இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்

தமிழ்ஹிந்து தளத்தில் தொடர்ந்து எழுதி வரும் மூன்றூ எழுத்தாளர்களது பார்வைகளை இக்கட்டுரையில் தொகுத்தளிக்கிறோம்.

ஜடாயு:

திண்ணை இதழில் முன்பு பல அருமையான கட்டுரைகளை எழுதிவந்த நண்பர் பி.எஸ்.நரேந்திரன் ஈழம் குறித்து ஜெயமோகனுக்கு எழுதிய ஒரு கடிதம் இலங்கைப் பிரசினையின் வரலாற்றையும் அனைத்து கோணங்களையும் அருமையாகத் தொட்டுக் காட்டுவதாக இருந்தது. ஈழத் தமிழர் தங்கள் பிளவுகளை மறந்து தங்கள் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்து போராடியது என்பது வரலாற்றில் எப்போதும் நடந்ததில்லை என்பதை அவர் பதிவு செய்கிறார். மலையகத் தமிழர்களின் இன்னல்கள் பற்றி அறிந்திராத பல தகவல்களைத் தருகிறார். ”இலங்கை வாழ் தமிழர்கள் இந்தியாவின் உதவியை, மத்தியஸ்தத்தை எதிர்பார்ப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும். தொலைநோக்குள்ள தலைவர்கள் இந்தியாவிலோ அல்லது தமிழ்நாட்டிலோ இன்று இல்லவே இல்லை… இனப்பிரச்சினை உங்களுடையது. நீங்கள்தான் அதனின் அத்தனை பரிணாமங்களையும் அறிந்தவர்கள். எனவே, நீங்கள்தான் உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கடிதத்தின் இறுதியில் அவர் இலங்கைத் தமிழர்களுக்கு கூறும் அறிவுரை பல விதங்களில் யதார்த்தமாகவும் நேர்மையாகவும் உள்ளது.

ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் அதன் நீர்த்துப் போன வடிவிலாவது நிறைவேற்றப் பட்டது ஈழத்தில் எஞ்சியிருக்கும் தமிழர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளுக்கு சிறிய அளவிலாது தெம்பு தரும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஆனால், நடைமுறையில் இதன் பயன் என்னவாக இருக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நீர்த்துப் போன தீர்மானத்தைக் கூட நிராகரிப்பதாக இலங்கை சிங்கள பேரினவாத அரசு தனது வழக்கமான ஆணவத்துடன் கூறி விட்டது.

TN_student_protest_1

இப்பிரசினையின் போது தங்கள் அரசியல் சுயலாப கணக்குகளை முன்னிலைப் படுத்தியே திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் செயல்பட்டன. என்றாலும் பாராளுமன்றத்தில் ஏகமனதாக இலங்கைத் தமிழருக்கு ஆதரவான குரலை எழுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது ஜனநாயக ரீதியான, மிகச் சரியான செயல்பாடு. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பாராளுமன்றத்தில் எடுத்த நிலைப்பாடுகள் மாணவர் போராட்டம் வலுப்பதற்கு முன்னமேயே முடிவு செய்யப் பட்டவை. எனவே, ஊடகங்களிலும் வெகுஜன அளவிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியதன்றி, அரசியல் ரீதியாக இதுவரை இந்த மாணவர் போராட்டங்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றே கூறவேண்டும். 2009 போரின் போது கள்ள மௌனம் காத்து இப்போது காங்கிரஸ் அரசில் இருந்து தடாலடியாக வெளியேறிய திமுகவின் கபட நாடகத்தையும் எல்லாரும் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.

எதையும்  தீர்க்கமான, நிதானமான பார்வையுடன் விமர்சிக்கும் ஜெயமோகன்  இந்த மாணவர் போராட்டம் தொடங்கிய போது கீழ்க்கண்டவாறு எச்சரித்திருந்தார்.

// இந்த இயல்பான போராட்டத்தை வழக்கம்போல இந்திய எதிர்ப்புப்போராட்டமாகக் கொண்டுசெல்ல இங்கே நிதியூட்டப்பட்டு செயல்படும் குறுங்குழு அரசியல்வாதிகள் முயலக்கூடும். அதில் மாணவர்கள் விழிப்புடன் இருப்பார்கள் என நினைக்கிறேன். இல்லையேல் இதை முன்வைத்து அவர்கள் இன்னும் கொஞ்சம் நிதி பெற்றுக்கொள்வது தவிர ஒன்றும் நிகழாது  //

மாணவர் போராட்டம் பல கல்லூரிகளுக்கும் பரவிய போதே, இது  இந்திய எதிர்ப்பு – தனித்தமிழ் தேசிய ஆதரவு  நிலைப்பாட்டை நோக்கித் தெளிவாக  சென்று  கொண்டிருப்பது   தெரிய வந்தது.   வழக்கமாக இதில்  ஈடுபடும்  கலை, அறிவியல் கல்லூரிகள் போக, இம்முறை  சில பொறியியல் கல்லூரி மாணவர்களும்  போராட்ட களத்தில்  குதித்தனர்.

உருப்படியாக  படித்து, வாழ்க்கையில் முன்னேறுவது  என்ற உப்பு சப்பில்லாத விஷயத்தையே  தங்கள்  நோக்கமாக வைத்திருந்த  தமிழக மாணவர்கள்  மத்தியில்  புரட்சித் தீயை மூட்டியாகி விட்டது. இனி  அதை  மேலும் மேலும் கொழுந்து விட்டு எரியச் செய்ய வேண்டியது தான் பாக்கி..இப்படி ஒரு விஷயத்திற்குத் தானே  இத்தனை வருஷமாகக் காத்துக் கொண்டிருந்தோம் – என்று சீமான், வைகோ போன்ற புர்ச்சி அரசியல் வாதிகள் மனதிற்குள்  எண்ணியது போலவே நடக்கப் போகிறதோ என்ற அச்சம் கூட லேசாக பரவியது.  நல்லவேளை, துரதிர்ஷ்ட வசமான ஒன்றிரண்டு தீக்குளிப்பு சம்பவங்கள் போக அசம்பாவிதங்கள் ஏதும் இது வரை நிகழவில்லை. புரட்சித் தலைவி ஆளும் மாநிலத்தில் பெரிய புரட்சி ஏதும் வெடிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்.

தொலைக்காட்சி ஊடகங்கள் காண்பித்த பல மாணவர் போராட்ட வளாகங்களில் பிரபாகரன் படங்களும் போஸ்டர்களும் இருந்தன. இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கும் கொடூரங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எதிரான போராட்டத்தில் அதே அளவு வன்முறையையும், அடக்குமுறையையும் தன் மக்களினத்தின் மீதே பிரயோகித்த விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவரை ஆதர்சமாக நிறுத்துவது என்பது என்ன விதமான தார்மீக, அற உணர்வு? இந்த “தன்னிச்சையான” போராட்டத்தின் நோக்கங்கள் முதலிலிருந்தே குழப்பத்திற்கும் ஐயத்திற்கும் உரியதாகத் தான் இருந்தன.

கூடங்குளம் போராட்ட புகழ் எஸ்.பி.உதயகுமார்  அவர்கள் மாணவத் தம்பிகளுக்கு அனுப்பியுள்ள  செய்தியைப் பார்த்தால் போராட்டத்தின் திசை பற்றிய சில விஷயங்கள் புலப்படுகின்றன (செய்தி பின் இணைப்பில்). இதில் உள்ள சில கோரிக்கைகள் இலங்கைத் தமிழர் நலன், மீனவர் நலன் ஆகியவற்றுக்கு ஆதரவான பொதுவான தொனியில் உள்ளன. ஆனால் அதோடு சேர்த்து உள்ள ”எட்டு கோடித் தமிழர்கள் வாழும் நாடான இந்தியா”, “தமிழ்க் கடலுக்கு இப்புறமும் அப்புறமும் திட்டங்களை முடக்குதல்”, ”அகண்ட தமிழகம்” அமைப்பதற்கான அறைகூவல் – இவற்றில் எல்லாம் பிரிவினைவாதம் பூடகமாகக் கூட இல்லை, அப்பட்டமாக, நேரடியாக உள்ளது. ”தமிழ்க் கடல் தி.வே.கோபாலைய்யர்” என்று முன்பு தமிழ் நாட்டின் மாபெரும் மறைந்த தமிழறிஞருக்கு பட்டம் கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால், உதயகுமார் அவர்கள் உலக வரைபடங்களில் எல்லாம் இந்தியப் பெருங்கடல் என்று குறிக்கப் படும் கடல் பகுதிக்கு “தமிழ்க் கடல்” என்று பெயர் கொடுக்கிறார் ! முழக்கம், களம் புகுவாய், பொங்கி வாடா, தமிழர் படை போன்ற தலைப்புகளில் பழைய விடுதலைப் புலி ஆதரவு வீராவேச “கவிதைகள்” அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் மீள்சுழற்சி செய்யப் படுகின்றன. இரண்டு தலைமுறை ஈழத் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்த வன்முறை கோஷங்களை தமிழக இளைஞர்களின் மூளையில் ஏற்றுவது எதற்காக? இலங்கையில் இவ்வளவு பெரிய ரத்தக் களறியும் போரும் உயிரிழப்பும் ஏற்படுத்திய வரலாற்றிலிருந்து கட்டாயம் சில பாடங்களை சராசரி தமிழக இளைஞன் கற்றுக் கொண்டிருப்பான். இந்த ஆவேச கோஷங்கள் ஏற்படுத்தும் மாயையில் இருந்து வெளிவருவான்.

இந்த மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றால், அதில் உள்ள பிரிவினைவாத கோஷங்கள் முற்றாக நீக்கப்பட்டு, ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். இனப்படுகொலைக்காகவும் போர்க்குற்றங்களுக்காகவும் இலங்கை அரசை விசாரிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்பதுடன், எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு, மீள்குடியேற்றம், அடிப்படை சிவில் உரிமைகள் ஆகியவற்றையே மையமாக வலியுறுத்துவதாக இப்போராட்டங்கள் அமைய வேண்டும். ஆதரவு வட்டத்தை விசாலமாக்க வேண்டுமே தவிர குறுக்கக் கூடாது. இந்தியாவின் தேசியக் கட்சிகள், மற்ற மாநிலங்களின் அரசியல் கட்சிகள், தேசிய அளவிலான மாணவர் இயக்கங்கள் ஆகியவற்றையும் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாகத் திருப்புவதாக இவை மாற வேண்டும். போராடும் மாணவர்கள் இந்திய தேசியத்தின் மீதும், வன்முறை தவிர்த்த சத்தியாக்கிரக வழிமுறைகளின் மீதும் தங்கள் உறுதியான நம்பிக்கையைத் தெரிவிக்க வேண்டும். மாணவர்களை முற்றிலும் தமிழ் தேசிய பிரிவினைவாதிகளின் கைகளில் ஒப்புக் கொடுப்பது மிகவும் அபாயகரமானது. அதற்கு மாற்றாக, இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்ட அரசியல்,சமூக இயக்கங்கள் முனைப்புடன் முன்வந்து தமிழக மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை அளிக்க வேண்டும்.

********

அருணகிரி:

இலங்கை அரசின்மீது அழுத்தம் தருவதற்காக செய்யப்படும் செயல்கள் இந்திய தேசியத்தை மிரட்டுவதாக அமைந்தால் அது உருப்படாது. தேசியக்கட்சிகளை உடனேயே இவை அச்சுறுத்தும். தமிழ்நாட்டுக்கு தனி வெளியுறவுத்துறை வேண்டும், இந்தியாவும் மற்றைய ஆசிய நாடுகளும் விலக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைப்பதும், அதை லயோலா கல்லூரி, உதயகுமார் ஆகியோர் ஆதரிக்கும் விதமும் இதற்குப்பின்னுள்ள இந்தியப்பிரிவினைவாத நோக்கங்களும் இந்த மாணவர் போராட்டத்தை என்னால் மிகுந்த சந்தேகத்துடனேயே பார்க்க வைக்கிறது (லயோலா கல்லூரி மாணவர்கள் கோரிக்கை – பின் இணைப்பில்). மாணவர்களின் இயல்பான உணர்ச்சிக்கொந்தளிப்பை இந்தியாவிற்கு எதிரான திறக்கில் தள்ளிக்கொண்டு போக வைக்கும் முயற்சி இது என்கிற சந்தேகம் எனக்கு எழுகிறது. அழுத்தம் தருவது என்ற வகையில் என்றாலும்கூட இந்தமாதிரி ஒரு இந்திய தேசியத்தை பலவீனமாக்கும் நிலைப்பாட்டை எடுப்பது பொறுப்பற்றது, ஆபத்தானது, பாதக விளைவுகளை உருவாக்க வல்லது.

TN_student_protest_3

இது தொடர்பாக கலிபோர்னியா தமிழ் ரேடியோவில் ஒரு விவாதம் இங்கு நடந்தது (பதிவு செய்யப் பட்ட விவாதத்தை இங்கு கேட்கலாம்). அதில் ஒரே ஒரு வேற்று மாநிலத்தவர் அழைத்துப்பேசினார். ஈழப்படுகொலைக்கு எதிராகப்பேசுபவர்கள் எல்லோருமே தமிழினம், தமிழர்க்கு அநீதி, இந்திய தேசிய எதிர்ப்பு என்று இதைக்கொண்டுபோவது பிற மாநிலத்தவர்களிடம் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவே இல்லாமல் செய்து விடும் என்றார். அது உண்மை. பிரிவினைவாதமும் பிறமாநில வெறுப்பும் தமிழ்நாட்டின் அடையாளமாக பல வரலாற்றுக் காரணங்களால் அண்டை மாநிலங்களிலும் வட மாநிலங்களிலும் பதிந்து விட்டிருக்கிறது. சமீபகாலமாக இந்தக் கண்ணோட்டம் படிப்படியாக நீர்த்துவரும் தருணத்தில் மீண்டும் இப்படி பிரிவினை வாதங்கள் மொழி, இனம் ஆகியவற்றை முன்வைத்து தமிழ்நாட்டிலிருந்து புறப்படுவது தேசிய அளவில் மீண்டும் ஒரு அச்சத்தையும், சந்தேகத்தையும் விதைத்து விடும். இது தமிழ் ஈழ மக்களுக்கு எந்த நன்மையையும் விளைவிக்காது. இதை உணர்ந்துகொண்டு இதை ஒரு தமிழின ப்பிரச்சனையாக, மொழிப் பிரச்சனையாகவெல்லாம் குறுக்காமல், உலக அரசியல், பிராந்திய அரசியல் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்து, தொலைநோக்கு இந்தியப் பிரச்சனை இது என்கிற பொறுப்புடன் இதனை அணுகும் தலைவர்களே ஒரு ஆக்கபூர்வ தீர்வை இப்பிரச்சனைக்கு வழங்க முடியும்.

********

லயோலா கல்லூரி மாணவர்கள் ஒரு ‘தனியார்’ இடத்தில் உண்ணாநிலை போராட்டம் நடத்தியதாக செய்திகள் சொன்னது. பின்னர் விசாரித்தால் அது காஞ்சி மக்கள் மன்றத்திற்கு சொந்தமானது என்று சொல்கிறார்கள்.

காஞ்சி மக்கள் மன்றம் என்பது குளோரியா ஜெசி என்பவர் தலைமையின் கீழ் இயங்கும், கம்யூனிச சித்தாந்தங்கள் அடிப்படையில் இயங்கும் கிருத்துவப் பின்னணி கொண்ட ஒரு மக்கள் ”சேவை” இயக்கம் ஆகும். காஞ்சி மக்கள் இயக்க அங்கத்தினர் தான் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை விலக்கக் கோரி காஞ்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து மாண்ட செங்கொடி என்பவர்.

லயோலா கல்லூரி All India Catholic University Federation (AICUF) என்ற அகில இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பின் ஒரு அங்கம். அது மயிலாப்பூர் திருச்சபையின் ( Archdiocese of Madras – Mylapore) ஒரு அங்கம். மயிலை திருச்சபையின் “சேவை” பிரிவுகளான People’s Union for Civil Liberties (PUCL) மற்றும் Madras Social Service Society (MSSS) ஆகிய அமைப்புகளுக்கு குளோரியா ஜெசி மிக நெருக்கம்.

லயோலா கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தினை துவக்கிய இதரக் கல்லூரிகளில் சென்னை கிருத்துவ கல்லூரி, நெல்லை புனித சேவியர் கல்லூரி, திருச்சி புனித ஜோசப் கல்லூரிகள் எல்லாம் AICUF அங்கத்தினரே.

இந்த பின்னல்களையெல்லாம் பார்த்தால் யார் யாரோ இந்த மாணவர்கள் பின் நின்று இயக்குகிறார்கள் என்ற ஐயம் வலுவாகவே எழுகிறது. அவர்களின் உண்மையான நோக்கங்களுக்கும் மாணவர்கள் வெளிப்படையாக சொல்லும் கோரிக்கைகளுக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்பது பற்றிய பல சந்தேகங்கள் தோன்றுகின்றன.

நன்றி: வவ்வால் வலைப்பதிவு

விஸ்வாமித்ரா:

போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் தீடீரென்று இப்படி ஒரு போராட்டம் எப்படி உருவாகிறது? அதன் தொடக்கம் என்ன தொடர்ச்சி என்ன என்பது பற்றி பல கேள்விகள் எழுகின்றன.

TN_student_protest_2
1. முதலில் ஒரு பிரிட்டிஷ் சானல் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் படுகொலை பற்றிய பதைபதைக்கச் செய்யும் படத்தையும் செய்தியையும் வெளியிடுகிறது. இந்தப் படங்களை யார் எடுத்திருக்க முடியும்? ஒரு சிங்களப் படை ஆள் தானே எடுத்திருக்க முடியும்? அதை சிங்கள அரசே கூட திட்டமிட்டு வெளியிட்டிருக்கவும் கூடும்? ஏன்? யோசியுங்கள். சரி எப்படியோ சானல் 4க்கு அது கிடைத்து விட்டது. அதை ஏன் போர் முடிந்தவுடன் வெளியிடாமல் இப்பொழுது வெளியிடும் நோக்கம் என்ன? ஏன் இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்தது அந்த டி வி?

2. அடுத்ததாக அமெரிக்க அரசு போர் முடிந்து இத்தனை வருடங்கள் கழித்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரப் போவதாகச் சொல்கிறது. இந்தத் தீர்மானம் வரும் நேரத்திற்கு சற்று முன்னால் சேனல் 4 அந்த வீடியோவை வெளியிடுகிறது. எப்படி இந்த இரு நிகழ்வுகளும் ஒன்றை அடுத்து மற்றொன்றாக வருகின்றன?

3. இந்த இரு நிகழ்ச்சிகளையும் முன் வைத்து தமிழ் நாட்டில் லயோலா கல்லூரியில் “தன்னிச்சையாக” மாணவர்களீன் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கிறது. இதைப் போலவே முன்பும் இதே கல்லூரியில் தான் கல்லூரி நிர்வாகத்தினரின் ஆசியுடன் கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து ஒரு போராட்டம் “தன்னிச்சையாக” துவங்கியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

4. லயோலா கல்லூரியினர் ஆரம்பித்து வைக்கும் போராட்டம் ஒரு தீப்பொறி போல தமிழ் நாடு முழுவதும் பரவ வைக்கப் படுகிறது. இதைச் செய்தவர்கள் சீமான், வைகோ மற்றும் சுப.உதயகுமாரின் குழுவினர்கள். எப்படி இவர்களால் குறுகிய காலத்துக்குள் கோடிக்கணக்கான டி வி டிக்கள் தயார் பண்ண முடிந்தது? சில கோடிகள் செலவழித்து இந்தப் போராட்டத்தை தமிழ் நாடு முழுவதும் பரப்ப யார் நிதி உதவி செய்திருக்கக் கூடும்?

5. என்ன மாதிரியான கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வைக்கப் பட வேண்டும் என்பதை லயோலா கல்லூரியுடன் தொடர்புடைய தீவிர அரசியல் செயல்பாட்டாளர்கள் தான் செய்துள்ளனர் என்று தெளிவாகத் தெரிகிறது. அதைத்தான் அப்பாவித்தனமான மாணவ்ர் கோரிக்கை அறியாப் பிள்ளைகள் செய்வது என்று பலர் சொல்கிறார்கள். அறியாப் பிள்ளைகள் வைக்கும் கோரிக்கை என்ன? தமிழ் நாட்டுக்குத் தனி வெளியுறவுத் துறை, தமிழ் நாட்டுக்குத் தனி வெளியுறவு அமைச்சர், வரி கட்டமாட்டோம் – இதெல்லாமா? இவை துவக்க நிலை கோரிக்கைகளே. இன்று வரை இதில் மாற்றம் இல்லை. இதை இப்பொழுது விரிவு படுத்தி தமிழ் நாட்டில் எந்த மத்திய அரசு அலுவலகத்தையும் செயல் பட விட மாட்டோம், ரயில் ஓட விடமாட்டோம், மத்திய மந்திரிகள் அதிகாரிகள் தமிழ் நாட்டில் நுழையக் கூடாது என்று தொடர்கிறது. சிந்திக்கத் திறனில்லாத சினிமா மாயையில் மூழ்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான மாணவர்களை மிக எளிதாக இந்தக் கோஷங்கள் கவர்ந்து விடும்

6. இவ்வளவு தூரம் தூண்டி விட்ட பின்னால் தேவையான அளவுக்கு போராட்டம் பெரிதானவுடன், அமெரிக்க அரசு அதே தீர்மானங்களின் கடுமை குறைத்து நீர்த்துப் போன ஒரு தீர்மானமாக மாற்றுகிறது. அப்படியானால் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடந்த பேரம் என்ன? ஏன் அமெரிக்கா தன் தீர்மானத்தை மாற்றியது? தேவையான அளவு கிளர்ச்சி எழுப்பப் பட்டவுடன் பந்தை அமெரிக்கா இந்தியா மீது திணிக்கிறது. இப்பொழுது ராஜபக்சேவைப் போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவின் பால் திருப்பப் படுகிறது. தனது குடிமக்களை பயங்கரவாதிகளிடமிருந்தும் வேறு பல சக்திகளிடமிருந்தும் காப்பாற்றுவதற்குத் திணறும் வாழைப்பழக் குடியரசான இந்தியா அதைச் செய்யுமா என்ன? கட்டாயம் செய்ய முடியாது. அப்படிச் செய்யாத பொழுது தனித் தமிழ் நாடு கோரிக்கையை மேலும் வலுப் படுத்தலாம். இதை கவனிக்காமல் விட்டால், எதிர்காலத்தில் இந்த மாணவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப் படலாம். தமிழ் நாடு மற்றொரு காஷ்மீராக ஆகலாம். இப்படி ஒரு பயங்கரமான திட்டம் இதன் பின்னே இருக்கக் கூடுமோ என்றும் ஒரு சந்தேகம் ஏற்படுகிறது.

*******

ஆக, மத்தியில் ஆளும் மன்மோகன் சிங் தலைமையிலான சோனியா அரசு இத்தகைய அபாயங்களில் இருந்து நாட்டைக் காக்கும் திராணியை முற்றிலும் இழந்து நிற்கிறது. இந்தியாவுக்குத் தேவை உறுதியான தலைவரும், நாட்டு நலனையும் பாதுகாப்பையும் முன்னிலைப் படுத்தும் ஊழலற்ற ஒரு மத்திய அரசும். அத்தகைய அரசு அமைவதே இந்தியாவைக் காப்பாற்றும். இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கும் வழிவகுக்கும். நமது ரத்த சொந்தங்களான இலங்கைத் தமிழரீன் இன்னல் களைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தினால் உந்தப் பட்டு போராட வந்திருக்கும் மாணவச் செல்வங்கள் கவர்ச்சிகர கோஷங்களால் உந்தப் படாமல், அத்தகைய உறுதி கொண்ட அரசை மத்தியில் நிறுவுவதே அந்த நோக்கத்தை நீண்டகால அளவில் நிறைவேற்றும் என்பதை உணர வேண்டும்.


பின் இணைப்புகள்:

லயோலா கல்லூரி மாணவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்:

1)We strongly condemn the US-draft resolution. Do not pass it at UNHRC

2)What took place in Ilangkai [Sri Lanka] is not merely war crimes or violations of human rights, but planned genocide

3)International investigation and referendum are the only solutions for the Tamils. Government of India should propose a resolution to bring in international investigation and to conduct a referendum on independent Tamil Eelam.

4)A proposal should be made to remove the Deputy High Commission of the Sinhala chauvinistic State from the Tamil soil [Tamil Nadu]. India should severe all diplomatic relations with Ilangkai [Sri Lanka].

5)Government of India, accepting the request of the “Tamil Nadu State Government”, should implement economic sanctions on Ilangkai [Sri Lanka].

6) On behalf of the “Tamil Nadu State Government”, a foreign relations department should be created to assure the security of global Tamils.

7) No Asian country should be a member in the [international] investigation committee.

8)Killing Tamil Nadu fishermen should be stopped immediately.

9)If the Government of India is not finding solution to the question of Eezham Tamils, we will not pay any taxes from Tamil Nadu. We, students, will actively engage in this campaign.

TH_FB_Sp_uday_pic

எஸ்.பி.உதயகுமார் மாணவர்களுக்கு அனுப்பிய செய்தி:

என்ன வேண்டும் நமக்கு மாணவத் தோழர்களே?
(விவாதத்துக்கான ஒரு வரைவு)

தமிழகமெங்கும் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிற நமது தம்பியரிடம் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். தங்களை மாநில அளவில் ஒருங்கிணைக்கும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த முக்கியமான பணி ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கும்போது, நமக்கு என்னதான்வேண்டும் என்பது குறித்த ஒரு தெளிவானப் பார்வையும், தீர்க்கமான நிலையும், ஒத்தக் கருத்தும் மிக மிக அவசியம். நமது கோரிக்கைகள் என்னென்ன, நமக்கு என்ன வேண்டும் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.

எல்லா ஊர்களிலும், அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரேவிதமான கோரிக்கைகளை முன்வைப்பது நமது போராட்டத்துக்கு மேலும் வலுவூட்டும். அதே போல எளிதில் அடைய முடிகிற, சாத்தியமான கோரிக்கைகளிலிருந்துத் தொடங்கி படிப்படியாக மேனோக்கிப் போவது அறிவுடைமை. ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்று பேசுவது, கோருவது, செயல்படுவது நமது போராட்டத்தை திசை திருப்பி, வீண் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். எடுத்துக்காட்டாக, ஒருசிலர் “தமிழீழம் கொடு, அல்லது தமிழகத்தை விடு” என்று கோரிக்கை வைக்கிறார்கள்; வேறு சிலர் “தனித் தமிழீழம், அல்லது தனித் தமிழ் நாடு” என்று மிரட்டுகிறார்கள். கையிலிருக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு பதிலாக, அதை உருமாற்றி, உசுப்பேற்றி, மேலும் சிக்கலாக்கிவிட வேண்டாம்.

போராட்டக்களத்தில் நிற்கும்போது நம் பேச்சு, செயல், சிந்தை, குணநலன், இயல்பு அனைத்திலும் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும். எட்டு கோடித் தமிழர்கள் வாழும் நாடான இந்தியா நமது உணர்வுகளைப் புறந்தள்ளி, நமது எதிரிகளோடு, துரோகிகளோடு சேர்ந்து நம்மை அவமதிக்கக்கூடாது, புண்படுத்தக்கூடாது, அன்னியப்படுத்தக்கூடாது என்று எச்சரிப்போம். இன்றைய ஈழப் பிரச்சினை இப்படியான அன்னியப்படுத்தலில் ஆரம்பமானதுதான் என்று சுட்டிக்காட்டுவோம்.

அடுத்தபடியாக, சில முக்கிய முடிவுகள் எடுத்தாக வேண்டும் நாம்:
[1] சிறிலங்கா எனும் சிங்களப் பெயரை முழுக்கப் புறக்கணிக்க வேண்டும். இலங்கை அல்லது ஈழத்தீவு என்ற பெயரை பயன்படுத்துவோம். தமிழர் வாழும் பகுதியை “தமிழீழம்” என்றேக் குறிப்பிடுவோம்.
[2] பாக் நீரிணைப்பு, மன்னார் வளைகுடா உள்ளடக்கிய கடல் பகுதிகளை “தமிழ்க் கடல்” என்றழைப்போம்.
[3] தமிழ் நாடு மற்றும் தமிழீழம் உள்ளிட்ட தமிழர் வாழும் மண்ணை “அகண்டத் தமிழகம்” எனக்கொண்டு, ஈழத் தமிழரையும் இங்குள்ளத் தமிழரையும் ஒன்றிணைக்க, தமிழ் இலக்கியம், கலாச்சாரத்தை வளர்த்தெடுக்க இயன்ற வழிகளிலெல்லாம் உழைப்போம்.
[4] தமிழர்நலன் காக்க தமிழ்க் கடலின் இரு கரைகளிலும் இயன்ற நடவடிக்கைகளில் இப்போதே, இங்கேயே இறங்கிடுவோம்.

[I] தமிழர் அனைவரும் ஒன்றாய் வேண்டுவது என்ன?
[1] இலங்கையில் நடத்தப்பட்டது வெறும் மனித உரிமை மீறலோ, போர்க்குற்றமோ அல்ல; அது சிங்களப் பேரினவாத அரசால், இராணுவத்தால், மதவெறியர்களால் திட்டமிட்டு, முறைப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை. இந்த மனித குலத்துக்கு எதிரானக் குற்றம் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டு, சுதந்திரமான முறையில் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்.
[2] இந்த இனப்படுகொலையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோப் பங்கெடுத்தோர் அனைவரும் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஈழத்தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

[II] (தமிழ்க் கடலுக்கு அந்தப் பக்கம்) தமிழீழத்தில் என்ன வேண்டும்?
[1] ஈழத்தமிழர்கள் தெளிவான ஒரு தேசிய இனமென்பதால், தொன்றுதொட்டே அவர்கள் இலங்கை அரசால் பாரபட்சமாக நடத்தப்பட்டு, தற்போது கொன்றொழிக்கப் படுவதால், அவர்கள் தங்கள் தாயகமாம் தமிழீழம் அமைத்துக்கொள்ள வழிவகுக்க வேண்டும்.
[2] தமிழீழ அரசின் நோக்கு, போக்கு, செயல்பாடுகளை அம்மக்களே சனநாயக முறையில் தீர்மானித்துக் கொள்வார்கள்.
[III] (தமிழ்க் கடலுக்கு இந்தப் பக்கம்) தமிழகத்தில் என்ன வேண்டும்?
[1] இம்மாத இறுதியில் ஜெனீவாவில் நடத்தப்படும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்குப் பதிலாக எட்டு கோடித் தமிழர்களின் தாயகமான இந்தியா இலங்கை அரசுக்கு எதிரான ஒரு மாற்றியமைக்கப்பட்ட, தீர்க்கமான தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும்.
[2] இலங்கைத் தூதரகம் சென்னையிலிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
[3] சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்த கொடூரன், குற்றவாளி ராஜபக்சே, அவனது தம்பியர், குடும்பத்தார் தமிழகத்துக்குள், இந்தியாவுக்குள் எந்தப் பகுதிக்கும் இனிமேல் வரக்கூடாது.
[4] சிங்களப் படைக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் எந்தவிதமானப் பயிற்சியும் எப்போதும் அளிக்கக்கூடாது.
[5] இலங்கை அரசின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.
[6] இலங்கையோடான தூதரக உறவை இந்தியா தரமிறக்கிக்கொள்ள அல்லது தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
[7] இலங்கையிடமிருந்து கச்சத் தீவைத் திரும்பப் பெற வேண்டும்.
[8] சிங்களப் பேரினவாத அரசு தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொல்வதும், சிறைப்பிடிப்பதும் தொடர்ந்து நடந்து வருவதால், தமிழக மீனவர்கள் தங்களுக்கென “தமிழக மீனவர் பாதுகாப்புப் படை” ஒன்றை அரசு ஆயுதங்களுடன் அமைத்துக் கொள்ள வேண்டும்.
[9] தமிழ்க் கடலின் இரு மருங்கிலும் அணுமின் நிலையங்களோ, அனல்மின் நிலையங்களோ, பன்னாட்டு நிறுவனங்களின் உண்டுறை விடுதிகளோ, உல்லாச விடுதிகளோ, இவை போன்ற மாசுபடுத்தும், வாழ்வாதாரங்களை அழிக்கும், உணவு-ஊட்டச்சத்துப் பாதுகாப்பை நசுக்கும் திட்டங்களையோ கொண்டுவரக் கூடாது. கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை உடனடியாக மூட வேண்டும்.
[10] இந்தியா மற்றும் தமிழகத்திலுள்ள தேசிய, மாநில அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தாங்கள் தமிழ் மக்களின் பக்கமா அல்லது இலங்கை அரசின் பக்கமா; தங்களுக்கு தமிழ் மக்களின் நலன் முக்கியமா அல்லது இலங்கை அரசின் நலன் முக்கியமா என்பதை தெள்ளத்தெளிவாக அறியத்தர வேண்டும். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் அறிக்கைகளில் இது குறிப்பிடப்பட்டாக வேண்டும்.

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
மார்ச் 17, 2003

41 Replies to “இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்”

  1. இலங்கைத்தமிழர் பிரச்சினையில் ராஜீவ் படுகொலைக்குப்பழிதீர்ப்பதாக எண்ணி மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஊழல் ஐமுகூட்டணி ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளித்து இனப்படுகொலையை நிகழ்த்தியிருப்பதாகவே தமிழ் மக்கள் பெரும்பாலும் நம்புகிறார்கள். அதனை கண்டும் காணாமல் வாய்பொத்தி மவுணியாக இருந்தார் மு கருணாநிதி என்பதும் மக்களின் எண்ணம். இன்னும் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படும் பிரச்சினையிலும் இலங்கைக்கு ஆதரவாகவே மத்திய அரசு தொடர்ந்து செயல் பட்டு வருவதாகவே ஒரு சராசரி தமிழர் நினைக்கிறார். தமிழகத்தில் மாணவர் போராட்டம் இதையே வெளிக்காட்டுகிறது. இந்தப்போராட்டத்தினை இந்திய தேச ஒற்றுமைக்கு எதிராக கொண்டு செல்ல முயல்கிறது என்பதும் அதில் கிறிஸ்தவ மார்சீய கலவை தமிழ் தேசிய வாதிகளின் பங்கும் தெளிவு. ஆனால் ஹிந்துத்துவர்களின் நிலை என்ன என்பது மிக மிகத்தெளிவாக தெளிவு படுத்தப்படவேண்டும். இணையத்தில் முகனூலில் பாஜகவின் தேசியத்தலைவர் ஸ்ரீ அத்வானி சிங்களர்களை ஆதரிப்பதாக திக காரர் ஒருவர் எழுதியிருந்தார். அதை பலர் மறுத்துள்ளனர். எனினும் இலங்கைப்பிரச்சினையிலும் தமிழக மீனவர் பிரச்சினையிலும் உண்மையான தேசியவாதிகள் தமது நிலைப்பாட்டினை தமிழ் மக்களின் உரிமைகளை காப்பதற்கு ஆதரவாக எடுக்கவேண்டும். இல்லாமல் இது கிறிஸ்தவர்களின் சதி என்று வெறுமனே சொல்வதில் பயனில்லை.

  2. இலங்கை தமிழர் மே மாதம் 2009-லே கொத்து எறிகுண்டுகளை வீசி படுகொலை செய்யப்பட்டனர். அப்போது வாய்மூடி மௌனியாக குடும்ப பேரன்களுக்கும் மகனுக்கும், தேவையான இலாக்காக்களை கோரி பெற்று , தள்ளு வண்டியில் அமர்ந்தே பேரம் பேசி, லாபம் பெற்ற மஞ்சள் தலைவர், இப்போது மாணவர்கள் போராட்டம் வலுத்தபின்னர் , தங்கள் கட்சியினர் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்துகொண்டு ,ஆவேசமாக வெளியேறி விட்டார். அது சரி, 2009- லே இவர் வாயில் இருந்தது என்ன பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டையா ? யாரிடம் இவர் நாடகம் ஆடுகிறார் ? மக்களை இவர் ஏமாளிகளாக நினைப்பது வருந்தத்தக்கது. இவரிடம் மடிப்பிச்சை ஏந்திக்கிடக்கும் திருமா தம்பியும் இப்போதாவது விலகியதால் இவர்கள் தலை தப்பியது. பிரபாகரன் செய்த குற்றங்களுக்காக , சோனியாவும் கலைஞரும் சேர்ந்து ராஜபக்ஷேவுடன் இணைந்து ,சிவிலியன் தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்றது மன்னிக்கமுடியாத குற்றம். அன்புத்தம்பி திருமா அவர்களாவது 2009-லேயே விலகியிருந்திருக்க வேண்டும்.

  3. ஆரம்பிச்சுட்டாகையா! இந்த நிலை நான் போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து எதிர்ப் பார்த்ததுதான். ஆனாலும், இதயம் படபடக்கின்றது.1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாதிரி இதுவும் உருப்பெற்று மாணவர்களின் எதிர் காலமே வீணாகப் போகமே என்ற கவலை அரிக்கின்றது. இதில் பிரிவின வாதமும் சேர்ந்து ஒட்டு மொத்த தமிழர்களின் வாழ்வு சர்வ நாசத்தை அடையும் அபாயம் காத்திருக்கிறது.’வினாச காலே விபரீத புத்தி’ என்பது போல் மாணவர்களின் எண்ணங்கள் தெரிகின்றன. முளையிலேயே கிள்ளி எரியாமல் அரசியல் லாபங்களுக்காக மாணவர்களை எல்லா கட்சிகளும் தூண்டி விட்டு வேடிக்கைப் பார்க்கின்றன. இந்தியாவின் முன்னேற்றத்தை எப்படியாவது முடக்க வேண்டும் என்று சீனா முயற்ச்சிக்கிறது. அதைப் பாகிஸ்தானும் வெண் சாமரத்துடன் .வரவேற்கிறது. மௌனி மன மோகனார் மோன நிலையில் உள்ளார். இந்தியத்தாயை மான பங்கம் செய்வது என்ற ஒரே குறிக்கோளுடன் இறங்கி இருக்கும் சீமான்,வைக்கோ போன்ற மதி கேட்டவர்களுக்குக் குதூகலம்.
    கடவுளைத் தவிர வேறு நாதியில்லை நம்மைக் காப்பாற்ற!

  4. தமிழ்நாட்டு மாணவர்கள் தற்போதைய நிலையை நன்கு ஆராய்ந்து செயல்படவேண்டும்.கழுகுகள் காத்துக்கொண்டிருக்கின்றன. மாணவர்கள்
    பகுத்தறிந்துநடுநிலையோடு நடந்துகொள்ளவேண்டும்.உணர்ச்சிவசப்படக்கூடாது

  5. இந்த பகுத்தறிவுவா(ந்)திகள் கயவ எண்ணப்படி தமிழகம் இந்தியாவிலிருந்து பிரிந்துவிட்டால் நாளை இந்துக்களின் நிலை என்ன? காப்பாற்ற யாருமே இல்லையா? இன்னும் இந்த அபாயநிலை பல இந்துக்களுக்குப் புரியவில்லையே, எங்கே சென்று முட்டிக்கொள்வது???

  6. 1. தமிழன் உணர்ச்சி பிழம்பு. எப்பொழுதும்போல் இப்பவும் சிறிலங்காவில் வசிக்கும் நம்மவர்களுக்கு அடிவாங்கிகொடுக்கும் வரை ஓயமாட்டான்.
    2. இதற்காக போராடும் நபர்களுக்கு எந்த வாட்டமும் உள்ளூர கிடையாது. தினமும் முகச்சவரம் செய்துகொண்டு ரோமத்திற்கு கருமை பூசி புதிய தமிழக தொலை காட்சிக்கு நரம்பு புடைக்க பேட்டி கொடுக்கின்றார்.
    3. இனி எல்லா போராட்ட சடங்குகளும் நடக்கும். மனித சங்கிலி, தீக்குளிப்பு, ரயில் மறியல். இதில் கலராதவர்கள் தமிழ் இன துரோகிகள்.
    4. இவர்கள் அடிக்கும் இந்த கூத்தால் இலங்கை தமிழர்களுக்கு விடிவு காலம் உடனே பிறக்கும்(!).
    5. சிங்களர்களை விமான குண்டு வீசியும், பள்ளி வேன்களை கண்ணிவெடி வைத்து தூக்கியபோழுதேல்லாம் மந்த உரிமை வாதிகள் எங்கே சென்றனர்? ஏன் பிரபாகரனை கேள்வி கேட்கவில்லை?
    6. இஸ்ரேல் பார்க்காத ஐ. நா கண்டனங்களா? யாரை ஏமாற்றுகிறார்கள்?
    7. தமிழர்களுக்கு நல்லதுசெய்ய நினைத்து இங்கு வரும் புத்த பிட்சுக்களை உதைப்பது, இன்னும் சிங்களர்களிடம் துவேசத்தை வழர்க்குமே தவிர குறைக்காது.

  7. \\\\தமிழர்களுக்கு நல்லதுசெய்ய நினைத்து இங்கு வரும் புத்த பிட்சுக்களை உதைப்பது, இன்னும் சிங்களர்களிடம் துவேசத்தை வழர்க்குமே தவிர குறைக்காது.\\\\\

    ஹிந்துஸ்தானத்தில் ஒரு புத்த பிக்ஷு தாக்கப்பட்டார் என்றால் அது ஈழத்தில் வாழும் தமிழர்கள் பகுதியில் எப்படி எதிரொலிக்கும் என்பது கதிர்காமக் கந்தனுக்கே வெளிச்சம்.

    எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் ஈழத்தமிழருக்கு நலனளிப்பதாகவும் ஸ்ரீலங்கா மற்றும் ஹிந்துஸ்தானம் இரண்டு தேசங்களிடையே ஒற்றுமையைக் குலைக்காததாகவும் இருப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒரு நிலைப்பாடு. ஆனால் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டியது.

  8. நிதானமான பார்வையுடன் எழுதப்பட்ட பதிவு. பாராட்டுக்கள்.

    ஜடாயு மிகச்சரியாக திரு.நரேந்திரன் அவர்களது கட்டுரையை மேற்கோள் காட்டியிருக்கிறார். அவரது கட்டுரையில் குறிப்பிடப்படும் ஒற்றுமையின்மையை நினைத்தால் அங்கே தமிழர்களுக்கு தீர்வு என்பதே சமீபத்தில் இல்லையோ என்று வேதனையை இருக்கிறது. ‘தனியே அதற்கோர் குணமுண்டு’ என்று சொல்லப்படுவது இந்த ஒற்றுமையின்மையைத்தானோ என்றும் தோன்றுகிறது. இவ்வளவு இழிவு பட்ட பின்னும் ஒன்று படாமல் இருக்கச்செய்யும் அளவு ஏன் அப்படி ஒரு சாதி வெறி ? (அகதிகளாக வாழும் தேசத்திலும் (பிரான்ஸ்) சாதிபிடிப்போடு இறுக்கமாக இருக்கும் இவர்களது நடவடிக்கையை சாரு நிவேதிதா குறிப்பிட்டு இருந்தார்)

    இரண்டே இரண்டு மீனவர்களை கொன்றுவிட்டு சுப்ரீம் கோர்ட்-ஆல் தப்பிக்க விடப்பட்ட இரண்டு இத்தாலியர்களை, இத்தாலி முதலில் மறுத்தாலும் பின்னர் நிர்பந்தப்படுத்தி இருவரையும் இங்கே கொண்டுவரச்செய்த கேரள அரசின் அணுகுமுறையும் அதற்கு மத்திய அரசில் மூலமாய் பலமாய் லாபி செய்திருக்கும் மலையாள அதிகாரிகளின் ஒற்றுமையும் நமக்கு – இந்திய மற்றும் இலங்கை தமிழர்கள் இருவருக்குமே – இங்கே பாடமாய் அமையவேண்டும்.

    இனிமேலாவது நீண்டநாள் தீர்வாக தங்களுக்குள் உரையாடி தமது ஈகோ-வை விட்டுக்கொடுத்து அனைத்து தமிழர்களும் ஒன்று பட முயலாவாவது வேண்டும். முதல் அடி இப்போது எடுத்துவைத்தால் அடுத்த சந்ததியாவது உறுதியாக ஒன்றுபட்டு வாழ இயலும்.

    அடுத்து மிக முக்கியமாக, யூதர்களை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டியது ஒன்று இருக்கிறது. அது தங்களை தேர்ந்த புத்திசாலிகளாக்கிகொள்வதும் வணிகரீதியாக மிகுந்த கெட்டிக்காரர்களாக ஆக்கிக்கொள்வதும். அமெரிக்கா-வில் யூதர்கள் எப்படி ஒரு பெரும் சக்தியாக விளங்குகிறார்களோ அதுபோல இலங்கையில் தமிழர்களும் தமது வேற்றுமைகளை மறந்து புறக்கணிக்கவோ தவிர்க்கவோ இயலாத அளவுக்கு வலிமையான பொருளாதார, மூளை சக்தியாக உருவெடுக்க வேண்டும்.

    இனியும் பிரிவினைவாத பேச்சு பேசி அழிந்து போகாமல் இருக்க – நிகழ்ந்த கொடுங்கனவுக்கு மிகச்சரியான பதிலாக எனக்கு படுவது மேற்சொன்ன வழியே.

    விஸ்வாமித்ராவின் பதிவு புதிய கோணத்தை சொல்கிறது. திரைமறைவில் இன்னும் என்னென்ன நாடகங்களோ ?

  9. (1) திரு.ஜடாயு அவர்கள் கடைசியாக கூறியது போல, இந்திய தேசிய சிந்தனை உள்ளவர்கள் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது நடைமுறை சாத்தியமல்ல. இந்திய தேசிய சிந்தனை உள்ளவர்களுக்கு இந்தக் கும்பலில் இடமே இல்லை. எல்லோரையும் சகட்டுமேனிக்கு தாக்குவது, திராவிட மேடைப்பேச்சு வரலாற்றைப் போன்று அநாகரீகமாக பேசுவது என்று இருப்பவர்களிடம், இந்திய தேசிய சிந்தனை வரும் என்று நான் நம்பவில்லை. அதைப் போன்றே இதில் உள்ள மாணவத்தலைவ செல்வங்கள் அடுத்தவர்களின் பேச்சை கேட்கும் நிலையில் இல்லை. இந்திய தேசியத்தை பேசுபவர்கள் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஹிந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள், காந்தியவாதிகள், சில தேசிய கட்சிகளை சேர்ந்தவர்கள். திரு. ஜடாயு ஹிந்துத்துவா அமைப்பினரைத் தான் சுட்டுகிறார் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, தமிழகத்தில் ஹிந்துத்துவா அமைப்பினரின் தாக்கம் மிகவும் குறைவானது. காந்தியவாதிகள் கூட இந்திய மத்திய அரசை எதிர்க்கும் போக்கை முதன்மையாகக் கொண்டுள்ளதாலும், இலங்கைத் தமிழர்களை ஆதரிக்கும் போது, நடுநடுவே பிரிவினைவாதத்தை Subtleஆக ஆதரித்தே பேசுகின்றனர். சில தேசியக் கட்சிகள் முடிந்தவரை அடக்கியே வாசிக்கின்றன. காங்கிரஸை குறித்து, என் கருத்தை கடைசியாக எழுதுகிறேன்.

    திரு.ஜடாயு அவர்கள் எழுதுவதற்கு மாறாக, இந்த மாணவர்கள், தங்கள்
    பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைத்து போராடத் தான் செய்யட்டுமே! 80 வருடங்களுக்கும் மேலாக இந்த பிரிவினைவாத குப்பை சிந்தனைகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம். எப்படியும் இந்திய மத்திய அரசு இவர்களை சட்டை செய்யப்போவதில்லை.

    பிரபாகரனைத் தாண்டி சேகுவாரா என்ற தீவிரவாதியின் படத்தையும் இந்த மாணவர்களில் சிலர் அணிந்திருப்பது எனக்கும் கூட பயத்தை அளிக்கிறது. பாஜகவும் பிற ஹிந்துத்துவா அமைப்புகளும் இது போன்ற போராட்டங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். உதாரணமாக திரு.அண்ணா ஹசாரே போராட்டத்தை ஆதரித்து பேசியபோது நன்றாக இருந்தது. ஆனால், அதிலிருந்த திரு.அரவிந்த கேஜ்ரிவால் இன்று பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இடதுசாரித்துவமாகவே உள்ளது. அதுவும் தப்பித்தவறி அவருக்கு ஏதேனும் ஆதரவு அரசியல்ரீதியாக கிடைத்து விட்டால் இந்தியாவை பழைய சோஷலிஸத்திற்கும், ஒரு Dark Agesக்கும் இட்டுச்சென்று விடுவார்.

    திரு.அருணகிரி, கிறிஸ்தவம் என்ற பூச்சாண்டியை கையிலெடுக்கிறார். திரு. விஸ்வாமித்திரா, அதையும் தாண்டி நிறைய Conspiracy Theoryகளை உலாவிட்டுள்ளார். படிப்பதற்கு நகைச்சுவையாக இருக்கிறது. வேறு ஒன்றும் எழுதுவதற்கில்லை.

    (2) கடந்த வருடம், இதே போன்ற ஐ.நா தீர்மானத்தின்போது, ஆர்.எஸ்.எஸ் இயக்கமும், பாஜகவும், தெளிவான நிலையை, அதாவது, இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையை எடுத்தபோது, திரு.அரவிந்தன் நீலகண்டன், அதை எதிர்த்து எழுதினார். அப்பொழுது நான் மறுமொழி எழுதுகையில், ஒரு சிறுவனின் புகைப்படத்திற்காக, இந்திய மத்திய அரசு தன் நிலையை மாற்றிக் கொள்ளக்கூடாது என்று எழுதினேன்.

    (3)இந்த வருடமும், பாஜகவின் கட்சியை சேர்ந்த திரு.யஷ்வந்த் சின்ஹா, நாடாளுமன்றத்தில், இலங்கை அரசுக்கு எதிராக பேசினார். ஆனால், பாஜகவின் வெளிவிவகாரத்துறை பிரிவு, இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையையே முன்வைத்தது. திரு.யஷ்வந்த் சின்ஹாவின் பேச்சு அவரின் தனிப்பட்ட கருத்து என்று கைகழுவியது.

    (4) திரு.சேஷாத்ரி சாரி, ஒருமுறை தொலைக்காட்சி விவாதத்தில், இந்திய வெளியுறவுத்துறையின் கொள்கைகள் புதுடில்லியிலேயே முடிவு செய்யப்பட வேண்டும், மாநிலங்களில் அல்ல என்றார். தமிழர்களில் ஒரு பிரிவினரோ அல்லது பெரும்பாலானாரோ கூட ஆதரித்தாலும், இந்திய தேசிய நலனிற்கு எதிரான ஒரு நிலையை இந்திய மத்திய அரசு எடுக்கக்கூடாது என்று ஒரு போடு போட்டார்.

    (5)என்னைப் பொறுத்தவரை, இந்திய தேசிய நலன் என்பது ராஜ தர்மத்தை பொறுத்தே அமைய வேண்டும். 2 உதாரணங்களை தர விரும்புகிறேன்.

    (அ) ஒரு திரைப்படத்தில் வரும் Slide இது. விஷ்ணுகுப்த சக்கரவர்த்தி சாணக்கியனிடம் கேட்கிறார்.
    “சாணக்கியரே! எது தர்மம்?”
    சாணக்கியரின் பதில்-
    விஷ்ணுகுப்தா, எது தேவையோ-அதுவே தர்மம்”

    நம் முன்னோர்கள் ராஜ தர்மத்தையும், சாமானிய தர்மத்தையும் சரியாக பிரித்தே கையாண்டார்கள். பாலச்சந்திரன் என்ற சிறுவனின் குண்டடிபட்ட
    உடலுக்காகவும், இசைப்பிரியாவின் நிர்வாண உடலுக்காகவும், இந்திய தேசநலனை விட்டுவிட முடியாது. தனிப்பட்ட முறையில் கேட்டால், அது அவசியமற்றது, அவர்கள் பாவம் என்று கூறலாம். ஆனால் ராஜ தர்மத்தில் பாவ, புண்ணியத்தை பார்த்துக்கொண்டு சாமியார் போன்று செயல்பட முடியாது. என் அப்பன் சங்கரனிடம் தர்மத்தை பற்றி கேட்டால், 40 பக்க நோட்டு போதாத அளவிற்கு வியாக்கியானம் அளிப்பான். ஆனால் அப்படியெல்லாம் நாட்டு நிர்வாகம் செய்ய முடியாது.

    சாணக்கியனின் அர்த்தப்படி இந்திய தேச நலத்தேவை என்பது,
    பிரிவினைவாதத்தை இலங்கையிலோ அல்லது அதைத்தாண்டி தமிழகத்திலோ மீண்டும் தலையெடுக்காமல் பார்த்துக் கொள்வது, இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுபடுத்துவது, தெற்காசியாவில் பிராந்திய வல்லரசாகவே தொடர்வது என்ற 3 தேவைகள்தான் ராஜதர்மம்.

    (ஆ) சிவகாமியின் சபதம் என்ற கல்கியின் புதினம். சிவகாமியை (கற்பனை பாத்திரம்) காதலிக்கிறான் நரசிம்ம வர்ம பல்லவன். அவளை கவர்ந்துகொண்டு வாதாபிக்கு சென்று விடுகிறான் புலிகேசி மன்னன். நரசிம்ம வர்மனும், அவனின் கூட்டாளிகளும் மாறுவேடத்தில் வாதாபிக்கு சென்று சிவகாமியை மீட்டுவர செல்கின்றனர். சிவகாமி அதற்கு உடன்பட மறுக்கிறாள். திரும்பியவுடன், நரசிம்மன் தன் தந்தையான மகேந்திரவர்மனிடன் நடந்ததை சொல்கிறான். அப்போது மகேந்திரவர்மர் கூறுவது சிந்திக்கத்தக்கது. ஒருவேளை நீ, சிவகாமியை
    மீட்டு வந்திருந்தால் நான் அவளை மணமுடித்திருப்பேன். ராஜதர்மத்தில்
    காதலுக்கு இடமில்லை. நீ பாண்டிய இளவரசியைத் தான் மணக்க வேண்டும் என்கிறார்.

    (6)என்னைப் பொறுத்தவரை, 80களில், இலங்கை பிரிவினைவாதிகளை ஆதரித்த இந்திராகாந்தி மற்றும் எம்.ஜி.ஆரின் வரலாற்று தவறின் முடிவுகளைத் தவிர்த்து, காங்கிரஸ் சரியான, தெளிவான முடிவுகளையே 2012 வரை எடுத்து வந்தது. கடந்த வருடம் தி.மு.கவின் மிரட்டலுக்கு பணிந்து இலங்கையை எதிர்த்ததிலிருந்து தான், பிரச்சினை ஆரம்பமானது. இவ்வளவு அரசியல் ரீதியான எதிர்ப்புகளையும் மீறி, காங்கிரஸ் அரசு பெரும்பாலும் நிதானமான முடிவுகளை எடுத்துள்ளதை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.

    கடைசியாக, துக்ளக் ஆசிரியர் திரு.சோ அவர்கள் தொடர்ந்து முன்வைக்கும் முடிவை நான் ஆதரிக்கிறேன்.

    “ஒன்றுபட்ட இலங்கைக்குள் (ஒரு சமஷ்டி அமைப்பின் கீழ்), மாநில
    அதிகாரங்களுடன், 13ம் அரசியல் சட்ட ஷரத்துகளின் படி இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற்று இலங்கை என்ற ஒற்றை நாட்டிற்கு கீழே வாழ்வது தான் தொலைநோக்கு பார்வையில் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்.”

    இது நடக்க சில வருடங்கள் என்ன, சில தசாப்தங்கள் கூட ஆகலாம். ஆனால் நீடித்திருக்கும் சமாதானத்திற்கு இதுவே வழி.

    விடுதலைப்புலிகள் கொடூரமானவர்கள். அவர்களை தலையெடுக்க இலங்கையும் விடாது. இந்தியாவும் விடக்கூடாது. அந்த நீசக்கூட்டத்தின் அல்லக்கைகள் உலகெங்கும் பரவியுள்ளனர். கணிசமாக தமிழகத்தில் உள்ளனர். இந்திய மத்திய அரசு விழிப்புடன் இப்போது போலவே நடந்தால் போதும்.

  10. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கல்லூரிகள் இருக்கின்றன மொத்தம் இந்த போராட்டத்தில் பங்கேற்றது பத்து பதினைந்து கல்லூரிகளுக்கு மேல் தேராது ஒவ்வொவுரு கல்லூரிக்கும் இருபது அல்லது முப்பது பேருக்கு மேல் தேற மாட்டார்கள் அதனால் இதை தமிழகம் தழுவிய மாணவர் போராட்டம் என்று கூறுவதே தவறு….இலங்கையில் சில பேர் இறந்த உடன் பிறீட்டு கிளம்பும் தமிழ் உணர்வு மலேசியா,பர்மா,மாலத்தீவு,தென் ஆப்ரிக்கா,பிஜி ஆகிய நாடுகளில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை ஏற்பட்டபோது எங்கு சென்றார்கள் எதோ பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட படத்தை வைத்துகொண்டு கண்ணிர் விடுபவர்கள் ஆயிரக்கணக்கான இளம் சிறார்கள் விடுதலைபுலிகளால் ஆயுதும் கொடுக்கப்பட்டு போர் முனைக்கு சென்று உயிர் இழந்தார்களே அந்த பாவத்தை யார் கணக்கில் சேர்ப்பது..கிட்டத்தட்ட 15000 தமிழர்கள் விடுதலைபுலிகளால் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் ..இவர்கள் சொல்வது என்னவென்றால் விடுதலைபுலிகள் தமிழர்களை கொன்றால் அது தியாகம்,வீரம் அல்லது கொல்லப்பட்டவர்கள் துரோகிகள்…இலங்கை ராணுவம் பல தமிழ் பெண்களை மானபங்கபடுத்தி கொடூரமாக கொன்றதாக குற்றம் சாட்டுபவர்கள் விடுதலைபுலிகளால் ஆயிரக்கணக்கான தமிழ் இளம் பெண்களும் தமிழ் குழந்தைகளும் தற்கொலை படையில் வலுகட்டாயமாக சேர்க்கப்பட்டு அவர்களின் உடலில் வெடிகுண்டை கட்டி கொடூரமாக கொன்றதை என்னவென்று சொல்வது …தற்போது வர வர ஒரு புது கலாச்சாரம் பரவி வருகிறது நான் இங்கு பதிந்தவற்றை நீங்கள் யாரிடமாவது கேட்டிர்கள் என்றால் நீங்கள் தமிழ் விரோதி ஆகி விடுவிர்கள் …..விடுதலைபுலிகளை ஆதரிக்கவில்லை என்றல் உங்கள் சக நண்பர்களே உங்களை தமிழ் துரோகி என்று கூறுவார் …என்னென்றால் தமிழுனர்வினை விடுதலைப்புலிகள் மொத குத்தகைக்கு எடுத்திருகிறார்கள்…………………

  11. எல்டிடிஈ என்ற ரத்தவெறி பிடித்த மிருகம் வதை பட்டு செத்த பின்பும் பிசாசாக வந்து இன்னும் பல தமிழ் இளைஞர்களைக் காவு கொள்ள அனுமதிக்கக் கூடாது. குரூர சிரிப்புடன் பிரபாகரன் போஸ்டர் பின்னணீயில் நிற்க பிஸ்கெட் தின்று சாகும் சிறூவன் படத்தைக் கையில் தாங்கி நிற்கும் அந்த அப்பாவி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் கீழ்க்கண்ட கட்டுரையை அச்சடித்துப் படிக்கக் கொடுக்க வேண்டும். ராஜபட்சேயின் படத்துடன் சேர்த்து அவர்கள் தீயிட்டுக் கொளுத்த வேண்டியது – துப்பாக்கிகளின் குறுக்கே புலி உறுமும் அந்த இழவெடுத்த அடையாளத்தையும், பிரபாகரன் படத்தையும் தான்.

    https://othisaivu.wordpress.com/2013/03/25/post-183/

    // அச்சமயம் இந்த முழுக் கண்றாவிச் சம்பவத்தை திரைப்படம் பிடித்து பின்னர் பிரபாகரனுக்கு அப்படத்தைப் போட்டுக் காண்பித்தனர். அவரும் குழந்தைகள் சுட்டுக் கொல்லப் படுவதை உணர்ச்சியில்லாமல் பார்த்தார். லண்டன் நண்பர்தெரிந்தவர் உபயோகித்த பதம் – ’without batting an eyelid!’ இந்த மாதிரிக் கோரச் சம்பவங்களை, கொலைகளை — திரைப்படம் எடுப்பது /புகைப்படம் பிடிப்பது, பின்னர் அதனை ‘அண்ண’னுக்குக் காண்பிப்பது போன்றவற்றை – எல்டிடிஇ இயக்கத்தில் நடக்கும் ஒரு வெகு சாதாரணமான, ரெகுலரான விஷயம் போலப் பேசினார் அவர். என்ன ஒரு குரூரவாதி மனிதன் இந்த பிரபாகரன்!

    … ஆக, இம்மாதிரி எல்டிடிஇ சந்தோஷமாகச் செய்த அட்டூழியக் குழந்தைக் கொலைகள் பற்றிய ‘பெருமித’ காணொளிகளும் சானல்-4 போன்ற பப்பரப்பா அயோக்கிய ஒருபக்கச் செய்திச் சொல்லிகளால், மண்வெட்டி தாசர்களால் – வெளிக் கொணரப் படும் என நம்பலாம்.

    அதற்குப் பிறகு – நம் தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் தமிழ்க் குழந்தைகளைக் கயமையாகக் கொன்ற தமிழர் தலைவர்களுக்கு எதிராகப் போராடுவார்கள் எனவும் நம்பலாம். இனஅழிப்பு – ஜெனொஸைட் என்றெல்லாம் பேசுகிறார்களே இந்த விசிலடிச்சான்குஞ்சுகள் – – இப்போது, பிரபாகரன் கொடும்பாவியை எரிப்பார்களா? பிரபாகரன் உருவச் சோளக்கொல்லைப் பொம்மையைத் தூக்கில் போடுவார்களா? //

  12. திரு ஜடாயு -சரியாக சொன்னிர்கள்.

    சமீபத்திய துக்ளக் இதழ் என்று நினைக்கிறேன். தொண்ணூறுகளில் மாத்தளை என்ற இடத்தில் 40 பள்ளிக் குழந்தைகள், தமிழர்கள் தான் ,இந்த தமிழ் வீரர்களால் வேனில் செல்லும்போது குண்டு வைத்து கொல்லப்பட்டனர் என்று ஒரு சகோதரி கடிதம் எழுதியிருந்தார்.

    யாருக்கு வந்தாலும் இரத்தம் தான் தக்காளி சாஸ் அல்ல என்று இந்த சில மாணவர்களுக்கு எப்படி புரிய வைக்க?

    கூடங்குளம் வெற்றிகரமாக வேலை செய்யாமல் சும்மா நிற்கிறது. தமிழ் நாட்டில் மின்வெட்டு கடுமை -எந்த தமிழ் பேசும் உழைப்பாளியும் சொந்த தொழில் செய்து சம்பாதிக்க முடியாது முன் போல-தலைவர்களில் யாருக்கு தமிழ் நாட்டு தமிழர்களை ப்பற்றிய அக்கறை இருக்கிறது?நம் ஓட்டில் அவர்கள் ஆட்சி மாற்றி மாற்றி,
    அல்லது எந்நாட்டு அப்பாவி ஹிந்துக்களை -பங்களாதேஷ் போல -மிதிபட்டு சாகிறவர்களை பற்றி பேசுகிறார்கள்? இந்த தளத்திலாவது செய்தி வருகிறது -வேறுங்கும் அதுவும் இல்லை. இருட்டடிப்பு தான் .

    ஒன்று நன்றாக புரிய வேண்டும் இப்போதாவது- பிரிவினை சக்திகள் பலம் பெற்று விட்டன- மாறு வேஷம் போட்ட கட்டம் தாண்டியாயிற்று- சந்நியாசி வேஷ இராவணன் இப்போது தன் சொந்த கொடூர முகத்தை காண்பிக்க தயக்கம் இல்லை.

    டெல்லி சம்பவத்தின் போது பிரிவினை கோஷம்-இப்போதும்-ஏதடா சாக்கு என்று காத்திருப்பது போல .

    2014 தேர்தல் நெருங்குகிறது-நமக்கிருப்பது கட்டை விரல் மை ஆயுதம் தான்.விரட்டி அடிப்போம் வீணர்களை. .

  13. இலங்கை பிரச்சினை பற்றிய தமிழக மக்களின் மனவோட்டம் பலமுறை வெளிப்பட்டுவிட்டது…….இலங்கை விவகாரம் என்பது தமிழக தேர்தல் பிரச்சினை அல்ல……பல தேர்தல்களில் இலங்கை பிரச்சினையை முன் நிறுத்தி வெற்றிபெற முயற்சித்தவர்கள் படுதோல்வி அடைந்திருக்கிறார்கள்……ஆரம்பம் முதல் இந்தப்பிரச்சினைக்காக [மட்டும் ] குரல் கொடுத்துவரும் வைகோ வின் இன்றைய நிலைமையே அதற்கு சான்று …….. இருந்தும் தமிழக ஈழ ஆதரவாளர்கள் அடங்குவதாக இல்லை…… சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தர்கள் வேதாளத்தை மீண்டும் மீண்டும் தோளில் தூக்கி போட்டுக்கொண்டு பயணப்படுகிறார்கள் ……..என்ன தூக்கி நிறுத்தினாலும் இடுப்புக்குமேல் நிற்காததால் மனம் சோர்ந்திருந்த ஈழ ஆதரவாளர்களுக்கு வராதுவந்த மாமணிபோல் கிடைத்தது சேனல் 4 வெளியிட்ட புகைப்படம்……….உடனே சிலிர்த்து எழுந்து கிளம்பிவிட்டார்கள் ஈழ ஆதரவாளர்கள்…….

    பிரபாகரனின் மண்டை பிளக்கப்பட்டு , பாடையில் தூக்கிச்செல்லப்படும் படம் வெளியிடப்பட்டால் , அதை நம்ப மாட்டார்களாம்……அது போலி , தமிழ்தேசியத்தலைவர்[!] உயிரோடிருக்கிறார். அவர் மீண்டும் வருவார் என்று மேடைக்கு மேடை முழங்குவார்களாம்……… .பாலச்சந்திரன் படம் வெளியிடப்பட்டால் ,அது அசலாம் ,தமிழகமே கொந்தளிக்க வேண்டுமாம்……..

    எத்தனை தமிழ் சிறுவர்களை வலுக்கட்டாயமாக புலிகள் தங்கள் படையில் சேர்த்து பலி கொடுத்திருப்பார்கள்?[ புலிகளை இலங்கைத்தமிழர்கள் ” பொடியன்கள் ” என்றே அழைப்பது வழக்கம்] தாக்குதலுக்கு செல்லும்போது சிறுவர்களை முன்னே அனுப்பி பலி கொடுப்பது புலிகளின் வழக்கம்…….. அம்னெஸ்டி இன்டர்னேஷனல் அமைப்பும் , செஞ்சிலுவை சங்கமும் இது குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் புலிகள் திருந்தவில்லை……அந்த தமிழ்ச்சிறுவர்கள் உயிருக்கெல்லாம் மதிப்பே இல்லையா?

    தொன்னூறுகளில் , சந்திரிகா அரசுடனான போர் நிறுத்தத்தின் போது மாத்தளையில் ,[சிங்கள] பள்ளிச்சிறுவர்கள் சென்ற பேருந்தை புலிகள் வெடி வைத்து தகர்த்தார்களே, அதில் உடல் சிதறி செத்தவர்கள் குழந்தைகள் அல்லவா?பிரபாகரனின் மகன் உயிர் மட்டும் என்ன உசத்தி?

    இறுதிப்போரின் போது அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை ராணுவம் எவ்வளவு காரணமோ , அதே அளவு புலிகளும் காரணம்…..பொதுமக்களை கேடயமாக பயன்படுத்திய ”மாவீரர்கள்” தான் அத்தனை உயிரிழப்புக்கும் காரணம்…..முல்லைத்தீவை ராணுவம் கைப்பற்றியபோது அங்கு பொதுமக்களே இல்லை……..அனைவரையும் ஆடுமாடுகள் போல் புலிகள் ஓட்டிச்சென்றுவிட்டனர்…….போருக்குப்பிந்தைய ஐ . நா சபையின் அறிக்கை இதை தெளிவாக குறிப்பிடுகிறது…..

    புலி ஆதரவாளர்களின் நோக்கம் இலங்கைத்தமிழர்களை வாழவைப்பதல்ல…..இந்தியாவை துண்டாடுவதுதான்………குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக , இந்த தேசவிரோதிகளுக்கு ஆதர‌வளிக்கும் தமிழக அரசியல்கட்சித்தலைவர்கள் , தமிழர்களின் எதிர்கால நலனை பலியிட துணிந்துவிட்டார்கள்…..

    தமிழக மக்கள் மிக தெளிவாக உள்ளனர்…….இறுதிப்போர் உச்சகட்ட நிலையில் இருந்தபோது , காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது , முத்துக்குமார் போன்ற முட்டாள்கள் வீணாக உயிரை விட்டபோதும்…….மக்கள் தெளிவாக இருந்தனர்….காங்கிரஸ் – திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது….ஈழத்துக்கு ராணுவத்தை அணுப்புவேன் என்று முழங்கிய ஜெ. தோல்வியடைந்தார்……..இந்தியாவில் கட்சி நடத்திக்கொண்டு , ஈழத்தமிழர்களுக்காக மட்டும் பாடுபடும் வைகோ , சொந்ததொகுதியில், அறிமுகமே இல்லாத வேட்பாளரிடம் தோற்றுப்போனார்……..

    யாரால் இந்த மாணவர் எழுச்சிகள் தூண்டப்படுகின்றன என்பதை மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்…….அவரவர் மனைவிகளின் ஆதரவைக்கூட பெறமுடியாத இந்த ” த‌லைவர்களை ” மக்கள் என்றோ தூக்கியெறிந்துவிட்டனர்……தங்களால் செய்ய முடியாததை , எளிதில் உணர்ச்சிவசப்படும் மாணவர்களைக்கொண்டு நிறவேற்ற நடக்கும் இந்த முயற்சி படுதோல்வி அடையும்……

  14. எல்லா பள்ளி , கல்லூரிகளிலும் , எல்லா வகுப்பிலும் மக்கு மாணவர் கும்பல் ஒன்று இருக்கும்……கிடைக்கும் எந்த வாய்ப்பையும் பயன் படுத்தி வகுப்புக்கு மட்டம் அடிப்பதே அவர்கள் நோக்கமாக இருக்கும்….காரணம் எதுவாக இருந்தால் என்ன? கட் அடித்தால் சரி….. அப்படிப்பட்ட கும்பல்தான் இப்போதும் போராடுகிறது……

    கல்விக்கட்டணங்கள் வானளாவ உயந்திருக்கும் இந்தக்காலகட்டத்தில் , அவனவன் வாயைக்கட்டி , வயித்தைக்கட்டி இவர்களை படிக்க அனுப்பினால் , படிப்பதைத்தவிர வேறு எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்…..இவர்களை ஏற்றி விடும் மீடியாவை முதலில் குற்றம் சொல்ல வேண்டும்…..

    இதுவரை எந்த நல்ல காரியத்துக்காகவும் இந்த ”மாணவ சக்தி ”தமிழகத்தில் போராடியதே இல்லை…..அறுபதுகளில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் செய்து ,தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இருந்து துண்டித்தார்கள்…….அதன் பலனை தமிழகம் இன்றுவரை அனுபவிக்கிறது…….இப்போது இலங்கை தமிழனுக்காக போராட கிளம்பிவிட்டார்கள்……..அவர்களும் நிம்மதியாக இருக்ககூடாது என்ற ” நல்ல ” எண்ணம் போலும்…….

    சென்னையில் உட்கார்ந்து கொண்டு இந்திய அரசே , ந‌டவடிக்கை எடு …என்று கொடி பிடித்தால் என்ன அர்த்தம்? இவர்கள் இந்தியர்கள் இல்லையா? அல்லது தமிழகம் இந்தியாவில் இல்லையா?

    ஒரு சில வருட‌ங்களுக்கு முந்தைய துக்ளக் கேள்வி – பதிலில் :

    இன்றைய மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

    சோ : படியுங்கள் , நன்றாகப்படியுங்கள் , மீண்டும் மீண்டும் நன்றாகப்படியுங்கள்……….

    நம்முடைய பிள்ளைகள் உருப்பட வேண்டும் என்று நினைக்கும் எவரும் இதையே சொல்வர்…….

  15. இந்தப் போராட்டங்களை அடக்குவதற்கு அரசாங்கத்திடம் திராணி இல்லையா?
    தேச விரோதிகள் மாணவர்களை பலிகடா ஆக்குகிறார்கள். இதனை தடுக்க ஊருக்கு ஒரு தேச பக்தர் கூடவா இல்லை?

  16. சான்றோன் இட்டுள்ள மறுமொழிகள் மிகவும் எதார்த்தமானவை உண்மையானவை. தமிழகத்தில் உள்ள தேச சிந்தனை உள்ள மாணவர்களும் பெற்றோர்களும் இது பற்றி சிந்தித்து செயல்படவேண்டும்.

  17. // எல்லா ஊர்களிலும், அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரேவிதமான கோரிக்கைகளை முன்வைப்பது நமது போராட்டத்துக்கு மேலும் வலுவூட்டும். அதே போல எளிதில் அடைய முடிகிற, சாத்தியமான கோரிக்கைகளிலிருந்துத் தொடங்கி படிப்படியாக மேனோக்கிப் போவது அறிவுடைமை. ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்று பேசுவது, கோருவது, செயல்படுவது நமது போராட்டத்தை திசை திருப்பி, வீண் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். எடுத்துக்காட்டாக, ஒருசிலர் “தமிழீழம் கொடு, அல்லது தமிழகத்தை விடு” என்று கோரிக்கை வைக்கிறார்கள்; வேறு சிலர் “தனித் தமிழீழம், அல்லது தனித் தமிழ் நாடு” என்று மிரட்டுகிறார்கள். கையிலிருக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு பதிலாக, அதை உருமாற்றி, உசுப்பேற்றி, மேலும் சிக்கலாக்கிவிட வேண்டாம்.//

    இதுவரை சொன்னது சற்று ஏற்புடையது என்றாலும் பின் வரும் தீர்மானத்தில் சொன்னவற்றைப் பார்த்தால் இலங்கை அரசு மிச்சமுள்ள தமிழர்களுக்கு சுமுக முறையில் தீர்வு எதுவும் செய்துவிடகூடாது. பிரிவினை ஒன்றுதான் தீர்வாக இருக்கமுடியும். அதையொட்டி தமிழகத்தையும் இந்தியாவிலிருந்து பிரித்து விடவேண்டும் என்பதற்கு ஒரு தூபம்போடும் முழக்கமாகதான் இருக்கிறது. அதை தான் கிருஸ்துவம் விரும்பி செய்யும். (இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தானை பிரித்தது –தாய்வானை பிரித்தது-கிழக்கு தைமூரை பிரித்தது )

  18. இந்தியாவின் தமிழ் பிரதேசங்களில் புலிகளை சிலர் ஆதரிக்க அனுமதித்ததின் விளைவுகள் இப்போ நடைபெறுவதை கண்டு வருந்துகிறேன். ஒருவருடைய மகனின் படத்தை கையில் பிடித்து போராடுபவர்கள் பிரபாகரனும் ,புலிகளும் கொன்ற ஹிந்து குழந்தைகளுக்காகவும் பிற மத குழந்தைகளுக்காகவும் ஏன் போராடவில்லை? இலங்கை தமிழர்கள் வாழ்வை நாசப்படுத்தியவர்கள் இந்த புலிகள்.
    திரு பாலாஜி, திரு திரு சான்றோன் மிக சரியான புரிதல்கள்.

  19. வணக்கம்
    நான் ஒரு (இந்து) ஈழத்தமிழன், ஏறத்தாள இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வாசித்து பயனடைந்து வருகின்றேன்.நான் ஒரு இந்து என்பதில் இயல்பிலேயே பெருமை கொள்ளும் நான் தமிழர்கள் மர்ற்று மதங்களை பின்பற்றுவதை எதிர்ப்பதில் தீவிரவாதி. இலங்கையில் தமிழன் என்று சொன்னால் அதன் இன்னொரு அர்த்தம் சைவன் அல்லது இந்து என்பதுதான். முஷல்மான்கள் தம்மை தமிழர் என்று சொல்லிக்கொள்வதில்லை. கிறிஸ்தவர்கள் எம்மில் சொற்பமானவர்கள்.ஆனால் இந்தியா செய்த சதியால் இப்பொழுது மிக வேகமாக அதிகரித்துக்கொண்டு வருகின்றார்கள். போதாக்குறைக்கு எம வாழ்வியல் முறைமையை அல்லது சனாதனதர்மத்தை பேணிப் பாதுகாக்கவென உருவாக்கப்பட்டது என எம்போன்றவர்கள் நினைத்த இந்த தமிழ் இந்து இணையத்தளமும் அதனை அதி தீவிரமாக வேகப்படுதுகின்றதுபோல் உள்ளது.இந்த விஜாஷம் மூலம் நான் எவ்வளவோ உச்சத்தில் வைத்துப்பார்த்த ஜடாஜு போன்ற பெரியவர்கள் அதலபதாலத்திற்குரியவர்கள் போல் அல்லது யாருடையதோ கைகூலிகள் போல் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். வலி சுமந்தவர்கள் நாங்கள். அதில் இருந்து மிள்வதர்காகத்தான் போராடினோம். போராட்டமும் தர்மத்தின் வழியில்தான் நடத்தப்பட்டது என்பதனை நாமறிவோம்.எங்கள் போராட்டத்தை சர்வதேச ( இந்தியா உள்பட) உளவு அமைப்புகளும் பயன்படுத்திக்கொண்டன . அதனால் எங்கள் மீதே சேறு பூசப்பட்டன.உளவு அமைப்புக்களால் வெளியிடப்படும் தகவல்களை மட்டும் அறிந்து நம்பிக்கொண்டிருக்கும் என்புதோல் போர்த்த மனிதர்களுக்கு உண்மைகளை உள்வாங்கும், வரலாறுகளை சீர்தூக்கிப்பார்க்கும் பக்குவம் ஏற்படப்போவதில்லை என்பது இந்த தெய்வீக இணையத்தலத்திநூடகவும் சிலரால் புரியவைக்கப்பட்டுக்கொண்டிருகின்றது. இதனை, இந்த இணையத்தளத்திர்கேர்ப்பட்ட ஒரு களங்கமாகவே நான் கருதுகின்றேன்.
    சர்வம் சிவமயம்.
    சுப்ரமணியம் லோகன்.

  20. https://www.dinamalar.com/news_detail.asp?id=676648

    ஜெயலலிதா அரசு நேற்று சட்டசபையில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் இந்த தருணத்தில் ஒரு Master stroke. எல்டிடிஈ ஐ எந்த வகையிலும் ஆதரிக்காமல், தனித் தமிழ்நாடு பிரிவினைவாத கோஷம் இல்லாமல், அதே சமயம் இலங்கையின் இனவெறி அரசை உறுதியாக எதிர்க்கும் வகையிலும், எமது இலங்கைத் தமிழ் சகோதரர்களின் துயரத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் ஒரு ஜனநாயக ரீதியான செயல்பாடு இருக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக இது அமைந்துள்ளது. ”அரசியலுக்காக” ஜெ செய்ததாகவே இருக்கட்டுமே, இந்த நற்செயலை மனம் திறந்து பாராட்டுகிறேன். (அரசியல்வாதி அரசியல் தான் செய்வார், வேறு என்ன செய்வார்?)

  21. அன்புள்ள Subramaniam Logan அவர்களே, ஈழத் தமிழ் சகோதரர்கள் சிந்திய ரத்தத்தையும் கண்ணீரையும் நான் அறிவேன். அந்த வலியையும் கொடுமையையும் உணராத அளவுக்கு மரத்துப் போன மனம் கொண்டவனோ சுயநலவாதியோ அல்லன் நான்.

    உளவுத் துறையோ ஊடகங்களோ செய்யும் பிரசாரத்தை மட்டும் வைத்து என் கருத்தை நான் உருவாக்கிக் கொள்ளவில்லை. எல்டிடிஈ குறித்த அந்த வலைப்பதிவை எழுதிய ஒத்திசைவு ராமசாமி அவர்கள் நான் நன்கறிந்தவர், 2-3 முறை அவரை சந்திக்கவும் செய்திருக்கிறேன். அவர் கூறியதில் உள்ள உண்மைகள் எவராலும் மறுக்க இயலாதவை. மேலும், ஈழத்தை சீரழித்த அதே வன்முறை கலாசாரமும் வெறியூட்டும் கோஷங்களும் தமிழகத்து இளைஞர்களை சீரழிப்பதை சமூக அக்கறை கொண்ட எவரும் ஏற்க முடியாது. வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி, வரலாற்றின் தவறுகளை மீண்டும் செய்யும் நிலைக்குத் தள்ளப் படக் கூடாது.

    தர்மவழியில் ஆரம்பிக்கும் போராட்டம் இறுதிவரை அப்படியே நீடிக்கும் என்று சொல்வதற்கில்லை. 2009 இலங்கை இறுதிப் போரை இரு அதர்ம சக்திகளுக்கு இடையேயான போராட்டம் என்றே நான் கருதுகிறேன். ஒரு அதர்ம சக்தி அழிந்தது. இன்னொரு அதர்ம சக்தி உலக அரங்கில் ஒரு அரசு என்ற அளவில் வளைய வருவதால் அதை அழித்தொழிக்க முடியாது. அதன் கோரைப் பற்களையும் நகங்களையும் பிடுங்கி அதை ஊனமாக்கி அதை ஆபத்தில்லாத ஓரளவு சாத்வீக மிருகமாக ஆக்க முடியுமா என்பதே இப்போது நடைமுறையில் நாம் செய்யக் கூடிய காரியம்.

  22. தமிழக முதல்வரால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில் “இலங்கைத் தமிழர்கள்
    மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட
    வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

    2009 சண்டைக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட ஐ.நாவின் ஆய்வுக்குழு சமர்ப்பித்த
    அறிக்கையில், 3 குழுக்களின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
    (1)இலங்கை அரசு (2)விடுதலை புலிகள் (3)புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்கள்.

    இதில் புலம்பெயர்ந்துள்ள இலங்கைத்தமிழர்கள் மீது மிகவும் காட்டமான
    குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. உதாரணமாக, இலங்கைத் தமிழர்கள்
    புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில், ஒரு குறிப்பிட்ட தொகுதியினர் விடுதலை
    புலிகளின் ஆதரவுக் கூட்டத்தின் கிளையாகவே செயல்பட்டனர். மேலும்,
    தங்கள் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பணம் பறித்து அதை
    புலிகளுக்கு ஆயுதங்களாக அனுப்பி வைப்பதில் உதவி புரிந்தனர். பணக்கொடை
    தரவிரும்பாத தமிழர்கள் மிரட்டி பணியவைக்கப்பட்டனர். சில நேரங்களில்
    அவர்களின் குடும்பத்தினர் மீதும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஐரோப்பிய
    நாடுகள் பலவற்றில் இந்த புலிகளின் அல்லக்கைகள் ஒருவித Mafia போன்றே
    செயல்பட்டனர்.

    இந்த வரலாற்று உண்மையை நாம் ஒருபோதும் மறக்கலாகாது. தற்பொழுதைய
    நிலையிலும், அந்த புலம்பெயர்ந்த தமிழர்களின் புலி ஆதரவு நிலைப்பாடுகள்
    மாறாமல் தொடரவே செய்கின்றன.

    என்னைப் பொறுத்தவரை, தமிழக அரசின் இந்த தீர்மானம் ஒரு வெத்து வேட்டு.
    இந்திய மத்திய அரசு இதை இலட்சியம் செய்யப்போவதில்லை. அதுவரை
    சந்தோஷம்.

    Country-Specific தீர்மானத்தில், இந்தியாவும் பங்கெடுத்து விட்டதால், எதிர்காலத்தில்
    இது Double-Edged Swordஆக நம்மை தாக்கக்கூடிய அபாயம் மிகவும் அதிகம்.
    குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில்.

    எதிர்காலத்தில் இரண்டு விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
    (1)அமேரிக்காவுடன் பலமான கூட்டணியை வைத்துக் கொள்ள வேண்டும்.
    (2)பொருளாதாரத்தில் மேன்மேலும் முன்னேறி செல்ல வேண்டும்.

    அப்பொழுதுதான் நம் எதிரி நாடுகளான பாகிஸ்தானோ அல்லது சீனாவோ, நம்மை
    உரண்டை இழுத்தால், அதற்கு சரியான எதிர்தாக்குதல் தொடுக்க முடியும். நான்
    கடந்த மறுமொழியில் எழுதியது போலவே, இலங்கை விவகாரத்தில், உச்சகட்ட
    அழுத்தம் தமிழகத்திலிருந்து அளிக்கப்பட்டும், பெரிய அளவில் சமாதானங்களை
    செய்துகொள்ளாமல், இந்திய மத்திய அரசு, கூட்டணி ஆட்சியின் நிர்பந்தத்தையும்
    மீறி சிறப்பாக செயல்பட்டதற்காக மனமாற பாராட்டுகிறேன்.

  23. சான்றோன் சார்
    மக்கு பசங்க என்று கூற வைப்பது உங்கள் பொறாமையா ,அறியாமையா

    மாணவர் சங்க தலைவர்களில் ஒருவனாக இருந்தவன் ,பல போராட்டங்களில் பங்கு பெற்றவன் என்ற முறையில் கூறுகிறேன்
    உணர்வுபூர்வமாக எந்த விஷயத்தையும் அணுகும் வயது அது.முடியுமா,முடியாதா என்பதை யோசித்து முடிவு எடுக்கும் வயது அல்ல மாணவர் பருவம்
    முடிந்தால் நல்லது,இல்லை ஒரு நல்ல படிப்பினை,அனுபவம் எனபது எந்த பொதுநல போராட்டத்திற்கும் பொருந்தும்

    எந்த போராட்டமும் தன்னிச்சையாக ,சுயம்பாக பலரிடம்,பல இடங்களில் எழும்பாது
    பொறியை தூண்ட சில சக்திகள் வேண்டும்.
    ஆதரவு தர தனி நபர்கள்,இயக்கங்கள் வேண்டும்,பாராட்ட பத்திர்க்கைகள் வேண்டும்
    இவ்வளவு இருந்தும் மாணவர்கள்/தொழிலாளர்கள் மனபூர்வமாக நம்பி குதிக்காவிட்டால் உடனே பிசுபிசுத்து விடும்
    தமிழ் மக்களை கொடுமைபடுத்துகிறார்கள்,எவ்வித உரிமையும் இன்றி அகதி போல வாழ்கிறார்கள்,நடைபெற்ற படுகொலைகளை புரிந்தவர்கள் அதிகார பலத்தோடு சுதந்திரமாக உலா வருகிறார்கள் ,அவர்களுக்கு தண்டனை வேண்டும் என்று போராடினால்,உன் அண்ணன்,நண்பன்,உறவினர்கள்,சார்ந்து இருந்த இயக்கம் கூட கொலைகளை செய்தது என்ற ஒத்திசைவு அவர்களின் வாதம் தமிழனின் ,தமிழர்களின் கட்சிகளின் மீது கொண்ட வன்மம்

    அவனுக்கு ,அவர்களுக்கு தண்டனை கிடைத்து விட்டது.இவர்களுக்கு கிடைக்க போராடினால் அதை நக்கல் செய்வதா

    பல முறை காலையில் கைது செய்து மண்டபத்தில் அல்லது விளையாட்டு மைதானங்களில் வைத்திருந்து விட்டு இரவு விட்டு விடுவார்கள்
    மாணவனாக இருக்கும் போது கல்லூரி போராட்டத்தின் காரணமாக பதினெட்டு வயதில் சென்னை மத்திய சிறையில் சில நாட்கள் அடைக்கப்பட்டேன்
    என்னுடன் சிறையில் இருந்தவர்கள் அனைவரும் இன்று நல்ல நிலையில் தான் உள்ளனர்.பலர் அரசு பணியில் உயர் அதிகாரிகள்.மற்றவர் பல வெளிநாடுகளில் உயர்பதவிகளில்.கல்லூரி மாணவரின் எதிர்காலம் பாழாகிறது எனபது எல்லாம் வேற்று வாதம்
    ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி தனியாராக மாற்றப்பட்டதற்கு எதிராக இரு மாதங்கள் நடந்த போராட்டம் அது.சிறையில் இருந்தால் அரசு வேலை கிடைக்காது ,வெளிநாடு செல்ல முடியாது என்று பூச்சாண்டி காட்டியவர்கள் பலர்
    நான் அரசு,பொதுத்துறை,ராணுவம் என அனைத்திலும் பனி புரிந்தவன்.gazetted ஆபீசர்
    மாணவர் போராட்டத்தினால் பலர் வாழ்வு பாழ் என்பதெல்லாம் சுத்த பொய்கள்.
    எனக்கு இந்த நிகழ்வுகள் தந்த தைரியம் பத்து ஆண்டு படிப்புக்கு சமம்.பெற்றோரிடம் தைரியமாக என் திருமணம் ,வேலை என என் விருப்பதிர்க்கேர்ப்ப முடிவு செய்ய தேவையான தைரியம் தந்தது மாணவனாக நான் பங்கு பெற்ற போராட்டங்கள்.
    போராட்டத்திற்கு மறைமுகமாக பல உதவிகள் செய்தது கம்முனிச தொழில் சங்கங்கள்,முன்னாள் மாணவர்கள்,எதிர்க்கட்சி தொழில்சங்கங்கள்
    கல்லூரி விடுதிகள் மூடப்பட்ட பிறகு ஆலந்தூரில் உள்ள வி பி சிந்தன் நினைவு இல்லத்தில் மாதகணக்கில் மாணவர்கள் தங்கி இருந்தனர். இதை போல மற்றவர்களின் உதவி இல்லாமல் மாணவர் போராட்டம் நீடிக்க முடியாது.ஆனால் யார் ,எவ்வளவு உதவி செய்தாலும் மனபூர்வமான பங்களிப்பு இல்லாமல் போராட்டம் தொடராது
    மற்ற மாநிலங்களில் வசித்தால் தான் தெரியும் நம் ஊரின் பள்ளிகள்,கல்லூரிகள்,அரசியல் கட்சிகளின் அருமை.
    இந்தியாவிற்கே உதவியது தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்டம் .அதை வன்மம் கொண்டு பார்ப்பது ஏன் எனபது விளங்காத ஒன்று
    swaminomics.org/?p=548

    Annadurai saw this as Hindi imperialism, and struck back with the most violent agitation the state had ever seen. Several Tamil students immolated themselves in protest. The police opened fire on rampaging mobs, killing at least 66 (official figures) and maybe 500 (unofficial estimates). Fearful that the language issue would stoke secession, New Delhi retreated and assured all states that their adoption of Hindi would be optional, not mandatory. In 1967 the Official Languages Act was amended to specify that both English and Hindi could be used as official languages for all purposes.

    In the state election of 1967, the DMK won a landslide victory. The party has (in one of two factional avatars) ruled the state ever since. Many people think South India resisted Hindi. Not really. The resistance was specifically Tamil. Former foreign minister Dinesh Singh, from Uttar Pradesh, once complained bitterly to me that Hindi would have triumphed but for Tamil Nadu.

  24. @ பூவண்ணன்……..

    // மக்கு பசங்க என்று கூற வைப்பது உங்கள் பொறாமையா ,அறியாமையா //

    மக்கு பசங்க என்பதுகூட தவறு……இவர்களெல்லாம் தற்குறிகள்……..சொந்த மூளையை அடமானம் வைத்துவிட்டு ,கண்டவன் பின்னால் ஓடுபவர்கள்……

    தமிழகத்தில் உட்கார்ந்துகொண்டு இந்திய அரசே நடவடிக்கை எடு என்று போராடுபவனை வேறு என்ன சொல்லி அழைக்கச்சொல்கிறீர்கள்?

    இவர்களில் எத்தனைபேருக்கு இலங்கை பிரச்ச்சினையின் முழு பரிணாமம் ஓரளவுக்காவது தெரியும்?இலங்கைவாழ் தமிழர்களுக்கிடையே உள்ள கடுமையான வேறுபாடுகளை இவர்கள் அறிவார்களா?

    மத்திய [காங்கிரஸ் ] அரசுக்கெதிரான போராட்டம் என்பதால் ஜெ .இவர்களை ஆடவிட்டு ரசித்துக்கொண்டிருக்கிறார்…… மாநில அரசுக்கெதிராக மூச்சு விடட்டும் பார்ப்போம் ……பிறகு தெரியும் ஜெ .யாரென்று…….

  25. பூவண்ணன் அவர்களே……

    // இந்தியாவிற்கே உதவியது தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்டம் .அதை வன்மம் கொண்டு பார்ப்பது ஏன் எனபது விளங்காத ஒன்று //

    சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ராஜாஜி, தொடர்ந்து இரண்டு பிரதமர்களை தேர்வு செய்யும் அளவுக்கு அகில இந்திய அரசியலில் கோலோச்சிய காமராசர் போன்ற தலைவர்களை உருவாக்கி , தேசிய அரசியலில் பெரும் பங்கு வகித்த தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இருந்து துண்டித்தது ஹிந்தி எதிர்ப்பு வன்முறை……..

    அதன் பலனை நாம் இன்றும் அனுபவித்து வருகிறோம்………காவிரி, பாலாறு , முல்லை பெரியாறு ,தற்போது தென்பெண்ணை என அனைத்து நதி நீர் பிரச்சினைகளிலும் நாம் வஞ்சிக்கப்படுகிறோம்…..இத்தனைக்கும் இந்த அநியாயத்தை தொடர்ந்து செய்து வருபவர்கள் இவர்கள் குறிப்பிடும் திராவிடர்கள் தான்……இந்தி பேசும் வட நாட்டவர் அல்ல….எனில் ஹிந்தி எதிர்ப்பு போர்[?] சாதித்தது என்ன?

    தமிழனை ,சக இந்தியனிடம் இருந்து துண்டித்தது தான் அதன் ஒரே சாதனை…….

    இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் எனும் கேள்வி எழலாம்…… லாபி என்பது மிக முக்கியம்….. ந‌மது மாநிலத்துக்கான எந்த சலுகை பெற வேண்டுமானாலும் லாபியிங் மிக முக்கியம்…..இந்திரன் மாறினாலும் இந்திராணி மாற மாட்டாள் என்பது சொலவடை…..அரசியல்வாதிகள் மாறினாலும் அதிகாரிகள் மாறுவதில்லை…..எந்த கொள்கை முடிவையும் நடைமுறைப்படுத்துபவர்கள் அவர்களே……ஆக மத்திய அரசுப்பணிகளில் தமிழர்களின் பங்கு மிக முக்கியம்….எழுபதுகளின் பிற்பகுதி வரை தமிழ் அதிகாரிகளே டெல்லியில் முக்கிய இலாகாக்களை நிர்வகித்தனர்……அதன் பிறகு நிலைமை மாறி தற்போது தமிழர்களை முக்கிய பதவிகளில் தேட வேண்டியுள்ளது……காரணம் வட இந்திய அரசியல்வாதிகளால் ஆங்கிலத்தை விட ஹிந்தியை எளிதில் புரிந்து கொள்ள முடிவதால்தான்…..ஹிந்தி தெரியாத அதிகாரிகளை அவ‌ர்கள் புறக்கணிக்கிறார்கள்….. ந‌ம் தர‌ப்பு நியாயத்தை எடுத்துச்சொல்ல அங்கு ஆளே இல்லை……

    ஒரு வாதத்துக்காக தமிழை காக்கத்தான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்றால், இதர தென்னிந்திய மாநிலங்கள் எதுவும் ஹிந்தியை எதிர்க்கவில்லையே? இப்போது கன்னடம் ,மலையாளம் , தெலுங்கு போன்ற மொழிகள் எல்லாம் அழிந்தா போய்விட்டன? ஹிந்தியை ஏற்றுக்கொண்டு படித்த அவர்கள் தானே இன்று சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர்?

    நதிநீர் பிரச்சினைகளில் உச்ச நீதிமன்றம் வரை சென்று நமக்கான தீர்ப்பை பெறுகிறோம்…….ஒன்றாவது அமல்படுத்தப்படுகிறதா? தொடர்ந்து நமது நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன……காரணம் என்ன? நான் முன்பே குறிப்பிட்ட லாபியிங் செய்ய நம் பக்கம் ஆளில்லை…..

    குஜராத் மீனவன் தாக்கப்ப‌ட்டால் அவனை இந்திய மீனவன் என்கிறார்கள்…. ராமேஸ்வர மீனவன் தாக்கப்பட்டால் தமிழக மீனவன் தாக்கப்பட்டான் என்கிறார்கள்…… எனில் தமிழன் இந்தியன் இல்லையா? இந்த நிலையை உருவாகியது ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்தான்….

    .நான் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் நடத்தும் சைனிக் பள்ளியில் படித்தேன் [ சி.பி.எஸ்.இ – ஆங்கில மீடியம் ]…..அங்கு ஹிந்தி கட்டாயம்….. நான் தமிழை மறந்துவிட்டேனா என்ன?

    நவோதயா பள்ளிகளைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீகளா? முழு மத்திய அரசின் நிதி உதவியுடன் தமிழகம் தவிர்த்துஎல்லா மாநிலங்களிலும் இந்தப்பள்ளிகள் செயல்படுகின்றன…….. சி.பி .எஸ் . இ பாடத்திட்டத்தில் மாவட்டத்துக்கு ஒன்று என அமைக்கப்படும் இப்பள்ளிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு 75 சதவீத ஒதுக்கீடு உண்டு……ஆங்கிலம் முதல் மொழியாகவும் , அந்தந்த மா நில மொழி இரண்டாவது மொழியாகவும் , ஹிந்தி மூன்றாவது மொழியாகவும் கற்பிக்கப்படுகின்றன…….

    ஒரு பைசா செலவில்லாமல் கிராமப்புற மாணவர்களுக்கு அற்புதமான கல்வி வழங்கும் இந்த அருமையான திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க திராவிடக்கட்சிகள் தயங்குவது ஏன்? காரணமற்ற ஹிந்தி எதிர்ப்பைத்தவிர , நியாயமான காரணம் ஒன்று சொல்ல முடியுமா?

    திராவிட இயக்க தலைவர்கள் தங்கள் சுய நலத்துக்காக மாணவர்களின், தமிழர்களின் எதிர்காலத்தை பலியிட்ட அநாகரீகம்தான் ஹிந்தி எதிர்ப்பு வன்முறை……..இதை முன் நின்று நடத்திய தலைவர்கள் பிற்பாடு தங்கள் பேரன்களை ஹிந்தி படிக்கச்செய்ததும் , அதையே தகுதியாக காட்டி மத்திய அமைச்சர் பதவி பெற்றதையும் நாம் அறிவோம்….

    .தங்கள் பிழைப்புக்காக ஹிந்தி எதிர்ப்பை இன்றும் தொடர்பவர்கள் தொடரட்டும்……தங்கள் எதிர்காலம் பலியிடப்படுவது தெரியாமல்,மூளை மழுங்கடிக்கப்ப‌ட்ட முட்டாள்கள் கூட்டம் நிகழ்த்திய வன்முறைகளை, போராட்டம் என்ற பெயரில் நியாயப்படுத்தும் இதுபோன்ற கருத்துக்கள் , இனி வரும் தலைமுறையையும் முட்டாள்களாகவே வைத்திருக்க மட்டுமே பயன்படும்……

  26. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்த புலிகளின் அல்லக்கைகள் ஒருவித Mafia போன்றேசெயல்பட்டனர் என்று மதிப்புக்குரிய பாலாஜி அவர்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை. கனடா, ஐரோப்பிய நாடுகளில் மாதாந்த கப்ப பணம் தராத இலங்கை தமிழ் அகதிகளின் கால் கைகளை அடித்து உடைத்தனர் புலிகள். தொழில் இல்லாமல் அகதி உதவிபணம் பெற்று கொண்டிருந்த இலங்கை தமிழ் அகதிகள் மீதும் தமது காண்டுமிராண்டி தாக்குதல்களை மேற்கொண்டு பணம் பறித்தார்கள். இந்த குற்றங்களுக்காக இந்த நாடுகளில் இன்னும் சில புலிகள் சிறை தண்டணை அனுபவித்து வருகிறார்கள். இப்படியாக அப்பாவிகளை கொடுமைபடுத்தி அபகரிக்கபட்ட பல மில்லியன் கணக்கான டொலர்களின் ஒரு பகுதி தான் தற்போது ஹிந்துஸ்தானின் தமிழ் பிரதேசங்களின் அமைதியை கெடுப்பதிற்க்கு பயன்படுத்தபடுகிறது.

  27. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வெற்றி என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மை நிலவரம் வேறு. தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கும் கல்லூரிகளில் ஒரு சிலவற்றில் மட்டும் மாணவர் போராட்டம் தலையெடுத்தது. அந்த கல்லூரிகளிலும் அனைத்து மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. (சென்னையில் மட்டும் 500 கல்லூரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை கல்லூரிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர்? வெகு சொற்பமே!). கலந்து கொண்ட மாணவர்களிலும் பெருவாரியானவர்கள் peer pressure காரணமாகத்தான் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் தெரியாது. மேலும் கடனை உடனை வாங்கி மிகுந்த கஷ்டத்தோடு பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். ஆனால் அவர்கள் போராட்டம் கீராட்டம் என்று அலைந்து தங்கள் வாழ்க்கையில் மண்ணைப்போட்டுக்கொள்கிறார்கள் என்று பல பெற்றோர்கள் அங்கலாய்த்துகொண்டதையும் காணமுடிந்தது. பல பெற்றோர்களுக்கு இந்த போராட்டம் வெறுப்பை தான் ஏற்படுத்தியது. நிறைய மாணவர்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை கேட்டு கை கொட்டி மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தார்கள். இதை நானே வேதனையோடு கண்டேன். இங்கே எங்கே இருக்கிறது ஈழ மக்களின் மீதான கரிசனையும் மனிதாபிமானமும்? கோவையை சேர்ந்த ஒரு பேராசிரியை, இந்த போராட்டம் பிரபாகரன் மகன் கொல்லப்பட்டதை கண்டித்து நடக்கிறது என்று தொலைப்பேசியில் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தமிழகத்தில் இருக்கும் படித்தவர்களே ஈழ மக்களின் பேரழிவை இந்த லட்சணத்தில் புரிந்து வைத்துள்ளார்கள். சாதாரண மக்களை பற்றி என்ன சொல்ல?. இந்த போராட்டத்தை கம்யூனிச அமைப்புக்கள் தங்கள் கொள்கை வக்கிரத்துக்கு ஏற்ப வளைக்க முயற்சித்தன. கிறித்துவ அமைப்புக்கள் தங்கள் கொள்கை வக்கிரத்துக்கு ஏற்ப வளைத்தார்கள். திராவிட கட்சிகளோ இந்த போராட்டத்திற்குள் நுழைந்து ஆதாயம் அடைய முயற்சித்தன. ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம். எதிர்காலத்தில் என்ன ஆகுமோ தெரியவில்லை.
    ஆனால் இவற்றுக்கிடையில் சில விஷயங்களும் நடந்தன. அக்கிரகாரப்பண்ணை என்று அழைக்கப்படும் ஐ.ஐ.டி-க்குள் மாணவர்கள் ஈழ மக்களுக்காக பேரணியும் உண்ணாவிரதமும் நடத்தியது ஒரு பெரிய ஆச்சரியம். அந்த மாணவர்களுக்கு ஈழப்பிரச்சினை பற்றி அனைத்தும் தெரிந்திருந்தது. விஷயம் தெரிந்தவர்களை கூட்டி வந்து கருத்தரங்கமும் நடத்தினார்கள். மற்ற மாநில மாணவர்களின் ஆதரவையும் திரட்டினார்கள். ஒரிரண்டு நாட்கள் மட்டுமே நடந்தாலும் இது மிகப்பெரிய விஷயம். அவர்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

    இந்த போராட்டத்தின் போது இலக்கில்லாத பல விஷயங்கள் இடம் பெற்றன. தமிழீழம் தான் வேண்டும் என்று பதாகை வைத்திருந்தது. பிரபாகரனின் படத்தை தூக்கிக்கொண்டு திரிந்தது. இதெல்லாம் இந்த போராட்டத்துக்கான ஆதரவு தளத்தை மிகவும் குறுகியதாக்கிவிடும். அனைத்திந்திய அளவிலும் உலகளவிலும் ஈழ மக்களுக்கு ஆதரவு கிடைக்கவேண்டும் என்றால் மேற்கண்டவற்றை தவிர்க்க வேண்டும். கீழ் கண்ட இரண்டு விஷயங்களை மட்டும் பிரதானப்படுத்தவேண்டும்.

    1. போரின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலையும் வக்கிரமாக நடைபெற்றன. சாதாரண பொது மக்கள் ஒரு லட்சத்தக்கும் மேல் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இதற்கு சிங்கள படையினரும் அவர்களின் மிகுந்த உயர் மட்டத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களுமே பொறுப்பு. விடுதலைப்புலிகளும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் இன்று இல்லை. கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனில் சர்வதேச அளவில் சுதந்திரமான போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இப்போது சுதந்திரமாக அதிகாரத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

    2. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் எஞ்சி இருக்கும் தமிழர்களுக்கு பிரச்சினை தீரவில்லை. அவர்களின் நிலமும் வீடுகளும் ஆக்கிரமிக்கப்டுகின்றன. வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்படுகின்றன. அவர்களின் அடையாளம் துடைக்கப்படுகிறது. வாழ வழியில்லாத இம்மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். ஒரு காத்திரமான சுயாட்சிக்கு பண்ணாட்டு சமூகம் வழி வகை செய்ய வேண்டும். தமிழர் பகுதியில் ராணுவ மயமும் சிங்கள மயமும் அகற்றப்பட வேண்டும். இதற்கு பண்ணாட்டு சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேற்கண்ட இரண்டு விஷயங்கள் மட்டும் எப்போதும் முன்வைக்கப்பட வேண்டும். பிரபாகரனின் படம் அல்ல.

    தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். எப்படிப்பட்ட வஞ்சகமும் அநியாயமும் ஈழ மக்களுக்கு நடந்திருக்கிறது என்பதை அறியாத மாணவர்கள் பல இடங்களில் சிரித்துக்கொண்டே குரல் எழுப்புவதையும் மறியல் செய்வதையும் புகைப்படங்களில் காண முடிந்தது. இத்தகைய அலட்சியமான செயல்பாடுகளுக்கு காரணம் அறியாமையே. இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் குறிப்பாக மாணவர்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இன்றைய மாணவர்கள் தான் எதிர்காலத்தில் பல்வேறு அதிகார அமைப்புக்களிலும் தொழில்களிலும் (உள்ளூரில் இருந்து உலகளவில்) பொறுப்பு வகிக்கப்போகிறவர்கள். அடுத்த தலைமுறைக்கு இந்த விடயங்களை கொண்டு போகிறவர்களும் இவர்கள் தான். ஆகவே தமிழகத்து மாணவர்கள் ஈழ விவகாரத்தில் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கு விளக்கி அறிவூட்ட வேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடிய மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் அதிகம் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களுக்கு மனிதாபிமான உணர்வு இல்லையா? கடின உழைப்புக்கும் நுண்ணறிவுக்கும் சொந்தக்காரர்களான அவர்களையும் இழுத்து வரவேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது.
    இன்றைக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் பத்து லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்களாகவும் மிகப்பெரிய பதவிகளிலும் இருக்கிறார்கள். பலர் பெரும் பணக்காரர்களாக உள்ளார்கள். ஆகையால் தான் இந்தியா போன்ற பெரிய நாடுகளின் தடைகளையும் மீறி சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக இவர்களால் உலகளவில் லாபி செய்யவாவது முடிகிறது. இன்றைய உலகில் சாதாரண மக்கள் எத்தனை கோடி பேர் ஒன்றாக சேர்ந்து கொண்டு போராடினாலும் அதற்கு பலன் அவ்வளவாக இருக்காது. ஆனால் அறிவுஜீவிகளை அதிகம் கொண்ட ஒரு சிறிய இனம் உலகத்தையே கட்டுப்படுத்த முடியும். வெறும் ஒன்றரை கோடி பேர்களை கொண்ட யூத இனம் இதற்கு ஒரு உதாரணம். ஆகவே தமிழகத்தில் மிகுந்த ஆங்கில புலமையும் தமிழ் இன உணர்வும் கொண்ட திறமையான மாணவர்களை உருவாக்கவேண்டும். உலகெங்கிலும் தமிழர்கள் உயர் அதிகார பீடங்களை அலங்கரிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நம் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். (ஐ.நா மனித உரிமை குழுவின் தலைவராக இருக்கும் நவநீதம் பிள்ளை அம்மையார் எனும் ஒரே ஒரு நபர் சிங்கள அரசுக்கு எத்தகைய நெருக்கடியாக மாறினார் என்பதை சொல்ல தேவையில்லை)

    இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. சிங்களர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரை கோடி தான். ஆனால் தனி நாடும் இறையாண்மையும் இருப்பதால் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும். தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிடையே இவ்விடயத்தில் புரிந்துணர்வும் கருத்தொற்றுமையும் தேவை. ஆனால் தி.மு.க என்னும் கட்சி இருக்கும் வரை தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை வருவது கடினம் என்றே தோன்றுகிறது. இவர்களின் ‘டெசோ’ சார்பில் நடந்த முழு அடைப்பே இதற்கு ஒரு உதாரணம். ஆளும் கட்சியின் ஆதரவு மறைமுகமாகவாவது இருந்தால் தான் இம்மாதிரியான போராட்டங்கள் முழு வெற்றியடைய முடியும். ஆனால் ஆளும் அ.தி.மு.க-வின் ஒப்புதல் இல்லாமல் கருநாநிதியாலும் அவரின் எடுபிடிகளாலும் அரசியல் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்டது தான் இந்த டெசோ பந்த். இப்போது தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த ஈழப்பேரழிவை முன்னிறுத்தி சுய ஆதாயம் தேட கருநாநிதி முயன்று வருகிறார். வரும் நாட்களில் இவரும் இவர் கட்சியும் எடுபிடிகளும் பல்வேறு போராட்டங்களையும் பித்தலாட்டங்களையும் முன்னெடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயல்வார்கள். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வருகிறதல்லவா? ஆகவே கொலைகாரனின் கூட்டாளியாக இருந்து ஆதாயம் தேடியது போதாதென்று பிண வீட்டிலும் ஆதாயம் தேடும் இந்த மாதிரியான திராவிட கட்சிகளிடம் தமிழகத்து மக்கள் வரும் நாட்களில் உஷாராக இருக்க வேண்டும். அது தான் இப்போதைய தேவை.

  28. //இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் அதிகம் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களுக்கு மனிதாபிமான உணர்வு இல்லையா? கடின உழைப்புக்கும் நுண்ணறிவுக்கும் சொந்தக்காரர்களான அவர்களையும் இழுத்து வரவேண்டும்//
    இப்படியே தான் இலங்கையிலும் நடந்தது.புலிகள் கூட்டம் நடத்தினால் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும். புலிகளின் கூட்டத்தில் பங்கெடுகாவிட்டால் முதல் கட்ட தண்டணையாக கருக்கு மட்டையால் அடி கிடைக்கும். கப்பம் வாங்கும் போதும் கேட்பார்கள் நீங்கள் தமிழர்கள் இல்லையா? பிபாகரனை தலைவராக ஏற்று, புலிக்காகவே உழைத்து, பிள்ளைகள் பெற்று ,வாழ்ந்து மடிபவன் தமிழன். அப்படி இல்லாதவர்கள் தமிழின துரோகிகள். வாழும் உரிமை மறுக்கபடும்.
    இழுத்து வரவேண்டும் என்பதை புலிகள் துப்பாக்கி வைத்திருந்தபடியால் வெற்றிகரமாக செயல்படுத்தினார்கள். பள்ளிக்கு சென்ற பிள்ளைகளை துப்பாக்கி காட்டி பெற்றோரை மிரட்டி இழுத்து வந்து யுத்த முனைகளுக்கும் ,தற்கொலை தாக்குதல்களுக்கும் அனுப்பி சாகடித்தார்கள். இலங்கை தமிழர்களின் கடின உழைப்பு புலிகளினால் கப்பமாக அறவிடபட்டு நாசமாகியது. அவர்கள் பெற்ற பிள்ளைகள் புலிகளின் வெற்றிக்காக சாகடிக்கபட்டார்கள் .இறந்த பிள்ளைகளின் படங்களை தங்கள் பிரசாரங்களுக்கு சிறப்பாக பயன்படுத்தி கொண்டனர்.புலிகள் இப்போ இல்லை என்று பிரிவினைவாதிகளால் கூறப்படுகிறது .இலங்கையில் புலிகள் வெற்றிகரமாக ஒடுக்கபட்டனர் என்பது உண்மை. கைது செய்யபட்டு விடுதலையான புலிகள் நல்லவர்களாக மாறிவிட்டனர். வெளிநாடுகளில் Mafia வாக செயல்பட்ட புலிகள் வேறு வழியின்றி ஜனநாயக பசுக்களாக பசுவின் தோலை போர்த்து கொண்டு டொலர் மூட்டைகளுடன் தற்போது திரிகிறார்கள். இல்லாத புலிகளின் தடையை நீக்க வேண்டும் என்றா வை கோபாலசாமி போராடி வருகிறார்?
    பிரபாகரன் மகன் கொல்லப்பட்டதிற்கு ஹிந்துஸ்தானின் தமிழ் பிரதேசங்களில் ஒரு போராட்டம் நடைபெறுகிறது .புலிகளினால் தங்கள் பிள்ளைகளை பறி கொடுத்த பெற்றோர்கள் அன்று கதறி அழுது சபித்தார்கள். இந்த பாவம் உங்க சும்மாவிடாது அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

  29. எனக்கு மிகவும் ஆச்சரியம் தருகிற விஷயம்..தமிழ் ஹிந்துக்காக என்று தளத்தின் நோக்கத்தை சொல்லிவிட்டு, தமிழ் ஹிந்துக்களுக்கு எதிராக ஒரு விஷயத்தை (தனது எழுதுகோல் சாமர்த்தியம் மூலம்) திரு. ஜடாயு எழுதி இருப்பது மிகவும் வேதனையாகவும், வழக்கப்படி ஒற்றுமை சிறிதும் இல்லாத தமிழர்களை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. ஈழ தமிழர்கள் “மேட்டிமை” மக்கள் இல்லையோ? அப்படி மேட்டிமை மக்களாக இருந்தால் ஜடாயுவின் உணர்ச்சி சற்று கூடி இருக்குமோ? ஈழ தமிழர்களும் இந்துக்கள்தானே ஐயா! அவர்களின் “சோ”கம் உங்களுக்கு தெரியவில்லையா? மாணவர்கள் போராடாவிட்டால் என்ன..நீங்கள்தான் போராடி இந்திய அரசின் கவனத்தை திருப்புங்களேன். யார் வேண்டாம் என்றது… முதலில் தவறாக நினைத்துவிட்டேன்.. தமிழ் ஹிந்து உண்மையான பெயர் என்று.

  30. அன்புள்ள பாலாஜி,

    எம் ஜி ஆர் இலங்கையில் கண்டியில் பிறந்தவர். மேலும் அவர் தீவிரவாதத்தை ஆதரிப்பவர் அல்ல. சிங்களர்கள் ஆதிக்க வெறித்தனத்துடன் 1983- காலக்கட்டத்தில் கொழும்பு செட்டிதெருவிலும் , மற்றும் அந்நாள் சிலோனில் நடத்திய பல கொடுமைகளுக்கும் பின்னரே, தமிழரை தற்காத்துக்கொள்ள ஒரு அமைப்பு தேவை என்ற முறையில் தான் எல் டி டி ஈ அமைப்பினருக்கு , சட்டசபையில் தீர்மானம் இயற்றி அதிகாரப்பூர்வமாக உதவிகள் செய்ய தொடங்கினார். அந்த கால கட்டத்தில் அவர் செய்தது நூற்றுக்கு நூறு சரியான செயல் தான். அவர் உண்மையிலேயே ஒரு தமிழின தலைவராக செயல்பட்டார். வேறு சிலரைபோல போலி அல்ல அவர்.

    என் சிறிய தந்தை 1940-1950 களில் தென்னிலங்கையில் கண்டி உட்பட பல ஊர்களில் அஞ்சல்துறையில் பணியாற்றியவர். அவர் வாயிலாக நான் அந்நாட்டின் பல அம்சங்களினை புரிந்துகொண்டுள்ளேன். அங்குள்ள தமிழரிடையே எவ்வளவோ பிரிவுகளும், தவறுகளும் இருந்தாலும், சோனியாவும், கலைஞரும் சேர்ந்துகொண்டு , சிங்கள ராணுவத்துக்கு நவீன ராடார் உட்பட எல்லா உதவிகளையும் செய்ததும், சிவிலியன் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, மௌனமாக இனத்துரோகம் செய்ததும் உலகே அறியும். எல் டி டி யினர் இலங்கை இராணுவத்தினால் முறியடிக்கப்படவில்லை. இந்திய ஆளுங்குடும்பமான சோனியா மற்றும் அவரின் சொம்பு கருணாநிதி, சுபவீ, வீரமணி போன்றோரால் தான் முறியடிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் காயமடைந்த விவரம் உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.

    விடுதலைப்புலிகள் தவத்திரு அமிர்தலிங்கம் போன்ற உயர் தலைவர்களை 1989- ஆம் ஆண்டில் கொலை செய்தபோதே , அவர்களின் அழிவுக்கு வித்து இடப்பட்டு விட்டது. ஆனால் , அப்பாவி சிவிலியன் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள வெறியர்களுக்கு ,இங்குள்ள சிலர் அதுவும் இந்திய ராணுவ உதவிகளை செய்ததை மனித இனம் என்றும் மறக்கவோ மன்னிக்கவோ செய்யாது.

    அது சரி, அணுஆயுதம் வைத்திருக்கும் அமெரிக்காவை எதிர்த்து வடகொரியா இவ்வளவு சத்தம் போடுகிறதே, நமது நாட்டு வீரர்களின் தலையை வெட்டி எடுத்து சென்ற பாகிஸ்தானிய நாய்களுக்கு எதிராக , நமது ராணுவத் திறனை காட்டக்கூடாதா ? தென்கொரியாவில் இருக்கும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட அயல் நாட்டினர் வெளியேறவேண்டும் என்று வடகொரியா நேற்று சொல்லியுள்ளது. கொரியத்தீப கற்பத்தில் ஒரு அணுஆயுதபோர் ஏற்படும் என்று உலகே அஞ்சுகிறது. கொரியாவில் அணுஆயுத போர் ஏற்பட்டால் அதன் கதிரியக்க விளைவுகளால் , அருகில் இருக்கும் ஜப்பான் போன்ற பல நாடுகளும் கடுமையாக பாதிக்கப்படும். இந்தியா தன்னுடைய எதிரிகளுக்கு சரியான பாடம் கற்பிக்காதவரை, இந்திய ஆளுங்குடும்பமான சோனியா அரசின் தவறுகளை மூடி மறைக்க முயற்சி செய்யாதீர்கள்.

  31. தமிழர்களுக்கு உதவியவர்கள் :
    பிறப்பால் தமிழராகா விட்டாலும், தமிழ்நாட்டுக்கும் மட்டும் அல்லாது, ஈழத் தமிழருக்கும் எம்.ஜி.ஆர் ஆற்றிய சேவை போற்றத்தக்கது. தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும் நிறைந்தவர் பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார்.அதன் பின்பு பிரபாகரனுக்கு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் எவ்வளவோ உதவிகள் புரிந்தார்.

    1974ம் ஆண்டு கச்சத்தீவை பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் இருந்த மத்திய அரசு தாரை வார்த்ததை எம்.ஜி.ஆர் மிக வன்மையாக கண்டித்தார்.

    1982ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரனும், முகுந்தனும் மோதிக்கொள்ள நேர்ந்தது. இம் மோதலின் விளைவாக காவல்துறை இருவரையும் கைது செய்தது.பிரபாகரன் உட்பட கைதான போராளிகளை விடுவிக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களைச் சிங்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் வற்புறுத்தும் தீர்மானம் அக்கூட்டத்தில் சட்டசபைபில்
    ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எக்காரணம் கொண்டும் போராளிகள் எவரையும் நாடு கடத்த நான் சம்மதிக்க மாட்டேன்” என எம்.ஜி.ஆர் உறுதி கூறினார். அதன்படி இறுதிவரை நடந்தார்.

    “தமிழீழ நாயகனாக விளங்கும் பிரபாகரன், அன்று நாடு கடத்தப்பட்டிருந்தால் ஒரு வீரனின் வரலாறு சிங்களச் சிறையில் முடிந்திருக்கும்”..

    1986ஆம் ஆண்டு நவம்பர் 16ம் நாள் பெங்களுரில் சார்க் மாநாடு நடைபெறவிருந்தது. இந் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இலங்கை குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனாவுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனக் காரணம் காட்டித் தமிழகத்திலிருந்த போராளிகள் அனைவரையும் கைது செய்யும்படியும், அவர்கள் வசமிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றும்படியும் மத்திய அரசுஆணையிட்டது. அதன்படி போராளிகள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. பிரபாகரனை கைது செய்யாமல் வீட்டுக் காவலில் வைக்கும்படி முதல்வர் எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார்.

    விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு A.K.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !

    எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தை விடுதலைப் புலிகள் இனிப்பு வழங்கி கொண்டாடுவர். அவர் நினைவு நாளன்று கறுப்பு பேட்ஜ் அணிந்தனர். எம் ஜி ஆரின் மறைவு ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் ஒரு பேரிழப்பு. அவரைப்போன்ற சிறந்த ராஜதந்திரமுள்ள தலைவர்கள் கிடைப்பது இனி கடினம். மீண்டும் ஒரு எம் ஜி ஆர் தமிழ் நாட்டில் பிறக்க எல்லாம் வல்ல முருகப்பெருமான் அருளட்டும்.

    அமிர்தலிங்கம், மாத்தையா, ராஜீவ் காந்தி போன்றோரை விடுதலைப்புலிகள் தீர்த்துக்கட்டியிருக்காவிட்டால், போரில் தோற்க வேண்டிய நிலை வந்திருக்காது. அந்த தவறுகளே அவர்கள் இயக்கத்தை பாழ் படுத்திவிட்டது. சுமார் இரண்டு லட்சம் சிவிலியன் தமிழரை கொன்றொழித்த , ராஜபக்ஷே, அவனுக்கு தளவாடங்கள் கொடுத்த சோனியா, சோனியாவுக்கு சோம்பு தூக்கிய சுபவீ, வீரமணி, கருணா ஆகியோரை வரும் தேர்தலில் மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்.

  32. இலங்கை பாதுகாப்பு செயலாளர் என்ற பெயரில் உலவி வரும் ராஜபக்ஷேவின் சொந்த தம்பி கோத்தபய நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் சோனியா அரசினை கடுமையாக குறைகூறி , இலங்கையின் சார்பில் மிரட்டலையும், இந்தியாவை அச்சுறுத்தும் விதத்தில் பல கேள்விகளை கேட்டு, இந்திய அரசின் நாடகத்தினை வெளிப்படுத்தி உள்ளார். பதிலேதும் கூற முடியாமல் , வாய்மூடி கொழுக்கட்டை தின்று கொண்டிருக்கிறது சோனியாவின் கைக்கூலியான மத்திய அரசு. சுண்டைக்காய் நாடான ஸ்ரீலங்கா இந்தியாவை மிரட்டுகிறது. இதைவிட கேவலம் என்ன வேண்டும் ? இந்த டம்மி அரசினை , நம் மக்கள் வரும் தேர்தலில் சுடுகாட்டுக்கு அனுப்புவார்கள்.

  33. உதயகுமார் அவர்கள் உலக வரைபடங்களில் எல்லாம் இந்தியப் பெருங்கடல் என்று குறிக்கப் படும் கடல் பகுதிக்கு “தமிழ்க் கடல்” என்று பெயர் கொடுக்கிறார் !

    உண்மை தான் அவை தமிழ் கடல் தான்…. நிச்சயம் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தனி வெளியுறவு துறை அமைக்க பட வேண்டும் …. அது தான் உலகின் பத்து கோடி தமிழர்களுக்கும் பாதுகாப்பாக அமையும்…

  34. இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு சுதந்திர தமிழீழத்தை உருவாக்கித்தர இந்திய மத்திய அரசு (!?) நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதை சர்வ வல்லமையும் பொருந்திய மத்திய அரசில் இருப்பவர்களும் வட இந்திய ஊடகங்களும் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் விமர்சித்தார்கள். இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்று காரணம் கூறப்படுகிறது. இலங்கையின் பிரச்சினைக்குரிய வடகிழக்கு பகுதியை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் அது புத்திசாலித்தனமானதாக இருந்திருக்கும். வரலாற்றுரீதியாக பார்க்கும் போது அத்தீவின் வடகிழக்கு பகுதி சிங்களப்பகுதியோடு ஒத்திருந்ததை விட பல வகைகளிலும் தென்னிந்தியாவோடு தான் (குறிப்பாக தமிழகத்தோடு) அதிகம் ஒத்திருந்தது. அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலே. காலனிய ஆட்சியின் ஆரம்ப கட்டத்தில் யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட தமிழ்ப்பகுதிகள் சென்னை மாகாணத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் அடங்கியிருந்தன. அவ்வாறே நிர்வாகமும் செய்யப்பட்டன. பிற்பாடு தான் கடல் கடந்து நிர்வாகம் செய்வது சிரமம் என கருதப்பட்டு அத்தீவின் தமிழ்ப்பகுதிகள் சிங்களப்பகுதிகளோடு இணைக்கப்பட்டு கொழும்பு நிர்வாகத்தின் கீழ் வந்தன. இலங்கை தனிநாடாக இருந்தாலும் அதன் நிலப்பரப்பு தமிழ்நாட்டை விட சிறியது தான். மக்கள் தொகையோ வெறும் இரண்டு கோடி. ஆகையால் இலங்கையின் வடகிழக்குப்பகுதியை தமிழகத்தோடு இணைப்பது சாத்தியமான ஒன்றே. இப்படி ஒரு தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் பெரும்பாலான இந்திய மாநிலங்கள் பிரச்சினை இல்லாமல் ஏற்றுக்கொள்ளும். இந்திய தேசவிரோத செயல் என்று யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். இத்தகைய இணைப்பு ஏற்பட்டால் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் ஈழத்தமிழர்கள் ஆகிய மூன்று தரப்புக்கும் நன்மை தான் விளையும்.”ஈழ நிலம் தமிழ்நாட்டுடன் இணைவதன் மூலம் ஈழத்தமிழர்களும் இந்திய அடிமைகளாக மாறவேண்டுமா? தமிழ்நாட்டுத்தமிழர்கள் இந்தியாவில் அடிமைகளாக இருப்பது போதாதா?” என ஈழத்தமிழர்களில் சிலர் நினைக்கலாம். ஆனால் வேறு வழி இல்லை. தனித்தமிழீழம் என்பது சாத்தியமாக முடியாத ஒரு கனவு. 1871ல் மொத்த இலங்கையின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காக இருந்த தமிழர்கள் இப்போது வெறும் பதினைந்து சதமாக குறைந்துபோய் உள்ளார்கள். சிங்கள அரசின் தொடர்ச்சியான சிங்களக்குடியேற்றம், ராணுவமயமாக்கம், புத்தமயமாக்கம் ஆகியவற்றால் ஈழம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருகிறது. போதாக்குறைக்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆட்கடத்தல், கப்பம் அறவிடுதல் ஆகியவற்றால் ஈழமக்கள் நாசமடைந்து வருகிறார்கள். இதே பாணியில் சம்பவங்கள் தொடர்ந்தால் இன்னும் ஐம்பது வருட காலத்தில் ஈழமும் ஈழத்தமிழ் மக்களும் முற்றிலும் அழிந்து போவார்கள். இப்படி அழிந்து போவதை விட தமிழ்நாட்டோடு இணைந்து இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் மேலானது. மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும் ஈழ மக்களுக்கு பரந்து விரிந்த இந்தியா பாதுகாப்பானது. தமிழக மீனவர்களும் நாள்தோறும் உயிருக்கு பிரச்சினையை சந்திக்க வேண்டியதில்லை. கச்சத்தீவு தகராறும் இருக்காது. இரு தரப்பு மீனவர்களுக்கு இடையே பிரச்சினை எழுந்தால் எளிதாக சமாளிக்கும் சாத்தியமும் உண்டு. சேது சமுத்திரம் போன்ற சர்ச்சைக்குரிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய தேவையே இல்லை. இந்திய ராணுவத்தளமாக இருக்கும் திருக்கோணமலையில் கப்பல்கள் வசீகரமாக நங்கூரமிடலாம். இந்துமாக்கடல் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளின் அனுசரணையுடன் இந்திய அரசு தனது பிடியை இறுக்கி வைத்துக்கொள்ள முடியும். பாக்கிஸ்தான், வங்காள தேசம், சீனா ஆகிய பகை நாடுகளால் சூழப்பட்ட இந்தியாவுக்கு கடல் பிராந்தியத்தின் மீதான ஆளுகை மூலம் வலிமை உண்டாகும். இலங்கையின் கிழக்கில் அம்பாறை பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் தமிழ் மற்றும் அரபி இரத்தக்கலப்பு கொண்டவர்கள். இவர்கள் பலரின் முன்னோர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இராமநாதபுரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் இருந்து போய் குடியேறியவர்கள் தான். இந்தியாவோடு இணைவதன் மூலம் உலகில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இரண்டாவது பெரிய நாட்டோடு இணைந்த உணர்வு இம்மக்களுக்கு உண்டாகும். சிங்களருக்கு பயப்படவேண்டிய தேவையே இல்லை. இதையெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் யோசிக்க வேண்டும். ”ஈழத்தமிழர்களுக்கு என தனிப்பட்ட அடையாளம் உண்டு. தமிழ்நாட்டோடு இணைவதன் மூலம் அந்த அடையாளத்துக்கு பாதிப்பு உண்டாகும்” என ஈழ மக்கள் நினைத்தால் மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் சுயாட்சி கவுன்சில் மாதிரியான ஒன்றை உருவாக்கிக்கொள்ளலாம். ஒரு காலத்தில் இந்திய சுதந்திர தினத்தின் போது தங்கள் வீடுகளின் மீது இந்திய தேசியக்கொடியை ஏற்றியவர்கள் தானே ஈழ மக்கள். பின் எதற்கு தயங்க வேண்டும்?

  35. //இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்று காரணம் கூறப்படுகிறது. இலங்கையின் பிரச்சினைக்குரிய வடகிழக்கு பகுதியை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் அது புத்திசாலித்தனமானதாக இருந்திருக்கும்.//
    திரு பெரியசாமி கேட்டது எவ்வளவு நியாயமானது.நடைமுறை சாத்தியமானது இதை எல்லாம் செய்யாமல் விடுதலைப் புலி என்கின்ற பயங்கரவாத இயக்கத்தையும் அதன் கொடூர தலைவர் பிரபாகரனை எம்.ஜி இராமசந்திரன் என்பவர் எப்படி ஆதரித்து ஊக்குவித்தர் என்று பெருமைபடுவதை என்ன என்று சொல்வது.

  36. “எம் ஜி ஆர் என்பவர் “- என்ற பதப்பிரயோகம் தவறு. பலகோடி மக்களின் மனதில் அதிகஅளவில் வருத்தம் உண்டாக்கும். சிறிலங்கா ஹிந்து இதனை உணர்வாரா என்று அவருக்கே வெளிச்சம்.அதனை விட்டு , விஷயத்துக்கு வருவோம். எம் ஜி ஆர் பிரபாகரனுக்கு உதவிகள் அளித்தபோது, பிரபாகரன் கொடூரத் தலைவர் அல்ல. எம் ஜி ஆர் இறந்தபிறகே, அமிர்தலிங்கம், மாத்தையா , பத்மநாபன் , ராஜீவ் காந்தி மற்றும் பல பெரிய தலைவர்களை கொன்று பிரபாகரன் கொடூர தலைவர் ஆனார். இலங்கை இந்தியாவுடன் இணைக்கப்படவேண்டும் என்று சுப்பிரமணியசாமி அவர்கள் தான் ( தலைவர் ஜனதா கட்சி) அறிவுப்பூர்வமாக கூறிவருகிறார். அவர் கருத்தினை ஏற்போர் தமிழகத்தில் மிக குறைவு.ஆனால், இந்தியாவில் இன்று தலைமை பதவிகளில் இருப்போரில் அத்வானி , நரேந்திர மோடி, நவீன் பட்நாயக் ஆகிய மூவரை தவிர மற்றவர்கள் , குறுகிய மாநில பதவி ஆசைகளும், ஓட்டுவங்கி அரசியலும் நடத்துவோர் ஆவார்கள். அறிவுப்பூர்வமானவர்கள் இந்திய அரசியலில் மிக குறைவு.

    இந்திய எல்லைக்குள் புகுந்து இரண்டு இந்திய சிப்பாய்களை கொன்று, அவர்களின் தலையை வெட்டி எடுத்து சென்ற பாகிஸ்தானிய நாய்கள் மீது, மன்மோகன் சிங் பெயரில் இருக்கும் டம்மி அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடித்த கொல்லைப்பனத்தினை எந்த எந்த வெளிநாட்டு பாங்குகளில் பதுக்குவது என்பதற்கே சொக்கத்தங்கம் கட்சியினருக்கு நேரம் போதவில்லை. எனவே இப்போது உள்ள சூழ்நிலையில், இந்திய அரசு ஸ்ரீ லங்கா விஷயத்தில் ஒருநடவடிக்கையும் எடுக்காது.

    நாங்கள் சொல்வது என்னவென்றால் , கருணாநிதி நினைத்திருந்தால், 2009- மே மாதம் நடந்த தமிழ் இனப்படுகொலை நடக்காமல் தவிர்த்திருந்திருக்கலாம் என்பது தான். சோனியாவை சிறிது மிரட்டி இருந்தால் , முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். எம் ஜி ஆர் இருந்திருந்தால் நிச்சயம் இந்த படுகொலை நடக்க அனுமதித்திருக்க மாட்டார் என்பது தான். தமிழர் படுகொலைக்கு காரணமான சோனியாவின் சொம்புகள் கருணாநிதி , சுபவீ, வீரமணி ஆகியோருக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை விரைவில் தெரியவரும்.

  37. ஸ்ரீ லங்கா ஹிந்து அவர்களே நீங்கள் மெயாகிலும் இலங்கைத்தமிழர்தானே. இலங்கையில் விடுதலைப்புலிகள் போன்ற தமிழ் தீவிரவாத இயக்கங்கள் தோன்றுவதற்கான் சூழல் என்ன என்பதை அறிவீர்களா. இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று கருதுகீர்களா? சிங்கள பௌத்த ப்பேரினைவாதம் என்ற ஒன்றும் இல்லை தமிழர்கள் சிங்களரோடு சம உரிமைப்பெற்று வாழ்கிறீர்கள் என்று நம்புகிறீர்களா. யாம் அறிந்தவரையில் நீங்கள் மட்டுமே புலிகளை எதிர்த்து எழுதிவருகிறீர்கள். பொரும்பாலானோர் புலி ஆதரவு நிலையினை எடுத்துள்ளார்கள். தெளிவு படுத்தவேண்டுகிறேன்.
    சிவஸ்ரீ.

  38. //எம் ஜி ஆர் என்பவர் “- என்ற பதப்பிரயோகம் தவறு. //
    முன்பு புலிகளின் கட்டுபாட்டு பிரதேசங்களில் பிரபாகரனை மேதகு பிரபாகரன் என்றோ அல்லது தலைவர் பிரபாகரன் என்றோ தான் சொல்ல வேண்டும். அல்லது புலிகளிடம் அடி கிடைக்கும். புலிகளை ஆதரிப்பவர்களுக்கும் அதே மாதிரியான பாஸிச எண்ணம் வந்துவிடுகிறது.
    //எம் ஜி ஆர் பிரபாகரனுக்கு உதவிகள் அளித்தபோது பிரபாகரன் கொடூரத் தலைவர் அல்ல. எம் ஜி ஆர் இறந்தபிறகே அமிர்தலிங்கம்,மாத்தையா , பத்மநாபன்,ராஜீவ் காந்தி மற்றும் பல பெரிய தலைவர்களை கொன்று பிரபாகரன் கொடூர தலைவர் ஆனார். //
    ராஜீவ் காந்தி முன்னாள் பாரத பிரதமரை கொன்ற போது தான் இந்திய தமிழ் பிரதேசங்களில் அவர் கொடூரமானவர் என்று பலருக்கு தெரிந்தது . ஆனால் அவர் ஆரம்பத்தில் இருந்தே எதிர்தவர்களை கொன்று தன்னோடு இருந்தவர்களை கொன்று தான் கொடூரமானவராக தான் இருந்தார்.

  39. சிவஸ்ரீ. விபூதிபூஷண் அவர்களுக்கு,
    எந்த சூழலிலும் பயங்கரவாதிகளை நாம் ஆதரிக்க கூடாது. தற்போது இந்திய எல்லைக்குள்ள தமிழ் பிரதேசங்களின் நிலையை பாருங்கள். முன்னாள் பிரமரை கொலை செய்தவர்களை தண்டிக்க கூடாது விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலை.
    புலிகள் ஆரம்ப காலத்தில் நான் ஒரு சிறு பள்ளி சிறுவன். துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மீது சினிமா காரணமாக ஒரு தனி கவர்ச்சி.கல்லூரி மாணவர்களாகும் போது அனுபவித்து தெளிவு அடைந்தோம். பல பெரியவர்கள் பயங்கரவாதத்தை ஆதரித்துவிட்டு பின்பு வருந்தி இருக்கிறார்கள்.அவர்களை விட நாம் எவ்வளவோ மேல்.
    பல்வேறு இன மக்கள் கலந்து வாழும் நாடுகளில் உள்ள பிரச்சனையே இலங்கையிலும் உள்ளது. பேசி தீர்க்கபடவேண்டிய பிரச்சனைகள் .இலங்கை பாக்கிஸ்தான் இல்லை. எமது பிரதேச மதமான பவுத்த மத மக்களுடனே நாம் வாழ்கிறோம். இலங்கையிலும் உள்ளது இன பிரச்சனைகள் பேசி தீர்க்கபட மிக முக்கியமான தடையாக இருப்பது வெளிநாடுகளில் வசிக்கும் புலிகளின் பண வருமானம் பெற்று இந்திய தமிழ் பிரதேசங்களில் செயல்படும் அரசியல்வாதிகள். பொய் பரப்புரைகளில் வெளிநாடுகளில் வதியும் புலிகளே உலக சாதனையாளர்கள். நீங்கள் மட்டுமே புலிகளை எதிர்த்து எழுதிவருகிறீர்கள் என்று கேட்டுள்ளீர்கள்.
    பெரியவரே, வெளிநாடுகளில் வாழும் புலிகள் ஒரு 200 பேர் இணையததளம் வைத்து தங்களது பரப்புரைகளை அவர்கள் எழுதுகிறார்கள் அதற்க்கு யாரும் பதில் எழுதவில்லை அதனால் அது உண்மையாகிவிடுமா? . நான் மட்டுமே தமிழ்ஹிந்துவில் உள்ள நம்பிக்கையால் பதில் கொடுத்து கொண்டிருக்கிறேன்.தமிழக அரசியல்வாதிகளின் போராட்டங்களை எதையும் இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வது கிடையாது. தமிழக அரசியல்வாதிகள் அங்கு ஓட்டு வாங்குவதற்காக இலங்கை விவகாரத்தில் எடுப்பார்கள் என்பதை இலங்கை தமிழர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
    தங்களது சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க தயாராக இருக்கிறேன்.

  40. vedaraman77@yahoo.co.in
    manavarhal porattam adutha kattathai thotanga vendiya nilayil seyya vendiythu ennavendru parpom.
    poduvaha inthiyavil oro pahudhiyil iruppavarhal matra pahudhiil iruppvarhalin kashtangalai purinduhu kolvathillai. adanal than nam kashtangalai avrthal purinthu kolvathillai. ilangai thamiharhal padum thuyaram namakku mihavum vedanai tharuhirathu.anal matra pahudhi makklal idai purindu kolla mudiya villai. avarhalukku puriya vaippthu namadhu kadami. manava porattakararhal delihi sendru jawaahalal nehru university manavarhalai sandhithu ilanagayil nadanthavatrai vilakki solla vendum.delhiyil porattam nadathi oru maperum iyakkathai uruvkka vendum. vedaraman ramaiya,
    email:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *