காஸ்ட்ரோ சேகுவேரா நேரு புரட்சி வீழ்ச்சி

1959ல் கியூபாவை ஆண்ட பாடிஸ்டா எனும் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரியை விரட்டி விட்டு காஸ்ட்ரோவும், சேகுவேராவும் ஆட்சியை பிடித்தார்கள்.

The use of oral steroids is associated with a number of adverse effects, the most important of which are: This is because price of misoprostol in naira Kolda of the long term effects and safety of the medication. Our generic protonix can be used to treat and prevent conditions including high blood pressure, diabetes, cholesterol, obesity, heart attack, heart failure, and cancer.

A place in a country or in a district, often a place of worship. Ear, nose, and throat infections, or e.n.t.i., in particular, can be very painful for both you Pruszków and your dog. The disease affects more than 20 million people in the united states alone, and costs the industry more than $1 billion per year ([@cit0001]).

The price of amoxil capsules is an indicator of its popularity and demand among the consumers. The use of the drugs has not had any impact Garupá clomid pills online on her weight. I will never let my son down because i know i love him.

ஆட்சியை அவர்கள் பிடித்ததே ஒரு விந்தைதான். பாடிஸ்டா அமெரிக்க ஆதரவுடன் ஆட்சிக்கு வந்து இருந்தாலும் பின்னாளில் அமெரிக்காவுடன் முட்டிகொன்டார். அதனால் கியூபா மேல் பொருளாதார தடை விதித்து, ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்தது அமெரிக்கா.

இந்த சூழலில் 200 போராளிகளுடன் சிறு படகுகளில் வந்து கியூபாவை பிடித்தார் காஸ்ட்ரோ. பாடிஸ்டா படையில் அப்போது 37,000 பேருக்கு மேல் இருந்தார்கள். 37,000 பேரை 200 பேர் எப்படி தோற்கடித்தார்கள்? காஸ்ட்ரோவிடம் இருந்தது நவீன ஆயுதங்கள். அமெரிக்க பொருளாதர தடையால் பாடிஸ்டாவின் விமான படை சுத்தமாக செயல் இழந்து இருந்தது. பாடிஸ்டாவின் படையில் பெரும்பாலும் பயிற்சி இல்லாத வீரர்கள் மட்டுமே இருந்தார்கள். டொம் என குன்டு விழுந்தால் ஆயுதங்களை போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்.

இப்படி 200 பேருடன் ஒரு நாட்டையே காஸ்ட்ரோவும், சேகுவேராவும் பிடித்தது அனைவருக்கும் வியப்பு அளித்தது…சில ஆண்டுகள் கழித்து பதிலடியாக சுமார் 1500 கியூபர்களுக்கு ஆயுதம் கொடுத்து சில சி.ஐ.ஏ அதிகாரிகள் உதவியுடன் கியூபாவை பிடிக்க அனுப்பினார் கென்னடி. அவர்களும் கியூபாவில் இறங்கி வீரமாக தான் சண்டை போட்டார்கள். அதற்குள் கியூபா ராணுவத்தை பக்காவாக தயார் செய்திருந்தார் காஸ்ட்ரோ. போர் முடிவில் 118 அமெரிக்க ஆதரவு புரட்சிராணுவ வீரர்கள் மரணம், 4000 கியூப ராணுவ வீரர்கள் மரணம். வீரர்களை படகுகளில் ஏற்றி தப்ப விட்டது அமெரிக்கா. மூன்று எதிர்புரட்சிவீரர்களும், இரு சி.ஐ.ஏ அதிகாரிகளும் பிடிபட்டு தூக்கில் இடபட்டார்கள்.

ஆக பெரிய அளவில் யுத்தம் இன்றி கியூபாவை பிடித்தார் காஸ்ட்ரோ. அவரது வெளியுறவுதுறை அமைச்சர் சேகுவேரா. சேகுவேரா ஐநா சபையில் ஆற்றிய உரை அவரை திரும்ப பார்க்க வைத்தது. வெளியுறவுதுறை அமைச்சராக இந்தியாவுக்கு கூட வந்தார் சேகுவேரா.

Cheguevra_Nehru
இந்தியாவுக்கு வந்த சேகுவேராவை பிரதமர் நேரு, இந்திரா, ராஜிவ், சஞ்சய் காந்தி அனைவரும் சந்தித்தார்கள். நேரு அவருக்கு விருந்தும் கொடுத்தார். அந்த விருந்து, அரசு மரியாதை எல்லாம் சேகுவேராவுக்கு புரியாத விஷயமாக இருந்தது. முழுக்க, முழுக்க இந்திய உணவுகளை கொடுத்து அது என்ன உணவு, எப்படி உண்பது என்பதை விளக்கினார் நேரு. அவை எதுவும் சேகுவேரவுக்கு பிடிக்கவில்லை. 2 மணிநேரம் நடந்த விருந்து நல்ல காமடியாக சென்றது

சேகுவேரா: மிஸ்டர் பிரைம் மினிஸ்டர். கம்யூனிச சீனாவை பற்றி என்ன கருதுகிறீர்கள்?

நேரு: இந்த ஆப்பிளை சாப்பிடுங்கள். மிக இனிப்பா இருக்கும்

சேகுவேரா: (ஆப்பிளை கடித்தபடி) மாசேதுங்கின் நூல்களை படித்துள்ளீர்களா?

நேரு”; உங்களுக்கு இந்த ஆப்பிள் பிடிப்பது மகிழ்ச்சி

இப்படி போன விருந்தில் சேகுவேராவுக்கு மிக போர் அடித்துவிட்டது. அதன்பின் இந்திய கம்பனிகள், அரசு விருந்துகள் என சென்றார் சேகுவேரா. கல்கத்தா சென்று அன்றைய காங்கிரஸ் முதல்வர் பி.சி.ராயை கூட சந்தித்தார். ஆனால் அன்று அவரை சந்திக்காமல் அவரது விசிட்டை முழுக்க புறக்கணித்தார்கள் அன்றைய கம்யூனிஸ்டுகள். இதற்கு சொல்லபடும் காரணங்கள் 1) அன்று அவர் முக்கியத்துவம் இல்லாத குட்டிநாட்டின் வெளியுறவுதுறை அமைச்சர் 2) அவரது ரஷ்ய எதிர்ப்பு

ஆல் இந்தியா ரேடியோவின் பானுமதிக்கு அளித்த பேட்டியில் சேகுவேரா “லத்தீன் அமெரிக்காவில் மக்கள் கடும் ஏழ்மையால் துன்பபடுகிரார்கள். உங்கள் ஊரில் காந்தி இருந்தது போல் எங்கள் ஊரில் அவர்களை நல்ல வழிக்கு கொன்டுவர தலைவர்கள் இல்லை. அதனால் நான் ஆயுதம் ஏந்த வேண்டி இருந்தது” என்றார். காந்தியின் சத்தியாகிரகம், அகிம்சை அனைத்தும் அவருக்கு பிடித்ததாக கூறினார்.

ஊருக்கு திரும்பியதும் காஸ்ட்ரோவுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு பதில் இப்போது ரஷ்யா மூன்றாம் உலகநாடுகளை சுரண்டுவதை லேட்டாக புரிந்துகொண்டார். புதிதாக இன்னொரு நாட்டை பிடித்து புரட்சியை உருவாக்க போவதாக சொல்லி விடைபெற்று காங்கோவுக்கு போனார். ரஷ்யா அவருக்கு உதவ மறுத்துவிட்டது. காங்கோவில் நடந்த போராட்டம் தோற்று, பொலிவியா திரும்பினார். அங்கே அவரை பிடிக்க அனுப்பபட்டவர் பெலிஸ் ரோட்ரிக்ஸ் என்ற சி.ஐ.ஏ அதிகாரி. இவர் வேறு யாரும் அல்ல…கியூபாவை பிடிக்க அமெரிக்கா அனுப்பிய ஆயுதம் தாங்கிய கியூப படை தலைவர் தான். சேகுவேராவால் அகதியாக அமெரிக்கா செல்ல நேர்ந்தது குறித்து அவருக்கு கடும்கோபம்.

பொலிவியாவிலும் தோற்று பிடிபட்டு பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் முன் நிறுத்தபட்டார் சேகுவேரா. அங்கே அவர் என்கவுண்ட்டர் செய்யபட்டார்.

பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் சி.ஐ.ஏவின் உயரிய விருதுகளை பெற்று சி.ஐ.ஏவில் பணியார்றி ஓய்வு பெற்று நல்ல நிலையில் உள்ளார்.

கியூப புரட்சி அதன்பின் திசைமாறியது. நாடு பாடிஸ்டா ஆட்சியை விட மோசமான நிலையில் வீழ்ந்தது.

ஒரு புரட்சியின் எழுச்சியும், வீழ்ச்சியும் இப்படிதான் அமைந்தன.

(செல்வன் தனது  ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

7 Replies to “காஸ்ட்ரோ சேகுவேரா நேரு புரட்சி வீழ்ச்சி”

 1. குப்பை தொட்டியில் போட வேண்டிய கொள்கை கம்முநிசம் . அதன் தலைவர்கள்
  எல்லாம் போலியானவர்கள். செகுவரோவும் அப்படிதான்.

 2. லத்தின் அமெரிக்காவில்தான் காந்தியில்லை தொழார் சே ஆயுதம் எடுத்தார் சரி இங்கேதான் காந்தி இருந்தாரே அப்புறம் ஏன் சுபாஷ் ஆயுதம் எந்த சொன்னார்……
  //பொலிவியாவிலும் தோற்று பிடிபட்டு பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் முன் நிறுத்தபட்டார் சேகுவேரா. அங்கே அவர் என்கவுண்ட்டர் செய்யபட்டார்//
  என்கவுன்ட்டர் என்பது எதிர்பாரதவிதமாக மிகவும் வன்முறையாக இருக்கும் எதிரியை சந்திப்பது, உள்டல் நிலை குறைவால் பிடிபட்ட கைதியை அறைக்குள் வைத்து சுட்டு கொன்று பின் கையை வெட்டி எடுத்து செல்வது இல்லை செல்வன்…. இந்த ஒற்றை வரிகளே உங்களின் சே வெறுப்பை புரியவைத்துவிட்டது ….

 3. இப்போது கம்யுனிஸ்ட் வாலிபர்கள் சே குவாரா என எழுதிய பனியன் அணிந்து அலைகிறார்கள். அவர்களுக்கு இப் பதிவு சமர்ப்பணம்.

 4. தோழர் தீபக்….

  ”போராட்டத்தில் வெறுப்பு ஒரு முக்கியமான அம்சம். எதிரியை எல்லா விதத்திலும் வளைந்து கொடுக்காத விதமாக வெறுக்க வேண்டும். அந்த வெறுப்பு ஒரு மனிதனை அவனது இயற்கையின் விளிம்புக்கே கொண்டு செல்ல வேண்டும். திறமையான, வன்முறை நிறைந்த, பச்சை ரத்தத்தில் தயக்கமின்றித் தேர்ந்தெடுத்துக் கொன்று குவிக்கும் இயந்திரமாக அவனை அந்த வெறுப்பு மாற்ற வேண்டும். இதையே நாம் நம் போர் வீரர்களிடம் எதிர்பார்க்கிறோம்..”

  இதுதான் புரட்சி பற்றி செ குவேரா உதிர்த்த முத்து….

  இப்படிப்பட்ட ரத்த வெறியனுக்கு சாவு வேறு எப்படி வருமாம்?

 5. தோழர்கள், ” பஞ்சம் , படுகொலை, பேரழிவு – கம்யுனிசம்” என்ற அரவிந்தன் நீலகண்டன் எழுதிய புத்தகத்தை படித்து பார்க்கட்டும். அதில் சே பற்றி உள்ள பதிவுகளுக்கு ஆதார பூர்வமாக பதில் சொல்லட்டும். இன்று வரை இடதுசாரிகள் சே பற்றி இளைநர்களிடம் பொய் பிரசாரம் மட்டுமே செய்து வருகிறார்கள். சே பனியன் அணிந்து திரியும் பல நபர்களிடம் நான் விசாரித்துஉள்ளேன். அவர்களுக்கு சே பற்றி எதுமே தெரிவதில்லை. இடதுசாரிகளின் வாய்வழி பொய் பிரச்சாரத்தை மட்டுமே நம்பி அதையே திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

 6. “…. இந்த ஒற்றை வரிகளே உங்களின் சே வெறுப்பை புரியவைத்துவிட்டது ….” தீபக், சே வெறுப்பையே வளர்த்து அதிலேயே வளர்ந்தவர்; என்ன கொடுக்கிறோமோ அதுதானே கிடைக்கும். அவர் மற்றவருக்குச் செய்தால் அது புரட்சி, மற்றவர் அவருக்கு செய்தால் அது போலி என்கவுன்டர்.

  -கண்ணன்.

 7. ஹிந்து மத இணையத்தளத்தில் இந்த கட்டுரையின் நோக்கம் என்ன? ஹிந்து மததிருக்கும் சேவுக்கும் என்ன தொடர்பு? எனக்கு ஒரு எழவும் புரியவில்லை. வெறுப்பை வாரி இறைத்து மூன்றாம்தர நிலைக்கு தரம் தாழ வேண்டாம் என இணையதளத்தை கேட்டுகொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published.