மண்ணுருண்டையா மாளவியா?

திராவிட கழகம் என்கிற பகுத்தறிவற்ற இனவாத அமைப்பு தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது.  இந்த அமைப்பு அவ்வப்போது தனது வரலாற்று அறிவின்மையை தம்பட்டம் போட்டு அறிவிக்கும்.  அது நகைசுவையாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டில் நிலவும் ஒரு விசித்திர மனோபாவம் என்னவென்றால் இப்படிப்பட்ட நகைசுவை உளறல்களை உண்மை என ஒரு கூட்டம் நினைத்துவிடுவதுதான். இல்லையென்றால் திராவிட இனவாதம் என்கிற சமூக நோய் இத்தனை தூரம் வளர்ந்திருக்குமா என்ன?  சரி விஷயத்துக்கு வருவோம்…  26-டிசம்பர்-2014  அன்று ‘விடுதலை’ என்கிற திராவிட இனவாத இணையதளத்தில் மதன் மோகன் மாளவியா அவர்களைக் குறித்து  ’யார் இந்த மண்ணுருண்டை மாளவியா’ என்கிற தலைப்பில் ஒரு அவதூறு கட்டுரை. அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை வசையின்றி தொகுத்தால் அதன் சாராம்சம் இதுதான்:

மதன் மோகன் மாளவியா சனாதன வைதீக இந்து மதத்தை காப்பாற்ற அகில பாரத இந்து மகாசபையை உருவாக்கியவர். அவர் வட்டமேசை மாநாட்டுக்காக கடல் கடந்து இங்கிலாந்து சென்ற போது இந்த தேசத்தின் மண்ணுருண்டையை கொண்டு சென்றார். எனவே அவர் மண்ணுருண்டை மாளவியா என அழைக்கப்பட்டார்.  தலித் மக்களின் ஆலய நுழைவு போராட்டத்தை  எதிர்த்தார். குழந்தை திருமணத்தை ஆதரித்தார். இவர் ஏற்படுத்திய பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஒரு  இந்து நிறுவனம் மட்டுமே. இப்படிப்பட்டவருக்கா பாரத ரத்னா கொடுப்பது?

இதை தமக்கே உரிய வசை பாணியில் எழுதியுள்ளது விடுதலை.

ஆனால் உண்மை என்ன?

அன்றைய தேதியில் சாதியக் கொடுமைகளை எதிர்த்த ‘மேல்சாதி’ எனப்படும் இந்துக்களில் பண்டித மதன் மோகன் மாளவியா போன்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு தாண்டி வந்து இன்று அவரது நிலைபாடுகளில் நாம் குறை கண்டுபிடிக்க முடியலாம். ஆனால் அன்று அவரது நிலைபாடுகள் புரட்சிகரமானவை. அதைவிட முக்கியமாக அவை யதார்த்த சூழல்களை கணக்கில் கொண்டு முற்போக்குத்தன்மையுடனும் மானுடத்தன்மையுடனும் அமைந்தவை.

1. மண்ணுருண்டையை தன்னுடன் எடுத்து போனார் மாளவியா.  ஏனென்றால் மனுஸ்மிருதி கடல்கடந்து போகக் கூடாது என்று சொல்லியிருக்கிறது. மனு ஸ்மிருதியில் இருப்பதாலேயே ஒரு விஷயம் கெட்டதாகிவிடாது. s8மனு ஸ்மிருதி என்பது ஏதோ பத்து கட்டளைகள் போல ஆண்டவன் மேலே இருந்து கொடுத்தது அல்ல. இங்கு நிலவிய சம்பிரதாயங்கள், பண்பாட்டு முறைகள், அரசியல், சமூக அடக்குமுறை இவை அனைத்திலிருந்தும் உருவானதுதான் மனு ஸ்மிருதி.  ஒருவன் தனது ஊரை விட்டு நாட்டை விட்டு போக கூடாது என்பது ஒரு விதி. இன்றைக்கும் ஊரில் கோவில் திருவிழா என்றால் அனைவரும் திரும்பி வந்துவிட வேண்டும்; கோவில் திருவிழாவுக்கு கொடிமரம் வைத்தால் பந்தல் கால் நட்டால் ஊருக்கு வெளியே போகக் கூடாது என்றெல்லாம் நம் நாட்டில் வழக்குமுறைகள் உள்ளன. இதன் ஒரு வெளிப்பாடே கடல் கடந்து செல்வதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு தடை. ஆனால் கல்விக்காகவும் தேச விடுதலைக்காகவும் மக்கள் நலனுக்காகவும் கடல் கடந்து செல்லும் போது பழமையை புதுமைக்காக எப்படி அழகுடன் வளைத்தெடுப்பது என்பதற்கு மாளவியா செய்த செயல் அருமையான எடுத்துக்காட்டு.  ஏன் கடல் கடந்து செல்லக் கூடாது? ஏனெனில் தாய்நாட்டின் மீது பிறந்த மண்ணின் மீது பாசம் வேண்டும். எங்கு சென்றாலும் இந்த மண்ணின் மைந்தன் நீ எனும் உணர்வு வேண்டும். அதை ‘சிம்பாலிக்’காக காட்டினால் போதும். அடிப்படைவாதிகளை போல எழுதப்பட்ட நூலில் எழுத்துகளை பிடித்து கொண்டு தொங்க வேண்டியதில்லை. மகாத்மா மாளவியாவின் பகுத்தறிவும் ஆழமும் கொஞ்சமாவது ஈ.வெ.ராமசாமிக்கு இருந்திருந்தால் இந்த கட்டுரையையே எழுத வேண்டியிருந்திருக்காது.

2. தலித் ஆலய நுழைவு போராட்டத்தில் பண்டித மதன் மோகன்மாளவியாவின் நிலைபாடு என்ன?

தலித் பிரச்சனையில் தொடர்ந்து அவர்களுக்காக குரல் கொடுத்தவர்  மதன் மோகன் மாளவியா.  1923 இல் கயாவில் இந்து மகாசபையின் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அதில் மாளவியா பேசினார். இது குறித்த செய்தி பின்னர் பத்திரிகைகளில் வந்திருந்தது. இதுதான் அந்த செய்தி:

சுவாமி சிரத்தானந்தர் செல்வந்தர்களான தலித் மக்கள் கோவில்கள் கட்டியிருந்தாலும் கூட அந்த கோவில்களுக்கு உள்ளேயே அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டினார். அப்போது மாளவியா கண்களில் கண்ணீர் வழிய “என் தலைப்பாகையை நான்  இந்து மதத்தைச் சார்ந்த என் தலித் சகோதரர்கள் காலடிகளில் ஏன் வைக்கக் கூடாது? தலித் சகோதரர்கள் ஏன் ஆலயங்களில் பிரவேசித்து இறை தரிசனம் செய்ய உரிமை அளிக்கக் கூடாது? பாவங்கள் நிறைந்தவனாகிய நான் என் தலித் சகோதரர்கள் கோவிலுக்குள் சென்று வழிபடக் கூடாது என சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறது?” என தழுதழுத்த குரலில் கூறினார்.[1]

சங்கராச்சாரியாருக்கு எதிராக தலித் குரலை ஆதரித்தவர் மகாத்மா மதன்மோகன் மாளவியா.

தலித் சமுதாயத்தைச் சார்ந்த தேசிய தலைவர்களில் முக்கியமானவர் பாபு ஜகஜீவன் ராம். இவரது மனைவி இந்திராணி ஜகஜீவன்ராம் பாபுவின் வாழ்க்கை சரிதத்தை எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிடுகிறார்:

இந்து மகாசபையில் 17 ஆவது மாநாடு 1935 ஆம் ஆண்டு டிசம்பர் 29-31 வரை பூனாவில் நடைபெற்றது. அதில் பண்டிட் மதன்மோகன் மாளவியா தலித்துகளிடம் இந்துக்களிலிருந்து தம்மை பிரித்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ‘உங்கள் முன் தலைவணங்குகிறோம்’ என அவர் தலித்துகளைக் கேட்டுக் கொண்டார்.  சமுதாய வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் ihl346இந்துக்களிடையே நிலவும் பிறப்படிப்படையிலான பாரபட்சங்கள் நீக்கப்பட வேண்டும் என மாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது. பள்ளிக்கூடங்கள், குளிக்கும் குளத்துறைகள், குடிநீர் ஆதாரங்கள், உணவு நிலையங்கள், தெருக்கள், பூங்காக்கள். தர்மசாலைகள், கோவில்கள் ஆகியவற்றை பயன்படுத்த சாதி வேறுபாடு இல்லாமல் அனைத்து இந்துக்களுக்கும் உரிமை வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட நாசிக் சங்கராச்சாரியாருடன் ஜகஜீவன்ராம் கடுமையாக விவாதிக்க வேண்டியநிலை ஏற்பட்டது. கோவிலுக்குள் நுழையலாம் ஆனால் கர்ப்பகிருகத்துக்குள்ளே நுழைய தடைகள் இருக்க வேண்டுமென்று சங்கராச்சாரியார் வாதிட்டார்.  ஜகஜீவன்ராம் தன்னுடைய தீர்மானத்தை 30 தலித் உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்வைத்தார். தலித்துகளுக்கு எதிராக எவ்வித பாரபட்சமும் இருக்கக் கூடாது என்பது அவர் நிலைபாடு. அது ஒரு கடும் சண்டையாக இருந்தது. சங்கராச்சாரியாருக்கு பெரிய அளவில் ஆதரவு இருந்தது. மக்கள் அவரை மரியாதையுடனும் மதநம்பிக்கையுடனும் பார்த்தனர். என் கணவர் அவரை கடுமையாக எதிர்த்தார். வெளிநடப்பு செய்யப் போவதாக அறிவித்தார். பண்டிட் மதன் மோகன் மாளவியா ஜகஜீவன் ராமுக்கு ஆதரவாக வலிமையான ஒரு பேருரை ஆற்றினார்.  முஞ்சே, ஜெயகர் ஆகிய (இந்துமகாசபை) தலைவர்களும் அவரை ஆதரித்தனர்.  ஜகஜீவன்ராம் கொண்டு வந்த தீர்மானம் கடும் சச்சரவுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. [2]

பெண்களின் திருமண வயதை அதிகமாக்கும் சாரதா சட்டம் கொண்டு வரப்பட்ட போது தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த மாளவியா இறுதியில் அதனை ஆதரித்து பேசினார்.  பண்டித மதன் மோகன் மாளவியா போல ஒரு தலைவரின் வாழ்க்கை என்பதை  எப்படி பார்க்க வேண்டும் என்பதன் அடிப்படையைக் கூட திராவிடர் கழகம் போன்ற போலி பகுத்தறிவு கும்பல்கள் உணர்ந்திடவில்லை.

மாளவியாவின் காலகட்டத்தில் வலிமையாக இருந்த ஆச்சாரவாதிகளின் பிற்போக்குத்தன்மையை மென்மையுடன் மாற்றி அமைத்தவர் அவர். பெண்களுக்கான வாக்குரிமை என்பது அன்று இருக்கவில்லை. 1918 இல் பெண்களுக்கான வாக்குரிமைக்காக சரோஜினி நாயுடு பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் குரல் கொடுக்கிறார். அப்போது அதனை எதிர்த்தவர் மதன் மோகன் மாளவியா. ஆனால் அதே பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் தலைமையில்தான் டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் பெண்களின் வாக்குரிமைக்கான தீர்மானம் எவ்வித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்படுகிறது. மாளவியா அதனை நடத்துகிறார். [3]  அதாவது சீர்திருத்தங்களை அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் அதனை முழுமையாக செயல்படுத்துவது மாளவியாவின் நோக்கம். ஏனெனில் சமூக சீர்திருத்தங்களை பயன்படுத்தி ஆச்சாரவாதிகளையும் முற்போக்காளர்களையும் மோதவிடும் காலனிய சதித்திட்டத்தை மாளவியா உணர்ந்திருந்தார். எனவே ஆச்சாரவாதிகளை தனிமைப்படுத்தாமல் சமூக சீர்திருத்தங்களை ஏற்க வைக்கும் கடுமையான பணியை அவர் ஏற்றெடுத்தார். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றார்.  முற்போக்கான சட்டங்கள் இயற்றப்படும் போது ஆச்சாரவாதிகளுக்கு அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவர் உருவாக்கினார். அன்றைய காலனிய சமூக தேக்கநிலை சூழலில் இத்தகைய சமரசவாதிகளால்தான் உண்மையிலேயே சமூக முன்னேற்றம் ஏற்பட்டதே அல்லாமல், போலி பகுத்தறிவும், இனவாதமும் பேசியவர்களால் அல்ல.

விடுதலை போராட்டத்திலும் மாளவியா ஈடுபட்டிருந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில் ஜாலியன்வாலாபாக் படுகொலை குறித்து எழுதும் போது அங்கே நிவாரண பணிகளை மேற்கொண்ட இருதலைவர்கள் மதன் மோகன் மாளவியாவும் சுவாமி சிரத்தானந்தரும் என சுட்டிக்காட்டுகிறார். [4]இருவருமே ஹிந்து மகாசபை தலைவர்கள்தான். விடுதலை போரில் உயிர்தியாகமும் உடல் குருதியும் சிந்தி அடிபட்டு விழுந்து கிடந்தவர்களுக்கு நிவாரண உதவி அளிப்பதில் முன்னணியில் நின்றவரைத்தான் வெள்ளைக்காரன் இந்தியாவிலேயே இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட கூட்டம்தான்  ’பார்ப்பனர்’ என்றும் ’மண்ணுருண்டை’ என்றும் அடையாளப்படுத்துகிறது.

வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தை உருவாக்கியதில் மாளவியாவின் பங்கு மிகப்பெரியது.  பாரதம் முழுவதும் அலைந்து திரிந்து ஒவ்வொரு புரவலரிடமும் இரந்து அவர் உருவாக்கிய கல்வி கோவில் இந்த பல்கலைக்கழகம்.  1435_BHUமாளவியா உருவாக்கிய காசி இந்து பல்கலைக்கழகமும் விடுதலை போராட்டத்தில் பிரிட்டிஷ் காலனியாட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளாயிற்று. அரசு உதவி தொகைகளால் நடத்தப்பட்ட காசி இந்து பல்கலைக்கழகம் பிரிட்டிஷ் எதிர்ப்பின் கேந்திரமாக விளங்கியதால் அதை இல்லாமல் ஆக்கிவிட அரசு முடிவு செய்திருந்தது. இரண்டாம் உலகப் போர் வீரர்களுக்கான ஒரு ராணுவ மருத்துவமனையாக அதை மாற்றிவிட அரசு பரிசீலனை செய்து வந்ததை மதன் மோகன் மாளவியா அறிந்தார். தேச விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தான் இந்த பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டிருப்பது பல்கலைக்கழகத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதை அறிந்ததும் அவர் பல்கலைக்கழக பொறுப்பை டாக்டர்.ராதாகிருஷ்ணனுக்கு அளித்து கொண்டு தாம் விலகிக் கொண்டார்.[5]

தாம் உழைத்து உருவாக்கிய அமைப்பு நீடித்து வளர தம்மையே அதன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளும் தியாக மனப்பான்மை மாளவியாவின் மனப்பான்மை. ஆனால் தானும் உழைக்காமல், இன்னொரு ஆசாமி, ஈவெரா, அவரும் உழைக்காமல் உருவாக்கிய சொத்துக்கு,  வாரிசாகி  அதற்கு வாரிசாகவும் தன் சொந்த மகனையே வாரிசாக்கும் ஒரு கும்பலுக்கு இந்த தியாக சீலரின் பெருமை புரியாமல் போவதில் அதிசயம் இல்லைதான்.

சாரதா சட்டத்துக்கான போராட்டத்திலோ அல்லது பெண்களுக்கான வாக்குரிமைக்கான போராட்டத்திலோ ஈ.வெ.ராமசாமிக்கு எவ்வித பங்கும் இல்லை என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். ஈ.வெ.ராமசாமி இதற்கெல்லாம் பிறகு பெண்களின் பிரச்சனைகளையும் இந்து சமுதாயத்தின் ஒவ்வொரு சமூக அவலத்தையும் வெறுப்பு பிரச்சாரத்துக்கான முதலீடாக மட்டும் பயன்படுத்தினாரே ஒழிய பெண் உரிமைக்கான எவ்வித அடிப்படை போராட்டத்திலும் ஈடுபட்டவரல்லர் அவர்.  தலித் பிரச்சனைகளை பொறுத்தவரையிலோ கேட்கவே வேண்டாம். கீழ்வெண்மணி அறிக்கை ஒன்று போதும் ஈ.வெ.ராமசாமியின் போலித்தனத்தை தோலுரித்துக் காட்ட.

மண்ணுருண்டையா மாளவியா? ஆம் மண்ணுருண்டைதான் மாளவியா…

பகுத்தறிவு என்கிற பெயரில் வெள்ளையனின் இனவாதத்தை பரப்புவதைக் காட்டிலும்   புத்தனும் ராமானுஜனும் நடந்த இந்த மண்ணின் மண்ணுருண்டையாக இருப்பது பெரும் பாக்கியம். என்றென்றைக்கும் ஈவெராமசாமியின் போலி பகுத்தறிவை விட, திராவிட  இயக்கத்தின் இனவாத வெறுப்பை விட  மதன் மோகன் மாளவியாவின் மண்ணுருண்டை இந்த தேசத்தின் முன்னேற்றத்துக்கும் சமூகநீதியை வென்றெடுப்பதற்கும் உறுதுணையாக இருக்கும்.

சான்றாதாரங்கள்:

[1] The Indian Annual Register, Volume 2, Annual Register Office., 1925,  பக்.132

[2] Indrani Jagjivan Ram, Milestones: A Memoir, Penguin Books India,2010, பக்.52

[3] Vir Bharat Talwar, Feminist Consciousness in Women’s Journals in Hindi: 1910-1920, in Recasting Women: Essays in Indian Colonial History, Rutgers University Press, 1990 பக். 226  & Vadivelu Rajalakshmi, The political behaviour of women in Tamil Nadu, Inter-India Publications, 1985, பக்.40

[4] Jawaharlal Nehru, An autobiography: with musings on recent events in India, The Bodley Head, 1955 பக்.42

[5] Mamta Anand, S. Radhakrishnan His Life And Works, Atlantic Publishers, 2006, பக். 25

58 Replies to “மண்ணுருண்டையா மாளவியா?”

  1. பாரத ரத்னா மதன் மோகன் மாளவ்யா அவர்களை பற்றிய குறிப்புகளை தந்த ஆசிரியருக்கு நன்றி ! சொத்தை காப்பற்ற சோரம் போகும் மக்கறிவு கும்பல் வாய்க்கு வந்ததை எழுதும் போது உண்மைகளை உடைத்து சொல்லிய ஆசிரியருக்கு நன்றிகள் பல !

  2. திரு மதன் மோகன் மாளவியாவுக்கு இப்போது வழங்கப்படும் பாரத ரத்தினா அவார்டு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடனேயே 1955-லேயே வழங்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் காங்கிரசார் கோட்டை விட்டனர். பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் துணைவியார் இந்திராணி ஜெகஜீவன் ராம் அவர்கள் எழுதியுள்ள வாக்கியங்கள் பொய்களை மட்டுமே எழுதிய விடுதலைக்கு சிறிதாவது உரைக்க வைக்குமா ? மோடியின் அரசு மிக சிறந்த செயலை இதன்மூலம் செய்துள்ளது. குருடர்களுக்கு எப்படிப் புரியும் ? அய்யா, அரவிந்தரே, நீவிர் பல்லாண்டு வாழ்ந்து, இதே போல இன்னும் பல ஆயிரம் எழுத்தோவியங்களை வழங்க எல்லாம் வல்ல தந்தைக்கு உபதேசித்த சிவகுருனாதனாம் முருகப்பெருமான் அருள்புரிவானாக.

  3. அருமையான பகிர்வு ஸ்ரீ அ.நீ.

    இனவெறி ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் அடியொற்றிய சஞ்சிகை தானே விடுதலை. குடியரசு சஞ்சிகையில் இனவெறி ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பரப்பிய பொய்யுரைகளின் தொடர்ச்சியே விடுதலை வீரமணியின் இனக்காழ்ப்பு பரப்புரைகள். மஹாமனா பண்டித ஸ்ரீ மதன் மோஹன் மாளவியா அவர்களது வாழ்வில் முக்யமான பங்களிப்புகள்.

    ஒன்று – தலித் சஹோதரர்களது மேம்பாட்டுக்காக அவர் பாடுபட்டமை. தலித் சஹோதரர்களது ஆலயப்ரவேசத்துக்காக அவர் உழைத்து அதில் பெரும் வெற்றி கண்டது. நாசிக் காளாராம் மந்திரில் தலித் சஹோதரர்களுடன் மாளவியா அவர்கள் கடும் எதிர்ப்புக்கிடையில் ஆலய ப்ரவேசம் செய்தது.

    இரண்டு – காங்க்ரஸ் கட்சியின் அத்யக்ஷகராக மூன்று முறை பதவி வகித்தது.

    மூன்று – ஹிந்துஸ்தானத்தின் உன்னதமான கல்விக் கோவில்களுள் ஒன்றான காசி ஹிந்து விச்வவித்யாலயத்தை நிறுவி நீண்ட காலத்திற்கு அதை நிர்வாகித்தமை. அந்தக் கோவிலைக் காக்க தன்னை முன்னிறுத்தக்கூடாது என்ற அவச்யம் நேர்ந்த போது தன்னை அந்தக் கோவிலில் இருந்து விலக்கியமை. மிக அருமையான குறிப்பு ஸ்ரீ அ.நீ……….. இதை த்ராவிட கும்பல்களுடன் ஒப்பிட்டமை மிகவும் பொருத்தம்.

    நான்கு – ஹிந்துஸ்தானத்தின் பெரும் தலைவர்களை உருவாக்கிய பாசறையான ஹிந்து மஹாசபை என்ற அரசியல் கட்சியில் தன் பெரும் பங்களிப்பைச் செய்தது.

  4. மாளவியாவின் சிந்தனைகளை அன்றைய சமூக விழுமியங்களைக் கொண்டே மதிப்பிட வேண்டும். அவரது காலகட்டத்துக்கு அவர் பாரம்பரியமாக வந்த ஆசாரங்களை ஓரளவு தாண்ட முயற்சித்தார் என்பதுதான் உண்மை. அதைப் புரிந்து கொள்ளாமல் ஓலமிடும் தி.க.காரர்களை அ.நீ. பொருட்படுத்தி எழுத வேண்டியதே இல்லை. ஆனாலும் அவர் எழுதியதால்தான் மாளவியா சில சமயங்களிலாவது தலித்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துப் பேசி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

    இன்றைய விழுமியங்களை கருத்தில் கொண்டால் மாளவியா சமூக மாற்றங்களுக்காக இன்னும் தீவிரமாகப் போராடி இருக்கலாமே என்று தோன்றலாம். அது குண்டப்பா விஸ்வநாத் இன்னும் பத்து சதங்கள் அடித்திருக்கலாமே என்று ஆதங்கப்படுவதைப் போலத்தான்.

    ஆனால் மாளவியா மறைந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா என்று பா.ஜ.க. அரசு அறிவிப்பது அவருக்கு இருக்கும் “சனாதன ஹிந்து” பிம்பத்தால்தான். மாளவியாக்கு ஏறக்குறைய சமமான ஆகிருதி கொண்ட சர் சையத் அஹமத் கானுக்கு பாரத ரத்னா அறிவிப்பார்களா என்ன? பல வருஷங்கள் முன்னால் மறைந்த தலைவர்களுக்கு பாரத ரத்னா என்பதெல்லாம் கண்துடைப்பு, மலிவான அரசியலே. அடுத்தது என்ன குமாரில பட்டருக்கு பாரத ரத்னாவா? அந்த அரசியலைப் பற்றி அ.நீ., ஜடாயு போன்றவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? பின்னூட்டமாக இல்லாமல் தமிழ் ஹிந்து தளத்திலேயே இதைப் பற்றி எழுதுங்களேன்!

  5. அன்புள்ள கிருஷ்ணகுமார், மதன் மோகன் மாளவியா நான்கு முறைகள் இந்திய தேசீய காங்கிரசின் தலைவராக செயலாற்றினார். 1909,1918, 1932,1933 ஆக நாலுமுறைகள் என்பதே சரி.

  6. As Swami Chinmayananda said once first let us teach Hindus what Hinduism is and convert them to Hindus so that they know the correct story behind each person and each event of the past

  7. நன்றி அநீ. மாள்வியா வரலாறு பள்ளிகளில் படிப்பிக்கப்பட வேண்டும். மாளவியா இலண்டன் செல்லும்போது மண்ணுருண்டை மட்டுமல்ல கங்கை நீரும் கொண்டு சென்றார் என்றும் அவர் சிவபூசை செய்பவர், க்ஷணிகலிங்கம் செய்வதற்கே மண்ணுருண்டை கொண்டு சென்றார் என்றும் என் தந்தை மாளவியாவைப் புகழக் கேட்டிருக்கின்றேன். விரமணி போன்ற பகுத்தறிவற்ற இனவெறியர்களுக்கு அவருடைய பெருமை எப்படிப் புரியும்? சமய உணர்வும் தெய்வபக்தியும் நாட்டுப்பற்ரும் ஒருங்கே கூடிய பெரியார் மாளவியா.

  8. /ஏறக்குறைய சமமான ஆகிருதி கொண்ட சர் சையத் அஹமத் கானுக்கு பாரத ரத்னா அறிவிப்பார்களா என்ன?//

    பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் vs அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் என்கிற இரட்டை பார்வை ஒரு ’மதச்சார்பற்ற’ அறிவுஜீவியிடம் இல்லை என்றால்தான் வருத்தப்பட வேண்டும். சர் சையத் அகமதுகான் தனது கல்வி அமைப்பில் சாதி வேறுபாடுகளை அடிப்படை கொள்கையாகவே பார்த்தவர். ‘கீழ் சாதி’ என அவர் கருதியவர்கள் கல்வி கற்க தேவையில்லை என நினைத்தவர். மாறாக ஜகஜீவன் ராம் மேலும் நன்றாக படிக்க வேண்டும் என அவரை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க சொல்லி அழைத்தவர் பண்டிட் மதன்மோகன் மாளவியா. (அதே சமயம் ஹாஸ்டலில் ஜகஜீவன் ராம் பல தீண்டாமை போக்குகளை அனுபவித்தார். அது வேறு விஷயம். ஏனென்றால் அவை மாளவியாவைத் தாண்டி நடந்த சமூக தீமைகள். அவற்றை எதிர்த்தும் அவர் போராடினார். இறுதிவரையில் ஜகஜீவன் ராமின் சமூகநீதி போராட்டங்களில் உறுதுணையாக நின்றவர் மாளவியா.) மேலும் சர் சையது அகமதுகான் தீவிர பிரிட்டிஷ் விசுவாசி. ஆனால் மாளவியா தேசபக்தர். விடுதலை போராட்ட வீரர். எனவே இந்த ஒப்பீடே தவறானது. உண்மையில் போன ஆண்டு பாபு ஜகஜீவன் ராம் அவர்கள் குறித்து தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு உறுப்பினர் சகோதரர் ம.வெங்கடேசன் அவர்கள் சொல்லும் வரை நான் மாளவியா அவர்களை வெறும் ஆச்சாரவாத மிதவாதி என்று மட்டுமே நினைத்திருந்தேன். ம.வெங்கடேசன் அவர்கள்தான் மாளவியாவின் இந்த பரிமாணத்தையே எனக்கு புரிய வைத்தவர். எனில் எப்படி இந்த பிம்பம் ஏற்பட்டது? தொடர்ந்து நேரு மட்டுமே சனாதன வைதீக கும்பல்களுக்கு நடுவே சமூக முன்னேற்றத்துக்கு உழைத்தது போல ஒரு பிம்பம் மிக நைச்சியமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அது உடைக்கப்பட வேண்டியது அவசியமே. அவ்விதத்தில் தொடர்ந்து இந்தியா முழுவதும் நேரு-(இந்திரா/சோனியா) காந்தி குடும்ப சொத்தாக பெயர்கள் விருதுகள் உருவாக்கப்பட்டு வரும் போது பண்டிட் மாளவியாவுக்கு கொடுக்கப்பட்ட விருது முழுக்க சரியானதே.

  9. வீரமணிகள் சொல்வதை வேறு மொழிகளில் RV சொல்கிறார்; இருவரது அரசியலும் ஒன்றே!

  10. ”மனு ஸ்மிருதியில் இருப்பதாலேயே ஒரு விஷயம் கெட்டதாகிவிடாது” – இந்த ஒரு வார்த்தை போதும்ணே., உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த…! நீங்கள் மற்றும் ஜடாயு போன்றவர்கள் எழுதுவதை பார்க்கும் போது ”சோ”வின் துக்ளக் பத்திரிக்கையின் ”ஒண்ணரை பக்க நாளேடு வரவில்லையே என்ற கவலை தீர்ந்தது.

  11. மிகச்சிறந்த. பதிவு. என்னைப் போன்றவர்களுக்கு வழிகாட்டும் அகல்விளக்கு. வணக்கங்களும் வாழ்த்துக்களும். தொடருட்டும் உமது பணி நன்றி.

  12. //”மனு ஸ்மிருதியில் இருப்பதாலேயே ஒரு விஷயம் கெட்டதாகிவிடாது” – இந்த ஒரு வார்த்தை போதும்ணே., உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த…!//

    ஜெயசீலன் அப்போது கீழே உள்ள வார்த்தைகளை சொன்னவரை என்ன சொல்வீர்கள்?
    ” It is not that all the parts of the Manusmriti are condemable, that it does not contain good principles and that Manu himself was not a sociologist and was a mere fool. We made a bonfire of it because we view it as a symbol of injustice under which we have been crushed across the centuries.”
    சொன்னவர் டாக்டர்.அம்பேத்கர்.

  13. உங்கள் உள்ளக்கிடக்கையை ”மனு ஸ்மிருதியில் இருப்பதாலேயே ஒரு விஷயம் கெட்டதாகிவிடாது” என்ற வாசகம் வெளிப்படுத்துவதைப் போல ” Manu himself was not a sociologist and was a mere fool” என்ற வாசகங்கள் அண்ணல் அம்பேத்கரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறது.

  14. உஸ்…ஹப்பா… // It is not that all the parts of the Manusmriti are condemable, that it does not contain good principles and that Manu himself was not a sociologist and was a mere fool. // ” மனு ஸ்மிருதியில் இருக்கும் எல்லா விஷயங்களும் கண்டனத்துக்குரியவை அல்ல. அல்லது அதில் நல்லவிஷயங்களே இல்லை என்பதல்ல. மனு ஒரு மடையனோ அல்லது சமூகவியலாளன் அல்ல என்பதோ அல்ல.” வெறுப்பு பிடித்து ஆட்டும் பார்வைக்கு ஆங்கில வாக்கியங்களின் பொருளும்
    தெரியாமல் போவது ஆச்சரியமல்ல.

  15. //இனவெறி ஈ.வெ.ராமசாமி //

    //இனக்காழ்ப்பு பரப்புரைகள்.//

    மேலே சொன்னது கிருஷ்ணகுமாரின் பின்னூட்டங்களிலிருந்து.

    கீழே முத்துக்குமாரசாமியின் பின்னூட்டத்திலிருந்து:

    //விரமணி போன்ற பகுத்தறிவற்ற இனவெறியர்களுக்கு //

    எந்த இனத்துக்கு எதிராக ? தெரிந்துகொள்ளலாமா?

  16. //மனு ஸ்மிருதியில் இருப்பதாலேயே ஒரு விஷயம் கெட்டதாகி விடாது//

    இதற்கு மேல்விளக்கமும் கொடுக்கிறார் இப்படி…

    //ஜெயசீலன் அப்போது கீழே உள்ள வார்த்தைகளை சொன்னவரை என்ன சொல்வீர்கள்?
    ” It is not that all the parts of the Manusmriti are condemable, that it does not contain good principles and that Manu himself was not a sociologist and was a mere fool. We made a bonfire of it because we view it as a symbol of injustice under which we have been crushed across the centuries.”
    சொன்னவர் டாக்டர்.அம்பேத்கர்.//

    அப்படியென்றால், குரானிலும் விவிலியத்திலும் நல்ல கருத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன. முழுக்க அயோக்கித்தனமே என்று வாதிடவிடாமல் அவை எழதப்பட்டுவிட்டன. எனவே விவிலியத்தில் இருப்பதானலே, குரானில் இருப்பதானலே ஒரு விஷய்ம் கெட்டதாகிவிடாது. சொல்லலாமா?

    அம்பேத்கர் we view it as a symbol of injustice under which we have been crushed across the centuries.”என்று சொல்லும்போது, மனுஷ்மிருதியில் நல்ல விசயங்கள் இருந்தாலும் அவை அந்நூலை, a symbol of injustice என்ற பதத்த்துக்குள்தான் அடக்கும் அடக்கியிருக்கிறார் அம்பேதகர் எனப்து தெளிவு.

    //we view it as a symbol of injustice under which we have been crushed across the centuries.”// strong words. Ambedkar dose not prevaricate or economical with truth.

    Manusmriti has crushed the innocents – Amedkar says. True or False? Score your answer. No negative marks will be avoided for the wrong answer 🙂

    One cannot stand between two stools. If you like to advance and help Dalit cause, you cannot cling to Manu. Give up one in order to stand.

  17. 60 வருடங்களுக்குப் பிறகு ஹிந்து மஹா சபாவைத் தொடங்கிய மாளவியாவுக்கு கொடுத்த பாரத் ரதனா எதற்குக் கொடுத்தார்கள் என்ற ஆராய்ச்சிகளைப் பின் தள்ளிவிடுகிறது மற்ற எண்ணங்கள்?

    ஏன் இப்போது? ஏன் மோடி வந்தவுடன்? யாரைக்குஷிப்படுத்த?

    இன்னொன்றையும் பார்க்கவேண்டும் வாஜ்பேயிக்குக் கொடுத்ததை எல்லாரும் பாராட்ட, அல்லது யாதொரு எதிர் விமர்சனமும் வராமலிருக்க, மாளவியாவுக்குக் கொடுத்தது விமர்சனம் பண்ணப்பட, அதற்கு அரவிந்தன் ஒரு டிபன்ஸ் பண்ணும் நிலை இருக்கிறது.

    நினைவிருக்கட்டும். நேதாஜிக்குக் கொடுக்க‌விருப்பதாக பரிசீல்னை என்று கேள்விப்பட்டதுவே அவர் குடும்பத்தாரும் வங்கத்த்வரும் அவர் சேவைக்கு கூலியா? அவர் என்ன உங்கள் பரிசால் உயர்ந்து விடுவாரா? ஏன் அவரைக்கேவலப்படுத்துகிறீர்கள் என்றார்கள். நேதாஜி உறவுகள் அதை எதிர்த்து அரசுக்கு மடலனுப்பியது. அரசு அப்பரிசீலனையை விட்டு விட்டது. 60 ஆண்டுகளுக்கு முன் பென்ராசஸ் இந்துப்ப்லகலைக்கழகத்தை நிறுவியதற்கு இப்போது பரிசு கொடுக்கிறார்களாம்? சுதந்திரப்போராட்ட்த்திலீடுபட்டதற்கு வாழ்த்தா? என்ன கேவலமான செயல் எனறு அவர் குடும்பத்தாரும் அவர் புகழ் பாடுவோரும் எதிர்த்திருக்க வேண்டும்?

    போனவாண்டு, சச்சின், அடுத்த ஆண்டு மாளவியா? அசிங்கமென்று ஏன் தெரியவில்லை?

    எல்லாமே அரசியல்தான். அரசியலுக்காகத்தான் மாளவியாவுக்கு. மாளவியாவுக்காக அன்று என்று புரிய ராக்கெட் ஸயன்ஸ் படிக்கவேண்டியதில்லை.

  18. அரவிந்த நீலகண்டனுக்கு ஒரு வார்த்தை

    என்னதான் இந்த திராவிட திம்மிகளுக்கு (மன்னிக்கவும்) வீரமணி/கருணாநிதியை பின்பற்றும் இவர்களுக்கு உண்மை எது என்று தெரிந்தாலும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் இவர்களுக்கு தெரிந்தல்லாம் பிராமணியம் இந்துத்துவா முதலியவை

    ஜெயசீலனுக்கு ஒரு கேள்வி இவ்வ்ளவு சொல்லும் நீங்கள் இஸ்லாம்/கிறிஸ்துவத்தை பற்றி வாய் திறக்கமுடியுமா சரி வேண்டாம் விடுங்கள் அது அடுத்த மதம்

    நம் இந்து மதத்திலேயே உயர்சாதி இந்துக்களை பற்றி வாய்திறந்து ஏதாவ்து சொல்ல முடியுமா இரட்டை குவளை முறையை பின்பற்றுபவர்கள் யார் சார்?

  19. அய்யா ஜெயசீலன்

    மனு ஸ்ம்ரிதி படிக்கு ஒன்றும் நாம் இப்போது வாழ்ந்துவிடவில்லை. அதெல்லாம் பழைய கதை. வர்ணம், ராஜாக்கள் இவைகள் எல்லாம் ஓய்ந்த போதே அது போய் விட்டது. யாரும் அதற்காக யாரும் வருத்தப் படவும் இல்லை.

    தவிர நீங்கள் கட்டுரையின் பாயிண்ட் 1 ஐ மீண்டும் சரியாகப் படிக்கவும். அ. நீ. மனு ஸ்ம்ரிதி தான் தேவை என்று எழுதி இருப்பது போல நீங்க தவறாகப் புரிந்து கொண்டு பேசுகிறீர்கள்.

    ஆனால் ஷாரியா என்று ஒன்று உலகம் முழுவதும் பரவுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது. அதன் பக்கம் கொஞ்சம் உங்கள் கவனத்தைத் திருப்புங்களேன்.

    ( மனு ஸ்ம்ரிதி பற்றி ஆர்.எஸ்.எஸ். இன் நிலை என்ன என்பது பற்றி திரு ரமேஷ் பதங்கே புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். அதன் தமிழ் போழிபெயர்ப்பின் பெயரை ( எனக்கு நினைவுக்கு வரவில்லை ) யாராவது திரு ஜெயசீலனுக்கு சொல்லுங்களேன்.)

  20. //அதன் தமிழ் போழிபெயர்ப்பின் //

    ‘அதன் மொழி பெயர்ப்பின் ‘ என்று படிக்கவும்

  21. // உங்கள் உள்ளக்கிடக்கையை ”மனு ஸ்மிருதியில் இருப்பதாலேயே ஒரு விஷயம் கெட்டதாகிவிடாது” என்ற வாசகம் வெளிப்படுத்துவதைப் போல ” Manu himself was not a sociologist and was a mere fool” என்ற வாசகங்கள் அண்ணல் அம்பேத்கரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறது. //

    ஆக, ”எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்” என்ற சொற்படியே இருவரும் மெய்ப்பொருள் காண்கிறார்கள் என்று ஒப்புக்கொள்ளும் (ஒருவழியாக) உங்கள் உள்ளக்கிடக்கை மகிழ்ச்சியையே அளிக்கிறது.

  22. It seems Android mobiles don’t support ur transliteration comments field. Please look into this.

  23. அ.நீ.,

    //சையத் அகமதுகான் தனது கல்வி அமைப்பில் சாதி வேறுபாடுகளை அடிப்படை கொள்கையாகவே பார்த்தவர். ‘கீழ் சாதி’ என அவர் கருதியவர்கள் கல்வி கற்க தேவையில்லை என நினைத்தவர். //
    என் பின்னூட்டத்திலிருந்து:
    // மாளவியாவின் சிந்தனைகளை அன்றைய சமூக விழுமியங்களைக் கொண்டே மதிப்பிட வேண்டும். அவரது காலகட்டத்துக்கு அவர் பாரம்பரியமாக வந்த ஆசாரங்களை ஓரளவு தாண்ட முயற்சித்தார் என்பதுதான் உண்மை. அதைப் புரிந்து கொள்ளாமல் ஓலமிடும் தி.க.காரர்களை அ.நீ. பொருட்படுத்தி எழுத வேண்டியதே இல்லை. //
    மாளவியாவுக்கு இரு தலைமுறைகள் முன்னால் வாழ்ந்த சையத் அஹமத் கான் ஜாதி பார்த்ததில் என்ன ஆச்சரியம்? மாளவியவாவை எப்படி அவர் கால சமூக விழுமியங்களை வைத்து மதிப்பிட வேண்டுமோ அப்படியேதான் சையத் அஹமத் கானுக்கும். ஆதி சங்கரருக்கே சண்டாளனே தள்ளிப் போ என்று சொல்வது தவறு என்று புரிய வைக்க சிவபெருமானே வர வேண்டி இருந்ததாம்!

  24. ஆங்கிலத்தில் இருப்பதை ஆங்கிலத்தில் புரியவைப்பது எளிதென்பதால் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

    Jayaseelan

    The sentence quoted by Aravindan Neelakandan should be read thus:

    It is not
    …… that all the parts of the Manusmriti are condemable,
    ……. that it does not contain good principles and
    ……. that Manu himself was not a sociologist and was a mere fool.

    We made a bonfire of it because we view it as a symbol of injustice under which we have been crushed across the centuries.

    ‘The negative covenant’ must be paraphrased and read in the above manner, as the word “that” indicates.

    Therefore what Babasaheb Ambedkar stated is not as you misinterpret to suit your convenience.

    What Babasaheb Ambedkar stated is that Manu himself was a sociologist and was not a mere fool, just because a bonfire was made of Manu Smriti, it should not be so construed.

  25. அன்புள்ள ஆர்.வி, ///ஏறக்குறைய சமமான ஆகிருதி கொண்ட சர் சையத் அஹமத் கானுக்கு // என நான் எழுதவில்லையே. சர் சையது அகமது கான் மாளவியாவுக்கு இரண்டு தலைமுறை மூத்தவரல்ல. சர் சையது அகமது கான் மறைந்த போது மாளவியாவின் வயது 37. மட்டுமல்ல சர் சையது அகமதுகான் தீவிர பிரிட்டிஷ் விசுவாசியும் கூட என்பதை வசதியாக மறந்துவிட்டீர்கள். அனைவருக்குமான கல்வி, தீண்டாமை ஒழிப்பு, தேசவிடுதலை போராட்ட பங்களிப்பு என்று வாழ்ந்த ஒருவருடன் சர் சையது அகமது கான் ‘சமமான ஆகிருதி கொண்ட’ ஒருவரல்லர். அவ்வளவே.

  26. //t is not
    …… that all the parts of the Manusmriti are condemnable;
    ……. that it does not contain good principles; and
    ……. that Manu himself was not a sociologist and was a mere fool.

    We made a bonfire of it because we view it as a symbol of injustice under which we have been crushed across the centuries.

    ‘The negative covenant’ must be paraphrased and read in the above manner, as the word “that” indicates.//

    Ok adiyavan.

    It does contain good principles. He is a sociologist and an intelligent person.

    Still, //it is a symbol of injustice under which we (the dalits) have been crushed across centuries.// for Ambedkar.

    Now, you may tell me why it is a symbol of injustice and why it crushed the dalits for centuries? If the negative elements in the book are trivial and the good principles are more, why did Amedkar go to the level of calling it a symbol of injustice?

    Manu has written a lot and is convinced that his book is suitable to Hindus; written many other things (you can call it interpolations to your convenience; but that may be in other places please) that were against women and dalits and exalted Brahmins above all other people of society.

    Can a person, who is not aware what negative impact his laws would make in society, be called wise? An intelligent person foresees and anticipates also. Here, he has written quite damaging things against the lowest section of society, and you mean, unconsciously? If unconsciously too, that does not qualify him to be called wise. He must be a fool if he writes and believes his words won”t impact at all. Only a fool does an action and thinks it does not have any impact. All actions have reactions. Manu wantonly neglected such truths; may be he was a fanatic who hated dalits.

    Is he a right sociologist who de-recognises a large chunk of population as not fit, and giving them horrible punishments? Pour lead into the ear canal of a dalit if he dares to listen to Vedas? for e.g.

    If his book is worthy of following and preservation for Hindu society, can you dare to propagate it openly everywhere now? Here, someone has already written that Manu has been discarded by RSS! Why, if the book is good and very very good?

    Obviously, only the Brahmins and their supporters like Aravindan Neelakantan can like Manu. The Brahmins reaped rich benefits from the Hindu religion and Manu have helped them feel happy in their act. What about others? The dalits are scared to even look at the book. Conscientious non-dalits like me want the book never to be discussed and praised. In my opinion, if Aravindan wants to advance dalit cause in Hindu religion and makes ghar vapasi of dalits a grand success, it is better he never talks about Manu. If he likes it, let him keep it a top secret in his heart of hearts.

  27. Racism is of two kinds: one hating certain group of people; two, exalting certain group above all other sections. Manu did both.

    உயர்ஜாதி இந்துக்களைப் பற்றி வாய் திறக்க முடியுமா? என்றால், மனு எழுதியதில் தலித்துக்களைப்பற்றியதுதான் இங்கே வாதிக்கப்படுகிறது. கதையை மாற்ற வேண்டாம்.

    அரவிந்தனின், //மனு ஸ்மிருதியில் இருப்பதாலேயே ஒரு விஷயம் கெட்டதாகிவிடாது”// என்ற சொற்றொடரும், அதற்கு அவர் கொடுத்த டிஃபென்சும் (3 ஜன் 12:38 பிஎம்) தான் விவாதிக்கப்படுகிறது.

    ஜெயசீலன் எழுதியதால், அது விவாதிக்கப்படுகிறது. ஆர் விக்கும் அரவிந்தனுக்கும் நடக்கும் விவாதம், கானைப்பற்றியும் மாளவியா பற்றியும், அதில் நான் எழுதவில்லை.

    தனித்தனியாகப் பிரித்துப் பின்னூட்டக்கருத்துகளில் விவாதித்தால், உங்கள் கருத்துகள் தெளிவை உண்டாக்கலாம்.

  28. //உஸ்…ஹப்பா… // It is not that all the parts of the Manusmriti are condemable, that it does not contain good principles and that Manu himself was not a sociologist and was a mere fool. // ” மனு ஸ்மிருதியில் இருக்கும் எல்லா விஷயங்களும் கண்டனத்துக்குரியவை அல்ல. அல்லது அதில் நல்லவிஷயங்களே இல்லை என்பதல்ல. மனு ஒரு மடையனோ அல்லது சமூகவியலாளன் அல்ல என்பதோ அல்ல.” வெறுப்பு பிடித்து ஆட்டும் பார்வைக்கு ஆங்கில வாக்கியங்களின் பொருளும்
    தெரியாமல் போவது ஆச்சரியமல்ல.//

    விவாதம் விவாதமாகவே இருக்கட்டும். வெறுப்பு; ஆங்கிலப்பித்து, பார்ப்ப்னர்மீது காழ்ப்புணர்ச்சி என்று பேசிமுடிக்கப்பார்க்காதீர்கள்.

    நீங்கள்தான், எல்லாவிஷய்ங்களும் என்றெழுதி, உம்மைத்தொகையைப் போட்டது.

    அந்த எல்லா விஷயங்களையும் பற்றி அமேத்கர் கவலைப்படவில்லை. அவர் கவலைப்பட்டது, கோபம் கோண்டதெல்லாம் மனுவில் உள்ள மற்றவை பற்றி. அவை நிறைய அல்லது குறைய பேச்சுக்கு இங்கிடமில்லை. இருக்கின்றன. அவை அப்பாவி ஏழைத்தலித்துமக்களை பல்லாயிரம் ஆண்டுகளாகக் கொடுமைப்படுத்தின என்று அவர் எழுதியதை இங்கு போட்டது ஜெயசீலன் அன்று; நீங்கள்.

    அப்படி எழுதிவிட்டு, அம்மக்களைப்பற்றி ஒரு சொல் கூட இரக்கமாகவோ, அவர்கள் சார்ப்பாகவோ பேசாமல், மனுவைப்பற்றிய சொற்களுக்கு மட்டும் உணர்ச்சிவசப்படுகிறீர்களே? இங்கு எழுதும் மற்ற மனுஆதரவாளர்கள் பற்றி எவரும் பேசுவதில்லை. காலம்காலமாக தலித்துக்களைத் தாழத்திய கூட்டத்தில் வம்சாவளிகள் என்று முடித்துவிடலாம். ஆனால் நீங்கள்? நூல்களை எழுதுகிறீர்கள்; அம்பேத்கரைப்பற்றி சிலாகித்து எழுதுகிறீர்கள். சாதிகளைப்பற்றி இந்து நூலகள் பேசவில்லை என்று நூலை எழுதியிருக்கிறீர்கள். ஆர் எஸ் எஸ் யே மனு வேவேண்டாமென விலக்கிக்கொண்டபின் மனு பற்றி பேச்சேன் அதுவும் அது நல்ல நூலென்ற் பேச்சேன் அரவிந்தன்? அதில் நல்ல கருத்துக்களும் இருக்கின்றன என்றால், அவற்றை மற்ற் நூல்களில் தேடிப்பிடித்து, இதை விட்டொழித்தாலென்ன?

  29. அ.நீ, // சர் சையது அகமது கான் ‘சமமான ஆகிருதி கொண்ட’ ஒருவரல்லர். // நான் மாறுபடுகிறேன். அயோத்திதாசர் கூட பிரிட்டிஷாருக்கு ஆதரவு தெரிவித்தவர்தான். அம்பேத்கார் கூட பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடியதாகத் தெரியவில்லை. உங்களைப் போன்ற ஒரு scholar ஆம் அம்பேத்காரும் அயோத்திதாசரும் பிரிட்டிஷாரை எதிர்த்தனர் என்று சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்.

    மாளவியா சை.அ. கானை விட 45 வயது சிறியவர் என்று நினைவு.

  30. அ.நீ., மாளவியா பாரத ரத்னா பெறும் தகுதி உள்ளவரா என்பதைப் பற்றி நமக்குள் கருத்து வேறுபாடு இல்லை. (சை.அ. கானைப் பற்றி இருக்கிறது.) ஆனால் அறுபது எழுபது ஆண்டுகள் முன்னால் மறைந்தவருக்கு இன்று பாரத ரத்னா கொடுக்கும் அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன? இது எங்கே போய் நிற்கும்?

  31. The guy who comments under the name ‘RV’ is either incredibly naive or an expert double agent. I can’t decide which one though!

    On a related note, here’s what ‘Sir’ Syed Ahmad had to say about Hindus – “If we join the political movement of the Bengalis our nation will reap a loss, for we do not want to become subjects of the Hindus instead of the subjects of the “people of the Book.”

  32. Thanks to Aravindhan Neelakandan.
    Please write more this type of messages against E. V.Ra.

  33. there comes rev. joe amalan reyan fernando

    \\ In my opinion, if Aravindan wants to advance dalit cause in Hindu religion and makes ghar vapasi of dalits a grand success, it is better he never talks about Manu. If he likes it, let him keep it a top secret in his heart of hearts. \\

    ஸ்………ஸப்பா கண்ண கட்டுது.

    ரெவரெண்டு ஜோ, இந்த வ்யாசம் கர் வாப்ஸி பற்றி இல்லை………. மதன் மோஹன் மாளவியா அவர்களது தேசிய மற்றும் சமூஹப் பங்களிப்புகளைப் பகிர்வது……..

    பின்னூட்டங்களால் இழையின் போக்கை மாற்றும் பழக்க தோஷம்………. அவதாரங்கள் கடந்தாலும் தொடர்கிறதே……….

    சீரேசுநாதனுக்கு ஜெயமங்களம். ஆமென்.

  34. எனக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்த அ.நீ மற்ற பிறருக்கு (குறிப்பாக அடியவனுக்கு) நன்றி. எனக்கு ஒரே ஒரு சந்தேகம். இது அம்பேத்கரின் எந்த தொகுப்பில் உள்ளது என்பதை வெளியிட்டால் உதவியாக இருக்கும். அடுத்ததாக ரங்கன் அவர்களின் கேள்விக்கு வருவோம் – ”ஆனால் ஷாரியா என்று ஒன்று உலகம் முழுவதும் பரவுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறது. அதன் பக்கம் கொஞ்சம் உங்கள் கவனத்தைத் திருப்புங்களேன்”. நான் கேட்கிறேன் – இந்து- இந்துவை ஏமாத்துனா.. முஸ்லிமை எதுக்குக் கேக்கனும்? என்னங்க இது நியாயம்?

  35. இக்கட்டுரை வீடு திரும்புதல் என்னும் மத இயக்கத்தைப்பற்றியதன்று. உண்மை! ஆனால், கட்டுரைப்பொருள் போக, அரவிந்தனுக்கும் ஆர் விக்கும் நடக்கும் விவாதமும், அரவிந்தனுக்கும் ஜெயசீலனுக்கும் விவாதமும் பேச்சுக்குள்ளாகின்றன. மனுதர்மம் பற்றியும் அதைபபற்றி அம்பேத்கர் கொண்ட எண்ணமும், கட்டுரையாளர் அரவிந்தனே பின்னூட்டத்தில் எழுதியதால் அவை சர்ச்சைக்குள்ளாக்கப்படுகின்றன‌. எனவே வீடு திரும்புதல், மனுதர்மம், அம்பேத்கர் எல்லாமே இங்கு பேசப்படுகின்றன. பேசுவோரை நிறுத்த முயற்சிக்காதீர்கள் குமார்.

    உங்கள் கருத்தென்ன? மனுவில் எல்லாமும் கெட்டதல்ல. என்று சொல்லிவிட்டு, அம்பேதகரும் அதேதான் சொன்னார் என்றும் சொல்லிவிட்டு அரவிந்தன் அப்படியே விட்டிருந்தால் பிரச்சினையிருந்திருக்காது. ஆனால்,, அம்பேத்கர் மனுதர்மம் பல நூற்றாண்டுகளாக வாழ்க்கையில் அடித்தட்டில் இருக்கும் தலித்துக்களை நசுக்கியது என்றும் அம்பேதகர் என்றும் சொன்னார் என்கிறார். அதைப்பற்றி ஜெயசீலன் கேள்வி கேட்கிறார், அரவிந்தன் ஒருவர்தான் தமிழ்.ஹிந்து காமில் தலித்துகளைபப்ற்றி எழுதுகிறார். வெளியே நூலகளும் போடுகிறார். அம்பேத்கரைப்பற்றி சிலாகித்து பலவிடங்களில் பேசுகிறார்; திருவான்மியூர் ஆன்மிகக்கண்காட்சியில் அம்பேத்கர் ஸ்டால் போட்டு மனோஜ்குமார் என்ற தலித்துப்பையனுக்கு நான் உள்ளிருந்து போராடவேண்டுமென சொல்கிறார். என்ன பிம்பத்தை அளிக்கிறார் ? அரவிந்தன் இங்கே மனுவை ஏற்கிறார். (எல்லாவற்றையுமல்ல என்று சொன்னாலும், அந்நூல் தலித்துகளை நடுங்க வைக்கிறது என்று தெரியாமலிருக்குமா அவருக்கு?)

    என் கேள்விகள்:

    மனுதர்மம் எல்லாமும் கெட்டதல்ல. ஆயினும் இருப்பவைகள் பல, அல்லது சில (உங்கள் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம்) பல நூற்றாண்டுகளாக தலித்துகளை நசுக்கின. (நான் சேர்த்தது அவற்றில் பல பிராம்ணர்களை உயர்த்தவே எழுதப்பட்டன.)

    இப்படிப்பட்ட சிலபல அங்கும் இங்குமாக‌ இருக்கும் ஒரு நூலை நாம் ஏன் ஏற்க வேண்டும்? அதிலுள்ள நற்கருத்துக்களை நான் ஏன் பிற இந்து நூல்களிலிருந்து எடுத்துக்கொண்டு இந்நூலைப் புறந்தள்ளக்கூடாது? இந்துமதத்தில் நூலகளும் சான்றோர்களுமில்லையா? ஆர் எஸ் எஸ்காரர்களே அதைப்புறம் தள்ளி வைக்கக்காரணமென்ன? (விடை: என் கருத்துக்களோடு ஒத்துப்போவதால்). 25 கோடிகள் தலித்துகளை நோக்கித்தானே வீடு திரும்புதல்? கேரளாவிலும் அலிகாரிலும் ஆக்ராவிலும் தலித்துகளைத்தானே வீடுதிரும்பதல் நிகழ்ச்சியில் பங்கேறக வைத்தார்கள்? அவர்களுக்காகவாவது இந்த நூலை நாம் புறந்தள்ள வேண்டாமா? அப்படிப்புறந்தள்ளும்போது வீடுதிரும்பும் இயக்கத்துக்கு முழுவெற்றி கிடைக்குமல்லவா? தமிழகத்தில் தென் மாவட்டங்கள் முழுவதும் பள்ளர்கள் கிருத்துவத்தில் இருக்க அவர்களை வீடு திரும்புதலுக்கும் கொண்டுவர இந்நூல் தடையாக இருக்காதா? ஏனெனில், அவர்கள் மிசுநோரிகளால் திருப்பப்பட்டார்கள்; அப்போது மிசுநோரிகள் மனுவையும் வருணாசிரத்ததையுமல்லவா சுட்டிக்காட்டினார்கள்? தென் நாட்டைவிட வடமாநிலங்களில் மனுவைப்பற்றி தலித்துகளிடையே பரவலான பேச்சு உருவாக்கப்பட்டது மாயாவதியால் என்று தெரியுமா? மனுவாடிகள் என்ற பெயரே அவர்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியது தெரியுமா? நேற்று; இரு பிராமணர்களுக்கு ஒரே நேரத்தில் பாரத்ரதனா! தலித்துகளுக்கு ஏனில்லை என்று கேட்டிருக்கிறாரே?

    ஆக, மனு இருந்தால் தலித்துகள் இல்லை; தலித்துகள் வேண்டுமென்றால் மனு வேண்டாம். மனுவை ஆதரிப்போர் பிராமணர்களை மக்களில் முதன்மையாக்க வைக்க ஆசைப்படுவோரும். வெஸ்டட் இன்ட்ரஸ்டட் பிராமணர்களுமே.

    நமது முதற்பணி இவ்விருவரையும் மாற்றுவது. பின்னர் எல்லாம் சரியாகிப்போகும். May all join together to make Manu just a historical aberration in the long course of Hindu religion. And you will see, the insurmountable stumbling block to advance the progress of Hindu religion in this day and age, has been removed finally 🙂

    (கிருஷ்ணகுமார், ஓராண்டு இப்பெயரில்தான் இங்கு எழுதுவேன். அடுத்தவாண்டு வேறுபெயர். இதற்கெல்லாம் என்ன காரணம்? என் கருத்துக்கள் படிக்கப்படவேண்டும்; சிந்திக்கப்படவேண்டும் என்ற அவாவே. நான், என் பெயர் எல்லாம் பின் தள்ளப்படவேண்டும். கிருஷ்ணகுமார் யாரென்பதைவிட அவர் என்ன சொல்கிறார் என்பதுதானே மற்றவர்களுக்கு வேண்டும்? நாமெல்லாம் வி ஐ பிக்களா? கி குமார் யாரென்று தமிழக மக்களுக்குத் தெரியாதே? சாதாரணமானவர்கள் என்ற எண்ணமிருந்தால் பெயரைவைத்து நேரத்தைப் வீணடிக்க மாட்டீர்கள்)

  36. அன்புள்ள B S,

    இங்கு பேசுபொருள் தலித் – அம்பேத்கர் – மனுஸ்மிரிதி அல்ல . மாறாக மதன் மோகன் மாளவியா அவர்களைப் பற்றியது. இன்னொன்று, மனு ச்மிரிதி எக்காலத்திலும் இந்தியாவெங்கும் வழக்கில் இருந்ததில்லை. அது இந்துக்களின் புனித நூலும் அல்ல. சுவாமி சித்பவனந்தன்ர் சொன்னது போல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் சட்டம் அடுத்த ச்மிரிதி. அதுவே இப்போது வழக்கில் உள்ளது. நீங்கள் நினைப்பது போல் யாரும் மனு ஸ்மிருதியை தூக்கிப் பிடிக்கவில்லை. எழுத்தாளார் ஜெயமோகன் இது குறித்து தனது வலைத் தளத்தில் நிறைய எழுதியிருக்கிறார். அவற்றைப் படிக்கவும்.

  37. அன்பின் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ

    \\ பெயரைவைத்து நேரத்தைப் வீணடிக்க மாட்டீர்கள்) \\

    ஆமென்.

    ஆனாப் பாருங்க நீங்கள் எந்த பேரில் வந்தாலும் அந்த சுவிசேஷ வாடையும் பின்னூட்டத்தால் இழையின் போக்கை குறுக்குசால் இட்டு இழுத்தடிக்கும் இம்சையும் இடிக்குதே 🙂

    அதன் மூலம் ஒரிஜினலைக் கண்டுபிடித்து விடுகிறார்கள் 🙂

    \\ நேரத்தைப் வீணடிக்க மாட்டீர்கள்) \\

    இந்த அவதாரத்திலேயே கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி இது வரை நாலு வெர்ஷன் ஆகி விட்டது 🙂

    இழையின் தலைப்பை ஒட்டிப் பேசும் வழக்கத்தை எந்த அவதாரத்தில் கைக்கொள்வதாக உத்தேசம்? 🙂

    நீங்க ரொம்பவே நேரத்தை வீணடிக்கிறீர்கள்.

    ரெவ ரெண்டு ஜோ, வேணுமின்னா நீங்கள் தமிழ் ஹிந்து தளத்தில் தனியாக உங்கள் வ்யாசத்தைப் பதிவு செய்து உங்கள் கருத்துக்களை விவாதிக்க விழையலாமே.

    உங்கள் குறுக்குசால் விஷயம் நிச்சயம் பேசப்பட வேண்டிய விஷயமே. ஆனால் இந்த வ்யாசத்தில் அது குறுக்குசால்.

    ஸ்ரீ அ.நீ இந்த விஷயம் சம்பந்தமாக என்னென்ன சொன்னார் என்பது உங்கள் முந்தைய அவதாரங்களின் காலத்தில் இதே தளத்தில் பகிரப்பட்டு உள்ளது. அவதாரம் மாறி விட்டதால் அ.நீ ஏதோ புதிதாக சொல்வது போலவும்……….. ரெவரெண்டு ஜோ ஹிந்து மதத்தை உத்தாரணம் செய்ய…………. பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவுக்கு கொடுத்த வாக்கு தத்தத்தை மறைத்து…….(வேறே பெயரில் இருப்பதால்) ஹிந்து மதத்திற்கு நல்லது செய்ய விழைவது போலவும் பிலிம் காட்ட விழைவது சரியாகுமோ?

    இங்க மெய்யாலுமே பெயர் இடிக்கிறது.

    புரிகிறதா 🙂

    பத்து லக்ஷணத்தனுக்கு ஜெயமங்களம். ஆமென்.

  38. கிருஷணகுமார்!

    என்னுடைய இந்த கருத்தில் எந்தவித துளிகூட மாற்றமில்லை. இந்துமதத்தில் உமக்கு உண்மையிலேயே அக்கறையும் ஆரவமும் தலித்துகள் அனைவரும் இந்துமதத்துக்குத் திரும்பவேண்டும் என்ற ஆசையிருந்தால், என்னுடன் ஒத்துப்போகத்தான் செய்யவேண்டும். இல்லை…இல்லை எனக்கு என் பிராமண ஜாதி மட்டும் போதும், தலித்துக்கள் வேண்டாம் என்ற உணர்வு இருக்குமானால், என் கருத்துகள் உங்களால் தாராளமாக உதாசீனப்படுத்தப்படலாம். ஆனால், அப்படி உதாசீனப்படுத்தும்போது, மிசுநோர்களுக்கும் கிருத்த்வ மதத்துக்கும் இசுலாமுக்கும் உதவுகிறீர்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை: ஆமென், பர்னோண்டோ என்றெல்லாம் சொல்லி ஏமாற்றப்பார்த்தாலும் உங்களை நீஙக்ளே காட்டிக்கொள்வீர்.

    //ஆக, மனு இருந்தால் தலித்துகள் இல்லை; தலித்துகள் வேண்டுமென்றால் மனு வேண்டாம். மனுவை ஆதரிப்போர் பிராமணர்களை மக்களில் முதன்மையாக்க வைக்க ஆசைப்படுவோரும். வெஸ்டட் இன்ட்ரஸ்டட் பிராமணர்களுமே.

    நமது முதற்பணி இவ்விருவரையும் மாற்றுவது. பின்னர் எல்லாம் சரியாகிப்போகும். May all join together to make Manu just a historical aberration in the long course of Hindu religion. And you will see, the insurmountable stumbling block to advance the progress of Hindu religion in this day and age, has been removed finally :-)//

  39. //நான் கேட்கிறேன் – இந்து- இந்துவை ஏமாத்துனா.. முஸ்லிமை எதுக்குக் கேக்கனும்? என்னங்க இது நியாயம்?//

    மத்தவங்க வேதம் ஓதினால் நாக்கை வெட்டு என்கிற ஒன்றையாய் நாம் இப்போது பின் பற்றுகிறோம். இப்போது நடைமுறையில் இல்லாத ஒன்றை நீங்கள் ஏன் கட்டிக்கொண்டு அழுகிறீர்கள். ஆனால் கழுத்தை வெட்டி உலகத்துக்கு காண்பிக்கும் ‘ ஷாரியா ‘ உலகெங்கும் பரவிக் கொண்டு வருகிறதே. அது இந்த நாட்டுக்குள் மீண்டும்அவுரங்கசேப் அவதாரம் எடுத்து வந்தால் அது’ ஜெயசீலன் பாவம் விட்டு விடுங்கள் – அவர் மனுவை எதிர்த்துப் போராடியவர் என்றா சொல்லப்போகிறது?. உங்கள் சுதந்திரம் நிலைக்க வேண்டுமென்றால் தற்போது இதை எதிர்த்து நிற்பதுதான் வழி. முஸ்லிமை எதுக்க கேட்கணுமா ? ஒசாமா பில் லடேனுக்கு தொழுகை நடத்தாமல் இருந்தால் ஏன் கேட்கணும் ? நாங்கள் மனுவை விட்டு விட்டோம். நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள் ஜெயசீலன்

  40. //இங்கு பேசுபொருள் தலித் – அம்பேத்கர் – மனுஸ்மிரிதி அல்ல . மாறாக மதன் மோகன் மாளவியா அவர்களைப் பற்றியது. இன்னொன்று, மனு ச்மிரிதி எக்காலத்திலும் இந்தியாவெங்கும் வழக்கில் இருந்ததில்லை. அது இந்துக்களின் புனித நூலும் அல்ல. சுவாமி சித்பவனந்தன்ர் சொன்னது போல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் சட்டம் அடுத்த ச்மிரிதி. அதுவே இப்போது வழக்கில் உள்ளது. நீங்கள் நினைப்பது போல் யாரும் மனு ஸ்மிருதியை தூக்கிப் பிடிக்கவில்லை. எழுத்தாளார் ஜெயமோகன் இது குறித்து தனது வலைத் தளத்தில் நிறைய எழுதியிருக்கிறார். அவற்றைப் படிக்கவும்.//

    Dear Shankaran!

    இங்கு பேசுபொருள் மாளவியாவுக்குக் கொடுத்த பாரத்ரத்னாவைப்பற்றிகூட இல்லை. விடுதலை மாளவியாவைக் கிண்டலடித்து இழிவு செய்தததால், அரவிந்தன் இக்கட்டுரையை அவர்களுக்கு வைக்கும் பதிலாக எழுதியிருக்கிறார் என்பதை கட்டுரையின் தொடக்கத்திலேயே அறியலாம். அப்படி எழுதும்போது அவர் ஒரு தவற்றைச் செய்கிறார் (என் பார்வையில்). இப்படி எழுதுகிறார்:

    //மனு ஸ்மிருதியில் இருப்பதாலேயே ஒரு விஷயம் கெட்டதாகிவிடாது. மனு ஸ்மிருதி என்பது ஏதோ பத்து கட்டளைகள் போல ஆண்டவன் மேலே இருந்து கொடுத்தது அல்ல. இங்கு நிலவிய சம்பிரதாயங்கள், பண்பாட்டு முறைகள், அரசியல், சமூக அடக்குமுறை இவை அனைத்திலிருந்தும் உருவானதுதான் மனு ஸ்மிருதி//

    ஆக, மனுஸ்மிருதிக்கு ஒரு //ஓ// போட்டு விடுகிறார். ஒருவேளை அதை நிர்பந்தமாக செய்கிறார் எனலாம். அதாவது அவசியமாகிறது விடுதலைக்குப் பதில் சொல்ல. ஆனால், பின்னூட்டத்தில் அம்பேத்கர் சொன்னதாகவும் சொல்லி விட்டார். அம்பேத்கர் சொன்னது உண்மை. அவருக்கு ஜெயசீலன் அம்பேத்கர் அதனோடு சேர்த்துச் சொன்னதையும் காட்டினார். அதற்குப் பதில் அம்பேதகரின் தொடர்கருத்தை ஆமோதிப்பதோடு முடியவேண்டும். ஆனால் ஜயசீலனை மறுக்கிறார். கடைசியில் விடுதலைக்குப் பதில் சொLLAப்போனவர், மனுவைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். கட்டுரையும், பின்னூட்டமும் அவர் எழுதியதே. என பதில்கள் கிருஷ்ணகுமாருக்குப் போட்டவையே. அதாவது, தலித்துகள் நலம் வேண்டுமென்றால், மனு தேவையில்லை அதில் பல நற்கருத்துக்கள் இருப்பினும்.

    மாளவியாவுக்குக் அளிக்கப்பட்ட பாரத்ரத்னாவைப்பற்றி என் கருத்தைப் போட்டுவிட்டேன். அதாவது, அவரை மோடி அரசு அவமானப்படுத்திவிட்டது. நேதாஜியை உ பி ஏ அரசு அவமானப்படுத்த முயன்ற போது அவர் உறவினர்கள் தடுத்தார்கள்; வங்கமக்கள் தடுத்தார்கள். காந்திக்கு என்ற போது காந்தியாளர்கள் கோபம் கொண்டார்கள். இப்பட்டத்தினால் அவர் பெரியவராகிவிடவில்லை. மாளவியாவுக்கு யாருமில்லை. இக்கருத்து இக்கட்டுரையாசிரியருக்குத் தோன்றா ஒரு புது பரிணாமம்.

    மாயாவதியின் கருத்தையும் நான் ஆமோதிக்கிறேன். ஒரே பிராமணர்களாகவே இந்த பாரத்ரத்னா பட்டியலில். அம்பேத்கரைத் தவிர எவரும் தலித்துகளில்லை. மோடி இந்தக் கறையை அகற்ற முற்படவேண்டும்.

    போகட்டும், நீங்களே மனுவைப்பற்றிய விளக்கத்தையும் அதாவது உங்கள் நிலையைச் சொல்லிவிட்டீர்கள்.அதுவே எல்லாருடைய நிலையாகவும் இருக்கட்டும் என்பதே என் அவா. அந்த நிலை வெட்டிப்பேச்சுகளுக்கு முடிவு.

    எவரும் ஆதரிக்கவில்லையென்று சொன்னீர்கள். இத்தளத்திற்குப்புதியவர் போலும். பல கட்டுரை பின்னூட்டங்களில் மனு ஆதரவு போடப்பட்டிருக்கின்றன. சாதியைப்பற்றிய கட்டுரைகளிலும் பின்னூட்டங்கள் போட்ட பலர் நாங்கள் எங்கள் உயர்ஜாதித்தன்மையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று எழுதியிருக்கிறார்கள். ஒரு பக்கம் உங்களைப்போன்றோர்; இன்னொரு பக்கம் அவர்களைப்போன்றோர். அவர்கள் எண்ணிக்கை குறையட்டும் என்று மட்டும் இறைவனை வேண்டிக்கொள்ளலாம். வேறென்ன செய்ய?

    நன்றி.

  41. //நாங்கள் மனுவை விட்டு விட்டோம். நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள் ஜெயசீலன்
    //

    Well done! Well said!!

    Let both Krishnakumar and Aravindan also say that.

  42. Reverend BS ” Vedam oothukirathu” !!!!!! He has an off sider in JS. Hindus have not bothered about Manu Smriti for yonks and this Manu Smriti, as everyone knows,was not/is not, binding in his time or now. This article is about Shri Malviya. Stay on this topic. If BS and co want discussion on Manu, please pen an article and we will be happy to respond. Sharia and it’s implications are more relevant and urgent than the forgotten Manu Smiriti. BS, you can also write an article on the blood thirsty God, and on violence, found all over the place in your Old/New Testament (and Quran.) Of course, JS will help you out.That will be an eye opener.
    Amen, Reverend.

  43. இதற்கெல்லாம் விளக்கம் கொடு என்று கேட்பதெல்லாம் வீண் வேலை. ஏதோ இவர்கள்தான் சமூகநீதியின் ஒட்டுமொத்த குத்தகைகாரர்கள் போல ஒரு பம்மாத்து இருந்தாலும் இவர்களின் யோக்கியதை தெளிவுபடுத்த மட்டுமே இந்த விளக்கம். “மனுஸ்மிருதியில் இருப்பதாலேயே ஒரு விஷயம் கெட்டதாகிவிடாது” என்று சொன்னால் மனுஸ்மிருதியில் இருப்பதெல்லாம் கெட்டதல்ல என்று பொருள் கொள்வது அக்மார்க் அயோக்கியத்தனம். அல்லது அடிமுட்டாள்தனம். “நல்ல புத்தகத்தில் இருப்பதாலேயே ஒரு விஷயம் கெட்டதாகிவிடாது” என்று எவரும் சொல்ல மாட்டார்கள். “பல மோசமான விஷயங்கள் உள்ள புத்தகத்தில் சொல்லப்பட்டதாலேயே ஒரு விஷயம் மோசம் என்று சொல்லிவிட முடியாது” என்று சொல்லலாம். ஒரு மோசமான கருத்தியல் கொண்ட புத்தகத்திலும் சில நல்ல விஷயங்கள் இருக்கலாம் என்பதுதான் அதன் பொருள். மேலும் இங்கு பேசப்படுவது மனுஸ்மிருதியின் சமூக அமைப்பு குறித்ததல்ல. மனுஸ்மிருதியில் கடல் கடந்து செல்ல இருக்கும் தடை குறித்து. இது ஒரு உள்நோக்கிய சமூகத்தின் பண்பு. இதை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் தீண்டாமையை அல்லது சாதியத்தை ஏற்றுக்கொள்வார் என்பது அவசியமல்ல. இது நிச்சயமாக இங்கே முற்போக்கு அரிதாரம் பூசி ஆடும் போலிகளுக்கான தந்நிலை விளக்கமல்ல. அவர்களின் பாசாங்குத்தனத்தை திசை திருப்பும் வெட்கம் கெட்ட தந்திரத்தை வெளிப்படுத்த கொடுக்கப்படும் இறுதி எதிர்வினை மட்டுமே.

  44. யாருமே அனுசரிக்காத மனு ஸ்ம்ருதியை ஒட்டு மொத்த ஹிந்து மதம் அல்லது ஒரு ஜாதியினர் இன்றளவும் அனுசரிப்பதாக புளுகுவது தரம் தாழ்ந்த செயல். மனு ஸ்ம்ருதி என்ற தலைப்பை மட்டிலும் படித்து விட்டு மனு ஸ்ம்ருதியை கரைத்துக் குடித்தது போல கோஷம் போடுவது அதை விடத் தரம் தாழ்ந்த நேர்மையற்ற செயல்.

    இழையில் பேசப்படும் முக்ய விஷயத்தை மிக முனைப்பாக புறந்தள்ளி வ்யாசத்தில் ஒரு சிறு குறிப்பாகப் பேசப்பட்ட விஷயத்தை………… அது தான் வ்யாசத்தின் சாரம் என்ற படிக்கும்……… அதுவும் முற்று முழுதாக கருத்துக்களை திரித்தும்……………. அடுத்தவர் சொல்லாத கருத்துக்களை அடுத்தவர் சொன்னதாக விதண்டா வாதம் செய்வது மிகவும் தரம் தாழ்ந்த செயல்.

    கூசாமல் ஒரே தளத்தில் பல முறை பெயரை மாற்றி கருத்துப் பகிரும் அன்பர் அவர்களுக்கு இப்படிப்பட்ட செயல்பாடு புதிதும் அல்ல.

    எந்த ஒரு விவாதத்திலும் இந்த அன்பர் இழையை ஒட்டித் தன் கருத்தை பதிந்ததும் கிடையாது. மேலும் இழை பேசும் விஷயத்தை மிக முனைந்து தவிர்த்து….. கருத்துத் திரிபுகளுடன் கூடிய முடிவில்லா விதண்டாவாதம்……….. இந்த அன்பர் அவர்கள் பங்கு பெற்ற எல்லாப் பெயர்களிலும் காணப்படும் பொதுவான செயற்பாடு.

  45. திரு அரவிந்தன் நீலகண்டன் on January 6, 2015 at 7:53 am – இதற்கு மேல் பதில் கொடுத்து அ.நீ பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். ————————-ஆச்சாரவாதிகளை தனிமைப்படுத்தாமல் சமூக சீர்திருத்தங்களை ஏற்க வைக்கும் கடுமையான பணியை அவர் ஏற்றெடுத்தார். முற்போக்கான சட்டங்கள் இயற்றப்படும் போது ஆச்சாரவாதிகளுக்கு அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவர் உருவாக்கினார். தேச விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தான் இந்த பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டிருப்பது பல்கலைக்கழகத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதை அறிந்ததும் அவர் பல்கலைக்கழக பொறுப்பை டாக்டர்.ராதாகிருஷ்ணனுக்கு அளித்து கொண்டு தாம் விலகிக் கொண்டார். ——மனதில் உயர்ந்து விட்டிர்கள் திரு அ.நீ

  46. மாளவியா gave up his law practice to further the cause of education and social service in 1911. But he went back on his vow to quit law when 177 freedom fighters were convicted to be hanged in the Chouri-choura case. His efforts got 156 freedom fighters acquitted.

  47. A close student of constitutional questions, Malaviya formulated his views on the federal system of Government for India in his evidence before the Decentralisation Commission in 1908:

    “The unitary form of Government which prevails at present should be converted into the federal system. The Provincial Governments should cease to be mere delegates of the Supreme Government, but should be made semi-independent Governments. A similar proposal was, I believe, put forward before the Government about the time when Lord Mayo determined to invest Provincial Governments with a share of financial responsibility in order to minimise the evils of over-centralization”

  48. Most Rev. Rama!

    That is a fine reply: that’s all I want. Hindus don’t bother about Manu. Thank you very very much.

    The non-bothering should be 100%. The statement made by Aravindain inside the article and reiterated in comments – Not all that is written in Manu is bad – should be avoided. Ok? BTW: I don’t understand the meaning of the abbreviations JS you used more than once? What’s that?

    I am happy I am finally taking all in my side. I am dead against Manu. Krishnakumar too should pitch in with his support to me. Waiting…

    Amen. Reverendu.

  49. அரவிந்தன் நீங்க ஒரு வி ஐ பி. அதாவது ஊருக்குத்தெரிந்த நபர். மெத்தப்படித்தவர். நான் ஒரு எளியவன். பாமரன். என்னை எவருக்குமே தெரியாது. நீங்க நாகர்கோயில், சென்னை, கோவை என்று போவீர்கள். நான் வாடிப்பட்டி, கல்லுப்பட்டின்னு போயி பள்ளர்களையும் பறையர்களையும் பார்ப்பவன். இம்மானுவேல் சேகரனிலிருந்து எங்கு நோக்கினும் கிருத்துவர்களையே காண்கிறேன். மதுரை நகரத்துக்கு அப்பால், தூத்துக்குடி, போன்ற ஊர்களுக்கும் அதைச்சுற்றி இருக்கும் கிராமங்களுக்கும் போனால், தலித்துகள் மட்டுமல்ல பிறரும்சேர்ந்த‌ பெந்தோகொஸ்தே சபைகள் களைகட்டுகின்றன. சுவர்கள் ”ஆன்ம எழுப்புதல் கூட்டங்கள் இயேசு அழைக்கிறார். என்றுதான் கூவும். செத்த புத்தகம் படிக்கிறத விட்டுட்டு ஒரு நடை வந்து பார்க்கிறேளா? தெரியும்.

    இப்படிப்பட்ட தலித்துகளை நேரில் பார்த்துப் பழகியவர் எவரும் நான் சொல்வதைதான் சரியென்பார். போலி, பாசாங்கு, தந்திரம் என்பனவெல்லாம் உங்கள் தலையில் நீங்களே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயல்கள். என்னை எதிர்த்து நகையாடுவோர் கூட்டத்தில் சேரவேண்டாம். உங்களை அறிவாளி என நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆட்களைப்புரிந்த பின்னரே தீர்ப்பு கொடுப்பவன் அறிவாளி. இல்லையா!

    தலித்துகளுக்காக‌ கொஞ்சம் அதிகம் கரிசனம் கொள்ளுங்கள் சார். மனோஜ் குமாருக்கு நீங்கள் சொன்னதென்ன? இங்கே எழுதியது என்ன ?

    //மனு ஸ்மிருதி என்பது ஏதோ பத்து கட்டளைகள் போல ஆண்டவன் மேலே இருந்து கொடுத்தது அல்ல. இங்கு நிலவிய சம்பிரதாயங்கள், பண்பாட்டு முறைகள், அரசியல், சமூக அடக்குமுறை இவை அனைத்திலிருந்தும் உருவானதுதான் மனு ஸ்மிருதி//

    இதை எழுதியபிந்தான் வெளிநாடு செல்லும் தடையைப்பற்றி எழுதுகிறீர்கள். இதுகூட தப்பு சார். இது மனுவுக்குச் சாமரம் வீசுகிறது சார். தயவுசெய்து பண்ணாதீங்க. என்னடா இப்படி எழுதற ஆளை நம்பலாமா என்றுதானே மனோஜ் குமார் நினைப்பார்?

    சரி விடுங்க. இங்கே மனுவைப்பற்றி ஆராய்ச்சியில்ல. ஒத்துக்கிறேன். இன்னொரு இடம் வரும். பேசுவோம்.

    எனக்கு ரொம்ப படிப்பு கிடையாது. உங்களுக்கு நிறைய. ஆனால் எங்கிட்ட ஒன்னே ஒன்னு இருக்கு: கரிசனம். அது உங்ககிட்டயும் இருக்குன்னு பல கட்டுரை எதிர்வினைகள் பலவற்றை நம்பிya எனக்கு ஷாக்காகி விட்டது.

    மேலும் ஷாக் கொடுக்கமாட்டீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

    இத்துடன் எனது எதிர்வினைகளும் முடிந்தன. நன்றி.

    I am writing in Swarajya mag also where I have strongly opposed Jadayu writing on ghar vapasi and told its readers that the right person to have authored the article is YOU. So strong my trust in you when it comes to dealing with dalits in Hindu religions ! And your assurance to Manoj Kumar that WE OUGHT TO FIGHT WITHIN means we must fight all the sources against fair treatment of Dalits. And, one of the source is Manu, dear Aravindan. Accept that at least now. Write there about Manu. We will discuss there in English, a language in which you are a master ! I expect a lot from you and you will definitely help bring all tamil dalits back to Hindu religion. You have the heart while others play false with the task!

    With regards

    BS

  50. அரவிந்தன் நீலகண்டன் ”இதற்கெல்லாம் விளக்கம் கொடு என்று கேட்பதெல்லாம் வீண் வேலை” என்பது உங்கள் பார்வையாக இருக்கலாம். ஆனால் நான் கேட்ட ஆதாரத்தை தருவதில் என்ன பிரச்சினை? அம்பேத்கரின் எந்த தொகுப்பில் இந்த குறிப்பு வருகிறது?

  51. @RV ambedkar iranthu ethanai varudam kazhithu avarukku bharat ratna viruthu koduka pattathu apothu yen yaarum intha kelviyai ezhupa villai.4 murai congress thalaivaraga irunthavarukku bharat ratna kodukapattathil enna arasiyal thayavu seithu vilakka mudiyuma adiyen sonnal vilangi kolven.

  52. I like this. today J.mo article;
    ஈவேரா அவர்கள் பிறந்த, பெரும்பாலும் பணியாற்றிய அவரது மண் அவர் மறைந்து இத்தனை நாட்களுக்குப்பின் எப்படி இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் போல காலம் கடந்து நிற்கும் சான்று இன்னொன்று இல்லை.

    ஈவேரா பாடுபட்டது முழுக்க முழுக்க இந்த இடைநிலைச் சாதிகளின் மேலாண்மைக்காக என்பதே உண்மை. இவர்களிடம் தங்கள் சாதிப்பற்றைக் கைவிடும்படி அவர்கள் சொல்லவில்லை. மாறாக இவர்கள் தங்கள் ஆதிக்கச் சாதிவெறியை தக்கவைத்துக்கொள்ள மிகச்சிறந்த திரை ஒன்றை அவர் அமைத்துக்கொடுத்தார் – பிராமண வெறுப்பு.

    ஆகவேதான் அவர்கள் அவரைக் கொண்டாடினர். பெரியார் பிறந்த மண் என தங்கள் மண்ணை மேடைமேடையாக முழங்கினர். பெருமாள் முருகனே அப்படி முழங்குவதைக் கேட்டிருக்கிறேன்.

    ஈவேரா எந்த சாதியொழிப்பையும் கொண்டுவரவில்லை. எந்த மக்களிடமும் சிறிய அளவிலான மனமாற்றத்தையும் கொண்டுவரவில்லை. சாதிவெறியை திறமையாக மறைக்க, பிராமணர்களால் பாதிக்கப்ப்ட்டவர்கள் என்ற மாய்மாலத்தைச் செய்ய இடைநிலைச்சாதிகளை கற்பித்தார்.

    அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்து அந்தத் திரை கொஞ்சம் விலகுகிறது. அதையும் மழுப்பவே பெரியாரியர்கள் முயல்கிறார்கள். ஆனால் அதைத் தாண்டி உண்மை பல்லிளிக்கவே செய்யும்.

    ஜெ

  53. அரவிந்தன் நீலகண்டன், ரொம்ப நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
    அம்பேத்கர் மனுதர்மம் குறித்து சொன்னதாக நீங்கள் குறிப்பிட்ட இந்த வாசகங்கள் எந்த தொகுப்பில் இது உள்ளது என்று நீங்கள் இதுவரை சொல்லவில்லை. தயவுசெய்து சொல்லுங்க…

  54. இம்மாதிரியான விசயங்களை ஏன் பிஜேபி பாமருக்கும் புரியும் படி சொல்வதில்லை ?
    ஊடகங்கள் நடத்துவதும் இந்தியாவில் தானே கட்டுபடுத்த முடியாதா ?
    அரசு ஒரு சட்டம் கொண்டு வரமுடியாதா ?
    ஊடகங்கள் தங்களின் எல்லையை அறிந்து செயல் படாவிட்டால் அவர்களது பிள்ளைகளும் நாளை பிரமததவரால் தொல்லைகுட்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ?

  55. ஐயா அரவிந்தன்., எனது கேள்வி இன்னும் பதிலுரைக்கப் படாமல் உள்ளது என்பதை உங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

  56. ஐயா., அரவிந்த நீலகண்டன், என் கேள்விக்கு ஏன் பதிலுரைக்காமல் இருக்கிறீர்கள்? ஏறக்குறைய மூன்று மாதங்களாக காத்திருக்கிறேன் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *