நேரு, மோடி, ஈழத்தமிழர்கள்

morning_hindutvaபாரதத்தின் ஈடு இணையற்ற முதல் பிரதமரும், இந்தியாவின் வசந்தகால இளவரசனுமான பண்டிட் ஜவகர்லால் நேரு 1954 இல் ஒரு சுபயோகம் கூடிய சுபதினத்தன்று அன்றைய இலங்கை அதிபர் சர் ஜான் கொத்தலாவலவுடன் ஒரு அறிக்கையை கையொப்பமிட்டார். அமைதி புறாவின் இறக்கையிலிருந்த தூவல் ஒன்று மேலும் நேரு தொப்பியில் சொருகப்பட்டது. ஆனால் மலையகத் தமிழருக்கோ இலங்கை குடியுரிமையை ஈவிரக்கமின்றி பறிக்க வகை செய்யும் ஒப்பந்தம் அது. அவர்கள் என்னவோ தங்கள் முதுகில் குத்தப்பட்டதாகவே உணர்ந்தனர்.  தமிழரின் மக்கள் பிரதிநிதியாகிய வைத்தியலிங்கம் இந்த ஒப்பந்தம் குறித்து கூறுகிறார்: ”இங்குள்ள இந்திய வம்சாவளியினர் அவர்களை கையும் வாயையும் கட்டி சர் ஜான் கொத்தலாவலவிடம் திரு.ஜவகர்லால் நேரு ஒப்படைத்துவிட்டதாக கருதுகின்றனர்.” இதோ நேருவின் அணுகல் முறைக்கு மற்றொரு உதாரணம்: இந்த விஷயத்தால் தமிழர்கள் பாதிப்படைவார்கள் என்பது நேருவுக்கு தெரியும். ஆனால் அதை குறித்து அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை” –  சொல்பவர் நேருவின் அணுக்கரான காம்ரேட் கிருஷ்ண மேனன்.  அவர் மேலும் சொல்கிறார், “இந்தியாவின் கடமை இதில் எவ்வளவு இருக்கிறதென்று நேருவுக்கு தெரியும் ஆனால் அவருக்கு மிக முக்கியமாக தோன்றியது உலக நாடுகள் என்ன சொல்லும் என்பதுதான்.

இந்த விஷயத்தில் நேருவிடம் பாரபட்சம் கிடையாது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு பாகிஸ்தானின் இந்துக்களின் இன அழிப்புக்கான வசதிகளை  nehru1 தொடக்கி வைக்கும் லியாகத்-நேரு ஒப்பந்தத்தையும் ஆசிய ஜோதி கையெழுத்திட்டிருந்தார். சீன எல்லை தகராறும் காஷ்மீரும் மட்டுமல்ல 1971 இன் கிழக்கு வங்க படுகொலைகளும், 2009 இன் தமிழ் மக்கள் பேரழிவு கொலைகளும்  நவீன இந்தியாவின் வசந்த கால இளவரசன் நமக்கும் நம் சந்ததிகளுக்கும் கொடுத்த வல்வினை நோய்களே.

இன்றைய பெரும் இந்திய ஊடகங்களும் இந்த நேருவிய பாவத்திலிருந்து கரையேறி விடவில்லை. ஆதாரமாக ஒரு போக்கினை பார்ப்போம்.

குஜராத்தில் இன்றைக்கு இஸ்லாமியர்கள் சகஜ வாழ்வு வாழ்கிறார்கள். இன்னும் சொன்னால் நேருவிய போலி மதச்சார்பின்மை வாதிகள் ஆளும் மாநிலங்களைக் காட்டிலும் குஜராத் முஸ்லீம்கள் நன்றாகவே உள்ளார்கள். இருந்த போதிலும் இந்திய ஊடகங்களில் எல்லாவிதமான பொய்களையும் திரிபுகளையும் கண்டு பிடித்து கட்டுரை எழுதி விற்கிறவர்கள் இருக்கிறார்கள். நினைவில் வைத்து கொள்ளுங்கள் – 2002 இல் குஜராத் கலவரங்கள் என்பவை கலவரங்களே – அவற்றில் 250க்கும் அதிகமான இந்துக்களும் 750 அல்லது 800 இஸ்லாமியர்களும் இறந்தார்கள். போலீஸ் துப்பாக்கி சூடில் இறந்த எண்பது சதவிகித மக்கள் இந்துக்களே. ஆனால் மோடியை தாக்குவதில் இந்திய ஊடகங்களின் பெரும் முதலாளிகள் காட்டிய அக்கறையின் ஒரு துளியை கூட குறைந்த பட்ச கணக்கீட்டில் 80,000 தமிழர்கள் (1,46,000 என அண்மை கணிப்புகள்) கொல்லப்பட்ட இலங்கை மக்கள் பேரழிவின் பக்கம் திருப்ப முடியவில்லை.

இலங்கையின் இனவெறி மோதல்களிலிருந்து தப்பி பிழைத்து அகதிகளாக செல்லும் தமிழருக்கு இயல்பான புகலிடம் பாரதம்தான். நிச்சயமாக மிக கொடுமையான சித்திரவதைகளை அனுபவித்த தமிழர் தமிழகத்தில் புகலிடம் கொண்டிருப்பர். ஆனால் அவர்கள் குறித்து எந்த ஊடகங்களிலும் ஐரோப்பிய ஊடகங்கள் போல செய்தி வரவில்லையே  ஏன்?

  • நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வசனம் பேசும் மஞ்சள் பத்திரிகைகளாகட்டும்
  • ஈழ அழிவு நடந்த போது இங்கு கோலோச்சிய அரசின் உள்வட்டத்தில் ரஸ்புதீனாக வலம் வந்த ’ஜெகத்’ஜால  போலிகளாகட்டும்
  • வெளிப்படையாக சீன-சிங்கள ஆதரவில் திளைக்கும் மவுண்ட்ரோடு மாவோ – ஆகட்டும்
  • பெட்ரூமுக்குள் மறைக்கப்பட்ட காமிராவை வைத்து அதை டிவியில் காட்டி ‘சூரிய’ ஒளி காட்டும் சேனல்களாகட்டும்,
  • 24 x 7 மோடியின் பின்னாலேயே குற்றம் கண்டுபிடிக்க சுற்றும் காங்கிரஸின் செல்ல பிள்ளைகளான கள்ள மீடியா கும்பல்களாகட்டும்

இவர்கள் அனைவருமே பெரும் ஊடக முதலாளிகளே. ஆனால் ஈழத்தமிழருக்காக இவர்கள் ஆக்கபூர்வமாக செய்தது என்ன?

மேற்கத்திய ஊடகங்கள் ஒன்றும் ஈழத்தமிழர் மீதான ஆர்வத்தில் இவற்றை செய்வதாக கருத முடியாது. இவற்றுக்கு பின்னால் வேறு கணக்குகள் இருக்கும். இலங்கை மீதான ஏதோ ஒரு அரசியல் அழுத்தம். அல்லது வர்த்தக கணக்கு. அது சரியான உடன் இங்கிலாந்து சானல்கள் அமைதியாகிவிடக் கூடும். ஆனால் அதுவல்ல கேள்வி. நியாயமாக இதை செய்திருக்க வேண்டியவர்கள் நாம். நம் ஊடகங்கள் அல்லவா? இந்தியா முழுக்க இதை எடுத்து சென்றிருக்க வேண்டிய நம் ஊடகங்கள் ஏன் செய்யவில்லை? 1000க்கும் குறைவான இஸ்லாமியரும் 250 இந்துக்களும் கொல்லப்பட்ட ஒரு கலவரத்தை இன்னும் நினைவில் வைத்து கொண்டிருக்க அரும்பாடுபடும் ஊடகங்கள் இவ்விசயத்தில் கடைபிடிக்கும் இரட்டை டம்ளர் நிலைபாட்டுக்கு காரணம் என்ன?

நேருவிய வல்வினை நோயின் ஊடக வெளிப்பாடு இது.

1954 ன் பாராளுமன்ற சர்ச்சைகளில் ஒன்றை தெளிவாக காணமுடியும். இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளை நிர்ணயிப்பதில் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் விசயங்களில் தமிழகத்தின் பார்வை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா இல்லையா?

இல்லை என்பது ஆசியஜோதியின்  திட்டவட்டமான தீர்ப்பு. நேருவுக்கு எல்லாம் தெரியும். கஷ்டப்படும் தமிழர்களுக்கு சர்வதேச சிக்கல்கள் தெரியுமா? இலங்கை நாளைக்கு சீனாவிடமோ பாகிஸ்தானிடமோ சென்றதென்றால்?  இன்றைக்கும் சுப்ரமணியசாமியும் மன்மோகன் சிங்கின் ஆதரவாளர்களும் இதே பூச்சாண்டியை காட்டுவார்கள். அன்றைக்கு நேருவுக்கு ஆஸ்திரேலியா. இலங்கை நாளைக்கு ஆஸ்திரேலியாவுடன் உறவு வைத்து கொள்ளும் நிலைக்கு நாம் தள்ளிவிடக் கூடாது. மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் சோஷலிச ருதுகாலத்தின் இளவரசரல்லவா? சீனாவை விட ஆஸ்திரேலியா பிரச்சனை. எனவே ஒரு மாநிலத்தின் உணர்வுகளை விட – அதுவும் தேர்தலில் ஒரு பிரச்சனையாக கூட ஆகாத உணர்வுகளை விட – இந்த சர்வதேச சமன்பாடுகள் முக்கியமானவை அது எனக்கு தான் தெரியும். நான் தான் அறிவாளி. இதைத்தான் நேரு சொன்னார். மலாயாவுக்கே சென்று அங்கு கஷ்டப்படும் தமிழர்களின் நிலையை களத்தில் அறிந்த காமராசர் போன்றவர்களுக்கெல்லாம் என்ன தெரியும்? நேரு சர்வதேச அரசியலை விரல் நுனியில் அழுக்குக்குப் பதிலாக வைத்திருப்பவர்.

தமிழர் உரிமைகளை நசுக்கி தேய்த்த இந்த ரத்த ரோஜாவை அன்றே ராஜாஜி எதிர்த்தார். பின்னர் அயலுறவு துறை செயலராக இருந்து நேருவின் பேரனால்rajagopalachari_c  அவமானப்படுத்தப்பட்டு வெளியே அனுப்பப்பட்ட ஏ.பி. வெங்கடேஸ்வரன் ஈழத்தமிழரின் நல்வாழ்வுக்கு குந்தகமாக இந்தியா செயல்படுவதை எதிர்த்தார். ஆர் எஸ் எஸ் எதிர்த்தது. இலங்கையில் இந்திய அமைதிப்படை அனுப்பப்பட்ட துன்பியல் சம்பவத்தை விமர்சித்து ஆர்.எஸ்.எஸ் தீன் தயாள் ஆராய்ச்சி மையத்தின் அதிகாரபூர்வ இதழ் மந்தன் 1987 இல் ஒரு பெரிய கட்டுரையை வெளியிட்டது. இந்திய ராணுவத்தை மற்றொரு தேச அதிபரின் கைப்பாவைகளாக்கும் செயல்பாட்டை அக்கட்டுரை கடுமையாக கண்டித்தது. இதோ அந்த ஆர்.எஸ்.எஸ் இதழில் நவம்பர் 1987 இல் வெளியான குரலை விடுதலை புலி என்றாலே முகம் சுளிக்கும் இந்துத்துவர்கள் முன்னால் வைக்கலாம்:

இந்திய அரசாங்கம் தாம் என்ன இலக்குகளுக்காக செயல்படுகிறோம் என்ன செயல்களை செய்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். விடுதலை புலிகளை நிர்மூலமாக்குவதா இந்தியாவின் இலக்கு? இத்தனை சரிவுகளுக்கும் பின்னர் சுயமரியாதையுடன் ஒரு தீர்வில் பங்கேற்க விடுதலை புலிகளுக்கு தகுதி இல்லையா? தமிழர்களின் போர் கரமாக திகழும் விடுதலை புலிகளை இந்திய படைகள் ஒழித்து கட்டினால் பிறகு இலங்கை தன் வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்காது என்பது என்ன நிச்சயம்?… விடுதலை புலிகள் அப்பாவி சிங்களர்களை படுகொலை செய்வதை சரியாகவே கண்டித்துள்ள இந்திய அரசாங்கம் இலங்கை அரசை கிழக்கு பிராந்தியங்களில் தொடர்ந்து சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்துவதை கண்டித்துள்ளதா? 17 விடுதலை புலி கைதிகளை கொழும்புக்கு கொண்டுவருவதில் காட்டப்பட்ட இலங்கை அரசின் வன்மத்தை கண்டித்துள்ளதா? இவ்விசயங்களில் மௌனிப்பது இலங்கை அரசின் முன்னர் மண்டியிடுவதே ஆகும்.

ஆனால் ராசீவ் படுகொலை நிலையை மாற்றியது. ஈழத்தமிழர் பேரழிவுக்கு மௌன சாட்சிகளாக இந்திய தமிழர்களை மாற்றியது. இங்குள்ள இந்திய எதிர்ப்பு சக்திகள் ஈழத்தமிழர் பிரச்சனைகளில் உரத்த குரலெழுப்பலானார்கள். இதனால் ஈழத்தமிழர் பிரச்சனை என்றாலே அது இந்திய விரோத பிரச்சனையாக பார்க்கப்படும் நிலை வந்தது.

ஈழத்தமிழரின் பேரழிவு குறித்து பேசிய உடனேயே … என்ன விடுதலை புலி ஆதரவா? அவர்களின் பின்னால் இருப்பது கிறிஸ்தவ சர்ச் அல்லவா? இந்த ஈழ விடுதலை கிளர்ச்சிகளையெல்லாம் இங்கே கிறீஸ்தவ அமைப்புகளல்லவா நடத்துகின்றன? என்கிற குரல் இந்துத்துவர்களில் ஒரு சாராரிடமிருந்து எழலாம். ஈழத்தமிழரின் நலம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பேசுவது என்பது விடுதலைபுலிகள் குறித்து அல்ல என்பதை முதலில் இந்துத்துவர்களில் இந்த சாரார் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலை புலிகள் ஜனநாயகத் தன்மை சற்றுமில்லாத ஒரு ராணுவ இயக்கமாக மாறினார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்திய அமைதிப்படை எனும் மோசமான முடிவுக்கு பிறகு அவர்கள் இந்திய எதிர்ப்புக்கான ஒரு முக்கிய மையமாக மாறிவிட்டார்கள் என்பதிலும் ஐயமில்லை. விடுதலை புலிகள், உல்பா முதல் ஐஎஸ்ஐ வரையிலான இந்திய எதிர்ப்பு பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவியிருக்கிறார்கள். தம்மை ஈழத்தமிழரின் ஒற்றை பிரதிநிதிகளாக்கி இந்திய பொது மனதிலிருந்து அவர்களும், அவர்களை இந்தியரிடமிருந்து காங்கிரஸ் மற்றும் நேருவிய மேல்தட்டு அதிகார வர்க்கமும் போட்டி போட்டுக் கொண்டு அப்புறப்படுத்தினர். 2009 போரில் ஈழத்தமிழர் பிரச்சனை பாரதம் முழுவதும் பெரும் பிரச்சனையாக பற்றிக் கொள்ளாமல் இருப்பதில் என்டிடிவி எத்தனை சிறப்பாக சிங்கள உளவுத்துறைக்கு சாதகமாக செயல்பட்டதோ அதே அளவு சிறப்பாக சீமானும் செயல்பட்டார்.

அதே 2009ல் லூதியானாவில் – கடலையே பார்த்திராத அந்த மக்கள் மத்தியில்- இலங்கையால் தமிழருக்கு ஏற்படும் பிரச்சனைகளை பேசினார் ஒரு அரசியல்வாதி. தமிழ்நாட்டை சேர்ந்தவரல்லர் அவர். அங்கு தமிழ் வாக்கு வங்கியும் இல்லை. ஆனாலும் அதை அவர் பேசினார். ஏனென்றால் தமிழனுக்கும் இதர இந்தியருக்கும் இருக்கும் தொப்புள் கொடி உறவின் மீதுதான் வலிமையான பாரதம் அமைய முடியும்.

இந்த உறவை உணர்ந்தவர் அந்த தலைவர். அந்த உறவு பண்பாடு சார்ந்த உறவு.

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்

குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்

குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்

என புறநானூற்று புலவன் காரிகிழாரால் வரையறை செய்யப்பட்ட அந்த பண்பாட்டு தேசியத்தின்  உறவு.

உத்தரம் யத் சமுத்திரஸ்ச ஹிமாத்ரேஸ் சைவ தக்ஷிணாம்

வர்ஷம் தத் பாரதம் நாம பாரதீ யத்ர ஸந்ததி

என விஷ்ணுபுராணத்தில் மீண்டும் வரையறை செய்யப்பட்ட  உறவு.

காலம் காலமாக உருவாகி வந்த இந்த உறவுகளின் வலைப்பின்னல்களை உதாசீனப்படுத்திவிட்டு பேசப்படுவது பாரத ஒற்றுமையோ அல்லது தமிழ் உணர்வோ அவை பொய்யானவையே. அவை நம்மை -பாரதியராகவும் சரி தமிழனாகவும் சரி- பலவீனப்படுத்தும். இந்த பண்பாட்டு ரத்த உறவுகளின் வலைப்பின்னல்களே ஹிந்துத்துவம்.

ஆனால் இவற்றின் உதாசீனப்படுத்துதலை இப்பண்பாடு ரத்த உறவுகளின் அறியாமையை நாம் சுப்பிரமணிய சாமியிடமும் காண்கிறோம். சீமானிடமும் காண்கிறோம். சுவாமி விவேகானந்தர் பாறையில் கூவி கூச்சலிட்டவர்கள் தமிழர்களின் நன்மையை அல்ல சிங்களத்தின் பாதுகாப்பையே உறுதிப்படுத்துகிறார்கள்.

LostToGenocide2

இந்திய வெளியுறவுத்துறையின் செயல்பாடுகள் பொதுவாக இலங்கை தமிழரின் வலியை தெரிந்திராத நேருவியத் தன்மை கொண்ட அதிகாரிகளாலேயே செயல்படுத்தப் படுகின்றன. அது ஈழத்தமிழர் விசயத்தில் மட்டுமல்ல உண்மை. பிஜியில் இந்திய வம்சாவளியினருக்கு எதிராக செய்யப்படும் கொடுமைகள் ஆகட்டும், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வரும் இந்து சீக்கியராகட்டும், ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் சிக்கி சீரழியும் இந்துக்களாகட்டும், வங்க தேசத்தில் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு சிறுக சிறுக சித்திரவதை செய்யப்பட்டு கொன்றொழிக்கப்படும் இந்துக்கள், பௌத்த வனவாசிகளாகட்டும் – நம்மை சுற்றி நிகழும் இந்த மானுட சோகங்கள் மட்டுமல்ல அவற்றுக்கு மரத்து போன நம் மனநிலையும், இக்கொடுமைகளுக்கெல்லாம் வாய் மூடி இருக்கும் இந்திய வெளியுறவு துறையும் அண்ணலின் அரசியல் வாரிசு நமக்கு கொடுத்து சென்ற வல்வினை நோய் தொடர்ச்சிகள்.

எனவேதான் வலிமையான பாரதத்துக்காக  தென்னக மீனவ மக்களின் நன்மைக்காக கடலையே கண்டறிந்திராத அந்த வடக்கு மாநிலத்தில்  குரல் கொடுத்த அந்த மனிதர் இன்றைய சூழலில் தமிழராகிய நமக்கு, நாம் -தாயக தமிழரோ, ஈழத்தமிழரோ, புலம்பெயர்ந்த தமிழரோ- நமக்கு  முக்கியமானவர் ஆகிறார்.

அவர் பெயர் நரேந்திர தாமோதர மோடி. நமோ. பாரதி வரவேற்ற புதிய ஹிந்துஸ்தானம்.

இன்று பாஜகவின் பிரதம வேட்பாளராக பாகிஸ்தானையும் இலங்கையையும் ஒப்பிட்டு தமிழக மீனவர் நிலையை அவர் பேசியதற்கும் 2009 இல் அவர் பேசியதற்கும் இருக்கும் modiஅந்த தொடர் உறவு ஒரு நிச்சயமான நம்பிக்கை கீற்றை நமக்குள் ஏற்படுத்துகிறது. ஆனால் 2013 இல் சென்னையில் சோ உட்பட நேருவிய இலங்கை பார்வையை கொண்டவர்கள் மத்தியில் மோடி பேசியது நிச்சயமாக தமிழராகிய நமக்கு பேருவகை அளிக்கக் கூடியது. பாரதத்தின் வெளியுறவு கொள்கைகளில் அந்தந்த மாநில மக்களின் குரல்கள் ஒலிக்க வேண்டும். பாரதத்தின் வெளியுறவு கொள்கைகளை பிராந்திய உணர்வுகளும் இணைந்து வடிவமைக்க வேண்டும்.

இறுதியாக ஈழத்தமிழருக்கு நல் வாழ்வளிக்கும் ஒரு அரசாங்கம் பாரதத்தில் அமையப் போகிறது எனும் நம்பிக்கை ஏற்படுகிறது. விபுலானந்த சுவாமிகள் மீட்டெடுத்த யாழிசையாக தமிழர் நல்வாழ்வு மீண்டும் தீவு தேசத்தில் வளமை அடையட்டும். 

தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த் தேசமீது தோன்றுவாய் வா வா வா …

 நாளை காலை மீண்டும் தேநீருடன் சந்திப்போம்.

“… னால் எனது கேள்வி வேறு. குவாத்ரோச்சிக்காக இவ்வளவு தவித்துப் போகிறீர்களே.. பிரதமரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அங்கே ஸ்ரீலங்காவில் எந்தக் குற்றமும் செய்யாத நிரபராதிகளான எனது தமிழ் சகோதரர்கள் இத்தனை பேர் படுகொலை செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள், எவ்வளவு விதமான இன்னல்களை, கொடுமைகளை அவர்கள் சகிக்க வேண்டியள்ளது.. ஆனால் இன்று வரை இந்த தில்லி அரசாங்கம் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. 6 மாதங்களாக தமிழ் சகோதரர்கள் மீது தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு ஒன்றுமே செய்யவில்லை. தமிழ் நாட்டிலே அழுத்தம் அதிகரித்தவுடன், பிரணாப் முகர்ஜியை அனுப்பி வைக்கிறது.. அவர் அங்கு போய் ஏதோ பேசி விட்டு எந்த முடிவும் இல்லாமல் திரும்பி வருகிறார். ஒரு “நிரபராதி” குவாத்ரோச்சிக்காக படாதபாடு படுகிறீர்கள்.. அங்கே ஆயிரக் கணக்கில் நிரபராதிகளான தமிழ் சகோதரர்கள் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள் – ஆனால் அது உங்களை ஒன்றுமே செய்வதில்லை, இதை இந்த உலகமும் மக்களும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.. இந்த 2009 தேர்தலில் இதெல்லாம் தான் முக்கியமான பிரசினையாக இருக்கப் போகிறது..”

– மே-10, 2009 அன்று லுதியானா பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோதி

9 Replies to “நேரு, மோடி, ஈழத்தமிழர்கள்”

  1. நேருவின், காங்கிரஸ் கட்சியின் கடந்தகால செயல்பாடுகள் இப்போதுதான் ஒவ்ஒன்றாக வெளிவருகிறது…

    //2009 போரில் ஈழத்தமிழர் பிரச்சனை பாரதம் முழுவதும் பெரும் பிரச்சனையாக பற்றிக் கொள்ளாமல் இருப்பதில் என்டிடிவி எத்தனை சிறப்பாக சிங்கள உளவுத்துறைக்கு சாதகமாக செயல்பட்டதோ அதே அளவு சிறப்பாக சீமானும் செயல்பட்டார்.//

    இதை கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும்.

    சீனு ஈரோடு.

  2. மோடி பிரதமாராக பதவி ஏற்றால் என்ன செய்வார் என்பது கேள்வி இல்லை. கட்சி என்ன முடிவு எடுக்குமோ அதை தான் அவர் செய்வார் . இப்போது மக்கள் மனதில் பி ஜே பி -இன் நிலைப்பாடு என்ன? நேரு சஹாப்தம் முடிந்துவிட்டது. உலக சூழ்நிலை மாறிவிட்டது. இலங்கை விஷயத்தில் வடக்கு வேடிக்கை பார்ப்பது நிதர்சன உண்மை.

  3. All the flaws committed by rose flower is his western oriented thought and the way he ruled our country is also indicating that his insight about the prediction of our nation’s socio-economic cultural condition was zero. Whether the present burning issues like Kashmir, naxals, increasing conversion for concessions, declining economy, devision of states on the basis of language and neighbouring countries attack are all due to his soft attitude where he didn’ t have any interest. His aim was to show off that he was the very cool and peacedove in the world at the cost of the countrymen’s future. As he sowed then so we reap now. In the future if we select a visionary leader with moral character now, we will get benefit in the future accordingly.

  4. As far as Sri lankan tamilians are concerned Congress, BJP and you people are same. You 3 will not do anything… you may ask me immediately about my contribution. At least I pray daily for them 2 minutes. But you 3??? You know very well…

  5. namasthe sri AN

    will you please write about the plight of kashmiri pandits also? At least some voice is heard on behalf of srilankan tamils. But what about the kashmiri pandits. we dont even recognise such
    an entity exists. are they not hindus?
    Also will it be a problem to bring back the hindus of pakistan and bangla?
    Will BJP even think in those lines
    Anyway it is very sad that we are still not sure as to the problems of lankan tamils will ever be solved.

  6. தமிழ்ஹிந்துவில் நல்ல பல கட்டுரைகளை தரும் திரு அரவிந்தன் நீலகண்டன் அயல்நாடு இலங்கையை பற்றி எழுதும் போது மேலும் அறிந்து எழுதியிருக்கலாம் .
    இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடியேறிய மக்கள் சாம்பார் கலவையாகி உருவாகியவையே இலங்கை தமிழர்கள், இலங்கை சிங்களவர்கள் என்று அழைக்கபடும் இலங்கையில் வாழும் மக்கள். இது விஞ்ஞானரீதியாகவும் மரபணு ரீதியாக நிரூபிக்கபட்ட உண்மை.
    உண்மை அப்படியிருக்க இலங்கையில் உள்ள ஒரு இனமான சிங்களவர்களை ஒரு அரபு ஆக்கிரமிப்பு இனம் போல்,ஆங்கிலேய ஆக்கிரமிப்பு இனம் போல் கட்டமைத்து பிரசாரபடுத்துவது எந்தவகையிலும் பாரதத்தின் நலன்கள் பாதுகாப்பிற்கு உதவ போவதில்லை. நேர்மாறாக இந்திய உள்ள தமிழ்பிரிவினைவாதிகள் பிரசாரத்திற்கு மட்டுமே ஊக்கம் கொடுக்கும்.
    பல நூற்றண்டுகளுக்கு முன்பிருந்தே பாரதத்தின் தமிழ் மன்னர்கள் இலங்கையுடனான உறவில் தமிழர், சிங்களவர் என்று இனவாதம் பார்த்து இல்லை. தமது நலன்களுக்கு ஏற்றபடி இலங்கையில் உள்ள தமிழ்- சிங்கள மன்னர்களோடு உறவை ஏற்படுத்தி இருந்தனர்.
    இலங்கை தமிழர்கள் நலன்சார்ந்து செய்யபட்ட பாரதத்தின் திட்டங்கள் அத்தனையும் நாசமாக்கியது தமிழீழ விடுதலை புலிகள் என்ற பயங்கரவாத இயக்கம்.

  7. விடுதலைப் புலிகளுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக கருதுவது அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் உறவு இருபதாகக் கூறுவதற்கு ஒப்பானது. இலங்கை வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகளாவார். சிங்களவர் வந்தேறிகள் என்பதை அவர்களது மகாவம்சம் என்ற வரலாறே சொல்கிறது. ஹிந்துக்கள் என்று பார்த்தாலும் நாம் இந்தியாவுடன் தொடர்பு கொண்டவர்களே, தமிழர்கள் என்று பார்த்தாலும் நாம் இந்தியாவுடன் உறவு கொண்டவர்களே. இருந்தும் எம்மினம் அழிக்கப்பட்டபோது யாரும் கை கொடுக்கவில்லை. மாறாக மூடிமறைத்தார்கள்.
    திரு மோடி அவர்கள் திருச்சி பொதுக் கூட்டத்தில் பேசும்போது கேரளா மீனவர்கள் இட்டாலிக் கடற்படையால் தாக்கப்பட்டதைப் பேசினார். ஆனால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைப் பற்றி ஏதும் பேசவில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் வெளியுறவுக் கொள்கைகளில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்ற சந்தேகத்தை அவரது பேச்சு ஏற்படுத்துகின்றது. மேலும் பிரிவினையை ஆதரிக்கமுடியாது என்பதே இந்திய அரசியல் வாதிகளின் பொதுவான கொள்கையாக இருக்கின்றது. அதற்குக் காரணமாகக் கூறுவது கஷ்மீர் போன்ற மாநிலங்களில் உள்ள பிரிவினைக் கோரிக்கைகளை. இந்த அரசியல் வாதிகள் தங்கள் தங்கள் நாட்டுப் பிரச்சனையைப் போலவே எல்லாப் பிரச்சனைகளும் இருக்கும் என்றும் தங்களுக்கான தீர்வுகளே மற்றவர்களுக்கும் பொருந்தும் என்று கருதுவது அறியாமை ஆகும். விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டபின் தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றப்படுகின்றனர். புத்தமத விகாரைகள் அமைக்கப்படுகின்றன. கொழும்பில் தமிழர்கள் குடியேறினால் யாழ்ப்பாணத்தில் சிங்களவர் குடியேறுவதில் என்ன தவறு என்று பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திலேயே நியாயப்படுத்துகின்றார்கள். ஆனால் கொழும்பில் வாழும் தமிழர் தலைநகர் என்ற அடிப்படையில் அங்கு குடியேறியவர் ஆவர். தமிழர் பிரதேசங்களில் அரசே திட்டமிட்ட அடிப்படையில் சிங்களவர்களை குடி ஏற்றுகின்றது. அரசின் நோக்கம் தமிழரின் பாரம்பரியப் பிரதேசங்களிலேயும் அவர்களைச் சிறுபான்மையினராக்குவதே. இதுபோலவே தான் இந்திய அரசும் நடந்து கொள்வதாக இருந்தால் தனது கூட்டாளி இலங்கை அரசுக்கு சார்பாக பிரிவினையை எதிர்ப்பது சரியானதாக இருக்கும். அல்லாவிட்டால் அவர்கள் தமது கொள்கையை பிரச்சனைகளின் அடிப்படையில் மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *