ஈரோடு விஜயமங்கலம் கோவில்: அறநிலையத்துறை & திருப்பணி கொடுமைகள்

உலகம் இயங்க எப்படி ஒரு புவியீர்ப்பு சக்தி தேவைப்படுகிறதோ,(அப்படி) ஒரு நாடு ஒற்றுமையாக இயங்கவும் ஒரு ஈர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. இந்த ஈர்ப்பு சக்தியை ஒரு நாட்டின் சட்ட திட்டங்களோ அல்லது அரசியல் சித்தாந்தங்களோ  வழங்க  இயலாது. அந்த நாட்டில் வாழ்ந்த முன்னோர்களால் அவர்களது அனுபவத்தை / வரலாற்றை அடிப்படையாக வைத்துக்  கட்டமைத்த கலாச்சாரப் பண்பாடுகளே அந்த நாட்டை ஒற்றுமைப்படுத்தும் ஈர்ப்பு சக்தியாக இருந்து அந்த நாட்டையும் அதன் நாட்டு மக்களையும் பாதுகாக்கிறது.

இந்த ஈர்ப்பு சக்தியின் வீச்சு எங்கெல்லாம் குறைகிறதோ அந்தப் பகுதிகள் எல்லாம் சிதறிவிடுகின்றன. சில நேரங்களில் அது அழிந்தும் போகின்றன இதற்கு இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், கொரியா, ஸ்ரீலங்கா என பல்வேறு உதாரணங்களைச் சொல்லாம்.

நமது பாரத நாட்டில் உள்ள நமது கோயில்களும் அதனை ஒட்டிய கலாச்சாரங்களும் பண்பாட்டுச் சின்னங்களும் அதனை அடிப்படையாக வைத்துள்ள வரலாற்றுச் சம்பவங்களே நமது கலாச்சார ஈர்ப்பு சக்தியாக இருந்து நமது நாட்டை ஒற்றுமையாக இயக்கி கொண்டு இருக்கிறது. இத்தனை மொழிகளும் இத்தனை சாதிகளும் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தும் இந்த நாடு ஒற்றுமையாக இருப்பதற்கு, ”வேற்றுமையில் ஒற்றுமை” “ எல்லா மதமும் ஒன்று”  என்று வாய் கூசாமல் பொய் பேசும் அரசியல்வாதிகளல்ல காரணம். வேறுபாட்டையே அடிப்படையாக வைத்து ஒற்றுமைப்படுத்தும் ஹிந்துத்துவத்தாலேயே இது சாத்தியமானது.

இதை நாம் உணர்ந்தோமோ இல்லையோ, நம்மை அழிக்க ஐரோப்பாவில் இருந்து வந்த கிறித்துவர்கள் நன்கு அறிந்து இருந்தார்கள். அதன் காரணமாகவே அவர்களால் நமது கோயில்கள், நமது உண்மையான வரலாற்றிக்கு ஆதாரமாக விளங்கும் கல்வெட்டுச் சாசனங்கள், பண்பாட்டுச் சின்னங்கள் இவற்றின் அழிப்பும் , அதனை அடிப்படையாக வைத்து  வரலாற்றை அழித்தல் மற்றும் திரித்தல் போன்ற செயல்களும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நடந்து வருகின்றன. பல இலட்சக் கணக்கான பாரத மக்கள் தங்களது மாசற்ற தியாகத்தாலும் வீரத்தாலும் நமது நாட்டை அழிக்க வந்த ஐரோப்பியக் கிறித்துவர்களை விரட்டி அடித்தனர்.

ஐரோப்பிய கிறித்துவர்கள் விரட்டி அடிக்கப்பட்டாலும் அவர்களால் உருவாக்கப்பட்ட கம்யூனிஸம், திராவிடம் , போலி செக்யூலரிசம் போன்ற அரசியல் சித்தாந்தங்களும் அவற்றை அடிப்படையாக வைத்து உருவான அரசியல் கட்சிகளும் தொடர்ந்து அவர்கள் பணியை செய்து கொண்டு இருக்கின்றன.

சிறந்த நிர்வாகம் மற்றும் வேலைப்பளு என்ற பெயரில் தனியாருக்கு நமது வளங்களைத் தாரைவார்க்கும் இத்தகைய அரசாங்கங்கள் அவையே சிறந்த நிர்வாகம் என்று சொல்லி அறநிலையத்  துறை என்ற பெயரில் ஹிந்துக்களுக்குச் சொந்தமான கோயில்களை நிர்வகிக்க எடுப்பது நகைப்புக்குரிய விஷயம். இவர்களின் நிர்வாகச் சீர் கேடுகளாலும் கிறித்துவ, திராவிடர்களுடன் இணைந்து  செய்த திட்டமிட்ட தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்ட நமது கலாச்சார ஈர்ப்பு சக்தி மையங்களான கோயில்கள் மற்றும் கல்வெட்டுகள் ஏராளம். தஞ்சைப்  பெரிய கோயில் கூட இவர்களின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை என்பது வேதனையான விஷயம். கும்பாபிஷேகம் என்ற பெயரில் பல ஆயிரம் கோயில்களில் இது போன்ற விஷயங்கள் இன்றும் நடந்து வருகின்றன..

இவ்வாறு அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் கோயில்களில் ஒன்று தான் விஜயபுரி கோவர்த்தனாம்பிகை உடனமர் நாகேஸ்வரர்  திருக்கோயில். ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் உள்ள பல ஆயிரம் வருடப் பழமையான இந்தத் திருத்தலம் மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜீனன் மூலம் எழுப்பப்பட்டு, அவருக்குப் பிறகு பல மன்னர்களால் பாரம்பரியம் குறையாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

பாண்டவர்களின் வனவாசத்தில் கடைசி பதிமூன்றாம் வருடத்தில் அன்யாத வாசத்தின் பொழுது அனைவரும் மறைந்து இருத்து வாழ வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாகத் தற்பொழுது தாராபுரம் என்று அழைக்கப்படும் விராடபுரத்திற்கு வந்தனர்.

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான விஜயன் இந்த திருத்தலத்தின் அருகில் உள்ள விஜயாபுரி அம்மன் என்று தற்பொழுது அழைக்கப்படும் அம்மனின் ஆலயத்தின் வன்னி மரத்தில் தான் தனது காண்டீபம் மற்றும் பல ஆயுதங்களையும் மறைத்து வைத்து, கோயிலில் திருநங்கையாக மாறி தாராபுரம் என்று அழைக்கப்படும் விராட தேசத்தில் மறைந்து இருந்தார். அன்யாத வாசத்தின் கடைசியில் துரியோதனன் உடன் நடந்த போரில் (விஜயன்) வெற்றி பெற்றான்.

தான் பெற்ற வெற்றிக்காக அந்த தலத்தில் எழுந்தருளி இருந்த நாகேஸ்வரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மக்களுக்குப் பயன் தரும் வகையிலும் இந்த நாகேஸ்வரர் திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்து விஜயபுரி என்று அழைக்கப்படும் விஜயமங்கலம் என்ற ஊரையும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நிர்மாணித்தான். விஜயன் நிர்மாணித்ததன் காரணமாக இந்த இடம் விஜயபுரி என்றும் விஜயமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.

கொங்கு தேசத்தில் உள்ள 43 சிவ ஆலயங்களில் மேற்கு நோக்கிய உள்ள சிவாலயம் என்பது இதன் தனிச் சிறப்பு. இந்தக் கோயிலில் நாகங்கள் வந்து பூஜை செய்ததால் சிவபெருமானுக்கு நாகேஸ்வரர் என்ற திருப்பெயர் அமைந்தது. இது பற்றிய கல்வெட்டும் இந்தக் கோயிலிலேயே உள்ளது. இது சம்மந்தமான ஒரு சிலையும் இந்தத் திருக்கோயிலில் உள்ளது. இந்தத் திருத்தலத்தில் எழுத்தருளியுள்ள அன்னையின் பெயர் கோவர்தனாம்பிகை. அன்னைக்குக் கோயில் பிராகரத்திற்கு உள்ளேயே தெற்கு பகுதியில் தனி சன்னதி உள்ளது. அன்னையும் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மட்டும் இன்றி மற்றும் ஓர் சிறப்பும் இந்தத் திருத்தலத்திற்கு உண்டு. பொதுவாக ஒரு கோயிலில் சில கல்வெட்டுக்களைக் கண்டு இருப்போம். ஆனால் ஒரு கோயிலே கல்வெட்டாக இருப்பது இந்தத் திருத்தலத்தில் மட்டும் தான். கோயிலில் பார்க்கும் இடம் எல்லாம் கல்வெட்டுகள் உள்ளன. இந்த கோயிலின் அர்த மண்டபம், மகா மண்டபம், மகா மண்டபத்தின் முன் பகுதி என கோயில் முழுவதும் கல்வெட்டு பொக்கிஷங்கள் உள்ளன.

இது போன்ற ஒரு கோயிலை திருமுருகப் பூண்டியில் மட்டுமே காண இயலும். அதாவது தமிழ் நாட்டிலேயே இது போன்ற கோயில்கள் இரண்டு மட்டும் தான் உள்ளன. இதில் திருமுருகப் பூண்டிகோவில்  மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளது. இப்பொழுது சென்றாலும் அங்கு பாதுக்காக்கப்பட்டு உள்ள கல்வெட்டுகளைக் காணலாம். (ஏன் திராவிட அரசியல்வாதிகள் தொல்லியல் துறையின் கீழ் கோயில் வரக்கூடாது என்று சொல்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். தொல்லியல் துறைக்கும் அறநிலையத் துறைக்கும் உள்ள வேறுபாடும்,  அதிமுகவுக்கும்    , திமுகவுக்கும் உள்ள வேறுபாடும் ஒன்று)

இந்த கோயிலில் மட்டுமே  36 வரலாற்று விஷயங்களைச் சொல்லும் தனிப்பட்ட 36 கல்வெட்டுகள்  உள்ளன. 1000 வருட பழமையான கல்வெட்டுகள் கூட இந்தக் கோயிலில் உள்ளன. இதை பற்றிய விவரங்கள் சிலவற்றைக் கீழே உள்ள சுட்டியில் காணலாம்.

இத்தகைய சிறப்புகள் பல கொண்ட இந்தத் திருக்கோயில் தற்பொழுது ஹிந்து சமய அறநிலையத் துறை முறைகேடுகளினால் சீரழிந்து கொண்டு இருக்கிறது. இவ்வளவு பழமையான திருக்கோயிலின் தற்போதைய நுழைவாயில் மண்டபமும் அதன் மீது இருந்த சிறு கோபுரம் மற்றும் அதன் சிலைகளும் தற்பொழுது முழுமையாக உடைக்கப்பட்டு விட்டன. இதைப் பற்றிய படங்கள் கீழே உள்ளன. எத்தனை கோடிகள் செலவு செய்தாலும் தற்பொழுது உருவாக்க முடியாத அழகான மண்டபங்களை இடிக்க இவர்களுக்கு அனுமதி வழங்கியது யார் என்று எனக்கு புரியவில்லை. அவ்வளவு ஏன் இந்து சமய அறநிலையத் துறைச் சட்டப் புத்தகத்தில் கூட இது போன்ற ஒரு அதிகாரம் இவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இவ்வாறு இடிக்கப்பட்ட இடத்தில் தற்பொழுது ஐந்து நிலை இராஜ கோபுரம் கட்டப்பட உள்ளது. ( நமது முகவை போல தமிழ் உணர்வு கொண்ட ஒரு ஓதுவார்!! மூலம் இந்த திருப்பணி நடைபெறுவதாகக் கேள்வி). இதற்கு எல்லாம் பணம் அதாவது திருப்பணி காண்ட்ரேட்க்கு!! பணம் யார் தருகிறார்கள். எந்த கோயிலின் உண்டியலில் இருந்து எடுக்கப்படுகிறது என்பவை எல்லாம் மர்மமாகவே உள்ளன.

இராஜ கோபுரம் என்பதற்கு ஆலய ஆகமத்தில் அதிக முக்கியதுவம் கொடுக்கப்படவில்லை. மிகப் பெரிய இராஜ கோபுரங்கள் கோயில்களை மிலேச்சர்களிடன் இருந்து காப்பாற்ற, யானை முதலிய விலங்குகளைக் கொண்டு கோயில் தாக்கப்படும் பொழுது கொதிக்கும் எண்ணையை ஊற்றி கோயிலையும் மக்களையும் பாதுகாக்க மன்னர்களால் இடைக்காலத்தில் அதாவது பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. இராஜ ராஜன், கிருஷ்ண தேவராயர் போன்ற மாமன்னர்கள் தங்கள் தேசத்தின் குல தெய்வங்களுக்காகக் கட்டிய கோயில்களைத் தவிர மற்ற எல்லாக் கோயில்களிலும் கோயில் முன்வாசல் சிறு கோபுரங்கள் மற்றும் மண்டபங்களுடன் மட்டுமே காட்சி அளித்தன.

கோயில்களில் மிக முக்கியமாக இருக்க வேண்டியது நல்ல இயற்கைச் சூழலும் வேத ஆகமங்களும், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடிய பாடல்களும் தான். ஆனால் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்து சமய அறநிலையத் துறை இது போன்ற தேவையற்ற / கலாச்சார சீர்கேடுகளை கோயில் திருப்பணி என்ற பெயரில் செய்வதன் காரணம் ஏன் என்பது குறைந்த பட்சப் பொது அறிவு உள்ள மக்கள் கூட புரிந்து கொள்ளக்கூடிய விஷயமே.

இந்த அழிப்பு இப்பொழுது தொடங்கிய விசயம் அல்ல. கடந்த 1994 ஆம் ஆண்டே ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. இவர்கள் கும்பாபிஷேகம் என்ற பெயரில் நடத்திய கூத்தில் பல கல்வெட்டுக்களும் அரிய சிற்பங்களும் நாசமாக்கப்பட்டன. இவர்கள் நடத்திய கும்பாபிஷேகத்தின் இலட்சணம் என்ன என்பதை 1994 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் ஞாபகமாக இவர்கள் வைத்த ஒரு கல்வெட்டை வைத்தே தெரிந்து கொள்ளலாம். ஆயிரம் வருடம் பழமையான கல்வெட்டுகளின் மீது கொஞ்சம் கூட வரலாற்று அறிவே இல்லாத அரசு அதிகாரிகள் எதோ பெரிய சமயப் பணி செய்தது போல காட்டி கொள்ள தங்கள் பெயர்களை எழுதி ஒரு கல்வெட்டைப் பதித்து உள்ளனர். இது சம்மந்தமான படம் மேலே கொடுக்கப்பட்டு உள்ளது.

இது மட்டும் இன்றிப் பல இடங்களில் டைல்ஸ்(Tiles) ஒட்டிக் கோயிலின் பாரம்பரியத்தை அழித்து உள்ளனர். அது மட்டுமா? பல சிற்பங்கள் குப்பைகளாக கோயில் மதில் சுவர் ஓரங்களில் போடப்பட்டு உள்ளன.

இவ்வாறு 1994 ஆம் ஆண்டு இவர்கள் செய்த கும்பாபிஷேகத்திலேயே 30 சதவிகித புராதனம் அழிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்பொழுது புனர் நிர்மாணம் என்ற பெயரில் கோயிலை 100 சதம் அழித்து ஜவுளிக் கடை போல மாற்ற முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

பல மில்லியன் பணத்தை கோயில் மூலம் பெற்ற இந்து சமய அறநிலையத் துறை என்ற மதச்சார்ப்பு அற்ற அரசாங்க நிறுவனம் இந்தப் பழமையான கோயில்களுக்கு எந்தப் பராமரிப்புச் செலவும் செய்யவில்லை என்பதை இங்கு இணைக்கப்பட்டுள்ள படங்களே சாட்சி.

திருப்பணி என்ற பெயரில் இவர்கள் செய்யத் தொடங்கியுள்ள திருட்டுப்பணி இத்துடன் நிற்கப் போவது இல்லை. இந்தக் கோயிலைப் பற்றி விசாரிக்கும் பொழுது அதிர்ச்சி அளிக்கக் கூடிய மற்றொரு தகவலும் கிடைத்தது. அங்கு இராஜ கோபுர வேலைகளைச் செய்து கொண்டு இருந்தவரிடம் கோயில் திருப்பணி பற்றிப் பேசிய பொழுது பல அதிர்ச்சி அளிக்கும்விஷயங்களையும் சொன்னார்.

கோயில் முழுவதும் டைல்ஸ் ஒட்டப் போவதாகவும், கோயிலைச் சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் “SAND BLASTING” என்ற 2002 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட தொழில் நுட்பத்தின் மூலம் கோயிலை நாசம் செய்யப் போகிறார்கள் என்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தியையும் அளித்தார். என்னுடைய அனுபவத்தில் இவர்கள் இத்தோடு நிற்கப் போவது இல்லை. ஆகம விதிகளுக்கு புறம்பாக பல சன்னதிகளையும், பரிகார ஸ்தலமாக மாற்ற பல்வேறு புதிய மண்டபங்களையும் புதிய தெய்வங்களையும் அமைத்து கோயிலை வியாபாரத் தலமாக மாற்றப் போகின்றனர், நாகேஸ்வரர் என்ற திருப்பெயர் உள்ளதால் இதை ராகு கேது பரிகாரத் தலமாக மாற்றக் கூட இவர்கள் திட்டமிட்டு இருக்கலாம். அப்பொழுது தானே அந்த இடத்தைச் சுற்றி உள்ள இடங்களின் நில மதிப்பு உயரும். அதை வைத்து கழகக் கண்மணிகள் தொழில் செய்ய முடியும்.

இவர்களின் இத்தகையத் திருப்பணிகளின் முடிவில் ஒட்டு மொத்தக் கோயில் பழமையும் மாற்றப்பட்டு அதன் வரலாறு முற்றிலுமாக அழிக்கப்படும். அடுத்த சந்ததியினரிடம் இந்தக் கோயில் பல்லாயிரம் வருடம் பழமையானது என்று நாம் சொன்னால் நம்மைக் கண்டு நகைப்பர்.

 இப்பொழுதும் கெட்டுவிட வில்லை மீதம் உள்ள 50 சதவிகிதக் கோயிலையாவது பாதுகாக்க நம்மால் முடியும்.

இந்த கோயிலில் தற்பொழுது நடைபெற்று வரும் புராதன அழிப்பை நிறுத்தவதோடு மட்டும் அல்லாமல் பழைய படி உடைக்கப்பட்ட மண்டபத்தை அதே கற்களை வைத்து அமைக்க வேண்டும் என்றும்,

கோயிலில் டைல்ஸ் போன்ற பொருட்களையோ அல்லது “sand blasting” போன்ற கோயிலை அழிக்கும் தொழில் நுட்பத்தையோ பயன்படுத்த கூடாது என்றும் இந்து சமய அறநிலையத் துறைக்குப் புகார் தெரிவிக்கலாம்.

அது மட்டும் இன்றி ஐந்து அடுக்கு இராஜ கோபுரம் போன்ற தேவையற்ற விஷயங்களில் பல இலட்சம் செலவு செய்வதற்குப் பதிலாக வேத ஆகமங்கள், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லலாம்.

அது மட்டும் இன்றி இதைத் தடுக்க இந்தக் கட்டுரையை ஆவணமாகக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். அந்தப் பகுதியில் இருக்கும் ஹிந்து இயக்கங்களுக்கு இதை பற்றிய விஷயத்தைச் சொல்லி அவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.

விஜயமங்கலம் கோயில் சிதைவுகள் குறித்த மேலதிக புகைப்படங்களை இங்கே காணலாம்.

மேலும் இதைப் பற்றிய செய்தியைப் பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சி நிலையங்களுக்கும் கொடுக்கலாம் (பின்குறிப்பு: நசியனூர் கோயில் திருட்டு பற்றி பல செய்திதாள்களைத் தொடர்பு கொண்டு சொல்லியும், அதைப் பற்றிய செய்தியை வெளியிட முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஏன் என்பது புரியவில்லை. நித்தியானந்தா என்ற கார்பரேட் சாமியாரை பற்றிப் பக்கம் பக்கமாக எழுதிய பேப்பர் புலிகள் இதைப் பற்றி எழுதச் சொல்லும் பொழுது மட்டும் பூனையாக மாறியதன் காரணம் புரியவில்லை)

 

சில பத்திரிகைத் துறையினரின் மின்னஞ்சல் முகவரிகள்:

The Hindu: letters@thehindu.co.in
புதிய தலைமுறை: news@gennowmedia.com
New Indian Express: writetous@newindianexpress.com
Dinamalar: dmrcbe@dinamalar.in
Dina thanthi: managerms@dt.co.in

 

இந்தக் கோயில் ஈரோடு மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையின் துணை ஆணையர் கண்காணிப்புக்குக் கீழ் உள்ளது. இந்தக் கோயில் நாகேஸ்வரர், சோமேஸ்வரர் கரியபெருமாள் வகையரா கோயில் என்று பல கோயில்களுடன் இணைக்கப்பட்டு, ம யுவராஜா என்ற நிர்வாக அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இதைப் பற்றிய படமும் இத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.

புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகள் பற்றிய விவரங்கள்:

கோயிலின் நிர்வாக அதிகாரி:

மா யுவராஜ்

அருள்மிகு நாகேஸ்வர சோமேஸ்வர கரியபெருமாள் வகையரா திருக்கோயில்,

விஜயமங்கலம், பெருந்துறை வட்டம், ஈரோடு –

தொலைபேசி எண்: 9659042461

 

கோயில் நிர்வாகத்தின் தலைமை அலுவலரும், துணை ஆணையரும்

பெ தனபாலன்,

துணை ஆணையர் அலுவலகம்,

இந்து சமய அறநிலையத் துறை, ஈரோடு

தொலைபேசி எண்: 0424-51537

The Secretary, Tamil Development, Religious Endowments and Information Department,
Email: tamilreinfosec@tn.gov.in, Ph: +91-44-25672887, Fax: +91-44-25672021

இந்தியாவின் கலாச்சாரச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பில் இருக்கும் இந்திய அரசாங்கத்தின் தொல்லியல் துறை அதிகாரியின் விவரங்கள்:

Janhwij Sharma, Director (Conservation), ASI (Delhi)
Email ID: dircon.asi@gmail.com Ph: +91-11-23013316,

Sh. S.V. Venkateshaiah, Regional Director South Zone (Bangalore)
Email ID: rdsouth.asi@gmail.com Ph : +91 9449571424,

The commissioner, Department of Archaeology,
Email ID: tnarch@tn.nic.in, Ph: 044-28190023, FAX: 28190023

இந்த அதிகாரிகளை நீங்கள் தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம்.

இது தொடர்பாக நீங்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் நிர்வாக அதிகாரி (Asst public information officer) மற்றும் துணை ஆணையருக்கு (public information officer) க்கு இது குறித்த தகவல் வேண்டி விண்ணப்பம் செய்யலாம்.

 சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தக் கோயிலை மீட்கவும் அதன் பழமையைப் பாதுகாக்கவும் ஹிந்துகள் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கோயிலைப் பற்றிய தகவல்களையும் அதன் படங்களையும் மின்னஞ்சல் செய்த நல் உள்ளம் கொண்ட ஹிந்து சகோதரர்க்கும் எனது நன்றிகள். ஆயிரம் வருட பழமையான கோதண்ட ராமர் கோயிலில் நடந்த கோயில் சிதைவை தனது பத்திரிக்கையில் (கம்யூனிஸ சார்பு உள்ள பத்திரிக்கையாக இருந்தும்) செய்தி வெளியிட்ட “THE HINDU” பத்திரிக்கைக்கு எனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

15 Replies to “ஈரோடு விஜயமங்கலம் கோவில்: அறநிலையத்துறை & திருப்பணி கொடுமைகள்”

  1. படிக்க படிக்க மனம் குமுறுகின்றது.
    நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இது போன்றவற்றை தடுக்க வேண்டும்.
    கோமதி செட்டி அவர்களுக்கு நன்றி.

    சோமசுந்தரம்

  2. திரு கோமதி செட்டி. நீங்கள் ஏன் ஒரு பொது நல வழக்கு தொடரக் கூடாது? ஒரு ஆன் லைன் மனு கொடுங்கள். நாங்கள் எல்லாரும் கை எழுத்து போடுகிறோம். உங்கள் முகவரிக்கு வழக்குச் செலவுக்கு எங்களால் ஆன பணமும் தருகிறோம்.

  3. Why is the Government interfering in Hindu affairs only? Muslims have their own Wakf Boards.The christians are the richest landowners in the nation and they have their own organisations looking after worship.

    We must see that the Government has least to do with our places of worship

  4. //கோயில் முழுவதும் டைல்ஸ் ஒட்டப் போவதாகவும், கோயிலைச் சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் “SAND BLASTING” என்ற 2002 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட தொழில் நுட்பத்தின் மூலம் கோயிலை நாசம் செய்யப் போகிறார்கள் என்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தியையும் அளித்தார். என்னுடைய அனுபவத்தில் இவர்கள் இத்தோடு நிற்கப் போவது இல்லை. ஆகம விதிகளுக்கு புறம்பாக பல சன்னதிகளையும், பரிகார ஸ்தலமாக மாற்ற பல்வேறு புதிய மண்டபங்களையும் புதிய தெய்வங்களையும் அமைத்து கோயிலை வியாபாரத் தலமாக மாற்றப் போகின்றனர், நாகேஸ்வரர் என்ற திருப்பெயர் உள்ளதால் இதை ராகு கேது பரிகாரத் தலமாக மாற்றக் கூட இவர்கள் திட்டமிட்டு இருக்கலாம். அப்பொழுது தானே அந்த இடத்தைச் சுற்றி உள்ள இடங்களின் நில மதிப்பு உயரும். அதை வைத்து கழகக் கண்மணிகள் தொழில் செய்ய முடியும்.

    இவர்களின் இத்தகையத் திருப்பணிகளின் முடிவில் ஒட்டு மொத்தக் கோயில் பழமையும் மாற்றப்பட்டு அதன் வரலாறு முற்றிலுமாக அழிக்கப்படும். அடுத்த சந்ததியினரிடம் இந்தக் கோயில் பல்லாயிரம் வருடம் பழமையானது என்று நாம் சொன்னால் நம்மைக் கண்டு நகைப்பர்.//

    இது வாசகங்கள் முற்றிலும் உண்மை. இதுபோன்ற செயல்களை சுற்றியிருக்கும் மக்கள் அனுமதிக்கக்கூடாது. எல்லாவற்றையும் இவர்களே செய்துவிட்ட பார்ப்பான், பார்ப்பனீயம் என்பார்கள்.

    கோயில்கள் பரமாரிப்பு பற்றி இந்து முன்னணி ஒரு துண்டறிக்கையை என்னிடம் தட்டச்சு செய்து சென்றார்கள். அதை என் வலைப்பூவில் கடவுள் என்ன காட்சிப் பொருளா? என்ற பதிவாக இட்டிருக்கிறேன். பாருங்கள்.

  5. இந்து சமய அறநிலைய துறை என்று ஒன்று இல்லாமல் இருந்தால் கூட கோயில்கள் தப்பித்திருக்கலாம்.

    நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தவர்களிடம் கூட தப்பித்த நமது கோயில்கள் கடைசியில் நம்மவர்கள் கையாலேயே அழிந்து கொண்டு இருக்கின்றன.

    இதை தடுக்கும் ஒரே வழி அன்பர் கொடுத்திருக்கிற தொலைபேசி எங்களில் அனைவரும் தொடர்பு கொள்வது தான். நன்றி அன்பரே…

  6. கோவில்கள் பிரசித்தி பெற ஆரம்பித்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. எங்கே அந்த கோயிலையும் டைல்ஸ் போட்டு திருப்பணி என்ற பெயரில் பண்பாட்டு கொலை செய்து விடுவார்களோ என்ற பயம்தான்.

    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ளேயே மண்டபத்தை தடுத்து கடைகள் வைத்திருப்பதை பார்த்தபோதுதான் ஆரம்பித்தது.

    கோயில்கள் கோமதி செட்டி அவர்கள் சொல்வதுபோல ஜவுளிக்கடை ஆகிவிட கூடாது. பழமைதான் நமது கோயில்களுக்கு புனிதம்.

  7. அயோத்யாபட்டிணம் கோவிலை அடுத்து ஸ்ரீமான் கோமதி செட்டி அவர்கள் பதிவு செய்துள்ள தமிழகத்தில் இன்னொரு ஆலயத்திற்கு நிகழும் அக்ரமம். ஸ்ரீமான் முருகன் அவர்கள் பிரிதொரு திரியில் குறிப்பிட்டிருந்த இன்னுமொரு இதை விட மோசமான அவலம்.

    https://shaivam.org/events/evn-20120322-puravar-panangattur.htm

    ஸ்ரீ ஞான சம்பந்த ஸ்வாமிகளால் பாடல் பெற்ற ஸ்தலமான திருப்புறவார்பனங்காட்டூர் திருக்கோவிலை தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக இடிக்கப்போகிறார்கள் என தகவல் தருகிறது சைவம் தளம்.

    இந்த அக்ரமத்தை எதிர்க்க விழைபவர் தயவு செய்து கீழ்க்கண்ட சுட்டியில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யவும்.

    https://www.nhai.asia/register/rgr/traffic.asp

    திருக்கோவிலைக் காக்க விழையும் அன்பர்களை ஸ்ரீ ஞான சம்பந்த ஸ்வாமிகள் அருளிய கீழ்க்கண்ட திருமுறைப்பாடலை ஒதுமாறு சைவம் தளம் விக்ஞாபிக்கிறது

    விண்ணமர்ந்தன மும்மதில்களை
    வீழ வெங்கணையால் எய்தாய்

    அன்பர்கள் தாங்கள் நித்யானுசந்தானமாய் ஓதும் மற்ற பதிகங்களுடன் மேற்கண்ட பதிகத்தையும் ஓதி பனங்காட்டீச்வரப் பெருமானை இத்தலம் காக்க ப்ரார்த்தனை செய்வோமாக

    பூண்டி நீர்த்தேக்கம் கட்ட வேண்டி திருவெண்பாக்கம் என்ற திருக்கோவிலை இடித்துத் தள்ளியதாக இத்தளம் மேலும் தகவலளிக்கிறது.

    இது போன்ற அவலங்கள் எதிர்காலத்தில் நிகழாது இருக்க வேண்டுமானால் ஹிந்துத்வ இயக்கங்கள் அமைப்பு ரீதியாக பெரும் அளவில் முயற்சி எடுத்து ஒரு புறம் மக்கள் கவனத்தை ஈர்க்க போராட்டமும் ந்யாயாலயங்களில் முறையாக திறமை வாய்ந்த ஹிந்து இயக்கங்களில் பரிவு உள்ள வக்கீல்கள் மூலம் வழக்காடுதலும் இரண்டும் ஒருங்கே செய்தல் அவசியம்.

    திருப்பதி திருமலையில் 550 வருஷம் முன் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தையே 2003ம் வருஷம் இடித்தவர்களாயிற்றே மதசார்பற்ற அரசாங்கத்துறையினர். சின்னஜீயர் ஸ்வாமிகாரு என்று அன்புடன் அழைக்கப்படும் த்ரிதண்டி ஸ்ரீமன் நாராயண ஜீயர் ஸ்வாமிகள் அவர்கள் இதைத் திரும்பக் கட்ட வேண்டும் என போராடி வருகிறார். தகவலறியும் சட்ட வழக்கால் அடித்த படிக்கே கும்பகர்ண நித்ரையில் இருந்த ஆர்க்கியாலஜி துறையினை எழுப்ப முடிந்தது. சரித்ர முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆலய பாரம்பர்யத்துடன் சம்பந்தமுள்ள ஒரு மண்டபம் இடிக்கப்பட்ட போது அதை தவிர்க்க முடியாதது ஹிந்துக்கள் ஹிந்துஸ்தானத்தில் கிள்ளுக்கீரையாக இருப்பதை படம் பிடித்துக் காட்டுகிறது என்றால் மிகையாகாது.

  8. முதலில் இந்து கோயில்கள் நிர்வாகத்தை அரசின் கறைபடிந்த அசுர கரங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு மதம், பக்தி, ஆகமம் போன்றவை சார்ந்த விஷயங்களில் ஆழ்ந்த புரிதலும் அக்கறையும் கொண்ட சான்றோர் குழுவால் நிர்வகிக்கப்படவேண்டும் . அப்போதுதான் கோயில்கள் எல்லாம் காப்பாற்றப்படும். மதசார்பற்ற ஒரு அரசானது எப்படி மத நிறுவனங்களின் நிர்வாகத்தில் தலையிடுவதே மாபெரும் பிழை. அதிலும் இந்து மத ஆலய நிர்வாகத்தில் மட்டும் தலையிடுவது பெரும் குற்றமும் கூட.

    இறை நம்பிக்கை கொண்ட தற்போதைய முதல்வராவது இவ்விஷயத்தில் இம்மாபெரும் முடிவை எடுத்தால் அவருடைய பெயருக்கு முன் புரட்சி பட்டத்திற்கு உண்மையான பொருள் உண்டாகும்.

  9. நசியனூர் கோவிலின் படங்களை பிரசுரம் செய்து விட்டு விஜயமங்கலம் கோவிலை பற்றி எழுதப்பட்டுஇருக்கிறது. இந்த செய்தி, நசியனூர் கோவில் பூசாரி ஒருவர் பொய்யான தகவலை பரப்புவதற்காக உருவாகப்பட்டது. ஈரோடு இந்து சமய அறநிலையத் துறை நேரில் வந்து ஆய்வு செய்து ஒரு மாதம் ஆகிவிட்டது, இந்த செய்தி மற்றும் படங்கள் போலியானவை என்று ஏற்கனவே நிரூபணம் ஆகிவிட்டது. அதாவது வேறு ஒரு கோவிலின் கட்டிட வேலைகலை படம் எடுத்து, இன்னொரு கோவிலின் தரம் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. அதை செய்ததே நசியனூர் கோவிலின் ஒரு படித்த ஐயர்/பூசாரி/பார்பனர் தான். இந்த தகவல்களை ஹிந்து போன்ற நாளிதழ்களில் பிரசுரம் செய்து ஆட்டம் போடுவது தான் பார்பனீயம். இவ்வளவும் நான் சொல்ல காரம் உண்டு. ஏனென்றால் எனக்கு இந்த கோவில் தான் குலதெய்வம் கோவில். எனக்கு இங்கு எந்த பதவியும் இல்லை, ஆனால் இங்கு நடக்கும் அத்தனை நாடகமும் தெரியும், அந்த பார்பனர் யாரென்பது இங்குள்ள அனைவருக்கும் தெரியும், ஈரோடு இந்து சமய அறநிலையத் துறைக்கும் தெரியும். குறிப்பிட்ட அந்த நபர் தொடர்ந்து இந்த செய்தியை பலருக்கும் ஈமெயில் அனுப்புவதும்,பல செய்து தளங்களுக்கும் அனுப்புவதுமாக இருக்கிறாரே, ஒரு முறை கூட அவர் இந்து சமய அறநிலையத் துறைக்கு இந்த செய்தியை ஏன் அனுப்பவில்லை என்பது தெரியுமா. ஏன் என்றால் அவர் செய்த தில்லு முள்ளுகளுக்காக அந்த கோவில் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அதைகூட என்னால் நிரூபிக்க முடியும். தன மீது இருக்கும் அவதூறை திசை திருப்ப தான் இத்தினை பெரிய ஈமெயில். இதனை நம்பி கொண்டு பலரும் கோவில் நிர்வாகத்தினரை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது. இது போன்ற செய்திகளை நாம் நம்புவதே பார்ப்பனியத்திற்கு தலை வணங்குவது போலாகும்.

  10. very good article. this shows how much the temples are mismanaged by the government.

  11. நீண்ட நாட்களாக இந்த திருப்பணி என்ற பெயரில் நடைபெற்று வரும் வரலாற்று அழிப்புகளின் பிண்ணனியில் ஆப்பிரகாமிய தீவிரவாதிகளின் சதி வேலை இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தங்களுடைய பின்னுட்டம் “ எங்கப்பன் புதருக்குள் இல்லை” என்ற பழமொழிக்கு ஏற்ப இது சர்வதேச கிறித்துவ தீவிரவாத அமைப்புடன் இணைந்து உள்ளூர் திராவிட ரவுடிகள் செய்யும் பயங்கரவாதம் என்பதை தங்கள் எழுத்துக்கள் மூலம் எனக்கு நன்றாக புரியவைத்து இருக்கிறீர்கள் அதற்கு முதலில் நன்றி.

    ஆதாரம் இருக்கிறது என்று சொல்கிறீர்களே. அந்த ஆதாரத்தை தமிழ் ஹிந்துவுக்கு அனுப்புங்கள். தாராளமாக அது வெளியிடப்படும். நீங்கள் எந்த ஊரில் இருந்து புதிய தூண்களை எடுத்து வந்தீர்கள் மற்றும் எந்த லாரி மூலம் எடுத்து வந்தீர்கள் போன்ற எல்லா தகவல்களும் மத்திய தொல்லியல் துறையின் மேசையில் உள்ளது. தமிழ் நாட்டுகாரன் கேள்வி கேட்டால் சரிப்பட்டு வராது. சர்தார்ஜி வந்து கேள்வி கேட்டால் தான் உங்கள் ஒட்டு மொத்த கூட்டத்திற்கு மட்டும் இன்றி இதன் பிண்ணியில் போலி சாமியாருக்கும் புத்தி வரும்.

    \\ அதை செய்ததே நசியனூர் கோவிலின் ஒரு படித்த ஐயர்/பூசாரி/பார்பனர் தான்.\\

    படித்த பார்ப்பணன் எதற்காக இந்த கோயிலில் அறம் அற்ற துறை கொடுக்கும் 500 ரூபாய் மாத சம்பளத்திற்கு கோயில் உங்கள் ஆதிக்க சாதியின் தொல்லைகளை எல்லாம் பொருத்து கொண்டு பூஜை செய்ய வேண்டும். கோயில் உங்களது குல தெய்வம் என்று சொல்கிறீர்கள். ஆனால் கோயிலில் பூஜை செய்வது பூசாரியா அல்லது ஐயரா என்று கூடவா தெரியாது. இது ஒன்றே போதும் உங்களுக்குள் எந்த புனித ஆவி புகுந்து கொண்டு இருக்கிறது என்பதை காட்ட?

    அடுத்து இந்த தகவல் எனக்கு தந்ததே மத்திய தொல்லியல் துறை அதிகாரி தான். ஒட்டு மொத்த கோயில் கொள்ளையர்களுக்கு விரைவில் மத்திய தொல்லியல் துறை ஆப்பு வைக்கும். வாங்கி கொள்ள தயாராக இருங்க சொல்லுங்கள்.

    \\ இது போன்ற செய்திகளை நாம் நம்புவதே பார்ப்பனியத்திற்கு தலை வணங்குவது போலாகும்.\\

    உங்கள் பார்பணீய எதிர்ப்பு யோக்கியதை என்ன என்பதை ரேசிஸ்ட் ராமசாமியில் தொடங்கி மஞ்ச துண்டார் வரை அனைவருமே பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். உங்கள் எழுத்துக்களை பார்த்து ஏமாற இது ஒன்றும் 20 ஆம் நூற்றாண்டு இல்லை.

    30 வருட திராவிட ஆட்சியில் பெண்களே குடிகாரர்களாக மாறி உள்ள நிலையில் கோயில் ஐயர் என்ன விதிவிலக்கா? அப்படி குடித்து கோயிலுக்கு வந்து இருந்தால் நம்ம ஊர் சட்டப்படி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மீது ஏற்றி ஊரை விட்டே விரட்டி அனுப்பலாம். அதில் எந்த தவறும் இல்லை. அவ்வாறு செய்தால் எனக்கும் மகிழ்ச்சியே. மேலும் 18 ஜீலை 2012 ல் தினமணியில் பக்கம் 4ல் இது குறித்து விரிவான விளக்கம் தரப்பட்டு உள்ளது.

    கிறித்துவ தீவிரவாதிகளின் வழிகாட்டுதலில் திராவிட ரௌடிகள் தமிழ் மொழி என்ற பெயரில் கோயிலை அழிக்க மிகப்பெரிய சதி வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது சதீஷ் அவர்களின் பின்னூட்டம் படம் பிடித்து காட்டியுள்ளது. நசியனூர் தகவல் மற்றும் கோதண்ட ராமர் கோயில் தகவல் மத்திய தொல்லியல் துறை அதிகாரி மூலம் கிடைத்தது. விஜயமங்களமோ எனது கர்நாடக நண்பர்கள் மூலம் எதேச்சையாக எனக்கு கிடைத்த புகைப்படத்தின் மூலம் விசாரித்து எழுதப்பட்டது. ஆனால் இரண்டிற்கும் சேர்த்து ஒரு பின்னூட்டம் வருவது ஆச்சரியத்தை மட்டும் அல்ல அதிர்ச்சியையும் அளிக்கிறது.

    இதற்கு உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் கோயில்களை நாம் புத்தகத்தில் மட்டுமே எதிர்காலத்தில் காண இயலும். ஹிந்து உணர்வு உள்ள மக்கள் நேரடியாக இதை எதிர்த்து களத்தில் இறங்கி போராட வேண்டும்.

  12. Very big disaster made to “BHARATH MATHA” by her childs all over the nation. Now in VIJAYAPURI. Hello, KONGUZONE peoples [including OFFICERS(EO) & DHARMAKARTHAS (ARANGKAVALAR)] please save the ancient temples and buildings.

    SWAMI VIVEKANANDA PROVERB:
    “You are the creator of your own destiny”

    please..please..stop the demolition of VIJAYAPURI temple.

  13. பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மற்றும் அவரது திராவிட கைத்தடிகளின் கோயில் சிதைப்பு பணிகளின் ஒரு பகுதி இது..

  14. அறநிலையத்துறை சட்டம், அதனால் நம் கோயில்களுக்கும் ஹிந்து சமூகத்துக்கும் ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்புகள், இந்த துறையின் தோற்றம், செய்யும் தவறுகள் என்று அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்கவும் பகிரவும்.
    கோயில் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், கோயில் பிரச்சனைகளுக்கு போராடும் ஹிந்து சகோதரர்கள் அனைவருக்கும் இந்த லிங்கை கட்டாயம் அனுப்பவும். பொதுமக்களுக்கு அறநிலையத்துறையால் கோயில்களின் பாரம்பரியம், சொத்துக்கள் எல்லாம் எப்படி அழிந்து வணிக மையங்களாக மாறி வருகின்றன என்பதை எடுத்துரைக்க இந்த வீடியோ கட்டாயம் உதவும்.

    https://www.youtube.com/watch?v=c8VHRtoCc1g

    *கோயில்களை சர்க்கார் அறநிலையாத்துறை என்னும் துறை மூலம் ஆக்கிரமித்து கோயில் சொத்துக்களை “கவனிக்கிறது”. இதுபோல அரசாங்கம் சர்ச்களையோ, மசூதிகளையோ சுரண்டுவதில்லை. ஏன் கோயில்களுக்கு மட்டும் இந்த சாபம்?

    *கோயில் சொத்துக்களை சரிவர பராமரிக்காமல், அவற்றை அரசு வேலைகளுக்கும் அரசியல்வாதிகள் வேலைக்கும் விற்று பயன்படுத்துகிறார்கள்! அக்கிரமங்களின் உச்சம் இது. கோயில் ரெஜிஸ்டர் என்னும் புஸ்தகம் பேணப்பட வேண்டும். அதில் கோயில் சொத்துக்கள் பற்றி விவரங்கள் இருக்க வேண்டும். எந்த கோயிலிலும் அறநிலையாத்துறை முறையாக பராமரிப்பதோ பேணுவதோ இல்லை. இது சட்டப்படி கிரிமினல் குற்றம்.

    *இந்த அறநிலையாத்துறை மதசார்பற்ற அரசால் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் பாரபட்சமாக நடத்தும் கொடுமை ஆகும்.

    *அறநிலையாத்துறைக்கு கோயில் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது. கோயில் பூஜை முறைகளையோ, விழாக்கலையோ, பிற பணிகளையோ கட்டுப்படுத்த எந்த அதிகாரமும் இல்லை.

    *கோயிலுக்குள் பலகாரக் கடையை “பிரசாதக்கடை” என்னும் பேரில் நடத்துவது தவறு மட்டுமல்ல அசிங்கமும் ஆகும்.

    *கோயிலுக்குள் ஆகம விரோதமாக பழைய அமைப்புகளை சிதைப்பது புதிய கட்டிடங்கள் கட்டுவது மிகப்பெரிய குற்றம். குறிப்பாக அறநிலையாத்துறை அதிகாரிகளுக்கு கோயிலுக்குள் அலுவலகம் இருக்கவே கூடாது.

    *அறநிலையாத்துறை கோயிலுக்கு ஒரு வேலைக்காரர்கள். அவ்வளவே. கோயிலை தங்கள் இஷ்டம் போல எடுத்துக் கொள்ள முடியாது. நிர்வாகம் சரியில்லை என்று சட்டப்படி நிரூபித்து கோயிலை எடுத்தாலும் அதிகபட்சம் மூண்டு முதல் ஐந்து வருடத்துக்குள் மீண்டும் நிர்வாகத்தை ஒப்படைத்து கோயிலை விட்டு வெளியேற வேண்டும்.

    இதுபோல, இன்னும் ஏராளமான விஷயங்கள் இந்த அறநிலையாத்துறை பற்றி உள்ளது. அனைவரும் இந்த அறநிலையாத்துறை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். கீழ்க்கண்ட லிங்கில் அறநிலையாத்துறை பற்றிய அனைத்து விவரங்களும் உள்ளன.கோயிலில் கருத்து வேறுபாடு என்று அறநிலையாத்துறையை உள்ளே கொண்டு வந்து விடுபவர் அந்த கடவுளுக்கே துரோகம் செய்தவனாவார். அப்படி செய்பவர் கோயிலை இடித்து கோயில் சொத்தை தின்றவர்கள் என்ன ஆவார்களோ அதே நிலைக்கு ஆளாவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. அந்த புத்தகத்தின் வீடியோ இணைப்பு:https://www.youtube.com/watch?v=c8VHRtoCc1g

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *