மாங்கனி தந்த அம்மை

முக்கனிகளில் ஒன்றாகப் போற் றப் படும் பெருமை யுடையது மாங்கனி. மாங்கனியின் நிறமும் சுவையும் எவரையும் அதைச் சாப்பிடத் தூண்டும். அப்படிப் பட்ட மாங்கனி தனக்குக் கிடைக்க வில்லை என்ற கோபத்தால் தானே குமரன் கோபித்துக் கொண்டு மலை மேல் ஏறி நிற்கிறான்? மாங்கனியால் விளைந்த பூசல்கள் தான் கொஞ்சமோ?

The physician or health care professional must be aware that any concerns about interactions of the medicines with each other can lead to a drug to drug interaction. I have been https://ondamarina.net/homepage/microsoftteams-image-4/ taking the lowest possible dose on the label. The most important thing in medicine is to understand the underlying reasons for your child's health problems and the treatment for these disorders.

What mamofen 20 price in india i'm not even sure if the next two years will be the last for us. He said the company could have made his comment less insulting by not mentioning her Minsk at all. Funiculata* adults were cultured on ivermectin, the lc~50~ value was determined by measuring the average number of dead adults after 24 hours of exposure to ivermectin.

It is important that you know that you can use this lawyer to your advantage and you may even get more for the cost of hiring a lawyer with this firm as compared to the cost of hiring a lawyer with another firm. The side effects that you might experience from dapoxetine in egypt, buy dapoxetine in drowsily the u. The above-mentioned are two very important points, particularly when trying to find the best time to take clenbuterol intensive.

புராண காலத்திலும் சங்ககாலத் திலும் பின் வந்த பக்திக் காலத்திலும் மாங்கனியால் விளைந்த பூசல்கள் ஒவ்வொரு விதமான விளைவுகளை ஏற்படுத்தின. அவற்றைப் பார்ப்போம்.

shiva_parvati_ganesha_muruga_mangoபழம் நீ (பழநி)

ஒரு சமயம் கயிலையில் சிவ பெருமான் உமையம்மையோடு வீற்றிருந்த பொழுது, நாரதர் அங்கே வந்தார். நாரதரோடு கலகமும் சேர்ந்து தானே வரும்? இந்தத் தடவை கலகம் மாங்கனி வடிவில் வந்தது. நாரதர் ஒரு பெரிய மாங்கனியை ஐயன் கையில் கொடுத்தார்.அந்த மாங்கனியைப் பார்த்த விநாயகர், முருகன் இருவரும் தங்களுக்கே அந்தக் கனி வேண்டும் என்றனர்.

உடனே ஐயன் இருவரையும் பார்த்து, “உங்களில் யார் உலகை முதலில் சுற்றி வருகி றார்களோ அவருக்கே இந்தக் கனி என்று பந்தயம் வைத் தார். இதைக் கேட்ட முருகன் இவ்வளவு தானே, இப் பொழுதே ஒரு நொடியில் உலகை சுற்றி வந்து மாங்கனி யைப் பெறுவேன்” என்று தன் வாகனமான மயிலில் ஏறி புறப்பட்டான். தனது வாகனமான மூஞ்சூறி ஏறி உலகை வலம் வர முடியாது என்பதை உணர்ந்த விநாயகர் ஒரு யோசனை செய்தர்.

அம்மை அப்பனை மும்முறை வலம் செய்தார். “ஐயனே உலகை விட தாய் தந்தையர் கள் தானே பெரியவர்கள்? அதனால் உங்கள் இருவரையும் வலம் வந்ததால் இந்த உலகையே வலம் வந்த்தாகத் தானே பொருள்? அதனால் எனக்கே இந்த மாங்கனியைத் தர வேண்டும் என்று வாதாடினார். விநாயகர் சொல்வதில் ஆழந்த பொருள் இருப்பதால் அவருக்கே அந்த மாங்கனி யைக் கொடுத்தார் ஐயன்.

உலகைச் சுற்றி விட்டு வந்த முருகன் விநாயகர் கையில் மாங்கனி யிருப்பதைக் கண்டு மிகவும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தான். தான் ஏமாற் றப் பட்டு விட்டதாகக் கோபம் அடைந்து மலையில் ஏறிக் குடி கொண்டான். பழம் காரணமாகக் கோபம் கொண்டு அமர்ந்த மலை பழனிமலை யாயிற்று. “முருகா, நீயே ஞானப் பழம் தானே? என்று அன்னையும் அப்பனும் சமா தானம் செய்ததார்கள். முருகன் அமர்ந்த மலை அறுபடை வீடுகளுள் ஒரு படை வீடானது! இப்படி ஐயன் குடும்பத் தில் மாங்கனியின் காரணமாக ஒரு கலகம் பிறந்து ஒரு படைவீடு உருவானது!

பெண்கொலை புரிந்த நன்னன்

சங்க இலக்கியத்தில் ஒன்றான குறுந்தொகையின் மூலம் நன்னன் என்ற மன்னனைப் பற் றிய விபரம் காணக் கிடைக்கிறது. ஒரு மாங்கனியின் காரணமாக ஒரு கோசர் குடிப் பெண் ஒருத்தி மரண தண்டனை அடைந்தாள்!

நன்னனுடைய காவல் மரத்து மாங்கனி ஒன்றை ஆற்று வெள்ளம் அடித்துக் கொண்டு வந்த்து. அது இன்னாருடையது என அறியாமல், ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த கோசர் குடிப் பென் அதை எடுத்துத் தின்று விட்டாள். இதை அறிந்த நன்னன் அப்பெண்ணுக்குக் கொலைத் தண்டனை விதித்தான். கோசர் குடியினர் நன்ன னிடம் முறையிட்டனர்.

மன்னனுடைய மரத்தின் பழத் தைத் தின்ற தவறுக்காக அவளுடைய எடைக்கு எடை பொன்னும் 81 யானைகளும் தண்டமாக ஏற்றுக் கொண்டு அவளை விட்டு விடும்படி மன்றாடினார்கள். ஆனால் நன் னன் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்காமல் அப்பெண் ணைக் கொன்று விட்டான். அதனால் புலவர்கள் இவனைப் பெண் கொலை புரிந்த நன்னன் என்று குறிப்பிடுகிறார்கள்.

மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல

என்று அவன் செய்த தீமையைப் பாட்டிலும் பதித்தார்கள. அது மட்டுமல்ல இனி அம்மன்னனையும் அவன் குடித் தோன்றல்களையும் தமிழால் பாட மாட்டோம் என்று சபதமே செய்தார்கள். ஒரு மன்னனுக்கு இதை விட அவ மானம் வேறொன்றுமே இல்லை. அக்கால மன்னர்கள் சூளுரைக்கும் போது புலவர்கள் என்னைப் பாடாதொழிக என்று தான் சூளுரைப்பார்கள். இதுவும் மாங்கனியால் விளைந்த கலகம் தான.

புனிதவதி

அடுத்த படியாக காரைக்கால் என்ற ஊரில் புனிதவதி என்ற பெண்ணின் வாழ்க்கை யையே புரட்டிப் போட்ட மாங்கனியைப் பார்ப்போம். புனித வதி என்ற பெண் பேயுருக் கொள்ளவும் மாங்கனியே கார ணமாக அமைந்தது. ஏன் அப்படி? அவள் செய்த குற்றம் தான் என்ன? கோசர் குடிப் பெண்ணுக்கு மரண தண்டனை வாங்கித் தந்த மாங்கனி வணிகர் குடிப் பிறந்த பெண்ணை பேயுருவாக்கி விட்டது!

ஆனாலும் அப்பெண் நாயன்மார் களுள் ஒருவராக வைத்துப் பேற்றப் படுகிறார் ”தாயுமிலி தந்தையிலி தான் தனியன்” என்று போற்றப்படும் சிவபெரு மானாலேயே “அம்மை“ என்று அழைக்கப்படும் பேற்றை யும் பெற்று விட்டாள். ஐயன் ஆடும் ஆடலை அவன் அடிக் கீழிருந்து காணவும் அங்கேயே அமர்ந்திருக்கும் பேற் றையும் பெற்றிருக்கிறாள்.தேவார மூவருக்கும் முன்னோடி யான இவர் பக்தி இலக்கியத்தின் உச்சத்தையே தொட்டி ருக்கிறார். முதன் முதலாக அந்தாதி பாடிய பெருமையும் இவருக்கு உண்டு. மூன்று பெண் நாயன்மார்களுள் மூத்த வர். இவ்வளவு பெருமைகளைக் கொண்ட இவர் வரலாற் றைப் பார்ப்போமா? காரைக்கால் செல்வோம்.

புனிதவதியின் இளமைப் பருவம்

நீர்வளம் நிலவளம் செல்வ வளம், குடிவளம் நன்மக்கள் வளம் முதலிய வளங்கள் எல்லாம் ஒருங்கு சேரப் பெற்ற காரைக்கால் என்னும் ஊரில் வணிகர் குலத் தலைவராக விளங்கியவர் தனதத்தர். பெயருக்கேற்ப செல்வம் மிகுந்த அவருக்கு லக்ஷ்மி தேவியே வந்து அவதரித்தாள் என்று சொல்லும் படி புனித வதி என்ற பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை வளர்ந்து வரும் போதே நடராஜப்பெருமான் மேல் பக்தியும் வளர்ந்தது. சிவபெருமா னுடைய திருத் தொண்டர்கள் தங்களுடைய திரு மாளி கைக்கு வருகை தரும் போது அவர்களை விழுந்து வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெறுவாள் புனிதவதி.

புனிதவதி தக்க பருவம் அடைந்ததும் அவளைப் பெண் கேட்டுப் பலரும் வந்தனர். நாகப்பட்டணம் என்ற ஊரில் இருக்கும் நீதிபதி என்ற வணிகரின் புதல்வனாகிய பரமதத்தன் என்பவனுக்குப் புனிதவதியைப் பெண்பேசி முடித்தார்கள். பிறகு ஒரு நல்லநாளில் “களி மகிழ் சுற்றம் போற்றத் தளிரடி மென் நகை மயிலான புனிதவதியை பரமதத்தனுக்குத் தாரை வார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள். மணமக்கள் இருவரும் வாழ்க்கை நடத்து வதற்கேற்ற ஒரு மணிமாடத்தையும் தனதத்தன் தன் மக ளுக்களித்தான். தம்பதிகள் இருவரும் கருத்தொருமித்து வாழ்க்கை நடத்தி வந்தார்கள். சிவனடியார்கள் வந்தால் அவர்களை வரவேற்று உபசரித்து நல்ல உணவும், உடை யும், பொன்னும்,மணியும் கொடுத்து அவர்களை உபசரித்து வழியனுப்புவதைத் தன் கடமையாகக் கொண்டிருந்தாள் புனிதவதி.

மாங்கனி செய்த அற்புதம்

karaikkal-ammaiyar1ஒருநாள் பரமதத்தனைச் சந்திக்க வந்த சிலர் இரண்டு மாங்கனிகளை அவனிடம் கொடுத்தார்கள். அவனும் அக்கனிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தான். புனிதவதி அவற்றை உள்ளே வைத்து விட்டுத் தன் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் சிவனடியார் இருவர் வரவே அவரை வரவேற்று உபசரித்தாள். சிவனடியார் மிகவும் பசியோடிருப்பதை அறிந்த புனிதவதி நாதன் அடியாரைப் பசி தீர்ப்பேன் என்று எண்ணி வாழையிலை போட்டு அறுசுவை உணவைப் பறி மாறினாள். ஆனால் கறியமுது தயாராகவில்லை. வந்த சிவனடியாரின் பசியை உணர்ந்த அவளுக்குக் கணவன் கொடுத்தனுப்பிய மாங்கனி நினைவிற்கு வரவே பெரிதும் மகிழ்ந்து அடியவருக்கு அதைப் படைத்தாள்.

வந்த சிவனடியாரும் தன்னை வாட்டிய பசி நீங்கப் பெற்ற மகிழ்ச்சியோடு புனிதவதியை மனமாற வாழ்த்தி விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் பரமதத்தன் பகல் உணவு உண்ண வீடு வந்தவன் குளித்து விட்டு சாப்பிட உட்கார்ந்தான். கணவனுக்கு அறுசுவை உண்டிகளோடு மீதமிருந்த ஒரு மாங்கனியையும் வைத் தாள். பரமதத்தன் அக்கனியை ஆவலோடு சாப்பிட்டான். அக்கனி மிகவும் ருசியாக இருந்ததால் மற்றொரு கனி யையும் கொண்டு வரும்படி கேட்டான். இதை எதிர்பார்க் காத புனிதவதி அதை எடுத்துக் கொண்டு வருபவர் போல உள்ளே சென்றாள். திடும் என்று இன்னொரு மாங் கனிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறாள். துன்பம் வந்த சமயத்தில் விடையேறும் பெருமானையன்றி யார் உதவுவார் என்று தெளிந்து அவரைத் தியானித்தாள். என்ன அதிசயம்! விடையேறும் பெருமான் அருளால் அவள் கையில் அதிமதுர மங்கனி ஒன்று வந்தது. வந்த மாங்கனியைக் கொண்டு வந்து கணவனுக்குக் கொடுத் தாள். அந்த மாங்கனியை உண்ட பரமதத்தன் அது முந்திய மாங்கனியை விடப் பலமடங்கு ருசியாக இருப் பதை உணர்ந்தான்.

“இந்த மாங்கனி நான் கொடுத்தனுப்பிய மாங்கனி அன்று. இதன் ருசி வேறாக இருக்கிறது. மூன்று உலகங்களிலும் இது போன்ற மாங்கனி கிடைப்பதரிது. இதை எங்கே வாங்கினாய்?” என்று கேட்க புனிதவதி திகைத்துப் போனாள். என்றாலும் நடந்ததை நடந்தபடி சொல்வது தன் கடமை என்று உணர்ந்து உண்மையைச் சொன்னாள்.

ஆனால் பரமதத்தன் இதை நம்பத் தயாராக இல்லை. ”இக்கனி ஈசன் அருளால் கிடைத்த தென்றால் இதே போன்ற இன்னொரு கனியை வரவழைத்துக் கொடு” என்றான். இதைக் கேட்ட புனிதவதி, இது என்ன சோதனை? என்று கலக்கமடைந்தாள். என்றா லும் நாகாபரணனான பெருமானை வணங்கி, “ஐயனே! நீர் மாங்கனியை அளித்தருளவில்லை யென்றால், நான் சொன்ன வார்த்தைகள் பொய் வார்த்தைகளாகி விடுமே!” என்று வேண்ட, ஐயன் அருளால் ஒரு மாங்கனி வர, புனித வதி அந்த மாங்கனியை பரமதத்தனிடம் கொடுத்தாள்.

புனிதவதியை நீங்குதல்

கனியை வாங்கிய பரமதத்தன் வியப்பும் அச்சமும் ஒரு சேர திகைத்து நின்றான். இது வரை தான் பார்த்து வந்த புனிதவதி சாமானியப் பெண் அல்லள்.இவள் ஒரு தெய்வத் தன்மை வாய்ந்த பெண்மணி என்று உணர்ந்தான். தன் கையில் கிடைத்த அக்கனி திடீ ரென்று மறைய தெய்வத்தன்மை வாய்ந்த புனிதவதியோடு இல்லறம் நடத்துவது கடினம் என்று புரிந்து கொண்டான். எனவே அவளைத் துற்ந்து செல்ல நிச்சயித்தான்.

அதற்காக, ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முது மொழிக்கிணங்க கடல் கடந்து சென்று செல்வம் ஈட்டிக் கொண்டு வருவேன் என்று தீர் மானம் செய்தான். மரக்கலம் தயாரானவுடன் கலங்கள் நிறையப் பொருட்களை ஏற்றிக் கொண்டு பல இடங்களுக் கும் சென்று வாணிபம் செய்த பின் பாண்டி நாட்டிலுள்ள நாகப்பட்டணத்தை அடைந்தான். நாகப் பட்டிணத்தில் மிக வும் நன்றாக வாணிபம் செய்து செல்வத்தைப் பெருக்கி னான். அவ்வூரில் பேரும் புகழும் பெற்றபின் ஒரு வணிகர் மகளைத் திருமணம் செய்து கொண்டு இல் வாழ்க்கை நடத்தி வந்தான். புனிதவதியைப் பற்றிய எந்த ஒரு விஷய மும் வெளியில் தெரியாதபடி எச்சரிக்கையாக நடந்து கொண்டான். காலம் செல்லச் செல்ல இரு நிதியமும் பெற்ற குபேரன் என்று சொல்லும் படி செல்வம் சேர்ந்தது. திருவிளக்குப் போல தங்களுக்குப் பிறந்த குழந் தைக்கு புனிதவதியின் மேலிருந்த பக்தி, மரியாதையின் காரணமாக அவள் பெயரையே வைத்து அருமையாக வளர்த்து வந்தான். பரமதத்தன் இவ்வாறு மனைவி மகளோடு பேரும் புகழுமாக வாழ்ந்து வந்த காலத்தில் காரைக்காலில் புனிதவதி, தனதத்தன் மகளாக தன் கண வன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

கடல் மேல் சென்ற பரமதத்தன் பாண்டிநாட்டில் பேரும்புகழுமாக குபேரன் ோ்வாழ்ந்து வருகிறான் என்று பலரும் சொல்லக் கேட்ட புனிதவதியின் உறவினர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். புனிதவதியின் உறவினர்கள் ஒன்று கூடி புனிதவதியைப் பரமதத்தனிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஒரு நல்ல நாளில் திருமகள் போன்ற புனிதவதியை மாமணிச் சிவி கையில் ஏற்றி நாகப்பட்டணத்தை அடைந்தார்கள். பின்

தாங்கள் புனிதவதியோடு வந்திருக்கும் செய்தியைப் பரமதத்தனுக்கு அறிவித்தார்கள். செய்தியை அறிந்த பரம தத்தன் அச்சம் அடைந்தான். தன் மனைவியோடும் மக ளோடும் புனிதவதியை சந்திக்க விரைந்தான். புனிதவதி யைக் கண்டதும் மனைவி மகளோடு அவள் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.”தங்கள் திருவருளால் நான் இங்கு வாழ்ந்து வருகிறேன். என்னுடைய மகளுக்குத் தங்கள் திருநாமம் இட்டு வளர்க்கிறேன்” என்றான்.

இதைக் கண்ட உறவினர்கள் திகைப்படைந்தார்கள். “இது என்ன காரியம்? நீ ஏன் உன் மனைவியை வணங்குகிறாய்?” என்று கேட்டார்கள். உடனே பரமதத்தன்,

”மானுடம் இவர்தாம் அல்லர்
நற்பெருந் தெய்வம் ஆதல்
நான் அறிந்து அகன்ற பின்பு
பெற்ற இம்மகவு தன்னைப்
பேரிட்டேன் ஆதலாலே
பொற்பதம் பணிந்தேன் நீரும்
போற்றுதல் செய்மின்”,

என்றான்.

karaikkal_ammaiyarபேய்வடிவம் வேண்டுதல்

பரமதத்தன் இப்படிப் புனித வதியாரின் தெய்வத் தன்மையைப் பற்றிச் சொல்லக் கேட்டதும் உறவினர்கள் இது என்ன அதிசயம் என்று வியந்து நின்றார்கள். புனிதவதி என்ன செய்தாள்? இனியும் இவனுக்காக இத்தனை நாள் சுமந்து கொண்டிருந்த இந்த அழகையும் தசைப் பிண்டமான் இந்த உடலையும் நீக்கி விட வேண்டும் என்று முடிவெடுத்தாள். ஆலங்காட்டு அப்பனிடம் அப்பனே! உன் தாள்கள் போற்றும் பேய் வடி வத்தை எனக்கு அருள வேண்டும்” என்று வேண்டினாள்

என்ன ஆச்சரியம்! அப்பொழுதே ஊனுடை வனப்பை எல்லாம் உதறி வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் எலும்புடம்பானார். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். வான துந்துபியின் நாதம் உலகமெல் லாம் நிறைந்தது. பூத கணங்கள் கூத்தாடின. ஆனால் உற வினர்கள் அச்சத்தோடு புனிதவதியாரை வணங்கிவிட்டுச் சென்று விட்டார்கள்.

பேய் பாடிய பாடல்கள்

பேயுருக் கொண்ட புனிதவதி யார் உமையொரு பாகனை “அற்புதத் திருவந்தாதி” என்ற நூறு பாடல்களால் துதிக்கலானார். ”செய்ய பொற்பாதங்கள் போற்றும் நற்கணத்தில் நானும் ஒன்றானேன்” என்று பாடிப் பரவினார்.

பெறினும் பிறியாதும் வேண்டேம் நமக்கீது
உறினும் உறாது ஒழியுமேனும் – சிறிதுணர்த்தி
மற்றொரு கண் நெற்றிமேல் வைத்தான் தன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்

என்று அற்புத்த் திருவந்தாதியில் குறிப்பிடுகிறார். இதன் பின் “திரு இரட்டை மணிமாலை” என்னும் பிரபந்தத்தை யும் பாடியருளினார். புனிதவதியாரின் பேயுருவத்தைக் கண்டவர்கள் அதிசயமும் அச்சமும் அடைந்தார்கள். ஆனால் அவரோ

அண்டர் நாயகர் என்னை அறிவரேல்,
அறியா வாய்மை
எண்டிசை மாக்களுக்கு யான்
எவ்வுருவாய் என்? என்பார்.

கயிலாய யாத்திரை

புனிதவதியார் பேயுருவோடு வட திசையிலுள்ள பல இடங்களுக்கும் யாத்திரையாகச் சென்றார். எல்லா இடங்களையும் கடந்த பின் சூலபாணி யார் வீற்றிருக்கும் கைலை மலையை அடைய எண்ணி னார். ஐயன் வீற்றிருக்கும் மலையைக் காலால் மிதிக்கலா காது என்று காலால் நடப்பதை விட்டுத் தலையால் நடக்க லானார். இப்படித் தலையால் நடந்து கைலை மலையின் உச்சியை அடைந்தார்.

அப்பனுக்கு அம்மையானது

இப்படித் தலையால் நடந்து சென்று கைலை நாதன் இருந்த வெள்ளிமலையில் ஏறும் போது எலும்பு உருவத்தோடு வரும் இவரைக் கண்ட இமயவல்லியாம் அம்பிகை இவரைக் கவனித்தார். உடனே வியப்புடன் ஐயனிடம், “தலையினால் நடந்து இங்கு ஏறும் இவ்வதிசயமான வடிவுடைய இவர் யார்? இவர் அன்பு, பக்தியை என்னென்பது! என்று வியந்தார்.

karaikkal_ammaiyarஇதைக் கேட்ட ஐயன், “உமா தேவியே! வரும் இவள் நம்மைப் பேணும் அம்மைகாண், மற்று இப்பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள்” என்று சொல்லி விட்டு “என்னுடைய அம்மையே! என்று புனிதவதியாரை அழைத்தார்.

ஐயன் அம்மையே என்ற ழைக்க அம்மையும் ”அப்பா!” என்று ஐயன் பாதங்களில் வீழ்ந்து பணிந்தார். உடனே ”அம்மையே! நம்பால் வேண்டுவது என்ன?” என்று அருள் செய்தார். அம்மை என்ன வேண்டுகிறாள் என்று பார்ப்போம். பொன்னும் பொருளும் போகமும் வேண்டுகிறாளா? இல்லை. பின் என்ன வேண்டினாள்? பார்ப்போம்

குறையாத அன்பு வேண்டும். பிறவாமை வேண்டும். அப்படி ஒருவேளை பிறக்க நேர்ந் தால் என்ன செய்வது? அப்படிப் பிறக்க நேர்ந்து விட்டால், ஐயனே உன்னை என்றும் மறவாமல் இருக்கும் படி செய்ய வேண்டும். இன்னும் ஒன்று வேண்டுமாம். அது என்ன? நான் ஐயனே நீ ஆடும்போது நான் உன்னடிக்கீழ் இருக்க வேண்டும் உன்னைப் போற்றிப் பாட வேண்டும் என்கிறாள்.

இறவாத இன்ப அன்பு வேண்டிப்
பின் வேண்டுகிறார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும், இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா, நீ ஆடும் போது உன்அடியின் கீழிருக்க”

என்றார்.

அம்மையின் வேண்டுகோளைக் கேட்ட ஐயன், அம்மை கேட்ட வரங்களை அருளினான். மேலும் ”திருவாலங்காட் டில் நாம் ஆடும் ஆடலைக் கண்டு ஆனந்தமடைந்து எப் போதும் நம்மைப் பாடுவாய்” என்றும் அருள் செய்தான். காரைக்கால் அம்மையும் கைலாச மலையிலிருந்து தலை யாலே நடந்து வந்து திருவாலங்காட்டில் ஊர்த்வதாண்டவ மூர்த்தியைத் தரிசித்து அவருடைய குஞ்சித பாதத்தின் கீழ் சிவானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்.. இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். ஐயனின் ஊர்த்வதாண்டவத்தைக்கண்டதும் “கொங்கை திரங்கி” என்று தொடங்கும் திருவாலங்காட்டுப் பதிகம் பாடினார்.

கயிலை நாதனாலேயே அம்மை என்றழைக்கப்பட்ட பெருமையையுடைய காரைக்கால் அம்மையார் ஐயனின் குஞ்சிதத் திருவடிகளின் கீழ் இன் றும் வீற்றிருக்கிறார். அவருடைய பெருமையை யாரால் அளவிடமுடியும்?

3 Replies to “மாங்கனி தந்த அம்மை”

  1. அன்புள்ள அம்மா,
    தங்கள் கட்டுரைகள் கருத்துச் செறிவுடன், இலக்கிய நயமும் மிகுந்து அழகுற வரையப் படுகின்றன. ‘கை கொடுத்த காரிகையர்’ என்று வரிசையாகத் தாங்கள் எழுதி வரும் கட்டுரைகளைப் படித்து இன்புற்று வருகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்க தங்கள் தமிழ்ப்பணி. வணக்கம்,
    மீனாட்சி பாலகணேஷ்

  2. எளிய தமிழில் குழந்தகளும் புரிந்துகொள்ளும் வண்ணம் அழகோவியம் தீட்டி இருக்கிறீர்கள் அம்மா! தங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை ஏத்துகிறேன். தங்களது தீந்தமிழ்க் கதைகளைத தமிழ்ப் பாடப் புத்தகத்தில் சேர்க்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

  3. There is a temple of Karaikkal ammaiyar at Kariakkal and maangani thiruvizha is celebrated grandly at karaikaal every year. you can get the divine feeling once you enter the temple premises.

Leave a Reply

Your email address will not be published.