வன்முறையே வரலாறாய்… – 13

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிப்பதுடன், கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருகின்றன என்பதனைவும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களில் மதச் சகிப்புத்தன்மை கொண்டவராக அறியப்படுகிற அக்பரே கூட சித்தூர் போரில் (1568) தோல்வியுற்றுத் தன்னிடம் சரணடைந்த 30,000 தாழ்த்தப்பட்ட ஹிந்து விவசாயிகளைக் கொல்ல உத்தரவிட்டிருக்கிறார். அவர்கள் ராஜபுத்திர இளவரசர்களை ஆதரித்தார்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக. அந்தப் போரில் 8000 ராஜ புத்திர வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களின் மனைவியர்களை அடிமைகளாகப் பிடிக்கும்படி உத்தரவிடுகிறார் அக்பர். தாங்கள் பாலியல் அடிமைகளாக (Sexual Slavery) மறுத்த ராஜபுத்திரப் பெண்கள் அனைவரும் தீயில் குதித்து இறந்தார்கள்.

அக்பரின் மகனான ஜஹாங்கீர் அவரது வாழ்க்கைக் குறிப்பில், ஏறக்குறைய ஐந்து இலட்சத்திலிருந்து ஆறு இலட்சம் வரையிலான இந்துக்கள் தனது தந்தையின் ஆட்சிக் காலத்திலும், தன்னுடைய ஆட்சிக்காலத்திலும் (1556-1627) கொல்லப்பட்டதாகக் குறிப்பிடுகிறான்.

இந்தியாவின் சிந்துவைக் கைப்பற்றியதுடன் ஆரம்பமான இஸ்லாமியக் காட்டுமிராண்டித்தனம், இந்தியாவின் கடைசி சுதந்திர முஸ்லிம் ஆட்சியாளனான திப்பு சுல்தான் (1750-99) வரைக்கும் தொடர்ந்து நடந்தது. ஆம்; பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்துப் போர் புரிந்ததால் “தேசிய வீரனாக” குறிப்பிடப்படும் அதே திப்புசுல்தான்தான். திப்பு இந்திய இந்துக்களுக்கு எதிராக நடத்திய கொடூரங்கள் இந்தியர்களிடையே வெற்றிகரமாக மறைக்கப்பட்டு, அவன் இன்றைக்கு மாபெரும் வீரனாக குறிப்பிடப்படுகிறான். காலத்தின் விந்தை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல. அல்லது அறியாமையின் உச்சம்?

tipu-no-hero“ஹிஸ்டரி ஆஃப் மைசூர்” என்னும் புத்தகத்தில் ஹயவந்தன ராவ், “திப்பு சுல்தான் 1790-ஆம் வருடத்திய தீபாவளி நன்னாளில் மைசூரின் ஐயங்கார் சமூகத்தைச் சார்ந்த 700 ஆண், பெண், குழந்தைகளைக் கொலை செய்தான். ஐயங்கார் சமூகத்தைச் சேர்ந்த திருமலை ஐயங்கார் என்பவர் சென்னையை ஆண்ட பிரிட்டிஷ் கவர்னரான ஜெனரல் ஹாரிஸுடன் செய்த ஒரு ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி இப்படுகொலை நடந்தது.

M.M.K.F.G என்று அறியப்படுகிற திப்புசுல்தானின் ஜெனரலான மொபிபுல் ஹசன் எழுதிய திப்புவின் வாழ்க்கைக் குறிப்பில் (பின்னால் திப்புவின் மகனால் அது சரிபார்த்துச் செப்பனிடப்பட்டது), திப்புசுல்தான் திருவாங்கூர் போரில் ஏறக்குறைய 10,000 ஹிந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் கொன்றதுடன், 7000 பேர்களை அடிமைகளாகப் பிடித்தான் என்று குறிப்பிடுகிறான். இவ்வாறு அடிமைகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் (பெரும்பாலோனோர் இந்துக்கள்) ஸ்ரீரங்கபட்டணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சுன்னத் செய்யப்பட்டுப் பின்னர் மாட்டிறைச்சியை உண்ணும்படி செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்பட்டார்கள்.

இஸ்லாமிய வரலாற்றாசிரியரான கிர்மானி, அவரது நிஷான்-இ-ஹைதரியில், கூர்க்கைச் சேர்ந்த 70,000 இந்துக்கள் வாள்முனையில் திப்பு சுல்தானால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.”

ஃப்ரெஞ்சு வரலாற்றாசிரியரான அலெய்ன் டானெயலு, இந்தியாவின் இஸ்லாமிய ஆக்கிரமிப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், “இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் 632-ஆம் வருடம் இந்தியாவைக் கைப்பற்றிய காலம் தொட்டு, இந்திய வரலாறு கொலைகளாலும், படுகொலைகளாலும், அழிவுகளாலும், பேரழிவுகளாலும் துயறுற்றது” என்கிறார். “புனிதப் போர் (ஜிகாத்) என்னும் மூடத்தனத்தால் உலகின் பல அற்புதமான கலாச்சாரங்களையும், பல இன மக்களையும் இக் காட்டுமிராண்டிக் கூட்டம் அழித்தது” எனத் தொடரும் அலெய்ன் டானெயெலு, “முகமது கஜினி என்னும் தற்குறி மதுராவின் 1018 இந்து ஆலயங்களை எரித்ததுடன், கன்னோஜை தரைமட்டமாக்கி, காலம் காலமாக இந்துக்களின் புனிதத் தலமாகப் புகழ்பெற்ற சோம்நாத் ஆலயத்தையும் தகர்த்தெறிந்தான். அவனைத் தொடந்து வந்தவர்களும் இதற்குச் சளைத்தவர்களில்லை. வாரணாசியின் 108 கோவில்களையும், பல அற்புதமான அரண்மனைகளையும் புனிதப் போரின் பேரால், தங்களின் மதவெறியினால் இடித்துத் தகர்த்தார்கள்.”

அமெரிக்க வரலாற்றாசிரியரான வில் துராண்ட் (Will Durant), இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய படுகொலைகளே உலக வரலாற்றில் மிகக் கொடூரமானது (bloodiest in history) எனக் கணிக்கிறார். “இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களும், கல்வியாளர்களும் இந்துக்கள் கொல்லப்படுவதையும், இந்துப் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் அடிமைகளாக பிடித்துச் சென்று அடிமைச் சந்தையில் விற்பதனையும், இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு பல இலட்சக்கணக்கான இந்துக்கள் வாள் முனையில் மதமாற்றம் செய்யப்பட்டதையும் மிகப் பெருமையுடனும், தாங்கொனாத மகிழ்ச்சியுடனும் எழுதிச் சென்றிருக்கிறார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.

இதுபோன்ற மனோவியாதி பிடித்த இஸ்லாமிய பயங்கரவாதம் இந்திய காஃபிர்களின் மீது நடத்திய பேரழிவுகளைப் பற்றிய குறிப்புகள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அகற்றப்படும்வரையிலும் தொடர்ந்து குறிக்கப்பட்டு வந்திருக்கிறது. முகமது-அல்-குஃபி, அல்-பிலாதுரி, அல்-உத்பி, ஹசன் நிஜாமி, அமிர்-குஸ்ரு, ஜியாவுதீன் பரானி போன்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின் குறிப்புகள் இன்றைக்கு கிடைக்கும் ஆதாரங்களாகும்.

இந்து காஃபிர்களுக்கு எதிராக இந்தியாவில் நடந்த படுகொலைகளுக்கும், பேரழிவுகளும், அவர்களின் வழிபாட்டிடங்களின் மீது நடந்த தாக்குதல்களுக்கும் இணையாக உலகில் வேறெங்கிலும் இன்றுவரை நடந்ததில்லை என்பதே உலக வரலாற்றாசிரியர்களின் பெருவாரியான முடிவு.

இந்தியாவில் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு மத்திய ஆசியா நோக்கி நடத்திச் செல்லப்பட்ட பெருவாரியான ஹிந்துக்கள் ஆஃப்கானிஸ்தானத்தின் மலைகளைக் கடக்கையில் குளிர் தாளாமால் இறந்து போனார்கள். அதன் காரணமாகவே ஆஃப்கானிஸ்தானத்து மலைகள் “ஹிந்து குஷ் (hindu killers or slayer of hindus) என்று பெயரிடப்பட்டன. இதனைக் குறித்து எழுதும் இப்ன்-பதூதா, “இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைச் சிறுவர்களும், சிறுமிகளும் அந்த மலைகளைக் கடக்கையில் பனியிலும், குளிரிலும் சிக்கி இறந்து போனார்கள்” என்கிறார்.

ஆஃப்கானிஸ்தானத்து மலைகளில் எத்தனை இந்துக்கள் உறைந்து இறந்தார்கள் என்னும் கணக்கு தெரியவில்லை. ஆனால் கொண்டு செல்லப்பட்டவர்களின் ஏராளமான எண்ணிக்கை காரணமாக, பெரும்பாலோர் உயிரிழந்தாலும், அதில் தப்பி உயிர் பிழைத்தவர்களுக்கு மத்திய ஆசிய அடிமைச் சந்தையில் கணிசமான விலை கிடைத்தது என்று குறிப்பிடுகிறார் மூர்லண்ட் என்னும் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்.

(தொடரும்)

3 Replies to “வன்முறையே வரலாறாய்… – 13”

  1. இந்த வரலாற்றைப்பற்றி நான் எந்த ஒரு இந்துவிடம் சொன்னாலும், “நாம் பழைய கதையையே சொல்லிக்கொண்டு இருக்கக்கூடாது. இது மத விரோததத்தைத் தூண்டும்!” என்ற ஒரே பதிலைச் சொல்கிறார்கள்.

    “ஹோலோகாஸ்டை யூதர்கள் மறப்பதில்லை, மறக்கவிடுவதும் இல்லை. ஏனென்றால், திரும்ப ஒரு ஹோலோகாஸ்ட் நடக்கக் கூடாது என்பதில் யூதர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அதுபோல, இந்த வரலாறை நாம் திரும்பத் திரும்பச் சொல்வது மூலம், இந்த மாதிரித் துயர்கள் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.” என்று நான் சொன்னால் அந்த இந்து நண்பர்கள் ஏற்க மறுக்கிறார்கள்

    . முஸ்லிம்கள் இந்துக்களுக்குச் செய்த கொடுமையைவிட, இந்துக்களே, இவ்வாறு செய்வதுதான் மிகவும் கொடுமை ஆகும். நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட இந்துக்களை நினைந்து விட்டால்! திரு. ரூபன் அவர்களே, உங்கள் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள். அப்படியாவது, கல்லாகிவிட்ட இந்துக்களின் நெஞ்சம் இளகுகிறதா என்று பார்ப்போம்!

  2. திப்பு மேல்கோட்டையில் தீபாவளி அன்று அய்யன்கார்களைக் கொன்றதால், அவர்கள் இன்றும் தீபாவளி கொண்டாடுவதில்லை.

  3. ungaludaiya manonilaiyil than nanum irukkiren mr. arisonan ivarkalukku eppadi puriyavaipathu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *