இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்

தமிழாக்கம்      : எஸ். ராமன்

30.1 நன்னடத்தையே நல்ல பாதுகாப்பு தரும்

அசோக வனத்திலிருந்த சீதையை அழைத்து வருமாறு இராமர் விபீஷணனிடம் கேட்டுக்கொண்டார். இராவணனின் அரண்மனைக்குள் அந்த வனம் இருந்ததால் அவள் அங்கு காவலில் வைக்கப்பட்டு  இருந்தாள். கைகேயிடம் சொன்னபடி அந்தப் பதினான்கு வருஷங்களும் அவர் காட்டை விட்டுவிட்டு ஒரு கிராமத்தின் எல்லையைகூடத் தாண்டவில்லை. அதனால் அவர் சீதை இருக்குமிடம் தேடி இலங்கைக்குள் நுழைந்திருந்தால், அது ஒரு விதி மீறலாகி இருந்திருக்கும்.

images (3)சீதையை மீட்பதற்குத்தானே அவர்கள் கடலில் பாலம் கட்டியும், பலத்த இழப்புடனும் அரக்கர்களுடன் போரிட்டார்கள் என்பதால், சீதை போர்க்களத்திற்கு அழைத்து வரப்பட்டபோது அவளை அருகில் பார்க்கவேண்டும் என்ற ஆவலில், வானரர்கள் முண்டியடித்துக்கொண்டும் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டும் முன்னே வந்தார்கள். அவளை அங்கு அழைத்துக்கொண்டு வரும் விபீஷணனின் காவலர்கள் சீதையின் பாதுகாப்பில் ஏதேனும் பங்கம் நேருமோ என்று அச்சப்பட்டு, முன்னேறும் வானரர்களைப் பின்னுக்குத் தள்ளியும் பயன் ஏதும் போகாமலே, அவர்கள் மேல் இலேசாகத் தடியடியும் நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த இராமருக்கு, அதுவரை தன்னுடன் வந்து தனக்காகப் போராடிய, வானர வீரர்களை சீதைக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அப்படி அடித்துத் தள்ளுவதைப் பார்க்கப் பொறுக்கவில்லை. அதனால் அவர்கள் எல்லோரும் நம்மவர்கள் என்றும் அவர்களை அப்படி விரட்டியடிக்கக் கூடாது என்றும் விபீஷணனிடம் சற்றுக் கடுமையாகவே சொன்னார். மேலும் ஒருவரது நல்ல குணமே மற்றெதையும்விட அவர்களுக்குப் பாதுகாப்பு தரும் என்றும் சற்றே குத்தலாகவும் சொன்னார்.

न गृहाणि न वस्त्राणि न प्राकारास्तिरस्क्रियाः ।

 नेदृशा राजसत्कारा वृत्तमावरणं स्त्रियाः ।। 6.117.26 ।।

स्त्रिया:,  பெண்ணுக்கு    आवरणं, பாதுகாப்பு     न गृहाणि, வீடுகளல்ல     न वस्त्राणि, (உடுத்தும்) ஆடைகளல்ல न प्राकारा:,  (வீட்டைச் சுற்றிய) பிராகாரங்கள் அல்ல          न राजसत्कारा:  ராஜரீக சத்காரங்கள் அல்ல   नेदृशा:  இவை போன்ற எல்லாம்                   तिरस्क्रिया:  மனதில் கொள்ளப்பட வேண்டியவை அல்ல   स्त्रिया:, பெண்ணுக்கு      आवरणं,  பாதுகாப்பு      वृत्तं ,  நன்னடத்தை.

உடுத்தியிருக்கும் உடையோ, இருக்கும் வீடோ, அரண்மனை வாசமோ, அரண் போன்ற பாதுகாப்போ இவை அனைத்தையும் விட ஒரு பெண்ணிற்கு அவளது நன்னடத்தையே நல்ல பாதுகாப்பு தரும்.

நம் தேசம் மற்றும் மாநிலத் தலைநகரங்களில் எல்லாம் பாதுகாப்பு என்ற பெயரில் தலைவர்களின் குண்டு துளைக்காத வாகனத்தைச் சுற்றிச் சுழலும் மின்விளக்குகளுடன் ஒரு முன்னோட்டி வாகனம், பக்கவாட்டில் அணைத்தவாறு பல வாகனங்கள், கறுப்புப் பூனைப் படை வீரர்கள் என்ற இந்நாளைய அணிவகுப்புக் காட்சியும், அத்துடன் அங்கங்கு இருக்கும் காவல் படையினர் தெருவில் போவோர் வருவோரைத் துரத்துவதும், பல தூரம் தடைபட்டு நிற்கும் பொதுமக்களின் வாகனங்களின் அணிவகுப்பும், இப்போதெல்லாம் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னர்களுக்கு மக்களின் மேல் இருக்கும் சந்தேகம் கலந்த பயத்தையும், அவநம்பிக்கையையும் படம் பிடித்துக் காட்டுகின்றன. இதிலும் ஓர் அவலம் என்னவென்றால் அத்தகைய பாதுகாப்புக்கு உரிமை இல்லாத் தலைவர்களுக்கும் இந்த வகை ஆடம்பரங்களைக் கிடைக்கச் செய்வதற்காக ஆட்சியினரில் சிலரே நடத்தும் போலி ஆயுதத் தாக்குதல் நாடகம் வேறு சந்தி சிரிக்கிறது.

இது தன்னைச் சுற்றியுள்ளவர்களையே நம்பமுடியாத ஒரு சூழ்நிலை. ஆனால் வானரர்களுக்கோ தங்கள் தலைவன் இராமரிடம் அளவு கடந்த விசுவாசம் உண்டு. அதைப் பெறும் அளவுக்கு அவர் நன்னடத்தை கொண்ட தலைவனாகத் திகழ்ந்தார். அப்படிப் பெறவேண்டியதை முறையாகப் பெற்ற அவருக்கு, அவரது விசுவாசிகளான வானரர்களிடம் அவ்வளவு நம்பிக்கை இருந்ததால், அவர் நற்பண்புகள் பெற்றுத் தராததை வேறு எதுதான் பெற்றுத் தரும் என்கிறார். காட்ட வேண்டியதை காட்டிப் பெற வேண்டியதை எப்படியாவது பெற்று விடலாம் என்று கூறும் குறுக்கு மதியீனர்களுக்கு இது ஒரு நல்ல பாடமே.

30.2 பெண் பாவம்  

sita_ramaசீதைக்காக நடந்த போரில் வெற்றிபெற்று அவளும் விடுவிக்கப்பட்டாலும், இராமரது மனதில் இன்னுமொரு பெரிய போர் நடந்து கொண்டிருந்தது. இராமரைப் பொருத்தவரை அவருக்கு சீதை மேல் பரிபூரணமான நம்பிக்கை உண்டு என்றாலும், மாற்றானின் தோட்டத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்றதொரு சந்தேகம் அவருக்கு வரவே, அவர் சீதையை மறுபடியும் மனைவியாக ஏற்றுக்கொள்வதில் ஒரு மனத்தடை ஏற்பட்டது.

சீதை அவரது மனைவியாக மட்டும் அல்லாது, அவரது ராஜ்ஜியத்தின் மகாராணியாக இருக்க வேண்டியவள் என்பதால் அவருக்கு மக்களின் மனதையும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆதங்கம் இருந்தது. வேறொருவனால் அபகரிக்கப்பட்டவர் தமக்கு ராணியாக இருக்கிறாரே என்று எவருடைய மனதளவிலும் எண்ணம் இருக்கக்கூடாதே என்று இராமருக்கு இருந்தது. அதனால் அவருக்கு சீதையை முதலில் நிராகரிப்பதே சரியென்று தோன்றியது. அதனால் தனது குடும்ப கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்று எண்ணி சீதையைத் தான் மறுபடி ஏற்றுக்கொள்வதில்லை என்றார்.

कः पुमान् हि कुले जातः स्त्रियं परगृहोषिताम् ।

 तेजस्वी पुनरादद्यात् सुहृल्लेख्येन चेतसा ।। 6.118.19 ।।

चेतसा, மனமானது,   सुह्रुल्लेखेन, நல்ல நட்பின் உந்துதலால்,  (மீண்டும் எடுத்துக்கொள் என்று சொன்னாலும்),    क:,तेजस्वी, எந்த ஒரு தேஜஸ்வியான,    कुले जात:,  நற்குலத்தில்    पुमान्, பிறந்தவன்,    परगृहोषितां, மாற்றான் வீட்டில் தங்கிய,     स्त्रियम्,  பெண்ணை (தன் மனையாளை),      पुन:,  திரும்பவும், आदद्यात् எடுத்துக்கொள்வான் (தன்னவளாக ஏற்றுக்கொள்வான்)?

மனமோ ஆசையில் அவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஏங்குகிறது. ஆனால் மாற்றான் வீட்டில் தங்கிய பெண்மணியை எந்த கௌரவமுள்ள மனிதன் திருப்பி அழைத்துக்கொள்ள முடியும்?

பலாத்காரமாக அபகரிக்கப்பட்ட பெண்களின் கண்ணீர்க் கதைகள் சரித்திரத்தில் நிறையவே உள்ளன. அத்தகைய பெண்களை மீட்பதற்காகவே போர்களும் நடந்துள்ளன; அப்படியிருந்தும் அவர்களைத் திரும்பவும் தங்கள் சமூகத்தில் சேர்த்துக்கொள்வது பற்றி பாதிக்கப்பட்டவர்களின் சொந்த பந்தங்கள் இடையேகூட பிரச்சினைகளும் இருந்திருக்கின்றன. ஜாதிப் பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டு தற்காலத்தில் நடக்கும் “கௌரவக் கொலைகள்” கூட இந்த வகையில் சேர்ந்தவைதான். வீண் கௌரவமும், சமூகத்தில் உள்ள அவலத்தை எதிர்க்கும் துணிவும் இல்லாததுதான் இதற்கெல்லாம் காரணங்கள். வால்மீகியும் அன்று  நடந்த அவலத்தை ஆதரிப்பவராகத் தெரியவில்லை; நடந்ததை நடந்தபடியே எழுதியிருக்கிறார். மனைவியிடம் சந்தேகம் இல்லாதபோதும், மற்ற காரணங்களைக் காட்டி அவளை ஒதுக்கும் அவலநிலையைத் தொடர்பவனும், அதன்படி செயலாற்றுபவனும் பாவச் செயல்களில் ஈடுபடுபவனே.

பகவத் கீதையில் வரும் “சம்ஸயாத்ம வினஸ்யதி” என்பதன் பொருளும் ‘சந்தேகப்படுபவனுக்கு வாழ்வில் வீழ்ச்சியே அவனது விதி’ என்பதுதான். ஆக எல்லோரும் நல்லது நடக்கவேண்டும் என்றுதான் விரும்பினார்கள், எழுதினார்கள். ஆனால் இங்கோ துரதிர்ஷ்டவசமாக அத்தகைய பெண்களை, தன்னளவில் எந்த சந்தேகமும் இல்லாவிட்டாலும் சமூகத்திற்காகப் பயந்து, விலக்கி வைக்கும் அணியில் இராமரும் இருப்பது நல்லோர் எவருக்கும் ஒரு நெருடலான விஷயம்தான். இந்தக் காட்சி பின்னால் சொல்லப்போகும் “இராமரும் ஒரு மனிதன்தான்” என்பதையும், ஒரு சராசரி மனிதன் தன்னளவில் இல்லாவிட்டாலும் சமூகப் பார்வையில் இப்படித்தான் இருக்கிறான் என்றும் காட்டுவதற்கோ?

30.3 அக்னிக் குஞ்சொன்று வைத்தே

images (5) தன் காதாலும் கேட்க முடியாத அந்தக் கொடூரமான வார்த்தைகளை, நேர்மையின் சிகரம் என்று அனைவரும் நம்பிக்கொண்டிருந்த தன் கணவன் வாயிலிருந்து வந்ததைக் கேட்டவுடன் சீதை என்ன சொல்வதென்று தெரியாமல் வாய் மூடி மௌனியானாள். இராமரா இப்படிச் சொன்னார் என்று ஒரு நொடிப் பொழுது அவளுக்குச் சந்தேகமும் வந்தது. அப்படியானால் தன்னை  மீட்பதற்கு என்று அவ்வளவு சிரமப்பட்டு ஏன் கடல் தாண்டி இலங்கைக்கு வர வேண்டும், ராவணனுடன் போர் புரிய வேண்டும், பாவம் ஒன்றும் அறியாத வானரர்களை அவளுக்காக பலி கொடுக்க வேண்டும் என்று வரிசையாக அவள் மனதிலிருந்து கேள்விக் கணைகள் புறப்பட்டன. தன்னால் ஏதும் செய்ய முடியாத நிலையில்தானே, தன் விருப்பத்திற்கும் எதிராக, ராவணன் தன்னை இலங்கைக்கு எடுத்துக்கொண்டு போய் அங்கே சிறை வைத்தான், அதில் தன் தவறு என்ன என்று அவளுக்குப் புரியவில்லை.

தன்னை தற்காத்துக்கொள்ள முடியாத ஒரு பெண், தன் கணவர் வந்துதான் தன்னைக் காப்பாற்றவேண்டும் என்று மாற்றான் இடத்தில் இருந்தது என்ன தவறு? வேறு என்னதான் அவளால் செய்ய முடியும்? உண்மைக்கும் பொய்மைக்கும் வித்தியாசம் தெரியாது என் நடத்தைமேல் சந்தேகப்பட்டுப் பேசுபவர்கள் மேல் எனக்கு இரக்கம்தான் வருகிறது. இவ்வளவு சந்தேகத்திற்கும் ஆளான எனக்கு என் கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள தீக்குளித்து இறப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இப்படியாக தான் பதிவிரதை என்று காட்டிக்கொள்ள யோசித்த சீதை, லக்ஷ்மணனைப் பார்த்து காய்ந்த இலைச் சருகுகள், மரத்துண்டுகள் அனைத்தையும் சேர்த்து வைத்து தீ மூட்டச் சொல்கிறாள்.

चितां मे कुरु सौमित्रे व्यसनस्यास्य भेषजम् ।

 मिथ्योपघातोपहता नाहं जीवितुमुत्सहे ।। 6.119.18 ।।

सौमित्रे!,  சௌமித்ரே (லக்ஷ்மணா)!     चितां कुरु,  சிதையை ஏற்பாடு செய்   अस्य व्यसनस्य, (எனது) இந்தக் கஷ்டங்களுக்கு         भेषजं, (அதுவே) மருந்து        मिथ्योपघातोपाहता,  பொய்யான (என்னைக் களங்கப் படுத்தும் குற்றச்சாட்டுக்களால்) அடிக்கப்படும்      अहं, நான்     जीवितुं, ஜீவிக்க    न उत्सहे, விரும்பவில்லை.

லக்ஷ்மணா! என் துயரங்களையும், வாழ்க்கையையும் ஒரு சேர முடித்துக்கொள்ள ஒரு மருந்தாக இலைச் சருகுகள், மரத்துண்டுகள் எல்லாம் சேர்த்து வைத்து தீ மூட்டுவாய். என் நடத்தை மேல் சந்தேகம் கொண்டு அவதூறான குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால் நான் உயிர்வாழ விரும்பவில்லை.

தான் ஒரு பத்தரை மாற்றுத் தங்கம் என்று உலகோர்க்குக் காட்டுவதற்காக சீதை தீக்குளித்து, அப்படியே தன் துயரங்களையும் அந்த அக்னிக் குஞ்சில் வெந்து தணித்துக்கொண்டாள். அந்தத் தீயும் மற்றவர்களின் சந்தேகத்தைப் பொசுக்கி, தேவையற்ற வேலையாக அவளை முன்னிலும் மேலாகப் புடம் போட்டுக் காட்டி சீதையை இராமரிடம் சேர்த்து வைத்தது.

images (8)இதனால் தீக்குளித்தல் என்னும் காட்டுமிராண்டித்தனமான காரியத்தை வால்மீகி ஆதரிக்கிறார் என்று தவறாக நினைக்கவேண்டாம். வால்மீகிக்கு தன் கதாநாயகியின் தூய்மையை, ஒரு கவிக்கே உரிய உரிமையுடன் எவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அவரை, உள்ளபடி காட்டவேண்டிய கடமை உண்டு. அது தவறுதான் என்றாலும், தனக்கு சீதை மேல் களங்கம் தெரியாவிட்டாலும், விவரங்கள் முழுதும் தெரியாத மக்களோடு மக்களாக இராமரும் சீதையை அப்படிச் செய்யவைத்தது அவரது மேலான குணங்களுடன் அவருக்கும் சில குறைபாடுகள் உண்டு என்று காட்டுவதற்கா? ஏனென்றால் இங்கு இராமர் தான் மதிக்கும் உண்மைக்கும் மேலாக மக்களின் அபிப்ராயம் என்று தான் எண்ணுவதற்கு இடம் கொடுக்கிறாரே! இது தெய்வம் போல வாழ்ந்துகொண்டிருக்கும் அவருக்கு இட்ட திருஷ்டிப் பொட்டு என்று கொள்ளலாமோ?

30.4 மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

லக்ஷ்மணன் மூட்டிய சிதையில் சீதை குதிக்கப்போவதைப் பார்க்கும் அனைத்து உலகத்தில் இருந்தவர்களும் விக்கி விதிர்த்து நின்றார்கள். ஆனால் இராமரோ அதைப் பார்த்துக்கொண்டும் ஏதும் நடக்காதது போல்  நின்றுகொண்டிருந்தார். சீதையைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்த மாதிரித் துளிக்கூடத்  தெரியவில்லை. ஆனால் அந்தக் காட்டுமிராண்டிச் செயலைத் தடுக்க எண்ணி சொர்க்கலோகத்தில் இருந்த அனைவரும் பூலோகத்திற்கு இறங்கி வந்தனர். அவர்கள் கைகூப்பி சீதையை ஏன் மறுக்க வேண்டும், ஏன் இப்படி காட்டுவாசி போல இருக்கிறீர்கள் என இராமரைக் கேட்டார்கள். தாங்களே முழுமுதற் கடவுளான விஷ்ணுவின் அம்சம்தானே, கருணை காட்ட வேண்டாமா; தாங்கள் மறுத்ததினால்தானே சீதை தீக்குளிக்க முடிவு செய்தாள், ஏன் இப்படி ஒரு தகாத செயலைச் செய்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு இராமர் தான் ஒரு சாதாரண மனிதன்தான் என்றும், தன்னிடம் எந்த தெய்வாம்சமும் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ கிடையாது என்று மறுக்கிறார்.

 आत्मानं मानुषं मन्ये …. ।। 6.120.12 ।।

आत्मानं,  என்னை        मानुषं, மனிதன் (என்று)       मन्ये, எண்ணுகிறேன்.

நான் ஒரு மனிதன்தான்; ஒரு சாதாரண மனிதனிடம் உள்ள பண்புகளும், குறைபாடுகளும் என்னிடத்திலும் உள்ளன.

இராமாயணத்தின் சாராம்சமே இந்த மூன்று வார்த்தைகளில் அடங்கி இருக்கின்றன. இராமருக்குக் குறை ஒன்று இருந்தாலும், பல நல்ல குணங்களுடனும்  இருக்க முடிந்தது என்றால் எந்த மனிதனும் அப்படி இருக்க முடியும் என்று வால்மீகியின் இராமாயணம் காட்டுகிறது. முதலில் இராமரைப் போல இருந்து, பின்பு அவராகவே ஆவது என்பதும் சாத்தியமே!

30.5 காலத்தினால் செய்த நன்றி

ஒரு வழியாக ராவணனின் அராஜக ஆட்சியை இராமர் முடிவுக்குக் கொண்டுவந்தததால் தேவர்கள் மகிழ்ந்தனர். அதற்குக் கைமாறாக என்ன வேண்டுமானாலும் கொடுக்க நினைத்த தேவர்களின் அரசனான இந்திரன், இராமருக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். முதலாக தன் பொருட்டு போரில் உயிரை இழந்த வானரர்கள் எல்லோரையும் மறுபடியும் உயிர்ப்பித்து எழச்செய்ய வேண்டும் என்றார். அடுத்ததாக வானரர்கள் எங்கு தங்குவது என்று தீர்மானிக்கிறார்களோ, அங்கு அவர்கள் அனைவருக்கும் வேண்டிய காய், கனி, கிழங்கு வகைகளும், மற்றும் தெள்ளிய நீர் ஓடும் ஆறுகளும் தேவைக்கு மேலாகவே நன்றாகக் கிடைக்க வேண்டும் என்றும் கேட்டார்.

अकाले चापि मुख्यानि मूलानि च फलानि च ।

 नद्यश्च विमलास्तत्र तिष्ठेयुर्यत्र वानराः ।। 6.123.9 ।।

यत्र,  எங்கு     वानरा:  குரங்குகள்      तिष्ठेयु:  நிற்கின்றனவோ (அதாவது இருக்கின்றனவோ)

अकाले  चापि, (அங்கு)  பருவமில்லாக் காலத்திலும்                 मुख्यानि, முக்கியமான (தேவையான)    मूलानि,  (கிழங்குகளைக் கொடுக்கும்) வேர்கள்          फलानि, பழங்கள்         विमला:  தூய்மையான     नद्यश्च, நதிகளும்      तिष्ठेयुः இருக்க வேண்டும்.

வானரர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கெல்லாம் பருவம் இல்லாத காலத்திலும் காய், கனி, கிழங்கு வகைகளும், தேவையான தண்ணீரும் நன்கு கிடைக்கவேண்டும்.

இராமர் தனக்கு என்று எதுவும் கேட்கவில்லை. தனக்காகப் பல இன்னல்கள் இருந்தும், பல விதமான வகையில் உதவி செய்த வானரர்களுக்கு என்று மட்டும் கேட்கிறார். ஞாலத்தின் மாணப் பெரிதான காலத்தில் செய்த உதவியை மறவாது நன்றி செலுத்துவது இராமரைப் போல இருப்போரிடம் அன்றி வேறெவரிடம் எதிர்பார்க்க முடியும்?

(தொடரும்)

68 Replies to “இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 30”

  1. வால்மீகி இராமாயணம் இராமனை ஒரு முழு மனிதனாகத்தான் காட்டுகிறது. ஆனால் இதனை ஒழுங்காக படிக்காத பெரியார் திடல் பரிசுத்த ஆவிகள் , நுனிப்புல் கூட மேயாமல், வால்மீகி இராமாயணத்தை பற்றி , தங்கள் கற்பனைச்சரக்குகளை மனம்போனபடி சமுதாயத்தில் பித்தலாட்டம் செய்து பரப்பினர். இராமன் பிறன்மனை நோக்கா பெருந்தகையாளன், தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று நிரூபித்தவன். இராமாயணத்தில் எத்தனையோ புலவர்கள் மற்றும் சித்தபுருஷர்களால் விளக்க உரைகள் எழுதப்பட்டுள்ளன. சேலத்தில் இராமன் திரு உருவப்படத்தினை செருப்பு மாலை அணிவித்து, செருப்பால் அடித்த கயவர்களுக்கு, கருணாநிதி தலைமையில் ஆன போக்கிரிகளின் அரசு , பாதுகாப்பு கொடுத்ததுடன், அந்த கயவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலம் அந்த சண்டாளர்களை கருவறுக்கும். இது சத்தியம்.

  2. ராமனின் மாண்பு அழப்பரியது .

    க்கட்டுரை அதனை நன்கு விளக்கியது .நன்றி

  3. கலாச்சாரம் பண்பாடு ஆகியவை காலஒட்டத்தில் தங்களுடைய குறைகளைக் களைந்து …….. பரிபுரணத்தை நோக்கிப்பயணம் செய்து கொண்டிருக்கின்றது. அணுவைக்பிளக்க முடியாது என்று நம்பிய விஞ்ஞானம் பிளக்கமட்டும் அல்ல பெரும்சாதனைகள்நிகழ்த்த முடியும் என நிரூபித்து வருகின்றது. விஞ்ஞானமு்ம் பரிபுரணத்தை நோக்கிய பயணத்தில் இருக்கின்றது. ஆன்மீகமும் அப்படிதான்.
    இராமாணாயத்தில் உள்ள குறைபாடுகளுக்கு சிறந்த வளர்ச்சி இராமகிருஷ்ணாயாணத்தில் – ஸ்ரீராமகிருஷ்ண பரமகம்சரின் -அமுதமொழிகளில் -ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தரது ஞானதீபத்தில், அன்னை சாரதா தேவியாரின் அன்புமொழிகளில் உள்ளது. கலாச்சார வளர்ச்சியில் புதிய பரிமாணங்களைக்காண பரமகம்சர் ஒரு அற்புதமான திறவுகோல் ……

  4. ஸ்ரீராமகிருஷ்ணரைப்பற்றி நிறையவே எழுதலாம் .நான் அனுப்பிய இரண்டு கட்டுரைகளையும் வெளியிடலாமே. இஸ்லாம் மதம் குறித்து isakoran anwar shiek www alisina 4போன்ற வலைதளங்களுடன் இணைப்பு கொடுக்கலாம். அதில் உள்ள கட்டுரைகளை வெளியிடலாம்.

  5. ராமன் அவர்களே

    //
    आत्मानं, என்னை मानुषं, மனிதன் (என்று) मन्ये, எண்ணுகிறேன்.

    நான் ஒரு மனிதன்தான்; ஒரு சாதாரண மனிதனிடம் உள்ள பண்புகளும், குறைபாடுகளும் என்னிடத்திலும் உள்ளன.

    இராமாயணத்தின் சாராம்சமே இந்த மூன்று வார்த்தைகளில் அடங்கி இருக்கின்றன. இராமருக்குக் குறை ஒன்று இருந்தாலும், பல நல்ல குணங்களுடனும் இருக்க முடிந்தது என்றால் எந்த மனிதனும் அப்படி இருக்க முடியும் என்று வால்மீகியின் இராமாயணம் காட்டுகிறது. முதலில் இராமரைப் போல இருந்து, பின்பு அவராகவே ஆவது என்பதும் சாத்தியமே!

    //

    இதற்க்கு அர்த்தம் இப்படி செய்வது கிடையாது. அதை விளக்கி வாதாட விரும்பவில்லை.

    அஹம் விஷ்ணு நாஸ்மி என்றோ அஹம் மனுஷ்ய: ஏவ அஸ்மி என்றோ அவர் சொல்லவில்லை.

    ஆத்மானம் மானுஷ்யம் மன்யே. மன்யே என்பதற்கு கருதுகிறேன் என்றல்லவா அர்த்தம். “சார் நீங்க பெரிய ஆள் சார் ரொம்ப பெரிய மனசு ஒங்களுக்கு ஒங்க சொத்தையே எல்லாருக்கும் தானம் பண்ணிடீன்களே என்றால் அவர் அதெல்லாம் இல்லா சார் நான் ரொம்ப சாதாரணமானவன் தான் என்பார்” அதே போல தான் ராமனும்.

    இதை வைத்துக் கொண்டு ராமனிடம் குறை இருந்தது நிறைகளும் இருந்தன என்று நிறுவுவது சரியாக தெரியவில்லை.

    ஊரெல்லாம் நீ தான் பிரம்மம், நீ தான் பிரம்மம் என்று உபன்யசித்துக் கொண்டிருக்கையில் கொண்டிருக்கையில், ராமன் குறை நிறை உள்ள மனிதன் என்று படிப்பது கொஞ்சம் வித்யாசமாக இருக்கிறது.

  6. அன்புள்ள எஸ். ராமன் அவர்களே,

    ராமனைக் கடவுளாகக் காட்டும் வரிகள் பல உள்ளன. மண்டோதரி புலம்பலிலேயே
    “tamasaH paramo dhAtA shaN^kha cakra gadAdharaH” என்று இராமனை மண்டோதரி அடையாளம் காணுவதாக வருகிறதே. ஏனோ அதை எல்லாம் விட்டு “ஆத்மானம் மானுஷம் மன்யே” என்பதைப் பிடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

    சரி, அத்வைத சித்தாந்தத்தைத் தானே நீங்கள் பின்பற்றுகிறீர்கள். அத்வைத சித்தாந்தத்தைச் சேர்ந்தவர் ஒருவரே (மகேச்வர தீர்த்தர் என்பவர்) எழுதிய இராமாயண உரை இருக்கிறதே. அதில் அந்த உரையாசிரியர் எழுதுகிறார்: “தன்னுடைய மாகாத்மியத்தை தேவகணங்களாலும் பூஜிக்கத் தக்கவராகிய பிரமனிடமிருந்து மக்களுக்கு உணர்த்துவதற்காக, தன்னுடைய சௌசீல்ய குணத்தை இங்கு ‘ஆத்மானம் மானுஷம் மன்யே’ என்று மொழிவதில் காட்டுகிறார்” என்று உள்ளதே.

    அத்வைதியாகிய சர்வஞாத்ம முனி (10ஆம் நூற்றாண்டவர்) கூறியதைக் கூட முன்னர் எனது “அச்சுதனின் அவதாரப் பெருமை, பகுதி 5”-இல் காட்டியிருந்தேன்:

    https://tamilhindu.com/2010/10/the-greatness-of-vishnu-avataras-3/

    ஸ்ரீ ஸர்வஜ்ஞாத்ம முனிகள் ஸாங்க்ஷேப சாரீரகத்தில் விளக்கம் கூறுகிறார் [ஸங்க்ஷேப சாரீரகம், 2.182]:

    “ஸங்கல்ப பூர்வகம் அபூ4த்3 ரகு4நந்த3னஸ்ய
    நாஹம் விஜான இதி கம் சன காலம் ஏதத் |
    ப்3ரஹ்மோபதேச’ம் உபலப்4ய நிமித்தமாத்ரம்
    தச்ச உத்ஸஸர்ஜ ஸ க்ருதே ஸதி தே3வகார்யே ||”

    இதன் பொருள்: “தன்னுடைய சுய சங்கல்பத்தால் இரகுநந்தனன் சிறிது காலம் “நான் அறிகிலேன்” என்று (வெளியுலகத்திற்குத்) காட்சியளித்தான். பிரம்மாவின் உபதேசத்தை வெறும் கருவியாகக் கொண்டு, அந்த வேஷத்தையும் தானே கலைத்துக் கொண்டான். இப்படிச் செய்தது (தீய அரக்கர்களைக் கொல்வதாகிய) தேவர்கள் வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவதற்காக.”

    இந்த ஞானிகளின் கூற்று இருக்க, இராமனை மனிதன் என்று கூறுபவர்களின் நவீனக் கட்டுரைகளைப் படித்துக் குதூகலம் கொள்ளும் துர்பாக்கியம் நமக்கு ஏனோ?

  7. // “அச்சுதனின் அவதாரப் பெருமை, பகுதி 5″-இல் காட்டியிருந்தேன்: //

    “பகுதி 3” என்று மாற்றிக் கொள்ளவும்.

  8. சாரங் அவர்களின்
    “…மன்யே என்பதற்கு கருதுகிறேன் என்றல்லவா அர்த்தம்….”

    சரி, அப்படியே இருக்கட்டும்,ஏனென்றால் நான் சம்ஸ்க்ருதம் நன்கு அறிந்தவன் அல்ல. ஒரு தமிழ் அகராதிப்படி,
    “பொருள்
    கருது : (1) எண்ணுதல்செய் intend; …”
    என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது கருதுதல் எண்ணுதலுக்கும் மேலானது என்றாகிறதா? அதாவது இராமர் மனிதனாகத் தன்னை எண்ணமட்டும் இல்லை, அப்படியே செயலிலும் இருந்தார் என்பதுதானே பொருள்?

    “…ஊரெல்லாம் நீ தான் பிரம்மம், நீ தான் பிரம்மம் என்று உபன்யசித்துக் கொண்டிருக்கையில்…”

    இந்தக் கூற்றை ஆமாம், இல்லை என்று எப்படிச் சொன்னாலும் “தான் பிரும்மம்” என்று இருப்பவர்கள் அதிலிருந்து வழுவியதாக ஆகும். “:தான் பிரும்மம்” என்று நினைக்காதவர்கள் அதைஎப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

    கந்தர்வன் அவர்களின்,

    “…அத்வைத சித்தாந்தத்தைத் தானே நீங்கள் பின்பற்றுகிறீர்கள்….”

    நான் எதைப் பின்பற்றினால் என்ன வந்தது? நீங்கள் எதைப் பின்பற்றுகிறீர்களோ அப்படி அனைத்தையும் புரிந்துகொள்ளுங்கள்.

    “..இராமனை மனிதன் என்று கூறுபவர்களின் நவீனக் கட்டுரைகளைப் படித்துக் குதூகலம் கொள்ளும் துர்பாக்கியம் நமக்கு ஏனோ?”

    நாம் நம்மை மனிதர்களாய் நினைத்துக் கொள்வதால், நமக்கு இராமனை ஒரு உயரிய மனித வழிகாட்டியாய்க் கொள்வதில் ஒரு தவறுமில்லை. இந்தத் தொடரின் முதல் இரண்டு பகுதிகளிலேயும், அதில் ஒன்றில் திரு. ஜடாயுவின் மறுமொழியிலேயும், தெளிவாக இந்த அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

    நான் கேள்விப்பட்டவரை வால்மீகி முனிவர் இராமனை மனிதனாகக் காட்டியதும் அல்லாமல், அந்தக் காலத்தைய வழிமுறைகளையும் சரியாக விவரித்துள்ளார். பின் வந்தவர்கள் அவரைத் தெய்வமாகவும் ஆக்கி, அந்தந்தக் காலத்தின் மற்றும் இடத்தின் விசேஷங்களையும் புகுத்தியுள்ளனர். இலக்கியங்களில் இப்படி நடப்பது புரிந்துகொள்ளக் கூடியதே. எவருக்கு எது விருப்பமோ அதை அவர்கள் பின்பற்றட்டும்.

    மறுமொழி அளித்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.

  9. கந்தர்வன்
    “சரி, அத்வைத சித்தாந்தத்தைத் தானே நீங்கள் பின்பற்றுகிறீர்கள். அத்வைத சித்தாந்தத்தைச் சேர்ந்தவர் ஒருவரே (மகேச்வர தீர்த்தர் என்பவர்) எழுதிய இராமாயண உரை இருக்கிறதே”.
    எல்லாரும் பிரம்மம் என்பது அத்வைதவேதாந்தம். ஆகவே எல்லோரும் அவதாரமாகின்றோமே. அத்வைதிகளும் அவதாரத்தினைப் பற்றி பேசுகின்றார்களே. விசிட்டாத்வைதிகளுக்கும் த்வைதிகளுக்கும் அவதாரம் தத்துவ ரீதியில் பொருந்துகிறது. அத்வைதத்தோடு அவதாரம் பொருந்தாது என்றே அடியேனுக்குத்தோன்றுகிறது.

  10. பால காண்டத்தில் இருந்தே தெளிவாக ராமன் விஷ்ணுவின் அவதாரம் என்று வருகிறதே-

    ” ஒரு சாதரண மனிதனை போல-ஏன் இப்படி “- [ காட்டுவாசி என்று சொன்ன மாதிரி தெரியவில்லை ] என்று தான் மேல் உலக வாசிகள் கேகிரார்கள் அதுவும் கூப்பிய கரங்களோடு.

    நான் என்னை மனிதனாக, தசரத புத்ரனாக கருதுகிறேன் என்று ராமன் சொன்னவுடன் பிரம்மா அவரை நீங்களே விஷ்ணு ;மேலும் மது என்ற அரக்கனை கொன்றவர், எல்லாவற்றிற்கும் தொடக்கமும் முடிவும் ஆனவர் ;இந்த சீதை லக்ஷ்மி தேவியே என்கிறாரே.

    நர லீலை என்று சொல்லலாமே ஒழிய குறை நிறை உள்ள மனிதன் என்பது சரியான ஒன்றல்ல.

    தீக்குளிப்பது என்பது இன்றைய அரசியல் சூழலில் [ அதுவும் கழகங்கள் தோன்றிய காலமாக] அரசியல் தலைவர்கள் நடத்தும் காரியம். பல போராட்ட முறைகள் ஜன நாயகத்தில் அரசாங்கத்தை மிரட்ட பயன் படுகின்றன. ,

    இவற்றைப்பாற்கும் பார்வையில் அக்னி பிரவேசம் என்பதைப்பார்க்க முடியாது. அப்படி செய்தால் அது காட்டுமிராண்டிதனம் எனவே தோன்றும்.

    சதி தேவியும் “அக்னி பிரவேசம்’ செய்கிறாள்- ஆணவத்தின் மகளான தன உடல் வேண்டாம் என்று முடிவெடுக்கும் போது -உண்மையில் யோக முறைப்படி உடலை உகுக்கும் ஒரு முறை இது.

    பழம் பாரதத்தில் இது , மற்றும் வடக்கிருந்து உயிர் துறப்பது போன்ற முறைகள் அதிகாரம் உள்ளோரை பணிய வைக்க அல்ல -ஒரு மனிதன் செய்ய கூடிய ultimate sacrifice என்கிறார்களே அதுவே இது .

    உடலோடு வரும் “நான்” தன்மையை ஒரு நொடியில் தொலைக்க தயங்காத -transcending body consciousness -உடலை துச்சமாக எண்ணி மனதை ஓரிடத்தில் நிலை நிறுத்தும் உயர்ந்த யோக நிலை இது.

    ஏன் இராமன் வர நேரமாகும் என்று நினைக்கும் பரதன் தன வாக்கின் படி உடலை உகுக்க முற்படுகிறான். ஹனுமான் முன்னரே போய் தடுக்கிறார்.

    அத்யாத்ம பார்வையில் ஜீவன் கடைசிக்கட்டத்தில் கடுமையான அக்னி பரீட்சைக்கு உட்படுத்தப் படுகிறான் என்பதன் பொருளாக கொள்வோரும் உண்டு.

    அது வேறு காலகட்டம். சொல் பொறுக்காத, தன சொல்லுக்காக உடலை விட தயங்காதவர்கள் வாழ்ந்த காலம். நமது தற்கால கண்ணாடி அணிந்து பார்கையில் வித்யாசமாக தோன்றும்.

    சாய்

  11. திரு ராமன் அவர்களே,

    // நான் எதைப் பின்பற்றினால் என்ன வந்தது? நீங்கள் எதைப் பின்பற்றுகிறீர்களோ அப்படி அனைத்தையும் புரிந்துகொள்ளுங்கள். //

    நீங்கள் அத்வைத சித்தாந்தத்தைப் பற்றித் தான் விளக்கி வருகிறீர்கள். ஆகையால், அத்வைத சித்தாந்திகளின் கிரந்தங்களில் உள்ளதைக் காட்டினால் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைத்தேன்.

    // நான் கேள்விப்பட்டவரை வால்மீகி முனிவர் இராமனை மனிதனாகக் காட்டியதும் அல்லாமல், அந்தக் காலத்தைய வழிமுறைகளையும் சரியாக விவரித்துள்ளார். பின் வந்தவர்கள் அவரைத் தெய்வமாகவும் ஆக்கி, அந்தந்தக் காலத்தின் மற்றும் இடத்தின் விசேஷங்களையும் புகுத்தியுள்ளனர். இலக்கியங்களில் இப்படி நடப்பது புரிந்துகொள்ளக் கூடியதே. எவருக்கு எது விருப்பமோ அதை அவர்கள் பின்பற்றட்டும். //

    வால்மீகி இராமனைப் பரம புருஷனாகிய நாராயணனின் அவதாரம் என்று பல இடங்களில் காட்டியிருக்கிறார். பால-யுத்த-உத்தர காண்டங்களில் மட்டுமல்ல, அயோத்யா காண்டத்திலும் ஓரிடம் உண்டு. சில இடங்கள் பின்வருமாறு:

    etasmin anantare viṣṇuḥ upayāto mahādyutiḥ |
    śṅkha cakra gadā pāṇiḥ pīta vāsā jagatpatiḥ || 1-115-16
    vainateyam samārūhya bhāskara toyadam yathā |
    tapta hāṭaka keyūro vandyamānaḥ surottamaiḥ || 1-15-17

    In the meanwhile the great resplendent Vishnu, the Lord of the Universe, arrived there mounted on his Eagle-vehicle Garuda, handling conch-shell, disc, and mace in his three of four hands, clad in yellow-ochre robes, wearing golden bracelets, and while best gods eulogised him, and his arrival there is like the arrival of sun mounted on black cloud to accord the gratuitous gift called the rain. [1-15-16, 17]

    tvam gatiḥ paramā deva sarveṣām naḥ paraṃtapaḥ || 1-15-25
    vadhāya deva śatṝṇām nṛṇām loke manaḥ kuru |

    “Oh, enemy tormentor, oh, Vishnu, you are the ultimate recourse for all us in eliminating enemies of divinity, hence you make up your mind to take birth in human world.” The gods appealed to Vishnu that way. [1-15-25b, 26a]

    sa hi devai rudīrṇasya rāvaṇasya vadhārthibhiḥ |
    arthito mānuṣe loke jajñe viṣṇuḥ sanātanaḥ || 2-1-7

    That Rama – was He not the eternal Vishnu who was born on earth as prayed by celestials to kill the egoistic Ravana?

    vyaktameṣa mahāyogī paramātmā sanātanaḥ |
    anādimadhyanidhano mahataḥ paramo mahān || 6-111-14
    tamasaḥ paramo dhātā śaṅkhacakragadādharaḥ |
    śrīvatsavakṣā nityaśrīrajayyaḥ śāśvato dhruvaḥ || 6-111-15
    mānuṣaṃ rūpamāsthāya viṣṇuḥ satyaparākramaḥ |
    sarvaiḥ parivṛto devairvānaratvamupāgataiḥ || 6-111-16
    sarvalokeśvaraḥ śrīmān lokānāṃ hitakāmyayā |
    sarākṣasa parīvāram hatavāṃstvāṃ mahādyutiḥ || 6-111-17

    (Mandodari’s words) “This Rama is certainly a great ascetic, an eternal person, having no beginning middle or end, greater than distinguished universal spirit like Brahma, the one beyond ignorance, the nourisher, wielding a conch, a disc and a mace, wearing the ‘Srivatsa’ mark on his chest, of lasting beauty, incapable of being conquered, a perpetual one, being the constant soul of the universe, truly mighty, the lord of all the worlds, the prosperous one having a great splendour and Vishnu, the lord of maintenance of the world with a wish to benefit the worlds, assuming a human form surrounded by all the gods in the form of monkeys, Rama killed you, surrounded by demons.

    இதையெல்லாம் உங்கள் கட்டுரைகளில் எடுத்துக் காட்டுவதை அதி ஜாக்கிரதையாகத் தவிர்த்திருக்கிறீர்கள் (இப்படி நீங்கள் செய்யவில்லை, மூல ஆங்கிலக் கட்டுரையின் ஆசிரியரே செய்திருக்கிறார் என்றாலும், அந்தக் கட்டுரையைக் கேள்வி கேட்காமல் அப்படியே பிரமாணம் போல வெளியிட்டு இருக்கிறீர்கள்).

  12. சரி, அது இருக்கட்டும். “நான் என்னை மனிதனாகவே எண்ணுகிறேன்” என்று இராமன் கூறியதில் பாதியை மாத்திரம் காட்டுகிறீர்கள். அந்த இடத்திலேயே,

    so.ahaṃ yasya yataścāhaṃ bhagavaṃstadbravītu me
    (உண்மையில் நான் யார் என்பதை எனக்குச் சொல்லுவீர்களாக)

    என்று இராமன்கேட்கிறான். இங்கு, “நான் தெய்வம் அல்ல. நீங்கள் என்ன சொன்னாலும் நான் மனிதன் தான்” என்று இராமன் கூறவில்லையே! பதிலுக்கு,

    bhavānnārāyaṇo devaḥ śrīmāṃścakrāyudhaḥ prabhuḥ
    (நீங்கள் ஸ்ரீமானாகிய தேவர் நாராயணனே. சக்கரத்தைக் கையில் ஏந்தியிருப்பவர்) என்று பிரம்ம தேவருரைத்து, இராமன் பரமாத்மாவே என்று காட்டுகிறார்.

    இப்படி இருக்க, “தன்னுடைய மாகாத்மியத்தை தேவகணங்களாலும் பூஜிக்கத் தக்கவராகிய பிரமனிடமிருந்து மக்களுக்கு உணர்த்துவதற்காக, தன்னுடைய சௌசீல்ய குணத்தை இங்கு ‘ஆத்மானம் மானுஷம் மன்யே’ என்று மொழிவதில் காட்டுகிறார்” என்று கூறும் மகேஷ்வர தீர்த்தரின் உரை பொருந்தும்.

    கண்ணன் விஷயத்தில் கூடத் தான் கோவர்தன மலையைத் தூக்கிய பிறகு, ஆயர்குலச் சிறார்கள் கண்ணனைப் பார்த்து, “இதெல்லாம் என்ன விந்தை? உண்மையைக் கூறு கண்ணனே! காளியன் என்ற நாகத்தை வீழ்த்தினாய், பிரலம்பனைக் கொன்றாய், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தாய். இதையெல்லாம் பார்த்தும் நாங்கள் உன்னை ஒரு மனிதன் என்று இனி நம்பப்போவதில்லை. நீ ஒரு தேவனோ, அசுரனோ, யக்ஷனோ, கந்தர்வனோ?” என்றனர். அதற்கு விடையாக பால்ய பருவக் கண்ணன், “ஆயர்களே! நான் உங்களுடைய குலத்திலேயே பிறந்த உங்கள் உறவினன். நானும் உங்களில் ஒருவன் தான். என்னை யக்ஷன் என்றோ, தேவன் என்றோ, ஒதுக்கிவிடாதீர்கள்.” என்று பதில் கூறுகிறான் (புராண ரத்னமாகிய விஷ்ணு புராணத்தில் இப்படி வருகிறது). இதை வைத்துக் கண்ணனும் ஒரிஜினலாகக் கடவுள் இல்லை, பின் வந்தவர்கள் தான் கதை கட்டினார்கள் என்று கூற இயலுமா?

    இந்த விஷயத்தில் ஆப்தர்களாகிய (authorities) அத்வைத ஆச்சாரியார்களின் முடிவையும் காட்டியிருந்தேன். இன்னும் வேண்டுமென்றால், இதையும் கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்: காளிதாசர், அவருக்கும் முன்பு இருந்த பாஸ கவி இவர்களெல்லாம் ராமனைக் “விஷ்ணு அவதாரமே, வெறும் மனிதன் அல்ல” என்றும் கல்வெட்டாக எழுதியுள்ளனர்.

    இதையெல்லாம் காணாமல் இருநூறு ஆண்டுகளுக்குள் எழுதி வருபவர்களைப் படித்துவிட்டு கேள்விப்பட்டது இது அது என்று எழுதுவது அழகா? ஏன், ஆதி சங்கரர் வழி வந்த சர்வஞாத்ம முனிக்கும், மகேஷ்வர தீர்த்தருக்கும், இன்னும் பல இராமாயண பாஷ்ய காரர்களுக்கும் “‘பின் வந்தவர்கள்’ தான் இராமனைக் கடவுளாக ஆக்கினர்” என்பது தெரியாதா?

    // இலக்கியங்களில் இப்படி நடப்பது புரிந்துகொள்ளக் கூடியதே. //

    விளையாட்டாக இருக்கிறதே… வேறு எந்த கவிகளின் இலக்கியத்திலாவது கோவலன், கண்ணகி, மாதவி முதலான கதா பாத்திரங்கள் நாடுதோறும் பகவத் அவதாரம் என்று கொண்டாடப்பட்டு வருகின்றதா? இல்லையே!

    இராமனை வால்மீகியும் நாரதரும் பாரத்வாஜரும் கொண்டாடியது போல, எந்த மகரிஷியாவது, வேறு ஏதாவது ஒரு மன்னனைக் கதையின் மையமான பாத்திரமாக வித்திப் போற்றிப் பாடியிருக்கின்றனரா?

    “வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
    வேத: ப்ராசேதஸாத் ஆஸீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா”

    என்று ஸ்மார்த்த வைஷ்ணவ விபாகமற அனைவரும் இராமாயண பாராயணத்திற்கு முன் படித்து வரும் சுலோகத்தைப் போல, வேறு எந்த காவியத்தையும் வேதத்தின் அவதாரமாகவோ, வேறு எந்த காவியநாயகனையும் வேதத்தால் கொண்டாடப்படும் பரம புருஷனின் அவதாரமாகவோ கொண்டாடுவதில்லையே!

    “பின் வந்தவர்களே” இராமனைக் கடவுளாக்கினார்கள் என்றால் இதெல்லாம் சாத்தியமா?

    சரி. சாத்தியம் என்றே வைத்துக் கொள்வோமே. இந்தக் கேள்விக்கு மாத்திரம் பதில் சொல்லுங்கள்: “இராமன் வெறும் மனிதனே. தெய்வம் அன்று” என்று இந்து மதத்தைப் பின்பற்றிய எந்த பிராசீன காலத்து (அதாவது 10-ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த) கவிகளோ உரைக்காரர்களோ கூறியிருந்தால் காட்டுங்களேன்.

  13. அன்புள்ள சிவஸ்ரீ அவர்களே,

    // எல்லாரும் பிரம்மம் என்பது அத்வைதவேதாந்தம். ஆகவே எல்லோரும் அவதாரமாகின்றோமே. அத்வைதிகளும் அவதாரத்தினைப் பற்றி பேசுகின்றார்களே. விசிட்டாத்வைதிகளுக்கும் த்வைதிகளுக்கும் அவதாரம் தத்துவ ரீதியில் பொருந்துகிறது. அத்வைதத்தோடு அவதாரம் பொருந்தாது என்றே அடியேனுக்குத்தோன்றுகிறது. //

    இது சரி அல்ல. ஆதி சங்கரர் முதலானவர்கள் எழுதியுள்ள அத்வைத கிரந்தங்களில் உள்ளதற்கு இது முரண். பின்வருவனவற்றுக்குச் சான்றுகள் உண்டு. வேண்டுமானால் தருகிறேன். ஆதிசங்கரரின் சூத்திர பாஷ்யம் இரண்டாம் அத்தியாயம் மூன்றாம் பாதத்திலும், கீதா அபஷ்யத்தில் அவதாரிகையிலும், நாலாம் அத்தியாயத்திலும், பதினைந்தாம் அத்தியாயத்திலும், விஷ்ணு சஹஸ்ரநாம பபஷ்யத்திலும், மற்றும் சர்வஞாத்ம முனிகளின் சங்க்க்ஷேப சாரீரக கிரந்தத்திலும் பின்வரும் விஷயங்கள் உள்ளன.

    (1) பரமார்த்த தசையில் எல்லாரும் பிரம்மம் தான் என்பது அத்வைதம். அதே அத்வைதம், வியாவகாரிக தசையில் சிலவற்றை உண்மை என்று ஒத்துக் கொள்கிறது. இந்த வியாவகாரிக தசையில் தான், அதே பிரம்மம் “சகுண பிரம்மம்” அதாவது உலகத்தைப் படைத்தளித்தழிக்கும் ஈசுவரனாக உள்ளது.

    (2) அந்த சகுண பிரம்மத்திற்கு உள்ள உபாதிகள் உத்தமமானவையே. அதாவது, ரஜஸ் தமஸ் இரண்டும் கலக்காத சுத்த சத்துவ மயமானவையே.

    (3) ஆனால் அவித்யைக்கு உட்படும் ஜீவர்கள் ரஜஸ் தமஸ் இரண்டும் கலந்த உபாதிகளையே கீழான உபாதிகளையே கொண்டுள்ளன.

    (4) உத்தமமான உபாதிகளைக் கொண்ட ஈஸ்வரன் மாயையால் கட்டுப்படாமல், மாறாக, மாயையை அதிஷ்டித்து அவதாரம் எடுப்பவன். அது கர்மவச்சத்தால் அல்ல, தன்னிச்சையாக எடுக்கப்படுவது, அப்ராக்ருதமானது, திவ்யமானது.

    (5) ஜீவர்களுக்கோவெனில், ஜன்மம் என்பது கர்மவசமானது. அது மாயைக்குக் கட்டுப்படுவதால் ஜீவர்களுக்கு ஏற்படுவது.

    சாரமாக, விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில் ஒரு அழகான இடத்தைக் காட்டுகிறேன்: “அமூர்த்திமான், அனேகமூர்த்தி” என்ற இடத்தில் சங்கரர்,

    “கர்ம நிபந்தனையால் விளையும் உடல் அவனுக்கு இல்லாமையால் அவன் ‘அமூர்த்திமான்‘ எனப்படுகிறான். உலகத்தில் உள்ளோர்களுக்கு நன்மை செய்தருளும் பொருட்டு தன்னிச்சையாகப் பல உருவங்களை எடுப்பதால் ‘அனேகமூர்த்தி‘ எனப்படுகிறான்.”

    இதில் முரண்பாடு இருக்கிறதா இல்லையா என்பது கேள்வி அல்ல. அத்வைதத்திலும் அவதாரம் ஒத்துக் கொள்ளப்படுகிறது என்றே காட்டினேன்.

    மேலும் பல சான்றுகளுக்கும் விளக்கங்களுக்கும், எனது “அச்சுதனின் அவதாரப் பெருமை” என்கிற ஐந்து பகுதிக் கட்டுரையைப் படிக்கவும்.

  14. ராமன் அவர்களே

    //
    நான் கேள்விப்பட்டவரை
    //

    உங்களது கேள்வியின் பரிதியை தெளிவு படுத்தியமைக்கு நன்றி

    //
    வால்மீகி முனிவர் இராமனை மனிதனாகக் காட்டியதும் அல்லாமல், அந்தக் காலத்தைய வழிமுறைகளையும் சரியாக விவரித்துள்ளார்.
    //
    இதிலிருந்தே நீங்கள் ராமானந்த சாகரின் ராமாயண சீரியல் கூட சரியாக பார்கவில்லை என்பது தேறுகிறது. வால்மீகி வரைக்கும் போவானேன்.

    ராமர் சபரி சந்திப்பு, ஜடாயு மோக்ஷம், ராம விபீஷன சந்திப்பு – அதிலிருந்து ஒன்று

    சக்ரித் ஏவ பிரபன்னாய தவ அஸ்மி இடி யாசதே
    அபயம் சர்வ பூதேப்யோ ததாமி எதத் வ்ரதம் மமா

    சரள தமிழில் – ஒரு தபா ஒரு பிரபண்ணன் நான் உன்னை அன்டினவன்னு சொல்லான்கட்டி அது ஆரா இருந்தாலும் சரி டபக்குன்னு எல்லா பயத்தையும் நீக்கிடுவேன். இது நானா ஏத்துகின வரம்.

    இப்படி ஒரு மனுஷ்யன் எங்காவது கூறுவானா. மஹரிஷிகள் கூட தனது சிஷ்யனை பிரபண்ணன் என்று கூறுவதில்லை).
    பிரபண்ணன் என்பதற்கு உங்களுக்கு அர்த்தம் விளங்கியே இருக்கும் என்று நம்புகிறேன்.

    அதென்ன சார் யாசதே – யாரவது வேண்டினால், இது ஒரு மனிதனின் பேச்சாக இருக்குமா. காஞ்சி பெரியவரோ, ரமணரோ இப்படி சொல்வார்களா. சரி சங்கர ராமானுஜ மாத்வாதிகள்.

    அபாயம் என்றால் எல்லா பயமும் – பயம் என்றாலே பவ சாகர பயம் ஒன்று தான் என்று வேதாந்த நிருபணம்.

    சர்வ பூதேப்யோ – அதென்ன சார் ஒரு மனிதனுக்க் இப்படி ஒரு அஹங்காரம். எல்லா பூதங்களுக்கும் (பவதி இடி பூதானி என்பது சம்ஸ்க்ருத பாடம்). செடி கோடி, மிருகம், அசுரன், தேவன், மனிதன், பாவி புண்ணியவான் இப்பாடி எல்லாரும் அடக்கும்

    இதெல்லாம் வால்மீகி ராமாயணத்திலேயே தான் சார் இருக்கு, அதான் சொல்லிடீங்களே எனக்கு தெரிந்த வரை இல்லைன்னு, இது ஒரு பாதுகாப்பான பதில் பாருங்க. நீங்க பேசாமா “ராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு எனக்கு தெரிந்தவரை என்று பெயரிட்டிருக்கலாம்”

    //பின் வந்தவர்கள் அவரைத் தெய்வமாகவும் ஆக்கி, அந்தந்தக் காலத்தின் மற்றும் இடத்தின் விசேஷங்களையும் புகுத்தியுள்ளனர். இலக்கியங்களில் இப்படி நடப்பது புரிந்துகொள்ளக் கூடியதே. எவருக்கு எது விருப்பமோ அதை அவர்கள் பின்பற்றட்டும்
    //
    எங்கேயாவது ஒரு காவிய நாயகனுக்கு உபநிஷத் காட்டுங்களேன், ராமோ உபநிஷத் இருக்கே.

    கர்ணனுக்கு இருக்கா. த்ருவனுக்கு? மார்கண்டேயனுக்கு? பரதனுக்கு? ஜனகருக்கு (யாஞவல்க்ய காலத்தவர்) ? நலனுக்கு? திலீபனுக்கு? கோவலனுக்கு?

    இது ஏன்னா சார் வாதம். ஒத்து வரவில்லை என்றால் இடை சொருகல் என்று போட்டு விடுவது ஒரு நேர்மையற்ற செயல். பதில் இல்லை என்று அர்த்தம், ராமாயணம் நெடுக ராமன் நாராயண அவதாரம் என்பதற்கு தெள்ளத்தெளிவாக சான்றுகள் உள்ளன. இது பாரதம் நெடுக எல்லாரும் தெரிந்ததே. இதே ஜட்சுமெண்டை எல்லாத்துக்கும் சொல்லிக்கலாம் இல்லையா. இதை பயன்படுத்தினால் உங்களது அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும். நாம் உங்களை போல போற போக்குல எதையும் சொல்ல மாட்டோம். அழகா அதற்கு ஆதாரம் கொண்டுவரும்.

    மனம் போன போக்கில் புரிதல் கொள்வதென்றால் அதற்கு வரும் கண்டனங்களையும் சேர்த்தே பெற்றுக் கொள்ள வேண்டும். அவைகளுக்கவது சரியான ஆதரங்களுடன் பதில் சொல்ல வேண்டும். நான் எதை பின்பற்றினால் உனக்கென்ன என்பதெல்லாம் எடுபடாது.

  15. சிவஸ்ரீ அவர்களே

    அத்வைதம் என்றால் பொதுவாக நாம் நினைப்பதல்ல. நிறைய அத்வைதிகள் பாகவத ராமாயண பண்டிதர்கள்.

    அத்வைதம் அவதாரங்களை எல்லாம் மறுப்பதில்லை. எல்லாரையும் (ஜீவனை) கடவுள் என்று சொல்லவில்லை. ஜீவனுள் இருப்பது ஒரே பிரம்மம் என்று தான் சொல்கிறது. ஜீவன் என்று ஒன்று தனியாக (சத்தாக) கிடையாது என்று சொல்கிறது. த்வைதம் பரமாத்மா என்ற ஒரு சத்தையும் அதை விட வேறான ஜீவன் என்ற சத்தையும் சொல்கிறது,

    ஆகையால் அத்வைதத்தில் அவதாரங்களை ஒத்துக் கொள்வது தோஷமில்லை.

  16. ராமன் அவர்களே

    //
    சாரங் அவர்களின்
    “…மன்யே என்பதற்கு கருதுகிறேன் என்றல்லவா அர்த்தம்….”

    சரி, அப்படியே இருக்கட்டும்,ஏனென்றால் நான் சம்ஸ்க்ருதம் நன்கு அறிந்தவன் அல்ல. ஒரு தமிழ் அகராதிப்படி,
    “பொருள்
    கருது : (1) எண்ணுதல்செய் intend; …”
    என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது கருதுதல் எண்ணுதலுக்கும் மேலானது என்றாகிறதா? அதாவது இராமர் மனிதனாகத் தன்னை எண்ணமட்டும் இல்லை, அப்படியே செயலிலும் இருந்தார் என்பதுதானே பொருள்?
    //

    நீங்கள் இப்படி எல்லாம் தமிழ் சம்ஸ்க்ருதம் ஆங்கிலம் என்று பூந்து விளையாடுவீர்கள் என்று தெரிந்து தான் ஒரு ட்ருச்தாந்தமும் தந்தேன்,

    சம்ஸ்க்ருதத்தில் மன்யே என்றால் அது தான் அர்த்தம். அதன்படி செயலில் இருந்தேன் என்று அர்த்தமில்லை.
    மானுஷ்யம் மன்யே ததா வ்யவஹராமி ச என்று இருக்கு வேண்டும். ஒரு ஸ்லோகத்தை மொழி பெயர்க்கும் பொது அர்த்தம் படிக்கும் பொது இப்படி அகராதி மாற்றி மாற்றி இப்படி இருக்கலாமோ என்று சொல்லக் கூடாது, விதிகள் இருக்கின்றன. வால்மீகி ஒன்னும் வைரமுத்து இல்லை எது எழுதிட்டு போகறதுக்கு. ஒவ்வொரு சொல்லும் பார்த்து பார்த்து கோர்க்கப்பட்டுள்ளது.

    ராமனின் சொல் வன்மை ராமாயணம் நெடுக வால்மீகியால் எடுத்தாளப்படுகிறது. முதல்லியே ராமனை வாக் படு: என்று சொல்கிறார் நாரதர். அதன் படி, ராமன் தன்னிடம் கேள்வி கேட்பவரை உத்தேசித்து ஒரு வரியில் பதில் தருவார்.

    இந்த சக்ரித் ஏவ பிரபன்னாய என்பது சுக்ரீவாதிகளுக்கு சொல்லும் பதில். உங்களுக்கு வேண்டியவர் ஒருவர் இப்படி தான் ஒருமுறை ராமனை சபலன் என்ற அளவுக்கு எடுத்து சென்றார். அங்கும் சூற்பனகைக்கு ஒரு வரியில் பதில், உன்னை மணக்க என்னால் முடியாது நான் க்ஷத்ரியன் நீ பிராமண ஜாதி என்று. வாலியிடம் நான் உன்னை இதற்க்காத்தான் கொன்றேன் என்று ஒரு மூணு கொயர் நோட்டு போட்டு பதில் சொல்லாமல், இது பரதனின் ராஜ்ஜியம் என்று பதில். இதற்கு வியாக்யானம் தான் நூறு பக்கம் வரும்.

    ஆகா ஒரு காவியம் படித்தாலும் இதை எல்லாம் உள் வாங்கிக் கொண்டுதான் படிக்க வேண்டும். இல்லை என்றால் உங்களது பாணியில், அவர் அவர் புரிதல் அவர்களுக்கு. அட இப்படி பதில் சொல்வது எனக்கு கூட ஜாலியா இருக்கு.


    “…ஊரெல்லாம் நீ தான் பிரம்மம், நீ தான் பிரம்மம் என்று உபன்யசித்துக் கொண்டிருக்கையில்…”

    இந்தக் கூற்றை ஆமாம், இல்லை என்று எப்படிச் சொன்னாலும் “தான் பிரும்மம்” என்று இருப்பவர்கள் அதிலிருந்து வழுவியதாக ஆகும். “:தான் பிரும்மம்” என்று நினைக்காதவர்கள் அதைஎப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலா

    மறுபடியும் நான் சொன்னதை விளங்கிக் கொள்ளவில்லை, அது வேண்டாம் விடுங்கள். அதில் பல உள் குத்துக்கள் இருக்கின்றன.

    சரி உங்களது அத்வைத புரிதல் படியே வருவோம். yoga வஷிஷ்டம் வாசித்த ராமர் தான் பிரம்மம் என்று உணரவில்லை. அட ச எப்படி, நீங்கள் இது காலும் முப்பது கட்டுரைகளில் ராமனின் குணங்களை பற்றி தானே விவரித்தீர்கள், பிரம்மத்திற்கு குணம் உண்டா என்ன? அட அப்போ ராமன் பிரம்மம் இல்லை, அவனுக்கு தான் குணங்கள் இருக்கே. இப்படி கூட நீங்கள் நிறுவிக் கொள்ளலாம்.

  17. अहम् मन्ये aham manye sent. I think.

    मन्ये manye sent. I think-

    இவை இரண்டும் சங்கதம் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு டிக்ஷனரியில் இருந்து காப்பி செய்து பேஸ்ட் செய்துள்ளேன். மோனியர் வில்லியம்சில் இன்னும் ஏராளமான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் கொள்ள முடியும். எனவே எதுவும் தவறு காண்பதற்கில்லை. அவரவர்களுக்கு பிடித்த விதத்தில் அர்த்தம் கொள்வதில் தவறில்லை. தன கருத்தை மற்றவர் ஏற்கவேண்டும் என்று கட்டாயம் செய்தல் கூடாது. அவ்வளவே.

  18. மாய்ந்து மாய்ந்து மறுமொழி அளித்துக்கொண்டிருக்கும் என் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பார்வையைத் தவிர்த்துவிட்டு எங்கள் பார்வையை நீங்கள் மறுபடியும் பார்க்க இதோ தொடரின் முதல் பத்தியிலிருந்து ஒரு மேற்கோள்:

    ” …..நம் அனைவருக்குமே நன்கு அறிமுகமான இராமாயண காவியத்தை, வால்மிகி முனிவரின் மூலச் செய்யுட்களில் சிலவற்றை எடுத்தாட்கொண்டு, வேறு கோணத்தில் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட ஆங்கில மூலக் கட்டுரையின் தமிழாக்கம் இந்தப் படைப்பு. ராம ராஜ்ஜியம் நமக்கு வேண்டும் என விரும்புவோர் அனைவருமே, முதலில் காவியத் தலைவன் இராமனைப் போலத் தனது வாழ்க்கை நெறியை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னால் மிகையாகாது.”

    அதுவேதான் தொடரின் தலைப்பிலும் வருகிறது: “இராமன்: ஒரு மாபெரும் மனித குல விளக்கு”

    இது ஒரு கோணத்திலிருந்து எழுதப்பட்டது. அந்தக் கோணம் என்ன என்றும் விளக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் வரும் அறிவுரைகளைப் பலருக்கும் அளிப்பதே எங்கள் நோக்கம். அதுவும் ஒரு மறுமொழியில் விளக்கப்பட்டது. ஒரு மனிதன் இன்னுமொரு மேதகு மனிதனைப் பார்த்தும் திருந்தலாம், அல்லது தெய்வத்தை எண்ணியும் திருந்தலாம். பேராயிரம் பரவி அவர்கள் சொல்வதுபோல, “…தன் கருத்தை மற்றவர் ஏற்கவேண்டும் என்று கட்டாயம் செய்தல் கூடாது. அவ்வளவே.”

    இதற்கு மேல் எனக்கு தற்போது நேரம் இல்லை. மன்னிக்கவும்.

  19. அன்பார்ந்த ஸ்ரீ ராமன் மஹாசய,

    மிகுந்த பரிச்ரமப்பட்டு தாங்கள் எழுதி வரும் இந்தத் தொடரில் ராம பிரானது கல்யாண குணங்கள் அழகாக விவரிக்கப்பட்டு வருகின்றன. தங்களது ராம கல்யாண குண விதரணம் தொடரட்டும்.

    ராம க்ருஷ்ணாதி அவதாரங்களில் ராமனும் கண்ணனும் தங்களை அப்பாவி மனிதர்களாகவே சொல்லிக்கொள்ளும் பல இடங்களைச் சுட்டிக்காட்டலாம். ஆனால் ஊடொடு பாவாக இவர்கள் சாக்ஷாத் பகவான் நாராயணனே என்ற படிக்கும் புராண இதிஹாசக்காரர்கள் இந்த அவதாரங்களைக் காட்டுவதையும் புறந்தள்ள முடியாது.

    பகவத் குணானுபவம் அவனை குழந்தையாய், நண்பனாய், நாயகனாய் என உறவு கொள்வதில் அழகாக மிளிர்கிறது. இப்படி குணானுபவத்தை ரசிக்கும் பக்தர்களுக்கு அப்பப்போ க்ஷணப்பொழுதில் பகவான் தன் ஸ்வாமித்வத்தைக் காட்டிவிட்டாலும் அடுத்த க்ஷணத்தில் அதை மறக்கடிக்கவும் செய்கிறான்.

    மண் தின்று குறும்பு செய்த குட்டிக்கண்ணனை வாயைக்காட்டு என்று யசோதை கேழ்க்க அதில் பூகோள ககோளங்களைக் கண்டாதால் அவன் ஸ்வாமி என்று தெரிந்து மலைத்தாலும் அடுத்த க்ஷணத்தில் அந்த நினைப்பை அப்படியே மறைத்ததால் தானே தாம்புக்கயிறில் கட்டப்படும் லீலை நடக்க இயலும்.

    விச்வரூப தர்சனமே அர்ஜுனனுக்கு காண்பித்த பின்னும் அதை மறக்கடித்தால் மட்டுமன்றோ பார்த்தசாரதியாக மேற்கொண்டு லீலை தொடர முடியும்.

    காஞ்சியில் அர்ச்சாவதாரமான வரதராஜப்பெருமாளுக்கு மாத்ருவாத்ஸல்யத்துடன் கைங்கர்யம் செய்த (அடியார் பெயர் நினைவுக்கு வர மறுக்கிறது) அடியார் சயனோத்ஸவம் முடிந்து பாலில் தர்ப்பைப்புல் துணுக்கைப்பார்த்து குழந்தையின் தொண்டையில் சிக்கியிருக்குமே —– இப்படி கவனக்குறைவு நேர்ந்ததே என ராத்துக்கமின்றித் தவிக்கையில் —– அம்மா! பாலில் தர்ப்பமிருந்தது என்னவோ உண்மை தான் — ஆனால் அதை விலக்கிவிட்டு நான் பாலருந்தினேன் என்று உனக்குத் தெரியாததால் இப்படி விசனப்படுகிறாய் – என குழந்தை (கரிவரதன்) சொன்ன வ்ருத்தாந்தம் பெருமாளை குழந்தை என்று பாவிக்காது பகவான் என்று மட்டும் பாவித்திருந்தால் கிட்டியிருக்குமா?

    ராமாயணத்தை வாசிப்பவர்களுக்கு ராமன் வனமேகுதல் சீதாபஹரணத்தின் பின் சீதையை நினைத்துப் புலம்புதல் அன்னையின் கணையாழியைச் சமர்ப்பித்த ஹனுமனிடம் நீ செய்த உபகாரத்திற்குக் கைம்மாறு செய்யக்கடவேனல்லன் என ப்ரபு நெகிழ்ந்து ஹனுமனை நெஞ்சாரத் தழுவுவது ராமபிரான் தர்ப்பசயனத்திலிருப்பது போன்ற எண்ணிறந்த கட்டங்களில் மனது கனப்பது கண்கள் குளமாவது என வாசிப்பவர் அவன் திருவடிகளில் மனத்தை இறுத்த முடிவது அவனைப் பரம்பொருளாக இன்றி நரசார்தூலனாகவே நினைப்பதால் தான். ஆம்! காலக்ஷேபங்களில் இப்படியான நரசார்தூலன் சாக்ஷாத் நாராயணனே என முனிசிம்மமான வால்மீகி கவி சொல்வதையும் உபன்யாசகர்கள் சொன்னாலும் பக்தி என்ற ரசானுபவம் புஷ்டியாவது அவனை நரசார்தூலனாகவே பக்தர்கள் கொண்டாடுவதால் தான்.

    ராமபிரானை வால்மீகி முனிவர் மனிதனாகக் காட்டினார் என்று சொல்பவர் அனைவரும் எடுத்தாள்வது, ஆத்மானம் மானுஷம் மன்யே. ஆனால் வால்மீகி முனிவர் ராமன் வாய்மொழி வழியாக அவனை மனிதனாகக் காட்டினும் மற்ற பாத்ரங்கள் மூலம் அவனது ஸ்வாமித்வத்தையும் கூடவே நெடுகக் காண்பிப்பதை மறுக்க இயலாது. அப்படி மறுப்பது தகவற் பிழை. அவ்வளவு மட்டிலுமே.

    பிழையை ஆதுரத்துடன் துலக்க விழைதல் பிழை துலக்குபவர்களால் கண்டிப்பாகச் செய்ய இயலும். ஏட்டிக்குப்போட்டியாக உத்தண்டமான வார்த்தை ப்ரயோகங்களைத் தவிர்ப்பது விவாதம் என்ற படியல்லாது முறையான கருத்துப்பகிர்வாக அமைந்து கருத்துக்களில் தெளிவைக் கொடுக்குமே. அதற்காகத் தானே நாம் கருத்துப்பரிவர்த்தனம் செய்கிறோம்.

    பரம்பொருளான ராமபிரானை மகனாக, கணவனாக, அண்ணனாக, அரசனாக, நண்பனாக, விரோதியாக (லங்காதிபனுக்கு) என பற்பல பாவங்களில் மனிதனாகப் பார்ப்பதில் பக்தர்களுக்கு குணானுபவம் கிட்டுவது உண்மை தான். பக்தி என்ற அலகீட்டில் மட்டிலும் ராமாயணம் வாசிப்பவர்களுக்கு அவனை நரசார்தூலனாக உகந்தனுபவிப்பவர்களுக்கோவெனில் மிக உயர்ந்த பகவத் குணானுபவம் கிட்டும். ராமோ விக்ரஹவான் தர்ம: – ராமன் தர்மத்தின் உரு என எண்ணத்தோன்றும்.

    ஆனால் அவனை மனிதன் என்று அதிகமாக உள்வாங்கி பக்தி என்ற உணர்வு குன்றி ஆராய்ச்சி என்ற உணர்வு மிக ஆராய்ச்சி செய்யப்புகின் மனிதர்களிடம் பொதுவாகக் காணப்படுவது போல் நிறை மட்டுமின்றி குறையும் காணத்தோன்றும். அதற்குக் காரணம் ஸ்வாமித்வம் என்ற ப்ரக்ஞை அற்றுப்போவதால் பக்தி என்ற பாவம் மனதிலிறுந்து விலகி முழுக்க முழுக்க லௌகிகப் பார்வையில் அவனை அணுக முனைவதால். இது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. அமரர் ஸ்ரீ ராஜாஜியின் சக்ரவர்த்தித் திருமகனில் கூட அவர் வாலிவதத்தைக் குறைகண்டு எழுதியதாக நினைவு.

    அப்படியெல்லாம் எழுதியதை பக்தியை மட்டும் அலகீடாகக் கொண்டு வாசிப்பவர்கள் வாசித்தால் வயிறு பதைக்கும் தான். அப்படிக் குறைகாண்போருக்கு சமாதானம் சொல்லுமுகமாக அந்த வயிற்று வலிக்கு ஔஷதமாக வ்யாக்யானக்காரர்கள் தான் பொழிந்து தள்ளியிருக்கிறார்களே.

    குறையொன்றுமில்லாத ராமனிடம் குறை காணுபவர்களுக்கு அவனிடம் குறையில்லை குறையில்லை என்று ஆயிரமுறை சொல்வதற்குப்பதில் சொல்லப்படும் குறைகளை பட்டியலிட்டு அதற்கு வ்யாக்யானகர்த்தர்கள் முன்வைக்கும் சமாதானங்களையும் அழகுற முன்வைத்தால் தர்மத்தின் உருவாக ராமன் என்ற ஆதர்ச புருஷனின் குணானுபவங்களை அருந்தி அருந்தி மகிழும் பக்தர்கள் மனம் குளிரும்.

    லோகோ பின்ன ருசி: – உலகத்தின் சுவை பலவிதம்.

    நாற்காலிக்கு மூணுகால் என்று சொல்பவர்களை யாராலும் மாற்ற முடியாது.

    முன்னால் இருப்பது பழுதா பாம்பா என்பவருக்கு விளக்கொளி காண்பித்தால் அவரது ப்ரமை விலகத்தான் செய்யும்.

    ஸ்ரீமான் கந்தர்வன் அவர்கள் —- ப்ரத்யேகமாக ராமகாதையில் —- பொதுவிலே ஆராய்ச்சி நோக்குடன் ராமபிரான் மீது குறைகளை சுட்டுபவர்களின் குறைகளையும் அவற்றிற்கு வ்யாக்யானகர்த்தர்கள் பாங்குற அழுத்தந்திருத்தமாக முன்வைக்கும் சமாதானங்களையும் தனித்தொடராக எழுதினால் முறையான கருத்தறிய விழையும் பக்தர்களுக்கு சம்சய விமோசனம் கிட்டும்.

    கற்பார் ராமபிரானையல்லால் மற்றொன்றும் கற்பரோ

    அருட்பொற் றிருவாழி மோதிர
    மளித்துற் றவர்மேல் மனோகர
    மளித்துக் கதிர்காம மேவிய …… பெருமாளே.

  20. அத்வைதத்தில் அவதாரம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று விளக்கிய அன்புக்குறிய திருமாலடியார்கள் ஸ்ரீ கந்தர்வன் மற்றும் ஸ்ரீ சாரங்கர் விளக்கியுள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றி.
    பாரமார்த்திகம் வ்யவாஹாரிகம் என்ற இரண்டுகருத்துருக்கள் மூலம் வ்யவஹாரிகத்தில் அவதாரக் கொள்கை களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது புரிகிறது. பாரமார்த்திகம் என்ற இலட்சிய நிலையில் ஈஸ்வரன் கூட இல்லை என்பது முரண்பாடுதான்.ஒன்றே ஆத்மா பிரம்மம் என்னும் போது சகுணப்பிரம்மமும் நிர்குணபிரம்மமும் வேறு வேறு. அவதாரம் எடுப்பது சகுணப்பிரம்மம் என்று அத்வைதிகள் சொல்வது கொஞ்சம் இடரலாகத்தான் தெரிகிறது.

  21. ஒரே பரம்பொருள் தான் பல்வேறு உருவங்களில் இருக்கிறது என்பதால் அவதாரங்களை அத்வைதத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவதாரம் என்பதும் பிரம்மத்தின் பல பெயர்களில் ஒன்றே. எந்த பெயரும் எந்த பெயரை விடவும் உயர்வோ, அல்லது தாழ்வோ கிடையாது. ஏனெனில் எல்லாப்பெயர்களும் அவன் பெயர்களே.

  22. ஸ்ரீ கிருஷ்ண குமார் அவர்களின்:

    “… வால்மீகி முனிவர் ராமன் வாய்மொழி வழியாக அவனை மனிதனாகக் காட்டினும் மற்ற பாத்ரங்கள் மூலம் அவனது ஸ்வாமித்வத்தையும் கூடவே நெடுகக் காண்பிப்பதை மறுக்க இயலாது. ”

    அதை இந்தத் தொடர் எங்காவது மறுத்திருந்தால் வாசகர்கள் சுட்டிக் காட்டவும். மக்களிடம் மனிதத் தன்மை மேம்படுவதற்கு என்றே இத்தொடர் தொடங்கப்படதுவே அல்லாமல், இராமரின் தெய்வத்தன்மையை எவ்வழியிலும் குறைப்பதற்கு அல்ல. இதுதான் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை உள்ளது.

    “…ஸ்ரீமான் கந்தர்வன் அவர்கள் —- ப்ரத்யேகமாக ராமகாதையில் —- பொதுவிலே ஆராய்ச்சி நோக்குடன் ராமபிரான் மீது குறைகளை சுட்டுபவர்களின் குறைகளையும் அவற்றிற்கு வ்யாக்யானகர்த்தர்கள் பாங்குற அழுத்தந்திருத்தமாக முன்வைக்கும் சமாதானங்களையும் தனித்தொடராக எழுதினால் முறையான கருத்தறிய விழையும் பக்தர்களுக்கு சம்சய விமோசனம் கிட்டும்.”

    அது நன்மை பயக்குமென்பதால், அதை நான் வழிமொழிகிறேன்.

    விவரமான மறுமொழிக்கு நன்றி.

  23. सकृद् एव प्रपन्नाय तव अस्मि इति च याचते ।
    अभयम् सर्व भूतेभ्यो ददामि एतद् व्रतम् मम ॥

    ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதிச யாசதே
    அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம

    “”””சரள தமிழில் – ஒரு தபா ஒரு பிரபண்ணன் நான் உன்னை அன்டினவன்னு சொல்லான்கட்டி அது ஆரா இருந்தாலும் சரி டபக்குன்னு எல்லா பயத்தையும் நீக்கிடுவேன். இது நானா ஏத்துகின வரம்.”””

    ப்ரமா……….தம்.

    தோஷம் சொல்வதற்காக இல்லை. ஸ்ரீ சாரங்க் க்ஷமிக்கவும். மேற்கண்ட ச்லோகத்தை பதம் பிரித்து கொடுத்திருந்தீர்கள். அதில் சந்தஸ் இடிக்கவே மூலத்தை நினைவு கூர்ந்து “ச” விடுபட்டது மண்டையில் இடித்ததால் எழுதியுள்ளேன். வ்யாக்யாதாக்கள் “ச” மற்றும் ‘து’ போன்ற ஒற்றைச் சொற்களைக் கூட அது ஏன் அவ்வாறு அங்கு உள்ளது எனக் குறிப்பாகச் சொல்வார்கள் என கேட்டிருக்கிறேன். இந்த context ல் “ச” விற்கு ப்ரத்யேகமாக முக்யத்வம் உள்ளதா தெரியவில்லை.

    ஆனாலும் ஒரு குழப்பம் வருகிறது.

    அவதாராதிகளை மனுஷ்யர்களாகப் பார்க்கையில் அவர்களிடம் நிறைகளை மட்டும் காணாது குறைகளையும் காணும் போக்கில் நான் குறை கண்டதென்னவோ வாஸ்தவம் தான்.

    ஆனால், யசோதையும் அர்ஜுனனும் கூட இதில் விதிவிலக்கில்லையே!

    அவன் பரம்பொருள், ஈஸ்வரன் என்று தெரிந்தால் மட்டும் தானே குறையற்றவன் என்ற ப்ரக்ஞை இருக்கும்.

    bhava பூர்வமாயினும் சரி, மனுஷ்யன் என்ற ரீதியில் பரம்பொருளை அணுகையில் நிறையொடல்லாது *குறை* என்று காண்பதும் யதார்த்தமாகத் தானே தெரிகிறது.

    தன் செல்லக்குழந்தை கண்ணன் மண் தின்றது குற்றம் என்பதால் தானே அதற்கு தண்டிக்கும் வண்ணமாகத் தாயார் யசோதை அவனைத் தாம்புக்கயிறால் கட்ட முனைகிறாள்.

    சந்தான கோபால உபாக்யானத்தில் கண்ணனுடைய ராஜதானியில் ஒரு ப்ராம்மணனுக்கு குழந்தைகள் தொடர்ந்து பிறந்தவுடனேயே இறந்து வருகையில் கண்ணனே அதைப்பற்றி மௌனம் சாதிக்கையில் அர்ஜுனன் தான் சாதிக்க முனைந்து நான் உன் குழந்தையை மீட்டுத் தருகிறேன் (தலையாடாத போது வாலாடும் ரீதியில்) என்று வீராப்பு பேசி பின்னர் வீராப்பு பலிக்காது அக்னிப்ரவேசம் வரை செல்கையில் பின்னர் கண்ணன் வந்து தன் நண்பனை க்ஷீராப்தி வரை கூட்டிச்சென்று ஒருவழியாக அர்ஜுனன் மாட்டிக்கொண்ட சிடுக்கில் இருந்து அவனை மீட்டதில் கூட கண்ணன் செய்யாத காரியத்தைத் தான் சாதிக்க முனையும் போக்கு தெரிகிறதே.

    ஆராய்ச்சி என்ற போக்கிலாகட்டும் bhAvam என்ற ரீதியில் ஆகட்டும் ராமக்ருஷ்ணர்களை ஈஸ்வரனாக இல்லாது மனுஷ்யனாகப் பார்க்கையில் *நிறை* மட்டுமின்றி *குறை*யும் காண்பது ஒரு வழியில் யதார்த்தமாகவும் தெரிகிறதே.

    ஏகாதச பக்தி பாவங்களில் சக்யாசக்தி, வாத்ஸல்யாசக்தி மற்றும் காந்தாசக்தி போன்ற பாவங்களில் ஸ்வச்சந்தமான பக்தனின் செயல்பாடுகளில் ப்ரணயத்திற்காகவேனும் சரி லீலாவிடம்பனமாகவும் சரி *குறை* காணுதல் என்ற விஷயம் காணப்படுகிறதே. (விரஹத்தில் இருப்பவர்களுக்கு விரஹம் விடுத்து நிறை குறையெல்லாம் ஒரு பொருட்டாகுமா தெரியவில்லை)

    விதண்டாவாதம் செய்வதாக நினைக்க வேண்டாம். வாஸ்தவத்தில் குழம்பித் தான் உள்ளேன்.

  24. பக்தி என்ற கருத்தாக்கம் ஹிந்து மதத்தில் மட்டுமே உள்ளது. பயத்திற்கு இதில் இடமே இல்லை . அன்பு மட்டுமே .
    இறைவனை இறைவனாக பார்பதோடு தாய், தந்தை, மகன்/மகள். காதலன்/கணவன். ஆசான், நண்பன் என்ற நிலைகளில் நாம் பார்க்கிறோம்.

    தம்பிரான் தோழர் உரிமையாக சிவனிடம் பேசினாலும் அவன் சர்வ சக்தன் என்பதை சொல்லவே செய்கிறார். ஒரு வேளை நமக்கு நினைவு படுத்த?

    வாத்சல்ய பாவத்தில் ஊறிய பக்தரின் அனுபவம் ஸ்ரீ கிருஷ்ணகுமார் அவர்களால் அழகாக காட்டப்பட்டது.

    காரைகாலம்மையார் சிவனை தன் மகனாகப் பார்கிறார். சமயங்களில் சொன்ன பேச்சை கேட்காத வளர்ந்த மகன்!
    ” அப்பா! பாம்பை அணியாதே [ கடித்து விடும்! ] எத்தனை முறை சொல்லி விட்டேன் என்று முதல் இரண்டு வரிகளில் சொல்கிறார் . மூன்றாம் வரியில் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே என்கிறார். அவன் திரிபுராந்தகன் என்று அம்மைக்கு தெரிகிறது. மீண்டும் கடைசி வரியில் பொன்னாரம் மற்றொன்று பூண். என்கிறார்.

    செல்ல மகனை பாம்பு கடித்து விட்டால் என்ன செய்வது? அம்மையின் கவலை அம்மைக்கே தெரியும்.

    ஆக இறைவனை அனுபவத்தில் கண்டு அன்பு செய்யும் அடியவர்கள் அவனை ஒன்றுமறிய சிறுவனாக ஒரு ஷணம் நினைத்தாலும் மின்னல் போல் அன்பனின் சர்வ சக்தி படைத்த தன்மை நினைவுக்கு வரவும் செய்கிறது.

    மாணிக்கம் வைரம் இடையில் வைத்து கட்டிய ஆணிபொன் தொட்டில் தான். ஆழ்வார் தாலேலோ படும் பொது அவன் வையம் அளந்தோன் என்பதையும் சொல்கிறாரே.

    மனிதனாக மட்டும் பார்ப்பது அவரவர் இஷ்டம் ,ஹிந்துத்வத்தில் அந்த சுதந்திரம் உண்டு ஆனால் ஆதி கவி அப்படி தான் சொல்கிறார் என்பது சரியல்ல.

    திரு சிவஸ்ரீ அவர்களே.

    இங்கே திரு கந்தர்வன் அவர்கள் நமக்கு தேவையான நிறைய ஆதாரங்களை எடுத்து வைக்கிறார். அத்வைதம் பற்றி எனக்கு ரொம்ப தெரியாது . இருந்தாலும் சிறியேன் எனக்கு தெரிந்ததை சொல்ல முனைகிறேன்.தவறானால் விஷயம் அறிந்தோர் மன்னிக்கவும்.

    “ஆத்மா பிரம்மம் என்னும் போது சகுணப்பிரம்மமும் நிர்குணபிரம்மமும் வேறு வேறு. அவதாரம் எடுப்பது சகுணப்பிரம்மம் என்று அத்வைதிகள் சொல்வது கொஞ்சம் இடரலாகத்தான் தெரிகிறது.”

    நிர்குண பிரம்மமே தான் வ்யவஹார உலகில் நாம ரூபத்துடன் [தான் பிரமமே என்று உணர்ந்த நிலையில் ] தோன்றும் போது சகுண ப்ரஹ்மம்.ஆகிறது . நமக்கு நாம் பிரம்மம் என்பது அனுபவத்தில் வராததால் நாம் ஜீவர்களாய் இருக்கிறோம்.

    கண்ணன் அர்ஜுனனிடம் நமக்கு பல ஜன்ம தொடர்பு உண்டு என் முன் பிறவிகளை நான் அறிவேன் . நீ அறிய வில்லை. பிறப்பற்றேன் ஆயினும் அழிவற்றேன் ஆயினும் ஈசனே ஆயினும், எனது பிரகிருதியில் நிலை பெற்று ஆத்ம மாயையால் பிறப்பு எய்துகிறேன் என்கிறான்.

    அதுவே அவதாரம் ஆகும். நமக்கு நம்மை பற்றிய உண்மையை , நம் நிஜ ஸ்வரூபம் என்ன என்பதை நினைவு படுத்தவே அவன் பிறக்கிறான். ஆனால் நம்மை போல் ஒரிஜினல் என்ன என்பதை மறந்த வாக்கில் அல்ல, ஏனெனில் அவன் மாயைக்கு கட்டுப்பட்டவன் அல்ல.

    விவகாரம் பிடித்த வ்யவஹார உலகில் நாம் , நம் குழப்பங்கள். பேய்கள், பிசாசுகள், நமது அரசியல் தலைவர்கள் , கொஞ்சம் நல்லவர்கள் எல்லாம் உண்டு. கூடவே ஈஸ்வரன் [மாறுவேஷத்தில்] உண்டு [ நல்ல வேளையாக]

    ஏன் இப்படி ஒரு பெரும் நாடகம் என்றச் கேள்வி வருகிறது. அதற்கு பதில் தெரியாது. ஒரு உபன்யாசகர் சொன்னது போல் திக்கு தெரியாத காட்டில் எப்படி மாட்டினோம் என்பதை விட எப்படி தப்பிக்கலாம் என்பதைப்பற்றி யோசிக்கலாம்.

    இப்படியெல்லாம் விவாதிக்க முடிகிறதே , அந்த சுதந்திரம் தந்த சனாதனத்திற்கு ஜே!

    சாய்

  25. ராமன் சார்

    //
    மாய்ந்து மாய்ந்து மறுமொழி அளித்துக்கொண்டிருக்கும் என் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பார்வையைத் தவிர்த்துவிட்டு எங்கள் பார்வையை நீங்கள் மறுபடியும் பார்க்க இதோ தொடரின் முதல் பத்தியிலிருந்து ஒரு மேற்கோள்:
    //

    நானும் தான் ஒத்துகிட்டேனே ரொம்ப வித்யாசமா இருக்குன்னு. இதை பாருங்க

    //
    ஊரெல்லாம் நீ தான் பிரம்மம், நீ தான் பிரம்மம் என்று உபன்யசித்துக் கொண்டிருக்கையில் கொண்டிருக்கையில், ராமன் குறை நிறை உள்ள மனிதன் என்று படிப்பது கொஞ்சம் வித்யாசமாக இருக்கிறது.
    //

    ரொம்ப வித்யாசமா ரொம்ப புதுசா இருக்கு சார். இப்போவெல்லாம் எதையுமே புதுசா சொல்லவேண்டி இருக்கு. இல்லாட்டி படம் ஒடமாட்டேன்குது. படம் ஓடனும்னா ஒன்னு புதுசா புரியற மாதிரி சொல்லணும், இல்லாட்டி பிரச்சனைகளை விஸ்வரூபம் எண்டுக்க செய்யணும். அப்போ ரெண்டுமே நடந்தா ?

    வித்யாசமான முயற்சின்னு சொல்லிட்டா. முயற்சி மட்டும் தான் வித்யாசமா இருக்கணும், சொந்த கருத்தும் கூடவா வித்யாசமா போகிடனும்.

    //
    ராமன் சொல்கிறார்

    நான் கேள்விப்பட்டவரை வால்மீகி முனிவர் இராமனை மனிதனாகக் காட்டியதும் அல்லாமல், அந்தக் காலத்தைய வழிமுறைகளையும் சரியாக விவரித்துள்ளார். பின் வந்தவர்கள் அவரைத் தெய்வமாகவும் ஆக்கி, அந்தந்தக் காலத்தின் மற்றும் இடத்தின் விசேஷங்களையும் புகுத்தியுள்ளனர். இலக்கியங்களில் இப்படி நடப்பது புரிந்துகொள்ளக் கூடியதே. எவருக்கு எது விருப்பமோ அதை அவர்கள் பின்பற்றட்டும்
    //

    எல்லாரும் இஷ்டபடி இருந்துகோங்கப்பா என்றா இருப்பது. கொஞ்சமாவது எதிலாவது seriousness வேண்டாமா? ஒன்னும் விளங்கலப்பா ?

    சரியான ஞானம் என்பது ஒன்றாகத்தான் இருக்க முடியுமே தவிர அது எல்லாம் சரி என்று இருக்க முடியாது.

    “பும்ச்த்வே தத்வென த்ருஷ்டே புனரபி ந கலு பிராணிதி ஸ்தானுதாதி:”

  26. ஸ்ரீ சாய் அவர்கள் சனாதனத்தில் கருத்து சுதந்திரத்தினை மிகவும் போற்றி எழுதியுள்ளார். அதில் ஹிந்து என்று தம்மை கருதிக்கொள்கிறவர்களுக்கு வைதீக சனாதிகளாகளட்டும் வைதீகரல்லாதவராகட்டும் கருத்துவேறுபாடு இருக்க முடியாது.
    இறைவனை அடைய உள்ள முறைகளில் எல்லாம் சிறந்ததான பக்தி என்ற வழிமுறை ஹிந்துக்களுக்கே உரியது என்ற கருத்தும் பெரும்பாலும் ஏற்புடையது. அபிராஹாமிய சமயங்கள் அச்சத்தில் துவங்கி அச்சத்திலேயே நிறைவடைந்துவிட நம்முடைய சைவ வைணவ சமயங்களில் மடுமன்றி ஜைன பவுத்த சமயங்களிலும் பக்தி வளர்ந்தோங்கியுள்ளது. பக்தியின் உச்சமான நாயக நாயகி பாவம் இங்குமட்டுமே சாத்தியம். அத்துவைத அனுபவம் ஒன்றோடுஒன்றாகி இரண்டர நிகழும் உன்னத அனுபவம் அதில் மட்டுமே கூடும்.

    ப்ரம்மம் ஆத்மா ப்ரபஞ்சம் இவை வேறுவேறானவை என்று கொள்ளும் எம்மைப்போன்றவர்கள், ஞான அனுபவத்தில் மட்டும் அத்வைத அனுபவம் சாத்தியம் என்று நம்புகிறவர்கள். ஆகவே எமக்கு ப்ரம்மம் அவதாரம் எடுப்படதையோ அல்லது சகுணம் நிர்குணம் என்று இரண்டாக இருப்பதை ஏற்க இயலாது.
    சிவஸ்ரீ

  27. திரு. சாரங் அவர்களின்,

    “எல்லாரும் இஷ்டபடி இருந்துகோங்கப்பா என்றா இருப்பது. கொஞ்சமாவது எதிலாவது seriousness வேண்டாமா? ஒன்னும் விளங்கலப்பா ?
    சரியான ஞானம் என்பது ஒன்றாகத்தான் இருக்க முடியுமே தவிர அது எல்லாம் சரி என்று இருக்க முடியாது.” என்கிற மறுமொழிக்கு இதுதான் பதில்.

    ரொம்ப serious-ஆகத்தான் சொல்கிறோம்:
    “…சித்திரமும் பார்ப்பானும் சேர் படமும் ஆரொளியும் அத்தனையும் தானாம் அவன்” என்று சொல்லப்படுவதில், “அத்தனையும் தானாம் அவன்” என்பதை அனுபவத்தில் உணர்வது ஞானம். அதை உணர இயலாது இருப்பவன்,
    எத்தனை இருக்கிறதோ அத்தனையையும் பார்த்துக்கொண்டுதான் இருப்பான். அது உலகியல் நியதி. ராமாயணமும் அந்த உலகத்தைச் சேர்ந்ததுதான். அதனாலேயே அத்தனையும் இருக்கின்றன. மேலும் வரலாம்.

  28. சிவஸ்ரீ அவர்களே

    //
    ப்ரம்மம் ஆத்மா ப்ரபஞ்சம் இவை வேறுவேறானவை என்று கொள்ளும் எம்மைப்போன்றவர்கள், ஞான அனுபவத்தில் மட்டும் அத்வைத அனுபவம் சாத்தியம் என்று நம்புகிறவர்கள். ஆகவே எமக்கு ப்ரம்மம் அவதாரம் எடுப்படதையோ அல்லது சகுணம் நிர்குணம் என்று இரண்டாக இருப்பதை ஏற்க இயலாது.
    //

    த்வைதிகளின் (மாதவ சம்ப்ரதாயத்தினரின்) நிலைபாடும் இதே தான் பிரம்மம், ஆத்மா பிரபஞ்சம் எல்லாம் வேறு வேறு. அவர்கள் அவதாரங்களை ஒத்துக் கொள்கிறார்களே?

    த்வைதத்திற்கும் பிரம்மத்தின் அவதாரத்தை ஒத்துக் கொள்ளாததற்கும் தார்கிகமாக எந்த தோஷமும் இல்லை. ஆறு விகாரங்கள் என்றால் அது பொருந்தாது. இதை பற்றி பிறகு.

    அத்வைதத்தில் இரண்டு நிலை எப்படி சாத்தியம் என்கிறீர்கள். பிரளய காலாத்தில் எல்லாம் பிரம்மதினுள் ஒடுங்கி விடுமே அப்பொழுது பிரம்மத்தை தவிர வேறு எதுவும் இருக்காதே? இதை தான் பாரமார்த்திக சத்தியத்திற்கு ஈடாக அத்வைதிகள் எடுக்கிறார்கள். இதை முதலில் பௌத்தர்கள் தான் நித்ய சத்தா, வ்யவஹாரிக சத்தா என்று பிரித்தார்கள் (நாகர்ஜுனர்)

  29. ஆம் -நமது சுதந்திரம் என்பது ,ஹிந்து மகா சமுத்ரத்தில் உள்ள தத்துவங்கள் பற்றி விவாதிக்க முடிகிறது. தெரியாத என் போன்றோர் பேசுவதன் மூலம் தவறான கருத்தை சொன்னால் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

    வேறு ஒரு தளத்தில் ராமாயணம் பற்றி பேச்சு வந்தாலே சார்வாகர் பற்றி பேச்சு வரும். சார்வாகம் ராமாயணத்தில் வருகிறது . அதனால் ஹிந்து சமயத்திற்கு அதுவும் ஒக்கே என்று ஒருவர் சொல்வார் – ராவணன் கூட ராமாயணத்தில் வருகிறான். அவனும் ஓக்கேயா என்ன என்று கேட்டால் பதில் இல்லை. சார்வாகனுக்கு ராமன் கொடுக்கும் சூடான மறுமொழி பற்றி பேச்சு இருக்காது.

    பக்தி ,பௌத்த ஜைனத்தில் இந்தளவு உள்ளதா தெரியவில்லை. அதுவும் இறைவன் அம்மாவிடம் திட்டும் சமயத்தில் அடியும் வாங்கும் குழந்தையாக , மேலும் உரிமையோடு திட்டப்படும் நண்பனாக இதெல்லாம் ஹிந்து மதத்தில் மட்டுமே சாத்தியம்.
    நாயகன் நாயகி பாவம் [ bhavam ] திரு சிவஸ்ரீ அவர்கள் நினைவூட்டுவது .
    இது இருப்பதிலேயே உத்தமம் என்கிறார்கள்- இறைவனைப் பார்த்து என்னை நீ மறந்து விட்டாய் என்று குற்றம் சாட்டினாலும் ” காதலி” தான் காதலிப்பது இறைவனை என்பதை எதோ ஓர் நிலையில் மறப்பதில்லை –

    இறைவன் தன்னை போன்ற ஒரு மனிதன் என்று சதா நினைத்து ரொம்ப மனித ரேஞ்சிக்கு போனால் இந்த மதுர பாவனை டேஞ்சர் ஆகி விடும் அபாயம் உள்ளதோ என்று தோன்றுகிறது. . ஆனால் பக்குவமடைந்த பக்தர்களுக்கு இது பிரச்னை இல்லை.

    இது பாவனை -நம்மை போன்ற ஒரு மனிதன், நம் உறவுக்காரன் என்ற பாவனை தான் -நிஜம் என்னவென்றால் நாம் ஜீவன் அவன் பரமன் -இதை ஒரேயடியாக மறந்து விடாமல் பரம பக்தர்கள் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

    சாய்

  30. “அத்வைதத்தில் இரண்டு நிலை எப்படி சாத்தியம் என்கிறீர்கள். பிரளய காலாத்தில் எல்லாம் பிரம்மதினுள் ஒடுங்கி விடுமே அப்பொழுது பிரம்மத்தை தவிர வேறு எதுவும் இருக்காதே?”
    அத்வைதத்தில் இரண்டு நிலை சாத்தியம் இல்லை. ஆனால் நமக்கு நம்முடைய விழிப்பு நிலைக்கு(கான்ஸயஸ்னஸ்) பல நிலைகள் சாத்தியம். துரியத்தைகடந்த நிலையில் பாவனாதீத அத்வைத அனுபவம் ஏற்படும். சாதனையோடு இறையருளும் அதை அடைய அவசியம்.
    ப்ரளயகாலத்தில் ப்ரபஞ்சம் உயிர்கள் யாவும் ப்ரம்மத்தில் அதாவது இலிங்கத்தில் ஒடுங்கிவிடுவது உண்மை. எனினும் உயிர்கள் அந்த ஒன்றிய உணர்வினைப்பெருமா. தெரியாது. இந்த அத்வைத நிலை ப்ரளயகாலத்தில் மட்டுமல்ல வாழும்காலத்திலும்(ஜீவன்முக்தி) சாத்தியமே. உடல் நீத்தபின்னரும் சாயுஜ்யமாகிய முக்தி நிலையும் அத்துவித அனுபவமே.
    சிவஸ்ரீ.

  31. சார்வாகன் ஒரு முக்தியை நோக்கி செல்லும் சிறு குழந்தை தான். அவன் இன்னும் பல படிகளை தாண்டி இறை அனுபூதியை பெறுகிறான். அவ்வளவுதான். நாத்திகம் வளர்ச்சியின் முதல் படி. அவ்வளவே. அங்கேயே நின்று வீணாக கத்தும் பரிசுத்த இட்டலி சுடும் போலிப்பகுத்தறிவு வியாபாரி வீரமணி போன்றோர் கூட, அறிவு வளர்ந்தால், இறை அநுபூதி பெற முடியும்.

  32. வால்மீகி ராமாயணத்தில் இருந்து மேற்கோள்கள்:

    அயோத்யா காண்டம், 53-ம் சர்க்கம்- இராமனின் கொந்தளிப்பு
    (வன வாழ்க்கைக்குப் புறப்பட்டு, பின்தொடர்ந்த ஊர் மக்களை ஏமாற்றி,முன்னேறி சுமந்திரனுக்கும் விடைகொடுத்துத் தேருடன் ஊர் திரும்பச் சொல்லிவிட்டுக் குகன் மூலம் கங்கையைக் கடந்து வன வாசத் துவக்கத்தின் முதல் நாள், அந்தி சாய்ந்து இரவு வருகையில் இராமன் லக்ஷ்மணனைப் பார்த்துச் சொல்கிறார்: (ஸ்லோகங்கள் 2 -18)

    “:நாட்டை விட்டு ஊரை விட்டு வெளியே இது முதல் இரவு, லக்ஷ்மணா! ….நிச்சயம் மகாராஜா அங்கே துக்கம் வரத் துன்பப்பட்டுக் கொண்டிருப்பார்! வேண்டிக் கேட்டது கிடைத்த கைகேயி சந்தோஷமாய் இருப்பாள்! இப்படிச் செய்திருக்கிற அவள் ராஜ்யத்தின் பொருட்டு, பரதன் வந்தவுடன் (அவருடைய) உயிரையே போக்கிவிட மாட்டாளா என்ன! கிழ வயதினிலே, நானும் அருகில் இல்லாமல், அந்தக் “காமாத்மா” கைகேயியின் வசத்தில் என்ன பண்ணப் போகிறாரோ (பாவம்)! என்ன விசனமிக்க நிலை! அதையும் அவருடைய மதி மயக்கத்தையும் பார்க்கும்போது எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா – அறத்தையும் பொருளையும் விட – தர்மத்தையும் அர்த்தத்தையும் காட்டிலும் – காமம்தான் உயர்த்தி என்பேன்!

    “பின் (யோசி!) எந்த அறிவில்லாத மனிதன் கூட இப்படி ஒரு பெண்பிள்ளைக்காகத் தன் சொல் தட்டாது பணிந்து நடக்கும் பிள்ளையைத் தியாகம் செய்வான், நம் அப்பா என்னைச் செய்திருக்கிறது போல?! சுகம்தான் போ, கைகேயி பிள்ளை பரதனுக்கு – பெண்டாட்டியோடு கூட – முழு கோசலை நாட்டையும் ஒரே ராஜாதிராஜனாக மக்களெல்லாம் மகிழ ஆண்டு அனுபவிக்கப் போகிறான்! தம் தந்தையும் வயதாகிப் போய், தானும் காட்டில் இருக்கும்போது அவனே அனைத்து ராஜ்யத்துக்கும் ஒரே சௌக்கியச் சின்னமாக ஆகப்போகிறான். தர்மத்தையும், அர்த்தத்தையும் விட்டுவிட்டு காமத்தின் பின் எவன் போனாலும் வெகு விரைவிலேயே விபத்தாகி வீழ்ந்து விடுவான் – ராஜ தசரதன் போலே!

    “எனக்குத் தோன்றுகிறது லக்ஷ்மணா! தசரதன் சாவுக்கும், என் நாடு கடத்தலுக்கும், பரதன் அரச போகத்துக்கும்தான் கைகேயி வந்து சேர்ந்திருக்கிறாள்! அட இப்போதே கூட கைகேயி சௌபாக்கியங்களால் மனத்தில் மதம் பிடித்து மதிமயங்கி கௌசல்யையும், சுமித்திரையையும் இம்சிப்பாளோ என்னவோ! சுமித்திரை பாவம், இன்னல்பட வேண்டாம். லக்ஷ்மணா, நீ உடனே விடிந்ததும் கிளம்பி ஊருக்குத் திரும்பிப் போ! நான் தனியாகச் சீதையுடன் தண்டகம் செல்கிறேன். நீ அங்கே கௌசல்யையை கவனித்துக் கொள். கைகேயி பொல்லாத, துவேஷத்தில் அநியாயமாக நடந்து கொண்டாலும் கொள்ளலாம்!….”

    இதே தொனியில்தான் பின்னர் சித்திரக்கூடத்தில் தகப்பனார் இறந்துவிட்ட செய்தி கேட்டபோதும்,
    “இப்போது கைகேயிக்குச் சந்தோஷம்தானே!”
    என்று இராமன் சொல்லித் தீர்த்ததாக வால்மீகி வரைகிறார்.

    மேலும், அரண்ய காண்டம் 62-ம் சர்க்கம் ஸ்லோகம் 11:
    சீதையைத் தேடி அலையும் இராமன் பலப்பலவாறு அழுது புலம்புகையில் உதிர்க்கும் சொல் –
    “ஹா! கைகேயிக்கு இன்றைக்கு ஆசை நிறைவேறியிருக்குமே!”

  33. இந்தத் தொடருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் மறுமொழிகளே, இந்த தொடரின் வெற்றிக்கு ஆதாரம்.

    எல்லாம் எவ்வளவு அருமையான மறுமொழிகளாக உள்ளன. த்வைதம், அத்வைதம், சகுண பிரம்மம் நிர்க்குண பிரம்மம் என்று நமது தத்துவப் புதையல்களை வெளிக்கொணரும் வகையில் மறுமொழிகள் இருக்கின்றன.

    நமது கலாச்சாரம் வீழாது என்பது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

    வாழ்க தமிழ்ஹிந்து

  34. நாம் எல்லோருமே முக்தி நோக்கி செல்லும் குழந்தைகள் தான்.

    பேசும் விஷயமே இப்போது ஹிந்து மதம் எல்லாவற்றையும் ஒப்பு கொள்கிறது எனும் வாதத்தை ப்பற்றியே. இது அடிக்கடி நம்மை நோக்கி சொல்லப்படும் ஒன்று.
    தெளிவாக்க ராமாயணம் மிகவும் பயன்படும்.

    சார்வாகம் பேசும் ஜாபாலி முனிவர் சொல்ல்வது பூர்வ பக்ஷம் அதற்கு ராமன் அளிக்கும் பதில் உத்தர பக்ஷம்.
    இதில் பூர்வ பக்ஷத்தை மட்டும் படித்து விட்டு ராமாயணம் அதை தான் சொல்கிறது என்பது தவறு. அதை தான் சுட்டி காட்டினேன்.

    உண்மையில் ஜாபால் முனிவர் பேசும் இந்த கட்டம் ராமனின் மனோ திடத்தை காட்ட உதவுகிறது. ஏன் வசிஷ்டரே ராமனை அயோத்தி திரும்பும்படி கேட்கிறார். அதற்கு ராமனின் பதிலில் உள்ளூர மகிழ்திருப்பர் நிச்சயமாக!

    பாடப் புத்தகத்தின் கைடு புத்தகத்தில் கேள்விகளும் உண்டு-பதில்களும் உண்டு-அட கேள்வி இருக்கிறதே -இவர்களுக்கே பதில் தெரியாது போலும் என்பது போன்ற ஒரு வாதம் இது.
    பல தளங்களில் ஹிந்து மதம் பற்றி, அல்லது ராமாயணம் பற்றி பேச்சு வந்தாலே இந்த “எதையும் கொள்ளும் ஹிந்து மதம்” வாதம் வைக்கபடுகிறது.

    ஹிந்து மதம் குழப்ப கேஸ் அல்ல. தெளிவாக பல வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
    சித்தாந்த வித்யாசங்கள் உண்டு- த்வைதம் அத்வைதம் போல -ஆனால் எல்லாம் ஒரே வேத நெறி கிளையில் பூத்த மலர்களே.
    “எல்லாம் கொள்ளும்” வாதத்தின் மூலம் பரிசுத்த ஆவி இட்லி விற்கலாம். ஆபாச முறையில் வழிபாடு செய்யும் வெளிநாட்டவர் நிறைய உள்ள ” அன்னை” வழிபாடு கல்டுகள் கூட உள்ளன.
    உலக அன்னையை அன்னையாக பார்க்காமல் வேறு பார்வையில் பார்ப்பதும் கூட ஒக்கே என்கிறார்கள் இவர்கள்.
    இந்த வாதம் யாருக்கு பயன்படுகிறது என்று சற்று சிந்தித்து பார்த்தல் புரியும்.

    அதே நேரம் , ஒருவர் நாத்திகராக இருக்கும் சுதந்திரம் ஹிந்து சமூகத்தில் உண்டு.உண்மை.
    காஞ்சிப் பெரியவரே சோம்பேறி நாத்திகன் -அல்லாதவனை விட உண்மையான தேடலில் [ தேடி பார்ப்பேன்; சான்று கிடைத்தால் நம்புவேன் என்பது போல] இருக்கும் நாத்திகன் மேல் என்கிறார்!

    நாத்திகம் என்றால் ஹிந்துகளை மட்டும் திட்டுவது என்பது தமிழக ப்ராண்ட் நேர்மையற்ற “நாத்திகம்” .
    தலைவரின் பேச்சில் மயங்கிய அவர்கள் தங்கள் மகன்களுக்கு இராவணன் என்றும் இரணியன் என்றும் பேர் வைத்தார்கள் ; தாய்மார்களோ தங்கள் முன்னோர்கள் வழியை விடாமல் இருந்தார்கள். பின் நாட்களில் இந்த “ராவணன்” பெற்ற குழந்தை மகன்களுக்கு ராம் என்று பெயர் இடபடுகிறது!
    வயதான தாயார் [ சிறுவன் ராமின் பாட்டி ]மெல்ல புன்னகை செய்கிறார். எக்ஸ் -கழக தொண்டர் தாத்தா தன் தலைவரின் திருவிளையாடல் புரிந்த நிலையில் மனைவி ஒன்றும் மண்டு இல்லை என்று மெல்ல உணரத்தொடங்குகிறார்.
    சாய்

  35. கடவுள் சக்தியை பற்றி இல்லை என்றோ, இருக்கு என்றோ யாரும் சொல்வது தப்பு கிடையாது. அதற்கு இந்து மதத்தில் உரிமை உண்டு. ஆனால் நான் போட்டிருக்கும் சட்டை மட்டுமே வெள்ளை , மற்ற சட்டை எல்லாம் அழுக்கு என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது. நமது தளத்திலேயே சில அன்பர்கள் எழுதும் போது, பெரியார் ஒரு பெரிய சீர்திருத்த வாதி என்று உளறுவதை படிக்கிறோம். பெரியார் ஒரு குழப்பவாதி அவ்வளவு தான். பெரியாருக்கு பெரிய சாதனை என்பது வெளிநாடு சென்று நிர்வாண சங்கத்தில் கலந்து கொண்டு சில நாட்கள் அங்கு தங்கி விளக்கம் பெற்று , நிர்வாணம் எவ்வளவு உயர்வு என்பதை அறிந்து, இங்கு வந்து தமிழன் வேட்டியும், துண்டும், அணிந்திருப்பதை பார்த்து , ஐயோ உடையா, தமிழன் அணியலாமா, தமிழன் காட்டுமிராண்டி தமிழ் காட்டுமிராண்டி மொழி , தமிழா! தமிழ் படிக்காதே, தமிழ் படித்தால் நாசமாய்ப் போவாய் என்று சொல்லி , தன் வயிற்று எரிச்சலை வெளிப் படுத்தினார். உன் வீட்டு வேலைக்காரியுடன் கூட தமிழில் பேசாதே, ஆவலுடன் ஆங்கிலத்திலேயே பேசு, வேலைக்காரிக்கு ஆங்கிலம் தெரியாது என்றால் அவளுக்கும் ஆங்கிலம் கற்றுக்கொடு என்ற பிறவி. கேடு கேட்டவன், தன்னுடைய குலத்துக்கே கேடு விளைவிக்க விரும்புபவன் தான் இவரை , தமிழர் தலைவன் என்று சொல்வான். பூவண்ணன் போன்றோர் அத்தகையோரே. கள்ளு இறக்குகிறார்கள் என்பதற்காக தன்னுடைய தோட்டத்தில் இருக்கும் அத்துணை பனைமரம், மற்றும் தென்னை மரங்களையும் வெட்டி எறிந்த ஞான சூன்யம். தென்னை பனை ஆகியவற்றில் தேங்காய், நுங்கு, இளநீர், பனங்கல்கண்டு, பனங்கிழங்கு,பதநீர் ஆகிய எவ்வளவோ பயனுள்ள பொருட்கள் கிடைக்கின்றன. வைத்தால் குடுமி , அடித்தால் மொட்டை என்று இவரைப்போல எல்லோரும் கிளம்பினால் நாடு என்ன ஆவது.?

  36. தனி மனிதன் தான் மனித சமுதாயத்தில் அடிப்படை அங்கம். அவன் வாழ்வு செம்மையானால் ஒட்டு மொத்த சமுதாயமே சிறந்து விளங்கும்.

    இன்றைய தேதியில் ,
    1. சாதி வாரியான இடஒதுக்கீடு என்ற மோசடி ஒழிக்கப்பட வேண்டும்.
    2. கலப்பு திருமணம் செய்தோருக்கு மட்டுமே அரசின் வேலைவாய்ப்பில் இடம் கொடுக்கப்பட வேண்டும்.
    3. நாட்டில் உள்ள நிலம் முழுவதும் ஒரு சில ஆதிக்க சாதிகளிடம் அடைபட்டு உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் நில உச்ச வரம்பு கொண்டுவந்து, எல்லா சாதிக்கும் போதிய சதவீதம் பிரித்து வழங்க வேண்டும்.
    4. ஆண், பெண் . என்ற பாகுபாடோ, என்ன சாதி என்ற பாகுபாடோ இல்லாமல் , அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு செய்து , அர்ச்சனை அபிசேகம், திருவிழா சடங்குகள் அனைத்திலும் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். பெண்களுக்கு இடம் கொடுக்க மறுக்கும் மசூதிகள், சர்ச்சுகள், கோயில்கள் ஆகியவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அரசும் அவற்றை தடை செய்ய வேண்டும்.

    மேலே கூறியவற்றை செய்தால், உண்மையான சமத்துவம் உண்டாகும். பல பிரச்சினைகள் தீரும். ஆனால் திமுக , திக போன்ற மோசடி இயக்கங்களும், சாதி சங்கங்களும் மண்டையை போட்டுவிடும். எனவே இந்த தீய இயக்கங்கள் தான் உண்மையான சீர்திருத்தங்களை எதிர்ப்பார்கள்.

  37. ராமன் அவர்களே

    //
    “…சித்திரமும் பார்ப்பானும் சேர் படமும் ஆரொளியும் அத்தனையும் தானாம் அவன்” என்று சொல்லப்படுவதில், “அத்தனையும் தானாம் அவன்” என்பதை அனுபவத்தில் உணர்வது ஞானம். அதை உணர இயலாது இருப்பவன்,
    எத்தனை இருக்கிறதோ அத்தனையையும் பார்த்துக்கொண்டுதான் இருப்பான். அது உலகியல் நியதி. ராமாயணமும் அந்த உலகத்தைச் சேர்ந்ததுதான். அதனாலேயே அத்தனையும் இருக்கின்றன. மேலும் வரலாம்.
    //

    இந்து திருக் திருஷி வாதம் எல்லாம் பல தரவை கேட்டு நானும் மனப்பாடம் பண்ணிவிட்டேன். இதை பத்தி ஒரு எழுவத்தி நாலு ஸ்லோகம் எழுதி இருக்கிறார் சுரேஸ்வரர். நீங்கள் ஒரு உதாரணம் தான் சொன்னீர்கள் நீங்கள் சொன்னதையும் சேர்த்து சுரேஸ்வரர் ஒரு அம்பது திருஷ்டாந்தமாவது தந்திருக்கிறார்.

    திருஷி இல்லாமல் எதுவுமே இல்லை. வெறும் பார்ப்பது மட்டும் தான் இருக்கிறதென்றால் நீங்கள் சொல்வதை நான் ஏன் கேட்கணும். இது உங்களது அந்தகரனத்தில் இருந்து தானே உதித்தது. அல்லது இதை ஆத்மா சொல்லிற்றா. யாருமே இல்லாத பொது ஆத்மா யாருக்கு சொல்லும். இதை சொன்னது அந்தக்கரனமெனில் அது ஜடமில்லையோ. ஆத்மா தான் அந்தகரனத்தை சொல்ல வைத்ததேனில் அப்போ ஆத்மா அன்டகரனத்தை பார்த்து கொண்டுதானே இருக்கிறது திருக் திருஷி வந்தாச்சு.

    படமிருக்கு பார்பவனும் இருக்கிறான்.

    ராமாயணம் உலகியல் எனில் நீங்கள் சொன்ன படம், பார்பவனும் உலகியல் தானே. யாருக்கு இதை சொல்கிறீர்கள்? உலகம் கடந்த ஆத்மாவிர்க்கா? அட அவர் தான் சர்வஞனாச்சே? இல்லை புத்திக்கா? அட அது தான் ஜடமாச்சே? தயவு செய்து உபாதிக்குன்னு சொல்ல வேண்டாம். அதை புரிந்து கொள்வதை விட அஞானமே மேல்.

    ஞானம் ஒருவர் அடைந்துவிட்டால் அவர் எதையுமே பார்ப்பதில்லை சித்திரமே இல்லை என்பதால். அப்படி இருக்க யாருக்கு போதனை செய்கிறோம் வெற்று இடத்திற்க்கா. அப்படி செய்யக் கூடாது (தண்ணிரை வெறுமனே தடியால் அடித்து கொண்டிருக்கக் கூடாது) என்று சாஸ்திரம் சொல்கிறது. அல்லது தனக்கா? ஞானம் வந்த பிறகு தனக்கே உபதேசம் எதற்கு. ஞானம் வந்தாச்சுன்னா உபகரணங்கள் எல்லாம் போகிடுமே (இந்த்ரியங்கள், மனஸ் எல்லாம் போகிவிடும்) இந்திரியங்கள் இல்லாமல் எதை தெரிந்து கொள்ள முடியும்?

    இதற்கும் பௌததத்திர்க்கும் என்ன வேறுபாடு. மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று. மாறவே மாரம தேமேன்னு இருக்கும் ஒன்று. ரெண்டுமே ஒன்று தான்.

  38. சிவஸ்ரீ அவர்களே

    //
    அத்வைதத்தில் இரண்டு நிலை சாத்தியம் இல்லை. ஆனால் நமக்கு நம்முடைய விழிப்பு
    //
    அத்வைதத்தில் இல்லை இரண்டு நிலை. அத்வைதத்தை விளக்க இரண்டு நிலை. மற்றபடி இந்த ஜீவன் முக்தர் விஷயத்தில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. ஜீவன் முக்தாரின் லக்ஷணம் என்ன என்று எனக்கு தெரியாது. அதை எல்லாம் விடுவோம்.

    விஷயம் அத்வைதத்தில் அவதாரங்களை ஒப்புக் கொள்ள முடியுமா இல்லையா என்று தான். முடியும் அப்படி கொள்வதில் தோஷமில்லை.

  39. திரு.சாரங் அவர்களின்,

    1. “இந்த திருக் திருஷி வாதம் எல்லாம் பல தரவை கேட்டு நானும் மனப்பாடம் பண்ணிவிட்டேன்….”
    மனப்பாடம் என்பது ஆரம்பம்தான். மனமே பாடமாவதுதான் முடிவு. உங்கள் வழியில் மேலும் போய்ப் பாருங்கள்; புரியவரும். எதற்கும் அவசரம் இல்லை.

    2..”…ராமாயணம் உலகியல் எனில் நீங்கள் சொன்ன படம், பார்பவனும் உலகியல் தானே. யாருக்கு இதை சொல்கிறீர்கள்? …
    பார்ப்பவன் தான் உலகில் இருக்கிறேன் என்று எண்ணுபவனுக்கு. உலகம் தன்னில் இருக்கிறது என்பவனுக்கு அல்ல.

  40. ராமன் அவர்களே

    //
    மனப்பாடம் என்பது ஆரம்பம்தான். மனமே பாடமாவதுதான் முடிவு. உங்கள் வழியில் மேலும் போய்ப் பாருங்கள்; புரியவரும். எதற்கும் அவசரம் இல்லை.
    //

    இதை தான் நீங்கள் சொல்வீர்கள் என்று தெரிந்தே மனப்பாடம் செய்தேன் என்று சொன்னேன். அது அதற்கு மட்டுமே பயன்.

    நான் தான் திரிக், திருஷ்யம் இல்லை என்று நினைத்து கொண்டே இருந்தால் கொஞ்ச நாள் கழித்து அதுவே உண்மையோ என்று தோன்றும் விசாரம் செய்தால் சாதக பாதகங்கள் தெரியவரும்.

    //
    பார்ப்பவன் தான் உலகில் இருக்கிறேன் என்று எண்ணுபவனுக்கு. உலகம் தன்னில் இருக்கிறது என்பவனுக்கு அல்ல.
    //

    அப்படியே புத்தகப் பேச்சு. இது அனுபவத்தில் சாத்தியம் இல்லை. அனுபவம் இருந்தால் நீங்கள் எனக்கு இதை சொல்லிக்கொண்டு இருக்க முடியாது.

    இதை பூரணமாக அனுபவிக்காமல் அதாவது ஒரு ஐம்பது விழுக்காடு மட்டும் அனுபவிக்க முடியாது. ஏன் என்றால் அஞானத்தை அளவிட முடியாது. ஞானம் வந்தது என்று வந்தவருக்கு மட்டும் தான் தெரியும் என்று சொல்கிறார்கள். ஞானத்தை அளவிட முடியாது. தத்வமசியில் ஒரு இருவது விழுக்காடு அனுபவித்தேன் என்று சொல்ல முடியுமா என்ன. ஆதலால் இதில் பிரயாநித்துப் பார் நான் பிரயாநித்திதிருக்கிறேன் என்று சொல்லுவது ஒரு உப்தேசமில்லை.

    இது ஒரு மனத்தளவு கொள்கை மட்டுமே. இதை தீர விசாரித்தால் புரியும். இன்று வரைக்கும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமலேயே திருப்பி திருப்பி எல்லாம் பொய் எல்லாம் பொய் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம். இதை சங்கரர் ச்பஷ்டாமாக முன் வைக்க வில்லை என்பதை அறிவோமாக. இது பின்னால் வந்த கொள்கைகள். இதை விசாரிக்காமல் நம்புவது தான் வினையே.

    கொஞ்சம் பௌத்தமும் நாம் படிக்க வேண்டும்.. அப்பொழுதான் விளங்கும் அட இது அப்படியே பௌத்தத்துக்கு வேதத்தை பிரமாணமாக கட்டும் செயல் என்று.

    இப்படி பேசிக் கொண்டே இருக்காமல். முன் கேட்ட கேள்விகளுக்கு பதில் தரலாமே இல்லது உங்கள் பக்ஷம் என்பதை முன் வைக்க நல்ல யுக்திகளை முன் வைக்கலாமே. எனக்கு ஸ்லோகங்கள் வேண்டாம். மேற்கோள்கள் வேண்டாம். உலகம் உன்னில் தான் இருக்கிறது என்று அறியும் மட்டும் நீங எதை அறிய மாட்டாய் என்பது போன்ற அகண்டார்தங்கள் வேண்டாம். கடாகாஷம் என்பதை எல்லாம் கேட்டாச்சு அதை விசாரித்து அதை பூர்வ பக்ஷமாக வைத்தச்சு.

    முன் கேட்ட கேள்விக்கும் சேர்த்து இதுக்கும் பதில் தரலாமே. ஒரே ஆத்மாவேனில். இந்த கேள்விக்கு பதில் தாருங்கள். நன்று தூங்கி எழுந்த பிறகு நான் தூங்கினேன் என்று எப்படி ஞானம் வருகிறது. அது ஷுஷுபதி நிலை அல்லவா அங்கே மனது இல்லை அல்லவா. மனது இல்லாவிடில் எல்லா ஆத்மாவும் ஒரே ஆத்மாவாக தெரியும் அல்லவா (இதை தான் நீங்கள் ஜீவன் முக்த நிலை என்கிறீர்கள்). அப்படி ஒரே ஆத்மா இருக்கும் பொழுது நான் மட்டும் நன்கு தூங்கினேன் என்று அறிவு எப்படி வருகிறது. பக்கத்து வீட்டுக்காரன் தூங்கினது ஏன் தெரிவதில்லை. இல்லை முழித்த பிறகு மனது வந்துவிட்டது பக்கத்து வீட்டுக்காரன் தூங்கியத்தை மறைத்து விட்டது என்பதா? அப்படி என்றால் தான் தூங்காது மட்டும் ஏன் மறைக்கபடவில்லை.

    அதெல்லாம் சரி. இங்கு இறுபதேல்லாம் பொய் பார்ப்பவன் ஒருவனே இருக்கிறான் என்று நீங்கள் எப்படி தெரிந்து கொண்டீர்கள்? இல்லை உங்களுக்கு சொன்னவரோ அவருக்கு சொன்னவரோ எப்படி தெரிந்து கொண்டார்?

    கண்ணுலயும் கிட்நீளையும் இருப்பது ஒரே DNA தான் ஆனா கண்ணு பார்க்கிறது கிட்னி சுத்தம் பன்னுதுன்னா ஆச்சர்யமா இல்லை. அதற்க்கு எப்படி ஞானம் வந்தது. அங்கனையும் ஞானம் இருக்கு என்று இன்றைய விஞானிகள் கண்டிபிடிச்சுட்டாங்க. இந்த கண்ணு பரிணாமம் அடைந்த கடைய படிச்சாலே நமக்கு எல்லாம் புரிந்திடும். பார்ப்பது இருக்கிறது பார்கப்படுவதும் இருக்கிறது என்று.

  41. திரு. சாரங் அவர்களது,
    “…பிறகு நான் தூங்கினேன் என்று எப்படி ஞானம் வருகிறது. ” மற்றும்
    “…எல்லா ஆத்மாவும் ஒரே ஆத்மாவாக தெரியும் அல்லவா (இதை தான் நீங்கள் ஜீவன் முக்த நிலை என்கிறீர்கள்).” இவை இரண்டுமே உங்கள் புரிதலை எனக்கு வெளிப்படுத்துகிறது. போதாக்குறைக்கு, உங்கள்
    “..கண்ணு பார்க்கிறது கிட்னி சுத்தம் பன்னுதுன்னா …” என்பதிலிருந்தும் எனக்குத் தோன்றுவதைச் சொல்கிறேன். எது உங்களுக்குச் சௌகரியமோ அப்படிச் செய்து கொள்ளுங்கள். தங்களது உடனடித் தேவை ஓர் ஆன்மிகக் குரு. அவரிடம் நேருக்கு நேர் இருந்து பணிவிடை செய்து மேலும் முன்னேற முயற்சி செய்யுங்கள். தங்கள் மறுமொழிகளுக்கு மிக்க நன்றி.

  42. மனித இனம் உருவாக்கிய எல்லா மொழிகளும் பல எல்லைகளுக்கு உட்பட்டவை ஆகும்.; எனவே, ஆத்ம அனுபவங்களை ஒரு மொழியின் சொற்களுக்குள் தொகுத்து விளக்குவது என்பது பூரணமாக அமையாது. எனவே தான் கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் என்றனர் நம் முன்னோர். இந்த கருத்தை ஏற்க மறுக்கும் அன்பர்கள் , அவர்களே கண்டுபிடிக்க முயலல் நன்று. முடிந்தால் மற்றவர்களுக்கும் விள்ளலாம். அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளோம்.

  43. திரு ராமன் அவர்களே

    உங்களது புரிதலே சரி என்று இருப்பது எப்படி. பூர்வ பக்ஷமும் கேட்க வேண்டும். தவறான புரிதலே சரி என்று எவ்வளவு காலம் தான் இருந்து கொண்டிருபீர்கள்.

    இந்த கேள்விகலேலாம் பூர்வ பக்ஷ வாதங்கள். சரியான வாதங்களும் தான். நீங்கள் இன்று பேசும் கோட்பாடுகள் தான் உபநிஷ்டத்துகளில் அப்படியே இருக்கிறது என்று நம்பாது? ரொம்ப காலம் இதை யோசித்து யோசித்து தான் வளர்த்தார்கள்.? இன்றும் வளர்ந்து கொண்டு இருக்கிறது.

    ஞான ச்வரோபமான ஒளிமயமான ஒரே சத்துதான் இருக்கிறது அதை விட வேறு இல்லை என்று நீங்கள் கூலும் வாதம் தவறு என்பது இன்றைக்கு எடுபடாது. ஒவ்வொரு இடத்திலும் தனி தனியாக ஞானம் இருக்கிறது என்று இன்று விஞான அளவில் கூட நிரூபணம். பஞ்சாக்னி வித்யாவை மறுபடியும் புரட்டிப்பார்த்தால் இது விளங்கும்.

    இன்றும் தத்துவங்கள் சதச்களில் நன்கு வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதை நாம் தெரிந்து கொள்ளலாமே.

    ஸ்ரீ ராமனை பற்றி இப்படி எழுதும் நீங்கள் அல்லவா பூரண ஷர்ட்டயுடன் குரு சேவை செய்து மீள வேண்டும். ஆகா முதில் பக்தியை வளர்த்துக் கொள்ளலாமே. உபசானா என்பது முக்கியம்?

    மற்றபடி கேள்விகளுக்கு பதில் மட்டும் இல்லை. நான் கேட்டதெல்லாம் எனது உள்ளத்தில் தோன்றிய கேள்விகள் மட்டும் இல்லை. இரளவில் சதச்களிலும் பாடசாலைகளிலும் கேட்கப்படுவன.

  44. திரு ராமன் அவர்களே,

    // எனக்குத் தோன்றுவதைச் சொல்கிறேன். எது உங்களுக்குச் சௌகரியமோ அப்படிச் செய்து கொள்ளுங்கள். தங்களது உடனடித் தேவை ஓர் ஆன்மிகக் குரு. அவரிடம் நேருக்கு நேர் இருந்து பணிவிடை செய்து மேலும் முன்னேற முயற்சி செய்யுங்கள். தங்கள் மறுமொழிகளுக்கு மிக்க நன்றி. //

    உங்கள் தரப்பில் சாரம் இல்லை என்றால் இப்படியும் சொல்லித் தப்பிக்க வழி இருக்கிறது போல!

    முதலில் எல்லாம் தெரிந்தது போல் மேதாவித் தனமாக சிலவற்றை அழுத்தமாகச் சொல்லுவது. அதற்கு மறு கேள்வி கேட்டால், வேறு சிலவற்றைச் சொல்லி விவாதத்தில் மாட்டிக்கொள்வது. வசமாக மாட்டிக்கொண்ட பிறகு, “உனக்கு அனுபவம் போதாது”, “உனக்குத் தேவை ஒரு குரு” என்றெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆவது.

    இன்றைய நாளில், வயதில் பெரியவர்கள் அனைவரும் கிட்டத் தட்ட இப்படி எல்லாவற்றையும் dilute செய்வதால் தான் என்னுடைய சம வயதினராகிய இளம் தலைமுறையினர் ஸ்வாத்யாயம், பக்தி, அனுஷ்டானம், பகவத்/பாகவத/ஆசார்ய சேவை, கிரந்த சம்ரக்ஷணம் என்று எதிலுமே நாட்டம் இல்லாமல் மனம் போன படி அலைகின்றனர்.

    இந்து மதத்தில் சுதந்திரம் இருக்கிறது. அதற்காக, “நீ எதை வேண்டுமானாலும் செய், உன் வழியில் போ” என்பது உயர்ந்த உபதேசமாகுமா? அப்படி எல்லாம் சொல்வதால் தான் அவன் அவன் கண்ட வழியில் இருக்கிறான் இன்றைக்கு.

    யார் குரு? வரலாறு எனும் உரைக்கல்லில் தேய்த்துப் பார்க்கையில் ஓர் ஆயிரமாண்டாவது சற்றும் துண்டிப்பு இல்லாமல், ஒரு சம்பிரதாயத்தைப் பயிர் போல வளர்க்கும் வழியில் வந்தவரே குருவென்று கூறப்படுவதற்குத் தகுதியுடையவர். அப்படி இன்றி சமீபத்தில் 50 அல்லது 100 அல்லது 200 ஆண்டுகளுக்குள் புதிதாக முளைத்து,

    முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
    பின் ஓர்ந்து தாம் அதனைப் பேசாதே – தம் நெஞ்சில்
    தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேச வரவு
    ஆற்றது என்பார் மூர்க்கர் அவர்!

  45. திரு ராமன் அவர்களே அந்த ஸ்ரீ ராமனை பரம்பொருள் தான் என்பது போல் முன்னரே நிறைய இடத்தில் காண்பித்துள்ளார். உதாரணத்திற்கு இத்தொடரின் 24வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது:
    //… அப⁴யம்ʼ ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யேதத்³ வ்ரதம்ʼ மம || 6.18.35 ||

    ஸர்வபூ⁴தேப்⁴ய: அனைத்து ஜீவராசிகளுக்கும்,
    அப⁴யம்ʼ த³தா³மி, அபயம் அளிக்கிறேன்
    ஏதத் இது
    மம, எனது
    வ்ரதம் விரதம்.

    எவர் என்னை அண்டி வருகிறார்களோ அவர்களுக்கு நான் அபயம் அளிப்பேன். என்னை அடைந்தபின் அவர்களுக்கு எந்த வித பயமும் வேண்டாம். இது என்னுடைய கொள்கை.

    இந்த வரிகள் மூலம் இராமரின் தெய்வீக அம்சத்தை வால்மீகி எல்லோருக்கும் உணரவைக்கிறார். இது இறைவனால் அனைவருக்குமே கொடுக்கப்பட்டுள்ள உறுதி. தான் பாவியோ, அல்லது அதற்குத் தேவையான அளவு புண்ணியம் செய்யவில்லையோ என்று எவரும் நினைக்க வேண்டாம். அவனிடம் பரிபூரண சரணாகதி என்ற ஒன்றுதான் தேவை. சரணடைந்தபின் அவர்களுக்கு எந்தவித பயமும் தேவையில்லை. அபயம் அடைந்தவர்கள் எல்லாவித அச்சத்தினின்றும் விடுபடுகிறார்கள் என்பதும் ஆனந்தமாய் இருக்கிறார்கள் என்பதும் ஒன்றே என்று தைத்ரிய உபநிஷத்தும் இவ்வாறு கூறுகிறது:

    யதோ வாசோ நிவர்த்தந்தே | அப்ராப்ய மனஸா ஸஹ |
    ஆனந்தம் ப்ரம்ஹணோ வித்வான் | ந பிபேதி கதாசனேதி | (IV)

    இறைவனை அடைவது என்பது சொற்களால் வர்ணிக்க முடியாத, மனதாலும் கற்பனை செய்ய முடியாத, உள்ளத்தால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடிந்த என்றும் ஆனந்தமாய் இருக்கும் நிலை என்பதை அறிஞர்கள் அறிவார்கள். அந்த ஆனந்த நிலையில் எதனிடத்தும், எதனாலும் அச்சம் என்பதே இருக்காது என்பதே அதன் பொருள். எப்படி ராமராஜ்யத்தில் எல்லாமே உண்மை என்பதால் பொய் என்பதே இல்லாது போகிறதோ, அதேபோல ஆனந்த நிலையில் எந்தப் பொருளும் பரம்பொருள் ஆகிவிடுவதால், வேறு என்பதே இல்லாததாகி அச்சம் என்பதும் இல்லாது போகிறது.//

    இவ்வாறு மேற்கூறிய படி விளக்கி எழுதியுள்ள திரு. ராமன் அவர்கள், இந்த அத்தியாயத்தின் ஒரு மறுமொழியில் “நான் கேள்விப்பட்டவரை வால்மீகி முனிவர் இராமனை மனிதனாகக் காட்டியதும் அல்லாமல், அந்தக் காலத்தைய வழிமுறைகளையும் சரியாக விவரித்துள்ளார். பின் வந்தவர்கள் அவரைத் தெய்வமாகவும் ஆக்கி, அந்தந்தக் காலத்தின் மற்றும் இடத்தின் விசேஷங்களையும் புகுத்தியுள்ளனர்.” என்று முன்னுக்குப் பின் முரணாகக் கூறியுள்ளது இடிக்கிறது. ராமனை கடவுள் என்று கருதி இந்தத் தொடர் எழுதப் பட்டிருப்பின், துவக்கத்திலிருந்தே அது நியாயப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். மனிதனாக பாவித்து அல்லது மனிதன் என்பதற்கு அவர் இப்போது காண்பிக்கும் உதாரணங்களை வைத்து எழுதப்பட்டிருப்பின், மனிதன் என்பதை இப்போது வரை நியாயப் படுத்தி இருக்க வேண்டும். இத்தொடரின் ஆசிரியர் எதை பின்பற்றுகிறார் என்பது நமக்கு விளக்கப் பட வேண்டியது அவசியமாகிறது, ராமன் அவரைப் பொறுத்த வரை மனிதரா? அல்லது கடவுளா? அதை தெளிவுபடுத்த வேண்டியது அவரின் கடமை. அதிலே அவருக்கே சந்தேகங்கள் இருப்பின், நாம் அவர் எழுதுவதையெல்லாம் எப்படிக் கணக்கில் எடுத்துக் கொள்வது? நமக்குக் கேட்க உரிமை உள்ளது. நாம் வாசகர்கள் அல்லவா?

  46. ராமன் அவதாரம் என்பது ராமாயணத்தின் பல இடங்களில் பளிச்சென்று நேரடியாகவே வால்மீகி முனிவர் தெரிய படுத்துவது.

    ஆரண்ய காண்டத்தில் சரபங்க ரிஷியின் ஆசிரமத்திற்கு அருகில் ராம -லக்ஷ்மண-சீதை செல்லும் பொது இந்த்ரனை பார்கிறார்கள். இந்திரன் அவதார நோக்கத்தை பற்றி முனிவரிடம் சொல்லி செல்கிறான்.

    ராமனை தரிசனம் செய்த பின் [ அதற்கென்றே காத்திருந்தது போல] அந்த ரிஷி தீப்புகுந்து புதிய உடலை [ சற்று முன் ராமன் இந்த்ரனைக்கண்டு விவரித்த என்றும் இளமையான தேவ ரூபம் போன்று] ப்பெற்று அவர் பிரம்ம லோகம் செல்கிறார் .

    இதில் இரண்டு விஷன்யங்கள் என் கண்ணில் பட்டன.

    1. ராமன் ராவணை நோக்கி செல்ல வேண்டியது தவிர்க்க முடியாத விதி என்பதாக முனிவர் , தேவர் , ஏன் சாப விமோசனம் அடைந்த ராஷசர்கள் எல்லாரும் அவரை ராவணன் திசை நோக்கி நகர்த்துகிறார்கள். இந்திர விமானம் வாசல் நின்ற போதும் தசரதன் மகனை காண்பதில் சரபான்கர் ஆவலாய் இருக்கிறார்.

    2. பின் யோகத் தீயில் தன மனித உடலை உகுக்கிரார். பின் தெய்வ வடிவம் பெறுகிறார் .இப்போதெலாம் தீக்குளிப்பது என்பது வேறு. இது வேறு. பின்னது யோக நிலை அடைந்தோர் செய்வது .

    சபரியின் நிலையம் இங்ஙனமே . ராமனைக் கண்டு தான் ஜன்ம சாபல்யம் அடைந்ததாக கூறும் சபரி யோகத்தீயில் உடலை உகுக்கிறார்

    வனம் வந்ததும் பெற்றோரைபற்றிய கவலையில் தம்பியை அயோத்தி திரும்ப சொல்லும் ராமனை பற்றி திரு எஸ். ராமன் சொல்கிறார்..

    “ராமன் வயதான பெற்றோரை விட தன வறட்டு கொள்கையே பெரிது என்று காட்டிற்கு சென்றவன்”என்று கூட குற்றம் சொல்பவர்கள் உண்டு. எப்படியும் சொல்லலாமே ?

    அவன் பெற்றோரை எண்ணி கலங்கும் கட்டம் பற்றிப்படிக்கும் போது மனம் நெகிழவே செய்கிறது.

    அப்போதும் தான் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று நினைக்கவில்லையே! அது தான் ராமன்.

    தசரதன் நிலை பற்றிப் பேசும் போது —உலகில் காமம் -விருப்பம் என்பது மனிதர்களை எப்படி ஆட்டி வைக்கிறது என்று கீதையிலும் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறாரே.

    பாத்திரங்கள் செய்யும் வாத பிரதிவாதங்கள் எல்லாம் தர்மத்தின் நுண்மையை நமக்கு எடுத்துக் காட்டவே.

    மனிதன் போல் புலம்புகிறாரே என்றால் வராகமாய் வந்த போது வராகம் செய்வது போல் செய்தார். நர சிங்கமாய் வந்த போது கர்ஜனை செய்தார். மனித வேஷம் போட்ட போதும் சாதாரண மனிதர்கள் செய்ய முடியாத பல காரியத்தை செய்கிறார்.

    அந்தந்த பாத்திரம் தாங்கும் பல வேஷககரர் அதற்கேற்றார் போல தானே இருக்க முடியும். எந்த வேஷத்தையும் தர்மத்தை நமக்கு விளக்கவே அணிகிறார்.
    சாய்

  47. திரு பிரசன்ன சுந்தர் அவர்களே

    ராமரை அவர் மனிதனாக மட்டுமே கருதட்டும், அதற்கு அவர் முன்வைக்கும் வாதங்கள் தான் எரிச்சலூட்பாவையாக உள்ளன. சொல்லப்போனால் கீழ்தரமாக உள்ளன. இதெல்லாம் உள்ளார இருக்கும் ஒரு கொள்கை. இதை ரொம்ப வருஷமாக படித்து வருவதால் சிலருக்கு என்ன சொல்லவருகிறார் என்று சட்டென்று புரிகிறது.

    என்ன சொல்கிறார் என்று மட்டும் பார்க்காதே, யார் சொல்கிறார் என்றும் பார்கவேண்டுமல்லவா. அதான் விஷயம். ஸ்ரீராமன் மணிதன் என்பதற்கு கடைசியாக ராமன் அவர்கள் பிட்டு பிட்டாக அங்கிருந்தும் இங்கிருந்தும் தேடி கொடுத்துள்ள விஷயங்களை படித்தால் தெரியவரும் அந்த கொள்கை.

    ராமன் லக்ஷ்மணிடம் புலம்புவதாக சொல்கிறார். அதற்கு சற்று பின்பு பரதன் வரும் போது லக்ஷ்மனின் கோபமும், ராமர் அதை தடுப்பதும், அரியணையை மறுப்பதும் ஒரு கோர்வையாக வருவது போல இருக்கே என்று சிலருக்கு தோணாது. ராமர் ராமனயத்தில் பலருக்கு பரிக்ஷை வைத்துக் கொண்டே இருப்பார் – லக்ஷ்மணன், குஹன், பரதன், சீதை, சபரி, ஜடாயு, சுக்ரீவன், ஹனுமான், விபீஷணன், ராவணன் இப்படி. இதில் நூறு மார்க் வாங்கி பாஸாவது ஹனுமான், பரதன், விபீஷணன் மட்டும் தான்.

    நாமெல்லாம் சுத்த வேதாந்திகள், ஜீவன் முக்தர்கள் அல்லவா. நமக்கு பூர்வ மீமம்சையில் என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    அபிஹித அன்வய வாதம், அன்வித அபிதான வாதம்னு ஒரு வாக்யத்திற்கு எப்படி பொருள் புரிஞ்சிக்கணும்னு வழி முறைகள். பதங்கள் சேர்ந்து ஒரு வாக்யத்திற்கு பொருள் தரும் என்று நினைத்தால் LKG பூக்குள மட்டும் தான் அப்படி இருக்கும். எந்த சாஸ்திரம் தொட்டாலும் இந்த கிரமங்களின் மூலமாக படித்தா தான் அர்த்தம் கிடைக்கும். நாம் இந்த கிராமங்களை தத்வமசி பொருள் கொள்ள மட்டும் எடுத்துப்போம். ராமாயணத்தில் அதை விட்டு விடுவோம். நம்ம யார் கேள்வி கேட்பது?

    ஒரு எஜ்ஜாம்ப்லே பாடுங்களேன்.

    அம்மா: சாப்ட வாயேன் டா
    பைய்யன்: இன்னிக்கு நாய்க்கு சாப்பாடு வெய்யேன்

    கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தம் இருக்கா. பய்யன் சொல்றதுக்கு என்ன அர்த்தம், பதம் தரும் அர்த்தங்களா?

    ஆதலால் என்ன சொல்லப்பட்டது என்பதை விட யார் சொன்னார் என்பது ரொம்ப முக்கியம்.

    பாருங்களேன், ஒரு அழகான மனைவியை கொண்ட இளவரசர், அப்பா சொன்னார் என்பதற்காக காடு செல்வேன் என்பாராம் மகா துயரம் ஏற்பேன், எதையும் தாங்குவேன் என்பாராம் (காட்டுக்கு போறதென்னவோ இன்றைக்குள்ள டிஸ்கவரி சானல் பார்க்கிற மாதிரி இல்ல) . இப்படி பட்ட மன வலிமை கொண்ட ஒரு மகா புருஷர் அல்பமாக பொலம்புகிராராம் அதுவும் தம்பியிடம் 🙂 எப்படி பொருந்துகிறது பார்த்தீர்களா.

    இப்படி வெறும் பத அர்த்தம் படித்தால் ராமாயணம் புரியாதுன்னேன். அதுக்கெல்லாம்

    படி கொண்ட கோவில் ராமயனமென்னும் பக்தி வெள்ளம் நெஞ்சில் குடி கொண்ட …- அமுதனார்.

    இன்னிக்கு மார்கெட்ல நிக்கனும்ன ஏதாவது வித்யாசமா சொல்லணும். இப்படி அமுதனார் சொல்மாரிதான் ராமாயண பக்தி ஸ்ரட்டயோட படிக்கணும்னு ஏதாவது நியமமா என்ன. பார்ப்பவர் ஒருவரே இருக்கும் பொழுது நியமிக்க வேறு யார் இருக்கமுடியும். நமது இழ்டம் போல ஏதாவது ஒரு தலைப்பை யோசித்து அதற்கு ஏற்றார் போல ராமாயணத்தை வளைக்கலாம்.

    அதற்கு பின்னால் எப்படியும் பேசுவதற்கு சௌகர்யமாக இருப்பது இந்த திருக் திருஷி வாதம். இதே வாதத்தை எல்லா தேவதாக்களுக்கும் பொருத்திப் பார்க்க சொல்லுங்கள் அது மட்டும் நடக்காது. ஸ்ரீ ராமான் பாவம் அவர் ஒரு சாது கடவுள்.
    இந்த திருக் திருஷி வாதத்தை பெரிதாக முன்வைத்த சுரேஸ்வரர் ஒரு மஹா பக்தர் என்று சொல்லி முடிச்சுக்கிறேன்.

  48. சாய் அவர்களே

    //
    ராமன் அவதாரம் என்பது ராமாயணத்தின் பல இடங்களில் பளிச்சென்று நேரடியாகவே வால்மீகி முனிவர் தெரிய படுத்துவது.

    ஆரண்ய காண்டத்தில் சரபங்க ரிஷியின் ஆசிரமத்திற்கு அருகில் ராம -லக்ஷ்மண-சீதை செல்லும் பொது இந்த்ரனை பார்கிறார்கள். இந்திரன் அவதார நோக்கத்தை பற்றி முனிவரிடம் சொல்லி செல்கிறான்.
    //

    இதெல்லாம் பின்னால் வந்த புல்லுருவிகள் இந்த திருக் திருஷி வாதம் புரியாமல் ராமாயணத்தில் சேர்த்து வைத்தது சார். இன்னைக்கு சங்கமம் கண்ட எங்கள் கனிமொழி என்றெல்லாம் பாட புத்தகத்தில் சேக்கறது கிடையாதா அவ்வண்ணமே?

    ராமாயணம் வெறும் நூறு சுலோகம் தான் சார். ராமர் பொறக்கறது, சீதையை மன்னபது, காட்டுக்கு போறது அங்கங்க பொலம்பறது, தப்புக்கள் செய்வது இப்படி.

    இவைகளை தவிர பாக்கி ஸ்லோகங்கள் எல்லாம் கீ பீ ஏழாவது நூற்றாண்டில் சேர்க்கப்பட்டவை.

    இல்லை ராமன் கடவுள் தான் என்று நீங்கள் நம்பினால் நம்பிக் கொள்ளுங்கள் அது உங்கள் இஷ்டம் உங்கள் சௌகர்யம். எல்லரௌக்கும் அப்படி இருக்க உரிமை இருக்கிறது. என்னாதான் திருஷி இல்லை என்றாலும், எல்லாருக்கும் தனி தனியா மனசிருக்கில்லையா.

  49. அன்பார்ந்த ஸ்ரீமான் கந்தர்வன் மற்றும் ஸ்ரீமான் சாரங்க் அவர்களுக்கு

    அன்னஸ்ய க்ஷுதிதம் பாத்ரம் – பசித்திருப்பவருக்கு உணவிடு என்பது வசனம்.

    விவாதம் என்பது கிட்டத்தட்ட சரி சமானமான பாஷா மற்றும் சாஸ்த்ர ஞானமுள்ளவரிடையே மட்டிலும் சாத்யம். அதுவும் இருவரும் அது போன்றதொரு விவாதத்தில் நாட்டமுடன் விவாதிக்க முனைவதில் மட்டிலும் சாத்யமாகும். அது போன்றதொரு விவாதம் அல்பச்ருதர்களும் விஷயங்களை சரியான படிக்கு க்ரஹிக்க ஹேதுவாகும்.ஒரு பக்ஷத்தில் இருந்து விவாதத்தில் விருப்பமின்மையை வெளிப்படுத்திய பின்னரும் விவாதிக்க விழைவது என்பது வ்யர்த்தம் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

    ஆனால் தவறான ஒரு கருத்தை துலக்குதல் என்பது மிகவும் அவசியம்.

    ராமாயண பாகவதாதி க்ரந்தங்களுக்கு சான்றோர்களான பெரியோர் சொன்னபடிக்கு பொருள் அறிந்து கொள்ளல் என்பதே முறையாகும் என்ற கருத்தில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பெரியோர்கள் சொன்ன கருத்துக்கு மாறாக ஒரு கருத்து முன்வைக்கப்படில் பூர்வ பக்ஷமான மாற்றுக்கருத்தில் உள்ள தோஷத்தையும் பெரியோர் கருத்தில் உள்ள நிறைவையும் விளக்குதல் என்பது விஷயத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்குதல் ஆகிடுமே. அது எல்லோருக்கும் பயன் அளிக்குமே.

    அங்கொன்று இங்கொன்றாக ஓரிரண்டு ச்லோகங்களை வாசித்து நமக்குத் தோன்றியபடிக்கு க்ரந்தங்களைப் புரிந்து கொள்ள விழைதல் ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது என்பது உண்மையே.

    இங்கு நெடுக நடந்து வரும் விவாதத்தில் எனக்குக் குழப்பம் தருவது இரண்டு விஷயங்கள்.

    ஒன்று. பகவதவதாரமான ஸ்ரீ ராம பிரானை நரனாக பாவிப்பது சரியா?

    வால்மீகி ராமனை நரனாக மட்டிலும் காண்பிக்கிறார்; ஆயின் பின்னால் வந்தவர்கள் ராமனை தெய்வமாக ஆக்கிவிட்டார்கள் என்பது பிழையான கருத்து என்பது வால்மீகி ராமாயணம் வாசித்தவர்கள் மற்றும் கேட்டவர்களால் புரிந்து கொள்ள முடிந்த விஷயம்.

    ராமனை நாயகனாக, அண்ணனாக, மகனாக, சத்ருவாக, அரசனாக, ஸ்வாமியாக என பல பாத்ரங்கள் ராமாயணம் முழுதிலும் நெடுக அனுபவித்து வருகின்றனர். வாசிப்பவர்களுக்கும் கூட கதாவாசனத்தில் ஏதேனும் ஒரு பாவத்தில் மூழ்கி குரு க்ருபையால் க்ஷணமாத்ரமேனும் புளகமோ கத்கதமோ கிடைத்தால் பாக்யம் தானே.

    தாங்கள் சொல்ல வருவது என்ன. ராமபிரானை சர்வசரண்யனான ஸ்வாமி என்று புரிந்துகொள்ளல் மட்டிலும் தான் க்ரந்த கர்த்தாவான முனிசிம்மமான வால்மீகி மற்றும் வ்யாக்யாதாக்களின் உத்தேசம் என்பதா? மற்ற பாவங்கள் (bhava) (சர்வசரண்யனான ஸ்வாமியை நரனாக பாவிப்பதால்) பாவுகனை உத்தரிக்காது என்பதா?

    இரண்டு. ஸ்வாமியான ராமனை நரனாக பாவிப்பது மட்டிலும் ஒரு குற்றம் என்பது போதாதென குறையொன்றுமிலா கோவிந்தன் பால் குறைகளை ஆரோபணம் செய்வது அடுக்கடுக்காக குற்றம் செய்வது என்பதாகி விடுமா என்பது?

    bhava பூர்வமாக பக்தர்கள் பகவானிடம் லீலையின் அங்கமாக குறைகாண்பது என்பது வேறு; ஆயின் அறிவு பூர்வமாக நிஷ்களங்கமான பரம்பொருள் பால் குறை காண்பது தவறு ( அது சாரமற்றது மற்றும் உண்மைக்குப் புறம்பானது )என்பது தானே தாங்கள் சொல்ல வருவது?

    மாதவர்க்கதிபாதகமாகக் கடவேனல்லன். தவறாக ஏதும் சொல்லியிருந்தால் பிழை துலக்கவும்.

  50. இராமன் மனித உருவில் வந்த மஹாவிஷ்ணுவே. ஆனால் அவர் கிருஷ்ண பரமாத்மாவைப்போல , சுதர்சன சக்கரத்தை ஒரு போதும் எடுக்க வில்லை. கிருஷ்ணாவதாரம் ஒரு பூர்ண அவதாரம் என்றும் ராம அவதாரம் சிறிது வித்தியாசமானது என்றும் இஸ்கான் பிரசுரங்கள் தெரிவிக்கின்றன. எங்களைப்பொறுத்தவரை இராமனும், கிருஷ்ணனும், மகாவிஷ்ணுவும், இன்னும் பாக்கி இருக்கும் அனைத்து இறைத்திரு உருவங்களும் ஒன்றே. இவற்றுள் உயர்வு தாழ்வு கற்பிப்பது தேவை அற்றது. ஏனெனில் ஒரே பரம்பொருள் தான் பல வடிவங்களிலும் காட்சி தருகிறது.

    மனித வாழ்வுக்கு மிகவும் தேவைப்படும் முக்கியமான இரண்டு விஷயங்களை இராமாயணம் நமக்கு தருகிறது.

    1. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.

    2. ஒருவனுக்கு ஒருத்தி மட்டுமே என்ற மிக உயர் பண்பு.

    3. சார்வாக மகரிஷிக்கு இராம பிரான் கொடுத்த சூடு , மறக்கவே முடியாது. அது ஒரு அற்புதமான பகுதி. திரும்ப திரும்ப படிக்க வேண்டிய, ஒரு அமிர்தம் போன்றது.

    4. இராமாயணம் முழுவதும் ஒரு கற்பனை மட்டுமே என்று கூட சிலர் கருதுகின்றனர். நம்மை பொருத்தவரை அது ஒரு உண்மை நிகழ்ச்சிதான். அதிலிருந்து மனித இனம் கற்க வேண்டிய அற்புத பாடங்கள் ஏராளம்.

    இந்த இனிய தொடர் மேலும் தொடரட்டும். வாசக அன்பர்கள் தங்கள் மாறுபட்ட கருத்துக்களை பகிர்வதால் மேலும் மேலும் சுவை கூடுகிறது.

    புருஷ உத்தமன் இராமன் புகழ் ஓங்குக.

  51. 1. இராமர் படத்தை செருப்பால் அடித்த திகவினர் அதேபோல பிற மதத்தினர் வணங்கும் தெய்வ உருவங்களை செருப்பால் அடிக்கும் துணிச்சல் உண்டா?

    2. பெரியார் திடலில் தூய பரிசுத்த ஆவியை எழுப்பும் விழாக்களை நடத்தும் திகவினர் , வாடகை கிடைக்கிறது என்பதற்காக என்ன தொழில் வேண்டுமானாலும் செய்வார்களா?

    3. இராமசேது பாலம் பற்றி ஒரு தலைவர் இன்றைய செய்தி தாள்களில் , அந்த திட்டம் இந்துக்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது அல்ல என்று சொல்லியுள்ளார். அவரை பொருத்தவரை இராமரின் படத்தை செருப்பால் அடிப்பதும், இராமர் படத்துக்கு செருப்பு மாலை அணிவிப்பதும் கூட, இந்துக்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது அல்ல. சேது சமுத்திர திட்டம் லாபகரமானதும் அல்ல. அது ஒரு தேவை அற்ற காட்டுமிராண்டி திட்டம் என்பது ஏற்கனவே பல அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டு விட்டது. பேச எதுவும் விஷயம் கிடைக்கவில்லை என்றால் திடீரென்று சேது சமுத்திர திட்டம் என்று உளறுவது என்ன நியாயம் ? சமுத்திரத்தில் பல மெட்ரிக் டன் மண்ணை வாரி, கடலிலேயே வேறுபகுதிகளில் கொட்டிவிட்டதாக பொய் கணக்கு எழுதி, மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் கோடிகளை மீண்டும் சுருட்ட திட்டமிடும் அரசியல் வாதிகளை நாம் புறக்கணிப்போம்.

  52. கிருஷ்ணகுமார் அவர்களே

    //
    ஒன்று. பகவதவதாரமான ஸ்ரீ ராம பிரானை நரனாக பாவிப்பது சரியா?
    //

    அப்படி ஒன்றுமில்லை. யார் சொல்லுகிறார் என்பதை பொறுத்து தான் நாம் முடிவு செய்ய வேண்டும். கருணாநிதி சொன்னால் ஒரு அர்த்தம் இருக்கும், பீர் ஜமாலுதீன் சொன்னா ஒரு அர்த்தம் இருக்கும் அல்லவா. கட்டுரையாசிரியர் எந்த அர்த்தத்தில் சொன்ன வந்தார் என்று ஊகிக்க முடிந்ததால் தான் இவ்வளவு மறுமொழிகள். அப்புறம் அவரே அவத்து என்னாம் எது என்று தெளிவுபடுத்திவிட்டார்.

    இரண்டாவது பூர்வாசாரியர்கள் இட்ட படியே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நீங்கள் சொன்ன படியே, நடுவில் உருவி பொதுவில் ஒரு புரிதலை வைப்பது ஆரோக்கியமன்று. அதை மறுத்தால் உனக்கு அறிவு போறாது தம்பி என்பது போன்ற பாவனை.

    அவரை வளுவாக சண்டைக்கு யாரும் கூப்பிடவில்லை. நாம் எப்பொழுதுமே கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பழகுவதில்லை. பூசி மொழுகுவதில் அதிக ஷரத்தை காட்டுவதால் வரும் பிரச்சனை. ராமாயணத்தில் கேள்வி கேட்டால், திருக் திருஷி வாதம் அதனால், திருக் என்றேதுவுமில்லை, ராமாயணமும் இல்லை என்ற வாதம் நேர்மையற்றது. சங்கரர் இப்படியா வாதாடினார். பூர்வ பக்ஷின் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் அவரது நேர்மையான ஷ்ரத்தயான பதில்கள் தானே கொடுக்கிறார். பதில் வரவேண்டுமென்ற அவசியம் இல்லை. கேள்விகள் கேட்கப்படவேண்டும் இல்லையா. அறியாததை தெரிந்து கொள்வதற்காகவோ? அறிந்ததால் எதிர் சொன்னதை மருப்பதர்க்காகவோ?

  53. திரு கிருஷ்ணகுமார் அரவகளுக்கு,

    என்னுடைய மறுமொழிகள் விவாதம் என்ற தளத்திற்கு வெளியே சென்று கண்டனம் என்ற தளத்திற்கு எப்பொழுதோ வந்துவிட்டது.

    “எத்தனை சுலோகம் கொடுத்தாலும் பார்க்கமாட்டேன்; பாரம்பரிய பாஷ்யங்களைப் படித்துத் தெளிய மாட்டேன்” என்பதோடு எதிர்த்தரப்பு நின்றுவிடவில்லை. அதற்கும் மேலாக, மஞ்சள் துண்டுக் காரர் இராமனைக் “குடிகாரன்” என்று கூறும் பாணியில், மிகவும் ஹீனமான உள்நோக்கத்துடன் பரிச்ரமப்பட்டு ஒரு சில வரிகளை உருவி எடுத்துக் காட்டுவது கண்டனத்திற்கு உரியதே – அவர் விவாதம் செய்ய விரும்பினாலும் விரும்பாமல் போனாலும். இத்தகைய அபவாதங்களைக் கேட்டுத் தான் அவனவன் எதிலும் சிரத்தையில்லாமல் இருக்கிறான் இன்றைக்கு. அபவாதங்களை எவர் செய்தாலும், அவர் வேண்டியவரோ வேண்டாதவரொ, கண்டிக்காமல் பார்த்துக்கொண்டு ‘இதெல்லாம் பகவத் சங்கல்பமே’ என்று சும்மா இருப்பது அதர்மம் என்பேன்.

    உங்கள் கேள்விகளுக்கு என் அறிவிற்கெட்டிய பதில்:

    // பகவதவதாரமான ஸ்ரீ ராம பிரானை நரனாக பாவிப்பது சரியா? //

    ‘நரனாக பாவிப்பது’ என்பது பெரியாழ்வார் போல ‘பொங்கும் பரிவால்’, ‘இவனுக்கு ஏதாவது களங்கம் வந்து விடுமோ?’ என்று கலங்கி, அவனுக்குப் பல்லாண்டு பாடுவது என்றால் அது மிகவும் உயர்ந்த பக்தி நிலையே. இராமானுஜர் பெரிய பெருமாளுக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறது என்று அஞ்சி கஷாயம் சமர்ப்பித்திருக்கிறார். ஆனால், இவர்கள் இருவரும் புருஷோத்தமனை வெறும் நரன் என்று பாவித்ததில்லை, அவன் சர்வ ஜகத்துக்கும் ஈச்வரன் என்பதையும் பேசியிருக்கிறார்கள்.

    சக நண்பனைப் போல கிண்டலாகப் பாடியிருப்பதும் அவன் கல்யாண குண அனுபவத்திலேயே. பாவனை என்பது தத்துவக் களத்தில் அல்ல. அனுபவக் களத்தில்.

    இதற்கு மாறாக, எந்த ஆழ்வாரும் ஆச்சாரியாரும் “இராமன் மனிதனே என்று இன்னின்ன வால்மீகி ராமாயண வரிகள் காட்டுகின்றன” என்று தத்துவார்த்தமாக கிரந்தங்களில் எழுதவில்லை.

    “அவஜானந்தி மாம் மூடா: மானுஷீம் தானும் ஆஶ்ரிதம்
    பரம் பா4வம் அஜானந்தோ மம பூத மஹேஶ்வரம்”

    என்று கண்ணன் குறிப்பிட்டது உரலில் கட்டிய யசோதையையும், தன்னைக் குனிய வைத்து தாண்டி விளையாடிய கோப குமாரர்களையும் அல்ல. அவர்களிடமிருந்து தன்னை சர்வேஸ்வரன் என்று காட்டாமல் மறைத்துக் கொண்டது, அவனுடைய சங்கல்பம். அது அவனுடைய சௌசீல்ய குணத்தையும் யசோதை-கோப குமாரர்களுக்குத் திருமேனிச்பர்ஷம் முதலான ஒப்பிலா ஐச்வர்யங்களைத் தன் கிருபையாலே அளித்தமையைக் காட்டும்.

    மேலும் தகவல்கள் வேண்டும் என்றால் அவகாசம் கிடைக்கும்பொழுது விரிவாக எழுதுகிறேன்.

  54. சாரமாக ஒரே ஒரு திருவாய்மொழிப் பாசுரம்:

    “பத்துடை யடியவர்க் கெளியவன் பிரர்களுக் கரிய
    வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
    மத்தறுகடைவெண்ணெய் களவினி லுரலிடை யாப்புண்டு
    எத்திற முரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே.”

  55. அனைவருக்கும் நல்வழி காட்டி, இன்றும் ராம ராஜ்ஜியம் என்று உயர்வாகப் பேசப்படும் ஓர் உன்னத புருஷன் எப்படி வாழ்ந்தான், அப்படி வாழ்வாங்கு வாழ்பவன் வையத்துள் வைக்கப்படும் தெய்வமாகலாம் என்று மாநிடர்களுக்குக் காட்டினால் நல்லது என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட தொடர் இது.

    ஒரு மனிதன் மேம்பட வேண்டும் என்ற எண்ணம் இன்னுமொரு நல்ல மனிதனைப் பார்த்து வருவது, மற்றெந்த வழிகளிலும் சிறந்தது. நமக்கு உதவிய ஒருவரை இன்றும் கடவுள் என்று சொல்லி கை கூப்பும் வழக்கம் நம்மிடையே உள்ளது. அது நிலைத்து நிற்க வேண்டுமானால் ஒரு தலைவனோ, ஆள்பவனோ இராமனைப் போல உயரிய குணங்களுடன் அமைய வேண்டும்.இருந்தால் அனைவருக்கும் அது நன்மை பயக்கும்.

    மாறாகத் தர்க்கம், நியாயம், வாதம் என்று மல்லுக்கு நிற்பவர்களுக்கு நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் அனைவரும் ஒரு மனோமயக் காட்சியில் உலவிக்கொண்டு இருக்கிறீர்கள். எப்படி என்பதை இரு செய்யுட்கள் மூலம் சொல்கிறேன்.

    1. இது எம்மதமும் சம்மதமே என்று இருந்தவரது:

    “காணும் தனைவிட்டுக் கடவுளைத் தான் காணல்
    காணும் மனோமயமாம் காட்சி தனைக் காணும் அவன்
    தான் கடவுள் கண்டானாம், தன் முதலைத் தான் முதல்போய்
    தான் அன்றி இலதால்”

    2. இது ஒரு வைணவப் பெரியார் அவர்களது:

    “எண்ணாயிரத்தாண்டு யோகம் இருக்கினும்
    கண்ணார் அமுதனைக் கண்டறிவார் இல்லை
    உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
    கண்ணாடி போலக் கலந்து நின்றானே”

    ஏற்கனவே நான் ஒருமுறை சொல்லியபடி, கலந்து நிற்பவன் ஓர் உதாரண புருஷனாகவும் இருக்கலாம், அவன் தெய்வமாகவும் இருக்கலாம். எந்த வழி சென்றாலும் நல்லதை நோக்குவதே அனைவர்க்கும் ஒப்புதலாக இருக்க முடியும்.

  56. ராமன் அவர்களே

    எப்படி திருப்பிவிடுகிரீர்கள் பார்த்தீர்களா. உங்களது உத்தேசம் என்னவோ நல்லா இருக்கலாம். ராமனை மனிதனாக சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் கூறலாம், நீங்கள் கூறியவை ஒவ்வாதவை. அவ்வளவு தான்.

    அதன் பிறகு அதை தீற்பதற்க்கு தர்கமே சிறந்த வழி. மறுபடியும் உபதேச சஹஸ்ரியை எடுத்து விட்டு நீங்கள் எல்லாம் மனோ மாயா கோஷத்தில் மாட்டிக் கொண்டீர்கள் என்று சொன்னால், ராமானுஜரும், சங்கரரும், வியாசரும், ஜைமினியும் சபரரும் அப்படி தான் பாவம் போல.

    வாதம் செய்தால் உங்களது மதத்தில் ஒருவன் சாடகனாக முடியாது போல.

    இதுவே தான் எங்களது பக்ஷமும்

    எண்ணாயிரத்தாண்டு யோகம் இருக்கினும்
    கண்ணார் அமுதனைக் கண்டறிவார் இல்லை

    இதை புரட்டிப் புரட்டிப் படிக்கணும். எவ்வளவு தான் நான் யார் நான் யார் என்று தேடினாலும் …..

    உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
    கண்ணாடி போலக் கலந்து நின்றானே

    பக்தியுடன் நோக்கினால் ஒன்றாய் நிற்கிறானே

    கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ

    கேன உபாயேன லகுணா விஷ்ணோ: நாம சஹஸ்ரகம்
    பட்யதே பண்டிதை: நித்யம் ச்ரோதும் இச்சாமி அஹம் பிரபோ

    ஸ்ரீ ராம ராம ராம இதி ….

    ந அஹம் பிரகாஷ: சர்வச்ய யோகா மாயா சமாவ்ருத:
    மூடோ அயம் ந அபிஜாநாதி லோக: மாம் அசம் அவ்யயம்.

    மாம் ஏவ ஏ ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே – கிருஷ்ணன்

    ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதிச யாசதே
    அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம – ஸ்ரீ ராமன்

    உங்கள் உத்தேசம் சர்வ தேவதா நிஷ்கலமாக இருந்தால் நன்று தான். உங்களுடன் சிலவற்றை பகிர்ந்து கொண்டதில், தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி

  57. வால்மீகி ராமனைத் தெய்வமாகக்காட்டினாரா
    இல்லை மனிதனாகக் காட்டினாரா
    இல்லை மனிதனாகப்பிறந்து குணங்களில் உயர்ந்து உயர்ந்து தெய்விகப்பண்பு பெற்றவனானதாகக் காட்டினாரா

    என்ற கருத்துவகைகளின் ஆய்வுக்கு

    மே முதல் நாள் 11:54 மணிக்குச் சுயக்கமெண்ட் ஏதுமின்றி வெறுமே கொடுக்கப்பட்டிருக்கும் வால்மீகிராமாயணத்தின் ஆரம்பத்துச் சில பகுதிகள் மிகவும் ரெலெவெண்ட்டாகப் படுகின்றனவே?

    அந்தந்தத் தருணங்களில் ராமனுடைய ரியாக் ஷன்ஸ் – பேஶிய பேச்சு, வெளியிட்ட எண்ணப்போக்குகள் … அங்கெல்லாம் ராமனை வால்மீகி என்னவாகக்காட்டுகிறார்? ஹ்ம்ம்?

    அடியேனின் ராமபக்தி வேறெவனின் பூசனைக்கும் ஒரு மாற்றும் குறைந்ததல்ல

  58. முயற்சி, உழைப்பு, பிரார்த்தனை இவை மூன்றும் வேறு வேறானவை அல்ல. இவை மூன்றுமே பிரார்த்தனையின் வேறு வேறு வடிவங்கள் தான். இராமன் தெய்வமா, மனிதனா என்று பார்த்துக்கொண்டு விசாரம் செய்தால், மாந்தோப்பில், மாம்பழத்தை சாப்பிடாமல், மாமரத்தில் இருக்கும் இலைகளை எண்ணிக்கொண்டிருப்பது போலத்தான். இராமபிரானின் குணங்கள் தான் நமக்கு தேவை . அவன் மனிதனா தெய்வமா என்பது நமக்கு தேவை இல்லை. மனிதன் இல்லாமல் தெய்வம் இல்லை: தெய்வம் இல்லாமல் மனிதனும் இல்லை. இதனை புரிந்து கொண்டால், இந்த தேவை இல்லாத விவாதங்கள் நடக்காது. மனிதனும் சேர்ந்தால் தான் கடவுள் ஆகமுடியும். மனிதனை ஒதுக்கி விட்டு, யாருக்காக கடவுள் இருக்க முடியும் ? மனிதனை உயர்த்துவதற்கே கடவுள் நம்பிக்கை. மனிதனை மட்டமாக , தாழ்வாக கருதுவதற்கு கடவுள் நம்பிக்கை பயன்படுத்தப்படுமானால், அத்தகைய கடவுள் நம்பிக்கையை விட நாத்திகம் கூட உயர்வானதே.

  59. “வழக்கமான” கோணம் ,”வித்யாசமான கோணம் எல்லாவற்றுக்கும் ஒரே ஆதாரமாக இருக்கும் ஆதி காவ்யமான வால்மீகியின் ராமாயணத்தில் வால்மீகி ராமனை எப்படி காட்டியிருக்கிறார் என்பதே இந்த நீண்ட நெடிய விவாதத்தின் காரணம்.

    . மற்றவரும் ராமனை தெய்வமாக வழி பட்டே ஆக வேண்டும் என்றா ராமனை வழிபடும் ஆத்திகன் நினைக்கிறான்?ஒரு சாதாரண ஹிந்து மற்றொருவரை தன் தெய்வ நம்பிக்கையை ஏற்க செய்ய நிர்பந்திப்பதில்லை. அவரவர் பயணம் அவரவர் கையில் என்று பாமரனும் உணர்ந்திருக்கிறான்

    ஆனால் அவன் நம்பிக்கையை நாத்திகம் என்ற பெயரில் கேலி செய்து ஏறி மிதித்து துப்ப எவ்வளவோ பேர் .

    வில்ல- ஆத்திகம் , மனசு -ரொம்ப- நல்ல- நாத்திகம், மனிதனை மனிதன் தாழ்வாக்குவது எல்லாம் வழக்கம் போல் திசை திருப்பும் வாதங்களே. சொல்பவர்கள் கொஞ்சம் புதிதாக யோசிக்கலாம். தமிழ் நாட்டில் அறுவது -எழுவது வருடம் முன்பு சுட்ட பணியாரம்.

    நாத்திகம் என்றால் அடிப்படை நேர்மையின்மை என்பது தமிழ்நாட்டு பாணி.

    நிஜ நாத்திகர்கள் ,எது நிஜமாகவே நம்மை நடத்துவது , நமக்கு ஆதாரம் என்ன என்று யோசிப்பவர்கள் , வாதங்களில் சான்றுகளை விருப்பு-வெறுப்பு இல்லாமல் ஆராய முடிந்தவர்கள் அரிதோ அரிது. மே பீ தமிழ்நாட்டில் லேது லேது.

    சாய்

  60. ஆள் ஆளுக்கு அவரவருக்குத் தெரிந்தபடி எழுதுகிறார்கள். நாம் கேட்பது, ஆசிரியர் அந்த ஸ்ரீ ராமனை மனிதனாகக் காண்கிறாரா? அல்லது கடவுளாக எண்ணுகிறாரா? ஒரு அத்தியாயத்தின் விளக்கத்தில் கடவுள், சரணாகதி என்றெல்லாம் விபீஷணனுக்கு அபயமளித்த சம்பவத்தை விளக்கும் போது சொல்லி விட்டு மறுமொழியில் ராமனை கடவுளாக்கி விட்டார்கள் என்று கூறினால், ஐவரும் அதே தவறை செய்கிறார் தானே! ஆசிரியரின் கருத்து என்ன என்பதே இங்கு முக்கியக் கேள்வியாக வைக்கப்பட்டது. அதற்க்கு பதிலில்லாமல் ஆழ்வார் பாசுரங்களுக்கு இட்டுச் செல்வது சரியான விளக்கமன்று!

    “நாமெல்லோருமே மனோமயக் காட்சியில் உலவிக்கொண்டு இருக்கிறோம் என்றே வைத்துக் கொண்டாலும் ஆசிரியருக்கு பதில் கூற மனம் இல்லையா? அல்லது அவர் மனமே அற்ற நிலையை அடைந்து விட்டாரா? கரனை “காரா” என்றும், அதிகாயனை “அதிகாயா” என்றும் ஆங்கில உச்சரிப்பில் பெயர்ச்சொற்களைத் தந்து விட்டு திரு. ஜடாயு அவர்கள் அதைக் குறிப்பிட போது “பெயர்கள் தானே! இதில் என்ன வந்து விடப் போகிறது?, என்று விட்டு விட்டேன்” (சான்று: அத்தியாயம் 27) என்று மறுமொழி அளித்தவருக்கு, மனம் இல்லை என்று தான் அர்த்தமாகிறது. மனமே அற்ற நிலையை அவர் அடைய வில்லை என்பது தெளிவாக விளங்குகிறது. எனவே அவர் முதலில் தனது மனோமயக் காட்சியில் இருந்து வெளியே வரட்டும்.

    //அனைவருக்கும் நல்வழி காட்டி, இன்றும் ராம ராஜ்ஜியம் என்று உயர்வாகப் பேசப்படும் ஓர் உன்னத புருஷன் எப்படி வாழ்ந்தான், அப்படி வாழ்வாங்கு வாழ்பவன் வையத்துள் வைக்கப்படும் தெய்வமாகலாம் என்று மாநிடர்களுக்குக் காட்டினால் நல்லது என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட தொடர் இது.// என்று இப்போது கூறிய இவர், சற்று மேலே என்ன கூறியுள்ளார் என்பதையும் வாசித்தால் அவர் ஸ்ரீ ராமனைப் புகழ்கிறாரா? சாடுகிறாரா? என்பது புரியும். காட்டில் இராமன், இலக்குவனிடம் புலம்பும் போது பிவருமாறு கூறுகிறாராம் “சுகம்தான் போ, கைகேயி பிள்ளை பரதனுக்கு – பெண்டாட்டியோடு கூட – முழு கோசலை நாட்டையும் ஒரே ராஜாதிராஜனாக மக்களெல்லாம் மகிழ ஆண்டு அனுபவிக்கப் போகிறான்! தம் தந்தையும் வயதாகிப் போய், தானும் காட்டில் இருக்கும்போது அவனே அனைத்து ராஜ்யத்துக்கும் ஒரே சௌக்கியச் சின்னமாக ஆகப்போகிறான்.” இவ்வாறு வால்மீகி முனிவர் சொல்கிறாராம். இதெல்லாம் சரி. ராமன் சாதாரண மானுடன் தான். புலம்பல்கள், வருத்தங்கள் நிறைந்த சாதாரணப் பிறவி தான். இதையெல்லாம் மறுமொழியில் கூறும் இவர், ஏன் இந்த சம்பவங்களைத் தொடரிலேயே எழுதவில்லை? விபீஷணனுக்கு அபயமளித்த போது, இறைவனிடம் சரணாகதி அடைவதையும், மனிதன் இன்னொருவனுக்கு அபயமளிப்பதையும் ஏன் இணைத்துப் பேசினார்? இவர் என்ன தான் சொல்ல வருகிறார்? மனோமயத்தில் எங்களுடன் சேர்ந்து உழலும் ஆசிரியரே… விளக்குங்கள்!

  61. ” “சுகம்தான் போ, கைகேயி பிள்ளை பரதனுக்கு – பெண்டாட்டியோடு கூட – முழு கோசலை நாட்டையும் ஒரே ராஜாதிராஜனாக மக்களெல்லாம் மகிழ ஆண்டு அனுபவிக்கப் போகிறான்! தம் தந்தையும் வயதாகிப் போய், தானும் காட்டில் இருக்கும்போது அவனே அனைத்து ராஜ்யத்துக்கும் ஒரே சௌக்கியச் சின்னமாக ஆகப்போகிறான்.” இவ்வாறு வால்மீகி முனிவர் சொல்கிறாராம். ”

    வால்மீகி ராமாயணத்தை லிப்கோ ஏழாம் பதிப்பு 1996- பக்கம் 204- 207- அயோத்யா காண்டம் சர்க்கம் 53- ராமன் லக்ஷ்மணனை பரீக்ஷித்தது என்ற தலைப்பில் உள்ள நாலு பக்கத்தையும் படித்தேன். திரு இராமன் அவர்கள் தன் கடிதத்தில் சொல்லியுள்ளதுபோலத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமபிரான் லக்ஷ்மணனை அயோத்திக்கு போய், கைகேயி தவிர தசரதனின் இதர மனைவியரின் பாதுகாப்புக்கு உறுதுணையாய் இரு என்று சொல்கிறார். லக்ஷ்மணனோ இராமனைப்பிரிந்து அயோத்திக்கு செல்ல மறுத்து விடுகிறான். எனவே, இந்த விவகாரத்தில் ஏனிப்படி சண்டைபோடுகிறார்கள் என்று புரியவில்லை. இராமன் மனிதன் என்று சொல்வதால் அவருக்கு எவ்வித தாழ்வும் இல்லை. அவர் தெய்வம் என்று சொல்வதால் அவருக்கு எவ்வித உயர்வும் இல்லை. அவருடைய குணநலன்களே நமக்கு முக்கியம்.

  62. வால்மீகி ஆதி காவ்யம் என்பதும் அதன் கவிச்சுவை இனிமையோ இனிமை என்பதும் அதனை முழுவதும் படித்து முடித்தவர்களுக்கே புரியும். அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ராமபிரான் தன் மனைவி சீதாப்பிராட்டியை , லோஹ அபவாதத்துக்கு பயந்து காட்டிலுள்ள ஒரு முனிவரின் ஆசிரமத்தில் விட்டுவிட்டு , அயோத்திக்கு திரும்பிவிடுகிறார். மஹாவிஷ்ணுவே இராமபிரான் எனில் , லோஹ அபவாதத்துக்கு அவர் ஏனுங்க பயப்படவேண்டும் ? என்ன காரணம் எனில், மனித உருவில் வந்த போது, அமானுஷ்ய சக்திகளை பயன்படுத்தி, அவர் செயல்பட்டிருந்தால் , அவர் தெய்வம் நாமோ சாதாரண மனிதர்கள் ஆகவே அவரைப்போல இருக்க முடியாது என்று சொல்லி , எல்லோரும் அவரை பின்பற்றமுடியாது என்று ஓரங்கட்டிவிடுவார்கள்.
    இராமபிரான் தன் மனைவியை கானகத்துக்கு அனுப்பினார். என் மனைவியும் அதேபோல உள்ள சூழ்நிலைகளில் காட்டுக்கு அனுப்பப்படவேண்டும் என்று யாராவது கிளம்பினால் , நாம் அனுமதிப்போமா ?

    இராமாயணம் காலத்தால் முந்தியது, மகாபாரதம் காலத்தால் பிந்தியது என்று இந்த காலத்தில் நாம் கால ஆராய்ச்சி செய்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் மகாபாரதம் சாந்தி பர்வத்தில் ஸ்வேதா வராக கல்பம் வைவஸ்வத மன்வந்தரம் 28-வது சதுர்யுகத்தில் மகாவிஷ்ணு இராமன் என்ற பெயருடன் தசரதருக்கு மகனாக எதிர்காலத்தில் அவதரிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே, மகாபாரதம் தான் காலத்தால் முந்தியது , கிருஷ்ணாவதாரம் தான் முதலில் , இராமாவதாரம் பிறகு தான் , பாரதம் தான் ஆதிகாவ்யம் என்று வாதிடுவோருக்கு நாம் என்ன பதில் சொல்வது ? எனவே, நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நமக்கு கால ஆராய்ச்சி தேவை இல்லை. கருத்துக்களை மட்டும் ஆராய்ச்சி செய்து விவாதித்தல் நலம். ஒவ்வொரு இனமும், இவ்வொரு மொழியும் அவர்களது புஸ்தகங்களில் தாங்கள் தான் முதலில் தோன்றியவர்கள் என்று எழுதி வைத்துள்ளனர். எனவே சரித்திரம் என்பது சரி பாதிக்கு மேல் பொய்களின் ஒட்டுமொத்த பெட்டகம் தான். அவ்வப்போது ஆளுவோரின் ஜால்ராக்கள் , நாட்டை ஆளுவோரை மகிழ்விக்க பொய்களை எழுதி பரிசு பெறுகின்றனர். ( உதாரணம்- ( எடுத்துக்காட்டு) இந்தியாவின் முன்னைநாள் பிரதமரும், சர்வாதிகாரியுமான இந்திராகாந்தி , எமெர்ஜென்சி காலத்தில் பொய் வரலாறு தயாரித்து , ஒரு காலப்பெட்டகத்தை புதைத்தார் என்று நாம் அனைவரும் அறிவோம், கனிகளை உண்டு மகிழ்வோம். இலைகளை எண்ணிக்கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை. நமது இதிகாசங்களை முற்றிலும் ஒப்புநோக்கி ஆராய்ந்தால், முன்னுக்கு பின் முரணானவை சில இடங்களில் உள்ளது. ஏனெனில் , அவர் அவதாரமா, சாதாரண மனிதரா என்று பல இடங்களில் சந்தேகம் வரும் விதத்தில் தான், வால்மீகி ராமாயணம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு விடை என்னவெனில், இராமபிரான் விஷ்ணுவின் அவதாரம் தான். ஆனால் அவர் விஷ்ணுவின் அவதாரம் என்பதை பிறர் சொன்னபோதும் அவர் அதனை ஏற்கவில்லை. அவரும் தான் விஷ்ணுவின் அவதாரம் என்பதை நம்பவில்லை. மனித உடலில் அவர் இருந்தவரை , தான் மனிதன் என்ற உணர்வுடனேயே அவர் வாழ்ந்து, வைகுந்தம் செல்லும் முன்னர் , சரயூ நதியில் மூழ்கி பிராணத்தியாகம் செய்தார் . எனவே, மீண்டும் சொல்கிறேன் . பழங்களை உண்டு மகிழ்வோம், இலைகளை எண்ணிக்கொண்டிருக்கவேண்டாம் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.

  63. வால்மீகி இராமாயணத்தில் 24000 ஸ்லோகம் என்று நாம் படிக்கிறோம். எனவே தான் காயத்திரியின் 24 அக்ஷரங்களை கொண்டு , காயத்திரி இராமாயணம் என்று வந்தது ஒரு சிறு புத்தகம். ஆனால் வால்மீகி இராமாயணத்தில் 24,253 ஸ்லோகங்கள் உள்ளதாக பெரியவர்கள் சொல்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது 253 ஸ்லோகங்கள் எப்படி கூடும்? காலப்போக்கில் இடைச்செருகல் ஏற்பட எவ்வளவோ வாய்ப்புக்கள் இருக்கிறது. ச்யவனர் , போதாயனர் , பரத்வாஜர் ஆகியோர் எழுதிய இராமாயணம் , வால்மீகி இராமாயணம் வந்த பின்னர் மறைந்து போய் விட்டன என்று சொல்கிறார்கள். எனவே வால்மீகியை விட மேற்சொன்ன ராமாயணங்கள் தான் காலத்தால் முற்பட்டவையோ என்று எண்ண வேண்டி உள்ளது. எனவே அதுதான் சரி , இதுதான் சரி என்று சொல்லிக்கொண்டிருப்பதால் ஒரு உபயோகமும் இல்லை. எல்லாம் சரிதான். உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதனை பின்பற்றிவிட்டு போங்கள். எனக்கு அனுபவம் என்னவென்றால் , இராமாயண பாராயணம் பல சொந்த பிரச்சனைகளை எங்கள் குடும்பத்தில் தீர்த்திருக்கிறது. அது 24000 ஸ்லோகமாக இருந்தால் என்ன ? 24253 ஸ்லோகமாக இருந்தால் என்ன? இராமபிரான் மனிதனாய் இருந்தால் என்ன, இறைவனை இருந்தால் என்ன, மனித உருவில் இருந்த இறைவனை இருந்தால் என்ன ? இராமநாம ஜபம் எவ்வளவோ இன்பம் என்று ஞானி ஓஷோ சொல்கிறார். இராமநாம ஜபம் எவ்வளவோ நன்மைகளை எங்களுக்கு வழங்கி இருக்கிறது. சுந்தர காண்ட பாராயணமே பல நிவாரணங்களை , பல குடும்பங்களுக்கு வழங்கியுள்ளது. வால்மீகி இராமாயணம் தோன்றுவதற்கு முன்னரே இருப்பது இராம நாமம் என்பதே என்னைப்பொருத்தவரை உண்மை .சார்வாக ஞானி ஜாபாலி என்ற ரிஷியின் வாதங்களுக்கு இராமபிரான் அளித்த பதிலுரை அட்டஹாசம். அதனை ரசிப்போம். வெல்க இராமன் புகழ். திரு இராமன் அவர்களின் புனித தொண்டு மேலும் மேலும் தொடர்க.

  64. ” இறைவனை இருந்தால் என்ன, மனித உருவில் இருந்த இறைவனை இருந்தால் என்ன “-

    மேலே உள்ள இறைவனை என்பதை இரு இடங்களிலும் இறைவானாய் என்று படித்துக்கொள்ள வேண்டுகிறேன். தட்டச்சு பிழைக்கு மன்னிக்கவும்.

  65. திரு. வெள்ளை வாரணன் அவர்களே!

    //இராமன் மனிதன் என்று சொல்வதால் அவருக்கு எவ்வித தாழ்வும் இல்லை. அவர் தெய்வம் என்று சொல்வதால் அவருக்கு எவ்வித உயர்வும் இல்லை. அவருடைய குணநலன்களே நமக்கு முக்கியம்.//

    தாங்கள் சொல்வதை ஆமோதிக்கிறேன். வால்மீகி முனிவர் ஸ்ரீ ராமனை மனிதனாகத் தான் முழுவதுமே சித்தரித்துள்ளார் என்பது எமக்கும் தெரியும். ராவணன் யாரினால் எல்லாம் தான் கொள்ளப் படக் கூடாது என்று வரம் கேட்ட பட்டியலில் மனிதர்களை சேர்க்கவில்லை. மனிதர்கள் தானே என்ற இளக்காரம் காரணமாக இருக்கலாம். எனவே தான் இராமர் புரிந்த மாயாஜாலங்கள் என்றோ, அவர் ஒரு அதிசய பிறவி என்று மற்றவர் வியக்கும் வண்ணமோ இராமாவதாரத்தில் அவர் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. மாறாக எல்லா அற்புதங்களையும் இராம நாமமே வெளிப்படுத்துகிறது. அசுரப் படைகளை மூன்றில் ஒரு பங்கை ப்ரம்மாச்திரத்தால் கட்டப்படும் முன்பே இலங்கைக்குத் தீ வைக்கும் முன்பே அனுமார் ஒழித்து விட முடிந்தது என்றால், அதற்கு இராம நாமமே காரணம். ஆனால் இராமர் எந்த இடத்திலும் தன்னை ஒரு கடவுள் என்று காண்பித்துக் கொள்ளவில்லை. இதை சரியாக சொல்லாமல் ஒரு அத்தியாயத்தில் அவரை இறைவனுக்கு ஒப்பிட்டு பேசுவது, மறுமொழிகளில் அவர் மனிதர் தான் பின்னாளில் கடவுளாக்கப் பட்டார் என்றெல்லாம் உளரும் போது நாம் குறுக்கிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. ஏனெனில் இதை நாம் ஒத்துக் கொள்வோமேன்றால் அவர் நாராயணனின் அவதாரங்களுள் ஒருவராகக் கருதப்பட்டு, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஜென்ம பூமி பிரச்சனை சுப்ரீம் கோர்ட் வரை வருடக்கணக்கான ஆண்டுகளாக இழுத்து, தீர்ப்பும் கூறியாகி விட்ட நிலையில், ‘ஒரு சாதாரண மனிதருக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்? கோவில் நிர்மாணம் எல்லாம்?’ என்ற கேள்வியை மற்றவர்கள் கேட்க வழிவகுக்கும். முரண்பாடு எங்களிடம் இல்லை. ஆசிரியரின் விளக்கத்திலும், மறுமொழியிலும் உள்ளது. அதைத் தான் சரி செய்து கொள்ள வேண்டுகிறோம். மாறாக மனோமயம், பிரம்ம மயம் என்றெல்லாம் இழுக்க வேண்டாமே!

    மற்றபடி குணநலன்களே முக்கியம் என்பதை மறுபேச்சின்றி ஏற்றுக் கொள்கிறோம்.

  66. திரு பிரசன்னசுந்தர் அவர்களின் பதிலுக்கு நன்றி. என்னுடைய நோக்கம் அயோத்தி வழக்குக்குள் நுழைவது அல்ல. ராமாயணத்தில் சுமார் 100- க்கும் மேல், பல நாடுகளிலும், பல மொழிகளிலும் உள்ளன. எல்லாவற்றிலும் இராமபிரானே கதாநாயகன். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நமது சம்பிரதாயத்தில் ஆத்மபூஜை என்ற நடைமுறை உள்ளது. இறைவனைப்போலவே மனிதனும் புனிதமானவன் தான். மனிதன் பாவி அல்ல. எனவே தான், பூஜா விதானத்தில் , தேஹோ தேவாலயஹ ( மனிதனின் உடல் இறைவன் குடியிருக்கும் ஆலயம்) என்ற மந்திரத்தை சொல்கிறோம். ” ஜீவோ தேவஹ”- ( மனித ஆன்மா இறைவனே ஆகும்). இதுவே நமது மதத்தின் உயர்நிலை. மனிதன் இறைவனை விட மட்டம் என்று கருதுவோர் , இறைவனே பஞ்ச பூதங்கள் உட்பட எல்லாமாகவும் உள்ளான் என்ற உண்மையை அறியாத நண்பர்கள் ஆவர்.அவ்வளவே. பாப்ரி கட்டிடம் 1992- லே இடிக்கப்பட்டதை , மோசடி செக்யுலர் அரசியல்வாதிகள் கண்டனம் செய்கின்றனர். ஆனால், அதே அரசியல்வாதிகள் 1989- முதல் 1991 வரை காஷ்மீர் மாநிலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் இடிக்கப்பட்டதையும், அதன் விளைவாகவும், காஷ்மீரில் இந்து பண்டிதர்களுக்கு எதிராக கடும் மிரட்டல் விடப்பட்டு, காஷ்மீரை விட்டு விரட்டப்பட்டு , இன்று டெல்லியிலும் , இன்னபிற இடங்களிலும் அனாதையாக வாழும் இந்தியர்களை பற்றியும், வாய் திறவாமல் மௌனம் சாதிக்கின்றனர். வல்லவனே வாழ்கிறான். வல்லவனாக மாறுவோம்.

  67. ” வால்மீகி ராமனை பல இடங்களில் சந்தேகத்திற்கு இடமின்றி நேரடியாக அவதாரம் என்பதை காட்டுகிறார்.”

    “எக்ஸ்ட்ரா ஸ்லோகங்கள் உள்ளன . எங்களுக்கு வேண்டாதவை எல்லாம் இடை செருகல்.”

    ” இடைசெருகல் எவை எவை என்று நிர்ணயிக்க முறைமை உண்டு. 24000 பிளஸ் ஆர் மைனஸ் ஊடாக ஒரு பொது இழை உண்டு.
    சீரியல் எழுத்தாளர் போல் அடுத்து என்ன எழுதப் போகிறோம் என்று தெரியாமல் வால்மீகி எழுதவில்லை.
    பொது இழையான , அடிநாதமான கருத்தாக்கத்துடன் ஒத்து போகா விட்டால் இடை செருகல் என்று கருத முகாந்திரம் உள்ளது.அப்போதும் அலசி ஆராய்ந்து பின்னரே சொல்லலாம்.”

    ” இந்த வால்மீகி பெரிய தலைவலி. இப்போ என்ன செய்யலாம். ?
    ஏ கே ராமானுஜன் வழி தான். 300 ராமாயணங்கள் உண்டுபா. எல்லாவற்றிலும் ராமனே கதாநாயகன். [ ஹை!]
    அதுவும் இந்த வால்மீகி எழுதும் முன்னே வேறு நிறைய பேர் எழுதி விட்டார்கள். அவர் சொன்னதெல்லாம் ஏத்துக்க மாட்டோம்.”

    ” ஆதாரம்?”

    ” மரத்துலே உள்ள இலைய என்ன வேண்டாம். அது கெட்ட வழக்கம். ”

    ” அப்போ அடையாறு ஆலமரம் போல ரெண்டு மடங்கு உள்ள மரத்துல 157 இலைகள் தான் இருக்குன்னு ஒருத்தர் சொன்னா , அப்படி இல்லையே மேலோட்டமா பாத்தாலே ஆயிரக்கணக்கில் இருக்கும் போல இருக்கே என்று தானே பதில் சொன்னோம்? ”

    ” ராமன் குணம் முக்கியம். ஆர்க்யூ பண்ணாதீங்க . தப்பெல்லாம் செஞ்சார். காட்டுக்கெல்லாம் அனுப்பினர் மனைவியை. பாருங்க ராமாயணம் படியுங்க .இலையெலாம் நீங்க எண்ணக்கூடாது. உங்களுக்கு ராமன் பிடிச்ச பிடிக்கட்டும். நீங்க என்ன வேணும்னாலும் நம்பிக்கலாம். பாவம் அது உங்க கருத்து சுதந்திரம். ”

    “…………………………………………”

  68. இந்த கட்டுரை தொடரின் தலைப்பே இராமன் மனித குலத்துக்கு ஒரு மாபெரும் விளக்கு என்பது தான். அவர் மனிதனா , இறைவனா என்று கட்சி கட்டுகிறார்கள் சில நண்பர்கள். அவர் மனித உருவில் வந்த இறைவன் அவ்வளவே. மனித உருவில் வந்ததாக சொன்னால் சிலருக்கு பிடிக்காது. அவர் ஏதாவது அமானுஷ்ய சக்திகளை பயன்படுத்தி , சில மாயா ஜாலங்களை செய்தால் தான் உயர் சக்தி என்று பெரும்பாலோர் மதிப்பார்கள். அதனாலேயே இத்தனை விவாதங்கள். நமது பட்டிமன்றங்களில் நடக்கும் பல நீண்ட விவாதங்களை போல அமைந்து விட்டது. இராம பிரானிடம் நாம் பின்பற்ற வேண்டிய குணங்களும் உள்ளன. பின்பற்றக்கூடாத குணங்களும் இருந்தன. மனைவியை காட்டுக்கு அனுப்பியதும், மனைவியை தீக்குளிக்க வைக்க நேரிட்டதும் தவிர்த்திருக்க வேண்டிய விஷயங்கள். அவர் அவ்வாறு செய்யவில்லை , அது இடைச்செருகல் என்றும் சொல்லிக்கொள்ளலாம். ஏனென்றால் 300- க்கு மேற்பட்ட இராமாயணங்கள் உள்ளன. இதில் அது சரி, இது சரி இல்லை , இது தான் ஒரிஜினல், அது ஒரிஜினல் இல்லை என்று மேலும் விவாதித்தால் , நேரம் இருப்பவர்கள் செய்யட்டும். எங்கள் ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பவில்லை, தீக்குளிக்க வைக்கவில்லை. இது 301- ஆவது version – என்று வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். இதுவும் உண்மையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *