கோயில்களில் தரிசனக் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிராக ஓர் இயக்கம்

இந்து முன்னணி இயக்கத்தினரிடம் இருந்து நமக்கு வந்துள்ள செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்து முன்னணி இயக்கம் ஆரம்பம் ஆனதிலிருந்து கோவில்களைப் பாதுகாக்க முழு முயற்சியுடன் போராடி வருகிறது. போலி மதச்சார்பின்மை கொள்கையைக் கடைப்பிடிக்கும் மாநில அரசின் பிடியிலிருந்து ஆலயங்களை மீட்க வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமையாகும். இது பற்றிய விழிப்புணர்வு ஹிந்துக்கள் அனைவரிடத்திலும் ஏற்படுத்துவது தேவையான ஒன்றாகும்.

மாநில அரசுத் துறையின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் இந்துக் கோவில்களில் சாமி கும்பிடக் கட்டணம் வசூலிப்பது இந்துக் கோவில்களை அழிக்கும் செயலாகும். சாமி கும்பிடக் கட்டணம் வாங்குவதை எதிர்த்து ஹிந்துக்கள் அனைவரும் குரல் கொடுத்திட வேண்டும். போராட்டங்களிலும் ஈடுபடவேண்டும். இதற்காக இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பில் ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து வாங்குவது என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஆங்காங்கு கையெழுத்து வாங்குவது துவங்கியுள்ளது.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்த பட்சம் ஒரு லட்சம் கையெழுத்து வாங்கிடவேண்டும் என்கிற இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறோம்.

இதற்கான கையெழுத்துப் படிவம் ஒவ்வொரு மாவட்டத்திலும், அங்குள்ள ஒன்றியங்களிலும் உள்ள இந்து முன்னணி பொறுப்பாளர்களிடம் கிடைக்கும். இக்கையெழுத்து இயக்கத்தில் முனைப்புடன் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் சென்னை சிந்தாதிரிப் பேட்டை அய்யாமுதலித் தெருவில் இருக்கின்ற இந்து முன்னணி மாநில அலுவலகத்தை நேரடியாககத் தொடர்பு கொள்ளலாம். 94433-43436 என்ற அலைபேசி எண்ணிலும் அழைத்துப் பேசலாம்.

ஆன்மீக அமைப்புகள், பக்தர்கள் பேரவை மற்றும் தெய்வபக்தி கொண்ட அனைவரும் இந்த கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட முன்வரவேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுக்கிறது.

14 Replies to “கோயில்களில் தரிசனக் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிராக ஓர் இயக்கம்”

  1. அப்போ, இந்து கோயில்களை பராமரிப்பது எப்படி?
    ஹிந்து, முஸ்லிம் மற்றும் கிருத்தவர் கொடுத்த வரியிலிருந்தா?

  2. கோயிலின் சொத்துக்களே பராமரிப்பு செலவு விட அதிக வருமானம் தருகிறது திரு உதய்குமார் அவர்களே.

  3. எந்த வரியும் எங்களுக்கு தேவையில்லை. எங்கள் கோயில்களின் சொத்துகள் போதும் அதை வைத்து ஏழை ஹிந்துகளுக்கு மட்டும் அல்ல. இயற்கை விவசாயம் ஆயுர் வேதம் உள்ளிட்ட அனைத்து விசயங்களையும் நாங்களே செய்து கொள்வோம்.

    கிறித்துவ கயவர்களினால் உருவாக்கப்பட்ட போலி திராவிட தீவிரவாதிகளினால் உருவான இந்து சமய அறநிலை துறை என்ற கொள்ளை கூட்டத்தை வெளியேற்றி விட்டால் போதும்… எல்லா கோயில்களையும் நாங்களே பராமரித்து கொள்வோம்.

  4. நட்டத்தில் செல்கிறது என்றால் நிர்வாகத்தை அந்தந்த கிராம திருப்பணி குழுவில் விட்டு விடுங்கள் கோயில் சொத்து வருமானங்களையும் உபயதாரர் நன்கொடைகளையும் கொண்டு கோயில் இன்னும் சிறப்பாக செயல்படுத்தப்படும்.பெரிய சிறிய கோயில்களின் வருவாய் என்ன என்று தெரியுமா?
    நாம் ஒரு புடவை அம்மனுக்கு சாத்தினாள் அது உண்மையில் கோயிலை பொருத்தமட்டும் அவர்களுக்கான ஒரு செலவை நாம் ஏற்கிறோம், ஆனால் அதற்கு நாம் ஒரு கட்டணத்தை கட்டாயமாக அறநிலைய துறைக்கு கொடுத்தாக வேண்டும்.
    கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே இடைத்தரகராக நின்று பணம் கட்டாய வசூல் செய்வது அராஜக நிலை துறைதான்.
    சூரியனார் கோயில் திருமணஞ்சேரி சமயபுரம் ஆலங்குடி போன்ற ஊர்களுக்கு நுழைந்தாலே போதும் நீங்கள் கோயிலுக்கு போக வேண்டாம் ஊரில் யாரையாவது பார்க்க போனால் கூட உங்களிடம் வசூல் செய்து தான் ஊருக்குள் விடுவார்கள்

  5. தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக போன்ற மாநிலங்கள் 85 % வருமானத்தை தாங்களே எடுத்துக்கொண்டு கோவில்களுக்கு கொடுப்பதோ சொற்பம்.

    அரசு ஆலயத்தை விட்டு வெளியேறினாலே கோவில்கள் வளம்பட்டுவிடும்

    கோவில்களின் பணம்தான் இலவசம்களால் வீணாகிறது

  6. நம்ம ஊர் கோவில் வருமானத்தை ஊரில் உள்ள வயது பிள்ளைகளிடம் கொடுத்தால் கோவில் நல்லது ஆனால் அரசு நினைக்குமா? சிறுபான்மையினர் என்றல் அரசு நினைக்கும் நாம் அதிகபடியாக உள்ளதால் நாம் ஒன்றாக செயல்பட மாட்டோம் என்ற எண்ணம் தான். அதை முறியடித்து காட்டுவோம் . அம்மா அரசு நல்லது செய்யும் என்று நம்புவோம்

  7. இந்த கையெழுத்து இயக்கம் ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

  8. There was an attempt to charge entrance to the Guruvayoor temple like they do in Tirupati etc. But the public outcry was immense that they had to abandon it. No fee should be charged for entry into the temple for worshiping the god. They may charge for various vazhipaadus. The income of the temple runs into crores of rupees every month. They can run all other temples which do not have any income at all. But if the govt. hands over the temples to hindus the temples can be maintained with minimum cost. Let them do it.

  9. “கிறித்துவ கயவர்களினால் உருவாக்கப்பட்ட போலி திராவிட தீவிரவாதிகளினால் உருவான இந்து சமய அறநிலை துறை என்ற கொள்ளை கூட்டத்தை வெளியேற்றி விட்டால் போதும்”
    ஏன்? இந்த துறையில் இந்துக்களே பணியில் இல்லையா? இருக்கிறார்கள்… ஆனால் அவர்களே ஏப்பம் விடும் பொழுது?
    இன்னொன்று… திராவிட கொள்கைகள் வேண்டுமானால் உங்களுக்கு எதிராக இருக்கலாம். அதற்காக கயவர்கள் என்று கூற வேண்டாம். நானும் ஒரு இந்து, கயவந்தான் உங்கள் மொழியில் …

  10. சவ்ரவ்,

    நான் சொன்னது கோயில்களை கொள்ளை அடித்து கொண்டு இருக்கும் அறநிலை துறை கயவர்களை மட்டுமே!!!

  11. மன அமைதி விரும்பியே நாம் கோவிலுக்கு செல்கிறோம் ,பணம் ரீதியான ஏற்றத்தாழ்வு மேலும் பழனி போன்ற பெரிய கோவில்களை சுற்றி திரியும் ஏமாற்று பேர்வழிகள் போன்றவற்றினால் கோவிலுக்கு செல்லும் விருப்பமே அகலுகிறது , கேரளத்தில் இன்றும் கோவில் மற்றும் அதன் புறசூழல் இனிய அனுபவம்தான். நான் நேரில் பார்த்த சம்பவம் இது கும்பகோணம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் அலங்காரம் முடிந்து திரை விலக்கும் சமயம் பக்தியுடன் வேண்டி கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அலைபேசியை திருடிவிட்டார்கள் இது அடிக்கடி நடக்கும் சம்பவம் என்று அங்கு பேசி கொண்டார்கள் .
    நாம் தூங்குவதை நிறுத்த வேண்டும் ,நம் நிலத்தினை ஒரு அங்குலம் இன்னொருவர் அபகரிக்க முயலும் பொது எப்படி செயல் படுகிறோம் ,கோவில் நம் அனைவரின் பொக்கிஷம் அதற்கு சேதம் வரும் போதோ கோவிலினில் அபத்தம் நிகழும் போதோ வேடிக்கை பார்ப்பது நம்மையே அழிப்பது போன்றதுதான்

  12. மிகபெரிய செயலில் இறங்கி உள்ளார்கள் இந்து முன்னணியினர். இதே சமயம் இந்து சமய அரநிலயதுரை வசம் போன பின் எதனை கோவில் சொத்துக்கள் குறைந்துள்ளன என்றும் அவை இல்லாமல் நிர்வாகம் செய்ய முடியுமா என்பதையும் யோசிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *