இந்திய சில்லறை வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு – பெரும் அபாயம்

“வால்மார்ட் போன்ற சில்லறை வர்த்தகத்தில் (retail business) முன்னணியில் உள்ள  பன்னாட்டு நிறுவனங்கள் கொல்லைப்புற வழியாக நுழைய தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கை ஒருவகையில் வழிவகுத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். இது தேசியப்பொருளாதாரத்திற்கும் சமூக நலனுக்கும் ஊறு விளைவிக்கக் கூடியது…”

என்று தொடங்கும் எஸ்.குருமூர்த்தி அவர்களின் கட்டுரை இரண்டு வருடம் முன்பு  தமிழ்ஹிந்து தளத்தில்   வெளிவந்தது.  நேரடி அன்னிய முதலீடு  ஏன்  இந்தத் துறையில் அனுமதிக்கப் படக் கூடாது என்பதற்கு  எட்டு காரணங்களை அக்கட்டுரை முன்வைத்திருந்தது.  இந்திய சமூக, பொருளாதார, கலாச்சார யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு இப்பிரசினையை அணுக வேண்டும் என்றும் வாதிட்டது.

தற்போது தடாலடியாக  அன்னிய முதலீட்டை அனுமதிக்க வழிசெய்யும் சட்ட மசோதாவை  வெளிப்படையாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய  ஐ.மு. கூட்டணி அரசு  செய்த முயற்சியை  பா.ஜ.க உறுதியாகவும்  தெளிவாகவும் எதிர்த்துள்ளது.   கோடிக்கணக்கான  சாமானிய இந்தியர்களின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த பிரசினையில்  மக்களின் நாடித் துடிப்பை  எதிரொலித்து,  தேச நலனை முன்வைத்து  பா.ஜ.க  மிகச்சரியான நிலைப்பாடு எடுத்திருக்கிறது.  மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் பாஜவுக்கு ஆதரவாக நின்று இந்த மக்கள்  விரோத மசோதா சட்டமாகாமல் தடுக்க  வேண்டும்.

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து  ஹம்ஸா குரூப் தொழில் நிறுவனத் தலைவர் சேகர் சுவாமி  அவர்கள் ஒரு அருமையான பிரசண்டேஷனை உருவாக்கியுள்ளார். இவர் ஒரு பகுதி நேர பேராசிரியரும் கூட.

சுதேசி ஜாகரண் மஞ்ச் அமைப்பின் தமிழகக் கிளை மூலம் இதன் தமிழ் மொழியாக்கம் நமக்குக் கிடைத்தது.   அந்த தமிழ் பிரசண்டேஷன் வடிவத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம் – இங்கிருந்து  தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதன் ஆங்கில வடிவத்தை  இங்கே  காணலாம்.

36 Replies to “இந்திய சில்லறை வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு – பெரும் அபாயம்”

  1. எனது ‘facebook’ ல் கிடைத்த இரண்டு தகவல்கள்….

    obama tweeted on 26th NOV…..: “support small businesses in your community by shopping at your favourite local store.” … America, Manmohan Singh too is adamant on protecting American interests.

    ஓரே ஒரு கிழக்கு இந்திய கம்பெனிக்கே 150 வருடம் அடிமை பட்டோம்…பத்து கம்பெனிகள் ஒன்றாக வந்தால்….

  2. அந்நிய முதலீடுகள் ஏற்கனவே இல்லாமல் இருந்து இப்போது திடீரென்று முளைக்க வில்லை. ஏற்கனவே அந்நிய முதலீடு ஐம்பது சதவீதத்துக்கும் குறைவாக இருந்து வருகிறது. இப்போது நூறு சதவீதம் வரை கொண்டு வர முயற்சிக்கப் படுகிறது.

    இதில் ஒருதலைப் பட்சமாக தீமை என்று சொல்வதற்கில்லை.

    பொதுவாக விவசாயியோ, நுகர் பொருள் தயாரிப்பு நிறுவனமோ தன் பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்து விற்று லாபம் பார்ப்பதற்குள், முதலில் இடைத் தரகர்களுக்கு கமிஷன், பொருட்களை பாதுகாக்கும் செலவு, சப்ளை செய்யும் செலவு என்று ஏகப்பட்ட செலவுகளுக்கு பிறகு லாபம் பார்ப்பது என்பது கடினம். இதில் நடுவில் பொருள் ஈட்டுகிற பெருவணிகர்கள், சிறுவணிகர்கள், தரகர்கள் சரியாக அரசாங்கத்துக்கு வரி செலுத்தவே மாட்டார். அதனால் அரசுக்கும் நஷ்டம். நட்டத்தில் இருப்பதால் விவசாயிகள், நுகர பொருள் நிறுவனங்களுக்கு அரசு மானியம் அளிக்க நேரிடுகிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்து விலையை ஏற்றி விடுவதால், நுகர்வோருக்கும் நஷ்டம்.

    வால்மார்ட் போன்ற பெரு நிறுவனங்கள், தங்கள் கொள்முதலில் விவசாயிகள், நுகர பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்கின்றன. அமெரிக்காவில் வால்மார்ட்டுக்கு சப்லையராக ஆவது என்பது பெரிய விஷயம். எளிதில் கிடைக்காது. அப்படி கிடைக்கும் சிறு நிறுவனங்களின் ஷேர் மதிப்பு, வால்மார்ட் சப்லையராக தேர்ந்தெடுக்கப் பட்டால் எகிறி விடும். இதனால் நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், விவசாயிகளுக்கு லாபம் தான் – இடைத்தறகு போன்ற செலவுகள் இல்லை.

    வால்மார்ட் போன்ற நிறுவனமே பொருட்கள் பராமரிப்பு, சப்ளை செய்வது என்று அதையெல்லாம் நேர்த்தியாக பார்த்துக் கொள்ளும். அந்த செலவு மிச்சம். அரசுக்கு வரி கிடைக்கும். மேலும் விவசாயிகள், நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபத்தில் இயங்குவதால் அரசு மானியம் தர வேண்டி இருக்காது. நுகர்வோருக்கும் குறைந்த செலவில் பொருட்கள் கிடைக்கும்.

    இது தேவையான மாற்றமே.

  3. படிக்கும் போதே ரத்தம் கொதிக்கிறது. தேச துரோகி இத்தாலிகாரியையும் அவளுக்கு கூஜா தூக்கும் ஆட்களையும் எதற்காக விட்டுவைக்கவேண்டும்? அனைவரும் தெருவுக்கு வந்து போராடவேண்டிய நேரம் வந்துவிட்டது. காங்கிரஸின் இந்த முயற்சியை வைத்தே அவர்களுக்கு ஈசியாக குழி தோண்டிவிடலாம். இதை அனைத்து மக்களுக்கும் எடுத்துச்சொன்னாலே போதும். செய்வோமா?

  4. கீர்த்தி அவர்களே,

    நீங்கள் நுகர்வோர்கள் என்று யாரை சொல்கிறீர்கள், இது போன்ற விலை ஏற்றத்தில் பாதிக்கபடுவது நடுத்தர மற்றும் ஏழைகள் தானே அப்படி என்றால் இதுபோன்ற ஏழைகள் உள்ள குப்பத்திலும் கிராமத்திலும் அல்லவா தொடங்க வேண்டும். குப்பம்மாவும் சுப்பமாவும் சென்றா பொருட்களை வாங்க முடியும். இது போன்ற பொருட்களை வாங்க தான் அவர்களுக்கு நேரம் இருகிறதா.. கடைசியில் சிறு வணிகர்கள் இவர்களிடம் தான் சென்று மீண்டும் வாங்கி இவர்களுக்கு கொடுக்க முடியும்.

    அது சரி ரிலையன்ஸ் மற்றும் ஸ்டார் பஜார்களால் என் மலிவு விலையில் கொடுக்க முடியவில்லை? அவர்களும் மிக பெரிய பணக்காரர்கள் தானே?

    அடுத்து வணிகர்கள் வரி கட்டுவதில்லை என்று வருத்த படுகிறீர்கள். உங்கள் கருத்து நியாயம் தான். அனால் எத்தனை வணிகர்கள் 3 லட்சம் மேல் சம்பாதிக்கிறார்கள்? அது தவிர முதல் வருடத்தில் 1 லட்சம் போட்டு வியாபாரம் செய்கிறான். இரண்டாம் வருடத்தில் அதே அளவு கொள்முதல் செய்யப்பட்ட பொருள் 2 இலட்சம் ஆகிறது. வெளிநாட்டு நிருவனகலளுக்கு வாரி வாரி கடன் கொடுக்கும் அரசாங்கம் ஒரு 5 இலட்சம் கடனாக வங்கியில் வாங்க படும் பாடு என்ன என்று தெரியுமா?

    அனால் உங்கள் மனசாட்சியின் படி சொலுங்கள் நீங்கள் ஒழுங்காக வரி கட்டுகிறீர்களா? 2G specterum நியாபகம் இருக்கிறதா? 1 . 75 இலட்சம் கூடி ஊழலை தக்காளி விற்றானும் அரிசியை விற்றவனும் செய்யவில்லை. நீங்கள் சொன்ன காற்பரடே செய்த ஊழல் தான்.

    எதனை காற்பரடே அமைப்புகள் ஒழுங்காக வரி கட்டுகின்றன? உங்களுக்கு சத்தியம் என்ற கம்பெனியும் ரிலையன்ஸ் என்ற கம்பெனியும் என்ன செய்தது என்று தெரியுமா? L & T என்ற காற்பரடே அமைப்புகள் எவ்வாறு ரோடு போடும் காண்ட்ரேக்ட் வாங்குகிறார்கள் என்று அதில் வேலை செய்யும் மக்களிடம் கேளுங்கள்? அரசாங்கம் லஞ்சம் கேட்பதால் தான் நாங்கள் கொடுகிரூம் என்று அடுத்தவர் மீது பலி போடாதிர்கள். அமெரிக்காவில் நடக்கும் கார்பரேட் ஊழல்களை பற்றி கொஞ்சம் வலை தளங்களில் படியுங்கள் தெரியும்.

    இந்தியாவில் நடக்கும் ஊழல்கள் எல்லாமே கற்பரடே அமைப்புகள் தாணே செய்கின்றன?

    அது சரி அமெரிக்காவில் வால்மார்ட் செய்த குளறுபடிகள் என்ன என்று கொஞ்சம் படித்து விட்டு வாருங்கள் அப்பொழுது தான் தெரியும் உண்மை என்ன வென்று?

    சரி இந்த நாட்டில் ரத ஆறு ஓட வேண்டும் என்று விதி இருந்தால் யாரால் மாற்ற முடியும்.

    எல்லா துறையிலும் வெளி நாட்டுக்காரன் கையில் இருக்கும். நாம் அவனிடம் வேலை செய்து நமது நாட்டிலேயே அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டியது தான்…. அப்படி ஏற்படும் பட்சதில் அனைவரும் மாவோயிஸ்டாக மாறுவதை தவிர வேறு வழி இல்லை. அதனால் ஏற்படும் பாதிப்பை தாங்கும் சக்தி விவசாயிகளுக்கு உண்டு. கூலி தொழிலாளர்களுக்கு உண்டு…. சூரியனின் வெப்பத்தில் கருகி போகும் காளான்கள் போல் ஆகிவிடும் சம்பளம் வாங்கும் வெளி நாட்டு கூலி தொழிலாளர்கள் நிலை.

    பிறகு ஆப்பிரிக்க நிலை தான். அதை பற்றி தான் பக்கம் பக்கமாக தமிழ் ஹிந்து வலை தலத்தில் எழுதி கொண்டு இருக்கிறேன். எவ்வளவு இழுத்தாலும் வலையும் என்று நினைக்காதீர்கள். உடைத்தால் நாடு தாங்காது.

    கிழக்கிந்திய கும்பெனியினால் 150 வருடம் நாம் கொள்ளியடிக்க பட்ட பின்பும், நீங்கள் இவாறு எழுதுவது மத்திய அரசின் முடிவை விட வேதனை அளிக்கிறது 🙁

  5. திரு கீர்தி
    இப்படி சுதேசிய சிந்தனை இல்லாமல் கண்முடித்தனமாக கருத்துகளை கூறாதீர்கள். முதலில் இந்த கட்டுரையில் சுட்டியுள்ள சிலைடு விளக்கங்ளை படித்தீர்களா ? ஒரே வருடத்தில் ஒரு கோடி பைசன் எருமைகளை கொன்ற எருமை புத்திபடைத்த இந்த மேற்கத்திய காலணி ஆதிக்கத்திற்கு வக்காலத்து வாங்காதீர்கள். இங்கே சாகப்போவது சில்லரை வணிகர்கள். இது நாம் நமக்கு கண்எதிரே குழிவெட்டிக்கொள்ளும் செயலாகும். இந்த உலக புகழ் வால்மார்டின் மீது இன்று 1200 கேஸ்கள் நாட்டின் சட்டவிதிகளை மீறியதற்காக பதிவாகியுள்ளது என்பதைப் பார்த்தீர்களா ? இதே காலணிகள் தான் லங்காஷயர் பட்டுவிற்பனை இங்கே உள்ள வங்காள நெசவாளர்களால் பாதிக்கபடுகிறது என்பதற்காக அவர்களின கைகளின் விரல்களை துண்டித்து கொடுமை புரிந்தவர்கள். பெப்ஸி கோக் போன்று உணவு கழிவுகளை இங்கே இறக்குமதி செய்து சுகாதார கேடு விளைவிக்கவேண்டும் என் விருப்புகீறீர்களா. இந்த அன்னிய முதலீடு தான் இன்று சில நாடுகளில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்ட சில பொருட்கள் இங்கே வெகு ஜோரா தயாரிக்கப்பட்டு சுற்றுபுற சூழலை மாசு படுத்திக் கொண்டிருக்கிறது என்பது தெரியுமா ?

  6. நான் இந்த முடிவை முழுமையாக ஆதரிக்கிறேன். இதற்கான காரணங்களை
    ஏற்கெனவே பலர் பல விவாதங்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
    என்ன எழுதினாலும் பேசினாலும் எதிர்ப்பவர்கள் எதிர்த்துக் கொண்டுதான்
    இருக்கப் போகிறார்கள்.

    (1)பா.ஜ.க எதிர்ப்பது வெற்று அரசியல். 2004ல் தேசிய ஜனநாயக
    கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் 26% அந்நிய முதலீட்டை
    அனுமதிப்போம் என்று கூறியதை அவர்களால் தற்பொழுது மெல்லவும்
    முடியவில்லை. விழுங்கவும் முடியவில்லை.

    (2)விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்கள் பா.ஜ.க வின் இரட்டை நிலையை
    சரியாகவே வெளிப்படுத்தின. கட்சியின் 2ம் கட்ட தலைவர்கள் அமேரிக்க
    இராஜங்க அதிகாரிகளிடம் பேசும்போது, அரசியலுக்காக அணு
    ஒப்பந்தம் போன்றவற்றை எதிர்க்கிறோம். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன்
    அமேரிக்க-இந்திய உறவு சகஜகமாக இருக்கும் என்று கூறப்பட்டதை
    நினைவு கூறலாம்.

    (3)எல்லா கட்சியையும் போலவே பா.ஜ.கவிலும் பொருளாதார
    பார்வையில் 2 விதமானோர் உண்டு. சுதேசி இயக்கம் முன்வைக்கும்
    வாதம் ஒன்று. சந்தை பொருளாதாரத்தை முன்வைக்கும் வாதம் ஒன்று.
    ஆட்சியில் இல்லாத காலத்தில் சுதேசி இயக்கத்தினரின் சத்தம் கொஞ்சம்
    அதிகமாகவே இருக்கும். ஆனால் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்களின்
    சத்தம் அடங்கிவிடும்.

    என் ஆசை என்பது, அணு ஒப்பந்தத்தைப் போலவே பிரதமர்
    பிடிவாதத்துடன் இதை நடைமுறைப்படுத்தி விட வேண்டும். பிறகு
    2014ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் கண்டிப்பாக அந்த நடைமுறைகள்
    தொடரும். அதில் விவரம் அறிந்தவர்களுக்கு சந்தேகமே கிடையாது.
    ஆனால் இவ்வளவுதூரம் வந்தபின் இன்றைய அரசு இந்த முடிவில்
    இருந்து பின்வாங்கினால் 2014ல் ஆட்சி மாறி பா.ஜ.க ஆட்சிக்கு
    வந்தாலும் அந்நிய முதலீடு வராது.

    Finishing Touch:
    “Balance of Payment Crisis” என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்?1991ல்
    நம் நாட்டை, நம் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றியவர் இன்றைய
    பிரதமர்.

    மொத்த எதிர்கட்சிகளும் எதிர்த்தாலும் எப்படியோ அணு ஒப்பந்தத்தை
    நிறைவேற்றியவர் நம் பிரதமர்.

    ஆனால், இன்று அவரின் நிலை கவலைக்கிடத்தில் உள்ளது. சுற்றியுள்ள
    அமைச்சர்களில் சிலர் (—). தலைவி பெரும்பாலும் முடிவு எடுக்க
    விடுவதில்லை. 2ஜி ஊழல் போன்றவற்றினால் மூலையில் முடக்கப்
    பட்டுள்ளார்.

    அந்நிய முதலீட்டைப் போலவே பல பொருளாதார சீர்திருத்தங்களின்
    மசோதாக்கள் பரணில் உள்ளன. முடிந்தவரை நிறைவாற்றுவார் என்று
    என்னைப் போன்ற பொருளாதார கவலைகள் உள்ளவர்கள்
    ஆசைப் படுகிறோம்.

    வரலாற்றில் 2ஜி போன்ற ஊழல்களுக்காக அவர் காரசாரமாக
    விமர்சிக்கப் படுவார்.

    அதைப் போன்றே பொருளாதார தாராளமயமாக்கல், அணு ஒப்பந்தம்,
    அந்நிய முதலீடு போன்றவற்றிற்காக அவர் சிலாகிக்கப் படுவார். 10,15
    வருடங்கள் கழித்து இன்று எதிர்ப்பவர்கள் ஆதரிக்கத்தான் போகிறார்கள்.

    அவர் இழப்பதற்கு ஒன்றுமில்லை. அவரை மதிப்பதற்கு ஆளில்லை.
    “Singh is King”.

    கொசுறு செய்தி: பொருளாதார பார்வையில் பா.ஜ.கவிற்கும்
    காங்கிரஸிற்கும் வித்தியாசம் பெரிய அளவில் கிடையாது என்பது
    விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். (அதாவது பொருளாதார சீர்திருத்தம்
    வேண்டும் என்போரில்)

  7. வியாபாரம் உலகமயமாக்கி ஒரு 10 15 ஆண்டுகளுக்குள் நம் நாட்டில் நுகர்வோருக்கு வழங்கும் பொருட்களின் தரம் (அது தானியங்களாக இருந்தாலும் சரி அல்லது காய்கறிகள் பழங்களாக இருந்தாலும் சரி) வெம்பல்களையும் பிஞ்சுகளையும் அமோக விளைச்சல் குறைபிரசவ மரபு அணுவிதை ரசாயன உர தானியங்களையும் சாயம் பூசி ரசாயனம் மூலம் பழுக்கவைத்த பழங்களையும் கலர் மாறி காய்கறிகளின் வடிவமே மாறி (இப்பொழுது சில காய்கறிகளை பார்தாலே பயமாக இருக்கிறது) இப்படிப்பட்ட தரத்தில்தான் இன்று நுகர்வோருக்கு பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றது. தரம் வாய்ந்த பொருட்கள் எல்லாம் வெகுசோராக ஏற்றுமதி செய்ப்பட்டு வருகிறது. இந்த லஷ்சணத்தில் 100 சதவிகித அன்னிய முதலீட்டை அனுமதித்தால் நாம் உண்பதற்கு சைனாகாரனை போல் புழு பூச்சிகள் பாம்பு பல்லி இவைதான் கிடைக்கும்.

  8. இந்த வாதங்கள் எல்லாம் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் போன்ற அமைப்புகளுக்கும் பொருந்தும். நீங்கள் இவற்றையும் எதிர்க்கிறீர்களா?

  9. பாலாஜி,

    இங்கு உள்ள சிலர் பாஜக பற்றி பேசுகிறார்கள். இந்த திட்டத்தை முதலில் அமைச்சரவையில் முன்வைத்தது நமது கழக கண்மணியாம் மாறன் அவர்கள் தான். பாஜகவில் இருக்கும் சில அடிவருடிகள் இதற்கு துணை போனதும் உண்மை. பின்னர் அவர்கள் மண்டையில் சமடியல் அடித்து திட்டத்தை குப்பையில் போட்டதும் உண்மை.

    என்ன செய்வது அரசியல் என்றாலே துரோகிகள் என்ற வார்த்தையும் உண்டு அல்லவா… ஆனால் பாஜகவில் அணைத்து விசயங்களும் ஜனநாகய முறையிலேயே நடக்கின்றன. காங்கிரஸ் போல் தடி எடுத்தவன் தண்டல் காரன் ஆகா முடியாது.

    2014 ல் பாஜக செய்தால் அதையும் நாங்கள் எதிர்போம். இதை விட மோசமான முறையில் சண்டையிடுவோம். முடிந்தால் ஆட்சியை கூட கவிழ்ப்போம். என் என்றால் பாஜகவில் 60% மேற்பட்டவர்கள் தேசியவாதிகள். அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள். எது சரி எது தவறு என்பது அவர்களுக்கு தெரியும்.

    ஹவார்ட் பலகலை கழகத்தில் படித்து விட்டு ஆடயம்பட்டியின் பொருளாதாரத்தை பற்றி கட்டுரை எழுதும் ஈட்டு சுரைக்காய் ஆட்கள் அல்ல… சில ஆங்க்லியம் படித்த முட்டாள்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை வாயை எப்படி அடிப்பது என்பது எங்களுக்கு தெரியும்.

    \\“Balance of Payment Crisis” என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்?1991ல்
    நம் நாட்டை, நம் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றியவர் இன்றைய
    பிரதமர்.\\

    ஆங்கில தொலைகாட்சிகளை பார்த்து இப்படி எழுதிகிறீர்களா? உங்களை விட “Balance of Payment Crisis ” எனக்கு நன்றாகவே தெரியும். என் என்றால் தையே பிழைப்பாக செய்பவர்களுடன் வேலை செய்பவன் நான். அதை செய்தது இவர் அல்ல. செய்தது எல்லாம் நரசிம்ம ராவ். உலக வங்கியின் நிர்பந்தம் காரணமாக தான் இந்த கழிசடையை உட்காரவைத்தார் நரசிம்ம ராவ்.

    ஒழுங்கா நாலு வார்த்தை பேச கூட தெரியல… சேலை பின்பு வெட்கம் இல்லாத பேடி….

    \\பொருளாதார பார்வையில் பா.ஜ.கவிற்கும் காங்கிரஸிற்கும் வித்தியாசம் \\

    இதற்கான பதிலை ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன்…

    கடைசியாக… இத்தனை எழுதிய நீங்கள் கொடுக்கப்பட்ட ‘presentation உள்ள விஷயத்தை அடிப்படையாக வைத்து விவாதிக்காமல்… தாங்கள் ஆதாரம் அற்ற
    விசயங்களை தான் எழுதி உள்ளீர்கள்.

    உங்கள் வார்த்தைகள் எனக்கு 24×7 ஆங்கில சேனல்களை நியாபக படுதுகிறது.

    RV அவர்களே

    நாங்கள் ரிலையன்ஸ் மற்றும் ஸ்டார் வணிக நிறுவனத்தையும் தான் எதிர்க்கிறோம். ஒரு விஷயம் வியாபாரம் என்பது மேற்கத்திய பாணியில் லாப நட்டம் மட்டும் சார்ந்து அல்ல. அதையும் தாண்டிய மனித உறவுகளை இணைக்கும் ஒரு ஒப்பற்ற ஒரு விஷயம் அதில் உண்டு. அது ஆங்க்லியம் படித்த மேற்கத்திய அறிவு ஜீவ்களுக்கு எப்பொழுதும் புரியாது.

    பிட்சா வந்ததால் தோசை கடை மூடப்பட்டு விட்டதா என்று கேட்கும் முட்டாள்கள் எல்லாம் மத்திய அமைச்சராக இருந்தால் நாடு எப்படி முன்னேறும்.

    வேண்டும் என்றால்… வால் மார்ட் கடையை…. pizza மாதிரி வெளி நாட்டு மளிகை பொருட்களை மட்டும் விற்க சொலுங்கள் இந்திய பொருட்களை விற்க அனுமதிகாதிர்கள்.

    இன்று கிறித்துவ அடிவருடிகளின் ஆஸ்தான செய்தித்தாளும், காங்கரஸ் கட்சியின் எடுபுடியுமான டைம்ஸ் ஒப் இந்தியா….. நான்கு பக்கத்தில் ‘FDI in retail ” வரே வேண்டும் என்பது பற்றி எழுதி உள்ளது….

  10. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஊடகங்கள் முன்பு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, அமைச்சரவை கூட்டத்தில் ஆதரவு தெரிவித்த திமுகவுக்கு காங்கிரசுடன் சேர்ந்து அழிவு காலம் துவங்கிவிட்டது. திமுக ஒரு சமூக விரோத , நாசகார இயக்கம் என்பதனை உறுதிப்படுத்திவிட்டார்கள்.

    இவர்கள் போட்ட இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

  11. கோமதி செட்டி,

    // நாங்கள் ரிலையன்ஸ் மற்றும் ஸ்டார் வணிக நிறுவனத்தையும் தான் எதிர்க்கிறோம். // நீங்கள் என்றால் யார்? நீங்கள் மட்டுமா? இந்தக் கட்டுரையை எழுதிய தமிழ் ஹிந்து ஆசிரியர் குழு அந்த நீங்களில் உண்டா? எஸ். குருமூர்த்தி?

  12. ஆர் வீ

    reliance fresh க்கும் wal mart க்கும் நிறைய வித்யாசம் இருக்கில்லையா

    சில்லறை வியாபாரம் தான் இந்தியாவின் முதுகெலும்பு. இந்தியாவின் GDP இல் பெரும் பங்கு.

    சில்லறை வியாபாரத்தை ஒடுக்கவதால் இரண்டு பிரச்சனைகள் உண்டு – வேலையின்மை அப்புறம் பண முதலீடு.

    reliance fresh பிரபலம் அடைந்தால் investments இந்தியாவில் இருக்கும் எதிர் காலாத்தில் நாம் Wal martடை விலை கொடுத்து வாங்கலாம். Wal Mart வந்தால் அதோகதி தான். அவர்கள் baak ward integration என்ற பெயரில் மொத்த supply chain பூராத்தையும் வாங்கிவிடுவார்கள்.

    Reliance fresh will not enter or compete with any mom & pop store, whereas model of Walmart likes will be to sell everything under the sky

    ரிலையன்ஸ் போன்ற பல கடைகள் வந்து சில்லறை வியாபாரம் பாதிக்கப்படவில்லை. வால்ல்மார்ட் வந்தால் இதே நிலை தொடராது.

    கொக்கோ கோலா காரன் லிம்காவை, தம்ஸ்அப் கம்பெனியை எப்படி வாங்கினான்னு தெரியுமா. இன்று பிஸ்லேரி விக்கும் கம்பெனி தான் லிம்கா வித்தது. கடை கடையை சென்று காலி லிம்கா பாட்டில்கலஎல்லாம் வாங்கி சப்லையே கெடுத்து அப்புறம் லிம்கா கம்பெனியை மிரட்டி வாங்கினார்கள்.

    வால் மார்ட் வந்தா அவன் விக்கறதா தான் வாங்கணும். நான் துள்ளக கம்பெனி பிஸ்கட் வாங்க மாட்டேன்னு சொல்லமுடியாது. பிஸ்கட் சாப்ரதையே விட்டரனும். மாற்று வழியே இருக்காது, பாக்கி கடையை எல்லாம் கபளீகரம் செய்து விடுவார்கள்.

    பெரிய retail chain கள் இயங்கும் விடமே அலாதி. அது shelf management சார்ந்து இருக்குமே ஒழிய மக்களுக்கு தேவையான options ஐ சார்ந்து இருக்காது. வேண்டா வெறுப்பாக அவன் விப்பதை நாம் வாங்க வேண்டி வரும்.
    இதயம் நல்லென்நெய் நல்லா இருக்குன்னு வெச்சுக்குவோம் வால்மார்ட் சொல்ற வழிக்கு இவுக வரலேன்னா இதயம் நல்லென்நெய் கம்பெனியையே இல்லாம பன்னிருவாக.

    இன்னைக்கு நிலைமை அப்படி இல்லா – ரிளையன்சுல இதயம் இல்லாங்காட்டி நாடார் கடைல கிடைக்கும், நீல்கிரிஸ்ல கெடக்கும். வால்மார்ட் வந்தா நாடார் கடை எல்லாம் முயுசியத்துல தான்.

    நான் ஒழுங்கா Retail Management படித்திருக்கிறேன். இவுக பண்ற அட்டூழியங்கள் எல்லாம் அட்ராசிட்டி. அமெரிக்காவிலேயே பலர் இவர்களால் பெரும் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.

  13. பணிந்தது மத்திய அரசு!: சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு திட்டத்துக்கு ‘பிரேக்’!! oneindia breaking news

  14. சாரங்,

    // reliance fresh க்கும் wal mart க்கும் நிறைய வித்யாசம் இருக்கில்லையா // என்ன வித்தியாசம்? சில்லறை வியாபாரிகளுக்கு பிரச்சினை அம்பானி வழியாக வந்தால் என்ன லாபம், வால்டன் வழியாக வந்தால் என்ன நஷ்டம்? என்னை வெட்டும் கத்தியில் “Made in India” என்று போட்டிருந்தால் வலி குறைவாக இருக்குமா?

  15. ஆர்.வி, நேற்று எஸ்.குருமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரசில் எழுதிய கட்டுரை உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடும்- https://expressbuzz.com/opinion/columnists/market-economy-or-market-society/340201.html

    இந்திய கம்பெனிகள் ரீடெய்ல் துறையில் நுழைந்து 5-6 வருடம் ஆகிவிட்டது. அவற்றால் இதுவரை பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு ecosystem உருவாகி விட்டது.

    ரிலையன்ஸ், ஃப்யூசர் குரூப் போன்ற பெரிய இந்திய கம்பெனிகள் வால் மார்ட்டுடன் ஒப்பிடுகையில் தூசு.. அன்னிய டீடெய்ல் கம்பனிகள் “பகாசுரத் தனமானவை” (predatory). அவை இந்த eco system த்தின் சமன்பாடுகளை அழித்துவிடும். உல்கெங்கும் அவை நுழைந்த நாடுகளில் என்ன ஆகியிருக்கிற்து என்று இங்க்குள்ள பிரசண்டேஷனே சொல்கிறது.. சாரங்க் சொல்வது போல, கோக்கும் பெப்ஸியும் சேர்ந்து இந்தியாவின் நல்ல குளிர்பான் கம்பெனிகள் அத்தனையும் ஒன்றுவிடாமல் அழித்து ஒழித்த வரலாறு நம் கண் முன்னே உள்ளது.

    அன்னிய ரீடெய்ல் கம்பனீகளால் வேலை வாய்ப்பு அதிகரிக்காது, மாறாக வெகுவாகக் குறையவே செய்யும்; இன்றைக்கு இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஈராளமான சுயதொழில் முனைவோர் பிழைப்பை இழப்பார்கள் என்று இந்தியாவின் FDI ஆதரவாளர்களிலேயே விவரமறிந்தவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இருந்தாலும் “நுகர்வோர்” நலன் கருதி அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்கிறார்கள் இவர்கள். இதனால் நுகர்வோருக்கு எந்த விதமான “நலன்” விளையும் என்பதே மிகவும் சர்ச்சைக்குரியது…

  16. ஆர் வீ அவர்களே ,

    அதான் எழுதி இருந்தேனே. பிரச்சனைகள் இருவிதம், ரிலையன்ஸ் பிரெஷ் போன்றோர்கள் அசுர பலம் அடைந்தாள் சிறு வணிகர்கள் பாதிக்கப் படுவார்கள் என்பது உண்மை ஆனால் investments என்ற பட்சத்திலிருந்து பார்க்கும் பொழுது அது இந்தியாவுக்கு இழப்பாக ஆகாது. வால்டன் வந்தால் நம்மை சுரண்டி பணம் பண்ணி அதை வைத்துக் கொண்டு நம்மை மேலும் சுரண்ட வசதியாக இருக்கும். இந்தியாவை விட்டு பெரும் முதலீடு போய் விடும். சில்லறை வியாபாரத்தில் வரும் பணமே இந்தியாவின் GDP க்கு பெரும் அதாரம் என்பதனால் இந்த பிரச்சனையை.

    கொக்கோ கோலா லிம்கா கதையை பாருங்கள். இன்றெல்லாம் பன்னீர் சோடா, லெமன் சோடா, ஜின்ஜெர் சோடா என்பதெல்லாம் கிடைப்பதே இல்லை. கரும்பு ஜூஸ் விற்பவர்கள் ஏன் இவ்வளாவு குறைந்து போய் விட்டனர் ?

    லிம்கா. thumbs up மட்டும் இருந்த போது இந்த பிரச்சனையை ஏன் இல்லை.
    நிச்சயமாக இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சி இருக்கிறது. அட சீ கொஞ்ச நாளா நிறையா ஹதீஸ்களையும், வஹிக்களையும் படிச்சு படிச்ஹ்சு வாயிலேருந்து அல்லா மாதிரியே வார்த்தை வருது

    வால் மார்ட் பெருக பெருக பொருட்களின் தரம் குறையும். retail இல் அதிக லாபம் தரும் சமாசாரம் private labelled products. இதனாலேயே வால் மார்ட் போன்ற கடைகளில் braanded சமாசாரங்களை விட அவர்களே சொந்தமாக label ஒட்டி தயாரித்து விற்கும் சமாசாரம் தான் அதிகம். இந்தியாவில் இது அதிக வசதி, இஷ்டபடி MRP போட்டு MRP யில் இருந்து தப்பிக்கும் விதமாகவே இதை பயன் படுத்தலாம்.

    வால்மார்ட்டின் மாடல் every day low price. இதனால் அவர்கள் expiry date நெருங்கி வரும் பொருட்களையே அதிகம் விற்பார்கள். அடுத்த முறை வால் மார்ட் போகும் போது நீங்கள் இதை கவனித்து பாருங்கள்.

    நல்ல பொருட்களை தயாரிப்போரும், வால் மார்ட் தரும் விலை நிர்ணய நெருக்குதலால் தங்களது தரத்தை குறைத்துக் கொள்ளுவார்கள். double purification, single purification ஆக மாறும். வால் மார்ட்டை பகைத்துக் கொள்ள எந்த கம்பெனியும் முன் வராது.

    ரிலையன்ஸ் பிரெஷின் மாடலும் இதே தான். அதனால் தான் அங்கு கூட்டமே இருப்பதில்லை. நீல்கிரீசிலும், ஸ்பென்சரிலும் மக்கள் இருக்கிறார்கள். வால்மார் வந்தால் நிச்சயமாக நீல்கிரீசோ ச்பென்சரோ இருக்கப் போவதில்லை. மக்களுக்கு எது தரம் என்று சரி பார்க்கக் கூட வாய்ப்பு இருக்காது.

  17. //லிம்கா. thumbs up மட்டும் இருந்த போது இந்த பிரச்சனையை ஏன் இல்லை.
    நிச்சயமாக இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சி இருக்கிறது. அட சீ கொஞ்ச நாளா நிறையா ஹதீஸ்களையும், வஹிக்களையும் படிச்சு படிச்ஹ்சு வாயிலேருந்து அல்லா மாதிரியே வார்த்தை வருது/
    🙂

  18. சந்தியா ஜெயினின் கட்டுரை – நல்ல வாதங்களைத் தருகிறது:

    https://www.vijayvaani.com/FrmPublicDisplayArticle.aspx?id=2083

    கட்டுரையின் கடைசி வரிகள் –

    … To clinch the argument about FDI and farm incomes, consider that until 1950, the average American farmer earned nearly 70 percent of every dollar spent on food. In 2005, this declined to 3 to 4 percent, though it should logically have risen with the elimination of middlemen. Only, the large corporates purged the chain of intermediaries and creamed off all their profits; the farmer remained at the bottom of the pile. FDI in retail can only help Western multinationals that have saturated their profits in their existing turfs. But why is the Indian government willing to push the farmer and retailer into the whirlwind?

  19. ஒரு வழியாக என்னைப் போன்றவர்கள் ஆதரித்த சில்லரை வர்த்தகத்தில்
    அந்நிய முதலீடு இடை நிறுத்தம் செய்யப் பட்டது. ஆனால் நாங்கள்
    தோற்கவில்லை. திராவிட கட்சிகளின் பாணியில் கூறுவதானால்
    இந்தியா தோற்றுவிட்டது. (அவ்வளவு சீக்கிரம் இதையெல்லாம் நாங்கள்
    விடப் போவதில்லை-விக்கிரமாதித்தனைப் போல மீண்டும் மீண்டும்
    முயற்சிப்போம்.).

    எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். எங்களுக்கு பல பட்டங்கள் கிடைத்துள்ளன.
    பா.ஜ.க வில் உள்ள துரோகிகள்; அமேரிக்க அடிவருடிகள்; ஏகாதிபத்திய
    அமேரிக்காவை ஆதரிப்பவர்கள்; ஆங்கில தொலைக்காட்சியைப்
    பார்த்து மூளைச்சலவை செய்யப் பட்டவர்கள்; 4 கோடி அண்ணாச்சிகளின்
    குடி கெடுக்க நினைப்பவர்கள்.

    ஒரு இரகசியம். இந்த தளத்தில் மறுமொழி இட எனக்கு வால்மார்ட்
    1000 ரூபாய் தந்தது!

    சரி விஷயத்திற்கு வரலாம்.
    எதிர்ப்பவர்களுக்கு இரண்டே கேள்விகள்.
    (1)சந்தை பொருளாதாரத்தை ஆதரிக்கிறீர்களா? இல்லையா?
    ஆதரிக்க வில்லை என்றால் மேலே பேசுவதற்கு ஒன்றுமில்லை.
    (உங்களுக்கு தோழர்களின் கூடாரம் காத்திருக்கிறது.)

    (2)சந்தை பொருளாதாரத்தை ஆதரிக்கிறேன். ஆனால் அந்நிய முதலீட்டை
    மட்டுமே எதிர்க்கிறேன் என்றால் அடுத்த கேள்வி!
    இந்தியாவில் தற்பொழுதைய நிலவரப்படி 40 முதல் 55 சதவிகிதம்
    காய்கறிகளும் பழங்களும் வீணாகின்றன. (தானியங்கள் வேறு கதை).
    இதை சரி செய்ய உங்கள் மனநிலையில் உள்ள நிபுணர்கள் அளிக்கும்
    நிவாரணம் என்ன? (நீங்களே நிபுணராகவும் இருக்கலாம். எனக்கு
    தெரியாது).
    1 கிலோ ஆப்பிளின் விலை 100 ரூபாய்க்கு வாங்குகிறோம். ஆனால்
    காஷ்மீர் அல்லது ஊட்டி விவசாயிக்கு கிடைப்பதோ வெறும் 35 ரூபாய்.

    இப்படிப்பட்ட வர்த்தகம்தான் நல்லது. தரகர்களும் நம்மவர்கள்தான்.
    அவர்களின் குடும்பமும் வாழ வேண்டும் என்று நீங்கள் கருதினால்
    மேலே பேச விஷயமில்லை.

    என்னைப் போன்றவர்கள் கருத்துப்படி, அந்த தரகர்கள் நாசமாகப்
    போகட்டும். சில இலட்சம் தரகர்கள் மற்றும் அவர்களின் குடும்பம்
    வாழ வேண்டுமா?.

    அல்லது பல கோடி விவசாயிகள் நியாயமான விலையைப் பெற்று,
    பொதுமக்களுக்கும் நியாயமான விலையில் பொருட்கள் கிடைக்க
    வேண்டுமா?

    வால்மார்ட்டும் வேண்டாம்; கோலிமார்ட்டும் வேண்டாம்.
    அழுகலைத் தவிர்த்து, தரகர்கள் ஒழிந்து, விவசாயிகளும், நுகர்வோரும்
    பயன்பெற உங்களிடம் ஏதேனும் திட்டம் இருக்கிறதா? நீங்கள்
    முன்வைக்கும் எந்த திட்டத்தையும் வணிகர்களும் தரகு மாஃபியா
    கும்பலும் எதிர்க்கத்தான் போகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்
    நிதி அளிப்பதும் இதே கும்பல்தான்.

    எங்களை துரோகிகள் என்று திட்டுவதை விட்டுவிட்டு ஒரு நிபுணர்
    அறிக்கையை ஏற்பாடு செய்ய முடியுமா?

    அடுத்து:-
    குளிரூட்டும் நிலையங்களை விவசாயிகளால் நிறுவ முடியாது. அரசு
    செய்தால் உருப்படாது. ஏற்கெனவே பல பொதுத்துறை நிறுவனங்கள்
    நாறுகிறது. அதை விடுவோம். நம்மிடம் பணம் இருக்கிறதா?
    தொழில்நுட்பம் இருக்கிறதா? ஏற்கெனவே இதைப் போன்ற
    வியாபாரத்தில் ஈடுபட்ட வெள்ளையனை விடக்கூடாது. எனக்கும்
    தெரியாது. தெரிந்தாலும் பணம் கிடையாது. சூப்பர்தான்.

    பா.ஜ.கவின் செய்தித்தொடர்பாளர் தரகர்களை சீர்திருத்த வேண்டும்
    என்கிறார்? நாம் என்ன ஆண்டி மடமா நடத்துகிறோம்?

    ஒரு மாற்றம் என்று வந்தால் அதில் சிலர் தோற்கத்தான் செய்வார்கள்.
    சிலர் வெற்றி பெறத்தான் செய்வார்கள்.

    அதுதான் போகட்டும்! உள்நாட்டு தனியாரைப் பற்றியும் உங்களுக்கு
    விமர்சனம்தான். ஐயா! நீங்கள் எந்த உலகில் வாழ்கிறீர்கள்? ஒன்று
    செய்யலாம். இராமகிருஷ்ணா மடத்தையும், மாதா அமிர்தானந்த மயி
    ஆஸ்ரமத்தையும் வியாபாரம் செய்ய விடலாம்.

    அந்நிய முதலீடு வேண்டாம். உள்நாட்டு தனியார் முதலீடும் வேண்டாம்.
    டாடா முதல் அனைத்து பணக்காரர்களும் கேவலமானவர்கள் என்று
    கூறியாகிவிட்டது. ஒன்று செய்து விடலாம். பேசாமல் அனைத்து
    துறைகளையும் தேச உடைமை ஆக்கி விடலாம். அய்யய்யோ! 1991க்கு
    முன்னால் கிட்டத்தட்ட அப்படித்தானே இருந்தோம்.

    ஆமாம்! நாம் இப்போது எந்த தளத்தில் விவாதிக்கிறோம்? கம்யூனிஸ்டு
    கொரில்லா தளத்திலா?

    Finishing Touch
    கரப்பான் பூச்சியின் புழுக்கையுடன் புளியையும், பருப்பையுமே எவ்வளவு
    நாள்தான் சாப்பிடுவது!முடியலே!

  20. வால் மார்ட் போன்ற நிறுவனங்கள் பாரத நாட்டில் கொல்லை லாபம் சம்பாதித்து தங்களுடைய நாடுகளுக்கு கொண்டு சென்றாலும் பரவாயில்லை. ஆனால் நம் நாட்டிலே உள்ள சிறு வணிகர்களும், வியாபாரிகளும் லாபம் சம்பாதித்து விடக்கூடாது என்று கருதும் நண்பர்களின் தேசபக்தியை என்னவென்று பாராட்டுவது.
    வெளிநாடுகளில் படித்துவிட்டோ அல்லது அங்கே சென்று ஊர் சுற்றி வருபவர்களுக்கோ சாதாரண, நடுத்தர மக்களோட அன்றாட வாழ்க்கை பத்தி என்ன தெரியும் இவர்களுக்கு. மத்திய அரசு கொண்டு வர நினைப்பதெல்லாம் ஷேர் மார்கெட்ல முதலீடு செய்பவர்கள் பயன் பெறவே.
    கார்பரேட் செக்டர் லாபம் மட்டுமே கிட்டதட்ட இந்த நாட்டோட பட்ஜெட்டுக்கு சமமாக உள்ளது. ஆனால் அவர்களோட ஊழல்கள் வரி ஏய்ப்பு ஏராளம் என்பது நண்பர்கள் மறந்து விட்டார்கள் போல்…..,
    இந்த நாட்டுல நல்லது செய்றதுக்கும் தேசபக்தியோட பேசவும் இருக்கவும்
    ஆர் எஸ் எஸ் , சதேசி அமைப்பு , பா ஜா க போன்றவர்கள் தான் செய்வார்கள் போல இருக்கிறது. அதையும் மீறி பேசினால் முத்திரை குத்தப்படுவார்கள் போல உள்ளது.

  21. பாலாஜி அவர்களே

    சண்டை அட சீ சந்தை பொருளாதாரம் தோழர்களின் ஆதாரம் இவை இரண்டையும் தவிர வேற மார்கமே இல்லையா அதாவது வழியே இல்லையா. இந்தியாவின் GDP உலக GDP அளவில் 18 % இருந்தத நாட்களில் இவ்விரண்டு மார்கங்களும் இல்லையே, புதிதாக வந்த மார்கங்கள் தான் இனிய மார்கங்களா. அவை அப்படித்தான் தங்களை விளம்பரப் படுத்திக் கொல்கின்றன 🙂

    ஆஸ்திரேலியாவும், கனடாவும் அந்நிய முதலீடு இல்லாமலேயே உலகின் விவசாய பொருள் ஏற்றுமதியில் எப்படி உச்சத்தில் இருக்கிறார்கள். அங்கெல்லாம் எதுவும் அழுகுவதில்லையே.

    இந்தியாவில் supply chain problems இருப்பதால் அதை வால் மார்ட்டிர்க்கு தாரை வார்ப்பதா. (இந்திய ராணுவம் சரி இல்லை என்றால் அமேரிக்கா ராணுவத்தை ஏற்றுக்கொள்ளலாமா. சும்மா தோழர்கள் மாதிரி பேசிப் பார்த்தேன்)

    இந்த பிரச்சனைகளை களைந்து வால் மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு சவாலாக நிறுவனங்களை ஏற்படுத்த அல்லாவா முற்பட வேண்டும். ரீடைல் ஒன்று Rocket Scicece அல்ல. பிரான்ஸ் நாட்டில் வால் மார்டின் நிலை என்ன. கேர்போர் தான அங்கு ராஜாங்கம் நடத்துகிறது.

    //அய்யய்யோ! 1991க்கு
    முன்னால் கிட்டத்தட்ட அப்படித்தானே இருந்தோம்.
    //

    அய்யா இன்னைக்கும் மக்களின் நிலைமை அதே நிலைமை தான் என்கிற பொழுது பிரச்சனையின் தீர்வு தனியார்மய மாக்கத்திலோ வெளிநாட்டு முதலீடிலோ அல்ல.

    1991 பிறகு பெரும்பாலான மக்களின் நிலைமை அப்படியே புரட்டிப் போடப்பட்டுள்ளது என்பது கனவில் தான். தனியார் நிறுவனங்கள் மேலும் கொழுத்துல்லார்கள். நாடு வளமடைந்துள்ளது மக்கள் அப்படியே தான் இருக்கிறார்கள்.

    //
    Finishing Touch
    கரப்பான் பூச்சியின் புழுக்கையுடன் புளியையும், பருப்பையுமே எவ்வளவு
    நாள்தான் சாப்பிடுவது!முடியலே
    //

    வால் மார்ட் வந்தால் அதில் சீனாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்து நண்டு சூசையும், ஆக்டோபஸ் கண்ணையும் சேர்த்து தருவான்.

    வால் மார்டுக்கும் தரத்திற்கும் ரொம்ப ரொம்ப தூரம். அவர்கள் என்றைக்கும் நாங்கள் தரமான பொருட்களை விற்கிறோம் என்று விளம்பரம் செய்வது கிடையாது, நாங்கள் மலிவு விலையில் விற்கிறோம் என்று தான் சொல்வார்கள்.

    நமக்கு கரப்பான் பூச்சி வராத மிக அதிக பூச்சி மருந்து கலந்த அரிசியே நல்ல பாக்கெட்டில் கிடைக்கலாம் ஆனால் வால்மார்ட் supply chain control மூலம் மொத்தத்தையும் அழிக்கும். நமக்கு options என்கிற ஒன்று இருக்கிறதே தெரியாமல் போய் விடும். ஒரே கம்பனி பால் தான் வால் மார்ட் விக்கும். அது சரி இல்லை என்றால் ஒன்று பழகிக் கொள்ள வேண்டும் அல்லது பால் சாப்பிடுவதை விட்டு விட வேண்டும். நமக்கு பின்னால் வரும் சந்ததியினர் ஓஹோ இந்த பால் கம்பெனி மட்டும் தான் இந்தியாவில் இருக்கு என்று நினைப்பார்கள்.

    இன்று பெரும் நகரங்களில் கிடைக்கும் சூப்பர் மார்கெட் பொருட்களை விட சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் பொருட்கள் தரமானவை – ஏன் என்றால் அங்கு options அதிகம் . ஸ்ரீரங்கத்தில் அன்று காலை பறித்த காய்கறி மார்கெட்டில் கிடைக்கும் ருசி நன்றாக இருக்கும். மதுரையில் பத்து நாள் பழசு சென்னையில் ஒரு மாசம் பழசு. டெல்லியில் ரெண்டு மாசம் பழசு. வால் மார்ட் வந்தால் எல்லா பொருட்களும் ரெண்டு மாச பழசு.

    இந்தியாவின் ஜீவ ஆதாரமான சில்லறை வியாபாரத்திலிருந்து வரும் பணம் வெளிநாட்டுக்கு போகும். மெல்ல இங்கு நகரங்களும், கிராமங்களும் சாகும்.

    நமக்கு நல்ல பாக்கெட்டில் அரிசி கிடடிதால் போதுமே.

  22. சாரங், அம்பானி நிறுவனங்கள் தயாரிக்கும் கத்தியால் வெட்டினால் கத்தி விற்றதில் கிடைத்த லாபம் அம்பானிக்குப் போகும், அது இந்தியாவுக்கு “உள்ளே” இருக்கும் என்று வாதிடுவது, மன்னிக்கவும், கேனத்தனமாக இருக்கிறது.

    ஜடாயு, குருமூர்த்தி முன் வைக்கும் வாதங்களில் எது ரிலையன்சுக்குப் பொருந்தாது? ரிலையன்ஸ் வேலை வாய்ப்பை அதிகரித்திருக்கிறதா? விவசாயிகளுக்கு நல்ல விலையைப் பெற்றுத் தந்திருக்கிறதா? Supply chain efficiency அதிகரித்திருக்கிறதா? இல்லை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிதான் அதிகரித்திருக்கிறதா?

    வால்மார்ட் உள்ளூர் வியாபாரிகளுக்கு நல்லது செய்யாது என்பதில் இரு கருத்தில்லை. ஆனால் வால்மார்ட்டை எதிர்க்கும், ரிலையன்சை ஆதரிக்கும் மனப்பாங்கு புரியவில்லை. ரிலையன்சோடு ஒரு ecosystem உருவாக்கி இருப்பது போல வால்மார்ட்டுடனும்தான் உருவாகி இருக்கிறது. அமெரிக்காவில் லோக்கல் கடைகள் இல்லையா என்ன? இன்றைய ரிடெய்ல் மார்க்கெட்டால் நுகர்வோருக்கு நல்லது நிகழ்கிறது என்று நீங்கள் implicit ஆகச் சொல்லும் கருத்து சரிதானா என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

    கோக்கும் பெப்சியும்தான் பன்னீர் சோடாவை ஒழித்தது, லிம்காவும் தம்ஸ் அப்பும் பன்னீர் சோடாவை வாழ வைத்தது என்ற வாதம் அபத்தம். ஒரு காலத்தில் பன்னீர் சோடா ரசிகன் நான். கோக், பெப்சி வருவதற்கு முன்பே – பத்து வருஷ காலத்தில் பன்னீர் சோடா கிடப்பது எவ்வளவு கஷ்டமாகிப் போனது என்று எனக்கு நன்றாகவே தெரியும். தம்ஸ் அப்புக்கு உள்ளூரில் ஏஜென்ட் கிடைத்தார்களா இல்லையா என்பதைப் பொறுத்துத்தான் பன்னீர் சோடா சுலபமாகக் கிடைப்பதும் கிடைக்காமல் இருப்பதும்.

    உள்ளூர் வியாபாரிகள் விவசாயிகளுக்கு சரியான விலை தருகிறார்கள் என்ற tacit வாதத்தின் பித்துக்குளித்தனமும் புரியவில்லை.

    சிறு வியாபாரிகளுக்கு ஆதரவு தர விரும்புகிறீர்களா? தாராளமாக ஆதரியுங்கள். வால்மார்ட்டை வரவேற்கிறீர்களா? தாராளமாக வரவேற்பு கொடுங்கள். ஆனால் consistent ஆக வாதியுங்கள், ஒரு இடத்தில் கண்ணை மூடிக் கொள்வோம் என்றால் உள்ளூர் பெரு முதலாளிகளின் campaign பிளானில் ஏமாந்துவிட்டீர்கள் என்றுதான் தோன்றுகிறது. குருமூர்த்தி போன்றவர்களுக்கு உள்ளூர் பெருமுதலாளிகளின் பக்கபலம் இருந்தால் நான் ஆச்சரியப்படமாட்டேன்.

  23. திரு.ஆர்.வி எழுதியதில் இருந்து என் கருத்து.

    பன்னீர் சோடா, லிம்கா, தம்ஸ் அப் போன்றவைகளை, கோக் மற்றும்
    பெப்ஸி போன்றவை ஒன்று அழித்தன, அல்லது கைப்பற்றிக் கொண்டன
    என்பது எதிர்ப்பாளர்களின் வாதம்.

    சரி, முதலில் கொஞ்சம் வியாபாரத்தின் அடிப்படை.
    ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இந்தியாவில் ஆரம்பித்து நல்ல நிலைக்கு வந்தவுடன்,
    தமிழ்நாட்டில் இயங்கி வந்த “பாங்க் ஆஃப் மதுரா” வங்கியை விலைக்கு
    வாங்கி விட்டது. (எதிர்ப்பாளர்களின் பாஷையில் கபளீகரம் செய்து
    கொண்டது.). தனியார் வங்கிகள் இந்தியாவில் தொடங்கியவுடன், பல
    சிறிய நகரங்களின் Reachற்காக பல வங்கிகளை வாங்கின. இதில் எல்லாம்
    என்ன தவறு என்பது எனக்கு சுத்தமாக புரியவில்லை. சிறிய வங்கிகளின்
    அளவு, வாடிக்கையாளர் எண்ணிக்கை, நம்பகத்தன்மை, சொத்து மதிப்பு,
    பங்குகள் இருந்தால் அவற்றின் மதிப்பு போன்றவற்றிற்கு ஏற்ப விலை
    நிர்ணயம் செய்யப்பட்டு, SEBI, RBI போன்றவற்றின் அனுமதியைப் பெற்று
    முக்கியமாக சிறிய வங்கிகளின் முதலாளிகளும் அனுமதி அளித்த பிறகு
    அவை பெரிய வங்கிகளால் வாங்கப் பட்டன. இதில் என்ன பிரச்சினை?

    வியாபாரத்தின் அடிப்படையே புரியாதவர்களால்தான் இது போன்ற
    வியாபார சங்கதிகளை எதிர்க்க முடியும்.

    ஒரு கம்பெனியை மிரட்டுவது(Maxis Suntv), வியாபாரம் செய்ய
    விடாமல் செய்வது, வெளிப்படையாக கூறுவதென்றால் சட்டத்தை
    மீறுவது போன்றவை வேறு விஷயம். நான் இப்போது அதைப் பற்றி
    பேச வில்லை. ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தை வாங்குவது
    மிகவும் சரியான வியாபாரம்தான் என்பது என் தீர்மானமான கருத்து.

  24. ஆர் வீ

    //
    சாரங், அம்பானி நிறுவனங்கள் தயாரிக்கும் கத்தியால் வெட்டினால் கத்தி விற்றதில் கிடைத்த லாபம் அம்பானிக்குப் போகும், அது இந்தியாவுக்கு “உள்ளே” இருக்கும் என்று வாதிடுவது, மன்னிக்கவும், கேனத்தனமாக இருக்கிறது
    //

    உங்களின் வாதம் மிகவும் குறுகிய அளவானா அம்பானி VS வால்மார்ட் சுற்றியே இருக்கிறது. இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு மற்றவர்கள் இந்த வட்டத்தின் வெளியே இருந்து பேசுவதை வத்தித்திர்க்குள் வலுக்கட்டாயமாக வரவழைத்து கேனத்ததனமாக்குவது என்பது தான் வேடிக்கை.

    உங்கள் கருத்தின் வத்ததிர்க்குள் தான் எல்லா பதிலும் அடங்குகின்றன என்ற என்னத்தை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள்.

    இது நிச்சயமாக கேணத்தனம் இல்லை. இந்த யுக்தியை அமேரிக்காவில் நலிவடைந்த ஊர்காரர்கள் பயன் படுத்தி தங்கள் நகரங்களை, கிராமங்களை, கௌண்டிக்களை மீட்டெடுத்துள்ளனர் miner county, south dakota ஒரு உதாரணம். ஒரே வருடத்தில் இந்த யுக்தியின் மூலம் தங்கள் டுபாகூர் ஊரை புரட்டிப் போட்டுள்ளனர் அவ்வூர் மக்கள். tax collection மட்டும் பதினாறு மில்லியன் அதிகமானது என்றால் பாருங்களேன்

  25. எல்லாம் தெரிந்த மேதாவியின் கருத்துகள் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது
    தமிழ் இந்து தளத்தின் எல்லா கருத்துகளையும் கண்ணை மூடி கொண்டு எதிர்ப்பது மட்டுமே மேதாவி தனது அறிவாளித்தனம் என நம்புகிறார். விரைவில் அவரின் வியாதி குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் இந்துமதம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் தீமையை மட்டுமே காணும் பெசிமிஸ்ட் அவர்.
    இங்கு கடையில் அரிசி மற்றும் சந்தையில் (மார்க்கெட்டில் அல்ல) காய்கறி வாங்கி உண்டு வாழும் ஏழைகளின் வருத்தம்,மற்றும் அப்படி காய்கறி விற்று வாயிற்று பிழைப்பு நடத்தும் ஏழைகளின் வாயிற்று பிரச்னை. ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு முற்போக்கு வாதம் பேசும் மேதாவிகளுக்கு புரியாது.
    இங்கு வருவது பசி ஏப்பம் புளித்த ஏப்பம் விடுபவர்களுக்கு எப்படி இதன் கஷ்டம் தெரியும்

  26. சாரங், // உங்களின் வாதம் மிகவும் குறுகிய அளவானா அம்பானி VS வால்மார்ட் சுற்றியே இருக்கிறது. // என் கேள்வி அவ்வளவுதானே? ஞாபகம் இல்லை என்றால் என் முதல் மறுமொழியைப் படித்துப் பாருங்கள். என் குறுகிய வட்டக் கேள்விக்கு நீங்களாகத்தான் முன் வந்து பதில் அளித்தீர்கள் என்று நினைவூட்டுகிறேன். ஒன்றுக்கு ஆதரவு, மற்றதுக்கு எதிர்ப்பு என்ற நிலையில் உள்ள முரண்பாட்டைத்தான் சுட்டிக் காட்டுகிறேன்.

  27. ஆர்வீ

    நீங்கள் குறுகிய வட்டத்திலேயே என் இதை அணுகுகிறீர்கள், அதை கொஞ்சம் வெளியில் வந்து பாருங்களே என்று தான் எழுதினேன்

    நான் எழுதிய பதிலை படியுங்கள்

    //
    அதான் எழுதி இருந்தேனே. பிரச்சனைகள் இருவிதம், ரிலையன்ஸ் பிரெஷ் போன்றோர்கள் அசுர பலம் அடைந்தாள் சிறு வணிகர்கள் பாதிக்கப் படுவார்கள் என்பது உண்மை ஆனால் investments என்ற பட்சத்திலிருந்து பார்க்கும் பொழுது அது இந்தியாவுக்கு இழப்பாக ஆகாது
    //

    தெளிவாக பிரச்சனைகள் இருவிதம் முதல் விடம் ரிலையன்ஸ் பிரெஷ் வால்மார்ட் சமத்தவம் இரண்டாவது investments

    நீங்கள் இரண்டாவதை எதற்காக முதலாவதில் ஏற்றிப் பார்கிறீர்கள். உங்கள் பார்வை சிறு வட்டத்தில் இருந்தால் அதற்க்கு தான் நாம் பதில் அளித்தே தீரவேண்டுமா.

    நீங்கள் நிச்சயமாக அன்பானவர், கருணையானவர் எலாம் அறிந்தவராகவும் இருப்பீர்கள் என்று தான் எண்ணினேன். (என்னை மன்னிக்கவும் கொஞ்ச நாளாக தமிழன் போன்றோர் செய்த தாவா பணியினால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். வாய் தொறந்தா வஹி வஹியாதான் வருது)

  28. நான் அந்நிய முதலீட்டிற்கு ஆதரவாக மறுமொழிகள் எழுதி வரும் நிலையில்
    இன்று Uday India பத்திரிகையின் இணைய தளத்தில் ஒரு கட்டுரையை
    வாசித்தேன்.
    https://www.udayindia.org/content_17december2011/cover_story.html

    சில பகுதிகள்:
    Another senior BJP leader has privately offered the option that the government can roll back the FDI in retail from 51 to 26 per cent but this is not the consolidated view of the BJP but merely a section of it, which is perceived to be pro-reforms.
    இதை விட திரு.அருண் ஜெட்லி வெளிப்படுத்தும் கருத்து
    சுவாரஸியமானது.
    It is good to be a reformist. Traditionally, a lot of us find ourselves on the side of reforms but every change is not a reform. Changes which may end up hurting domestic interests are really counter-reforms. The time for allowing FDI in retail sector in India has still not come.

    திரு.அருண் ஜெட்லி தெளிவாகவே அந்நிய முதலீட்டை ஆதரிக்கிறார்.
    அதற்கான நேரம் இது அல்ல என்று மட்டுமே எதிர்க்கிறார். குறைவான
    விலையில் பொருட்களை (சீனாவைப் போல) உற்பத்தி செய்ய இந்தியா
    தொடங்கியவுடன் அந்நிய முதலீடு நன்மை பயக்கும் என்றும்
    கூறுவதால் நான் நம்பிக்கையுடனேயே இருக்கிறேன்.

    நான் ஏற்கெனவே எழுதியதைப் போல பா.ஜ.கவில் பொருளாதார
    சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்கு ஒரு கூட்டம் உள்ளது என்பது
    தெளிவாகவே தெரிகிறது.

    யார் கண்டது? 2014ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் இதே அந்நிய
    முதலீட்டை ஆதரிப்பதற்கும் வாய்ப்பு உண்டு. எதிர்ப்பாளர்கள்
    அந்த நேரத்தில் என்ன எழுதப் போகிறார்கள் என்பதை யோசித்து
    வைத்துக் கொள்ளலாம்.

  29. சாரங், ஒன்றும் புரியவில்லை.

    // //
    அதான் எழுதி இருந்தேனே. பிரச்சனைகள் இருவிதம், ரிலையன்ஸ் பிரெஷ் போன்றோர்கள் அசுர பலம் அடைந்தாள் சிறு வணிகர்கள் பாதிக்கப் படுவார்கள் என்பது உண்மை ஆனால் investments என்ற பட்சத்திலிருந்து பார்க்கும் பொழுது அது இந்தியாவுக்கு இழப்பாக ஆகாது // இந்த வாதத்தைத்தான் கேனத்தனம் என்று characterize செய்திருந்தேன். இன்னும் விளக்க வேண்டுமென்றால் – சிறு வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்பு இரண்டிலும் ஒன்றுதான் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள். investments என்று பார்க்கும் இந்தியாவுக்கு இழப்பாக ஆகாது என்பது, மீண்டும் மன்னிக்கவும், கேனத்தனம். பல சிறு வியாபாரிகள் அழிந்து, அந்தப் பணம் அம்பானிக்குப் போனால் பரவாயில்லை, வால்டனுக்குத்தான் போகக்கூடாது என்பதை எப்படி தயக்கமே இல்லாமல் பிரஸ்தாபிக்கிறீர்கள்? investments என்ற பட்சத்தில் உலகுக்கு இழப்பாக ஆகாது என்று நான் சொன்னால் அது எவ்வளவு கேனத்தனமாக இருக்கும் என்று ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள்.

    // உங்கள் பார்வை சிறு வட்டத்தில் இருந்தால் அதற்க்கு தான் நாம் பதில் அளித்தே தீரவேண்டுமா. // நான் சாரங் பதில் அளித்தே ஆக வேண்டும் என்று விரதம் எதுவும் இருந்தமாதிரி நினைவில்லை. நீங்களாக முன்வந்து என் “குறுகிய வட்டக்” கேள்விக்கு பதில் அளித்தீர்கள், அதில் உள்ள முரண்பாட்டை சுட்டிக் காட்டினால் உன் கேள்வி குறுகிய வட்டம் என்கிறீர்கள். நான் என்ன செய்யட்டும்?

  30. ஆர் வீ

    நீங்கள் எப்போதுமே இப்படித்தான் போங்கள்

    //
    இந்த வாதத்தைத்தான் கேனத்தனம் என்று characterize செய்திருந்தேன். இன்னும் விளக்க வேண்டுமென்றால் – சிறு வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்பு இரண்டிலும் ஒன்றுதான் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள். investments என்று பார்க்கும் இந்தியாவுக்கு இழப்பாக ஆகாது என்பது, மீண்டும் மன்னிக்கவும், கேனத்தனம். பல சிறு வியாபாரிகள் அழிந்து, அந்தப் பணம் அம்பானிக்குப் போனால் பரவாயில்லை, வால்டனுக்குத்தான் போகக்கூடாது என்பதை எப்படி தயக்கமே இல்லாமல் பிரஸ்தாபிக்கிறீர்கள்? investments என்ற பட்சத்தில் உலகுக்கு இழப்பாக ஆகாது என்று நான் சொன்னால் அது எவ்வளவு கேனத்தனமாக இருக்கும் என்று ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள்.
    //

    சொப்பா சொப்பா. நான் சிறு வியாபாரிகள் அழிந்து அம்பானி கொழுப்பதை ஆதரிக்கிறேன் என்று எங்காவது சொன்னேனா. ரெண்டாவது விஷயத்தை பற்றி தான் நான் சொல்ல வந்தது.

    உங்களுக்கு மட்டும் பதில் அளிக்க வேண்டுமானால் உங்களுக்கு மெயில் அனுப்புவேனே. எனது கருத்தை சொன்னேன், கேனயனாக இருந்து தெளிவு பெற நினைப்பது எவ்வளவோ மேல்.

    உலக investments ஒன்றும் ஆகாது ன்று உங்களை போன்றவர்கள் தான் பேச வேண்டும். நான் வசிக்கும் நாடு இந்தியா அதன் நன்மையை பற்றி சிந்தனை கொஞ்சமாவது எனக்கு இருக்கும்.

    உங்கள் பிரச்சனையை என்னன்னா உங்கள் நினைப்பு தான் – அதாவது நீங்கள் புரட்டிப் போடற மாதிரி கேட்டதாகவும் அதுக்கு மத்தவங்க கிட்ட பதிலே இல்லாத மாதிரியும் நினைப்பது தான். நீங்கள் கேட்ட கேள்வியின் premise தப்பாக இருந்தால் அதை விரிவாக்கி பதில் சொல்லக் கூடாதா. நான் எப்படி எதுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டும் என்று நீங்கள் கண்டிஷன் போட நான் உப்பிலி இல்லை இது உங்கள் தளமும் இல்லை.

    //நான் சாரங் பதில் அளித்தே ஆக வேண்டும் என்று விரதம் எதுவும் இருந்தமாதிரி நினைவில்லை. நீங்களாக முன்வந்து என் “குறுகிய வட்டக்” கேள்விக்கு பதில் அளித்தீர்கள், அதில் உள்ள முரண்பாட்டை சுட்டிக் காட்டினால் உன் கேள்வி குறுகிய வட்டம் என்கிறீர்கள். நான் என்ன செய்யட்டும்
    //

    பார்த்தீர்களா பார்த்தீர்களா தமிழ் ஹிந்து ஒன்றும் பெர்சனல் மெயில் சிஸ்டம் கிடையாதே.

    நீங்கள் கேட்டுக் கொண்டதால் நான் பதில் சொன்னேன் என்றா சொன்னேன். ஆசிரியர் குழு உங்களை பணித்தத்தாலா நீங்கள் உங்கள் பதிவை இட்டீர்கள்?

    நான் உங்களது குறிகிய வட்டத்துக்கு மட்டும் பதில் சொல்ல வில்லை. இதை புரிந்து கொள்வதில் உங்களுக்கு சிக்கல் இருக்காதாதுள். பிரச்ஹ்கானையே நீங்கள் அதி புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டு விட்டோம் என்று நம்புவதால் தான. உண்மையில் நீங்கள் வைத்த அம்பானி வால் மார்ட் வாதமும் கிறுக்குத்தனமானது. வால் மார்ட் எப்படி தொழில் செய்யும் செய்கிறது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவரை ஒன்றும் சொல்ல முடியாது.

    வெளி நாட்டிலிருந்து வந்த சோனியா காந்தி இந்தியாவை ஆளலாம் ஆனால் சர்தாரி ஆளக் கூடாதா மறைந்த சதாம் ஹோசைன் ஆளக் கூடாதா என்பது போன்ற கேள்வி தான் உங்களது. இரண்டு பேர் ஆண்டாலும் கஷ்டம் இருக்கிறது. கடவுள் அனம்பிக்கை இல்லாத அண்ணா தமிழ் நாட்டை ஆளலாம் அதே மாதிரி கடவுள் நம்பிக்கை இல்லாதா வீரமணி ஆளக் கூடாதா என்று நீங்கள் கேட்பது என் காதில் ஒலிக்கிறது.

    absolutism – என்ற பார்வையில் எல்லாமே சரியாதத்தான் இருக்க வேண்டும். எனக்கு இன்னொன்று தோன்றுகிறது. நீங்கள் ஒரு வேலை அத்வைத சித்தி பெற்று இங்கு வாழ்கிறீர்களோ என்று.

  31. சாரங், உண்மையாகவே என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கொஞ்சம் கூட புரியவில்லை. கடைசி முறையாக நமக்குள் வாதப்பிரதிவாதம் எப்படிப் போயிற்று என்ற என் புரிதலை விளக்கிப் பார்க்கிறேன்.

    ௧. பெரிய வெளிநாட்டு ரிடெய்ல் கம்பெனிகள் இந்தியாவில் நுழைவதை இந்தக் கட்டுரை எதிர்க்கிறது. பல சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று வாதிடுகிறது.
    ௨. பெரிய உள்நாட்டு ரிடெய்ல் கம்பெனிகளைப் பொறுத்த வரை உங்கள் (கட்டுரையாளர், தமிழ் ஹிந்து தளம், எஸ். குருமூர்த்தி, மற்றும் படிப்பவர்கள்) நிலை என்ன, அதையும் எதிர்க்கிறீர்களா என்று நான் கேட்டிருந்தேன்.
    ௩. “வால்மார்ட்டுக்கும் ரிலையன்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கில்லையா” என்று நீங்கள் உங்கள் எதிர்வாதத்தை ஆரம்பிக்கிறீர்கள். லிட்டரலாக இதுதான் உங்கள் முதல் வரி. இதைப் படிப்பவர்கள் நீங்கள் ரிலையன்ஸ் இந்த வியாபாரத்தில் நுழைவதை எதிர்க்கிறீர்கள் என்றா நினைப்பார்கள்?
    ௪. consistent ஆக வாதிட வேண்டும் இல்லையா? சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் வால்மார்ட்டால் பாதிக்கப்பட்டால் கத்துவோம், ரிலையன்சால் பாதிக்கப்பட்டால் அது இந்தியாவுக்கு “உள்ளே” போகிறது என்று பேசாமல் இருப்போம் என்று நீங்கள் சொன்னால் உங்கள் ஆட்சேபனை சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது இல்லை; இந்தியாவிலிருந்து பணம் வெளிநாட்டுக்குப் போவதற்குத்தான் இல்லையா?
    ௫. பணம் அம்பானி பாக்கெட்டுக்குப் போனால் சிறு வியாபாரிகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்பது என் கண்ணில் கேனத்தனமே. அது எந்த விதத்திலும் ஒரு mitigating circumstance கிடையாது.
    ௬. ஆனால் நீங்கள் நான் எப்போது அப்படி சொன்னேன் // நான் சிறு வியாபாரிகள் அழிந்து அம்பானி கொழுப்பதை ஆதரிக்கிறேன் என்று எங்காவது சொன்னேனா. // என்று இப்போது கேட்கிறீர்கள். எனக்கு என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. என்னைப் போன்ற மர மண்டைகளுக்கும் புரியும்படி தெளிவாகவே இன்னொரு முறை சொல்லிவிடுங்கள். நீங்கள் இந்திய, வெளிநாட்டு பெரு முதலாளிகள்+நிறுவனங்கள் சில்லறை வியாபாரத்தில் நுழைவதை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா?

    வாதங்கள் முட்டாள்தனமாக, கேனத்தனமாக, புத்திசாலித்தனமாக இருக்கின்றன என்பதற்கும் நீங்கள் முட்டாள், கேனையன், புத்திசாலி என்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. எப்பேர்ப்பட்ட அறிவாளியும் கேனத்தனமாக எப்போதாவது பேசித்தான் ஆக வேண்டும். ஸ்டாடிஸ்டிக்ஸ்! வீணாக டென்ஷன் ஆகாதீர்கள்.

    என் பார்வை சிறு வட்டத்தில் இருந்தால் அதற்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னரும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதற்கு பதில் அளிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பிவிட்டு முரண்பாடு நிறைந்த பதில் அளித்தால் நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

    நீங்கள் எழுதி இருக்கும் சில references புரியவில்லை – // நான் உப்பிலி இல்லை இது உங்கள் தளமும் இல்லை. // மற்றும் // பிரச்ஹ்கானையே நீங்கள் அதி புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டு விட்டோம் என்று நம்புவதால் தான. // உப்பிலி? பிரச்ஹ்கான்?

  32. //என்று இப்போது கேட்கிறீர்கள். எனக்கு என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. என்னைப் போன்ற மர மண்டைகளுக்கும் புரியும்படி தெளிவாகவே இன்னொரு முறை சொல்லிவிடுங்கள். நீங்கள் இந்திய, வெளிநாட்டு பெரு முதலாளிகள்+நிறுவனங்கள் சில்லறை வியாபாரத்தில் நுழைவதை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா//

    இதில் முதல் பாகத்திற்கு அர்த்தமே இல்லை – இந்திய பணக்காரர்கள் வருவதற்கு எந்த தடையும் இல்லை, தடை வரப் போவதும் இல்லை., அதை பற்றிப் பேசி பிரயோஜனமும் இல்லை.

    நீங்கள் என்னை கேனயன் என்று திட்டி இருந்தால் கூட நான் கவலை பட மாட்டேன்.நீங்கள் கருத்தை தான் சொன்னீர்கள் என்று புரிந்து கொண்டு தான் எழுதினேன்.

    பாக்கி விஷயங்கள் பற்றி நான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன். அதில் புதிதாக சேர்பதற்கு ஒன்றம் இல்லை.

  33. சாரங், உப்பிலி, பிரச்ஹ்கான் யாருங்க?

    // இந்திய பணக்காரர்கள் வருவதற்கு எந்த தடையும் இல்லை // மற்றும் // நான் சிறு வியாபாரிகள் அழிந்து அம்பானி கொழுப்பதை ஆதரிக்கிறேன் என்று எங்காவது சொன்னேனா. // உள்ள முரண்பாட்டைப் பற்றி ஏதாவது?

  34. ஆர் வீ

    //// இந்திய பணக்காரர்கள் வருவதற்கு எந்த தடையும் இல்லை // மற்றும் // நான் சிறு வியாபாரிகள் அழிந்து அம்பானி கொழுப்பதை ஆதரிக்கிறேன் என்று எங்காவது சொன்னேனா. // உள்ள முரண்பாட்டைப் பற்றி ஏதாவது?
    //

    இதில் எங்கே முரண்பாடு இருக்கிறது. இந்திய பணக்காரர்கள் வரைவதற்கு ஒரு பில் பாஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதனால் தடை இல்லை. அதே நேரம் அம்பானி கொழுத்து ஏழைகள் அழிவதை நான் விரும்புகிறேன் என்றும் சொல்ல வில்லை. இதில் எங்கே முரண்பாடு இருக்கிறது.

    வார்த்தைகளை இவ்வளவு நொண்டி நோன்கேடுக்கும் நீங்கள் யதார்த்தை அறிந்தவராக கவனிப்பவராக இருப்பதே இல்லை.

    உங்களது கூற்றுப்படி – மக்களுக்கு கொசுக்களை விட அப்சால் கசாப் மீது அதிக கோபம் இருக்கக் கூடாது
    சோனியா காந்தி இந்தியாவை ஆளும்போது சர்தாரியும் ஆளலாம்.
    காந்தியை சுட்ட கோட்சேயை உள்ளே போட்டார்கள் அவனை இந்தியா திட்டுகிறது. ஆனால் ஜானை போட்டுத்தள்ளின பகத் சிங்கை இந்தியா மெச்சுகிறது, கூடாது இல்ல
    தன்மான சிங்கம் ராமதாசும் ஜெயிலுக்கு போனார் பத்ராசல ராமதாசரும் ஜெயிலுக்கு போனார்
    ராமர் லங்கா வரைக்கும் போய் சண்ட போடலாம் ஆனா சீனா காரன் அருணாசல் பிரதேஷ் பக்கம் வந்தா திட்டறோம்.

    நாங்கெல்லாம் உங்களின் அகராதிப்படி கேனத்தனமாக பேசுபவர்கள் (கவனிக்க கேணயர்கள் என்று நான் பொருள் கொள்ள வில்லை. கேனத்தனமாக பேசுபவர்கள் என்று தான்).

    நான் சொல்லி நீங்கள் மேலே கொடுத்துள்ள இரண்டு முரண்பாடுகளையும் வாக்கியங்களையும் பெவிகோல் போட்டு ஓட்ட வேண்டும் என்று தான் எழுதினேன் ஓட்டினால் யதார்த்தம் உங்களுக்கு புரிய வரும். வெறும் ஜல்ப விஷயத்தை பிடித்துக் கொண்டு மேட்டரை விட்டுவிடுகிறீர்கள் என்று எனக்கு தோனுகிறது.

    உப்பில்லா உப்பிலி விஷயத்தை விடுங்கள். எனக்கு உங்களை பற்றி கொஞ்சம் தெரிந்ததால் எழுதினேன் அவ்வளவுதான். மற்றது எழுத்துபிழை.

  35. Congress pursued wrong economic policies right from the beginning.First total control police Raj.We lost good enterprenurs to the rest of the world. Now total liberty even at the cost of the country’s welfare,
    wherein ruthless MNCs will go to ruin the country for their own benefits. There will be no wonder if slowly the asministration of the country will be subject to these MNC giants

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *