மோடி எனும் அபாயம்

morning_hindutvaசங்க சித்திரம் ஒன்று உள்ளது. பாரி தனது தேரை கானகத்தில் ஓட்டிச் செல்கிறான். ஒரு இடத்தில் அந்த தேரின் மீது ஒரு முல்லைக் கொடி படர்ந்துவிடுகிறது. அதை பார்த்த பாரி அந்த தேரை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறான். இந்த ஆழ்ந்த சித்திரம் எதை சொல்கிறது? எதன் உருவகம் அது?  நுண்ணுணர்வு கொண்ட வாசிப்பாளனுக்கு எழும் கேள்வி இதுதான். அந்த தேர் ஒரு அரசின் திட்டங்களை உருவகிக்கிறது. அதன் மூலமாகவே ஒரு அரசு செல்கிறது. அதன் மீது படரும் கொடி என்பது என்ன? இந்த சிந்தனையின் தூல உருவம் நமக்கு சுதந்திரத்துக்கு பின் உருவான இந்தியாவிலிருந்தே கிடைக்கிறது.

This effect is most commonly seen on the scalp, face, and eyelids, and may be permanent. So, https://upstagetheatre.com/volunteer/ if you are looking for it, do you have to buy the cheapest doxycycline doxycycline in the doxycycline with mastercard best price that you can found anywhere? You are here because you want to make sure you do not get a skin infection when you apply this gel.

It’s important to consider the following questions when deciding whether or not to take a probiotic: is it good for my specific situation? There are a few factors that will determine whether you have to pay a prescription out of pocket cost or a Gomez Palacio zithromax price cvs private out of pocket cost for your prescription medicine. Online pharmacy where you shop from home clomid tablet buy.

The generic version of targadox 25 mg vs 75 mg price contains no form in the drug like the original version. Clomid is an estrogen and how much does clomid cost uk Machakos progesterone like drug that prevents ovulation in women. The objective of this randomized, controlled, crossover study was to evaluate the pharmacokinetics of ivermectin after ivermectin oral 0 8 mg t.i.d.

சுதந்திர இந்தியாவுக்கென்று ஒரு மரபு இருக்கிறது. எந்த ஒரு திட்டத்தையும் ஜனநாயகத்தன்மையுடன் எல்லாவிதமான விதிகளுக்கும் அப்பால் அதில் தொடர்புடைய அனைவருக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதுதான் அந்த மரபு. இந்த நவீன மரபு சிறிது சிறிதாக திரண்டு வந்து இன்று நாம் அனைவராலும் ஊழல் என அழைக்கப்படும் ஒரு இயக்கமாக மாறியிருக்கிறது. உண்மையில் இது அதிகார பகிர்ந்தளிப்புதான். எந்த ஒரு அரசு திட்டமும் செயல்படுத்தப்படும் போது எந்த அளவு ஊழலைக் கொண்டதாக அறியப்படுகிறதோ அந்த அளவு ஜனநாயகத்தன்மையை கொண்டதாக இருக்கிறது. உண்மையில் இது ஒரு இடையறாத உரையாடல். இந்த உரையாடலை சமூகமும் அரசு இயந்திரமும் ஊடகமும் நடத்திக் கொண்டே இருக்கிறது. அந்த உரையாடலின் திரண்ட பருப்பொருள் வடிவம்தான் ஊழல். ஏன் இன்றைக்கு சுவிஸ் வங்கி கணக்குகள் என்றெல்லாம் பேசப்படுகிறதே. இதன் அடிப்படை பார்வை ஒரு உலகளாவிய பார்வை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் சங்க புலவனின் பார்வையில் தொடங்கிய அந்த நம் பண்டை தொல்மரபை மீட்டெடுத்தவர் ஜவஹர்லால் நேரு என்றே கூறப்படுகிறது. சீன இந்திய போரின் போது உளவுத்துறையால் தேச பாதுகாப்பு எனும் குறுகிய எண்ணத்துடன் மேற்கொள்ளப்பட்ட சில ரெய்ட்களின் போது நேருவின் காப்புரிமை கணக்குகள் சோவியத் வங்கிகளில் வைக்கப்பட்டிருந்ததாக ஒரு தகவல் உண்டு. இதை கேட்டு நம் நாட்டின் இறுகிய தேசிய வாத குறுமனக்குழுக்கள் அதிர்ந்திருக்கலாம். ஆனால் இது உண்மையென்றால் நேரு எத்தனை தொலை நோக்குடன் சர்வதேச பார்வையுடன் செயல்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

nehru00

 

அதன் நீட்சியே இன்று சுவிட்சர்லாந்து வரை இந்திய செல்வம் பரந்து விரிந்து மானுடத்தை தழுவியிருக்கிறது. இந்திய மக்களின் உழைப்பின் பயனால் லாபம் அடைவது சுவிஸ் வங்கிகள் என்றால் அதிலுள்ள கடைநிலை ஊழியனும் லாபம் அடைவானே. ஆக சுவிஸ் வங்கியை சுத்தம் செய்யும் ஒரு கடைநிலை ஊழியன் உறிஞ்சும் தேநீரில் இந்திய உழவனின் பணமும் உள்ளது என்பது எத்தனை விரிந்த மானுட பெருங்கருணையின் சிறு துளி. எனவேதான் காந்தி கூட லண்டன் சென்ற போது அங்குள்ள தொழிலாளர்கள் மத்தியில் தங்கினார்.

கேரளாவில் இது குறித்த ஒரு ஆழமான oommen-chandy-new630காந்திய-மார்க்ஸிய புரிதல்பாடு உள்ளது. ஒரு சிறிய சூரிய மின் சக்தி திட்டத்திலும் கூட ஊழல் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. இதுதான நவீன ஜனநாயகத்தன்மை. இந்த ஊழலின் விளைவாக ஊடகங்கள் அந்த திட்டத்தை குறித்து பரபரப்பாக பேசுகின்றன.  பெண்கள், இளைஞர்கள். அரசியல்வாதிகள் என பலதரப்பு மக்கள் இந்த ஊழலில் பங்கு பெற்றுள்ளனர். ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தன்மையை அது காட்டுகிறது. சிறிது யோசித்து பாருங்கள். இந்த ஊழலின் அளவு பத்து கோடி ரூபாய் என்கிறார்கள். சின்ன திட்டத்திற்கு ஏற்ற கச்சிதமான ஊழல். காந்திய பொருளாதார அறிஞர் ஷீமேச்சர்’ சிறியதே அழகானது’ என கூறினார்.

ஆனால் குஜராத்தில் நடப்பதை பாருங்கள். 16 லட்சம் அலகுகள் கொண்ட சுத்தமான மின்சக்தியுடன் 90 லட்சம் லிட்டர்கள் நீர் ஆவியாகி செல்வதையும் இது தடுக்கும். நர்மதா நதியின் நீர்வழிகளின் ஒட்டுமொத்த நீளம் 19000 கிலோ மீட்டர்கள். இதில் பத்து சதவிகிதம் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்டாலும் இதனால் 2200 மெகாவாட் சக்தி உற்பத்தி செய்ய முடியும். ஆனால் இதில் எந்த ஊழலும் இல்லை. அதாவது அதிகார பகிர்ந்தளிப்பு இல்லை.  modi_solarஅதை அளிக்க மோடியால் முடியவில்லை என்பதுதான் உண்மை.  இதைத்தான் சர்வாதிகாரம் என்று சொல்கிறோம். சிலர் சொல்கிறார்கள் மோடியை எதிர்த்து குஜராத்தின் தலைநகரிலேயே பிரசுரங்களை மக்களால் எளிதாக விநியோகிக்க முடிகிறதே என்று. இது ஜனநாயகத்தை குறித்த மிகவும் மேலோட்டமான அபத்தமான வாசிப்பு. இணையம் முழுக்க நிரம்பியுள்ள மோடி ஆதரவாளர்களால் இத்தகைய மேலோட்டமான வாசிப்பைத்தான் நிகழ்த்த முடியும். ஆனால் மீண்டும் மீண்டும் அதிகாரம் செடி போல படர்ந்து அதிகாரத்தை பகிர்ந்து கொள்கையில் அந்த செடிகளில் கனியாக தோன்றுவது ஊழல். அது இல்லாமல் மக்கள் நல திட்டங்களை ஒரு அரசு செயல்படுத்துவதென்பதே ஒருவித பாசிச மனநிலைதான்.

யோசித்து பாருங்கள். கேரளாவின் இந்த சோலார் ஊழலால் இனி எத்தனையோ திரைப்படங்கள் வரக் கூடும். அழகிய பெண். விலை போகும் அரசியல்வாதி, kerala-sex-scandal_071313105353அந்த பெண்ணின் பின்னால் இருக்கும் சோகம், அந்த அரசியல்வாதியின் ஆதி இச்சையான தனிமை, இதனை பயன்படுத்தும் ஒரு வியாபார உள்ளம்… எத்தனை அருமையான நாவல்கள், எத்தனை எத்தனை திரைப்படங்கள்… இவையெல்லாம் பெரும் அறக் கேள்விகளை  வாசகன  மனதுக்குள்ளும் பார்வையாளரின் அந்தரங்கங்களிலும் எழுப்பிக் கொண்டே இருக்கும். இந்த கேள்விகளின் மூலமாகத்தான் நாம் அறத்தை நோக்கி ஒரு சமுதாயமாக நகர முடியும்.  ஆனால் எல்லா செயல்திட்டங்களும் மக்களுக்காகத் தீட்டப்பட்டு ஊழலில்லாமல் குஜராத் போல அரசு நிர்வாகம் நடந்ததென்றால் அந்த சமுதாயத்தில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்? அந்த சமுதாயத்தில் வாழும் கலைஞன் என்ன அறச்சீற்றத்தை அடைய முடியும்? மீண்டும் கூந்தலில் உள்ள மணம் இயற்கையானதா எனும் கேள்விக்கா நாம் திரும்ப செல்வது?

எனவேதான் சொல்ல வேண்டி உள்ளது. ஊழலே இல்லாமல் செயல்படுத்தப்படும்  திட்டங்கள் மூலம் இந்தியாவின் கடைசி குடிமகனுக்கும் நற்பயன்கள் மட்டுமே கிடைக்கும் ஒரு நிர்வாகத்தை மோடி அளித்துவிடுவார். ஊடகங்களுக்கு யார் வாழ்வளிப்பார்கள்? ஊடக இந்தியா, ஊழல்களால் கொழித்த உயர்குடி இந்தியா எதிர்நோக்கும்  மிகப் பெரிய அபாயம் எது என்றால் நிச்சயமாக அது மோடிதான். இதில் இரண்டுவித கருத்துக்கு இடமே இல்லை.

 

20 Replies to “மோடி எனும் அபாயம்”

 1. நல்ல அங்கதக் கட்டுரை.

  ஆனால் முதல் வாசிப்பில் முற்றிலும் புரிந்துகொள்ள முடிந்தால் அப்பறம் என்ன அரவிந்தன் நீலகணடன்!

 2. இப்படி நம் கண்முன்னே அரங்கேறும் வடிகட்டின அயோக்யத்தனத்தை “தகுந்தபடி“ தோலுரித்து உரிய “அறச்சீற்றம்“ கொண்டு “தேவையானபடி” வெளிச்சத்துக்கு கொண்டுவந்த அரவிந்தனை பாராட்டுகிறேன். இது சுட்டும் விஷயங்களின் முடிச்சுகள் அபாயமானவை. மோடியால் விளைவிக்க கூடும் அபாயங்கள் மிகவும் பெரியவைதான். நமது இந்திய இதுவரை அறியாதது & காணாதது. ! !
  பராசக்தி தான் காக்கவேண்டும்.
  வேறு வழியே இல்லை.

 3. நல்ல நெத்தியடி.

  என்ன எழுதினாலும் காங்கிரஸ்காரனுக்கும் அவன் சொம்புகளான மோசடி செகுலரிஸ்டுகளுக்கும் உரைக்காது. என்ன செய்வது உப்பு பஞ்சம் அய்யா.

  தமிழ் நாட்டிலும் இதுவே நடந்தது. ஒரே குடும்பம் சாப்பிட்டுவிட்டுப் போனதால் , மின்சாரம் உட்பட ஒன்றும் கிடைக்காமல் ஏமாந்த தமிழன் அவர்களை தூக்கி வீசிவிட்டான். இங்கு டூஜீ- பணம் முழுவதையும் பொதுமக்களுக்கு பங்கு போட்டு கொடுத்திருந்தால், எவனும் வாய் திறந்திருக்க மாட்டான். ஒரே குடும்பம் சுட்டுவிட்டதால் தான் வந்தது வினை.

  நேருவுக்கு ராயல்டி ரஷ்ய வங்கியில் இருந்தது என்று கூறும்போது அந்த கணக்கின் எண் , மற்றும் வங்கியின் பெயர் கிளை போன்ற விவரங்களையும் தந்தால் தான் பிறரிடம் எடுத்துக்கூற எதுவாக இருக்கும்.

  நேற்று மோடியின் மும்பை கூட்டம் மற்றும் அவரது உரையை மும்பை பொதுமக்கள் பார்க்கவோ, கேட்கவோ கூடாது என்பதற்காக , மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் அரசு, கேபிள் டீவிக் களுக்கு மும்பையின் பல பகுதிகளில் மின்சாரம் கிடைக்காதவாறு, அதாவது மோடியின் கூட்டம் லைவ் ஆக ரிலே ஆகாதவாறு பார்த்துக்கொண்டது. இது எதனை காட்டுகிறது என்றால், அவசரநிலைக் காலத்துக்கு பின் நடந்த தேர்தலில் 1977-மார்ச் மாதம் இந்திரா, கன்று சஞ்சய், இருவருமே தோற்றதைப்போல, இம்முறை நேரு குடும்பத்தை சேர்ந்த ராகுல், சோனியா, பிரியங்கா, வதேரா என்று யார் போட்டியிட்டாலும் நிச்சயம் 2014-மேயில் நடக்கவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையப்போகிறது என்பதை கட்டியம் கட்டிக்கூறுகிறது.நிச்சயம் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட கிடைக்காது. ஏனெனில் விலைவாசியும், ஊழலும் , விண்ணைத்தாண்டி விட்டன.

 4. 1. இந்த ஆழ்ந்த சித்திரம் எதை சொல்கிறது?
  2. எதன் உருவகம் அது?
  3. நுண்ணுணர்வு கொண்ட வாசிப்பாளனுக்கு எழும் கேள்வி ….
  4. சுதந்திர இந்தியாவுக்கென்று ஒரு மரபு இருக்கிறது.
  5. உண்மையில் இது அதிகார பகிர்ந்தளிப்புதான்.
  6. உண்மையில் இது ஒரு இடையறாத உரையாடல்.
  7. அந்த உரையாடலின் திரண்ட பருப்பொருள் …
  8. இதன் அடிப்படை பார்வை ஒரு உலகளாவிய பார்வை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  9. அந்த நம் பண்டை தொல்மரபை மீட்டெடுத்தவர்
  10. இந்திய செல்வம் பரந்து விரிந்து மானுடத்தை தழுவியிருக்கிறது.
  11. எத்தனை விரிந்த மானுட பெருங்கருணையின் சிறு துளி.
  12. எனவேதான் காந்தி கூட …..
  13. இதுதான நவீன ஜனநாயகத்தன்மை.
  14. ஆதரவாளர்களால் இத்தகைய மேலோட்டமான வாசிப்பைத்தான் நிகழ்த்த முடியும்.
  15. ஒருவித பாசிச மனநிலைதான்.
  16. யோசித்து பாருங்கள். இவையெல்லாம் பெரும் அறக் கேள்விகளை வாசகன மனதுக்குள்ளும் பார்வையாளரின் அந்தரங்கங்களிலும் எழுப்பிக் கொண்டே இருக்கும்.
  17. இந்த கேள்விகளின் மூலமாகத்தான் நாம் அறத்தை நோக்கி ஒரு சமுதாயமாக நகர முடியும். அந்த சமுதாயத்தில் வாழும் கலைஞன் என்ன அறச்சீற்றத்தை அடைய முடியும்?
  18. இதில் இரண்டுவித கருத்துக்கு இடமே இல்லை.

  அரவிந்தனின் தார்மீகக் கோபம் எவ்வளவு நியாயமானது என்பதை நான் பூரணமாக உணர்ந்துளேன். சாம பேத தான தண்டம் என்று பலவழிகளிலே போய்த்தான் கருத்தை பெரும்பான்மை மக்களின் கவனத்துக்கு கொண்டு போகவேண்டும். அதிலே இது ஒரு உபயோகமான உருப்படியான அணுகுமுறை…மேல குறிப்பிட்ட பதப் பிரயோகங்கள் திரும்பத் திரும்ப + திரும்பத் திரும்ப பலப்பல கட்டுரைகளிலே ஓரிடத்திலே வருவதை நானும் கண்டுள்ளேன். அதனை மிகச் சரியான வீச்சிலே அவசியமான + ஆரோக்யமனான அங்கதத்துக்கு என்று எடுத்தாண்ட அரவிந்தனின் திறமையை வணங்குகிறேன். இதுபோன்ற புலமை கூட்டிய + கூடிய நெத்த்தியடி பல தேவை நமது அறிவு “வீங்கிய” ஜீவிகளுக்கு.
  பராசக்தி துணை.

 5. தினமணி 23-12-2013 வியாழன் முதல் பக்கம் வந்துள்ள நரேந்திர மோடியின் உரையிலேயே இந்த விவரம் குறிப்பிட்டு பேசியுள்ளார். மும்பை நகர பாஜக தலைவர் ஆஷி ஷேலார் இந்த தகவலை மோடியிடம் தெரிவித்துள்ளார். திரு kmv போன்றோர் நம்பாவிட்டால் அவருக்கு தான் நஷ்டம்.

 6. சூப்பர், அருமையான எதிர்மறை கட்டுரை. நன்றி அரவிந்தண்ணா!

 7. எழுத்துக்களில் நக்கலும் நையாண்டித்தனமும் கலந்து செருப்பால அடிக்கறதுக்கு சில பேரால தான் முடியும்.சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பது ஒரு கலை. அ.நி அவ்வப்பொழுது அதை செய்து வருவது போற்றுதலுக்குரியது அவரின் தனித்தன்மை அது..theunrealtimes போல அப்போ அப்போ stale ஆக கூடாத பார்த்து-கொள்வது நலம். 🙂

 8. Superbly sarcastic.Unable to use tamil letters because I am a computer illiterate. There is a very urgent need and necessity to promote and spread equivalent of “TAMIL HINDU” in all other languages of our country

 9. ஊழல் இல்லாத அரசியல்வாதிகளை எண்ணிவிடலாம் ஊழல் எங்கும் உள்ளது மோடி ஒருவரால் மட்டும் ஊழலை ஒழிக்கமுடியாது அத்வானி வாஜ்பாய் தவிர பி ஜே பி இல் ஊழல் இல்லாதவர் யார்? திருடன் திரிந்தினால் தான் திருட்டை ஒழிக்கமுடியும்

 10. அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள் அரவிந்தன்.

 11. திரு.அ.நீ. அவர்களுக்கு நன்றி.நல்ல கருத்து செறிவான அங்கத கட்டுரை தந்ததற்கு.

 12. இந்தியாவில் உள்ள மீடியாவில் பெரும்பான்மையானவை மேலைநாட்டு கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளன. அரசியலில் நல்லது நடக்க ஆரம்பித்துவிட்டால் , அவர்களின் வியாபாரம் படுத்துவிடும். காதல், கற்பழிப்பு, கொலை கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்றவை நடந்தால் தான் செய்திகளின் வியாபாரம் நன்றாக நடக்கும். உற்பத்தி பெருகி, மக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து பொருளாதாரம் நன்றாக ஆகிவிட்டால்,மீடியாவுக்கு சுவை குறைந்து, மூடிவிட்டு ஓடிவிடுவார்கள் ஏனெனில் இலாபம் இல்லாத வியாபாரத்தை எவ்வளவு நாட்களுக்கு நடத்த முடியும் ?

 13. Just wondering who is the Author? Aravindan or Jeyamohan?

  //இந்த ஆழ்ந்த சித்திரம் எதை சொல்கிறது? எதன் உருவகம் அது? நுண்ணுணர்வு கொண்ட வாசிப்பாளனுக்கு எழும் கேள்வி இதுதான். அந்த தேர் ஒரு அரசின் திட்டங்களை உருவகிக்கிறது. அதன் மூலமாகவே ஒரு அரசு செல்கிறது. அதன் மீது படரும் கொடி என்பது என்ன? இந்த சிந்தனையின் தூல உருவம் நமக்கு சுதந்திரத்துக்கு பின் உருவான இந்தியாவிலிருந்தே கிடைக்கிறது.//

  //அதில் தொடர்புடைய அனைவருக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதுதான் அந்த மரபு. இந்த நவீன மரபு சிறிது சிறிதாக திரண்டு வந்து இன்று நாம் அனைவராலும் ஊழல் என அழைக்கப்படும் ஒரு இயக்கமாக மாறியிருக்கிறது//

  //ஆக சுவிஸ் வங்கியை சுத்தம் செய்யும் ஒரு கடைநிலை ஊழியன் உறிஞ்சும் தேநீரில் இந்திய உழவனின் பணமும் உள்ளது என்பது எத்தனை விரிந்த மானுட பெருங்கருணையின் சிறு துளி. எனவேதான் காந்தி கூட லண்டன் சென்ற போது அங்குள்ள தொழிலாளர்கள் மத்தியில் தங்கினார்.//

  //உண்மையில் இது ஒரு இடையறாத உரையாடல். இந்த உரையாடலை சமூகமும் அரசு இயந்திரமும் ஊடகமும் நடத்திக் கொண்டே இருக்கிறது//

 14. When Nehru was questioned in Parliament about the Jeep scandal, he made a cryptic remar” Jeep scandal is my scandal”.

  Immediately the opposition members kept quiet.

 15. அருமை அண்ணா, தாமதமாகத்தான் படித்தேன். தாமதிக்காமல் பாராட்டுகிறேன். தங்கள் எழுத்து அறம் சிறக்க இறை அருள வேண்டுகிறேன்.

 16. வெள்ளையனை விரட்டினோம் கொள்ளையனை விரட்ட காந்தி வேண்டாம் மோடி மட்டும்போதும்

Leave a Reply

Your email address will not be published.