மோடியின் குஜராத் – நூல் மதிப்புரை

உலகநேரி கண்மாயும் உயர்நீதி மன்றமும்:

வளர்ச்சியின் நாயகன்
வளர்ச்சியின் நாயகன்

வயல்வெளிகள் எல்லாம் கட்டிடங்களால் காணாமல் போய்விட்டன. ஏரிகளைப் பங்கு போட்டு ஏராளமாய் அரசியல்வாதிகள் சம்பாதித்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் பல வருடங்களாக அடிபடுகிறது.

“நீராதாரங்களை பாதிக்கும் வகையில் குடியிருப்புகளை உண்டாக்குவது தவறு” என்று மதுரை உயர்நீதி மன்றமும் தனது தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டிருந்தது. இதை விடக் கொடுமை இருக்க முடியாது என்று நினைக்கிறேன். இந்தத் தீர்ப்பை வெளியிட்ட மதுரை உயர்நீதி மன்றமே உலகநேரி கண்மாய் என்ற ஏரியின் பரப்பில் தான் கட்டப்பட்டிருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இது தான் தமிழர்களின் தலைவிதி.

சினிமா மீதும் பரபரப்பு அரசியல் மீதும் உள்ள ஆர்வத்தால் ஒரு தலைமுறையையே வீணடித்துவிட்ட தமிழ்நாட்டில் , ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் புத்தகம் ஒன்று வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தச் செய்தி வந்து முட்டுகிறது.

modibook1“இப்போதெல்லாம் கல்யாணங்களில் இதைத்தான் பரிசாகக் கொடுக்கிறேன். இதைப் படித்துவிட்டீர்களா?” என்று திரு.இல. கணேஷன் கேட்டார். இந்தக் கேள்வியை இதற்கு முன்பே மூன்று பேர் கேட்டுவிட்டார்கள். இதற்கு மேல் தாமதம் செய்தால் கமல் பக்கம் கட்சி மாறிவிட்டதாக நினைப்பார்கள் என்பதால் தி.நகரில் உள்ள கிழக்கு புத்தகக் கடைக்குப் போய் “ மோடியின் குஜராத்” புத்தகத்தை வாங்கினேன்.

வீடு திரும்பும் வழியில் ஒரு அலைபேசி அழைப்பு. புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி. ஞானாலயா என்பது கிருஷ்ணமூர்த்து உருவாக்கியுள்ள நூல்நிலையத்தின் பெயர். இங்கு 85000 புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்களைப் பாதுகாப்பதற்காகவே இவர் பாச்சை உருண்டைகள் வாங்குவதற்காக ஆண்டிற்கு ரூ25000 செலவழிக்கிறார்.

நல்ல படிப்பாளியான கிருஷ்ணமூர்த்தி தற்காலக் கல்விமுறை பற்றி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். தமிழில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யும் ஒரு ஆசிரியர் “பெரிய புராணத்தில் ஆண்டாளைப் பற்றிய செய்தி எங்கே இருக்கும்” என்று கேட்டாராம். இது கூடப் பரவாயில்லை. இன்னொரு ஆசிரியர் “ கவுந்தி அடிகள் ஆணா? பெண்ணா?” எனக் கேட்டாராம். கிருஷ்ணமூர்த்து மேலும் தன் உளக்குமுறலை வெளிப்படுத்த வழியில்லாமல் எனது செல்லில் சார்ஜ் போய்விட்டது.

செல் வேலை செய்ய வேண்டுமானால் முந்தைய இரவே அதை சார்ஜ் செய்யவேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் சார்ஜ் செய்வதற்கு மின்சாரம் வேண்டும் என்பது அதனுடைய உபவிதி. நாம் இருப்பது தமிழ்நாடு சுவாமி. நம்முடைய வயிற்றெரிச்சலை அதிகப்படுத்தவே சரவணன் தங்கதுரை “மோடியின் குஜராத்” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

பக்.16 – மற்ற மாநிலங்கள் எல்லாம் மின்சாரத்துக்காகச் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது , குஜராத்தில் மட்டும் எப்படி மின்சாரம் உபரியாகக் கிடைக்கிறது?

பக்.18 – முதல்கட்டமாக விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக மின் இணைப்பு வலை ஒன்று அமைக்கப்பட்டது. அதற்காக 2559 மின்மாற்றிகள் நிறுவப்பட்டன. மற்ற உபயோகங்களுக்கு தனி இணைப்பு ஒன்று அமைக்கப்பட்டது, இதன் மூலம் விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு மின்வினியோகத்தை இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்ததன் மூலம் குஜராத் மாநிலம் எத்தகைய சூழ்நிலையிலும் முழுமையாக இருளில் மூழ்காது என்ற நிலை ஏற்பட்டது.

modi3

பக்.24 – குஜராத் அரசு 2009-ம் ஆண்டு சூரிய சக்திக் கொள்கையை அறிவித்தது. இது தனியார் முதலீடுகளை இத்துறைக்கு ஈர்ப்பதர்கு ஏதுவாக அமைந்தது. சுமார் 87 தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை குஜராத்துக்கு கொண்டுவந்ததோடு சுமார் 961.5 மெகாவாட் அளவு மின்சாரத்தை சூரியசக்தியிலிருந்து பெறுவதற்கான வாய்ப்பாக அமைந்தது.

பக்.32 – இந்திய அளவில் விவசாயத்தின் வளர்ச்சி 3.5 சதவீதமாக இருக்கும் நிலையில் குஜராத் கடந்த பத்து ஆண்டுகளாக 9.6 சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.

குஜராத் பருத்தி , சீனா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமது செய்யப்படுகிறது. சீனாவில் போய் “குஜராத்” என்று சொன்னால் அவர்கள் பருத்தி என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு சீனாவில் குஜராத் பிரபலமாகிவிட்டது.

பக்.41 – குஜராத் மாநிலத்தைப் பொருத்தமட்டில் 2000-01ம் ஆண்டு நிலவரப்படி ஒன்றாம் வகுப்பி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்புக்கு முழுக்குப் போட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20.93 சதவீதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2010-11ம் ஆண்டில் 2.09 சதவீதமாகக் குறைந்தது.

modi05

பக்.43 – “ஓர் ஆண் கல்வி கற்பதால் ஒரு வீட்டுக்குத்தான் பயன். ஆனால் ஒரு பெண் கல்வி கற்பதால் இரண்டு வீடுகள் பயனடைகின்றன” என்கிறார் நரேந்திர மோடி.

பக்.129 – ஜன26, 2001. இந்தியாவின் 51வது குடியரசு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கம் குஜராத்தின் கட்ச் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது. தெருக்களில் ஊர்வலமாக தேசபக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு தேசியக்கொடி ஏற்றுவதற்காக பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்த 250 மாணவர்கள் உட்பட சுமார் 20000 பேர் இந்த நிலநடுக்கத்தால் கொல்லப்பட்டனர். கட்ச் பகுதியிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள அகமதபாத்தில் கூட நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றால் அதன் பாதிப்பை சற்று நினைத்துப் பாருங்கள். ஆனால் குஜராத் அசரவில்லை. பெரும்பாலான கிராமங்கள் இரண்டே ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டன.

இன்று உலகின் பல பகுதிகளில் பேரிடர் அழிவுகள் ஏற்பட்டால் அவர்கள் மறுசீரமைப்பு பணியை ஆரம்பிப்பதற்கு முன் குஜராத்திற்கு வருகை தருகிறார்கள், கட்ச் பகுதியில் எப்படி மறுசீரமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்டன, நடைமுறைப்படுத்தப்பட்டன போன்ற விவரங்களை அறிந்து கொள்கிறார்கள். மோடியின் வித்தையை மின்சாரம் , விவசாயம் , குடிநீர் , சுகாதாரம் , உள்கட்டமைப்பு என்று பல்வகையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் சரவணன் தங்கதுரை.

கடுமையான களப்பணியில் உருவான இந்தப் புத்தகத்தில் சொல்லப்படும் ஒரு விஷயத்தில் மேலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

modi06

இந்தியாவில் நதிநீர் இணைப்புத் திட்டம் உருவாகாமல் போவதற்கு காரணம் அக்கறையின்மை என்கிறார் இவர். அது உண்மை அல்ல. இந்தத் திட்டத்தில் தொழில்நுட்பச் சிக்கல்கள் உள்ளன. வடக்கில் இருக்கும் சமவெளியையும் , தெற்கில் இருக்கும் பகுதியையும் நடுவில் இருக்கும் மலைத்தொடர்கள் தடுக்கின்றன. நதிநீரை இந்த இடத்தில் மேலே ஏற்றுவது சாத்தியமில்லை.

மற்றபடி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி போன்ற அறிஞர்கள் கவலை கொள்ளும் கல்வித்துறையில் மோடி என்ன செய்திருக்கிறார் என்று கேட்டீர்களானால் உங்களுக்கு இந்தப் புத்தகம் போதாது. புறப்படுங்கள். பூமத்தியரேகையை கடக்காமலேயே குஜராத்தைப் பார்த்துவிடலாம் – மோடியின் குஜராத்தை.

மோடியின் குஜராத்
ஆசிரியர்: சரவணன் தங்கதுரை
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை
விலை: ரூ. 100

புத்தகம் பற்றிய ஒரு சிறு அறிமுகம்

கட்டுரையாசிரியரின் வலைப்பதிவு: https://dravidamayaisubbu.blogspot.in/

புத்தகத்தை இணையம் மூலம் இங்கே வாங்கலாம்.

10 Replies to “மோடியின் குஜராத் – நூல் மதிப்புரை”

  1. தங்கள் தகவல்கள் நன்றி .

  2. தகவல்களுக்கு நன்றி!
    ///பூமத்தியரேகையை கடக்காமலேயே குஜராத்தைப் பார்த்துவிடலாம் – மோடியின் குஜராத்தை.///
    நடுவில் இருப்பது ‘கடக ரேகை ‘ தான் ; நாம் பூமியின் வடபாதியில் இருக்கிறோம்.

  3. சென்னை புத்தக கண்காட்சியின் போதே இப்புத்தகத்தை வாங்கிவிட்டேன். இது ஒரு முழுமையற்ற படைப்பு. துக்ளக் போன்ற பத்திரிக்கைகளில் வந்தவற்றை விரிவுபடுத்தி எழுதியதை போன்று இருக்கிறது.

  4. சுப்பு சார்,
    இதை போன்ற ஒரு புத்தகத்தை பற்றி அறிமுகம் கொடுத்ததற்காக நன்றி இன்றே வாங்கி படித்து விடுகிறேன். மாண்புமிகு மோடி போன்றவர்கள் இன்னும் இந்த தேசத்திற்கு பிரதமர் ஆகாமல் இருப்பது கூட துருதிஷ்டமே ..கூடிய விரைவில் அந்த மஹாசத்சங்கம் நடைபெற வேண்டும் என்பதே இந்திய பெருமக்களின் பேரவா…மோடி பிரதமர் ஆக கூடாது என்று நினைபவர்கள் அத்தனைபேருமே பெரிய புல்லுருவிகளாக இருகிறர்கள்

    நமஸ்காரம்
    அனந்த சைதன்யன்.

  5. இதை போன்ற ஒரு புத்தகத்தை பற்றி அறிமுகம் கொடுத்ததற்காக நன்றி இன்றே வாங்கி படித்து விடுகிறேன். மாண்புமிகு மோடி போன்றவர்கள் இன்னும் இந்த தேசத்திற்கு பிரதமர் ஆகாமல் இருப்பது கூட துருதிஷ்டமே ..கூடிய விரைவில் அந்த மஹாசத்சங்கம் நடைபெற வேண்டும் என்பதே இந்திய பெருமக்களின் பேரவா…மோடி பிரதமர் ஆக கூடாது என்று நினைபவர்கள் அத்தனைபேருமே பெரிய புல்லுருவிகளாக இருகிறர்கள்

  6. மாதம் ஒரு முறை கிழக்கு பதிப்பகம் செல்வேன். இந்தமுறை சென்றபொழுது ஜெயமோகனின் புத்தகம் ஒன்றை வாங்கினேன். இந்த புத்தகத்தையும் பார்தேன். குஜராத் முன்னேற்றம் பற்றி நிறைய புள்ளி விவரங்கள் அடிக்கடி நிறைய வருவதால் இதுவும் அப்படி ஒரு தொகுப்பு என்று ஆவல் கொள்ளவில்லை. திரு.சுப்பு அவர்கள் இதை பரிந்துரை செய்துள்ளதால் அடுத்தமுறை செல்லும் பொழுது நிச்சயம் இந்த புத்தகத்தை வாங்கிவேன். மேலும் திரு.சுப்பு அவர்கள் ஒசைப் படாமல் ஒரு வலை பிளாக் நடத்திவருவதும் இன்றுதான் தெரிந்துகொண்டேன். அது மேன்மேலும் வளர்சி பெற எனது வாழ்த்துக்கள்.

  7. நான் அஹமதாபாதில் இருபதற்கு பெருமை கொள்கிறேன்.

  8. இந்த தேசத்திற்கு நல்ல காலம் என்று ஒன்று இருந்தால் அது நமக்கு நல்ல பிரதமரை அளிக்கும் என்று நம்புவோம். போலி மதச் சார்பின்மை வாதிகளும் (வியாதிகளும்) ஊழல் மன்னர்களும் மோடியை எதிர்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. முன்னதற்கு உதாரணம் பீகார் முதல்வர் திரு நிதிஷ் குமார். பின்னதற்கு விரல்விட்டு எண்ண முடியாது. உண்மையான தேசப்பற்றுடன் பாஜக ஊசலாட்டத்தை கைவிட்டு மோடிதான் பிரதமர் என்று தெளிவுடன் துணிவுடன் அறிவிக்க வேண்டும். அந்த உறுதியை பாரத மாதா அளித்திட இறைஞ்சுவோம்.

  9. sir in my book shop i have sold more than 100 books. i want to buy the bookd published by hinduthuva pathipagam. pls guide me. mob no 8903252895. v.ganessan nagercoil

  10. Recent quotes of NaMo (ஓம் நமோ நாராயணா- வருவாயா ? செய்வாயா?) –
    • On Secularism: Every Indian citizen needs protection. Making distinctions of minority and majority is nothing but vote-bank politics.
    • Justice for all and appeasement of none; minimum govt, maximum governance
    • இந்த இரண்டையும் செய்தாலே இந்தியாவின் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்
    • The NaMo Mantra: Civil servants must serve the interests of the poor and not pander to elected politicians and governments.
    • Old wisdoms will never fail us, that is the belief I have always drawn from.
    • This nation does not need Acts, it needs Action. Referring to the UPA government he said, Acts are only needed when there is no sign of action.
    • The National Rural Employment Guarantee Scheme should have been a scheme to ensure public participation in the development of the nation.
    • All one needs is to change the approach to out-of-box thinking.
    • Grievance redressal is one of the most important things in a democracy. The poorest of the poor need to feel empowered.
    • Individuals come and go, so there is a great need to institutionalise ideas. Leader and personality-driven schemes cannot sustain.
    • A public movement is necessary to ensure development but today there is a huge divide between the government and the people in India.
    • My experience in Gujarat shows that howsoever big a problem might be, it is not insurmountable if we have the will to act.
    • The UPA government has failed to inculcate the nationalist spirit in the common people to encourage their participation in nation building
    • People think they are giving a five-year contract of governance to politicians. Democracy must be a bond between the people and politicians.
    • Our mindset is our biggest problem. We must be able to convert difficulties into opportunities.
    • The power of discretion vested in decision-makers breeds’ corruption in this country. There is a definite need for a policy-driven state.
    • The age of military and economic power is over. The 21st century is all about knowledge. And historically, India has always led when knowledge is at the forefront
    • Waste management & solar power generation should be institutionalized for better environmental pollution control
    • Privatising Indian Railaways.
    • For all our Defence requirement we have to make our own indegeneous war ammunitions and equipment. Instead of importing these items we have to start exporting.
    ஸ்ரீ.நரேந்திரமோடி டெல்லி பல்கலைகழகத்தை சேர்ந்த ஸ்ரீ.ராம் வர்தக கல்லூரியில் நிகழ்திய பேர் உரையை தொகுத்து பிப்ரவரி 11 ஆம் தேதி இந்த வலை தளத்திற்கு அனுப்பினேன். அதை ஏற்று வெளியிடுவதாக சொன்னார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *