இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை: கையெழுத்து இயக்கம்

முப்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில் இந்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. குடியுரிமை வழங்க வேண்டும் கோரிக்கையை வலியுறுத்தி குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் தலைமையில் இயங்கும் வாழும் கலை (Art of Living) அமைப்பு தமிழமெங்கும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

இந்த இயக்கத்திற்கு முழு ஆதவரளிக்குமாறு எமது வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் பகுதியில் உள்ள வாழும் கலை அமைப்பு தன்னார்வலர்களைத் தொடர்பு கொண்டு கையெழுத்து இயக்கத்தில் பங்கு பெறலாம்.

இணையம் மூலம் ஆதரவு தெரிவிக்க, Online Petition படிவத்தில் கையெழுத்திடவும்.

இது குறித்து மேலும் அறிய 9843014387, 9003931478 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

8 Replies to “இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை: கையெழுத்து இயக்கம்”

  1. மிக நல்ல வரவேற்கத்தக்க முயற்சி.
    அடியேன் எனது கையொப்பத்தினை இணையத்தில் பதிவுசெய்துவிட்டேன். அனைவரும் கையெழுத்திடுவதோடு தத்தம் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்வது நலம்.
    அன்புடன்
    விபூதிபூஷன்

  2. ரவிசங்கர்ஜி அவர்கள் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்.முதலில் அவர்க்கு தாழ் பணிந்து எந்தன் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
    இலங்கை தமிழ் அகதிகள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.ஆனால்,அவர்கள் வாழவேண்டிய இடம் இந்த நாடு அல்ல.
    அவர்களின் பூர்விகம் இலங்கா தேசம்.அவர்களின் சொந்த நிலம் சிறிலங்காவில் உள்ளது.அவர்களுக்கு உரிய இடம் உரிமை சுதந்திரம் எல்லாம் அவர்களை ஆளும் அதிகார பெரும்பான்மை அமைப்பிடம் உள்ளது.அதை மீட்டு தமிழ் மக்களுக்கு பகிர்ந்து அளிக்க அனைவரும் முயலவேண்டும்.அதை விடுத்து அவர்களுக்கு இந்திய குடி உரிமை அளிக்க வேண்டுமென்பது இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.அப்படியானால் பங்களா தேசத்திலிருந்து இங்குவந்து அஸ்ஸாமில் இருந்து கொண்டு காங்கிரஸ் அரசியல்வாதிகளை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு குடியுரிமை ஓட்டுரிமை எல்லாம் வாங்கிக்கொண்டு இப்போது அங்குள்ள மண்ணின் மைந்தர்களை அடித்து விரட்டுகிறார்கள் .இந்த கயவர்களை விரட்டுவதே பெரும்பாடு .அதற்க்கு நம்ம ஊர் அரசியல் வாதிகள் குறுக்கே நிற்கிறார்கள்.இலங்கையிலிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் ஹிந்து மக்களே அவர்களுக்கு இலங்கையில் சகல உரிமைகளும் கிடைக்க சுவாமிஜி அவர்கள் பாடுபட வேண்டுமாய் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.
    ஈஸ்வரன்,பழனி.

  3. பெருமதிப்பிற்குரிய ஈஸ்வரன் அவர்களுக்கு ,

    தங்கள் கடிதம் மிக தெளிவாக உள்ளது. ஆனால் உண்மை வேறு. அன்றைய கிழக்கு பாகிஸ்தான் என்ற நாட்டிலிருந்து ( இன்றைய பங்களாதேஷ் ) ராணுவ ஆட்சியாளர்களின் கொடுமை, மற்றும் வறுமை தாங்காமல் , ராணுவத்தால் விரட்டி அடிக்கப்பட்டும் , அந்த நாட்டில் வாழ முடியாமல் தாங்களேயும், கோடிக்கணக்கான கிழக்கு பாகிஸ்தானியர்கள் இந்திய எல்லைக்குள் புகுந்தனர். அவர்களில் தொண்ணூற்று ஐந்து சதவீதம் பேருக்கு , மத்திய மற்றும் மாநில காங்கிரசு அரசுகள் ரேஷன் கார்டுகள் கொடுத்ததும் , வாக்காளர் பட்டியலில் திருட்டுதனமாக சேர்த்தும் விட்டன. எஞ்சியுள்ள ஐந்து சதவீத பங்களாதேசியரை இந்திய குடிமக்களாக அங்கீகாரம் அளிப்பதை எதிர்த்து தான் இப்போது நாம் போராடிவருகிறோம்.பங்களா தேசிகளை காங்கிரசு அரசு திருப்பி அனுப்பாது என்பது வெள்ளிடை
    மலை.

    ஆனால் , இலங்கைத்தமிழருக்கோ , இந்த சலுகைகள் எதுவம் கிடைக்கவில்லை. பங்களா தேசிகள் இந்தியா வேண்டாம் என்று அங்கு பிரிவினையின் போது ஓடியவர்கள் ஆனால் , இலங்கை தமிழர்கள் இந்திய வம்சாவளியினர். இந்தியா வேண்டாம் என்று ஓடியவர்கள் அல்ல. அவர்கள் எங்களுக்கு தொப்புள்கொடி உறவு. இந்த வேறுபாடு பற்றி சரியாக அறியாமல் தாங்கள் எழுதியுள்ளீர்கள் என்று தெரிகிறது. இலங்கையில் அமைதி திரும்பி, அவர்கள் இலங்கை திரும்ப விரும்பினால் , அப்போது அவர்கள் தாராளமாக செல்லலாம். ஆனால் அந்த நிலை வரும்வரை, அவர்களுக்கு பூரணமான இந்திய தமிழன் என்ற குடியுரிமை அளிப்பது நம் கடமை ஆகும். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வாழமுடியாது தான் அவர்கள் நம்நாட்டில் அடைக்கலம் புகுந்தனர். எனவே, இலங்கையில் இருந்து ஓடிவந்தோரை , இனியும் தாமதிக்காமல் உடன் இந்திய .
    குடியுரிமை வழங்குதலே நியாயம்.

  4. திரு.ஈஸ்வ‌ர‌னுடைய‌ க‌ருத்தை நானும் ஆத‌ரிக்கிறேன். இந்தியாவில் முகாம்க‌ளில் அடைத்து வைக்க‌ப்ப‌ட்டிருக்கும் இல‌ங்கை அக‌திக‌ளின் ம‌னித‌வுரிமைக‌ளை ம‌தித்து, அவ‌ர்க‌ளையும் ம‌னித‌ர்க‌ளாக‌ உண‌ர்ந்து, அவ‌ர்க‌ளின் குழ‌ந்தைக‌ளுக்கு க‌ல்வி, வேலைவாய்ப்பு வ‌ச‌திக‌ளை அளிக்க‌ வேண்டுமே த‌விர‌ இந்திய‌க் குடியுரிமையென்ப‌து தேவையில்லாத‌வொன்று.

    ஏற்கன‌வே யுத்த‌த்தினாலும், ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ த‌மிழ‌ர்க‌ள் மேலைநாடுக‌ளுக்கு இட‌ம்பெய‌ர்ந்த‌மையாலும் ச‌ன‌த்தொகை குறைந்து, முஸ்லீம்க‌ள் த‌மிழ‌ர்க‌ளை விட‌ அதிக‌மாகிக் கொண்டு வ‌ரும் வேளையில் இந்தியாவில் அக‌தியாக‌ உள்ள‌ த‌மிழ‌ர்க‌ளையும் இந்தியா ஏற்றுக்கொண்டால் அது எதிர்ம‌றைவான‌ விளைவுகளை ஈழ‌த்தில் ஏற்ப‌டுத்தும். இந்தியாவிலுள்ள‌ ஈழ அக‌திக‌ள் மீண்டும் இல‌ங்கைக்குப் போய்த் த‌ம‌து சொந்த‌ வீடுக‌ளிலும் குடியேற‌வும், இல‌ங்கை இராணுவ‌த்தாலும் சிங்க‌ளக் குடியேற்ற‌ங்க‌ளாலும் ஆக்கிர‌மிக்க‌ப்ப‌டும் அவ‌ர்க‌ளின் சொந்த‌ நில‌ங்க‌ளை மீட்க‌வும் இந்தியா உத‌வ‌வேண்டும். இந்தியாவினால் அளிக்க‌ப்ப‌டும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கான‌ நிதியுதவிக‌ளும், முதலீடுக‌ளும் உண்மையில் அவ‌ர்க‌ளுக்குப் போய்ச் சேர்கிற‌தா அல்ல‌து இந்திய‌ இந்துக்க‌ளின‌தும், த‌மிழ்நாட்டு ம‌க்க‌ளின‌தும் வ‌ரிப்ப‌ண‌ம் சிங்க‌ளவர்க‌ளைக் குடியேற்ற‌வும், வ‌ர‌லாற்றுப் புக‌ழ்வாய்ந்த‌, தேவார‌ப்பாட‌ல் பெற்ற‌ எங்க‌ளின் சிவால‌ய‌ங்க‌ளை ஆக்கிர‌மிக்க‌வும், புத்த‌ர் கோயில்களை இந்துக் கோயில்க‌ளின் காணிக‌ளில் க‌ட்ட‌ப்ப‌டுவ‌த‌ற்கும் உத‌வுகிற‌தா என்ப‌தை இந்தியா அறிய‌ வேண்டும். யாழ்ப்பாண‌த்தில் ஏற்க‌ன‌வே த‌மிழ‌ர்க‌ளின் ச‌ன‌த்தொகை குறைந்த‌தால் நான்கு பாராளும‌ன்ற‌ தொகுதிக‌ளை இழ‌க்கிறார்க‌ள் த‌மிழ‌ர்க‌ள். அர‌சாங்க‌த்தின் ப‌க்க‌ச்சார்புள்ள‌ திட்ட‌மிட்ட‌ குடும்ப‌க்க‌ட்டுப்பாட்டுத் திட்ட‌த்தாலும் த‌மிழ‌ர்க‌ளின் எண்ணிக்கை ஈழ‌த்தில் குறைந்து வ‌ருகிற‌து. இந்த நிலையில் இந்திய‌க் குடியேற்ற‌ம் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு அளிப்ப‌து தேவைய‌ற்ற‌து.

    அத‌ற்குப் ப‌திலாக‌ இல‌ங்கைத் த‌மிழ் அக‌திக‌ளை எதிரிகளாக‌,இன்னும் பயங்க‌ர‌வாதிக‌ளாக‌ பார்க்காம‌ல் ம‌னித‌வுரிமைகளை வ‌ழ‌ங்கித், திபெத்திய‌ர் போன்ற ஏனைய‌ அக‌திக‌ளுக்கு வழ‌ங்கும் க‌ல்வி, வேலைவாய்ப்பு போன்ற‌வ‌ற்றை இப்போதைக்கு வ‌ழ‌ங்க‌லாம்.

    மேலை நாடுக‌ளில் புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ள் அந்த‌ந்த‌ நாடுக‌ளில் குடியுரிமை பெற்ற‌து ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பொருளாதார‌த்தை, க‌ல்வித்த‌ர‌த்தை ம‌ட்டும‌ல்ல‌, அவ‌ர்களில் ப‌ல‌ரை ஈழ‌த்தில் முத‌லீடு செய்யும‌ள‌வுக்குப் ப‌ண‌க்கார‌ர்க‌ளாக‌வும் உயர்த்துவ‌த‌ற்கு ஏதுவாக அமைந்த‌து. ஆனால் இந்திய‌க் குடியுரிமையால் இவ‌ற்றையெல்லாம் இல‌ங்கை அக‌திகள் பெற‌முடியாது. அவ‌ர்க‌ள் இந்திய‌க் க‌ட‌வுச்சீட்டை ம‌ட்டும் கையில் வைத்துக் கொண்டு இல‌ங்கையிலிருந்த‌தை விட‌ ஏழ்மையான‌ நிலையில் தான் தொட‌ர்ந்தும் இந்தியாவில் இருக்க‌ப் போகிறார்க‌ளே த‌விர‌ இந்திய‌க் குடியுரிமையால் பெரிதாக எந்த‌ நன்மையும் அவ‌ர்க‌ளுக்கு ஏற்ப‌ட‌ப் போவ‌தில்லை என்ப‌து தான் உண்மை.

  5. அனைவருக்கும் வணக்கம்,

    ஒருமுறையாவது அகதிகள் முகாமுக்கு சென்று அங்குள்ள அகதிகளின் நிலையை பார்த்தால்தான்

    ஏன் இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்?
    என்பது நமக்குப்புரியும்.

    1) இங்கு அகதிகள் முகமில் உள்ள இலங்கைத்தமிழர்மீது மனிதத்தன்மை அற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள. அவர்களால் ஒரு இரவுகூட முகாமுக்கு வெளியில் தங்கமுடியாது மாலை 5 மணிக்குள் முகாமுக்கு திரும்பியாகவேண்டும் இதனால் அவர்களால் பக்கத்தில் உள்ள ஊர்களுக்குகூட சென்று நல்லவேலைசெய்து நாலுகாசு சம்பாதிக்கமுடியாது குடியுரிமை இந்தநிலையை மாற்றும்.

    2) அவர்களுக்கு அவர்தம் தாய் நாட்டில் வாழ வழி ஏற்படுத்த வேண்டும் உண்மைதான். இன்றைய யதார்த்த நிலையில் யாரால் அதை சாதிக்கமுடியும்? குறைந்தது அவர்கள் இந்திய குடியுரிமை பெறவாவது நாம் முயற்சி செய்யலாமே?

    3) இங்குள்ள தமிழ் அகதிகளாலும் முன்னேற முடியும், தொழில் முனைவோராகமுடியும். இலங்கையில் உள்ள தமிழர்களின் மீட்சிக்கு உதவமுடியும்

    4) குடியுரிமையும் வாக்குரிமையும் பெறும் அவர்கள் கண்டிப்பாக இலங்கையில் உள்ள தமிழினத்தைப் பாதுகாக்கும், ஏன் உலக தமிழினத்தின் மேன்மைக்கே உழைக்கும் மாபெரும் சத்தியாக இருப்பார்கள்.

    5) குறைந்த பட்சம் தனதுமண்ணிலாவது அவர்களை மனிதர்களாக நடத்திய பெருமை தமிழகத்தமிழனுக்குக் கிடைக்கும்.

    இந்த அற்புதமானபணியை முன்னெடுத்துள்ள ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரவர்களும், அவரது வாழும்கலை அமைப்பும் போற்றுதலுக்குறியவர்களாவர். இவ்வியக்கத்தில் நாமும் பங்கேற்று இலங்கைத்தமிழ் அகதிகள் இந்தியக்குடியுரிமைபெறப் பாடுபடவேண்டும்.

  6. தண்டபாணி அவர்களின் கடிதம் , இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவேண்டியதின் அவசியத்தை தெளிவாக விளக்கி விட்டது. இந்திய அரசு செய்யத்தவறினால், வரும் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் காங்கிரசுக்கும் அதன் கூட்டணி கொள்ளையர்களுக்கும் ஜாமீன் தொகையை பறிப்போம்.

  7. திவ்யா சரியாக சொல்லியுள்ளார். தமிழர்களின் எண்ணிக்கையை குறைப்பதே ராஜபக்சேவின் உள்நோக்கு. ரவிசங்கர் ராஜபக்சவை சந்தித்துள்ளார் இலங்கைக்கு வந்தபோது. என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இப்பொழுது சந்தேகம்தான் வருகின்றது. முதலில் பொருளாதார கல்வி சுகாதார உதவிகளை இந்திய அரசு செய்யட்டும் .1970களில் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட 5 லட்சம் தமிழர்களுக்கு இந்தியா என்ன செய்தது என்பதை ரவிசங்கர் ஐயா முதலில் சொல்வாரா. அவர்கள் இன்னும் உரிமை அற்று பசி பட்டினியில் வாழ்வது அவருக்கு தெரியாதா. தயவுசெய்து ராஜபக்சேவின் கள்ள திட்டத்திற்கு இவர் உதவி செயாதிருப்பராக.

    ரிஷி

  8. Jai Guru Dev
    டியர் குருஜி உங்களுடைய இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி பெரும். ரிஷி சகோதரரே தயவு செய்து நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *