தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா?

2014 செப்டம்பர் மாதம் 27ந் தேதி தமிழகத்தின் முதல்வராக இருந்து  ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையின் காரணமாக, முதல்வர் பதவி பறிபோனது மட்டுமில்லாமல், தனது சட்ட மன்ற உறுப்பினர் பதவியையும் இழந்து விட்டார்.  செம்படம்பர் மாதம் முதல் 2015 துவக்க காலம் வரை தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது, இம்மாதிரியான கேள்வி எழ முக்கிய காரணம், தமிழகத்தின் முதலவராக பதவி ஏற்ற திருவாளர் பன்னீர்செல்வம், இன்னும் தன்னை ஒரு நிதி அமைச்சரகவோ கருதுவதால் ஏற்படும் பிரச்சனையாகும்.

When you purchase viagra over the counter in a medical store in australia it should be noted that you can not just be certain that your prescription is legal and you can not be sure and you can be confident in your choice to purchase viagra over the counter in a medical store. Before you take any lexapro to work, you must ask yourself whether the medication will clomid 50mg price in uk Si Sa Ket help you. The nurse does the same exact procedure as the patients.

Nolvadex is used in treating certain types of pain. After a lot of research and looking for the right Puri product i. It can be done by yourself, but if you are looking for a little.

Prednisolone can also be used to reduce the symptoms of allergic reactions, such as hay fever, asthma, and skin allergies. When the symptoms go away, how much does clomid cost in kenya you will notice the effect of the medication. Prednisone is an oral medication used to reduce fever, pain and inflammation.

jayalalithaசெல்வி ஜெயல்லிதாவிற்கு தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்வி குறியானது.  தினசரி பஸ் நிறுத்தம், கடையடைப்பு, கண்டன ஊர்வலம், கண்டன ஆர்பாட்டம் என அனைத்து தரப்பிலிருந்தும், ஆட்சியாளர்களின் கட்டாயத்தின் பேரில் நடத்தப்பட்டன.  இதில் பஸ் எரித்த சம்பவம், எதிர் கட்சியினர் மீது நடத்திய தாக்குதல் போன்றவை அடக்கமாகும்.  இது சம்பந்தமாக ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.  மக்களை காக்க வேண்டிய காவல் துறையினர், போராட்டகாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது இன்னும் கொடுமையிலும் கொடுமையாகும்.

அன்றாடம் தமிழகத்தின் ஏதே ஒரு பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடிப்பதும், பணத்துக்காக படுகொலை செய்வதும், திருடு, பிக்பாக்கட் அடிப்பது, அப்பாவி மக்களை கொல்வதாக மிரட்டுவது, போன்ற காரியங்கள் தினசரி நடக்கின்றன.  ஆனால் குற்றவாளிகள் பிடிபடுவதற்கு பதிலாக, அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் தண்டனையிலிருந்து விடுதலை பெற கோவில் கோவிலாக படியேறுவதும், பூசை புனஸ்காரங்கள் செய்வதும், அலகு குத்துவதும். மண் சோறு சாப்பிடுவதும் , பால் அபிசேஷகம் போன்ற காரியங்களில் மட்டுமே அதிக அளவில் ஈடுபாடு காட்டுகிறார்கள்.  முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் நால்வரணி மூத்த அமைச்சர்கள் தவிர, மற்ற அமைச்சர்கள் அனைவரும் புதன் கிழமை இரவானால் சென்னையிலிருந்து  சொந்த ஊருக்கோ அல்லது ஏதோ ஒரு ஊருக்கோ போகிறார்கள். இவர்கள் போதுவது மக்களின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு இல்லை, அல்லது திட்டத்தின் துவக்க விழாவும் கிடையாது. வழக்கில் சிக்கியிருக்கும், ஜெயல்லிதாவின் விடுதலைக்காக இந்த கோவிலில் இந்த அமைச்சர் தேர் இழுத்தார் என்றும், சிலர் யாகம் நடத்துவம் என்ற செய்திகள் மட்டுமே நாளிதழில் வருகிறது.  இது தான் இவர்களின் ஆட்சியின் லட்சனம்.  ஆகவே வாரத்தில் மூன்று நாட்கள் கூட அமைச்சர்கள் துறை வேலைகளை முழுமையாக பார்ப்பதும் கிடையாது, அது பற்றிய அக்கரையும் கிடையாது. இந்நிலையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பது பற்றிய விவாதமே நடைபெறுவதில்லை.

தமிழகத்தில் நக்சல்பாரிகளை ஒழித்து விட்டதாக மார்தட்டிய இந்த அரசு, தற்போது கேரள காவல் துறையினரின் உதவியுடன் நக்சல்பாரிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். 2007-ல் திருப்பூரில் கைது செய்யப்பட்ட வி.சுந்திரமூர்த்தி என்ற நக்சல்பாரியுடன் இருந்த மற்ற இருவரும் இன்னும் பிடிப்படவில்லை.  தப்பிய கார்த்தி மற்றும் ஈஸ்வரனை இந்த அரசு பிடிக்க்கூடிய நிலையில் கூட இல்லை என்றே கூறலாம்.

இதற்கு முன்பு, பா.ம.க. தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டபோது, நடந்த வன்முறை சம்பவங்களைப் பட்டியலிட்டு அப்போது எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கைகளும் இப்போது ஜெயலலிதா ஜெயிலுக்கு போனபோது நடந்த வன்முறை சம்பவங்களின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைளின் விவரங்களை உள்துறை அமைச்சகம் கேட்டிருக்கிறது. ‘ராமதாஸ் கைது செய்யப்பட்டபோது நடந்த வன்முறையுடன் ஒப்பிடும்போது ஜெயலலிதா ஜெயிலுக்கு போனபோது நடந்த வன்முறைகள் குறைவுதான்’ என்பது தமிழக போலீஸின் வாதம். ஆனால், இதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கவில்லை. 7 ஆயிரம் பேரை முன்னெச்சரிக்கையாக கைது செய்தோம் என்று தமிழக போலீஸ் சொல்வதையும் அவர்கள் ஏற்கவில்லை.’

”செப்டம்பர் 27-ம் தேதி முதல் 10 நாட்கள் வரை தமிழகத்தில் நடந்த வன்முறைகளுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதுதொடர்பாக  மத்திய அரசின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனைகளை நடத்தி வருகிறார்கள். இதெல்லாமே மத்திய உள்துறை அமைச்சகம் சாட்டையை எடுத்தபிறகு தான். தமிழக சட்டம் – ஒழுங்கு நிலவரத்தை முக்கியக் கட்சிகள்  ஆதாரங்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பி வருகிறார்கள். குறிப்பாக, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவை விமர்சித்து அ.தி.மு.க-வினர் தமிழகத்தின் சில இடங்களில் ஒட்டிய போஸ்டர்கள், அவரின் கொடும்பாவி எரிக்கப்பட்ட காட்சிகள்… ராஜ்நாத்துக்கு அனுப்பியது போலவே, நீதித்துறை வி.ஐ.பி-களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள். அந்த விவரங்களை டேபிளில் வைத்துக்கொண்டு, தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பலவித வினாக்களை எழுப்பியது.

‘தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி போன்ற பிஸியான ஏரியாக்களில் இடம் அனுமதி வழங்கியது எப்படி? அதனால், மக்கள் சிரமத்துக்கு ஆளானார்களாமே?’ என்று விளக்கம் கேட்டிருக்கிறது. இதற்கு முன்பு, இதுமாதிரி மற்ற கட்சியினர் நடத்தியபோதெல்லாம் ஊருக்கு வெளியே எங்காவது இடம் தருவார்கள். இப்போது சிறப்பு சலுகை காட்டப்பட்டிருக்கிறது எந்தவகையில் என்பதுதான் உள்துறையின் கேள்வி.’   ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.  அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆளும்கட்சியினர் வன்முறையை கட்டவிழுத்துள்ளனர்.  திமுக கட்சி அலுவலகங்கள், தலைவர்கள், நிர்வாகிகள் வீடுகள் மீது தொடர் தாக்குதலை அதிமுகவினர் தடையின்றி நடத்தி வருகின்றனர்.  பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டையும் தாக்கியுள்ளனர். பொதுமக்களின் உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

ஊடகங்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இவற்றை பொலிஸார் வேடிக்கை பார்த்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

தற்போது நடந்து வரும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு தொடர அனுமதிக்கப்பட்டால், பல சீரழிவுகள் ஏற்பட வழிவகுக்கும்.  இது பற்றிய சிந்தனை கூட அமைச்சர்களுக்கு கிடையாது.

panneerselvam_tn_cm       நாட்டின் மிக முக்கியத் தொழில் நகரங்களில் ஒன்றான திருப்பூரில் ஏற்கனவே கள்ளநோட்டு புழக்கம் அதிக அளவில் நடமாடுவதாக உளவுத் துறையினர்  தகவல்களை கொடுத்தாலும், கள்ள நோட்டு கும்பலை பிடிப்பதில் அக்கரை காட்டாத அரசு பன்னீர் செல்வம் அரசாகும்.  தற்போது கள்ள நோட்டுடன், போதைப் பொருட்கள் விற்பனை, நைஜீரியர்கள் அத்து மீறல், போன்ற சம்பவங்களுடன், வங்க தேசத்தை சார்ந்தவர்கள் சட்ட விரோதமாக குடியேறியும், பயங்கரவாத செயலுக்கு அச்ச மூட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த செயல்பாடுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய காவல் துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன.  அரசும் இதில் அக்கரை காட்டுவதாக தெரியவில்லை.

தமிழகத்தின் நிதி பிரச்சினையில் கூட இந்த அரசு அக்கரை காட்டியதாக தெரியவில்லை.  2014-2015-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், அரசுக்கு வரவேண்டிய பல்வேறு வருவாய்  இனங்களில் ரூ1,27,389 கோடி வரும் என்ற அனுமானத்தின் அடிப்படையில், நிதிநிலை அறிக்கை சமர்பிக்கப்பட்டது.  ஆனால் வரி வருவாயில் மட்டும் ரூ91,835 கோடி என கணக்கிட்டது, இது வரை வரவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.   75 சதவீதம் வரவேண்டிய வரி வருவாயில் ரூ68,724 கோடி என்ற கணக்கிற்கு மாறாக வெறும், 38530 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.  இதில் டாஸ்மாக் மூலமாக கிடைக்கும் ஆதாயமும் அடக்கம்.  பதிவு துறையில் 65 சதவீதம் கூட நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை.

பழைய வரி பாக்கிகளை வசூலிக்கவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும், அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.  சென்னை உயர் நீதி மன்றத்தில் 10,000க்கு மேற்பட்ட வரி சார்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டிய அரசு, உச்ச தூக்கத்தில் இருப்பதால் அரசுக்கு வர வேண்டிய சுமார் 20 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது.  இதன் காரணமாக பல்வேறு பிரச்சனைகளில் அரசு எடுக்க வேண்டிய உறுதியான நடவடிக்கைகள் கூட எடுக்க முடியாமல் திண்டாட்டத்தில் இந்த அரசு இருக்கிறது.  ஆகவே உண்மையில் தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

தமிழகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக, பிரச்சினையில் குளிர்காய பார்க்கிறார்கள்.  போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது ஊதிய உயர்வு சம்பந்தமாக ஒரு குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பற்றி அக்கரை இல்லாத இந்த அரசால், தீடீர் என போக்குவரத்து தெழிலாளர்கள் வேலை நிறுத்த்த்தில் ஈடுபட்டு, பொது மக்கள் தமிழகம் முழுவதும் அவதியுற்ற சம்பவத்தை கண்டும் கானமால் இருந்த அரசு இந்த அரசு.  தமிழக அரசின் மெத்தன போக்கே இதற்கு காரணம் என்பதை மறந்து விட்டு, 15 நாட்களுக்கு முன்னரே போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்தும், போக்குவரத்து துறை அமைச்சர் கோவிலை சுற்றி வந்தாரே தவிர பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை.  இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது.

மறுபுறம் கரும்பு விவசாயிகள் சென்ற ஆண்டு கொடுக்கப்பட்டதை விட டன் 1க்கு வழங்க்கும் தொகையில் ரூ450 குறைவாக கொடுக்க அரசு முன்வந்துள்ளதை கண்டு கொள்ளாத தமிழக முதல்வர்.  ஆவில் பாலில் ஊழல் ஈடுபட்ட கட்சியினரை காப்பதற்காகவே, அரசு அதிகாரிகளை மாற்றம் செய்த அரசு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்திய அரசு இந்த அரசு என்பதை மறந்து விடக் கூடாது.

மருத்துவ மனைகளில் பச்சிளம் குழந்தைகள் பரிதபமாக பலியனதை கண்டு கொள்ளாத அரசு இந்த அரசு.  மருத்துவ மனைகளில் உரிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் நியமிக்காமல் காலந் தாழ்த்தியதால் ஏற்பட்ட இழப்பு என்பதை கூட புரிந்து கொள்ளாத அரசு தான் இந்த அரசு. ஊழலுக்கு துணை போகும் அரசு இந்த அரசு, சட்டமன்றத்தில் முறையான விவாத்த்திற்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, சட்ட மன்ற தொடரையே மூன்று நாட்கள் மட்டுமே நடத்தி வரலாறு படைத்த அரசு இந்த அரசு. கனிம வள முறைகேடு சம்பந்தமாக விசாரனை நடத்த சகாயம் குழுவுக்கு எதிராக செயல்படும் பன்னீர் செல்வம் அரசு, உண்மையில் ஆட்சி புரிகிறதா என்பதே கேள்வி குறியாகும்.

ஒரு புறம் காவேரி பிரச்சினையில் தாங்கள் தான் அனைத்தும் செய்தோம் என்று கூறும் தமிழக அரசு, பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்ட முயலுவதை தடுப்பதற்கு பதிலாக, மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுகிறது.  தட்டுதடுமாறும் அரசு தமிழகத்தில் இருப்பதால், அண்டை மாநிலங்களான கேரள, ஆந்திரா, கர்நாடாக ஆகிய மூன்றும் தமிழகத்திற்கு வரவேண்டிய நீரை தடுக்கும் முகமாக தடுப்பணைகள் கட்டுவதை இந்த அரசு வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.  மைய அரசின் மீது குற்றம் சுமத்த மட்டுமே ஆட்சி புரிவாதாக தெரியும் இந்த அரசை வீட்டு அனுப்ப வேண்டும்.

3 Replies to “தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா?”

  1. மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதை விட “அம்மா”விடம் நல்ல பெயர் வேண்டுமே. அதற்கு தான் இவ்வளவு கஷ்டம்.
    ந. பரமசிவம்

  2. தேரை இழுத்து தெருவில் விடுவது ,யாகம் ,மண் சோறு ,பால் காவடி எல்லாம் காட்சியில் கண்ணீரும் ,கம்பலையுமாக களை கட்டுவது உண்மைதான் .அனால் அவர்கள் வெளியே சொல்பவைதான் உண்மையான காரணங்களா?என்ற சந்தேகம் எங்கும் உலவுகிறது .அனைவரும்’ வேடன் (வேடுவள்?)வாராத விருந்து திருநாள் போல ‘ஆனந்தித்து அலைகிறார்கள் !அவ்வப்போது கண்ணீர் வேடம் காட்டினால் போதும் .கல்லூரிஉதவி பேராசியர் பணியிடங்களை மூன்று வருடங்களாக நிரப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.ஜெயலலிதா இருந்த போதே இந்த இலட்சணம் தான்.

Leave a Reply

Your email address will not be published.