வலம்: புதிய மாத இதழ்

“வலம்” இதழிலிருந்து எமக்கு வந்த இந்த அறிவிப்பை தமிழ்ஹிந்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அனைவருக்கும் வணக்கம். புதிய இதழ் தொடங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

புதிய இதழின் பெயர்: வலம்.

மாத இதழாக வெளிவரும் வலம் இதழின் பொறுப்பாசிரியர்கள் அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு மற்றும் ஹரன் பிரசன்னா.

80 பக்கங்களுடன் கருப்பு -வெள்ளையில் மாதம் தோறும் ‘வலம்’ இதழ் வெளிவரும்.

valam_magazine_logo

வரலாறு, அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட எல்லாத் துறைகளைச் சேர்ந்த ஆழமான விரிவான கட்டுரைகளை வலம் இதழ் தாங்கி நிற்கும். சமரசமின்மை, நேர்மை, நுண்ணிய பார்வையுடன் செயல்படும் ஓர் இதழாக ‘வலம்’ விளங்கும்.

இந்த இதழுக்குத் தங்கள் ஆதரவை வழங்குமாறு அன்போடும் பணிவோடும் கேட்டுக்கொள்கிறோம்.

ஓராண்டு சந்தா (அச்சு இதழுக்கு): ரூ 500

இந்தியாவில் உள்ளவர்களுக்கு அச்சு இதழ் ஒவ்வொரு மாதமும் அஞ்சல் துறைமூலம் புக் போஸ்ட்டில் (சாதாரண தபாலில்) அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டில் வாழ்பவர்கள் இ-இதழைத்தான் படிக்கவேண்டியிருக்கும். அச்சு இதழை அனுப்ப இயலாது.

முதல் இதழ் எதிர்வரும் விஜயதசமி அன்று (அக்டோபர் 11, 2016) வெளிவரும்.

ஆன்லைன் மூலம் வலம் இதழுக்கான சந்தாவை இங்கே செலுத்தலாம்.

சந்தாவை செக்காகவோ டிடியாகவோ அனுப்ப விரும்புகிறவர்கள் V. Harihara prasanna என்ற பெயருக்கு டிடி/செக் எடுத்து, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

வலம் இதழ்,
புதிய எண் 15 / பழைய எண் 8,
மாங்காடு ஸ்வாமி தெரு,
நுங்கம்பாக்கம்,
சென்னை – 600 034

மணியார்டர் அனுப்பவேண்டாம். செக் அல்லது டிடி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மணி ஆர்டர் அனுப்பினால் அது நிராகரிக்கப்படும்.

சந்தாவை பேங்க் ட்ரான்ஸ்ஃபர் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள், வங்கிக் கணக்கு பற்றிய விவரங்களுக்கு ValamTamilMagazine@gmail.com என்கிற முகவரிக்கு மடல் அனுப்பவும்.

15 Replies to “வலம்: புதிய மாத இதழ்”

  1. வாழ்த்துகள் . சிறப்புடன் அமைய இறைவனை வேண்டுகிறேன்.

  2. vaalthukkal.piranthu, varlarnthu, neendu nedumkaalam vaalnthu payanikka iraivanai veandi vaalthukirean.

  3. மிகுந்த எதிர்பார்ப்பை எம்முள் ஏற்படுத்தியள்ளது இந்த அறிவிப்பு. இதழ் ஆரம்பிக்கப்பட்டதற்கான நோக்கங்களை எந்தவித சமரசமும் செய்துகொள்ளாதவண்ணம் தொடர்ந்து வெளிவரவேண்டுமென்பது எம்முடைய பிரார்த்தனையும் நம்பிக்கையும். இதற்கான அருளையும் ஆசிகளையும் எம்பெருமான் வழங்குவாராக. ஆசிரியர் குழுவுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக இத்தகைய முயற்சிக்கு.

  4. வலம் நன்றாக வலம் வர இறையைப் பிரார்த்திக்கிறேன் ….

  5. மிக்க மகிழ்ச்சி தமிழ் மொழியில் ஒரு நல்ல தேசிய மாத இதழ் இல்லையே என்ற எமது மனக்குறை இதோடு நீங்கும். தேசபக்தியும் சுதேசிய சிந்தனையும் தமிழ் கூறு நல்லுலகில் விளங்கவைக்க வலம் உலகையே வலம் வரட்டும். ஒன்றிரண்டு நாட்களில் ஆன் லைனில் சந்தா செலுத்திவிடுகின்றேன். ஸ்ரீ அரவிந்தன், ஸ்ரீ ஜடாயு மற்றும் ஸ்ரீ ஹரன் பிரசன்னா ஆகியோருக்கும் அவர்களோடு இந்த நல்ல முயற்சியை துவங்கி இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
    தமிழ் ஹிந்துவில் வெளியாகிய பல நல்லக்கட்டுரைகள் இன்னும் அச்சுவாகணம் ஏறவில்லை. அவற்றினை தேர்ந்தெடுத்து வலம் இதழில் வெளியிடவேண்டுகின்றேன். குறிப்பாக ஸ்ரீ கந்தர்வன் அவர்கள் எழுதிய பழந்தமிழர் கண்ட வேதாந்தக்கருமணி தொடரையும், பேராசிரியர் முத்துக்குமாரசுவாமி ஐயா எழுதிய வைதீக சைவம் பற்றியக்கட்டுரைகளையும் வெளியிடவேண்டுகின்றேன். அவை தமிழ் கூறும் நல்லுலகில் இன்னும் பிரபலமாகவேண்டும்.
    தில்லைக்கூத்தப்பெருமான் திருவருள் நிறைக.

  6. வரவேற்கிறேன்.சந்தா செக் அனுப்பி வைக்கிறேன்.

  7. இந்துகளின் உரிமைக்கு குரல் கொடுக்க வாழ்த்துகிறேன்.

  8. தமிழ் ஹிந்துவை தொடர்ந்து படித்துவருகிறேன்.
    புதிய வருகையான் “வலத்தை” வரவேற்கின்றேன்.
    புலம் பெயர்ந்து வாழும் எங்களைப் போன்ற்வரகள் வலத்தை இ-மெயிலில் பெறுவதற்கு எவ்வளவு சந்தா செலுத்த வேண்டும் என்பததாறிய விரும்புகிறேன்.
    குமரன் கருணாகரன்,
    மலேசியா

  9. தமிழ் ஹிந்துவை தொடர்ந்து படித்துவருகிறேன்.
    புதிய வருகையான் “வலத்தை” வரவேற்கின்றேன்.
    R.S.BALAKUMAR.

  10. வலம் வளமாக தேசிய உணர்வுகளை வளர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வாழ்த்துகள்.

  11. வலம் வரவேற்கப்பட வேண்டிய இதழ். புதுயுகத்திற்கு ஏற்றபடி இன்றைய ஊடகங்கள் இருக்க வேண்டும். வெறுமனே அச்சிதழாகவோ, தமிழ் ஹிந்து போல் மின்னிதழாகவோ இருப்பதால் இன்றைக்கு மக்களை சென்றடைய முடிவதில்லை.

    1. சமூக ஊடகங்கள்: ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இடங்களில் தொடர்ச்சியாக ‘வலம்’ பிராண்ட் முன்னிறுத்தப்பட வேண்டும். அதன் எடிட்டர்கள் பெயருக்கு பதில் 24 மணி நேரமும் அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல், தூண்டி விட்டாலும் கொதித்தெழாமல் சாந்தமாக செய்திகளையும் துணுக்குகளையும் போட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் விளம்பரமும் விலை கொடுத்து வாங்கி, ஃபேஸ்புக் பயனர்களின் செய்தியோடையில் அடிக்கடி தெரியும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.

    2. அப்ளிகேஷன்: செல்பேசியில், ஐஃபோனில், ஆண்டிராய்டில் ஆப் இல்லாவிட்டால், இதழாக இயங்க முடியாது. வீடியோக்கள், அசலாக எழுதிய செய்திக்கட்டுரைகள் என்று அப்ளிகேஷனில் தகவல் மாறிக் கொண்டேயிருக்க வேண்டும். அலர்ட் விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.

    3. யூடியுப் வீடியோ: தினசரி பாட்காஸ்ட், அதைக் கொஞ்சம் படங்கள் சேர்த்து வீடியோ சானல் என்று இரண்டும் தினசரி நடக்க வேண்டும். நான் செய்தியைப் படித்து ரொம்ப நாளாகி விட்டது. காலையில் அலெக்ஸா எனக்காக ஏதோ கொஞ்சம் செய்தித் தலைப்புகளைச் சொல்லி, அதன் விவரங்களை வாசிக்கும். வண்டியோட்டும்போது பாட்காஸ்ட் மூலமாக ஒலிச்சித்திரத்தை ஓட்டிக் கொண்டே கேட்பது – இப்படியே மொத்த தகவல்களையும் பெறுகிறவர்களைச் சென்றடைய வேண்டும்.

    4. ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம் சமூகம் – இன்றைய தலைமுறைக்கு தங்களின் நண்பர்கள்தான் உலகம். அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்று அறிவதில்தான் சுகம். அந்த இரண்டு இடத்தில்தான் குடியிருக்கிறார்கள். அங்கே போரடிக்கும்போது, அந்த அப்ளிகேஷனிலேயே இருக்கும் தகவல் பெட்டிக்குத் தாவுகிறார்கள் – கவனிக்க: செய்திவலைக்கோ, ஃபேஸ்புக்கோ செல்வதில்லை. ஸ்னாப்சாட்டினுள்ளேயே செய்தியோடைகள் இருக்கிறது. அங்கே ஒரு எட்டு எட்டிப் பார்க்கிறார்கள். அவர்களைத் தொட வேண்டுமென்றால், அவர்கள் புழங்கும் அப்ளிகேஷன்களில் இடம்பிடிக்க வேண்டும்.

    5. வைரலாக்கும் வித்தை – பஸ்ஃபீட் போன்றோர் ‘பக்கத்து வீட்டு அந்தரங்கததை அறிய பதினேழு வழிகள்’ என்று தலைப்பிட்டு இழுக்கிறார்கள். ஜெயமோகன் ஆத்மாநாமுக்கு எப்படி மோகனரங்கன் விருது கொடுக்கலாச்சு என்று ஏதாவது உளறி கவனத்தை இழுக்கிறார். அது போல் எப்படியாச்சும் செய்தியில் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

    சுருக்கமாகச் சொன்னால், வாசகரை நேரடியாகச் சென்றடைய வேண்டும். இடைத்தரகர் (விற்பனை மையங்கள்) இரண்டாம் பட்சமாக இருக்க வேண்டும். வாசகருக்கு எப்போது வேண்டுமோ, அப்போது கிடைக்க வேண்டும் (யாராவது வாங்கிக் கொண்டு வருவார்களா எனக் காத்திருக்காமல், நினைத்தபோது, கையில் கிடைக்க வேண்டும்)

    இப்படியெல்லாம் நாங்கள் கிடையாது என்றால், வரும்படி வராது. சிந்தனைத் தளத்திலும் பெரிய தாக்கம் இராது.

  12. அச்சு இதழ் மட்டும்தானா இணையத்திலும் வருமா?

  13. திரு. பாஸ்டன் பாலா அவர்கள் அருமையான யோசனைகளை கூறியுள்ளார், ஆசிரியர் குழுவின் கவனத்திற்கு. போதுமான வருமானமில்லாமல் தொடர்ந்து ஒரு இதழை நடத்தயியலாது என்பது கண்கூடு. திரு மணியன் அவர்களின் “ஞானபூமி” இதழுக்கேற்பட்ட நிலை ஒரு உதாரணம்.

    இந்த வலம் இதழில் மட்டுமில்லாது, தமிழ் இந்து தளத்திலும்கூட இந்துமதக்கருத்துக்களை திறம்பட எடுத்துரைக்கும் நல்ல தரமான கட்டுரைகளை எழுதக்கூடிய தகுதிவாய்ந்த விற்பன்னர்களை எப்படியாவது ஈர்க்கவேண்டும். ஒவ்வொரு நாளும், குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று புதிய கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவேண்டும். இதற்கு தகுந்த ஊதியமும் தாராளமான சன்மானமும் வழங்குவதற்கு போதுமான நிதி வசதியை மேம்படுத்துவத்திற்குண்டான அணைத்துக் காரியங்களும் மேற்கொள்ளப்படவேண்டும் . மற்றும், மிகமுக்கியமாக, விருப்பமுள்ளவர்களிடமிருந்து நன்கொடையை பெற்றுக்கொள்ள (இணையம் வழியாகவும்) ஆவண வழிவகைகள் செய்யப்படவேண்டும்.

    எல்லாம் கைகூடவும் நினைத்த இலக்கை அடையவும் பரமேஸ்வரனின் அருள் கிட்டட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *