகவும் கடமை பட்டுள்ளேன்

    சங்கரர் த்வைதம் கற்பித்தார் என்று சொல்ல வரவில்லை (உடனே out of the context எதாவது கட் பேஸ்ட் சித்து பாரு என்று நீட்ட வேண்டாம்) – உங்களுக்கு “நானே தான் கடவுள்” இல்லை என்று சங்கரர் சொல்ல வில்லை என்றால் அது த்வைதமாக படுகிறது – இது கொஞ்சம் கூடா சிந்திக்காமல் புஸ்தகத்தில் உள்ளதை வெறுமனே படிப்பதால் வரும் எண்ணம். நீங்கள் பாஷ்யம் படிக்காதவரை இதை மாற்றிக்கொள்வது கடினமாக தான் இருக்கும்.

    அஹம் ஸ்ராந்தாஸ்மி என்றால் நானே ஸ்ராந்த: என்று அர்த்தம் இல்லை. அஸ்மி. சும்மா english translation படித்து விட்டு எதையோ புரிந்து கொள்ளக் கூடாது. அஸ்மி என்ற பதம் எதை உணர்த்துகிறது என்று புரிந்து கொள்ளுங்கள். சங்கரரின் பகவத் கீதை பாஷ்யம் இரண்டாம் அத்யாயம் ந அசதோ என்ற ஸ்லோகத்திற்கு சங்கரர் செய்துள்ள விவாதத்தை படியுங்கள் – ப்ரஹ்மமே சத்யம் அதை தவிர வேறொன்றும் சத்யம் இல்லை. எல்லாம் பிரம்ம மாயம் என்பதால் நானும் ப்ரகும்மமாகதான் இருக்க முடியும். நானே தான் கடவுள் என்பது அஹம் பிரம்மஸ்மி என்பதற்கு சரியான மொழிபெர்யர்ப்பே இல்லை.

    நான் ஒன்னும் ராமானுஜர் சொன்னதையோ, மாதவர் சொன்னதையோ சங்கரர் சொன்னார் என்று திரித்து சொல்லவில்லை. சங்கரர் பாஷ்யத்தில் என்ன சொல்லி உள்ளாரோ அதை தான் சொன்னேன். சங்கரர் சொன்னது நிச்சயமாக அத்வைதம் இல்லை. நீங்கள் சொல்வது புரிந்து வைத்து உள்ளது நிச்சயமாக அத்வைதம் இல்லை.

    அஹம் தன்யோஸ்மி – (நான் தன்யன் இல்லை – நான் தன்யன் ஆவேன்)

    உங்களை த்ரிப்தோஸ்தி ஆக்குவது மிகவும் கடினம் (உங்களை திருப்தி ஆக்குவது கஷ்டம் இல்லை – உங்களை திருப்தி படுத்துவது கஷ்டம்)

    //
    உங்களது பிரச்சாரமானது கிட்டத் தட்ட இஸ்லாமியருடையது போல உள்ளது என்பதை சொல்ல வேண்டிய உள்ளது.

    அவர்கள் தான் எந்த மதத்தின் வேதத்தையும் நாங்கள் தவறு என்று சொல்லவில்லை. எல்லா மதமும் உண்மையில் சொல்வது இஸ்லாத்தின் உண்மையையே, இந்து மதம் பிரம்மம் என்பதற்கு உருவம் இருப்பதாக சொல்லவில்லை. வேதங்கள் உருவ வழிபாடு செய்யச் சொல்லவில்லை, அதனால் இஸ்லாம் சொல்வது மட்டுமே சரி என்பார்கள்.

    நீங்களும் அதைப் போலவே சங்கராச்சாரியார் சொல்வது துவைதமே, அத்வைதம் கூட //அவர்/அத்வைதம் கூறுவது “நானே தான் கடவுள்” என்பதல்ல//, என்று பிராக்கெட் போட்டு உங்களின் கோட்பாடுதான் இந்து மதம் என்பது போலக் காட்ட முயலும் ஆர்வம் வெளிப்படுகிறது.
    //

  159. அஹம் பிரம்மாஸ்மி என்றால்

    “நான் பிரம்மாமாக இருக்கிறேன்” என்பது பொருள்.

    நான் பிரம்மமாக ஆவேன் என்பது பொருள் அல்ல.

    நான் மாறுபடாமல் எப்போதுமே பிரம்மமாகவே இருக்கிறேன், மனிதனாக எண்ணுவது மயக்கத்தின் காரணமாகவே. உண்மையை உணரும் ஞானம் பெரும் போது இதை வாஸ்தவத்தில் உணர்கிறோம். இந்த அத்வைதம் மிகவும் தெளிவானது.

    இதற்க்கு எந்த அளவுக்கு தவறான அர்த்தம் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுக்க முயல்கிறீர்கள். ஏனெனில் இறைவன் என்றால் ரொம்ப பெரியவன்,நாம் எல்லோரும் இறைவனாக இருக்கிறோம், அதை உணராமல் இருக்கிறோம் என்று சொன்னால் அது இறைவனுக்கு இணை வைப்பது போல ஆகி விடும், இறைவன் தான் இணையற்ற வல்லாளன், அதனால் இப்டி மாத்துவோம் என்று செயல்படுகிறார்கள்.

    மேலும் நான் தான் கடவுள் என்று அதட்டும் தொனியில் அத்வைதி சொல் மாட்டார். நான் கடவுளாக இருக்கிறேன் என்று தான் சொல்லுவார். அஹம் பிரமாஸ்மி என்றால் என்று எல்லோருக்கும் தெரியும். அத்வைதத்தை சிதைத்து த்வைதப் பொருள் வரும்படி எழுதுவது அறிவு நாணயமற்ற செயல் ஆகும்.

    .

  160. நான் எழுதியது

    //அஹம் தன்யோஸ்மி – (நான் தன்யன் இல்லை – நான் தன்யன் ஆவேன்)
    //

    தன்யனாக ஆவேன் என்று எழுதவில்லையே

    நீங்கள் எழுதியது

    //அஹம் பிரம்மாஸ்மி என்றால்
    “நான் பிரம்மாமாக இருக்கிறேன்” என்பது பொருள்.
    நான் பிரம்மமாக ஆவேன் என்பது பொருள் அல்ல
    //

    ஏன் இவ்வளவு அவசரம் உங்களுக்கு

    பிறகொரு நாள் ஆவேன் என்பதற்கு பவிஷ்யாமி என்று தான் சமஸ்க்ரிதத்தில் படம் இருக்கிறது.

    ஆவேன் (உள்ளேன்) என்பது தமிழிலும் எதிர் காலத்தை குறிக்கும் சொல் மட்டுமல்லாமல் நிகழ் காலத்தையும் குறிக்கும் . இப்பொழுது பிரம்மமாக இல்லாதது எதிர்காலத்தில் எப்படி பிரம்மமாக ஆகும். இது கூட தெரியாமலா நான் எழுதினேன் என்று நினைகிறீர்கள்

    பிரம்மம் ஆவேன் என்பதற்கு நிகழ்கால பொருள் இறக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?

    அஸ்மி என்பதற்கு (நான் பிரம்மம் ஆவேன்) அது தான் அர்த்தம். நீங்கள் சொல்வதற்கு சமக்ஸ்ரிதத்தில் பவாமி என்று அர்த்தம்.

    அத்வைதமும் விளங்காமல், த்வைதமும் விளங்காமல் ஏதேதோ எழுதுகிறீர்கள். அய்யா நான் த்வைதி அல்ல எனக்கு உள்நோக்கமும் அல்ல – இதை நீங்கள் புரிந்து கொள்ள போவதும் இல்லை – வேதாந்த மதங்கள் அனைத்தும் பிரித்து பார்க்க ஏற்படவில்லை – யாவை அனைத்தும் ஜீவாத்மா பரமாத்ம சம்பந்தத்தை சேர்த்துப் பார்க்கவே தோன்றின – இதை புரிந்து கொள்ளாமால் அத்வைதம் உத்தமம் த்வைதம் அதமம் என்று அடம் பிடிப்பது சிறு பிள்ளைத்தனம் ( அத்வைதத்தை த்வைதமாக எதோ நான் திரித்து கூறினது போலவும் அதனால் தீட்டு வந்து விட்டது போல நீங்கள் சொன்னதால் எழுதிகிறேன்)

    தத் தவம் அசி (இங்கு அசி என்பது second person குறிக்கும் , அதுவே என்னை குறிக்க வேண்டும் என்றால் தத் அஹம் அஸ்மி என்று வரும்) – தத் த்வம் அசி – நீயே தான் பிரம்மம் ஆவாய் (அது நீ தான்) என்றால் பிறகொரு நாள் என்று அர்த்தமா இப்பொழுது கூட நீயே பிரம்மம் ஆவாய் என்று அர்த்தமா

    ” மேலும் நான் தான் கடவுள் என்று அதட்டும் தொனியில் அத்வைதி சொல் மாட்டார்” – இதையே தான் நானும் சொல்ல வந்தேன் – விளங்கிக் கொண்டமைக்கு நன்றி – (சரி பிரம்மமாக ஆனவருக்கு அதட்டும் தொனி என்ன, கொஞ்சும் தொனி என்ன வித்யாசமா இருக்கப் போகிறது என்ன – ஒரு மாறுதலுக்கு பதி ஏதும் எழுதாமல் கொஞ்சம் சிந்தியுங்களேன்)

  161. என்னைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்.

    ஆனால் இந்து மத தத்துவங்கள் சிதைத்து திரிக்கப் படும் போது அதை சுட்டி காட்டி உண்மையை எழுதத் தயங்க மாட்டோம்.

    அஹம் அஸ்மி என்பதற்கு “நான் இருக்கிறேன்” என்பதுதான் சரியான பொருள்.

    நான் ஆவேன் என்பது பொருள் அல்ல.

    (நீங்கள் முன்பு சொன்னது

    //அஹம் தன்யோஸ்மி – (நான் தன்யன் இல்லை – நான் தன்யன் ஆவேன்)//)

    (நீங்கள் இப்போது சொல்வது

    ஆவேன் (உள்ளேன்) என்பது தமிழிலும் எதிர் காலத்தை குறிக்கும் சொல் மட்டுமல்லாமல் நிகழ் காலத்தையும் குறிக்கும் . இப்பொழுது பிரம்மமாக இல்லாதது எதிர்காலத்தில் எப்படி பிரம்மமாக ஆகும். இது கூட தெரியாமலா நான் எழுதினேன் என்று நினைகிறீர்கள்

    பிரம்மம் ஆவேன் என்பதற்கு நிகழ்கால பொருள் இறக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?)

    நீங்கள் முன்பு சொன்னது நீங்கள் இப்போது சொல்வது வேறு மாதிரி உள்ளது.

    மேலும் ஆவேன் என்பது ambiquity ஆக உள்ளது. நான் நன்கு படித்து டாக்டர் ஆவேன் என்று ஒரு மாணவர் சொல்வது நாம் அறிந்ததே.

    எனவே தெளிவான சரியான வாக்கியம் “அஹம் பிரம்மாஸ்மி – நான் பிரம்மமாக இருக்கிறேன்” !

    தத் -அது தவம்- நீயாக அசி- இருக்கிறது!

    //இதை புரிந்து கொள்ளாமால் அத்வைதம் உத்தமம் த்வைதம் அதமம் என்று அடம் பிடிப்பது சிறு பிள்ளைத்தனம்//

    அத்வைதம் உத்தமம் த்வைதம் அதமம் என்று நான் ஒரு போதும் சொன்னதில்லை.

    அத்வைதமோ, த்வைதமோ கோட்பாட்டை சிதைக்காமல் சொல்லுவோம் என்று தான் சொல்லுகிறோம்.

    இப்ப என்ன அத்வைதம் உண்மையா , த்வைதம் உண்மையா என்று தீர்மானிக்கிற அளவில் மற்ற உண்மைகளை எல்லாம் அனுபவத்தில் நேரில் கண்டு துன்பங்கள் எல்லாம் கடந்த நிலையிலா இருக்கிறோம்.

    பிரம்மம் என்ற ஒன்று இருப்பதானால் அதை நாம் உணர்வோமேயானால் அப்போது துவைதமா அல்லது அத்வைதமா என்பதைப் பார்த்துக் கொள்ளலாம்.

    முதலில் உண்மையை அடைய முயற்ச்சிப்போம், இருளில் இருந்து ஒளிக்கு செல்ல முயற்சி செய்வோம். ஒளியானது எது உண்மை என்பதை நமக்கு காட்டும்.

  162. Sorry for butting in.Just curious. Why is Mr Tiruchikaran speaking himself as us( Nam instead Nan)? Reminded me of Thiruviliadal movie scene between Dharumi and Shiva!
    Never mind . Continue the discussion Sir. It looks like there are LESS important issues for ordinary Hindus to worry about than the present discussion ( Mumbai bombing, Christian conversions, etc)

  163. ஒரு தலித்தை சங்கராச்சார்யாராக்க முடியுமா…????..ஒரு தலித்தை சங்கராச்சார்யார் ஆக்கமுடியுமா….???. ஏன் சார் ..இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இதமாதிரி கேட்டுகிட்டே இருப்பீங்க…???? தலித்துகளில் எத்தனையோ மனிதர்கள் ஆன்மீகக் கடல்களாக இருக்கிறார்கள் அவர்களில் யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து ஒரு பீடத்தை உருவாக்கி அதற்கு அவரை சங்கராசார்யார் ஆக்குங்கள்..சமயப்பணி ஆற்றுங்கள்…ஹிந்துக்கள் ஜாதி பேதமின்றி (பிராமணர் உட்பட )அனைவரும் உங்களுடன் கைகோத்துக் கொள்ளுவார்கள்….ஏன் அதை செய்ய மாட்டேங்கறீங்க..இனிமேயாவது ஒரு பீடத்தை உருவாக்குங்க சார் …மொதல் ஆளா நான் வந்து அவர் காலில்விழுந்து நமஸ்காரம் பண்ணுறேன்

  164. நாம் என்று எழுதுவது ஒரு எழுத்து வகை. தமிழிலே சில எழுத்தாளர்கள் முன்பு அப்படி எழுதியும் உள்ளனர். அப்படி எழுத நாம் யாரிடமும் அனுமதி கோர வேண்டியதில்லை.

    நாம் எழுதுவதைப் படிப்பவர்கள் யார் யாரெல்லாம் தாங்களும் அந்த நாமில் இருப்பதாக உணர்கிறார்களோ அவர்களுக்கு அந்த நாம் பொருந்தும். நாம் என்று சொன்னால் உலகில் இருக்கும் எல்லோரையும் சேர்த்து எழுதியதாக அர்த்தம் ஆகாது.

    வெறுப்புணர்ச்சி, சாதி ஆதிக்க உணர்ச்சி, மொழி ஆதிக்க உணர்ச்சி, சகிப்புத் தன்மை இல்லாமை …. போன்ற உணர்வுகள் இல்லாதவர்கள் என்னுடைய நாமில் கலந்து கொள்ளலாம். அந்த நாமில் இருப்பதும் இல்லாததும் அவரவர் விருப்பம். நாம் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை.

  165. //ஒரு தலித்தை சங்கராச்சார்யாராக்க முடியுமா…????..ஒரு தலித்தை சங்கராச்சார்யார் ஆக்கமுடியுமா….???. ஏன் சார் ..இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இதமாதிரி கேட்டுகிட்டே இருப்பீங்க…???? //

    ஒரு தலித் சங்கராச்சார்யார் ஆகும் வரை!

    //தலித்துகளில் எத்தனையோ மனிதர்கள் ஆன்மீகக் கடல்களாக இருக்கிறார்கள் அவர்களில் யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து ஒரு பீடத்தை உருவாக்கி அதற்கு அவரை சங்கராசார்யார் ஆக்குங்கள்..சமயப்பணி ஆற்றுங்கள்…ஹிந்துக்கள் ஜாதி பேதமின்றி (பிராமணர் உட்பட )அனைவரும் உங்களுடன் கைகோத்துக் கொள்ளுவார்கள்….ஏன் அதை செய்ய மாட்டேங்கறீங்க..இனிமேயாவது ஒரு பீடத்தை உருவாக்குங்க சார் …மொதல் ஆளா நான் வந்து அவர் காலில்விழுந்து நமஸ்காரம் பண்ணுறேன்// Appreciable!

  166. Dear thiruchikaran, it is absolutely ok to address self in plural. Here in North India, in Hindi, one always addresses self as “हम” rather than “मै”. Oh! Rama, exhausted of issues! But dear thiruchikaran, for each and every issue, I do not understand, whether one need to invoke caste?

  167. Oh Krishkumar.Sorry, my mistake. Of course we all speak in plureal in TN. The Queen does it too regularly in Britain( WE are not amused!) MK does it. Why not Mr TK?
    The discussion on issue of who was what/same or different person had gone on ad infinitum. I, with my limited knowldge accept the wise words of Shri Malarmannan ji.His views are amply suported by Shri Sarang/Shri Gandharvan with exhaustive references. It looks like someone wants to have the last word.
    Exhausted of this issue? Sure and why not?
    Like I said earlier, sorry. I should not have butted in again.

  168. Dear Shri Krishnakumar,

    Thanks for your comments.

    I think that I am not involving the caste issue in each and every issue. Generally I feel that Indian soceity can be a homogenious casteless soceity. Thus injustices to section of the people wont be there.

    I also feel that Hinduism does not require caste system for its survival, Hinduism can be stronger and glorious without caste system.

  169. ////இதே போல பிற கட்சிக்கும் தலைவனா இருக்கணும் எழுதாத விதியா இல்ல இருக்கு அதை முதலில் மாத்துங்க அந்த அந்த கட்சியில் உள்ள ஒரு எ.ஸ் /எ.டி தொண்டனை தலைவனாக்குங்க அப்புறம் மடத்திற்கு ஒரு எ.ஸ் /எ.டி சங்கரர் ஆகலாம் முதலில் ராமசாமி நாயக்கர் கட்சியில் எத்தனை எ.ஸ் /எ.டி தலைவராக ஆக்கினாருனு சொல்லுங்க பார்க்கலாம். //

    ஜாதி சண்டை போடுவதற்கு மிகவும் விருப்பமானால் வேறு இடம் பார்ப்பது சிறந்தது – அதற்க்கு இந்து மதத்தை ஒரு இடமாக பயன் படுத்த இயலாது.
    அமைதியான ஆன்மீகத்தை அனைவருக்கும் தரும் மதம் இந்து மதம். //

    இங்கு ஜாதி சண்டை போடவில்லை,60 வருடத்திற்கு முன்பு உருவான கட்சிக்கே தலைவனா ஆக்க முடியலையேன் சொல்கிறேன்.

    சமோகம் சர்வேசு நான் எல்லோரிடமும் சமமாய் இருக்கிறேன் , எனக்கு யாரும் வேண்டாதவர் இல்லை என்றார் கிருஷ்ணர். குகனை மார்புறத் தழுவி ஐவரானோம் என்றவர் இராமர். சாதி சண்டைகளை போட இந்து மதத்தை கூடாரமாக பயன் படுத்துவது இனியும் நடக்காது!

    குகனை மார்புறத் தழுவி ஐவரானோம் என்றவர் இராமர் சொன்னாரெ தவிர குகன்னுக்கு மகுடம் சுட்டல இல்ல

    ////ஊருக்கு இளைத்தவன் ஓட்ட பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் ஆ,ஊ ன்நா இந்து மதத்தில் கைய வக்கறது என்னா எவநும் எதுவும் கேடக மாட்டான் பாரு//

    //இந்து மதம் என்னும் ஊர் முழுதுக்கும் சொந்தமான நெய்யை யாரும் தன் பொண்டாட்டி கை என பாவிக்க கூடாது என்றுதான் சொல்லுகிறோம். சங்கராச்சாரியார் பதவி எங்கக் சமூகத்துக்கு மட்டும் தான், பிறர் வர முடியாது என்று இந்து மதத்திற்கு நாங்க மட்டும் தான் தான் பட்டா பாத்தியதை என்ற ரீதியில் செயல் பட வேண்டாம் என்றுதான் சொல்லுகிறோம். இந்து மதம் எந்த ஒரு தனிப் பட்ட சமூகத்தின் கையிலோ , தனிப் பட்ட நபரின் கையிலோ இப்போது இல்லை. இதைப் புரிந்து கொள்ளாமல் ஊருக்கு சொந்தமான நெய்யான இந்து மதத்தை வளைத்துப் போட்டு பட்டா போட முடியாது.////

    இந்து மதம் மட்டும் ஊருக்கே சொந்தம் பிர மதம் அவ அவனுக்கு சொந்தம்,எஸ் சி /எஸ் டி கோட்டாவுல பிறருக்கு அரசாங்கத்த ஒரு சீட்டு கொடுங்க சொல்லுங்க பார்ப்போம். சங்கரராக ஆகனும்ன்னா புதியதா ஒரு மடம் கட்டி ஆகலாம் யாராவது கஷ்டபட்டு உருவாக்கி கட்டி காத்தா அதில மூக்கை நுழைக்க கூடாது,பிராமணன் என்ன பிர ஜாதி காரன் இந்து மதத்தில் மடமே கட்டக்கூடாதுனு ஒன்னும் சொல்ல வில்லையே.

  170. இன்னும் இங்கு விவாதம் நிற்காமல் போய் கொண்டு இருக்கிறதே? என்னுடைய கேள்விக்கு யாரேனும் பதில் கூறுங்களேன்.

    (அ) சங்கராச்சாரியார் தான் ஹிந்துக்களின் ஒட்டு மொத்த பிரதி நிதியா?

    (ஆ) சங்கராச்சாரியார் ஒட்டு மொத்த ஹிந்துக்களுக்கும் குல குருவா?

    (இ) தலித்துக்கள் ஒரு பிராமணனை அவர்கள் இனத்தின் தலைவராக ஏற்று கொள்வார்களா?

    (ஈ) பணக்கார தலித் ஏழை பிராமணனுக்கு பெண் தருவாரா?

  171. //60 வருடத்திற்கு முன்பு உருவான கட்சிக்கே தலைவனா ஆக்க முடியலையேன் சொல்கிறேன். //

    அதை அந்தக் கட்சிக் காரனிடம் போய்க் கேட்க வேண்டும். கட்சியும் இந்து மதமும் ஒன்றா? தலைவன் கட்சி நடத்துற மாதிரிதான் இந்து மதத்தை நடத்த வேண்டுமா?

    //இந்து மதம் மட்டும் ஊருக்கே சொந்தம் பிர மதம் அவ அவனுக்கு சொந்தம்,எஸ் சி /எஸ் டி கோட்டாவுல பிறருக்கு அரசாங்கத்த ஒரு சீட்டு கொடுங்க சொல்லுங்க பார்ப்போம். //

    ஜாதி சண்டை போடுவதற்கு மிகவும் விருப்பமானால் வேறு இடம் பார்ப்பது சிறந்தது – அதற்க்கு இந்து மதத்தை ஒரு இடமாக பயன் படுத்த இயலாது.
    அமைதியான ஆன்மீகத்தை அனைவருக்கும் தரும் மதம் இந்து மதம்

    //சங்கரராக ஆகனும்ன்னா புதியதா ஒரு மடம் கட்டி ஆகலாம் யாராவது கஷ்டபட்டு உருவாக்கி கட்டி காத்தா அதில மூக்கை நுழைக்க கூடாது,//

    //கஷ்டபட்டு உருவாக்கி கட்டி காத்தா// பணம் காசு தான் முக்கியமா படுது, அர்த்தம் அனர்த்தம் என்று படிய சங்கராச்சாரியாரிடம் இருந்து நீங்கள் கற்றுக் கொண்டது ஒன்றும் இல்லை என்று இதில் இருந்தே தெரிகிறது.

    //பிராமணன் என்ன பிர ஜாதி காரன் இந்து மதத்தில் மடமே கட்டக்கூடாதுனு ஒன்னும் சொல்ல வில்லையே.//

    இதிலே பிராமணனை எதற்கு இழுக்க வேண்டும். பிராமணன் என்பவன் உலகில் உள்ள அனைத்து மக்களின் நன்மைக்காக உழைப்பவன் அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகலான் என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார். சாதி உணர்வு கொண்டு, தன சாதி உணர்வு காப்பற்றப் பட பாடுபடுபவன் பிராமணன் இல்லை.

  172. //(அ) சங்கராச்சாரியார் தான் ஹிந்துக்களின் ஒட்டு மொத்த பிரதி நிதியா?

    (ஆ) சங்கராச்சாரியார் ஒட்டு மொத்த ஹிந்துக்களுக்கும் குல குருவா?//

    இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் இந்து மதம் சங்கராச்சாரியார் நிறுவியதுதான் . சங்கராச்சாரியார் இல்லை என்றால் இன்றைக்கு இந்தியாவில் இந்து மதம் இல்லை. அம்மனுக்கு படையல் வைக்கும் பெண்கள் உண்மையில் ஆதி சங்கரரின் சீடர்களே, அது அவர்களுக்கு தெரியாமலும் இருக்கலாம்.

    தனி ஒரு மனிதனாக , பதினாறே வருடங்களில் இந்து மத்ததை இந்தியாவில் மீண்டும் நிலை நிறுத்தி விட்டார் .

    இந்து மதமானது உண்மைக்கு அழைத்து செல்வது , உண்மையை அறியுமாறு ஒருவனைத் தூண்டுகிறது என்பதாலே, அடிப்படையிலே பகுத்தறிவிக்கும் , அனுபவத்துக்கும் இந்து மதத்தில் முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கிறது .

    அத்தகைய பகுத்தறிவு அடிப்படையிலான புராதன இந்து மதத்தை பதினாறே வருடங்களில் இந்திய துணைக் கண்டத்தில் புனர் நிர்மாணம் செய்து விட்டார்.

    படித்த பண்டிதர்கள் மட்டும் அல்லாமல், சாதாரண மக்களும் பின்பற்றி ஆன்மீக உயர்வு அடையும் படிக்கு எளிமையான முறையில் எல்லோருக்குமான பக்தி மார்க்கத்தையும் அமைத்து
    தந்திருக்கிறார் .

    சமய சச்சரவுகள் இல்லாதபடிக்கு மத நல்லிணக்கத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தியாவில் தொன்று தொட்டு மக்களால் வழிபடப் பட்டு வந்த தெய்வங்களான அம்மன், கோவிந்தன், முருகர், சிவன் … இப்படியான எல்லா தெய்வங்களையும் பாடி அவரவர்களுக்கான வழிபாட்டு முறையை வூக்கப் படுத்தி , அதே நேரம் நல்லிணக்கத்தையும் வளர்த்து இருக்கிறார் .

    (இ) தலித்துக்கள் ஒரு பிராமணனை அவர்கள் இனத்தின் தலைவராக ஏற்று கொள்வார்களா?

    இந்தக் கேள்வி பொருத்தம் இல்லாதது.

    சுயநலம் இல்லாமல் தலித்துகளின் முன்னேற்றத்தை மட்டும் மனதில் வைத்து செயல் பட்டால் அவர்கள் தலைவனாக ஏற்றுக் கொள்ள தயங்க மாட்டார்கள்- பிராமணன் மட்டும் அல்ல, யாராக இருந்தாலும் சரி!

    (ஈ) பணக்கார தலித் ஏழை பிராமணனுக்கு பெண் தருவாரா?

    முதலில் பணக்கார பிராமணன் ஏழை பிராமணனுக்கு பெண் தருவாரா?

  173. அன்புள்ள சோழன்,

    உங்கள் நாலு கேள்விகளும் அர்த்தமுள்ளவை. யாராலும் பதில் சொல்ல முடியாது.

    ஏனெனில் இதே கேள்விகள் சங்கர மடத்தை பற்றி மட்டுமில்லாமல், இதர இந்து சமய மடங்களை பற்றியும் கேட்கப்படவேண்டும். ஏனெனில், மடம் என்பது , இறை நம்பிக்கை பற்றிய புரிதல் என்பவற்றை விடவும், அந்த மடங்களால் நிர்வகிக்கப்படும் சொத்துக்களை பராமரிக்கும் அதிகாரம் மற்றும் அதனால் சிலருக்கு மட்டும் கிடைக்கும் நன்மைகள் என்ற அடிப்படையிலேயே போய் கொண்டிருக்கிறது.

    இதற்கு , எந்த மதமும் விதிவிலக்கல்ல. ஏனெனில், ஏராளமான கிறித்தவ சர்ச்சுகளின் சொத்தை சூறையாட , கிறித்தவர்களில் சிலர் விரும்புவதால், அவர்களின் தேர்தலில் ஏராளமான் அடிதடி , வன்முறை நடக்கிறது. பத்திரிகை செய்திகளை பார்க்கும் போது சில விஷயங்கள் தெரியவருகிறது.

    இஸ்லாத்திலும் இதே நிலை தான். அதனால் தான் சில சிறு நிலப்பகுதிக்காக ஈரானும், ஈராக்கும் சுமார் பத்து வருடத்துக்கு சண்டை போட்டு பல லட்சம் மக்களை கொன்றனர்.

    எனவே, உலகு முழுவதும் நடப்பது நிலம், பணத்துக்கு நடக்கும் சண்டை தானே ஒழிய , வேறு ஒன்றுமில்லை.

    எனவே, உங்கள் கேள்விக்கு நான் தர விரும்பும் பதில் இதுதான்:-

    (அ) . சங்கராச்சாரியார்கள் இந்து மதத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமே பிரதிநிதி.

    (ஆ) சங்கராச்சாரியார்கள் இந்து மதத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமே குரு.

    (இ) தலித்துக்கள் இன்று உள்ள சூழலில் , ஒரு பிராமணரை தங்கள் தலைவராக ஏற்கமாட்டார்கள்.; பிராமணரை மட்டுமல்ல வேறு எந்த சாதியை சேர்ந்தவரையும் தலைவராக ஏற்க மாட்டார்கள்.

    (ஈ) பணக்கார தலித், ஏழை பிராமணனுக்கு பெண் தர மாட்டார். எந்த சாதியை சேர்ந்தவரானாலும் , தன்னுடைய சாதியை சேர்ந்தவரா என்று பார்க்க மாட்டார்கள். பெண்ணை கல்யாணம் செய்ய விரும்பும் மாப்பிள்ளை பதவி அல்லது பண வசதி உடையவரா, நிறைய படித்தவரா, படிப்பை வைத்து பணம் சம்பாதிக்கும் திறன் உள்ளவரா என்று தான் பார்க்கிறார்கள்.

    மேலும் நான் ஒன்று கூட்டி சொல்ல விரும்புகிறேன்.எந்த சமுதாயத்தை சேர்ந்தவரும் தன்னுடைய சாதியை சேர்ந்த ஏழையானாலும், பிற சாதியை சேர்ந்த ஏழையானாலும் பெண் கொடுக்க மாட்டார்கள். பணம், பதவி இவை தான் இதை தீர்மானிக்கிறது. சாதிகள் அல்ல. மதமும் அல்ல.

  174. //….குகனை மார்புறத் தழுவி ஐவரானோம் என்றவர் இராமர் சொன்னாரெ தவிர குகன்னுக்கு மகுடம் சுட்டல இல்ல…//

    அவசியம் இல்லை. ஏனெனில், ராமரை சந்திக்கும் முன்பிருந்தே குகன் ஒரு அரசன். வால்மீகியும், கம்பனும் இதைத் தெளிவாகச் சொல்வதாகக் கற்றறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

    .

  175. புத்த மதம் கடவுள் இன்மை கோட்பாட்டு மதம் ஆதலால், புத்த மதம் மிக செல்வாக்கோடு விளங்கிய காலத்தில் கடவுள் வழிபாடு இந்தியாவில் இல்லாமலே போயிற்று. குடும்ப வாழ்க்கை வாழ்பவருக்கு ஆன்மீக முயற்சியும் இல்லாமல் போனது. பக்தி வழிபாட்டு முறைக்கு முழு அங்கீகாரம் அளித்து, பல வழிபாட்டு முறைகளையும் மீட்டெடுத்து குடுத்த சங்கராச்சாரியார் (ஆதி சங்கரர்) இந்துக்கள் அனைவருக்கும் அவர்கள் அறிந்தோ, அறியாமலோ குருவாக இருக்கிறார்.

    இன்றைக்கும் சாமி கும்பிடும் இந்து ஒவ்வொருவருக்கும் அந்த பக்தி முறை இந்தியாவில் மீண்டும் வந்ததற்கு காரணம் சங்கராச்சாரியார் தான் என்பது தெரியாது.

    இன்றைக்கு சங்கராச்சாரியார் நிர்மாணித்த நான்கு மடங்களின் பீடதிபதிகளோ, இன்னும் பத்திரிகைகளால சங்கராச்சாரியார் என சொல்லப் படும் பலருமோ குறிப்பிட்ட குழுவுக்கு மட்டுமே குருவாக செயல் பட்டால் அதனால ஒரிஜினல் சங்கராச்சாரியார் (அதாங்க ஆதி சங்கராச்சாரியார்) அது போல என ஆகி விடாது.

  176. சாதி என்று ஒன்றும் இல்லை. அரசியல் வாதிகளால் உருவாக்கப்பட்ட சில குழுக்கள் ஜாதி என்று அடையாளம் தாங்கி, அரசியல் வாதிகளின் கைப்பாவையாக செயல்பட்டு, நாட்டை சூறையாடி, மத மாற்ற வியாபாரிகளின் பணப்பையின் மேல் கண் வைத்து , பிச்சை எடுத்து வாழ்கின்றன.

    சென்னை உயர்நீதி மன்றத்தில், வேற்று சாதியில் திருமணம் செய்து கொண்டவரின் குழந்தைகளுக்கு என்ன ஜாதி என்ற வினா எழுப்ப பட்டு , வழக்கு நடந்தது. அப்போது, சென்னை உயர்நீதி மன்றத்தில், கணவனின் ஜாதியே , அந்தக் குழந்தையின் ஜாதி என்று ஒரு மிக பிற்போக்கான , ஆணாதிக்க மதவாதிகளின் வாதத்தை வைத்து, பகுத்தறிவு பீரங்கிகள் வழக்கை நடத்தி முடித்தன.

    என் உறவு பெண் ஒருவர் ஒரு இஸ்லாமியருடன் காதல் திருமணம் செய்து , பல குழந்தைகளை பெற்ற தாய் ஆவார். அவருக்கு பிறந்த குழந்தைகள் இஸ்லாமியரும் இல்லை, இந்துவும் இல்லை. இதுதான் உண்மை.

    என் மகனின் ட்யூஷன் ஆசிரியரின் மகள் ( சைவம்) , ஒரு வைணவ பையனை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அதுவும் என்ன ஜாதி? தந்தையின் ஜாதியே என்று நம் நாட்டு சட்டங்கள் சொல்கின்றன. ஆனால், நமது நீதிமன்றங்களும், அவை பின்பற்றவேண்டிய பிற்போக்கான சட்டங்களின் அடிப்படையில் , அப்பா ஜாதியே பிள்ளைக்கும் ஜாதி என்று தீர்ப்பு வழங்குகின்றன.

    கலப்பு திருமணம் செய்தோருக்கு , மொத்த மக்கள் தொகையில் அவர்கள் சதவீதம் என்ன என்று கணக்கெடுத்து, தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த ஒதுக்கீடு ஒவ்வொரு ஐந்து வருடமும், கூட்டப்படவேண்டும். ( அதாவது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில்) இவ்வாறு செய்து வந்தால், இன்னும் இருபதே ஆண்டுகளில் சாதிகள் ஒழிந்து விடும். சாதிகளை வாக்கு வங்கியாக கருதி, சாதி சண்டையை வளர்த்துவரும் , சொம்புகளும் மக்களால் தூக்கி எறியப்படுவார்கள்.

    இந்துமதம் ஜாதிகளால் வாழவில்லை. நம் மதம் பிறந்தபோது ஜாதிகள் இல்லை. அதன் பிறகு, சிறிது கால இடைவெளிக்கு பிறகு, ஜாதி என்ற நச்சு பிறந்தது. இந்த ஜாதிகள் மக்களின் தொழில் அடிப்படையிலேயே அமைந்தன.
    ஆனால், சத்திரியனான விச்வாமித்திர முனிவர் தான் , பார்ப்பனர்கள் தினசரி செய்யும் காயத்திரி மந்திரத்தின் த்ருஷ்டா ஆவார்.

    மகா பாரத காலத்திலேயே, பீஷ்மனின் தந்தை சந்தனு, ஒரு மீனவப்பெண்ணை, மணந்து அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு அரசுரிமை கொடுத்தான். மீனவப் பெண் அரசுரிமை பெற நம் நாட்டிலே, மதமோ, ஜாதியோ குறுக்கிடவில்லை. அதுவம் எப்போது? பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே இந்தநிலை.

    இதிலிருந்து தெரிவது என்ன? இந்துமதம் இன்று இருப்பது போன்ற ஒரு ஜாதிமுறையால் வாழவில்லை. இந்த ஜாதிமுறை இடையில் வந்தது விரைவில் போய்விடும். இந்த ஜாதிமுறை விரைவில் அழிந்துவிடுமோ, என்ற அச்சத்தில் , மதமாற்ற வியாபாரிகள், இந்தக் கேடுகெட்ட ஜாதிமுறையை, தங்கள் கிறித்தவ மதங்களிலும் ( பல பிரிவுகளிலும் ) வளர்த்து வருகின்றனர்.

    உண்மை என்னவெனில், உலகம் முழுவதும், இனவாதம், மதவாதம் மட்டுமே உள்ளது. இவற்றால் மனித இனத்துக்கு நன்மை எதுவும் இல்லை. அன்பும், அஹிம்சையும் மட்டுமே மனிதனை உலகம் முழுவதும் இணைக்கும். மனிதர்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கும் மதமோ, ஜாதிமுறையோ, மொழியோ மனித இனத்தை பின்னுக்கு தள்ளி , அழிவுக்கே வழி வகுக்கும்.

    எந்த மொழியானாலும் சமமே, எந்த மதமானாலும் சமமே, எந்த இனமானாலும் சமமே. கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனும், கடவுள் நம்பிக்கை உள்ள ஆத்திகனும் சமமே. ஒன்றை அழித்து மற்றொன்று வாழ நினைக்கும் முயற்சி என்றுமே நடக்காது.

    வன்முறை, பயமுறுத்தல், பணஆசை போன்ற வற்றின் மூலம் நாட்டை துண்டாட நினைக்கும் மதமாற்ற வியாபாரிகள் விரைவில் பொது மக்களால் தூக்கி எறியப்படுவார்கள். அவர்களுக்கு சொம்பாக செயல்படும் பொய் நாத்திகளுக்கும் இது தான் கதி.

  177. நண்பர் திருச்சிகாரரே

    //
    புத்த மதம் கடவுள் இன்மை கோட்பாட்டு மதம் ஆதலால், புத்த மதம் மிக செல்வாக்கோடு விளங்கிய காலத்தில் கடவுள் வழிபாடு இந்தியாவில் இல்லாமலே போயிற்று. குடும்ப வாழ்க்கை வாழ்பவருக்கு ஆன்மீக முயற்சியும் இல்லாமல் போனது. பக்தி வழிபாட்டு முறைக்கு முழு அங்கீகாரம் அளித்து, பல வழிபாட்டு முறைகளையும் மீட்டெடுத்து குடுத்த சங்கராச்சாரியார் (ஆதி சங்கரர்) இந்துக்கள் அனைவருக்கும் அவர்கள் அறிந்தோ, அறியாமலோ குருவாக இருக்கிறார்.
    //

    சங்கராசார்யார் புத்த மதத்தை ஓரம் கட்ட வில்லை அதை செய்து முடித்தது நியாய வைசேசிக மற்றும் பூர்வ மிமாம்ச காரர்கள் தான் (தர்க்க பூர்வமாக).
    சந்க்ராசார்யர் செய்த மா பெரும் கார்யம் சான்க்யர்களை ஒடுக்கியது தான்.
    இதை சங்கரரின் பாஷ்யத்தில் நீங்கள் கண்டு கொள்ளலாம். புத்த மதத்தின் மீது ஒரு சில இடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். பாஷ்யம் பூராவும் சாங்க்ய attack தான்.

    நான் சொல்வதை சொல்லிவிட்டேன் – உங்களை பாஷ்யம் படித்து பாருங்கள் என்று தான் என்னால் சொல்ல முடியும்.

    புத்தத்தை எதிர்ப்பதை விட சான்க்யத்தை எதிர்ப்பது தான் கடினம் – அந்த காரியத்தை தான் சங்கரர் செய்து முடித்தார்.

    இதற்கு தயவு செய்து ஏதாவது உள்அர்த்தம் கல்பிக்க வேண்டாம்

  178. அன்புக்குரிய நண்பர் சாரங்,

    நீங்கள் பாஷ்யங்க்களைப் படிக்க சொல்லுவதில் காட்டும் அக்கறையை சங்கராச்சாரியாரைப் புரிந்து கொள்ளுவதில் காட்டலாம். பாஷ்யங்களைப் படிப்பதோடு அவரே எழுதிய நூல்களான மோஹ முத்கரம், விவேக சுடாமணி போன்றவற்றையும், அவர் எழுதிய பக்தி சுலோகங்களையும் படியுங்கள்.

    சங்கரச்சாரியாரின் செயல் பாடுகள் , அதன் விளைவுகளையும் புரிந்து கொள்ளுங்கள். சாங்கிய, பூர்வ மீமாச காரர்களோடு சங்கரர் வாதிட்டு வேதாந்த தத்துவத்தை நிலை நிறுத்தினார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    ஆனால் இந்தியாவில் சாதாரண மக்களோடு தொடர்பு கொண்டிருந்த மதம் எது, புத்த மதமா, பூர்வ மீமாம்ச மதமா? சாதாரண மக்கள் உட்கார்ந்து யாகங்களை செய்து கொண்டு இருந்தார்களா, சாங்கிய யோகத்தில் ஈடுபட்டார்களா?

    ஆனால் புத்த விஹாரங்கள், துறவிகள் ஆகியோர் சாதாரண மக்களுக்கு ஒரு அப்பீலை ஏற்படுத்தினர் என்பதை மறுக்க முடியுமா? கடவுள் மறுப்பு கோட்பாட்டு பவுத்தர்கள் இந்தியாவில் இந்துக்களிடம் இருந்த கடவுள் வழிபாடு முறையை பறித்து சென்று விட்டனர் என்பதை சுவாமி விவேகானந்தர் தெளிவாக சொல்லி இருக்கிறாரே.

    சங்கராச்சாரியார் இந்தியாவின் எல்லா பிரிவு மகளிடமும் கலந்து பழகி இருக்கிறார். பண்டிதர்களுடன் விவாதம் செய்தது மட்டும் இல்லை. வணிகர், மீனவர்கள், விவசாயிகள் இப்படி பல சமூகத்தினரிடம் ஆன்மீகத்தை அவர் விதித்து இருக்கிறார். செம்படவர்கள், பலுசிஸ்தானிய நாடோடி சமூகம் இவர்களை எல்லாம் பிராமணர்களாக அவர் மாற்றி இருக்கிறார் என்று விவேகானதர் சொல்லி இருக்கிறாரே.

    இப்போது ஆடி மதம், தென் இந்தியா முழுவதும் அம்மன் விழாக்கள் களை கட்டுகிறதே, ஆடி வெள்ளிக்கழமை நோன்பு…, கற்பூர நாயகியே கனகவல்லி …இந்தப் பாட்டுகளை நீங்கள் கேட்கவில்லையா, அம்மனுக்கு அங்காங்கே சீரியல் பல்புகளில் கட் அவுட் இருக்கிறதே பார்க்கவில்லையா?

    இது எல்லாம் இந்தியாவில் மீண்டும் எப்படி வந்தது?

    பத்து நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் புத்த, சமண மதங்கள் கோலோச்சி கடவுள் வழிபட்டு முறையை இல்லாமல் செய்தனவே. சாதரண மக்களின் எளிய பக்தி வழிபாட்டை மீட்டுக் கொடுத்தது யார்?

    அன்றைய காலகட்டத்தில் மக்கள், “பவுத்த சாமியாருங்க சொல்றதை விடுப்பா, இது நம்ப கடவுள், சங்கராச்சாரியார் போன்ற பெரிய மனுசங்களே நம்ப அம்மனைக் கும்பிடுறாங்க, வேற இன்னா வேணும்” என்று அம்மன் வழிபாட்டை தங்கு தடையின்றி கொண்டாடும்படி, திருப்தியுடன் மகிழ்ச்சியுடன் அம்மனைக் கும்பிடும் படியான நிலையை உருவாக்கியது யார்?

    இன்றைக்கு அவர்கள் சங்கரச்சாரியாரை நினைக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் உருவாக்கிய பக்தி வழியை அவர்கள் நன்கு பிடித்துக் கொண்டனர். அவர்களுக்கு கார்பரேட் குருக்கள் யாரும் இல்லை, அதனால் அவர்களுக்கு எந்த ரிஸ்க்கும் இல்லை. அவர்களுக்கு அம்மனுடன் நேரடி தொடர்பு இருக்கிறது. கோவிலில் இருக்கும் பூசாரியும் மக்களுடன் வாழ்பவர், குடும்பம், குட்டி உண்டு ஏடா கூடமா எதுவும் செய்ய அவரால் முடியாது.

    நீங்கள் முதலில் மக்களைப் புரிந்து கொள்ளுங்கள். பாஷ்யங்க்களை அப்புறம் படிக்கலாம்.

    ஆதி சங்கரர் உருவாக்கிய அம்மன் பக்தி, கோவிந்தர் வழிபாடு, சுப்பிரமணியர் வழிபாடு, சிவன் வழிபாடு இவை மக்களிட ஆழப் பதிந்து ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வெற்றி நடை போடுகின்றனர். சுல்தான், முகலாயர் ஆங்கிலேயர் … யார் வந்தும் இதை அசைக்க முடியவில்லை.

    இவர்களுக்கு எந்த குருவோ, பாஷ்யமோ தேவை இல்லை. ஆதி சங்கரர் அன்று உருவாக்கிய சாலிட் கான்கிரீட்டில் போட்ட அஸ்திபாரத்தில் உறுதியான கட்டிடமாக இவர்களின் ஆன்மீகம் உள்ளது.

    உங்களால் முடிந்தால் இதை வலுப் படுத்துங்கள். இதுதான் இந்து மதத்தைக் காத்து நிற்கிறது.

    பெரிய குருவை தேடித் போனவர் எல்லாம் ஒண்ணுமே நடக்கலை , சும்மா சொல்லுறாங்க என்று மென்று முழுங்கும் படியான நிலையில் இந்த கடவுளுடன் நேரடி தொடர்புள்ள மக்களின் ஆன்மீகத்துக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

  179. தலித் சங்கராச்சாரியார் ஆக வேண்டுமென்பதில்லை. எந்த தலித்தும் அதைக்கேட்கவில்லை. மற்றவர்கள் அப்படிச்சுட்டிக்காட்டுகிறார்கள். என‌வே இஃது அர‌சிய்லாகிற‌து.

    சங்கராச்சாரியார் என்றால் ஆதிசங்கரரின் கொள்கைப்படி தோன்றிய இந்து மதத்தின் ஒரு பிரிவு அது. இந்து மதப்பிரிவுகள் ஏராளம்: அப்போதும் இப்போதும்.

    தலித்துகளின் ஆன்மிகவாதிகள் இருக்கிறார்கள். உண்மை. ஆனால், ஆன்மிகவாதி என்றால் இந்துமத சாஸ்திரங்களில் கரைகண்டவர்கள் என்று பொருள் அன்று. ஆன்மிகத்தில் ஈடுபட்டு வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்பவர்களே அவர்கள். அவர்களுக்கு வட்மொழி சாஸ்திரங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று கிடையாது.

    தலித்துகள் வடமொழி ஞானமற்றவர்கள். மற்றவர்களும் அப்படித்தான். ஆனால் மற்றவர்களில் பலர் இருப்பார்கள்; இருந்தார்கள். தலித்துகளில் இருந்தால் வியப்பே. புராணங்கள் எங்கோ ஒரு தலித்தைக் காட்டும். தனிமரம் தோப்பாகுமா ?

    தலித்துகள் இந்துமதத்தில் இருந்தாலும், அவர்களெல்லோரும் சங்கரரின் கொள்கைப் பிடிப்புள்ளவர்கள்; அல்லது தெரிந்தவர்கள் என்று சொல்ல முடியாது.

    எனவே சங்கரமடம் அல்லது சங்கராச்சாரியார் ஆவது என்பது கேள்வியிலேயே இல்லை.

    தமிழகத்தைப்பொறுத்தவரை, மக்களிடையே ஊடுருவியது, சைவ சித்தாந்த மதமே. அது சங்கரரின் கொள்கையை ஏற்கவில்லை. மனிதன் தெய்வமாக முடியாது என்பதே சைவ சித்தாந்தம். த‌த் த‌வ‌ம் அசி என்ப‌து ச‌ங்க‌ர‌ சித்தான்த‌ம். சை.சி பாமரர்களிடையே செழிக்கக்காரணம் தமிழ் மொழியை ஏற்று வடமொழியைக் கைவிட்டதாலே. தேவாரம் திருவாசகம் பாடியவர்கள் தமிழை இறுக்கிப்பிடித்தார்கள். இதில் பெரும்பங்கு திருஞான சம்பந்தரைச் சேரும். இவர் ஒரு ஞானி மட்டுமே இல்லாமல், இக வாழ்க்கை விசயங்களிலும் தலையிட்டு இம்மதத்தை வேறூண்டச்செய்தார். தமிழ் தமிழ் தமிழ்…எனவே மக்களிடம் நேரடியாகச் செல்ல முடிந்தது.
    இந்த சைவசிந்தாந்த மதத்திலேயேதான் ஒருவேளை தலித்துகளில் ஆன்மிகவாதி என நாம் அழைப்போர் வரக்கூடும். சங்கராச்சாரியர் ஆக முடியுமா என்ற கேள்வியை விட ஆதினம் ஆக முடியுமா என்பதே relevant தலித்துகளைப் பொறுத்தவரை.

    அர்ச்சனம், பாத சேவனம் என இருவகை இந்துமத வழிபாட்டில். இதில் இரண்டாவதே உழைக்கும் வர்க்கத்தினருக்கு உகந்தது. அப்படிப் பார்த்தால், தலித்துகளுக்கு பாத சேவனமே வேண்டும். இதற்கு ஞானம் தேவையில்லை. எனவே இது மக்களைப்பேதம் பார்க்காமல் அணைக்கும். முதல்வகைக்கு ஞானம் தேவை. அது வெறும் ஆன்மிகவாதியாக இருப்பவருக்கு வந்து விடாது. ஞானம் பெற்ற ஞானியரே சங்கராச்சாரியாராகவோ, ஆதினமாகவோ ஆகவது நல்லது. இங்கு ஜாதி என்ப‌தெல்லாம் கிடையாது. ஞான‌மே.

  180. திருச்சிக்காரன் அவர்களே

    நீங்கள் பேசிக் கொண்டே இருங்கள் – நம்பிக் கொண்டே இருங்கள். சங்கரர் புத்தர்களை எதிர்க்க வில்லை என்று சங்கர மட web site டே சொல்கிறது. இதை வைத்து கொண்டு மட்டும் சொல்லவில்லை. அத்வைத குருமார்களுடன் பேசி, பாஷ்யங்களை படித்துவிட்டு

    சங்கரர் உண்மையிலேயே எழுதிய புத்தகங்களை படித்து கொண்டு தான் இருக்கிறேன்.

    //
    இப்போது ஆடி மதம், தென் இந்தியா முழுவதும் அம்மன் விழாக்கள் களை கட்டுகிறதே, ஆடி வெள்ளிக்கழமை நோன்பு…, கற்பூர நாயகியே கனகவல்லி …இந்தப் பாட்டுகளை நீங்கள் கேட்கவில்லையா, அம்மனுக்கு அங்காங்கே சீரியல் பல்புகளில் கட் அவுட் இருக்கிறதே பார்க்கவில்லையா?

    இது எல்லாம் இந்தியாவில் மீண்டும் எப்படி வந்தது?

    //

    இதெல்லாம் இந்தியாவை விட்டு எப்பொழுதுமே போகவில்லை – ஒட்டு மொத்த மக்களும் புத்த பிக்ஷுக்கலாக மாறி விட்டது போல பேசுகிறீர்கள்.

    இந்த மாறுதல்களுக்கு பெரும் பங்கு வகித்து தாக்கத்தை கொண்டு வந்தது நாயன்மார்களும் ஆழ்வார்களும் என்று மறந்து விடாதீர்கள் – அவர்கள் தான் மக்களுக்கு அருகாமையில் இருந்தனர் – தமிழை உபயோகப்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்தினர்,.

    சங்கரரின் பங்கு தலையாக பங்கு, அது ஞான வழியில் – எதையும் எதையுமோ போட்டு கொழப்பி கொள்ளாதீர்கள்.

    உங்கள் நம்பிக்கைகளை நான் கெடுக்கப்போவதில்லை – உண்மையை மட்டுமே சொல்ல வந்தேன்

    நம்புங்கள் நம்பிக்கொண்டே இருங்கள். முடிந்தால் இன்னொரு பக்ஷம் இருக்கும் என்றாவது நம்பிக்கை வையுங்கள்.

  181. //சங்கரர் உண்மையிலேயே எழுதிய புத்தகங்களை படித்து கொண்டு தான் இருக்கிறேன்//

    அப்படி போடு, உங்கள் பக்ஷத்தின் படி மோஹ முத்கரம், விவேக சுடாமணி இவை சங்கராச்சாரியார் எழுதிய நூல்களா இல்லை வெறும் பாஷ்யம் மட்டும் தான் எழுதினாரா?

    //சங்கரர் புத்தர்களை எதிர்க்க வில்லை என்று சங்கர மட web site டே சொல்கிறது. இதை வைத்து கொண்டு மட்டும் சொல்லவில்லை. அத்வைத குருமார்களுடன் பேசி, பாஷ்யங்களை படித்துவிட்டு//

    எந்த மட web site னா? சுட்டியைக் குடுங்களேன் !

    அப்ப சங்கராச்சாரியாரும் சூனியவாதம் தான் சொன்னாரா? விடுதலைக்கு பிறகு ஒன்றும் இல்லை, சூனியம் தானா? பல பவுத்தர்களுடன் வாதிட்டதாக வரலாறு சொல்கிறதே,உங்களுக்கு பிடிக்காத வரலாறு எல்லாம் தப்பாண்ணா?

    //
    இப்போது ஆடி மதம், தென் இந்தியா முழுவதும் அம்மன் விழாக்கள் களை கட்டுகிறதே, ஆடி வெள்ளிக்கழமை நோன்பு…, கற்பூர நாயகியே கனகவல்லி …இந்தப் பாட்டுகளை நீங்கள் கேட்கவில்லையா, அம்மனுக்கு அங்காங்கே சீரியல் பல்புகளில் கட் அவுட் இருக்கிறதே பார்க்கவில்லையா?

    இது எல்லாம் இந்தியாவில் மீண்டும் எப்படி வந்தது?

    //

    இதெல்லாம் இந்தியாவை விட்டு எப்பொழுதுமே போகவில்லை -//

    ஆந்திராவில் பொனலு என்னும் சக்தி வழிபாடு, அதே ஆடி மாதம் (now), தமிழ் நாட்டில் நடப்பது போல அப்படியே நடக்கிறது, பெரிய அளவில் பெண்கள் பங்கு கொள்ளுகின்றனர். பாட்டுக்கள் மட்டும தெலுங்கிலே வேறு வித்யாசம் இல்லை. யார் கொண்டு வந்தது இதை.

    இது இந்தியாவில் பவுத்தர் காலத்திலும் இருந்தது என்றால் பவுத்த மதம் இந்தியாவில் முக்கிய மதமாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

    இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வழக்கம் போல இந்து மதத்தை பின் பற்றிக் கொண்டு இருந்தார்கள்.எதோ கொஞ்சம் பவுத்த துறவிகள் தான் பவுத்த மதத்தை பின்பற்றினார்கள். -கடவுள் இல்லை என்று பவத்த துறவிகள் கோட்பாட்டால் சாதாரண மக்களிடம் இருந்த கடவுள் வழிபாட்டை பறித்து சென்று விட்டனர் என்று எல்லாம் சொல்லப் படுவது சும்மாங்காட்டியும் இல்லையா?

    //ஒட்டு மொத்த மக்களும் புத்த பிக்ஷுக்கலாக மாறி விட்டது போல பேசுகிறீர்கள்//

    எல்லோரும் துறவியாக முடியாது, பெரும்பாலான மக்கள் குடும்ப வாழ்க்கையே வாழ்ந்தனர், ஆனால் ஆன்மீகம் என்றால் துறவுதான் என்ற நிலைக்கு புத்த பிக்ஷுக்கள் கொண்டு வந்து விட்டனர். சாதாரண மக்களிடம் இருந்த கடவுள் வழிபாடு, கடவுள் இல்லை எனும் கோட்பாடல் பறிக்கப் பட்டதால் சாதாரண மக்களுக்கு ஆன்மீக முயற்சி இல்லாமல் போனது, அவர்கள் ஆன்மீக வேட்கை , தேடலுக்கு வடிவு இல்லை. ஆனாலும் புத்த துறவிகளை வியப்புடன் நோக்குவது, புத்தரை பாராட்டுவதை தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை, அந்த நேரத்தில் சங்கராச்சாரியார் பக்தியை மீண்டும் கொண்டு வந்தார்.

    //இந்த மாறுதல்களுக்கு பெரும் பங்கு வகித்து தாக்கத்தை கொண்டு வந்தது நாயன்மார்களும் ஆழ்வார்களும் என்று மறந்து விடாதீர்கள் – அவர்கள் தான் மக்களுக்கு அருகாமையில் இருந்தனர் – தமிழை உபயோகப்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்தினர்//

    ஐயா, நான் ஆழ்வார்கள், நாயன்மார்களின் பணியை குறைத்து மதிப்பிடவில்லை, தமிழ் நாட்டில் அவர்களின் தாக்கம் கணிசமானது.

    அம்மன் வழிபாட்டில் ஆழ்வார்களோ, நாயன்மார்களோ முனைப்பு காட்டவில்லை, மாறாக அவர்கள் நாராயணர் மற்றும் சிவன் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். மீண்டும் ஒரு முறை ஆழ்வார்களின், நாயன்மாரக்ளின் உழைப்பையோ தாக்கத்தையோ பாராட்ட , கிரெடிட் குடுக்க நான் ஒரு போதும் தயங்கவில்லை என சொல்லிக் கொள்கிறேன். தமிழ் நாட்டில் சிவ, நாராயணர் வழிப்பாட்டில் அவர்கள் பங்கு கணிசமானது.

    //சங்கரரின் பங்கு தலையாக பங்கு, அது ஞான வழியில் – எதையும் எதையுமோ போட்டு கொழப்பி கொள்ளாதீர்கள். //

    ஞானத்தை அடைய எளிய வழியாக சங்கராச்சாரியார் முன் வைத்தது பக்தியையே. பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்- குழப்புவது, குழம்புவது நானா, நீங்களா?

    //நம்புங்கள் நம்பிக்கொண்டே இருங்கள்.//

    ஐயா , நான் எதையும் நம்புவது கிடையாது. பகுத்தறிவு ஆராய்ச்சியே நம் வழி. நம் அறிந்தவற்றை சொல்கிறோம்.

    நீங்கள் சங்கராச்சாரியாரை எப்படியாவது சுருக்கி , குறைத்துக் காட்ட்வதிலேயே முனைப்புக் காட்டுகிறீர்கள்.
    சங்கராச்சாரியார் என்று எழுதக் கூட விரும்பவில்லை நீங்கள்.
    நாமோ ஸ்ரீ இராமனுஜாச்சாரியார் என்று அழகாக எழுதி அந்த மாபெரும் மகானுக்கு சிறப்பு செய்ய தவறுவதில்லை.

    //முடிந்தால் இன்னொரு பக்ஷம் இருக்கும் என்றாவது நம்பிக்கை வையுங்கள்.//

    வண்ணக் கண்ணாடி வழியாக பார்த்தால் அதே வண்ணமாகத் தெரியும். உங்களை ஆராய்ச்சி சார்பு நோக்குடனே நடத்தப் படுகிறது.
    அதவைதம் முதல் எல்லாவற்றையும் அப்படியே திரிக்கிறீர்கள். அப்புறம் எங்க பக்ஷம் பாரு என்றால் நடு நிலையலருக்கு தெளிவாக தெரிகிறது, உங்கள் பக்ஷம் என்ன என்று.

  182. தமிழகத்தில் சக்தி வழிபாடு மிக அதிகம். சைவ, வைணவ கோயில்களை விட,
    கன்னியாகுமரி,
    காமாட்சி,
    மீனாட்சி,
    மாரியம்மன்,
    காளியம்மன்,
    துர்க்கை அம்மன்,
    திரவ்பதி அம்மன்,
    அங்காளபரமேஸ்வரி,
    பொன்னி அம்மன்,
    நாகாத்த அம்மன்,
    பேச்சாயி,
    என்று தெய்வத்தை பெண் வடிவில் வழிபடும் கோயில்களே ஏராளம். மேலும், சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில் என்று எங்கு போனாலும் அங்கும் அம்பாள் சன்னதி, அல்லது தாயார் சன்னதி என்று பெண் உருவிலேயே வழிபாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    மேலும் மாணிக்க வாசகரின் திருவாசகத்தில் ” சக்தியை வியந்து பாடியது ” என்ற தலைப்புடன் ஏராளமான பாடல்கள் உள்ளன.

    ஆனால், ஆதி சங்கரர் இந்து மதத்துக்கு புத்துயிர் ஊட்டினார் என்பதிலும், புத்த , சாங்க்ய பிரிவினரின் நிரீஸ்வர வாதத்துக்கு சாவுமணி அடித்தார் என்பதும் உண்மை.

    ஆனால், ஆதி சங்கரரை பிரசன்னா புத்தர் என்று சொல்லி , சிலர் விமர்சித்தனர். ஆனால் அதில் எள்ளளவும் உண்மை இல்லை.

  183. தமிழகத்தில் சக்தி வழிபாடு மிக அதிகம். சைவ, வைணவ கோயில்களை விட,
    கன்னியாகுமரி,
    காமாட்சி,
    மீனாட்சி,
    மாரியம்மன்,
    காளியம்மன்,
    துர்க்கை அம்மன்,
    திரவ்பதி அம்மன்,
    அங்காளபரமேஸ்வரி,
    பொன்னி அம்மன்,
    நாகாத்த அம்மன்,
    பேச்சாயி,
    கருமாரி அம்மன்

    இத்தனை அம்மன் வழிபாடும் எப்படி வந்தது?

    சங்கராச்சாரியார் அளவுக்கு அம்மன் வழிப்பாட்டுக்கு முக்கியத்துவம் குடுத்தவர் உண்டா?

    ஆனாலும் சங்கராச்சாரியார் என்றால் தர்க்கம், வாதம், பாஷ்யம் என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், அவர் உருவாக்கிய பக்தியை மறந்து (மறைத்து) விடவேண்டும்

    சிவன் கோவில் அல்லது பெருமாள் கோவில்களில் அம்மன் சன்னதி இருக்கிறது.

    ஆனால் அம்மனை மூல சன்னதியாக வைத்து வழிபாடும் முறை , மிகவும் பாப்புலரான முறை இதை யார் கொண்டு வந்தது. சங்கராச்சாரியார் என்று மட்டும் சொல்லக் கூடாது. ஏனெனில் சங்கராச்சாரியாரின் பக்தி கோட்பாட்டை பற்றி சிந்திக்க கூடாது!

  184. சங்கராச்சாாியாா் உயா்ந்தவா் என்ற அடிப்படை கருத்தை மையமாக வைத்தே மாதா அமிா்தானந்தமயி யின் சிறப்ப அளக்கப்படுகினறது. அதற்கு தேவையில்லை. சங்கராச்சாாிய மடங்கள் பிறாமண சாதி சாா்பாகத்தான் இன்றும் செயல்படுகின்றன.அவரா்கள் காட்டும் ஆச்சாரம் மற்றும் வைதீக வழக்கங்களை கைகொள்பவா்கள் யாரோ அவர்களைத்தான் ஆதாிப்பாா்கள். காஞ்சி பொியவா் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் ” புணுால் போட்டவா்கள்தாம் காயத்திாி மந்திரம் ஜெபிக்கத் தகுதி படைத்தவா்கள். என்று ஞானதீபம் என்ற பத்திாிகைக்கு பேட்டி அளித்தாா். உடனே திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் தனது பத்திாிகையான தாமச்கரத்தில் ” இளைய சங்கராச்சாாியாா் பழையகால சாதிமுறைக்கு வித்திடுகின்றாா் என்று கண்டித்து எழுதியது. தபோவனம் காயத்திாி மந்திரத்தை அனைவருக்கும் பொதுவாக வைத்து கற்றுக் கொடுத்து வருகின்றது.
    காலம் மாறி வருகின்றது. அனைவரும் மாறிவருகின்றாா்கள்.பிறாமணா்களும் மாறி வருகின்றாா்கள். எனவே சுவாமி விவேகானந்தா் சொன்னதுஎபால் ” பிறாமணா்களின் நல்ல பழக்கங்களை கற்று பிற்பட்ட மக்கள் தங்களின் சமய பழக்க வழக்கங்களின் தரத்தை உயா்த்த வேண்டும் என்று அறைகூவல்யிட்டுள்ளாா். இன்று செய்ய வேண்டியது அதுதான்.நாடுமுழுவதும் முறையான சமயகல்வி சில அனுஷ்டானப்பயிற்சி. அதை கொடுத்துவிட்டால் அவனவன் தனது மனபாிபாகத்தை உணா்ந்து தனக்கு தேவையான அனுஷ்டானங்களைச் செய்து கொள்வான். எப்படி அதைச் சாதிக்கப் போகின்றோம்.

  185. துறவறம் ஏற்க விரும்பும் தலீத் உட்பட அனைத்து சாதி மக்களுக்கு பயிற்சி அளித்து சந்நியாசம் அளிக்க ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் தயாராக உள்ளது. விரும்பும் நபா்கள் மடங்களை அணுகலாம். தலீத் சங்கரராச்சாாியராக தேவையில்லை. ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராகலாம்.

  186. துறவறம் ஏற்க விரும்புபவன் ஏன் சங்கராச்சாரியர் ஆக ஆசைப்பட வேண்டும்? ஒரு நாராயண குருவாகவோ, சுவாமிசித்பவானந்தராகவோ, ஆகக் கூடாது?

  187. சங்கர மடத்திற்கு தலீத் தை தலைவா் ஆக்குங்கள் என்ற கோஷம் தேவையற்றது.
    ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் ஆகிய துறவு அமைப்புக்கள் அனைவரையும் துறவியாக்கிக் கொள்ள தயாராக உள்ளது.

    இன்று ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஈரானிய முஸ்லீம் ஒருவா் துறவியாகி
    சுவாமி கங்கானந்தா் என்ற பெயாில் உள்ளாா்.

    சங்கர மடம் என்றால் பொிய கொம்பா ?

    தலீத் இந்து இளைஞா்களே ! ராமகிருஷ்ண மடத்தில் சேருங்கள்

  188. ((தங்களையும் தங்கள் கொள்கைளையும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும்)) பிராமணர்கள் உள்ளவரை இந்துமதம் உருபடாது. மேலும் ((பிராமணர்களின் வழிகாட்டுதலின்படி நடக்கும்)) இந்துமதம் உள்ளவரை இந்தியா உருபடாது. இந்து கோவில்களில் dress code வேண்டும் என்கிறார்கள். சரி. ஓகே. ஆனால் கோவில்களில் உள்ள அர்ச்சகர் தனது உடலின் மேல் பாதி பகுதியை மறைக்காமல் தானே அங்கு பணிபுரிகிறார்? அவருக்கு மட்டும் டிரஸ் கோட் தேவையில்லையா? அவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா? ஒரு தலித் சங்கராச்சாராரியாராக ஆனால் என்ன தப்பு? ஏன் அந்த கோஷம் தேவையற்றது என்று சொல்லுங்கள் திரு அனபுராஜ்?

  189. இந்துமதத்தில் தலைவர்கள் என்று யாரும் கிடையாது. ஏனெனில் எல்லோரும் இங்கு சுயசிந்தனை உடையவர்கள். பல்வேறு குழுக்கள் இந்து மதத்தில் உண்டு. இன்னமும் எதிர்காலத்திலும் புதிய குழுக்கள் புதிய கிளைகள் புதிய பிரிவுகள் உருவாகும். அதுதான் இயல்பு. அதுதான் உண்மையான வளர்ச்சிக்கு வித்திடும்.

    இந்துவுக்கு மத நூல் என்று ஒன்று இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. ஒரே ஒரு மத நூல்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடும் கிடையாது. அதனால் தான் நம் முன்னோர் சார்வாகம் போன்ற நாத்திக கருத்துக்களை கொண்ட பிரிவுகளையும் இந்துமதத்தின் ஒரு பிரிவாகவே கருதி மதிப்புக்கொடுத்தனர்.

    சங்கராச்சாரியார்கள் தங்கள் மடங்களுக்கு தானமாக பெறப்பட்ட நிலம், கட்டிடம் , ஆகியவற்றில் நிர்வாகம் செய்து, அந்த வருமானம் – வாடகை ஆகியவற்றை வைத்து , தர்ம காரியங்களை இயன்ற வரை செய்துவருகிறார்கள். அதே சமயம் அவர்கள் மத தலைவர்கள் அல்ல. இந்து மதம் என்பதற்கு இறைவனே தலைவன்/ தலைவி ஆகும். சங்கராச்சாரியார்களை போலவே இன்னும் பிற மடங்களின் தலைவர்களும் , அகோபிலம், ஸ்ரீரங்கம், வானமாமலை , திருப்பனந்தாள், திருவாவடுதுறை, தர்மபுரம் , கௌமாரமடம் குன்றக்குடி என்று பல்வேறு மடங்களும், மடாதிபதிகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் மடத்தின் தலைமை அதிகாரிகள் – மடத்தின் சொத்துக்களை காப்பாற்றி நிர்வாகம் செய்யவேண்டிய பெரும்பொறுப்பில் உள்ளவர்கள்.

    வேதம், உபநிஷதம், காயத்திரி மந்திரம் , ஆகியவை ஜாதி, மொழி, மற்றும் ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் நம் அனைவருக்கும் பொதுச்சொத்து. அந்த காலத்தில் வேதம் ஓதுதலும், ஓதுவித்தலும், யாகம் செய்தாலும், யாகம் செய்வித்தலும் என்று பலவித கடமைகள் பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டது. அதெல்லாம் இப்போது இல்லை. ஏனெனில் பிராம்மணர்கள் மற்ற ஜாதியினரை போலவே எல்லா தொழில்களையும் செய்து வாழவேண்டிய சூழலில் தான் உள்ளனர். ஜாதிக்கு ஒரு தொழில் என்ற அமைப்பு உடைந்து மாறிவிட்டது. இப்போது அனைத்து ஜாதியினரும் வேதம் படிக்கவேண்டும். அப்போதுதான் இந்துக் களின் மிக அற்புதமான ஆன்மீக கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லமுடியும்.

    சுவாமி சித்பவானந்தர் கோவைமாவட்டத்தில் கவுண்டர் என்று சொல்லும் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர். அவர் ஆன்மீகத்தில் எங்கள் சங்கராச்சாரியாருக்கு நிகர்நிலை படைத்தவர். பெரிய ஆன்மீக தலைவர்களுக்கு ஜாதி என்பது ஒரு தகுதி அல்ல. அவர்களின் ஆன்மீக உணர்வே அவர்களை தலைவர் ஆக்குகிறது. சுவாமி சித்பவானந்தா அவர்கள் திருவாசகம், பகவத்கீதை ஆகியவற்றுக்கு எழுதிய உரைநூல்கள் தமிழ் நூல்களில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தவை.

    சுவாமி விவேகானந்தர், சுவாமி நாராயண குரு , சுவாமி சகஜானந்தர் , இன்னும் எவ்வளவோ ஆன்மீக குருமார்கள் நம்மிடையே இருந்தனர்.,

    பெண்களும், வேதமும், காயத்திரியும் ஓதவேண்டும். மதக்கடமைகளில் பெண்களை ஈடுபடுத்தாததற்கு அந்தக் காலத்தில் அந்த தேவை இல்லை. இன்றோ உலகமே ஆபிரகாமிய அபாயத்தால் அரண்டு போய் உள்ளது.

    பெண்கள் வேதம் காயத்திரி அத்யயனம் செய்யக்கூடாது என்று சொல்வோர் அறியாமையில் உள்ளனர். அப்படி தொடர்ந்து சொன்னால், அந்த மடங்களை பறிமுதல் செய்து பெண்களையே மடாதிபதிகள் ஆக்கவேண்டும்.

    பெண்கள் வேதம் ஓதினால் காயத்திரி மாதா மனம் மகிழ்வாள். பெண்கள் மந்திர கர்த்தா ஆவார்கள். வேத காலத்தில் ஏராளம் பெண்கள் மகரிஷி பட்டியலில் உள்ளனர். வேத காலத்தில் நடந்த விவாதத்துக்கு தீர்ப்பு சொல்ல ஒரு பெண்மணிதான் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பதையும் நமது வரலாறு கூறுகிறது. பெண்கள் வேதம் படிக்காவிட்டால் எப்படி நீதிபதியாக ஆன்மீக பட்டிமன்றத்தில் தீர்ப்பு வழங்கி இருக்க முடியும். அதனை நாம் சிந்திக்க வேண்டாமா ?

    அனைத்துக்கோயில்களிலும் பெண்களுக்கு ஆகமப்பயிற்சியும், வேத அத்யயனமும் செய்து , மந்திர சாஸ்திரங்களை கற்பித்து அவர்களில் 50 சதவீத இடஒதுக்கீடு செய்து திருக்கோயில்களில் பூஜகர், அர்ச்சகர் , புரோகிதர் ஆக்க வேண்டும். இதெல்லாம் காலத்தின் தேவை ஆகும்.இது நடந்து தான் தீரும். இது நடக்கவில்லை என்று வருத்தப்பட்டு , ஆபிரகாமிய மதங்களுக்கு கூமட்டைகள் தான் போகும். இந்துக்களின் கலாச்சாரம் எந்த காரணத்தை முன்னிட்டும் கடைச் சரக்கு அல்ல. அது ஆன்மீக பொக்கிஷம். இன்று பல கிராமக்கோயில்களில் சிவாச்சாரியாரோ, பட்டாச்சாரியாரோ, வேறு பூஜகர்களோ கிடையாது. எனவே இந்த ஆள் தட்டுப்பாட்டை போக்கி , அனைவருக்கும் தேவையான அளவு ஆகமப்பயிற்சியும், வேதப்பயிற்சியும் கொடுப்பது நம் கடமை . திரு HONESTMAN அவர்களின் கருத்தில் ஒரு தவறு உள்ளது. பிராமணர் தலைமை உள்ளவரை இந்துமதம் உருப்படாது என்ற கருத்து முழுத்தவறு. இதில் ஜாதியே கிடையாது. ஏனெனில் இந்து மதத்தில் எல்லா ஜாதிக்காரர்களும் தலைவர்களாக/ நிர்வாகிகளாக இருக்கிறார்கள். திருக்கோயில் சொத்துக்களை பிராமணர்கள் நிர்வாகம் செய்யவில்லை. பிராமணர் அல்லாதவர்கள் தான் நிர்வாகம் செய்கிறார்கள்.

    எத்தனையோ பிராமணர் அல்லாத மடங்கள் உள்ளனவே, மாதா அமிர்தானந்த மயி எவ்வளவு பிராமணர்களால் மதித்து வணங்கப்படுகிறார் என்பது உங்களுக்கு தெரியவில்லை. ராமரும், கிருஷ்ணரும் பிராமணர்கள் அல்ல. வசிஷ்டர் வாயாலேயே பிரம்ம ரிஷி பட்டம் பெற்ற விச்வாமித்திரனும் பிராமணர் அல்ல. பிராமணர்கள் தினசரி செய்யவேண்டிய நித்தியவிதியாகிய சந்தியா வந்தனத்தின் முக்கிய மந்திரமான காயத்திரி மந்திரத்துக்கு உரிய ரிஷியே விஸ்வாமித்திரர் தான்.

    இந்துமதத்தில் ஜாதி பேதங்களை தொடர்ந்து வளர்த்து , அரசியலில் ஒரு VOTE BANK POLITICS -செய்வது நம் இந்திய அரசியல்வாதிகள் தான். பீகார் , குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சில கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் பல வருடங்களாக பூஜை செய்துவருகிறார்கள். தமிழ் நாட்டிலும் அம்மன் கோயில்களில் 90 சதவீதம் பூசாரிகள் பிராமணர் அல்லாதவர்களே ஆகும்.

  190. திரு HONESTMAN அவர்களே,பிராம்மணர் என்பவர் ஒரு ஜாதியை சேர்ந்தவரல்ல,
    அதுஒரு தகுதி. இறைவழிபாட்டில் குறிப்பிட்ட ஒரு குழுவினர் தங்களுக்கு தாங்களே
    எடுத்துக்கொண்ட ஒரு நிலைப்பாடு அந்த நிலைப்பாட்டின் படி இறைவனுக்குபக்கத்தில் இருப்பதாக தாங்களும்,அவர்கள் இறைவழிபாட்டில் முன்னிலை வகிப்பது உண்மைதான் என்று அவர்களுக்கு வழிவிட்டு ( பிராமணர் அல்லாதவர்களும் )
    பிறரும் காலம்காலமாக ஒரு பிரிவினர் இறைவனுக்கு பக்கத்திலும், ஒரு பிரிவினர்
    இறைவனுக்கு சற்று தள்ளியும் நின்று தங்களின் இறைவுணர்வை வெளிப்படுத்தி
    மத உயர்விற்கும், மனித சிந்தனை உயர்விற்கும் தொண்டாற்றியுள்ளனர்.பிராம்மணர் என்பவர்கள் ஓர் ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள் இந்துமத மனிதர்களுக்கு இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஓர் ஏணியாகவும், பாலமாகவும்,இருப்பவர்கள் அவ்வளவே. அப்படி ஏணியாகவும், பாலமாகவும்,
    இருக்கும் தகுதி உள்ளவர்கள் அனைவரும் ப்ராம்மனர்களே.தற்பொழுது நாம் குறைகூறும் பிராம்மணர்கள், ப்ராம்மனல்லாதவர்க்கு இறைவனை காட்டும் ஒரு
    ஆசிரியராகத்தான் இருக்கிறார்கள். ஸ்ரீராமனும், ஸ்ரீ கிருஷ்ணனும்,பகவான் புத்தரும்,அவதாரபுருஷர்கள் இவர்கள் பிராம்மண பிரிவை சேர்ந்தவர்கள் அல்ல ஆனால் எந்த மனிதர்களால் இவர்களை அறிந்துகொள்ள முடிகிறதோ அந்த மனிதன்
    பிராம்மணன் என்ற தகுதியை அடைகிறான்.அந்ததகுதியை அடைந்து விட்டபின் அவன் தன்னை ஜாதி என்ற குறியீட்டுக்குள் அடைத்துக்கொள்வதில்லை.
    ஆகவே பிராம்மணர்கள் என்பவர்கள் ஆசிரியர்கள், பிராம்மனரல்லாதவர்கள்,
    மாணவர்கள் போன்றவர்கள்,அவர்களின் உதவியுடன் ஆன்மிகத்தில் நாம்
    ஆசிரியர்களைவிட முன்னேறமுடியும் என்ற உண்மையை புரிந்துகொள்ளவேண்டும்.
    ஓஷோ அவர்கள் சொன்னதைப்போல பிராம்மண சமூகத்தில் மிகஉயர்ந்த ஞானிகள்
    தோன்றியிருப்பார்கள்,ஆனால் அவதாரபுருஷர்கள் தோன்றவில்லை என்பதை நினைவில்கொள்ளவேண்டும் .

  191. திருமதி/செல்வி . அத்விகா..

    //வேதம், உபநிஷதம், காயத்திரி மந்திரம் , ஆகியவை ஜாதி, மொழி, மற்றும் ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் நம் அனைவருக்கும் பொதுச்சொத்து. அந்த காலத்தில் வேதம் ஓதுதலும், ஓதுவித்தலும், யாகம் செய்தாலும், யாகம் செய்வித்தலும் என்று பலவித கடமைகள் பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டது. அதெல்லாம் இப்போது இல்லை. ஏனெனில் பிராம்மணர்கள் மற்ற ஜாதியினரை போலவே எல்லா தொழில்களையும் செய்து வாழவேண்டிய சூழலில் தான் உள்ளனர். ஜாதிக்கு ஒரு தொழில் என்ற அமைப்பு உடைந்து மாறிவிட்டது. இப்போது அனைத்து ஜாதியினரும் வேதம் படிக்கவேண்டும். அப்போதுதான் இந்துக் களின் மிக அற்புதமான ஆன்மீக கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லமுடியும்.//

    ஆதர்சமான உண்மை .. மிகவும் தீர்க்கமான பார்வை. தங்களின் எண்ணம் பூர்த்தியாக சிவபெருமான் ஆசீர்வதிக்கட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *