கன்னியின் கூண்டு – 3

மூலம் : அயான் ஹிர்ஸி அலி
தமிழில் : அ. ரூபன்

<< முந்தைய பகுதிகள்

இஸ்லாமியப் பெண்களின் நிலை குறித்து ஹிர்ஸி அலி எழுதிய The Caged Virgin புத்தகத்திலிருந்து எடுத்தெழுதப்பட்ட கட்டுரையின் மூன்றாம் பகுதி.

இஸ்லாமிய சட்டத்தின்படி அமையும் ‘கன்னியின் கூண்டு’ அம்மதத்தின் பெண்களிடம் மட்டும் பாதிப்பை உண்டாக்கிவிடுவதுடன் நின்றுவிடுவதில்லை. அப்பெண்ணைச் சுற்றியிருக்கும் அவளது கணவனுக்கும், குழந்தைகளுக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது. உண்மையில் ‘கன்னியின் கூண்டு’ இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக இருக்கிறது. இஸ்லாமியப் பெண்களும், பெண் குழந்தைகளும் உட்புறக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், அதனைச் சுற்றிலும் அமைந்த அடுத்த கூண்டில் மொத்த இஸ்லாமியக் கலாச்சாரமும் அடைபட்டிருக்கிறது. ஒரு பெண்ணின் கன்னித்தன்மையைக் காக்க அமைந்த கூண்டு அப்பெண்களுக்கு நிராசையையும், ஏமாற்றதையும், வலிகளையும், கோபத்தையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு கூட்டிலடைபட்டு, செயலற்றுக் கிடக்கும் பெண் அவளது எதிர்காலச் சமூகத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை அவளது குழந்தைகள், குறிப்பாக அவளின் மகன்கள் மீது சுமத்துகிறாள். பெரும்பாலான அரேபிய இஸ்லாமியப் பெண்கள் கல்வியறிவு அற்று தற்குறிகளாக இருக்கிறார்கள். அவர்களின் சமூக ஏற்பாட்டால் திட்டமிட்டபடியே அவர்கள் அறியாமையில் உழலும்படி செய்யப்படுகிறார்கள். அவ்வாறு அறியாமையிலும், ஏமாற்றத்திலும் இருக்கும் பெண்ணால் அவளது குழந்தைகளுக்கும் மிகக் குறைந்த அளவே கற்றுத்தர இயல்கிறது. இந்தவகையில் அறியாமையானது தலைமுறை தலைமுறைகளுக்கு தொடர்ந்து வருகிறது.

அயான் ஹிர்ஸி அலி
அயான் ஹிர்ஸி அலி

மேற்கத்திய நாடுகளுக்கு குடியேறிய முதல் தலைமுறை இஸ்லாமியப் பெண்களில் பெரும்பாலோர் ஆரம்பப் பள்ளியைத் தாண்டாதவர்கள் என்பதே உண்மை. கல்வியறிவு இல்லாத அவர்களால் தாங்கள் புதிதாக குடியேறிய சமூகம் இயங்கும் விதம் குறித்து அறிந்து கொள்ள இயலாதவர்களாகவே இருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களின் குழந்தைகள் கல்வியறிவு பெற்றாலும், பாலின பாகுபாடுகள் மற்றும் இறுக்கமான இஸ்லாமிய நடத்தைவிதிகள் கொணட மனோபாவம் இருக்கும்வரை அவர்களின் குழந்தைகளும் அச்சமூகத்தில் ஓரங்கமாகி, முன்னேற இயலுமா என்பதுவும் கேள்விக்குறியதே.

இவ்வாறு அடக்கி வைக்கப்படும் பெண்களால் உண்டாகும் பிரச்சினைகள் பல இஸ்லாமிய சமூகங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. தங்களின் கோப, தாபங்களையும், வெறுப்பையும் தங்களின் கணவன்மார்களின் மேல் காட்டவியலாத முஸ்லிம் பெண்கள் அதனைத் தங்களின் குழந்தைகளை நோக்கித் திருப்புகிறார்கள். எல்லாப் பெண்களும் அதுபோன்றவர்கள் இலை என்பதையும் நான் இங்கு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். கூண்டிலடைபட்ட பல இஸ்லாமியப் பெண்களுக்கு அவர்களின் குழந்தைகளே ஆறுதலாக இருக்கிறார்கள். இருப்பினும் மேற்கத்திய சமூகங்களில், நெதர்லாந்து போன்ற நாடுகளில், இருப்பதை போன்ற உறவுமுறைகள் அவர்களுக்கு அவர்களின் குழந்தைகளுடன் இல்லை என்பதே பொதுவான நிலை.

பெண்களுக்கெதிரான வன்முறைகள் மேற்கத்திய நாடுகளிலும் உண்டு என்றாலும் அவை ஒரு அருவருக்கத்தக்க செயலாகவே அங்கு நினைக்கப்படுகிறது. ஆனால் இஸ்லாமியப் பெண்களுக்கு அவளின் குடும்பத்தினரால் செய்யப்படும் வன்முறை நியாயப்படுத்தப்படுகிறது. அவள் இஸ்லாமிய நடத்தை விதிகளுக்கு அடங்கி நடக்காததால்தான் அவளுக்கு அந்த நிலைமை ஏற்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவளியாக்குதல் இஸ்லாமிய சமூகத்து நடைமுறை. அவளது குடும்பமும், சமூகமும் அவள் மீது செலுத்தப்பட்ட வன்முறையை அங்கீகரிக்கின்றன. உன்னை உன் கணவன் அடித்தால் அதற்க்குக் காரணம் நீதான் என அவளைக் குற்றம் சொல்வது சகஜமான ஒன்றே.

குரான் நம்பகத்தன்மையுடன் நடந்து கொல்வதற்கும், உண்மைக்கும், கல்வியறிவு பெறுவதற்கும் மிக முக்கியமான இடத்தைத் தருகிறது. ஆனால் இஸ்லாமிய சமூகங்களில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. பொய்மையும், கீழ்த்தர மனோபாவமும், கல்வியறிவின்மையும் இஸ்லாமிய சமூகங்களில் புரையோடிப் போயிருப்பதைக் காணலாம்.

*

இஸ்லாம் நடைமுறைப்படுத்தியிருக்கும் பெண்களின் உடல் மீதான கட்டுப்பாடுகள் குறித்தும், அடக்குமுறை குறித்தும், அதனால் சமுதாயத்திற்கு ஏற்படுகிற விளைவுகளைக் குறித்தும் ஒவ்வொரு முஸ்லிமும் ஆராய வேண்டும். இஸ்லாமிய ஆணுக்கும், பெண்ணுக்குமான உறவு குறித்தான அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் இஸ்லாமிய சமூகத்தின் முன் கறாராக வைக்கப்பட வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு, அதன் அடிப்படையில் இஸ்லாமிய மதத்திற்குள் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அறிக்கையின்படி, முறையான வகையில், பள்ளிகளில் பெறப்படும் பொது அறிவு அரேபிய-இஸ்லாமிய நாடுகளில் முக்கியத்துவம் பெறுவதில்லை என்று சொல்கிறது. ஆனால் குரானோ எல்லா நம்பிக்கையாளர்களும் கல்விக் கேள்விகளில் தொடர்ந்து ஞானம் பெற வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அதே குரான், அல்லா எல்லாம் அறிந்தவன்; எனவே குரானே எல்லா ஞானத்திற்கும் அடிப்படை என்றும் சொல்கிறது. இந்த இரண்டு முரண்பாடுகளையும் சமன்செய்வது ஏறக்குறைய இயலாத காரியம்.

உதாரணமாக இயற்பியலையும், உலக வரலாற்றையும் படிக்கும் இஸ்லாமியக் குழந்தைகள் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாவார்கள். எல்லா உலக வரலாறுக் குரான் பிறப்பதற்கு முன்பு ஆரம்பிக்கின்றது. எனவே, பரிணாம வளர்ச்சி குறித்து அறிவியல் கூறுவது அத்தனையும் குரானுக்கு எதிரானது. உலகின் பல முல்லாக்கள் பரிணாம வளர்ச்சி குறித்த கேள்விகளைப் புறங்கையால் தள்ளிவிட்டும் “எல்லா அறிவுக்கும் குரானே அடிப்படை என்பதால், அதனைத் தொடர்ந்து, விடாமல் படித்து வந்தால் அறிவுக்கான கதவு தானே திறந்துவிடும்” என்று பதிலளிக்கின்றனர்.

SHARIA-islam-jihad-women

குரானில் சொல்லப்படும் சட்டங்கள், நடத்தை விதிகள் போன்றவை சாதாரண மானுடர்களால் பின்பற்றவே இயலாதவை என்பதுதான் உண்மை. எனவே, இஸ்லாம் சிறிது மனிதத்தனம் அற்ற அடக்குமுறைகளால் நம்பிக்கையாளர்களைத் தன் வழிக்குக் கொண்டுவர முயல்கிறது. இஸ்லாமிய இளம் பெண்களும், ஆண்களும் திருமணமாகும் வரை கன்னியர்களாக இருக்க முயற்சித்தாலும் அவர்களது ஹார்மோன்கள் அவ்ர்களை அவ்வாறு இருக்கவிடாமல் பாலுணர்வு எண்ணங்களைத் தூண்டவே செய்கிறது. ஆனால் குரானோ அந்த எண்ணங்களைப் பாவங்களாகச் சொல்கிறது. இருப்பினும் அவ்வாறு இருப்பது இள வயதினருக்கு எளிதாக இருப்பதில்லை. எனவே இஸ்லாமை குரான் சொன்னபடியே செய்வது என்பது இயலாத காரியம் என்ற எண்ணம் தோன்றியவுடன், குரான் குறித்தான சந்தேகங்களும் தொன்ற ஆரம்பிக்கின்றன. இருப்பினும் குரானையோ அல்லது முகமது நபியின் வாழ்க்கைமுறையையும், நடத்தையையும் சொல்லும் சுன்னாவையோ சந்தேகிப்பது, கேள்வி கேட்பது போன்ற செயல்கள் இஸ்லாமில் அறவே தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஏனெனில் உதாரண புருஷராக நம்பப்படும் முகமது நபியின் வாழ்க்கை, அப்பழுக்கற்ற, உலத்திற்கே உதாரணமான ஒன்றல்லவா?!

குரான் மீதோ அல்லது முகமது நபி மீதோ எழுப்பப்படும் எந்த சந்தேகத்திற்கும், கேள்விக்கும் இஸ்லாமிய சமூகத்தில் இடமில்லை. அவ்வாறு நடந்தால் அது உடனே தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இஸ்லாமின் கொள்கை. ஆனால் கேள்வி கேட்பது கல்வியறிவு பெறுவதற்கான அடிப்படை. எந்தவொன்றைப் பற்றியும் கேள்வியெழுப்பாமல் மானுடர்கள் எவ்வாறு அறிவு பெற இயலும்? இதனால் இஸ்லாமை மிகத் தீவிரமாகப் பின்பற்றுபவர்களின் மனங்களும் ஊசலாட ஆரம்பிக்கின்றன.

இப்படிப்பட்ட உள் மனப் போராட்டங்களால் முஸ்லிம் ஆண்களும், பெண்களும் அவ்வப்போது குழப்பமடையவே செய்கிறார்கள். முகமது நபியையும், குரானையும் முழுமூச்சாக நம்பி வாழுகிற ஒரு சமூகமானது, தனது சிந்திக்கும் திறனை இழந்து, ஒருவிதமான மனோவியாதிக்கு ஆட்பட்டது போலக் குழப்பங்களிலும், எதிர்மறை எண்ணங்களிலும் அமிழ்ந்து போகிறது. உள் மனத்திலும், வெளியுலகிலும் தொன்றுகின்ற கேள்விகளால் வதைக்கப்பட்டு அதனுடன் முழுமையான இஸ்லாமை பின்பற்றுவதற்கான சாத்தியங்கள் இல்லாத கோபத்துடன் வாழ்கிறது அச்சமூகம். ஆனால் உலகின் பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களின் இத்தனை துன்பத்திற்கும், பெண்களின் மீதான அடக்குமுறைக்கும் காரணமான குரானை, இஸ்லாமை பொறுப்பாக்குவதற்கு மறுக்கிறார்கள். அதற்கு பதிலாக அல்லாவையும், சைத்தானையும் மற்ற வெளிப்புற காரணிகளான யூதர்களையும், அமெரிக்கர்களையும் அல்லது பிறரையும் தங்களது இன்னல்களுக்கு குற்றம் சுமத்துகிறவர்களாக இருக்கிறார்கள். உலக வாழ்வில் பின்பற்றவே இயலாத அவர்களின் புனித நூலான குரானே தங்களின் இத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்பதை அவர்கள் ஒருபோதும் உணர்ந்தார்களில்லை.

உலகின் பெரும்பாலான முஸ்லிம்கள் மறுப்பையே ஆயுதமாக்கி வாழப் பழகிவிட்டார்கள். ஒரு சிலரோ “என்னுடைய மனைவி கன்னியா இல்லயா என்று நான் அவளிடம் கேட்க மாட்டேன். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. அதை அல்லாவிடம் விட்டுவிட்டேன்” என்பார்கள். இந்த உலகத்தில் பிழைத்துக்கிடக்க இதுவும் ஒரு வழியல்லவா?

*

முஸ்லிம்கள் தங்களையும், தங்களின் பெண்களையும் அடைத்து வைத்திருக்கும் சிறையிலிருந்து விடுதலையடைந்து வெளியே வரவேண்டுமென்றால், அவர்கள் தங்களின் சுய விமரிசனத்தையும், குரான் சொல்லும் சட்ட திட்டங்ககளையும் கேள்விக்கு உட்படுத்தவேண்டும். இந்தச் செயலைச் செய்வதற்கு இன்று மேற்குலகில் வாழும் 15 மில்லியன் முஸ்லிம்களே சரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களில் பெரும்பாலோருக்குக் கல்வியும், தனிமனித சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றிய அறிவும் இருக்கிறது. மனதில் பட்டதைத் தயங்காமல் சொல்லும் உரிமையையும் மேற்கத்திய கலாச்சாரமும், ஜனநாயகமமும் அவர்களுக்கு அளித்திருக்கிறது.

மேற்கத்திய நாட்டில் வசிக்கும் ஒரு முஸ்லிம் அவரது மதத்தின் உட்கட்டமைப்பைப் பற்றி ஆராய்ந்தால் அவருக்கு எந்த மேற்கத்திய நாடும் சிறைத் தண்டனையோ அல்லது இஸ்லாமிய நாடுகளைப் போல மரண தண்டனையோ வழங்கும் என்றும் அஞ்சவேண்டியதில்லை. முஸ்லிம் ஆண்கள் பலர் கட்டாகச் செய்த ஒரு கூட்டுக் கற்பழிப்பிற்குப் பிறகு முஸ்லிம் பெண்கள் ஃபிரான்சில் நடத்திய ஆர்ப்பாட்டத்தை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம். இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்திய சமீரா பெலில் என்ற பெண்மணியே ஒரு கூட்டுக் கற்பழிப்பிற்கு முஸ்லிம் ஆண்களால் ஆளானவர்தான். இது போன்ற ஒரு சாதாரண ஆர்ப்பாட்டம் நடத்துவது கூட முஸ்லிம் பெண்களுக்கு அவர்கள் வாழும் இஸ்லாமிய நாட்டில் அத்தனை எளிதாக செய்யமுடியாது என்னபதனை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். இரானியப் பெண்கள் வினியோகித்த “புர்காவைத் தூக்கியெறி” என்னும் சிறிய நோட்டீசையும் இதற்கு இன்னொரு உதாரணம்.

இஸ்லாமை விமரிசிக்கும் புத்தகங்களை நெதர்லாந்தில் வாழும் எழுத்தாளரான Haffid Bouazza மற்றும் தத்துவவாதியான Afshin Ellian போன்றவர்கள் துணிந்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் புத்தகங்கள் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. என்றாவது ஒரு நாள் அவர்களின் புத்தகங்கள் அரேபிய மற்றும் பாரசீக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் என்று நம்புகிறேன்.

islam-jihad-marriage-women-yemeni-child-brides-husbands-615

இஸ்லாமிய உலகின் பிரச்சினைகளைக் குறித்து எழுதிய மிகச்சிறந்த ஒரு எழுத்தாளரான, பாகிஸ்தானை சேர்ந்த தத்துவவாதி Ibn Warraq எழுதிய Why I’m not a Muslim என்னும் புத்தகம் அனைத்து முஸ்லிம்களாலும் படிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அந்தத் துணிச்சல் மிகுந்த மனிதன் இந்தப் புத்தகத்தை ஒரு புனைப் பெயரில் எழுதியிருப்பதைக் காண்கையில், மேற்கத்திய உலகில் கூட இஸ்லாமை விமரிசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்க முடியாது என்பதையே காட்டுகிறது.

மேற்குலகில் எந்தத் தகவலையும், முஸ்லிம் நாடுகளைப் போலல்லாது, எளிதாகப் பெறும் வசதி இருக்கிறது. கிறிஸ்த மதத்தினப் பற்றி அங்கு நடத்தப்பட்ட விமரிசனங்களையும், விவாதங்களையும் பற்றியும் அதன் தொடர்ச்சியான பங்கு பற்றியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நூலகங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், மற்றவர்களிடமிருந்தும் தேவையான விஷயங்களைப் பெற்றுக் கொண்டு அதனடிப்படையில் ஆக்கபூர்மான விமரிசனங்களை தங்கள் மதத்தின் மேல் மேற்கத்திய இஸ்லாமியர்கள் முன்வைக்க வேண்டும். அதுவே இஸ்லாமியர்கள் இன்றைக்கு அடைபட்டிருக்கும் கூண்டிலிருந்து அவர்களை விடுவிக்கும்.

இன்றைக்கு முஸ்லிம்கள் தங்கள் மீதான சுயவிமரிசனத்தை எளிதாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு நாடாக நான் கருதுவது அமெரிக்காவை மட்டுமே. ஏனென்றால் இன்று அமெரிக்கா இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. உலக வர்த்தக மைய்ய தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாமைக் குறித்தும், இஸ்லாமியர்களைக் குறித்தும் அறிந்து கொள்வதற்கான எண்ணம் அமெரிக்காவில் அதிகமாகி இருக்கிறது. இந்த எண்ணமே மேற்குலகில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு தாங்கள் மனதளவில் அடைந்து கிடக்கும் கூண்டிலிருந்து தப்பிச் செல்வதற்கான ஒரு வாய்ப்பையும் அளித்திருக்கிறது.

இதுபோன்ற சாதகமான சூழ் நிலையில் வாழ்ந்தாலும் மேற்கத்திய முஸ்லிகளில் பெரும்பாலோர் தங்களைச் சிறைப்படுத்தும் பழமைவாத இஸ்லாமை நோக்கியே துரதிருஷ்ட வசமாகச் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மேற்குலகின் அறிவியலில் நன்கு அறிமுகமான சோஷியாலஜிஸ்ட் Fatima Mernissi எழுத்ய Beyond the Veil: Male Female Dynamics in Modern Muslim Society என்கிற புத்தகத்தைப் படிக்கும்படி சிபாரிசு செய்கிறேன்.

மேற்கத்திய நாடுகளில் வாழும் 15 மில்லியன் முஸ்லிம்களும் இஸ்லாம் குறித்தோ அல்லது முகமது நபி குறித்தோ முன் வைகப்படும் எதிர்மறைக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நான் அறிவேன். அப்படியே எவரேனும் தப்பித்தவறி ஏதேனும் சொல்லிவிட்டால் அங்கிருக்கும் இஸ்லாமிய தீவரவாதிகளால் மிரட்டப்பட்டும், அச்சுருத்தலுக்கும் ஆளாகின்றனர். சில சமயங்களில் இஸ்லாமியத் தீவிராவதிகளினால் அவர்கள் கொல்லப்படுவதும் நடந்திருக்கிறது. எனவே எவரும் இஸ்லாமின் தவறுகளை விமரிசிக்க முன்வருவதில்லை. இதில் எனக்கு ஆச்சரியமளிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், ஆண்களால் அடக்கப்பட்டு, ஹிஜாபில் அமுங்கியிருக்கும் பெரும்பாலான மேற்குலக முஸ்லிம் பெண்கள், ஹிஜாபைத் துறக்க முன்வராததுதான். நானறிந்த பல துருக்கிய முஸ்லிம் பெண்கள், தாங்கள் துருக்கியில் இருந்தவரை ஹிஜாப் அணிந்ததில்லை என்றும், ஆனால் நெதர்லாந்திற்கு வந்ததும் அதனை அணியத் துவங்கியதாகவும் கூறினார்கள். இதுபோன்ற செயல்கள் மேற்குலகில் வாழும், முன்னேற்ற எண்ணமுடைய இஸ்லாமியர்கள் பலருக்கும் கவலை அளிப்பதாகவே இருக்கிறது.

*

நான் கண்ட மேற்கத்திய இஸ்லாமியர்களில், மூன்று பிரிவினர்கள் இருக்கிறார்கள். முதலாவது பிரிவினர் Silent Majority எனப்படும் அமைதிப் பெரும்பான்மையினர். இவர்கள் இஸ்லாமியக் கொள்கைகள் எதனைவும் கடைப்பிடிக்காமல் ஒதுங்கியிருந்து, தங்களின் எதிர்காலம் அவர்களின் தனிப்பட்ட முன்னேற்றத்திலேயே அடங்கியிருக்கிறது என்பதை நன்கு உணர்ந்தவர்கள். சத்தமில்லாமல் இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களில் அவர்களே பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். பிற மதத்துக் குடியேறிகளைப் போலவே கடுமையா உழைத்து, பொருளீட்டி, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் பகுதிகளிலிருந்து வெளியேறி நல்ல பகுதிகளில் வீடு வாங்கியும், தங்களின் பிள்ளைகளை நல்ல பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பதிலும் கவனமாக இருக்கிறார்கள். அவர்களில் எவரும் பொதுவில் இஸ்லாமைப் பற்றி எதுவும் பேசுவதில்லை.

இரண்டாவது பிரிவினர், இஸ்லாமைப் பற்றி வெளியார் யாரேனும் விமரிசித்தால் அதைக் குறித்து காயப்படுவதுடன், அதனைத் தங்களின் தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொண்டு வாதிடவும் செய்பவர்களாக இருக்கிறார்கள். காலம் காலமாக இது போன்றவர்களே தங்களின் இந்த மோசமான வாழ்க்கைகும், வறுமைக்கும் மற்றவர்களைக் குறை கூறியே வந்தவர்கள். வருபவர்கள். இவர்களில் ஒருவரும் தங்களின் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமான இஸ்லாமையும், முகமது நபியைக் குறித்தும் எந்தவிதமான அடிப்படை உணர்வும் இல்லாதவர்கள். அதாவது இந்தப் பிரச்சினைகள் குரானுக்கும், முகமது நபிக்கும் அப்பாற்பட்டவை. அடிப்படைவாத இஸ்லாமியர்களும், ஜிகாதிகளும் இவர்களில் இருந்தே உருவாகி வருகிறார்கள்.

மூன்றாவது பிரிவினர், மிகவும் திறந்த மனதுடைய, முன்னேற்ற மனோபாவமுடையவர்கள். “நம்மை நாமே சுய பரிசோதனை செய்து, நமது தவறுகள், பிரச்சினைகள் என்னவென்பதை கண்டறிந்து அதனைக் களையவேண்டும்” என்ற எண்ணமுடையவர்கள். அவர்களே இந்த இஸ்லாமியக் கூண்டை துண்டு துண்டாக உடைத்து அதலிருந்து தப்பிச் செல்ல எண்ணுபவர்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக இவர்கள் மேற்கத்தியர்களாலேயே தவறாக புரிந்து கொள்ளப்படுகிறார்கள். மேற்கத்திய மனோபாவம் மதச் சுதந்திரம் உடையது. அதே சமயம் மதங்களை விமரிசிப்பவர்களையும் அது எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. இதனை முஸ்லிம்கள் தந்திரமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அப்படியும் துணிந்து விமரிசனம் செய்பவர்களிடம் “ஒளிவட்டம்” பொருந்திய இஸ்லாமியர்கள் “நீங்கள் இஸ்லாமை விமரிசித்தால் அது உங்கள் மக்களையே காயப்படுத்தியது போலாகும்; அது உங்களை ஒரு இஸ்லாமோஃபோப்-ஆகக் காட்டும். எனவே இஸ்லாமை விமரிசனம் செய்வதை நிறுத்துங்கள்” என்று கூறி அவர்களின் வாய்களை அடைத்துவிடுவார்கள். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது மிரட்டல் எனும் ஆயுதம்.

இதுபோன்ற ஒளிவட்டம் பொருந்திய முஸ்லிம் ஒருவர், எனது தனிமனித சுதந்திரக் கருத்துக்கள் (அது என்னவோ மோசமானது என்பது போல) எப்படி எனக்கு முக்கியமானதாக இருக்கிறதோ அதுபோல இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு மதவெறி முக்கியமானது. எனவே இரண்டும் ஒன்றுதான் என்றார். எப்படி இருக்கிறது பாருங்கள்? இதுபோன்ற சாத்தான்களினால் பாதுகாக்கப்படுவதால்தான் இஸ்லாமியக் கூண்டு இன்னும் அப்படியே இருக்கிறது. தங்களின் சுய லாபத்திற்காக பல மேற்கத்தியர்கள் இதுபோன்ற ஆசாமிகளுக்குத் துணை போகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஒளிவட்டம் பொருந்திய முஸ்லிம்களின் பெருந்திட்டத்தைப் பற்றிய அறிவு எதுவும் இல்லாமலும் அவர்கள் இருக்கிறார்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை நான் மேற்சொன்ன அமைதிப் பெரும்பான்மையினரில் ஒருத்தியாக இருந்தேன். அதிலும் நான் ஒரு சுதந்திர நாட்டில் வாழ்வதாகவும் நம்பிக்கொண்டிருந்தேன். ஒரு பெண் அடித்துத் துன்புறுத்தப்படும்போது அதனை அவள் அமைதியாக பொறுத்துக் கொண்டால், அந்தச் சூழ் நிலைக்கு அவளே பொறுப்பாவாள் என்று எண்ணினேன். நான் அவளாக இருந்தால் அந்த இடத்தை விட்டு ஓடிப்போவேன் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கன்னித்திரையை மீண்டும் தைத்துக் கொள்ளாமல் என்னுடைய புதிய வாழ்க்கையை இங்கேயே, இப்போதே அமைத்துக் கொள்வேன் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று அதனை வேறுவிதமாக யோசிக்கிறேன்.

ஒரு குழந்தைக்கு அதன் வளர்ப்பு முறை எவ்வளவு முக்கியமானது என்று எனக்கு இப்போது புரிகிறது. இஸ்லாம் அம்மதத்தின் பிறக்கும் குழந்தைகளை மிக இளவயதிலேயே மூளைச் சலவை செய்ய ஆரம்பிக்கிறது. இஸ்லாமியக் கலாச்சாரம் தனது கூண்டினைக் கட்டுவதே இவ்வாறாகத்தான். மூளைச் சலவை என்பது மிக மிக வலிமையானது. ஒரு குழந்தையின் வெறுமையான மனதில் எதனை வேண்டுமானாலும் விதைத்து, அதனையே நம்பச் செய்வது மூளைச் சலவையின் ஒர் அங்கம். இஸ்லாம் அதனை மிக வெற்றிகரமாகச் செய்கிறது. எனவே இந்த இஸ்லாமியக் கூண்டில் அடைபட்டுக் கிடக்கும் பெண்களை விடுவிப்பது ஒரு அசாத்தியமான காரியமாக மாறுகிறது. அதற்கு நிறைய நேரமும், சக்தியும் தேவை. ஏனென்றால் குரானையும், முகமது நபியையும் உதாரணமாகக் காட்டி வளர்க்கப்படும் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் தங்களின் சுய அறிவை இழந்து, அடங்கி, ஒடுங்கி அடிமைகளைப் போல வாழப்பழகுகிறார்கள். வயது ஏற ஏற இந்தக் கூண்டின் கதவு இன்னும் இறுக்கமாகி அதிலிருந்து தப்ப அவர்களால் இயலாமலேயே போகிறது.

ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாவிற்குக் கட்டுப்பட்டவன். ஆனால் அவனது பெண்களும், பெண் குழந்தைகளும் அவனையும் விட மேலாக அல்லாவிற்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்களின் மீதான ஆண்களின் ஆதிக்கம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. காலம் செல்லச் செல்ல அப் பெண்கள் இதுபோன்ற ஒடுக்கப்படுவதற்குப் பழகி விடுவதால், ஒரு வெளிச் சக்தியால் தாங்கள் நசுக்கப்படுகிறோம் என்ற உணர்வைக் கூட அவர்களின் ஆழ் மனது இழந்துவிடுகிறது. அதையும் விட அம்மாதிரியான நடத்தையே தங்களுக்குப் பாதுகாப்பானது என்றும் நம்ப ஆரம்பிக்கிறார்கள். இந்தத் துயரத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வாழப் பழகிவிட்ட பெண்கள் அதனை ஒரு பெருமிதமாகக் கூட நினைத்துக் கொள்கிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். Stockholm Syndrome-ஆல் பாதிக்கப்பட்டு, தன்னைக் கடத்தியவனையே காதலிக்கும் கடத்தப்பட்டவர்கள் போலத் தங்களை அடக்கி ஆள்பவனுடன் ஒரு ஆழ்மன உறவினை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். தாங்கள் வாழ்வது ஒரு அடிமை வாழ்க்கைமுறை என்பதை பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் உணர்வதேயில்லை என்பதுதான் இதில் பேராச்சரியம் தரும் ஒரு செய்தி.

ஒருமுறை துருக்கியப் பெண்கள் நெதர்லாந்தில் நடத்தும் இயக்கமான Milli Gorus-இன் தலைமையகத்திற்குச் சென்றிருந்தேன். அவர்கள் மிகுந்த படோடோபத்துடன் தங்களின் இயக்கம் குறித்துப் பெருமிதம் கொண்டவர்களாக எல்லாவற்றைக் குறித்தும் பேசினார்கள். ஏதேனும் எதிர்மறைக் கருத்து எதிர்ப்பட்டால அதனை மறுத்து ஆவேசத்துடன் கூச்சலிட்டார்கள். தாங்கள் ஒடுக்கப்படுவதைக் குறித்து ஒருவித மயக்கத்துடன், ” நான் ஹிஜாப் அணிய ஆசைப்படுகிறேன். என் கணவன் என்ன சொன்னாலும் கட்டுப்படுவேன்” என்றார்கள். அங்கிருந்த ஒரு மொராக்கோ நாட்டு முஸ்லிம் பெண்ணிடம் இது குறித்துக் கேட்க, அவள் “நானும் ஹிஜாப் அணியவே ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அது அல்லாவால் விதிக்கப்பட்ட கட்டளை” என்றாள். அல்லா சொன்னபடியெல்லாம் நடக்க ஆசைப்பட்டால் இவள் கூண்டிலேயே அடைபட்டுக் கிடக்க வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டேன்.

*

islam-women-jihad-slavery

இதற்கிடையே நிறைய முஸ்லிம்கள் இஸ்லாமின் வழியாக ஞானம் (englightenment) வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஞானம் அத்தனை எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒரு பொருளல்ல. அது தானாக எவருக்கும் கிடைத்தும் விடாது. எனவேதான் இஸ்லாமைப் பற்றிய முஸ்லிம்களின் எண்ணம் மாற வேண்டும் என்று சொல்லுகிறேன். தங்களைக் குறித்து, தங்களின் மத நம்பிக்கையைக் குறித்து, வாழும் வாழ்க்கையைக் குறித்து, வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுப்பது குறித்து, இஸ்லாமில் தீவிரமாக வலியுறுத்தப்படும் அர்த்தமற்ற பாலின வேறுபாடுகள் குறித்து, நவீன காலத்திற்கு ஒத்துவராத நடத்தை விதிகள் குறித்து முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமியக் கலாச்சாரத்தில் இன்று நிகழும் பிற்போக்குத்தனங்களிலிருந்து விடுதலையடைய வேண்டுமானால், அது தன்னுடைய இன்றைய தாழ்ந்த நிலைக்கு மற்றவர்களைக் குறை சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அர்த்தமற்ற பாலின ஒழுக்கவிதிச் சட்டங்களை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். கன்னித்தன்மை இழக்காத ஒரு கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்த்தால் எத்தனை இஸ்லாமியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது? எத்தனை முஸ்லிம் ஆண்களும், பெண்களும் தினம் போலித்தனமின்றி உறவாடிக் கொள்கிறார்கள்? சுவனத்தில் தனக்கு இடம் வேண்டும் என்பதற்காக தனது குடும்பத்தின்மீதும், பெண்களின் மீதும் வன்முறையையும், அடக்குமுறையையும் செலுத்துவதால் விளைந்த நன்மைகள்தான் என்ன என்பதனை யோசிக்க வேண்டும். இவ்வாறு நடத்தப்பட்டதால் அந்தப் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், சமுதாயத்திற்கும் உண்டான பாதிப்புகள் என்ன என்பதனையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

கட்டுக்கடங்காத மக்கள் பெருக்கத்தால் இஸ்லாமிய நாடுகள் பெரும் துன்பமடைந்து, வறுமைக்குள் தள்ளப்படுகின்றன. இஸ்லாம் கூறும் கடுமையான பாலினச் சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டும், பால்வினை நோய்களும், எய்ட்ஸ் போன்ற நோய்களும் இஸ்லாமிய நாடுகளில் அதிகரிப்பதைக் காண்கிறோம், இதனைக் குறித்தும் இஸ்லாமியர்கள் விவாதிக்க வேண்டும்.

இன்றைய இஸ்லாமிய உலகம் ஒரு மாபெரும் சுழலில் சிக்கித் தவிக்கிறது. அந்த நிலை மாற புதிய சிந்தனைகள் இன்றைக்குத் தேவை. இஸ்லாமிய உலகம் தன்னைத் தானே உள்ளிருந்து புதுப்பித்துக் கொள்ளாவிடில் நிலைமை இன்னும் மோசமாகவே வாய்ப்பிருக்கிறது. இது இஸ்லாமியர்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(முற்றும்)

20 Replies to “கன்னியின் கூண்டு – 3”

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள். முழு புத்தகத்தையும் தமிழாக்க வேண்டுகிறேன். படிக்கவும், பகிரவும் பயன்படக்கூடும்.

  2. வீரமணி, கருணாநிதி, திருமாவளவர் ஆகியோருக்கு ஒரு பிரதி அனுப்புவது நல்லது. அப்படியே எஸ்ரா சற்க்குனத்திர்க்கும் ஓன்று.

  3. இத்தொடர் நூலாக வெளிவர வேண்டும் என விரும்புகின்றேன்.

  4. இஸ்லாம் பற்றி முழுவதும் அறிய வேண்டுமானால் குரானையும் , மற்றும் புகாரி மற்றும் முஸ்லீம் ஆகிய இரண்டு ஹதீசுகளையும் மட்டுமாவது படித்தால் தான் முழு விவரம் தெரியும். மேலும் இறையில்லா இஸ்லாம் ( iraiyillaaislaam.blogspot) ஆகியவற்றை படிக்க வேண்டும்.

    1.அன்பை போதிப்பதற்கு பதிலாக , இறை மறுப்பாளர்களை கொன்றுவிடும்படி கட்டளை இடுகிறது இஸ்லாம். மேலும் பிற மதத்தவர்கள் இஸ்லாத்தில் சேர மறுத்தால் கொன்றுவிடும்படி கட்டளை இடுகிறது.

    2. இஸ்லாமிய முறைப்படி ஒரு நாட்டில் வாழ முடியவில்லை என்றால், வேறு நாட்டுக்கு போகும் போது, உடன் வர மறுத்தால் கணவன், மனைவி, மகன் , மகள், தாய், தந்தை, ஆகியோரை ஆகிய நெருங்கிய உறவினர்களை கூட கொன்றுவிடும்படி இஸ்லாம் கட்டளை இடுகிறது.

    3. பெண்ணடிமை, பெண்கொடுமை ஆகியவை இஸ்லாத்தில் உச்சகட்டம். ஒரு பெண்ணை ஒரு காமுகன் கற்பழித்து விட்டால், அந்த பெண் சட்டத்தின் முன் சென்று , அந்த காமுகன் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தால், அந்த பெண்ணுக்கு ஆதரவாக நாலு பேர் ஐ விட்னெஸ் சாட்சியம் அளிக்க வேண்டும். இல்லை என்றால், அந்த பெண் விபசாரம் செய்ததாக சொல்லி சாட்டையால் மற்றும் கற்களால் அடித்து கொன்றுவிடுகிறார்கள். எந்த காமுகனாவது தான் ஒரு பெண்ணை கற்பழிக்கும் போது நாலு பேர் முன்பா செய்வான் ? என்ன சட்டம் பாருங்கள்.

    4. மசூதிகளிலும், இன்ன பிற இறை வழிபாட்டு தளங்களிலும் ஆண்கள் மட்டுமே தலைமை பூசாரியாக் இருக்க முடியும். மசூதிக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை.

    5. மகனுக்கு உள்ள சொத்தில் பாதி தான் மகளுக்கு. இதுதான் இஸ்லாம் வழங்கும் சமத்துவம்.

    இதனால் , உலகெங்கிலும் பெண்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறும் நாள் சமீபத்தில் தான் உள்ளது. ஆணாதிக்கத்தின் ஒட்டுமொத்த உருவமே ஆபிரகாமிய மதங்கள்.

  5. மிகவும் தரமான கட்டுரை.இஸ்லாம் என்பது அரபுத்துவம்தானே ? அரேபியாவின் நாகரிகமும் அனைத்து சமூகங்களைப்போன்று படிப்படியான வளர்ச்சியைப் பெற்ற சமூகம்தான். அரேபிய நாகரிகம் மட்டும்தான் அல்லாவின் நாகரீகம்.அல்லாவால் அங்கிகரிக்கப்பட்ட நாரீகம் என்ற கருத்து மிகவும் மோசமான மூட….. நம்பிக்கையாகும். எல்லா சமூகமும் மனித வளம் கொண்ட எராளமான அம்சங்களைத் உலகிற்கு வழங்கி உள்ளது.அரேபியாவின் பங்கு மிகவும் சிறியதே.
    இஸ்லாம் என்ற போலி வேடத்தில் அரபுத்துவம் உலகை ஆளவேண்டும் என கபடநாடகம் ஆடுகின்றது. இதை முறியடிக்க வேண்டியதுமுக்கியப்பணியாகும்.

  6. If possible get the book ”god who hates”written ex muslim syrian lady Wafa Sultan and publish.

  7. இஸ்லாம், கிறிஸ்துவ – ஆபிரகாமிய மதங்களின் தாய் புராணக் கதை பைபிள் பழைய ஏற்பாடு. இதன்படி ஆபிரகாமும் மனைவி சாராளும் ஒரு தகப்பன் வழி அண்ணன் தஙகி த்கன் இடு பற்றிய கட்டுரை இங்கே

    https://chennaipluz.in/wp/tamilchristian/2013/09/03/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/

    தொடக்கநூல் (ஆதியாகமம்)35:21 மீண்டும், இஸ்ரயேல் அங்கிருந்து புறப்பட்டு மிக்தால் ஏதேருக்கு அப்பால் கூடாரம் அடித்தார். 22 இஸ்ரயேல் அந்நிலப்பகுதியில் குடியிருந்தபொழுது, ரூபன் தன் தந்தையின் மறுமனைவியாகிய பிலகாவுடன் உடலுறவு கொண்டான். இஸ்ரயேல் அதைக் கேள்விப்பட்டார்.

    2சாமுவேல் 16:15 இதற்கிடையில் அப்சலோமும் இஸ்ரயேல் அரனைவரும் எருசலோம் வந்தடைந்தார். அகிதோபலும் அவனோடு இருந்தான்.16 தாவீதின் நண்பனான அர்க்கியன் ஊசாய் அப்சலோமிடம் சென்று, வாழ்க அரசர்! வாழ்க அரசர்! என்று வாழ்த்தினான்.
    20 அப்சலோம் அகிதோபலிடம், நான் என்ன செய்யலாம் என்று அறிவுரை கூறு என்று கேட்டான்.21 அகிதோபல் அப்சலோமிடம், என் தந்தை தன் வீட்டைக் காக்க இங்கு விட்டுச் சென்றுள்ள வைப்பாட்டியரிடம் சென்று அவர்களோடு உறவு கொள். நீ உன் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டாய் என்று இஸ்ரயேல் அனைவரும் கேள்விப்படுவர். உன்னொடு இருப்பவர் கை ஓங்கும் என்றான்.22 அப்சலோமுக்காக மாடியில் ஒரு கூடாரம் அடைக்கப்பட்டது. இஸ்ரயேல் முழுவதும் அறிய, அப்சலோம் தன் தந்தையின் வைப்பாட்டியரோடு உறவு கொண்டான்.23 அந்நாளில் அகிதோபலின் ஆலோசனை கடவுளின் வாக்காக கருதப்பட்டது.

    பழங்கால நாகரிகமற்ற மக்களின் புத்தகங்களை இறைநூல் எனும்போது தவறுகளை அதன் அடிப்படையில் இன்றும் நியாயம் கூறும்போது பிரச்சனையே.
    கிறிஸ்துவ உலகில் பெண்கள் முழு உரிமைபெற்றதும் மிகப்பிற்காலமே, பவுல் பெண்கள் சர்ச்சுகளில் பேசக்கூடாது என்கிறார்.

    பவுல் பாதிரியாக பெண்ணின் நல்ல கணவனாக இருக்க வேண்டும் என்பார், செயின்ட்.பீட்டர் திருமணமானவரே, ஆயினும் கத்தோலிக்கம் பாதிரி திருமணம் மறுக்கிறது.
    பைபிள், குரானை அதற்கு உரியதைவிட, பழங்கால மக்களின் ஊகங்கள், புனையல்கள் என்பதைவிட்டு, அதன் அடிப்படையில் உலகை காண்பதால் தான் இத்தகைய நிகழ்வுகள்.

  8. ஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((

    5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை
    லாமியா அல் காம்தி என்ற 5 வயது குழந்தை டிசம்பர் 25 ஆம் தேதி 2011இல் பலவிதமான காயங்களுடனும், நசுக்கப்பட்ட தலையுடனும், உடைக்கப்பட்ட நெஞ்செலும்பு, இடது கை, உடலெங்கும் காயங்களும் சூடுகளும் போன்ற பலவிதமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்குழந்தை அக்டோபர் 22 ஆம் தேதி 2012இல் மரணமடைந்தது.
    இந்த குழந்தையின் தந்தை பாயன் அல் காமிதி என்பவர் இஸ்லாமிய பிரச்சாரகர். இவர் முஸ்லீம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி வந்து இஸ்லாமை விளக்குபவர். இவர் கம்பிகளாலும், குச்சிகளாலும் இந்த குழந்தையை சித்ரவதை செய்ததை ஒப்புகொண்டிருக்கிறார் என்று Women to Drive என்ற சவுதி பெண்கள் குழு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
    இந்த தந்தை லாமியாவின் கன்னித்தன்மையை சந்தேகித்தார் என்றும், அந்த குழந்தையை ஒரு மருத்துவர் மூலம் பரிசோதித்தார் என்றும் தெரிவித்திருக்கிறது இந்த குழு.

    ராண்டா அல் கலீப் என்ற மருத்துவமனை சமூகசேவகி இந்த மருத்துவமனையில் வேலை செய்பவர். அந்த குழந்தையின் முதுகு உடைக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த குழந்தை உடலெங்கும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தது என்றும் கூறியிருக்கிறார்
    ”அந்த குழந்தையின் மலத்துவாரம் கிழிக்கப்பட்டு பிறகு அதனை சூடு வைத்து மூட முயற்சிக்கப்பட்டிருக்கிறது” என்றும் அந்த குழந்தையின் தாயார் அந்த மருத்துவமனை ஊழியர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

    தந்தை இதுவரை சிறையில் இருந்த காலமே அவருக்கு தகுந்த தண்டனை என்றும், அவர் அந்த குழந்தைக்காக ரத்தப்பணத்தை அந்த குழந்தையின் தாயிடம் கொடுக்க வேண்டும் என்றும் அதுவே இஸ்லாமிய நீதி என்றும் நீதிபதி தீர்ப்பு அளித்திருப்பதை பெண்கள் உரிமை குழு எதிர்க்கிறது.

    மனல் அல் ஷரிப் உட்பட மூன்று சவுதி பெண்கள் உரிமை போராட்டக்காரர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்திருக்கிறார்கள்.
    ஒரு தந்தை தன் குழந்தைகளை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்க முடியாது, ஒரு கணவன் தன் மனைவியை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்கமுடியாது என்ற இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இந்த போராட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.
    நன்றி: திண்ணை

    இச்செய்திக்கு சுவனப்பிரியர்கள் என்ன சப்பைக் கட்டு கட்டப் போகிறார்கள்? இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியும் இசுலாமிய மதச்சட்டத்தின்படித்தான் செய்ததாகக் கூறிக் கொள்வார்.

    பதிவர் நந்தவனத்தான் அவர்களது பின்னூட்டம் இதே விஷயம் பற்றிய இன்னொரு பதிவில் இதோ. அது எனது கருத்துமாக இருப்பதாலேயே அதையும் இங்கே இடுகிறேன்.

    குழந்தையை வன்கொடுமை செய்யபவர்களை கொன்றுவிட வேண்டும் என்பதுதான் எமது கருத்து. அல்லது குறைந்த பட்சம் ஆயுட்சிறை அளிக்கவேண்டும். ஏனெனில் இக்குற்றவாளிகள் மனநோயாளிகள். இவர்களை சில வருடம் சிறையில் வைத்துவிட்டால் வெளியில் வந்து அதையே திரும்ப செய்வார்கள். இவர்களை திருத்தவே இயலாது.

    ஆனால் அப்படிப்பட்ட குற்றவாளி, அதிலும் சொந்த மகளை வன்புணர்வு செய்ததோடு மட்டுமல்லாது அவளை சித்திரவதை செய்த ஒருவனை தண்டிக்காமல் விட ஆண்டவன் ஒரு சட்டம் போட்டிருக்கிறான் என்றால் திருவள்ளுவர் மாதிரி ‘கெடுக உலகு இயற்றியான்’ எனத் தோன்றுகிறது (அவன் இருந்தால்).

    இதை பீ மாதிரியான மதத்தலைவனுக ஆதரிப்பானுக அடத்தூ! பிறரின் அப்பா மகள் உறவை ஏன் கொச்சைப்படுத்துகிறார்கள், அந்த சிந்தனை எங்கிருந்து வருகிறது என்பது இப்போதுதானே புரிகிறது. இவனுகளுக்கு பிள்ளையாக பிறந்த பெண்களை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது.

    ஒரு 17 வயதுப் பெண் குழந்தைக்கு உணவளிக்கும் தவற்றைச் செய்ததற்காக அவள் தலையை வெட்டிய சவுதி அரசு இப்போது பல்லிளித்துக் க்ண்டு நிற்கிறது.

    கொலைகாரப் பாவி

  9. டய் பொறுக்கிகளா? இஸ்லாத்தின் அடிப்படை தெரியுமா? குரானையும், புகாரி ஹதீசையும் முழுவதும் உருப்படியாக பொருள் தெரியும்படி படித்தால் நீங்களெல்லாம் முஸ்லிம் மார்கத்திற்கு மாறிவிடிவீர்கள், இஸ்லாத்தில் ஜாதி(வர்ணம்) இல்லை, எல்லோரும் சமம், மனித நேயம் உள்ளது, அரபு நாடுகளில் எத்தனையோ ஹிந்துக்கள் வியாபாரம் செய்து நல்ல வசதியாக இருக்கிறார்கள், அங்கே வருமான வரி இல்லை, எந்த ஒரு ஹிந்துவையும், அரப் முஸ்லிம்களால் கொள்ளபடுவது இல்லை, பல நாட்டு மக்கள் வேலை செய்தும், வியாபாரம் செய்தும் பல ஆண்டுகளாக வசதியுடன் தான் வாழ்ந்து வருகிறார்கள், இந்த கூமுட்டை மேலே எழுதுவது எல்லாம் சுத்தமான ஒரிஜினல் பொய்.

  10. அன்பு சகோதரர் திரு சஹாபுதீன் அவர்களே! திரு மணிவண்ணனை கூமுட்டை என்றும் பொறுக்கி என்றும் நல்ல பண்பட்ட (?) வார்த்தைகளை கொண்டு திட்டி இருகிறீர்கள். உங்களுக்கு இந்த நல்ல பண்பாட்டை கற்றுகொடுத்த உன் அன்பு(!!!) மதத்திற்குதான் நன்றி.கூறவேண்டும்.

    இஸ்லாத்தில் எல்லோரும் சமம் என்றால் பாகிஸ்தானில் மற்ற முஸ்லிம் நாடுகளில் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்களுக்குள் சண்டை ஏற்பட்டு மண்டை உடைவது ஏனப்பா? அது ஏதாவது வீர விளையாட்டு வகையை சேர்ந்ததா?

    குரானை நீங்கள் ஒழுங்காக படிக்காததினால்தான் இப்படி பேசுகிறாய். நாங்கள் குரானை cover to cover படித்த பின்னர்தான் நாங்கள் இப்படி பேசுகிறோம் அய்யா!குரானை மிகவும் பொருள் தெரியும்படி படித்தால் வெறுத்து போய் முஸ்லிம்களில் பெரும்பாலோர் வேறு மதங்களுக்கு மாறி விடுவார்கள். ஆனால் கொலை மிரட்டல் மூலம் அவர்களை அந்த மதத்தில் தக்க வைத்துள்ளனர். (உதாரணம்: 1) ருஷ்டி 2) பங்களா தேஷ் நாட்டிலிருந்து துரத்தி அடிக்கப்பட்ட ஒரு பெண்ணியவாதி). இந்த மிரட்டல்களை பார்த்தபிறகும் மற்ற பயந்தாகொள்ளி முஸ்லிம்கள் வாயை திறந்து பேசுவார்களா?

    இஸ்லாத்தில் மனிதநேயம் உள்ளது. இது 21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஜோக். சகோதரா! உமக்கு மனசாட்சி என்று ஒன்று உள்ளாதா? அது உண்மையில் இருந்தால் இப்படி எழுதமாட்டீர்கள் அய்யா. பாகிஸ்தானில் முஸ்லிம் தலிபான் தீவிரவாதிகளால் குண்டடி பட்டு இன்று பிரிட்டின் நாட்டிலிருக்கும் மலாலா பற்றி உமக்கு தெரியாதோ? அவள் செய்த பாவம்தான் என்ன? பெண்கள் படிக்க கூடாது என்று அல்லா சொன்னாரா? அல்லது அது இஸ்லாமில் இருக்கும் ஆண் ஆதிக்கவாதிகள் எண்ணமா?

    அரபு நாட்டில் வருமான வரி இல்லை என்பதால் அந்த நாடு மனித நேயமுள்ள நாடு என்று ஆகிவிடுமா? இங்கேயுள்ள முஸ்லிம்கள் மாட்டு கறி வியாபாரம் செய்து கொட்டீஸ்வரர்களாக உள்ளனர்.மேலும் பீடி தொழில் மற்றும் தோல் பதனிடு தொழில் என்று பல தொழில்கள் செய்து பணத்தில் புரள்கிறார்கலே அது உமது கண்ணுக்கு தெரியவில்லையா அன்பு சகோதரா?

    1947 ல் பாகிஸ்தானில் இருந்த இந்துக்களின் ஜனத்தொகை என்ன? இப்போது அவர்களின் ஜனத்தொகை என்ன? 1947 ல் இந்தியாவிலிருந்த முஸ்லிம்களின் ஜனத்தொகை என்ன? இப்போது அவர்களின் ஜனத்தொகை என்ன? இதை ஒப்பிட்டு பார்த்தால் பாகிஸ்தானில் இந்துக்கள் எப்படி அழிந்தார்கள் அதற்கு யார் காரணம் என்று தெரியும். பிரிவினையின்போது நவகாளியில் (இங்கு முஸ்லிம்கள் majority — இந்துக்கள் minority ) 5000 இந்துக்கள் கொல்லப்பட்டனரே அது தெரியுமா உமக்கு? அது பழைய கதை உமக்கு தெரியாமல் கூட இருக்கலாம்.ஆனால் இபோது காஷ்மீரில் 4,00,000 இந்துக்கள் தனது சொந்த நாட்டிலேயே துரத்தி அடிக்கப்பட்டு வீடு வாசலை விட்டு அபலைகளாக இந்தியாவின் வெவேறு பகுதிகளில் வாழ்ந்து வருவது உமக்கு தெரியுமா என் பாசமிகு பங்காளியே? அவர்களை ஓடி பிடித்து விளையாட்டில் துரத்தி விட்டீர்களா?

  11. \\\ டய் பொறுக்கிகளா? இஸ்லாத்தின் அடிப்படை தெரியுமா? குரானையும், புகாரி ஹதீசையும் முழுவதும் உருப்படியாக பொருள் தெரியும்படி படித்தால் \\\

    ஜெனாப் ஷஹாபுத்தீன் சாஹேப்…..

    நீங்கள் சொல்வதையெல்லாம் வாசித்தால் ஒருவருடைய பேசுமுறை இப்படித்தான் இருக்கும் என்று பறைசாற்றுகிறீர்கள் போலும்….

    கருத்து வேறுபாடுகள் இருக்கட்டும்……கருத்துக்களை கண்யம் குறையாது எப்படிப் பகிர்வது…..என்பதைப்பற்றி ஜெனாப் சுவனப்ரியன் போன்றோரிடம் கற்றறிந்து பின்னர் இணையத்தில் முழக்கமிடலாமே

  12. ‘A.SAHABUDEEN ‘- இஸ்லாத்தின் அடிப்படை தெரியுமா? குரானையும், புகாரி ஹதீசையும் முழுவதும் உருப்படியாக பொருள் தெரியும்படி படித்தால் நீங்களெல்லாம் முஸ்லிம் மார்கத்திற்கு மாறிவிடிவீர்கள்,//

    சுபவீரபாண்டியன் இவரை அல்லக்கையாக வைத்துக் கொள்ளலாம். இஸ்லாத்தின் அடிப்படை எங்களுக்கு வேண்டாம் பாஸ். எங்களால் வாழ்க்கை முழுவதும் முட்டாளாக வாழ முடியாது.

    ஒரு ஆட்டையோ, மாட்டையோ வெட்டினால் அந்த உயிரை திரும்பக் கொண்டு வர முடியாது. ஆனால் நம்மால் விவசாயத்தில் நெற்பயிர்களை நம் முயற்சியால் விளைவிக்க முடியும். எனவே சைவ உணவையே சாப்பிடுதல் நன்று என்ற அளவுக்கு எங்க முன்னோர்கள் அறிவு பெற்றவர்களாக இருந்தார்கள். இது தான் உண்மையான பகுத்தறிவு. அதையெல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு குருட்டுத்தனமா, பைத்தியக்காரர்கள் போல வாழ்க்கை நடத்த எங்களால் முடியாது. வேற எங்கயாவது போயி ஆள் பிடிங்க!

  13. ஒரு நாட்டிலிருந்து இன்னொருனடிற்கு சென்று வியாபாரம் செய்து பிழைப்பது என்பது இயற்கைதானே ஐயா என் இப்படி பொலம்பல் -கொஞ்சம் யோசித்து பாருங்கள் கடௌஉல் பெறலே கொலை செய்வது எந்த விதத்தில் நியயம் சொல்லுங்கள் திரு சஹ்புடீன்

  14. மிக்க நன்றி திரு ஹோநேஸ்ட் மண் அவர்களே

  15. நன்றி இசகுரன் ப்லொக்ச்பொட்

    2013 ரமளான் நாள் 2 – முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்

    அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம். நீ என்னுடைய முந்தைய கடிதத்தை படித்து இருந்திருப்பாய் என்று நம்புகிறேன். உன்னுடைய விருப்பத்தின் படியே, இஸ்லாமிம் பற்றிய சில விவரங்களை உன்முன் வைக்கிறேன். இதன் மூலம் நீ இஸ்லாம் பற்றி விவரமாக விளக்கலாம்.

    மக்காவும் மதினாவும்:

    முஹம்மது மக்காவில் இருக்கும் வரைக்கும் ஒரு அமைதியான, சகிப்புத்தன்மையுள்ள வாழ்க்கையை வாழ்ந்தார், மற்றவர்களும் அந்தப்படியே வாழும் படி கேட்டுக்கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களும் பெரும்பான்மையாக சகிப்புத்தன்மையுள்ள வசனங்களாகவே வந்து இறங்கின. ஆனால், அவர் மதினாவிற்கு வந்த பிறகு, ஆட்களின் பலம் அவருக்கு அதிகரித்த போது, அமைதி மார்க்கமாக இருந்த இஸ்லாம், சிறிது சிறிதாக வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தது. முஹம்மது மதினாவில் வாழ்ந்த அந்த 10 ஆண்டுகளில் இஸ்லாமுடைய ஆரம்பத்தை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டார்.

    இந்த கடிதத்தில், இஸ்லாமின் முதல் மூன்று வழிப்பறி கொள்ளைகள் பற்றி உனக்கு சுருக்கமாக விவரிக்கிறேன். இவைகளை ஆங்கிலத்தில் “Raid” என்பார்கள்.

    என்னது? வழிப்பறி கொள்ளையா? இப்படியெல்லாம் இஸ்லாமில் நடைப்பெறவில்லை என்று நீ நினைக்கிறாயா? தம்பி தொடர்ந்து படி. மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரி வந்த முதல் ஆண்டே முஹம்மது தம் கைவரிசயை காட்ட ஆரம்பித்துவிட்டார். மார்ச், ஏப்ரல் மற்று மே மாதங்களில் தொடர்ந்து வழிப்பறிக்காக ஆட்களை முஹம்மது அனுப்பினார். கீழ்கண்ட மூன்று வழிப்பறி கொள்ளைகள் மூலமாக, முஹம்மதுவிற்கு எந்த பொருளும் கிட்டவில்லை. மேலும் எந்த ஒரு உயிர்ச்சேதமும் நடைப்பெறவில்லை. சரி, வழிப்பறி கொள்ளைகள் பற்றி இப்போது படித்து அறிந்துக்கொள். அதன் பிறகு என் கேள்விகளை முன்வைக்கிறேன்.

    முதல் வழிப்பறிக் கொள்ளை (First Raid): ஸய்ஃபுல் பஹர்

    ஹிஜ்ரி 1, ரமழான் (கி.பி. 623 மார்ச்) மாதம் ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். 30 முஹாஜிர்கள் இந்தப் பிரிவில் இடம்பெற்றனர். அவர்களுக்கு ஹம்ஜா(ரழி) அவர்களைத் தலைவராக ஆக்கினார்கள். ஷாமிலிருந்து மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் குழுவை வழி மறிப்பதற்காக இவர்கள் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் முந்நூறு நபர்களும் அவர்களுக்குத் தலைமையேற்று அபூஜஹ்லும் வந்து கொண்டிருந்தான். ‘ஈஸ்’ என்ற நகரத்தின் ஓரத்தில் உள்ள ‘ஸய்ஃபுல் பஹ்ர்’ எனும் இடத்தை இரு கூட்டத்தினரும் அடைந்த போது சண்டையிடுவதற்காக அணிவகுத்தனர். ஆனால், இரு கூட்டதினருக்கும் நண்பராக இருந்த மஜ்தி இப்னு அம்ர் அல்ஜுஹனி என்பவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி போரைத் தவிர்க்கச் செய்தார்.

    இப்போல் நபி (ஸல்) ஹம்ஜாவுக்கு வெள்ளை நிறக் கொடியைக் கொடுத்தார்கள். இதுதான் நபி (ஸல்) அவர்கள் நிறுவிய முதல் கொடியாகும். இக்கொடியை அபூ மர்ஸத் கன்னாஸ் இப்னு ஹுஸைன் அல்கனவி (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

    இரண்டாம் வழிப்பறிக் கொள்ளை (Second Raid): ‘ராபிக்’

    ஹிஜ்ரி 1, ஷவ்வால் (கி.பி. 623 ஏப்ரல்) மாதம் நபி (ஸல்) அவர்கள் ‘ராபிக்’ என்ற இடத்தை நோக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். இதற்குத் தலைவராக உபைதா இப்னுல் ஹாரிஸ் இப்னுல் முத்தலிப் (ரழி) இருந்தார். இப்படையில் 60 முஹாஜிர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் ‘பத்தன் ராபிக்’ என்ற இடத்தில் அபூஸுஃப்யானைச் சந்தித்தார்கள். இரு கூட்டத்தார்களும் ஒருவரை நோக்கி ஒருவர் அம்பெய்து கொண்டனர். மற்றபடி, உக்கிரமான சண்டை ஏதும் நடைபெறவில்லை.

    காஃபிர்களின் படையிலிருந்த அல்மிக்தாத் இப்னு அம்ர் அல்பஹ்ரானி, உத்பான் இப்னு கஸ்வான் அல்மாஜினி ஆகிய இருவர் முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டனர். இவர்கள் முஸ்லிமாகத்தான் இருந்தனர். என்றாலும், ஹிஜ்ராவிற்காக மக்காவிலிருந்து வெளியேற முடியாத காரணத்தால், காஃபிர்களுடன் சேர்ந்திருந்தனர். எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பித்து முஸ்லிம்களிடம் சேர்ந்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த வியாபாரக் கூட்டத்துடன் வந்திருந்தனர்.

    இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னு அல் முத்தலிப் இப்னு அப்து மனாஃப் ஏந்தியிருந்தார்கள்.

    மூன்றாம் வழிப்பறிக் கொள்ளை (Third Raid): ‘கர்ரார்’

    ஹிஜ்ரி 1, துல்கஅதா (கி.பி. 623 மே) மாதம் ‘கர்ரார்’ என்ற இடத்திற்கு ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) தலைமையில் படைப் பிரிவு ஒன்றை நபி (ஸல்) அனுப்பினார்கள்.

    குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடைமறிப்பதற்காகப் புறப்பட்ட இவர்களிடம் ‘கர்ரார்’ என்ற இடத்தை தாண்டிச் செல்லக் கூடாது என நபி (ஸல்) அவர்கள வலியுறுத்தினார்கள். இந்தப் படை கால்நடையாகவே சென்றது. பகலில் பதுங்குவதும் இரவில் நடப்பதுமாக வியாழன் காலை கர்ராரை அடைந்தது. ஆனால், அந்த வியாபாரக் கூட்டமோ இவர்கள் சென்றடைவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அந்த இடத்தைக் கடந்து சென்று விட்டிருந்ததால், இவர்கள் சண்டையின்றித் திரும்பினர். இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

    இவைகள் போர்களா? வழிப்பறி கொள்ளைகளா?

    தம்பி, மேற்கண்ட மூன்று நிகழ்ச்சிகளை நீ படித்துள்ளாய். நீ நன்றாக நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் படி, அந்தந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட சில வரிகளை கீழே தருகிறேன். இவைகளை படித்து இவைகள் வழிப்பறி கொள்ளைகளா அல்லது போர்களா என்று நீயே முடிவு செய்.

    முதலாவது கொள்ளை – ” ஷாமிலிருந்து மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் குழுவை வழி மறிப்பதற்காக இவர்கள் சென்றார்கள்.”

    இரண்டாவது கொள்ளை – இவர்கள் ‘பத்தன் ராபிக்’ என்ற இடத்தில் அபூஸுஃப்யானைச் சந்தித்தார்கள். இரு கூட்டத்தார்களும் ஒருவரை நோக்கி ஒருவர் அம்பெய்து கொண்டனர்.

    மூன்றாவது கொள்ளை – குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடைமறிப்பதற்காகப் புறப்பட்ட இவர்களிடம் ‘கர்ரார்’ என்ற இடத்தை தாண்டிச் செல்லக் கூடாது என நபி (ஸல்) அவர்கள வலியுறுத்தினார்கள்.

    கேள்விகள்:
    வியாபாரிகள் தங்கள் வழியே சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்களைத் தாக்கி, பொருட்களை அபகரிக்க ஆட்களை அனுப்பினார் முஹம்மது. இந்த செயலுக்கு என்ன பெயர் வைப்பது?
    ஆயுதங்கள் இல்லாமல், போருக்கு ஆயத்தமில்லாமல் சென்றுக்கொண்டு இருக்கும் வியாபாரிகளை திடீரென்று தாக்குவதற்கு என்ன பெயர்?
    இந்த வகையான வழிப்பறி கொள்ளைகளை செய்ய முஹம்மதுவை தூண்டியது எது?
    மதினாவிற்கு இடம்பெயர்ந்த பிறகு, முஹம்மதுவும் அவரது சகாக்களும் என்ன வியாபரம் புரிந்து சம்பாதித்தார்கள்? அவர்களின் அனுதின உணவிற்கு என்ன செய்தார்கள்? உழவுத்தொழில் செய்தார்களா? ஆடுகளை, ஒட்டகங்களை மேய்த்து சம்பாதித்தார்களா? வெளியூர்களுக்குச் சென்று வியாபாரம் புரிந்தார்களா? முஹம்மது நபியாக மாறுவதற்கு முன்பு நன்றாக வியாபாரம் செய்யக்கூடியவர் இப்போது ஏன் பணத்திற்காக, தங்களுடைய ஏழ்மையை போக்கிக்கொள்வதற்காக கீழ்தரமான வழிப்பறி கொள்ளையில் ஈடுபடவேண்டும்?
    இந்த வகையான வழிப்பறி கொள்ளைகளை செய்யும் படி, அல்லாஹ் கட்டளையிடாமல், முஹம்மது தானாக செய்து இருக்கமாட்டார். இப்படியிருக்க, ஒரு இறைவன் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட அனுமதி கொடுப்பானா?

    தம்பி, இன்னும் நான் சொல்லிக்கொண்டே செல்வேன், ஆனால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன். நீ இவைகள் படித்து, உனக்குத் தெரிந்த பதில்களை கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். (என் தம்பி மட்டுமல்ல, எந்த ஒரு முஸ்லிமாக இருந்தாலும் இவைகளுக்கு பதில்களை எழுதி அனுப்பலாம்.)

    திருடுவதை நிறுத்தும் படி பைபிள் கட்டளையிடுகிறது:

    ஒருவன் திருடுகின்றவனாக இருந்தால் தன் திருட்டை நிறுத்துவானாக. அவன் வேலை செய்யத் தொடங்கட்டும். அவன் தனது கைகளை நல்ல செயல்களைச் செய்வதற்குப் பயன்படுத்தட்டும். பிறகு ஏழைகளோடு பகிர்ந்துகொள்ள அவனுக்கென்று சில இருக்கும். (எபேசியர் 4:28)

    10 “ஒரு மனிதன் வேலை செய்யாவிடில் அவன் உண்ணக்கூடாது” என்று உங்களோடு இருந்தபோது நாங்கள் இந்த விதியைத் தந்தோம். (தெச 3:10)

    இப்படிக்கு,
    உன் பதிலுக்காக காத்திருக்கும் உன் அண்ணன்
    உமர்.
    ————————————

    மேற்கண்ட கடிதத்தை கண்டவுடன் என் தம்பி கீழ்கண்ட பதிலை அனுப்பினான்.

    அன்புள்ள அண்ணாவிற்கு,

    உங்களின் கடிதம் கண்டேன், உங்களைப் பற்றி வேதனை அடைந்தேன்.

    பொதுவாக நீங்கள் எவைகளை எழுதினாலும், ஆதாரங்களோடு எழுதுவீர்கள் என்று நான் அறிவேன். ஆனால், இந்த முறையோ, மற்றவர்களைப் போல ஆதாரங்களை கொடுக்காமல் எழுதியுள்ளீர்கள்.

    உங்களுக்கு ஒரு சவால்
    உங்களுடைய கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்ட அந்த மூன்று வழிப்பறி கொள்ளைகள் பற்றி நான் இதுவரை எந்த புத்தகத்திலும் படிக்கவில்லை. மேலும், உங்களால் அதற்கான ஆதாரங்களை காட்டமுடியாது. நீங்கள் உலகம் முழுவதும் சுற்றினாலும், எங்கும் இந்த நிகழ்ச்சிகள் நடந்ததாக ஒரு ஆதாரத்தையும் உங்களால் கொண்டுவரமுடியாது என்று நான் சவால் விட்டுச் சொல்கிறேன்.

    ஒரே ஒரு இஸ்லாமிய புத்தகத்திலாவது உங்களால் மேற்கண்ட நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டமுடியுமா?

    முதலாவது நீங்கள் எனக்கு ஆதாரங்களை காட்டுங்கள், அதன் பிறகு நான் உங்கள் கேள்விகளுக்கு பதில்களைச் சொல்வேன்.

    இப்படிக்கு,
    உங்கள் தம்பி
    ——————————–

    என் தம்பியின் மெயில் கிடைத்தவுடன் நான் கீழ்கண்ட பதிலை எழுதினேன்:

    அன்பான தம்பிக்கு,

    நீ என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துவாய் என்று நம்பினேன், ஆனால், நீ ஏமாற்றிவிட்டாய்.

    நான் வேண்டுமென்றே, என் முந்தைய கடிதத்தில் ஆதாரங்களை தரவில்லை, ஏனென்றால் நான் மேற்கொள் காட்டப்போகும் புத்தகம் இஸ்லாமிய உலகில் புகழ்பெற்ற புத்தகமாகும். நீ ஏற்கனவே இந்த புத்தகத்தை படித்து இருந்திருக்கவேண்டும், ஆனால் நீ தவறிவிட்டாய். சரி இப்போது அந்த முதல் மூன்று வழிப்பறி கொள்ளைப் பற்றி ஆதாரத்தைத் தருகிறேன். அந்த தலைப்புக்களை மட்டும் கொடுத்தேன், மீதமுள்ள நிகழ்ச்சி விவரங்களை கீழ்கண்ட புத்தகத்தின் 200 மற்றும் 201ம் பக்கங்களிலிருந்து எடுத்தேன்.

    புத்தகத்தின் பெயர்: ரஹீக்

    ஆசிரியர்:இஸ்லாமிய பேரறிஞர் ஸஃபிய்யூர் ரஹ்மான்.

    தமிழாக்கம்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி

    பக்கம்: 200 மற்றும் 201ம் பக்கங்கள்.

    புத்தகத்தின் தனிச்சிறப்பு: உலகளாகிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல். இந்த புத்தகம் இதர 170 புத்தகங்களோடு போட்டியிட்டு, முதல் பரிசை தட்டிச் சென்றது (
    ஆங்கிலத்தில்: Ar-Raheeq Al-Makhtum – https://en.wikipedia.org/wiki/Ar-Raheeq_Al-Makhtum)

    ஆங்கிலத்தில் இந்த புத்தகத்தை படிக்க: https://www.islamhouse.com/51776/en/en/books/The_Sealed_Nectar

    தமிழில் இப்புத்தகத்தை படிக்க: https://www.islamkalvi.com/portal/?p=4989

    தம்பி இந்த புத்தகத்தை முழுவதுமாக ஒரு முறை நீ படிக்கவேண்டும்.

    உன் கேள்விக்கு நான் பதில் அளித்துவிட்டேன், என் கேள்விகளுக்கு நீ பதில்களைத் தருவாய் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

    உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

    இப்படிக்கு
    உன் அண்ணன்,
    உமர்

  16. நன்றி இசாகுரன் ப்லொக்ச்பொட்
    செவ்வாய், 10 செப்டம்பர், 2013

    புதிய ஃபத்வா: முஸ்லிம் பேனை கொல்லாதீர்கள், மீறினால் 50 சவுக்கடிகள் தண்டனை தரப்படும்
    புதிய ஃபத்வா: முஸ்லிம் பேனை கொல்லாதீர்கள், மீறினால் 50 சவுக்கடிகள் தண்டனை தரப்படும்

    தற்கால உலக நடப்புக்களை படித்து, பார்த்து மக்கள் சோர்ந்துப் போய் உள்ளனர். செய்தித்தாளை பார்த்தால், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பொருளாதாரப் பிரச்சனை தலை காட்டுகிறது. இப்படி சோர்ந்துபோய் இருக்கும் மக்களை மகிழ்ச்சியாக்க, நாம் என்ன தான் முயற்சி எடுத்தாலும், அது முஸ்லிம்களின் முயற்சிக்கு ஈடு ஆகமுடியாது.
    ஒவ்வொரு முறை ஒரு புதிய ஃபத்வாவை இஸ்லாமிய அறிஞர்கள் அறிமுகப்படுத்தும் போதும், உலக மக்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒரு கணம் மறந்துவிட்டு, வாய்விட்டு சிரித்துவிடுகிறார்கள்.

    ஒரு பக்கம் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததினால், அனுதினமும் பங்குச்சந்தைச் செய்திகளை படிக்கும் அனேகர் சிரித்து அனேக நாட்கள் ஆகிவிட்டது. இன்னொரு பக்கம் சிரியா நாட்டுக்குள் நடக்கும் சண்டைகள், அதன் மூலம பூதகாரமாக வெளிப்பட்ட உலக நாடுகளின் மத்தியில் நிலவும் கருத்து வேறுபாடுகள் நம்மை ஒவ்வொரு நாளும் வாட்டி வதைக்கின்றன. அடுத்து என்ன நடக்குமோ? என்று ஆச்சரியத்தோடு கேட்கும் கேள்விகள் ஏராளம். இதுமட்டுமா! இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? என்ற சந்தேகம் சமீபகாலமாக கிட்டத்தட்ட எல்லா மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படியெல்லாம் நாட்டு நடப்பு இருப்பதினால், சிலர் செய்தித்தாள் பக்கம் தலைவைத்து படுக்கவும் பயப்படுகிறார்கள்.
    இந்த சூழலில், நம்மை உண்மையாகவே வாய் விட்டு சிரிக்கவைக்க தகுதியானவர்கள் யார் என்று பார்த்தால், உலக இஸ்லாமிய அறிஞர்கள் ஆவார்கள்.

    இதோ இந்த புதிய ஃபத்வாவினால் எப்படி இவர்கள் நம்மை குஷி படுத்துகிறார்கள் என்பதை பாருங்கள்.
    Inline image 1

    மூலம்: https://i0.wp.com/www.comicartcollective.com/artImages/2256B186-3048-77F0-1157A220EE96A24F.gif
    இஸ்லாமிய பேன், பாக்கியமுள்ள தாடி:

    சிரியாவில் உள்நாட்டு கலவரம் நடந்துக்கொண்டு இருக்கிறது என்பதை நாம் எல்லாரும் அறிவோம். இதில் ஈடுபட்டு இருக்கும் ஜிஹாதிக்களின் பிரச்சனையை தீர்க்க ஒரு ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் காரணமாக ஜிஹாதிக்கள் அனுதினமும் குளிக்க வாய்ப்பு கிடைப்பது இல்லை. இதன் காரணமாக அவர்களின் தாடியில் தூசி படிவதுண்டு, அது சுத்தம் செய்யப்படாமல் இருப்பதினால், சில நேரங்களில் அந்த தாடியில் “பேன்கள்” வளர வாய்ப்பு இருக்கிறது.
    இப்படி முஸ்லிம்களின் தாடியில் பேன்கள் இருந்தால், அவைகளை கொல்லாதீர்கள், அவைகள் “முஸ்லிம் பேன்கள்” எனவே, அவைகளை கொல்லாதீர்கள் என்று பத்வா கொடுத்துள்ளார்கள். இந்த பத்வாவை மீறி, யாராவது பேன்களை கொன்றால், அவர்களுக்கு 50 சவுக்கு அடிகள் தண்டனை தரப்படும்.
    இஸ்லாமிய அறிஞர்களின் புத்தம் புது ஃபத்வாக்கள், உலக மக்களை சிரிக்கவைக்கின்றன. இஸ்லாம் என்றாலே உலக மக்கள் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இஸ்லாமிய கோட்பாடுகளும், சட்டங்களும் தான், மேலும் இஸ்லாமிய அறிஞர்கள் கொடுக்கும் புதிய ஃபத்வாக்கள் வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கும்.
    தற்கால உலக நடப்புக்களைக் கண்டு, சோர்வாக இருக்கும் மக்கள், அவ்வப்போது இஸ்லாமிய ஃபத்வாக்களை படித்து, தங்கள் சோர்வை போக்கிக்கொள்ளலாம்.

    மூலம்: https://www.washingtontimes.com/news/2013/aug/26/free-syrian-army-fatwa-forbids-killing-believer-li/

  17. தினமலரில் வெளியான செய்தி

    மும்பை:அரபு நாடுகளில் இருந்து இந்தியா வரும் ஷேக்குகளில் சிலர், தங்கள் உடல் வெறியை தணித்து கொள்ள, இந்திய பெண்களை, திருமணம் செய்து கொள்வதும், நாடு திரும்பும் முன், அந்த பெண்களை விவாகரத்து செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. பணத்திற்கு ஆசைப்பட்டு, ஏராளமான பெண்கள், மாயவலையில் வீழ்கின்றனர்.

    வெறிபிடித்த கும்பலுக்கு, இந்தியாவில் உள்ள சில, மத தலைவர்களும், குருமார்களும் உதவி செய்வது தான் வேதனையானது.மும்பை, புனே, டில்லி நகரங்களில், “மிட் – டே’ என்ற ஆங்கில மாலை நாளிதழ் வெளிவருகிறது. அந்த நாளிதழின் பெண் நிருபர், கிராந்தி விபுதேயும், ஆண் நிருபர், பூபன் படேலும், ஒரு மாதத்திற்கும் மேலாக, ரகசிய நடவடிக்கை மேற்கொண்டு, அரபு ஷேக்குகளின் காம லீலைகளை அம்பலப்படுத்தியுள்ளனர்.

    அந்த பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி விவரம்:இந்தியாவிற்கு சுற்றுலா, “விசா’வில் வரும் அரபு நாட்டு ஆண்கள் சிலர், மும்பை அல்லது வட மாநில நகரங்களில் தரையிறங்கியதும், பெண் தேடும் படலத்தை துவக்கி விடுகின்றனர். அதற்காகவே உள்ள ஏஜண்டுகள், அரபு ஷேக்குகள் தங்கியிருக்கும் இடங்களுக்கு, பெண்களை கூட்டி செல்கின்றனர். பிடித்தமான பெண்களை, ஷேக்குகள் தேர்ந்தெடுக்கின்றனர்.

    “எல்லாம் மத முறைப்படியே செய்ய வேண்டும்’ என, விரும்பும் ஷேக், அந்த பெண்ணுடன், திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்தை, முஸ்லிம் மதகுரு நடத்தி வைக்கிறார். அதற்கு முன், 15 ஆயிரம், முதல் ஒரு லட்ச ரூபாய் வரை, பணம் பேசப் பட்டு, பெண்ணுக்கு கைமாறி விடுகிறது.

    மேலும், எத்தனை நாட்களுக்கு, ஷேக்கிற்கு மனைவியாக இருக்க வேண்டும் என்பதும் முடிவு செய்யப்பட்ட பிறகு, ஷேக்கின் மனைவியாக, இந்திய பெண் மாறுகிறாள்.
    அந்த அப்பாவி பெண்ணுடன், இந்தியாவில் உள்ள மத வழிபாட்டு தலங்கள், முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்லும் ஷேக், அந்த பெண்ணை, தன் காம இச்சைக்கு, விருப்பம் போல பயன்படுத்துகிறார்.

    விசா காலம், ஒரு வாரத்திலோ அல்லது 10 நாட்களிலோ முடியும் போது, திருமணம் செய்து வைத்த மதகுருவிடம் வந்து, விவாகரத்தும் செய்து விடுகிறார். விவாகரத்தும், சில வினாடிகளில் முடிந்து விடுகிறது. குறிப்பிட்ட காலம் மட்டும், அரபு ஷேக்கின் மனைவியாக வாழ்ந்த அந்த பெண், கசக்கி வீசப்படுகிறாள்.இதில் கொடுமை என்னவென்றால், அரபு ஷேக்கிடம் சிக்கும் பெண்ணுக்கு, அவள் பெறும் பணத்தில், கொஞ்சமே கிடைக்கிறது.

    50 சதவீத பணத்தை, திருமணம் மற்றும் விவாகரத்தை செய்து வைக்கும் மதகுரு எடுத்து கொள்கிறார். மீதம் உள்ளதை, பெண்ணும் அவளை, ஏற்பாடு செய்யும் ஏஜண்டுகளும் பகிர்ந்து கொள்கின்றனர்.இந்த கொடுமை, மும்பை, ஐதராபாத் நகரங்களில் வெகுசாதாரணமாக நடக்கிறது. இதை கண்டுகொள்வார் யாருமில்லை.

  18. என்ன ஏ. சகாபுதீன் அவர்களே,

    உலகில் உள்ள ஷியா முஸ்லீம்கள், அஹமதியாக்கள், சுபிக்கள் ஆகிய அனைவரையும் கொன்றுவிட்டு அதன் பிறகே உங்கள் சன்னி வஹாபி தீவிரவாதி தற்கொலைப்படையினர் தாங்களும் பிணமாக மாறுவர். உண்மையான இஸ்லாம் என்னவென்று தெரிந்து கொள்ள, செங்கொடி, இறையில்லா இஸ்லாம், paraiyoasai , தருமி, பகடு ஆகிய வலைத்தளங்களை படித்து சிறிதாவது உண்மை அறிவு பெறவேண்டும் தம்பி. பெண்களை அடிமையாக்கி கொடுமைப்படுத்துவது தான் ஒரு மதம் என்றால் அந்த மதத்தை உலகிலிருந்து பெண்கள் விரட்டி அடிப்பார்கள். ஆணுக்கு பெண் சமம் இல்லை என்று சொல்லும் மதங்களுக்கு இந்த உலகில் இனி இடமில்லை.அரபு முஸ்லீம்கள் இந்துவை கொல்லவில்லை என்று சொல்கிறாயே, அரபு முஸ்லீம்கள் இந்துமதத்திலிருந்து இஸ்லாமுக்கு நபிகள் நாயகத்தினாலும் , அவரது சகாக்களாலும் பல போர்களில் வன்முறை மூலம் மாற்றப்பட்டவர்கள். அரபு முஸ்லீம்களின் முன்னோர் இந்துக்களே ஆகும். குறைஷீக்கள் இந்துக்களே. உங்கள் காபாவின் உள்ளே என்ன இருக்கிறது என்றாவது உனக்கு தெரியுமா தம்பி, ஒரு பத்து நிமிடம் ஓடும் வீடியோ You Tube -இல் உள்ளது. பார்த்து தெரிந்து கொள். இந்துக்கள் வழிபட்ட விளக்குகள் அங்கே தொங்குகின்றன. முழுமையாக உங்கள் மத நூல்களையும், ஹத்தீஸ்களையும், படித்தால் நீங்கள் ஒரே ஓட்டம் ஓடி , சிறந்த பகுத்தறிவாளராக மாறிவிடுவீர்கள். இப்படி….. ……. ……… -யாக இருக்கமாட்டீர்கள்.

  19. மனதில் இவளவு வஞ்சனையை வைத்துகொண்டு தேனொழுக பெசுசம் இஸ்லாமியர்கள் -இதுவே சான்று
    ஜிஹாத் (JIHAD – HOLY WAR)

    இஸ்லாமியர்களின் புனிதமான கடமைகளில் ஜிஹாதும் ஒன்று. “ஜிஹாத்” என்ற வார்த்தை ஒரு அரபி வார்த்தையாகும், இதன் பொருள் “போராடுதல் (Struggle)” என்பதாகும். ஆக, ஜிஹாத் என்பது இஸ்லாமுக்காக போராடுவதாகும், அதாவது எதை தியாகம் செய்தாவது, எப்படியாவது போராடுவதாகும், இதில் வன்முறையும் உள்ளடக்கமே. இப்படிப்பட்ட ஜிஹாதை “புனிதப் போர்” என்றுச் சொல்வார்கள்.

    வ‌ன்முறையை நியாய‌ப்ப‌டுத்த‌ குர்‍ஆனில் வ‌ச‌ன‌ங்க‌ளை தேட‌ இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு பிர‌ச்ச‌னையே இருப்ப‌தில்லை. அதே போல‌, ஹ‌தீஸ்க‌ளில் இத‌ற்கான‌ வ‌ரிக‌ளைத் தேட‌ இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு க‌டின‌ம் ஒன்றுமில்லை. இந்த‌ குர்‍ஆனும் ஹ‌தீஸும் வ‌ன்முறையைப் ப‌ற்றி சொல்வ‌தோட‌ல்லாம‌ல், அவைக‌ளை செய்ய‌ தூண்டுவ‌தாக‌வும் இருக்கின்ற‌ன‌.[குர்‍ஆன் என்ப‌து இறைவ‌னின் வேத‌ம் என்று இஸ்லாமிய‌ர்க‌ள் ந‌ம்புகிறார்கள். முஹ‌ம்ம‌து சொன்ன‌து, செய்த‌து என்றுச் சொல்லி அவ‌ர‌து செயல்க‌ளை ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ தொகுப்பையே ஹ‌தீஸ்க‌ள் என்பார்கள்.]

    குர்‍ஆனில் ஜிஹாத் (JIHAD IN THE QURAN)

    “இஸ்லாமியர்கள் அல்லாத” மக்களை தனக்கு பதிலாக பயப்பட வைக்க வேண்டும் என்று அல்லா இஸ்லாமியர்களுக்கு கட்டளை தருகிறார்.

    “Strike terror (into the hearts of) the enemies of God and your enemies.”

    … இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; ….(8:60)

    Fight (kill) them (non-Muslims), and God will punish, (torment) them by your hands, cover them with shame.”

    நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான் (9:14).

    “I will instill terror into the hearts of the unbelievers, smite ye above their necks and smite all their finger-tips off them. It is not ye who slew them; it was God.”

    … நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும். (8:12)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *