அஞ்சலி: நாதஸ்வரக் கலைஞர் பொன்னுத் தாய்

தமிழகத்தின் முதல் பெண் நாதஸ்வரக் கலைஞர் எம்.எஸ். பொன்னுத்தாய் (வயது 87) செவ்வாய்க்கிழமை (17 ஜனவரி, 2011) காலமானார். மதுரை புதூர் கற்பக நகரில் உள்ள தனது இளையமகள் பாலசுந்தரி வீட்டில் அவர் வசித்து வந்தார். சில நாள்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர், முதுமையின் காரணமாக காலமானார்.

எம்.எஸ். பொன்னுத்தாயின் கணவர் விடுதலைப் போராட்ட வீரர் அ. சிதம்பர முதலியார். மறைந்த முன்னாள் முதல்வர்களான பக்தவச்சலம், காமராஜர் இருவருக்கும் நெருங்கியத் தோழராக விளங்கியவர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் பிறந்த பொன்னுத்தாய், திருமணத்துக்குப் பிறகு கணவருடன் மதுரையில் வசித்தார். இவரது தாய் பாப்பம்மாள் இசைக் கலைஞர் என்பதால், அவரது வழியில் நாதஸ்வரக் கலைஞராக பொன்னுத்தாய் புகழ்பெற்று விளங்கினார். கலைமாமணி, முத்தமிழ் பேரறிஞர் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களையும் பெற்றுள்ளார்.

அவரது மறைவுக்கு நமது கண்ணீர் அஞ்சலி.

(செய்தி உதவி: www.ithayakkani.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *