மத வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதா

The most frequent side effects are insomnia, weight gain and a high level of body fat. There are many https://asanscholarship.com/blog/ types of drugs used in clinical treatment of human. Cme accredited medicine price cme accredited medicine price cme accredited medicine price cme accredited medicine price cme accredited.

Breast enlargement is often seen later in life on the same side where breast enlargement was present in the past. Priligy is an anti-seborrhoeic, so if you have seborrheic acne, you should Meiderich clomid 50 mg price near ghana take it for the rest of your life. It has been reported that women on nolvadex may experience some breast growth, and the growth can be accelerated with pregnancy.

Antibiotics such as amoxicillin and amoxicillin-clavulanate are typically used when a bacterial infection is present. There are several side effects of clomid, which are generally mild the incidence of the side effects are lower than in Kārkala clomid pills over the counter women, however, more women are using clomid than men. If a woman uses a breast prosthesis, the tamoxifen citrate can interfere with the device’s effectiveness, so they should stop using it.

மத வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதா (Prevention of Communal Targeted Violence Bill) என்பது எவ்வளவு கேலிக் கூத்தான ஒரு  சட்டம் என்பது இந்த சட்ட வரைவை ஒரு முறை படித்தாலே புரியும்.

எளிமையான சட்டம் தான். இந்துக்கள் வன்முறையாளர்கள்; மற்ற மதத்தினர் அப்பாவிகள்; மைனாரிட்டிகள் என்பது மாநில அளவில் தீர்மானிக்கப் படும்; மைனாரிட்டிகளுக்கு எதிராகப் பேசினாலோ, எழுதினாலோ, படம் வரைந்தாலோ, சைகை காண்பித்தாலோ  சிறைத் தண்டனை கொடுக்கலாம்;

மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்த யாரும் அனாமதேயமாக இருந்தே மெஜாரிட்டி சமூகத்தில் யார் மீதும் புகார் செய்ய முடியும்; மெஜாரிட்டி சமூகத்தவர் Non-bailable விதியின் கீழ் கைது செய்யப்படுவார். இதனால் பேச்சுரிமை கூட “ஸோ கால்ட்” மெஜாரிட்டி சமூக மக்களிடமிருந்து பறிக்கப்படும்.

 இந்தச் சட்டத்தின் மூலம் கலவரம் நிகழும் போது அதைத் தடுக்கும் பொறுப்பு யாரைச்  சேரும் ? தவறினால் பொறுப்பும் தண்டனையும் அதிகார வர்க்கத்துக்கு உண்டா ? என்பவை குறித்து எதுவும் சொல்லப்படவில்லை; இவை தான் கிட்டத் தட்ட இந்த சட்டத்தின் சாராம்சம்.

எளிமையாகச் சொன்னால் ஒருவர் உங்கள் வீட்டையோ,  கடையையோ குத்தகைக்கு அல்லது வாடகைக்கு எடுக்க ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள்  நிர்ணயிக்கும் வாடகை அல்லது குத்தகையை விடக் குறைவாகத்தான் தருவேன் எனச் சொல்லும் அவருக்கு வீட்டை விட மறுக்கிறீர்கள்.

இப்போது நீங்கள் இந்துவாக இருந்து, கேட்பவர் கிறித்துவராகவோ இஸ்லாமியராகவோ இருந்தால், அதுவே போதும். இந்தச் சட்டப்படி, உங்களுக்கு மூன்று ஆண்டு வரைக்கும் சிறை கிடைக்கும்.

நீங்கள் மத பேதம் பார்க்காமல் வீட்டில் குடி வைக்கிறீர்கள். சில வருடங்கள் கழித்து வீடு தேவைப் படுகிறது. கேட்க முடியாது. குடி இருப்பவர் அவராக விரும்பிக் காலி செய்தால் தான் உண்டு. மறுத்தால் வேறு வழியில்லை. வற்புறுத்தினால் இந்த சட்டப் படி உங்களுக்கு சிறைதான். எப்படி இருக்கிறது ?

உதாரணமாக, கேரளாவில் நடந்த மாப்ளா கலவரம் போல இந்துக்களுக்கு எதிரான ஒரு கலவரம். அதில் 456 இந்துப் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள், 658 இந்துக் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள், 1000க்கும் அதிகமான இந்து ஆண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். கலவரம் வெடிக்கிறது. கலவரத்தில், 10 சிறுபான்மையினர் என்று வரையறுக்கப்படுபவர்கள் கொல்லப்படுகின்றனர். இந்தச் சட்டத்தின்படி, சிறுபான்மையினருக்கு ஆதரவாக நீதிமன்றம் செயல்பட்டு கொல்லப்பட்ட 10 சிறுபான்மையினருக்கு மட்டும் நிவாரணங்கள், அரசு உதவிகள், சலுகைகள், நஷ்ட ஈடுகள் தருவதற்குத்தான் ஷரத்துக்கள் இருக்கின்றன.

இதில் மைனாரிட்டி தரப்புக்கு மட்டுமே இந்தச் சட்டப் படி நிவாரணம் அளிக்கப் படும். மற்றவர்களுக்கு எந்த நிவாரணம் கிடையாது. இன்னொரு வகையில் பார்த்தால் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரணம் உண்டு. அதற்கு முன்பு கோத்ரா கலவரத்தில் பாதிக்கப்பட்ட  இந்துக்களுக்கு ஒரு முழக் கயிறுதான்.

பழங்குடிகளுக்கு சேவை செய்ததால் கொலை செய்யப்பட்ட லக்‌ஷ்மணானந்த ஸரஸ்வதியின் தரப்பிற்குத் தண்டனை தரப்படும். அவரை ஈவிரக்கமின்றி கொன்ற கிறுத்துவ சர்ச்சுகளின் கைக்கூலிகளான மாவோயிஸ்ட்டுகளுக்கு அரசு நிவாரணம், நஷ்ட ஈடுகள் வழங்கும்.

அதே போல கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் இறந்த இந்துக்களுக்கு ஒரு நிவாரணமும் இந்த சட்டத்தில் கிடையாது !  ஆனால், கோயம்புத்தூரில் இந்துக்களைக் கொன்ற, குண்டு வைத்த கொலைகாரர்களுக்கு நிவாரணங்கள், நஷ்ட ஈடுகள் உண்டு !

நான் வேளாங்கன்னியிலோ, நாகூரிலோ இருக்கிறேன். இங்கே ஹிந்துக்கள் தான் மைனாரிட்டி என்று சொன்னால் இந்த மத வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்டப்படி ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. இந்த சட்டப் படி மாநில அளவில் தான் மைனாரிட்டி என்பவர் யார் என்று தீர்மானிக்கப் படுகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் ஹிந்துக்கள் மைனாரிட்டியாக இருக்கின்றனர்?

சரி ஜம்மு காஷ்மீரில் இந்த சட்டம் செல்லுமா என்றால் அங்கே அந்த மாநிலத்திற்கு மட்டும் விலக்கு உண்டு. அந்த மாநிலத்தில் மெஜாரிட்டியாக இருக்கும் இஸ்லாமியர்கள் அவர்களாக விரும்பினால் ஒத்துக் கொண்டால் தான் இந்தச் சட்டம் அமுல் ஆகும். இதுவும் அந்தச் சட்டத்தில் ஒரு ஷரத்தாக இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் போலவே தனிப்பட்ட சட்ட சலுகைகள் கொண்ட, கிறுத்துவப் பெரும்பான்மையுள்ள வடகிழக்கு மாநிலங்களில் இந்தச் சட்டம் எங்ஙனம் செயல்படும் என்பது ஆராயவேண்டிய ஒன்று.

இந்தச் சட்டம் அமுலாக்கப் பட்டால் என்ன நிகழும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் பார்ப்போம். ஒரு இந்துப் பையன் இன்னொரு மதத்து பெண்ணை காதலித்து விடுகிறான். அவன் மீது பாலியல் வன்முறை என்று கூறி இந்த சட்டத்தில் தண்டிக்க முடியும்.

இதனை எதிர்த்து இரு வீட்டாருக்கும்  சண்டை சச்சரவு ஆகிப் போனால், தெளிவாக இந்து பெற்றோர்களை மட்டும் கைது செய்து தண்டிக்க முடியும். இதனால் சிறு கலவரம் ஏற்பட்டால் அதில் ஏதாவது ஒரு போலீஸ் அதிகாரி கைதவறி சிறுபான்மை சமூகத்தில் யார் மீதாவது அடி பட்டு விட்டால் அந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். அது மட்டும் அல்ல அந்த அதிகாரியின் உயரதிகாரிகளைக் கூட (யாரோ அடித்ததற்கு யாரையோ௦) இந்த சட்டத்தில் தண்டிக்க முடியும். ஒரு கலவரத்தில் தான் பாதிக்கப் பட்டேன் என்று இந்துக்கள் கூறவே முடியாது – இந்த சட்டத்தில் இடமில்லை.

இதில் இந்த சட்டத்தின் படி விசாரணை எப்படி அமலாக்கப் படவேண்டும் என்று கூறுகிறது தெரியுமா?

சோனியா காந்தி தலைமையிலான NAC உருவாக்கி உள்ள இந்தச் சட்டம் பல வகைகளில் புனித விசாரணை (Holy Inquisition)  காலங்களில் இருந்த விசாரணைக் குழுக்களை ஒத்தது.

தேசிய அளவில் ஏழு பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப் படும். இதில் நான்குக்கும் மேற்பட்டோர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதே போல் மாநிலங்களிலும் குழுக்கள் அமைக்கப் படும். இவற்றில் உறுப்பினர்கள் நியமனம் மத அடிப்படையிலும் சாதி அடிப்படையிலுமே இருக்க வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. 

மெஜாரிட்டிகளை மைனாரிட்டிகளாக்கி அமைக்கப் படும் இக்குழுவிற்கு மாநில அரசுகள் எல்லா வகை உதவிகளும், போலீஸ் உட்பட, தரவேண்டும். ராணுவத்தைக் கூட இவர்கள் கண்ட்ரோல் செய்ய முடியும். ஒரு வகையில் ராணுவம், அரசு அதிகாரிகள், காவல் துறை எனும் இந்த மூன்று அமைப்புக்களையும் மதவாதத் தலைவர்கள் கையில் கொடுக்கும் சட்டமாக இது இருக்கிறது.

இந்தச் சட்டம் ஒன்றும் புதிதாக வானத்தில் இருந்து குதிக்கவில்லை. இதே சட்டத்தைப் போலவே சில பல மாறுதல்களுடன் ஏற்கனவே சமூக உரிமை பாதுகாப்பு சட்டம் (1955), வன்கொடுமை தடுப்பு சட்டம் (1989) ஆகியவை இருக்கிறது தான். பின் புதிதாக எதற்கு இன்னொரு சட்டம்?

புதிதாக ஒரு பெரிய மத்திய மாநில அமைப்பு, ஏகப்பட்டஅதிகாரிகள், நல்ல சம்பளம், பென்ஷன்  என்று அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி. மைனாரிட்டிகளுக்கு சாதகமாக சட்டம் போட்டு ஓட்டுகளை அறுவடை செய்தோம் என்று காங்கிரசுக்கு சந்தோசம். பாதிக்கப் படுவது மக்கள்தானே! 

எதற்கெடுத்தாலும் மதச்சார்பின்மை பேசும் மீடியா சங்குகள் இந்த நேரத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக ஏன் அமைதியாகி விட்டன? 

மதரீதியான சட்டம் இயற்றுவது ஒரு மதச்சார்பற்ற நாட்டில் எப்படி நிகழமுடியும் என்று ஏன் மீடியாக்கள் கேள்வி எழுப்புவதில்லை?

இந்த மசோதா வரும் மழைக்கால கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்ளப் படும் என்று தெரிகிறது. எப்படியும் பாராளுமன்றத்தில் இந்தச் சட்ட மசோதா விசாரணைக்கு வரும் போது பா.ஜ.க இதனை எதிர்க்கும். மற்ற கட்சிகள் மதச்சார்பின்மை மணம் கமழ அமைதியாக இருக்கும். அப்போது மீடியாக்கள், பா.ஜ.க பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தடுப்பதாகவும், மைனாரிட்டிகளுக்கு விரோதமாக நடந்து கொள்வதாகவும் தூற்றிக் கொண்டு அலறப் போவதைப் பார்க்கத்தானே போகிறோம்.

இந்தச் சிறுபான்மை – மைனாரிட்டி என்பதே ஒரு அபத்தமான வார்த்தை. ஒவ்வொரு நகரத்திலும், மாநிலத்திலும், ஊர்களிலும் இது மாறுபடுகிறது. ஓரிடத்தில் முஸ்லிம்கள் மெஜாரிட்டி – இன்னோரிடத்தில் கிருத்துவர்கள் மெஜாரிட்டி என்று மக்கள் குழுவாக வாழும் வகையில் மாறி மாறி வரும்.

இன்றும் சில சமூகங்கள் வலுவாக இருப்பதால் சில ஊர்களுக்குள் போலீசே நுழைய முடியாது. ஏன் கடவுளே நுழைய முடியாது. பிள்ளையார் ஊர்வலங்கள் தொடர்பான கலவரங்களைத்தான் பார்க்கிறோமே!

இது மட்டும் அல்ல. இது மத்திய அரசை அதிகார மையமாக கொண்ட ஒரு சட்டம். இதில் முக்கியமாக கலவரப் பகுதி என்பதற்கான விளக்கமோ, அது குறித்த மற்ற சட்டங்களோ தெளிவு படுத்தப் படவில்லை. மாநில அரசின் துணையோ, அனுமதியோ, ஒத்துழைப்போ இன்றி மத்திய அரசே நேரடியாக சட்ட பூர்வமாகவும், சட்ட விரோதமாகவும் கூட மாநில விவகாரங்களில் தலையிட இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

அதோடு இந்த சட்டத்தின் அடிப்படையில், ஒரு மாநிலத்தில் மதக்கலவரம் நடந்தால்,  அதைக் காரணம் காட்டி மாநில அரசை கலைக்கவே உத்தரவிட முடியும் ! ஜனநாயகம் என்பது கட்சியிலும் ஆட்சியிலும் இல்லாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் செய்ய வேண்டியதெல்லாம் காசுக்காக மதக் கலவரத்தைத் தூண்டத் தயாராக இருப்பவர்களைப் பயன்படுத்திக் கொள்வதுதான். இதனால் தான் தமிழக முதல்வர் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்.

இதே காங்கிரஸ் அரசு தான் பொடா, தடா சட்டங்களை விலக்கி தீவிரவாதத்தின் மீது மென்முகம் காட்டி மேலும் இந்தியர்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இந்த பொடா போன்ற சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை. பொடா சட்டம் வந்த போது ஆ…ஊ.. என்று கூச்சல் எழுப்பினர்.

ஆனால், அந்த சட்டங்களில் ஒரு இடத்தில்  கூட சிறுபான்மையினரிடம் தான் இந்த சட்டம் வேலை செய்யும் என்று சொல்லவில்லை. இந்தச் சட்டமோ தெளிவாகவே மெஜாரிட்டி மக்கள் தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து விட்டே துவங்குகிறது. 

அதாவது இந்த சட்டம் நிறைவேற்றப் படுமானால் இந்துக்கள் தான் வன்முறையாளர்கள் என்று அரசியல் சாசனமே ஒத்துக் கொண்டதாக ஆகும்.

ஆங்கிலேயர் காலத்தில் இந்து மதத்தில் உள்ள சில வீரம் மிக்க சாதிகளைக் குற்றப் பரம்பரையினர் என்று பெயரிட்டுத் தண்டித்தனர். இப்போது இந்து மதத்தையே குற்றவாளிகளின் மதம் என்று ஆக்கிவிட்டனர்.

ஜிகாதிகளுக்கும் மிசனரிகளுக்கும் ஆதரவாக செயல் பட்டுக் கொண்டே இந்துக்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்றுவது மக்களுக்குத் தெரியாமல் போய்விடும் என்று இந்த அரசு நினைக்கிறது. இந்தச் சட்டத்தால் காங்கிரஸ் அரசின் இரட்டை வேடமும், ஓட்டு வங்கி அரசியலும் தான் அப்பட்டமாகி உள்ளது.

ஒன்று நன்றாக தெரிகிறது. இந்தச் சட்டம் ஒரே ஒரு மாநிலத்தையும் ஒரே ஒரு மனிதரையும் மட்டுமே குறிவைத்து செய்யப் படுகிறது. அவரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணி இன்றி இது போன்ற குறுக்கு வழிகளில் ஈடுபட ஆளும் கட்சி முனைந்துள்ளது. அந்த மனிதர்… வேறு யார்?

நரேந்திர மோடியையும் குஜராத்தையும் குறி வைத்தே இந்தச் சட்டம் முன்வைக்கப் பட்டுள்ளது என்று வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

ஆனால், இது நிறைவேறுமானால் நரேந்திர மோடி மட்டுமல்ல பயங்கரவாதிகளுக்குச் சிக்கன் கறியும் ஆயுர்வேத மசாஜும் ‘ஏற்பாடு’ செய்துதருகிற,  கிறுத்துவ இஸ்லாமிய மதங்களின் காவலன் என செக்யூலரிச வேடம் போடுகிற அரசியல்வாதிகளையும் இது பாதிக்கும். நரேந்திர மோடி விட்டுக் குடிசை எரியட்டும் என பக்கத்து வீட்டு ஈ.கே. நாயனார்கள்கூட நாயனம் வாசித்துக் கொண்டு இருக்க முடியாது.

ஆனால், இது  இந்து மதத்தினருக்கு எதிராகச் சிறுபான்மை மதத்தினர் வன்முறை நிகழ்த்த வாய்ப்பு அளிக்கும் சட்டம் மட்டும் கிடையாது. இந்து மதத்தில் இருந்து தலித்துகளைப் பிரித்து, அவர்களைச் சிறுபான்மையினரின் கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் இச்சட்டம் வழி செய்கிறது. அந்த வகையில் இந்தச் சட்டம் பிரிட்டிஷார் காலத்தில் கர்சன் பிரபு செய்த வங்கப் பிரிவினையைவிட மோசமான ஒரு பிரிவினைத் திட்டம்.  

இந்தச் சட்டத்தினுள் தனி அரசியலாக சிறுபான்மை மக்களோடு SC, ST பிரிவினரையும் சேர்த்துள்ளனர். சில வருடங்களாகவே அரசுத் துறைகளிலும், அரசு சார்ந்த அமைப்புகளிலும் மைனாரிட்டிகளையும்  தலித் மக்களையும் இணைத்தே வருகின்றனர். இதில் இந்து தலித் மக்களுக்கான உரிமைகள், வாய்ப்புகள் மைனாரிட்டிகளுடன் சேரும் போது எப்படி இழக்கப் படுகிறது என்பது விரிவாக சிந்திக்க வேண்டிய ஒன்று.

எப்படிப் பார்த்தாலும் இந்த சட்டம் இந்துக்களுக்கு விரோதமானது; ஓட்டு வங்கி அரசியல் அடிப்படையில் அமைந்தது; மதச்சார்ப்பின்மைக்கும் மனித நீதிக்கும் விரோதமானது; மக்களுக்குள் வேறுபாட்டையும் பிளவையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக் கூடியது.

பாகிஸ்தானில் கூட இது போன்ற இந்துக்களுக்கு விரோதமான சட்டம் இயற்றப் படவில்லை.

குறிப்புகள்:
http://nac.nic.in/pdf/pctvb_amended.pdf

.

24 Replies to “மத வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதா”

 1. காங்கிரசுக்கு ஒட்டு போட்ட இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். இனியாவது இந்துக்களிடையே புரட்சி வெடித்து காப்பாற்றி கொள்ள போராடுவார்கள் அல்லது குறைந்தபட்சம் இந்த சட்டத்தை எதிர்த்து போராடுவோருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று கூட எதிர்பார்க்க முடியவில்லை.
  காங்கிரசை வெளியே அனுப்பவாவது யோசித்தால் நலம்
  இக்கட்டுரையை வெளியிட்டு இந்துக்களை பீதியில் ஆழ்த்துகிறது தமிழ் ஹிந்து

 2. Pingback: Indli.com
 3. இந்த சட்டம் நிறைவேற திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், தீகம்யூனிஸ்டு, முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் என்ற கூட்டணி ஆதரிக்கும்.

  எதிர்க்கப்போகிறவர்களோ உள்சண்டைகளால் பிரிந்துகிடக்கிறார்கள்.

  ஆனால், இந்த ச்ட்டம் நிறைவேற வேண்டுமென்று விரும்புகிறேன். நிறைவேறி, சட்டப்பூர்வமாக இந்து என்று போட்டுகொண்டு அரசியல் நடத்தும் சிதம்பரம், கருணாநிதி, இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருமாவளவன், ராமதாஸ், நல்லக்கண்ணு என்ற ஒவ்வொருவர் மீதும் முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் வழக்கு போட்டு டவுசரை கழட்டி ஓட விட வேண்டும். அப்போதும் புத்திவருமா என்று தெரியாது.

 4. நல்ல கட்டுரை மது. இந்த சட்டம் சொல்வதையும், சொல்லாததையும் சரியாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.

  The smallest minority on earth is the individual. Those who deny individual rights cannot claim to be defenders of minorities

  என்கிறார் அயன் ராண்ட்.

  உலகில் எல்லாரையும் விட சிறுபான்மையானவன் தனிமனிதன் தான். தனிமனிதனுக்கான உரிமைகளை மறுப்பவர்கள் தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று ஒருபோதும் அழைத்துக் கொள்ள முடியாது..

  இந்திய அரசியலமைப்பு தனிநபர் உரிமைக்ளைப் பாதுகாக்கும் அருமையான சட்டங்களை வழங்கியுள்ளது. அவற்றை உருப்படியாக அமல் படுத்தாமல் ஓட்டு வங்கியைக் குறிவைத்து இப்படி ஜனநாயக விரோதமான சட்டங்களை இயற்றத் துடிக்கிறது கழிசடை காங்கிரஸ்.

  // பாகிஸ்தானில் கூட இது போன்ற இந்துக்களுக்கு விரோதமான சட்டம் இயற்றப் படவில்லை.//

  பாகிஸ்தான், பங்களாதேச அரசு சட்டபூர்வமாக இந்துக்களை எதிரிகள் என்று முத்திரை குத்திவிட்டன. அவர்களது உயிர்களும் உரிமைகளும் மானமும் என்னேரமும் பறிக்கப் படலாம் என்ற நிலை இருக்கும்போது தனித்தனியாக சட்டங்கள் இயற்ற அவசியமில்லை..

  கொல்லப்பட்டவர்கள், அகதிகளாக ஓடிவந்தவர்கள், எஞ்சியிருப்பவர்கள் என்று இந்துக்கள் எல்லாரது நிலங்களையும் சட்டபூர்வமாக முஸ்லிம்கள் அபகரித்துக் கொள்ள வகை செய்யும் enemy property act என்ற சட்டமே அங்கு உண்டு.

  இந்தியா இன்னும் அந்த அளவுக்குப் போகவில்லை என்று ஆறுதலடைவோம்.

 5. எனது நண்பர் ஒருவருக்கு இந்தக் கட்டுரையைப் படிக்கத் தந்தேன்.

  கட்டுரையைப் படித்தபின் அவர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புத் தேடப் போவதாகச் சொல்லி இருக்கிறார். இந்த வருட இறுதிக்குள் ஃப்ரான்ஸ் போய்விடுவார்.

  அவரும் அவரது குடும்பமும் தப்பித்துவிடுவார்கள்.

  .

 6. திரு.மது,
  என் புரிதல் அளவில் நிலைமை மோசமாக இல்லை. புதிய சட்டம்
  நிறைவேற 3ல் 2 பங்கு ஆதரவு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும்
  அவசியம். (எனக்கு புரிந்தவரை). பா.ஜ.கவும் அதன் தோழைமை கட்சிகளும்
  எதிர்க்கப் போவது உறுதி.
  மம்தா பேனர்ஜியும், நவீன் பட்னாயக்கும் எதிர்க்கின்றனர்.
  http://www.ndtv.com/article/india/bjp-communal-violence-bill-draft-dangerous-132716

  1984-1989 வரை இருந்த காங்கிரஸ் இன்று இல்லை. 3ல் 2 பங்கு
  பெரும்பான்மை இருந்ததால் ஷா-பானுவிற்காக தனி சட்டத்தையே
  இயற்றிய அதிகாரம் இப்பொழுது இல்லை.

  இந்த வரைவுப்படியே சட்டம் நிறைவேறும் வாய்ப்பு இல்லை.

  ஊடகங்களை முழுவதுமாக குற்றம் சொல்ல முடியாது. பல நிகழ்ச்சிகளில்
  (ஆங்கில தொலைக்காட்சி சேனல்களில்) இந்த சட்ட வரைவு தவறு
  என்னும் தொனியில் காங்கிரஸின் பிரமுகர்களிடம் கேள்விகள்
  கேட்கப் பட்டுள்ளது.

  கடைசியாக பா.ஜ.கவிற்கு ஓட்டளித்தவர்களில் பலர் காங்கிரஸுக்கும்
  பா.ஜ.கவிற்கும் ஊழல் புரிவதில், கருப்பு பணத்தைக் கொண்டு தேர்தல் நடத்துவதில் வித்தியாசம் இல்லை என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

  1990களில் ராமஜன்ம பூமி விவகாரம் மற்றும் அதைத் தொடர்ந்த அரசியல்
  நிகழ்வுகளினால் உந்தப்பட்ட பல இலட்சம் பேர் கொஞ்சம் தொய்ந்து
  போயுள்ளது உண்மைதான்.

  ஆனால் பா.ஜ.க மட்டும் இந்த அளவிலாவது இல்லாதிருந்தால் இந்த
  எதிர்ப்பு கூட இந்த சட்டத்திற்கு எழுந்திருக்காது என்பதை நாம் மறக்கவே
  கூடாது.

  இன்றைய நிலையில் ஹிந்துத்துவாவைப் பற்றி தர்க்கமுடன் பேச
  பா.ஜ.கவை விட்டால் வேறு கட்சி இல்லை என்பதை நாம் மறப்பது
  நம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டு கொள்வது போலத்தான்.

 7. “இன்றைய நிலையில் ஹிந்துத்துவாவைப் பற்றி தர்க்கமுடன் பேச
  பா.ஜ.கவை விட்டால் வேறு கட்சி இல்லை என்பதை நாம் மறப்பது
  நம் தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டு கொள்வது போலத்தான்.”

  இதை பிஜேபி தான் மறந்து கொண்டு இருக்கிறது ..

  தங்களுக்கு எந்த காலத்திலும் உதவாத ஆங்கில பத்திரிகை களின் மதிப்பை பெற BJP சில காலமாகவே ஹிந்துத்வா vai ஒதுக்கி கொண்டு தான் இருக்கிறது .. தேவை படும் இடங்களில் மட்டும் சில சமயம் உபயோகித்து கொள்கிறது ..

  இதை அவர்கள் முதலில் கை விட வேண்டும் . .செகிலரிசம் பேசும் சில மேல்தட்டு ஹிந்து க்களும் (அருண்டடி ராய், அர்னாப் கோஸ்வாமி, BURKHA டுத்ட் போன்றவர்களை சொன்னேன் ) சில இஸ்லாமிய christuvargalum வோட்டு போடவேண்டும் என்ற எண்ணத்தில் தங்களின் CORE CONSTITUENCY ஐ ஒதுக்குகிறார்கள் .. முன்பு BJP என்றால் பத்து அடி தள்ளி நிற்கும் HINDU போன்ற பத்திரிகைகளின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிஜேபி ஹிந்துத்வா தை மிகவும் மென்மையாக தான் கடைபிடிக்கிறது ..

  இதை அவர்கள் தான் உணர வேண்டும் .. பிஜேபி ஹிந்துத்வம் என்று கூறினால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல் சில ஆங்கில பத்திரிகைகள் குதிக்கும் .. அதை கண்டு BJP தடம் புரள கூடாது என்பதே அனைவரின் விருப்பம் ..

 8. திரு மது மிக க்கசப்பான உண்மைகளை இந்தக் கட்டுரையில் தெள்ளத்தெளிவாக சொல்லியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இந்த ஹிந்து துரோக அழித்தொழிப்பு முயற்சியை ஹிந்துக்கள் உணர அனைத்து முயற்சிகளையும் நாம் செய்யவேண்டும். ஹிந்து எழுச்சிக்கு இது ஒரு பெரும் அறைகூவல் சவால். இது அந்நிய சோனியாவின் காங்கிரசின் முகத்திரையைக் கிழிக்க சரியான வாய்ப்பு என ஹிந்து என்று உண்மையாக தம்மை நம்பும் அனைவரும் காங்கிரசை வீழ்த்திட எழுவர் என்பது உறுதி.
  சிவஸ்ரீ. விபூதிபூஷண்

 9. உண்மையிலேயே நாட்டை அழிக்கும் வேலையில் காங்கிரஸ் முழு வீச்சில் இறங்கி விட்டிருப்பதாக தோன்றுகிறது. ஊழலை மறைக்க மட்டுமல்லாமல் , சந்தடிசாக்கில் தன்னுடைய ஹிந்து ஒழிப்பு அஜன்டாவையும் காங்கிரஸ் நிறைவேற்ற முயல்கிறது. காங்கிரசை ஆட்சியிலிருந்து விரட்டுவதைத் தவிர வேறு வழி ஒன்றும் தோன்றவில்லை. மக்கள் சக்தியை திரட்டும் பணி, ஹிந்துக்களை ஒன்று திரட்டும் பணி, மக்களிடையே தேசபக்தியை எழுப்பும் பணி பெரிய அளவில் மேற்கொள்ளப்படுவதே இதற்கு நிரந்தர தீர்வாக இருக்கும்.

 10. என்ன போங்க இது கூட தெரியாம பச்ச புள்ளைங்களா இருக்கீங்களே? இந்த மசோதா எடுத்து வந்தது அதை நிறை வேற்ற அல்ல. இதை வைத்து ஒரு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பாஜாகவின் கவனத்தை திசை திருப்பி ஹிந்து இயக்கங்களுக்கு தொடர்ந்து பிரச்சனை ஏற்படுத்துவதே? அப்பொழுது தான் மதமாற்றம். தேர்தலில் வெற்றி முதலியவற்றை பெற இயலும். ஆனால் த்ற்போது மதம் மாறிய ஆப்ரகாமிய மக்களும் காங்கிரஸின் திருட்டு தனத்தை புரிந்து கொண்டுள்ளனர். எனது அலுவலகத்தில் முகமதிய மதம் சேர்ந்து ஒருவர் மோடியை பற்றி ஒரு பாராயணமே செய்தார். மோதியை பற்றிய நல்ல எண்ணம் அனைவரிடமும் உள்ளது. ஆம் அவர் பிரதமராக வேண்டும் எனபது, சிந்திக்கும் மக்களின் விருப்பம்.

  முதன் முதலில் அவர் முதலமைச்சர் வேட்பாளராக தேர்தலில் வெற்றி பெற்ற பொழுது அவரது அன்னை கூறினார்…. எனது மகன் இந்த நாட்டின் பிரதமர் ஆவான் என்று… நான் நினைத்தேன் இவர் எல்லாம் எப்படி பிரதமர் ஆவார் என்று. ஆனால் தற்பொழுது நான் முழுமையாக நம்புகிறேன். நரேந்திர மோதியின் அன்னையின் வாழ்த்து கண்டிப்பாக பலிக்கும

 11. ஸ்ரீமது, ஹிந்து பூமியில் ஹிந்துக்களை இந்த அடக்குமுறை சட்டவரைவு எப்படி பாதிக்கும் என்று விஸ்தாரமாக விளக்கியுள்ளீர்கள். நன்று. இன்றைய ஆங்க்ல தினசரி பத்ரிகைகளில் என்டிஏ மற்றும் யூபிஏ வில் உள்ள கட்சிகள் இந்த சட்ட வரைவை மாகாண அதிகாரங்களின் மீது கை வைக்க விழையும் ஒரு சட்டவரைவு என்பதற்காகவும் வேறுபல காரணங்களுக்காகவும் எதிர்த்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.பாஜக மட்டும் ஹிந்துக்களை இந்த சட்ட வரைவு குறிவைக்கிறது என்று எதிர்த்துள்ளது. அப்படியானால் மற்ற கட்சிகளின் த்ருப்திக்கு ஏற்ப மாறுபாடுகளைச்செய்து ஹிந்து எதிர்ப்பை மட்டும் முன்வைக்கும் மாறுபடுத்தப்பட்ட ஒரு சட்டவரைவை முன்வைத்தால் என்னாகும் என்ற கேழ்வியெழுகிறது.

  \\\ஜம்மு காஷ்மீரில் இந்த சட்டம் செல்லுமா என்றால் அங்கே அந்த மாநிலத்திற்கு மட்டும் விலக்கு உண்டு. \\\\\\\

  ஹிந்துஸ்தானத்தில் ஒருவரை “ஹிந்துஸ்தானி” என்று அழைத்தும் அந்த ஹிந்துஸ்தானியருக்கு வலிக்குமோ? வலிக்கும். கடந்த மூன்று வருஷங்களில் காஷ்மீரத்தில் பணிபுரிந்து இப்போது ஜம்முவில் பணியிலிருக்கிறேன். காஷ்மீரத்தில் வெளிமாகாணங்களில் இருந்து வந்து பணிபுரிவோரை “ஹிந்துஸ்தானி” என்றும் “இந்தியன்” என்றும் குறிப்பிடுகிறார்கள். மேலும் அங்குள்ள மக்களின் முகங்களில் வெளிமாகாணத்தவர் ப்ரதி இருக்கும் வெறுப்பும் அப்பட்டமாகத் தெரியும். இந்த வெறுப்பிற்குத் தீனி போட்டு ஓட்டு வங்கியை ஸ்திரப்படுத்துவது தானே காந்தி பரிவார அரசியல்.

  \\\\இதை அவர்கள் தான் உணர வேண்டும் .. பிஜேபி ஹிந்துத்வம் என்று கூறினால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல் சில ஆங்கில பத்திரிகைகள் குதிக்கும் .. அதை கண்டு BJP தடம் புரள கூடாது என்பதே அனைவரின் விருப்பம் ..\\\\\

  ஹிந்துத்வத்தை மையக்கோட்பாடாக வைத்து அதன் வழியே ஹிந்துஸ்தானத்து மற்றும் உலக நடவடிக்கைகளை அலசி வந்தது ஹிந்துத்வ அரசியல். இன்றைக்கு ஹிந்துத்வத்தை வெறுக்கும், ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்க விழையும் அரசியல் கோட்பாடுகளின் வழியாக ஹிந்துத்வத்தை பார்க்க விழையும் போக்கு தெரிகிறது. காரணம் இந்த ஹிந்துத்வ கோட்பாடுகளை அறவே ஏற்காதவர்களை தாஜா செய்வதற்காக வேண்டி ஹிந்துத்வவாதிகள் செய்ய விழையும் சிரசாஸனம். பூவொடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது வசனம். ஹிந்து பூமியில் ஹிந்துக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கத் துடிக்கும் கோட்பாடுகளான நாறும் நாருடன் தொடுக்க விழையப்படும் ஹிந்துத்வப் பூவின் மணம் குறையாது இருக்குமா இந்த சிரசாஸனத்தால் என்பதற்கு காலமே பதில் சொல்லும்.

 12. Everybody accepts that some initiative should happen to make all hindus to be aware of this. Problem with the progress in creating awareness is, this cannot be taken ahead by an individual. I am reading Tamilhindu for past two years. I always see problems posted here by Tamilhindu. Apart from one or two issues, no news about any progress related issues.

  Any kind of issues reported by individuals which hampers hinduism should be taken to VHP, BJP through Tamilhindu, which is an easy task. I have already given an idea in Tamilhindu that BJP or other Hindu organization should start a TV channel. Still it is not done. Of course VHP has started a TV but it is only a Web TV. One important note is when Pro Hindu TV channel is started, it should not telecast programs like Sanakara channel. I am speaking about an entertainment channel which can always give answer to public whenever Hinduism is tampered.

  Christians and Muslims are so clever in spreading their religion, whereas Hindus only just crying out of Agony.

 13. சிறுபான்மையினரை தாஜா செய்தல் இன்று நேற்று அல்ல பண்டை காலம் தொட்டே இருந்து வரும் ஹிந்துக்களின் இளிச்சவாய்த்தனம் , பண்டைய மன்னர்கள் காலத்தில் சுயபாதுகாபுக்காக சிறுபான்மை சமுதாயத்தை சலுஹைகள் கொடுத்து அரவணைத்து வைத்திருந்தனர் . அது போலத்தான் இன்றைய ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும் இந்த கையாலகாத்தனத்தை கையாண்டு வருகின்றனர் , இன்றை காங்கிரஸ் அரசுக்கு ஊழலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து விடுபட்டு , மக்களை திசை திருப்ப செய்யும் சூழ்ச்சியாகும் .

 14. இந்த சட்டத்தை முதலும், கடைசியுமாக எதிர்த்த ஒரே தமிழக அரசியல்வாதி ஜெயலலிதா. ஜெயலலிதா மத்திய அரசிற்கு கடிதம் எழுதியதுமே – இங்கே உள்ள முஸ்லீம் அமைப்புகள் சில ஜெயலலிதாவை கண்டித்து போராட்டம் நடத்தின. முஸ்லீம்கள் ஒரு சட்டத்தை ஆதரிக்கிறார்கள் என்றால், அதில் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கும். அந்த சட்டத்தை முழுமையாக அறிய, வலைத்தளங்களில் தகவல்களை தோடோ தேடு என்று தேடினேன். கிடைக்கவில்லை. தமிழில் யாருமே இந்த சட்டம் பற்றி பேசவோ, எழுதவோ இல்லை போலும். கருணாநிதி கூட இந்த சட்டம் குறித்து வாய் திறக்கவில்லை. இன்றைக்கு உங்கள் தளத்தில் முழுமையான தகவல்கள் அறிந்து கொண்டேன். நேற்று டெல்லியில் கூட்டப்பட்ட கூட்டமும் தோல்வியில் முடிந்துள்ளது. காங்கிரஸ் அல்லாத மாநில முதலமைச்சர்கள் எவரும் கலந்து கொள்ளாதது – நிச்சயம் மத்திய அரசுக்கு தோல்வி. அனைத்து எதிர்க்கட்சிகளும் இதை கடுமையாக எதிர்க்கும் என்று நம்பலாம். பி.ஜே.பி எதிர்க்கட்சிக்குரிய கடமையை மறந்து – தேவையற்றதின் மீது பார்வையை திருப்பி தன் ஜீவனை தொலைக்கிறதோ.

 15. அனைவருக்கும் வணக்கம்

  கர்த்தரின் அன்பும் ஆசீர்வாதமும் சமாதானமும் அனைவருக்கும் கிடைக்குமாக…
  மத வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதா என்பது இந்த நாட்டிற்க்கு சுகந்திரம் கிடைத்த 64 ஆண்டுகளில் முதன் முறையாக இப்போது தான் சிறுபான்மையினருக்கு கிடைத்த ஒரு கால தாமதமான ஒரு நீதியாகும். இது அப்போதே கிடைத்து இருந்தால் ஒரிசா மாநிலத்தில் கிருத்துவர்கள் இந்து மத வெறியர்களால் தாக்க பட்டு இருக்க மாட்டார்கள். கர்நாடகாவில் கிருத்துவர்கள் கொலை வெறி க்கு ஆளாகி இருக்க மாட்டார்கள். ஆஸ்திரேலிய பாதிரியார் கிரகாம் ஸ்டெய்ன் தன பிள்ளைகளோடு காரில் வைத்து எரித்து கொல்ல பட்டிருக்க மாட்டார்… படுகொலை செய்யும் அளவிற்கு இவர்கள் அப்படி ஒரு மாபாதகமும் செய்து விடவில்லை.. அவர்கள் செய்தது எல்லாம் ஆண்டவரின் நற்செய்தியை அறிவித்தது தான். அதை தவிர வேறு ஒரு தவறும் அவர்கள் செய்ய வில்லை.. சரி போனது போகட்டும். மதம் பிடித்த யானையை அடக்க நிச்சயம் ஒரு கூர்மையான அங்குசம் தேவை… அது போல இந்துக்களுக்கு ரொம்பவே மதம் பிடித்து விட்டது அவர்களை அடக்க நிச்சயம் இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு ஒரு நல்ல அங்குசமாக பயன்படும். இந்த சட்டம் நிறைவேறாமலும் போகலாம்.. அனால் ஆண்டவரின் அருளால் நிச்சயம் இந்த சட்டம் நிறைவேறும் என்று எதிர்பார்கிறேன்.. இந்த சட்டம் வெற்றிகரமாக நிறைவேறிய உடன் நான் மீண்டும் சந்திக்கிறேன்… ஆமென்.

 16. //மதம் பிடித்த யானையை அடக்க நிச்சயம் ஒரு கூர்மையான அங்குசம் தேவை…//
  ‘ஆம் மதம் என்ற மதம் பிடித்த ரெபெக்கா கும்பல்களை அடக்க இந்துக்களிடம் ஒற்றுமை தேவை. அவர்கள் பரப்பும் பொய்களை எதிர்கொண்டு உண்மைகளை பரப்ப இந்துக்களுக்கு கண்டிப்பாக ஒரு channel தேவை.

 17. தமிழ் ஹிந்து நண்பர்களுக்கு

  தயவு செய்து இந்த ரெபேக்கா மரியத்திற்கு பதில் எழுத முனைந்துவிடாதீர்கள்.

  ரெபக்கா மரியம் இயேசுவின் நற்செய்தியிலேயே மூழ்கி பேரானந்தத்துடன் கரங்களை உயர்த்திப் பிடித்து இயேசு கரங்களை நீட்டுவார் பிடித்துகே கொள்ளலாம் என்ற நினைவிலேயே இருக்கட்டும், பாவம் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்.

  இந்த சட்டம் வரப் போவதே இல்லை – கவலை வேண்டாம். இது வந்தால் காங்கிரஸ் காரர்களுக்கே ஆபத்தாக முடியும்.

 18. //கர்த்தரின் அன்பும் ஆசீர்வாதமும் சமாதானமும் அனைவருக்கும் கிடைக்குமாக…//

  அமெரிக்காவின் செவ்விந்தியர்களுக்கு கொடுக்கப்பட்ட கர்த்தரின் அன்பும் ஆசீர்வாதமும் சமாதானமும்தானே?

  வேண்டாம்.
  செவ்விந்திய ரெபெக்காக்கள் கர்ப்பமாக இருக்கும்போது வெள்ளையர்கள் வயிற்றை கிழித்து பிள்ளையை எடுத்து கல்லில் அடித்து கொன்று அதன் மீது புனித நீர் தெளித்து ஞானஸ்னானம் செய்தார்கள்.

  அதுதான் கர்த்தரின் அன்பு.

  தூத்தேறி

 19. 1000 ஆண்டுகள் அடிமை வாழ்க்கை நம்மை சொரணை அற்றவர்களாக மாற்றி விட்டதா ? இன்னும் இத்தாலிய அண்ணிய சக்தியிடம் அடிமை வாழ்கை… . எப்பதான் புத்திவருமோ இந்த அடிமை புத்தி எப்போதான் நம்மை விட்டு போகுமோ …..

 20. N A C இல்லுள தேச விரோத வுருபினர்கள் யார் என்பதை மக்களுக்கு தோலுரித்து காட்டவேண்டும். இதை தமிழ் இந்து டாட் காம் செய்யவேண்டும்.
  கிருஷ்ணமுர்த்தி V

 21. ‘Rebecca Maryam என்பவருக்கு பதிலுரை தர வேண்டாம்’ என்று sarang சொல்லியிருந்தது சரிதான்.

  ஏற்கனவே ‘இயேசுவை ஹிந்துக்கள் வழிபடலாமா?’ என்ற கட்டுரையில் இவ்வலைத் தளம் கேட்டிருந்த பல கேள்விகளுக்கு பதிலே தராமல், ஏதேதோ சம்பந்தமில்லாமல் உளறியிருந்தார் அவர். அவருடைய மறுமொழிகள் படு அபத்தம்.

  இருந்த போதிலும் இஸ்லாமியத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறையால் இந்நாடு இழந்திருக்கும் உயிர்களின் எண்ணிக்கையை எண்களின் கணக்கிலேயே கொண்டுவர முடியாத இழிநிலையைப் பார்த்தும்கூட, மத வன்முறையில் ஏன் ‘சிறுபான்மைக்கு எதிரானது’ என்றொரு அடைமொழி? என்று கேட்காமல் இருக்க முடியவில்லையே.

  இவர் தந்துள்ளதைப்போல், இழந்த ஹிந்து உயிர்களுக்கும் புள்ளி விபரம் கொடுத்தால் ‘1,2,3…’ என்றெல்லாம் குறிப்பிட இயலுமா என்ன?

  மத வெறி என்பதன் ஒட்டுமொத்த அடையாளமே இவர்தான் என்று தோன்றுகிறது.

 22. ஐய,
  நீங்கள் எழுதும் கட்டுரைகள் பயன் உள்ளதாக இருக்கிறது சமுக வலைதத்தில் சேர்க்கும் போழுது எழுத்துருக்கள் “சப்போர்ட்” செய்யவில்லை அவ்வாறு செய்யிதல் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் நன்றியுடன்,
  இரா.பால்பாண்டியன்

 23. யக்கா மரியம் அக்கா,

  இன்னாமா நீங்க சொல்லிகினு இருக்கீங்க ,
  இங்க இலங்கைல ப்ரோடோச்ச்டன்ட் கிறிஸ்தவர்கள் 17 நூற்றாண்டுல வந்தப்ப இருந்த எல்லா கோவிலையும் உடைச்சாங்க,இப்போ யாழ்.நல்லூர் முருகன் கோவில் இருக்க இடம் அதன் உண்மையான அமைவிடம் இல்ல.உண்மையான கோவில உடைச்சு அந்த இடத்துல உங்க ஆண்டவரோட சிலைய சர்ச்ச கட்டினாங்க..அடுத்தவன் நிலத்த கள்ள தனமா பட்டா போட்டு உட்காந்து கொள்ள உங்க ஆண்டவருக்கு எப்புடி தான் மனசு வந்துச்சோ ??????அதோட மட்டும் இல்லாம கட்டாய மத மாற்றம்,மத மாற்றம் செய்வோருக்கு நில புலன் ,அரசாங்க வேலைன்னு உங்க ஆளுங்க இலவசங்கள அள்ளி வீசினாங்க…பல பிராமணர்கள் இந்த கிறிஸ்தவ சுவிஷேச நட்செய்திக்காக கிறிஸ்தவர்களிடம் தம் இன்னுயிரை இழந்தார்கள்..இப்ப செத்தாலும் உயிர் உயிர் தான்,300 வருஷம் முன்னாடி செத்தாலும் உயிர் உயிர் தான் ….இந்த லட்சணத்துல இவங்க சிறு பான்மையாம் நாங்க இவங்கள கொடுமை படுத்திநோமாம்…..

Leave a Reply

Your email address will not be published.