என்னதான் செய்தது பக்தி இயக்கம்?

morning_hindutvaபகுத்தறிவற்ற சடங்குகள் கொண்ட வேள்வி அடிப்படையிலான வைதீக மதத்தில் ஒழுக்க நெறிகளுக்கு இடமில்லை. இயல்பிலேயே வைதீகம் பிறப்படிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளையே வேள்விச் சடங்குகள் மூலம் உறுதிப் படுத்திக் கொண்டது. அந்த வைதீக சமயத்தை பௌத்தமும் சமணமும் எதிர்த்து எழுந்தன. சமணமும் பௌத்தமும் கொல்லாமையையும் சமத்துவத்தையும் பகுத்தறிவையும் போதித்தன. அவையே ஒழுக்க நெறிகளை வளர்த்தன. தமிழ்நாட்டில் எழுத்தறிவை வளர்த்தன. ஆனால்  பக்தி இயக்கம் என்ன செய்தது? பௌத்தத்தையும் சமணத்தையும் அழித்தது.  வைதீகத்தை மீண்டும் கொண்டு வந்தது. இதனால் சாதியம் எழுந்தது. இன்று எந்த இடதுசாரியும் திராவிடவாதியும் தன்னை அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ள தமிழ்நாட்டில் தரக்கூடிய சித்திரம் இதுதான்.

jainsஇதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?

திருஞான சம்பந்தரை எடுத்துக் கொள்வோம்.  அவரது அன்னையார் பெயர் பகவதி. மேற்கு கடற்கரை பெண் தாய் தெய்வங்களின் பெயர். கத்தோலிக்கம் கவிந்த பிறகும் கொற்கை-குமரி மீனவர்களால் ’ஆத்தா’ என உள்ளன்புடன் அழைக்கப்படும் குமரி அம்மனின் பெயர் பகவதிதான். மண்டைக்காட்டிலும் அதுவே. ஆனால் பகவதி அம்மையாரின் ஊர் சேரநாடு அல்ல. சோழ மண்டலம். பகவதி அம்மையாரின் ஊர் திருநனிபள்ளி.  பெயரே காட்டுகிறது. சமண ஆதிக்கம் உள்ள ஊராக இருந்திருக்க வேண்டும்.

சமண ஆதிக்கம் பல தொழில்-சமுதாய குழுக்களை பாதித்திருந்தது. அவர்கள் இழிசினராகக் கருதப்பட்டனர்.

இதனை நாம் கீழ்வரும் சீவகசிந்தாமணி பாடலில் காண்கிறோம்:

வில்லின் மா கொன்று வெண்ணிணத் தடிவிளம்படுத்த
பல்லினார்களும் படுகடற் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி
நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே.

வைதீகம் செழித்த பழந்தமிழர் பண்பாட்டில் அரச குலத்தாருடன் சரி சம அந்தஸ்து கொண்டிருந்தனர். பாண்டியருடன் பொருதும் பொருந்தியும் செல்லும் மக்கள் சமுதாயத்தவராக இருந்தவர்கள் பாண்டிய பதிகள் என வாழும் பரதவ சமுதாயத்தினர்.  அக்காலகட்டத்தில் அதீத உயிர்கொல்லாமை எனும் சமண கருத்தாக்கத்தால் பரதவ சமுதாய மக்களின் தொழில் உரிமை மறுக்கப் பட்டிருக்கலாம். அத்துடன் தொழில் பெருமையும் இழந்திருக்கலாம். பகவதியே கூட பரதவ சமுதாயத்துடன் இணைந்த புரோகிதர் குடும்பத்து பெண்ணாக இருந்திருக்கலாம்.  அவரை பெண்ணெடுத்த ஊரில் (சீர்காழி) உள்ள சுவாமியின் பெயர் தோணியப்பர். இதுவும் பரதவ சமுதாயத்துடன் இணைந்த பெயரே. (இன்று நிலம் சார்ந்த சமுதாயங்கள் தமதாக சுவீகரித்து கொண்ட ஆன்மிக மரபுகளில் கடற்கரையிலிருந்து வந்து சேர்ந்தவற்றின் பங்கு இன்னும் சரியாகக் கணிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அந்தண சமுதாயங்களின் குடும்ப வழக்காடு சொல்லான ‘அம்பி’ என்பதற்கு தோணி என்றும் பொருள் உண்டு.)

kumariசோழ மண்டல கடற்கரை பரதவ சமுதாய குழுக்கள் தம் தொழில்களை துறந்தது ஒட்டு மொத்த பொருளாதாரத்துக்கும் வாழ்க்கை நிலைக்கும் பெரும் நிலைகுலைவை ஏற்படுத்தியிருக்கும். இவ்வாறு பாலையாகி விட்ட ஊருக்குத்தான் திருஞான  சம்பந்தர் வருகிறார். திருஞான சம்பந்தர் இந்த ஊரில் வந்து பதிகம் பாடி பாலையாக இருந்த ஊரில் நெய்தலை உருவாக்கினார் என்பது – தொழில் உரிமையும் குடி உரிமையும் மறுக்கப்பட்டு ஊருக்கு வெளியில் வாழவைக்கப்பட்ட பரதவர்களுக்கு மீண்டும் தொழில் உரிமையை மீட்டெடுத்து மீண்டும் சுயமரியாதையுடன் குடியமர்த்திய சமுதாய மறுமலர்ச்சி செயலை ஞான சம்பந்தர் செய்திருக்க வேண்டும். திருநனிபள்ளியில் உள்ள சிவன் கோவிலின் அம்பாள் பெயர் – பர்வத ராஜகுமாரி.  சோழ மண்டலத்தின் முக்கிய மீனவர் சமுதாய குழுப் பெயர்களில் ஒன்றாக பர்வத ராஜ குலம் இன்றும் திகழ்கிறது. சமணத்தின் அதீத கொள்கை பிடிப்பினால் ’எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம்’ என களங்கப்பட்டு நின்றவர்களை நாம் பர்வத ராஜகுலம் என கௌரவம் அளித்த மானுட நேயம் பக்தி இயக்கத்தின் முக்கிய பங்களிப்பு.

அம்பா பாடல்கள் பரதவர் கடலில் மீன்பிடிக்கும் போதும் பாடும் பாடல்கள். (அம்=) நீர் மீது பாடும் பாடல்கள் என்கிறார் முனைவர் மோகனராசு. அம்பியில்-தோணியில் செல்லும் போது பாடும் பாடல்கள் என்கிறார் புட்பராசன். அம்பாளை பாடும் பாடல்களே அம்பா பாட்டு என ஆகியிருக்க வேண்டும் என்கிறார் நா.வானமாமலை. முனைவர் மோகனராசு தொகுத்து வெளியிட்ட நாட்டுப்புற பாடல்களின் முதல் தொகுதி அம்பாப் பாட்டுகளைக் கொண்டது. அதில் திருஞான சம்பந்தர் சமணர்களை வென்றது சிலாகிக்கப்படுகிறது:

sambandarதேசங்களைக் கண்ட பிள்ளை! – ஏலேலோ ஏலே
தெளிவடைந்த ஞானப் பிள்ளை – ஏலேலோ ஏலே
தெளிவடைந்த ஞானப் பிள்ளை – ஏலேலோ ஏலே
தேவாரம் பாடுரானே – ஏலேலோ ஏலே
தேவாரம் பாடும்போது – ஏலேலோ ஏலே
ஓடுரானே சமணப்பையன் – ஏலேலோ ஏலே
மங்கையரே மாதாவே – ஏலேலோ ஏலே
மங்கையர்க்கரசியாரே – ஏலேலோ ஏலே

(பாட்டு-15: பாடியவர்:சி.ராஜமாணிக்கம் தாத்தா, நாட்டுப்புற பாடல்கள் தொகுதி-1, டாக்டர்.கு.மோகனராசு, ஸ்டார் பிரசுரம்,1988, பக்.136-7)

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். திருநனிபள்ளியில் நெய்தலை மட்டுமல்ல, மருதத்தையும் ஏற்படுத்தினார் திருஞானசம்பந்தர் என்பது வரலாறு. போர்த்துகீசிய கட்டாயத்தால் இஸ்லாமிய தாக்குல்களிலிருந்து தப்ப கத்தோலிக்கத்தை தழுவிய மீனவ சகோதரர்கள் இன்று சொந்த பண்பாட்டிலும் வரலாற்றிலும் சமவெளி சமுதாயங்களிலிருந்தும் அந்நியப்பட்டு நிற்பதை நாம் காண்கிறோம். todayஆனால் திருஞான சம்பந்தர் மீனவர் வாழ்வுரிமையையும் தொழில் உரிமையையும் மீட்டெடுத்த போது சமவெளி சமுதாயக் குழுக்களுக்கும் நெய்தலுக்கும் எவ்வித தனிமைப் படுத்தலும் ஏற்படாமலிருக்க கவனம் கொண்டிருந்ததையும் இதில் காணமுடிகிறது. கண்மூடித்தனமான அதீத அகிம்சையால் பாழ்பட்டு கிடந்த பொருளாதாரமும் அங்கு சம்பந்த பெருமானால் சீர் பட்டிருக்கிறது. பக்தி இயக்கம் பக்தியின் அடிப்படையில் சமுதாய சமத்துவத்தை மட்டும் வலியுறுத்தவில்லை. அதனுடன் அன்று மறுக்கப்பட்ட தொழில் உரிமைகளையும் தொழில் சார்ந்த பெருமிதத்தையும் ஆன்மிகம் மூலமாக மீட்டெடுத்தது. பின்னர் உருவான சோழ பேரரசின் கடற்படையின் முக்கிய தளபதிகளாக செயல்பட்டவர்கள் நெய்தல் சமுதாயங்களே. இன்று நம் பண்பாடு தென் கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதிகளில் அழியாத சின்னங்களாக நிற்க இவர்களே முக்கிய காரணம்.

டி.டி.கோசாம்பி அஜந்தா ஓவியங்கள் குறித்த ஒரு விமர்சனத்தை முன்வைப்பார். சமுதாயத்தின் உபரியிலிருந்து உருவான இந்த ஓவியங்களில் இந்த சமுதாயத்தின் ’பாமர’ மக்கள் காட்டப்படவில்லை. அவற்றில் எந்த அன்றாட வாழ்க்கை செயல்பாடும் சித்தரிக்கப்படவில்லை. வானகத்து மங்கையர், போதிசத்வர்கள், துறவிகள், புத்தர் – ஆனால் சாதாரண மக்கள்? என வினவுவார் அவர். (Ancient India: A History of Its Culture and Civilization, Pantheon Books, 1966 பக். 179.)  ஆனால், பக்தி இயக்கம் உருவாக்கிய அனைத்திலும், கோவில் சிற்பங்களோ, இலக்கியங்களோ அன்றாட வாழ்க்கை வாழும் சாதாரண எளிய மக்களின் காட்சிகளை காணலாம். கழை கூத்தாடிகள், பிரசவம் பார்க்கும் மருத்துவ மகளிர், உழவர், மாடு மேய்ப்போர், வேடர் – என.

temple2அன்றைய பண்பாட்டு புலத்தில் இருப்பே மறுக்கப் பட்டிருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட முதல் அதிகார பகிர்வு? இன்றைய மொழியில் சொன்னால் பண்பாட்டு வெளியில் முதல் இட ஒதுக்கீடு? பின்னாட்களில் சமுதாய தேக்கநிலையால் சாதிய இறுக்கமடைந்துவிட்ட நம் சமுதாயம் அதற்கான பழியை நேர்மையுடன் எதிர்கொள்ள முடியாமல் கற்பனை பழிதாங்கிகளை தேடுவதற்கு முன்னால் இந்த பரிமாணங்களையும் சிந்திக்கவேண்டும்.

இன்றைய இந்துத்துவர்களாகிய நமக்கு இதில் பல பாடங்கள் இருக்கின்றன.

மீண்டும் தேநீருடன் நாளை சந்திப்போம்.

42 Replies to “என்னதான் செய்தது பக்தி இயக்கம்?”

  1. வைதீகம் என்பது வேதத்தை அடிப்படையாக கொண்டது என்பதே பொருள். தன்னை கொல்ல வரும் பசுவையும் கொன்று தன்னைக்காத்துக்கொள்க என்று தான் வைதீகம் சொல்கிறது. வைதீகம் என்றால் புரோஹிதம் மட்டுமே என்று பலரும் தவறாகப் பொருள் கொண்டுள்ளனர். தீ ஓம்புதல் வைதீகத்தின் சிறப்பு அம்சம். ஏனெனில் அக்கினி சாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்வது நமது வழக்கு. திருமணம் கூட அக்கினி சாட்சியாக செய்வது இதனால் தான். அக்கினி சாட்சியாக திருமணம் செய்தபின்னரும், புறம் போகும் காலம் இது. தெய்வக் குழந்தை ஞானசம்பந்தரின் தொண்டினை அழகாக குறிப்பிட்டுள்ள அநீ- தொடர்ந்து இதுபோல கட்டுரைகளை காலை தேநீருடன் தரட்டும்.

  2. வைதீகம் பற்றி தகவல் கொடுத்ததற்கு நன்றி ஆனால் தங்கள் கூறுவது சரியல்ல இது ஒரு நல்ல நெறிகளை போதிக்கும் விஷயம் இதை விளம்பரபடுத்தினால் இது சமுதாய முன்னேற்றத்திற்கு உகந்ததாக இருந்திருக்கும் இது வர்த்தகமாகும் இதை நமக்கு வகுத்த ஞானிகள் நன்னடத்தை தர்ம விதிகலாகதான் ஏற்படுத்தி கொடுதுள்ளனரே தவிர இதை வியாபர ரீதியாக பயன் படுத்த என்னவிலை அறிந்தவர்களுக்கு இதன் பெருமை தெரியும் அறிந்துகொண்டு இதை செயல் படுதுபவர்கள் ஏராளம் ஆகையால் மக்கள் அவர்களாகவே விரும்பி இதன் கருத்துகளை தெரிந்துகொண்டு சமுதாயத்தை சிறப்படைய செய்யவேண்டுமே தவிர இதை கட்டாய படுத்துவது முறையல்ல இந்த செயல் நீடிக்காது

  3. சிவபெருமான் மீனவராக வந்து திருவிளையாடல் செய்திருக்கிறார். மஹாபாரதம் மீனவப்பெண்ணான சத்தியவதியிடமிருந்தே தொடங்குகிறது. இன்னும் பல இந்துமதத் தொன்மங்கள் மீனவரை மேன்மையொடு வெளிப்படுத்துப்பொது அவரை இழிகுலத்தோரென்று சொன்ன சமணத்தை சம்பந்தர் கடிந்துகொண்டதில் வியப்பேதுமில்லை. இக்காலகட்ட பக்தி இயக்கம் இந்துமதத்தையும் தமிழையும் இரண்டறக் கலக்கச் செய்தது. தமிழின் தொடர்ந்த இலக்கியப் பங்களிப்பில் பக்தி இலக்கிய காலம் என்றென்றும் தமிழ் நிலத்திலும் மொழியிலும் இந்து ஆன்மிகத்தை திகழொளி பரப்பச் செய்திருக்கிறது.

  4. நல்லதோர் கட்டுரை வாசிக்கத்தந்தமைக்கு நன்றி.

    இந்த நவீன காலத்திலும் பரதவர் சமுதாயத்தில் பர்வத ராஜகுமரியே போல் வந்து உதித்துள்ள அன்னை அமிர்தானந்தமயியும் அவர்களின் ஆன்மீகத்தின் நீட்சியே!

    சம்சார சாகரம் என்றும் அதனைக் கடக்க உதவும் தோணியென்றும் இறைவனையே கூறுவதும் உண்டல்லவா? அவர்தான் தோணியப்பர்.

    தங்கள் பெருமையெல்லாம் மறந்து பிற மதம் தழுவிய அச்சகோதரர்களில் பலரையும் நினைந்து மருகுகிறேன்.

  5. அன்பின் ஸ்ரீ அ.நீ ஒரு பின்னூட்டத்தில் பக்தி ஒரு போதை மருந்து என்ற படிக்கு பக்தி என்ற கோட்பாட்டைக் குறைகாணும் படிக்கான கருத்துப் பகிர்ந்திருந்தீர்கள். அது போன்றதொரு நிலைப்பாடு தவறே என எண்ணியிருந்தேன். இந்த வ்யாசம் மூலமாக சமூஹ இணக்கம் மற்றும் முன்னேற்றத்தில் பக்தி இயக்கத்தின் பங்கினை தாங்கள் வெளிப்படுத்தியுள்ளமை விஷயத் தெளிவு கொடுக்கிறது.

    கிழக்கு ஹிந்துஸ்தானத்தில் சைதன்ய மஹாப்ரபு அவர்களின் பக்தி இயக்கத்தின் மூலம் அவர் உருவாக்கிய அலைகள் இஸ்லாமியத்தின் முரட்டு மதமாற்ற வெறியை உண்மையான அஹிம்சை மூலம் எதிர் கொண்டது என்பது மட்டுமின்றி மிகப்பெருமளவு வெற்றியும் கொண்டு முழு பஞ்ச கௌட ப்ரதேச ஹிந்துக்களுக்கு பல நூற்றாண்டுகள் அரணாக இருந்தது. சைதன்ய மஹாப்ரபு அவர்கள் இருந்த காலத்தில் ஒரு புறம் அதீத கட்டுப்பாடுகளைக் கொண்ட வைதிக சமூஹம் மற்றொரு புறம் வெறித்தனமாக வாள்முனையில் ஹிந்துக்களை மதம் மாற்ற விழைந்த இஸ்லாம். இதன் இரண்டுடனும் புழங்கிப் புறப்பட்டு — சமர் செய்யாது — அஹிம்சா பூர்வமான பக்தி மூலம் சைதன்ய மஹாப்ரபு அவர்கள் பெரும் சமூஹ மறுமலர்ச்சிக்கு அடிகோலினார் என்றால் மிகையாகாது. அஹிம்சையின் மூலம் இஸ்லாமிய வெறித்தனத்தை எதிர் கொண்டு ஹிந்துக்கள் அதில் வெற்றியும் பெற்றமை சைதன்ய மஹாப்ரபுவின் காலத்தில் என ஆணித்தரமாகச் சொல்ல இயலும்.

    சமூஹத்தின் அனைத்து மக்களையும் – ஜாதி என்ன மதம் கூட சாராது கண்ணனில் கட்டிப்போட்டது அவர் பணி. இன்றைக்கும் கிழக்கு வங்காளத்தில் (பாங்க்ளாதேஷ்) ஹிந்துக்கள் எஞ்சியுள்ளமை மஹாப்ரபுவின் பக்தி இயக்கத்தின் ப்ரபாவம் என்றால் மிகையாகாது.

    அவர் விதைத்த வித்துக்கள் பிற்காலத்தில் ஸ்ரீல பக்தி வேதாந்த ப்ரபுபாதர் அவர்களால் பெரும் வ்ருக்ஷமாக உருவாகி இன்று உலகமுழுதும் உள்ள மாந்தருக்கு பெரும் ஆன்மீக வழிகாட்டியாக உள்ளது.

    இது சம்பந்தமான விரிவான வ்யாசங்கள் பகிரப்பட வேண்டும்.

  6. மிக அரிய தகவல்களைக் கொண்ட அரிய கட்டுரை. பக்தி இயக்கத்தின் மூலம் தமிழும், வளர்ந்தது. சமயமும் வளர்ந்தது. திருஞானசம்பந்தரையே மறுப்பவர்களும், அவரால் இத்தனை சிறிய வயதில் இத்தகைய பாடல்களைப் பாடி இருக்க முடியாது என்று சொல்பவர்களும் இருக்கும் காலகட்டத்திலே உங்கள் இந்தக் கட்டுரை புதியதொரு கோணத்தைக் காட்டி உள்ளது. மிக்க நன்றி. இதன் தொடர்ச்சியான பதிவுகளையும் எதிர்பார்க்கிறேன்.

  7. வணக்கம் சகோ!

    அற்புதமான பார்வை! ஆற்றொழுக்கான எழுத்து.

    *அத்தர் பியன் மேலிருந்து* இன்
    இசையால் உரைத்த பனுவல்
    நடுவிருளாடும் எந்தை நனிபள்ளி உள்க
    வினைகெடுதல் ஆணை நமதே!
    – என்று பாலையை நெய்தல் செய்த இந்தப்பனுவல் சம்பந்தப்பெருமான் தம் தந்தையார் தோளில் அமர்ந்து பாடியது.

    ஆணை நமதே என்று முடிக்கும் பதிகங்களுள் இதுவே முதற்பதிகம்.

    இப்பதிகமானது அவர் திருநனிபள்ளி சென்று சேரும் வழியிலேயே தந்தையார் தோள்மீதமர்ந்து பாடியது என்ற பதிகத்திலேயே குறிப்புமிருப்பதால் பகவதியாரின் ஊர் சென்றடையும் முன்பே இந்த அருளிச்செயலை நிகழ்த்திவிட்டார் என்பர்.

    ’தாழும் சரணச் சதங்கைப் பருவத்தே பாலையும் நெய்தல் பாடவலான்’ திருப்பாதம் பணிந்து,

    அன்புடன்,
    ஜாவா குமார்

  8. மேல்மருவத்தூர் செவ்வாடையில் ஒரு
    சமயப்புரட்சி …

  9. திருமகளார் திருக்கண்ணபுரத்திற்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலைராயன் பட்டினத்தில் மீனவர் தலைவர் மகளாகப் பிறந்தார். தாயாரின் பெயர் பத்மினி நாச்சியார். கண்ணபுரம் மாசி உற்சவத்தில் ஒருநாள் பெருமாள் பத்மினி நாச்சியாரைக் கரம்பிடிக்கும் விழா நடக்கிறது. மீனவக் கோலம் புனைந்து, உற்சவ மூர்த்தி திருமலைராயன் பட்டினம் போய்ச் சேரும். மீனவர் கோலாகலமாய் அவரை வழிபட்டு மகிழ்வர்

    அன்புடன்
    தேவ்

  10. மிக சிறந்த கட்டுரை. புதிய விளக்கங்கள், பலரும் அறிந்த திருமுறை பாடல் ஆனால் புதிய சமுதாய பார்வை கொண்ட விளக்கம்.
    அ.நீ அவர்களுக்கு நன்றி.

  11. என்னதான் செய்தது பக்தி இயக்கம் ………

    ஆழ்வார்கள், நாயன்மார்கள்,சைவ குரவர்கள்,சந்தான குரவர்கள் என்று பலர் எழுதியதாக கூறப்படும் சமுதாயத்துக்கு கடுகளவு கூட பயன் இல்லாத சில ஆயிரம் பாசுரங்களை(பாடல்களை) மக்கள் தலையில் கட்டியதை தவிர வேறு ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் விடை…

  12. பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே
    அஞ்சலிக் கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை
    நஞ்சு வாண்மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து
    அஞ்சிறப்புடை அடியர் பாங்கு உறத்தலை அளித்தார்

    https://www.shaivam.org/tamil/thirumurai/thiru12_08_04.htm

  13. /ஆழ்வார்கள், நாயன்மார்கள்,சைவ குரவர்கள்,சந்தான குரவர்கள் என்று பலர் எழுதியதாக கூறப்படும் சமுதாயத்துக்கு கடுகளவு கூட பயன் இல்லாத சில ஆயிரம் பாசுரங்களை(பாடல்களை) மக்கள் தலையில் கட்டியதை தவிர வேறு ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் விடை/பெற்ற பயனை அறிய இயலாத மடவர்களுக்கும் மறுக்கும் நன்றியிலார்க்கும் பயன்கொள்ள இயலாத வெற்றர்களுக்கும் விறகுத் தலையர்களுக்கும் எவ்வித நல்லதும் தலையில் கட்டிய சுமையாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லையே. காலந்தோறும் மக்களை வாழ்வித்த இந்துத்துவம் இன்றும் துடிப்புடன் வாழ்விக்கின்றது, அநீ யின் தேநீர் சுறுசுறுப்பேற்றுகின்றது.

  14. 1. Literature.
    2. Tried to make people united at that prevalent conditions.
    3. Few limited changes in the Hindu culture.
    4. Emphasised on the Total Surrender to God.

  15. திரு . முத்துகுமாரசாமி

    //பயனை அறிய இயலாத மடவர்களுக்கும் மறுக்கும் நன்றியிலார்க்கும் பயன்கொள்ள இயலாத வெற்றர்களுக்கும் விறகுத் தலையர்களுக்கும் எவ்வித நல்லதும் தலையில் கட்டிய சுமையாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லையே.//

    அட… அப்படிங்களா……. அது என்ன பயன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா …. பயன்னா எப்படி… கங்கையும் காவேரியும் இணைச்சு இந்தியாவா செல்வா பூமியாக்க எதாவது வழி சொல்லி இருக்காங்களா …இல்ல மக்களோட வாழ்கை கஷ்டங்கள் தீர எதாவது தீர்வு இருக்கா… தினமும் கடலுக்கு மீன் பிடிக்க போய் இலங்கை இராணுவதால செத்துகிட்டு இருக்க மீனவர்களுக்கு எதாச்சும் பக்தி இயக்கத்தால தீர்வு இருந்த சொல்லுங்க .. வேணா இனிமேல் கோளறு பதிகம் படிச்சிட்டு அதுக்கு அப்புறம் கடல்ல இறங்கி மீன் பிடிக்க போக சொல்லலாமா … இத ஏன் சொல்லவறேன்னா 63 நாயன்மார்களே ஒரு புருடான்னு அருட்பெரும்ஜோதி வள்ளல் ராமலிங்க அடிகளே சொல்றாரு .. அப்படி யாரும் இல்லையாமே… அப்ப அவங்க எழுதினதா சொல்ற பாட்டு (தேவாரம் ,திருவாசகம்)மட்டும் எப்படிங்க உண்மைன்னு ஒத்துக்க முடியும்… எல்லாம் கற்பனைதாங்க ….

  16. //…. பயன்னா எப்படி… கங்கையும் காவேரியும் இணைச்சு இந்தியாவா செல்வா பூமியாக்க எதாவது வழி சொல்லி இருக்காங்களா …இல்ல மக்களோட வாழ்கை கஷ்டங்கள் தீர எதாவது தீர்வு இருக்கா… தினமும் கடலுக்கு மீன் பிடிக்க போய் இலங்கை இராணுவதால செத்துகிட்டு இருக்க மீனவர்களுக்கு எதாச்சும் பக்தி இயக்கத்தால தீர்வு இருந்த சொல்லுங்க .. வேணா இனிமேல் கோளறு பதிகம் படிச்சிட்டு அதுக்கு அப்புறம் கடல்ல இறங்கி மீன் பிடிக்க போக சொல்லலாமா …//

    இது எல்லாம் குரான், பைபில்லில் சொல்லி இருக்கின்றதா என்ன ?

  17. ராகுலன் பக்திப்பணுவல்களால் பயன் என்ன என்று கேட்க ஐயா முத்துக்குமாரசுவாமி அழகாக பதில் தந்திருக்கிறார்.
    பக்தி ஒரு பெரும் சமூக கலாச்சார இயக்கம். அந்த பக்தி இயக்கம் தமிழ்கத்திலே ஏற்படுத்தியப்பொருளாதார மாற்றத்தினை. நெய்தல் நிலத்து மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை மீட்டதை அருமையாக வர்ணித்திருக்கிறார் ஸ்ரீ அரவிந்தன்.
    பக்தி இயக்கம் தமிழகத்தில் மொழியை மீட்டது.சாதிகளுக்கு இடையிலுருந்த இடைவெளியைக்குறைத்ததும் பக்தி இயக்கமே.பக்தி இலக்கியம் மக்கள் மனதில் ஏற்படுத்திய மாற்றத்தின் விளைவே தமிழகத்தில் சாம்ராஜ்யங்களைத்தோற்றுவித்தது.
    கருனாடகத்தில் ஆந்திரத்தில் எழுந்த பக்தி இயக்கத்தின் விளைவாகவே விஜய நகரப்பேரரசு எழுந்து தென்னகத்தை இஸ்லாமியவயமாக்கலில் இருந்துகாத்தது. ஏன் மராட்டியத்தில் எழுந்த பக்தியியக்கத்தின் தொடர்ச்சியாகவே வீரசிவாஜியின் ஹிந்து சாம்ராஜ்யம் அமைந்தது.கபீர் நானக் ஆகிய நிர்குணபக்தி இயக்கங்களின் தொடர்ச்சியாய் சீக்கியர்கள் பெரும் பலம்பெற்ற அரசாய் அரணாய் நாட்டைக்காத்தனர். இன்று ஹிந்து சமயம் மன்னி நிலைபெற்று இருக்கிறது என்றால் அது காலம்தோறும் தோன்றிவரும் பக்தி இயக்கத்தின் விளைவே.
    பக்தி என்ற உணர்வு சுத்தமாய் இல்லாததால் தால் மிலேச்சப்பரங்கிகளான மார்க்ஸ் லெனின் போன்ற அறஉணர்வும் மாந்த நேயமில்லாதவர்களை இன்னாட்டிலும் சிலர் பின்பற்றுகின்றனர். கோடிகோடி மக்களை மனிதகுலத்தின் விடுதலை என்றபெயரால் கொலை செத்த லெனினிஸ்டுகள் மாவோயிஸ்டுகள் பக்தியை பக்தி இலக்கியத்தினை பயனற்றவை என்று சொல்வதில் ஐயமேதும் இல்லை.

  18. திரு . பாண்டியன் …

    //இது எல்லாம் குரான், பைபில்லில் சொல்லி இருக்கின்றதா என்ன ?//

    நான் இஸ்லாமியனோ கிறித்துவனோ அல்ல…. ஒரு சாதாரண மனிதன் …. எந்த மதத்தின் சார்பாகவோ அல்லது கம்யுனிசம் போன்று எந்த சித்தாந்தத்தின் சார்பாகவோ இதை கேட்கவில்லை. ஒரு சாமானிய மனிதனாக கேட்கிறேன் ….. அன்றாடம் வாழ்க்கைக்கும் அடிப்படை தேவைகளுக்குமே அல்லல்பட்டு போராடும் என் போன்ற சாமானியர்களுக்கு பக்தி இயக்கத்தால் என்ன பயன் என்று தான் கேட்கிறேன் … நன்றி

  19. //அன்றாடம் வாழ்க்கைக்கும் அடிப்படை தேவைகளுக்குமே அல்லல்பட்டு போராடும் என் போன்ற சாமானியர்களுக்கு பக்தி இயக்கத்தால் என்ன பயன் என்று தான் கேட்கிறேன் … நன்றி//

    சுதந்திரம் அடைந்தபின் பிறந்தவர்கள் “சுதந்திரப் போராட்டத்தினால் என்ன நன்மை” என்று கேட்டால் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்குமோ அவ்வளவு ராகுலனின் கேள்வியில் உள்ளது. பக்தி இயக்கம் அன்றைய நிலையில் சரி. அவரவர்களுக்கு வேண்டிய உணவையும் அன்றாட தேவைகளுக்கும் உழைக்கவேண்டும். சோம்பர்களுக்கு எந்த இயக்கத்தினாலும் பயன் உண்டாகாது என்பதை ராகுலன் அறிந்தால் நன்று.

  20. சமணத்திலும் பௌத்தத்திலும் இல்லாத சடங்கா!
    Tibetan book of the dead படித்துப் பாருங்களேன்?
    பகுத்தறிவுக்கும் மதத்துக்கும் தொடர்பேயில்லை என்று நம்புகிறேன். எந்த மதமாக இருந்தாலும் சரி.

  21. //இத ஏன் சொல்லவறேன்னா 63 நாயன்மார்களே ஒரு புருடான்னு அருட்பெரும்ஜோதி வள்ளல் ராமலிங்க அடிகளே சொல்றாரு .. //

    உங்களைப் போன்றவர்கள் தெரிந்தோ தெரியாமாலோ இப்படிப் பொய்யைச் சொல்வீர்கள். இதைப் படித்துவிட்டு இந்தப் பொய்யை இன்னும் பலர் பரப்புவார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் வள்ளலார் பல இடங்களில் சாடுகிறார்.

    வள்ளலார் எங்கும் தெய்வத்திரு சேக்கிழார் பெருமான் எழுதிய பெரியபுராணத்தைப் பொய் என்றோ புரட்டு என்றோ சொல்லவில்லை. தேவார, திருவாசக, திவ்யப் பிரபந்தங்கள் அருளியவர் இன்னின்னார் என்பது சரித்திரம்.

    வள்ளலாரது தமையனார் பக்தியுரை செய்து வந்தவர். ஒருநாள் அத்தமையனாரது உடல்நிலை காரணமாகப் பெரிய புராணச் சொற்பொழிவு நின்று போகும் நிலை ஏற்பட்டது. அப்படி நின்றுவிடக் கூடாதே என்று பெரியபுராணச் சொற்பொழிவு ஆற்றியதுதான் வள்ளலாரின் ஆன்மீகப் பயணத்தின் முதல் நிலை. அப்படிப்பட்டவரா, பெரிய புராணம் புரட்டு என்று சொல்வார்?

    பக்தி இயக்கங்கள்தான் அடித்தட்டு மக்களுக்கு உணவு அளிக்க அன்னதானம் என்ற வழக்கத்தையே உருவாக்கியது. வறியவருக்கு உதவும் தர்மப் போக்கை மன்னனுக்கும், மக்களுக்கும் எடுத்துச் சொன்னவர்கள் பக்தி இயக்கத்தவர்களே. திங்களூரில் அப்பூதி அடிகள் அப்பர் பெருமானின் பெயரை வைத்து ஆற்றிய சமூகத் தொண்டு ஒவ்வொன்றுக்கும் அப்பர் பெருமானே சாட்சியாக பெரிய புராணத்தில் பதியப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியே ஒவ்வொரு ஊரிலும் இருந்த, இன்னமும் இருக்கும் அன்ன சத்திரங்கள்.

    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தளிலும் உயரியது ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று சொல்லும் அளவுக்கு ஆயிரக்கணக்கில் அன்ன சத்திரங்கள் இருந்தன.

    நீங்கள் சொன்ன வள்ளலார் உருவாக்கிய அன்னக் கூடம் இன்னமும் அடுப்பணையாமல் இருக்கிறதே? அதன் ஆரம்பம் இன்னதென்று அறிந்து கொள்ளுங்கள்.

    உங்கள் உள்ளங்கையில் இருக்கும் நெல்லிக் கனி உங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு உங்கள் கண்களை மறைக்கும் புரைக்கு என்ன மருந்தென்று சிந்தியுங்கள்.

  22. திரு. அடியவன் …

    //உங்களைப் போன்றவர்கள் தெரிந்தோ தெரியாமாலோ இப்படிப் பொய்யைச் சொல்வீர்கள். இதைப் படித்துவிட்டு இந்தப் பொய்யை இன்னும் பலர் பரப்புவார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் வள்ளலார் பல இடங்களில் சாடுகிறார்.//

    தெரிந்தோ தெரியாமலோ பேசுவதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. தெரிந்தால் பேச வேண்டும் இல்லையேல் பேசகூடாது.பொய் சொல்வதால் எனக்கு ஆவது ஒன்றும் இல்லை. 63 நாயன்மார்கள் என்பது கற்பனை தான் இதனை வள்ளல் பெருமானார் தெளிவுபட தன் திருஅருட்பா உரைநடை பகுதியில் உபதேச குறிப்பில் கூறியுள்ளார் ….

    //வள்ளலார் எங்கும் தெய்வத்திரு சேக்கிழார் பெருமான் எழுதிய பெரியபுராணத்தைப் பொய் என்றோ புரட்டு என்றோ சொல்லவில்லை. தேவார, திருவாசக, திவ்யப் பிரபந்தங்கள் அருளியவர் இன்னின்னார் என்பது சரித்திரம்.

    வள்ளலாரது தமையனார் பக்தியுரை செய்து வந்தவர். ஒருநாள் அத்தமையனாரது உடல்நிலை காரணமாகப் பெரிய புராணச் சொற்பொழிவு நின்று போகும் நிலை ஏற்பட்டது. அப்படி நின்றுவிடக் கூடாதே என்று பெரியபுராணச் சொற்பொழிவு ஆற்றியதுதான் வள்ளலாரின் ஆன்மீகப் பயணத்தின் முதல் நிலை. அப்படிப்பட்டவரா, பெரிய புராணம் புரட்டு என்று சொல்வார்?//

    இதோ நீங்கள் கேட்டதற்கான அதாரம் …… திருஅருட்பா உரைநடை நூலில் உபதேச குறிப்பு என்னும் அத்தியாயத்தில் புராண ஹ்ருதயம் மற்றும் சமயநூல்களின் உண்மை என்னும் தலைப்புகளில் இருந்து வள்ளல் பெருமானார் கூறியதை கீழே தருகிறேன்.

    புராண ஹ்ருதயம்
    “பெரியபுராணத்தில் குறித்த 63 நாயன்மார்களும் தத்துவங்களே ஒழிய வேறல்ல . அதை அதை விசாரித்து அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியை கொடுக்கும்.”

    மேலும் , சமயநூல் உண்மை என்னும் தலைப்பின் கீழ் அவர் கூறியது…….

    “மாணிக்க வாசக சுவாமிகளும் 63 நாயன்மார்களும் மனிதரல்லர்,தத்துவங்கள். தேவாரம் திருவாசகம் முதலியவைகள் மேற் குறித்தவர்கள் பாடியனவல்ல, சித்தர்கள் சில சித்திகளைக் குறித்து கற்பனையாய் செய்த சரித்திரம்; அதற்க்கு மேற்கோள் வேண்டுவதின் பொருட்டு சில பாடலுஞ் செய்து,புராணத்தில் மேற் குறித்தபடி பெயரிட்டு, அவர்கள் செய்ததாகப் பரிசயஞ் செய்ததே தவிர, உண்மையல்ல. இவற்றிற்குரிய தாத்பரியங்களும் உண்மைகளும் சுத்த சன்மார்கதில் பகிரங்கமாய் இனி வெளிப்படும் ….

    ஆதாரம்: திருஅருட்பா உரைநடை பகுதி, ஊரன் அடிகள் பதிப்பித்தது, இராமலிங்கர் பணிமன்றம். இரண்டாம் பதிப்பு:1981ஆம் ஆண்டு .

    நீங்கள் இந்த பழைய பதிப்பை தேடி அலைய வேண்டாம் … தீ.நகரில் உள்ள வர்தமானன் பதிப்பகத்தில் ஊரன் அடிகள் பதிப்பித்த திருஅருட்பா உரைநடை நூல் புதிய பதிப்பாக வெளிவந்து இருக்கிறது வாங்கி படித்து கொள்ளலாம்… ஊரன் அடிகள்தான் என்றில்லை அணைத்து பதிப்பாளர்களின் பதிப்புகளிலும் இந்த தகவல் உள்ளது …

    நான் பொய் சொல்கிறேன் என்று என்னை வசை பாடுவதற்கு முன்னால் நீங்கள் உருப்படியாக சில விஷயங்களையாவது தெரிந்து வைத்து கொண்டு பிறகு பேச வாருங்கள் அதுதான் புத்திசாலித்தனம்…

    //பக்தி இயக்கங்கள்தான் அடித்தட்டு மக்களுக்கு உணவு அளிக்க அன்னதானம் என்ற வழக்கத்தையே உருவாக்கியது. வறியவருக்கு உதவும் தர்மப் போக்கை மன்னனுக்கும், மக்களுக்கும் எடுத்துச் சொன்னவர்கள் பக்தி இயக்கத்தவர்களே. திங்களூரில் அப்பூதி அடிகள் அப்பர் பெருமானின் பெயரை வைத்து ஆற்றிய சமூகத் தொண்டு ஒவ்வொன்றுக்கும் அப்பர் பெருமானே சாட்சியாக பெரிய புராணத்தில் பதியப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியே ஒவ்வொரு ஊரிலும் இருந்த, இன்னமும் இருக்கும் அன்ன சத்திரங்கள்.

    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தளிலும் உயரியது ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று சொல்லும் அளவுக்கு ஆயிரக்கணக்கில் அன்ன சத்திரங்கள் இருந்தன.

    நீங்கள் சொன்ன வள்ளலார் உருவாக்கிய அன்னக் கூடம் இன்னமும் அடுப்பணையாமல் இருக்கிறதே? அதன் ஆரம்பம் இன்னதென்று அறிந்து கொள்ளுங்கள்.//

    எப்பா…. எவ்வளோ பெரிய புரட்சி செய்து விட்டார்கள். ஆமாம்… வாழ கற்று கொடுக்காமல் அன்னதானம் என்கிற பெயரில் பிச்சை போடும் பண்பாட்டை உருவாக்கியது உங்கள் பக்தி இயக்கம் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை.. இருந்தாலும் உங்கள் மறுமொழியின் மூலம் அதை உறுதி செய்ததற்கு நன்றி ….

    நான் கேட்டது இன்றைய கால கட்டத்தில் பக்தி இயக்கத்தால் என்ன பயன்.. என்ன நல்லது நடந்து இருக்கிறது. கடலுக்குள் செல்லும் மீனவர்கள் அன்றாடம் இலங்கை ராணுவத்தால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் அதை தடுக்க உங்கள் பக்தி இயக்கத்திடம் எதாவது உபாயம் இருக்கிறதா…கோளறு பதிகம் படித்து விட்டு செல்வதை விட … அப்படி இருந்தால் கூறுங்கள்..

  23. \\\ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தளிலும் உயரியது ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று சொல்லும் அளவுக்கு ஆயிரக்கணக்கில் அன்ன சத்திரங்கள் இருந்தன. \\\

    ஸ்ரீமான் ராகுலன்

    சைவ வைஷ்ணவ சபைகள் தமிழகத்தில் அன்ன சத்திரம் மட்டிலும் வைக்கவில்லை. ஸ்ரீ அடியவன் அவர்களது வாசகத்தில் தாங்கள் காணும் *ஏழைக்கு எழுத்தறிவித்தல்* என்னும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

    தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களது ஆசிரியர் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம்பிள்ளையவர்கள் மாணாக்கர்களுக்கு அன்னமும் இட்டு பாடமும் சொல்லித்தந்தவர். இது பொதுவிலே அனைவரும் அறிந்த செய்தி. ஒரு உதாரணம். இது போன்று தமிழகம் முழுதும் எண்ணிறந்த பாடசாலைகள். பக்தியுடன் கல்வியும்.

    ம்…….நீங்கள் கேள்வியை கோளறுபதிகம் ராணுவத்தால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களுக்கு என்ன செய்யும் எனக்கேட்டுள்ளீர்கள். ம்..அந்த பாடசாலைகளில் சங்கத் தமிழ் நூற்கக்ள் போன்றவையும் படிப்பிக்கப்பட்டன படிப்பிக்கப்படுகின்றன. திருக்குறள் படித்தால் வீட்டில் சோறு வேகுமா என்று கூட வினவலாம்!!!

    சரி பாட்டாளிகளுக்கு பக்திமான் கள் என்ன செய்கிறார்கள் என நீங்கள் கேழ்ப்பது ஞாயம் என்றே வைத்துக்கொள்வோம் ஒரு பேச்சுக்கு.

    \\\\ கடலுக்குள் செல்லும் மீனவர்கள் அன்றாடம் இலங்கை ராணுவத்தால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் அதை தடுக்க உங்கள் பக்தி இயக்கத்திடம் எதாவது உபாயம் இருக்கிறதா…கோளறு பதிகம் படித்து விட்டு செல்வதை விட … \\\

    தாங்கள் கம்யூனிஸ இயக்கத்தைச் சார்ந்தவர் இல்லையா? ஸ்ரீலங்கா ராணுவத்தால் சித்ரவதை செய்து கொல்லப்படும் மீனவர்களுக்கு கம்யூனிஸ இயக்கம் என்ன செய்து வருகிறது? அல்லது இதைத் தடுக்க தாங்கள் உபாயமாகச் சொல்லும் விஷயம் என்ன என்பதனை இந்த தளத்து வாசகர்களுடம் பகிர்ந்து கொள்ளலாமே.

    நீ என்ன செய்கிறாய் என்ற கேழ்வியில் நான் குற்றம் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அத்துடன் நான் என்ன செய்கிறேன் என்ற விஷயமும் பகிரப்பட்டால் உரையாடல் பயனுள்ளதாக அமையுமே.

    நீங்கள் கேழ்வி கேட்ட முறையில் அதீதமான நக்கல் தென்படுகிறது. அதை விட நக்கலாக கம்யூனிஸ இயக்கத்தின் செயல்பாடுகள் சார்ந்து உங்களுக்கு பதில் கேழ்வி வைக்க முடியும். அதனால் யாருக்கு என்ன பயன்?

    தாங்கள் ஸ்ரீ பாலசந்த்ரன் அவர்களுடன் நிகழ்த்திய உரையாடலில் இருந்த வினம்ரதை மற்றும் கருத்தாழம் பொதுவிலானது என்று நான் நினைத்தது தவறுதலாக இருக்கலாம். உரையாடலின் பயன் கருத்துப் பரிமாற்றம் என்று இன்னமும் நான் நினைக்கிறேன்.

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்ற குறள் தாங்கள் அறிந்ததாகவே இருக்கும்.

    வள்ளலார் பெருமான் அறுபத்துமூவர் சரித்திரத்தில் இருந்தவர் இல்லை என்று சொல்லி விட்டால் நால்வர் சரித்திரமும் மற்றையவர் சரித்ரமும் பொய்யாக ஆகிவிடுமா? மணிவாசகர் பற்றிய காலநிர்ணயம் இந்த தளத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. காலநிர்ணயத்தில் குழப்பங்கள் இருக்கின்றன. இருக்கட்டும்.

    அறுபத்து மூவரை விடுங்கள். தேவார நால்வர் சரித்ரத்தில் இருந்தமையைத் தாங்கள் இது சம்பந்தமான எண்ணிறந்த சரித்ரக்குறிப்புகள் உள்ளனவே — அவற்றை எப்படி மறுதலிக்கிறீர்கள் என்ற விவரங்களுடன் கருத்துப் பதிந்தால் அது அறிவு சார்ந்த விவாதமாக இருக்கும்.

  24. மிக சிறந்த வினாக்களை எழுப்பி அசத்தியுள்ள திரு கிருஷ்ணகுமார் அவர்களுக்கு நமது நமஸ்காரங்கள்.

    வரலாறு என்பது ஆளுவோரின் வசதிக்காக அவர்கள் விருப்பத்தை அடியொற்றி எழுதப்படுவது ஆகும். அதில் சில நேரங்களில் தவிர்க்கமுடியாமல் உண்மையும் சிறிது கலந்திருக்கும் வாய்ப்பு உள்ளது.

    எனவே வரலாற்றுக்கு ஆதாரம் தேடி அலைவதும், ஆதாரம் கிடைக்காததால் அவை உண்மை அல்ல என்று கொள்வதும் சரியாகுமா ?

    வள்ளலார் 1823-1874 காலக் கட்டத்தில் வாழ்ந்த பெருமகன். அவர் வாக்கை வேதவாக்காக கொள்வது ராகுலனின் இஷ்டம். வள்ளலாரின் கடவுள் நம்பிக்கையை ராகுலன் ஏற்கிறாரா ?

    இந்து சமய இலக்கியங்கள், இதிகாசங்கள் புராணங்கள் இவற்றில் எவ்வளவு உண்மையில் நடந்தது, எவ்வளவு , கதை போல சொன்னால் தான் மக்கள் மனதில் கருத்துக்கள் பதியும் என்பதால் சொல்லப்பட்ட கதைகள் எவை எவை என்று தரம் பிரிப்பது சிரமமான காரியம். இராமலிங்க அருட்பெரும் ஜோதியின் பாதம் பணியும் நான், திருவாசகமும் ,தேவாரமும் , பன்னிரு திருமுறைகளும் ,அறுபத்து மூன்று நாயன்மார்களும், மாணிக்க வாசகரும் சித்த புருஷர்களின் கற்பனை என்ற கருத்தினை நூற்றுக்கு நூறு ஏற்கவில்லை.

    தங்களது சொந்த கற்பனைகளை பொது மக்கள் மீது திணிக்கவேண்டிய அவசியம் எதுவும் சித்தபுருஷர்களுக்கு இல்லை. அவர்களோ யோகிகள். பொய்களும், கற்பனைகளும் அவர்களுக்கு சம்பந்தம் இல்லாதவை. கடவுள் நம்பிக்கை என்பது ஒரு அபின் போன்றது என்று சொல்லும் கம்யூனிச நண்பர்கள் கடவுள் நம்பிக்கை உள்ள ராமலிங்கரின் திருவருட்பா பற்றியும் அதன் விளக்க உரைகளையும் ஆராய்வது எதற்காக என்பது எனக்கு புரியவில்லை.

    இந்து மதத்தில் இராமாயணமே சுமார் 300-க்கும் மேல் உண்டு. ஒவ்வொரு இராமாயணமும் சிறிது வேறுபாடுகளுடன் இருக்கும். ஆனால் ஆதிகாவியம் எனப்படுவது வால்மீகி இராமாயணமே ஆகும். மற்றவை காலத்தால் பிந்தியவை ஆகும். ஆனால் புதியதாக இன்னும் சில ராமாயணங்கள் எதிர்காலத்தில் வரலாம் ஏனெனில் இந்துமதத்தில் யாருக்கும் எப்போதும் சுதந்திரம் உண்டு. புதிய சிந்தனைகள், புதிய வரலாறுகள், புதிய சாதனைகள் மேலும் மேலும் படைக்கப்படும்.

    மகாபாரதத்திலும் கூட வியாச பாரதம் ஆதிகாவியம் ஆகும். பல்வேறு இந்திய மொழிகளிலும் புதிய பாரதங்கள் சிறிது மாறுபாடுகளுடன் வந்துள்ளன. இனிமேலும் எதிர்காலத்தில் புதிய கருத்தாக்கங்களுடன் கூடிய புதிய பாரதங்கள் நிச்சயம் வரும். ஏனெனில் பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வரையினானே- என்ற மூதுரை இந்துக்களுக்கு என்றும் பொருந்துவது ஆகும்.

    பக்தி இயக்கம் என்ன சாதித்தது என்பதற்கு திரு கிருஷ்ணகுமார் அவர்கள் அளித்த பதில் மிக சிறப்பானது. என்னைப் பொறுத்த மட்டில் , மற்றவர்கள் என்ன செய்யவில்லை என்று வெட்டி ஆராய்ச்சிகள் செய்வதை விட்டு நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்பது நம் அனைவருக்கும் நல்லது என்று கருதுகிறேன்.

    திரு ராகுலன் அவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாளை ஒரு நாள், இராமலிங்க அடிகள் என்று ஒருவரும் கிடையாது , யாரோ கற்பனையாக எழுதிய விஷயம் என்று எதிர்காலத்தில் சொன்னால் என்ன செய்வது ? பன்னிரு திருமுறைகளும், அவற்றை எழுதிய நால்வர் மற்றும் அறுபத்துமூவரும் கற்பனை என்று சொல்வது அப்படித்தான் இருக்கிறது.

    தேசப்பிதா மகாத்மா மறைந்தபோது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இதே கருத்தை வலியுறுத்தி சொன்னார். ” நம்மிடையே இரத்தமும் சதையுமாக காந்தி வாழ்ந்தார் என்று சொன்னால் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு , எதிர்காலத்தலைமுறை நம்பாது “-

    உண்மைகள் ஆதாரங்களை நம்பி இருப்பவை அல்ல. ஏனெனில் ஆதாரங்கள் எவ்வளவோ காலப்போக்கில் அழிந்துவிடும். ஆனால் உண்மை அழிவதில்லை.

  25. ராகுலன்

    /// இத ஏன் சொல்லவறேன்னா 63 நாயன்மார்களே ஒரு புருடான்னு அருட்பெரும்ஜோதி வள்ளல் ராமலிங்க அடிகளே சொல்றாரு .. ///

    ///பெரியபுராணத்தில் குறித்த 63 நாயன்மார்களும் தத்துவங்களே ஒழிய வேறல்ல . அதை அதை விசாரித்து அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியை கொடுக்கும்.///

    ///மாணிக்க வாசக சுவாமிகளும் 63 நாயன்மார்களும் மனிதரல்லர்,தத்துவங்கள். தேவாரம் திருவாசகம் முதலியவைகள் மேற் குறித்தவர்கள் பாடியனவல்ல, சித்தர்கள் சில சித்திகளைக் குறித்து கற்பனையாய் செய்த சரித்திரம்; அதற்க்கு மேற்கோள் வேண்டுவதின் பொருட்டு சில பாடலுஞ் செய்து,புராணத்தில் மேற் குறித்தபடி பெயரிட்டு, அவர்கள் செய்ததாகப் பரிசயஞ் செய்ததே தவிர, உண்மையல்ல. இவற்றிற்குரிய தாத்பரியங்களும் உண்மைகளும் சுத்த சன்மார்கதில் பகிரங்கமாய் இனி வெளிப்படும் ….///

    நீங்கள் முதலில் சூனதையும், பின்னர், அருட்பிரகாசறது வரிகளையும் படித்துப் பாருங்கள். வள்ளலார் சொன்னது தத்துவார்த்தமான விசாரணை செய்ய வேண்டும் என்று. அவர் மேலும் சொன்னது, நிகழ்வுகளைத் தத்துவார்த்தமாக விசாரணை செய்து அவற்றின் உட்பொருளை உணரவேண்டும் என்றார்.

    அதை விட்டு விட்டு நீங்கள் “புருடா” என்று சொன்னால் அதைப் பொய், புரட்டு என்று நான் சொன்னது மிகவும் மென்மையான கண்டனம்தான். நீங்கள் சொன்னது வள்ளலார் பேரில் அவதூறு. இதுதான் சரியான வார்த்தை.

    மஹான்கள் தத்துவார்த்தமாகச் சொன்னதைப் புரட்டிப் பொருள் கூறுவது அந்த மஹான்களுக்க்குச் செய்யப் படும் அவமரியாதை. இதை நீங்கள் நிறுத்திக் கொள்வது நல்லது.

  26. ராகுலன்

    அதே அதிகாரத்தில் வள்ளலார் கூறுவது பலப்பல. அவற்றுள் சில உதாரணங்கள் அவர் எப்படித் தத்துவார்த்த விளக்கமாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்தார் என்பதை விளக்கும்.

    1. தேவாரம் என்பது: தேவ் – தயவு, ஆரம் – ஒழுங்கு, தயா ஒழுங்கே தேவாரம்.
    2. திருவாசகம் என்பது: மெய்ப்பொருள் நிரம்பிய வார்த்தை. மெய்ப்பொருளைத் தரும் வார்த்தை.
    3. சாத்திரங்களிற் சிறந்தது திருமூலர் திருமந்திரம். இஃது மொத்தம் எண்ணாயிரம்; தோத்திரங்களிற் சிறந்தது திருவாசகம். இவற்றை ஊன்றிப் பார்க்கவும்.
    4. வேதாரணியத்தில் கதவு திறக்கப்பட்டதும் மூடப்பட்டதும் யாதெனில்: வேதப்பொருளை மறைத்ததுந் திறந்ததும் எனக் கொள்க. உண்மையை விளக்கியது திறந்தது, மறைத்தது மூடியது.
    5. பிரம தேவனுக்கு ஐந்து முகமாவன: ஆணவம், காமியம், மாயை, திரோதை, மாமாயை. இவைகளில் ஆணவம் என்னும் ஒரு தலை மாத்திரம் பரமசிவத்தினால் அரியப்பட்டது.

    இப்படித்தான் அவர் தத்துவ விளக்கமாகச் சொன்னதை நீங்கள் மாற்றிப் பொருள் சொல்கிறீர்கள்.

  27. “இன்றைய கால கட்டத்தில் பக்தி இயக்கத்தால் என்ன பயன்.. என்ன நல்லது நடந்து இருக்கிறது. கடலுக்குள் செல்லும் மீனவர்கள் அன்றாடம் இலங்கை ராணுவத்தால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் அதை தடுக்க உங்கள் பக்தி இயக்கத்திடம் எதாவது உபாயம் இருக்கிறதா…கோளறு பதிகம் படித்து விட்டு செல்வதை விட … அப்படி இருந்தால் கூறுங்கள்..”

    சார், உங்க பேரு என்னங்க? ஆங், சரியா தான் வெச்ச்ருகீங்க! பக்தி இயக்கத்தின் பயன் அப்படின்னு கேட்காம சும்மா பக்தியின் பயன் என்னன்னே கேட்ருக்கலாமே! பக்திங்க்றது நம்பறவனுக்கு தான். நம்பாதவன் நம்ப வேணாம். கடமையை மட்டும் செஞ்சா போதும். கடமை என்னவா? அதை நீங்களே நிர்ணம் பண்ணிக்கலாம். அதை தான் கீதை சொல்லுது.

    இறைவன் ஒளி வடிவமானவர் அப்படின்னு கூட தான் வள்ளல் பெருமான் சொல்லியிருக்கார். அதுக்காக நைட்டு தூங்கறப்ப கூட லைட்டு போட்டு தான் படுப்பீங்களா?

    பக்தி இயக்கம் என்ன செஞ்சதுங்க்ரதுக்கு ஒரு சாம்பிள் தான் இந்த கட்டுரை. அதோட இன்னிக்கு உபயோகம் என்னனா எப்புடி? இதைப் போன்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது? மீனவர்கள் மட்டுமன்றி, அனைத்து சமுதாய நண்பர்களிடம் நாம் இன்னும் அதிக நட்புடனும், நெருக்கத்துடனும் சம்பந்தர் காட்டிய பாதையில் வாழ முனையலாம். அவர்களுடனான நம் தொடர்பில் அன்புணர்வை அதிகப் படுத்தி வாழலாம். இது தான் யூசு. போதுமா?

    நேத்திக்கு சாப்டதால இன்னிக்கு என்ன பயன்? இதான் நீங்க கேட்கற விதம். ஆனா, நேத்திக்கு செஞ்ச சமையல் என்னனு யோசனை பண்ணா, அதை விட இன்னும் சிறப்பா செய்யலாமே! எதுவுமே நாம் பார்க்கும் பார்வையைப் பொறுத்தது தான் ராகுலன் ஜி!

  28. திரு. கிருஷ்ண குமார் ………

    //சைவ வைஷ்ணவ சபைகள் தமிழகத்தில் அன்ன சத்திரம் மட்டிலும் வைக்கவில்லை. ஸ்ரீ அடியவன் அவர்களது வாசகத்தில் தாங்கள் காணும் *ஏழைக்கு எழுத்தறிவித்தல்* என்னும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.//

    //தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களது ஆசிரியர் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம்பிள்ளையவர்கள் மாணாக்கர்களுக்கு அன்னமும் இட்டு பாடமும் சொல்லித்தந்தவர். இது பொதுவிலே அனைவரும் அறிந்த செய்தி. ஒரு உதாரணம். இது போன்று தமிழகம் முழுதும் எண்ணிறந்த பாடசாலைகள். பக்தியுடன் கல்வியும்.//

    அப்படி எத்தனை சபைகள் உண்மையாக ஏழைக்கு எழுத்தறிவித்தது என்று கூறினால் நன்றாக இருக்கும்… வேறொன்றுமில்லை நான் தெரிந்து கொள்வேன். எனக்கு தெரிந்து அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை.. ஒரு வேளை ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று அனைவருக்கும் நீங்கள் மேற்கூறிய சபைகள் உண்மையான சமுக பணிகளில்( பக்தியுடன் கல்வியும் ) ஈடுபட்டு இருந்தால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இவ்வளவு மத மாற்றங்கள் நடந்தேறியிருக்காது. அப்புறம் இன்னொரு விஷயம் மேற்கோள் காட்டுவதற்கு ஊ.வே.சா. ஒன்றும் ஏழையோ அல்லது சமுதாயத்தில் பின்தங்கியவரோ அல்ல .. அவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் வீட்டில் ஆகாரம் உண்டு கல்வி கற்றதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை …….

    //ம்…….நீங்கள் கேள்வியை கோளறுபதிகம் ராணுவத்தால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களுக்கு என்ன செய்யும் எனக்கேட்டுள்ளீர்கள். ம்..அந்த பாடசாலைகளில் சங்கத் தமிழ் நூற்கக்ள் போன்றவையும் படிப்பிக்கப்பட்டன படிப்பிக்கப்படுகின்றன. திருக்குறள் படித்தால் வீட்டில் சோறு வேகுமா என்று கூட வினவலாம்!!!//

    சங்க தமிழ் நூல்கள் என்பது சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்கை முறை மன்னர்களின் கொடை திறம், போர் திறம் ஆகிய எதார்த்தத்தை மட்டுமே படம்பிடித்து காட்டும் கால பேழை அவ்வளவுதான். சங்க இலக்கியத்தில் எங்கும் இந்த மன்னன் இந்த நாளில் இந்திரனின் ஐராவதம் யானையின் மேல் ஏறி கைலாயம் சென்றான் என்றோ. வெப்பு நோயால் பாதிகப்பட்ட மன்னன் திருநீற்று பதிகம் பாடி திருநீறு தடவியுடன் நோய் நீங்கி கூன் மறைந்து எழுந்து நின்றான் என்கிற அப்பட்டமான கற்பனைகளையோ கூறவில்லை … மொத்தத்தில் சங்க இலக்கியம் என்பது கற்பனையா அல்லது உண்மையா என்பது வேறு விசயம்… ஆனால் மக்களின், மன்னர்களின் எதார்த்த வாழ்கை முறை என்பதை தாண்டி கற்பனை புரட்டுகளை கூறும் பக்தி இலக்கியத்தோடு சேர்ந்தது அல்ல என்பது மட்டும் கண்கூடு… அதற்க்கு மேல் ஒன்றும் கிடையாது.

    //பாட்டாளிகளுக்கு பக்திமான் கள் என்ன செய்கிறார்கள் என நீங்கள் கேழ்ப்பது ஞாயம் என்றே வைத்துக்கொள்வோம் ஒரு பேச்சுக்கு.

    \\\\ கடலுக்குள் செல்லும் மீனவர்கள் அன்றாடம் இலங்கை ராணுவத்தால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் அதை தடுக்க உங்கள் பக்தி இயக்கத்திடம் எதாவது உபாயம் இருக்கிறதா…கோளறு பதிகம் படித்து விட்டு செல்வதை விட … \\\

    தாங்கள் கம்யூனிஸ இயக்கத்தைச் சார்ந்தவர் இல்லையா? ஸ்ரீலங்கா ராணுவத்தால் சித்ரவதை செய்து கொல்லப்படும் மீனவர்களுக்கு கம்யூனிஸ இயக்கம் என்ன செய்து வருகிறது? அல்லது இதைத் தடுக்க தாங்கள் உபாயமாகச் சொல்லும் விஷயம் என்ன என்பதனை இந்த தளத்து வாசகர்களுடம் பகிர்ந்து கொள்ளலாமே.//

    ஐயா… முதலில் ஒன்றை கூறி விடுகிறேன். இப்போது நம் நாட்டில் உண்மை கம்யுனிஸ்டுகள் என்று யாரும் இல்லை… எல்லாம் பிழைப்பு வாதிகள் தான்.. கம்யுனிச முகமூடி அணிந்து கொள்கிறார்கள்.. ஆனால் அவர்களாவது பெயருக்காவது மீனவர்களுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் எதிராக கண்டன போராட்டமாவது நடத்தினார்கள் .. நீங்கள் சொல்லும் பக்தி ஆன்மீக இயக்கங்கள் என்ன செய்தது… மேலும்,

    //அல்லது இதைத் தடுக்க தாங்கள் உபாயமாகச் சொல்லும் விஷயம் என்ன என்பதனை இந்த தளத்து வாசகர்களுடம் பகிர்ந்து கொள்ளலாமே.//

    எனக்கு தெரிந்து என்னிடம் கேட்டால்… சொல்லி பார்க்க வேண்டும்.. கேட்கவில்லை என்றால் மாவோயிச வழி தான்… திருப்பி நாம் தாக்க வேண்டும்.. நம் இந்திய தேசத்திடமும் கடற் படை இருக்கின்றது… மாவோ கூறுவது போல் ” நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எதிரி தான் தீர்மானிகிறான்”. தன் மக்களை நேசிக்கின்ற ஒரு உண்மையான அரசாங்கம் இதை தான் செய்யும்…

    //நீங்கள் கேழ்வி கேட்ட முறையில் அதீதமான நக்கல் தென்படுகிறது. அதை விட நக்கலாக கம்யூனிஸ இயக்கத்தின் செயல்பாடுகள் சார்ந்து உங்களுக்கு பதில் கேழ்வி வைக்க முடியும். அதனால் யாருக்கு என்ன பயன்?//

    நான் நக்கலாக கேட்கவில்லை. அப்படி எதாவது நான் பேசியது நக்கல் செய்யும் தொனியில் இருந்து உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் நான் மனபூர்வமாக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்…

    //வள்ளலார் பெருமான் அறுபத்துமூவர் சரித்திரத்தில் இருந்தவர் இல்லை என்று சொல்லி விட்டால் நால்வர் சரித்திரமும் மற்றையவர் சரித்ரமும் பொய்யாக ஆகிவிடுமா? மணிவாசகர் பற்றிய காலநிர்ணயம் இந்த தளத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. காலநிர்ணயத்தில் குழப்பங்கள் இருக்கின்றன. இருக்கட்டும்.//

    இந்த தளத்தில் மட்டுமல்ல .. மறைமலை அடிகளும் மாணிக்கவாசகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார் … உண்மையான ஆதாரங்கள் இல்லை என்றால் குழப்பங்கள் மட்டுமே மிஞ்சும்… உண்மையாக இருந்த ஒன்று அல்லது நடந்த ஒன்று மட்டும்தான் ஏதாவதொரு குழப்பம் இல்லாத ஆதாரத்தை விட்டு செல்லும்…

    //அறுபத்து மூவரை விடுங்கள். தேவார நால்வர் சரித்ரத்தில் இருந்தமையைத் தாங்கள் இது சம்பந்தமான எண்ணிறந்த சரித்ரக்குறிப்புகள் உள்ளனவே //

    அப்படி ஏதாவது விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களுடன் சரித்திர குறிப்புகள் இருந்தால் எமக்கு தெரிவிக்கவும்.. அந்த சரித்திர குறிப்பானது நம் இருவரின் பகுத்தறிவிற்கு ஏற்றதாக இருக்கும் என நம்புகிறேன்…

    திரு. பாலச்சந்திரன் ….

    //எனவே வரலாற்றுக்கு ஆதாரம் தேடி அலைவதும், ஆதாரம் கிடைக்காததால் அவை உண்மை அல்ல என்று கொள்வதும் சரியாகுமா ?//

    அதாரம் இல்லாத ஒன்றை எந்த அடிப்படையில் உண்மை என்று ஏற்று கொள்ள சொல்கிறீர்கள்.. வெறும் குருட்டு நம்பிக்கையின் அடிப்படையிலா…

    //வள்ளலார் 1823-1874 காலக் கட்டத்தில் வாழ்ந்த பெருமகன். அவர் வாக்கை வேதவாக்காக கொள்வது ராகுலனின் இஷ்டம். வள்ளலாரின் கடவுள் நம்பிக்கையை ராகுலன் ஏற்கிறாரா ?//

    வள்ளலாரின் வாக்கு என்பதால் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டிய வேதவாக்கு என்று நான் கூறவில்லையே … 63 நாயன்மார்களை நான் எப்போதுமே ஏற்றுகொண்டது இல்லை என்பது என்னுடைய சொந்த அனுபவத்தினால் ஏற்பட்டது…. வள்ளலார் கூறியதால் அதை ஏற்று கொள்ளவில்லை என்றா சொன்னேன்.. பெரியாரும் இதை கூறி இருக்கிறார் ஆனால் அவரது உரைகளில் இருந்து மேற்கோள் காட்டுவது இங்கு ஏற்புடையது ஆகாது .. ஆகவே இந்துக்கள் அனைவரும் ஏற்று கொள்ளும் ஒரு மகானின் வார்த்தைகளை உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கட்டுமே என்று நினைத்து வள்ளலாரின் சொற்களில் இருந்து என்னால் முடிந்த ஆதாரத்தை காட்டினேன்… எடுத்து கொள்வதும் எடுத்து கொள்ளாததும் உங்கள் இஷ்டம் ….

    // இராமலிங்க அருட்பெரும் ஜோதியின் பாதம் பணியும் நான், திருவாசகமும் ,தேவாரமும் , பன்னிரு திருமுறைகளும் ,அறுபத்து மூன்று நாயன்மார்களும், மாணிக்க வாசகரும் சித்த புருஷர்களின் கற்பனை என்ற கருத்தினை நூற்றுக்கு நூறு ஏற்கவில்லை.//

    ஏற்கவேண்டும் என்று யாரும் உங்களை இங்கு கட்டாய படுத்தவில்லை … என் கருத்தை யார் மீதும் இங்கு நான் திணிக்கவும் இல்லை.

    //பக்தி இயக்கம் என்ன சாதித்தது என்பதற்கு திரு கிருஷ்ணகுமார் அவர்கள் அளித்த பதில் மிக சிறப்பானது. என்னைப் பொறுத்த மட்டில் , மற்றவர்கள் என்ன செய்யவில்லை என்று வெட்டி ஆராய்ச்சிகள் செய்வதை விட்டு நாம் என்ன செய்யலாம் என்று சிந்திப்பது நம் அனைவருக்கும் நல்லது என்று கருதுகிறேன்.//

    யாரும் பொழுது போகாமல் இங்கு மறுமொழி போடவில்லை… ஒரு உண்மையான பொதுவுடைமைவாதியாக என்னால் முடிந்த சேவைகளை இந்த சமுகத்திற்கு நான் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.. அவைகளையெல்லாம் நான் விளம்பர படுத்தி கொண்டு இருக்க முடியாது.

    //கடவுள் நம்பிக்கை என்பது ஒரு அபின் போன்றது என்று சொல்லும் கம்யூனிச நண்பர்கள் கடவுள் நம்பிக்கை உள்ள ராமலிங்கரின் திருவருட்பா பற்றியும் அதன் விளக்க உரைகளையும் ஆராய்வது எதற்காக என்பது எனக்கு புரியவில்லை//

    கம்யுநிசவாதி ஆத்திக நூல்களை படிக்க கூடாது ஆராய கூடாது என்று யார் சட்டம் போட்டது. காரல் மார்க்ஸ் அப்படி சொன்னாரா. அல்லது ஆத்திகவாதிகள் கம்யுனிசம் பற்றி படிக்க கூடாது என்று நாங்கள் கூறினோமா. ஐயா, இது அநியாயமாக இல்லையா

    //திரு ராகுலன் அவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாளை ஒரு நாள், இராமலிங்க அடிகள் என்று ஒருவரும் கிடையாது , யாரோ கற்பனையாக எழுதிய விஷயம் என்று எதிர்காலத்தில் சொன்னால் என்ன செய்வது ? பன்னிரு திருமுறைகளும், அவற்றை எழுதிய நால்வர் மற்றும் அறுபத்துமூவரும் கற்பனை என்று சொல்வது அப்படித்தான் இருக்கிறது.//

    என்ன செய்வது .. பாய்ந்து அவர்களை அடிக்கவா முடியும். இல்லை Tension ஆகி இப்படி எல்லாம் நம்பிக்கை இல்லாமல் கேள்வி கேட்க உனக்கு எப்படி மனசு வந்தது என்று கத்தவா முடியும்.. என்னால் முடிந்த ஆதாரங்களை கொடுக்க முயற்சிப்பேன். வள்ளல் பெருமானார் வாழ்ந்த வீடு, வடலூர் சுத்த சன்மார்க்க சபை என்று. அதற்கு மேல் அவர் விருப்பம்..

    //தேசப்பிதா மகாத்மா மறைந்தபோது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இதே கருத்தை வலியுறுத்தி சொன்னார். ” நம்மிடையே இரத்தமும் சதையுமாக காந்தி வாழ்ந்தார் என்று சொன்னால் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு , எதிர்காலத்தலைமுறை நம்பாது “-//

    50 ஆண்டுகள் அல்ல 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது இப்போது யார் காந்தியின் இருப்பை நம்ப மாட்டேன் என்று சொன்னது … இப்போது மட்டும் அல்ல எப்போதும் நம்புவார்கள்.. அதான் அவரது புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் என்று அனைத்தும் இருக்கிறதே அப்புறம் என்ன ஐயா …..

    திரு. அடியவன்…

    //நீங்கள் முதலில் சூனதையும், பின்னர், அருட்பிரகாசறது வரிகளையும் படித்துப் பாருங்கள். வள்ளலார் சொன்னது தத்துவார்த்தமான விசாரணை செய்ய வேண்டும் என்று. அவர் மேலும் சொன்னது, நிகழ்வுகளைத் தத்துவார்த்தமாக விசாரணை செய்து அவற்றின் உட்பொருளை உணரவேண்டும் என்றார்.//

    என்னை சொல்லி விட்டு இப்போது நீங்கள் தான் புரட்டல் வேலைகளை செய்கிறீர்கள். வள்ளலார் கூறிய தத்துவார்த்த விசாரணை என்பது மாணிக்கவாசகர் அப்பர் ஆகியோரின் கதாபாத்திரத்தின் தன்மைகளை தான் (CHARACTERISTICAL VIEWS). அதில் அடங்கி இருக்கும் ஆன்மீக தத்துவத்தை தான். இவர்கள் எல்லாம் உண்மையாக வாழ்ந்தார்களா என்பதை அல்ல… அதை தான் அவர் தெளிவாக கூறி விட்டாரே. “மாணிக்க வாசக சுவாமிகளும் 63 நாயன்மார்களும் மனிதரல்லர்,தத்துவங்கள். தேவாரம் திருவாசகம் முதலியவைகள் மேற் குறித்தவர்கள் பாடியனவல்ல, சித்தர்கள் சில சித்திகளைக் குறித்து கற்பனையாய் செய்த சரித்திரம்; அதற்க்கு மேற்கோள் வேண்டுவதின் பொருட்டு சில பாடலுஞ் செய்து,புராணத்தில் மேற் குறித்தபடி பெயரிட்டு, அவர்கள் செய்ததாகப் பரிசயஞ் செய்ததே தவிர, உண்மையல்ல” என்று. இதில் மேற் குறித்தவர்கள் பாடியனவல்ல என்பதின் பொருள் என்ன. இதிலும் ஏதாவது தத்துவ அர்த்தம் இருகிறதா.

    //அதை விட்டு விட்டு நீங்கள் “புருடா” என்று சொன்னால் அதைப் பொய், புரட்டு என்று நான் சொன்னது மிகவும் மென்மையான கண்டனம்தான்.//

    இந்த புருடா என்கிற வார்த்தை உங்களை புண் படுத்தி இருந்தால் அதற்காக மனிப்பு கேட்டு கொள்கிறேன்.

    //இதை நீங்கள் நிறுத்திக் கொள்வது நல்லது.//

    நான் பேசியது உங்களை புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும் .. அதற்காக இந்த பாத்வா போடும் வேலைகள் எல்லாம் வேண்டாம். நன்றி

    என் மறுமொழிகளுக்கு எதிர்வினையாற்றி அறிபூர்வமான உங்களின் விவாதத்தில் பங்கு கொள்ள வாய்பளித்த திரு. கிருஷ்ண குமார். திரு. பாலச்சந்திரன் மற்றும் திரு.அடியவன் ஆகிய அனைவருக்கும் தமிழ்ஹிந்து தளத்திற்கும் என் மனபூர்வ நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.. ராகுலன்

  29. திரு. அடியவன் …

    அதே அதிகாரத்தில் வள்ளலார் கூறுவது பலப்பல. அவற்றுள் சில உதாரணங்கள் அவர் எப்படித் தத்துவார்த்த விளக்கமாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்தார் என்பதை விளக்கும்.

    1. தேவாரம் என்பது: தேவ் – தயவு, ஆரம் – ஒழுங்கு, தயா ஒழுங்கே தேவாரம்.
    2. திருவாசகம் என்பது: மெய்ப்பொருள் நிரம்பிய வார்த்தை. மெய்ப்பொருளைத் தரும் வார்த்தை.
    3. சாத்திரங்களிற் சிறந்தது திருமூலர் திருமந்திரம். இஃது மொத்தம் எண்ணாயிரம்; தோத்திரங்களிற் சிறந்தது திருவாசகம். இவற்றை ஊன்றிப் பார்க்கவும்.
    4. வேதாரணியத்தில் கதவு திறக்கப்பட்டதும் மூடப்பட்டதும் யாதெனில்: வேதப்பொருளை மறைத்ததுந் திறந்ததும் எனக் கொள்க. உண்மையை விளக்கியது திறந்தது, மறைத்தது மூடியது.
    5. பிரம தேவனுக்கு ஐந்து முகமாவன: ஆணவம், காமியம், மாயை, திரோதை, மாமாயை. இவைகளில் ஆணவம் என்னும் ஒரு தலை மாத்திரம் பரமசிவத்தினால் அரியப்பட்டது.

    இப்படித்தான் அவர் தத்துவ விளக்கமாகச் சொன்னதை நீங்கள் மாற்றிப் பொருள் சொல்கிறீர்கள்.//

    ஏன் இப்படி …..

    வள்ளலார் தேவாரமும், திருவாசகமும் இல்லை என்றா கூறினார். இல்லை அவ்வாறு கூறினார் என்று நான் கூறினேனா … 63 நாயன்மார்களையும் மாணிக்கவாசகரையும் தான் இல்லை என்று கூறினார். அவர்கள் பாடியதாக கூறப்படும் பாடல்களை அல்ல …

    //4. வேதாரணியத்தில் கதவு திறக்கப்பட்டதும் மூடப்பட்டதும் யாதெனில்: வேதப்பொருளை மறைத்ததுந் திறந்ததும் எனக் கொள்க. உண்மையை விளக்கியது திறந்தது, மறைத்தது மூடியது.//

    ஆம் இது தத்துவ பொருள்தான் நான் மறுக்கவில்லையே… வள்ளல் பெருமானும் இதை தத்துவரீதியாக தான் சொல்கிறார். உண்மையாக நடந்த கதை என்று அவர் கூறவில்லையே. இப்போ, கந்த புராணத்தில் வரும் முருகன் சூரபத்மனை வீழ்த்திய கதை என்பது என்ன என்று பார்த்தால் அதவும் ஒரு தத்துவ விளக்கம் தான் .. முருகன் என்பது சுத்த ஞானம்;சூரபத்மன் என்பது ஆணவத்தின் அடையாளம். முருகன் சூரபத்மனை வென்றது என்பதின் பொருள் “ஞானம் ஆணவத்தை வென்றது என்பதாகும்” இவ்ளோதான். இதற்காக உண்மையாகவே கந்தனுக்கும் சூரபத்மன் என்பவனுக்கும் போர் நடந்ததாக கொள்ள கூடாது. அது அறிவுடைமை ஆகாது. அதே போன்றது தான் மேற்கூறியவையும்..நன்றி

  30. திரு ராகுலன் தங்கள் பதில்களுக்கு நன்றி.

    நம் நாட்டில் சரித்திரம் எழுதும் பழக்கம் ஆதி காலத்திலிருந்து கிடையாது. திருக்குறளின் ஆசிரியர் திருக்குறளில் அவரைப் பற்றிய குறிப்பு எதனையும் விட்டு செல்லவில்லை. எனவே திருவள்ளுவர் என்று ஒரு நபர் இல்லை. அது கற்பனை என்று கூட சிலர் வாதிட முடியும் அய்யா. சரித்திரம் என்று எழுதும் பழக்கம் நம் நாட்டில் ஒரு ஐநூறு ஆண்டுகளுக்குள்தான் வந்துள்ளது.

    என் கருத்து என்னவென்றால், பக்தி இயக்கம் என்ன செய்தது என்று , ஆதாரங்களை தேடும் முயற்சி காலவிரயம் ஆகும். இன்று நாம் என்ன செய்ய முடியும் என்று சிந்திப்போம், செயல்படுவோம்.

    முக்கியமாக சரித்திர ஆசிரியர்கள் காட்டும் ஆதாரங்களில் , பெரும்பான்மை அரசவை புலவர்கள் எழுதிய நூல்கள். அரசவை புலவர்கள் அரசரை புகழ்ந்து மட்டுமே எழுத முடியும். உண்மையை முழுவதும் எழுதினால் , தலை தப்பாது. ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்.? நம் தமிழ் நாட்டு பாடநூல்களில் திமுக ஆட்சி வரும்போது, கலைஞரைப் பற்றி ஒரு பாடம் சேர்க்கிறார்கள், அதிமுக ஆட்சி வரும்போது அந்த பாடம் எடுக்கப்பட்டுவிடும், பதிலுக்கு எம் ஜி ஆர் பற்றி ஒரு பாடம் சேர்க்கப்படும், பிறகு மீண்டும் திமுக ஆட்சி வந்தவுடன் எம் ஜி ஆர் பற்றிய பாடம் நீக்கப்பட்டு , கலைஞர் பற்றிய பாடம் மீண்டும் நுழையும். இதுபோலத்தான் அந்த காலத்தில் எழுதிய சரித்திரக்குறிப்புக்களும். அவற்றில் முழு உண்மை கிடைக்காது. பகுதி உண்மை கிடைக்கலாம்.

    நாம் இன்று நமது பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் படிக்கும் சரித்திரம் என்பது வெள்ளையர்கள் தங்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஏற்ப எழுதிய பொய்களின் ஒட்டுமொத்த திரட்டு. இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. மெக்காலே பிரபுக்கள் சபையில் பேசும்போது, இந்தியாவில் ஆங்கில கல்வி முறையை அமல் செய்வதன் நோக்கம், கிழக்கு இந்திய கம்பெனிக்கு தேவையான கிளார்க்குகள், ஸ்டெனோ கிராபர்கள், அக்கவுண்டண்டுகள் ( எழுத்தர்கள், சுருக்கெழுத்தர்கள், கணக்கர்கள்) ஆகியோரை உருவாக்குவதே ஆகும் என்று தெரிவித்துள்ளார். அதுதான் நடந்தது. இந்தியாவில் உண்மையான சரித்திரமும், உண்மையான கல்வியும் இன்று இல்லை. அடிமை மனப்பாங்கினை வளர்க்கவும், நிரந்தர அடிமைகளை உருவாக்கவும் , பிரிட்டிஷார் செய்த சதியே இன்றும் தொடர்கிறது.

  31. \\\ அப்புறம் இன்னொரு விஷயம் மேற்கோள் காட்டுவதற்கு ஊ.வே.சா. ஒன்றும் ஏழையோ அல்லது சமுதாயத்தில் பின்தங்கியவரோ அல்ல .. அவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் வீட்டில் ஆகாரம் உண்டு கல்வி கற்றதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை …….\\\

    மேற்கோள் காட்டப்பட்டது உ.வே.சா வின் ஆசிரியரான மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்களின் பாடம் கற்பித்தல். உ.வே.சா அவர் கற்றது அல்ல. முனைந்த கருத்துத் திரிபுகள் விவாதத்தைத் தடம் புரள வைப்பவை.

    \\\ சங்க இலக்கியத்தில் எங்கும் இந்த மன்னன் இந்த நாளில் இந்திரனின் ஐராவதம் யானையின் மேல் ஏறி கைலாயம் சென்றான் என்றோ. \\\

    சங்க இலக்கியத்தில் புராணச் செய்திகளே இல்லை என முடிவு செய்து விட்டீர்கள் 🙂

    \\\ ஆனால் அவர்களாவது பெயருக்காவது மீனவர்களுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் எதிராக கண்டன போராட்டமாவது நடத்தினார்கள் .. \\\ எனக்கு தெரிந்து என்னிடம் கேட்டால்… சொல்லி பார்க்க வேண்டும்.. கேட்கவில்லை என்றால் மாவோயிச வழி தான்…\\\

    \\ நீங்கள் சொல்லும் பக்தி ஆன்மீக இயக்கங்கள் என்ன செய்தது… \\\

    அடுத்தவரைக் குற்றம் சொல்வதற்கு முன் ஒரு முறை அல்ல இரு முறை அல்ல பலமுறை தங்கள் தகவல்களை சரிபார்த்துக்கொள்ளுங்கள். நாம் காலவிரையம் செய்வது குறையும்.

    பக்தி இயக்கத்தவர் ஸ்ரீலங்கா தமிழர்களுக்கும் ஹிந்துஸ்தானத்து மீனவ மக்களுக்கும் செய்தது என்ன என்பது இந்த தளத்திலேயே பகிரப்பட்டுள்ளது. அது ஒரு உதாரணம் மட்டிலுமே.

    ஹிந்துஸ்தானத்தின் பாதுகாப்புப் படையினரை பேடிகளாய் மறைந்திருந்து தாக்கும் பிரிவினை வாத மாவோயிச பயங்கரவாத வாதிகளைப் பற்றிய ப்ரசாத்திற்கான தளம் இதுவல்ல.

    நம்மால் என்ன செய்ய முடியும் என்பதனைப் பற்றிப் பேச இங்கு நம் உரையாடல்கள். பக்தி இயக்கத்தினர் என்ன செய்தனர் என்று இங்கு வ்யாசங்கள் உள்ளன. வாசித்துப் பார்க்கவும்.

    \\\ கம்யூனிச நண்பர்கள் கடவுள் நம்பிக்கை உள்ள ராமலிங்கரின் திருவருட்பா பற்றியும் அதன் விளக்க உரைகளையும் ஆராய்வது \\\

    \\ கம்யுநிசவாதி ஆத்திக நூல்களை படிக்க கூடாது ஆராய கூடாது என்று யார் சட்டம் போட்டது. \\ பெரியாரும் இதை கூறி இருக்கிறார் ஆனால் அவரது உரைகளில் இருந்து மேற்கோள் காட்டுவது இங்கு ஏற்புடையது ஆகாது .. \\\\

    ஹ்ம்……..உத்தரத்தின் நீளம் ……கனபரிமாணம் ….. கருத்துத் திரிபு…… தேவார நால்வரின் சரித்ர இருப்பைப் பற்றிய சாரமில்லா வாதம்….பெரியார்…….இத்யாதிகளைப் பார்க்கையில்…….. ஏதோ பொறி தட்டுகிறது…… பார்ப்போம். போகப்போகத் தெரியும்.

  32. அ.நீ யின் அறியாமை மனம் பதைக்க வைக்கிறது.

    இந்து தர்மத்தை முற்றிலும் புரிந்து கொண்டு விட்டவர் போலவும், இந்துத்வத்தை ஆழ்ந்து கற்று தேர்ந்து விட்டவர் போலவும், இந்து மதத்தின் பல்வேறு சமுதாயங்களின் பாதுகாவலர் போலவும், அவர்களுக்காக குரல் கொடுப்பவர் போலவும் உங்களை நீங்களே கற்பனை செய்து கொண்டு அர்த்தமற்ற, தெளிவற்ற கருத்துக்களை பதிவு செய்து வருகிறீர்கள்.

    ஏதோ வைதிகர்களும், வைதிகமும் மற்ற சமுதாய மக்களை தாழ்த்தி விட்டதாகவும் சொல்லிக் கொண்டு உங்களை சீர்திருத்த இந்துவாக காட்டிக் கொள்கிறீர்கள். முன்பொரு பதிவில் மஹா பெரியவரை பிற்போக்கானவர் என்று அபத்தமாக கருத்து வெளியிட்டிருந்தீர்கள். அரைகுறை அறிவு ஆபத்தானது என்பதற்கு நீங்கள் உதாரணம்

    வேதமும், வைதிகமும் தான் இந்து மதத்தின் ஆணி வேர். திருஞான சம்பந்தரும் வேத தர்மத்தை நிலை நிறுத்தவே அவதரித்தார். அவரே தன்னை பல இடங்களில் ‘கவுணியன்’, ‘நான்மறை கற்றவன்’ ‘வேதியன்’ என்றே குறிப்பிடுகிறார். சமணர்களுடன் வாது புரிகையில் வேதமும், வைதிகமும் நிலை பெறவே தாம் வெற்றி பெற வேண்டும் என்கிறார்.

    ‘வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமனொடு தேரரை வாதில் வென்றழிக்க திருவுள்ளமே’

    ‘அழலது ஓம்பும் அருமறையோர் திறம் விழலதென்னும் அருகர் திறத்திறம் கழல வாது செய்யத் திருவுள்ளமே’

    ‘அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களை சிந்த வாது செய்யத் திருவுள்ளமே’

    அரவிந்தன் நீலகண்டன்,

    நீங்கள் வைதிகத்தை, வேதத்தை வெறுப்பவராக இருந்தால் தங்களை போன்றவர்களை ‘மறை வழக்கமில்லாத மாபாவிகள்’ என்றே ஆளுடைய பிள்ளை சாடுகிறார். எண்ணாயிரம் சமணர்களை வெற்றி கொண்டு, கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறனான பின், “வாழ்க அந்தணர்’ என்ற பதிகத்தை பாடுகிறார். எதனால்? வேத தர்மத்தை நிலை நிறுத்தவே வைதிகக் கூட்டம் சுயநலமற்று தொண்டாற்றுகிறது. மற்ற அனைத்து சமுதாயங்களும் நல்வாழ்வு வாழ வேதத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கும் இந்த வைதிகர்கள் வாழ வேண்டும் என்பதனால் தான்.

    மேலும் ‘தோணியப்பர்’ என்ற இறைவனுடைய பெயருக்கு நீங்கள் கூறியிருக்கும் பொருள் வியப்புக்கும், நகைப்புக்கும், உரியதாக இருக்கிறது.
    ஊழிக் காலத்தில் இறைவன் பிரணவத்தையே தோணியாகக் கொண்டு உயிர்கள் உய்யும் பொருட்டு சீகாழியில் தோன்றியதால் இறைவனுக்கு தோணியப்பர் என்ற திருநாமம். சீகாழி ஊழிக் காலத்தும் அழியா திருத்தலம் என்று கூறுவர்.

    ஒரு சிறு வேண்டுகோள். அடுத்த முறை காலையில் நீங்கள் தேநீர் கோப்பையை கையில் எடுக்கும் பொழுது தேநீரில் சிறிது இஞ்சி சேர்த்துக் கொள்ளுங்கள். அது பித்தம் தெளிய உதவும்.

    வணக்கத்துடன்

    சேவற்கொடியோன்

  33. அன்பார்ந்த ஸ்ரீ சேவற்கொடியோன்

    \\\ இன்று எந்த இடதுசாரியும் திராவிடவாதியும் தன்னை அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ள தமிழ்நாட்டில் தரக்கூடிய சித்திரம் இதுதான். \\\

    என்ற இந்த வாசகத்தின் முன் சொல்லப்பட்டுள்ளவை ஸ்ரீமான் அ.நீ அவர்களது கருத்து இல்லை. இவ்வாறு கருத்துத் தெரிவிப்பவர்கள் இடதுசாரி, த்ராவிடவாதி, அறிவுஜீவி என்ற பரிச்சயம் உள்ளவர்கள் என்று அ.நீ அவர்கள் தெளிவாகச் சொல்லியுள்ளார்.

    வேதத்தை நிந்தனை செய்பவர்கள் இடித்துறைக்கப்பட வேண்டியவர்களே. அ.நீ அவர்களே வேதத்தை இந்த வ்யாசத்தில் நிந்தனை செய்துள்ளார் என்ற படிக்கான கருத்து பிறழ்வானது.

    சடங்குகள், பக்தி போன்ற கோட்பாடுகளை ஸ்ரீ அ.நீ அவர்கள் சற்று மாற்றுக்குறைவாகப் பார்க்கிறார் என்பது என் புரிதல். பல உத்தரங்களில் இது சரியானதன்று என நான் கருத்துப் பகிர்ந்துள்ளேன்.

  34. அய்யா ராகுலன் அவர்களே…

    வீர சாவர்கரின் தியாகத்தைஎல்லாம் சாமர்த்தியமாக மறைத்து விட்டு சுதந்திரம் என்றால் என்னவோ காந்தி தாத்தாவும், நேரு மாமாவும் பெற்றுத் தந்தது என்ற அளவிற்குத் தான் பள்ளிக் கூட பாடங்களில் சொல்லித் தந்தார்கள்; தருகிறார்கள்; இன்னமும் சொல்லிக் கொடுக்கவும் போகிறார்கள். அதற்காக சாவர்கர் வாழ்ந்தது இல்லை என்று ஆகுமா? நாம தான் சார் முயற்சி செய்து தெரிந்து கொள்ளணும்.

    காந்தி தாத்தாவ பத்தி புகைப்படம் இருக்கு. நாயன்மார்களைப் பத்தி டாகுமென்ட் இல்லை. அது தான உங்கள் வாதம்? இருக்கின்ற சான்றுகளை எந்தளவுக்கு நீங்கள் ஆராய்ந்து உள்ளீர்கள் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா? பக்தி இலக்கியப் படைப்புகள் இருக்கும் போது படைத்தோர் இல்லாமல் போய் விடுவாரா?

    ‘ஆக்கு பாக்கு வெத்தலைப் பாக்கு’ கூட தான் யார் எழுதினான்னு தெரியாது. அதுக்காக அதை முதல் முறையா ஒருத்தன் சொல்லவே இல்லைன்னு சொல்லிட முடியுமா? எவனோ ஒருத்தன் சொல்லி தான காலங்காலமா குழந்தைகள் விளையாடுகிறது? தேவாரமோ, திருவாசகமோ, சொல்லியவர் தன்னை தாழ்த்திக் கொண்டு இறைவனை உயர்த்திப் பாடியிருக்கிறார். தான் என்னும் அகந்தை இல்லாமல் இருந்தால் தான் இறை அருள் கிட்ட முதல் படி என்று ஹிந்து மதத்தின் சாரம் கூறுகிறதே!

    பக்தியின் உபயோகமே தன்னை, தான் என்னும் அகந்தையை விட்டு வெளியே வருவது தானே! நாயினும் கடையேன் என்றல்லவா மாணிக்க வாசகர் தன்னை தானே தாழ்த்தி கொள்கிறார்! இந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும், இருந்தமைக்கு ஆவணம் வேண்டுமாயின் தங்கள் வம்சத்தில் 15 தலைமுறைக்கு முன் இருந்த தாத்தாவின் பெயர் என்ன? தொழில் என்ன என்பதை ஆதாரத்துடன் தங்களால் கூற முடியுமா? ஆதாரம் இல்லாவிட்டால்??

    தமிழ் சமூகமே மொத்தமாக லூசா இருந்தா கூட இல்லாத ஆட்களை கற்பனையா கோவில்களில் செதுக்கி, இவரு இந்த பாட்டைப் பாடினாரு; அவரு அந்தப் பாட்டைப் பாடினாருன்னு மக்களை வழி பட வைக்க முடியாது.
    நல்ல விஷயத்தை யார் சொன்னா என்ன? நம்பறவங்க நம்பிட்டு போறோம். நம்பாதவங்க நம்ப வேண்டாம். அது ராகுலனா இருந்தாலும் சரி, ராமலிங்க அடிகளா இருந்தாலும் சரி!!

  35. கிருஷ்ணகுமார் ……………..

    //ஹிந்துஸ்தானத்தின் பாதுகாப்புப் படையினரை பேடிகளாய் மறைந்திருந்து தாக்கும் பிரிவினை வாத மாவோயிச பயங்கரவாத வாதிகளைப் பற்றிய ப்ரசாத்திற்கான தளம் இதுவல்ல.//

    நான் எந்த இடத்தில மாவோயிச தீவிரவாதிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன் என்று கூற முடியுமா… எதற்கு தேவை இல்லாமல் இப்படி புரட்டி பேசுகிறீர்கள். நான் சீனாவை ஆண்ட மாவோ என்னும் தலைவரின் கருத்தை தான் கூறினேன்.. அதுவும் மீனவர்களை காப்பாற்ற நீங்கள் என்ன வழி வைத்து இருகிறீர்கள் என்று என்னை நீங்கள் வினவியதால் தான் இதை கூறினேன் … லெனினிசம்,மார்க்சிசம்,ஹிந்துயிசம் போன்று அதுவும் ஒரு இசம் அவ்வளவே . மாவோ கூறிய வழிகளை மாவோயிசம் என்று கூறுவார்கள். மேலும் ,

    \\\ ஆனால் அவர்களாவது பெயருக்காவது மீனவர்களுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் எதிராக கண்டன போராட்டமாவது நடத்தினார்கள் .. \\\ எனக்கு தெரிந்து என்னிடம் கேட்டால்… சொல்லி பார்க்க வேண்டும்.. கேட்கவில்லை என்றால் மாவோயிச வழி தான்…\\\

    அதென்ன… நான் கூறிய மறுமொழியை முழுமையாக முடிக்காமல் மாவோயிச வழி தான் என்பதோடு முடித்து விட்டீர்கள்… அதனை தொடர்ந்து நம் இந்திய தேசத்திடமும் கடற் படை இருக்கிறது என்று நான் கூறியதை சாவகசமாக மறந்து விட்டீர்கள்… ஏன் இந்த சிண்டு முடிக்கும் வேலையெல்லாம்… எதிரியை திருப்பி தாக்க வேண்டும் என்ற மாவோயிச வழி படி நடக்க வேண்டியது நம் அரசாங்கம் தான்… தனி மனிதர்களோ… அல்லது மீனவர்களோ அல்ல …

    \\\ கம்யூனிச நண்பர்கள் கடவுள் நம்பிக்கை உள்ள ராமலிங்கரின் திருவருட்பா பற்றியும் அதன் விளக்க உரைகளையும் ஆராய்வது \\\

    \\ கம்யுநிசவாதி ஆத்திக நூல்களை படிக்க கூடாது ஆராய கூடாது என்று யார் சட்டம் போட்டது. \\ பெரியாரும் இதை கூறி இருக்கிறார் ஆனால் அவரது உரைகளில் இருந்து மேற்கோள் காட்டுவது இங்கு ஏற்புடையது ஆகாது .. \\\\

    ஹ்ம்……..உத்தரத்தின் நீளம் ……கனபரிமாணம் ….. கருத்துத் திரிபு…… தேவார நால்வரின் சரித்ர இருப்பைப் பற்றிய சாரமில்லா வாதம்….பெரியார்…….இத்யாதிகளைப் பார்க்கையில்…….. ஏதோ பொறி தட்டுகிறது…… பார்ப்போம். போகப்போகத் தெரியும்.//

    இதெல்லாம் நான் திரு. பாலச்சந்திரன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அதற்க்கு பொருத்தமாக என்னால் கொடுக்க முடிந்த பதில்களை கூறி இருக்கிறேன் .. இதில் உங்களுக்கு என்ன பொறி தட்டி விட்டது … ஒன்றை சொல்கிறேன்.. நான் இங்கு மறுமொழி எழுதுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கூறி விடுங்கள்… இனி நான் ஏதும் எழுத மாட்டேன். இத்தோடு நிறுத்தி விடுகிறேன். நான் எழுதும் மறுமொழிகள் அனைத்தையுமே பொறுப்பறிந்து தமிழ்ஹிந்து தளத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் எழுதுகிறேன்…

  36. சேவற்கொடியோன் பதிலை 100% வரவேற்கிறேன். பாராட்டுக்கள்! மிகவும் நேர்மையும் ஆழமும் கொண்ட பதில். நன்றி

  37. க்ருஷ்ணகுமார், சேவற்கொடியோன், ஆர். எஸ். ஐயர் போன்றோர்களின் அதீத சாதிப் பற்றுதான் இஸ்லாம் தமிழகத்தில் மிக வேகமாக வளர உறுதுணையாய் இருக்கிறது. நாங்கள் பிரசாரம் பண்ணாமலேயே தினம் பத்து பேர் அவர்களாகவே சென்னையிலும், மற்றும் தமிழக மாவட்டந்தோறும் உள்ள தவ்ஹீத் ஜமாத் அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட மக்கள் இஸ்லாத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். அதற்கு காரணம் மேலே சொன்ன நபர்களின் சாதிப் பற்றும், இனப்பற்றும் என்றால் மிகையாகாது.

    அநீ! நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்தானோ! 🙂

  38. //நாங்கள் பிரசாரம் பண்ணாமலேயே தினம் பத்து பேர் அவர்களாகவே //
    ஈரான், இராக், பாகிஸ்தான், ஆஃப்கான் இல் தினமும் குறைந்தது 25 பேர் குண்டில் மண்டைய போடுகின்றான்.

  39. \\\ க்ருஷ்ணகுமார், சேவற்கொடியோன், ஆர். எஸ். ஐயர் போன்றோர்களின் அதீத சாதிப் பற்றுதான் இஸ்லாம் தமிழகத்தில் மிக வேகமாக வளர உறுதுணையாய் இருக்கிறது. \\\

    ஜெனாப் சுவனப்ரியன்,

    நான் ஜாதிப்பற்று உடையவன் என நீங்களாக முடிவு கட்டி அதற்கு மேல் அந்த ஜாதிப் பற்றுதான் இஸ்லாம் தமிழகத்தில் வேகமாக வளர உறுதுணையாய் இருக்கிறது என்று கருத்துப் பகிர்ந்துள்ளீர்கள்.

    முதற்கண் நான் தமிழகத்தில் வசிக்கவும் இல்லை. இரண்டாவதாக தாங்கள் கூறிய கூற்றில் உண்மையும் இல்லை. என்னுடைய எந்த உத்தரங்களிலும் ஜாதியை பற்றிய மேன்மையோ அல்லது உயர்வு தாழ்வோ எங்கும் பகிரப்பட்டதில்லை என்பது மட்டிலும் உண்மை. இதற்கு மாறான கருத்துக்களை தாங்கள் கொண்டிருந்தால் என்னுடைய உத்தரங்களை மிகக் குறிப்பாக சுட்டவும்.

    அடுத்தவர் சொல்லாத கருத்துக்களை சொன்னதாக ஜபர்தஸ்தியாக திணிப்பது முறையான செயலன்று. இதே போல் தங்கள் பாலும் சாரமற்ற ப்ரத்யாரோபம் செலுத்த எத்தனை நேரமாகும் என்று எண்ணிப்பாருங்கள்.

    ஜெனாப் சுவனப்ரியன் போன்று மதவெறிக்கருத்துக்கள் பரப்புபவர்களினால் தான் தமிழகத்தில் ஹிந்துக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள் நிகழ்கின்றன என்று ஒரு கருத்தை சொன்னால் அதில் எத்துணை உண்மை இருக்குமோ அத்துணை உண்மை தாங்கள் மேலே தெரிவித்துள்ள கருத்தில் இருக்கின்றது என்பதனை தெரிவிக்கிறேன் >:-(

  40. \\ நான் சீனாவை ஆண்ட மாவோ என்னும் தலைவரின் கருத்தை தான் கூறினேன்.. அதுவும் மீனவர்களை காப்பாற்ற நீங்கள் என்ன வழி வைத்து இருகிறீர்கள் என்று என்னை நீங்கள் வினவியதால் தான் இதை கூறினேன் …\\

    சரி. இதை மாவோவாத ப்ரசாரம் இல்லை என் கிறீர்கள்!!!!!!!!!!!!

    \\ அதென்ன… நான் கூறிய மறுமொழியை முழுமையாக முடிக்காமல் மாவோயிச வழி தான் என்பதோடு முடித்து விட்டீர்கள்… அதனை தொடர்ந்து நம் இந்திய தேசத்திடமும் கடற் படை இருக்கிறது என்று நான் கூறியதை சாவகசமாக மறந்து விட்டீர்கள்… \\

    ஹிந்துஸ்தானத்தின் கடற்படை என்பது மீனவர்களைக் காப்பாற்ற நீங்கள் வைத்திருக்கும் வழி !!!!!!!!!!

    \\ இதெல்லாம் நான் திரு. பாலச்சந்திரன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அதற்க்கு பொருத்தமாக என்னால் கொடுக்க முடிந்த பதில்களை கூறி இருக்கிறேன் \\

    ஆரம்பத்தில் உங்கள் உத்தரங்களை வாசித்த நான் கம்யூனிஸ சித்தாந்தத்தில் பிடிப்பு கொண்டு சித்தாந்த ரீதியில் ப்ரச்சினைகளை அணுகி சித்தாந்த ரீதியாக நிகழ்வுகளை அவதானித்து தீர்வுகளை பகிரக்கூடிய ஒரு அன்பராக நீங்கள் இருக்கலாமோ என தவறுதலாக அவதானித்துள்ளேன் எனப் புரிந்து கொள்கிறேன்.

    தோழர்கள் மருதன், சுத்தானந்தம், முனைவர் சரவணன் போன்ற இடதுசாரித் தோழர்களிடம் உரையாடி மாற்றுக்கருத்துக்களை (ஏற்க முடிந்த மற்றும் ஏற்கவொண்ணா)அவர்களிடமிருந்து வினம்ரதை பூர்வமாக அவ்வப்போது பெற்றுள்ளேன் தமிழ்ப்பேப்பர் தளத்தில். அப்படிப்பட்ட மற்றொரு அன்பராக தாங்கள் இருக்கலாமோ எனத் தவறுதலாக எண்ணி விட்டேன்.

    அந்த அன்பர்களிடம் காணப்பட்ட கருத்தாழமோ, விஷயத்தெளிவோ தங்கள் உத்தரங்களில் தொடர்ச்சியாகக் காணக்கிட்டவில்லை.க்ஷமிக்கவும்.

    \\ \\ ஏன் இந்த சிண்டு முடிக்கும் வேலையெல்லாம் \\

    வினம்ரதை!!!!!!!!

    \\ இதில் உங்களுக்கு என்ன பொறி தட்டி விட்டது …\\\

    ம்………

    \\ நான் இங்கு மறுமொழி எழுதுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கூறி விடுங்கள்… இனி நான் ஏதும் எழுத மாட்டேன். இத்தோடு நிறுத்தி விடுகிறேன் \\

    நான் அதிக பக்ஷமாக இந்த தளத்தில் எதிர்த்த உத்தரங்கள் பலபெயரில் கருத்துப்பகிரும் tamil என்ற அன்பரின் கருத்துக்கள் மற்றும் அவரது பலபெயரில் உத்தரம் பகிரும் செயல்பாடு.. அவரிடம் கூட கருத்துப்பகிரல்களை தொடருங்கள் என்று தான் நான் கூறியுள்ளேன். கருத்துப் பகிர்வதும் பகிராததும் உங்கள் தனி விருப்பம் ஐயன்மீர். என் விருப்பம் அல்லது வெறுப்பு இவற்றிற்கு இங்கு இடம் இல்லை.

    ஏற்கவொண்ணா கருத்துக்களை மிக வெளிப்படையாக மறுதலிக்கிறேன். அவ்வளவே.

  41. திரு சுவனப்பிரியன் போன்றோர் இந்த தளத்தில் பின்னூட்டங்கள் அளிப்பது அவருக்கு இத்தளத்தின் மீது உள்ளூர உள்ள ஒரு பெருமதிப்பைக்காட்டுகிறது. ஆனால் இந்த ஆன்மிக வாதிகளை அவர் எதிர்கக்காரணம் என்னவென்றால் ஆன்மிகம் இந்த கருத்துச்செறிவு வாய்ந்த ஊடகத்தின்மூலம் நன்றாக நாடெங்கும் நன்றாகப் பரவிவிடுமோ என்ற பயத்தால் தான் போலும்! அதனால் தான் இஸ்லாம் மதம் தழைத்தோங்குகிறது என்று அவர் நம்மை அச்சுறுத்த முயன்று வருகிறார்! இந்து மத வரலாறை நன்கு அறிந்த அயுப் கான் (முன்னாள் பாகிஸ்தான் தலைவர்) பல ஆண்டுகள் முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தார் இஸ்லாமியர்களுக்கு, ” இந்து மதம் மெல்ல மெல்ல மற்ற மதங்களை தன்னிடம் உள்ளாக்கிகொண்டது பல நூற்றாண்டுகளாகவே. உதாரணமாக, சமண (Jainism) மதம், புத்த மதம், இவைகளின் கோட்பாடுகளை இந்துமதம் உள்ளாக்கிகொண்டு அந்த மதங்கள் ஹிந்துஸ்தானத்தில் மறைந்து போகக் காரணமாக இருக்கிறது. ஆகவே இஸ்லாமியர்கள் இந்து மதத்தினிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்…”

    ஆக, இந்து மதம் எப்பொழுதும் புதுமலர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும். அதற்கு யாரும் எப்பொழுதும் அணைகட்ட முடியாது.

  42. //இப்போது மட்டும் அல்ல எப்போதும் நம்புவார்கள்.. அதான் அவரது புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் என்று அனைத்தும் இருக்கிறதே அப்புறம் என்ன ஐயா …..///

    அப்படியானால் புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் இல்லாத காலத்தில் நடந்ததாக கூறப்படும் வரலாறு முழுவதும் பொய்யானவை, அப்படி எதுவும் நடந்ததை உறுதிப்படுத்த புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் இல்லாத படியால், அப்படி எதுவுமே நடக்கவில்லை, இல்லாமே கற்பனை என்று உங்களைப் போல் சிலர் வாதாடினால் மற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

    உங்களின் வாதத்தின் படி பார்த்தால், உலகில் வரலாறு என்ற ஒரு பாடம் மட்டுமல்ல, தமிழர்களுக்கென்றொரு வரலாறே இருக்காதே. உலகிலேயே தமது வரலாற்றை எழுதி வைக்காத, ஆவணப்படுத்தாத (ராஜராஜ சோழனைத் தவிர) ஒரு இனமென்றால் அது தமிழர்களாகத் தானிருக்க வேண்டும். எங்களின் வரலாற்றை விளக்க எங்களிடம் போட்டோக்களும், வீடியோக்களும் இல்லை, சிங்களவர்கள் போல் எங்களிடம் ஒரு மகாவம்சமில்லை,( மகாவம்சத்தின் மூலமே தமிழர்களின் தொன்மையையும் அறியலாம். ஆனால் அது சிங்களவர்களின் வரலாற்றைக் கூறுவதற்காக புத்த பிக்குகளால் எழுதப்பட்டது.) அதனால் தமிழர்களுக்கென ஒரு வரலாறே கிடையாதென்று சிலர் கூறினால் அது எவ்வளவு முட்டாள்தனமானது அது போன்றது தான் ராமலிங்க அடிகளாரின் தத்துவ விளக்கத்தின் அடிப்படையில், அல்லது அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அறுபத்து நாயன்மார்கள் அனைவரும் கற்பனை என்பதும். வரலாற்றுச் சம்பவங்களில் கற்பனைகள் கலக்கப்படுவது எல்லா நாட்டிலும் வழக்கமே, அவ்வாறே நாயன்மார்களின் வரலாற்றிலும் நாளடைவில் சில கற்பனைக்கதைகளும் கலந்திருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்தமாக, ஆதாரம் எதுவுமில்லாமல். 63 நாயன்மார்களும் கற்பனை என்பது வெறும் அபத்தம்.

    ஏசுநாதர் தண்ணீரில் நடந்தார், ஒரூ சில மீன்துண்டுகளையும் அப்பத்தையும் பல்கிப்பெருகச் செய்து, பல்லாயிரம் மக்களுக்கு உணவளித்தார், இறந்தவரை உயிர்ப்பித்தார், முடவனை நடக்கச் செய்தார், வெறும் தண்ணியை மதுவாக்கினார் என்று பல நம்பமுடியாத கதைகள் கிறித்தவ விவிலியத்திலும் தான் உண்டு. அதற்காக, ஏசுநாதர் என்ற ஒருவரே இருக்கவில்லை, எல்லாம் வெறும் கற்பனை என யாராவது சொன்னால், அது எப்படியானதோ அது போன்றது தான் திருநீற்றுப் பதிகத்தால் ஞானசம்பந்தர் நின்றசீர் நெடுமாறனைக் குணமாக்கினார் அதனால், ஞானசம்பந்தர் என்ற நாயனாரே கற்பனை என்பதுவும். ஏசுநாதர், முகம்மது நபி, கெளதம புத்தர் போன்றோர் உலகில் வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தவும் தான் புகைப்படங்களோ அல்லது வீடியோ காட்சிகளோ கிடையாது அப்படியானால் அவர்களும் வெறும் கற்பனை என்று கூறுவீர்களா திரு ராகுலன் அவர்களே. அல்லது Fatwa அறிவித்து விடுவார்கள் என்ற பயமா? 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *