வன்முறையே வரலாறாய்… – 12

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 'அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிப்பதுடன், கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருகின்றன என்பதனைவும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

இஸ்லாமிய ஆட்சியின் பிற்பகுதியில், குறிப்பாக அவுரங்கசீப்பின் (1658-1707) ஆட்சிக் காலத்தில் இந்தியா மாபெரும் பேரழிவைச் சந்தித்தது. பெருவாரியான இந்துக் கோவில்களும், பள்ளிகளும் உடைத்தெரியப்பட்டு, ஏராளமான காஃபிர்கள் (இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள்) கொல்லப்பட்டார்கள்.

aurangzeb-jizya-tax அவுரங்கசீப்பின் வாழ்க்கைக் குறிப்பைச் சொல்லும் மா-அசிர்-இ ஆலம்கிரி, 1669-ஆம் வருடக் குறிப்பொன்றில், "முட்டாள் பிராமணர்கள் தங்களுடைய கேவலமான புத்தகங்களை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு - இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு - சொல்லித் தருகிறார்கள். அவர்களிடம் படிக்க தூர, தூரப் பிரதேசங்களிலிருந்தெல்லாம் மாணவர்கள் இவர்களின் கேவலமான அறிவியலைப் படிக்க வருவதாக அவுரங்கசீப்பிற்குத் தெரியவந்தது. இதனால் கடும் சினம் கொண்ட அவுரங்கசீப், எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் காஃபிர்களின் கோவில்களையும், அவர்களின் பள்ளிகளையும் தயக்கமின்றி இடித்துத் தள்ளும்படி அவரது ஆட்சியின் கீழிருந்த அத்தனை உயர் அதிகாரிகளுக்கும் (கவர்னர்கள்) உத்தரவிட்டதுடன், இனி ஒருபோதும் காஃபிர்கள் தங்களின் வேதங்களை ஓதுவதையும், ஆலயங்களில் பிரார்த்தனை செய்வதையும் அனுமதிக்கவே கூடாது" என உத்தரவிட்டதாகக் கூறுகிறது.

அத்துடன், இந்துக்கள் எவரும் இனி அவர்களின் மதச் சின்னங்களை அணிவதற்கும், யானையில் சவாரி செய்வதற்கும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் அல்லாத காஃபிர்கள் மீதான கடுமையான வரிச்சுமை (ஜிஸியா) 1679-ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்துக் கோவில்களை இடிப்பதில் அவுரங்கசீப்பிற்கு இணையாக வேறெந்த இஸ்லாமிய ஆட்சியாளனும் செய்யவில்லை எனுமளவிற்கு ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்கள் அவுரங்கசீப்பினால் இந்தியாவெங்கும் இடித்துத் தள்ளப்பட்டன.

1679-ஆம் வருடம் மட்டும் அவுரங்கசீப்பினால் இடித்துத் தள்ளப்பட்ட ஆலயங்களை பட்டியலிடும் மா-அசிர்-ஆலம்கீர் தரும் தகவல்கள் பேரதிர்ச்சியை அளிப்பவை. உதாரணத்திற்கு ஒண்றிரண்டு இங்கே,

- ஜோத்பூரிலிருந்து திரும்பிய கான் ஜஹான் பகதூர் ஏராளமான வண்டிகளில் இந்துக் கோவில்களில் கைப்பற்றப்பட சிலைகளுடன் திரும்பி வந்தான். அந்தக் கோவில்கள் அனைத்தும் அவனால் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டன. அவ்வாறு அவன் கொண்டு வந்த சிலைகளில் சில டெல்லி ஜூம்மா மசூதியின் படிக்கட்டுகளின் அடியில் புதைக்கப்பட்டன. பிரார்த்தனைக்குச் செல்லும் நம்பிக்கையாளர்கள் அதனைத் தங்களின் கால்களால் மிதித்துச் செல்வதற்காக.

- இளவரசன் முகமது ஆஸமும், கான் ஜஹான் பகதூரும் உதய்ப்பூரிலிருக்கும் இந்துக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கச் செல்கையில், இருபதிற்கும் மேற்பட்ட ராஜபுத்திர இளவரசர்கள் அவர்களுக்கு எதிராக கலகம் செய்தனர். அந்த "மத வெறியர்கள்" அனைவரும் கொல்லப்பட்டு, கோவில்களும் அங்கிருந்த சிலைகளும் உடைத்தெறியப்பட்டன.

- உதய்சாகர் ராணா கட்டிய மூன்று இந்து ஆலயங்களை இடித்துத் தள்ள உத்தரவிடுகிறான் அவுரங்கசீப். அதனைச் செய்து முடித்துத் திரும்பும் ஹசன் அலிகான் என்பவன், "அரண்மனைக்கு அருகில் அமைந்திருந்த அந்தக் கோவில்களை மட்டுமல்லாது, அருகிலிருந்த நகரங்களில் அமைந்த நூற்றி இருபத்து இரண்டு கோவில்களும் இடித்துத் தகர்க்கப்பட்டதாக" பெருமை பொங்க அவுரங்கசீப்பிற்கு அறிவிக்கிறான்.

- சித்தூரை நோக்கிப் படையெடுத்த அவுரங்கசீப், அங்கிருந்த அறுபத்து மூன்று இந்து ஆலயங்களை இடித்துத் தள்ளினான்.

- அம்பர் கோவில்களை தகர்த்தெறியும் உத்தரவுடன் சென்ற அபு-துராப் அங்கே "முப்பத்து ஆறு ஆலயங்களை தரைமட்டமாக்கிவிட்டதாக" அவுரங்கசீப்பிற்குச் சொல்கிறான்.

இப்படியாக 1679-ஆம் வருடம் மட்டும் ஏறக்குறைய இரு நூற்றிற்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் அவுரங்கசீப்பின் உத்தரவினால் அழிக்கப்பட்டன. இதனை அடிப்படையாக வைத்தே அவுரங்கசீப்பின் ஐம்பது வருட ஆட்சிக்காலத்தில் எத்தனை ஆயிரம் ஆலயங்கள் இடிக்கப்பட்டிருக்கும் என்பதனை நாம் யூகிக்கலாம். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களின் கணிப்பின்படி ஏறக்குறைய 5000 ஆலயங்களாவது தகர்க்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

ஆலயங்களுடன் அதனைப் பாதுகாத்தவர்களும் சேர்த்தே அவுரங்கசீப்பினால் அழிக்கப்பட்டார்கள். அவுரங்கசீப் அவனது சொந்த சகோதரனான தாரா சிகோவையும் விட்டு வைக்கவில்லை. இந்து மதத்தின் மீது மிகுந்த பற்றுடன் இருந்த தாரா சிகோவை அவுரங்கசீப் கொலை செய்தான். முன்பே கூறியபடி, அவுரங்கசீப் சீக்கிய குருவான தேஜ் பகதூரையும் அவ்ரது இரண்டு உதவியாளர் சிரச்சேதம் செய்து கொன்றான். காஷ்மீரில் அல்லலுறும் இந்துக்களுக்குப் பரிந்து பேசச் சென்ற தேஜ் பகதூருக்கு கொடுங்கோலன் அவுரங்கசீப் அளித்த பரிசு அது.

அவுரங்கசீப்பிற்குப் பின்னால் 1738-ஆம் வருடம் இந்தியாவின் மீது படையெடுத்த பாரசீகனான நாதிர் ஷா, டெல்லியில் இரண்டு இலட்சம் இந்தியர்களைக் கொன்றதுடன், ஏராளமான செல்வங்களையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றான். அதில் ஆயிரக்கணக்கான இந்திய இளம் பெண்களும் அடக்கம்.

நாதிர் ஷாவின் தாக்குதலைக் குறித்துக் கூறும் ஃப்ரெஞ்சு வரலாற்றாசிரியரான அலெய்ன்-டானெயல் (Alain Danielou), "...பாரசீகப் படைகள் டெல்லியில் ஒரு வார காலத்திற்கும் மேலாக கொலை வெறித் தாண்டவமாடினர். அங்கிருந்த அத்தனை கட்டடங்களையும் இடித்துத் தள்ளியதுடன், கிராமப்புறங்களையும், வயல்வெளிகளையும் அழித்தனர். இந்தப் போரில் தப்பிப் பிழைப்பவர் எவருக்கும் உண்ண எதுவும் கிடைக்கக் கூடாது என்பதற்காக. அற்புதமான கலைப் பொருட்களையும், குதிரைகள் இவற்றுடன் கோகினூர் வைரத்தையும், மயிலாசனத்தையும், இன்றைய கணக்கில் ஏறக்குறைய 150 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கத்தையும் நாதிர் ஷா தன்னுடன் கொண்டு சென்றதாக" கூறுகிறார்.

நாதிர் ஷா கொண்டு சென்ற கணக்கிலடங்காத மிகப் பெரும் கொள்ளையின் காரணமாக "அவன் ஆட்சி புரிந்த பாரசீகத்தில் (இரானில்) மூன்று வருடங்களுக்கு பொது மக்களிடமிருந்து வரி வசூலிப்பதை நாதிர் ஷா நிறுத்தி வைத்தான்" என்று மேலும் சொல்கிறார் அலெய்ன்-டானெயல். அப்படியானால் எத்தனை பெரும் செல்வம் நம் கையை விட்டுப் போயிருக்க வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள்!

இஸ்லாமிய ஆட்சியாளர்களால் இந்து, பவுத்த, ஜைன, சீக்கிய மதங்களுக்கும், அவர்களின் வழிப்பாட்டிடங்களுக்கும் நிகழ்த்தப்பட்ட பேரழிவிற்கிணையாக உலகின் வேறெங்கிலும் இன்றுவரை நடக்கவில்லை. கோவில்களும், சிலகளும் இடிக்கப்பட்டு அதன் செல்வம் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர், கோவிலின் இடிபாடுகள் புதிய மசூதிகள் கட்டுவதற்கு உபயோகிக்கப் பட்டன.

இன்றைய டெல்லியின் க்வாட்-உல்-இஸ்லாம் (Kwat-ul-Islam) மசூதியானது அந்தப் பகுதியில் இவ்வாறு இடிக்கப்பட்ட பதினேழு இந்துக் கோவில்களின் இடிபாடுகளைக் கொண்டு கட்டப்பட்டது. இந்து ஆலயப் பூசாரிகளும், பிட்சுக்களும், பொறுப்பாளர்களும் வென்ற இஸ்லாமியர்களால் உடனடியாகக் கொல்லப்படுவார்கள். அமிர்-குஸ்ரு, சுல்தான் ஃப்ரோஸ் துக்ளக் போன்றவர்கள் இதுபோல இந்து பூசாரிகள்/ஆலய அர்ச்சகர்கள் கொல்லப்படுவதைக் குறித்து ஒருவிதமான குரூர மகிழ்ச்சியுடன் குறிப்புகள் எழுதிச் சென்றிருக்கிறார்கள்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு எழுதியிருப்பவை அத்தனையும் இஸ்லாமிய வரலாற்றாசிர்களால், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் எழுதப்பட்ட குறிப்புகள். இந்துக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான துன்பத்தைச் சுமத்துவதினைக் குறித்து அத்தனை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களும் மிகவும் மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் மட்டுமே அக்குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன என்பதனையும் நாம் நினைவில் கொல்ல வேண்டும். இஸ்லாம் காஃபிர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. நம்பிக்கையாளர்களும் அப்படியே.

இந்தக் கேவல மனோபாவம் குறித்து எழுதப்புகும் வரலாற்றாசிரியர் ஃப்ரான்ஸிஸ் வாட்சன்,

"...சிலை வழிபாடு செய்யும் இந்துக் காஃபிர்களுக்கு எதிராக அவர்களின் மனமெங்கும் வெறியும், விஷமும் நிறைந்தவர்களாக இஸ்லாமியர்கள் இந்தியாவின் பழமையான பெரும் ஆலயங்களை இடித்துத் தகர்த்தனர். இந்த வரலாற்று உண்மை அவர்களுடன் சென்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் மற்றும் பயணிகளால் துல்லியமாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஒரு சில ஆலயங்கள் முழுமையாக உடக்கப்படாமல் அரைகுறையாக விடப்பட்டன. ஆனால் ஏராளமான பழம் இந்து ஆலயங்கள் - ஆயிரக்கணக்கானவை - துண்டு, துண்டாக உடைக்கப்பட்டன.

இந்தியாவின் பழமையான நகரங்களான வாரணாசி, மதுரா, உஜ்ஜைன், மஹெஸ்வர், ஜ்வாலமுகி மற்றும் துவாரகாவில் அமைந்திருந்த மிகப் பழமையான கோவில்களில் ஒன்று கூட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தப்பவில்லை."

(தொடரும்)

3 Replies to “வன்முறையே வரலாறாய்… – 12”

  1. கண்ணீரால் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது, இந்துக்களைப் பொறுத்த மட்டில்.

  2. இந்த வரலாற்று உண்மைகள் அறிந்தவர்கள் கூட அந்த வன்முறைகளை ஜிகாதுகளை, கோயில் இடிப்புக்களை நிகழ்த்த திட்டமிடுபவர்களான வஹாபிகளை மதச்சார்பின்மை என்ற பெயரில் ஆதரிக்கிறார்களே என்பது தான் கொடுமையிலும் கொடுமை.

  3. இந்தக் கட்டுரையை ஆங்கிலம் மற்றும் பல மொழிகளிலும் வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ் ஹிந்து தளம் போன்று இன்னும் பல தளங்களிலும் வெளியிட வேண்டும். மதச் சார்பற்ற வாதிகளின் பொய் பித்தலாட்டங்களை அம்பலப் படுத்த வேண்டும். இதே போல் இன்னும் பல கட்டுரைகள் மூலம் சரித்திர உண்மைகளை நாடெங்கும் பரப்ப வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *