தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 4 (வேண்டும் பா.ஜ.க)

<< முந்தைய பதிவு

டந்த 3 பதிவுகளிலும் இனவெறுப்பும், ஊழல்களும், ரவுடித்தனமும், குடும்ப அரசியலும், அராஜகங்களும், பகட்டும், நிரம்பிய அருவருப்பான தி மு க வையும், ஆணவமும், திமிரும், ஊழலும், பயங்கரவாத ஆதரவும், செயலின்மையும் நிரம்பிய அதிமுகவையும் இந்திய தேச விரோதமும், கொள்ளைகளும், கொலைகளும் நிரம்பிய மூன்றாவது அணியையும் ஏன் நாம் கண்டிப்பாக விலக்க வேண்டும், ஏன் தி முகவுக்கும், அதிமுகவுக்கும், விஜயகாந்த் தலமையிலான கூட்டணிக்கும் ஓட்டுப் போடக் கூடாது என்பதை விரிவாக அலசினோம். இப்பொழுது போட்டியில் மீதமிருக்கும் இரு கட்சிகளான பா ம கவையும், பா ஜ க வையும் அலசி விட்டு நமது இறுதித் தேர்வை தீர்மானம் செய்யலாம்.

ராமதாஸ் தலமையிலான பாட்டாளி மக்கள் கட்சி தெளிவான செயல் திட்டத்தை அளித்திருப்பதாகவும் அதன் முதல்வர் வேட்ப்பாளர் அன்புமணி தெளிவாகப் பேசுவதாகவும் அவர்களது பிரசாரமும் அவர்களது தேர்தல் அறிக்கையும் ஆக்கபூர்வமாக இருப்பதாகவும் பலரும் நினைத்துக் கொண்டு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
உண்மையில் பா ம க எப்பொழுதுமே சொல்லுவது ஒன்றும் செய்வது ஒன்றுமான கட்சி. அதன் தலைவர் ராமதாஸ் என் குடும்பத்தில் யாரும் தன் கட்சிப் பதவிகளுக்கு வர மாட்டார்கள் வந்தால் என்னை செருப்பால் அடியுங்கள் என்றார். ஆனால் உண்மையில் அவரது மகன் முன்னிறுத்தப் பட்டு சென்ற காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக ஆக்கப் பட்டார். இப்பொழுது முதல்வர் வேட்ப்பாளாரக நிறுத்தப் பட்டிருக்கிறார். திமுக, அதிமுக, விஜயகாந்த் கட்சிகளைப் போலவே இன்னொரு குடும்பக் கட்சி பா ம க. வாரிசு அரசியலைப் பிரதானப் படுத்தும் கட்சிகள் ஊழலுக்கே சென்று சேரும். பா ம க ஊழல் கறை படிந்த ஒரு கட்சியும் கூட. ஒரே ஒரு முறை மத்திய மந்திரிசபையில் அமைச்சராக இருந்த அன்பு மணி மீது ஏராளமான ஊழல் குற்றசாட்டுக்கள், வழக்குகள். முறையற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தல், மருந்து மாத்திரைகளை தன் பினாமி கம்பெனி மூலமாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு விற்றல் என்று தன் துறையில் கிடைத்த வாய்ப்புக்கள் அனைத்திலும் ஊழல் செய்தவர் அன்புமணி. அவர் மீது சிபிஐ வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவர்தானா தமிழ் நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறவர். ஆகவே அவர் முதலில் தன் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து வெளியே வரட்டும் அதன் பிறகு அவரைப் பரீசீலிப்பதா இல்லையா என்பதைப் பார்க்கலாம்.

பா ம க வன்னியர்களுக்கான ஒரு ஜாதிக் கட்சி. அது வன்முறையை கடைப்பிடித்து பிற சமூகத்தினரிடம் அச்சம் ஏற்படுத்தும் ஒரு வன்முறையான கட்சி. அவர்கள் கட்சிக் கூட்டத்தில் அவர்களது எம் எல் ஏ வே மிகவும் ஆபாசமாப பேசுகிறார் அதை ராமதாஸும் அவரது மகனும் கை தட்டி வரவேற்கிறார்கள். தமிழ் நாட்டில் ஏற்கனவே பசுமை குறைவு, மரங்களின் அடர்த்தி குறைவு. இந்த வன்முறையான கட்சி தமிழ் நாட்டின் பல ஆண்டுகள் நன்கு வளர்ந்திருந்த லட்சக்கணக்கான மரங்களை வெட்டிய அயோக்கியர்கள்.

ஆக குடும்ப அரசியலிலும், வன்முறை அரசியலிலும், ஊழல்களிலும், சூழலை அழிப்பதிலும் ஊறியுள்ள இந்தக் கட்சியும் கண்டிப்பாகப் புறக்கணிக்கப் பட வேண்டிய ஒரு கட்சியே. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி மத்திய அரசில் அன்புமணி ஊழல்களில் ஈடுபட்டாரோ அது போலவே இவர்கள் குடும்பத்தினரும் ஜாதியினரும் தமிழ் நாட்டு அரசியலும் ஊழல்களில் ஈடுபடுவார்கள். இவர்கள் ஜாதி வன்முறை இன்னும் அதிகரிக்கும். ஆகவே இவர்களது போலியான பொய்யான பிரசாரங்களில் மயங்கி எவரும் ஆதரித்து விடாதீர்கள். எச்சரிக்கையுடன் இருங்கள்.

கருணாநிதிக்கு வயது 94 ஆகின்றது. பேசவோ, நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை. அவரது விரலைக் கூட யாராவது தூக்கித்தான் பிடித்துக் காட்ட வேண்டியிருக்கிறது. வாய் குழறுகிறது. சிந்தனை செயல்களில் கோர்வையில்லை. முதுமையின் உச்சத்தில் இருக்கிறார். எந்தவொரு வளர்ந்த ஜனநாயக தேசத்திலும் இப்படி ஒரு வயதான பதவி வெறி பிடித்த ஊழலும் அராஜகமும் நிறைந்த ஒரு ரவுடியை எவரும் எந்தப் பதவிக்கும் பரிசீலிக்க மாட்டார்கள். ஜெயலலிதாவுக்கும் உடல் நலன் சுத்தமாக சரியில்லை. மக்களை அணுக முடியவில்லை. கடும் உழைப்பும் கவனமும் கோரும் தமிழ் நாட்டுத் தலமைப் பொறுப்புக்கு அவரும் முற்றிலும் அருகதையற்றவராகி விட்டார். விஜயகாந்துக்கும் அதே உடல் மற்றும் மனநோய் பிரச்சினையுள்ளது. புத்தி தவறிய எவரையும் எந்தநாட்டிலும் எந்தப் பதவிக்கும் கருதப் போவதில்லை. மீதமிருப்பதில் அன்புமணி மட்டுமே ஆரோக்யமாக உள்ளார் ஆனால் அவரது ஊழல்களும் ஜாதி அரசியலும் வன்முறை போக்குகளும் அவரையும் எந்தப் பதவிக்கும் அருகதையற்றவாராக்குகின்றன.

ஆக தமிழ் நாட்டு வாக்காளர்கள் முன் மீதம் இருக்கும் ஒரே ஒரு தேர்வு பாரதிய ஜனதாக் கட்சி மட்டுமே. அது மட்டுமே தமிழ் நாட்டை ஆட்சி செய்யும் முழுத் தகுதியுடைய ஒரே கட்சியாக விளங்குகிறது. ஆகவே தமிழ் நாடு அழிவுப் பாதையில் இருந்தும், ஊழல்களின் பிடியில் இருந்தும், வன்முறைகள் பயங்கரவாதப் பிடிகளில் இருந்தும், அழிந்து கொண்டிருக்கும் கல்விகளில் இருந்தும், சூழல் அழிவுகளில் இருந்தும், கடன்களில் இருந்தும் விட்டு விடுதலையாகி வளர்ச்சிப் பாதையில் சென்று ஒளி மயமான ஒரு எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டு வாக்களர்களின் முன்னால் இருக்கும் ஒரே ஒரு தேர்வு பா ஜ க கட்சி மட்டுமே. எதற்காக பாஜக வைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மேலும் விளக்கமாகக் காணலாம்.

bjp_tn_ad

பா ஜ க எந்த வகையில் முந்தைய நான்கு கட்சிகளை விட வேறு பட்டது?

1. திமுக, அதிமுக, விஜயகாந்த், ராமதாஸ் கட்சிகளைப் போல குடும்ப அரசியல் கட்சி பா ஜ க அல்ல. அது முழுக்க முழுக்க அர்ப்பணிப்புள்ள தொண்டர்களாலும் தலைவர்களாலும் செலுத்தப் படும் ஒரு முழுமையான ஜனநாயகக் கட்சியாகும்.

2. கருணாநிதியின் பிரும்மாண்டமான ஊழல் குடும்பம் மனைவிகள். துணைவிகள், மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் என்று ஊழல் செய்து பல தலைமுறைக்கு சேர்க்க வேண்டிய கட்டாயம் பா ஜ கவுக்குக் கிடையாது. ஜெயலலிதாவைப் போல உடன் பிறவா சகோதரியாகிய தோழி சசிகலா போல அரசு சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் தோழிகள் பா ஜ க வில் கிடையாது. விஜயகாந்தைப் போல மச்சான் அரசியல் பா ஜ க வில் கிடையாது. ராமதாசைப் போல குடும்ப ஜாதி அரசியல் பா ஜ கவுக்குக் கிடையாது.

3. ஜெயலலிதாவைப் போல ஆணவம் பிடித்த தலைவர் எவரையும் பா ஜ க வில் காண முடியாது. கருணாநிதியைப் போல பகட்டும் புகழும் தேடும் அரசியல்வாதிகள் பா ஜ க வில் கிடையாது. விஜயகாந்தைப் போல நிதானம் தவறிய தலைவர்கள் பா ஜ கவில் கிடையாது.

4.நான்கு கட்சிகளில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள். பா ஜ கவின் தமிழகத் தலைவர்கள் எவர் மீதும் ஊழல் குற்றசாட்டுக்கள் கிடையாது.

5. வெள்ளத்தின் பொழுது கூட உதவி செய்ய வராதவர்கள் இந்தக் கட்சிக்காரர்கள். ஆனால் பா ஜ க வின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் ஊழியர்களே சென்னையின் பெரு வெள்ளத்தின் பொழுதும் சுனாமி போன்ற பேரிடர்களின் பொழுதும் மக்களுக்காக முதலில் களத்தில் இறங்கி உழைப்பவர்கள். மக்கள் பணிக்காகவே தங்களை அர்ப்பணித்துள்ளவர்கள் பா ஜ க வினர்

6. மக்கள் அணுக முடியாத உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கும் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் போல் அல்லாமல் எந்தவொரு சாதாரணக் குடிமகனும் எந்த நேரத்திலும் எந்தவொரு பி ஜே பி தலைவரையும் ஃபோன் மூலமாகவோ, இமெயில் மூலமாகவோ, ட்விட்டர் மூலமாகவோ, ஃபேஸ்புக் மூலமாகவோ தங்கள் குறைகளுக்காக அணுகலாம் அவர்கள் குறைகள் தீர்க்கப் படும்

7. தமிழ் நாட்டின் இந்த நான்கு கட்சிகளுமே மாநில வளர்ச்சிக்கு செயல் படாத கட்சிகளே. அவர்கள் ஊழல்களிலும் பணம் சேர்ப்பதிலும் சாராயம் விற்பதிலும் மட்டுமே அனுபவம் உள்ளவர்கள் ஆனால் பி ஜே பி மட்டுமே தான் ஆட்சி செய்த பிற மாநிலங்களிலும் இப்பொழுது மத்திய அரசிலும் வளர்ச்சித் திட்டங்களை செயல் படுத்தி நிரூபித்த அனுபவம் உள்ள ஒரே கட்சியாகும். ஆகவே தமிழ் நாடு முன்னேற வேண்டுமானால் தக்க அனுபவம் உள்ள பி ஜே பி யே மக்களின் முன் உள்ள ஒரே தீர்வாகும்

8. தமிழ் நாட்டின் நீராதாரங்களை தி மு க, அதிமுக ஊழல் ஆட்சிகள் அழித்து விட்டன. தமிழ் நாட்டின் மரங்களை வன்முறைக் கட்சியான பா ம க வெட்டி சாய்த்து விட்டன. திமுக அதிமுகவினர் ஆற்று மணல்களையும், கிரானைட் மலைகளையும் அழித்துக் கொள்ளையடித்து தமிழ் நாட்டின் இயற்கை வளங்களைச் சூறையாடி விட்டனர். ஆனால் பி ஜே பி நாட்டின் இயற்கை வளர்ங்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதிலும் நீர் வளங்களை மேன்மைப் படுத்துவதிலும் முன்ணணியில் நிற்கும் ஒரே கட்சியாகும்

9. தமிழ் நாட்டின் அனைத்து கட்சிகளும் ஓட்டுக்காக இஸ்லாமிய பயங்கரவாதங்களை ஆதரித்து வருகின்றனர். பி ஜே பி மட்டுமே இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் பயங்கர்வாதத்தையும் கடுமையாக எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் ஒரே கட்சியாகும்

10. தமிழ் நாட்டின் பிற நான்கு கட்சிகளும் கடுமையான இந்து வெறுப்பு உடைய கட்சிகளாகும். இந்துக்களுக்கு எதிராக அவர்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் வெளிப்படையாகவே பேசுகின்றன. இந்து மதத்தை ஒழிக்க வெறி பிடித்து அலையும் கட்சிகள் இவைகள். இந்துக் கோவில்களின் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் கட்சிகள் இவைகள். பா ஜ க மட்டுமே இந்து மதத்தின் மேன்மைக்காகவும், இந்துக்களின் நன்மைகளுக்காகவும், கோவில்களின் பாதுகாப்புக்காகவும் போராடி வரும் ஒரே ஒரு கட்சியாகும்

இன்னும் ஆயிரக்கணக்கான வேறுபாடுகளை தமிழ் நாட்டின் பிற கட்சிகளுக்கும் பா ஜ க வுக்கும் சொல்லிக் கொண்டே போகலாம். அனைத்து விதங்களிலும் மிகவும் வேறுபட்ட உன்னதமான ஒரு கட்சி பா ஜ க கட்சியே. ஆகவே அழிவு சக்திகளான நாசகார சக்திகளான இந்து விரோத சக்திகளான மக்கள் விரோத சக்திகளான ஊழல் சக்திகளான வன்முறை சக்திகளான திமுக, அதிமுக, மநகூ, பாமக கட்சிகளை விட மிகவும் வேறுபட்ட மிகவும் ஆக்கபூர்வமான கட்சியான பி ஜே பியைத் தேர்ந்தெடுப்பதே இன்று தமிழர்கள் முன்னால் இருக்கும் ஒரே தீர்வாகும்

பிற கட்சிகளை விட மாறுப்பட்டு இருப்பதினாலேயே பி ஜே பியை மக்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் அவர்கள் இது வரை என்ன செய்திருக்கிறார்கள் என்று கேட்கலாம். தாங்கள் ஆளும் மாநிலங்களிலும், மத்திய அரசிலும், தமிழ் நாட்டுக்காகவும் பி ஜே பி இது வரை செய்துள்ள சாதனைகள் எண்ணற்றவை. அவற்றையும் நான் சுருக்கமாக எனது அடுத்த பதிவில் பட்டியலிடுகிறேன்.

ஆக தமிழ் நாட்டு வாக்காளர்கள் தங்கள் நலனுக்காகவும் தங்கள் பிள்ளைகளின் நலனுக்காகவும் ஒட்டு மொத்தத் தமிழ் நாட்டின் நலனுக்காகவும் வாக்களிக்க வேண்டிய கட்சி பாரதிய ஜனதா கட்சி. வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் தாமரை. தமிழ் நாட்டில் தாமரை மலரட்டும். அதன் பிணிகள் அகலட்டும். பீடைகள் விலகட்டும். ஒளி பிறக்கட்டும். பா ஜ கவின் சாதனைகளை அடுத்த இறுதிப் பதிவில் பட்டியலிட்டு எனது வேண்டுகோளை நிறைவு செய்வேன்.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

bjp_tn_ad_1

2 Replies to “தமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 4 (வேண்டும் பா.ஜ.க)”

  1. so far Tamil Nadu have voted for DMK and/or AIADMK. So far these parties have not made any good for the people of Tamil Nadu, but only blaming each other day in and day out. The only major party in the forth coming election is BJP and they will definitely bring good to the people of Tamil Nadu. I request everyone to vote for BJP and bring fortune to the people of Tamil Nadu. All the best.

  2. ///////எந்தவொரு பி ஜே பி தலைவரையும் ஃபோன் மூலமாகவோ, இமெயில் மூலமாகவோ, ட்விட்டர் மூலமாகவோ, ஃபேஸ்புக் மூலமாகவோ தங்கள் குறைகளுக்காக அணுகலாம் அவர்கள் குறைகள் தீர்க்கப் படும்/////
    .
    ஆக , எந்த ஒரு தலைவரையும் நேரில் சந்திக்கமுடியாது. மின்னஞ்சல் மூலம் சந்திக்கலாம் என்று சொல்ல வருகிறீர்கள். அவர்கள் மக்களை நேரில் போய் சந்திக்க மாட்டார்களாம். நாம் தான் அவர்களை மின்னஞ்சல் மூலம் சந்திக்க வேண்டுமாம். அடப் பாவமே!. தமிழ் நாட்டிலுள்ள சில பிஜேபி தலைவர்கள் மின்னஞ்சல் அனுப்பினாலும் கண்டுக் கொள்வதில்லை.SPAM ல் தள்ளிவிடுகிறார்கள். அது தெரியுமா உங்களுக்கு?

    //////தமிழ் நாட்டின் இந்த நான்கு கட்சிகளுமே மாநில வளர்ச்சிக்கு செயல் படாத கட்சிகளே//// அட, அவைகளாவது மாநில் வளர்ச்சிக்கு செயல்படாத கட்சிகள். இந்த பிஜேபி தனது வளர்ச்சிக்கே செயல்படாமல் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருக்கும் கட்சியாக உள்ளதே. அதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்? ///////பா ஜ கவின் தமிழகத் தலைவர்கள் எவர் மீதும் ஊழல் குற்றசாட்டுக்கள் கிடையாது.///// ஆட்சிக்கு வந்தபிறகுதானே ஊழலே செய்யமுடியும்?. தமிழக தலை வர்கள் ஆட்சிக்கு வராமலேயே அவர்கள் மீது ஊழலை எப்படி சொல்ல முடியும்?

    தமிழ்நாட்டில் கட்சி வளரவேண்டுமென்றால் மத்திய அரசின் சாதனைகளை சொல்லித்தான் இங்கே வளரமுடியும். அப்படி என்ன சாதனை இருக்கிறது? மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் விலை ஏறுகிறது. அதனால் விலைவாசி ஏறுகிறது. இதுதான சாதனையா? பெட்ரோல் விலையை கட்டுபடுத்த வேறு வழியே இல்லையா? யோசிக்கவேண்டாமா? 2 1/2 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை கருப்பு பணத்தை எவ்வளவு மீட்டீர்கள்? மீனவர் துறைக்கு அமைச்சகம் அமைத்தீர்களா? ராமர் பாலத்திற்கு சேதாரம் இல்லமால் உங்களுக்கு விருப்பமான alignment லாவது அந்த சேது சமுத்திர திட்டத்தை துவக்கிநீர்களா? விவசாயிகள் சாகுபடி செய்வது நின்றுபோய் அவர்கள் விரக்தியில், கடன் தொல்லையில் சாகும்படியான நிலை நீங்கள் வந்தபிறகு மாறிவிட்டதா?

    நானும் பிஜேபி காரன்தான். ஆனால் விரக்தியடைந்த பிஜேபி காரன். என்றாலும் நா தாமரைக்குத்தான் ஒட்டு போடப் போகிறேன். ஆனாலும் என் மனத்திலுள்ள மேற்படி நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *