தெய்வ தசகம்: ஸ்ரீ நாராயண குருதேவர்

தெய்வமே எங்களை காத்தருள் செய்குவாய்
கைவிடாது எம்மை நீ ஆண்டருள் செய்குவாய்
பவக்கடல் தாண்டவே செய்குவாய் தெய்வமே
நின்பதம் எம்அரும் தோணியாய் நிற்குமே.

deepam1

ஒவ்வொன்றாய் எண்ணித் தொட்டு எண்ணிடும்
எல்லாப் பொருட்களும் எண்ணி முடித்தபின்
எஞ்சிடும் த்ருக்கினைப் போலவே எம்உளம்
நின்திருப் பாதத்தில் ஒன்றிடச் செய்குவாய்

psy

அன்னமும் ஆடையும் தேவையாம் யாவுமே
இன்னல்ஒன் றின்றியே தந்தெமைக் காத்து, மேல்
செல்வராய் மாற்றிடும் நீ ஒரு மூர்த்தியே
வல்லமை உள்ளவன் எங்கட்குத் தம்பிரான்

sudama

ஆழியும் அலைகளும் காற்றொடு ஆழமும்
போலவே நாங்களும் மாயையும் நின்திரு
மேன்மையும் நின்அருள் ஜோதிப் பிரகாசமும்
நீயுமாய் என்னுளே நின்று விளங்குவாய்

ocean

நீயன்றோ சிருஷ்டியும் சிருஷ்டிக்கு நாதனும்
சிருஷ்டிக்கு இலக்காக நிற்கும் பிரபஞ்சமும்;
நீயன்றோ தெய்வமே சிருஷ்டிக்கப் பட்டுள
யாவுமாய் மாறிடும் எல்லாப் பொருட்களும்.

siva1

நீயன்றோ மாயையும் மாயாவி ஆவதும்
மாயா வினோதனாய் நின்றிடும் நாதனும்
நீயன்றோ மாயா விலாஸத்தை மாற்றியே
ஸாயூஜ்யம் நல்கிடும் ஸத்குண சீலனும்.

maya

நீ ஸத்யம் எங்கும் நிறைவான மெய்ப்பொருள்
நீ சித் எனும் ஞானம்; நீயே ஆனந்தமும்;
நிகழ்வதும் வருவதும் போனதும் வேறல.
நீயன்றோ ஓதிடும் ஓர் மொழி ஆவதும்.

trimurthi

அகம்-புறம் எங்கணும் இடைவெளி இன்றியே
நின்றிடும் நின்பதம் மேன்மையாம் மென்பதம்;
வாழ்த்துகின்றோம் உன்னை வாழிய நாதனே
வாழ்க நீ வெல்கஎம் நாதனே தெய்வமே.

vr

வாழ்க மகாதேவ வெல்கஎம் நாதனே
தீனதயாளனே ஏழைபங்காளனே
வெல்கஎம் நாதா சிதானந்த மூர்த்தியே
தயாசிந்துவாம் கருணாகர ஜயஜய.

an1

ஆழமாய் உள்ளதாம் நின்திரு ஆழியாம்
ஆழியில் நாங்கள் அனைவரும் ஆழுவோம்
ஆழ்வதால் நித்தியம் வாழுவோம் வாழுவோம்
ஆனந்த வாரியில் வாழுவோம் வாழுவோம்.
gurudevan[தமிழில் திரு.துளசிராம் ஐயா]

4 Replies to “தெய்வ தசகம்: ஸ்ரீ நாராயண குருதேவர்”

  1. அஹா படிப்பதற்கு ஆனந்தமாயிருக்கிறது.
    ஸ்ரீ நாராயண குரு சுவாமிகளின் அத்வைத தத்துவமும் பக்திக்கோட்பாடும் தெற்றென விளங்குகின்றன. நிச்சயம் இதனை நாளும் ஓதுவோர் எல்லா வளமும் நலமும் முக்தியும் பெறுவர்.
    வாழ்க மகாதேவ வெல்கஎம் நாதனே
    தீனதயாளனே ஏழைபங்காளனே
    சிவசிவ

  2. ‘எல்லாமாய் அல்லத்மாய்’ நிற்கும் பரம்பொருளை உள்ளத்துள் நிறுத்தித் துதிக்கும் தோத்திரம். மனத்துக்கு இனிமையாக உள்ளது.

  3. மதிப்ிர்க்குரிய ஐயா,தங்கள் பாதம் பணிகின்றேன்.பழம்பெரும் சனாதன தர்மம் எனும் விருட்ச்சத்தின் தண்ணிழலில் இளைப்பாறும் சிறுபிள்ளை நான்,தங்கள் ஆசியை வேண்டுகிறேன்.தங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

  4. தெய்வமே எங்களைக் காத்தருள் செய்வாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *