கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1

சுதந்திரத்திற்காக போராடியவர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் திரு.நேரு அவர்கள் 1936ல் கூறியது –

“காங்கிரஸ் கட்சி வலுவுடன் வளர்ந்ததற்கு காரணம், நான் பொதுவுடைமை கொள்கைகளுக்காக குரல் கொடுத்ததனால் தான்.”

ஆனால் என்னைப் போன்றவர்களால் பொதுவுடைமையை எங்களுக்கு புரிந்த இயற்கை நியதிகளின்படி ஏற்றுக் கொள்ள இயலவில்லை.121 கோடி மக்களில் பெரும்பான்மையானோர் பொதுவுடைமை என்றால் என்ன என்று கூட தெரியாத நிலையில், அதன் முன்னெடுப்புகளை ஆதரிக்கலாம். பணக்காரர்களிடமிருந்து பிடுங்கி ஏழைகளுக்கு வளங்களை அளிக்க வேண்டும் என்று போராடலாம். ஜனநாயகம் இருப்பதாலும் ஏழைகளே பெரும்பான்மையாக இருப்பதாலும், அவர்களின் ஓட்டுகள் இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதாலும் இலவசங்களையும் மானியங்களையும் அள்ளிவழங்குபவர்களே ஆட்சிக்கும் வரலாம். சுதந்திரம் அடைந்து 65 வருடங்கள் ஆகியும், எங்கள் நாட்டின் பொருளாதாரம் இந்த வழியில்தான் செல்லும் என்று கூற முடியாதவர்கள் இருக்கலாம். கடைசியாக சீனாவைப் போன்றோ, சோவியத் யூனியனைப் போன்றோ, ஓர் அரக்க ஆட்சி இந்தியாவில் ஏற்படவும் செய்யலாம். ஆனால் எந்த நிலையிலும்,பொதுவுடைமையை ஆதரிக்காத என்னைப் போன்ற ஒரு சிலர் இருக்கவே செய்வார்கள். இந்த நிலைப்பாட்டிற்க்காக என் உயிரை கொடுப்பேன் என்று வீர வசனம் பேச என்னால் முடியவில்லை. ஆனால் பல்வேறுபட்ட பொருளாதார நிலைகளில் ஒரு சமூக மக்கள் வாழ்வது இயற்கையே என்ற அடிப்படை கொள்கையை விட்டுக்கொடுக்க இயலாது.

அமேரிக்காவில் வாழ்ந்த திரு.விட்டேக்கர் சேம்பர்ஸ் அவர்கள் 1948ல் கூறியது –

“நான் வெல்லும் குழுவை விட்டுவிட்டு தோற்கும் குழுவை தேர்ந்தெடுத்துள்ளேன் என்பது எனக்கு தெரியும். ஆனால் பொதுவுடைமை சமூகத்தில் வாழ்வதை விட, தோற்கும் குழுவில் இருந்து கொண்டு உயிர் விடுவதே மேல்”

திரு.ஜவஹர்லால் நேரு கைக்கொண்ட சோஷலிஸ கொள்கைகள் குறித்து, ஆறு வருடங்கள் கழித்து காந்திஜி கூறியதை கடைசி பகுதியில் பார்க்கலாம். இப்போதைக்கு சஸ்பென்ஸ்.

முக்கிய எச்சரிக்கை:-

திரைப்படங்களைப் போலவே இக்கட்டுரைக்கான சான்றிதழை “A-Adults Only”என்று நானே கூறி விடுகிறேன்.அதாவது இது குழந்தைமனம் கொண்டவர்களுக்கான கட்டுரை அல்ல. ஆபாசத்திற்காகவோ, வன்முறைக்காகவோ அல்லாமல் தைரியமாக சிந்திப்பவர்களுக்கு மட்டுமே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

பழைய திரைப்பட பாடலொன்று நினைவுக்கு வருகிறது. “திருடாதே பாப்பா திருடாதே” என்று ஆரம்பிக்கும். அப்பாடலில்வரும் “இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்” என்ற வரி பலருக்கு நினைவுக்கு வரலாம்.இந்த கோஷத்தின்”தாயாதி பங்காளி கோஷங்கள்”உலகெங்கும் வெவ்வேறு வகைகளில் விண்ணை பிளந்து கொண்டிருக்கின்றன. ஏழைகளுக்காக, ஆம் ஆத்மிக்காக (பொது ஜனத்திற்காக), விவசாயத்திற்காக, கல்விக்காக, மருத்துவத்திற்காக, ஓய்வூதியத்திற்காக என்று பல “காக”க்களுக்காக மலை போல மானியங்களை உலகின் அனைத்து நாடுகளும் ஏதோவொறு வகையில் அளித்து வருகின்றன.

முழுமையான பொதுவுடைமை சமுதாயம் என்பது எவ்வாறு

(அ) இயற்கை நியதிகளுக்கு எதிரானது.
(ஆ) அறிவியலுக்கு எதிரானது.
(இ) நடைமுறை எதார்த்தத்திற்கு எதிரானது.
(ஈ) மனிதனின் நாகரீக முதிர்ச்சியில் நாம் அடைந்த வளர்ச்சியை பின் நோக்கி கொண்டு செல்லக் கூடியது.
(உ) மானுட தேடலின் உச்சமான நம் ஹிந்து மரபுகளுக்கு எதிரானது என்பதை
நிறுவ முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

எச்சரிக்கை-1:-

பொது உடைமை சித்தாந்தத்தை ஆதரிப்பவர்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டாம்.

என்னைப்போன்றவர்கள் கூறுவதை நீங்கள் ஏற்று கொள்ள போவதில்லை. நீங்கள் கூறுவதை என்னை போன்றவர்கள் எங்கள் உயிருள்ளவரை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.முன்னாள் அமேரிக்க அதிபர் திரு.Ronald Reagon இதை சரியாக கூறுவார்.

“Communism is evil, we (Right and Left) have philosophical differences, This war will be eternal”

மனித குலம் உள்ளவரை இந்த போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.

எச்சரிக்கை-2:-

இந்த கட்டுரையில் அரசாங்க வேலையில் இருப்பவர்களை கடுமையாக விமர்சித்திருக்கிறேன். என் கருத்துபடி பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் தாங்கள் பெறும் ஊதியம், வேலை உத்திரவாதம், ஓய்வூதியம் போன்றவற்றிற்கு தகுந்த வேலைத்தரத்தை காண்பிப்பதில்லை என்று தீர்மானமாக நம்புகிறேன். இன்று ஏற்பட்டிருக்கும் சில மாற்றங்கள் அவர்களால் மனமுவந்து அனுசரிக்கப்படவில்லை. மாறாக, அரசாங்க கொள்கைகள், நீதிமன்றங்களின் தீர்ப்புகள், குறிப்பாக பொதுமக்களுக்கு அவர்கள் மீது ஏற்பட்டிருக்கும் கடுமையான கோபங்கள் ஆகியவையே அவர்களில் சிலரை காலத்திற்கேற்றபடி மாற வைத்திருக்கிறது. எனினும் களையெடுக்கப்பட வேண்டியவர்கள் இன்னும் உளர்.

முன்குறிப்பு-1:-

இந்த கட்டுரையில் கம்யூனிஸத்தை முழுமையாக எதிர்த்து எழுதப் போகிறேன். ஆனால் பொதுவுடைமையின் சில கூறுகளாவது மனித சமூகம் உள்ளவரை எல்லா நாடுகளிலும் கடைபிடிக்கப்படும் என்ற எதார்த்தத்தை உணர்கிறேன்.இந்தியாவைப் பொறுத்தவரை, நாம் அனுசரிக்க வேண்டிய சில பொதுவுடைமை கூறுகளை, நாம் நமது மரபுகளிலிருந்தே தெளிவாக பெற முடியும். அவசியமில்லாமல் மேற்கத்திய கூறுகளை அனுசரிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் சந்தை பொருளாதார முறைமைகளை மேற்கத்திய நாடுகளிலிருந்தே நாம் பெற்றாக வேண்டும்.குறிப்பாக வங்கி செயல்பாடுகள், காப்பீட்டு முறைமைகள், தொலைத் தொடர்பு மற்றும் அதை சார்ந்த தொழில்கள் என்று நவீன காலத்திய பொருளாதார முறைமைகள் மேற்கத்தியர்களாலேயே முன்னெடுக்கப்பட்டு முதிர்ந்திருக்கின்றன.இதை மறுப்பது மூடத்தனமே!

மேலும் கம்யூனிஸத்தை எதிர்ப்பவர்கள், அந்த சித்தாந்தத்தின் இறையியலை எதிர்க்கும் கூறுகளுக்காகவும், மரபுகளை அழிக்கும் முன்னெடுப்புகளையும் முன்னிறுத்தியே எதிர்ப்பார்கள். இக்கட்டுரையை பொருத்தவரை, கம்யூனிஸம் முன்வைக்கும் “எல்லார்க்கும் எல்லாம்” என்ற பொதுவுடைமையை,பொருளாதார கண்ணோட்டத்துடனேயே எதிர்க்கிறேன்.

முன்குறிப்பு-2-என் தகுதி:-

நான் ஒரு பொருளாதார நிபுணன் அல்ல. இதை முதலிலேயே தெளிவு படுத்தி விடுகிறேன். ஆகவே பொருளாதார சொல்லாடல்கள் இந்த கட்டுரையில் இருக்காது.

என் அனுபவத்தின் அடிப்படையிலும், உலக நடப்புகளின் அடிப்படையிலும், மனிதனின் மனநிலையை ஒட்டியும், இயற்கை நியதியைப் பற்றின என் புரிதலின் அடிப்படையிலும் மட்டுமே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

முன்னுரை:-

மஹாபாரத்தில் குருஷேத்திர யுத்தம். துரோணரின் தாக்குதலை தாங்க மாட்டாமல் சிதறி ஓடுகிறது பாண்டவர்களின் படை. உண்மை பேசுவதை வாழ்க்கை நெறியாகவே கொண்டிருக்கும் தர்மபுத்திரனை ஒரு பொய் கூறச்சொல்கிறான் பகவான் கண்ணன். “அஸ்வத்தாமன் என்னும் யானை இறந்தது” என்றும் கூற வைக்கிறான். மீதி கதை நமக்கு தெரியும்.

தர்மபுத்திரனை ஒரு பொய் கூற வைக்க கண்ணன் பட்ட பாடு இன்றைய நிலையில் சிரிப்பையே வர வழைக்கிறது. ஏனெனில் இது நவீன யுகம். உண்மைக்கு பதிலாக பொய்யை மீண்டும் மீண்டும் கூறி, அது புனிதத் தன்மையையும்பெறும் யுகம்.

ஆனால், தர்மபுத்திரன் கூறிய வாக்கியத்திற்கும், இன்றைய நிலைக்கும் ஒரு முக்கிய ஒற்றுமையும் உண்டு. அதாவதுஉண்மையின் ஒரு பகுதி ஈனஸ்வரத்திலேயே அன்றும் கூறப்பட்டது. இன்றும் கூறப்படுகிறது. உண்மையை எப்படிமறைத்தாலும் அது ஏதோ ஒரு வகையில் தன்னை வெளிப்படுத்தி கொண்டே இருக்கும் என்ற மானுடத்தின் அதி உச்ச குணாம்சத்தின் ஒரு துளி இன்னும் மிஞ்சியிருக்கிறது.

பொருளாதார நிலையைத்தான் நான் சுட்டி காட்டுகிறேன். இன்றைய குரல்களில் சில இப்படி இருக்கிறது.

மத்திய நிதி அமைச்சர் திரு.பிரணப் முகர்ஜி- எந்த வகையிலாவது மானியங்களை அளிக்கும் திட்டங்கள் தொடரும்.மானியங்களின் அளவை நினைத்தால் எனக்கு தூக்கமே வருவதில்லை. (ஈனஸ்வரத்தில்)

முன்னாள் தமிழக முதல்வர் திரு. கருணாநிதி- ஏழைகள் உள்ளவரை இலவசங்கள் தொடரும். ரேஷன் கார்ட் உள்ள அனைவர்க்கும் இலவசங்கள் வழங்கப்படும்.இலவசங்கள் சமூகத்தை சோம்பலாக்கும் (விவரம் அறிந்தவர்களின் குரல்-ஈனஸ்வரத்தில்)

தொழிலாள வர்க்கத்தினை காப்பதே எங்களின் நோக்கம் (கம்யூனிஸ்டுகள்) ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை பார்க்கும் விமான ஓட்டிகளுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம்.மாதம் ஒன்றரை இலட்சம் சம்பளம் வாங்குபவர்கள் தொழிலாள வர்க்கம் இல்லைதான். (ஈனஸ்வரத்தில்)

மேற்குறிப்பிட்டதைப் போன்ற ஈனஸ்வரங்கள் மழுங்கி ஒலித்தாலும், “எல்லார்க்கும் எல்லாம்” என்ற நடைமுறை சாத்தியமற்ற பொய்கள், பகட்டு வார்த்தை ஜாலங்களால் வெகுஜன ஊடகப்ரிய வாக்கியமாக மாறி விட்டது. இது இந்தியாவிற்கு மட்டுமான பொய்யல்ல. ஐரோப்பா முதல் அமேரிக்கா வரை கொரியா முதல் ஆஸ்திரேலியா வரை இந்தவிஷ வாக்கியத்தின் தாக்கம் இருக்கிறது.

தற்பொழுதைய உலக பொருளாதார நிலை இச்சூழலுக்கு சாமரம் வீசுகிறது. கடந்த பல தசாப்தங்களாக, வரவுக்கு மேல் செலவு செய்து வரும் ஐரோப்பிய மற்றும் அமேரிக்க நாடுகள், மேலும் கடன் வாங்க விழி பிதுங்கி நிற்கின்றன.

ஆகவே, 1990க்கு பிறகு, வாலை சுருட்டிக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு அரக்கன், நன்றாகவே நாக்கை நீட்டிக் கொண்டு,வேட்டைக்கு வெளிக் கிளம்பி விட்டான். கார்ல் மாக்ஸின் அடிவருடிகளும், பித்தம் தலைக்கேறி இருக்கும் கருணைக்காவலர்களும், ஊடகங்களும், அந்த அரக்கனின் தீநாக்குகளுக்கு நெய்யை ஆகுதியாக அளித்து வருகின்றன.

“சத்யம் வத ப்ரியம் வத” என்றுதான் நம் மரபுகள் அறிவுறுத்துகின்றன. ஆனால் இந்த கட்டுரை எள்ளளவும் அவ்வாக்கியத்தை அனுசரிக்காது. பொய்களின் பல்முனை தாக்குதல் நிலவும் இன்றைய சூழலில், மனித சமுதாயம் மீள முடியாத அசட்டுத்தனத்தை நோக்கி வீறுநடை போட்டு கொண்டிருக்கும் சூழலில் எழுதப்படும் கட்டுரை இது.

Ponzi Schemeகளின் உலகளாவிய வளர்ச்சி:-

அமேரிக்காவில் திரு.பான்ஸி என்பவர்தான் முதலில் சீட்டு கம்பெனி வியாபாரத்தில் பெரிய அளவில் மக்கள் பணத்தைசுருட்டிக் கொண்டு ஓடியவர். அவரின் பெயரினாலேயே இது போன்ற திட்டங்கள் அழைக்கப்படுகின்றன.

இந்த திட்டம் மிகவும் எளிமையானது. 45 நாட்களில் 50 சதவிகித வட்டி, 90 நாட்களில் 2 மடங்கு பணம் என்று அவர்தன் வியாபாரத்தை ஆரம்பித்தார். பேராசை பிடித்த மக்களுக்கு உலகில் என்றுமே குறைவு இல்லாததால், அவரின்திட்டத்திற்கு நல்ல கிராக்கி. திட்டத்தை தொடங்கியவர், சில காலங்களுக்கு அதிகப்படியான வட்டியை அளிக்கவும்செய்தார். புதியதாக சேர்பவர்களின் பணத்தைத்தான், அதிக வட்டியாக பழைய வாடிக்கையாளர்களுக்கு அளித்தார். இதுதெரியாத பொது மக்கள், பெரிய அளவில் திட்டத்தில் சேர்ந்தார்கள். ஒரு நிலையில், அவரால், அதிகப்படி வட்டியைஅனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அளிக்க முடியாது போனது. பொது மக்களின் பணத்தை ஆட்டையைப் போட்டுஓடி விட்டார்.

தமிழகத்தில் நடந்த “அனுபவ் ஃபௌண்டேஷன்” தொடங்கி, அமேரிக்காவில் 2 வருடங்களுக்கு முந்தி ஏமாற்றியபர்னி மேட்ஆஃப் வரை ஒரே கதைதான்.

சீட்டு கம்பெனி என்றால் முதலாளி ஓடி விடுவார். ஒரு நாட்டின் அரசே இது போன்ற திட்டங்களை நடத்தினால்?உங்களால் நம்ப முடிகிறதா? அமேரிக்கா தொடங்கி, இந்தியா வரை, இது போன்ற மக்கள் நல திட்டங்கள் என்னும்பெயரில் சீட்டு கம்பெனி வியாபாரம் தான் நடந்து கொண்டிருக்கிறது. சீட்டு கம்பெனி சில காலத்திலேயே மூடி விடும்.ஆனால் அரசாங்கமே நடத்துகிறதல்லவா! சில தசாப்தங்கள் தாங்கி பின்னர் சந்தி சிரிக்க ஆரம்பித்திருக்கிறது. சிலதிட்டங்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

அதிர்ச்சி வைத்தியத்தின் அவசியம்:-

கிட்டத்தட்ட 1300 ஆண்டுகளுக்கு முன்னால், நம் நாட்டில் இருந்தவர்கள் சடங்குகளின் பிடியில் சிக்கியிருந்தனர்.பிறந்ததிலிருந்து இறப்பது வரை ஏதேனும் வேத சடங்குகளை செய்த வண்ணம் இருந்தனர். மேலும் அச்சடங்குகளை செய்வது மட்டுமே மனித ஏற்றத்திற்கு அவசியம் என்றும், வேதாந்தங்கள் உதாசீனம் செய்யப்படவேண்டியவை என்றும் கூறி வந்தனர். இச்சூழ்நிலையில்தான் காலடியில் என் அப்பன், சங்கரன் பிறந்தான். குமரில பட்டருக்கும், மண்டன மிஸ்ரருக்கும், அவர் வழி சென்றவர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தான். சடங்குகளின் உதவியினாலேயே, சடங்குகளை கடந்து, உன்னத மனித அனுபவங்களை அடைய முடியும் என்றும் அதுவே வேதங்களின் முடிவான தீர்ப்பு என்பதையும் உறுதியாக நிறுவினான்.

அதுகாறும் அனுசரித்த “சடங்குகள் மட்டுமே ஒரே வழி” என்ற விளக்கத்தை வேரோடு, வேரடி மண்ணோடு பிடுங்கிபோட்டான். அக்காலத்திய மனிதர்களுக்கு, பல தலைமுறைகளாக அனுசரித்த விளக்கங்களை, மாற்றிக் கொள்வதுஎவ்வளவு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதை நாம் எளிதாக ஊகித்துக் கொள்ள முடியும்.

நம் போன்றவர்களும், வாழ்க்கையில் பல அதிர்ச்சிகளை சந்தித்திருப்போம்.

சமீபத்தில் “Vicky Donor” என்னும் ஹிந்தி திரைப்படம் பார்த்தேன். படத்தின் விமர்சனத்தை விட்டு விடுவோம். கதாநாயகன், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உந்துதலினால், தன் விந்தணுக்களை விலைக்கு கொடுக்கிறான். அவனின்விந்தணுக்களின் மூலமே 53 குழந்தைகள் பிறந்ததாக மருத்துவர் கூறுகிறார். இது என்னுள் பல அதிர்வலைகளைஏற்படுத்தியது. இது போன்ற அறிவியல் நிகழ்வுகளினால் மனித சமூகம் எத்திசையில் போகும் என்ற அச்சம் உடனடியாக ஏற்பட்டது. இவை அனைத்தும் மனதின் விளையாட்டுகள்தான். சிறிது ஆசுவாசப்படுத்தி கொண்டுயோசித்தால், வரலாறு முழுவதுமே இது போன்ற அதிர்ச்சிகளை சமூகம் சந்தித்தே வந்திருக்கிறது. சங்கரன் அளித்தஅதிர்ச்சி, ஒரு மனிதனின் சுயத்தை பற்றியது. அறிவியலிலும், கலிலியோ, டார்வின் என்று அனைவரும் அதிர்ச்சிகளையே மனித சமூகத்திற்கு அளித்தார்கள்.

சப்பாத்தியின் கணக்குகள்:-

சந்தை பொருளாதார முறைமையை விளக்க ஒரு உதாரணம் கூறப்படும். சிறிய மாறுதலுடன் அக்கதையை நோக்கலாம்.

ஒரு குடும்பத்தில் 5 உறுப்பினர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். குடும்ப வருவாயாக ஒரு சப்பாத்தி இருந்தால், அது அனைவர்க்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இதையே ஒரு நாட்டிலுள்ள அனைவர்க்குமான பெரிய சப்பாத்தியாக ஊகித்துக்கொண்டு, அதை அனைத்து மக்களுக்கும் சமமாக பகிர்ந்து அளிக்க முயற்சித்தால்? பொதுவுடைமையின் எளிமைப் படுத்தப்பட்ட விளக்கம் இதுதான்.

கேட்பதற்கு மிகவும் குஷியாக இருக்கும் இந்த முறையை நடைமுறை படுத்தினால், சில தசாப்தங்களிலேயே,அச்சமூகம் முற்றிலுமாக அழிந்துவிடும். இந்த முறையில் பல குறைபாடுகள் உண்டு. அடிப்படை குறைபாடு”எல்லார்க்கும் எல்லாம்” என்ற கொள்கைதான்.`இந்த சப்பாத்தியை, வெறும் உணவாக மட்டுமல்லாமல், உணவுடன் சேர்த்து இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை வாழ்வாதாரங்களை சேர்த்து உள்ளடக்கிய ஒரு குறியீடாக எடுத்துக் கொள்வோம்.

இந்தியா என்ன, உலகின் அனைத்து நாடுகளும் இந்த சப்பாத்தியின் ஒரு பகுதியை, ஒதுக்கி வைத்து விடுகின்றன. அதைகுறைவான விலைக்கு அல்லது இலவசமாக சில குடிமக்களுக்கு வழங்குகின்றன. வேறொரு பகுதி பொதுவில் வைக்கப்பட்டு, அவரவர்களின் சாமர்த்திய அளவை பொறுத்து, பெரியதாகவோ, சிறியதாகவோ பெற்றுக் கொள்கிறார்கள்.

அனைத்தையும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது கம்யூனிஸ்டு கொரில்லாக்களின் வாதம். அதுமுடியாத போது, இந்தியா போன்ற நாட்டிற்கு 3 வழிகளே உள்ளன.

ஒன்று, சப்பாத்தியை குறைவாக உபயோகப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும். நவீன வாழ்க்கை முறையை முற்றிலுமாகவிட்டு விட்டால் மட்டுமே இது சாத்தியம்.

இரண்டு, சப்பாத்தியின் அளவை பெரிதாக்க வேண்டும். பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே இது சாத்தியம்.

மூன்று, சமூக உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும்.

கம்யூனிஸ்ட் ஸ்டாலின் 3வது வழியை, அதாவது உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதை, சோவியத் யூனியனில் நடைமுறை படுத்தினார். பஞ்சம் தலைவிரித்தாடுகையில், சாமர்த்தியம் உள்ளவர்கள் மட்டும் எஞ்சட்டும், மற்றவர்கள் மாண்டு போகட்டும், மாஸ்கோவிலிருந்து நாம் தலையிட வேண்டாம், தானியங்களை அனுப்ப வேண்டாம் என்று முடிவெடுத்த வெறியன்.

இந்தியாவில் நமக்கு 3வது வழி விலக்கப்பட வேண்டியது. ஆனால் இரண்டாவது வழி, அதாவது பொருளாதார மேன்மையை அடைய வேண்டும் என்று கூறிக்கொண்டே இந்தியாவின் மத்திய அரசுகள், சப்பாத்தியின் பெரும் பகுதியை தனியாக ஒதுக்கி வைத்து விடுகின்றன. இதனாலேயே பொருளாதார மேன்மைக்கான முன்னெடுப்புகளுக்கு முட்டுகட்டைகள்முளைக்கின்றன.

சப்பாத்தியின் ஒரு பகுதி ஒதுக்கி வைக்கப் பட்டு சிலருக்கு இலவசமாகவோ, குறைந்த விலையிலோ அளிக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடே! ஆனால் எந்த அளவில் என்பதும், யார் யாருக்கு மானியத்தில் அளிக்கவேண்டும் என்பதிலேயே பிரச்சினை.

குழந்தை கணக்குகள்:-

திரைப்படங்களை நகைச்சுவையுடன் கிண்டலடிக்கும் “லொல்லு சபா” நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். நடிகர்திரு.தனுஷ் அவர்களின் ஒரு திரைப்படத்தை கிண்டலடிக்கும் நிகழ்ச்சியில் வரும் காட்சி இது.

தனுஷை வில்லனிடம் அறிமுகப்படுத்துகிறான் வில்லனின் ஒரு அடியாள்.

வில்லன்: டேய் குமாரு,யார்ரா இவன்?அடியாள்: செல்வராகவனோட தம்பி.வில்லன்: யார்ரா செல்வராகன்?அடியாள்: கஸ்தூரி ராஜாவோட பையன்.வில்லன்: யார்ரா கஸ்தூரி ராஜா?அடியாள்: சூப்பர் ஸ்டாரோட சம்பந்தி.வில்லன்: யார்ரா சூப்பர் ஸ்டாரு?அடியாள்: ஐஸ்வர்யாவோட அப்பா?வில்லன்: யார்ரா ஐஸ்வர்யா?அடியாள்: இவனோட பொண்டாட்டி.வில்லன்: இவன் யார்ரா?

எங்கு சுற்றினாலும் ஒரே இடத்திற்கு வரும் இந்த காட்சியைப் போலத்தான், இன்றைய பொருளாதார நிபுணர்கள் மானியங்களைக் குறைக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி அளந்து விட்டு “ஏழைகளுக்காக” ஜோதிக்கே திரும்பிவிடுவார்கள். அதுகாறும் அவர்கள் ஆணித்தரமாக நிறுவிய விளக்கங்களை, ஏழைகளுக்கான மானியங்கள் அடியோடு புரட்டிப்போட்டு விடும் என்று தெரியாதவர்களா? அப்படி இல்லை. நம் சமூக பிரக்ஞையிலேயே “எல்லார்க்கும் எல்லாம்” என்ற கோஷம் பின்னி பிணைந்துள்ளது..இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு 45 வருடங்கள், கம்யூனிஸ வெறித்தனத்தின் தம்பியாகிய சோஷலிஸ கிறுக்குத்தனத்தினை அனுசரித்ததால், இடது சாரி பொருளாதார நிபுணர்களை மட்டுமே பொதுவில் காணமுடியும். 1991க்கு பிறகு சோஷலிஸத்தின் எச்ச-சொச்ச தாக்கங்களுடன் சிலர் “மைய-வலது” “Centre-Right” என்ற நிலையில் பொருளாதாரத்தைப்பார்க்கும் போக்கை சமீபத்தில் நம்மால் காண முடிகிறது. தைரியமான வலதுசாரிகளே இந்தியாவில் இல்லை என்றே கூறி விடலாம். உண்மை நிலையை கூறினால், “ஏழைகளுக்கு விரோதி” என்ற பட்டப்பெயர் கிடைக்குமாதலால் யார்தான் முன் வரமுடியும்?

ஔட்லுக் பத்திரிகையின் ஆசிரியர், திரு.வினோத் மேத்தா ஒரு பேட்டியில் இந்த நிலையை, தன் வாழ்க்கை அனுபவமாகஎடுத்து வைத்தார்.

“நான் அரசியல் ரீதியாக இடதுசாரியாகவே என் பயணத்தைத் துவங்கினேன். கம்யூனிஸ்டாக அல்ல. அரசு, சமூகத்தின் பல அம்சங்களில் தலையிட வேண்டும் என்றே நம்பிக் கொண்டிருந்தேன். தற்பொழுது நான் மாறி விட்டேன். அமர்த்யா சென் எடுக்கும் முடிவுதான் சரியென்று தோன்றுகிறது. சந்தை பொருளாதார முறையை நம்புகிறேன். ஆனால் அதனால் கிடைக்கும் வரி வருமானத்தை சமூகத்தில் செலவு செய்ய வேண்டும்.”

திரு.வினோத் மேத்தாவின் நிலையில்தான் இன்று இந்தியாவில் பலர் உள்ளனர். இடதுசாரி பொருளாதார கொள்கையைஅனுசரித்தவர்களே, சந்தை பொருளாதாரத்தின் பயன்களைக் கண்டவுடன், தங்கள் சிந்தனைகளை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனாலும், இடதுசாரித்துவத்தின் தாக்கம் இன்னும் இருப்பதால், மானிய திட்டங்களை அரசே பெரியஅளவில் செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர். நான் இந்த நிலையிலிருந்து வேறுபடுகிறேன்.

நான் வலதுசாரித்துவம் என்னும்போது, பொருளாதார வலதுசாரித்துவத்தையே பேசுகிறேன். அதிலும் அமேரிக்காவிலும்சரி, ஐரோப்பாவிலும் சரி, நாட்டிற்கு நாடு வலதுசாரித்துவத்தின் விளக்கங்கள் வேறுபடுகின்றன. என்னைப் போன்றவர்களால் அவற்றோடு ஒத்துப்போக முடியாது. ஆனாலும், வேறு வார்த்தைகள் இல்லாததால் “வலதுசாரி” என்ற அடைமொழியை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். இந்த கட்டுரையை முழுவதும் வாசித்த பிறகு, நான் குறிப்பிடும் வித்தியாசங்கள் புரிபடலாம்.

அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் என்ன வாழ்கிறது? என்று கேட்கலாம். அரசியல்வாதிகளில் வலதுசாரிகள் என்று கூறிக் கொள்பவர்கள்தான் இருக்கிறார்களே தவிர உண்மையில் அவர்களை வலதுசாரிகளாக அடையாளப் படுத்தவே முடியாது. அது ஒரு பெரிய கதை. ஆனாலும் ஊடகங்களில் தெளிவாக தீர்மானமாக அமேரிக்க அரசு அளித்து வரும் மானியங்களை விமர்சிக்கும் தைரியமானவர்கள் கண்டிப்பாக இருக்கவே செய்கிறார்கள்.

இக்கட்டுரை “எல்லார்க்கும் எல்லாம்” என்ற விளக்கத்தை முழுமையாக நிராகரிக்க முயலும் என்பதை ஏற்கெனவே கூறிவிட்டேன். ஆனால் ஒரு உதாரணத்திற்காக, ஒரு பேச்சிற்காக “எல்லார்க்கும் எல்லாம்” என்ற சமுதாயத்தை அடைய,சில காரணிகளுக்கு ஆகும் செலவை கணக்கு போட்டு பார்த்தேன். இதில் மனிதனின் வாழ்வாதாரங்களாக முன்வைக்கப்படும் பல காரணிகளில் கல்வி, மருத்துவம் என்ற இரண்டே இரண்டு அம்சங்களை மட்டும் எடுத்து கொள்ளலாம்.

அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே தரத்தில் சீரான கல்வி அளிக்க தேவைப்படும் நிதி – 9.25 இலட்சம் கோடி ரூபாய்கள்அனைத்து மக்களுக்கும் ஒரே தரத்தில் மருத்துவம் அளிக்க தேவைப்படும் நிதி – 5.5 இலட்சம் கோடி ரூபாய்கள்

மத்திய அரசின் 2012-13 பட்ஜெட்டின் படி, ஒரு வருடத்திற்கு இந்தியாவின் மொத்த செலவு 15 இலட்சம் கோடி ரூபாய்கள்.

(இந்த செலவு கணக்குகள் மத்திய அரசின் இணைய தளங்களிலிருந்து பெறப்பட்டு இன்றைய விலைவாசியுடன் பொறுத்தி பார்த்தே அடையப்பட்டது.விவரங்களை பிறகு பார்க்கலாம்)

தவிரவும், அரசின் செலவுகளான ஓய்வூதியம், விவசாயம், அரசு ஊழியர்களுக்கான சம்பளம், நஷ்டத்தில் நடந்துகொண்டிருக்கும், நடக்கப்போகும் ஏர்-இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களை அதே நஷ்ட நிலையிலேயேவைத்துக்கொள்ள அளிக்கப்படும் மானியங்கள், சாலை வசதிகள் போன்ற கட்டமைப்புகள் என்று அனைத்து செலவுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்-வேண்டாம்டா சாமி! போதும் இந்த கணக்கு!

பொருளாதாரத்தில் சில விளக்கங்கள்:-

கம்யூனிஸம்:-

ஒரு நாட்டின் அரசு, அனைத்து வளங்களையும் தன் வசம் வைத்து கொண்டு எல்லா மக்களையும் ஒரே தரத்தில் நடத்தும் முறையை கம்யூனிஸம் என்று கொள்ளலாம். புத்திஜீவிகளின் வரையரை வேறுவிதமாக இருக்கும்.

எளிமையாக கம்யூனிஸத்தை புரிந்து கொள்ள பழைய சோவியத் யூனியனை கவனிக்கலாம். எல்லா விவசாய நிலங்களையும் அரசே கையகப் படுத்திக்கொண்டு மக்களை வெறும் வேலை மட்டும் செய்ய சொல்லியது. வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உணவு, குழந்தைகளின் படிப்பு, மருத்துவம் போன்ற அனைத்தையும் அரசே செய்யும். சரியாகக் கூறுவதானால் செய்வதாக போக்கு காட்டும். இன்னும் ஒரு படி மேலே செல்ல நாம் க்யூபாவை கவனிக்கலாம். காஸ்ட்ரோவின் ஆட்சியில் மருத்துவருக்கும் ஒரே சம்பளம், கம்பௌண்டருக்கும் ஒரே சம்பளம். ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு பிறகு அதிகாரத்திற்கு வந்த ரவுல் காஸ்ட்ரோ இந்த கிறுக்கு முறையை நீக்கி விட்டார் என்பதை குறித்துகொள்வோம்.

சோஷலிஸம்:-

இந்த முறையில் அரசு பெரும்பான்மையான துறைகளை தன்வசமே வைத்து கொண்டிருக்கும். ஆனாலும் சில துறைகளில்பல கெடுபிடிகளுக்கு உட்பட்ட அளவில் தனியாரும் ஈடுபடுவர். 1991க்கு முன் இந்தியாவில் இந்த முறைதான் கைகொள்ள பட்டது.

சந்தை பொருளாதார முறை: (Market Economy):-

இந்த முறையில் அரசு மிகவும் முக்கியமான துறைகளை மட்டும் தன்வசம் வைத்திருக்கும். பாதுகாப்பு போன்ற துறைகளை தவிர்த்து அனைத்து துறைகளிலும் தனியார்கள் அனுமதிக்க படுவார்கள். 1991க்கு பிறகு இந்தியா இந்த முறையில்தான் இயங்க தொடங்கியுள்ளது.

சீனா 1970களின் இறுதியில் பொருளாதார தாராளமயமாக்குதலை ஆரம்பித்தது.அரசியல் அளவில் கம்யூனிஸத்தையும், பொருளாதாரத்தில் பொது உடைமைக்கு எதிரான சீர்திருத்தத்தையும் கைக்கொண்டுள்ளது. இதை விமர்சிக்கும் இந்தியர்களில் சிலர் நம் முதுகையும் பார்த்துக் கொள்வது நல்லது. Republic of India என்ற பெயரை Socialist Republic of India என்று மாதர்குல சிரோன்மணியான திருமதி. இந்திரா, அவசர நிலை ஆட்சியின் போது மாற்றி விட்டார். நம் நாட்டின் பெயரின் அடிப்படையில் பார்த்தால், நாம் பொது உடைமையைத்தான் பின்பற்ற வேண்டும். ஆனால் நடப்பதோ வேறு.

(தொடரும்)

33 Replies to “கம்யூனிஸமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 1”

  1. இதை படிக்கும் பொழுது எனக்கு மாசேதுங் பற்றிய ஒரு செய்தி எனக்கு நியாபகம் வருகிறது.

    சிட்டு குருவி மாதிரியான பறவைகளால் அதிக அளவு பயிர்கள் சேதம் ஆகின்றன என்ற காரணத்திற்காக அனைத்து சிட்டு குருவிகளையும் கொள்ள உத்தரவிட்டதுதான். இப்படி பட்ட அதிபுத்தி சாலிகள் தான் கம்முனிஸ்டு காரர்கள்.

  2. நல்ல தொடக்கம் திரு.பாலாஜி அவர்களே! மிக நீண்ட தொடராக இதை எதிர்பார்க்கிறேன். இது போன்ற தொடர்கள் பல இந்தியா முழுவதும் வர வேண்டும். குறிப்பாக இளைஞர்களின் மயக்கத்தைப் போக்க வேண்டும்.

    என் வலைப்பூவிலும் கம்யூனிசம் குறித்து அவ்வப்போது எழுதி வருகிறேன். இது போன்ற கட்டுரைகளைப் படிக்கும்போதுதான், நாம் சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்ற உணர்வே ஏற்படுகிறது.

    பார்க்க:
    கம்யூனிச பொன்னுலகம் உலகில் சிறந்தது கம்யூனிசமா? நம்பர் ஒன் சீனாதான்

  3. பாலாஜியிடம் இருந்து அருமையான கட்டுரை.

  4. பாலாஜி சார் ரொம்ப தெளிவாகவே இந்த விஷயத்தை(விஷத்தை) அணுகியிருக்கிறார், பொதுவாகவே ஆமை புகுந்த வீடும் கம்யுனிசம் புகுந்த நாடும் உருபடாது என்பது பழமொழி, இது எல்லாருக்கும் முக்கியமாக எல்லா அரசியல்வாதிகளுக்கும் ரொம்ப நல்ல தெரியும் ஆனா என்ன செய்ய பொழப்பு நடக்கனும்மே, அதனால மேடைக்கு மேடை மார்க்ஸ் சேகுவேரா லெனின் ஸ்டாலின் காஸ்ட்ரோ தோளான் துருத்தி லொட்டு லோசுக்குகளை பற்றி வாய் நிறைய புகழ்ந்து பேசிகிட்டு இருகிறாங்க எங்க சொல்ல இந்த கொடுமைய……

    உண்மைய்லேயே இது நல்ல முயற்சி பாராட்டுக்கள்

    நமஸ்காரம்
    Anantha saithanyan

  5. This is an important article. We should increase the tax payers instead of revenue consumers (Government servants). In past, I’m also eager in Government job. But now I have realized that mearly
    consuming people money without improving our knowledge is a wasteful life. Still our educational pattern is continuing to create employees rather than employers. If it continue so, we will face a catastrophic disaster.

  6. திரு. பாலாஜிக்கு என் வாழ்த்துகள். ராஜாஜிக்குப் பிறகு பாலாஜிதான் என்று எனக்குத் தோன்றுகிறது.

  7. ராஜாஜிதான் ஒரு முதல் முயற்சியாக சுதந்திரப் பொருளாதாரம் பற்றிப் பேசினார்.
    அவர் காலத்தில் நாட்டில் இருந்த எல்லா அரசியல் கட்சிகளும் சோஷலிசம் பேசி, அதிலும் பல வித சோஷலிசம், ஜனநாயக சோஷலிசம், பிரஜா சோஷலிசம், சம்யுகத சோஷலிசம் என்று பல கொள்கைகளைக் கூறி குழப்பிய போது,துணிந்து சோஷலிசத்திற்கான மாற்றுக் கருத்தை முன் வைத்தார்.

    ஏழைகள்மீது இருந்த தனிக் கருணையால்தான் அவர் காலத்தில் குடி வழக்கத்திற்கு எதிராக மக்களின் கருத்தைத் திரட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாக பல குடும்பங்கள் முன்னேற வழிவகுத்தார்.

  8. அரசு ஊழியரை பற்றிய உண்மைகளை போட்டு உடையுங்கள். அவர்கள் தீவிரவாதி களை விட மோசமான கும்பல். இந்த நாட்டின் சாபக்கேடே அவர்கள் தான்.

  9. பாலாஜி அவர்களே….

    நல வாழ்த்துக்கள்…..நீங்கள் குறிப்பிட்டது போல் இந்த விஷத்தை [இடதுசாரி சிந்தனையை ] முழுமையாக நீக்கி விட முடியும் என்று தோன்றவில்லை….காரணம் கம்யூனிசம் மனிதனின் அடிப்படை பலவீனத்தை [ உழைக்காமல் உண்பது ] பயன்படுத்திக்கொள்வது…..ஓட்டப்பந்தயத்தில் நாம்வெல்ல முடியாவிட்டால் முதலில் ஓடுபவனின் காலை உடைத்து விட்டு நாம் வெற்றி பெறவேண்டும் என்பதுதான் கம்யூனிசத்தின் அடிப்படை…….

    எனினும் நல்ல முயற்சி…..பாராட்டுக்கள்……நாம் ஊதும் சங்கை ஊத்தி வைப்போம்……

  10. /மானுட தேடலின் உச்சமான நம் ஹிந்து மரபுகளுக்கு எதிரானது என்பதை
    நிறுவ முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்./
    நல்ல நோக்கம் பார்க்கலாம்

  11. // S Raman on July 19, 2012 at 5:09 am
    திரு. பாலாஜிக்கு என் வாழ்த்துகள். ராஜாஜிக்குப் பிறகு பாலாஜிதான் என்று எனக்குத் தோன்றுகிறது.
    //

    ராஜாஜி எல்லாம் சும்மா ஜுஜுபி. அந்த திருப்பதி பாலாஜியே இறங்கி வந்து இங்கே வூடு கட்டிக்கிட்டு இருக்கார் அய்யா.

  12. திரு பாலாஜி அவர்களுக்கு என் தாழ்மையான வணக்கங்கள். மிக அற்புதமான கட்டுரையை எழுத ஆரம்பித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். நான் டென்மார்க் பொருளாதார முறையை பற்றி சிறிது அறிந்துள்ளேன். அங்கு வரி கட்டும் முறை மிகவும் வித்தியாசமானது.அத்துடன் அனைவரும் கண்டிப்பாக வரி கட்டியே ஆக வேண்டும்.இது சட்ட ரீதியான முறை. அங்கு வரி கட்டாவிட்டால் சட்ட ரீதியான தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். குறிப்பாக பணக்காரர்கள் 65 வீதமான வரி கட்டவேண்டும். அங்கு மக்கள் வரி கட்டும் முறையை ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.அத்துடன் அனைவருக்கும் ஓய்வூதிய திட்டம் அங்குள்ளது.காரணம் அங்கு அனைவரும் எதோ ஒரு கல்வி பெற்று வேலை செய்து ஆகவேண்டும். கல்வி,மருத்துவம்,சமுதாய சேவை எல்லாம் இலவசமாக இருந்த போதிலும் அனைத்தும் வரிக்குள் அடங்குகிறது. இதனால் வேலையில்லாத்திண்டாட்டம் வந்த போதும் அவர்களுக்கான படித்திட்டங்கள் குறைவதில்லை.அத்துடன் வேலையின்மையை காரணம் காட்டி சோம்பேறித்தனமாக வாழ இயலாது. காரணம் மாதத்திற்கு ஒருமுறை வேலை பதிவு செய்யும் அலுவலஹத்திற்கு அழைக்கப்பட்டு எவ்விடத்தில் வேலை தேடினார்கள் என்பதை சரியான முகவரியோடு தொலைபேசி இலக்கத்தையும் கொடுக்கவேண்டும். இப்படியாக ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் அடி பணிந்து நடப்பதால் அம்மக்கள் கஷ்டமில்லாது வாழ்கிறார்கள் என்பதே உண்மையாகும். தொடருங்கள் ஐயா உங்கள் அற்புதமான கட்டுரையை. நன்றி.

  13. Why this irrelevant image of MK in this article?

    First of all, JJ only started this TAASMAC and even now also she introduced elite bars etc. etc to increase the sales.
    But still you added MK’s image. Don’t you feel shame to blame MK for everything?
    But one thing I understood from your site is “இது நவீன யுகம். உண்மைக்கு பதிலாக பொய்யை மீண்டும் மீண்டும் கூறி, அது புனிதத் தன்மையையும்பெறும் யுகம்.”, these above lines are suitable for you.

  14. அன்புள்ள பாலாஜி அவர்களுக்கு,

    நல்ல முயற்சி. எழுதுங்கள். ஆனால் எனக்குத் தோன்றுவது, நீங்கள் என்னதான் பொருளாதாரத்திலும், அரசியலிலும் மாற்றங்கள் கொண்டுவந்தாலும், நிர்வாகம் ஒழுங்காக இல்லையெனில் எல்லாமே தொல்வியுறும். என்ன செய்து தன் சொத்தைப் பெருக்கலாம் என்று செயல்படும் ஒரு பிராந்தீயத்தின் தலைமை நிர்வாகியும், எதிலும் பொறுபேற்றுக்கொள்ளாத, தான் இருக்கும் நாற்காலியில் ஒட்டிக்கொண்டிருப்பதில் வெட்கப்படாத ஓரு தேசத்தின் தலைமை நிர்வாகியும் மத்திய மந்திரி சபையிலிருந்து தெருவில்நின்று போக்குவரத்தைக்கவனிக்கும் கான்ஸ்டபிள் வரை கொள்ளைஎவ்வளவு அடிக்கலாம் என்று செயல்படுவதை அனுமதிக்கும் நிர்வாகமும், சமூக தர்மமும் இருக்கும் வரை எதை மாற்றி என்ன செய்ய?

  15. நண்பர் குமரன் அவர்களே,

    பாலாஜி அவர்களின் இந்த கட்டுரைத்தொடர் அனைத்து வாசகர்களாலும் ரசித்து படிக்கப்பட்டு வரவேற்கப்படுகிறது. பாலாஜி அவர்களை உளமார பாராட்டுகிறோம். அதே சமயம் ராஜாஜிக்கு பிறகு பாலாஜி என்பது சரியல்ல. இடையில் எத்தனையோ பேர் கம்யூனிசத்தின் கொடுங்கரங்களை எதிர்த்து போராடியுள்ளனர். அவர்களின் பட்டியல் மிக நீண்டது. நானி பல்கிவாலா, பிலுமோடி, ஏ.என். சிவராமன், என்று இந்த பட்டியல் மிக நீளமானது.

    ” ராஜாஜி எல்லாம் சும்மா ஜுஜுபி “- என்று திரு குமரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

    FORUM OF FREE ENTERPRISES – என்ற பெயரில் திரு நானி பல்கிவாலா அவர்களுடன் சேர்ந்து , கம்யூனிசப் பேய்க்கு எதிராக ராஜாஜி எழுதிய கட்டுரைகள் மிக உன்னதமானவை. SWARAJYA- என்ற ஆங்கில வார இதழிலும் கம்யூனிசத்துக்கு சாட்டையடி கொடுத்த உத்தமர் அவர். தமிழக சட்டசபையிலேயே ” என் முதல் எதிரி கம்யூனிசமே “- என்று பகிரங்கமாக அறிவித்த தியாகி அவர்.

    ஆனால் திரு ராஜாஜி அவர்களை நம் தமிழ் நாட்டில் தொண்ணூறு சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு பிடிக்காமல் போன காரணம், திமுக என்ற பெயரில் செயல்படும் தீயசக்திகள் முன்னேற்றக்கழகம் ஆட்சிக்கட்டில் ஏறுவதற்கு அந்த குல்லுக பட்டர் முக்கிய காரணம் என்பதால் தான். கம்யூனிசத்துக்கு எதிராக ஆணித்தரமான வாதங்களை அடுக்கி, கம்யூனிசத்தின் வேர் முற்றிலும் செல் அரித்துப்போக வைத்தவர்களுள் ராஜாஜி அவர்களின் பங்கு மகத்தானது.

    சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரசு ஒரு அயோக்கியர்களின் புகலிடமாகப்போனதால், காங்கிரசை தமிழக அரசியலில் இருந்து அகற்றவேண்டும் என்ற துடிப்புடன் செயல்பட்டு , காங்கிரசை அழித்தே தீருவேன் என்று சபதம் செய்து , தமிழகத்தில் காங்கிரசை வெட்டி வீழ்த்தினார். அவரால் கொல்லப்பட்ட காங்கிரசு தமிழகத்தில் இனிமேல், வேறு மாநிலக்கட்சிகளின் காலைக்கழுவி மட்டுமே வாழ்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரரான அந்த உண்மை தியாகியின் பெயரிலும் ஒரு கறை படிந்தது. அது அவர் திமுக என்ற தீய சக்தியை ஆட்சிப்பீடத்துக்கு அனுப்பி வைத்ததால் வந்த பழி ஆகும்.

    பாலாஜி அவர்களின் இனிய தொடர் மேலும் சிறப்பாக வெளிவரட்டும் .

  16. ” Sarav on July 19, 2012 at 6:41 pm

    Why this irrelevant image of MK in this article? “-

    அன்புள்ள Sarav,

    டாஸ்மாக்கை துவங்கியது ஜேஜே தான். ஆனால் குடிப்பழக்கம் இல்லாமல் , வாழ்ந்த தமிழக தலைமுறையினரை, 1-9-1972 முதல் கள்ளு மற்றும் சாராயக்கடைகளை திறந்து , குடிக்கு அறிமுகப்படுத்தி ,அடிமையாக்கி , மக்கள் பணி ஆற்றியது முக அவர்களே ஆகும். அதன் பிற்காலங்களில் கள்ளச்சாராயம் அருந்தி மடிந்த மக்கள் எண்ணிக்கை பெருகியதால், கள்ளச்சாராயம் மூலம் ஏற்படும் சாவுகளை தடுத்து , அரசே நல்ல சாராயம் காய்ச்சி வழங்குகிறது. இந்த கோணல்களுக்கு எல்லாம் வழிவகுத்தது பெரியண்ணன் முக அவர்களே. எனவே, திரு முக அவர்களின் image – totally relevant – மிக பொருத்தமானதுங்கூட.

    தமிழகத்தில் அனைத்து தீமைகளையும் தொடங்கியது முக அவர்களே ஆகும். அவர்களுக்கு பின் வந்தவர்கள் , சில விஷயங்களில் அவரைவிடவும் வேகமாக ஓடி சாதனை படைக்க தூண்டுகோலாக இருந்தது முக தான். மற்றவர்கள் தன்னை விட வேகமாக ஓடி, தீய செயல் புரிகிறார்களே என்று இப்போது வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுது புரண்டு என்ன பயன்?
    ” முன்னாள் தமிழக முதல்வர் திரு. கருணாநிதி- ஏழைகள் உள்ளவரை இலவசங்கள் தொடரும். ரேஷன் கார்ட் உள்ள அனைவர்க்கும் இலவசங்கள் வழங்கப்படும்.இலவசங்கள் சமூகத்தை சோம்பலாக்கும் (விவரம் அறிந்தவர்களின் குரல்-ஈனஸ்வரத்தில்)”- அப்பனுக்கு சாராயம், மனைவிக்கும், மகனுக்கும் இலவச அரிசி, இலவச வேட்டி, இலவச புடவை, இலவச மின்சாரம் என்று வந்த வழி முகவின் பரிசே. சரியான பொருத்தமான கார்ட்டூன் தான்.

  17. மறுமொழி எழுதிய அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள்.

    இப்போதைக்கு ஒன்றே ஒன்றை கூறி விடுகிறேன்.
    “6 மணிக்கு மேலே அவனோட அவதாரத்தைப் பத்தி தெரியாம போறீங்களே!” என்ற வடிவேலுவிற்கான அலரலை நினைவில் கொள்ளுங்கள்.

    இக்கட்டுரை பல பாகங்களாக வெளி வர இருக்கிறது. இப்போதைக்கு காலையில் ஆட்டோ ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது பொதுவுடைமையை உரித்துக் கொண்டிருக்கிறது. மேலும் பொதுவுடைமையின் உக்கிரத்தினால் பயனடைந்த,
    இன்னும் பயனடைந்து கொண்டிருக்கும் என் முன்னோர்களில் ஒரு தொகுதி மக்களையும் சேர்த்தே தோலுரிக்கும்.

    கடைசியாக பதிப்பிக்கப்படும் பாகங்களில், அதாவது மாலை 6 மணிக்கு மேல் சல்பேட்டா அடித்து விட்டு ரகளையும் நடக்கும்!

  18. @அத்விகா,

    // ” ராஜாஜி எல்லாம் சும்மா ஜுஜுபி “- என்று திரு குமரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். //

    மன்னிக்கவும், நீங்கள் என்னதான் சொன்னாலும் இங்கே எழுந்தருளியிருக்கும் நம் திருப்பதி பாலாஜிக்கு முன் மூதறிஞர் ராஜாஜி ஒரு ஜுஜுபி தான்.

  19. “True equality has never been and never can be on the earth. How can we all be equal here? This is impossible kind of equality implies total death. Inequality is the basis of creation. At the same time the forces struggling to obtain equality are as much a necessity of creation as those which destroy it” Swamiji

    ஜனநாயகம் – சோஷலிசம் – கம்யூனிசம் – சர்வாதிகாரம் – இவற்றிற்கு உண்மையான விளக்கம் ஒரிரு வரிகளில் கூறமுடியுமா. (ஒரு நாட்டில் 100 பேர் வாழ்கிறார்கள் அதில் 10 பேர் நன்கு கோட்டும் சட்டையும் அணிந்து வலம் வறுகிறார்கள் மிதம் 90 பேர் கோவணம் கட்டி திரிகிரார்கள்) மேலே சொன்னவைகள் இதை எப்படி கையாளும்.????

    ஆனால் இன்று உலகில் நடப்பது மேற்கத்திய மறைமுக காலணிஆதிக்கம் தான். ஒபாமா சமீபத்தில் வால்மார்ட்டை திறப்பதற்கு மிரட்டல் விடுகிறார்.
    இன்றைய உலகில் அது ஜனநாயக நாடாக இருந்தாலும் சரி சர்வாதிகார நாடாக இருந்தாலும் சரி ஆள்பவருக்கும் ஆளப்படுபவருக்கும் தொடர்பே இல்லாமல் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் ஆள்பவர்களின் நடத்தையை ஊழல் செய்வைத்து அடிமைபடுத்தி (ஆமாம்சாமி ஆக்கி) பின்பு பொதுஜனங்களின் அடிப்படை தேவைகளில் தலையிட்டு கொள்ளை அடிப்பது என்று மாறியுள்ளது. காலணி ஆதிக்கத்தில் மெகாலேயால் முன்நிறுத்தப்பட்ட படித்த மடையர்களை உருவாக்கும் திட்டம்தான் இன்றுவரை உலகத்தாரால் கடைபிடிக்க பட்டுவருகிறது. பொருளாதார தடைகளை ஏற்படுத்தி ஆதிக்கம் செலுத்த முடியாத நாடுகளில் வன்முறை தூண்டுதல்தான் சரி என்ற நிலைபாட்டுடன் அணுகி தங்களது பழைய காலணி ஆதிக்கத்தை நிலை நிறுத்த மணிதநேயம், மணித உரிமை என்ற போர்வையில் உள்ளே நுழைவதை இன்று காண்கிறோம். உதரணமாக ஈராக், லிபீயாவில் சமீபத்தில் நடந்தவை.
    இன்று செய்தி ஊடகங்களும் காலணி ஆளுகைகுள் கைகோர்த்து செயல்படுகிறது. ரஷ்சிய நாடுகளை துண்டாக்கி கூறு போட்டது. இலங்கையில் அந்த இன மக்களையே பகடைகாயாக மாற்றி இன படுகொலைகளை தூண்டி ஆக்ரமிப்பிற்கு வழிவகுத்து கொண்டுள்ளது. ஈராக்கில மறு கட்டமைப்பு செய்வதாக சொல்லி ஆக்ரமித்து கொண்டுள்ளது. இவை எல்லாம் ஒரு முறைபடி மேற்கத்திய காலணிகளால் திட்டமிடப்பட்டு அதை ஐ.எம்.எப., வங்கிகள், பெரும் உலக சந்தை வியாபாரிகள், ஊழல் செய்து அரசியலில் முன்நிறுத்தப்பட்டுள்ள தலைவர்கள், மணிதநேய உரிமை காப்பாளர்கள் என மேற்கத்திய காலணிகளுடன் கூட்டாளியாக கைகோர்த்து செயல் படுகின்றன.

  20. // ஒபாமா சமீபத்தில் வால்மார்ட்டை திறப்பதற்கு மிரட்டல் விடுகிறார்.
    இன்றைய உலகில் அது ஜனநாயக நாடாக இருந்தாலும் சரி சர்வாதிகார நாடாக இருந்தாலும் சரி ஆள்பவருக்கும் ஆளப்படுபவருக்கும் தொடர்பே இல்லாமல் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் ஆள்பவர்களின் நடத்தையை ஊழல் செய்வைத்து அடிமைபடுத்தி (ஆமாம்சாமி ஆக்கி) பின்பு பொதுஜனங்களின் அடிப்படை தேவைகளில் தலையிட்டு கொள்ளை அடிப்பது என்று மாறியுள்ளது. //

    சப்பாத்தியை விட இது கொஞ்சம் புரிகிற மாதிரி இருக்கிறது.

    முன்பு தேச வளங்களை ஏகபோகமாக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது பன்னாட்டுக் கொள்ளையர்களுக்கும் திறந்துவிட வேண்டிய கட்டாயம். எப்படியிருந்தாலும் லாபத்தில் மட்டும் குறைவிருக்காது இந்த 10 பேருக்கு. மீதி 90 பேருக்கு சர்வதேசத் தரம் வாய்ந்த சோடா உப்பு சேர்த்து, உப்பிப் போன சப்பாத்தியைக் காட்டி வயிறு ரொம்பிடும், பசியே இருக்காது என்று புளுகவும் செய்கிறார்கள்.

    நாமோ, கோவணம் கட்டினாலும் அது சிவப்புக் கோவணமாக மட்டும் இருக்கக் கூடாது என்று வீராப்பு பேசிக் கொண்டிருக்கிறோம்.

  21. //இந்த கட்டுரையில் அரசாங்க வேலையில் இருப்பவர்களை கடுமையாக விமர்சித்திருக்கிறேன். என் கருத்துபடி பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் தாங்கள் பெறும் ஊதியம், வேலை உத்திரவாதம், ஓய்வூதியம் போன்றவற்றிற்கு தகுந்த வேலைத்தரத்தை காண்பிப்பதில்லை என்று தீர்மானமாக நம்புகிறேன்.//

    திரு பாலாஜி சொல்லியுள்ள இந்தப் பகுதி முழுக்க உண்மை. ஒரு பொதுத் துறை நிறுவனத்தில் நாற்பது ஆண்டுகள் பணியாற்றிய என் அனுபவம் சொல்லும் உண்மை. அங்கெல்லாம் இடதுசாரி தொழிற்சங்கங்கள் கோலோச்சுகின்றன. இந்த சங்கத்தில் உலக அரசியல் விவாதிக்கப்படும். ஒபாமாவுக்கு சமமாக விவாதிக்கும் உரிமை இவர்களுக்கு உண்டு. இவர்களைப் பின்பற்றாத ஊழியர்கள் சமூக புறக்கணிப்புக்கு ஆளாவார்கள். தினசரி பணிகளில் பல இடையூறுகள் விளைவிப்பார்கள். பதவி உயர்வு தடுக்கப்படும். இவர்களிளிருந்துதான் பதவி உயர்வு பெற்று அதிகாரிகள் உருவாவார்கள். அவர்கள் இந்த கம்யூனிஸ்டுகளின் கைக்கூலிகளாக செயல் படுவார்கள். பாவம் என்போன்றோர் அங்கு பட்ட பாடு தாளம் படுமோ, தறி படுமோ, சொல்ல முடியாது. அச்சுறுத்தல் அவர்கள் ஆயுதம். அவர்கள் வழியில் போகாதவர்கள் செயலிழக்கச் செய்யப்படுவார்கள். இதன் பெயர் கம்யூனிசம். இதையெல்லாம் எழுதுங்கள் திரு பாலாஜி.

  22. @ சிகப்பு கோவணத்தின் இலட்சனம் என்ன என்பதை சீனாவில் தான் பார்த்து கொண்டு இருக்கிறோமே? தெரிந்துமா இப்படி எழுதுகிறீர்கள் 🙂

  23. பொதுவுடைமை, எல்லோர்க்கும் எல்லாம் என்பன குறித்த மார்க்சீய தத்துவார்த்த விளக்கங்களை பின்ராயி விஜயனிடம் கேட்கலாம். ‘விளங்கும்’ படி சொல்வார்.

  24. // இந்த கட்டுரையில் அரசாங்க வேலையில் இருப்பவர்களை கடுமையாக விமரிசித்திருக்கிறேன்………//
    உண்மை உண்மையை தவிற வேறுஇல்லை. அரசாங்க வேலை என்பது கோர்ட்டு டவாலியிலிருந்து நாட்டின் ஜனாதிபதிவரை நான் பொதுஜனங்களின் ஊழியன் (Government Servant ) என்று பதவிபிரமாணம் எடுத்து தன்நலம் இல்லாமல் நாட்டு சேவையில் ஈடுபடுவதே ஆகும். ஆனால் அரசாங்க வேலை என்பது ஒரு சுய நலவியாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. லஞ்சம் ஊழலின் ஊற்கண் இங்கேதான் ஆரம்பித்து இன்று தன் கடமையை செய்யாமல் உரிமை என்ற போர்வையில் அத்தனை அத்துமீறல்களையும் நியாயம் என்று நிலைநாட்டும் அளவிற்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. சொல்லி மளாத அளவிற்கு ஊழல் செய்துவிட்டு சிறிதுகூட வெட்கமில்லாமல் உணர்ச்சி அற்ற ஜடமாக திருடனே திருடன் ஓடுகிறான் பிடியுங்கள் பிடியுங்கள் என்று குரல் எழுப்புகிறார்கள்.
    அரசாங்க வேலையில் இருப்பவர்களைவிட அரசாங்க ஒய்வு ஊதியம் பெருபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதைவிட கொடுமை அப்படி ஒய்வு ஊதியம் பெறுபவர்கள் அவர்கள் உண்மையில் பணியில் இருந்த நாட்களைவிட ஓய்வுஊதியம் பெரும் நாட்கள் அதிகமாக உள்ளது.

  25. கம்யூனிசம் தொழிலாளர்களுக்கான வேலை நேரம்,அடிப்படை சம்பளம் போன்ற விஷயத்துக்கானவற்றுக்காக வாதாடுவதற்காக தேவைப்படுகிறது என்பது என் அபிப்ராயம். ஆனால் பொதுவுடமை என்ற பேரில் எல்லோரும் சமம் எனில் ஒருத்தனும் வேலை பார்க்கமாட்டான்.

    கம்யூனிசம் என்னைப் பொறுத்தவரை காரில் இருக்கும் ப்ரேக் மாதிரி. கார் வேகமாய் போய் விபத்தில் சிக்கிவிடாமல் இருக்கும் வேகத்தடை அதுவே. ஆனால் அது ஒரு போதும் ஆளுங்கட்சி நாற்காலியில் அமர்ந்து விடக்கூடாது. ஒரு வண்டி ப்ரேக் மட்டும் கொண்டு ஓடுவதில்லை. கம்யூனிஸ்ட் ஆளுங்கட்சியான இடமெல்லாம் உருப்படவேயில்லை. ஆனால் அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் கண்டிப்பாக தேவைப்படுகிறார்கள்.

    ப்ரேக் தேவை.ஆனால் அது மட்டும் எனில் வண்டி நகர்வதேயில்லை. கம்யூனிஸ்ட்களால் உருப்படியான ஒரு திட்டத்தை (நடத்துவதை விடுங்கள்) ஆரம்பிக்க கூட முடியாது என்பது என் அபிப்ராயம்

  26. அமெரிக்கா மிரட்டுகிறது என்பவர்கள் சீனா என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை அறியாதது விந்தைதான்!

    தெற்கு சீனா கடலில் வியட்நாமுக்குச் சொந்தமான இடங்களில் எண்ணைக் கிணறு தோண்டக்கூடாதாம்
    அது தனக்கு சொந்தமாம்
    ஏன் பாரதம் கூட வியட்நாமுக்கு இதில் உதவக் கூடாதாம்
    அங்கு சென்ற நம் எண்ணைத் துரப்பணக் கப்பலை சீனக் கப்பல்கள் மிரட்டுகின்றன

    நமது அருணாச்சலப் பிரதேசத்துக்கு நம் ஜனாதிபதி போகக் கூடாதாம்
    சீனாவில் ஒரு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து ஒரு போட்டியாளருக்கு வீசா கொடுக்க மறுத்து விட்டது
    காஷ்மீர் மாநிலத்தில் பல பகுதிகளை அது சொந்தம் கொண்டாடுகிறது. பாகிஸ்தான் ஆக்ரமித்த காஷ்மீர் பகுதிகளை அது சீனாவுக்கு தாரை வார்த்துள்ளது. அங்கு சீனா காரகோரம் நெடுஞ்சாலை போட்டுள்ளது .
    அந்த மாநிலத்திலிருந்து சீன விசா அனுமதி கேட்டால் அதற்கான் முத்திரையை வேண்டுமென்றே ஒரு தனி காகிதத்தில் கொடுக்கிறது
    அக்கிரமமாக திபெத்தை ஆக்கிரமித்து அந்த மக்களை நசுக்கி கொண்டிருக்கிறது.
    இப்போது ஜப்பானுடனும் மோதல். எதற்காக என்றால் அந்நாட்டுக்குச் சொந்தமான தீவுகள் தங்களுடையதாம்!
    இந்த மாதிரி ஆக்கிரமிப்பு வெறியும், ராணுவத் திமிரும் கொண்டதாக கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் மாறி விடுகிறார்கள் .

    ஒரு இந்தியர் சுதந்திரமாக அமெரிக்காவுக்கு சென்று படிக்கலாம், வேலை பார்க்கலாம், அந்த நாட்டு குடி உரிமை வாங்கலாம்
    சீனாவில்? ஒரு கொசுவைக் கூட உள்ளே சேர்க்க மாட்டார்கள்.
    எவனோ சொன்னானாம்- ‘நீ அரிசி கொடு வா, நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து ஊதி ஊதி சாப்பிடலாம்’ என்று
    அது மாதிரிதான் சீனா. அள்ளிக் கொள்ள வேண்டும். கிள்ளிக் கூடக் கொடுக்கக் கூடாது.

    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து இரண்டில் ‘ஹிந்தி சீனி பாய் பாய்’ என்று நேருவுடன் சூ என்லாய் தோள்மீது கை போட்டுப் பாண்டுங்கில் பேசிய சிறிது நாட்களிலேயேஎதிர்பாராத நேரத்தில் நம் மீது படை எடுத்து நம் நாட்டின் முப்பத்து எட்டாயிரம் சதுர மைல்களை இன்று வரை ஆக்கிரமித்து இருக்கும் வஞ்சக நாடு சீனா , வஞ்சகத் தலைவர்கள் சீனா கம்யூனிஸ்டுகள்
    இதுதான் கம்யூனிசம். இப்படித்தான் இருப்பார்கள் கம்யூனிஸ்டுகள்.!
    ஆகவே இந்தக் கதையெல்லாம் வேறு இடத்தில் கூறும் நண்பரே!
    இரா. ஸ்ரீதரன்

  27. ‘அதிகாரம் துப்பாக்கிக் குழாயில் பிறக்கிறது ‘ என்று திருவாய் மலர்ந்து அருளிய மாவோ செடாங் போன்ற காட்டு மிராண்டிகள் தான் கம்யூனிஸ்டுகள்!
    தன கருத்துக்களுடன் உடன் படாத, அல்லது தனக்கு அரசியல் எதிரிகளான லட்சக்கணக்கான மக்களைக் கொன்றவர் ஸ்டாலின் என்ற உத்தமமான கம்யூனிஸ்ட்.

    லெனினும் இதற்குக் கொஞ்சமும் குறைந்தவர் அல்ல .

    இரா. ஸ்ரீதரன்

  28. ஸ்ரீ பாலாஜி ஒரு பெரும் பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டிருக்கிறீர்கள். முதலாளித்துவ சந்தைப்பொருளாதாரத்தை ஏற்பதில்லை என்றாலும் கம்யூனிஸ்ட் அல்லன் என்பதால் உங்கள் கட்டுரைத்தொடரில் தொடர்ந்து பின்னூட்டம் எழுத முயல்கிறேண்.
    ஸ்ரீ பாலாஜி உங்கள் கட்டுரையின் நோக்கங்கள்
    முழுமையான பொதுவுடைமை சமுதாயம் என்பது எவ்வாறு
    (அ) இயற்கை நியதிகளுக்கு எதிரானது.
    (ஆ) அறிவியலுக்கு எதிரானது.
    (இ) நடைமுறை எதார்த்தத்திற்கு எதிரானது.
    (ஈ) மனிதனின் நாகரீக முதிர்ச்சியில் நாம் அடைந்த வளர்ச்சியை பின் நோக்கி கொண்டு செல்லக் கூடியது.
    (உ) மானுட தேடலின் உச்சமான நம் ஹிந்து மரபுகளுக்கு எதிரானது என்பதை
    நிறுவ முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
    இவையெல்லாம் நீங்கள் நிறுவவேண்டும் என்று அடியேன் வாழ்த்துகிறேன். அதோடு காபிடலிஸம் சந்தைப்பொருளாதாரம் எப்படி
    1. இயற்கையோடு இயைந்தது
    2. அறிவியலோடு ஒத்தது
    3. இயல்பானது யதார்த்தமானது
    4. நாகரிக வளர்ச்சிக்கு வழிவகுப்பது
    5. நமது ஹிந்து மரபின் அடிப்படை கூறுகளுக்கு இயைந்தது என்றும் நீங்கள் விளக்கினால் பயனுடையதாக இருக்கும்.
    அடியேனைப்பொறுத்தவரையில்
    1. உலக சுற்று சூழலை நாசமாக்கி மனித சமுகத்தின் எதிர்காலத்தினை க்கேள்விக்குறியாக்கியிருப்பது முதலாளித்துவம்.
    2.அறிவியல் வளர்சிக்கும் முதலாளித்துவத்திற்கும் தொடர்பு உண்டு என்றாலும் கம்யூனிஸ்த்திலும் அது வளர்ந்தது.
    3. சந்தைப்பொருளாதாரம் இயல்பானது அன்று. ஒரு சிலர் பொருளாதாரத்தில் மட்டற்ற அதிகாரம் செலுத்த கட்டுப்படுத்த வழிவகுப்பது.
    4. உலகத்தில் நடக்கும் அனாகரிக செயல் காம்த்தினை கேளிக்கையை அடிப்படையாகக்கொண்ட வாழ்க்கை முறைக்கும் மூலம் முதலாளித்துவமே.
    5. முதலாளித்துவத்தின் மூலம் மனிதனை மையமாகக்கொண்ட அபிராகாமிய கருத்தியல். கால்வினிஸ்டு புராட்டஸ்டண்டு கருத்தியல் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்றூ மேக்ஸ் வேபர் கூறவார். சந்தைப்பொருளாதாரம் ஜடவாதம் (மெடீரியலிசம்) ஹிந்து மரபின் ஆன்மீகத்திற்கு மாறானது. கம்யூனிசம் குழுவை மையமாக்கொண்டால் காபிடலிஸம் தனிமனிதனின் கட்டற்ற போகத்தினைப் போற்றுகிறது.

  29. ” தனக்கு அரசியல் எதிரிகளான லட்சக்கணக்கான மக்களைக் கொன்றவர் ஸ்டாலின் என்ற உத்தமமான கம்யூனிஸ்ட். “-

    அன்புள்ள ஸ்ரீதரன் ,

    சீன கம்யூனிஸ்டு ஆவணங்களின்படியே ஒன்றரைக்கோடி மக்களை கொலை செய்துள்ளனர். ரஷ்யாவில் பஞ்சம் மற்றும் பட்டினி கொடுமையால் இறந்தோர் பல கோடி. ஏனெனில் ரஷ்யாவில் ஒரு ஆவணமும் பராமரிக்கப்படவில்லை. ஷா கமிசன் அறிக்கைகளை தேடி தேடி இந்திரா காந்தி அழித்தது போல, கம்யூனிஸ்டுகள் தங்களுக்கு எதிரான எல்லா ஆவணங்களையும் , தங்கள் ஆட்சிக்காலத்திலேயே அழித்து விட்டனர். எனவே, ஸ்டாலின் ரஷ்யாவில் லட்சக்கணக்கான மக்களை கொன்றார் என்பதை கோடிக்கணக்கான என்று திருத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

  30. ஸ்டாலின் போன்றோர் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றனர் என்று நான் திருத்திக் கொள்கிறேன்

  31. முக ஆட்சியில் மேயர் மா. சுப்பிரமணியம் தலைமையில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும் என்று அடித்த கூத்து எவ்வளவு?
    ஏன் இவர்கள் டாஸ்மாக்கை மட்டும் தமிழில் மொழி பெயர்க்கவில்லை?
    தமிழக அரசு சாராய நிறுவனம் என்று எழுதி இருக்கலாமே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *