சாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்

தமிழர்களின் நன்றி உணர்ச்சி அலாதியானது. பென்னி குக்குக்கு பொங்கல் வைக்கிறார்களாம். சாமியாக கொண்டாடுகிறார்களாம்.

ஆகா… எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை… எல்லாம் சரி…. சுதந்திர இந்தியாவில் மிக விரைவாக தமிழ்நாட்டுக்கு நீர்ப்பாசன வசதிகளை ஒருவர் உருவாக்கிக் கொடுத்தார்.

  • கோவை பகுதியில் 3000 ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்ய ஆரணியாற்றுத் திட்டம்… மழைக்காலங்களில் மலைப்பகுதிகளில் வரும் நீரைத் தேக்கி பாசன விவசாயம் செய்யும் திட்டம் இது.
  • ஏற்காடு மலைச்சரிவிலிருந்து வரும் நீரைத் தேக்கி 6500 ஏக்கர் நீர்ப் பாசனத்திற்கு உதவும் கிருஷ்ணகிரி பாசனத் திட்டம்.
  • திருநெல்வேலி பகுதியில் 2000 ஏக்கர் நீர்ப்பாசனத்துக்கு வழி வகை செய்த மணிமுத்தாறு பாசனத் திட்டம்.
  • கோவையில் 21,000 ஏக்கர் நிலப்பரப்பு பாசனவசதி பெற்றிடும் அமராவதி அணைத் திட்டம்.
  • மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றுப்பகுதியில் 13000 ஏக்கர் நிலத்திற்கும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 7000 ஏக்கர் நிலத்திற்கும் பாசன வசதி கிடைக்கும் வகையில் வைகை அணைத் திட்டம்.
  • 17,200 ஏக்கர் நிலப்பரப்பிற்கு பாசன வசதி செய்யும் விதத்தில் மேட்டூர் அணை மீள் சீரமைப்பு

இத்தனையும் தமிழ்நாட்டில் ஒரே அமைச்சரின் காலகட்டத்தில் நடந்தது என்றால் அதிசயமாக இருக்கிறதா? “சரிதான் நல்லா கமிசன் அடிச்சிருப்பாரையா அந்த ஆளு வேறென்ன” என்று திராவிட பாரம்பரியத்தில் பழகி வந்த தமிழ் மனது சொல்வது கேட்கிறது.

ஆனால் இத்தனையும் செய்த அந்த மகா மனிதர் இறுதியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறைந்தார். ஆனால் பென்னி குக் போல வெள்ளைத் தோலா இவருக்கு? இவரை சாமியாக நினைத்து பொங்கல் போட மனசு வருமா என்ன தமிழக சாதிய திராவிடர்களுக்கு?

இத்தனையும் செய்த இவர் சமுதாய மக்களை ஊருக்கு வெளியே ‘பீக்குளத்தில்’ தண்ணீர் எடுக்க செய்வதை ஊர் கட்டுப்பாடாக விதித்து வந்த தமிழ் பாரம்பரியமல்லவா நம்முடையது? அதை மீறி ஆதிக்க சாதியின் கத்திகளுக்கு முன்பாக தன்னையே பலியாக கொடுக்க முனைந்து, உரிமை மீட்பு போராட்டமும் நடத்தியவர்தான் அந்த தலைவர்.

சொல்லப்படுவது யார் குறித்து என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம். அண்ணல் கக்கன் தான் அந்த மகத்தான மனிதர். தமிழ்நாட்டின் நீர்பாசனத்துக்கு புத்துயிர் ஆக்கம் அளித்தவர். பென்னி குக்கை தூக்கிப் பிடிக்கும் சாதிய தமிழர்கள் அண்ணல் கக்கனை மறந்ததில் ஆச்சரியம் என்ன? தமிழனின் சாதிய திமிரில் இதெல்லாம் சகஜமப்பா!

[முனைவர் அம்பேத்கர்பிரியன் எழுதிய ‘மனிதப்புனிதர் கக்கன்’ முக்கியமான நூல். பக்கங்கள் 230, ஆண்டு 2010, வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்]

*********

ராசீவ் காந்தி என்கிற போபர்ஸ் புகழ் அயோக்கிய சிகாமணி சல்மான் ரஷ்டியின் நூலை தடை செய்தது நினைவிருக்கலாம். அந்த தடையை சிபாரிசு செய்தது குஷ்வந்த் சிங் என்கிற மற்றொரு புண்ணியாத்துமா. நூல்களை தடை செய்வதில் இந்த ஆபிரகாமிய மத வெறியர்களுக்கும் அவர்களின் காலணிகளை வாக்குவங்கிகளுக்காக நக்கி பிழைக்கும் அரசியல்வியாதிகளுக்கும் ஒரு அலாதி பிரியம் இருக்கிறது. ராசீவ் காந்தி போல இந்தியாவை ஆபத்துகளில் ஆழ்த்திய மற்றொரு பிரதமர் என்று சொன்னால் அது மன்மோகன் தான். இருவருமே சோனியா என்கிற இத்தாலிய தீய சக்தியால் இயக்கப்பட்டவர்கள்தாம்.

இருபது வருசங்களுக்கு முன்னர் உலக அளவில் மூன்று முக்கிய மானுட பேரழிவுகளை உருவாக்கிவிட்டு செத்து போன ராசீவ் என்ற இந்த அயோக்கிய சிகாமணி, தான் பிரதமராக இருந்த போது தன் சொந்த சுவிஸ் பேங்க் அக்கவுண்டுக்காக இந்திய ராணுவத்தின் பாதுகாப்புடனும் நற்பெயருடனும் விளையாடியதாக சொல்லப்படுகிறது. இப்போது இந்த அயோக்கிய ராசீவின் அடியொற்றி வந்த மன்மோகன் அரசும் இந்திய ராணுவத்தை அசிங்கப்படுத்துவதில் குறியாக உள்ளது. யாராவது இதை குறித்து ஒரு புத்தகம் எழுத வேண்டும். ‘இந்தியா வந்த இத்தாலிய நச்சு நங்கை சோனியா’ என்று புத்தக டைட்டில் வைக்கலாம்.

ஆனால், சல்மான் ரஷ்டிக்கு பிரிட்டனில் பாதுகாப்பு கிடைத்தது போல, அதை செய்பவருக்கு இந்தியாவில் மட்டுமல்ல, மற்ற நாடுகளில் கூட பாதுகாப்பெல்லாம் கிடைக்காது என்பது சர்வ நிச்சயம்.

இப்போது நச்சு நங்கையின் குடும்பமே இந்தியாவை சீரழிக்க களம் இறங்கிவிட்டது. இருந்தாலும் ‘இன்னா மாதிரி செக்கசெவேல்னு இருக்காக’ அப்படியென்று நம்மாள் ஓட்டு போட்டாலும் போட வாய்ப்பிருக்கிறது.

இந்த மாஃபியா கும்பலுக்கு ஓட்டு போட்டால் இவர்களால் இந்தியா சிதறிப் போகும். அதனால் நாளை உன் குழந்தைகள் சிந்த போகும் ரத்தம் இதைவிட செக்க செவேல்னு இருக்கும் என்று இந்தியர்களுக்கு யார் சொல்வது?

20 Replies to “சாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்”

  1. பாவம் சார் தமிழன், ஏதோ கொலவெறி பாட்டு வெற்றி அடைந்த சந்தோசத்தில் சன்
    டிவி பார்த்துக் கொண்டிருப்பவனைப் பார்த்து கக்கனை தெரியுமா என்றால் அவர்
    யார் தனுஷின் தாத்தாவா என்று கேட்கப் போகிறான். பெரியார் நடத்திய
    பள்ளியில் அண்ணாவின் போதனையில், கலைஞரின் வழிகாட்டுதலில், எம்ஜியாரின்
    அரவணைப்பில், அம்மாவின் அன்பில் வளர்ந்த கூட்டம், பாவம் அதற்கு ஒன்றும்
    தெரியாது 🙂

  2. கக்கன் சாமியைத் தமிழர்கள் வணங்க வேண்டும்.

    .

  3. வெளிநாட்டுகாரனின் முது கு சொரியற புத்தி போய் நம் நாடு பெரியவர்களை மதிக்கும் நிலை வரும்வரை இப்படித்தான் இருக்கும்.

  4. நாம் கக்கனை மறந்ததின் பலன் தான் இன்றைக்கு கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஆட்சி புரியக் காரணம். ஒவ்வொரு திட்டத்திலும் எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என்பதை அடிப்படையாய் வைத்து திட்டங்கள் தீட்டும் இவர்கள்தான் நமக்குக் கிடைப்பார்கள்.

    கருணாநிதி பற்றியெல்லாம் பாடத்திட்டத்தில் வைக்கும் அளவு தரம்கெட்ட இனம் நாம்.

    சோனியா பற்றி தெளிவாய் திரு சுப்ரமணியன் சுவாமி அவர்கள் அவரது ஜனதா கட்சி வலைத்தளத்தில் தெளிவாய் எழுதிவைத்துள்ளார். உண்மையிலேயே அது பொய்யாக இருக்கும் பட்சத்தில் சுப்ரமணியசாமியை விட்டு வைத்திருப்பார்களா?

    எவ்வளவு கேவலமான சரித்திரத்தை வைத்திருக்கும் சோனியாவின் காலைநக்கிப் பிழைக்கும் காங்கிரஸ் தலைவர்கள் என்ற பெயரில் உலவும் துரோகிகளை நினைத்தால் குமட்டல்தான் வருகிறது.

    இந்தியாவுக்கு மீண்டும் வாஜ்பாய் போன்ற தலைவர் கிடைக்கும் நாளுக்காய் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

  5. குளவி சொச்ச தமிழனைப் போல உணர்ச்சி வசப்படக்கூடாது. அரசு கை விரித்தபின் மூன்றாம் முயற்சியாக தன பொருட்செலவில் பென்னி குயிக் செய்தது. அதனால் சிறப்பு பெறுகிறது (பயன் பெறுவது வெள்ளைத் தோலல்ல) கக்கனுடனான ஒப்புமை தேவையற்றது. நன்றி கொள்ள வேண்டாம். தம் மக்களில் ஒருவருக்கு வாலேஸ்வரன் எனப் பெயரிட்ட வ உ சி வாழ்ந்த நாடு.

  6. கக்கன் பற்றி தெரிவித்ததுக்கு நன்றி, இதுவரை பள்ளி பாடங்களில் இவரை பற்றி வந்ததில்லை. சினிமாவில் இரண்டு அல்லது முன்று முறை அவர் பெயரை கேட்டது மட்டும் உண்டு.மகாத்மா கக்கனை பற்றி பாடநூலில் வர வேண்டும்.ரஜினி பற்றி CBSE புத்தகத்தில் உள்ளது, இது போன்று தேவையில்லாமல் இருக்கும் பாடங்களை ஒழித்து கக்கன், பாடத்தை சேர்க்க வேண்டும்

  7. Vivek,

    //குளவி சொச்ச தமிழனைப் போல உணர்ச்சி வசப்படக்கூடாது. அரசு கை விரித்தபின் மூன்றாம் முயற்சியாக தன பொருட்செலவில் பென்னி குயிக் செய்தது. //

    kuLavi is not asking to stop appreciating Benny Cook. kuLavi is questioning why these Tamilians are not worshipping Mananiya Kakkan ji who has done works that are bigger and better in number as well as in size and provide more benefits to the entire Tamilnadu.

    If Benny Cook is worshipped in a certain place of Tamilnadu for his contribution to that area, why not the entire Tamil nadu start worshipping Mananiya Kakkan ji whose contributions are helping the entire Tamil Nadu ?

    That is what this tiny wasp is asking. And this wasp is also answering.

    These people who worship Benny Cook belong the Backward Class quota. People of these quota group has gained more from the British government and always supported the British colonialism. These people supported the British exploitations also.

    This mentality of theirs make them worship Benny Cook but ignore noble people like Mananiya Kakkan ji.

    And, for these British slaves, Mananiya Kakkan ji is nothing but a foolish dalit, who died in a government hospital.

    And, see how these Backward Class quota group is ruling India and Tamilnadu. Can you imagine, a servant of Karunanidhi’s family going to a government hospital ?

    The Tamil Hindu wasp is questioning behaviour of the BC quota asps which are ready to worship the WASPs.

    .

  8. களிமிகு கணபதி,
    பூச்செல்லாம் வேண்டாம். குளவி தோல், நிற ஆராய்ச்சி எல்லாம் செய்கிறது.
    //ஆனால் பென்னி குக் போல வெள்ளைத் தோலா இவருக்கு?// இந்த ஒப்புமையை மேலும் எடுத்துச் செல்வது இவ்விருவருக்கும் பெருமை சேர்பதகாது என்பதை நினைவில் கொண்டு இங்கு நிறுத்துகிறேன்.

    மற்றொரு விஷயம்!
    முந்தைய ஆண்டுகளில் பென்னி குயிகிற்கும் இது போன்ற கொண்டாட்டங்களை ‘தமிழன்’ செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் அவர் புகைப்படத்தை கம்பம் பகுதிகளில் கண்டுள்ளேன்

  9. குளவி கொட்டின இடத்தில் இரத்தம் கட்டி வலிக்க வேண்டும். குளவி கொட்டினது பென்னி குய்க்கை மறப்பதற்கல்ல. கக்கன் அவர்களின் தொண்டைத் தியாகத்தை தமிழக்ம் மறந்து விட்டதைச் சுட்டிக் காட்ட. தமிழகத்தைப் பற்றி நினைத்த காங்கிரஸ்காரர் கக்கன். அதனால், சூனியாவழி, மக்குமோகன் வழித் தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரகள் கக்கனை மறந்தார்கள். இலவசங்களிலும் டாஸ்மச்கிலும் தமிழ்மக்கள் மயங்கியுள்ளார்கள். குள்வி கொட்டினாலாவது வலிக்குமா? சொரணை வருமா? என்று பார்ப்போம். குளவிகொட்டுதலை நான் வரவேற்கின்றேன்.

  10. கக்கன் சாமியைத் தமிழர்கள் வணங்க வேண்டும்.
    பல வருடம் போராடி , உயிரை கொடுத்து வாங்கிய சுதந்திரத்தை ஒரு இத்தாலிய பெண்ணிடம் அடகு வைத்துவிட்டு தாயே, அன்னையே என்று காலை நக்கிகொண்டிருக்கும் மானம் கேட்ட, வெக்கமே இல்லாத, அடிமை புத்தி கொண்ட , அயோக்கிய சிகாமணிகளுக்கு
    கக்கன் போன்ற மகாணை போற்ற வாய்வருமா?
    அவர் ஒரு இஸ்லாமியராக இருந்திருந்தால் அவரை பாராட்டி ஓட்டு வாங்கிருக்கலாம். இவரை பாராட்டி ஓட்டு வாங்கமுடியுமா ? இந்த வெக்கம் கெட்டவனுங்கலுக்குதான் மானமே இல்லையே !

  11. once upon a time congress had leaders like kamaraj, nellai jabamani, kakkan, Ma.Po.Chi ect who never have any inclination to make money but only national outlook. kamaraj made mistake in brining indra gandhi lineage and later he realised his mistake, Rajaji made a mistake in brining DMK and later he realised his mistake. Kakkan did great work and never was recoganised by any government fearing mannarkudi kumbal wrath and karunas fear on ‘Singham’ group and hence he encourage only ‘chiruthai’ to counter ‘singham’ for his political gain. if he had glorified kakkan and his sacrifices, the problem on communal clashes in this region could have been avoided and good hormony could have been maintained between both the groups in down south.

  12. //குளவி சொச்ச தமிழனைப் போல உணர்ச்சி வசப்படக்கூடாது. அரசு கை விரித்தபின் மூன்றாம் முயற்சியாக தன பொருட்செலவில் பென்னி குயிக் செய்தது. அதனால் சிறப்பு பெறுகிறது (பயன் பெறுவது வெள்ளைத் தோலல்ல) கக்கனுடனான ஒப்புமை தேவையற்றது. நன்றி கொள்ள வேண்டாம்//

    ராம்கி, குளவி கக்கனை நாம் மறந்து போனதை சற்றே வலிக்கும்படியாகச் சொல்கிறது. அதில் நீங்கள் உடன்பட வில்லையா? முல்லைப் பெரியார் அணையின் பயனை நமக்கு அளித்துக் கொண்டிருக்கிற வைகைத் திட்டத்தை நிறைவேற்றியவரைப் பற்றி இந்த 6 கோடி தமிழர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

    பென்னி குயிக்கின் நிறத்தைப் பற்றிச் சொன்னதை நன்றி கொன்றதாகச் சொல்லும் நீங்கள் கக்கனுக்கு நம் நினைவால் செலுத்த வேண்டிய நன்றியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

    கக்கனை மறந்துவிட்டு பென்னியை நாம் கொண்டாடுவதால் ஒப்புமை தேவைப்படுகிறதல்லவா?

  13. கிட்டத்தட்ட நான் தவிர்க்க நினைக்கும் சொல்லும் ஒப்புமை விவாதம் மீண்டும் கொணரப்படுகிறது. அதற்கு பதிலும் உள்ளீடாகக் கூறியுள்ளேன். மீட்டும் வினவோவோர் மேலம் மேலும் படிக்கவும்.
    நான் அதை “பொங்கலாக” எண்ணுகிறேன்.

  14. முல்லைப்பெரியார் அணை பிர்ச்சினைக்குள்ளானதால் பென்னி க்யுக் பற்றித் தெரியவந்து அவரைப் போற்றவேண்டிய நிலை வந்தது. வைகை அணையும் இப்படி ஒரு பிரச்சினையில் சிக்கித் தவிக்கும்போது, அதைக்கட்டியவர் யார் என்ற கேள்வியெழும். அதன் படி எல்லாம் நடக்கும்.

    அனாவசியமாக பென்னி க்யுக்கின் மீது க‌சடு வீசப்படுகிறது.

  15. Why you are dividing your own people. All religion came for peace of human being. But, you are killing the people in the name of religion. Think before act. Make this world for every human being. One world. One people.

  16. பெற்ற தாய்க்கு தன குழந்தை மேல் அக்கறை இருப்பது இயல்பானதே!ஆனால் ஒரு தாதிக்கு அதே அக்கறை இருப்பது இயல்பை மீறியது. மண்ணின் மைந்தரான அமரர்.கக்கன் அவர்களுக்கு இருந்த மக்கள் நல உணர்வு அன்னியரான பென்னிக்கும் இருந்தது போற்றத்தக்கதல்லவா?!அதை கொண்டாடுவதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அதே நேரம் இன்றைய தலைமுறைக்கு தெரியாத அண்ணல்.கக்கனின் நாட்டுப் பணிகளை தெரியப்படுத்தியதற்கு கட்டுரையாளருக்கு நன்றி.

  17. அண்ணல் கக்கன் நம்மவர், உத்தமர் அவரை நாம் ஒவ்வருவரும் கொண்டாடவேண்டியது மிக மிக அவசியமானது. நம் தலைவர் கக்கன் அவரது கடமை தான் செய்தார் என்பதே உண்மை. அவர் போற்றபடவேண்டிய தலைவர். ஆனால் பென்னிகுக் ஐரோப்பியர் அவருக்கு என்ன வந்தது நமக்கு அணை கட்டவேண்டும் என்று. ஆங்கில அரசாங்கத்தை மீறி அவருடைய சொத்துக்களை விற்று கட்டிய அணை முல்லைபெரியார் என்பதை நாம் மறக்ககூடாது. அதுவும் நம் ஆட்கள் இவ்வளவு நாட்கள் அந்த மாமனிதரை கொண்டாடினார்களா என்ன, கேரளா பிரச்சினை வந்த பிறகு தானே அவரை பற்றி சிந்தனையே வந்தது. நன்றி மறப்பது நன்றன்று வள்ளுவர் வாக்கு. நமக்கு நாளது செய்தது நம் எதிரியே ஆனாலும் நாம் தெய்வமாக வைத்து போற்றுவதே நம் பண்பாடு என்பதை மறக்க கூடாது. அதனால் ஒன்றும் தவறில்லை. இல்லற வாழ்க்கையை விட்டு துறவு பூண்ட போலி துறவி நித்யானந்தா போன்ற மதத்ரோகிகளை போற்றிகிரீர்கள் உங்களுக்கு புரியவில்லையா அந்த மதத்துரோகி செய்தது எவ்வளவு பெரிய அசிங்கம் என்று. ஆனால் திரு பென்னிகுக் வழிபாடு தவறு என்கிறீர்களே, மனம் வேதனையாக உள்ளது. நம் மக்கள் மாக்கள் என்பது தெரியாதா. மக்களாக இருந்தால் ஏன் ஜெயலலிதாவும் கருணாநிதியும் மாறி மாறி ஆட்சிக்கு வருகிறார்கள். இங்கே ரஜினி பற்றி நான் கூறியாக வேண்டும். அவரை பற்றி பாட புத்தகத்தில் போட்டது தவறா என்ன. அவரும் பல கஷ்டங்களை அனுபவித்து, இன்னல்கள், துன்பங்கள் கடந்து வந்த பாதை தானே அவரது பாதை. அவர் ஒரு திறந்த புத்தகம் என்பதை மறக்க க்கூடாது. லிங்கா படத்தில் லிங்கேஸ்வரன் தான் தான் பென்னிகுக் என்பதே உண்மை. அவர் ஒரு நடிகர் நடிப்பு அவர் தொழில். அவரா சொன்னார் தன்னை கொண்டாடவேண்டும் என்று. ரசிகர்கள் செய்யும் அதீத செயல் களுக்கு அவர் என்ன செய்வார். அவரும் உண்மையான ஆன்மீகவாதி என்பதை மறக்ககூடாது. .உண்மை இந்துக்களுக்கு உத்தம சீலர்களுக்கும் விழா எடுப்பதை கொச்சபடுதாதீர்கள். அது நம் கடமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *