நலம் பெறப் பிரார்த்திப்போம்!

திரு. வி.சண்முகநாதன் குறித்த இந்த செய்தியும், கோரிக்கையும் நமக்கு மின் அஞ்சலில் வந்தது. அதனை அப்படியே கீழே தருகிறோம் –

Buy inderal tablet in india from leading online pharmacy at www.drugstores.in, which is the only online inderal online retail pharmacy. While there Pérama clomid price in ksa are multiple published estimates of cost of care with clomid, the most recent published estimates of the cost per patient with clomid are still relatively outdated. How much xenical orlistat can i take xenical orlistat, xenical orlistat 120 mg / 60 pills / day with diet and exercise for fat loss.

Gabapentin 100mg dosage for nerve pain is one of the most effective and rapidly effective drugs for neuropathic pain, and it appears to work on all types of neuropathic pain in a broad population of patients with neuropathic pain. In this way, the steroid will help to control the symptoms and prevent the granularly clomid price range patient from developing the disease again. The amount that you take depends on your condition, how it's given, and your response to it.

Yeniden yarın iyiliğini alacak olan bilginç bir karışıklık var. What buy clomid without prescription is the most important information i should know about amoxicillin 500mg price walgreens. Medications are prescribed to prevent and treat depressive and anxiety disorders.

பாரதிய ஜனதா கட்சி- நாடாளுமன்றக் கட்சியின் (BJP – Parliamentary Party) கூடுதல் செயலாளராக இருக்கும் திரு.வி.சண்முகநாதன் அவர்கள் உடல்நலம் குன்றி புதுதில்லியில் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அண்மையில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஸ்வயம்சேவகராக உள்ள திரு. வி.சண்முகநாதன், முழுநேர ஊழியராக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர், தமிழக மாநில அமைப்பாளராகவும், தென்பாரத பிரசாரச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றியவர். இவரது முயற்சியால் தான் ‘திருக்கோவில் பக்தர் பேரவை’ என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்பு கோவில்களில் உழவாரப்பணிகள் பலவற்றை செய்து வருகிறது.

கடந்த பத்தாண்டுகளாக பாரதீய ஜனதா கட்சியில் செயல்பட்டுவரும் திரு. வி.சண்முகநாதன், தற்போது பாரதிய ஜனதா கட்சி- நாடாளுமன்றக் கட்சியின் கூடுதல் செயலாளராக உள்ளார். புதுதில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்து கட்சிப் பணியாற்றி வருகிறார். சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான திரு.வி.சண்முகநாதன், தமிழிலும் ஆங்கிலத்திலும் தேசிய நலம் காக்கும் பல கட்டுரைகளை எழுதி வருகிறார்.’தொண்டர்தம் பெருமை’ உள்ளிட்ட பல நூல்களை எழுதி இருக்கிறார்.

அன்னார் விரைவில் பரிபூரண ஆரோக்கியத்துடன் உடல்நலம் பெற பிரார்த்திக்க வேண்டுகிறோம். ஆலயங்களில் பிரார்த்தித்து குங்குமப் பிரசாதங்களை அவரது முகவரிக்கு அனுப்பி வைப்போம்.

அன்னாரது முகவரி:

V.SHANMUGANATHAN,
BJP HeadQuarters,
11, Ashoka Road,
NewDelhi – 110001

16 Replies to “நலம் பெறப் பிரார்த்திப்போம்!”

 1. ஸ்ரீ சண்முகனாதன் ஜி அவர்களைப்பலமுறை ப்பார்த்திருக்கிறேன். பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தக்காலத்தில் அவரது உரைகளை க்கேட்டிருக்கிறேன். ஆழமானக்கருத்துக்கள் தெளிவான உரைகள் அவருடையவை. சிதம்பரம் ஆருத்ராதரிசனத்தின் போது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் அவரோடு மீண்டும் உரையாடும் வாய்ப்புகிடைத்தது. அவரது சிரித்த முகம் அனைவரையும் கொள்ளைக்கொள்ளும். ஸ்ரீ சண்முகனாதன் ஜி பூரண உடல் நலம்பெற்று மேலும் பல்லாண்டுகள் வாழ அவரது பாரத ஸேவை சிறப்பாய் தொடர எல்லாம் வல்ல எந்தை ஈசனை வேண்டுகிறேன்.
  சிவஸ்ரீ.

 2. ஸ்ரீவாஞ்சியம் அருகில் உள்ள அன்பர்கள் சண்முகநாதன் அவர்களுக்காக ஸ்ரீவாஞ்சியம் கோவிலில் சென்று தீபம் ஏற்றி பிரார்த்தியுங்களேன். நன்றி.
  எங்கள் பிரார்த்தனையும் உண்டு. நன்றி.

 3. ஸ்ரீ சண்முகநாதன் சென்னை காரியாலயத்தில் இருக்கையில் என்னுடன் நெருங்கிப் பழகியவர். எல்லா பத்திரிகையாளர்களிடமும் நன்கு பழகுவார். அவரது பண்பு நலன்களே அனைவரும் அவரிடம் நெருங்கிப் பழகும் சூழலை உருவாக்கியது. என்னைச் சங்கத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு அவரது ஸ்கூட்டரிலேயே அழைத்துச் சென்று தமிழகக் கிளைச் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்த அனைவருடனும் எனக்கு அறிமுகம் கிடைக்க வழிசெய்தவர். ஒருமுறை என்னை வேலூரில் நடந்த பைட்டக்கிற்குக் கூட அழைத்துச் சென்று இரண்டு நாள் சங்கத் தொண்டர்களுடன் கலந்துறவாட வாய்ப்பளித்தார். தனி நபராக நான் ஹிந்து சமூக நலப் பணிகளில் ஈடுபட்டிருப்பதை வெகுவாகப் பாராட்டுவார். என்னைவிட வயதில் இளையவர். அவர் உடல் நலம் குன்றியது அறிந்து வியப்பாகவும் வேதனையாகவும் உள்ளது. அவரைப் போல் சுறுசுறுப்பாகக் களப்பணி யாற்றுபவர்கள் ஹிந்து சமுதாயத்திற்கு மிகவும் அவசியம். அவரது மின்னஞ்சல் கிடைத்தால் உதவியாக இருக்கும்.
  -மலர்மன்னன்

 4. ஒன்று சொல்ல மறந்தேன். தமிழகப் பத்திரரிகையாளர்களிடையே ஆர். எஸ் எஸ் பற்றி நிலைகொண்டிருந்த தவறான அபிப்ராயங்களை மாற்றியதில் சண்முக நாதனுக்குப் பெரும் பங்கு உண்டு. சோ உள்ளிட்ட நாங்கள் பலரும் சங்கத்தைப் பற்றிய விளக்கங்கள் பலவற்றை சண்முகநாதனிடம் கேட்டுப் பெற்றுத் தெளிவடைந்திருக்கிறோம். ஆர் எஸ் எஸ் என்றாலே வெளியார் உள்ளே புக முடியாத இரும்புக் கோட்டை என எண்ணாதீர்கள் என்று சொல்லி என்னை சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர் எஸ் எஸ் தலைமையகத்திகற்குள் முதன் முதலில் அழைத்துச் சென்றவர் அவர்தான்.
  -மலர்மன்னன்

 5. மானனீய ஸ்ரீ சண்முகநாதனஜி அவர்கள் நலம்பெற ஈசன் அருள் செய்ய வேண்டும். அவரது தேச சேவை தொடர இறைவன் அருள் செய்ய வேண்டும். திருவாளர் அவர்கள் சொற்பொழிவு விவேகனந்தர் இப்படி தான் இருபரோ என ஞாபகம் வருமே! ஜி அவர்கள் பாரம்பரிய பண்பாடான சிவ பக்தி குடும்பத்தில் பிறந்து தேச சேவை செய்ய வாழ்வை துறந்தவர், சில கிராமம், கோயில்களுக்கு சொந்தகாரர், இருந்தாலும் மற்றவர்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் குடும்பத்தை சேர்ந்தவர், அவரது குல தெய்வ கோயிலில் நாகூர் தெத்தியில் பிரார்த்தனை செய்து பிரசாதம் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன்.

 6. தாங்கள் உடல் நலமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 7. மானனீய ஸ்ரீ சண்முகநாதன்ஜி அவர்கள் நலம்பெற ஈரோடு ஸ்ரீ பெரியமாரியம்மனிடம் பிரார்திக்கின்றோம்…. ஈரோட்டு சகோதரர்கள்.

 8. திரு.சண்முகநாதன் அவர்களின் உடல் நலமடைய எல்லாம் வல்ல பராசக்தியை பிரார்த்திப்போமாக.

 9. நான் சென்னையில் கார்ய கர்த்தாவாக இருந்த பொது, ஸ்ரீ சண்முகநாதன் ஜி அவர்களின் உற்சாக பேச்சுக்களும் வழி காட்டுதல்களும் பெரிதும் உதவின.
  மலர் மன்னன் அவர்கள் கூறியபடி, மாற்றுக்கருத்துக்கள் உடையவர்களிடமும் மிகவும் மென்மையாக பேசக்கூடியவர்.

  சண்முகநாதன் ஜி RSS இயக்கத்திலேயே, தமிழ் நாட்டிலேயே இருந்திருக்கவேண்டும் என்பது என் எண்ணம். RSS இன்று தமிழகத்தில்
  பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கும் என்பது என் கருத்து. இவரை பிஜேபிக்கு அனுப்பியதில் ஏதேனும் உள் குத்து இருந்திருக்குமோ என்ற ஐயம் எனக்கு உண்டு.

  அவர் மீண்டும் நலம் பெற்று தாய் நாட்டுப் பணியில் ஈடு பட இறைவனிடம் அனைவரும் பிரார்த்திப்போம்.

 10. திரு சண்முகநாதன் அவர்கள் நலமுடன் மீண்டும் தாயக பணிக்கு வர எல்லாம் வல்ல இறைவனை அருள் புரிய வேண்டும்

 11. திரு.சண்முகநாதன் ஜி பூரண குணமடைய எல்லாம் வல்லம் எம்பெருமான் ராமான் அருள் புரிய வேண்டும் கூடிய விரைவில் பூரண குணமடைந்து பொதுத் தொண்டில் பணியாற்ற வர இறைவன் அருள் புரியட்டும்

 12. நான் சென்னை வந்தபோது முதன்முதலாக அவருடைய பௌதிக்கை சங்க முகாமில் கேட்டுரிக்கிறேன்.அதற்க்கு முன்னால் சன் தொலைகாட்சி போன்ற ஊடகங்களில் விவாதத்தில் பங்கெடுத்து அவர் முன்வைக்கும் அணித்தரமான வாதத்தை கேட்டு வியந்து இருக்கிறேன்…ஸ்ரீ சண்முகநாதன் ஜி மீண்டும் பூரண நலம் பெற்று பாரத அன்னையின் புகழ் ஒங்க ஓயாது உழைக்கும் சக்தியை இறைவன் அவருக்கு அளிக்கவேண்டும் என்று நான் அனுதினமும் வணங்கும் ஸ்ரீ ராகவேந்திரரிடம் வேண்டுகிறேன்….

 13. அன்பிற்கினிய திரு ஷண்முகநாதன் ஜி..தாங்கள் பரிபூரண நலம் பெற்று புதிய உற்சாகத்துடன்பல்லாண்டு பாரத அன்னைக்கு சேவை புரிய நான் வணங்கும் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனை பிர்ரார்த்திக்கிறேன்

  எஸ்.ஆர்.சேகர்..-கோவை

 14. ஹிந்து உணர்வு எங்கு மங்கலாகவும் சவாலைச் சந்திக்க வேண்டியும் உள்ளதோ அங்குதான் திறமையாகவும் சளைக்காமலும் இயங்குபவர்களை நியமிக்க வேண்டும். அவர் தில்லி சங்கக் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதே தமிழகத்துக்கு இழப்புதான். அதிலும் இப்போது அவர் பா ஜ க தலைமையகம் சென்றுவிட்டார் என்பதை இச்செய்திக்குப் பிறகுதான் கேள்வியுற்றேன். அவர் தமிழகம் திரும்பி வந்து முன்போல் செயல்பட வேண்டும் என்பது என் விருப்பம்.
  -மலர்மன்னன்

Leave a Reply

Your email address will not be published.