விவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்

1990களில் நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பேருந்து நிலையங்களில் ஊழியப் பிசாசுகள் தரும் துண்டுப் பிரசுரங்களில் அதைக் கண்டு கோபமடைந்திருக்கிறேன் – சுவாமி விவேகானந்தரின் படத்தைப் போட்டு அவரது வாசகங்களில் சிலதை எடுத்து செலக்டிவ்வாக திரித்து கிறிஸ்தவ மதப்பிரசாரம் செய்யும் கயமை. அப்போது எனது கோபத்தில் அதிகபட்சமாக நான் செய்தது அந்தப் பிரசுரத்தைக் கிழித்து எறிந்தது தான். இதோ இந்த 2016ம் ஆண்டும் வாட்ஸப் செய்திகள் வழியாக அதே கயமை தொடர்வது கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. சமீபத்தின்  வாட்ஸப் செய்தி வழியாக எனக்கு வந்த ஒரு படம் கீழே.

viveka_quote_in_christian_propagandaசுவாமிஜியின் வாய்மொழிகள் அனைத்தும் 8 தொகுதிகளில் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளன. இதில் ஒரு சில இடங்களில் இயேசு கிறிஸ்துவையும் உயர்வாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். நிறுவன கிறிஸ்தவத்தை கடுமையாக எதிர்த்தாலும், உலகில் கடந்தகாலத்தில் ஆன்மீக உயர்நிலையடைந்த பல ஞானிகளில் இயேசு கிறிஸ்துவும் ஒருவர் என்று தனிப்பட்ட அளவில் சுவாமிஜி கருதியதே இதற்குக் காரணம். ஒவ்வொரு மதமும் பிற மதங்களுக்கு பரஸ்பர மரியாதை அளிக்கவேண்டும் என்ற உபதேசத்தைத் தானும் தீவிரமாகக் கடைப்பிடித்தவர் சுவாமிஜி என்பதும் இதற்குக் காரணம்.

இந்தப் படத்தில் உள்ள குறிப்பிட்ட மேற்கோள் The Divine Incarnation or Avatara (Complete Works, Vol 8) என்பதில் உள்ளது. இதில் ஏசு கிறிஸ்துவை அவதார புருஷருக்கான ஒரு *உதாரணமாக* சுவாமிஜி குறிப்பிடுகிறாரேயன்றி வரலாற்று மனிதராக அல்ல. இந்த மேற்கோளுக்கு அடுத்த பத்தியிலேயே அவர் கூறுகிறார் – Philosophically speaking, there was no such human being living as Christ or Buddha; we saw God through them. இறுதியில் கடவுள் என்பது சத் சித் ஆனந்த ஸ்வரூபம் என்ற வேதாந்தக் கருத்தைத் தான் இந்த உரையிலும் கூறுகிறார், கிறிஸ்தவக் கருத்தை அல்ல – God is absolute. We cannot see God in His absolute nature, we can only speak of that as “not this, not this”. Yet we can get certain qualities as the nearest approach to God. First is existence, second is knowledge, third is bliss”.

நமது தேசிய ஆதர்ச நாயகரும் மகத்தான இந்துத்துறவியுமான விவேகானந்தரின் வாய்மொழிகளை இவ்வாறு கீழ்த்தரமாகத் திரித்து கிறிஸ்தவப் பிரசாரம் செய்வது என்பது அவரது பெருந்தன்மையை அவமதிக்கும் செயல் அன்றி வேறில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளின் சபைகளிலும் கூட கிறிஸ்தவத்தின் கொள்கைகளையும், மதமாற்ற பிரசாரங்களையும் தீவிரமாகவும் வன்மையாகவும் சுவாமிஜி கண்டித்தார். அமெரிக்காவில் அவரது புகழைக் குறைக்கும் நோக்கத்துடன் அங்கிருந்த பல கிறிஸ்தவ மிஷன்களும் அமைப்புகளும் எப்படியெல்லாம் அவருக்கு எதிராக மோசமான அவதூறுகளையும் பொய்களையும் பரப்பின என்பதும் அவரது வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் இப்போது யோக்கியன்கள் போல அவரது படத்தையே போட்டு மதப்பிரசாரம் ! இந்த கிறிஸ்தவ மிஷநரி பீடைகளுக்கு வெட்கம், மானம், சொரணை, அடிப்படையான நீதியுணர்வு எந்த இழவும் கிடையாது என்பது தெரிந்தது தான். ஆனாலும், இவர்களை நாம் அளவுக்கதிகமாக சகித்துக் கொண்டே போயிருக்கிறோமோ என்று இப்போது தோன்றுகிறது.

சுவாமிஜியின் வாய்மொழிகளிலிருந்து வேறு சில மேற்கோள்கள் கீழே  (நன்றி: எழுமின் விழுமின், விவேகானந்த கேந்திர வெளியீடு):

வேத சமயங்கள் தான் வழிமுறைகளைப் பற்றிக் கவனித்து, மனிதன் எய்த வேண்டிய நான்கு நிலைகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றுக்கான சட்ட திட்டங்களை வகுத்து வைத்துள்ளன. புத்தர் நம்மை அழித்தார். அது போல கிறிஸ்து கிரீஸையும் , ரோம் நாட்டையும் அழித்தார். பின்னர் காலப் போக்கில் அதிர்ஷ்டவசமாக, ஐரோப்பியர்கள் போப்பின் அதிகார பீடத்தினர் விளக்கம் தந்தபடி இருந்த கிறிஸ்துவின் உபதேசங்களை உதறி எறிந்தனர்; நிம்மதியாகப் பெருமூச்சு விட்டனர். பாரத தேசத்தில் சங்கரரும் ராமானுஜரும் தக்க அளவில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை இணைத்து, சம நிலைப்படுத்தி அநாதியான வேத சமயத்தை உறுதியாக நிலை நாட்டினார்கள். இவ்வாறாக நமது தேசம் இழந்த தனது வாழ்க்கையை மீண்டும் எய்துவதற்கான பாதைக்குக் கொண்டு வரப்பட்டது…

‘கர்த்தருக்குத் துதி’ என்று பாடுகிறவர்களே! புரிந்து கொள்ளுங்கள். ‘ஏசு கிறிஸ்து பாரதத்திற்கு வருகிறார்’ என்று கீச்சுக்குரல் எழுப்பிப் பாடுகிறீர்கள்! நாளடைவில் காலம் நிறைவடையும் பொழுது தெய்வீகச் சட்டம், நியாயத் தீர்ப்பு, பூர்த்தியாவதை காண்பீர்கள்” என்று கூக்குரலிடுகிறீர்கள். அன்பரே ! ஐயோ வேண்டாம். ஏசுவோ, ஜெஹோவாவோ வரவில்லை. வரவும் மாட்டார்கள் அவர்கள் இன்று தங்கள் சொந்த வீடு வாசல்களைக் காப்பாற்றிக்கொள்வதில் முனைந்திருக்கிறார்கள். நமது நாட்டுக்கு வர அவர்களுக்கு நேரமில்லை. இந்நாட்டில் அதே பழைய சிவபெருமான் பழையபடி உட்கார்ந்திருக்கிறார். இரத்தம் தோய்ந்த அன்னை காளியை அதே ஆசார உபசாரங்களுடன் வழிபடுகிறார்கள். கிராமத்து இடைச்சிறுவனான அந்தக் கிருஷ்ணன், அன்பின் திரு உருவம், பழையபடியே குழல் வாசித்து வருகிறான்… சீனாவிலும், ஜப்பானிலும், அன்னை காளி மக்களுடைய வழிபாட்டை பெற்று வருகிறாள் அவளையே தான் கிறிஸ்துவர்கள் உருமாற்றி கன்னி மேரியாக்கி, கிறிஸ்துவாகிய ஏசுவின் தாயாக வழிபட்டு வருகிறார்கள்…

இமயமலையைப் பாருங்கள்! அங்கே வடக்கில் சிவனின் இல்லமாகிய கைலாசம் உள்ளது. அங்கே அவரது சிம்மாசனத்தை பத்து தலையும், இருபது கைகளும் கொண்ட ராவணணாலேயே அசைக்க முடியவில்லை. இப்போது கிறிஸ்தவ பாதிரிகள் அதை முயற்சிக்கப்போகிறார்களா? வாழ்க! இந்த பாரதத்தில் எப்பொழுதும் அதே பழைய சிவபிரான் உடுக்கையை ஒலித்துக்கொண்டு இருப்பார். அன்னை காளி மிருக பலியுடன் வழி படப்படுவாள். அன்பிக்கினிய கிருஷ்ணன் புல்லாங்குழலை வாசித்தே வருவான். அவர்கள் இமயம் போல உறுதியாக நிற்கிறார்கள். கிறிஸ்தவ பாதிரியோ, வேறு பாதிரியோ என்ன தான் முயன்றாலும் அவர்களை அகற்ற முடியாது. அவர்களை உங்களால் சகிக்க முடிய வில்லை என்றால் தொலைந்து போங்கள்! ஒரு கைப்பிடி அளவுள்ள உங்களுக்காக இந்த தேசம் முழுவதும் தனது பொறுமை எல்லாம் இழந்து சாகும் வரை அழுது, சலித்து வாழ வேண்டுமா? பரந்த உலகம் உங்கள் முன்னே திறந்து கிடக்கிறது. சுதந்திரமாக மேய்வதற்காக வேறு இடங்களில் நில புலன்கள் கிடைக்கும். நீங்கள் அங்கெங்காவது ஏன் போய் விடக்கூடாது. ஆனால் இல்லை அப்படி அவர்கள் செய்யவே மாட்டார்கள். அதை செய்வதற்கு வேண்டிய பலம் எங்கிருக்கிறது? பழைய சிவனின் உப்பைத் தின்று அவருக்கு துரோகம் பண்ணுவார்கள். மானபங்கப் படுத்துவார்கள். வெளி நாட்டு ரட்சகன் ஒருவனுடைய புகழ் கீதத்தை இசைப்பார்கள்…

(The East and the West, Complete works Vol. V)

****

கிறிஸ்துவின் சிஷ்யர்களாகிய இவர்களுக்கு ஹிந்துக்கள் என்ன செய்து விட்டார்கள்? ஒவ்வொரு கிறிஸ்துவக் குழந்தைக்கும் ஹிந்துக்களை ”தீயவர்கள், கொடியவர்கள் உலகிலுள்ள பயங்கரமான பிசாசுகள்” என்று அழைக்கக் கற்றுக் கொடுக்கிறார்களே, ஏன்? கிறிஸ்துவரல்லாத அனைவரையும், குறிப்பாக ஹிந்துக்களை வெறுப்பதற்குக் கற்பிக்கிறார்கள். இந்நாட்டில் குழந்தைகளுடைய ஞாயிற்றுக் கிழமை பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இப்படிக் கற்பிப்பது ஓர் அம்சமாகும்… ஓர் ஆண்டுக்கு அதிகமாக நான் இந்த நாட்டில் (அமெரிக்கா) இருந்திருக்கிறேன். இதன் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால், பாதிரிகள் உலகத்தோரிடம் கூறுவது போல நாம் பிசாசுகளும் அல்ல; அதுபோலவே இந்தப் பாதிரிகள் உரிமை கொண்டாடுவது போல, அவர்கள் தேவதூதர்களுமல்ல… சில நாடுகளில் உண்மையாக நடக்கிற சம்பவங்களைப் பார்த்தால், ஹிந்து சமுதாயத்தைப் பற்றி பாதிரிகள் தீட்டுகிற கற்பனைச் சித்திரம் ஒன்றுமே இல்லையெனத் தோன்றும்… ஹிந்து சமுதாயம் குறைகளற்றது என்று நான் உரிமை கொண்டாட மாட்டேன். பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட துரதிருஷ்டங்களின் விளைவாக ஏற்பட்டுள்ள குறைகள், முளைத்துள்ள தீமைகள் இவை பற்றி என்னைவிட அதிகமாகத் தெரிந்தவர்கள் யாருமிரார். நீங்கள் உண்மையாக அனுதாபத்துடன், அழிப்பதற்காக வராமல் உதவுவதற்காக வருவீர்களானால், இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும். ஆனால், தாழ்ந்து வீழ்ந்து கிடக்கும் மக்களினத்தைக் காரணமில்லாமலும் காரணத்துடனும் இடைவிடாமல் நீங்கள் தூஷிக்கிறீர்கள், தூற்றுகிறீர்கள்… பச்சையாக நான் உங்களுக்கு சொல்கிறேன் – ஓரளவுக்காவது நியாயத்துடன் இரண்டையும் ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்ப்பீர்களாயின், ஹிந்து இனம், உலகிலுள்ள மற்றெல்லா இனங்களையும் விட ஒழுக்கத் தரத்தில் தலைதூக்கி உயர்ந்த நிலையில் உள்ளது உங்களுக்குத் தெரிய வரும்…

missionary_british_indiaஉங்களுக்கு ஒரு விஷயம் சொல்வேன். அன்புணர்வற்ற குற்றச்சாட்டாக நான் அதைக் கூறுவதில்லை. நீங்கள் சில மனிதர்களுக்குப் பயிற்சி கொடுத்து, கல்வி கற்பித்து, உடையளித்து, சம்பளம் கொடுத்து வருகிறீர்கள். எதற்காக? என்னுடைய நாட்டுக்கு வந்து, என்னுடைய முன்னோர்களையும் என்னுடைய சமயத்தையும், மற்ற அனைத்தையும் சபிப்பதற்கும், தூஷிப்பதற்கும் தானா? எங்கள் கோவிலுக்கருகே சென்று, ‘நீங்கள் கல்லைக் கும்பிடுகிறீர்களே, நீங்கள் நரகத்துக்குத் தான் போவீர்கள்’ என்று அவர்கள் கூறுவார்கள். ஆனால், முகம்மதியர்களிடம் போய் அப்படிச் சொல்ல அவர்களுக்கு துணிவில்லை; ஏனெனில் வாள் வந்துவிடும். ஆனால், ஹிந்துவோ மிக மிகச் சாது. அவன் சிரித்துக்கொண்டே சென்று விடுவான். ”முட்டாள்கள் பேசிவிட்டுப் போகட்டுமே” என்று கூறுவான். அதுதான் அவனுடைய போக்கு…உங்களுடைய மத குருமார்கள் எங்களைக் குறை கூறித் திட்டும்போது, ஒரு விஷயம் அவர்களுக்கு நினைவிருக்கட்டும்: பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று ஹிந்து மகா சமுத்திரத்துக்கு அடியிலுள்ள எல்லா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும் கூட, நீங்கள் இன்று எங்கள் மீது வீசுகிற அளவில் தினையளவு கூட பதிலுக்குப் பதில் செய்ததாக ஆகாது…

அது இருக்கட்டும். உங்களுடைய மதமாற்றமெல்லாம் எப்படி நடந்தது? ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமலா? நீங்கள் தற்பெருமை பேசி ஜம்பம் அடிக்கிறீர்களே, உங்கள் கிறிஸ்தவ சமயம் வாளை உபயோகிக்காமல் எங்காவது வெற்றி கண்டிருக்கிறதா? நீங்கள் அப்படிச் செய்யாமலிருந்த ஏதாவது ஒரு நாட்டையாவது உலகத்தில் காட்டுங்கள். ஒன்றே ஒன்று காட்டுங்கள். கிறிஸ்தவ சமய வரலாறு முழுவதிலும் ஓர் உதாரணமாவது காட்டுங்கள். இரண்டு கேட்கவில்லை- ஒன்றே ஒன்று! உங்கள் மூதாதையர்கள் எவ்வாறு மதம் மாற்றப்பட்டார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் ஒன்று கொல்லப்பட்டார்கள்; அல்லது மதம் மாறினார்கள். அவ்வளவு தான்…

(A lecture delivered at Detroit, Complete works Vol. VII)

*****

“ஆருயிர் நண்பனே! சின்ஹா! யாராவது உன்னுடைய தாயை அவமதித்தால் நீ என்ன செய்வாய்?”

“அவன் மீது தாவிப் பாய்ந்து நல்ல படிப்பினையைப் புகட்டுவேன் சுவாமி!”

“நன்றாக பதில் சொன்னாய். அது போலவே நமது நாட்டின் உண்மையான தாயாகிய உனது சொந்த மதத்தைப் பற்றி அவ்வளவு மதிப்பு உனக்கு இருக்குமாயின், எந்த ஒரு ஹிந்து சகோதரனும் கிறிஸ்தவனாக மதம் மாற்றப்படுவதை நீ ஒருகாலும் சகிக்க மாட்டாய். இருப்பினும்கூட தினந்தோறும் இது நடப்பதை நீ பார்க்கிறாய். பார்த்தும் பாராமுகமாய் இருக்கிறாய். எங்கே உனது நம்பிக்கை? எங்கே உனது தேச பக்தி? கிறிஸ்தவப் பாதிரிகள் உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் தூற்றுகிறார்கள். அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேர்களுக்கு அந்த அநீதி சகியாமல் இரத்தம் கொதிக்கிறது? எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள்?”

(Prabuddha Bharata, December 1898)

 ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது.

12 Replies to “விவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்”

  1. இந்த நிலைக்கு ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்து சாமியார்களும் ஒரு காரணமாவார்கள்.

    ஸ்வாமி விவேகானந்தர் கிறிஸ்தவ மதம் பற்றியும், இஸ்லாம் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.ஒரு கடற்பயணத்தின்போது, ஏசு கிறிஸ்து என்று ஒருவர் இருந்தாரா என்பது சந்தேகமே என சகோதரி நிவேதிதையிடம் சொல்லியிருக்கிறார்.

    ஓரு நிலையில், எந்த சமயத்தின் உள்ளார்ந்த உண்மைகளையும் மதிக்கும் இயல்புடையவர் ஸ்வாமி விவேகானந்தர். ஆனால் அவற்றில் கண்ட குறைகளையும் தயங்காது கண்டிக்கும் துணிவும் நெஞ்சுரமும் மிக்கவர்.

    ஆனால் ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்து சாமியார்கள் “எல்லா மதமும் ஒன்றே” “எல்லா மதமும் சமம்” என்றெல்லாம் பிதற்றி பேசியும் எழுதியும் வந்திருக்கின்றனர். கிறிஸ்தவ மதத்திலும் “வேதாந்தம்” இருக்கிறது என்றனர். Sermon on the Mount க்கு வேதாந்தப்படி வியாக்யானம் செய்தனர்.இவர்களின் வெளிநாட்டு கிளைகளில் ஸ்ரீராமக்ருஷ்ணர், அன்னையார், ஸ்வாமிஜி படங்களுடன் கிறிஸ்துவின் படத்தையும் வைத்தனர். மடத்தில் [ வெளி நாடுகளில் மட்டுமல்லாது இந்தியாவிலும்] கிறிஸ்துமஸ் கொண்டாடினர். இதையெல்லாம் பார்த்தால், இவர்களே கிறிஸ்துவ மதத்திற்கு பிரசாரம் செய்பவர்போலத்தானே இருக்கிறது!

    ஸ்வாமி விவேகானந்தர் கிறிஸ்தவ மதம் பற்றியோ, இஸ்லாம் பற்றியோ கூறிவற்றைத் தொகுத்து தனியாக வெளியிடும் துணிவோ நேர்மையோ இந்த மடத்தினருக்கு இல்லை! சமரசம் என்ற பெயரில் எல்லோருக்கும் குல்லா போடப் பார்க்கிறார்கள்!கடைசியில் இளிச்சவாயர்கள் ஆவது ஹிந்துக்கள்தான்!

    (Edited and Published)

  2. கையால் ஆகாமல் பார்த்துக் கொண்டிருப்பது தான் நமக்கு எளிதாக இருக்கிறது! 🙁

  3. Hello Chritianity is a business ! it is not a religion. Ramakrisha mutt has released a book containing vivekanadhas points against christian conversion. Today chritstian who are indulging in forced/ cheated conversions are functioning like corporates. World Vision is a chritian organiasation indulging in cheating as if it is helping kids to study. You know their yearly turnover of collections is 500 crores. world vision global inc collection turn over is 6 billion. 36000 crores. all this money is swindled by this business people. many people mention in the internet that the money collected is misused. but they collect the adress data from citibank hsbc and terrific ads in in the internet and cheat innocent it guys about their invisble charity . ( prolysithing)

  4. //* இவர்களின் வெளிநாட்டு கிளைகளில் ஸ்ரீராமக்ருஷ்ணர், அன்னையார், ஸ்வாமிஜி படங்களுடன் கிறிஸ்துவின் படத்தையும் வைத்தனர். மடத்தில் [ வெளி நாடுகளில் மட்டுமல்லாது இந்தியாவிலும்] கிறிஸ்துமஸ் கொண்டாடினர். இதையெல்லாம் பார்த்தால், இவர்களே கிறிஸ்துவ மதத்திற்கு பிரசாரம் செய்பவர்போலத்தானே இருக்கிறது!*//

    நம்மதத்திலிருக்கின்ற விஷயங்களைப் பற்றி புரிந்துகொள்வதற்கே ஏழேழு பிறவியெடுத்தாலும் இயலாது என்ற நிலையிருக்கின்றபோது இவர்களுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை? வழி தவறிப் போனவர்களைத் திருத்த ஏதாவது முயற்சி செய்யவதைவிடுத்து இப்படி வெறும் அங்கீகாரத்திற்காவோ அல்லது வருமானத்திற்காகவோ இம்மடத்தினர் இவ்வாறு செய்வது அருவறுக்கத்தக்கது மற்றும் பெரும் சாபக்கேடு நமக்கு. இவ்வளவு நாளும் இம்மாதத்தின் இத்தகைய செயல்பாடுகள் எப்படி எமக்குத் தெரியவரவில்லை என்பதை நினைக்கையில் ஏமாற்றமாக இருக்கிறது.

  5. “இவ்வளவு நாளும் இம்மடத்தின் இத்தகைய செயல்பாடுகள்” என்றிருக்கவேண்டியது ” இவ்வளவு நாளும் இம்மாதத்தின் இத்தகைய செயல்பாடுகள்” என்று தவறாக விழுந்துவிட்டது. மன்னிக்கவும்

  6. The prescient warning of General Sherman is most appropriate to quote today:

    “I would remind you of Webster’s definition of a Jesuit: a designer, an intriguer. If the Church of Rome prevailed, the Pope would be the Universal King . . .
    The Jesuits are here to plot and scheme and, if possible, take from us the noble heritage of our civil and religious freedom. The rules of the Jesuit Order justify theft, licentiousness, lying, false-witness bearing, suicide and the murder of parents and other relatives. The greatest crimes in history committed against individuals and nations have been committed by the Jesuits . . . Wherever Jesuits are they have the torch to burn, the sword to slay, the inquisition to torture. They are the enemies of [Bible-believing] Christianity. They live for conquest, fortune and glory.”

    Source: General Sherman’s Son: The Life of Thomas Ewing Sherman, S.J., Joseph T. Durkin, S. J., (New York: Farrar, Straus and Cudahy, 1959) p. 186.

  7. JESUITS: SOCIETY OF PURSUITS OF JESUS
    Heads of states were assassinated by the Jesuits, when they attempt to suppress the influence and meddling of the Jesuits in their national affairs. Of heads of states that are known to have been assassinated by Jesuits we mention for example: William of Orange, Kings Henry III and Henry IV of France, Czars Alexander I and Alexander II of Russia, President Abraham Lincoln and John F. Kennedy, and Mexican President Benito Pablo Juarez.

    he Jesuits are responsible for fomenting the two world wars and escalating the Vietnam War after President Kennedy’s assassination:

    “The public is practically unaware of the overwhelming responsibility carried by the Vatican and its Jesuits in the starting of the two world wars – a situation which may be explained in part by the gigantic finances at the disposition of the Vatican and its Jesuits, giving them power in so many spheres, especially since the last conflict.”
    Source: Edmond Paris, The Secret History of the Jesuits, page 9
    Here is a link to the entire e-book- https://www.spirituallysmart.com/Paris-The_Secret_History_of_Jesuits_1975.pdf

    Given the above historic facts about the Jesuits, it is incredulous and most shocking to see the media and the world’s religious and political leaders stampeding to endorse and praise Pope Francis. We have no words to describe this unprecedented worldwide epidemic of memory loss towards Rome and her Jesuits.

    Christians themselves regard that it is their duty to as followers of Yahuwah to expose Rome and her Jesuits, and to pray for the utter destruction of their evil deceit. Prayer is the only weapon they have against this veiled enemy they face today. Rome and her Jesuits are the greatest enemy of the Gospel and of humanity. However, they are assured in His prophetic Word that they will not prevail.

    .Zionists, Jesuits, masons, Illuminati, etc are all pawns under Satan’s control. Becoming too focused on one group creates a dangerous blind spot which can lead to deception. “We came in like lambs and will rule like wolves. We shall be expelled like dogs and return like eagles.”

    he Jesuits are known for their deception, spying, infiltration, assassination, and revolution. They worked deep into the political field and plotted through politics throughout the world countries.

    Source: “The Babington Plot”, by J.E.C. Shepherd, p.12

    When the Jesuits are expelled from a country, they simply change strategies and return to the country they were expelled from under a new disguise. The following sums up their operational strategy:

    “We came in like lambs and will rule like wolves. We shall be expelled like dogs and return like eagles.”

    Source: Francesco Borgia, Third Jesuit Superior General.

  8. ராமகிருஷ்ண பரமஹம்சர் அனைத்து மதங்களையும்இறைவனை அடையும் வழி என கூறினார் நான் கற்ற இடத்திலும் (Ramakrishna mission) புத்தர், மகாவீரர்,சிலைகள் உள்ளன,உங்களுக்கு படம் வைப்பதில் என்ன துன்பம்,இங்கு மத சகிப்புத்தன்மை உண்டாகிறது, மற்ற மதத்தவர் (மன்னிக்கவும்) அனைத்து மதத்தவரும் துறவு பெற்று இறை சேவை செய்கின்ற இயக்கம் மததூற்றல்லகளை ஏற்க வேண்டாம், எதிர்ப்புகளை பதிவு செய்வோம்,

  9. வல்லவனுக்குப் புல்லும் ஆய்தம் என்பதைப்போல எங்கோ ஓரிடத்தில் ஒரு வரி விவேகானந்தரால் சொல்லப்பட்டிருந்தால் அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். விவேகானந்தர் செய்த தவ்று. யார் அவரை அப்படிப் பேசச்சொன்னார்கள்?

    Religion is marketing. When many products are competing for buyers’ attention, you can use any trick to sell your product. (edited)

  10. சுவாமி விவேகானந்தர் கிறிஸ்தவ மதம் தொடர்பாக பேசிய கருத்துக்களை ஆடியோவாக வெளியிட்டிருக்கிறேன்

    https://www.youtube.com/playlist?list=PLedksx_KaRiMObTKioHxk45zgz2dWZibs
    —-
    ராமகிருஷ்ண மடத்து துறவிகள் ஏசுகிறிஸ்துவிற்கும் விழா எடுப்பதில் ஒரு காரணம் இருக்கிறது.எப்படி கிறிஸ்தவர்கள் இந்துமதத்தின் பல கருத்துக்களை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவமதத்தை இந்தியாவில் பிரச்சாரம் செய்கிறார்களோ அதே டெக்னிக் தான். ஏசுகிறிஸ்துவை எதிர்த்து மதபிரச்சாரம் செய்தால் வெளிநாட்டினர் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.உலகம் முழுவதும் கிளைகளை பரப்பி இன்று ராமகிருஷ்ணமடம் செயல்பட்டு வருகிறது.இன்று ராமகிருஷ்ண மடத்தில் உள்ள துறவிகளில் பலர் கிறிஸ்தவமதத்தை விட்டுவிட்டு இந்துதுறவிகளாக மாறியிருக்கிறார்கள்.மேலை நாடுகளில் இந்துமதத்தை பரப்பும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.எப்போதுமே ஒருமதத்தில் புதிதாக சேர்பவர்கள் தீவிரமாக இருப்பார்கள்.முஸ்லீம் மதத்தை விட்டுவிட்டு இந்துதுறவிகளாக வாழ்பவர்களும் சிலர் இருக்கிறார்கள்.ராமகிருஷ்ணரின் சீடர்களில் இருவர் முற்பிறவியில் ஏசுகிறிஸ்துவின் சீடர்களாக இருந்தவர்கள் என்று ராமகிருஷ்ணர் கூறியுள்ளார்.அதில் ஒருவர் தான் சென்னையில் ராமகிருஷ்ண மடத்தை துவக்கியவர்.இன்னொருவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.ராமகிருஷ்ணர் அனைத்து மதங்களில் கூறப்பட்ட மதபயிற்சிகளையும் மேற்கொண்டு அதில் நிறைவு பெற்றார்.கிறிஸ்தவ மத பயிற்சி மேற்கொண்டு ஏசுகிறிஸ்துவை தியானித்து கடைசியில் அவரது காட்சியை பெற்றார்.முடிவில் ஏசுகிறிஸ்து ராமகிருஷ்ணரின் உடலில் ஒன்றுகலந்தார்.அதேபோல் முஸ்லீம் மத பயிற்சிகளை மேற்கொண்டு 5 வேளை தொழுதார்.சுவாமி விவேகானந்தர் இந்து மதம் என்று குறிப்பிடுவது உலகில் தோன்றிய அனைத்து மகான்களையும் உள்ளடக்கிய ஒரு உலகம்தழுவிய மதம்.அதை புரிந்துகொள்ளவேண்டுமானால் அவரது சொற்பொழிவுகளை படிக்க வேண்டும். ராமகிருஷ்ணரின் சித்தாந்தம் என்பது.கடவுள் ஒருவர் மதங்கள் பல.அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கடைசியில் ஒரே இடத்தை சென்று சேர்கிறார்கள்.இறைவன் விருப்பத்தினால் தான் பல மதங்கள் தோன்றியுள்ளன.யாருக்கு எது தேவையோ அதை இறைவன் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். சர்வைவல் ஆப் தி பிட்னஸ்-தகுதியானதே நிலைக்கும் என்பது விஞ்ஞானத்தின் கூற்று.இன்று வாழும் மதங்கள் ஏதோ ஒரு விதத்தில் சில மனிதர்களுக்கு தேவையாக இருக்கிறது.அதனால் அவை வாழ்கின்றன. எப்போது அந்த மதங்களால் மனிதனுக்கு பயன் இல்லையோ அப்போது அவைகள் அழிந்துவிடும்

  11. I completely agree with Swami Vidyananda. While it should be a matter of concern to all Hindus that their number in relative terms is on the decline in India, historically, we are the most resilient. This is because what we practice as Hindus is a way of life and not a religion in the sense other religions treat themselves to be.
    Of late, Hinduism has acquired a lot of new followers the world over because of its universally appealing philosophy of life. In the west, Christianity is beginning to lose its appeal as more and more people are identifying themselves as atheists or agnostics. With a steady decline in attendance in churches, many churches in the US, for e.g., are being sold! And some of these are being bought by Hindus to make temples there!
    Violence (conversion is also violence according to Swami Dayananda Saraswathi – read his book on conversion) has never paid in the long run.
    Let us remain aware and united. Bring up a generation that learns to feel proud as a Hindu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *